என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 28 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-5


ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை

நூல் வெளியீடு:

சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)

நூல் ஆசிரியர்: 

திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்


PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only
 
10) ரக்‌ஷா பந்தன்

கல்யாணம் ஆன புதுசு. தமிழ்நாட்டுப்பெண் வடக்கே எங்கோ வாழ்க்கைப்பட்டு புது இடத்தில் வாழ நேர்கிறது. கணவன் பண்ணும் அட்டகாசம், புது வீடு, புது நண்பர்கள், புதிய ஊர், தனிச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு ரொம்ப அவஸ்தைப்படுகிறாள். 

முதல் ஒரு வாரம் தினமும் இரு வேளைகளும் தன் அப்பாவுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் அரட்டை அடித்துப் பேசி மகிழ்கிறாள். தாயார் குறுக்கே புகுந்து, உன் வீட்டுக்காரரை கவனி. சும்மா ஃபோனில் பேசிக்கொண்டே இருந்தால் மாப்பிள்ளை கோபப்படப்போகிறார் என்கிறாள். தன் அம்மாவை நினைத்து இவளுக்குச் சிரிப்புத்தான் வருகிறது. பிறகு போகப்போக 2-3 நாட்களுக்கு ஒருமுறை என தன் தொலைபேசிப் பேச்சுக்களை குறைத்துக் கொள்கிறாள்.  

அந்த ஊரிலுள்ள அக்கம்பக்கத்தார் வழக்கப்படி, தன் கணவருடன் அடிக்கடி தன் வீட்டுக்கு வரும் ஒரு நண்பனுக்கு, அவன் கையில் தான் வாங்கி வைத்திருக்கும் ரக்‌ஷா பந்தன் கயிற்றைக் கட்டி விட்டு சகோதரனாக ஆக்கிக்கொண்டு அவன் வாயில் தன் கையால் இனிப்பினை ஊட்டி விடுகிறாள். அவன் கொடுக்கும் தங்க மோதிரத்தைத் தயங்கியபடி பரிசாகப் பெற்றுக்கொள்கிறாள். இதைப்பார்த்த இவளின் கணவனே வியந்து போகிறான்.

கொஞ்ச நாளிலேயே தன் கணவன் போதைப்பொருட்களுக்கு அடிமையானவன் என்பதைத் தெரிந்துகொண்ட அவள் புழுவாய்த் துடிக்கிறாள்.  தன் பெற்றோர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியவே கூடாது .... தெரிந்தால் அவர்களால் அதனைத் தாங்கிக்கொள்ளவே முடியாது .... என்பதால் இதில் மிகுந்த கவனமாகவே இருக்கிறாள்.

இதற்கிடையில் கர்ப்பவதியான அவள் பிறந்த வீட்டுக்கு பிரஸவத்திற்காகச் செல்ல நேரிடுகிறது. அந்த சகோதரன் போன்ற நண்பனின் உதவியால் மட்டுமே தன் கணவனை அந்தக் கொடிய பழக்கத்திலிருந்து மிகவும் போராடி மீட்கிறாள். 

இந்தக் கதை நல்ல விதமாக எழுதப்பட்டு, பாஸிடிவ் முடிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

மாமரத்தில் இருந்த அணில் குட்டியொன்று ஜன்னல் வழியாகத்தாவி, உள்ளே வந்து கழுத்தை ஒயிலாகத் திருப்பி, இங்குமங்கும் விழித்துப் பார்த்துவிட்டு, இவள் கேக்குக்குப் போட எடுத்த முந்திரிப் பருப்பைச் சுத்தம் செய்யும்போது நல்லாயில்லை என்று போட்டு வைத்திருந்த சில துண்டு முந்திரிப்பருப்புகளில், இரண்டைக் கையிலெடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் மாலை மயங்கிய நிலையில் பிதற்றிக்கொண்டிருந்த கெளசிக்கை இரண்டு முரட்டு ஆசாமிகள் பொட்ட்டலமாக மடித்துப் போட்டுவிட்டுப் போனார்கள். நடு ரோட்டில் கிடந்தானாம்.  இவள் பதறிப்போனாள்.

டாக்ஸியில் தூக்கிப் போட்டுக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு ஓடினால், அவர் ஆற அமர வந்து செக்கப் செய்துவிட்டு “ஹெரோயின் சாப்பிட்டு இருக்கிறான். அது இவனைச் சாப்பிட்டுக்கிட்டு இருக்குதுன்னு தெரியாம” என்கிறார். 

இவள் உடனே “ஹெராயின்னா என்ன?” என்று கேட்க, “போதைப் பொருள்” என்று கூறிவிட்டு பேடை எடுத்து மருந்துகளை வரிசையாக எழுதத் தொடங்கினார்.


[ இது 02.03.2014 தினமலர் வாரமலரில் வெளியான கதையாகும் ]


 


11) பிள்ளைக் கறி

தன் அம்மாவைப் பெற்ற பாட்டியிடம் வளர நேரும் பெண் குழந்தை. அந்தக்குழந்தையின் அம்மா அவசரப்பட்டு மேல் லோகம் போய்ச் சேர்ந்து விட்டாள். 

பாட்டி யாரையெல்லாம் அந்த ஊரில் மிகவும் நல்லவர்களாக நினைத்திருந்தாலோ, அவர்கள் எல்லோருமே நல்லவர்கள் இல்லை .... அயோக்கியர்கள் மட்டுமே என்பது பேத்திக்கு மட்டுமே, அதுவும் அவள் பூத்துக்குலுங்கி புஷ்பவதியானபின் தெரிய வருகிறது.

அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் தன் பாட்டி வீட்டில் இல்லாதபோதும்கூட, மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு, வீட்டை உள்பக்கம் பூட்டிக்கொண்டு, மிகவும் பாதுகாப்புடன் இருந்த பேத்தி நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறுகிறாள். 

அவளின் நடை, உடை, பாவனை, ஹேர் ஸ்டைல் என எல்லாமே மாறிப்போய் ஆணா பெண்ணா என்று தெரியாதபடி வீரமும் விவேகமும் மிக்கவளாக மாறிப்போய் இருக்கிறாள். கல்யாணமாகி வாழ்க்கைப்பட்டு கிராமத்துப் பாட்டியை விட்டு டெல்லிக்கும் சென்று விடுகிறாள். 

அங்கு தான் படித்த படிப்புக்குப் பொருத்தமானதோர் வேலையையும் தேடிக்கொள்கிறாள். வெளிநாட்டு வேலைகளுக்குத் தனக்கு வாய்ப்புகள் நிறையவே கிடைத்தும்கூட, தான் அப்போது உண்டாகி மாஸமாக இருந்ததால், அவற்றையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டு, தான் அப்போது பார்த்து வந்த வேலையையும் கூட தன் வீட்டிலிருந்தே பார்க்க நிர்வாகத்திடம் ஸ்பெஷல் அனுமதி பெற்று விடுகிறாள். 

இங்கு கிராமத்தில் உள்ள அவளின் பாட்டிக்கும் பெருமையோ பெருமைதான். அடிக்கடி பாட்டியும் பேத்தியும் கடிதம் எழுதி பேசி மகிழ்ந்து வருகிறார்கள்.

சென்ற ஆண்டு கூட அவள் தனக்குப் பிறந்திருந்த பெண்ணோடு ஸ்கூல் லீவு நேரம் கிராமத்திற்கு வந்து பாட்டியைப் பார்த்து விட்டுச் சென்றாள். ஏதோ ஒரு சாம்ராஜ்யத்தின் ராணியும் இளவரசியும் வந்து போனதுபோல பாட்டிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

”இந்த ஆண்டு குலதெய்வ படையல் நேர்த்திக்கடன் நாம் செய்ய வேண்டும் என முடிவாகியுள்ளது. நீயும் வந்து போ” எனத் தன் பேத்தியை பாட்டி அன்புடன் அழைக்கிறாள். 

