என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 16 மே, 2017

’டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் - மதிப்புரை


மின்னூல் ஆசிரியர்

திருமதி.
ஜெயஸ்ரீ
அவர்கள்

  


மின்னூல்கள் மூலம்
இவரைப்பற்றி நாம் அறிவது

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.
என் பார்வையில் 
'டெளரி தராத 
கெளரி கல்யாணம்’ 
மின்னூல்


இது ஒரு மிகப்பெரிய நாவல். மொத்தம்: 384  பக்கங்களும் 31 அத்யாயங்களும் கொண்டது. படிக்க மிகவும் சுவாரஸ்யமான முழு நீளக் கதையாகும்.

ஐ.டி. கம்பெனியில் மிக நல்ல உத்யோகத்தில், நல்ல சம்பளத்தில் இருப்பவள் இதில் வரும் கதாநாயகி கெளரி. எதற்காகவும், யாருக்காகவும் தன் இயல்புகளை மாற்றிக் கொள்ள தயாராக இல்லாததோர் அபூர்வமான கதாபாத்திரம் இந்த கெளரி. 

மாப்பிள்ளை வீட்டார் தன்னைப் பெண் பார்க்க வரும்போது பட்டுப்புடவையோ, சாதா புடவையோ தலைப்பு சரியாக வருமாறு தானே கட்டிக்கொள்ளத் தெரியாதவள். 

அவளின் அம்மா சித்ரா கஷ்டப்பட்டு உதவி செய்து புடவையைக் கட்டிவிட்டாலும், உடம்பு பூராவும் ஏதோ பாரம் ஏற்றினால் போல இருப்பதாகச் சொல்லி, அதனை உடனடியாக அவிழ்த்துப் போட்டு விட்டு சுடிதார் அணிபவள். தலையில் பூக்கள் சூடவும் தயாராக இல்லாதவள். இருப்பினும் கூட்டுக்குடும்பத்தில் நாட்டம் உள்ளவள்தான். 

ஆடம்பரமான கல்யாணமோ, டெளரி கொடுத்தலோ கூடவே கூடாது என்பதில் கெளரியும் அவளின் தந்தை ஈஸ்வரனும் ஒரே கட்சியாகப் பிடிவாதமாக இருக்க, கெளரியின் தாய் ’சித்ரா’வுக்குத் தன் பெண்ணைப்பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. 

கெளரியின் தாய் சித்ரா இந்த நாவலில் மிகச்சிறப்பானதோர் இடத்தினைப் பிடிக்கும் கதாபாத்திரமாகச் செதுக்கப்பட்டுள்ளார்கள். கெளரிக்கு அம்மா என்றே சொல்ல முடியாதபடிக்கு, இளமையுடனும், அழகுடனும், எதிலும் ஓர் ஆர்வத்துடனும், ஆசையுடனும் கெளரியின் அக்கா என்று சொல்லலாம் போலவே காட்சியளிக்கிறார்கள். பெண்களுக்கே உரித்தான பட்டுப்புடவைகள், தங்க நகைகள், கவரிங் நகைகள், தலையில் பூக்கள் என அனைத்திலுமே ஆசையும், ஆர்வமும், ஈடுபாடுகளும் உண்டு அந்த சித்ரா மாமிக்கு. 

கெளரிக்கு ஏற்கனவே இருமுறை பெண் பார்க்கும் படலங்கள் முடிந்திருந்தும், பெண்ணுக்குப் பிள்ளையையும், பிள்ளைக்குப் பெண்ணையும் பிடித்திருந்தும், பிள்ளையின் பெற்றோர்களின் டெளரி போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகளால் மட்டுமே கல்யாணம் தட்டிப் போய் விட்டது என்பதில் சித்ராவுக்கு மிகவும் வருத்தம். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அப்பாவும் மகளும் அவளின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் இருந்து விட்டனர்.  

மூன்றாவதாக கார்த்திக் என்பவன் கெளரியைப் பெண் பார்க்க வருகிறான் இந்த 15 பக்கங்கள் கொண்ட முதல் அத்யாயத்தில் ..... அதில் சில காட்சிகள்:

-=-=-=-=-

கமகமவென்று வீடெல்லாம் பரவியது நரசுஸ் 
காப்பி மணம்
எல்லோரது கையிலும் மணக்க மணக்க காப்பியும்,  
தட்டில் டிஃபன் வகையுமாக  நாவில் 
நீர் சுரக்க வைத்தன
கார்த்திக்கின் அம்மா வந்திருந்த ஒவ்வொருவரையும் 
இவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு…. கௌரியைப் 
பார்த்த பார்வையில் திருப்தி தெரிந்தது.

அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டு சாப்பிட்டு முடித்தனர்
அருமையான சொஜ்ஜிக்கும் பஜ்ஜிக்கும் அம்மாவை 
வாயாரப் பாராட்டினார்கள்.. 
இந்தக் காலத்துல யாரு இதெல்லாம் பண்றா ..... 
நீங்கள் ரொம்ப ஸ்ரமப்பட்டு செய்திருக்கேள் .. 
ஒரு காப்பி மட்டும் இருந்தாப் போறுமாயிருக்கும்
நாங்க இதெல்லாம் எதிர் பார்க்கவே இல்லை…” 
என்று வந்தவர்கள் பேருக்கு சொல்லிக் கொண்டார்கள்.

”எங்காத்துல இவளுக்கு எல்லாமே முறைப்படி நடக்கணுமாக்கும்… 
இந்தசின்ன சின்ன சம்பிரதாயத்தை எல்லாம் விடப் படாதுன்னு 
அடிக்கடி சொல்லிப்பாள்” என்று ஈஸ்வரன் மனைவியைப் பார்த்துக் 
கொண்டே பெருமையுடன் சொல்கிறார்.

”ம்ம்… வாசல்ல போட்டிருந்த கோலத்தைப் பார்த்ததும் 
புரிஞ்சுண்டோம்” 
என்ற மாப்பிள்ளையின் அம்மா,    
அதுவும் நல்லதுக்குத் தானே… ஒரு சந்தோஷம்.. ஒரு நிறைவு…” 
என்றவர்… கௌரியைப் பார்க்கிறார்.

”கோலமெல்லாம் நான் போடலை.. நேக்கு அதெல்லாம் வராது…. 
இந்த டிஃபன் எல்லாம் அம்மா செஞ்சதாக்கும் … கோலம் கூட  
அம்மாவாக்கும்  போட்டா …” என்று சொல்லி 
விட்டு தன் அம்மாவைப் பெருமையோடு பார்த்துக் கொண்டே 
சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் கௌரி.

லேசாக தொண்டையைச் செருமிக்கொண்டு…. 
பெண்ணை எங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கு… என்று கார்த்திக்கின் 
முகத்தைப் பார்த்தபடியே சொல்கிறார் … பிறகு  இல்லையோடா 
கார்த்திக்… நோக்கும் சம்மதம் தானே?” ன்று கேட்கவும்… 
கார்த்திக் தலை நிமிர்ந்து உட்கார்ந்தபடியே 
ஒரு ஆட்டு ஆட்டி பரம சம்மதம்” என்று சொல்கிறான்
நிமிர்ந்த கௌரி தலை குனிந்து புன்னகை பூக்கிறாள்!  

அரைக்கிணறு தாண்டியாச்சு…. 
சித்ரா மனசுக்குள் மகிழ்ந்தாள்.

”அப்போ மேற்கொண்டு பேசறதுன்னு ஏதாவது இருந்தால்.. 
இப்பவே பேசி முடிச்சுக்கலாம் நாங்க மத்தவா மாதிரி ஆத்துக்கு 
போய் ஃபோன் பண்றோம் என்றெல்லாம் சொல்லிக்கலை” 
என்று நாசூக்காக பேச்சை மாற்றுகிறார் கார்த்திக்கின் அப்பா
ஆமாம் ஆமாம் என்று அங்கிருந்த மீதி தலைகளும் ஆடின

”அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் தனியா இவர் கிட்ட பேசிக்கலாமா?” 
என்று கௌரி கார்த்திக்கைக் காட்டி கேட்டது தான் தாமதம்… 
அங்கிருந்த அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி .. 
ஆச்சரியம்… குழப்பம்… சித்ராவுக்கும் அதே கதி தான்.

”ஓ....பேஷா ……” என்று தடுமாறிய கார்த்திக் அப்பாவின் குரல்… 
சம்மதத்தை தெரிவித்ததுஆனால் கார்த்திக் அம்மாவுக்கு 
திக்கென்றது! பெண்ணிய வாதியா இவள்?  ....... 
கார்த்திக் எழுந்து நின்றான்.

”மொட்டை மாடிக்கி அழைச்சுண்டு போயேன்…” 
ஈஸ்வரன் சொல்லஅங்க வேண்டாம்பா…. என் ரூமுக்கு....” 
என்று சொல்லிவிட்டு 
”வாங்க மிஸ்டர் கார்த்திக்…” என்று அழைத்துக் கொண்டு 
அவளது அறைக்குச் சென்று… 
உட்காருங்கோ…” என்று சொல்லிவிட்டு அங்கு தயாரா இருந்த 
இன்னொரு சேரில் இவளும் உட்கார்ந்து கொள்கிறாள்.

”மிஸ்டர்கார்த்திக்…. உங்களை நான் பேர் சொல்லி 
கூப்பிடலாம் இல்லையா?” அழகாக ஆங்கிலத்தில் 
கேட்கிறாள் கௌரி.

”மை ப்ளெஷர் ….” மென்மையாகச் சொன்னார்  கார்த்திக்.

”நான் இப்படி தனியாப் பேசணும்னு சொன்னதை உங்காத்து 
மனுஷா எப்படி எடுத்துப்பான்னு தெரியலை
நான் பெண்ணியவாதி அல்ல !  
நீங்க அப்பறமா உங்காத்து பெரியவாட்ட  சொல்லி 
புரிய வெச்சுக்கோங்கோ”.

