என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 7 மே, 2017

'பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ - மின்னூல் - மதிப்புரை


( பிப்ரவரி 2013 - வல்லமையில் வெளியாகியுள்ள படம்)

மின்னூல் ஆசிரியர்
திருமதி.  ஜெயஸ்ரீ  அவர்கள்

 



 


மின்னூல்கள் மூலம்
இவரைப்பற்றி நாம் அறிவது

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.




என் பார்வையில் 
'பாவை விளக்கின் 
ஒளிச்சிதறல்கள்’
மின்னூல்

மொத்தம் 181 பக்கங்கள் கொண்ட  இந்த மின்னூலில் நவரத்தினங்களாக ஜொலிக்கும் + நவரசங்கள் ததும்பும் ஒன்பது கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதை பற்றியும், சுருக்கமாக ஒருசில வரிகள் மட்டும் இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.



(1)  தொட்டில்



மிகவும் அருமையானதொரு கதை. பெற்றோர் சம்மதமின்றி காதலித்து, போலீஸ் ஸ்டேஷனில் நண்பர்கள் உதவியால் மணம் செய்துகொண்ட தம்பதியனர் அவர்கள். பெற்றோர்கள் கொடுத்த சாபமோ என்னவோ குழந்தைப்பேறு உண்டாகவில்லை. 

ஏதேதோ வைத்தியங்கள் பார்த்தாச்சு. சமூகத்தில் எவ்வளவோ அவமானங்களைச் சந்திச்சாச்சு. தான் பார்த்துவந்த கெளரவமான வங்கி வேலையையும் அந்த மனைவி உதறித்தள்ளியாச்சு. குழந்தையில்லாததொரு தம்பதியினரின் ஏக்கங்களை வெகு அழகாகச் சொல்லியுள்ளார்கள் இந்தக்கதையில்.  

கடைசி முயற்சியாக ஒரு மருத்துவமனையை அணுகிப்பார்க்கிறார்கள். அங்கும் நம்பிக்கை தரப்படவில்லை. வாடகைத்தாயாக இருக்க பலரின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி புரோக்கர் வேலை செய்ய நினைக்கிறது அந்த ஆஸ்பத்தரி நிர்வாகம். வாடகைத் தாயாக முன்வரத் தயாராக இருக்கும் பல அழகிகள் வரிசையாகக் காட்சிப்படுத்தப் படுகிறார்கள். வெறுத்துப்போய் வெளியேறி வீட்டுக்கு வர காரை எடுக்கும் வேளையில் எதிர்பாராததோர் ஆச்சர்யம் நடக்கிறது ...... 

திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆன அந்த தம்பதியினருக்கு மிகவும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் ஏற்படுகிறது. அப்படி அந்த நொடிப்பொழுதினில் என்னதான் நிகழ்ந்தது என்பதை இந்தக்கதையினைப் படித்து தெரிந்து கொள்ளவும். 




(2)  பெற்ற கடன் அடைக்கும் பிள்ளைகள் 

மிகவும் அற்புதமான கதை. தான் வரிசையாகப் பெற்ற ஐந்து ஆண் பிள்ளைகள் ஒவ்வொன்றையும் பீடி சுற்றும் கம்பெனியில் அடமானமாக வைத்து காசு பெற்று சாராயமும் பீடியும் குடித்து மகிழும் கணவன். ஆறாவதாக ஓர் பெண் குழந்தை பிறக்குது. அதுவும் ஆண் பிள்ளையாக இருப்பின் அதற்கு ஐந்து வயது ஆனதும் அதனையும் அடமானமாக வைத்து மூத்தபிள்ளையை மட்டுமாவது மீட்கலாம் என்ற ஓர் சின்ன ஆசை இருந்தது. அது முடியாமல் போனதில் கணவன் - மனைவி இருவருக்குமே வருத்தம்.  

மனைவிக்கு தன் குழந்தைகளைப்பார்க்கணும் போல ஆசை. கணவனை வற்புருத்தி அந்த பீடி சுற்றும் கம்பெனிக்குக் கூட்டிப்போகச் சொல்கிறாள். அங்கு தன் பிள்ளைகள் படும் கஷ்டத்தையும் வாங்கும் அடி உதைகளையும் காண சகிக்காமல் பீடிக்கம்பெனி முதலாளியின் காலில் விழுந்து கெஞ்சி, எண்ணெய் காணா பரட்டைத் தலைகளுடனும், ஒட்டிய வயிற்றுடனும் எலும்பும் தோலுமாக உள்ள தன் ஐந்து ஆண் குழந்தைகளையும் ஒரேயடியாக மீட்டு, அவர்களுக்குத் தங்கச்சியாகப் பிறந்துள்ள பெண் குழந்தையுடன் சந்தோஷமாக வீட்டுக்குக் கூட்டி வருகிறாள். 

அவள் என்ன செய்து, எதை அடமானமாக வைத்து, இவ்வாறு எல்லாக் குழந்தைகளையும் ஒரே நாளில் ஓரேயடியாக மீட்டு வர முடிந்தது என்ற கிளைமாக்ஸை கதையில் படித்துத் தெரிந்து கொண்டால் மட்டுமே மிகச் சிறப்பாக இருக்கும்.




(3)  இன்று போய் நாளை வா

ஒரு சாதாரண குடும்பக்கதையில், அந்த இல்லத்தரசி மூலம், ஏதேதோ சஸ்பென்ஸ் கொடுத்து, நல்ல நகைச்சுவையுடன், படிக்க சுவாரஸ்யமாக எழுதி முடித்துள்ளார்கள். இறுதியில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்லதொரு செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கதையை அவர்களின் வலைத்தளத்தினிலேயே படித்த நினைவும் எனக்கு வந்தது.




(4)  தேரில் ஏறும் முன்னம்:

ஓர் இளம் பெண்ணும், ஓர் ஆடவனும் திருமணத்திற்கு முன்பே பழகி, தனிமையில் இனிமையாக வெளியே பல இடங்களைச் சுற்றி, ஒருவரைப்பற்றி ஒருவர் புரிந்துகொள்வதை பொதுவாக நம்மில் பலரும் தவறு என்று நினைப்போம். 

இந்தக்கதையில் அவ்வாறே ஒரு நாள் ஒரு பெண், தன் Boy Friend உடன் டேட்டிங் செய்யப் புறப்படுகிறாள். காலையில் நன்கு மேக்-அப் செய்துகொண்டு அட்டகாசமாகப் புறப்பட்டவள், இரவு வெகு நேரம் கழித்து தன் ரூமுக்கு வந்து தன் தோழியிடம் நடந்ததையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லி பூரித்து மகிழ்கிறாள். 

ஆர்வத்துடன் கூடிய தோழியின் பல தூண்டுதல் கேள்விகளும், வெட்கத்துடன் கூடிய இவளின் பதில்களும், படிக்க வெகு சுவாரஸ்யமாக உள்ளன. 

கடைசியில் என்னதான் நடந்தது என்பதை மின்னூலில் படித்துத் தெரிந்து கொண்டால் மேலும் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும். இந்தக் கதையும் இவர்களின் வலைத்தளத்தினில் படித்த ஞாபகம் எனக்கு உள்ளது.




(5)  பாதை மறந்த பருந்து:

பொறுப்பற்ற பிள்ளையைப் பற்றிய இந்தக் கதை படிக்கும்போதே நமக்கும் அவன்மேல் வெறுப்பு ஏற்பட மட்டுமே செய்கிறது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் நடுவே மாட்டிக்கொண்டு தத்தளிக்கும் அம்மா கதாபாத்திரம் அருமை. ஒரு நன்றியுள்ள தெரு நாய் பிள்ளையைத் திருத்தியது அருமையான க்ளைமாக்ஸ் ஆக உள்ளது.  ஏற்கனவே இவர்களின் வலைத்தளத்தினில் படித்த நினைவும் உள்ளது.




(6)  தன்னைச் சுடும்:

அதீத கற்பனைகளுடன் எழுதப்பட்டுள்ளதோர் கதை. புராணக்கதைகளில் ஒரு குழந்தை கர்ப்பவாசத்தில் தன் தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதே, அதற்கான போதனைகள் நாரதர் போன்ற மகரிஷிகளால் செய்யப்பட்டு, பிறக்கும்போதே அனைத்தையும் அறிந்த மஹாமேதாவியாக இருந்ததாகக் கேள்விப்பட்டுள்ளோம். 

அதுபோலவே, மூன்று மாதமே ஆன தன் குழந்தையை, ஏராளமான பணச்செலவில், ஓர் மிகச்சிறப்பான பள்ளியில் சேர்த்து, அவனுக்கு ஏதேதோ அறிவுகளைப் பலவந்தமாகப் புகுத்தி, மண்டையில் திணித்து அவனை உலகப்புகழ் பெற்றவனாக மாற்றத் துடிக்கிறாள், மிகவும் பிடிவாதக்காரியான பார்கவி என்பவள். இதில் அவளின் மாமியார் சொல்லோ, கணவனின் சொல்லே எடுபடவே இல்லை. 

பார்கவியே எதிர்பாராத அளவுக்கு அவன் மிகவும் புத்திசாலியாகவே வளர்கிறான். இருப்பினும் ஊரோடு ஒத்து வராத பையனாக இருப்பதால் பல்வேறு சோதனைகளை அவள் காண நேர்ந்து ஒரு ஸ்டேஜில் மிரண்டே போய் விடுகிறாள்.

பிஞ்சுப்பருவத்திலேயே பள்ளியில் அவனுக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு அதுவே மிகப்பெரிய பிரச்சனையாகி விடுகிறது. 

முப்பது வயதுக்குள் அந்தப்பிள்ளை ஒரு ஞானி போல ஆகி வீட்டைவிட்டே வெளியேறி எங்கோ இமயமலையை நோக்கிக் கிளம்பி விடுகிறான். 

ஒரு நாள், அகாலத்தில் யாரோ பார்கவி வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். தன் பிள்ளைதான் திரும்பி வந்துவிட்டானோ என ஆவலுடன் கதவைத்திறந்த பார்கவிக்கு ஓர் மாபெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. 

