என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

VGK 01 ] ஜா ங் கி ரி


இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 20.01.2014 

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 01

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:
ஜா ங் கி ரி


[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

அந்த ஒண்டுக்குடுத்தனத்தின் பொதுத் திண்ணையில், அடிக்கும் வெய்யிலில், வியர்வை வழிந்தோட, வெகு சுவாரஸ்யமாக சீட்டுக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. 

மொத்தக் குடியிருப்பின் பிரதான வாசலில் யாரோ யாரையோ தேடி வருவது போல தெரிகிறது. 

நாகராஜன் தன் கைச்சீட்டுக்களைக் கவிழ்த்துப் போட்டுவிட்டு, ”இந்த ஆட்டம் நான் ஸ்கூட்” என்று சொல்லி விட்டு வெளியே வருகிறார். 

ஜோக்கரும் இல்லை, ரம்மியும் இல்லை. ஏதாவது ஒன்று இருந்தாலும் துணிந்து ஆடித் தோற்றுப் போவார்.

”ஸ்வீட் மாஸ்டர் நாகராஜன் வீடு எது?”  வந்தவர் விசாரிக்கிறார்.

”சொல்லுங்கோ, நான் தான் நாகராஜன்”

“நாளைக்கு விடியற்காலம் சரியா நாலு மணிக்கு இந்த விலாசத்துக்கு வந்துடுங்கோ. சுடச்சுட முறுகலா நல்ல தித்திப்பா நானூறு ஜாங்கிரி பண்ணித் தரணும். என் மாமா வீட்டு கிருஹப் பிரவேஸம். காலை ஏழு மணிக்கெல்லாம் இலை போட்டுப் பரிமாற வேண்டும். இன்று இரவே நீர் அங்கே வந்து படுத்துக்கொண்டாலும் நல்லது” என்றார் வந்தவர்.

”விடியற்காலம் முதல் பஸ்ஸைப்பிடித்து வந்துடறேன். கவலையே படாதீங்கோ” 

பஸ் சார்ஜுக்கு என்று ஒரு பத்து ரூபாய்த்தாளை நீட்டி விட்டு, ”ஜாங்கிரி பிழிந்து தர உமக்கு எவ்வளவு தரணும்” என்றார்.

”ஜாங்கிரியை டேஸ்ட் பார்த்துவிட்டு, நல்லாயிருந்தா ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கித்தாங்கோ, அது போதும்” என்றார் நாகராஜன்.

”சரி, மாமாவிடம் சொல்லிப்பார்க்கிறேன்; மறக்காம சீக்கரமா வந்து சேருங்கோ” என்று சொல்லிப் புறப்படுகிறார்.

ஒருவாரமாக சரியான வருமானம் இல்லை. ஏதோ நாளைக்கு இந்தப்பணம் வந்தாலாவது, வீட்டு வாடகையைக் கொடுத்து விட்டு, மீதிப்பணத்துக்கு ரேஷன் சாமான்கள் ஏதாவது வாங்கலாம் என நினைத்துக்கொண்டு, சீட்டுக் கச்சேரியிலிருந்து தன்னை சீக்கரமாக விடுவித்துக்கொண்டு, தன் வீட்டுக்குப் போனார், நாகராஜன்.

வரிசையாக மூன்று பெண் குழந்தைகள், கடைசியில் ஒரு பிள்ளைக் குழந்தை. மிகச்சிறிய ஒரே ஒரு ரூம் மட்டும் உள்ள வீடு. பொதுக்குழாய், பொதுக்கழிப்பிடம். பெரியவளுக்கு 11 வயது சின்னவனுக்கு 4 வயது. 

பொடியன் ஓடி வந்து தன் அப்பாவைக் கட்டிக்கொண்டு, “அப்பா, அப்பா. எனக்கு நாளைக்கு ’ஹாப்பி பர்த் டே’க்கு என்ன வாங்கித்தருவே” என்கிறான்.

”ஜாங்கிரி வாங்கித் தருவேன்” என்கிறார், நாகராஜன்.

தன் அம்மாவிடமும், அக்காள்களிடமும் ஓடிப்போய் “அப்பா என் ஹாப்பி பர்த் டேக்கு நாளைக்கு ஜாங்கிரி வாங்கித்தரப்போறாளே!” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு, அதே நினைவுடன் விளையாடச் செல்கிறான்.

நாகராஜன், தான் நாளைக்கு சீக்கரம் எழுந்து கொண்டு விடியற்காலமேயே வேலைக்குப் போக வேண்டியதை தன் மனைவியிடம் சொல்லுகிறார். 

கணவனுக்கு இரவுச் சாப்பாடு போட்டுவிட்டு, சீட்டுக்கச்சேரிக்குப் போகாமல் சீக்கரமாகப் படுத்துக்கொள்ளச் சொல்லி சொல்கிறாள், நாகராஜனின் மனைவி.

கொடுக்க வேண்டிய வீட்டுவாடகை பாக்கிகள், இதர குடும்பச்செலவுகள், பெண் குழந்தைகளுக்கு அவசர அவசியமாக வாங்க வேண்டிய பாவாடை சட்டை துணிமணிகள் என எல்லாவற்றையும் மெதுவாக எடுத்துச் சொல்கிறாள். 

“ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்;  அந்த இஞ்சினியர் வீட்டுக்கு தினப்படி சமையலுக்கு ஆள் வேண்டுமாம். நீங்கள் சம்மதித்தால் தினமும் நான் போய் செய்து கொடுத்து விட்டு வருவேன். மாதாமாதம் கணிசமான ஒரு தொகை என் மூலம் உபரியாக வந்தால் நம் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் நல்லது தானே” என்று தன் விருப்பத்தையும், குடும்ப நிதித்தேவைகளையும் எடுத்துக்கூறினாள்.

நாகராஜனுக்குத் தன் மனைவியை வேலைக்கு அனுப்புவதில் கொஞ்சமும் விருப்பம் கிடையாது. குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து அவள் கூறுவதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்து, பிறகு யோசித்துச் முடிவு சொல்வதாகச் சொல்லி படுக்கச் செல்கிறார்.

தனக்கு சமையல் வேலைகள், ஸ்வீட் செய்தல் போன்றவற்றைக் கற்றுத்தந்த குருநாதரின் பெண்ணான சாருவின் அழகிற்காகவும், அமைதியான நல்ல குணத்திற்காகவும், தானே மிகவும் விரும்பி, மிகவும் எளிமையான முறையில், சாருவைத் திருமணம் செய்து கொண்டவர் தான் நாகராஜன்.

சாருவை மஹாராணிபோல் வைத்துத் தாங்க வேண்டும் என்று தான் நாகராஜனுக்கு ஆசை. என்ன செய்வது? தன்மானம் மிக்க அவருக்கு, வாழ்க்கையில் எவ்வளவோ சோதனைகள். நாம் ஆசைப்படுவதெல்லாம் நடக்க அதிர்ஷ்டமும் சேர்ந்து கை கொடுக்க வேண்டாமா?

ஒரு சிறிய இடத்தைப்பிடித்து, ஓட்டல் நடத்தி நாலு பேர்களுக்கு வேலையும் கொடுத்து, சிறப்பாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். நல்ல மூளை இருந்தும், உழைத்துப் பிழைக்க ஆவல் இருந்தும், முதல் போட மூலதனம் கிடைக்காமல் அவதிப்படுபவர்.

அவரிடம் செல்வம் சேராது போனாலும், சாருவுடன் திருமணம் ஆகி பன்னிரெண்டு ஆண்டுகளுக்குள், அடுத்தடுத்து நாலு அழகான ஆரோக்யமான குழந்தைச் செல்வங்கள் மட்டும் குறைவில்லாமல் கிடைக்கப் பெற்றவர்.


 

கிரஹப்பிரவேச வீட்டில் அனைவரும் கூட்டமாகக் கூடி குதூகுலமாக உள்ளனர்.  நாகராஜன் அதிகாலை முதல் அடுப்படியில் தன் கடமையே கண்ணாக, ஜாங்கிரியைப் பொறுமையாகப் பிழிந்து, கொதிக்கும் மிகப்பெரிய இரும்புச்சட்டியில், நல்ல பதமாகப் பொன் முறுகலாக எடுத்துப்போட்டு, பரிமாறுபவர்களுக்கு வசதியாக தட்டுகளில் நிரப்பி அனுப்பிய வண்ணம் உள்ளார்.  

ஜாங்கிரி சாப்பிட்ட அனைவருமே, அதன் இனிப்புச்சுவையும், முறுகலான பதமும், ஜீராப்பாகுடன் சூடாக சுவையாக இருந்ததையும் பாராட்டிச் சென்றனர். படைப்பாளியான நாகராஜனுக்கு அவர்கள் பாராட்டு புதிய உற்சாகத்தை அளித்தது.

இன்று பிறந்தநாள் காணும் தன் குழந்தை இந்த ஜாங்கிரியைச் சாப்பிடத் தன் அருகில் இல்லையே என வருத்தப்பட்டுக் கொண்டார், நாகராஜன்.

எப்படியும் தான் விடைபெற்றுச் செல்லும் போது தனக்கென்று இரண்டு ஜாங்கிரிகளாவது தரமாட்டார்களா ! என நினைத்துக்கொண்டார்.

பொதுவாக நாகராஜன் எந்த ஸ்வீட் செய்தாலும், தன் வாயில் போட்டு டேஸ்ட் பார்க்க மாட்டார். சொல்லப்போனால் அவருக்கு ஸ்வீட் சாப்பிடுவதில் கொஞ்சமும் விருப்பமே கிடையாது. 

பிறர் சாப்பிட்டு அதன் சுவையைச் சொல்லி மனதார அவரைப் பாராட்டும் போது தான், அவருக்குத் தானே ஸ்வீட் சாப்பிட்டது போல மகிழ்ச்சி ஏற்படும்.

விடியற்காலம் நாலு மணி முதல் தொடர்ச்சியாக நாலு மணி நேரம் அடுப்படியில் அமர்ந்து, அனலில் வெந்து வேலை செய்தவர், தன் வேலை இன்று நல்லபடியாக முடிந்ததில் திருப்திப் பட்டவராய், எழுந்து கொண்டார். 

