About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, January 7, 2014

106 / 2 / 3 ] புத்தாண்டில் ஓர் நற்செய்தி !

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான இனிய அன்பு வணக்கங்கள்.

அடியேன் இதுவரை வெளியிட்டுள்ள மூன்று சிறுகதை தொகுப்பு நூல்களும், நம் இந்தியாவில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் உள்ள வாசக சாலைகளில் இடம் பெற்றுள்ளன என்ற தகவல், உலகெங்கும் வாழும் பல தமிழ் வாசகர்களின் கடிதங்களாலும், மின்னஞ்சல்களாலும், தொலைபேசிப் பாராட்டுக்களாலும், வாழ்த்துகளாலும்  என்னால் அவ்வப்போது நன்கு அறிய முடிகிறது. 
சமீபத்தில் சிங்கப்பூர் வாசகசாலையிலிருந்து என்னை ஒரு பெண்மணி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.


என் தொலைபேசி எண், அவரிடம் கையில் உள்ள என் சிறுகதைத் தொகுப்பு நூல்களிலிருந்து, அவர்களுக்குக் கிடைத்துள்ளது.  

அவருடைய பெயர் + அவர் அங்கு வகிக்கும் பதவி இதோ:


Ms. K. THAMARAISELVI
BIBLIOGRAPHIC SPECIALIST
”S I L A S”
NATIONAL LIBRARY
SINGAPORE

என்னுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு, என்னிடமிருந்து என்னைப்பற்றிய மேலும் பல தகவல்கள் சேகரித்துக் கொண்டார்கள்.

She creates Profiles for 
Indian Authors 
in the American 
OCLC Database 


அமெரிக்காவிலிருந்து வெளியாகும், இந்திய எழுத்தாளர்களின் பட்டியலில்,  01.01.2014 முதல் என் பெயரும் சேர்க்கப்பட்டு விட்டதாக தகவல் அனுப்பி பாராட்டி வாழ்த்தியுள்ளார்கள்.  

அந்தப் பட்டியலை இந்தக்கீழ்க்கண்ட இணைப்பில் சென்றால் பார்க்கலாம் என்றும் சொல்லியுள்ளார்கள்.


ஆனால், அதில் Subscribe செய்துள்ளவர்களால் மட்டுமே அதனை நேரிடையாகச் சென்று பார்க்க இயலுமாம். 

2014 புத்தாண்டில் கிடைத்துள்ள இந்த சந்தோஷமான செய்தியினைத் தங்களுடன் இங்கு இன்று பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


oooooooooooooooooooooooooo
  
 சிறுகதை விமர்சனப் போட்டி !


ஆண்டு முழுவதும் பரிசுகள் !அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!மொத்த பரிசுத்தொகை  

Minimum: Rs.12,000 

Maximum: Unlimited *


[*Variable according to the number of Participants ]

   

வெற்றிபெற அட்வான்ஸ் 


நல்வாழ்த்துகள் !!!மேலும் முழு விபரங்களுக்கு


என்றும் அன்புடன் தங்கள்,

வை. கோபாலகிருஷ்ணன்
41 comments:

 1. சந்தோஷமான செய்தி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஐயா.
  இந்த புத்தாண்டில் தங்களுக்கு இன்னும் நிறைய சிறப்புகள் கிடைக்க என்னுடைய வாத்துக்கள் ஐயா

  ReplyDelete
 3. ஒவ்வொரு எழுத்தாளரும் ( கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், வலைப் பதிவர் என்று அனைவரும் ) தனது எழுத்துக்கள் நூலாக வெளிவர வேண்டும் என்றே விரும்புவர். ஆனாலும் நூல் வெளியிடுவதாகச் சொல்லி கையைச் சுட்டுக்கொண்டு கடனாளி ஆனவர்கள்தான் நிறையபேர். அன்பளிப்பாகவே தன்னுடைய முதல் பதிப்பு புத்தகங்கள் அனைத்தையும் நண்பர்களுக்கு கொடுத்தவர்களும் உண்டு. ஆனாலும் அந்த எழுத்தாளர்களுக்கு பாராட்டும், புகழும் கிடைக்கும் போது , புத்தக வெளியீட்டால் தான் பட்ட ,அனைத்து எல்லா கஷ்டங்களும் மறைந்து போய் விடுகின்றன. ஒருவித பரவச நிலை வருகிறது. ஆனந்தம்! ஆனந்தமே!

  இந்திய எழுத்தாளர்களின் வரிசையில், தங்கள் பெயரும் இடம் பெற்று இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு மகிழ்வுச் செய்தியினைத் தந்த சகோதரி சிங்கப்பூர்,
  K தாமரைச்செல்வி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 4. புத்தாண்டில் மகிழ்வளிக்கும் இனிப்பான செய்தி
  இது நம் பதிவர்கள் அனைவருக்குமான
  கௌரவமாகவே இதைக் கருதுகிறோம்
  சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வாழ்க வளமுடன்!..

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் தனிப்பெருங்கருணையே அன்றி வேறில்லை!..

  மேலும் மேலும் புகழ் எய்துவீர்களாக!..