இதுவரை பார்த்ததே இல்லாத இரு புதியவர்களின் வருகையால், பார்கவிக்கு ஏற்பட்ட மாபெரும் அதிர்ச்சி கதையில் மிகவும் சுவாரஸ்யமான கட்டமாக காட்டப்பட்டுள்ளது. 

அதிலுள்ள சுவாரஸ்யம் பற்றி, கதாசிரியரின் எழுத்து நடையில் மின்னூலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



(7)  அவள் வாழ்வு அவ்வளவுதான்:

இந்த மின்னூலிலுள்ள கதைகளிலேயே என்னை மிகவும் கவர்ந்த கதை இது. ஒரு பெண் என்னும் இயந்திரத்தின் கதையை வெகு அழகாகச் சொல்லியுள்ளார்கள். 

பங்களா, கார், பணக்காரக் கணவர், மகன், மகள், பணம், வசதி வாய்ப்புகள் எல்லாமே உள்ளன. இருந்தும் என்ன? எல்லோருக்காகவும் இவள் ஒருத்தியே மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து வருகிறாள். 

ஆரம்பத்தில் தன்னைக்காதலித்துச் சுற்றிச்சுற்றி வந்த கணவனுக்கு இப்போதெல்லாம் தன்னைப் பார்க்கவே பிடிப்பது இல்லை.** 


[** அது எப்படிப்பிடிக்கும்? இதற்கான உண்மைக் காரணம் நான் எழுதியுள்ள ஓர் கதையில் உள்ளது. https://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html - பகுதி-5 ]


ஆபீஸ் வேலைகள் - அபீஷியல் ட்யூர் - லாப்டாப் ஆகியவற்றுடனேயே அவரின் பொழுது எப்போதுமே போய் விடுகிறது. அதிகாரம் மட்டும் எப்போதுமே கொடிகட்டிப் பறக்கிறது. 

ஒரே பிள்ளை எப்போதும் யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டே ..... பெண் தொலைகாட்சிப்பெட்டியுடன் ரிமோட்டும் கையுமாக ..... இவள் உடல்நிலை சரியில்லாமல் படுத்தால் வீட்டுக்குள்ளேயே, இவளைப்பற்றிக் கேட்கவோ கவனிக்கவோ நாதியில்லை. 

நடுத்தர வயதின் கோளாறுகள், உதிரப்போக்கு, கர்ப்பப்பை நீக்கம் என ஏதேதோ சோதனைகள் வந்தும், தான் படும் கஷ்டம் கொஞ்சமும் தெரியாத தன் சொந்த உறவுகளால், அவளின் வாழ்க்கை அர்த்தமில்லாத வாழ்க்கையாகப் போய்க்கொண்டே உள்ளது. 

எதிர் வீட்டில் புதிதாகக் குடி வந்திருக்கும், இளம் பெண் ஒருத்தி,  தன்னைத் தேடி, அடிக்கடி பைக்கில் வந்துபோகும் ஒருவருடன் கூத்தடித்துக்கொண்டு உல்லாசமாக இருப்பதை,  அடிக்கடி இவள் தன் அறை ஜன்னல் மூலம் காண நேரிடுகிறது. தனக்கு இன்று கிடைக்காத அன்பும் சந்தோஷங்களுமான அவை தன் கண்களில் பட்டு தன்னை ஹிம்சிக்காமல் இருக்க, தன் வீட்டு ஜன்னலை திரை போட்டு மூடுவதைத் தவிர வேறெதும் செய்வதற்கு இல்லை இவளுக்கு.

ஒரு நடுத்தர வயது இல்லத்தரசியான பெண்ணின் அவல நிலையையும், ஏக்கங்களையும், நியாயமான எதிர்பார்ப்புகளையும், கூறிடும் இந்தக்கதையை மிகவும் அருமையாக எழுதி முத்திரை பதித்துள்ளார்கள். 



 சபாஷ் !  


      

(8)  விஸ்வநாதன் வேலை வேண்டாம்:

இஞ்சினியரிங் படித்து முடித்தும் வேலை கிடைக்காத வாலிபன் பற்றிய கதை. தன் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கா விட்டால், அதனை எதிர்பார்த்து ஏங்காமல், கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு அதில் முன்னேறுவதே புத்திசாலித்தனம் என்பதைச் சொல்லும் கதை.

மிகவும் ரசித்த வரிகள்:

அவனை அழைத்த கம்பெனியின், அதி நவீன அசர வைக்கும் கண்ணாடிப் புடவை கட்டிக்கொண்ட பிரும்மாண்ட கட்டடத்தைப் பார்த்ததும், இதயம் லப்-டப் எனத் துடிப்பதை மறந்து அதன் அழகில் மயங்கிப்போனது.

எதிர்வீட்டு மாமி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக்கை நீட்டி, “என் பொண்ணு மைதிலிக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சுருக்கு. இன்னிக்குக் குழந்தை ப்ளைட்ல கிளம்பிண்டு இருக்கா” என்று கடுப்பேத்தி விட்டுப்போனதும்.... வாயில் வைத்த மைசூர்பாக் கூட கசந்து வழிகிறது அவனுக்கு.      


(9)  கலியுகத் தாயின் கீதா உபதேசம் :

சமூக சிந்தனையை ஊட்டும் மிகவும் அருமையான கதை. ஏதுமறியா மாணவச் செல்வங்களையும், அவர்களின் ஒட்டுமொத்தமான மிகப்பெரிய பலத்தையும், அரசியல்வாதிகள் எவ்வாறு திசைதிருப்பி, தங்களுக்கான அரசியல் ஆதாயம் அடைகிறார்கள் என்பதை, ஒரு கல்வி நிறுவனத்தில் முதல்வராகவும், வேறு கல்லூரியில் படிக்கும் தன் அன்பு மகனின் பாசத்திற்கு உரிய தாயாகவும் ஒரு கதாபாத்திரம் பேசுவதாகக் காட்டி, நன்கு புட்டுப்புட்டு வைத்துள்ளார்கள். கதையின் தலைப்பும் கதையில் உள்ள கருத்துக்களும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவைகளாக உள்ளன.





காவியத்தில் மட்டுமல்லாமல் தன் கை 
ஓவியத்திலும் கலக்கிடும் ஜெயஸ்ரீ மேடம்!



பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள் 
என்ற தனது மின்னூலை அன்பளிப்பாக 
எனக்கு அனுப்பி வைத்து 
வாசிக்க வாய்ப்பளித்துள்ள
சகலகலா வாணியான
 திருமதிஜெயஸ்ரீ மேடம் 
அவர்களுக்கு 
என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்







இந்த மின்னூலை உடனடியாக படிக்க விருப்பமுள்ளோர் 
http://www.pustaka.co.in/home/ebook/tamil/paavai-vilakkin-olichitharalgal 
என்ற இணைப்புக்குச் சென்று ’Buy Now’ என்பதை க்ளிக் செய்யுங்கோ, போதும். 
உங்களைத்தேடி மின்னல் வேகத்தில் இந்த மின்னூல் வந்து சேரும் . 


  

ஸ்ரீ குரு க்ருபை இருந்தால்
திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் 
அடுத்த மின்னூல் மதிப்புரையில் 
மீண்டும் நாம் சந்திப்போம்.




 

என்றும் அன்புடன் தங்கள்,



52 கருத்துகள்:

  1. தங்களின் அழகான மதிப்புரையைப் பெற ஜெயஸ்ரீ ஷங்கர் கொடுத்துவைத்திருக்கவேண்டும்...இவ்வளவு விரிவாக விமர்சனம் எழுதியதற்குப் பரிசுதான் அந்தக் காமதேனுவா? அவர்கள் ஹைதராபாத்காரரா? நானும் ஒருகாலத்தில் அங்கு மூன்றாண்டுகள் வேலை செய்திருக்கிறேனே. அப்போது அவர்கள் குழந்தையாய் இருந்திருப்பாரோ?

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chellappa Yagyaswamy May 7, 2017 at 2:16 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //தங்களின் அழகான மதிப்புரையைப் பெற ஜெயஸ்ரீ ஷங்கர் கொடுத்துவைத்திருக்கவேண்டும்...//

      இது தங்களின் பிரத்யேகமானதோர் தனிப் பார்வையாகும். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை.

      இவருடைய பெயரிலேயே ’ஜெய’மும் ’ஸ்ரீ’யும் ஒட்டியுள்ளன பாருங்கோ.

      இவரின் மிகத் தரமான எழுத்துக்களை அடியேன் வாசிக்க/சுவாசிக்க முடிந்ததனால் மட்டுமே, ’தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதுபோல மதிப்புரையை என்னால் எழுதவும் வெளியிடவும் பேரெழுச்சியுடன் முடிந்துள்ளது.

      அதனால் மட்டுமே என் மதிப்பும், சற்றே காய்ந்து உலர்ந்திருந்த என் வலைத்தளத்தின் மதிப்பும் கொஞ்சம் உயர்ந்துள்ளது என்பது அடியேனின் எண்ணமாகும்.

      அதனால் நூலாசிரியரான திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களை விட, மதிப்புரையாளனான நானே மிகவும் இதில் கொடுத்து வைத்திருக்கிறேன்.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> Chellappa Yagyaswamy (2)

      //இவ்வளவு விரிவாக விமர்சனம் எழுதியதற்குப் பரிசுதான் அந்தக் காமதேனுவா?//

      மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

      ’காமதேனு’ என்பது நாம் அள்ள அள்ளக்குறையாமல் அக்ஷயமாக பால் முதலிய அனைத்தையும் நமக்குத் தரக்கூடிய தெய்வீகமான பெண் தெய்வம்.

      ‘அதுபோலவே நானுமாக்கும்’ என்பதை, எனக்கு இதனைப் பிரத்யேகமாக அனுப்பியுள்ளதன் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளார்கள் ஜெயஸ்ரீ அவர்கள்.

      இதுவரை மூன்றே மூன்று மின்னூல்களை மட்டும் எனக்கு வாசிக்க அன்பளிப்பாக அளித்துள்ளார்கள்.