பந்திக்குப் பரிமாறக் கொடுத்த ஜாங்கிரிகள் போக, மீதமிருந்த சுமார் நூறு ஜாங்கிரிகளை பத்திரமாக ஒரு எவர்சில்வர் தூக்கில் போட்டு, எஜமானரிடம் ஒப்படைத்து விட்டுப் புறப்படத் தயாரானார்.

“நீர் கேட்ட ஆயிரம் ரூபாய் ரொம்ப ஜாஸ்திபோலத்தான் எனக்குத் தோன்றியது. என் சம்பந்திகள் உள்பட எல்லோரும் நீர் செய்த ஜாங்கிரி சூப்பராக இருப்பதாக உமக்கு சர்டிஃபிகேட்டே கொடுத்து விட்டார்கள்; இனிமே எங்க வீட்டிலே எந்த ஃபங்ஷன் என்றாலும் உம்மையே தான் கூப்பிடுவோம்” என்று சொல்லி ஆயிரம் ரூபாய்ப் பணத்தை வெற்றிலை பாக்கு வாழைப்பழத்துடன் ஒரு தட்டில் வைத்து நீட்டினார், அந்த எஜமானர்.

ஒரு மரியாதைக்குக்கூட நீர் டிபன் சாப்பிட்டீரா என்று கேட்கவும் இல்லை. டிபன் சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள் என்று சொல்லவும் இல்லை. ஒரு இரண்டு ஜாங்கிரியை நீர் உங்க வீட்டுக்குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கொடுக்கவும் இல்லை.

தானே அங்கு சென்று டிபன் சாப்பிடவோ, அல்லது என் குழந்தைகளுக்கு நாலு ஜாங்கிரிகள் தாங்கோ என்று கேட்கவோ, நாகராஜனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நாகராஜன் தன் வீட்டுக்குப் புறப்படலானார்.

வழியெங்கும், தான் வாக்குக்கொடுத்தபடி, தன் குழந்தைக்கு ஏமாற்றம் இல்லாமல், தன் குழந்தையின் பிறந்த நாளுக்கு இன்று எப்படியும் ஸ்வீட் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணமே அவர் மனதில் இருந்தது.

ஸ்வீட் மாஸ்டரான தனக்கு, இன்று காலை தன் கைப்பட செய்த அருமையான ஜாங்கிரிகளில், சிலவற்றைத் தனக்கும் தர வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றாமல் போனது எப்படி? என்று நினைக்க நினைக்க அவர் மனதில் வருத்தம் அதிகரித்தது.

என்ன தான் பெரிய பணக்காரர்களாக இருப்பினும், ஸ்வீட் மாஸ்டருக்கும் ஒரு குடும்பம் குழந்தை குட்டிகள் என்று இருக்காதா என்ற எண்ணமும், மனிதாபிமானமும் ஒரு சிலருக்கு இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டே, பஸ்ஸை விட்டு இறங்கியதும், நேராக எதிர்புறம் உள்ள ஸ்வீட் கடையொன்றில் அரைக்கிலோ ஜாங்கிரி வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார், நாகராஜன்.

கடையில் வாங்கி வந்த ஜாங்கிரிப் பொட்டலத்தைத் தன் குழந்தையின் கையில் கொடுத்து அவனுடைய சந்தோஷத்தை வெகுவாக ரஸித்தார்.

”சாப்பிட ஏதாவது பழையசோறோ, நீராகாரமோ இருக்குமா சாரு?” எனக் கேட்டவாறே தரையில் சோர்வாக அமர்ந்தார் நாகராஜன்.


oooooOooooo


அனைவருக்கும் 
என் இனிய 
பொங்கல் 
நல்வாழ்த்துகள்.
செங்கரும்புச் சாறெடுத்து இதழினிலே தேக்கி,சிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி,


மதமதத்த வளையணிந்த கைகள் வீசி,மங்கலமாம் ”தை” என்னும் மங்கை வருவாள் !பொங்கியெழும் புத்தின்ப உணர்ச்சி தருவாள் !!அன்புடன்

கோபு
79 கருத்துகள்:

 1. Iniya pongal nal vazhthukal Sir,to you n your family,very nice story

  பதிலளிநீக்கு
 2. சிறுகதை அருமை! முன்பே படித்த ஞாபகமும் இருக்கிறது! நீராகாரம் கேட்கும் நாகராஜின் மன நிலை, கிட்டத்தட்ட பெண்களின் மன நிலை மாதிரி தான்! நாளெல்லாம் சமையல் கட்டில் வேலை செய்யும் இல்லத்தரசிக்கு தன் சமையல் எப்போதும் அலுப்பாயிருக்கும்! ஆனால் யாராவது உட்கார வைத்து அன்னமிட்டால் அதுவே அமிர்த‌மாய் மனசெல்லாம் இனிக்கும்!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான சிறுகதை ஐயா...
  குடும்பச் சூழல்... வேலைக்குச் செல்கிறேன் என்று சொல்லும் மனைவியை போகச் சொல்லலாமா வேண்டாமா என தவிக்க வைக்கிறது. தான் செய்ததை எல்லோரும் புகழ்ந்து சாப்பிட தன்னை சாப்பிட்டியா என்று கேட்க நாதியத்துப் போய்... தன் மகனின் பிறந்த நாளுக்கு தான் செய்த ஜாங்கிரியைக் கொண்டு செல்ல முடியாவிட்டாலும் கடையிலாவது வாங்கிச் செல்லும் மனநிலை என எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளுகிறது நீராகாரம் கேட்கும் அந்த எதார்த்த வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
 5. தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா !
  இன்பம் பொங்கும் திரு நாளாய் என்றும் வாழ்வில் ஒளி வீசி
  தை மகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  மகிழ்வை அள்ளி அள்ளி வழங்கட்டும் .சிறப்பான பகிர்வுக்கு
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

  பதிலளிநீக்கு
 6. சிறுகதை அருமை...