பேத்திக்கு வந்துபோக மனதில் ஆசை இருப்பினும் அவள் வர மறுக்கிறாள். அதற்காக அவள் கூறும் காரணங்கள் நம்மையும் கலங்க அடிப்பதாக உள்ளது. மிகவும் அருமையான கதை இது. கதையின் தலைப்புத் தேர்வும் மிகவும் பொருத்தம். 

இன்றைய இளம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை மிக நன்றாக உணர்ந்து, மிகப்பிரமாதமாக எழுதி, ஒருசில ஆபத்துக்களை இலை மறை காய் மறையாகச் சொல்லி, பெண்களுக்கு எச்சரிக்கையும், சமூகத்திற்குச் சாட்டையடியும் கொடுத்திருக்கும் கதாசிரியை திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களை இந்த ஒரு கதைக்காக மட்டுமே நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள், ஹனி மேடம்.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

”பாட்டி, உனக்கு ஞாபகம் இருக்கலாம். நீ கோயிலுக்கோ வெளியிலயோ போயிட்டு வரும்போதெல்லாம் நான் மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கிட்டு உன்கிட்ட சரியாப் பேசவே மாட்டேன்” 

”நீ பக்கத்துல இருக்கிற அழகேசன் கடையில் என்னை விட்டுட்டுப் போவாய். அவர் மடியில் உட்கார வெச்சுக்கிறேன்னு சொல்லி எல்லா இடத்திலும் தொடுவார். நான் கோபமா கையைத் தட்டினா, என்னைக் கண்ட இடத்தில் நல்லா கிள்ளி வைப்பார். தேள் கொட்டுனா மாதிரி எனக்கு அந்த இடம் எரியும்.”

”ஒருநாள் நான் கோபமா வீட்டுக்கு ஓடி வந்துட்டேன். அப்போவெல்லாம் செல்வம் அண்ணே, நம் வீட்டுக்கே வந்து எனக்குத் துணை இருக்கும். ஒருநாள் அதுவும் நானும் ஆளுக்கொரு லைப்ரரி புக் படிச்சிட்டு இருந்தோம். திடீர்னு பக்கத்துல வந்து கட்டிப் பிரிச்சு முத்தம் கொடுக்கறேன்னு கன்னத்துல கடிச்சு வச்சிருச்சு. கோபத்தோட பிடிச்சுத் தள்ளுனா நகர விடாம அடுப்பாங்கரைப் பரண்கிட்ட சுவத்தோரமா சாய்ச்சு உடம்புமேல உடம்பை வைச்சு அழுத்துச்சு. பெரிய சைஸ் மரவட்டை உடம்புல ஊர்றமாதிரி இருந்திச்சு. திருவிழாவுக்கு நீ காய் அரிய வைச்சிருக்கிற இரும்பு அருவாமணை அதுல தலைகீழா சொருகி இருந்துச்சு. 

வெடுக்குன்னு அதை உருவி ’என்னை விட்டுடு செல்வண்ணே’ன்னு சொல்லித் தள்ளிவுட்டேன். லேசா அதுங்கையில கீறி ரத்தம் வர ஆரம்மிச்சுருச்சு. கீழே விழுந்த அது பயந்து ஏந்திருச்சு வீட்டுக்குப் போயிருச்சு. அதுக்கப்புறம் நீ வெளிய போனா நான் கதவைத் தாப்பா போட்டுக்கிட்டு தனியா இருக்கக் கத்துக்கிட்டேன்”.  

[இந்தக்கதை அக்டோபர் 2015 பெண்கள் ராஜ்ஜியத்தில் வெளியாகியுள்ளது]

 12) எருமுட்டை

இது ஒரு வித்யாசமான, சற்றே புரட்சிகரமான மிகவும் விறுவிறுப்பான கதை. ஊர் உலகத்தில் இதுவரை நடக்காத சம்பவம் ஒன்றும் இந்தக் கதையில் இல்லைதான் என்றாலும், இதுபோல எழுத மிகவும் துணிச்சல் வேண்டும். அது நம் காதாசிரியருக்கு நிறையவே உள்ளதில் நமக்கும் மகிழ்ச்சியே. :)

கன்று ஈனாத பசுஞ்சாண உருண்டைகளோடு, அருகம்புல் போட்டுப் பிசைந்து காய வைத்த எருமுட்டைகளை தணலில் நன்கு புடம் போட்டு, சாம்பலாக்கி,  பாரம்பர்யமான முறையில் விபூதி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் அவனுக்கு. அழகான மனைவி உண்டு. இதுவரை குழந்தை பாக்யம் ஏதும் இல்லை.

விபூதியில் கூட அதனை வெள்ளை நிறமாக பளிச்சென்று சாஃப்ட் ஆக ஆக்கிட எவ்வளவோ கலப்படப் பொருட்கள் உள்ளன. அதுபோல விபூதியில் எதைஎதையோ கலந்து வாசனையாகவும் ஆக்க முடியும். இருப்பினும் பாரம்பர்ய முறையில் தன் முன்னோர்கள் எப்படி பக்தி சிரத்தையுடன் செய்தார்களோ அப்படியே செய்ய வேண்டும்; எதிலும் கலப்படமே கூடாது என நினைப்பவன் அவன். 

இப்படிப்பட்ட சுத்தபத்தமான ஆசாமிக்கு மனைவியாக வாய்த்தவள், வேறொருவனுடன் கலப்படமாகிக்கொண்டு இருக்கிறாள். அவர்களின் சிரிப்பொலியையும், வளையல் சப்தத்தையும், மல்லிகைப்பூ வாசத்தையும், இவனால் ஒருநாள் நேரிலேயே உணர முடிகிறது. எவ்வளவு தட்டியும் கதவைத் திறக்காத அவன் மனைவி, தான் பாத் ரூமில் குளித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி கதவைத்திறக்க மிகவும் தாமதிக்கிறாள். 

கொல்லைப்புறமாகச் சென்று பார்த்தவனுக்கு அங்கு ஒரு மிகவும் பரிச்சயமான சைக்கிளையும், ஒரு ஜோடி, ஆண் செருப்புக்களையும் காணமுடிகிறது. உள்ளே தற்சமயம் தன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருப்பவன் யார் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. 

அதன்பின் இதுவே அவ்வப்போது தொடர்கதையாவதையும், அரசல் புரசலாக அக்கம்பக்கத்தார் மூலம் கேள்விப்பட்டு நொந்துபோகிறான்.  

எரு முட்டைகளை விபூதிக்காக புடம் போடும் போது அக்னி ஜுவாலைகளில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகவும், அதனில் சாம்பலாகும் எரு முட்டைகளாகவும் இவன் மனமும் கொதித்துக் கொண்டே இருந்து வருகிறது. இவனுக்கு என்னசெய்வது என்றே புரியாமல் குழப்பமாகவும் கோபமாகவும் வருகிறது.

இதற்கிடையில் வெளியூர் பஸ் ஸ்டாண்டில் தன் வேறொரு நண்பனுடன் பேசிக்கொண்டே செல்லும்போது, வேகமாக வந்த ஒரு சரக்கு வேன் இவன் நண்பன் மேல் மோதிவிட, ரத்தக்காயங்களுடன் தவிக்கும் தன் அந்த நண்பனை  ஓர் ஆட்டோவில் ஏற்றி மருத்துமனையொன்றுக்குக் கொண்டு செல்ல நேரிடுகிறது. அங்கு காத்திருக்கும் நேரத்தில், தனக்கு ஏன் வாரிசு இதுவரை உருவாகவில்லை என்பதையும் டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்கிறான். 