      மேலும் மேலும் அக்ஷயமாக உங்களுக்கு நான் மின்னூல்களை அனுப்பிக்கொண்டே இருப்பேன் என்பதை சிம்பாலிக்காகச் சொல்லியுள்ளார்கள் இந்த காமதேனுவின் மூலம்.

      இவ்வாறு அவர்கள் அக்ஷயமாக அனுப்பப்போகும் ஒவ்வொரு மின்னூல்களையும் வாசித்து மகிழ்ந்து, அவற்றின் மதிப்புரைகளாக ஒவ்வொரு புதுப்பதிவுகளை நான் வெளியிட, எனக்கு ஊக்கமும், உற்சாகமும், ஆர்வமும், ஆற்றலும் ஏற்பட்டு அவற்றையும் நன்கு நான் செய்ய வேண்டுமே என்ற பொறுப்பும், கவலையும் இப்போதே எனக்குள் ஏற்பட்டு விட்டது.

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> Chellappa Yagyaswamy (3)

      //அவர்கள் ஹைதராபாத்காரரா?//

      தற்சமயம் ஹைதராபாத்தில் வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள், மட்டுமே.

      //நானும் ஒருகாலத்தில் அங்கு மூன்றாண்டுகள் வேலை செய்திருக்கிறேனே.//

      அப்படியா?

      நானும் கூட 2008-ம் ஆண்டு இறுதியில், தொடர்ச்சியாக ஒரு 15 நாட்களுக்கு மட்டும் ஹைதராபாத் இராமச்சந்திரபுரத்தில் உள்ள BHEL GUEST HOUSE இல் தனியாகத் தங்க நேர்ந்தது.

      BHEL EXECUTIVES’ ORIENTATION TRAINING PROGRAMME என்ற பெயரில் OFFICIAL DUTY இல் அனுப்பப்பட்டிருந்தேன்.

      அப்போது நானும் இந்த ஜெயஸ்ரீ மேடமும் வலைப்பதிவர்களாக இல்லாததால், எங்களுக்குள் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கும் பாக்யம் கிட்டாமலேயே போய்விட்டது.

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> Chellappa Yagyaswamy (4)

      //அப்போது அவர்கள் குழந்தையாய் இருந்திருப்பாரோ?//

      இப்போது மட்டும் என்ன?

      குழந்தை முகத்துடன் மட்டுமே குதூகலமாக, அந்தக் காமதேனு போலவே, தெய்வாம்சத்துடன், திவ்ய மங்கலமாக ஸ்வரூபினியாக இருப்பதாகத்தான் என் பார்வைக்குத் தெரிகிறார்கள்.

      //-இராய செல்லப்பா நியூஜெர்சி//

      இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

      அன்புடன் கோபு

      நீக்கு
  2. ஆஹா மிக அருமை.. 9 கதையையும் படிச்சு முடிச்ச உங்களுக்கு... ஒரு வைரம் பதிச்ச பேனா பரிசாக வளங்குகிறேன்.. அதுக்கு முன் வெயிட் பண்ணுங்கோ ஜெயஸ்ரீ அக்கா பணத்தை என் எக்கவுண்டுக்கு அனுப்பி வைக்கட்டும்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 7, 2017 at 2:24 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா மிக அருமை..//

      எது மிக அருமை? சரி ஏதோ ஒன்று. மிகவும் சந்தோஷம்.

      //9 கதையையும் படிச்சு முடிச்ச உங்களுக்கு... ஒரு வைரம் பதிச்ச பேனா பரிசாக வளங்குகிறேன்..//

      அது என்ன வளங்குகிறேன்? ஓஹோ ...... ’வழங்குகிறேன்’ என்பதைத்தான் தூய தமிழில் சொல்லியுள்ளீர்களோ! ’சபாஷ்!’

      எனினும் எனக்கு வைரம் பதித்த தங்களின் பரிசுப் பேனா வேண்டாம். ஏனெனில் சின்ன மீனை விட்டு விட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது போல, அடுத்ததாக வைர மூக்குத்தி, வைரத்தோடுகள், வைர நெக்லஸ், வைர மோதிரம், வைரம் பதித்த கை வளையல்கள், இடுப்பு சைஸுக்கு பிரும்மாண்டமான வைர ஒட்டியாணம் என மிகப்பெரிய லிஸ்ட் போட்டு எனக்கு உங்களால் அனுப்பி வைக்கப்படலாம். ஒவ்வொன்றின் சைஸ்களும் துல்லியமாகத் தெரியாது போனாலும், இவற்றையெல்லாம் குத்துமதிப்பாக ரேட் போட்டு நினைத்துப்பார்த்தாலே தலையைச் சுற்றுகிறது எனக்கு.

      எனவே எனக்கு வைரம் பதித்த பேனா பரிசு வேண்டாம், ப்ளீஸ்.

      //அதுக்கு முன் வெயிட் பண்ணுங்கோ .... ஜெயஸ்ரீ அக்கா பணத்தை என் எக்கவுண்டுக்கு அனுப்பி வைக்கட்டும்:).//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதானே பார்த்தேன்.

      உங்கள் ஜெயஸ்ரீ அக்காவின் ஒளிவீசிடும் வைரமான எழுத்துக்களே எனக்குப்போதும். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, எனக்குப் பரிசளிக்க இடைத்தரகர்கள் யாரும் தேவையில்லையாக்கும்.

      எது கேட்டாலும் அவர்கள் எனக்காக நேரிடையாகவே தந்துவிடும் தங்க மனஸு கொண்டவர்களாக்கும். ஹூக்க்க்க்கும்.

      நீக்கு
  3. 9 கதைகளும் மிக நன்றாக இருக்கிறதென்பது.. ரிவியூவில் தெரிகிறது.... ஜெயஸ்ரீ அக்காவுக்கு இன்றும் கண்ணுக்க குத்துதோ தெரியேல்லை.. இருப்பினும் ரைகர் பாம் பூசிக்கொண்டு ஓடிவாங்கோ... வாழ்த்துக்கள்.

    ஓவியம் மிக அழகு... அதுக்கும் டபிள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 7, 2017 at 2:29 AM

      //9 கதைகளும் மிக நன்றாக இருக்கிறதென்பது.. ரிவியூவில் தெரிகிறது....//

      ஆஹா, மிகவும் சந்தோஷம்.

      //ஜெயஸ்ரீ அக்காவுக்கு இன்றும் கண்ணுக் குத்துதோ தெரியேல்லை..//

      ஆமாம். பாவம். அவர்களுக்கு இப்போது சிலரால் கண் திருஷ்டி ஏற்பட்டு, கண்கள் கொஞ்சம் பாதிக்கப்பட்டு, ஒரே குத்து வலியாகத்தான் உள்ளது.

      தன்னைப்பற்றிய பதிவுகளில் சிலரின் பின்னூட்டங்கள் அவரை மிரள வைத்திருக்கும் என நினைக்கிறேன்.

      //இருப்பினும் ரைகர் பாம் பூசிக்கொண்டு ஓடிவாங்கோ...//

      உங்கள் பாஷையில் ’ரை = டை’ போலிருக்குது.

      கண்களுக்குள் போய் டைகர் பாம் பூசிக்கொண்டால் எப்படி அவர்களால் ஓடி வர முடியும்?

      கண்ணான கண்ணுக்கு மேலும் மிகவும் எரிச்சலாகி விடக்கூடும் அல்லவா.

      ஏதாவது போகாத ஊருக்கு வழி சொல்வதே உங்கள் வழக்கமாகிப்போச்சு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      //வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //ஓவியம் மிக அழகு... அதுக்கும் டபிள் வாழ்த்துக்கள்.//

      நியாயமாக உற்றுப்பார்த்து அந்த மிக அழகான ஓவியத்திற்கு த்ரிபிள் வாழ்த்துகள் சொல்லியிருக்கனுமாக்கும்.

      நீக்கு
  4. ///அடுத்த மின்னூல் மதிப்புரையில்
    மீண்டும் நாம் சந்திப்போம்.//

    https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTNni2PEUT0vMvbS4xwZzNdXRVU9oFuFor5uLyWZ4dtNgIUCa4rIQ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 7, 2017 at 2:29 AM

      **அடுத்த மின்னூல் மதிப்புரையில் மீண்டும் நாம் சந்திப்போம்.**

      https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTNni2PEUT0vMvbS4xwZzNdXRVU9oFuFor5uLyWZ4dtNgIUCa4rIQ

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      தலை தப்பித்தால் போதும் என்று நினைத்து, அந்த அழகிய பூனைக்குட்டி, மரம் ஏற முயற்சிக்கும் படம் வெகு பொருத்தம்தான். நன்கு ரஸித்துச் சிரித்தேன். :)

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    அறியாத மனிதர் பற்றி தங்களின் வலைத்தளத்தில் சிறப்பாக பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் ஐயா... சொல்லிய ஒவ்வொரு கருத்தும் சிறப்பு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. என்ன, வரிசையாக (மின்) நூல் விமர்சனத்தில் இறங்கி விட்டீர்கள்?

    ஜெயஸ்ரீ மேடத்துக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். May 7, 2017 at 5:56 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //என்ன, வரிசையாக (மின்) நூல் விமர்சனத்தில் இறங்கி விட்டீர்கள்? //

      கடுமையான வெயிலாக உள்ளது. ஏ.ஸி. ரூமைவிட்டு எங்கும் நகரத் தோன்றவில்லை. இந்த நேரம் பார்த்து ஜெயஸ்ரீ அவர்களின் முத்தான மூன்று நூல்கள் எனக்கு ஃப்ரீ கிஃப்ட் ஆக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

      மேலும்கூட சில மின்னூல்கள் இன்று வந்து சேரலாம் என்ற ஆவலுடன் கூடிய நடுக்கமும் எனக்கு உள்ளது. :)

      மின்னூலை ஃப்ரீ கிஃப்ட் ஆக அனுப்பியுள்ளவர்களை நன்றியுடன் மனதுக்குள் நினைத்துப்பார்த்து வாசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு வரிகளாக வாசிக்க வாசிக்க ஒவ்வொன்றும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன.

