என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-4


ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை


நூல் வெளியீடு:

சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)
நூல் ஆசிரியர்: 
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only

 


7) நான் மிஸ்டர் Y

மேலும் தனக்குக் குழந்தை பிறக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்ட ஒருத்தி, ஏற்கனவே ஒருமுறை வெற்றிகரமாகக் கருக்கலைப்பு செய்துகொண்ட மருத்துவ மனைக்கே சென்று, மீண்டும் கருக்கலைப்பு செய்துகொண்டு மிகவும்  நிம்மதியாக தன் வீட்டிற்குச் செல்கிறாள். 

ஆனால் ஐந்துமாதங்கள் ஆனபிறகே, தன் கரு கலையாமல் இன்னும் வயிற்றிலேயே வளர்ந்து வருவதை உணர ஆரம்பிக்கிறாள். இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை எனச் சொல்லி விட்டார்கள். 

இந்தமுறை சமீபத்தில் கருக்கலைப்பு செய்தவர்கள், ஏதோவொரு அவசரத்திலும் அலட்சியத்திலும், சரியான முறையில் அதனைச் செய்யாமல், அரைகுறையாக அவசரத்தில் செய்து சொதப்பியுள்ளனர். 

தினமும் கூட்டம் கூட்டமாக, இதே வேலைகளுக்காக அங்கு பல பெண்மணிகள் வந்து க்யூவில் நிற்கும்போது, மருத்துவமனையில் உள்ள அவர்களும் என்னதான் செய்வார்கள்? இதுபோன்ற ஓரிரு தவறுகள் எப்போதாவது நடப்பதும் சகஜம்தானே!

இதனால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவளின் வயிற்றுக்குள்ளிருந்து நம்முடன் பேசுபவரே மிஸ்டர் Y.  

ஹனி மேடம் நன்கு யோசித்து, மிகவும் நன்றாக எழுதியுள்ளார்கள் இந்தக்கதையை. 

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

உனக்கு மட்டுமல்ல, உன்னைப்போன்ற அறியாத தாய்களுக்கும், தகப்பன்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மாங்கலாய்டு, ஆட்டிசம், மெண்டல் டிஸ்ஸார்டர், ஸ்பாஸ்டிக், செரிப்ரல் பால்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வாழ உரிமையில்லையா .... எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள். 

விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்.   


[தினமலர் பெண்கள் மலரில் 28.06.2013 வெளியாகியுள்ள கதை இது]

 

8) சொர்க்கத்தின் எல்லை நரகம்

இது மிகவும் அழகான எனக்குப் பிடித்தமான கதை. ஏற்கனவே நம் ஹனி மேடம் பதிவினிலேயே படித்த ஞாபகமும் உள்ளது. மீண்டும் படிக்க அலுக்காத கதை.

குழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளவே கூடாது என சட்டம் சொல்கிறது. ஆனால் பலர் வீடுகளில் சின்னச்சின்னக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். அவர்களும் ஏதோ வறுமையினாலும், கொடுமையினாலும், ஆதரவற்ற நிலையிலும், வயிற்றுப் பசிக்காகவும், வீட்டு வேலைக்கு வந்துவிட நேரிடுகிறது. அது போல வருவோரில் எத்தனையோ பிஞ்சு உள்ளங்களும் உண்டு. 

அந்தப்பிஞ்சு உள்ளங்களாகிய அவர்கள் மனதிலும் குழந்தைகளுக்கே உரிய ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான ஒரு சின்னப் பெண் குழந்தையைப் பற்றிய கதை இது.  

உதாரணமாக கும்மென்ற வாஸனையுடன் கூடிய ஒரு புத்தம் புதிய முழு குளியல் சோப்பினைக் கண்டால், அது தேயும்வரை அதனை நன்கு தேய்த்து நாமும் என்றாவது ஒருநாள் ஆசைதீரக் குளிக்க மாட்டோமா எனத்தோன்றும் ஓர் குழந்தைக்கு. அதுபோல வாஸனையுள்ள ஹேர் ஆயில், ஸ்நோ போன்ற க்ரீம்கள், வாஸனையுள்ள ஃபேஸ் பவுடர், ரோஸ் பவுடர், நறுமணம் கமழும் செண்ட், கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மை முதலியவற்றை உபயோகிக்க ஓர் ஆசை ஏற்படத்தான் செய்யும். இவையெல்லாம் பெண் குழந்தைகளுக்கே உள்ள சின்னச்சின்ன, மிகவும் இயல்பான இயற்கையான  ஆசைகள் மட்டுமே.  

மிகவும் அழகாக, தனக்கே உரிய தனிப் பாணியில், இந்தக் கதையைத் தத்ரூபமாக எழுதி நமக்கு ஓர் மாபெரும் விருந்தே அளித்துள்ளார்கள், நம் ஹனி மேடம்.

அந்தச் சின்னஞ்சிறு குழந்தைத்தொழிலாளியாகிய பெண், தான் வேலைசெய்யும் அந்த வீட்டில், தனிமையில் இருந்து, தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, என்னதான் தப்பு செய்திருக்கட்டுமே, இப்படியா அந்தக்குழந்தையை அடித்து நொறுக்குவாள் அந்த எஜமானியம்மாள் என்ற அந்த ராட்சசி. :(

இந்தக் கதையைப் படித்து முடித்ததும் யாருக்குமே, கண்களில் கண்ணீர் வரப்போவது நிச்சயம். 

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

காலையில் கிளம்பி வெளியே ஆபீஸ் போன, வீட்டு எஜமானியம்மாள் மாலையில் வீட்டுக்குத் திரும்பி விட்டாள். 

தன் வீட்டில், தண்ணீர் நிரப்பி வைப்பது, துணி துவைத்து வைப்பது, களைந்து வைத்துள்ள அரிசியை இட்லி மாவாக அரைத்து வைப்பது போன்ற எந்த ஒரு வேலைகளும் செய்து முடிக்கப்படவில்லை. சமையல் கட்டில் தான் சாப்பிட வைத்திருந்த டிபன் பாக்ஸும் காலியாகியுள்ளது. வேலைக்கு வைத்துள்ள அந்தச்சின்னப் பெண்ணின் அலங்கோலமான அலங்காரங்களைப் பார்க்கிறாள். 

கோபத்தில் பாய்ந்தாள் ... அந்தக் குட்டியின் தலையில் ஒழக்கு இரத்தம் வர்றாப் போலக் கொட்டினாள். அவளின் தலைக்குஞ்சலம் எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தது. தொடையைத்திருகி முதுகில் சாத்துப்படி வைத்தாள். மடேர், மடேரென்று சும்மா ஒன்னா ரெண்டா வரிசையா ஏராளமான அடிகள். 

அந்தக் குட்டி, ஸ்ப்ரிங் மாதிரி ஒரு மூலையில் போய் சுருண்டு விழுந்தது. பயத்திலே பாவாடையிலே ஒண்ணுக்குப் போய்விட்டது. மூக்கில் சளி. பாவாடையால் தொடைத்துச்சுக்கிட்டது.  

குட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது. சோப்பும் மையும் பட்ட கண் எரிஞ்சுது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது.


வெரி வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் ...... 
என் ஸ்பெஷல் பாராட்டுகள், ஹனி மேடம். 

[மேரிலாண்ட் எக்கோஸ் 1985 - வெளியானது] 

 

9) அப்பத்தா

மரணம் என்றால் என்னவென்றே இதுவரை அறியாத ஓர் சின்னப்பெண் குழந்தையின் மன உணர்வுகளைச் சொல்லிச் செல்லும் மிகவும் அழகானதோர் கதை. அடிக்கடி வருவது போல, தன் ஆயா வீட்டிலிருந்து, தன் அப்பத்தா வீட்டுக்கு அந்தப்பெண் குழந்தை இப்போதும் வந்திருக்கிறாள்.

கண்டிப்பும் கறாருமாக, ஒருவித அதிகார தோரணையுடன், தான் உள்பட அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்துகொண்டிருந்த தன் அப்பத்தா, இப்போது அசையால் இப்படிக் கிடப்பதைப் பார்த்து ..... என்ன நடந்துகொண்டு இருக்கிறது இந்த வீட்டில் எனத் தெரியாமல் தவிக்கும் குழந்தை. 

டாக்டர் உள்பட யார் யாரோ வருகிறார்கள் .... போகிறார்கள். யாரும் எதுவும் இவளிடம் சொல்லாமலேயே இருக்கிறார்கள். இவளின் அப்பாவை உடனடியாக வரவழைக்க தந்தி கொடுக்க யாரிடமோ பணம் கொடுத்து யாரோ அனுப்பி வைக்கிறார்கள். அவளுக்கும் சந்தோஷம் .... தன் அப்பாவே இங்கு வரப்போகிறார் என்று.

அதிகார ஆளுமைகளுடன் இருந்துகொண்டு, அந்த வீட்டில் ஆட்சி செலுத்தி வந்துள்ள அப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் !

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

சாப்பாட்டுப் பந்தில சமையக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு அல்வா கேட்டா கண்ணால முழுச்சே எழுந்திரிக்க வைக்குற அப்பத்தாவா இப்படிக் கிடக்குறாங்க....?

சமையல்காரன் கிட்ட கணக்குப் பண்ணி அளவாச் சாமான் எடுத்துக் குடுத்து சமைக்கச் சொல்லுற அப்பத்தாவா இது....? ஏன் இப்படிப் படுத்துருக்காக... என்ன ஆச்சு... ஹூம்...  