டாக்டரும் இவனை இரண்டு மூன்று டெஸ்டுகள் செய்து பார்த்துவிட்டு, ”போதுமான அளவுக்கும், குழந்தை பிறக்க தேவையான அளவுக்கும் வீர்யம் மிக்க விந்தணுக்கள் உனக்கு உன்னிடம் இல்லை” என்று ஓர் இடியைப் போட்டு விடுகிறார். 

அவரே இவனிடம் ”அது உன்னிடம் இல்லாட்டியும் பரவாயில்லை, டோனர்களிடம் வாங்கி கருவோடு செலுத்தி கருவை உண்டாக்கிக்கொள்ளலாம், மிகவும் ஆரோக்யமான குழந்தை பிறக்கும்” என ஓர் இலவச ஆலோசனையையும் வழங்குகிறார். இதிலும்கூட கலப்படம் என்பதைக் கேட்க,  இவனின் கோபம் மேலும் அதிகரிக்கிறது. 

இந்த சோகத்திலும் கோபத்திலும் வீட்டுக்கு வந்தவனிடம், அவன் மனைவி தான் முழுகாமல் இருக்கும் நல்ல செய்தியினைச் சொல்கிறாள். 

அவளை மட்டும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்தி விடலாமா, இல்லை தானும் அவளுமாக சேர்ந்தே எரியூட்டிக்கொள்ளலாமா என சிந்திக்கிறான். ஆனால் இதனை செயல்படுத்துவதில் ஏனோ அவனுக்கு ஓர் தயக்கம் ஏற்படுகிறது. 

குழந்தை பிறந்த உடனே, தன்னுடையதாக இல்லாத அதனை, எங்காவது கொண்டுபோய் கொன்று விடலாமா எனவும் பல்வேறு யோசனைகளில் இருந்து வருகிறான்.

தன் மனைவியையும் அவளின் கள்ளக்காதலனையும் இறுதியில் எப்படி அவனால் தண்டிக்க முடிந்தது என்பதே கதையின் கிளைமாக்ஸில் நாம் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில், முற்றிலும் வித்யாசமாகச் சொல்லப்பட்டுள்ளது. 

[ இந்தக்கதை 1-15/07/2014 புதிய தரிசனத்தில் வெளியாகியுள்ளது]

நீங்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும்
 இந்த என் குட்டியூண்டு தொடரின் நிறைவுப் பகுதி 
இப்போதிலிருந்து 36 மணி நேர இடைவெளிக்குப்பின்

30.09.2016 வெள்ளிக்கிழமை 
மஹாளய பக்ஷ ’அமாவாசை’ நன்னாளில்
பகல் சுமார் 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

காணத்தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள்!!


தொடரும்


 


என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]

82 கருத்துகள்:

 1. ஒவொரு கதைக்கான கருவும் கனமான கருவாக எடுத்துக் கையாண்டிருக்கிறார் தேனம்மை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். September 29, 2016 at 6:28 AM

   வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

   //ஒவ்வொரு கதைக்கான கருவும் கனமான கருவாக எடுத்துக் கையாண்டிருக்கிறார் தேனம்மை. வாழ்த்துகள்.//

   எழுத்தாளரும், மதிப்புரையாளரும் மஹா கனம் பொருந்தியவர்கள் எனச் சொல்லாமல் சொல்வதாகத் தோன்றுகிறது .... தங்களின் பின்னூட்டத்தின் பின்னால் ஒளிந்துள்ள கனமான கரு. :)

   இந்தப்பதிவுக்கான தங்களின் முதல் வருகைக்கும் தாங்கள் கையாண்டிருக்கும் கனமாக கருவுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.

   நீக்கு
  2. நன்றி ஸ்ரீராம். &

   அஹா ! நன்றி விஜிகே சார்.

   நீக்கு
 2. தொடர்ந்து வாசிக்கிறோம், மதிப்புரையை நூலாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dr B Jambulingam September 29, 2016 at 6:48 AM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //தொடர்ந்து வாசிக்கிறோம், மதிப்புரையை நூலாக.//

   என் மதிப்புரையை நூலாகவே நினைத்துத் தொடர்ந்து வாசித்துக் கருத்துக்கள் சொல்லும் தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

   நீக்கு
  2. நன்றி ஜம்பு சார் & விஜிகே சார்

   நீக்கு
 3. கோபு பெரிப்பா இன்னிக்கு நான் சீக்கிரமே வந்துட்டேன். மூணு கதையின் தலைப்புமே வித்தியாசமா இருக்கு..சிந்தனைக்கு சில வரிகள் புரிந்தும் புரியாமலும் இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy September 29, 2016 at 9:49 AM

   வா....டா என் செல்லக்குட்டி, வணக்கம்.

   //கோபு பெரிப்பா இன்னிக்கு நான் சீக்கிரமே வந்துட்டேன்.//

   மிக்க மகிழ்ச்சி...டா தங்கம்.

   //மூணு கதையின் தலைப்புமே வித்தியாசமா இருக்கு..//

   அப்படியா! மிகவும் சந்தோஷம்.

   //சிந்தனைக்கு சில வரிகள் புரிந்தும் புரியாமலும் இருக்கு..//

   உனக்குப் புரிந்ததை நீ எனக்குச் சொல்லு. உனக்குப் புரியாததை என்னிடம் கேட்டுக்கொள் ... மெயில் மூலம். ஓக்கேயா?

   உன் தொடர் வருகைக்கு என் நன்றிகள்.

   நீக்கு
  2. நன்றி ஹேப்பி & விஜிகே சார்.

   நீக்கு
 4. முதல் கதை ரக்ஷாபந்தன்..ஊர்விட்டு ஊர் போகும் புது மணமான பெண்கள் சந்திக்கும் புதுவித நெருக்கடிகள்..ரக்ஷாபந்தன் கயிறுகட்டிசேகோதரனான நண்பன். அவரின் உதவியால் கணவனின் போதைப்பழக்கத்தை திருத்த பாடுபடும் மனைவி என்று சுவாரசியமாக போகிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... September 29, 2016 at 9:59 AM

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   //முதல் கதை ரக்ஷாபந்தன்..ஊர்விட்டு ஊர் போகும் புது மணமான பெண்கள் சந்திக்கும் புதுவித நெருக்கடிகள்.. ரக்ஷாபந்தன் கயிறுகட்டி சகோதரனான நண்பன். அவரின் உதவியால் கணவனின் போதைப்பழக்கத்தை திருத்த பாடுபடும் மனைவி என்று சுவாரசியமாக போகிறது..//

   அச்சா, ப்ஹூத் அச்சா. தங்கள் கருத்துக்களும் மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளன.

   நீக்கு
  2. நன்றி ஸ்ரத்தா ஸபுரி & விஜிகே சார்

   நீக்கு
 5. //பேத்திக்கு வந்துபோக மனதில் ஆசை இருப்பினும் அவள் வர மறுக்கிறாள். அதற்காக அவள் கூறும் காரணங்கள் நம்மையும் கலங்க அடிப்பதாக உள்ளது. மிகவும் அருமையான கதை இது. கதையின் தலைப்புத் தேர்வும் மிகவும் பொருத்தம். //

  என்ன காரணமாக இருக்கும்.. சிந்தனைக்கு சிலவரிகளில் கூறி இருப்பதுபோல செல்வண்ணன்களின் பலாத்காரமாக இருக்குமோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... September 29, 2016 at 10:04 AM

   **பேத்திக்கு வந்துபோக மனதில் ஆசை இருப்பினும் அவள் வர மறுக்கிறாள். அதற்காக அவள் கூறும் காரணங்கள் நம்மையும் கலங்க அடிப்பதாக உள்ளது. மிகவும் அருமையான கதை இது. கதையின் தலைப்புத் தேர்வும் மிகவும் பொருத்தம்.**

   //என்ன காரணமாக இருக்கும்.. சிந்தனைக்கு சிலவரிகளில் கூறி இருப்பதுபோல செல்வண்ணன்களின் பலாத்காரமாக இருக்குமோ.//

   கதைப்படி, அந்தப் பாட்டியின் பேத்திக்கும், பள்ளியில் படிக்கும் வயதில் ஓர் சின்னப்பெண் குழந்தை (இளவரசி போல) இப்போது உள்ளதே. அதற்கு ஏதாவது எக்ஸாம் டைமாகக்கூட இருக்கலாம். அதைத் தன்னுடன் கிராமத்திற்குக் கூட்டிக்கொண்டு வர முடியாமலும், தன்னைப்போன்ற பெண் குழந்தையான அவளைத் தனியே அங்கேயே விட்டுவிட்டு வர முடியாமலும், ஏதேனும் தவிப்பாகவும் கூட அவளுக்கு இருக்கலாம்.