      சும்மா சொல்லக்கூடாது ... சூப்பரோ சூப்பர் ! :)

      அதனால் வரிசையாக இந்த ஜெயஸ்ரீ மேடத்தின் (மின்) நூல் மதிப்புரையில் இறங்கி, இதுவரை நான்கு பதிவுகளாக வெளியிட்டுவிட்டேன்.

      [சிலரின் நூல்களை தூக்கம் வருவதற்காக மட்டுமே நான் படிக்க ஆரம்பிப்பது உண்டு என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். முதல் பக்கம் படித்து முடிப்பதற்குள், கட்டாயமாக தூக்கம் வராத எனக்கே அவைகள் கியாரண்டியுடன் தூக்கத்தை வரவழைத்துவிடும்.

      இந்த ஜெயஸ்ரீ அவர்களின் நூல்கள் அதுபோல அல்ல. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தை மட்டுமே வரவழைக்கும் மிகத்தரமான நூல்களாகும்.]

      //ஜெயஸ்ரீ மேடத்துக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துகள் + பாராட்டுகள் + வாழ்த்துகள் அனைத்துக்கும், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
  7. தங்கள் பதிவுகள் மூலமாக மின்னூலில் வெளியானவற்றைப் பகிரும் விதம் அருமை. படிக்கும் ஆர்வத்தினை உண்டாக்குகின்றன இந்த விமர்சனங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University May 7, 2017 at 7:14 AM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //தங்கள் பதிவுகள் மூலமாக மின்னூலில் வெளியானவற்றைப் பகிரும் விதம் அருமை.//

      மிக்க மகிழ்ச்சி, ஐயா.

      //படிக்கும் ஆர்வத்தினை உண்டாக்குகின்றன இந்த விமர்சனங்கள். நன்றி.//

      படிக்கும் ஆர்வத்தினை உண்டாக்க வேண்டும் என்பதே இந்த மதிப்புரை வெளியீட்டின் நோக்கம். அதனைத் தங்களின் வாயினால் இங்கு சொல்லக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  8. நவரத்தினங்களை
    அழகிய விமர்சன ஆபரணமாய்
    கோர்த்துக் கொடுத்த விதம்
    அருமையிலும் அருமை

    நவரத்தினம் தங்கள் கைவண்ணத்தால்
    கூடுதல் மதிப்புப்பெற்றது

    கதையின் முடிச்சை அழகாய்ச்
    சுட்டிக்காட்டி,படிப்பவருக்கு
    ஆர்வமூட்டி படித்துத் தெரிந்து
    கொள்ளவேணுமாய் விட்டுப் போனது
    அருமையிலும் அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S May 7, 2017 at 7:26 AM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //நவரத்தினங்களை அழகிய விமர்சன ஆபரணமாய் கோர்த்துக் கொடுத்த விதம் அருமையிலும் அருமை.//

      ஆஹா, தங்களின் இந்த சொல்லாடல் மிகவும் அழகு. மிக்க மகிழ்ச்சி.

      //நவரத்தினம் தங்கள் கைவண்ணத்தால் கூடுதல் மதிப்புப்பெற்றது.//

      தன்யனானேன். மிகவும் சந்தோஷம், ஸார்.

      //கதையின் முடிச்சை அழகாய்ச் சுட்டிக்காட்டி, படிப்பவருக்கு ஆர்வமூட்டி படித்துத் தெரிந்து
      கொள்ளவேணுமாய் விட்டுப் போனது அருமையிலும் அருமை.//

      தங்களின் இந்தப் புரிதலுக்கு மிக்க நன்றி, ஸார்.

      //பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  9. நல்லதோர் அறிமுகம். நூலாசிரியருக்கு வாழ்த்துகள்..,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் May 7, 2017 at 7:40 AM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //நல்லதோர் அறிமுகம். நூலாசிரியருக்கு வாழ்த்துகள்....//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.

      நீக்கு
  10. காவியமும் அருமை, ஓவியமும் அழகு.
    கதை சுருக்கமே அருமையாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் ஜெயஶ்ரீக்கு.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு May 7, 2017 at 7:50 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //காவியமும் அருமை, ஓவியமும் அழகு.//

      ஆஹா .... காவியத்தலைவியும், மிகச் சிறந்த ஓவியரின் மனைவியுமான தங்கள் வாயினால் இதனைக்கேட்க, எனக்கு ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.

      //கதை சுருக்கமே அருமையாக இருக்கிறது. //

      மிகவும் சந்தோஷம், மேடம்.

      //வாழ்த்துக்கள் ஜெயஶ்ரீக்கு. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிய கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  11. விமரிசனம் நன்றாக இருக்கு. ஒவ்வொரு கதையின் ப்ளாட்டையும், அதேசமயம் கிளைமாக்ஸ் படித்துத் தெரிந்துகொள்ளும்படியாகவும் சிறப்பாக விமரிசனம் செய்துள்ளீர்கள்.

    சும்மா, படிக்காமலேயே, அங்க அங்க நுனிப்புல் மேய்ந்து ஆஹா ஓஹோ என்று வெறும் வரிகளால் எழுதாமல், நீங்கள் உணர்ந்ததை வெளிப்படுத்தியிருப்பதாகத்தான் பட்டது எனக்கு. அதிலும் ஒரு கதை உங்களை ரொம்பக் கவர்ந்துவிட்டது என்பதை, 'சபாஷ்' மூலம் தெரிவித்திருக்கிறீர்கள். ஏதேனும் கதை, கவரவில்லையாயினும் அதனையும் தெரிவித்திருப்பீர்கள். இதுதான் விமரிசனத்தின் அளவுகோல்.

    கதை ஆசிரியருக்குப் பாராட்டுகள். உங்கள் effortsக்குப் பாராட்டுகள்.

    பின்னூட்டத்திற்குப் பதில் கொடுக்கும்போதும் உங்கள் நகைச்சுவை உணர்வு மங்கவில்லை என்று தெரிகிறது. 'ஹைதிராபாத்தில் தனியாகத் தங்கினேன்' என்று சொல்லும்போது, அது 'மகிழ்ச்சியா' (அப்பாடா மனைவி கூட இல்லை), 'வருத்தமா' (வேற ஆள் யாரும் அங்க அகப்படவில்லை..சேரவில்லை என்று) என்று கணிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் May 7, 2017 at 11:45 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //விமரிசனம் நன்றாக இருக்கு. ஒவ்வொரு கதையின் ப்ளாட்டையும், அதேசமயம் கிளைமாக்ஸ் படித்துத் தெரிந்துகொள்ளும்படியாகவும் சிறப்பாக விமரிசனம் செய்துள்ளீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. எதுவுமே எனக்குத் தங்கள் வாயால் சொல்லிக்கேட்டால் ஒரு தனி இன்பம் இருக்கத்தான் செய்கிறது. :)

      //சும்மா, படிக்காமலேயே, அங்க அங்க நுனிப்புல் மேய்ந்து ஆஹா ஓஹோ என்று வெறும் வரிகளால் எழுதாமல், நீங்கள் உணர்ந்ததை வெளிப்படுத்தியிருப்பதாகத்தான் பட்டது எனக்கு.//

      ஆம் ஸ்வாமீ. பொதுவாகவே, சாதாரணமாக நான் பின்னூட்டமிடும் பதிவுகளைக்கூட படிக்கும்போது நுனிப்புல் மேய்வது கிடையாது.

      முதல் ஒருசில வரிகளே என் மனதில் ஏறாமல், படிக்க போரடித்தால், மேற்கொண்டு படிக்காமலும், பின்னூட்டமிடாமலும் போய்க்கிட்டே இருப்பேன்.

      சிறுசிறு பத்திகளாகப் பிரிக்காமலும், படங்கள் இணைக்காமலும் மொய்மொய்யென்று எதையோ எழுதிக்கொண்டே போவோரின் பதிவுகள் பக்கமே, நான் போக விரும்புவதும் இல்லை.

      ஆனால் என் வலைத்தளத்தினில், தனிப்பதிவாக விமர்சனமோ, புகழுரையோ, மதிப்புரையோ தர வேண்டிய சூழ்நிலையில், நான் முழுவதுமாக ஒரு பக்கம், ஒரு வரி, ஒரு எழுத்து விடாமல் மனதில் வாங்கிக்கொண்ட பிறகே அதில் இறங்குவது என் வழக்கமாகும்.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //அதிலும் ஒரு கதை உங்களை ரொம்பக் கவர்ந்துவிட்டது என்பதை, 'சபாஷ்' மூலம் தெரிவித்திருக்கிறீர்கள்.//

      ஆம். அந்தக்கதை என்னை மிகவும் கவர்ந்துள்ளதில் வியப்பேதும் இல்லை. வீட்டுக்கு வீடு அன்றாடம் நடக்கும் சிறுசிறு சம்பவங்கள்தான். அதைத்துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்திருப்பதுதான் ஆச்சர்யமாகும்.

      உதாரணமாக அந்த இல்லத்தலைவிக்கு ஒரு நாள் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது. வீட்டிற்குள் வேறு அறையில் இருக்கும் தன் மகனை ஏதோவொரு சிறிய உதவிக்காக அழைக்க நினைக்கிறாள்.

      மொபைலில் தான் கூப்பிட வேண்டியதாக உள்ளது.

      வெகு நேரமாக ”தாங்கள் பேச விரும்பும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்” என்ற குரலே வந்துகொண்டு இருக்கிறது. ஒரு தாய்க்கு இதைவிட வேறு என்ன கஷ்டம் வேண்டும்? மனம் நொந்து போகிறாள்.

      அதுபோல ஹாலில் ஓடிவரும் டி.வி. சப்தம் பலமாகக் கேட்பது நோயாளியான இவளின் காதுகளுக்கு எரிச்சலாகி, டி.வி. பார்க்கும் தன் மகளை பலமுறை அழைத்துப் பார்க்கிறாள். அவள் காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை. பிறகு ஒரு வழியாக எழுந்து வந்தவள், தன் தாய் இருக்கும் ரூம் கதவைப் படாரென்ற சத்தத்துடன் அழுத்தி அறைந்து சாத்தி விட்டுப் போகிறாள். இந்த வரிகளைப் படிக்கும் போதே மிகவும் கொடுமையாக உள்ளது.