  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று விமர்சனம் அனுப்பி விட்டேன் ஐயா... நன்றி...

   நாள் : 19.01.2014

   நேரம் : 8.33 pm

   நீக்கு
  2. 8.36க்கு STANDARD ACKNOWLEDGEMENT என்னிடமிருந்து கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

   அது மிகவும் முக்கியம். ;)))))

   மிக்க நன்றி Mr. DD Sir.

   அன்புடன் VGK

   நீக்கு
 7. அன்பின் வை.கோ - சிறு கதை அருமை - இருப்பினும் போட்டிக்காக மறு முறை படித்து மகிழ்ந்து விமர்சனம் அனுப்புகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வை.கோ - இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 9. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
  பொங்கலோ.. பொங்கல்!..
  அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Unknown May 5, 2019 at 10:54 AM

   //SUPER O SUPER.👌👌👌👌👌//

   அன்புடையீர், வணக்கம்.

   என்னுடைய வாட்ஸ்-அப் நண்பராக இருப்பதால், தாங்கள் யார் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், இனிமேல் தங்களின் கமெண்ட்ஸ்க்குக் கீழே தங்கள் பெயரையும் அடித்து அனுப்பினால் மேலும் மகிழ்ச்சியடைவேன்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 10. சிந்திக்க வைத்த சிறுகதை. விமர்சனம் தனியாகவல்லவா எழுத வேண்டும், அதனால் இங்கு மூச். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. தங்களுக்கும் தங்களின் குடும்பத்துக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.

  கதையை நினதானமாக படித்துவிட்டு விமர்சனம் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. சிறுகதை அருமை!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 13. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

  பொங்கலன்று இனிப்பான ஜாங்கிரி பற்றிய பகிர்வுகள்..

  ஜாங்கிரிகளைப் பார்த்ததும் எடுத்து
  ஜாக்கிரதையாக கோர்த்து அனுமனுக்கு
  மாலையாக்கிப் போட விருப்பம் வந்தது ..

  பதிலளிநீக்கு
 14. ஸ்வீட் மாஸ்டரான தனக்கு, இன்று காலை தன் கைப்பட செய்த அருமையான ஜாங்கிரிகளில், சிலவற்றைத் தனக்கும் தர வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றாமல் போனது எப்படி?

  கதை மாஸ்டர் ஸ்வீட் சாப்பிடமாட்டாரோ..!

  பதிலளிநீக்கு
 15. கோபு சார் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கலன்று ஜாங்கிரி கொடுத்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  Vetha.Elangathilakam

  பதிலளிநீக்கு
 17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  Vetha.Elangathilakam

  பதிலளிநீக்கு
 18. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  நீண்ட பிரிவுக்கு பிறகு இதோ இங்கு மீண்டும்.........
  சிறுகதை படித்தேன்
  கண்ணீர் கட்டுபடமட்டேங்கறது.
  மறுபடியும் பார்போம்

  பதிலளிநீக்கு
 19. இனிக்கும் பொங்கலன்று ஜாங்கிரியும்!
  பொங்கல் நல் வாழ்த்துகள் வைகோ சார்

  பதிலளிநீக்கு
 20. தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 21. கோபு சாருக்கு ப்ரியத்துடனான பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. கோபு அண்ணன் நலமோ? வீட்டில் அனைவரும் நலம்தானே?.. ஜாங்கிரி செய்வதைக் காட்டியிருக்கிறீங்க ஆனா செய்முறையைச் சொல்லவில்லையே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). நாங்கள் இதனை “தேன்குழல்” என்றுதான் சொல்வோம்.

  இனிய பொங்கள் வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்குமாமே.. பிறக்கட்டும் அனைவருக்கும்.. நல்ல வழியாக...

  பதிலளிநீக்கு
 23. Aduththavargalaippatri ninnaikkaadava...panaththai vitterindaal ninaiththathu nadakkum yendra yennam. Nall kathai!

  Iniya pongal nalvaazhthtukkal, ungalukkum ungal kudumbaththaarkkum!

  பதிலளிநீக்கு
 24. சிறுகதை மிக அருமை.

  உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. சிறுகதை விமர்சனப் போட்டிக்கு இனிப்பை (VGK 01 - ஜா ங் கி ரி) கொடுத்து வரவேற்றமைக்கு நன்றி! ஏற்கனவே படித்த கதை மாதிரியே எனக்கு தோன்றவில்லை. ஜாங்கிரி நல்ல முறுகல் மற்றும் தித்திப்பு. (இனிப்பு என்று சொல்வதை விட தித்திப்பு என்று சொன்னால் வாயில் சுவை ஊறும்) போட்டியில் கலந்து கொள்வதைப் பற்றி நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 26. சிறுகதை மிக அருமை. இனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 27. சிறுகதை மிக அருமை. இனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 28. அன்புள்ள கோபு சார் அவர்களுக்கு,
  வணக்கம்.
  தங்களது ''ஜாங்கிரி' கதை படித்தேன். கதை நன்றாக இருக்கிறது. நான்கு மணி நேரம் தொடர்ந்து அடுப்படியில் வெந்து சுவையான ஜாங்கிரிகள் செய்தும் தன் குழந்தைக்கு தான் செய்த ஒரு ஜாங்கிரியைக்கூடகொடுக்க முடியாத நிலைமையை
  பார்க்கும்போது நான் கல்லூரியில் பாடமாக படித்த அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ''செவ்வாழை'' சிறுகதை ஞாபகத்துக்கு வருகிறது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 29. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து. அழகாகக் கருத்துக்கள் கூறி, பாராட்டி, வாழ்த்தியுள்ளவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இங்கு பின்னூட்டமிட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளிக்க இயலாத நிலையில் நான் உள்ளேன்.

  போட்டியில் கலந்துகொண்டு, பொறுமையாக விமர்சனங்கள் எழுதி அனுப்ப சுமார் ஒரு வாரம் கால அவகாசம் அளித்திருந்தும், இன்றே முதல் நாளே, இதனை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, ஒரு சில பெண் பதிவர்கள் விமர்சனம் எழுதி, சுடச்சுட பொங்கல் போல அனுப்பியுள்ளது என்னை மிகவும் வியப்படையச் செய்துள்ளது. ;)))))

  அவர்கள் எல்லோருக்கும் உடனுக்குடன் ACKNOWLEDGEMENT அனுப்பப்பட்டுள்ளன. நாளை முதல் எவ்வளவு விமர்சனங்கள் வந்து குவிய உள்ளனவோ ! பார்ப்போம்.

  எப்படியோ இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ விறுவிறுப்பாக சிறப்பாக அமைந்தால் மகிழ்ச்சியே.

  என்றும் அன்புடன் தங்கள்,

  VGK

  பதிலளிநீக்கு

 30. வணக்கம்!

  திருவள்ளுவா் ஆண்டு 2045
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழாய்ச் சமைத்து!

  பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
  கங்குல் நிலையைக் கழித்து!

  பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
  எங்கும் பொதுமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
  தொங்கும் உலகைத் துடைத்து!


  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 31. செவ்வாழை கதை என் மனதிலும் மின்னலிட்டு மறைந்தது Nagarajan.

  ஜாங்கிரி இனிப்பாக இருக்கிறது..

  வாழ்த்துக்கள்.. கண் தேவலையா?

  பதிலளிநீக்கு
 32. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  சிறுகதை அருமை.

  கடமைகள் அதிகரித்துவிட்டது அதனால் வருவதில் தாமதங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். விடுபட்ட பகிர்வுகளை முடிந்தபோது தொடர்வேன் உங்கள் அன்பான நினைவூட்டலுக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 33. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்ஜாங்கிரி கதையின் பாதிப்பு சற்று உப்பு கரிக்கிறது. மனிதர்களில் பலவிதம் அருமையான சிறுகதை நன்றி .

  பதிலளிநீக்கு
 34. அருமையான சிறுகதை தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 35. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! சிறுகதை அருமை.

  பதிலளிநீக்கு
 36. கோபு அண்ணா
  இந்தப் போட்டியெல்லாம் ஒரு 4,5 மாசம் (மே மாதத்துக்கு அப்புறம்) வெச்சுக்கக்கூடாதா? நான் என்னடான்னா ‘ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க’ன்னு இருக்கேன்.

  உங்கள் பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.
  உங்களுக்கும், மன்னிக்கும், மற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI January 15, 2014 at 3:23 PM

   வாங்கோ என் அன்புக்குரிய ஜெயந்தி,

   வணக்கம்.

   //கோபு அண்ணா
   இந்தப் போட்டியெல்லாம் ஒரு 4,5 மாசம் (மே மாதத்துக்கு
   அப்புறம்) வெச்சுக்கக்கூடாதா? //

   தங்களின் இன்றைய நிலை எனக்கும் நன்றாகவே புரிகிறது.

   அது தான் மிகவும் முக்கியம், ஜெ.

   மேலும் அது வாழ்நாள் முழுவதுமே மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய இனிமையான நிகழ்வுகள். அதில் முழு கவனம் செலுத்துங்கோ.

   முடியுமானால், தாங்கள் சொல்லும் மே மாதம் வரை வாரத்திற்கு ஒரு நாள் THAT TOO JUST ஒரே ஒரு மணி நேரம், இந்த உங்கள் கோபு அண்ணாவுக்காக ஒதுக்குங்கள். போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.

   அதன்பின், அதாவது மே மாதத்திற்குப்பிறகு, அதிகமாகக்
   கலந்து கொள்ளுங்கள். இந்தப்போட்டி எப்படியும் 40 வாரங்களுக்கு குறையாமல் தொடரத்தான் போகிறது.