   முழுக்கதையையும் வாசித்தால் மட்டுமே, நாமும் ஒரு நல்ல முடிவுக்கு வர இயலும். :)

   நீக்கு
  2. அஹா ! உண்மை ஸ்ரத்தா ஸபுரி & நன்றி விஜிகே சார் :)

   நீக்கு
 6. யாருமே யோசிக்க தயங்கும் ஒருவிஷயம் எருமுட்டை கதைக்கரு. மனைவி தனக்கு துரோகம் செய்வதை கண்கூடாக கண்ட எந்த கணவனால்தான் பொறுத்துக்கொள்ள முடியும். விபூதியில்கூட கலப்படத்தை சேர்க்க விரும்பாத நல்லவனுக்கு இப்படி ஒருமனைவியா வாய்க்கணும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... September 29, 2016 at 10:09 AM

   //யாருமே யோசிக்க தயங்கும் ஒருவிஷயம் எருமுட்டை கதைக்கரு.//

   ஏன் அப்படி? ஆங்காங்கே லோகத்தில் கொஞ்சம் நடக்கும் சம்பவங்கள் தானே, ஒரு கதையாக எழுத யோசிக்க வைக்கிறது .... ஒரு எழுத்தாளரை.

   //மனைவி தனக்கு துரோகம் செய்வதை கண்கூடாக கண்ட எந்த கணவனால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்.//

   பொறுத்துக்கொள்ளாமல் வேறு என்னதான் அவன் செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

   //விபூதியில்கூட கலப்படத்தை சேர்க்க விரும்பாத நல்லவனுக்கு இப்படி ஒருமனைவியா வாய்க்கணும்...//

   கதையில், எங்கேயோ உள்ள, எவனோ ஒரு விபூதி தயாரிப்பவனுக்கு இப்படி ஒரு மனைவி வாய்த்து விட்டாள் என்பதற்காக உங்கள் முகம் இப்படிக் குங்குமமாகச் சிவந்து போய் விட்டதே ! :)))))

   -=-=-=-

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், இந்தப் பகுதிக்குத் தனித்தனியான மூன்று பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. நன்றி ஸ்ரத்தா ஸபுரி. & விஜிகே சார்

   நீக்கு
 7. இன்றைய கதை தலைப்புகளும் கதை சுருக்கமும் சிந்தனைக்கு சிலவரிகளும் எல்லாமே நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco September 29, 2016 at 10:12 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இன்றைய கதை தலைப்புகளும், கதை சுருக்கமும், சிந்தனைக்கு சிலவரிகளும் எல்லாமே நல்லா இருக்கு..//

   அப்போ நேற்று வரை எல்லாமே சுமார் தான் என்கிறீர்களா? :)))))

   எனினும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
  2. //அப்போ நேற்று வரை எல்லாமே சுமார் தான் என்கிறீர்களா? :)))))//

   ஐயோ கிஷ்ணாஜி..என்னங்க இப்படில்லாம் சொல்லி சங்கட படுத்துறாங்க

   நீக்கு
  3. shamaine bosco September 30, 2016 at 6:22 PM

   **அப்போ நேற்று வரை எல்லாமே சுமார் தான் என்கிறீர்களா? :)))))**

   //ஐயோ கிஷ்ணாஜி.. என்னங்க இப்படில்லாம் சொல்லி சங்கட படுத்துறாங்க//

   :))))) சும்மா ஒரு ஜாலிக்கு மட்டுமே. சங்கடப் படாதீங்கோ, ப்ளீஸ் :)))))

   நீக்கு
  4. நன்றி ஷாமைன் மேம் & விஜிகே சார்

   நீக்கு
 8. மூன்று கதைகளின் அறிமுகமாகும் நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீனி வாசன் September 29, 2016 at 10:18 AM

   //மூன்று கதைகளின் (அறிமுகமாகும்) அறிமுகங்களும் நல்லா இருக்கு//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. நன்றி ஸ்ரீனிவாசன் சார் & விஜிகே சார்

   நீக்கு
 9. புது புது தலைப்புகள் வித்தியாசமான சிந்தனைகள் திறமையான எழுத்து ஆளுமை எல்லாமே சிறப்பாக இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்....... September 29, 2016 at 10:21 AM

   வாங்கோ, வணக்கம்.

   //புது புது தலைப்புகள் வித்தியாசமான சிந்தனைகள் திறமையான எழுத்து ஆளுமை எல்லாமே சிறப்பாக இருக்கு..//

   மொத்தத்தில் ‘ஆல் இஸ் வெல்’ எனச் சிறப்பித்துச் சொல்லி விட்டீர்கள். வெரி குட்.

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. நன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார்

   நீக்கு
 10. பிள்ளைக்கறி தலைப்பு பார்த்து வேர கதையோன்னு நினைச்சேன். ரக்ஷா பந்தன்... எருமுட்டை.. பிள்ளைக்கறி எல்லாமே நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ராப்தம் September 29, 2016 at 10:24 AM

   வாங்கோ சாரூஊஊஊஊ, வணக்கம்.

   //பிள்ளைக்கறி தலைப்பு பார்த்து (வேர) வேற கதையோன்னு நினைச்சேன்.//

   நீ நினைத்தது கரெக்ட்தான்.

   அதிதி வேடமிட்டு, வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த சிவபெருமானின் விருப்பத்திற்காக, தன் சொந்த மகனையே கறியாக்கிப் போட்டு விருந்து உபசாரம் செய்த, அந்த நாயன்மாரின் கதையைக் கேட்கத்தான், அந்தப்பாட்டி தன் பேத்தியை, வீட்டில் தனியே விட்டுவிட்டுக் கோயிலுக்குப் போனாங்க.

   அந்தப்பாட்டி இல்லாத நேரத்தை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்தப் பெண்பிள்ளையை அப்படியே பச்சைக்கறியாகவே சாப்பிட நினைத்துள்ளனர் சில கயவர்கள்.

   //ரக்ஷா பந்தன்... எருமுட்டை.. பிள்ளைக்கறி எல்லாமே நல்லா இருக்கு...//

   மஸக்கைக்காரியின் நாக்குக்கு எல்லாமே நல்லாத்தான் + ருசியாத்தான் இருக்கும் எனச் சொல்லுவார்கள்.

   ‘மாங்காய் இனிக்கும் ..... சாம்பல் ருசிக்கும்’ன்னு ஒரு சினிமாப் பாட்டே உள்ளதே. :)

   உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளவும்.

   உன் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சாரூஊஊஊ.

   நீக்கு
  2. நன்றி ப்ராப்தம் & விஜிகே சார்

   என்னது மசக்கையா.. அழகான குட்டி சாரோ குட்டி சாருவோ சுகமாகப் பிறக்க வாழ்த்துகள் & ஆசிகள். :)

   நீக்கு
 11. இதுவரை போட்டிருக்கும் ஐந்து பதவியிலும் தேனம்மை அவர்களின் ஒரே போட்டோவை போடாமல் வேறு வேறு போட்டோக்கள் போட்டிருப்பதிலிருந்து கிருஷின் ரசனை புரியமுடியறது..)))) எல்லாரும் கதைகள் பத்தி கமெண்ட் போட்டா நான் சுத்த " வழுவட்டை" போல போட்டோ பத்தி சொல்றேன். "மேல்மாடி" காலி....))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் September 29, 2016 at 10:31 AM

   வாங்கோ ’ராஜாத்தி-ரோஜாப்பூ’. வணக்கம். நல்லா இருக்கியா?