”இட்ஸ்…. ஆல் ரைட்… அதை நான் பார்த்துக்கறேன்… 
இப்போ நீங்க சொல்லுங்கோ… 
என்ன பேசணும்னு கூப்பிட்டேள்?  
என்னை என் பெயர் சொல்லி ஒருமையில் கூட  
நீங்கள் அழைக்கலாம்..” 
புன்னகை மாறாத முகத்துடன் சொல்கிறார் கார்த்திக்.

”ம்ம்ம்தெரியும்.!”

”இதுக்கு முன்னாடி ரெண்டு அலையன்ஸ் வந்து விட்டுப் போச்சு
எல்லாம் டௌரி விஷயமாத்தான்… யு நோ எனக்கு டௌரி தந்து 
என் கல்யாணம் நடப்பது பிடிக்கலை.”

”ஃபைன்எனக்கும் டௌரி வாங்கி என் லைஃப் 
ஆரம்பிக்கப் பிடிக்கலை....” 
சொல்லும்போது கார்த்திக்கின் முகத்தில் குறும்பு 
இழையோடுவதைக் காணத் தவறவில்லை கௌரி.

கௌரி தொடர்ந்தாள்:

”மூணு வருஷமா ‘விப்ரோ’ வில் இருக்கேன்
ரொம்ப சாலேன்ஜிங்  ஸீட்…. 
ரெஸ்பான்சிபிலிட்டீஸ் ஜாஸ்தி.
என் கல்யாணம் என்னோட ப்ரொபெஷனலை 
பாதிக்காமல் இருக்கணும்…. 
என்னால வேலையை விட முடியாது
அதே சமயம்…. வீட்டையும் என்னால 
நெக்லெக்ட் செய்ய முடியாது
ஸோ .. எனக்கு ஒரு ஹெல்தி டிஸ்டன்ஸ், 
அதே சமயம் புரிஞ்சுக்கற ஒரு 
 ப்ரெண்ட்லி லைஃப்  
பார்ட்னர் வேண்டும்……. 
அது நீங்களா இருந்தால்  ஆம் வெரி ஹாப்பி.. 
இன் கேஸ்.. இல்லாவிட்டாலும் ….. 
பரவாயில்லை…  கேன்.....;

”தென்…. இம்பார்டண்டா இதைச் சொல்ல மறந்துட்டேனே…. 
நான் ஆத்துக்கு ஒரே பெண்ணாக இருக்கறதால என் அம்மா 
அப்பாவுக்கு என்னோட துணைபண உதவி 
எப்பவாவது தேவைப் படலாம்… இப்போ இல்லாட்டாலும் 
எதிர்காலத்தில் என் உதவி முழுவதும் தேவைப் படலாம்…. 
அப்போ நான் வருவதைப் போவதை … அல்லது 
அவர்கள் நம்மோட இருப்பதை நாம எல்லாரும் 
ஒரே குடித்தனக் கூட்டுக் குடும்பமா 
இருக்க முடிஞ்சா ரொம்ப ரொம்ப சந்தோஷம் ….. 
அது இல்லாத பட்சத்தில் அவர்களைப்  வந்து பார்த்துக்க 
வேண்டி வந்தால் தடுக்காமல் இருக்கணும்…. 
இது ஒரு ரெக்வெஸ்ட்.. அப்போ நம்மளோட ஸ்ரிங்க்கான 
ஃபாமிலி கண்டிப்பா எலாபரேட் ஆகும்..;

”அதே மாதிரி… கல்யாணம் என்ற பேரில் ரொம்ப செலவு செய்து, 

தாம் தூம்னு  கஷ்டப் பட்டுசம்பாதிக்கும் பணத்தை ஆடம்பரமா செலவு 

செய்றதில் எனக்கு உடன்பாடே இல்லை

அதற்கு ஆகும் செலவை சேமிப்பில் 

போட்டு வெச்சா நம்ம ஃபுயூச்சருக்கு ஆகும்.. கஷ்டப் பட்டு கடன் வாங்கி 

கல்யாணம் பண்ணீண்டு அப்பறம் வாழ்நாள் பூரா வட்டி கட்டி கடன் 

கட்டிண்டு இருக்கற எத்தனை ஃபாமிலி இருக்கா தெரியுமா
இதெல்லாம் என்னோட வியூஸ் தான்… உங்களுக்குன்னு 
ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்கோ… நாம வெளிப்படையா 
பேசி ஓர் மண ஒப்பந்தம் செய்து கொள்வோம்..” 
என்று சிறிது நேரம் அமைதியானாள். பின்பு,
உங்களைச் மீட் பண்ணி பேசினதில் நான்  ரொம்ப ஹாப்பி” 
என்று நிறுத்துகிறாள் கௌரி.

”ஸேம் ஹியர்... கௌரி
உங்க தாட்ஸ் ரொம்ப சரி தான்வெரி நைஸ்….. 
 அப்ரிஸியேட் யுவர் வால்யூஸ்
யூ  ஆர் ரைட் அண்ட் குட்.. 
எனக்கும் அதே போலத்தான்
உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன்
ஈவன்  லைக் யூ ..” 

என்று தங்கு தடையின்றிக் கம்பீரமாகச் சொல்லி 
நிறுத்துகிறான் கார்த்திக்.

”ஐ கேரண்டி… தாங்க்ஸ்” என்று நாணத்துடன் சொல்லிவிட்டு 
“அப்போ நாம் ஹாலுக்குப் போகலாமா” என்று எழுந்து 
கொள்கிறாள் கௌரி…!

இருவரும் வெளியில் வருகிறார்கள்அவர்கள் முகத்தில் 
என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க நினைத்துத் தோற்றுப் 
போகிறார்கள் அங்கிருந்த பெரியவர்கள்.

இவள்  என்னத்தத்  தனியாப் பேசறேன்னு சொல்லி காரியத்தைக் 
கெடுத்து வெச்சிருக்காளோ .. என்று பயந்த படியே மகளின் 
முகத்தைப் பார்க்கிறாள் சித்ரா.

பேசியாச்சா? என்று கார்த்திக்கின் அப்பா மகனைப் 
பார்த்துக் கேட்கிறார் ... 

அவனும் ம்ம்ம்ம்…” என்று தலையாட்டுகிறான்.

”அப்போ நாங்க பெரியவா…. பேசலாமோன்னோ..” 
என்று அவர் கேட்கவும்…. ஈஸ்வரன் குறுக்கிட்டு 
பேசலாம்…. கேளுங்கோ.. என்ன கேட்கப் போறேள் ? 
என்று பீடிகையோடு ஆரம்பிக்க.

எங்களுக்கு இருப்பது  கருவேப்பலை கொத்தாட்டமா 

ஒரே பையனாக்கும்… அவனோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு 

நடத்திப் பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை… 

அதனால கல்யாணத்தை மட்டும் கொஞ்சம் கிராண்டா 

பண்ணிடுங்கோ… நாங்க வேற ஒண்ணும் அது வேணும்.. 

இது வேணும் ன்னு டிமாண்ட் பண்ணலையாக்கும்

உங்களுக்கும் ஒரே பொண்ணு தானே… 

இதே ஆசை உங்களுக்கும் இருக்காதா என்ன…? 

என்று கார்த்திக்கின் அப்பா பேசிக் கொண்டே போகஅம்மா  

ஆமாம்.. அதை நாம சொல்லணுமா என்ன
அவா பொண்ணுக்கு அவா நன்னா செய்வா….
இல்லையா?  நாம ஒண்ணுமே கேட்க வேண்டாம்.  
அவாளுக்கே தெரியும்
எங்களோட ஒரே டிமாண்ட் கொஞ்சம் தடபுடலா
கச்சேரிக் காட்சியோடு மேரேஜ் நடக்கணும்அவ்வளவுதான்
அதுக்கப்பறம் நீங்க செய்றதெல்லாம் 
உங்க பெண்ணுக்குத் தான்” என்று நிறுத்துகிறாள்.

கார்த்திக் என்ன செய்வதென்று தெரியாமல் நெளிவதை 
கௌரி பார்க்கிறாள்அவனது கண்கள் கௌரியை கெஞ்சுவது 
போலப் பார்த்து விட்டு நகருகிறது.

ஈஸ்வரன் மனசுக்குள் கணக்குப் போட ஆரம்பிக்கிறார்… 
இந்தக் காலத்தில் டீசண்ட்க்ராண்ட் கச்சேரி மேரேஜ் எல்லாம்… 
குறைந்தது பத்து லக்ஷத்தில் கொண்டு போய் நிறுத்தும்
இத்தனைக்கும் ரெண்டு பேருமே .டி  யில் வேலை பார்க்கிறவா… 
கூட்டத்துக்குக் கேட்கணுமாநம்மால தாங்குமா ? 
விரலை ஒரு தடவை பார்த்துக் கொள்கிறார்
இந்த வீக்கத்தை இந்த விரல் தாங்குமா
மனசு கால்குலட்டரை நீட்டுகிறது..

சித்ரா அங்கிருந்து.. கணவரின் காதருகில் வந்து 
சரின்னு சொல்லுங்கோன்னா…. 
இந்த சம்பந்தம் போனால் வராது….. 
வீட்டை அடமானம்  வெச்சுடலாம்.. 
தேவையானால் வித்துடலாம்…..” 
என்று சமாதானப் படுத்தும் வகையில் ஈஸ்வரனின் 
காதில் கிசு கிசுக்கிறாள்.

இந்த நேரம் பார்த்து கௌரியின் கைபேசியில் 
ஆங்கிலப் பாடல் அலறுகிறது…..

Tonight we dance,


I leave my life in your hands.

We take the floor,

Nothing is forbidden anymore.

Don’t let the world in outside.


Don’t let a moment go by.

Nothing can stop us tonight!

[Chorus]


Bailamos! – We Dance

Let the rhythm take you over…

Bailamos!