      இரவு சமையலே செய்ய முடியாத நிலையில் இருக்கும் அந்தத்தாயை, பசி எடுத்த பிறகு மட்டும் இந்த மகனும் மகளும் அணுகி சாப்பாடு என்ன ஆச்சு? எனக் கேட்கிறார்கள். சமையல் செய்யவே இல்லை என்று தெரிந்தபிறகு தாய்க்கு அருகே இருக்கும் பணக் கட்டு ஒன்றிலிருந்து சில நோட்டுக்களை உருவி எடுத்துக்கொண்டு ஹோட்டலில் சாப்பிட ஓடுகிறார்கள்.

      கண்டுகொள்ளாத கணவனும், இதுபோன்ற பொறுப்பற்ற பிள்ளைகளும் இருந்தும் அவளுக்கு எந்தப்பயனும் இல்லாமல் உள்ளது என்பதைப் படிக்க வருத்தமாகவே உள்ளது. இன்றைய எவ்வளவோ வீடுகளின் நிலையும் இது மட்டுமே தான்.

      அதனால் மிகவும் யதார்த்தமான இந்தக்கதை என்னை மிகவும் கவர்ந்துள்ளதில் ஆச்சர்யமே ஏதும் இல்லை.

      //ஏதேனும் கதை, கவரவில்லையாயினும் அதனையும் தெரிவித்திருப்பீர்கள். இதுதான் விமரிசனத்தின் அளவுகோல்.//

      ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் கவரத்தான் செய்கிறது என்றாலும், சில கதைகளும், அதில் வரும் நிகழ்வுகளும், சம்பவங்களும் மறக்கவே முடியாதபடிக்கு மனதில் தைத்து விடுகின்றன. அதுதான் எழுத்தாளர்களின் வெற்றி என்று நாம் சொல்ல வேண்டும்.

      //கதை ஆசிரியருக்குப் பாராட்டுகள். உங்கள் effortsக்குப் பாராட்டுகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

      //பின்னூட்டத்திற்குப் பதில் கொடுக்கும்போதும் உங்கள் நகைச்சுவை உணர்வு மங்கவில்லை என்று தெரிகிறது.//

      அந்த நகைச்சுவை உணர்வு என்றுமே மங்கக்கூடாது ஸ்வாமீ. அதுதான் பெரும்பாலும் எனக்குள்ள ஒரே பலம். :)

      சில சமயங்களில் அதுவே என் பலகீனமாகவும் ஆகிவிடுவது உண்டு. :(

      //'ஹைதராபாத்தில் தனியாகத் தங்கினேன்' என்று சொல்லும்போது, அது 'மகிழ்ச்சியா' (அப்பாடா மனைவி கூட இல்லை), 'வருத்தமா' (வேற ஆள் யாரும் அங்க அகப்படவில்லை..சேரவில்லை என்று) என்று கணிக்க முடியவில்லை.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! கணிக்க முடியாத அதனை இப்போதைக்கு மறந்து விடுங்கோ, ஸ்வாமீ.

      ஹைதராபாத்துக்கு என்னைப்போலவே அன்று வந்திருந்தவர்கள் ஒரு 50-60 பேர்கள் இருக்கும். பலமொழிகள் பேசியவர்கள். பல மாநில BHEL Units களிலிருந்து வந்திருந்தார்கள். 90% ஆண்கள் மட்டுமே. ஒரு 10% பெண்களும் உண்டு.

      திருச்சி யூனிட்டின், பல்வேறு இலாகாக்களிலிருந்து நாங்கள் 14 ஆண்களும், ஒரு பெண்ணுமாக ஆக மொத்தம் 15 நபர்கள் புறப்பட்டுச் சென்றிருந்தோம். எங்கள் அனைவரின் புகைப்படங்களும் இதோ இந்தப்பதிவினில் உள்ளன:

      http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    4. ஹா ஹா ஹா நெல்லைத் தமிழனும் கோபு அண்ணனை உசுப்பேத்தி விட்டு.. முசுப்பாத்தி பார்க்கக் கிளம்பிடுறார்.. ஆனாலும் அவர் இப்போ ரொம்ப ஷார்ப் ஆகிட்டாராக்கும்:)... மிக நிதானமாக ஓசிச்சு ஓசிச்சே பதில் சொல்றார் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    5. athira May 7, 2017 at 3:10 PM

      //ஹா ஹா ஹா நெல்லைத் தமிழனும் கோபு அண்ணனை உசுப்பேத்தி விட்டு.. முசுப்பாத்தி பார்க்கக் கிளம்பிடுறார்.. ஆனாலும் அவர் இப்போ ரொம்ப ஷார்ப் ஆகிட்டாராக்கும்:)... மிக நிதானமாக ஓசிச்சு ஓசிச்சே பதில் சொல்றார் ஹா ஹா ஹா:)..//

      :))))) தங்களின் இந்தப் புரிதலுக்கு நன்றி. :)))))

      நீக்கு
  12. வித்தியாசமான கருக்கள். கதைச்சுருக்கம் மேலும் படிக்க வேண்டும் என ஆவலைத் தூண்டுகின்றது. அவள் வாழ்வு அப்படித்தான் கதைச்சுருக்கம் மிகவும் என்னைக் கவர்ந்தது. ஓவியத்திறமையும் அவருக்கிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி. ஆசிரியர் ஜெயஸ்ரீக்கு வாழ்த்துகள்! கதையைச்சுருக்கமாகக் கொடுத்து முடிவை அறிந்து கொள்ளும் ஆவலை ஏற்படுத்தும் உங்கள் விமர்சனத்துக்குப் பாராட்டுகள். நன்றி வணக்கம் கோபு சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி May 7, 2017 at 11:50 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //வித்தியாசமான கருக்கள். கதைச்சுருக்கம் மேலும் படிக்க வேண்டும் என ஆவலைத் தூண்டுகின்றது.//

      கதைச்சுருக்கம் மேலும் படிக்க வேண்டும் என ஆவலைத் தூண்டுகின்றது எனத் தாங்களே சொல்லியுள்ளது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.

      //அவள் வாழ்வு அப்படித்தான் கதைச்சுருக்கம் மிகவும் என்னைக் கவர்ந்தது.//

      கதையின் தலைப்பு: ’அவள் வாழ்வு அவ்வளவுதான்’ மேடம். தங்களையும் கவர்ந்துள்ளது கேட்க மிகவும் சந்தோஷம் மேடம்.

      //ஓவியத்திறமையும் அவருக்கிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி.//

      இதுவிஷயம் அவர்கள் எனக்கு, சமீபத்தில் அனுப்பி வைத்திருந்த ‘காமதேனு’ படம் மூலமே நானும் அறிந்து மகிழ்ந்தேன், மேடம்.

      //ஆசிரியர் ஜெயஸ்ரீக்கு வாழ்த்துகள்! கதையைச்சுருக்கமாகக் கொடுத்து முடிவை அறிந்து கொள்ளும் ஆவலை ஏற்படுத்தும் உங்கள் விமர்சனத்துக்குப் பாராட்டுகள். நன்றி வணக்கம் கோபு சார்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  13. ஒன்பது கதைகளும் அதற்கான மதிப்புரைகளும் அருமை ...
    வாழ்த்துக்கள் நூலாசிரியர் ஜெயஸ்ரீ அவர்களுக்கு மற்றும் ட்ரெய்லர் போட்டு அசத்திய கோபு அண்ணாவுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin May 7, 2017 at 7:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒன்பது கதைகளும் அதற்கான மதிப்புரைகளும் அருமை ...//

      மிகவும் சந்தோஷம்.

      //வாழ்த்துக்கள் நூலாசிரியர் ஜெயஸ்ரீ அவர்களுக்கு மற்றும் ட்ரெய்லர் போட்டு அசத்திய கோபு அண்ணாவுக்கும்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், ட்ரெய்லர் போட்டுக் காட்டி அசத்தியதைப் பொறுமையாக பார்த்ததற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  14. "பாவை விளக்கின் ஒளிச் சிதறல்கள் " என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு
    இந்நூலாக வெளிவந்து இன்னும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை....அதற்குள் அந்தக்
    கதைகள் "நவ மணிகள்" அந்தஸ்திற்கு உயர்த்தி விட்டு அவரது வலைப்பூவில்
    'செண்டாக" கட்டி வைத்துக் கொண்டுள்ளார். சந்தோஷம் . கோபு ஸார் , தங்களின்
    இந்த அபார சாதனைக்கு (ஒரு கதை படிப்பதே....மிகப்பெரிய விஷயம்...- அதிலும்
    நான் எழுத்தில் நிறையவே எண்ணிப் பார்க்கும் படியாக தவறுதல் செய்வேன்...
    என் தோழி சொல்வார் " நன்றாகச் சாப்பிடும் போது வாயில் கடக் கென்று கல்
    அகப்பட்டுத் தூளாவது போல" இருக்கு....ஒழுங்கா தவறில்லாமல் எழுது, அது
    தான் சிறந்த எழுத்தாளருக்கான லட்சணம் என்று. சரி...என்று கேட்டுக் கொள்வேன்.
    இருந்தாலும், அங்கங்கே கல்...சரியாக களைய மாட்டேன். இது போல் இருக்கும்
    நிஜத்தில் என் நிலை. இதில், ஒரு முறை கூட நீங்கள் , எழுத்துக்கள் நிரடுகின்றன ..
    என்று சொன்னதில்லை. எனக்குள் ஆச்சரியம் தான்.நீங்களே சரியாக உச்சரித்துக்
    கொண்டிருப்பீர் என்று எண்ணிக் கொள்வேன். இப்போதும் அதே தான்....இத்தனை
    தவறுகள் இருக்கும் கதைகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் "உயரம்" அதிகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மின்னூல்களில் எனக்குத்தெரிந்து எழுத்துப்பிழைகள் ஏதும் என் கண்களில் படவேயில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நானே குறிப்பிட்டுச் சொல்லியிருந்திருப்பேன்.