   தங்களின் தற்போதைய சந்தோஷமான சூழ்நிலை எனக்குத் தெரிகிறது.

   என் இன்றைய சூழ்நிலையை நான் தங்களுக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. தெரிந்தால் தங்களின் சந்தோஷத்திற்கு நடுவில் சற்றே வருத்தப்படுவீர்கள் என்று தான். ஒன்றும் கவலை வேண்டாம். மிகச்சிறிய பிரச்சனை தான். அதுவும் விரைவில் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.

   //நான் என்னடான்னா ‘ஆசை இருக்கு தாசில் பண்ண,
   அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க’ன்னு இருக்கேன். //

   அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ, ஜெ. ;(

   உங்களைப்போன்ற அதிர்ஷ்டசாலி யாருமே கிடையாது என்று எப்போதும் தயவுசெய்து நினையுங்கோ. அதுதான் உண்மையும் கூட. ;)

   //உங்கள் பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.//

   சந்தோஷம்.

   //உங்களுக்கும், மன்னிக்கும், மற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. மனம் நிறைந்த நல்லாசிகள். சகல செளபாக்யங்களுடன் நீடூழி வாழ்க !

   பிரியமுள்ள கோபு அண்ணா + மன்னி

   நீக்கு
 37. நீங்கள் எப்படி உள்ளீர்கள் ஐயா ?...உடல் நலன் எப்படி உள்ளது ?...
  தங்களின் விறு விறுப்பான தொடர் எதனையும் காணோமே ?..!!!!
  அறியும் ஆவலுடன் காத்திருக்கின்றேன் .

  பதிலளிநீக்கு
 38. ஜாங்கிரி(கதை)யின் சுவை இனிப்பு. ஒரே ஓட்டமாக ஓடியது கதை. இவ்வாண்டு பொங்கல் பரிசும் ஜாங்கிரிதான்.

  பதிலளிநீக்கு
 39. பால் பொங்கியதா?! மகிழ்வும் பொங்கட்டும் நாளெல்லாம். சுவைக்கும் இனிப்புகளின் பின்னணி அசட்டு தித்திப்பாகி விடுகின்றன சில சமயங்களில்.

  பதிலளிநீக்கு
 40. ஜாங்கிரி கதை இதற்கு முன் படித்த நினைவு இல்லை...விமர்சன போட்டி சிறப்பாக தொடரட்டும்... வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 41. சிந்திக்க வைத்த சிறப்பான சிறு கதை.

  பதிலளிநீக்கு
 42. அன்புடையீர்,

  எல்லோருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

  முக்கிய அறிவிப்பு
  ===================

  விமர்சனம் எழுதி அனுப்புவோர்களின் கவனத்திற்காக மட்டும்:

  தாங்கள் எனக்கு விமர்சனம் மெயில் மூலம் அனுப்பியதும் என்னிடமிருந்து அதற்கான ACKNOWLEDGEMENT தங்களுக்கு வந்து சேர வேண்டும் என்பதை தயவுசெய்து மறக்க வேண்டாம். அதை தயவுசெய்து தாங்கள் FOLLOW செய்துகொள்ளவும்.

  தாங்கள் மெயில் அனுப்பிய உடனேயோ அல்லது அடுத்த 24 மணி நேரங்களுக்குள்ளோ என்னிடமிருந்து.தங்களுக்கு ஓர் STANDARD ACKNOWLEDGEMENT வரவேண்டும்.

  அப்போதுதான் தங்களின் விமர்சனம் போட்டிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக அர்த்தமாகும்.

  ஒருவர் விமர்சனம் அனுப்பியுள்ளதாகச் சொல்கிறார். இருப்பினும் எனக்கு அது வந்து சேரவில்லை. அதனால் நானும் அவருக்கு என் STANDARD ACKNOWLEDGEMENT அனுப்பவில்லை.

  அதனால் இந்த முக்கிய அறிவிப்பினை இன்று இங்கு எல்லோருடைய கவனத்திற்காகவும் கொடுத்துள்ளேன்.

  விமர்சனம் அனுப்ப வேண்டிய மெயில் விலாசம்:

  valambal@gmail.com

  [ V A L A M B A L @ G M A I L . C O M ]

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 43. உழைப்பவர்க்கு மரியாதை செலுத்த தெரியாத மனிதர்களை என்ன சொல்வது? எங்கள் வீட்டில் விசேஷத்திற்கு வேலை செய்ய வருபவர்களை முதலில் சாப்பிட சொல்லிவிட்டுதான் அவர்கள் வேலையை செய்ய விடுவோம்....

  எல்லோருக்கும் இனிப்பை பரிமாறி தான் மட்டும் கசப்போடு வெளியேறிய நாகராஜனின் மன நிலையை அழகாக சித்தரித்துள்ளீர்கள்....

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 44. ஜாங்கிரி செம தித்திப்பு ,நான் போட்டில கலந்துக்கலாம்னு இருக்கேன் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mythily kasthuri rengan January 19, 2014 at 7:56 AM

   //ஜாங்கிரி செம தித்திப்பு, நான் போட்டில கலந்துக்கலாம்னு இருக்கேன் சார்.//

   சந்தோஷம். மிக்க நன்றி. அவசியம் கலந்துகொண்டு விமர்சனம் உடனே எழுதி அனுப்புங்கோ.