   //இதுவரை போட்டிருக்கும் ஐந்து (பதவியிலும்?) பகுதிகளிலும் தேனம்மை அவர்களின் ஒரே போட்டோவை போடாமல் வேறு வேறு போட்டோக்கள் போட்டிருப்பதிலிருந்து கிருஷின் ரசனை புரியமுடியறது..)))) //

   ஏதோ என் கைவசம் அவர்களின் வெவ்வேறு போட்டோக்கள் இருந்தன. அதனால் அவற்றை ஒவ்வொரு பகுதியிலும் ஒன்று வீதம் (திரும்பத் திரும்ப தினமும் ஒரே படத்தையே காட்டி போரடிக்காமல்) காட்சிப்படுத்த முடிந்தது. அவ்வளவுதான்.

   இதில் உன் தனிப்பட்ட ரஸனையைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

   நாளைய நிறைவுப்பகுதியில் நான் வெளியிட இருக்கும், ஹனி மேடத்தின் மற்றொரு போட்டோ, ஒருவேளை உன்னை மட்டுமல்லாமல் எல்லோரையுமே, இன்னும் நன்கு ரஸிக்க வைக்கக்கூடியதாக அமைந்து விடுமோ என்னவோ!

   யார் ரஸித்து என்ன? இன்னும் இதில் சம்பந்தப்பட்ட நம் ஹனி மேடம் இவற்றையெல்லாம் பார்த்தார்களோ என்னவோ ... தெரியவில்லை. பிஸியாக ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் ... கைவசம் நெட் கனெக்‌ஷன் ஏதும் இல்லாமலேயே. :(

   அவர்கள் திரும்பி இங்கு இந்த என் பதிவுகள் பக்கம் வர மேலும் 2-3 நாட்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

   >>>>>

   நீக்கு
  2. கிருஷ் >>>>> ராஜாத்தி-ரோஜாப்பூ (2)

   //எல்லாரும் கதைகள் பத்தி கமெண்ட் போட்டா நான் சுத்த " வழுவட்டை" போல போட்டோ பத்திச் சொல்றேன்.//

   அதனால் என்ன, பரவாயில்லை. யாருமே இதுவரை சொல்லாத புதுமையான கருத்தினை, நீ மட்டுமே மிக அழகாகச் சொல்லி அசத்தியுள்ளாய்.

   உனக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நன்றிகள்.

   ‘சூப்பர் வழுவட்டை’யான எனக்கு ‘சுத்த வழுவட்டை’யான உன்னை மிகவும் பிடித்துள்ளதில் எந்தவிதமான ஆச்சர்யமும் இல்லைதான். :)

   // "மேல்மாடி" காலி....)))) //

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   உனக்காவது உன் ’மேல்மாடி’ மட்டும்தான் காலி. இதைப்படித்துவிட்டு விழுந்து விழுந்து, தொந்தி குலுங்கச் சிரித்த எனக்கு, இப்போது என் சர்வாங்கமும் காலியாக்கும் ....... :))))

   -=-=-=-=-=-=-

   பின்குறிப்பு:

   ’வழுவட்டை’ என்றால் என்னவென்றே இதுவரை தெரியாமல் வழுவட்டையாக இருப்போருக்காக மட்டுமே இதோ இந்த இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

   நீக்கு
  3. ஹாஹாஹா மன்னிச்சுக்குங்க சார். சிரிச்சு வைச்சுட்டேன். & ரொம்ப லேட்டா பதிவு பின்னூட்டம் போடுறேன். அதிகமில்லை ஒன்னேகால் மாசம் லேட்.

   ரசனைகள் பலவிதம்.நன்றி பூந்தளிர் & விஜிகே சார் :)

   நீக்கு
 12. ரக்க்ஷாபந்தன் கான்செப்ட் எனக்குப் புதிது. முதல் கதை கவர்கிறது.

  பிள்ளைக் கறியும் எருமுட்டையும் வித்தியாசமான களம்.

  ஒவ்வொரு கதையும் தனித் தனி plot கொண்டிருப்பதும், அதை நீங்கள் ரசித்து விமரிசனம் செய்திருப்பதும் அருமை. 'நல்ல சமையல் தெரிந்தவர் இன்னொரு சமையல் செய்பவரின் உணவை ரசித்துப் பாராட்டுவதுபோல் தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 11:13 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ரக்க்ஷாபந்தன் கான்செப்ட் எனக்குப் புதிது.//

   எனக்கும் கூடத்தான். அதைப்பற்றி நான் கேள்விப்பட்டுள்ளதோடு சரி.

   யாரையும் இதுவரை என் கையில் ரக்‌ஷாபந்தன் கட்ட அனுமதித்தது இல்லை.

   (யாரும் அதுபோல எனக்குக் கட்டிவிடவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)

   ஒவ்வொருவருக்கும் தங்க மோதிரத்தைக் கழட்டித் தர என்னால் முடியாது அல்லவா! :) அது ஒரு காரணம்.

   மேலும் ‘கேக்’ என்ற பதார்த்தத்தை நான் தொடவோ சாப்பிடவோ மாட்டேன் .... ஊட்டி விட்டாலும்கூட. :)

   //முதல் கதை கவர்கிறது.//

   ஆஹா ! சந்தோஷம்.

   //பிள்ளைக் கறியும் எருமுட்டையும் வித்தியாசமான களம். ஒவ்வொரு கதையும் தனித் தனி plot கொண்டிருப்பதும், அதை நீங்கள் ரசித்து விமரிசனம் செய்திருப்பதும் அருமை.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //'நல்ல சமையல் தெரிந்தவர் இன்னொரு சமையல் செய்பவரின் உணவை ரசித்துப் பாராட்டுவதுபோல் தோன்றியது.//

   அருமையான + எளிமையான உதாரணம் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

   பொதுவாக பெரிய பெரிய கல்யாணங்களில் நல்ல திறமையான சமையல்காரர்கள், வெறும் ரஸத்தில் சாதத்தைப்போட்டு கரைத்து 2-3 டம்ளர் குடிப்பதோடு மட்டும் சரி. :)

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. நன்றி நெல்லைத் தமிழன் & விஜிகே சார்

   நீக்கு
 13. அருமையான விமர்சனம். தேனம்மையின் கதைகள் மூன்றும் அருமை. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு September 29, 2016 at 1:11 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அருமையான விமர்சனம். தேனம்மையின் கதைகள் மூன்றும் அருமை. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
  2. நன்றி கோமதி மேம் & விஜிகே சார்

   நீக்கு
 14. cமூன்றும் மூன்று விதம். ஐயோ பாவம் என்று தோன்றியது. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாட்சி September 29, 2016 at 5:25 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //மூன்றும் மூன்று விதம். ஐயோ பாவம் என்று தோன்றியது. அன்புடன்//

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மாமி.

   நீக்கு
  2. நன்றி காமாட்சி மேம் & விஜிகே சார்

   நீக்கு
 15. எல்லா கதைகளுமே ஆழமான கனமான மையக்கரு கொண்டுள்ளது இல்லையா...பிள்ளைக்கறி வித்தியாசமாக இருக்கும் போல தோன்றுகின்றது....அத்துடன் உங்கள் விமர்சனமும் அருமையாக உள்ளது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu
   September 29, 2016 at 5:42 PM

   வாங்கோ, வணக்கம்.