      மேலும் அப்படியே நம்மையறியாமல் ஒன்றிரண்டு இருந்தாலும் அதில் ஒன்றும் பெரிய தப்பு இல்லை. இது எல்லோருக்குமே சகஜமாக ஏற்படக்கூடியது மட்டுமே. கவலைப்படாதீங்கோ, ஸ்ரீ மேடம்.

      //கல்...சரியாக களைய மாட்டேன். இது போல் இருக்கும் நிஜத்தில் என் நிலை. இதில், ஒரு முறை கூட நீங்கள், எழுத்துக்கள் நிரடுகின்றன .. என்று சொன்னதில்லை.//

      உள்ளன்புடன் ’ஸ்ரீ’ போன்ற ஒருவர் உணவு சமைத்து பரிமாறும் போது, அந்தக் கல்லும் கரைந்து சாதம் போலவே வெந்து போய்விடுமோ என்னவோ! :)

      நீக்கு
  15. நான் வலைப்பூ பாவை விளக்கை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
    எனது எண்ணங்களும் , ரசனைகளும் வசிக்கும் இணைய வீடாக
    காற்றோட்டமாகவே கட்டி வைத்தேன்.சமீபமாக பதிவில்லாமல்
    பாழடைந்து போனது.எனது எழுத்துக்களுக்கு புதிய அங்கீகாரமும் அலங்காரமும்
    சமீபமாகக் கிடைப்பது உங்களின் வலைப்பூவில் தான்.அதுவும் தங்களின் பதிவுகள் மூலமாகத்தான்.
    உங்கள் பதிவுகளைக் கண்டவுடன், அநேகமாக எவரும் நினைத்துக் கொள்வார்கள்....."இவர்கள் ஒருவருக்கொருவர்
    மிகவும் தெரிந்தவராக இருப்பார்களோ " என்று,அப்படி நினைப்பதில் ஆச்சரியமும் இல்லை.
    இருப்பினும், எனக்குள் ஆச்சரியம், உங்களுக்கு என்னைத் தெரியாது, பார்த்ததோ, பேசியதோ,
    இல்லை. எனக்குத் தெரிந்து தங்களின் பின்னூட்டப் போட்டிக்கு ஒரு அழைப்பு மடல் வந்ததைத்
    தொடர்ந்து பின்பு 2 வருடங்கள் கழித்து இந்த மின்னூல் எழுத்துக்கள் மூலமாக
    கணினியில் கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டோம்.
    அதன் முன்பு தங்களின் பல கட்டுரைகள்/ கதைகள் "தங்களின் தகவலுக்காக மட்டும் " என்று அனுப்பித் தந்திருக்கிறீர்.
    நானும் படித்துப் பாராட்டி இருக்கிறேன்.தங்களின் எழுத்துக்கள் அபார விஷய ஞானம் கொண்டவை.
    என்னால், தங்களின் எந்தப் பரிசுப் போட்டியிலும் கலந்து கொள்ள இயலவில்லை. இருந்தும் தற்போது தாங்கள் எனது
    கதைகளை விமரிசனம் செய்து அதற்காக நேரம் செலவிட்டு எழுதி வருவதைக்
    காணும் போது மனம் நெகிழ்கிறது.தங்களின் வலைப்பூவை வலம் வந்தால், புரிகிறது...
    உணர முடிகிறது. எத்தனை மனங்கள்.....எத்தனை கால்தடங்கள்...!!! சில கோவில்களில்
    தான் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்....என்பதன் நிஜங்களைக் கண்டேன். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் பதிவுகளைக் கண்டவுடன், அநேகமாக எவரும் நினைத்துக் கொள்வார்கள்..... "இவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் தெரிந்தவராக இருப்பார்களோ" என்று; அப்படி நினைப்பதில் ஆச்சரியமும் இல்லை.//

      ஆம். இதை நானும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

      //இருப்பினும், எனக்குள் ஆச்சரியம், உங்களுக்கு என்னைத் தெரியாது, பார்த்ததோ, பேசியதோ, இல்லை.//

      உண்மையான எழுத்துலக நட்புக்கு ஒருவரையொருவர் நேரில் பார்த்துத்தான் ஆகணும், பேசித்தான் ஆகணும் என்பது அவசியமே இல்லை என்று நினைப்பவன் நான். In fact அவ்வாறு ஒருவேளை நேரில் சந்தித்தோம், பார்த்தோம், பேசினோம் என்றால் இப்போதுள்ள தூய்மையான எழுத்துலக நட்பு என்பது மேலும் இப்போதுபோலவே நீடிக்குமா என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது மேடம். நட்பு கூடினாலும் கூடலாம். அது குறைந்தும் அல்லது சுத்தமாக மறைந்தும் போனாலும் போகலாம். இதெல்லாம் என் சொந்த அனுபவத்திலேயே நான் பார்த்துள்ளதால் இங்கு உங்களுக்கும் சொல்லியுள்ளேன்.

      //தங்களின் வலைப்பூவை வலம் வந்தால், புரிகிறது...
      உணர முடிகிறது. எத்தனை மனங்கள்..... எத்தனை கால்தடங்கள்...!!! சில கோவில்களில் தான் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்....என்பதன் நிஜங்களைக் கண்டேன். மகிழ்ச்சி.//

      01.01.2016 முதல் இந்த வலைத்தளமாகிய என் கோயிலுக்கு நான் மிகப்பெரிய பூட்டாகப்போட்டு பூட்டியே விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

      நடுவில் சில V.I.Ps களுக்காக பூட்டப்பட்ட பெரிய கதவின் நடுவே உள்ள சிறிய கதவு மட்டும் திறக்கப்பட்டு ஸ்பெஷல் அனுமதி அளிக்கப்பட்டது.

      இருப்பினும் என் கோயிலுக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்த பக்தர்கள் கூட்டம் 2011 முதல் 2015 வரை இருந்த அளவுக்கு, இப்போதெல்லாம் இல்லவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

      இப்போது இந்த மின்னூல்களால், கும்பாபிஷேகம் நடந்த கோயில் போல நினைத்து, ஒருசிலர் மட்டுமே இங்கு இப்போது வருகை தந்துள்ளனர்.

      அதிலும் எனக்கு மகிழ்ச்சியே.

      நீக்கு
  16. இரண்டு வருடங்கள் முன்பு, எனது நெருங்கிய சினேகிதி பிரபல எழுத்தாளர்
    ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் , தன்னிடமிருந்து ஒரு மஹா பெரியவாளின் அமர்ந்த நிலையிலிருந்த
    படத்தை ஒரு பத்து நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு மிகவும் அன்புடன், இந்தப் புகைப்படம் பெரியவா பார்க்க
    சென்றபோது தேனம்பாக்கம் என்ற இடத்தில் 1977-ல் கிடைத்தது. அப்போதிலிருந்து பத்திரமாக
    வைத்திருக்கிறேன். இந்த அவரது அருள் இன்று முதல் உனக்கும் கிடைக்கட்டும் என்று சொல்லி
    தந்தார்கள். இது நடந்தது 2014-இல். அதன் பிறகு (அதன் முன்பே பெரியவா தரிசனம், ஆசீர்வாதம் கிடைத்திருந்தும்)
    எனது தேடல் அதிகமானது. நிறைய காணொளி , பெரியவாளின் அனுக்கிரஹம் பற்றிய சிந்தனைகள் என்று
    நிறையவே ஆன்ம விசாரம் , நிச்சயமாக தங்களது வலைப்பூவில் எனது எழுத்துக்கள்...கூட "பெரியவாளின்"
    ஆசீர்வாதம் என்று தான் நம்புகிறேன். நீங்கள் நிறைய அவரைப் பற்றி எழுதி இருப்பதை அறிந்து ஆனந்தம்
    அடைகிறேன். ஒரு மஹா பெரியவா அனுக்கிரஹம் கிடைப்பது மிகப் பெரிய பேறு . நடப்பதில் என் பங்கு
    ஒன்றுமே இல்லை. அனைத்தும் பரமாச்சார்யாள் அனுக்ரஹம். அனைத்து எழுத்துச் சிற்பிகளையும்
    சிறப்பித்து அறிமுகம் செய்து வைக்கும் நீங்கள் ஒரு தன்னலம் கருதாத ஆத்மசுத்தி கண்டவர்.
    வாழ்த்துக்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத, எழுதாத வெள்ளை மனம் கொண்டவர்.
    எனக்குத் தெரிந்தது இவ்வளவு தான். தங்களின் இந்த சேவை வளரட்டும். தளைக்கட்டும் .பலர்
    உங்கள் மூலம் புகழ் பெறட்டும். "கோடித் தாமரைகள் மலர ஒரே சூரியன்" ....போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பக்தை என்பதை அறிந்ததில் என் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது மேடம்.

      நம் இருவரின் தூய்மையான அன்புக்கும் நட்புக்கும்கூட அந்த மஹானின் கருணையே காரணமாக இருக்கலாம்.

      சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. எல்லாம் அவர் செயல். அவரை மட்டும் உறுதியாக நம்பியுள்ளோருக்கு சகல க்ஷேமங்களும் ஏற்படும், மேடம்.

      நீக்கு
  17. இதோ...இந்த மின்னூல் மதிப்புரைக்கு வருகை தந்து சிறப்பித்த எனது அன்பானவர்கள்
    ஒவ்வொருவருக்கும் இதன் வாயிலாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பின் இராய செல்லப்பா அவர்களுக்கு,
    நான் பிறந்தது மதுரை. என் தந்தையார் ஹைதராபாத்தில் ரயில்வேயில் வேலை பார்த்தவர்.
    திருமணம் ஆகி 1987 லிருந்து ஹைதராபாத்தில் வசிக்கிறேன். மகனின் படிப்புக்காக (அண்ணாமலை பல்கலைக்கழகம்)
    4 வருடங்கள் 2009 - 2013வரையில் சிதம்பரத்தில் வாழும் பாக்கியம் பெற்றேன்.'காமதேனு' எனது தேவதை.
    அவளின் அருள் மழை அளப்பரியது. தங்களின் கேள்விக்கும் கோபு ஸார் அவரது பதிலையும் படித்ததும்
    சிரிப்பு தான் வந்தது. அவரது கற்பனை குதிரைக்கு இறக்கைகளும் இருக்குமோ?...ரொம்பத் திகட்டுகிறது.
    கூடவே பயமாகவும் இருக்கிறது.