   நாளை திங்கட்கிழமை இந்திய நேரம் இரவு மிகச்சரியாக 8 மணியுடன், இந்தப் போட்டிக்கான காலக்கெடு முடிவடைய உள்ளது. அதனால் சீக்கரமாக அனுப்புங்கோ, ப்ளீஸ்.

   அருமையானதோர் வாய்ப்பினை நழுவவிடாதீர்கள். வாழ்த்துகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 45. ஜாங்கிரி - சிறுகதை முன்பே படித்தது என்றாலும் மீண்டும் படித்தேன். உழைப்பாளிகளுக்கு பல சமயங்களில் மரியாதை கிடைப்பதில்லை என்பதை அழகாய் சொன்னீர்கள்.... பாராட்டுகள்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 46. நெகிழவைத்த சிறுகதை. மனிதர்களின் மாறுபட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான எழுத்தோட்டம். நாளை ஒருநாள் இருக்கிறது. முடியுமானால் போட்டியில் கலந்துகொள்வேன். நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி January 19, 2014 at 2:15 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நெகிழவைத்த சிறுகதை. மனிதர்களின் மாறுபட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான எழுத்தோட்டம்.//

   சந்தோஷம். மிக்க நன்றி.

   //நாளை ஒருநாள் இருக்கிறது. முடியுமானால் போட்டியில் கலந்துகொள்வேன். நன்றி வை.கோ.சார்.//

   மிக்க மகிழ்ச்சி, நாளை இரவு இந்திய நேரம் 8 மணியுடன் இந்தக்குறிப்பிட்ட கதைக்கான விமர்சனங்கள் வந்துசேர காலக்கெடு முடிவடைவதால், அதற்குள் சற்று முன்பாகவே எனக்குக் கிடைக்குமாறு எழுதி அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

   ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றியுடன் VGK

   நீக்கு
 47. தன்மானம் குறுக்கிடும் கதை. இரண்டு கொடுங்கோ என்று கேட்கக் கூடாதா? வாங்கக் காசு கிடைத்ததே. அது போதும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 48. மிக அருமையான கதை! சமையல் செய்யும் நாகராஜன் பாத்திரம் மிகவும் கவர்ந்தது. நன்றி!

  பதிலளிநீக்கு
 49. திண்டுக்கல் தனபாலன் February 8, 2014 at 8:31 PM

  //உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...//

  தங்களின் அன்பான தகவலுக்கு மிக்க நன்றி, Mr. DD Sir.

  பதிலளிநீக்கு
 50. இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால் அவரின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

  http://swamysmusings.blogspot.in/2014/09/blog-post.html

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 51. விமரிசனம் எழுதி அனுப்புவது வேறு, பின்னூட்டம் போடுவது வேறு என்று புரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 52. இந்த கதை முன்பே ஒருமுறை படித்து பின்னூட்டமும் போட்ட நினைவு இருக்கே. ஊருக்கெல்லா ஸ்வீட் செய்து தரும் சமையல் காரருக்கு தன் குழந்தைக்கு கடையில் வாங்கி கொடுக்க வேண்டிய நலமையா???.

  பதிலளிநீக்கு
 53. போட்டிகாகாட்டி மருக்கா இந்த கத இங்கன போட்டீகளோ. கத நல்லாதா இருந்திச்சி

  பதிலளிநீக்கு
 54. முதல் விமரிசனத்துக்கான சிறுகதையை இனிப்பில் ஆரம்பித்திருப்பது. ஜாங்கிரி சாப்பிட்ட சந்தோஷமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 55. போன இடுகையில் ஜாங்கிரி மாலை..இங்கே ஜாங்கிரி சிறுகதை..இரண்டும் ஸ்வீட்..நான்தான் லேட்..

  பதிலளிநீக்கு
 56. //ஒரு வார்த்தைக்குக் கூட சாப்பிட்டீர்களா என்றோ, குழந்தைகளுக்கு கொஞ்சம் இனிப்பு எடுத்துச் செல்லுங்கள் என்றோ எஜமானர் கூறாமல் இருந்தது அவர் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தினாலும், தன் குழந்தை ஏமாந்து விடக்கூடாது என்று கடையில் ஜாங்கிரியை வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்து அவன் உண்டு மகிழ்வதை இரசிக்கையில் ஒரு சிறந்த தந்தையாக மிளிர்கிறார்.  வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது நிதர்சனமான உண்மை! இந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தத்தமது வீட்டில் எந்த ஒரு விசேஷம் என்றாலும், அதில் பங்கெடுத்துப் பணிபுரியும் அனைவரையும் உபசரிக்கத் தவறக்கூடாது எனும் கருத்தை விதைக்கும் விதம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 57. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 68

  அதற்கான இணைப்பு:
  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html

  பதிலளிநீக்கு
 58. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானது:
  https://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-01-03.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானது:
  https://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-02-03.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  https://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-03-03.html

  பதிலளிநீக்கு
 59. சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  பதிலளிநீக்கு
 60. COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir in my WhatsApp STATUS page on 20.08.2018 :-