   //எல்லா கதைகளுமே ஆழமான கனமான மையக்கரு கொண்டுள்ளது இல்லையா... பிள்ளைக்கறி வித்தியாசமாக இருக்கும் போல தோன்றுகின்றது.... அத்துடன் உங்கள் விமர்சனமும் அருமையாக உள்ளது....//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் + பாராட்டுகளுக்கு, என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. நன்றி துளசி சகோ & கீத்ஸ் & விஜிகே சார்

   நீக்கு
 16. தேனம்மை அவர்கள் எல்லாக் கதைகளையும் இந்தக் கால வழக்கப்படி கதைசொல்லி போல கதாசிரியர் சொல்வதாக எழுதாமல், நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி எழுத்தாளர் எழுதுவது போல எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

  அப்ப்டியெனில் அந்தத் திறமைக்காகவே அவரைப் பாராட்ட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி September 29, 2016 at 6:07 PM

   வாங்கோ ஸார், நமஸ்காரங்கள், வணக்கம்.

   //தேனம்மை அவர்கள் எல்லாக் கதைகளையும் இந்தக் கால வழக்கப்படி கதைசொல்லி போல கதாசிரியர் சொல்வதாக எழுதாமல், நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி எழுத்தாளர் எழுதுவது போல எழுதியிருப்பதாகத் தெரிகிறது.//

   அப்படியும் இருக்கலாமோ என்னவோ ! :)

   //அப்படியெனில் அந்தத் திறமைக்காகவே அவரைப் பாராட்ட வேண்டும்.//

   அவர்களிடம் ஏதோ தனித்திறமைகள் இருப்பதாக மட்டுமே இந்த எளியோனால் நினைக்க முடிகிறது.

   வேறொன்றும் நான் அறியேன் பராபரமே !

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
  2. அஹா !!! நன்றி ஜிவி சார் & விஜிகே சார் !!!

   நீக்கு
 17. மதிப்புரையிலும் கதையின்
  கிளைமாக்ஸை கூட்டிக் காட்டி
  எங்களையெல்லாம் அதை நிச்சயம்
  வாங்கிப் படித்தாகவேண்டும் என்கிற
  எண்ணத்தை உருவாக்கிய உங்கள்
  எழுத்துத் திறன் மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ramani S September 29, 2016 at 6:51 PM

   வாங்கோ Mr. RAMANI, Sir.

   //மதிப்புரையிலும் கதையின் கிளைமாக்ஸை கூட்டிக் காட்டி, எங்களையெல்லாம் அதை நிச்சயம் வாங்கிப் படித்தாகவேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கிய உங்கள் எழுத்துத் திறன் மனம் கவர்ந்தது.//

   ஆஹா, தன்யனானேன்.

   எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் தங்கள் கருத்துக்களும் என் மனதைக் கவரத்தான் செய்கிறது.

   //பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஊக்கமும், உற்சாகமும் அளித்திடும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
  2. உண்மைதான் ரமணி சார். விஜிகே சாரின் எழுத்தும் சஸ்பென்ஸை வெளியிடாமல் எழுதிய விதமும் மிக மிக அருமை. அதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அசந்து போய் நிற்கின்றேன். ! நன்றி விஜிகே சார் !

   நீக்கு
 18. இந்த பதிவில் நீங்கள் திறனாய்வு செய்துள்ள மூன்று கதைகளுமே வழக்கம்போல் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டவை.
  ரக்க்ஷா பந்தன் கதை பற்றி படிக்கும்போது நான் 1966 ஆம் ஆண்டு தார்வார் என்ற ஊரில் மய்ய அரசின் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தபோது முதன் முதல் ரக்க்ஷா பந்தன் பற்றி அறிந்துகொண்டது நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு உதவியாளராக இருந்த ஒரு மராட்டிய பெண் ஒரு நாள் வந்து என்னை கையை நீட்ட சொல்லி வண்ணக் கயிறை கட்டியபோது அது என்னவென்று கேட்டதற்கு அவர் ரக்க்ஷா பந்தன் பற்றி சொல்லி நான் அவருக்கு சகோதரன் போல் என்று சொன்னார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் உண்டு. என்னோடு பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு காஷ்மீரி நண்பருக்கும் அவருக்கும் காதல் இருந்தது. எனக்கு அப்போது இந்தி தெரியாததால் எனது அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். நான் அவர்களைக் காட்டிக் கொடுக்காமல் அவர்களின் காதலுக்கு ‘உதவி’ செய்ததால் என்னை சகோதரனாக பாவித்து அந்த கயிறை கட்டியதாக சொன்னார்.
  இந்த கதை நல்ல விதமாக எழுதப்பட்டு நேர்மறை முடிவாகவும் உள்ளது என்பதை தாங்கள் சொல்வதை கேட்க எனக்கும் மகிழ்ச்சியே!

  “ஹெராயின்னா என்ன?” என்று கேட்கும் அந்த விபரம் அறியாப் பெண்ணை நினைக்கையில் மனதில் ஒரு பச்சாதாபம் ஏற்படுகிறது..

  பிள்ளைக்கறி கதையில் அறியாப் பிஞ்சுகளை எவ்வாறு சில வக்கிரபுத்தி உள்ளோர் பாலியல் தொந்தரவு தருகிறார்கள் என்பதை நூலாசிரியர் தோலுரித்து காட்டியிருக்கிறார் என்று நீங்கள் விவரிப்பதை அறியும்போது நானும் அவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  எருமுட்டை கதையில் அவளை மட்டும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்தி விடலாமா, இல்லை தானும் அவளுமாக சேர்ந்தே எரியூட்டிக்கொள்ளலாமா என்று யோசிப்பதும் பின்னர் அவள் தாய்மை அடைந்திருப்பதை சொல்லும்போது குழந்தை பிறந்த உடனே, தன்னுடையதாக இல்லாத அதனை, எங்காவது கொண்டுபோய் கொன்று விடலாமா என யோசித்து குழம்புவதை படிக்கையில் இந்த கதாநாயகனைப் பார்த்து பரிதாபப்படவே தோன்றுகிறது.
  தன் மனைவியையும் அவளின் கள்ளக்காதலனையும் இறுதியில் எப்படி அவன் தண்டித்தான் என்பதை அறியும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.
  தங்களின் நேர்த்தியான திறனாய்விற்கும் அற்புத கதைகளைப் படைத்த திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி September 30, 2016 at 5:00 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //இந்த பதிவில் நீங்கள் திறனாய்வு செய்துள்ள மூன்று கதைகளுமே வழக்கம்போல் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டவை. //

   ஆமாம், ஸார்.

   //ரக்க்ஷா பந்தன் கதை பற்றி படிக்கும்போது நான் 1966 ஆம் ஆண்டு தார்வார் என்ற ஊரில் மய்ய அரசின் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தபோது முதன் முதல் ரக்க்ஷா பந்தன் பற்றி அறிந்துகொண்டது நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு உதவியாளராக இருந்த ஒரு மராட்டிய பெண் ஒரு நாள் வந்து என்னை கையை நீட்ட சொல்லி வண்ணக் கயிறை கட்டியபோது அது என்னவென்று கேட்டதற்கு அவர் ரக்க்ஷா பந்தன் பற்றி சொல்லி நான் அவருக்கு சகோதரன் போல் என்று சொன்னார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் உண்டு. என்னோடு பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு காஷ்மீரி நண்பருக்கும் அவருக்கும் காதல் இருந்தது. எனக்கு அப்போது இந்தி தெரியாததால் எனது அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். நான் அவர்களைக் காட்டிக் கொடுக்காமல் அவர்களின் காதலுக்கு ‘உதவி’ செய்ததால் என்னை சகோதரனாக பாவித்து அந்த கயிறை கட்டியதாக சொன்னார். //

   வெரி குட். தாங்கள் தார்வாரில் இருந்தும் அவர்களைக் கார்வார் ஏதும் செய்யாமலும், அந்தக் காதலர்களைக் காட்டிக்கொடுக்காமலும், அவர்களின் காதலுக்கு உதவியும் செய்துள்ள, தங்களின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது.