    அன்பின் கோபு ஸார் ,

    நான் ஏற்கனவே "சக்கரை' அதிகமாகி அவதி படறேன் ,,,நீங்க கொடுக்கிற காப்பியில் இவ்வளவு சக்கரையை அதிகமாகப்
    போட்டால்....? நான் தான் கஷ்டப்படுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //'காமதேனு' எனது தேவதை. அவளின் அருள் மழை அளப்பரியது. தங்களின் கேள்வியையும் கோபு ஸார் அவர்களின் பதிலையும் படித்ததும் சிரிப்பு தான் வந்தது.//

      சிரித்து வாழ வேண்டும்.

      //அவரது கற்பனை குதிரைக்கு இறக்கைகளும் இருக்குமோ?...//

      இறக்கைகள் உண்டு ..... காமதேனு போலவே :)

      //ரொம்பத் திகட்டுகிறது. கூடவே பயமாகவும் இருக்கிறது.//

      பயப்படாதீங்கோ மேடம்.

      //அன்பின் கோபு ஸார், நான் ஏற்கனவே "சக்கரை' அதிகமாகி அவதி படறேன் ... நீங்க கொடுக்கிற காப்பியில் இவ்வளவு சக்கரையை அதிகமாகப்
      போட்டால்....? நான் தான் கஷ்டப்படுவேன்.//

      நீங்களும் எங்களைப் போலவே மிகவும் தித்திப்பானவரா? அப்படியானால் உங்களை ஒருபோதும் நான் கஷ்டப்படவே விடமாட்டேன். கவலைப் படாதீங்கோ. நம் எல்லோரையும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா காப்பாற்றுவார்.

      நீக்கு
  18. அன்பின் அதிரா,

    கதையைப் படித்ததற்கு "வைரம் பதித்த பேனா.....ஆஹா உங்கள் மனம் எனக்கு இல்லையே...!ஒரு வார்த்தைக்குக் கூட
    நான் சொல்லவில்லையே. இருந்தும் , உங்கள் நகைச்சுவையை ரசிக்கிறேன். அதற்குத் தந்துள்ள பதிலில் தான்
    எத்தனை நம்பிக்கை என்மீது. நானே இங்கே.."தருமி"...!
    எனது கண்கள் தேவலை ஆதிரா. தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். ஓவியத்தை ஒப்புக்கொண்டதற்கு
    மகிழ்ச்சி அதிரா .
    "கண் திருஷ்டி" யெல்லாம் ஒன்றுமில்லை. நானே ஒரு திருஷ்டி பூசணிக்காய்...! ஆஹா..டைகர் பாம்...கண்வலிக்கா...?
    இது எந்த ஊரில்.....!!!! இருப்பினும் உங்கள் அன்பிற்கு எனது நன்றிகள் அதிரா.

    அன்பின் கவிஞர் ரூபன் அவர்களுக்கு,

    சரியாகச் சொன்னீர்கள். இது போன்ற குணம் கொண்டவரைப் பார்ப்பது அரிது. தங்களின் கருத்தத்துக்கு மிக்க நன்றி.

    அன்பின் ஸ்ரீ ராம் அவர்களுக்கு,

    தங்களின் மேலான பாராட்டுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    கோபு ஸார் , ஏதோ புத்தகத்தை 'அட்டைப்படத்தைப் பார்த்தோமா....அப்படியே கிடப்பில் போட்டமோ என்று இருந்திருந்தால்
    இந்த பயம் வந்திருக்காது. என்ன செய்ய...? தவளையின் நிலை தங்களுக்கு...! மன்னிக்கவும். தங்களின் ஹாஸ்யக் காற்று...
    கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பியிருக்கு. ஓ ...சொல்லிட்டேள் இல்லையா....இதோ....அடுத்ததை அனுப்ப தயாராயிட்டேன்.

    மதிப்பிற்குரிய திரு. ஜம்புலிங்கம் அவர்கட்கு,
    வணக்கங்கள். இதற்கு முன்பு கூட தாங்கள் கோபு ஸார் மூலமாக அறிந்து கொண்டு பாவை விளக்கிற்கு வருகை
    தந்தீர்கள். நினைவில் உள்ளது.அறிமுகப் படுத்தாவிடில் என்னைப் போன்ற அறிமுக எழுத்தாளர்களுக்கு முகவரி
    கிடைத்த்திருக்காது.

    அன்பின் ரமணி அவர்களுக்கு,

    இருட்டில் கிடந்த மணிகளின் மீது வெளிச்சம் பட்டிருக்கிறது.
    தன்னொளி தாண்டி தண்ணொளி வீசுகிறது.
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

    அன்பின் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு,

    வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    அன்பின் கோமதி அரசு அவர்களுக்கு,

    தங்களின் பாராட்டுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அன்பின் நெல்லைத்தமிழன் அவர்களுக்கு,

    தங்களின் கருத்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

    அன்பின் அதிரா....
    என்ன புரிதலோ....எனக்கு ஒன்றும் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  19. அன்பின் ஞா.கலையரசி,
    தங்களின் மனமார்ந்த நல்ல பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    நேரம் கிடைக்கையில் கதைகளை படியுங்கள். தங்களின் கதைகளையும்
    நான் படிக்க வேண்டும். தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    எனது மின்னூல் அறிமுகத்திற்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,
    கதைகளை பொறுமையாகப் படித்து விமரிசித்து படம் படமாகப் போட்டு
    அறிமுகம் செய்து வைத்த இணைய பிரபல எழுத்தாளர்.கோபு ஸார் அவர்களுக்கு
    தலைவணங்கி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.


    அன்பின் ஏஞ்சலின் அவர்கட்கு,

    தங்களது வருகையிலும் , அன்பான பாராட்டிலும் மகிழ்கிறேன்.
    உளமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் மேடம், வணக்கம்.

      தங்களுக்கு கண் உபாதைகளும், உறுத்தல்களும் இருப்பினும் இங்கு வந்து அனைவருக்கும், அவர்களின் பின்னூட்டங்களுக்கு தாங்கள் நன்றிகூறி, ஒட்டு மொத்தமாக இப்படி மறுமொழி இட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியே.

      இருப்பினும் அவரவர்களின் பின்னூட்டங்களுக்கு அடியே உள்ள REPLY என்பதைக் க்ளிக் செய்து அவரவர்களுக்குத் தனித்தனியே பதில் கொடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். இந்தப்பதிவின் பின்னூட்டப்பகுதியினைப் பார்க்கவும் மேலும் அழகாக அது அமைந்திருக்கும்.

      சரி, பரவாயில்லை. இனி செய்வதை அதுபோலச் செய்யுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ். இதற்கு முந்திய பதிவுக்கும் தாங்கள் இன்னும் சிலரின் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது. அவசரம் இல்லை. தங்களுக்கு செளகர்யப்பட்டபோது, அவர்களுக்காவது தனித்தனியே பதில் அளிக்கவும்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  20. எனது பேரன்புக்கும் பாசத்திற்கும் உரிய
    திருமதி. ஜெயஸ்ரீ மேடம்,

    இனிய காலை வணக்கங்கள்.

    தாங்கள் நேற்று இரவு பேரன்புடன் எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ள தங்களின் நான்காவது மற்றும் ஐந்தாவது மின்னூல்களான

    4) காய்க்காத மரமும் .....
    5) டெளரி தராத கெளரி கல்யாணம்

    ஆகிய இரண்டும் கிடைக்கப்பெற்றேன். புதையல் பொக்கிஷங்கள் கிடைத்தது போல பெருமகிழ்ச்சி அடைந்தேன்.:)))))

    இதற்கெல்லாம் தங்களுக்கு நான் எப்படித்தான் என் நன்றிக் கடனைச் செலுத்தப் போகிறேனோ .... எனக்குத் தெரியவில்லை.

    ’அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ என்று சொல்லுவார்கள் சிலர்.

    இதை வைத்தே ‘தை வெள்ளிக்கிழமை’ என்ற தலைப்பினில் நான் ஒரு சிறுகதை வெளியிட்டுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html

    அதுபோலவே எனக்குத் தாங்கள் அனுப்பியுள்ள அஞ்சாவது மின்னூலான ’டெளரி தராத கெளரி கல்யாணம்’ என்பதும்.

    ஏற்கனவே பலமுறை நான் இதனைப் படித்து பரவஸம் அடைந்துள்ளேன். மீண்டும் மின்னூலில் ஒருமுறை வாசிக்கவும் உள்ளேன். என்னால் என்றும் மறக்கவே முடியாததோர் அருமையான காவியமாகும் அது.

    சும்மா ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் நன்கு கற்சிலை போல செதுக்கி உருவாக்கி, பேசவும் நடமாடவும் விட்டுள்ளீர்கள் அந்த முழு நாவலில்.

    மேலும் நமது நட்புக்கு ஓர் நல்ல இணைப்புப் பாலமாக அமைந்து போனதும் அந்தக்கதை மட்டுமே என்பதை தங்களுக்கு இப்போது இங்கு நினைவூட்டி மகிழ்கிறேன்.

    என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.

    மென்மேலும் தங்களால் பல மின்னூல்கள் வெளியிடப்பட வேண்டும் என்பதே என் ஆவல். அதற்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயஸ்ரீ மேடம்.