இந்தப் பாடலைக் கேட்டதும் கார்த்திக்கும் கால்களால் 
தாளம் போட ஆரம்பிக்கின்றான் …

அதைப் பார்த்துக் கொண்டே கௌரி புன்னகைத்தபடியே 
மொபைலை எடுத்து சர்வ சாதாரணமாக பேச ஆரம்பிக்கிறாள்.

ஹலோ ரேவ்ஸ்…. ஹௌஸ் லைஃப்எனி இம்ப்ரூவ்மெண்ட்…..?

“………………….” அந்த பக்கம் சொன்ன பதில் ஒன்றும் இவர்கள் 
காதில் விழவில்லை.

வாவ்….தட்ஸ் குட் ஐடியாடி….. 
செப்பரேடா போறேளா
வீடு பார்த்தாச்சா
ம்ம்… தனிக் குடித்தனமாக்கும்….! 
கடைசீல நினைச்சதை சாதிச்சுட்டே… 
பின்ன உன் ஹஸ்பண்டை டென் லாக்ஸ் கொடுத்து வாங்கிருக்க…. 
பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்டோட டாட்டர்….. 
ம்ம்ம் நீ இழுத்த இழுப்புக்கு வந்து தானே ஆகணும்….? 
எனிவே கங்க்ராட்ஸ்….. 
பை தி பை இங்க இப்போ வீட்டில் என்னைப் பார்க்க வந்திருக்கார் 
மாப்பிள்ளை வீட்டார்  ஃபாமிலியோட….!

“……………………….…………”

அஃப்  கோர்ஸ் பிரிஃபர் அண்ட் 
  லைக் ஜாயிண்ட்  பாமிலி ஒன்லி…!

“……………………….…………”

நாட் யெட் ரேவ்ஸ்…. 
ஸீ  யூபைபை.. என்ஜாய் .! 
என்று கைபேசியை மூடினாள் கௌரி.

யார்  முகத்திலும் ஈயாடவில்லை….. 
சித்ரா ஓரமாக உட்கார்ந்து கொண்டு கௌரியைப் 
பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். 
இந்த நேரத்தில் இப்படி ஒரு ஃபோன் பேசலைன்னு 
யாராக்கும் அழுதாகாரியத்தைக் கெடுத்துண்டுடுத்து … 
தவளை தன் வாயால கெடுமாம்…..! என்று 
என்னவெல்லாமோ நினைக்க ஆரம்பிக்கிறாள்மனம் பூரா 
வட  போச்சே…” சோகம் கப்பியதுநேரங்காலம் தெரியாமல் 
ரேவதி ஏன் தான் போன் செய்தாளோ ? என்று அவளை சபித்தது.

”அப்போ நாங்க புறப்படறோம்… 
அதான் பேச வேண்டியதைப் பேசியாச்சே… 
மேற்கொண்டு ஆத்துக்குப் போய் கலந்து 
பேசீண்டு ஃபோன் பண்றோம்” என்று அரை குறையாக 
மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை என்பதைச் 
சொல்லாமல் சொல்லிவிட்டு’ அதிகம் நாட்டம் 
காண்பிக்காதபடி  கிளம்புகிறார்கள்.

கார்த்திக்கின் பார்வை கெளரியின் கண்களைத் தொட்டுச் சென்றது
அதில் நீதானே எந்தன் பொன் வசந்தம்..” என்ற காதல் தூது இருந்தது.

அதைப் புரிந்து கொண்டு கௌரி நிமிர்ந்து மென்மையாகச் சிரிக்கிறாள்
அதில் சம்மதம் என்று எழுதி இருந்தது.

காரில் ஏறும்போது   கௌரியின்   கண்ணோடு கார்த்திக்கின் கண்கள் 
ஆழமாகப் பார்த்ததுஅப்போது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட  
கௌரி கார்த்திக்கின் கல்யாணம் ….. நடக்கப் போவதற்கு அச்சாரமாக 
அந்தப் பார்வை அவர்களுக்குள் காதலை ஆரம்பித்தது.


சித்ராவுக்குப் புரிந்து போனது இந்த வரனும் ‘கோவிந்தா’ என்று
அதனால் வந்த கோபத்துடன் அறைக்குள் நுழைந்து கதவை டமார் 
என்று அறைந்து சார்த்திக் கொள்கிறாள்.

ஈஸ்வரனோ  [ மனதுக்குள் ]
நன்னாச்சு”…. இதில்லைன்னா இன்னொண்ணு என்று 
சமாதானமாகி எதுவுமே நடக்காதது போல தட்டு நிறைய 
பஜ்ஜியை எடுத்து வைத்துக் கொண்டு  “ஜீ தமிழ்’ சானலில் 
ஜான்சி ராணி சீரியல் பார்க்க உட்கார்ந்து கொண்டார்.

கௌரியின் மனம் மட்டும் எதையோ இழந்தது போல 
வலிக்க ஆரம்பித்தது.. அப்போ என்னையும் மீறி நான் 
அவரை….  நினைக்கும் போதே சிலிர்த்துப் போகிறாள்....

கூடிய விரைவில் ‘டௌரி தராத கௌரி கல்யாணம்’ 
கார்த்திக்கோடுதான்  நடக்கும் என்று அவளுக்குப் புரியவும் 
வெட்கப்பட்டுச் சிரித்துக் கொள்கிறாள்.

கார்த்திக்கின் தாயாருக்கு கெளரி நடந்துகொண்ட விதமும் போக்கும் பிடிக்காமல் போனாலும், தங்கள் பிள்ளை கார்த்திக்குத்தான் இந்த சம்பந்தத்தில் அவ்வளவாக பிடித்தம் இல்லை என்பதுபோல, கெளரியின் தாயார் சித்ராவுக்கு போன் செய்து சொல்லிவிட்டு மேலும் "கெளரி மிகவும் நல்ல பொண்ணு - எங்களுக்குத்தான் அவளை மருமகளாக அடைய ப்ராப்தம் இல்லாமல் போய்விட்டது. அவளுக்கு வேறு ஏதேனும் நல்ல இடமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லி நழுவி, தப்பிக்க நினைக்கிறாள்.
 


இருப்பினும் கெளரியும், கார்த்திக்கும் ஒருவரையொருவர் மனதார காதலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அடிக்கடி நேரிலும் சந்திக்கின்றனர். கெளரி தன் உத்யோக விஷயமாக விமானத்தில் ஏறி டெல்லிக்குச் சென்று ஒரு பதினைந்து நாட்கள் தங்க நேரிடுகிறது.

டெல்லிக்குப் பறப்பதற்கு முதல்நாள் கார்த்திக்குடன், அவன் அலுவலகத்தில் நடந்த எதோ ஒரு விசேஷமான பார்ட்டியில் கெளரியும் கலந்துகொள்ள நேரிடுகிறது.  இரவு லேட்டான போது, இடியுடன் கூடிய பலத்த மழை பொழிகிறது. வேறு வழியில்லாமல் மழை நிற்கும் வரை அங்கேயே உள்ள விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்கி விடுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும்  தங்கள் நிலை மறந்து ‘எப்படியும் நாம் கல்யாணம் செய்துகொள்ளத்தானே போகிறோம்’ என்ற நம்பிக்கையில், அந்த ஒரேயொரு நாள், பலகீனமான தருணத்தில் ஒன்றரக் கலந்தும் விடுகிறார்கள். அந்த இன்பமான புதிய அனுபவத்தின் நினைவலைகளுடன், மறுநாள் விமானத்தில் மன மகிழ்ச்சியுடன் பறக்கிறாள் கெளரி.
தன்னுடைய தனிச் செல்வாக்கினால், கார்த்திக்கும் தானும், இனி தன் கம்பெனியிலேயே ஒரே அலுவலகத்தில் இணைந்து வேலை பார்ப்பதற்கான உத்தரவுகளை தன் மேலதிகாரிகளிடமிருந்து கஷ்டப்பட்டுப் பெற்று தன்னிடம் பத்திரப்படுத்திக்கொள்கிறாள்.

அந்த ஒருநாள் சுகானுபவத்திலேயே கெளரி கர்ப்பம் தரிக்க நேரிட்டுள்ளது என்பதை அவளாலேயே பிறகுதான் உணர முடிகிறது. இந்த ஸ்வீட் நியூஸ்கள் இரண்டையும் கார்த்திக்கிடம் நேரில் போய்ச் சொல்லி சர்ப்ரைஸ் கொடுக்கணும் என கெளரி நினைக்கிறாள்.

கார்த்திக்குக்கு இன்ப அதிர்ச்சியாக டபுள் ஸ்வீட் நியூஸ் கொடுக்க ஆசையுடன் ஓடி வந்துள்ள கெளரியிடம், தான் அதைவிட ஒரு அவசர நியூஸ் சொல்லப்போவதாகவும், அதற்காக தன்னை கெளரி தப்பாக நினைக்காமல், தான் செய்துள்ள தியாகத்தைப் பாராட்டத்தான் செய்வாள் என்றும் நினைத்து, தனக்கு திடீரென்று தவிர்க்க முடியாததோர் இக்கட்டான சூழ்நிலையில் ’லாவண்யா’ என்ற சொந்தக்காரப் பெண்ணுடன் கல்யாணம் ஆகிவிட்டதாக ஒரு அணு குண்டைத்தூக்கிப் போடுகிறான். அந்த ஒரு நிமிடத்தில் மனம் நொறுங்கிப்போன கெளரி, தான் சொல்லவந்த இரண்டு ஸ்வீட் நியூஸ்களையும் சொல்லாமலேயே, அவனிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறாள்.

இதற்கிடையில் திடீர் சாலை விபத்தொன்றில் தன் கணவர் ஈஸ்வரனைப் பறிகொடுத்துள்ள, கெளரியின் தாய் சித்ரா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பிடிவாதமாக தன் கர்ப்பத்தை கலைக்க விரும்பாமல், குழந்தை பெற்றுக்கொண்டே தீர்வது என முடிவெடுக்கிறாள் கெளரி.   