அங்கு வந்த யாரோ சின்னப் பிள்ளைகளை ஓட்டிக்கொண்டு போய் பந்தியில் வரிசையாக உட்கார வைத்தார்கள். ஆல் வீட்டில் பந்தி, வாழையிலையுடன் கனஜோராய் நடந்து கொண்டிருந்தது. இவளையும் உட்கார வைத்தார்கள். சீயம் போட்டிருந்தார்கள். 

இவள் இட்லியை விட்டுப்புட்டுச் சீயத்தைத் தின்றாள். பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....? 

பந்திக்காரன் பக்கத்து இலை ஆயாவுக்குச் சீயத்தை வைக்க வந்தவன் இவள் திருதிருப்பதைப் பார்த்துவிட்டு, “என்ன, இன்னொரு சீயம் வேணுமா” என்று கேட்டுவிட்டு இவளுக்கு மேலும் ஒரு சீயம் போட்டுவிட்டுப்போனான். 

அப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.

திடீரென்று வெளியே ஒரே அலறல். எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பி ஒப்பாரி வைக்கின்றனர். அப்பத்தாவைச் சுற்றி நின்று ஏதேதோ சடங்குகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. ஆனால் தன் அப்பத்தா மட்டும் எதற்குமே அசைந்து கொடுக்காமல் படுத்துக்கொண்டே இருப்பது இந்தச் சின்னப்பெண்குட்டிக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. 

கடைசியில் ஓர் ஓலைப்பாயில் படுக்க வைத்து, எல்லோரும் அழுதபடி அப்பத்தாவை எங்கோ எதற்கோ சிலர் தூக்கிச் செல்கிறார்கள். அவளும் தெருமுக்கு வரை கூடவே ஓடிப்போய்ப் பார்த்தாள். 

அதற்குள் ஒரு ஐயா அவளைத் திரும்பி வீட்டுக்கு ஓடிவிடும்படி அதட்டினார்கள். வீட்டிற்கு ஓடிவந்தால், எல்லோரும் வீட்டைக்கழுவிக்கொண்டும், தலை முழுகிக் குளித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இரவு நேரத்திலும் வீட்டில் உள்ள எல்லா ட்யூப் லைட்களும் எரிந்துகொண்டிருந்தன. அவளையும் அழைத்துக்கொண்டுபோய் யாரோ ஒரு அயித்தை (அத்தை) அவள் தலையிலும் தண்ணீரைக் கொட்டினாள்.

மறுநாள் காலை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து தெருவில் பள்ளிக்குப் போகும் யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து “ஏய், எங்க வூட்டுக்கு விளையாட வர்றியா” எனக் கேட்கிறாள் இந்தக்குட்டி.  

“அது செத்த வீடு .....செத்துப்போன வீட்டுக்கு நா வரமாட்டேன்” என்று அந்தக்குட்டி சொன்னதும் இந்தக் குட்டிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. 

அதைவிட தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் செத்துப்போய் விட்ட அப்பத்தாவிடம் முதல் முறையாகக் கோபம் வந்தது, அந்தக்குட்டிக்கு.
இந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் 
36 மணி நேர இடைவெளிகளில்
வெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:

பகுதி-5 .... 28.09.2016 புதன் ..............   இரவு  10 மணிக்கு
பகுதி-6 .... 30.09.2016 வெள்ளி .........  பகல்  10 மணிக்கு

தொடரும்


 


என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]

96 கருத்துகள்:

 1. இன்றும் வித்தியாசமான மூன்று தலைப்புகள்.. சிந்தனைக்கு சிலவரிகள் ஓரளவு கதையை புரிந்துகொள்ள முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் September 27, 2016 at 10:40 AM

   //இன்றும் வித்தியாசமான மூன்று தலைப்புகள்.. சிந்தனைக்கு சிலவரிகள் ஓரளவு கதையை புரிந்துகொள்ள முடிகிறது.//

   வாங்கோ ரோஜா, வணக்கம்.

   இந்த என் இன்றைய பதிவுக்கு உன் முதல் வருகை எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. 2011 முதல் 2015 வரை நான் வெளியிட்டுள்ள பெரும்பாலான பதிவுகளுக்கு, முதல் பின்னூட்டமாக ஓர் தாமரை மட்டுமே மலர்வது வழக்கம்.

   அதை ஏனோ இப்போது நினைத்துப் பார்த்தேன் .... என் கண்களில் என்னையுமறியாமல் இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்தது. :(((((

   அப்பத்தா கதையில் கடைசி இரண்டு வரிகளில், அந்தப்பெண்குட்டிக்கு தன் அப்பத்தா மீது கோபம் வந்துள்ளது போலவே, எனக்கும் அந்தத் தங்கத் தாமரை மீது கோபம் வருகிறது ..... ’இப்படி என்னிடம்கூட சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாங்களே’ என்று.

   நீக்கு
  3. நன்றி பூந்தளிர். ஆம் விஜிகே சார் ராஜியை நானும் மிஸ் பண்றேன். :(

   நீக்கு
 2. மூன்று கதைகளும் நல் முத்துக்கள்.
  அருமையான மாலையாக தொடுத்து கொடுத்து விட்டீர்கள். அருமை.

  மூன்று கதைகளுக்கும் எடுத்துக் கொண்ட கரு அருமை.
  வரும் முன் காத்து இருக்கலாம், வந்தபின் அழிப்பது பாவம்.

  குழந்தையை அன்பாய் சொல்லி திருத்தி இருக்கலாம், இப்படியும் சிலர் தங்கள் கோபத்தை பிஞ்சிடம் காட்டுவது பாவம்.

  அப்பத்தாவின் மேல் பாசம் , பக்தி, பயம் எல்லாம் இருந்தாலும் பாசமும் அன்பும் தான் அதிகம் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்ட அப்பத்தா மேல் கோபம் வந்தது இயல்பு. பாசம் உள்ள இடத்தில் தான் கோபபட முடியும். நெகிழ்வான கதை.
  உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு September 27, 2016 at 11:18 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //மூன்று கதைகளும் நல் முத்துக்கள். அருமையான மாலையாக தொடுத்து கொடுத்து விட்டீர்கள். அருமை.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், மூன்று கதைகளைப்பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
  2. மிக்க நன்றி கோமதி மேம் & விஜிகே சார்.

   நீக்கு
 3. நன்முத்துகள் மூன்று. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். September 27, 2016 at 12:07 PM

   வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //நன்முத்துகள் மூன்று. தொடர்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   நீக்கு
  2. நன்றி ஸ்ரீராம். & விஜிகே சார் :)

   நீக்கு
 4. மூன்று கதைகளும் அருமை

  முதல் கதை, Y...? ஏன் இப்படி செய்கிறீகள்.... என செய்பவர்களை பார்த்து கேட்க தோணுகிறது... கோமதி அம்மா சொல்லியது போல் // வரும் முன் காத்து இருக்கலாம், வந்தபின் அழிப்பது பாவம்.//

  2வது கதையை அவர்கள் பக்கம் வாசித்து இருக்கிறேன்...குட்டியின் கதை மனத்தை வலிக்கச் செய்து விட்டது

  புரியாத வயதில் இறப்பை குழந்தைகள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என தங்களின் எடுத்துக்காட்டல் கதைப் பகுதி உணர்த்துகிறது.

  வாழ்த்துகள், பாராட்டுகள்....2 பேருக்கும்.

  டாண்ணு இன்னைக்கு வந்துட்டேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri September 27, 2016 at 12:27 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வாழ்த்துகள், பாராட்டுகள்....2 பேருக்கும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், மூன்று கதைகளைப்பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   //டாண்ணு இன்னைக்கு வந்துட்டேன்....//

   அதானே ! ஒரே ஆச்சர்யமாக உள்ளது.

   (மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுமோன்னு ஆகாயத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.)

   டாண்ணு (இன்னைக்கு மட்டும்) வந்ததற்கும் என் நன்றிகள்.

   நீக்கு
  2. அஹா உமா விரிவா பின்னூட்டம் போட்டிருக்கீங்க. அப்ப நீங்களும் பாஸ். பின்னூட்டம் போடுவதில் நாந்தான் பெயில் :(

   நன்றி உமா & விஜிகே சார் :)

   நீக்கு
 5. பதில்கள்
  1. Dr B Jambulingam September 27, 2016 at 1:20 PM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //மதிப்புரையே நூலைப் போல. அருமை.//

   ஆஹா, மதிப்புரையின் மதிப்பை உணர்ந்து அருமையாகச் சொல்லியுள்ள தங்களின் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   நீக்கு
  2. சரியா சொன்னீங்க ஜம்பு சார். ! மதிப்புரையே நூலைப் போல.. அட்சரலட்சம் பெறும் பின்னூட்டம் :)

   நீக்கு
 6. கொஞ்சம் கதை, கொஞ்சம் மதிப்புரை என்ற தங்களது பாணி பின்னி பெடலெடுக்கிறது. தேர்ந்த விமர்சகரின் விமர்சனம் ஒரு படைப்பை கட்டாயம் படிக்க வைத்துவிடும். தங்கள் எழுத்துக்கும் அந்த வல்லமை ஏராளமாய் உண்டு.
  தொடர்கிறேன் அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. S.P.SENTHIL KUMAR September 27, 2016 at 1:48 PM

   வாங்கோ, வணக்கம்.