   நானே அந்தப்பெண்ணில் நிலைமையில் இருந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பேன். :)

   >>>>>

   நீக்கு
  2. VGK >>>>> வே.நடனசபாபதி (2)

   //இந்த கதை நல்ல விதமாக எழுதப்பட்டு நேர்மறை முடிவாகவும் உள்ளது என்பதை தாங்கள் சொல்வதை கேட்க எனக்கும் மகிழ்ச்சியே! //

   மிகவும் சந்தோஷம், ஸார்.

   //“ஹெராயின்னா என்ன?” என்று கேட்கும் அந்த விபரம் அறியாப் பெண்ணை நினைக்கையில் மனதில் ஒரு பச்சாதாபம் ஏற்படுகிறது.. //

   எனக்கேகூட அதுபற்றி அதிகம் தெரியாது ஸார். ஏதேனும் ஒரு போதைப்பொருளாக இருக்கும் என்று நானே எனக்குள் யூகித்துக் கொண்டேதான் படித்தேன். இந்தக் கதையில் வரும் டாக்டராலும் அதுபோலவே சொல்லப்பட்டிருந்தது.

   >>>>>

   நீக்கு
  3. VGK >>>>> வே.நடனசபாபதி (3)

   //பிள்ளைக்கறி கதையில் அறியாப் பிஞ்சுகளை எவ்வாறு சில வக்கிரபுத்தி உள்ளோர் பாலியல் தொந்தரவு தருகிறார்கள் என்பதை நூலாசிரியர் தோலுரித்து காட்டியிருக்கிறார் என்று நீங்கள் விவரிப்பதை அறியும்போது நானும் அவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். //

   மிக்க மகிழ்ச்சி ஸார்.

   இருப்பினும், அறியாப் பிஞ்சுகள் இன்றும் ஆங்காங்கே தோலுரிக்கப்பட்டேதான் வருகிறார்கள்.

   பெண் குழந்தைகளும், பெற்றோர்களும், இதில் மிக மிக அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்தக்கதையில் நன்கு சொல்லப்பட்டுள்ளது.

   >>>>>

   நீக்கு
  4. VGK >>>>> வே.நடனசபாபதி (4)

   //எருமுட்டை கதையில் அவளை மட்டும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்தி விடலாமா, இல்லை தானும் அவளுமாக சேர்ந்தே எரியூட்டிக்கொள்ளலாமா என்று யோசிப்பதும் பின்னர் அவள் தாய்மை அடைந்திருப்பதை சொல்லும்போது குழந்தை பிறந்த உடனே, தன்னுடையதாக இல்லாத அதனை, எங்காவது கொண்டுபோய் கொன்று விடலாமா என யோசித்து குழம்புவதை படிக்கையில் இந்த கதாநாயகனைப் பார்த்து பரிதாபப்படவே தோன்றுகிறது.//

   ஆமாம். அவனுடைய குழப்பம் அதுபோல உள்ளதே. என்ன செய்வது?

   //தன் மனைவியையும் அவளின் கள்ளக்காதலனையும் இறுதியில் எப்படி அவன் தண்டித்தான் என்பதை அறியும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். //

   :))))) இதில் அனைவரின் ஆவலையும் தூண்டுவது மட்டுமே என் வேலையாக உள்ளது. :)))))

   >>>>>

   நீக்கு
  5. VGK >>>>> வே.நடனசபாபதி (5)

   //தங்களின் நேர்த்தியான திறனாய்விற்கும் அற்புத கதைகளைப் படைத்த திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்! //

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஒவ்வொன்றையும் நன்கு ஊன்றிப்படித்து விட்டு ’என்னுடையது நேர்த்தியான திறனாய்வு’ என்று சிறப்பித்துச் சொல்லியுள்ளதற்கும், தாங்கள் தினமும் எடுத்துரைக்கும் மிக நீண்ட, அழகழகான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
  6. உண்மையிலேயே நேர்த்தியான திறனாய்வு விஜிகே சார். நானும் வழிமொழிகிறேன்.

   நன்றி நடனசபாபதி சார் விரிவான பின்னூட்டத்துக்கு

   நீக்கு
 19. திரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம். இந்தப் பதிவில் உள்ள மூன்று கருக்களுமே மிகவும் வித்தியாசமானவை. பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்வது அதிகரித்திருக்கும் இக்காலத்தில், இது பற்றிய விழிப்புணர்வைத் தரும் வகையில் கதை எழுதியிருப்பது சிறப்பு. பிள்ளைக் கறி தலைப்பே வித்தியாசமாயிருக்கிறது. படிக்கும் ஆவலைத் தூண்டுகிற விதத்தில் தலைப்பு இருக்க வேண்டும் என்பதில் கதாசிரியர் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ரக்ஷா பந்தனில் நண்பனாக வருபவன் வழக்கத்துக்கு மாறாக நல்லவனாக இருப்பதில் மகிழ்ச்சி. மிகவும் சுவையாக கதைகளை அறிமுகம் செய்வதற்குப் பாராட்டுக்கள் கோபு சார்! எழுத்தாளருக்கும் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி September 30, 2016 at 7:44 PM

   //திரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம்.//

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இந்தப் பதிவில் உள்ள மூன்று கருக்களுமே மிகவும் வித்தியாசமானவை.//

   ஆமாம், மேடம்.

   //பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்வது அதிகரித்திருக்கும் இக்காலத்தில், இது பற்றிய விழிப்புணர்வைத் தரும் வகையில் கதை எழுதியிருப்பது சிறப்பு.//

   ஆம். மிகவும் நன்றாகவே எழுதியுள்ளார்கள். தாங்களும் மிகச்சரியாக புரிந்துகொண்டு சிறப்பாகவே சொல்லியுள்ளீர்கள்.

   //பிள்ளைக் கறி தலைப்பே வித்தியாசமாயிருக்கிறது. படிக்கும் ஆவலைத் தூண்டுகிற விதத்தில் தலைப்பு இருக்க வேண்டும் என்பதில் கதாசிரியர் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.//

   இருக்கலாம், மேடம்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> ஞா. கலையரசி (2)

   //ரக்ஷா பந்தனில் நண்பனாக வருபவன் வழக்கத்துக்கு மாறாக நல்லவனாக இருப்பதில் மகிழ்ச்சி.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   ’வழக்கத்துக்கு மாறாக நல்லவனாக’ என்ற தங்களின் வார்த்தைகளை மிகவும் ரஸித்தேன். சிரித்தேன். :)

   கதையில் வரும் கதாபாத்திரமான அவனாவது நல்லவனாக இருப்பதில் எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியே.

   //மிகவும் சுவையாக கதைகளை அறிமுகம் செய்வதற்குப் பாராட்டுக்கள் கோபு சார்! எழுத்தாளருக்கும் பாராட்டுக்கள்!//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான + யதார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள் மேடம்.

   நீக்கு
  3. நன்றி கலையரசி & கோபு சார்

   நீக்கு
 20. ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கருவுடன்.....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் October 1, 2016 at 6:27 PM

   வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

   //ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கருவுடன்.....

   பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.

   நீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ & விஜிகே சார்

   நீக்கு
 21. மூன்று கதைகளும் வித்தியாசமான கருவை சுமந்து வந்து நம்மை கலங்கச் செய்கிறது

  ஒவ்வொரு கதையையும் தாங்கள்சொல்லிக் காட்டும் விதம் அசத்தலாக இருக்கிறது...சுவாரஸ்யம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri October 3, 2016 at 10:10 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //மூன்று கதைகளும் வித்தியாசமான கருவை சுமந்து வந்து நம்மை கலங்கச் செய்கிறது

   ஒவ்வொரு கதையையும் தாங்கள்சொல்லிக் காட்டும் விதம் அசத்தலாக இருக்கிறது...சுவாரஸ்யம்//

   தங்களின் அன்பான வருகையும், கருத்துக்களும் சுவாரஸ்யமாகவும் அசத்தலாகவுமேதான் உள்ளன.