கல்யாணம் ஆகாமலேயே கெளரிக்கு இரட்டைக்குழந்தைகள் .. இரண்டும் ஆண் குழந்தைகளாகப் பிறக்கின்றன. 


இதன் பின் வரும் அடுத்தடுத்த அத்யாயங்களில் பலவிதமான அதிர்ச்சிகள். திருப்பங்கள். கதை எங்கெங்கோ எப்படி எப்படியோ புயல் காற்றுபோல சுழன்று அடித்து, பயங்கர இடி, பலத்தமழை, மின்னல், சுனாமி போலச் செல்கிறது. இருப்பினும் கடைசிவரை கதையில் நல்லதொரு விறுவிறுப்பு உள்ளது. 

உலக யதார்த்தங்களையும், தனக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையையும், நெஞ்சுறுதி மிக்க, படித்த ஓர் இளம் பெண், எப்படி எப்படியெல்லாம், உறவுகளையும், சமூகத்தையும் எதிர்த்து நின்று துணிச்சலுடன் முடிவெடுத்துச் சமாளிக்கிறாள் என்பதையும், மிக அழகாகச் சொல்லியுள்ளார்கள், கதாசிரியர்.  

இறுதியில் கெளரிக்கு தன் வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒரு சடங்கு ஏதும் நடந்ததா  .... அது யாருடன், எங்கு, எப்படி, ஏன் நடந்தது என்பதை இங்கு நான் சொல்லாமல் சஸ்பென்ஸுடன் விட்டுவிட விரும்புகிறேன்.

அனைவரும் அவஸ்யமாகப் படிக்க வேண்டியதோர் சுவாரஸ்யமான நாவல் இது.

பொதுவாக சிறுகதைகளைப் படிக்கும் ஆர்வம், எனக்கு நாவல்கள் போன்ற பெரிய தொடர்கதைகளைப் படிப்பதில் இருப்பது இல்லை. பெரிய நாவல்கள் ஏதும் இதுவரை நான் ஆர்வமாகப் படித்ததும் இல்லை. 

இருப்பினும் திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள், எழுதியுள்ள இந்த மிகப் பெரிய தொடர்கதையினை மட்டும் நான் படித்து மிகவும் வியந்து, மகிழ்ந்து போனேன்.

டெளரி தராத
கெளரி கல்யாணம் 
என்ற தனது மின்னூலை அன்பளிப்பாக 
எனக்கு அனுப்பி வைத்து 
வாசிக்க வாய்ப்பளித்துள்ள
 திருமதிஜெயஸ்ரீ மேடம் 
அவர்களுக்கு 
என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் 
இந்த நாவலை முழுமையாகப் படிக்க விரும்புவோர் இதோ 
இந்த இணைப்பிற்குச் சென்று BUY NOW என்பதை க்ளிக் செய்யவும். 
மின்னல் வேகத்தில் மின்னூல் உங்களை வந்தடையும்.  


 

 திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் 
அடுத்த மின்னூல் மதிப்புரையில் 
மீண்டும் நாம் சந்திப்போம்.

 என்றும் அன்புடன் தங்கள்,

38 கருத்துகள்:

 1. இருநூறு பக்கத்திற்கு மேல் இருந்தால் படிப்தற்கு கொஞ்சம் சோம்பலாக இருக்கிறது. ஆனால் நீங்கள் பலமாக சிபாரிசு செய்வதால் வேறு வழியில்லை; படித்துவிடுகிறேன்.

  இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Chellappa Yagyaswamy May 16, 2017 at 2:19 AM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //இருநூறு பக்கத்திற்கு மேல் இருந்தால் படிப்பதற்கு கொஞ்சம் சோம்பலாக இருக்கிறது.//

   தாங்கள் சொல்வது மிகவும் கரெக்ட். பெரும்பாலும் எனக்கும் இப்போதெல்லாம் அப்படியேதான். நாம் இருவரும் சமவயதுக்காரர்களாக இருப்பதாலும் இதுபோன்ற ஒரு சோம்பல் நம் இருவருக்குமே புதிதாக இப்போது ஏற்பட்டும் இருக்கலாம்.

   //ஆனால் நீங்கள் பலமாக சிபாரிசு செய்வதால் வேறு வழியில்லை; படித்துவிடுகிறேன்.//

   ஆஹா .... என்னே ஒரு அன்பும் ஆதரவும் என் பலமான சிபாரிசுகளின் மேல்.

   இந்த ஒரு கதையைப் படிக்க ஆரம்பித்தால் அதனை முழுவதும் முடிக்காமல் விட மாட்டீர்கள். அவ்வளவு ஒரு விறுவிறுப்பினைக் கொடுத்துள்ளார்கள்.

   நான் இங்கு மிகச்சுருக்கமாக எடுத்துச்சொல்லியுள்ள விஷயங்கள் 2-3 அத்யாயங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளவை மட்டுமே.

   மொத்தம் உள்ள 384 பக்கங்களில் நான்கு பக்க விஷயங்களை மட்டும் ஜூஸ் ஆகப் பிழிந்து நான் இந்தப் பதிவினில் கொடுத்துள்ளேன்.

   நான் இங்கு மேலும் சொல்லாமல் விட்டுள்ள என் ...

   ’சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை .... விலை ஏதும் இல்லை’. :)))))

   ஒவ்வொரு பக்கமும் படிக்கப்படிக்க, மேலும் மேலும் படித்து கடைசியில் என்னதான் ஆச்சு என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு ஏதோ ஒரு தனி உற்சாகமும், உந்துதலும் ஏற்பட்டன. அதேபோல உணர்வு தங்களுக்கும் ஒருவேளை ஏற்படலாம் என நான் நம்புகிறேன்.

   //இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)//

   இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
 2. முதல் பாதி ஆட்டம் கொட்டாட்டம் போல்
  வளரும் ஒரு திரைப்படம் இடைவேளைக்குப்பின்
  வெகு சீரியஸாக மாற...

  இடைவேளை வரை பின்பக்கம் சாய்ந்து ஜாலியாக
  படம் பார்த்துக் கொண்டிருந்த நாம்
  பின் பாதியில் நகம் கடித்தபடிச் சீட்டின்
  முன் நுனிக்கு நம்மையும் அறியாது
  நகருவது போல...

  நீங்கள் மாப்பிள்ளை பெண்ணும்
  தனியாக பேசிக் கொண்டிருந்தவரை
  அவர்கள் நடையிலேயே படித்துக் கொண்டு வர
  இயல்பாகத்தான் படித்து வந்தேன்

  பின் கதை போகும் போக்கை வர்ணிக்க
  சட்டென மனம் கனக்கத் துவங்கிவிட்டது

  கதாப்பாத்திரச் சித்திரிப்பு மிக மிக
  அருமையாக இந்த நாவலில் அமைந்திருக்க
  நிச்சயம் சாத்தியம்

  நீங்கள் முடிவைச் சொல்லாவிட்டாலும்
  வரதட்சனையில் உறுதி காட்டும்
  கதாப்பாத்திரம்...

  நிச்சயம் வாழ்வில் நேர்ந்த
  சறுக்கலை சமாளித்து தலை நிமிர்ந்திருக்கும்..
  என்வே யூகிக்கிறேன்

  அற்புதமான விமர்சனப் பதிவு

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ramani S May 16, 2017 at 2:25 AM

   வாங்கோ Mr. RAMANI, Sir வணக்கம்.

   //முதல் பாதி ஆட்டம் கொட்டாட்டம் போல் வளரும் ஒரு திரைப்படம் இடைவேளைக்குப்பின் வெகு சீரியஸாக மாற... இடைவேளை வரை பின்பக்கம் சாய்ந்து ஜாலியாக படம் பார்த்துக் கொண்டிருந்த நாம் பின் பாதியில் நகம் கடித்தபடிச் சீட்டின் முன் நுனிக்கு நம்மையும் அறியாது நகருவது போல... நீங்கள் மாப்பிள்ளை பெண்ணும் தனியாக பேசிக் கொண்டிருந்தவரை அவர்கள் நடையிலேயே படித்துக் கொண்டு வர இயல்பாகத்தான் படித்து வந்தேன்.//

   மிக இயல்பாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //பின் கதை போகும் போக்கை வர்ணிக்க சட்டென மனம் கனக்கத் துவங்கிவிட்டது.//

   எதிர்பாராத இந்தத் திடீர்த் திருப்பமே கதைக்கும் வலு சேர்த்து நம்மையும், அங்கு இங்கு என்று எங்கும் திரும்பவே முடியாமல் ஒரேயடியாகக் கட்டிப்போட்டு விடுகிறது.

   கதையாகப் படிக்கும் நம் மனமே இவ்வாறு கனக்கத்துவங்கிவிட்டது என்றால், இதனை வாழ்க்கையில் நேரிடையாக அனுபவிக்கும் கெளரியின் மனமும், அவளைப் பெற்றெடுத்துள்ள தாயான சித்ராவின் மனமும் என்ன பாடு பட்டிருக்கும் !!!!!

   //கதாப்பாத்திரச் சித்திரிப்பு மிக மிக அருமையாக இந்த நாவலில் அமைந்திருக்க நிச்சயம் சாத்தியம்//

   இதே கதையினில் மேலும் பல உன்னதமான கதாபாத்திரங்கள் உலா வருகிறார்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைக்க நினைத்ததால், அவர்களையெல்லாம் நான் இங்கு கொண்டுவரவே இல்லை.

   //நீங்கள் முடிவைச் சொல்லாவிட்டாலும் வரதட்சனையில் உறுதி காட்டும் கதாப்பாத்திரம்... நிச்சயம் வாழ்வில் நேர்ந்த சறுக்கலை சமாளித்து தலை நிமிர்ந்திருக்கும்.. எனவே யூகிக்கிறேன்.//

   தங்களின் யூகம் மிகச்சரியே என நானும் யூகிக்கிறேன். சறுக்கல் என்பது யாருக்குமே வாழ்வில் சகஜமாக நிகழ்வதுதான்.