   //கொஞ்சம் கதை, கொஞ்சம் மதிப்புரை என்ற தங்களது பாணி பின்னி பெடலெடுக்கிறது. தேர்ந்த விமர்சகரின் விமர்சனம் ஒரு படைப்பை கட்டாயம் படிக்க வைத்துவிடும். தங்கள் எழுத்துக்கும் அந்த வல்லமை ஏராளமாய் உண்டு.//

   ஒரு பிரபல இளம் பதிவரும், பத்திரிகை ஆசிரியரும், எழுத்துத்துறையிலேயே பலமுகங்களுடன் பணியாற்றி வருபவரும், அற்புதமான எழுத்துக்களால் என்னைக் கவர்ந்துள்ளவருமான தங்களின் வாயால் இதனைக் கேட்க தன்யனானேன். என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //தொடர்கிறேன் ஐயா!//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் மிகச் சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
  2. மெய்யாலுமே பின்னிப் பெடல் எடுக்கிறது. பின்னூட்டத்தையே பார்ட் பார்டாக போடுகிறேன் அதனால்தான். செந்தில் சகோ . நன்றி விஜிகே சார் :)

   நீக்கு
 7. ஆண் குரோமோசோன் Y மிஸ்டர் Y -- பலே!

  சொர்க்கத்தின் எல்லை நரகம்-- நானும் ஏற்கனவே படித்த நினைவு இருக்கிறது. நரகத்தின் எல்லையும் சொர்க்கம் தான் போலிருக்கு.

  உயிருடன் அப்பத்தா வாழ்ந்த பொழுது பார்த்துப் பழகியிருந்த உணர்வுகளை கொட்டிய கதை என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி September 27, 2016 at 2:34 PM

   //ஆண் குரோமோசோன் Y மிஸ்டர் Y -- பலே!//

   WHY இதுபோல என்னைச்சித்திரவதை செய்கிறீர்கள் என மிஸ்டர் Y கேட்பதுபோல தலைப்பு வைத்திருக்கும், கதாசிரியர் தங்கத் தலைவிக்கு நானும் உங்களுடன் சேர்ந்து ஒரு ‘பலே’ சொல்லிக்கொள்கிறேன். :)

   //சொர்க்கத்தின் எல்லை நரகம்-- நானும் ஏற்கனவே படித்த நினைவு இருக்கிறது.//

   அதில் அவர்களின் எழுத்துப்பாணி, ஒரு சின்ன பெண் குழந்தை செய்யக்கூடிய குழந்தைத்தனத்தினை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிப்பதாகப் படா ஜோராக இருந்தது. என்னை மிகவும் கவர்ந்தது. :)

   //நரகத்தின் எல்லையும் சொர்க்கம் தான் போலிருக்கு.//

   தாங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்தான். சொர்க்கம் நரகம் இரண்டிலேயுமே நான் இன்னும் எல்லைகளைத் தொட்டது இல்லை என்பதால் எனக்கு இதுபற்றி சரிவரத் தெரியாமல் உள்ளது :)

   //உயிருடன் அப்பத்தா வாழ்ந்த பொழுது பார்த்துப் பழகியிருந்த உணர்வுகளை கொட்டிய கதை என்று தெரிகிறது.//

   கரெக்ட். நிச்சயம் அப்படித்தான் இருக்கணும்.

   ’அப்பத்தா’ என்றால் அப்பாவின் அம்மாவாகத்தான் இருக்கும் என்று படிக்கும்போதே புரிந்துகொள்ள முடிந்தது என்னால்.

   எதற்கும் *‘ஆச்சி’* என்ற என் நட்பான வேறொரு பதிவரிடமும் கேட்டு இதனை நான் கன்ஃபார்ம் செய்துகொண்டேன்.

   *’ஆச்சி’* க்கான இணைப்புகள்
   http://gopu1949.blogspot.in/2015/01/20.html http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html

   பொதுவாக அப்பாவையோ, அம்மாவையோ பெற்றவளை நாம் ‘ பாட்டி’ என்று மட்டுமே சொல்லுவோம்.

   அப்பாவைப் பெத்த ஆத்தா என்பதால் ’அப்பத்தா’ என இவர்கள் தன் கதையில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
  2. உண்மைதான் ஜிவி சார் & விஜிகே சார் :) அழகான புரிதலுக்கு மிக்க நன்றி இருவருக்கும் :)

   நீக்கு
 8. மூன்று கதைகளையும் நன்றாக விமரிசனம் பண்ணியுள்ளீர்கள். நிறைவாகப் பாராட்டியுள்ளீர்கள். அது வெறும் முகஸ்துதிக்காகச் சொன்னதல்ல என்பதை, ஒவ்வொரு கதையிலும் வரும் முக்கியமான வரிகளைப் படித்தபோது தெரிந்துவிட்டது.

  தான் அடைந்த பாதிப்பை, அப்படியே கதைமூலம் வாசகர்களுக்குக் கடத்தும் வித்தை பெற்றவர்கள்தான் சிறந்த கதை எழுத்தாளர்களாக ஆக முடியும். இரண்டாவது (சொர்க்கத்தின் எல்லை) துன்பியல் என்றால், மூன்றாவது (அப்பத்தா) செட்டி'நாட்டை நினைவுபடுத்தியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 4:48 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மூன்று கதைகளையும் நன்றாக விமரிசனம் பண்ணியுள்ளீர்கள். நிறைவாகப் பாராட்டியுள்ளீர்கள். அது வெறும் முகஸ்துதிக்காகச் சொன்னதல்ல என்பதை, ஒவ்வொரு கதையிலும் வரும் முக்கியமான வரிகளைப் படித்தபோது தெரிந்துவிட்டது.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. உங்களைப்போல யாராலும் பின்னூட்டமே கொடுக்க இயலாது. நானும் இதனை வெறும் முகஸ்துதிக்காக மட்டும் சொல்லவில்லை. உண்மையாக என் மனம் திறந்து பெரும் மகிழ்ச்சியுடன் சொல்லியுள்ளேனாக்கும். :)

   //தான் அடைந்த பாதிப்பை, அப்படியே கதைமூலம் வாசகர்களுக்குக் கடத்தும் வித்தை பெற்றவர்கள்தான் சிறந்த கதை எழுத்தாளர்களாக ஆக முடியும்.//

   அதே.... அதே.... எங்கட ஹனி மேடமும் அதே போலத்தானாக்கும். :)

   //இரண்டாவது (சொர்க்கத்தின் எல்லை) துன்பியல் என்றால், மூன்றாவது (அப்பத்தா) செட்டி'நாட்டை நினைவுபடுத்தியது.//

   கதாசிரியர் அவர்களும் ஒருவேளை செட்டிநாட்டுக்காரர்களாக இருக்கக்கூடுமோ என்பது என் யூகம். :)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும், உற்சாகமும் அளித்திடும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. அஹா மிக்க நன்றி நெல்லைத் தமிழன் & விஜிகே சார் !

   நீக்கு
 9. பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... September 27, 2016 at 5:23 PM

   //மூன்றுமே முத்தான பகிர்வுகள்....//

   வழக்கமாக இங்கு வருகைதந்து விரிவாக கருத்துச் சொல்லிவந்த எங்கட ஒரிஜினல் ஸ்ரத்தா, ஸபுரி... எங்கே?????????? :(

   எனினும் மூன்று வரிகளை மட்டும் எழுதியிருக்கும் டூப்ளிகேட் ஸ்ரத்தா, ஸபுரி... அவர்களுக்கும் என் நன்றிகள்.

   நீக்கு
  2. //விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம். //

   ஹா ஹா.. சந்தடி சாக்குல என்னை டூப்ளிகேட்டுனு சொல்லிட்டீங்களே.. பரவால்ல எங்கட கோபால் ஸார்தானே சொன்னாங்க.. அதுவும் என்னை மீண்டும் இங்கு வரவழக்கவேதான் சொல்லி இருக்காங்கனு நல்லாவே புரியுது...)))
   இந்தக்கதையில் மிஸ்டர்ஒய்...சொல்லியிருப்பதுபோல கற்பனை பண்ணி இருப்பது. சிறப்பு

   நீக்கு
  3. சொர்க்கத்தின் எல்லை...நகரம்.... குழந்தை தொழிலாளிகள் பற்றிய கதை என்று புரியமுடிகிறது..
   //அந்தப்பிஞ்சு உள்ளங்களாகிய அவர்கள் மனதிலும் குழந்தைகளுக்கே உரிய ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான ஒரு சின்னப் பெண் குழந்தையைப் பற்றிய கதை இது. //

   மேடம் வித்தியாசமாகத்தான் யோசிக்குறாங்க..

   நீக்கு
  4. அப்பத்தா கதைபோலவே தோணல உண்மைசம்பவம்போலவே தோணுது
   //அதைவிட தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் செத்துப்போய் விட்ட அப்பத்தாவிடம் முதல் முறையாகக் கோபம் வந்தது, அந்தக்குட்டிக்கு//

   அப்பத்தாவுக்கே தன் சாவு பற்றி தெரிந்திருக்காதோ..எப்படி அந்த குட்டியிடம் சொல்லி இருக்கமுடியும்..

   நீக்கு
  5. ஸ்ரத்தா, ஸபுரி... September 28, 2016 at 10:12 AM

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ .... வணக்கம்.

   //ஹா ஹா.. சந்தடி சாக்குல என்னை டூப்ளிகேட்டுனு சொல்லிட்டீங்களே.. பரவால்ல எங்கட கோபால் ஸார்தானே சொன்னாங்க.. அதுவும் என்னை மீண்டும் இங்கு வரவழக்கவேதான் சொல்லி இருக்காங்கனு நல்லாவே புரியுது...)))//

   ஜஸ்ட் மூன்று வார்த்தைகளுடன் முடித்திருந்த டூப்ளிகேட் ’ஸ்ர்த்தா, ஸபுரி’யைத் தேடிக் கண்டு பிடித்துக் கண்டித்துவிட்டு, மேலும் மூன்று விரிவான பின்னூட்டங்கள் கொடுத்துள்ள ’ஒரிஜினல் ஸ்ரத்தா, ஸபுரி...’ வாழ்க !