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 22. எல்லா பகுதியிலும் கமெண்ட் போடச்சொல்லி இருந்தீங்க கோபூஜி.. பதிவையும் மத்தவங்க கமெண்ட்ஸ் எல்லாம் படிச்ச பிறகு எனக்கு என்ன எழுதறதுன்னே புரியலியே. எதை சொன்னாலும் அது காப்பி பேஸ்ட்போல ஆயிடுமே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிப்பிக்குள் முத்து. October 3, 2016 at 10:41 AM

   வா..... மீனா, வணக்கம்.

   //எல்லா பகுதியிலும் கமெண்ட் போடச்சொல்லி இருந்தீங்க கோபூஜி..//

   ஏதோ ஒரு அக்ஞானத்திலும், மிகப்பெரிய எதிர்பார்ப்பிலும் ஏனோ அதுபோலச் சொல்லிவிட்டேன், போலிருக்குது.

   //பதிவையும் மத்தவங்க கமெண்ட்ஸ் எல்லாம் படிச்ச பிறகு எனக்கு என்ன எழுதறதுன்னே புரியலியே.//

   ரொம்பவும் நல்லது. எதுவுமே புரிந்தால்தான் கஷ்டம். புரியாவிட்டால் சுலபம் மட்டுமே. இதுபுரிய சூப்பர் வழுவட்டையான எனக்கு இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன.

   //எதை சொன்னாலும் அது காப்பி பேஸ்ட்போல ஆயிடுமே..//

   உன்னைப்போல கடைசியாக வருவோருக்கு இது ஒரு கூடுதல் அட்வாண்டேஜ் ஆகும். எல்லோருடைய கமெண்ட்ஸ்களிலிருந்தும் துளித்துளி எடுத்துக்கொண்டு, ஓர் அவியலாக்கி 1000 வார்த்தைகள் எழுதி அசத்தலாம். இது ஏனோ உனக்குப் புரியவில்லை.

   புரியாமல் இருக்காது .... புரியாதுபோல நடிக்கும் நம்பர் ஒண் லங்கிணி .... நீ :) என்பது எனக்கும் புரிகிறது.

   நீக்கு
  2. நன்றி சிப்பிக்குள் முத்து & விஜிகே சார்

   நீக்கு
 23. புரியாத மொழி பேசும் தெரியாத ஊரில் புதிதாய்த் திருமணமாகிப் போகும் பெண்ணின் நிலையை.. கணவனும் போதைக்கு அடிமையாகிப்போன சூழலில்… அவள் கட்டிய ரக்ஷா பந்தன்தான் அவளை ரட்சிக்கிறது. பாசிடிவான முடிவு என்பதில் திருப்தி.
  பெண்குழந்தைகள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகளை மையமாய் வைத்து எழுதப்பட்ட பிள்ளைக்கறி கதை என்னை மிகவும் ஈர்த்தது. என்னொவொரு அற்புதமான தலைப்பு.. சிறுகுழந்தைகளுக்கும் பாலியல் தொடுகை குறித்த விழிப்புணர்வு இல்லாவிடில்.. நல்லவர் என்ற போர்வையில் நடமாடும் வக்கிரக்காரர்கள் கையில் சிக்கி வாழ்க்கையையே இழந்துவிடக்கூடிய அபாயத்தை மிக அழகாக எழுதியுள்ளார். போதுமான பாதுகாப்பும் இல்லாத சூழலில்.. பெண் குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அருமையான கதை. எருமுட்டை கதையின் சுருக்கமே முழுக்கதையையும் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பதிவோடு இணைக்கப்படும் படங்கள் அதிலும் தேன்துளிகளைச் சுவைக்கத் தூண்டும் படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதமஞ்சரி October 4, 2016 at 10:27 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //புரியாத மொழி பேசும் தெரியாத ஊரில் புதிதாய்த் திருமணமாகிப் போகும் பெண்ணின் நிலையை.. கணவனும் போதைக்கு அடிமையாகிப்போன சூழலில்… அவள் கட்டிய ரக்ஷா பந்தன்தான் அவளை ரட்சிக்கிறது. பாசிடிவான முடிவு என்பதில் திருப்தி. //

   மிகவும் சந்தோஷம் மேடம்.

   //பெண்குழந்தைகள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகளை மையமாய் வைத்து எழுதப்பட்ட பிள்ளைக்கறி கதை என்னை மிகவும் ஈர்த்தது. என்னொவொரு அற்புதமான தலைப்பு.. சிறுகுழந்தைகளுக்கும் பாலியல் தொடுகை குறித்த விழிப்புணர்வு இல்லாவிடில்.. நல்லவர் என்ற போர்வையில் நடமாடும் வக்கிரக்காரர்கள் கையில் சிக்கி வாழ்க்கையையே இழந்துவிடக்கூடிய அபாயத்தை மிக அழகாக எழுதியுள்ளார். போதுமான பாதுகாப்பும் இல்லாத சூழலில்.. பெண் குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அருமையான கதை.//

   ஆம். மிகவும் அருமையான கதையைத் தாங்களும் புரிந்துகொண்டு, மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

   //எருமுட்டை கதையின் சுருக்கமே முழுக்கதையையும் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.//

   முழுக்கதையையும் படிக்கும் ஆர்வம் தூண்டப்பட வேண்டும் என்ற என் குறிக்கோள் ஓரளவுக்காவது நிறைவேறியுள்ளதை, உங்கள் மூலமும் அறிய, எனக்கும் மகிழ்ச்சியே.

   //பதிவோடு இணைக்கப்படும் படங்கள் அதிலும் தேன்துளிகளைச் சுவைக்கத் தூண்டும் படங்கள் அழகு. //

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புக்கும், தேன் துளிகளாக சிந்தியிருக்கும் அரிய, பெரிய, இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
  2. நன்றி கீத்ஸ் & விஜிகே சார் !

   நீக்கு
 24. http://honeylaksh.blogspot.in/2016/10/blog-post_6.html

  மேற்படி இணைப்பினில் ‘சிவப்பு பட்டுக் கயிறு’ நூலாசிரியர் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், இந்த என் நூல் அறிமுக + மதிப்புரைத் தொடரினைப் பற்றி சிறப்பித்து நன்றிகூறி ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள்.

  அவர்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

  இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஹா ஒவ்வொரு பதிவிலும் இதைக் கூறி சிறப்பித்திருப்பதற்கு சிறப்பு நன்றிகள் விஜிகே சார் !!!

   நீக்கு
 25. அப்பப்பா! ஒவ்வொரு கதைக்கருவும் நெத்தியடி. ஏற்கனவே எழுத்துலகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் தேன் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கப்போவதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

  அருமையான கதைகள்.

  கோபு அண்ணாவுக்கு ஸ்பெஷல் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya October 18, 2016 at 12:08 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //அப்பப்பா! ஒவ்வொரு கதைக்கருவும் நெத்தியடி. ஏற்கனவே எழுத்துலகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் தேன் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கப்போவதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

   அருமையான கதைகள்.

   கோபு அண்ணாவுக்கு ஸ்பெஷல் நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், நெத்தியடியாக ஜொலிக்கும் தேன் போன்ற அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. அஹா இப்படி அதிரடி அன்பு வார்த்தைகளால் என்னை ஆனந்தத்தில் அடித்த ஜெயந்திக்கு அன்பு நன்றிகள்.இவ்ளோ நாள் பொறுமை காத்த விஜிகே சாருக்கும் ஸ்பெஷல் நன்றிகள். :)

   நீக்கு