   ’யானைக்கும் அடி சறுக்கும்’ என்று சொல்லுவார்களே !

   //அற்புதமான விமர்சனப் பதிவு. பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான ஆத்மார்த்தமான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
 3. விமரிசனம் அருமை. எங்காவது ஓசியில் கிடைத்தால் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆசை உதித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப.கந்தசாமி May 16, 2017 at 4:26 AM

   வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

   //விமரிசனம் அருமை.//

   மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //எங்காவது ஓசியில் கிடைத்தால் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆசை உதித்திருக்கிறது.//

   வயதான காலத்தில் உங்களுக்கு உதித்துள்ள இந்த ஆசையை நிறைவேற்றித் தர வேண்டியது என் கடமையாக நினைக்கிறேன். கவலையே படாதீங்கோ. இன்று இரவே தங்களின் ஆசை பூர்த்தியாகலாம். :))

   பூமஞ்சம் ஜோடனைகள் செய்து, புது மாப்பிள்ளை போல தயாராக இருங்கோ. :))

   முனைவர் ஐயாவுக்கு இனி நித்திரை போகப்போவது சர்வ நிச்சயமாகும்! ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   நீக்கு
 4. பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் May 16, 2017 at 6:33 AM

   //ரசனையான விமர்சனம்...//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 5. விமரிசனம் எப்போதும்போல் அருமை. நல்ல கதாசிரியர் என்ற பெயர் போதவில்லை போலிருக்கிறது. நல்ல விமரிசகர் என்ற பெயரை வாங்கத் துடிக்கிறீர்கள்.

  ஒரு மாறுதலுக்கு ஒரு கதையோ, அனுபவமோ எழுதுங்களேன்.

  கதையின் கரு இஷ்டமாயில்லை. திருமணத்துக்கு முன்... பின் கல்யாணமாகாமலேயே குழந்தை பெற்றுக்கொள்வது.... படித்தவர்களெல்லாம் முட்டாள்கள், அசடுகள் என்று முடிவே கட்டிவிட்டார் போலிருக்கிறது ஆசிரியர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழன் May 16, 2017 at 6:49 AM

   வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

   //விமரிசனம் எப்போதும்போல் அருமை.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி.

   //நல்ல கதாசிரியர் என்ற பெயர் போதவில்லை போலிருக்கிறது.//

   என்னை நல்ல கதாசிரியர் என்று யார் எங்கே எப்போது சொல்லியிருக்கிறார்கள்?

   வயதானதாலும், அடிக்கும் கடுமையான வெயிலாலும் எனக்கு இப்போது மண்டை மழுங்கிப் போய் உள்ளது. அதனால் முடிந்தால் எனக்கு நினைவூட்டி, அதற்கான இணைப்பினைத் தாருங்கள் ஸ்வாமீ. :)

   //நல்ல விமரிசகர் என்ற பெயரை வாங்கத் துடிக்கிறீர்கள்.//

   அதெல்லாம் அப்படியெல்லாம் துடிப்பு ஒன்றுமே இல்லையே. மேலும் நான் செய்பவை விமர்சனங்களே அல்ல ஸ்வாமீ. என் பார்வையிலான மின்னூல்களின் மதிப்புரைகள் மட்டுமே.

   //ஒரு மாறுதலுக்கு ஒரு கதையோ, அனுபவமோ எழுதுங்களேன்.//

   இந்த மின்னூல் மதிப்புரை என்று மட்டும், நான் கடந்த ஓரிரு மாதங்களாகச் செய்து வெளியிட்டு வருவதே, ஒரு மாறுதலுக்காகத் தானே, ஸ்வாமீ.

   அதற்குள் அவைகளும் திகட்டிப்போய் போரடித்து விட்டதா உங்களுக்கு?

   இதோ ஆச்சு .... இன்னும் ஒன்றே ஒன்று மட்டுமே பாக்கியுள்ளது. தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுங்கோ, ஸ்வாமீ.

   //கதையின் கரு இஷ்டமாயில்லை.//

   நமக்கு இஷ்டமோ கஷ்டமோ .... ’கருக்கள்’ எப்போதுமே நம்மைக் கேட்காமலேயே தோன்றி, உட்புகுந்து விடுகின்றன என்பதுதானே உலக யதார்த்தமாக உள்ளது.

   //திருமணத்துக்கு முன்... பின் கல்யாணமாகாமலேயே குழந்தை பெற்றுக்கொள்வது.... படித்தவர்களெல்லாம் முட்டாள்கள், அசடுகள் என்று முடிவே கட்டிவிட்டார் போலிருக்கிறது ஆசிரியர்.//

   முட்டாள்கள் + அசடுகள் என்பவர்கள் படித்தவர்களிடமும் உண்டு, படிக்காதவர்களிடமும் உண்டுதானே.

   உலகில் ஆங்காங்கே இதுபோலெல்லாம் மிகச்சுலபமாக நடக்கக்கூடிய விரும்பத்தகாத நிகழ்வுகளையெல்லாம் உலகத்தார் உடனுக்குடன் மூடி மறைத்தும், அழித்தும் விடுவதுபோல இல்லாமல், துணிந்து ஓர் கதையாக ஆக்கி தந்துள்ளார்கள், இந்தக் கதாசிரியர்.

   இதனால் இதனைப் படிக்கும், படித்த அல்லது படிக்காத ஒரு பெண்மணி, ஒரு எச்சரிக்கையாகவும் பாடமாகவும் எடுத்துக்கொண்டால், அதுவே இந்தக் கதாசிரியரின் வெற்றி என நினைத்து நாமும் மகிழலாமே.

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

   நீக்கு
 6. தகவலுக்கு நன்றி. இத்தனை பெரிய நாவல் படிக்க பொறுமை வேண்டும். நேரமும்! விரைவில் படிக்க முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் May 16, 2017 at 9:07 AM

   வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

   //தகவலுக்கு நன்றி. இத்தனை பெரிய நாவல் படிக்க பொறுமை வேண்டும். நேரமும்! விரைவில் படிக்க முயற்சிக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.

   நீக்கு
 7. முழுக்கதையைப் படித்த உணர்வே வந்து விட்டது. பெண்ணின் தீவிரவாதம் இது. எங்க வீட்டில் பிள்ளைகள் இப்படி இருந்து பெண் கொடுக்க வருபவர்கள் இப்படியெல்லாம் கூட உண்டா என்று பிள்ளைகளுக்கு ஏதாவது குறையிருக்குமோ என்று ஸந்தேகப்பட்ட அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு. அதிசயமாக இப்படி நடக்குமே தவிர பொதுவாக இல்லை. விமரிசனம் A க்ளாஸ். நல்ல கதாசிரியை. உங்கள் கையால் விமரிசனங்கள். படிக்க வேணும். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாட்சி May 16, 2017 at 1:06 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //முழுக்கதையைப் படித்த உணர்வே வந்து விட்டது.//

   மிக்க மகிழ்ச்சி + சந்தோஷம்.

   //பெண்ணின் தீவிரவாதம் இது. எங்க வீட்டில் பிள்ளைகள் இப்படி இருந்து பெண் கொடுக்க வருபவர்கள் இப்படியெல்லாம் கூட உண்டா என்று பிள்ளைகளுக்கு ஏதாவது குறையிருக்குமோ என்று ஸந்தேகப்பட்ட அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு.//

   தாங்கள் சொல்வதை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது, மாமி.

   //அதிசயமாக இப்படி நடக்குமே தவிர பொதுவாக இல்லை.//

   ஆமாம். மாமி. நீங்க சொல்வது மிகவும் கரெக்ட்.

   //விமரிசனம் A க்ளாஸ்.//

   :)))))

   //நல்ல கதாசிரியை. உங்கள் கையால் விமரிசனங்கள். படிக்க வேணும். அன்புடன்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி. நமஸ்காரங்களுடன்....

   நீக்கு
 8. பதில்கள்
  1. கோமதி அரசு May 16, 2017 at 1:16 PM

   வாங்கோ, வணக்கம்.

   //விமர்சனம் அருமை.//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 9. நான் வந்துட்டேன்ன்ன்ன் ஆனா மீ ட 1ச் இல்லை:)..

  ///
  இது ஒரு மிகப்பெரிய நாவல். மொத்தம்: 384 பக்கங்களும் 31 அத்யாயங்களும் கொண்டது. படிக்க மிகவும் சுவாரஸ்யமான முழு நீளக் கதையாகும்.///
  ஓ மை கடவுளே!!! உங்களால் மட்டும்தான் இப்படி முழுவதையும் ஒரே மூச்சில் படித்து , ரிவியூவும் எழுதிட முடியும். சத்தியமா என்னால நினைச்சுப் பார்க்கவே முடியாது.

  பொன்னியின் செல்வனை.. திறப்பதும் மூடுவதுமாக இன்னமும் முதல் பாகத்திலேயே நிற்கிறேன்ன்.. :).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira May 16, 2017 at 5:30 PM

   //நான் வந்துட்டேன்ன்ன்ன்//

   அடேடே, வாங்கோ .... வாங்கோ, வணக்கம்.

   //ஆனா மீ ட 1ச் இல்லை:)..//

   அதனால் என்ன? ஒற்றைக்காலைத் தூக்கி பனிச்சறுக்கில் விளையாடி நல்ல அடிபட்டும்கூட, எப்படியோ ஒருவழியா இங்கே வந்துள்ளீர்களே, அதுவே
   மிகப் பெரிய விஷயம் ஆச்சே. அது ஒன்றே போதுமே.