  ReplyDelete
 6. அமெரிக்காவிலிருந்து வெளியாகும், இந்திய எழுத்தாளர்களின் பட்டியலில், 01.01.2014 முதல் என் பெயரும் சேர்க்கப்பட்டு விட்டதாக தகவல் அனுப்பி பாராட்டி வாழ்த்தியுள்ளார்கள். ///

  புத்தாண்டில் கிடைத்துள்ள சந்தோஷமான செய்திகளுக்கு
  புத்துணர்வான வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 7. பெயரும் புகழும் பெற்று நீடூழி வாழ்க.

  ReplyDelete
 8. அருமையான நற் செய்தி அகம் குளிர வாசித்து மகிழ்ந்தேன் ஐயா !தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மணம் கமழும் பூச் செண்டும் இதோ பெற்றுக் கொள்ளுங்கள் ஐயா .மென்மேலும் சாதனை படைத்து புகழின் உச்சிக்கே சென்றிட அம்பாளின் நல்லாசிகளும் கிட்டட்டும் .

  ReplyDelete
 9. உலகத் தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் உங்கள் பெயரும் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.இதை விடப் பெரிய அங்கீகாரம் ஒரு எழுத்தாளருக்கு என்ன இருக்கப் போகிறது. இந்த இனிப்பான செய்தியை பகிர்ந்த திருமதி தாமரைச் செல்வி அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 10. சந்தோஷ செய்தி... மிக்க மகிழ்ச்சி சார்...

  தாங்கள் மேலும் பல கதைகளை வெளியிட வேண்டும்..என்பதே என் விருப்பம்...

  ReplyDelete
 11. தங்களுக்குக் கிடைத்துள்ள இந்தச் சிறப்புக்கு வாழ்த்துகள். உங்கள் சிறுகதைத் தொகுப்பு எதையும் இது வரை படித்ததில்லை. விரைவில் படிக்கணும். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. சந்தோசமான விசயம்! வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 13. அமெரிக்காவிலிருந்து வெளியாகும், இந்திய எழுத்தாளர்களின் பட்டியலில், 01.01.2014 முதல் என் பெயரும் சேர்க்கப்பட்டு விட்டதாக தகவல் அனுப்பி பாராட்டி வாழ்த்தியுள்ளார்கள். //
  மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள். உங்கள் கதைகள் எல்லாம் மிக அருமையானது.
  தாமரைசெல்வி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. சந்தோஷமான செய்தி. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  மேலும் பற்பல சிறப்புகள் உங்களை வந்தடைய எனது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 15. Congrats!! Melamkottu melum melum niraiya pukaz kidiakanum enrru vaazthukiren.

  ReplyDelete
 16. நீர் சகலகலாவல்லவர்.
  உங்களின் மற்ற
  திறமைகளும் விரைவில்
  பாராட்டப்படும் நாள்
  வெகு தொலைவில் இல்லை
  வாழ்த்துக்கள் VGK

  ReplyDelete
 17. இந்திய எழுத்தாளர்களின் வரிசையில், தங்கள் பெயரும் இடம் பெற்று இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு மகிழ்வுச் செய்தியினைத் தந்த சகோதரி சிங்கப்பூர்,
  K தாமரைச்செல்வி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 18. மகிழ்ச்சியான விஷயம். மிகவும் பாராட்டுகள். சேருமிடத்தில் சேர்ந்தருக்கிறது. இன்னும் பல பாராட்டுகள் வந்து சேர வாழ்த்துகிறேன். அன்புடன் மாமி

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 20. திறமை நேர்மை உள்ளவர்களுக்கு அதற்குண்டான அங்கீகாரம் என்றாவது ஏதோ ஒரு விதத்தில் கிடைத்தே தீரும் வாழ்த்துக்கள் மாமா

  ReplyDelete
 21. அன்பின் வை.கோ - மூன்று சிறுகதை தொகுப்பு நூல்களும், நம் இந்தியாவில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் உள்ள வாசக சாலைகளில் இடம் பெற்றுள்ளன என்ற தகவல், உலகெங்கும் வாழும் பல தமிழ் வாசகர்களின் கடிதங்களாலும், மின்னஞ்சல்களாலும், தொலைபேசிப் பாராட்டுக்களாலும், வாழ்த்துகளாலும் தங்களால் அவ்வப்போது நன்கு அறிய முடிகிறது குறித்து மிக்க மகிழ்ச்சி - தங்களீன் புகழ் திரை கடலோடியும் கொப்டி கட்டிப் பறக்கிறதென்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 22. அன்பின் வை.கோ - மூன்று சிறுகதை தொகுப்பு நூல்களும், நம் இந்தியாவில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் உள்ள வாசக சாலைகளில் இடம் பெற்றுள்ளன என்ற தகவல், உலகெங்கும் வாழும் பல தமிழ் வாசகர்களின் கடிதங்களாலும், மின்னஞ்சல்களாலும், தொலைபேசிப் பாராட்டுக்களாலும், வாழ்த்துகளாலும் தங்களால் அவ்வப்போது நன்கு அறிய முடிகிறது குறித்து மிக்க மகிழ்ச்சி - தங்களீன் புகழ் திரை கடலோடியும் கொப்டி கட்டிப் பறக்கிறதென்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 23. பின் தொடர்வதற்காக இம் மறுமொழி - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 24. அன்பின் வை.கோ - 2014 புத்தாண்டில் கிடைத்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்தியினைத் எங்களுடன் இங்கு இன்று பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைந்து மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். .= நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 25. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள் ஐயா! மகிழ்வளிக்கும் செய்தியை சற்று தாமதாகப் படிக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்! நன்றி!