    என்றும் அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  21. அன்பின் கோபு ஸார் ,

    மனமார்ந்த நன்றிகள். மேலும் இரண்டு மின்னூல் வெளிவந்திருந்த நிலையில்,
    1.காய்க்காத மரம்....மற்றும் டௌரி தராத கௌரி கல்யாணம் இந்த இரு
    மின்னூலையும் தங்களுக்கு அனுப்பியிருந்ததை மிகவும் அன்புடன்
    வெளியிட்டிருந்தீர்கள். தங்களின் அன்பிற்கு நன்றி.
    ஆம்..இதற்கு முன்பே டௌரி தராத கௌரி கதை பற்றி என்னிடம்
    நிறையவே சொல்லியிருக்கிறீர். நான் மறக்கவில்லை. அந்தக் கதை
    எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்திருக்கும்....நான் நேரில் கண்ட
    பல விஷயங்களின் தொகுப்பு. முக்கால்வாசி நிஜத்தின் தழுவல்.
    எனக்கும் அந்தக் கதை மின்னூலாக வந்தது பெரும் நெகிழ்ச்சியைத்
    தந்தது.'வாழ்வின் திருப்பங்கள் , விருப்பங்களைத் தாண்டி அமைந்து விடும்'
    வருவதை பாக்கியமாகவே ஏற்றுக் கொள்ளவேண்டும்... என்பதன்
    சாரம் தான் கதை முழுதும் நகரும்.

    தங்களின் மேலான கருத்துக்களுக்கும், பாராட்டுகளும், அன்பிற்கும்,
    வாழ்த்துக்கும் சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்கி எனது நன்றியைத்
    தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது மற்றும் தங்களின் நண்பர்கள்
    நலம் நாடும் அன்பர்கள் யாவருக்கும் எனது மனமுவந்த நன்றிகளைத்
    தெரிவித்த்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  22. திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் ‘பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ என்ற மின்னூலில் உள்ள ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு திருப்பம்/ சஸ்பென்ஸ் இருக்கிறது என்று தங்களின் திறனாய்வு மூலம் சொல்லி அதை படித்து தெரிந்துகொள்ளும் ஆவலை எங்களைத் தூண்டிவிட்ட தங்களுக்கு பாராட்டுகள்.

    ஒன்பது கதைகளும் வெவ்வேறு கருப்பொருளை கொண்டிருப்பதால் அவைகள் நவரத்தினங்கள் தான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ‘விஸ்வநாதன் வேலை வேண்டாம்’ என்ற கதையில் ‘அதி நவீன அசர வைக்கும் கண்ணாடிப் புடவை கட்டிக்கொண்ட பிரும்மாண்ட கட்டடத்தைப் பார்த்ததும், இதயம் லப்-டப் எனத் துடிப்பதை மறந்து அதன் அழகில் மயங்கிப்போனது.’ என்ற வரிகளையும் “என் பொண்ணு மைதிலிக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சுருக்கு. இன்னிக்குக் குழந்தை ப்ளைட்ல கிளம்பிண்டு இருக்கா” என்று கடுப்பேத்தி விட்டுப்போனதும்.... வாயில் வைத்த மைசூர்பாக் கூட கசந்து வழிகிறது அவனுக்கு. ‘ என்ற வரிகளையும் தங்களைப்போலவே நானும் இரசித்தேன்!

    அருமையான படைப்பத் தந்த திருமதி ஜெயஸ்ரீ அவரக்ளுக்கு வாழ்த்துகள்! எழுத்தோடு ஓவியத்திலும் தனது திறமையை வெளிபடுத்தும் அவருக்கு பாராட்டுகளும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி May 9, 2017 at 12:11 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் ‘பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ என்ற மின்னூலில் உள்ள ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு திருப்பம் / சஸ்பென்ஸ் இருக்கிறது என்று தங்களின் திறனாய்வு மூலம் சொல்லி அதை படித்து தெரிந்துகொள்ளும் ஆவலை எங்களைத் தூண்டிவிட்ட தங்களுக்கு பாராட்டுகள். //

      படித்துத் தெரிந்துகொள்ளும் ஆவல் தூண்டப்பட்டுள்ளதாகத் தாங்கள் சொல்லியுள்ளதற்கும், தங்களின் இந்தப் பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி ஸார்.

      //ஒன்பது கதைகளும் வெவ்வேறு கருப்பொருளை கொண்டிருப்பதால் அவைகள் நவரத்தினங்கள் தான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.//

      ஆஹா, நவரத்தினம் போன்று ஒளிரும் தங்களின் இந்தக் கருத்துக்களுக்கும் மிகவும் சந்தோஷம், ஸார்.

      // ‘விஸ்வநாதன் வேலை வேண்டாம்’ என்ற கதையில் ‘அதி நவீன அசர வைக்கும் கண்ணாடிப் புடவை கட்டிக்கொண்ட பிரும்மாண்ட கட்டடத்தைப் பார்த்ததும், இதயம் லப்-டப் எனத் துடிப்பதை மறந்து அதன் அழகில் மயங்கிப்போனது.’ என்ற வரிகளையும் “என் பொண்ணு மைதிலிக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சுருக்கு. இன்னிக்குக் குழந்தை ப்ளைட்ல கிளம்பிண்டு இருக்கா” என்று கடுப்பேத்தி விட்டுப்போனதும்.... வாயில் வைத்த மைசூர்பாக் கூட கசந்து வழிகிறது அவனுக்கு. ‘ என்ற வரிகளையும் தங்களைப்போலவே நானும் இரசித்தேன்! //

      ஆஹா. தாங்களும் என்னைப்போலவே இந்த வரிகளை மிகவும் இரசித்துள்ளீர்கள் என்பதை உணர்ந்து எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.

      இதுபோல ஆங்காங்கே இவர்கள் எழுதியுள்ள சிலவரிகளில்தான் நானும் சற்றே, என்னையறியாமல் மயங்கிப்போய் விடுகிறேன். அதுவே இவர்களின் தனிச்சிறப்பாக உள்ளன.

      //அருமையான படைப்பத் தந்த திருமதி ஜெயஸ்ரீ அவரக்ளுக்கு வாழ்த்துகள்! எழுத்தோடு ஓவியத்திலும் தனது திறமையை வெளிபடுத்தும் அவருக்கு பாராட்டுகளும் கூட! //

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், படைப்பாளியை
      மனம் திறந்து பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. அன்பின் வே.நடனசபாபதி அவர்களுக்கு,

      தங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு எனது உளமார்ந்த
      நன்றிகள்.
      வீட்டில் பல வேலைகள், பொழுதே கிடைப்பதில்லை...
      எழுதுவதற்கும், நன்றி நவில்வதற்கும்....தாமதமான
      பதிலுக்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

      நீக்கு
  23. அடடா! இந்த பதிவுக்கு நான் பின்னூட்டம் இட வில்லையே.


    அருமையான சிறுகதைகள் எழுதிய திருமதி ஜெயஸ்ரீ அவர்களைப் பாராட்டுவதா

    ஒவ்வொரு கதைக்கும் அருமையாக விமர்சனம் எழுதும் கோபு அண்ணாவைப் பாராட்டுவதா.

    மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 12, 2017 at 10:04 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      //அடடா! இந்த பதிவுக்கு நான் பின்னூட்டம் இட வில்லையே.//

      இதற்கு மட்டுமா .... இதுபோல எவ்வளவோ விட்டுப்போயிருக்கலாம். 31.03.2015 வரை, நான் வெளியிட்டுள்ள முதல் 750 பதிவுகளுக்கும், 100% பின்னூட்டங்கள் கொடுத்துள்ளீர்கள். அதன் பிறகு வெளியிட்டுள்ள சுமார் 100 பதிவுகளில் சிலவற்றில் உங்களைக் காணவே காணும். :(


      //அருமையான சிறுகதைகள் எழுதிய திருமதி ஜெயஸ்ரீ அவர்களைப் பாராட்டுவதா

      ஒவ்வொரு கதைக்கும் அருமையாக விமர்சனம் எழுதும் கோபு அண்ணாவைப் பாராட்டுவதா.

      மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும்.//

      இருவருக்குமே மனமார்ந்த வாழ்த்துகள் சொல்லியுள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜெயா .

      நீக்கு
    2. //அதன் பிறகு வெளியிட்டுள்ள சுமார் 100 பதிவுகளில் சிலவற்றில் உங்களைக் காணவே காணும். :(//

      அடடா! நேரம் கிடைக்கும் போத்ய் வந்து பின்னூட்டம் கொடுத்துடறேன் கோபு அண்ணா.

      நீக்கு
    3. Jayanthi Jaya May 13, 2017 at 12:43 PM

      **அதன் பிறகு வெளியிட்டுள்ள சுமார் 100 பதிவுகளில் சிலவற்றில் உங்களைக் காணவே காணும். :(**

      //அடடா! நேரம் கிடைக்கும் போது வந்து பின்னூட்டம் கொடுத்துடறேன் கோபு அண்ணா.//

      அதற்கு ஒரு மிகச் சுலபமான வழி சொல்கிறேன். கேட்டுக்கோங்கோ ஜெயா.

      http://gopu1949.blogspot.in/2015/06/blog-post.html

      இதோ இந்த மேற்படி பதிவு தான் ஆரம்பம். அதாவது
      அது என் 751-ம் பதிவு. அந்தப்பதிவுக்குப்போய் பின்னூட்டப்பெட்டியைத் திறக்கவும்.

      திறந்த பிறகு Control+F என்ற இரு பட்டன்களையும் சேர்த்து அமுக்கவும். மேலே வலதுபுறமாக ஓரமாக (Top Right Corner) ஒரு சின்ன தேடுதல் பாக்ஸ் ஓபன் ஆகும். அதில் jayanthi jaya என்று டைப் அடித்து எண்டர் போடுங்கோ.

      ஏற்கனவே நீங்க பின்னூட்டம் கொடுத்திருந்தால், எவ்வளவு பின்னூட்டங்கள் என்ற எண்ணிக்கையைக் காட்டி விடும். தங்களின் அந்தப் பின்னூட்டத்தில் உங்களைக்கொண்டுபோய் நிறுத்தியும் விடும்.

      அவ்வாறு பின்னூட்டம் ஏதும் இல்லாவிட்டல் ZERO எண்ணிக்கையைக் காட்டும். அவ்வாறு ZERO காட்டிடும் பதிவுகளுக்கு மட்டும், நீங்கள் பின்னூட்டமிட்டால் போதும்.

      நீக்கு