   //இந்தக்கதையில் மிஸ்டர் ஒய் ... சொல்லியிருப்பதுபோல கற்பனை பண்ணி இருப்பது. சிறப்பு//

   ஆமாம். அவர்களின் எழுத்தும் தலைப்பும் சிறப்பாகவே உள்ளன.

   //மேடம் வித்தியாசமாகத்தான் யோசிக்குறாங்க..//

   ஆமாம். அழகாக வித்யாசமாக யோசித்து எழுதி இருக்காங்க. :)

   //அப்பத்தாவுக்கே தன் சாவு பற்றி தெரிந்திருக்காதே.. எப்படி அந்த குட்டியிடம் சொல்லி இருக்கமுடியும்..//

   இந்தக்கதையில் அந்தக்குட்டிக்கு முதன்முதலாகத் தன் அப்பத்தா மீது கோபம் வந்ததாகச் சொல்லும் அந்த வரிகள்தான் முத்திரை வரிகளாகத் தோன்றி என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
   -=-=-=-

   தங்களின் மீண்டும் மீண்டும் வருகைக்கும், அனைத்துக் கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. அன்புடன் VGK

   நீக்கு
  6. குழந்தைதானே மன்னித்துவிடுங்கள் ஸ்ரத்தா ஸபுரி. :) நன்றி விரிவான பின்னூட்டத்துக்கு. நன்றி விஜிகே சார். :)

   நீக்கு
  7. முத்திரை வரிகள் என்று சொல்லி அக்கதையைச் சிறப்பித்துள்ளீர்கள். நன்றி நன்றி விஜிகே சார் :)

   நீக்கு
 10. விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்.   //

  என்ன ஆணித்தரமான வார்த்தைகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்....... September 27, 2016 at 5:26 PM

   வாங்கோ, வண்க்கம்.

   **விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்.**

   //என்ன ஆணித்தரமான வார்த்தைகள்//

   ஆம். இருப்பினும், இவை பசுமரத்தாணி போல அனைவர் மனதிலும் பதிய வேண்டும்.

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆணித்தரமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. நன்றி ஆல் இஸ் வெல். என்ன சொல்றதுன்னு தெரில.

   நன்றி விஜிகே சார்

   நீக்கு
 11. தொடர் பதிவுகள் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது... வாழ்த்துகள் ஸார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீனி வாசன் September 27, 2016 at 5:34 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தொடர் பதிவுகள் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது... வாழ்த்துகள் ஸார்.//

   அப்படியா! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. நன்றி ஸ்ரீனிவாசன் சார் & விஜிகே சார்

   நீக்கு
 12. புது புது கண்ணோட்டத்தில் வித்யாசமான கதைகளை மேலோட்டமாக தெரிந்து கொள்ள முடிகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ராப்தம் September 27, 2016 at 5:37 PM

   வாங்கோ சாரூஊஊஊ, வணக்கம்.

   //புது புது கண்ணோட்டத்தில் வித்யாசமான கதைகளை மேலோட்டமாக தெரிந்து கொள்ள முடிகிறது...//

   புரிகிறது. நீ இப்போது என்னிடம் என்ன சொல்ல வருகிறாய் என்பது, எனக்கு எல்லாமே நல்லாவே புரிகிறது. :)

   உன் அன்பான வருகைக்கும், புதுப்புதுக் கண்ணோட்டத்தில் வித்யாசமான கதைகளை மேலோட்டமாகத் தெரிந்து கொள்ள முடிந்ததற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூ.

   நீக்கு
  2. சாரு சாரிடம் புக் வாங்கி வாசியுங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். :) வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ப்ராப்தம் & விஜிகே சார் :)

   நீக்கு
 13. கோபு பெரிப்பா இவ்வளவு வேக வேகமா ஒருநா விட்டு ஒருநா எப்படி பதிவு போட முடியறது... அதுமட்டுமில்லை.. கமெண்ட் போட்றவா எல்லாருக்குமே பெரிய பெரிய பதிலா எப்படி எழுதறேள்...உங்க சுறுசுறப்ப பாத்தா பொறாமையா இருக்கு
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அத சொல்லுங்க ஹேப்பி. நானும் உங்க பெரியப்பா பின்னாடியும் - எங்க விஜிகே சார் - மத்த வலைத்தள நட்புகள் பின்னேயும் தொடர்ந்து ஓட முடில. யப்பா கமெண்ட்ஸ் ல என்னா வேகம் என்னா வேகம். அசத்துறாங்க. பொறாமையா இருக்கு. இவ்ளோ பாசத்துக்கும் என்ன கைமாறு பண்ணப் போறேனோ. கடனாளியாத்தான் திரியப் போறேன் :)

   நீக்கு
  2. happy September 27, 2016 at 5:41 PM

   வாம்மா, என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம்.

   //கோபு பெரிப்பா இவ்வளவு வேக வேகமா ஒருநா விட்டு ஒருநா எப்படி பதிவு போட முடியறது... அதுமட்டுமில்லை.. கமெண்ட் போட்றவா எல்லாருக்குமே பெரிய பெரிய பதிலா எப்படி எழுதறேள்...//

   எல்லாம் உன்னால் மட்டும்தான்..டா க்கண்ணு. குழந்தைபோன்ற பால் வடியும் உன் சிரித்த முகத்தை அடிக்கடி என் மனதில் நினைத்துக்கொள்வேன். உடனே எனக்குப் பேரெழுச்சியும், புதுத்தெம்பும் ஏற்பட்டு விடுகிறது. அதனால் மட்டுமே இந்த மிகச் சாதாரணமானவனால், கொஞ்சமாவது இதுபோன்ற சாதனைகளை எட்ட முடிகிறது.

   //உங்க சுறுசுறப்ப பாத்தா பொறாமையா இருக்கு//

   இப்போ உன்னைப்பார்த்தால்தான் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. என்னே உன் அதிர்ஷ்டம் பாரு .... மஹா மஹா அதிர்ஷ்டமான பெண்குட்டி நீ.

   இந்தப்பதிவினில் யாருக்குமே பதில் அளிக்காத நம் ஹனி மேடம், உனக்கு மட்டும், ஸ்பெஷலாக பதில் அளித்துள்ளார்கள் பாரு. இதுபோன்ற அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்?

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> குழந்தை ஹாப்பி (2)

   ஹனி மேடம் என்ன நம்மைப்போல சாதாரணமானவர்களா?

   பரம்பரைப் பணக்காரக் கோடீஸ்வரியாக்கும்.

   செட்டிநாட்டில் மிகப்பெரிய மாளிகை பங்களா போன்ற, அவர்கள் வீட்டின் கலை நுணுக்கங்கள் மிக்க, அசல் தேக்கினால் ஆன ஒவ்வொரு கதவும், ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு ஜன்னல்களும் பல லக்ஷ ரூபாய்களுக்கு மேல் இருக்கும்.

   கொல்லையோடு வாசல் மிகப் பிரும்மாண்டமான வீடாக்கும்.

   செட்டிநாட்டு வீடுகளைப்பற்றியே இவர்கள் நிறைய பதிவுகள் கொடுத்திருக்காங்கோ.

   உனக்குச் சந்தேகமானால் இதோ இந்த ஒரிரு பதிவுகளை மட்டுமாவது போய்ப்பாரு:

   http://honeylaksh.blogspot.in/2014/12/chettinadu-houses.html

   http://honeylaksh.blogspot.in/2015/02/blog-post_10.html

   அப்படியே பிரமித்துப்போய் விடுவாய்.

   >>>>>

   நீக்கு
  4. கோபு >>>>> குழந்தை ஹாப்பி (3)

   அது மட்டுமா, நம் ஹனி மேடம் மிகவும் படித்தவர்கள். மஹா மஹா கெட்டிக்காரங்க. சகலகலா வல்லி.

   கவிதை, கதை, கட்டுரை, கோலங்கள், பக்தி பற்றிய ஆன்மிக விஷயங்கள், கலை, கட்டடம், ஷேர் மார்க்கெட், சமையல் குறிப்புகள் என எல்லாவற்றையும் பற்றித் தெரிஞ்சவங்க.

   பல வார/மாத இதழ்களிலும் எழுதியிருக்காங்க. வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டர், மற்ற இணைய இதழ்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற அனைத்திலும் ஏராளமாக எழுதிக்கொண்டே இருக்காங்க. இதுவரை ஐந்து நூல்களும் வெளியிட்டுள்ளார்கள்.

   ஹனி மேடம், சாதாரணப் பெண்மணியே அல்ல. சாதிக்கப் பிறந்தவங்க. அனைத்திலும் ஆர்வமுள்ள அதி அற்புதமான திறமைசாலியாக்கும்.

   அனைவருடனும் நட்புடன் பழகும் நல்ல குணங்கள் உள்ளவரும்கூட.

   மொத்தத்தில் நிமிர்ந்த நடை + நேர்கொண்ட பார்வை + தெளிந்த அறிவு + அசாத்ய துணிச்சல் + ஆளுமை சக்தி + அன்பான உள்ளம் = நம் ஹனி மேடம்.

   இவ்வளவு பெருமைகள் வாய்ந்த இவர்கள் இன்று உன் ஒருத்தியின் பின்னூட்டத்திற்கு மட்டுமே பதில் அளித்துள்ளார்கள் என்றால், என் செல்லக்குழந்தையாகிய நீ எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கணும். :)))))

   உன்னைக்கண்டால் எனக்கும் தான் மிகவும் பொறாமையாக இருக்குது...டா செல்லம்.

   -=-=-=-=-

   உன் வருகைக்கு நன்றி....டா ஹாப்பி.