  ReplyDelete
 26. அமெரிக்காவிலிருந்து வெளியாகும், இந்திய எழுத்தாளர்களின் பட்டியலில், 01.01.2014 முதல் உங்கள் பெயரும் சேர்க்கப்பட்டு இருப்பது வலைபதிவாளர்கள் அனைவருக்கும் சந்தோஷமான செய்தி. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார். மேலும் பல சாதனைகளால் சிறப்புற இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. புத்தாண்டில் மகிழ்வளிக்கும் இனிப்பான செய்தி வாழ்த்துக்கள்.

  மேலும் சிறப்புக்கள் கிடைக்க வாழ்த்துகின்றோம்.

  ReplyDelete
 29. சந்தோஷமான செய்தி.
  வாழ்த்துக்கள் சார்.
  விஜி

  ReplyDelete
 30. உலகத்தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் உங்க பெயரும் இருப்பது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த பிரபல எழுத்தாளரின் நட்பு வட்டத்துக்குள்ள நானும் இருக்கேனேன்னு பெருமையா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் August 25, 2015 at 10:00 AM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

   //உலகத்தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் உங்க பெயரும் இருப்பது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த பிரபல எழுத்தாளரின் நட்பு வட்டத்துக்குள்ள நானும் இருக்கேனேன்னு பெருமையா இருக்கு.//

   :)))))))))))))))))) நான் சற்றே பிரபலமடைந்துள்ளதற்கு மூல காரணமே தங்களைப்போன்ற ஆத்மார்த்த நட்புள்ளங்கள் கொடுத்துவரும் ஊக்கமும் உற்சாகமும் மட்டுமே.

   மற்றபடி நான் மிகவும் சாதாரணமானவன் மட்டுமே. நத்திங் ஸ்பெஷல்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 31. // அமெரிக்காவிலிருந்து வெளியாகும், இந்திய எழுத்தாளர்களின் பட்டியலில், 01.01.2014 முதல் என் பெயரும் சேர்க்கப்பட்டு விட்டதாக தகவல் அனுப்பி பாராட்டி வாழ்த்தியுள்ளார்கள். //

  இதெல்லாம் உங்களுக்குத்தான் அதிசயம்.
  எனக்கு இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
  ஏன்னா இதெல்லாம் ரொம்ப கால தாமதமா ஆகி இருக்கு. எப்பவோ நடந்திருக்க வேண்டியது.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 26, 2015 at 3:41 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   **அமெரிக்காவிலிருந்து வெளியாகும், இந்திய எழுத்தாளர்களின் பட்டியலில், 01.01.2014 முதல் என் பெயரும் சேர்க்கப்பட்டு விட்டதாக தகவல் அனுப்பி பாராட்டி வாழ்த்தியுள்ளார்கள்.**

   இதெல்லாம் உங்களுக்குத்தான் அதிசயம். எனக்கு இல்லை, இல்லை, இல்லவே இல்லை. ஏன்னா இதெல்லாம் ரொம்ப கால தாமதமா ஆகி இருக்கு. எப்பவோ நடந்திருக்க வேண்டியது.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி ஜெ.

   தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 32. நீங்க ஒலகநாடுகலா சுத்தி வந்தீகளோ காட்டியும் ஒங்க பேரு புகழ் அல்லா ஒலக நாடுக பூராலயும் சுத்திகிட்டு இருக்குது.

  ReplyDelete
 33. மிக மிக சந்தோஷமான விஷயம். உங்க எழுத்துக்கு கிடைத்த வெற்றி பெருமை புகழ் எல்லாம் உலகை சுற்றி வருகிறதே. உலகம் சுற்றும் சீனியர் வாலிபருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 34. நீங்க துபாய் போனா ...உங்க எழுத்து அமெரிக்காவும் போயிடுச்சு..மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. மேலும் பல சந்தோஷமான செய்திகள் கேட்க ஆசைப்படுகிறோம்!

  ReplyDelete
 36. Your work is recognised worldwide. It is definitely not an easy task. You have hit the milestone with your talent. The very beginning of 2014 itself had brought you such a glad news from across the globe. Awesome. Great going.

  ReplyDelete
  Replies
  1. Padma Suresh January 18, 2020 at 10:22 PM

   WELCOME MDMT !

   //Your work is recognised worldwide. It is definitely not an easy task. You have hit the milestone with your talent. The very beginning of 2014 itself had brought you such a glad news from across the globe. Awesome. Great going.//

   Thanks a lot for your encouraging & kind comments.

   Delete