   **இது ஒரு மிகப்பெரிய நாவல். மொத்தம்: 384 பக்கங்களும் 31 அத்யாயங்களும் கொண்டது. படிக்க மிகவும் சுவாரஸ்யமான முழு நீளக் கதையாகும்.**

   //ஓ மை கடவுளே!!! உங்களால் மட்டும்தான் இப்படி முழுவதையும் ஒரே மூச்சில் படித்து , ரிவியூவும் எழுதிட முடியும். சத்தியமா என்னால நினைச்சுப் பார்க்கவே முடியாது. பொன்னியின் செல்வனை.. திறப்பதும் மூடுவதுமாக இன்னமும் முதல் பாகத்திலேயே நிற்கிறேன்ன்.. :).//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நானும் உங்களைப்போலவேதான். முதல் பாகத்தில் நிற்கும் தலையணி போன்ற பெரிய நாவல்கள் என்னிடமும் ஏராளமாக உள்ளன. ஏதோ இந்த இவர்களின் இந்த நாவலை மட்டுமே, என் வாழ்க்கையில், முதன்முதலாக, முழுவதுமாக முழுமையாகப் படித்து மிகப் பெரிய சாதனை புரிந்துள்ளேன். ஜோராக் கைத்தட்டுங்கோ. :)

   நீக்கு
 10. //”ஓ....பேஷா ……” என்று தடுமாறிய கார்த்திக் அப்பாவின் குரல்…
  சம்மதத்தை தெரிவித்தது. ஆனால் கார்த்திக் அம்மாவுக்கு
  திக்கென்றது! பெண்ணிய வாதியா இவள்? .......
  கார்த்திக் எழுந்து நின்றான்.///

  ஹா ஹா ஹா பெரும்பாலும் பெண்ணுக்கு எதிரி பெண் தானே?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira May 16, 2017 at 5:33 PM

   **”ஓ....பேஷா ……” என்று தடுமாறிய கார்த்திக் அப்பாவின் குரல்… சம்மதத்தை தெரிவித்தது. ஆனால் கார்த்திக் அம்மாவுக்கு திக்கென்றது! பெண்ணிய வாதியா இவள்? ....... கார்த்திக் எழுந்து நின்றான்.**

   //ஹா ஹா ஹா பெரும்பாலும் பெண்ணுக்கு எதிரி பெண் தானே?:)//

   அப்படியா சொல்றீங்கோ! இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரமாக இருப்பதால் நேக்குத் தெரியவில்லையாக்கும். :)

   நீக்கு
 11. கதைச் சுருக்கம் படித்தேன் படிக்கப் படிக்க நன்றாகவே இருக்கு.. வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ அக்காவுக்கு.

  ஆனா எனக்கென்னமோ கெளரியின்.. பேச்சோ, பழக்கவழக்கமோ பிடிக்கல்ல...:(.

  அதில் இரட்டைக் குழந்தைகளா.. என்னாகுமோ இனி?:).

  எனிவே.. கதைதானே விட்டிடலாம்.

  கோபு அண்ணன் மிக நன்றாக விமர்சனம் எழுதுறீங்க.. உங்கள் விமர்சனத்துக்காக நானும் ஒரு கதை எழுதி.. உங்களுக்கு அனுப்பலாம் என யோசிக்கிறேன், ச்சும்மா அல்ல:) பில் உடன் தான்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira May 16, 2017 at 5:41 PM

   //கதைச் சுருக்கம் படித்தேன் படிக்கப் படிக்க நன்றாகவே இருக்கு.. வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ அக்காவுக்கு.//

   மிக்க மகிழ்ச்சிங்கோ....

   //ஆனா எனக்கென்னமோ கெளரியின்.. பேச்சோ, பழக்கவழக்கமோ பிடிக்கல்ல...:(.//

   அப்போ அங்கு கெளரியைப் பொண்ணு பார்க்கவும், பஜ்ஜி, சொஜ்ஜி + நரசுஸ் காஃபி, சாப்பிட வந்த கார்த்திக்கின் அம்மாவும் நீங்க தானோ? :)

   //அதில் இரட்டைக் குழந்தைகளா.. என்னாகுமோ இனி?:).//

   அதெல்லாம் ஜோராவே இருக்கின்றன, கதையில் கடைசி அத்யாயம் வரை.

   //எனிவே.. கதைதானே விட்டிடலாம்.//

   விடவே கூடாதூஊஊஊஊ. சரி விட்டுடலாம் .... நீங்களே சொல்லிட்டீக !

   //கோபு அண்ணன் மிக நன்றாக விமர்சனம் எழுதுறீங்க..//

   மிக்க மகிழ்ச்சி.

   //உங்கள் விமர்சனத்துக்காக நானும் ஒரு கதை எழுதி.. உங்களுக்கு அனுப்பலாம் என யோசிக்கிறேன்,//

   ஹைய்யோ ..... ஹைய்யோ ..... நான் இதற்காகவே காசி + கைலாச யாத்திரை மேற்கொண்டு அங்கிருந்து அண்டார்டிகா பயணம் மேற்கொள்வதாக இருக்கிறேனாக்கும்.

   // ச்சும்மா அல்ல:) பில் உடன் தான்:).//

   அதானே பார்த்தேன். ஆதாயமில்லாமல் ஆத்திலே இறங்க மாட்டீங்களே ! :)

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... அனைத்துக்கும் நன்றியோ நன்றிகள்.

   நீக்கு

 12. திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் ‘டௌரி தராத கல்யாணம்’ என்ற மின்னூலுக்கு தாங்கள் செய்திருக்கும் திறனாய்வு அருமை.

  திறனாய்வில் கதையை முழுமையாய் அலசி ஒரு கதைச் சுருக்கத்தைத் தந்து, கடைசியில் ‘மற்றவைகளை வெள்ளித்திரையில் காண்க’ என சொல்வதுபோல், இறுதியில் கௌரிக்கு திருமணம் நடந்ததா அப்படியென்றால் அது எங்கு எப்படி ஏன் நடந்தது என்பதை சொல்லாமல் எங்களை சஸ்பென்சில் விட்டு மின்னூலை படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டுள்ளீர்கள்.

  கதையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் பெண் பார்க்கும் படலம் போன்றவற்றை இயல்பாக சொல்லும் கதாசிரியரின் நடைக்கு பாராட்டுகள்!

  கதையில் தன் இயல்புகளை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாத கதை நாயகியான கௌரியின் தனித்தன்மையைப்பற்றி சொல்லும்போது அவர் பேரில் உள்ள கூடிய மதிப்பு, இறுதியில் அவர் கார்த்திக்கிடம் தன்னை இழக்கும்போது அது குறைந்துவிடுகிறது என்பது உண்மை. கௌரியின் பண்பு நலனை தொடக்கத்தில் உயர்த்திப் பிடித்த கதாசிரியர், ஏன் கடைசியில் அவ்வாறு செய்தார் என்பதை முழுக் கதையைப்படித்தால் தான் புரியும் என எண்ணுகிறேன்.

  திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும் அவரது நூலை சிறப்பாக திறனாய்வு செய்த தங்களுக்கு பாராட்டுகளும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி May 16, 2017 at 5:44 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் ‘டௌரி தராத கல்யாணம்’ என்ற மின்னூலுக்கு தாங்கள் செய்திருக்கும் திறனாய்வு அருமை. //

   மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //திறனாய்வில் கதையை முழுமையாய் அலசி ஒரு கதைச் சுருக்கத்தைத் தந்து, கடைசியில் ‘மற்றவைகளை வெள்ளித்திரையில் காண்க’ என சொல்வதுபோல், இறுதியில் கௌரிக்கு திருமணம் நடந்ததா அப்படியென்றால் அது எங்கு எப்படி ஏன் நடந்தது என்பதை சொல்லாமல் எங்களை சஸ்பென்சில் விட்டு மின்னூலை படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டுள்ளீர்கள். //

   :) மிகவும் சந்தோஷம், ஸார் :)

   //கதையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் பெண் பார்க்கும் படலம் போன்றவற்றை இயல்பாக சொல்லும் கதாசிரியரின் நடைக்கு பாராட்டுகள்! //

   கதையின் ஆரம்ப முதல் அத்யாயத்திலேயே இதனைக் காட்சிப்படுத்தியுள்ளது மிகவும் அமர்க்களமாக உள்ளது, ஸார். அதுவும் இன்னும் அரை மணி நேரத்தில் பெண் பார்க்க வருகிறார்கள் என்ற அவசரச்செய்தி கிடைத்தவுடன் அந்த வீட்டில் நிகழும் ஒவ்வொரு சின்னச்சின்ன அமர்க்களங்களையும் கூட விட்டுவிடாமல் அழகாகச் சித்தரித்து எழுதியுள்ளார்கள். அந்தப்பெண்ணின் தாயார், ஆசை ஆசையாக, அந்த மணப்பெண்ணுக்கு மேல் தன்னை அலங்கரித்துக் கொள்வதில்தான் கதை ஆரம்பித்து நல்ல சூடு பிடிக்கிறது.

   //கதையில் தன் இயல்புகளை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாத கதை நாயகியான கௌரியின் தனித்தன்மையைப்பற்றி சொல்லும்போது அவர் பேரில் உள்ள கூடிய மதிப்பு, இறுதியில் அவர் கார்த்திக்கிடம் தன்னை இழக்கும்போது அது குறைந்துவிடுகிறது என்பது உண்மை.//

   அவ்வாறு கெளரி, கார்த்திக்கிடம் தன்னை இழப்பது கதையின் ‘இறுதியில்’ அல்ல. ஆரம்பத்தில் உள்ள சில அத்யாயங்களிலேயே நிகழ்ந்து விடுகிறது.

   அதன்பின்தான் கதையினில் விறுவிறுப்பான பல திருப்பங்கள் நிகழ்ந்து, கதை எங்கெங்கோ நகர்கிறது.