   நீக்கு
  5. கோபு பெரிப்பா... தேனம்மை அவர்கள் என்கமெண்டுக்கு மட்டுமே பதில் சொல்லி இருக்காங்க. என்னை யாருக்குமே தெரியாதே பெரிப்பா..உங்க பதிவுக்கு மட்டும்தானே வந்துண்டிருக்கேன்.. உங்களால் கிடைச்சிருக்கு பெருமைதான்இது.. தேனம்மை மேடம் நன்றிகள் பெரிப்பாவுக்கு நன்றி தாங்க்ஸெல்லாம் சொல்லலாமா...தெரியலியே..

   நீக்கு
  6. happy September 28, 2016 at 9:56 AM

   வாடா .... கண்ணு, ஹாப்பி. உன் மீண்டும் மீண்டும் வருகை எனக்கு ஒரே ஹாப்பியாக உள்ளது...டா.

   //கோபு பெரிப்பா... தேனம்மை அவர்கள் என்கமெண்டுக்கு மட்டுமே பதில் சொல்லி இருக்காங்க.//

   யூ ஆர் ஒன்லி தி லக்கியெஸ்ட் ஆஃப் ஆல், ஹியர்.

   //என்னை யாருக்குமே தெரியாதே பெரிப்பா..//

   அதனால் என்ன? உன்னை நான் அறிவேன் ... என்னை நீ அறிவாய் ... நம்மை நாம் அறிவோம் ... அதுவே போதுமேடா செல்லம்.

   //உங்க பதிவுக்கு மட்டும்தானே வந்துண்டிருக்கேன்.. உங்களால் கிடைச்சிருக்கும் பெருமைதான் இது..//

   அப்படியெல்லாம் நினைக்காதே .... சொல்லாதே. நான் உன் நலம் விரும்பியாக இருப்பதால், என் மனம் நிறைந்த ஆசிகளால், உனக்கு அடுத்தடுத்து அனைத்துப் பெருமைகளும் ஆட்டோமேடிக் ஆக வந்து சேரும். கவலையே படாதே.

   ஸ்ரீ பெருமாள் அருளால் விரைவில் நமக்கான அந்த சொர்க்க வாசலும் திறக்கும். :)

   //தேனம்மை மேடம் நன்றிகள்.//

   ஹனி மேடம் சார்பில் உன் நன்றிகளுக்கு என் நன்றிகள்.....டா, செல்லம்.

   //பெரிப்பாவுக்கு நன்றி தாங்க்ஸெல்லாம் சொல்லலாமா...தெரியலியே..//

   எனக்கு அதெல்லாம் சொல்ல வேண்டாம். சீக்கரமாக நல்லதொரு இனிய செய்தியினை மெயில் மூலம் சொல்லு .... அதுவே எனக்குப்போதும்....டா.

   நீக்கு
  7. அஹா ! ஹேப்பி இன்று முதல் ஹேப்பி. இல்ல அன்னிலேருந்தே ஹேப்பி. திரும்ப வர தாமதமாயிடுச்சு மன்னிச்சுக்கோம்மா.

   விஜிகே சார் நான் மதியதர வர்க்கத்தைச் சேர்ந்த சாதரணப் பெண். எல்லாம் முன்னோர் கொடுத்தது. என்னுதுன்னு எதுவும் இல்ல.எழுதணும்கிற ஆர்வமும் திறமையும் விடாமுயற்சியுமே நமது சொத்து.அது கூட அவங்ககிட்டேருந்து ஜீன்ஸ்ல வந்ததா இருக்கலாம். :)

   பெரிய பெரிய புகழ் வார்த்தைகளுக்கு நான் தகுதியானவளா தெரியல. உங்க பேரன்புக்கும் என் மேல் வைத்திருக்கும் மதிப்புக்கும் நன்றி சார். :)

   நீக்கு
 14. எப்படித் தேனம்மை அவர்களால்
  இவ்வளவு பதிவுகள் எழுத முடிகிறது
  இந்தத் தொடர்ப்பதிவின் முடிவில் அவர்களிடம்
  அவர்களிடன் அன்றாடநேர நிர்வாகம்
  குறித்து ஒரு விரிவான
  பேட்டி எடுத்துப் போட்டால் கூட
  என் போன்றவர்களுக்குப் பயன்படுமே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ramani S September 27, 2016 at 9:05 PM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //எப்படித் தேனம்மை அவர்களால் இவ்வளவு பதிவுகள் எழுத முடிகிறது? இந்தத் தொடர்ப்பதிவின் முடிவில் அவர்களிடம் அவர்களிடன் அன்றாடநேர நிர்வாகம் குறித்து ஒரு விரிவான பேட்டி எடுத்துப் போட்டால் கூட என் போன்றவர்களுக்குப் பயன்படுமே ?//

   இதையேதான் நான் எனக்குள் நினைச்சேன். நீங்க அதையே இங்கு சொல்லிட்டீங்க.

   நீங்களே அவர்களைப் பேட்டி கண்டு உங்கள் பதிவினில் வெளியிட்டால், அது நிறைய பேர்களைச் சென்றடையும் வாய்ப்பு உண்டு.

   இதனால் உங்களுக்கு மட்டுமல்ல .. நம் எல்லோருக்குமே மிகவும் பயன்படும், ஸார்.

   தயவுசெய்து செய்யுங்கோ, ப்ளீஸ்.

   நீக்கு
  2. ரமணி சார். ஓரிரு நாள் இரவில் தூங்குவதில்லை. ப்ரீ போஸ்ட் போட்டு வைச்சிட்டு இருப்பேன் :) மேலும் எல்லாப் பதிவும் செறிவானதல்ல. சில ஃபுட் ஃபோட்டோகிராஃபி, சில விநாயகர், சில பூக்கள், சில குழந்தைகள், சில கவிதைகள், சில விமர்சனம், சிலது சாட்டர்டே போஸ்ட், சிலது உணவுக் குறிப்புகள் , சில சிறுகதை, கட்டுரை , போட்டி பற்றிய பகிர்வுகள் என்று கலந்து கட்டி அடிக்கிறேன். மொத்தத்தில் நான் ஒரு ப்லாக் அடிக்ட். அவ்ளோதான் :)

   நன்றி ரமணிசார் & விஜிகே சார் :)

   நீக்கு
 15. மூன்றும் குழ்ந்தைகள் குறித்தானதுதான்
  என்றாலும் கூட மூன்று நிலைகள்
  குறித்தும் அந்த நிலைகளுக்கேயான
  பிரச்சனைகளை மிகச் சரியாகத் தொட்டுச்
  சென்றவிதம் அருமை
  விமர்சித்த விதமும்...
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ramani S September 27, 2016 at 9:09 PM

   //மூன்றும் குழ்ந்தைகள் குறித்தானதுதான் என்றாலும் கூட மூன்று நிலைகள் குறித்தும் அந்த நிலைகளுக்கேயான பிரச்சனைகளை மிகச் சரியாகத் தொட்டுச் சென்றவிதம் அருமை. விமர்சித்த விதமும்...
   பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
  2. ஆம் ரமணி சார். பிறக்கப் போகும் குழந்தை, குழந்தைத் தொழிலாளியான குழந்தை, மற்றும் பள்ளி செல்லும் பருவத்தில் அறிந்தும் அறியாமலும் வீட்டில் நிகழும் நிகழ்வுக்கு சாட்சியாக நிற்கும் ஒரு குழந்தை - பற்றிய பதிவுகள் இவை. நன்றி கருத்துக்கு :) நன்றி விஜிகே சார்

   நீக்கு
 16. அன்புடையீர்,

  அனைவருக்கும் வணக்கம்.

  மொத்தம் ஆறு பகுதிகள் கொண்ட இந்த என் மிகச்சிறிய தொடரில், இதுவரை என்னால் வெளியிடப்பட்டுள்ள நான்கு பகுதிகளில், ஏதேனும் ஒருசில பகுதிகளுக்காவது அன்புடன் வருகை தந்துள்ள கீழ்க்கண்ட உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  Position as on 28.09.2016 ..... 8 AM (IST)
  ============================================

  திருவாளர்கள்:
  =================

  01) எஸ். ரமணி அவர்கள்
  02) ப. கந்தசாமி அவர்கள்
  03) தி. தமிழ் இளங்கோ அவர்கள்
  04) ஸ்ரீராம் அவர்கள்
  05) முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள்
  06) வே. நடன சபாபதி அவர்கள்
  07) ஜீவ.யாழ்.காசி.லிங்கம் அவர்கள்
  08) ஜீவி அவர்கள்
  09) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்
  10) ‘தளிர்’ சுரேஷ் அவர்கள்
  11) யாதவன் நம்பி அவர்கள்
  12) ஸ்ரத்தா, ஸபுரி... அவர்கள்
  13) ஆல்-இஸ்-வெல் அவர்கள்
  14) ஸ்ரீனி வாசன் அவர்கள்
  15) வெங்கட் நாகராஜ் அவர்கள்
  16) நெல்லைத்தமிழன் அவர்கள்
  17) பரிவை சே. குமார் அவர்கள்
  18) S P செந்தில் குமார் அவர்கள்

  திருமதிகள்:
  =================

  19) மனோ சுவாமிநாதன் அவர்கள்
  20) கோமதி அரசு அவர்கள்
  21) ஜெயந்தி ஜெயா அவர்கள்
  22) ‘பூந்தளிர்’ ராஜாத்தி-ரோஜாப்பூ அவர்கள்
  23) ஷாமைன் பாஸ்கோ அவர்கள்
  24) ‘ப்ராப்தம்’ சாரூஜி அவர்கள்
  25) காமாக்ஷி மாமி அவர்கள்
  26) உமையாள் காயத்ரி அவர்கள்
  27) ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
  28) ஞா. கலையரசி அவர்கள்
  29) தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