  -=-=-=-=-=-

  கதையை படித்து முடித்துவிட்டேன். சார். மிக அருமை. பிறருக்கு ருசியாக சமைத்து சேவை புரிபவர்களை 'நீங்கள் சாப்பிட்டீர்களா?' யாரும் கேட்பதில்லை என்ற அவலத்தை உணரவைத்துவிட்டீர்கள். எவ்வளவு சுவையாக பிறருக்கு சமைத்தாலும் வீட்டில் மனைவி கையால் சமைத்த உணவு பழையதானாலும் அமிர்தம் என்பதை கடைசி வரியில் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். மிகவும் ஜாங்கிரியை ருசித்து சாப்பிடுவதுபோல் தங்களின் 'ஜாங்கிரி' கதையையும் ர்சித்துப் படித்தேன், பாராட்டுகள்!💐💐💐

  -=-=-=-=-=-

  திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 61. WHATS APP COMMENTS RECEIVED ON 22.08.2018 FROM 'LIBYA VASUDEVAN' RETIRED PERSON FROM BHEL, TIRUCHI NOW AT MELBOURNE

  -=-=-=-=-=-

  [20/08 17:07] Libya Vasudevan Bhel: Super Gopi. அருமையான சிறுகதை உணர்வு பூர்வமான எழுத்துக்கள். தினம் ஒன்று பதிந்தால் நல்லது.

  இப்படிக்கு
  *லிபியா வாசுதேவன்.*
  (உங்களுக்கு உடனே புரிந்து கொள்வதற்காக)

  [20/08 17:10] Libya Vasudevan Bhel: I am now in Melbourne with my second son to take care of our grand daughter. Will stay here upto Dec 20. Hope you and your family are fine.

  How is Trichy after floods in Cauvery? Take care on safety.

  Regards

  [22/08 14:57] Libya Vasudevan Bhel: VGK தூள் கெளப்புறார்👏🏻👏🏻👏🏻👍🏽👍🏽👍🏽

  >>>>>

  பதிலளிநீக்கு
 62. [22/08 14:58] Libya Vasudevan Bhel:
  Commented by Chandramohan ex Manager OP&C RM👆👆

  -=-=-=-

  [22/08 14:59] Libya Vasudevan Bhel: [22/08, 18:45] Revathi Narayanasamy: Arumaiyana nadai

  [22/08, 18:46] Revathi Narayanasamy: Varnanaigal pramadham

  [22/08, 18:46] Revathi Narayanasamy: VGK kalakkaraar

  My cousin sister from Chennai
  [22/08 15:02] Libya Vasudevan Bhel: Comment rec'd from my Sister Anu Swaminathan just now from Chennai after reading Chudidar Vaangapporeyn ...
  Super vasu.👌👌

  -=-=-=-

  [22/08 15:05] Libya Vasudevan Bhel: I shared to few groups in which my relatives and friends of BHEL are there. Hope you will approve for me to forward your link.

  -=-=-=-

  Sooooper nadai, hope this story reveals your personal life experience...

  -=-=-=-

  மிக்க நன்றி ’லிப்யா வாசுதேவன்’ ஸார். வாட்ஸ்-அப்பில் - STATUS பகுதியில் 20.08.2018 முதல் தினமும் வெளிவர இருக்கும் என் கதைகளின் லிங்க்ஸ்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து கொள்வதிலும், அவர்களின் கருத்துக்களை வாங்கி எனக்குத் தாங்கள் FORWARD செய்வதிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

  பிரியமுள்ள VGK (Retired Accounts Officer/Cash - BHEL -Tiruchi-14)

  பதிலளிநீக்கு
 63. WHATS APP COMMENTS RECEIVED ON 20.08.2018 FROM Mrs. VIJI KRISHNAN, RAIL NAGAR, TIRUCHI

  -=-=-=-

  [20/08 19:41] Viji Rail Nagar: Read the story 'Jangiri' and nice.

  -=-=-=-

  Thanks a Lot விஜி !

  அன்புடன் வீ..ஜீ !!

  பதிலளிநீக்கு
 64. திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.

  விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு
  22.09.2018

  பதிலளிநீக்கு
 65. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 22.05.2021


  ஜாங்கிரி மிக அருமை, இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிடும் நான் கடைசியாக தேர்ந்தெடுப்பதென்னவோ ஜாங்கிரிதான்.  உங்கள் நாகராஜனின் கை பக்குவத்தில் வாசிக்கும்போதே மணமும் நாக்கினில் நீரும் சுரந்ததை மறுக்க வில்லை. குழந்தைகளுக்கு 2 ஜாங்கிரியாவது கொடுத்திருக்கலாம் என்ற மனிதாபிமானத்தை எல்லோர் மனதிலும் விதைத்த உங்களை மனதார பாராட்டலாம். நன்றி.
  -=-=-=-=-

  THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

  பதிலளிநீக்கு
 66. WHATS-APP COMMENTS FROM Mr. BALACHANDRAN 6374044710 ON 22.05.2021


  Excellent story. Jangri

  -=-=-=-=-=-

  THANKS A LOT, SIR
  - vgk

  பதிலளிநீக்கு