   கதைக்குள் கதையாக மேலும் பல உன்னதமான கதாபாத்திரங்கள் கதையில் தோன்றி சிறப்பித்து வருகிறார்கள்.

   //கௌரியின் பண்பு நலனை தொடக்கத்தில் உயர்த்திப் பிடித்த கதாசிரியர், ஏன் கடைசியில் அவ்வாறு செய்தார் என்பதை முழுக் கதையைப்படித்தால் தான் புரியும் என எண்ணுகிறேன்.//

   கதையில் ஓர் மிகப்பெரிய ட்விஸ்டும், கதைக்கான விறுவிறுப்பும் ஏற்பட அந்தவொரு சின்ன சம்பவம் கதையில் நுழைக்கப்பட்டிருக்கலாம்.

   மேலும், இந்தக்கால துணிச்சல் மிக்க மாடர்ன் கேர்ள்ஸ் என்பதால், ஏதோ ஒரு ஆர்வத்தில் இப்படி அப்படியும் கொஞ்சம் இருக்கத்தானே செய்வார்கள். இதில் உள்ள விபரீதங்களை பெண்களால் பிறகுதான் உணர முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

   தாங்கள் சொல்வது போல முழுக்கதையையும் படித்தால் மட்டுமே, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கான காரணங்களும், அவர்கள் செய்திடும் காரியங்களில் உள்ள ஏதோவொரு நியாயமும் புரியக்கூடும்.

   //திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும் அவரது நூலை சிறப்பாக திறனாய்வு செய்த தங்களுக்கு பாராட்டுகளும்!//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான + ஆழமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
 13. Very interesting! vaazhthukkal kathasiriyarukkum azagai eduthu sonna ungalukkum!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. middleclassmadhavi May 17, 2017 at 10:47 AM

   வாங்கோ MCM Madam. வணக்கம். தங்களின் அபூர்வ வருகை ஆச்சர்யம் அளிக்கிறது.

   //Very interesting! vaazhthukkal kathasiriyarukkum azagai eduthu sonna ungalukkum! மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. கதாசிரியருக்கும் அழகாய் எடுத்துச் சொன்ன உங்களுக்கும் வாழ்த்துகள்//

   தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், ’மிகவும் சுவாரஸ்யம்’ என்ற சுவாரஸ்யமான கருத்துக்கும், இருவருக்குமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
 14. வழக்கம்போல் அருமையான திறனாய்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை பித்தன் May 18, 2017 at 1:16 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //வழக்கம்போல் அருமையான திறனாய்வு.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   நீக்கு
 15. இவ்வளவு பேர் வந்து பின்னூட்டத்ல பின்னி எடுத்திருக்காளே. நான் வந்து புதுசா என்னத்த சொல்லப்போறேன்.. இதுல நான் வரலைனு மூஞ்சிய முழ நீளத்துக்கு தூக்கிண்டா எப்படி..???)))

  பெரிப்பா சொன்ன கதைச்சுருக்கமே சுவாரசியமாதான் இருக்கு. எங்காத்துலலாம் பொண்கள் இவ்வளவு அடாவடித்தனம்லாம் பண்ணமாட்டா.. அதுக்குண்டான தைரியமெல்லாம் கிடையவே கிடையாதாக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy May 18, 2017 at 6:09 PM

   வாம்மா ஹாப்பி. வணக்கம். நீ செளக்யமா சந்தோஷமா இருக்கிறாயா?

   //இவ்வளவு பேர் வந்து பின்னூட்டத்ல பின்னி எடுத்திருக்காளே.//

   யார் வந்து என்னதான் பின்னிப் பின்னி பெடல் எடுத்தாலும், ஹாப்பியின் கருகரு கருநாகம் போன்ற, அடர்த்தியான கெட்டியான அழகான நீண்ட பின்னல் போல வருமா?

   //நான் வந்து புதுசா என்னத்த சொல்லப்போறேன்..//

   நீதான் கல்யாண வயதில் உள்ள புதுப்பொண்ணு. நீ இங்கு வந்து நின்னாலே சும்மா ஜொலிக்குமே .... புதுசா ஒன்னும் சொல்லத்தோணலை என்றாலும்கூட, பழசாவாவது உங்க ஊர் நாய், ஆடு, மாடு பற்றியெல்லாம் சொல்லலாமோள்யோ ! :)

   //இதுல நான் வரலைனு மூஞ்சிய முழ நீளத்துக்கு தூக்கிண்டா எப்படி..???)))//

   யாரு மூஞ்சிய முழ நீளத்துக்குத் தூக்கிண்டாளாம்? ”எங்காத்துல மாடு கண்ணு போட்டிருக்கு, காரியங்கள் நிறையா இருக்குது. மடிசாரிலே மாடு புடுங்குதுன்னு” ஏதேதோ நீ புலம்ப ஆரம்பித்த பிறகு, நான் தான் உன்னை இங்கு அழைப்பதே இல்லையே.

   நீயாகவே உன் மனசு கேட்காமல் இங்கு இன்று வந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   //பெரிப்பா சொன்ன கதைச்சுருக்கமே சுவாரசியமாதான் இருக்கு.//

   மிகவும் சந்தோஷம்....டா ஹாப்பி.

   //எங்காத்துலலாம் பொண்கள் இவ்வளவு அடாவடித்தனம்லாம் பண்ணமாட்டா..//

   கெளரி மட்டும் என்ன அடாவடித்தனம் செய்துவிட்டாள்? தன்னைப் பெண் பார்க்க வந்தபோது அவள் பேசியவற்றில் என்ன பெரிய தப்பு உள்ளது. அனைத்தையுமே மிகவும் நியாயமாகத்தானே யோசித்துப் பேசியிருக்கிறாள். டெளரி + ஆடம்பரக் கல்யாணம் போன்றதொரு வெட்டிச் செலவும் உண்டோ? நீயே சொல்லு....டா ஹாப்பி.

   நன்கு படித்திருக்கிறோம் - வேலை பார்க்கிறோம் - நல்ல பதவியில் இருக்கிறோம் - நல்லா சம்பாதிக்கிறோம் என்ற ஒருசில காரணிகள் மட்டும் கொஞ்சம் அவளுக்கு இதுபோல பேச கொஞ்சம் துணிச்சலைக் கொடுத்திருக்கலாம். அதிலும் ஒன்றும் தப்பு கிடையாது என்பேன் நான்.

   //அதுக்குண்டான தைரியமெல்லாம் கிடையவே கிடையாதாக்கும்.//

   உலகம் தெரியாத ரெண்டுங்கெட்டான் வயது, பருவக்கோளாறு, இவரைத்தானே மிக விரைவில் நாம் கல்யாணம் செய்துகொள்ள இருக்கிறோம் என்ற ஒரு மாபெரும் நம்பிக்கை, அன்று அடித்துப்பெய்துள்ள நல்ல மழை, தனிமையில் தங்க நேர்ந்துள்ள அரியதொரு வாய்ப்பு, ஆணின் தூண்டுதல்கள் ஆகியவை சின்ன சலனத்தையும் சபலத்தையும் அசட்டு தைர்யத்தையும் அன்று அவளுக்குக்கொடுத்திருக்கலாம். இதுதான் விதியின் விளையாட்டு என்பதாகும்.

   உன்னைப்போன்ற இளம் பெண்கள் எல்லோரும் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்றதொரு கதை யோசித்து எழுதப்பட்டுள்ளதாக்கும்.

   எப்போதுமே சேலை போன்றவர்கள் இந்தப்பெண்கள். சேலை முள்ளில் விழுந்துவிட்டாலும், முள் சேலையில் விழுந்து விட்டாலும், பாதிப்பு சேலை என்ற பெண்களுக்கு மட்டுமே மிகவும் அதிகமாக்கும் என்பதை அனைத்துப்பெண்களும் உணர வேண்டும் என்பதற்காக மிக அழகாக எழுதப்பட்டுள்ள கதை இது.

   உன் அன்பான வருகைக்கு மிகவும் சந்தோஷம்.....டா ஹாப்பி.

   பிரியத்துடன் பெரிப்பா

   நீக்கு
 16. //நன்கு படித்திருக்கிறோம் - வேலை பார்க்கிறோம் - நல்ல பதவியில் இருக்கிறோம் - நல்லா சம்பாதிக்கிறோம் என்ற ஒருசில காரணிகள் மட்டும் கொஞ்சம் அவளுக்கு இதுபோல பேச கொஞ்சம் துணிச்சலைக் கொடுத்திருக்கலாம். அதிலும் ஒன்றும் தப்பு கிடையாது என்பேன் நான்.//


  பெரிப்பா நல்லா...நிறய படச்சிருந்தா ப்குவமும் சபை அடக்கமும் தானே வந்திருக்கணும்.... ஆனா கதையில் வரும் இந்த பெண்ணுக்கு தான்.. தன் எண்ணம்தான் பெரிசுங்கற ஈகோ... மேலும் புடவ கட்டமாட்டேன் சுடி தான் போட்டுப்பேன்னு மௌத்கொலஸ்ட்ரால்..(அதான்...வாய்க்கொழுப்பு)....))))
  தானே வந்திருக்கு.. அதிகம் படிச்சா இப்படி கர்வமா நடக்க தோணுமோ.. இது எப்படி சரியாகும்... எது எப்படியோ தையை படிச்சோம்.. போனோம்னு இல்லாம இவ்வளவு தூரம் யோசிக்க வைத்த ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்து திறமையை பாராட்டியே ஆகணும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy May 19, 2017 at 10:25 AM

   வாடா தங்கம் ..... ஹாப்பி. குட் மார்னிங் டி யூ ! 