  செல்வி:
  =================

  30) ‘ஹாப்பி’ அவர்கள்

  -oOo-

  நன்றியுடன் VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரமணி சார், கந்தசாமி சார், இளங்கோ சார், ஸ்ரீராம், ஜம்பு சார், நடன சபாபதி சார், யாழ் சகோ, ஜிவி சார், துளசி சகோ, கீத்ஸ், சுரேஷ் சகோ, யாதவன் சகோ,ஸ்ரத்தா ஸபுரி, ஆல் இஸ் வெல், ஸ்ரீனிவாசன் சார், வெங்கட் சகோ, நெல்லைத் தமிழன் சார், குமார் சகோ,செந்தில் சகோ, மனோ மேம், கோமதி மேம், ஜெயந்தி, பூந்தளிர், ஷாமைன் மேம், ப்ராப்தம், காமாக்ஷி மேம், உமா, ராஜலெக்ஷ்மி மேம், கலையரசி, ஹேப்பி :) & விஜிகே சார் :)

   நீக்கு
 17. Position as on 28.09.2016 ..... 8 AM (IST)
  ===============================================

  மொத்தம் ஆறு பகுதிகள் கொண்ட இந்த என் மிகச்சிறிய தொடரில், இதுவரை என்னால் வெளியிடப்பட்டுள்ள நான்கு பகுதிகளுக்கும் (100%) அன்புடன் வருகை தந்துள்ள

  திருவாளர்கள்:-
  ================

  1) S. ரமணி அவர்கள்
  2) ஸ்ரீராம் அவர்கள்
  3) ஜீவி அவர்கள்
  4) ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள்
  5) ஆல் இஸ் வெல் அவர்கள்

  திருமதிகள்:-
  ================

  6) ’ப்ராப்தம்’ சாரூஜி அவர்கள்
  7) ‘பூந்தளிர்’ ராஜாத்தி-ரோஜாப்பூ அவர்கள்
  8) கோமதி அரசு அவர்கள்
  9) உமையாள் காயத்ரி அவர்கள்

  செல்வி:-
  ================

  10) கொழுகொழு மொழுமொழு, அமுல் பேபி
  சிரித்தமுகச் சிங்காரி, ’ஹாப்பி’ அவர்கள்

  ஆகியோருக்கு என் கூடுதல் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இந்தத் தொடரின் நிறைவுப்பகுதியில் மீண்டும்
  ஒருமுறை இதுபோல புள்ளி விபரங்கள் தரப்படும்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மீண்டும் அனைவருக்கும் :) அன்பு வாழ்த்துகள். தொடர்ந்த ஊக்குவிப்புக்கு நன்றி விஜிகே சார் :)

   நீக்கு
 18. தேனம்மை மேடம் பற்றி நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்கணுமே முடிஞ்சது. வித்தியாசமான தலைப்புகளில் வித்தியாசமான கதைகளையும் எழுதிவறாங்க. வாழ்த்துகளும் பாராட்டுகளையும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco September 28, 2016 at 10:24 AM

   வாங்கோ மேடம், வணக்கம். நல்லா இருக்கீங்களா? பிள்ளைகளுக்கெல்லாம் இப்போ எக்ஸாம் டயமா?

   //தேனம்மை மேடம் பற்றி நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சுது.//

   மிகவும் சந்தோஷம்.

   //வித்தியாசமான தலைப்புகளில் வித்தியாசமான கதைகளையும் எழுதிவறாங்க. வாழ்த்துகளும் பாராட்டுகளையும் சொல்லிக்கொள்கிறேன்//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஹனி மேடத்தை வாழ்த்திப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் கிருஷ்ணா(ஜா)ஜி. :)

   நீக்கு
  2. நன்றி ஷாமைன் மேம் & விஜிகே சார்

   நீக்கு
 19. இன்றுதான் இப்பதிவைப் பார்க்க முடிந்தது. அப்பத்தா கதை படிக்கும்போது என் பாட்டியின் நினைவு வந்தது. பிஞ்சுக்குழந்தையைப் படுத்தியது மனதில் துயரமாகிவிட்டது. கதைகளானாலும் கம்மெதிரில் நடப்பதுபோல ஒரு பிரமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாட்சி September 28, 2016 at 6:43 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //இன்றுதான் இப்பதிவைப் பார்க்க முடிந்தது.//

   அதனால் என்ன? பரவாயில்லை.

   //அப்பத்தா கதை படிக்கும்போது என் பாட்டியின் நினைவு வந்தது.//

   எனக்கு என் பெரியம்மா (அம்மாவின் அக்கா) ஞாபகம் வந்தது.

   //பிஞ்சுக்குழந்தையைப் படுத்தியது மனதில் துயரமாகிவிட்டது. கதைகளானாலும் நம்மெதிரில் நடப்பதுபோல ஒரு பிரமை. அன்புடன்//

   ஆமாம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மாமி.

   நீக்கு
  2. நன்றி காமாட்சி மேம் & விஜிகே சார் !

   நீக்கு
  3. நன்றி காமாட்சி மேம் & விஜிகே சார்

   நீக்கு
 20. இப்பதிவில் குறிப்பிட்டு இருக்கும் இரண்டாவது கதை படித்த நினைவு..... மற்ற கதைகளையும் படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் September 28, 2016 at 8:14 PM

   வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

   //இப்பதிவில் குறிப்பிட்டு இருக்கும் இரண்டாவது கதை படித்த நினைவு..... மற்ற கதைகளையும் படிக்க வேண்டும்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ & விஜிகே சார்.

   நீக்கு
 21. வழக்கம் போலவே நூலாசிரியரின் கதைகளை சுருக்கி சாரு பிழிந்து தந்திருக்கிறீர்கள்.
  ‘நான் மிஸ்டர் Y’ என்ற கதையில் கருக்கலைப்பு செய்பவர்களின் மன நிலையிலிருந்து பார்க்காமல் கலைக்கப்படும் கரு வின் கோணத்திலிருந்து அதுவே பேசுவதுபோல் கதையை சொல்லியிருப்பது புதிய உத்தி.
  // எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள். //
  என்று அந்த Y சொல்வது சிந்திக்க வைக்கிறது. ‘ஆக்கபட்ட பொருள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தம்’ என்ற பராசக்தியின் உரையாடல் இங்கே நினைவுக்கு வருகிறது.

  சொர்க்கத்தின் எல்லை நரகம் என்ற கதையில் தப்பு செய்த அந்த குழந்தையை அந்த வீட்டு எஜமானி இப்படியா அடித்து நொறுக்குவாள் என்று நீங்கள் சொல்லும்போது கதையை படிக்காமலே கண்ணீர் வருகிறது.
  // குட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது.//
  என்ற வரிகள் அந்த தற்காலிக ‘சந்தோஷத்தை’ பெற அந்த குழந்தை தொழிலாளி இந்த துன்பம் படவேண்டுமா என்ற எண்ணத்தை தூண்டுகின்றன.

  அப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் !
  என்று கதையின் எழுத்து நடைக்கு தரும் தாங்கள் தந்திருக்கும் சான்றிதழ். ஒன்றே அதை படிக்கும் ஆவலை தூண்டியுள்ளது என்பதுதான் உண்மை.
  //பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....? //
  // அப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.//
  போன்ற வரிகள் இறப்பைப் பற்றி அறியாத ஒரு குழந்தையின் வெள்ளந்தியான நிலையை உண்மையிலே தாங்கள் சொல்லியிருப்பது போல் ‘மிகவும் சூப்பராக வர்ணித்திருக்கிறார்’ திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்.

  அவருக்கும் அவரது கதைகளை திறனாய்வு செய்து இரசிக்க வைத்த தங்களுக்கும் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி September 29, 2016 at 12:42 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //வழக்கம் போலவே நூலாசிரியரின் கதைகளை சுருக்கி (சாரு) சாறு பிழிந்து தந்திருக்கிறீர்கள். //

   மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ’சாரு’ என்று ஒருத்தி இருக்கிறாள். அவளை நான் சாரூஊஊஊ எனச் செல்லமாக நீட்டி முழக்கி அழைப்பதும் உண்டு. அவளின் நற்குணங்களையும், நற்செயல்களையும் நினைக்கும் போதெல்லாம் எனக்கு கரும்புச்சாறு அருந்துவதுபோல இனிமையான நினைவலைகள் என் மனதில் ஏற்படுவது உண்டு. அதனால் என்னைப்பொறுத்தவரை சாரு/சாறு ஆகிய இரண்டுமே ஒன்றுதான். :)

   >>>>>

   நீக்கு
  2. VGK >>>>> வே.நடனசபாபதி (2)

   //‘நான் மிஸ்டர் Y’ என்ற கதையில் கருக்கலைப்பு செய்பவர்களின் மன நிலையிலிருந்து பார்க்காமல் கலைக்கப்படும் கரு வின் கோணத்திலிருந்து அதுவே பேசுவதுபோல் கதையை சொல்லியிருப்பது புதிய உத்தி. //

   ஆம். அதுதான் இந்தக்கதையில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

   மேலும் அந்த மிஸ்டர் Y தனக்கு முன் இதே வீட்டினில் (கருவறையினில்) இருந்து கொல்லப்பட்டு மடிந்துள்ள தன் அக்கா பட்ட கஷ்டங்களையும் மிக அருமையாகவே வர்ணிக்கிறான். நான் அவற்றையெல்லாம் என் மதிப்புரையில் விரிவாகச் சொல்லவில்லை.

   **எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள்.** என்று அந்த Y சொல்வது சிந்திக்க வைக்கிறது. ‘ஆக்கபட்ட பொருள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தம்’ என்ற பராசக்தியின் உரையாடல் இங்கே நினைவுக்கு வருகிறது. //

   ஆம். எனக்கும் அந்த பராசக்தி படத்தின் வசனங்களே நினைவுக்கு வந்தன. நம் இருவரின் எண்ணங்களும் இதில் ஒரே மாதிரியான நேர்க்கோட்டில் அமைந்துள்ளதை நினைக்க ஆச்சர்யமாக உள்ளது. :)

   >>>>>

   நீக்கு
  3. VGK >>>>> வே.நடனசபாபதி (3)

   சொர்க்கத்தின் எல்லை நரகம் என்ற கதையில் தப்பு செய்த அந்த குழந்தையை அந்த வீட்டு எஜமானி இப்படியா அடித்து நொறுக்குவாள் என்று நீங்கள் சொல்லும்போது கதையை படிக்காமலே கண்ணீர் வருகிறது.

   ஆமாம் ஸார். எனக்கும் என் சின்ன வயதில், என் குழந்தைப்பருவத்தில் சிற்சில நிறைவேறாத ஆசைகள் இதுபோலவே ஆனால் வேறுவிதமாக இருந்தது உண்டு. அதனாலோ என்னவோ, என்னையும் என் மனதையும் இந்தக்கதை மிகவும் பாதித்து விட்டது.

   >>>>>

   நீக்கு
  4. VGK >>>>> வே.நடனசபாபதி (4)

   **குட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது.** என்ற வரிகள் அந்த தற்காலிக ‘சந்தோஷத்தை’ பெற அந்த குழந்தை தொழிலாளி இந்த துன்பம் படவேண்டுமா என்ற எண்ணத்தை தூண்டுகின்றன.

   இவை என்னை மிகவும் கண்கலங்க வைத்த வரிகள். பின் விளைவுகள் ஏதும் தெரியாமல், யோசிக்காமல், அது தன் குழந்தை குணத்தையும் குழந்தைத் தனத்தையும் காட்டிவிட்டது, என்றுதான் நாமும் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

   >>>>>

   நீக்கு
  5. VGK >>>>> வே.நடனசபாபதி (5)

   ****அப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் !****

   என்று கதையின் எழுத்து நடைக்கு தரும், தாங்கள் தந்திருக்கும், சான்றிதழ் ஒன்றே அதை படிக்கும் ஆவலை தூண்டியுள்ளது என்பதுதான் உண்மை.//

   ஆமாம், ஸார். கதையை ஒரு எழுத்தாளர் எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அது நமக்கு முக்கியமே இல்லை.

   அந்தக்கதையை எப்படி அழகாக ஆங்காங்கே தகுந்த வர்ணனைகளுடனும், நாமும் அந்த இடத்தில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துமாறும், எழுதிக் கொண்டு செல்கிறார்கள் என்பது மட்டுமே நான் மிகவும் ரஸித்து மகிழ்வதாகும்.

   **பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....?**

   **அப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.**

   போன்ற வரிகள் இறப்பைப் பற்றி அறியாத ஒரு குழந்தையின் வெள்ளந்தியான நிலையை உண்மையிலே தாங்கள் சொல்லியிருப்பது போல் ‘மிகவும் சூப்பராக வர்ணித்திருக்கிறார்’ திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள். //

   இந்த இடத்தில் அவர்களின் எழுத்தில் நான் அப்படியே சொக்கிப்போய் விட்டேன். மீண்டும் மீண்டும் இதே வரிகளைப் படித்து மகிழ்ந்ததோடு அல்லாமல், மிகத் தீவிரமாக தொலைகாட்சிப் பெட்டியில் மூழ்கியிருந்த என் மேலிடத்தையும் (மனைவியையும்) தொந்தரவு செய்து அழைத்து இதனைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன். இதுபோன்ற மிகச்சுவையான எழுத்துக்களை உடனே யாரிடமாவது பகிர்ந்துகொள்ளாவிட்டால் என் மண்டையே வெடித்து விடும். :)

   >>>>>

   நீக்கு
  6. VGK >>>>> வே.நடனசபாபதி (6)

   //அவருக்கும் அவரது கதைகளை திறனாய்வு செய்து இரசிக்க வைத்த தங்களுக்கும் பாராட்டுக்கள்! //

   தங்களின் அன்பான வருகைக்கும், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக தாங்கள் எழுதியுள்ள அழகான விரிவான கருத்துக்களுக்கும், மனமார்ந்த பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   அன்புடன் VGK

   நீக்கு
  7. அஹா ! இவ்ளோ பின்னூட்டமா. ! திகைக்க வைக்கின்றீர்கள் விஜிகே சார்.

   மிக விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி நடனசபாபதி சார். மேலிடத்தை எல்லாம் ஏன் என்மேல் கோபம் கொள்ளச் செய்கின்றீர்கள் விஜிகே சார் :)செட்டிநாட்டில் என்னையும் பாதித்தது இந்த குழந்தைத் தொழிலாளி நிலை . அதுதான் எழுதினேன் சார்.

   நீக்கு
 22. இந்தப் பதிவில் வரும் இரண்டாவது கதை சொர்கத்தின் எல்லை நரகம் வாசித்த நினைவு இருக்கிறதே! அருமையான கதை அது. மனதைத் தொட்டக் கதை...இப்போது உங்கள் விமர்சனத்தில் வரிகள்...தொடர்கின்றோம் சார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu
   September 29, 2016 at 5:17 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்தப் பதிவில் வரும் இரண்டாவது கதை சொர்கத்தின் எல்லை நரகம் வாசித்த நினைவு இருக்கிறதே! அருமையான கதை அது. மனதைத் தொட்டக் கதை...//

   ஹனி மேடம் அவர்களின் வலைத்தளத்தில் ஒருவேளை நீங்கள் வாசித்திருக்கலாமோ என்னவோ.

   //இப்போது உங்கள் விமர்சனத்தில் வரிகள்... தொடர்கின்றோம் சார்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. நன்றி கீத்ஸ் & துளசி சகோ & விஜிகே சார்

   நீக்கு
 23. திரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம். தங்கள் முதல் பின்னூட்டத்தைப் படித்தவுடன் மனம் கலங்கிவிட்டது. பதிவு எழுதியவுடன் முதல் ஆளாய் வந்து பின்னூட்டம் எழுதிய திருமதி ராஜேஸ்வரி மேடத்தை நினைக்கும் போது வருத்தமாய்த் தான் உள்ளது. மரணத்தையும் முதல் ஆளாய்த் தழுவி விட்டார். "வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்." என்று மிஸ்டர் Y சொல்வது சூப்பர்! குழந்தைத் தொழிலாளியின் பரிதாப நிலைமை, குழந்தை எதிர்கொள்ளும் முதல் மரணம் எனத் தேனம்மை கையாண்டிருக்கும் கருக்கள் அனைத்துமே வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டுவன. கதையின் முக்கிய அம்சங்களைக் கோடி காட்டிப் படிக்கத் தூண்டும் தங்கள் விமர்சனம் மிக நன்று. எழுத்தாளர், விமர்சகர் இருவருக்கும் என் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி September 30, 2016 at 7:30 PM

   //திரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம்.//

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //தங்கள் முதல் பின்னூட்டத்தைப் படித்தவுடன் மனம் கலங்கிவிட்டது. பதிவு எழுதியவுடன் முதல் ஆளாய் வந்து பின்னூட்டம் எழுதிய திருமதி ராஜேஸ்வரி மேடத்தை நினைக்கும் போது வருத்தமாய்த் தான் உள்ளது. மரணத்தையும் முதல் ஆளாய்த் தழுவி விட்டார்.//

   ஆமாம் மேடம். அவர்களின் பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது என்பது என் வீட்டில் உள்ளோர் அனைவருக்குமே தெரியும். நம் ஜீவி ஸார், நம் தமிழ் இளங்கோ ஸார் போன்ற ஒருசில பதிவர்களுக்கும் மிகவும் நன்றாகத் தெரியும்.

   இந்த ஆண்டின் (2016) என் முதல் பதிவே அவர்களின் மறைவுச் செய்தியைப் பற்றியதாக அமைந்து விட்டது. http://gopu1949.blogspot.in/2016/03/blog-post.html

   இன்- ஃபாக்ட், அவர்கள் இனி பின்னூட்டமிட வரப்போவது இல்லை என்று எனக்குத் தெரிந்ததுமே, நான் புதிய பதிவுகள் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டு விட்டேன்.

   அந்தச் செய்தி எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே நம் ஜீவி ஸார் அவர்களின் நூல் அறிமுகம் பற்றிய இருபது பகுதிகளையும், நான் கம்ப்போஸ் செய்து ட்ராஃப்ட் ஆக என்னிடம் தயார் நிலையில் வைத்திருந்தேன்.

   அவற்றை வெளியிட ஏனோ ஆர்வமில்லாமல்தான் நானும் இருந்து வந்தேன். பிறகு நம் ஜீவி ஸாருடனும் இது பற்றி தொலைபேசியில் பேசினேன். அவர் ”தனக்கும் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகத்தான் உள்ளது” என்று சொல்லியதுடன் எனக்கும் மிகவும் ஆறுதல் கூறினார்.

   பிறகு ஏற்கனவே கம்ப்போஸ் செய்து வைத்துள்ள அந்தப் பதிவுகளை மட்டும் நான் வெளியிடும்படியாக நேர்ந்தது. அதன் பிறகு, அதன் தொடர்ச்சியாக, அதில் ஓர் பகுதியில் பின்னூட்டமிட்டு என்னிடம் கேட்டுக்கொண்டிருந்த ’சிட்டுக்குருவி விமலன்’ அவர்களின் நூலினையும் படித்து, இரண்டே இரண்டு பகுதிகளாக அறிமுகம் செய்ய நேர்ந்தது. இப்போது நம் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் நூல் அறிமுகம் ஆறு பகுதிகளாக வெளியிடும்படியாக நேர்ந்துள்ளது.