   **நன்கு படித்திருக்கிறோம் - வேலை பார்க்கிறோம் - நல்ல பதவியில் இருக்கிறோம் - நல்லா சம்பாதிக்கிறோம் என்ற ஒருசில காரணிகள் மட்டும் கொஞ்சம் அவளுக்கு இதுபோல பேச கொஞ்சம் துணிச்சலைக் கொடுத்திருக்கலாம். அதிலும் ஒன்றும் தப்பு கிடையாது என்பேன் நான்.**

   //பெரிப்பா நல்லா... நிறய படிச்சிருந்தா பக்குவமும் சபை அடக்கமும் தானே வந்திருக்கணும்.... ஆனா கதையில் வரும் இந்த பெண்ணுக்கு தான்.. தன் எண்ணம்தான் பெரிசுங்கற ஈகோ...//

   படித்த எல்லோருக்கும் பக்குவமும் சபை அடக்கமும் வந்திடும் என்று சொல்லமுடியாது..டா ஹாப்பி.

   அதுபோல படிக்காதவா எல்லோருக்கும் பக்குவமும், சபை அடக்கமும் இருக்கவே இருக்காது எனவும் நாமாகவே நினைத்துக்கொள்ளவும் கூடாதுடா.

   படிப்பு என்பது முற்றிலும் வேறு. பண்பு என்பது முற்றிலும் வேறு.

   படிப்பு இருக்கோ இல்லையோ பண்பு என்பது இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அதற்கு பூர்வ புண்ணிய பலனும் வேண்டும். நல்லதொரு வளர்ப்பு முறையும், நல்ல நண்பர்களின் சேர்க்கையும் அவசியமாகத் தேவைப்படக்கூடும்.

   நல்லது கெட்டதை ஆராய்ந்து செயல்படும் மனப்பக்குவம் மட்டுமே தேவையாகும் .... உன்னைப்போல. :)

   //மேலும் புடவ கட்டமாட்டேன் சுடி தான் போட்டுப்பேன்னு மௌத்கொலஸ்ட்ரால்..(அதான்...வாய்க்கொழுப்பு)....)))) தானே வந்திருக்கு.. அதிகம் படிச்சா இப்படி கர்வமா நடக்க தோணுமோ.. இது எப்படி சரியாகும்...//

   அதிகம் படித்ததால் மட்டுமே, புடவையை விட சுடிதார் + அதன் அங்கவஸ்திரமான ஷால் ஆகியவற்றை அணிவதும் சுலபம் + பார்க்கவும் கவர்ச்சி + ஆங்காங்கே மேடு பள்ளங்களுடன் திறந்த வெளிகள் ஏதும் தெரியாமல் தனக்கு முழுப்பாதுகாப்பும் அளிக்கக்கூடியது என அவளை உணர வைத்திருக்குமோ என்னவோ!

   அதை எப்படி நீ, உன் மெளத் கொலஸ்ட்ராலுடன் அவளின் வாய்க்கொழுப்பு எனச் சொல்லலாம்?????

   //எது எப்படியோ கதையை படிச்சோம்.. போனோம்னு இல்லாம இவ்வளவு தூரம் யோசிக்க வைத்த ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்து திறமையை பாராட்டியே ஆகணும்...//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! கடைசியில் யோசித்துப்பார்த்து நீயும் இந்த ஒரு சரியான முடிவுக்கு வந்து, கதாசிரியர் ஜெயஸ்ரீ மாமியைப் பாராட்டியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது....டா ஹாப்பி.

   மிக்க நன்றி....டா செல்லம்.

   பிரியத்துடன் பெரிப்பா

   நீக்கு
 17. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க மனசு பட படங்கறதே.

  இப்படிப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த விழுக்காடாகத்தான் இருக்கிறது. என்னதான் சாமர்த்தியமாக பேசினாலும் கல்யாணம் ஆகாமல் ஏமாந்து விட்டாளே.

  ரொம்ப அருமையான சரளமான நடை. நல்ல கருத்து. முழுக்க படிக்க ஆவலாய் உள்ளது.

  வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ

  இப்படி எல்லா கதைகளுக்கும் அருமையா விமர்சனம் எழுதற, எல்லாரையும் படிக்கத்தூண்டற கோபு அண்ணாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya May 19, 2017 at 4:45 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க மனசு பட படங்கறதே.//

   நீங்க எப்போதுமே
   ஊசிப்பச்சமிளகா மாதிரியும்,
   ஊசிப்பட்டாசு போலவும் கொஞ்சம்
   படபடா டைப்பு தானே! அதனால் உங்க
   மனசு படபடக்கத்தான் செய்யும்.

   //இப்படிப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த விழுக்காடாகத்தான் இருக்கிறது. என்னதான் சாமர்த்தியமாக பேசினாலும் கல்யாணம் ஆகாமல் ஏமாந்து விட்டாளே.//

   அதானே ! அதனால் என்ன? ஏமாந்த பிறகு கல்யாணம் செய்து கொள்வாளோ என்னவோ!

   //ரொம்ப அருமையான சரளமான நடை. நல்ல கருத்து. முழுக்க படிக்க ஆவலாய் உள்ளது. வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ//

   மிக்க மகிழ்ச்சி. ரொம்ப அருமையான சரளமான நடையுடன், நல்ல கருத்துக்களைச் சொல்லி, முழுக்கப் படிக்க ஆவலை ஏற்படுத்தியுள்ள, மிகவும் பிஸியான கதாசிரியர் அவர்கள், இங்கு வருகை தருவார்களோ மாட்டார்களோ .... அதனால் ஜெயாவின் வாழ்த்துகளுக்கு இப்போதைக்கு என் நன்றிகள்.

   //இப்படி எல்லா கதைகளுக்கும் அருமையா விமர்சனம் எழுதற, எல்லாரையும் படிக்கத்தூண்டற கோபு அண்ணாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.//

   ஆஹா, தங்களின் அபூர்வ வருகைக்கும், அசத்தலான கருத்துக்களுக்கும், எனக்கான சிறப்பு வாழ்த்துகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஜெயா.

   அன்புடன் கோபு அண்ணா.

   நீக்கு
 18. பெரிய நாவல்களைப் படிக்க நேரம் கிடைப்பது மிகவும் அபூர்வம். ஏற்கெனவே படிக்கத் துவங்கிய இரு நாவல்கள் பாதியில் இருக்கின்றன. கதையையும் மறந்துவிட்டேன். இனி படிப்பதாயிருந்தால் முதலிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
  இக்கதைச்சுருக்கத்தைப் படித்தேன். வரதட்சிணை தராமல் தான் கல்யாணம் என்ற கொள்கையுடன் இருந்த நாயகி, வாழ்க்கையில் சறுக்கும் விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  இப்படி பெண்கள் அஜாக்கிரதையாக இருந்தால் அவர்கள் வாழ்வில் எத்தகைய இன்னல்களை எதிர்கொள்ள நேரும் என்ற விழிப்புணர்வை வாசிக்கும் இளம்பெண்கள் பெற்றால் நல்லது தான்; அதுவே ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி தான்.

  சுவையான விமர்சனத்துக்கு மிகfவும் நன்றி கோபு சார்! ஆசிரியருக்குப் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி May 20, 2017 at 11:20 PM

   வாங்கோ மேடம். வணக்கம் மேடம்.

   //பெரிய நாவல்களைப் படிக்க நேரம் கிடைப்பது மிகவும் அபூர்வம். ஏற்கெனவே படிக்கத் துவங்கிய இரு நாவல்கள் பாதியில் இருக்கின்றன. கதையையும் மறந்துவிட்டேன். இனி படிப்பதாயிருந்தால் முதலிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.//

   ஆமாம் .... மேடம். தாங்கள் சொல்வது வாஸ்தவம்தான். என்னாலும் என்னிடம் உள்ள மிகப் பெரிய நாவல்களைப் பொறுமையாகப் படிக்க முடிவதே இல்லை.

   //இக்கதைச்சுருக்கத்தைப் படித்தேன். வரதட்சிணை தராமல் தான் கல்யாணம் என்ற கொள்கையுடன் இருந்த நாயகி, வாழ்க்கையில் சறுக்கும் விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

   இப்படி பெண்கள் அஜாக்கிரதையாக இருந்தால் அவர்கள் வாழ்வில் எத்தகைய இன்னல்களை எதிர்கொள்ள நேரும் என்ற விழிப்புணர்வை வாசிக்கும் இளம்பெண்கள் பெற்றால் நல்லது தான்; அதுவே ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி தான். //

   அதே....அதே.... மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள், மேடம்.

   //சுவையான விமர்சனத்துக்கு மிகவும் நன்றி கோபு சார்! ஆசிரியருக்குப் பாராட்டுகள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் யதார்த்தமான நேர்மையான கருத்துக்களுக்கும் ‘சுவையான விமர்சனம்’ என்ற எனக்கான பாராட்டுக்கும், கதாசிரியருக்கான பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 19. அப்போ முஹூர்த்த நேரத்துல மடிசார் கட்ட மாட்டேன்...ஸல்வார்தான் போட்டுப்பேன்னு... சொன்னா அதையும் சரிம்பேளா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy May 26, 2017 at 11:50 AM

   //அப்போ முஹூர்த்த நேரத்துல மடிசார் கட்ட மாட்டேன்... ஸல்வார்தான் போட்டுப்பேன்னு... சொன்னா அதையும் சரிம்பேளா//

   இதெல்லாம் அவாஅவா இஷ்டம் + பழக்க வழக்கம் + தேக செளகர்யா செளகர்யங்கள் மட்டுமே. இதில் நான் என்னத்தைச் சொல்ல?

   என் ஆத்துக்காரி முஹூர்த்த நேரத்திலே, மிகவும் கஷ்டப்பட்டு மடிசார் புடவைதான் கட்டிக்கொண்டு இருந்தாள். :)

   அவள் அன்று ஸல்வாரிலோ, சுடிதாரிலோ, ஜீன்ஸிலோ இல்லையே என்ற குறை எனக்கு இப்போதும் நெஞ்சு மட்டும் இருக்குதாக்கும். :)))))

   http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html இதில் கூட அதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளேனாக்கும். :)

   நீக்கு