   மொத்தத்தில் நான் இந்த ஆண்டு படிக்க நேர்ந்துள்ள ஒருசில 2-3 நூல்களைப்பற்றி மட்டுமே, நூல் அறிமுகப் பதிவுகளாக மட்டுமே கொடுத்துள்ளேன்.

   இந்த ஆண்டு நான் கொடுத்துள்ள மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை வெறும் 30 மட்டுமே.

   1* + 20@ + 2@ + 1$ + 6@ = 30

   அதன் விபரம்:- ஒரு மறைவுச் செய்தி* + 28 நூல் அறிமுகங்கள்@ + ஒரு பதிவர் சந்திப்பு$.

   இவை தவிர என்னால் ஏனோ முன்புபோல மற்ற பதிவுகள் ஏதும் கொடுக்க ஆர்வமில்லாமல் இருந்து வருகிறது என்பதே உண்மை.

   அந்த அளவுக்கு நான் அவர்களின் மறைவினால் பாதிக்கப்பட்டுள்ளேன். காலம் ஒன்றினால்தான், இதுபோன்ற நம் கவலைகளையும், வருத்தங்களையும் மறக்கடிக்க முடியும். பார்ப்போம்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> ஞா. கலையரசி (2)

   // "வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்." என்று மிஸ்டர் Y சொல்வது சூப்பர்! குழந்தைத் தொழிலாளியின் பரிதாப நிலைமை, குழந்தை எதிர்கொள்ளும் முதல் மரணம் எனத் தேனம்மை கையாண்டிருக்கும் கருக்கள் அனைத்துமே வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டுவன. கதையின் முக்கிய அம்சங்களைக் கோடி காட்டிப் படிக்கத் தூண்டும் தங்கள் விமர்சனம் மிக நன்று. எழுத்தாளர், விமர்சகர் இருவருக்கும் என் பாராட்டுக்கள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான, ஆழமான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
  3. ராஜியின் மறைவும் உடனடியாகத் தெரியாமல் பல நாள் கழித்துத் தெரிந்ததும் எனக்கு மிக அதிர்ச்சி. வருவார்கள் பிபி அதிகமாகிவிட்டது போல அதுதான் பதிவெழுதவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனா இப்பிடி சொல்லிக்காம கொள்ளிக்காம போவாங்கன்னு நினைக்கவே இல்லை. எனக்கும் ஆத்துப் போச்சு. இப்பல்லாம் எதையும் முழுமையா செய்ய இயல்வதில்லை. சோகத்தை வெளிப்படுத்துவது கூட. என் பதிவுகளிலேயே பார்க்கலாம். எல்லாம் அவசரத்தனம். இந்த ஃபாஸ்ட் உலகத்தில் மறைந்த நட்பை எண்ணி மனம் கலங்கி மௌனமாய் ஓரத்தில் அமர்ந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு எனது ஆத்மார்த்தமான வணக்கங்கள் விஜிகே சார்.

   நீக்கு
  4. நன்றி கலையரசி & விஜிகே சார்

   நீக்கு
 24. ஒவ்வொரு பதிவிலும் மூன்று கதை தலைப்பு... கதை சுருக்கம்... ( சுருக்கம்னுகூட சொல்ல முடியாது).... அவுட் லைன் சொல்லி இருக்கீங்க.. அதுவே இன்ட்ரஸ்டிங்கா இருக்குது. முழு கதையும் படிச்சா இன்னும் நல்லா இருக்குமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிப்பிக்குள் முத்து. October 3, 2016 at 10:58 AM

   வா ..... மீனா, வணக்கம்.

   //ஒவ்வொரு பதிவிலும் மூன்று கதை தலைப்பு... கதை சுருக்கம்... ( சுருக்கம்னுகூட சொல்ல முடியாது).... அவுட் லைன் சொல்லி இருக்கீங்க.. அதுவே இன்ட்ரஸ்டிங்கா இருக்குது.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //முழு கதையும் படிச்சா இன்னும் நல்லா இருக்குமே...//

   நூலினை வாங்கிப் படியுங்கோ. நல்லாத்தான் இருக்கும்.

   நானே இங்கு முழுக்கதைகளையும் சொல்லிவிட்டால், பிறகு அந்த நூலின் விற்பனை பாதிக்கப்படும் அல்லவா.

   அதனால் உங்கள் அனைவரையும் அந்த நூலை வாங்கிப் படிக்குமாறு நான் இங்கு தூண்டி மட்டும் விட்டுள்ளேன்.

   நீக்கு
  2. நன்றி சிப்பிக்குள் முத்து & விஜிகே சார் :)

   நீக்கு
 25. இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கதைகளுமே குழந்தைகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அருமையான கதைகள்.. அதுவும் கருவில் உள்ள குழந்தையின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வரிகள் அபாரம்.. இரண்டாவது கதையின் முடிவு மனத்தை மிகவும் பாதித்தது. ஒருநாள் சந்தோஷத்துக்காக அக்குழந்தை கொடுத்த விலை மிக அதிகம். வளர்ந்தபெண்ணாகி என்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் இன்பத்தோடு இந்த துன்பமும் அல்லவா நினைவுக்கு வந்து வெட்கச்செய்யும்.. அப்பத்தா கதையிலும் அறியாக்குழந்தையின் மன உணர்வுகளை அழகாக்க் காட்டுகிறார்… ஐந்தாம் வகுப்பு படிக்கையில்.. என் அப்பாவைப் பெற்ற ஆத்தா இறந்துபோன அன்று நானும் இப்படிதான்… சூழ்நிலை சரியாகப் புரியாமல் அரையாண்டுத் தேர்வுக்குப் போயே தீருவேன் என்று அடம்பிடித்துப்போய் தேர்வெழுதிவிட்டு வந்த நாட்கள் நினைவில்… வாசக சிந்தனைக்குத் தேர்ந்தெடுத்துத் தரும் வரிகள் அற்புதம்.. நன்றி கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதமஞ்சரி October 4, 2016 at 9:50 AM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கதைகளுமே குழந்தைகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அருமையான கதைகள்..//

   ஆமாம்.

   //அதுவும் கருவில் உள்ள குழந்தையின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வரிகள் அபாரம்..//

   ’அபாரம்’ என்ற அபாரமான சொல்லுக்கு மிக்க மகிழ்ச்சி. :)

   //இரண்டாவது கதையின் முடிவு மனத்தை மிகவும் பாதித்தது. ஒருநாள் சந்தோஷத்துக்காக அக்குழந்தை கொடுத்த விலை மிக அதிகம். வளர்ந்தபெண்ணாகி என்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் இன்பத்தோடு இந்த துன்பமும் அல்லவா நினைவுக்கு வந்து வெட்கச்செய்யும்..//

   ஆமாம். பாவம் .... சின்னக்குழந்தை அவள். ஏதோ தெரியாமல் தன் உள்மன ஆசைகளாலும், குழந்தைகளுக்கே உள்ள குறும்புத்தனங்களாலும், தன்னையுமறியாமல் அவ்வாறு நடந்து கொண்டுவிட்டாள்.

   அவளால் அதனை என்றைக்குமே மறக்க முடியாமல்தான் இருக்கும்.

   //அப்பத்தா கதையிலும் அறியாக்குழந்தையின் மன உணர்வுகளை அழகாக்க் காட்டுகிறார்… ஐந்தாம் வகுப்பு படிக்கையில்.. என் அப்பாவைப் பெற்ற ஆத்தா இறந்துபோன அன்று நானும் இப்படிதான்… சூழ்நிலை சரியாகப் புரியாமல் அரையாண்டுத் தேர்வுக்குப் போயே தீருவேன் என்று அடம்பிடித்துப்போய் தேர்வெழுதிவிட்டு வந்த நாட்கள் நினைவில்…//

   பொதுவாக .... நாட்டு நடப்புக்களே கதையாக மலர்கின்றன, என்பதை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. :)

   //வாசக சிந்தனைக்குத் தேர்ந்தெடுத்துத் தரும் வரிகள் அற்புதம்.. நன்றி கோபு சார். //

   தங்களின் அன்பான வருகைக்கும், ’அற்புதம்’ என்ற அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
  2. மிக்க நன்றிடா கீத்ஸ் & விஜிகே சார்

   நீக்கு
 26. தேன், தேனாய் தித்திக்கும் சிறுகதைகளுக்கு வாழ்த்துக்கள்.

  இந்தக் கதைகளை அறிமுகப் படுத்தி வைத்த கோபு அண்ணாவிற்கு ஒரு சல்யூட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya October 18, 2016 at 12:01 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //தேன், தேனாய் தித்திக்கும் சிறுகதைகளுக்கு வாழ்த்துக்கள்.

   இந்தக் கதைகளை அறிமுகப் படுத்தி வைத்த கோபு அண்ணாவிற்கு ஒரு சல்யூட்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் ஓர் ராயல் சல்யூட் ! :)

   நீக்கு
  2. மிக்க நன்றி ஜெயா & விஜிகே சார் :)

   நீக்கு
 27. அகா தொகுத்து அளிப்பதற்கும் சிறப்பிடம் கொடுப்பதற்கும் மீண்டும் நன்றிகள் விஜிகே சார். எவ்ளோ நன்றிக்கடன் பட்டிருக்கேன்னு தெரியலையே :)

  பதிலளிநீக்கு