என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 24 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-2


ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை





நூல் வெளியீடு:

சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)
நூல் ஆசிரியர்: 
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only




 


1)  சிவப்பு பட்டுக் கயிறு:

இது ஒரு வித்யாசமான தலைப்பாக உள்ளது. கதையுடன் பொருந்தி படிக்கும் நம்மையும் கலங்கச் செய்கிறது. 

பொதுவாக பெண்களுக்குத்தான் கல்யாணம் ஆகும்வரை பிறந்த வீடு என்று ஒன்றும், கல்யாணம் ஆனபிறகு புகுந்த வீடு அல்லது தனிக்குடுத்தனம் என்றும் செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளன. 

இது போல ஏதும் ஆண்களுக்கும் உள்ளதா என்றால் நாம் பொதுவாக இதுபோலக் கேள்விப்பட்டது இல்லை என்றுதான் சொல்லுவோம். அல்லது ஒருசிலர் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிச்செல்வது நம் நினைவுக்கு வரலாம்.

நம் தமிழ்நாட்டில் ஓர் குறிப்பிட்ட சமூகத்தினரில், சிறுவயது பிள்ளையாய் இருக்கும்போதே, ஒரு குறிப்பிட்ட நிர்பந்தமான, தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மட்டும், வேறு வழியே இல்லாத சங்கடமிக்கதோர் சடங்குக்காக வேண்டி, இடுப்பில் தான் கட்டியிருக்கும் அரணாக்கயிற்றையும் அறுத்துப் போட்டு விட்டு, தான் ஆண் வாரிசாகப் பிறந்துள்ள தன் குடும்பத்தையே, முற்றிலுமாகத் துறந்து விட்டு வெளியேறி, வேறொரு வீட்டுக்குச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையை எடுத்துச்சொல்லும் மிக அருமையான கதை இது. 

இந்த ஒரு நிகழ்வினால், இரு தரப்பினருக்குமே, கொஞ்சம் மன வருத்தங்களும், கொஞ்சம் சந்தோஷத்துடன் கூடிய இலாபமும் ஏற்படத்தான் செய்கிறது என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.

இந்த நிகழ்வினை, பிரஸவத்திற்காகத் தன் தாய் வீடு வந்துள்ள ஓர் பெண்மணி, தன் வீட்டிலேயே இந்த நிகழ்ச்சி நடப்பதைக் காண நேர்ந்து, அவள் பார்வையில் சற்றே வருத்தம் கலந்து சொல்வதுபோல எழுதியுள்ளது, டச்சிங்காக மிகவும் அருமையாக உள்ளது.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

“தாய் வீடு சொந்த சுவாசம் போலவும், மாமியார் வீடு கொஞ்ச காலத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டரில்  சுவாசிப்பது போலவும் இருக்கிறது. வீட்டின் கதவுகள், அலமாரிகள், பொருட்களுடனான பரிச்சயம் அதிகமானபின் அதுவும் இன்னொரு சுவாசமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

நெல் பயிரை இரண்டு முறை நடவு செய்வதுபோல, ஒரு இடத்திலிருந்து மறு நடவு செய்தபின்தான் அது செழிக்கும் என்றால், அதைத்தானே செய்ய வேண்டும். என்ன சொன்னாலும் வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது ... மண்ணுக்கும் பயிருக்கும்”.

தன் இடுப்பிலிருந்து ஓர் ஆண்பிள்ளை பட்டுக்கயிறு அறுப்பது என்பது தொப்புள்கொடி அறுப்பதற்குச் சமமாகும். 

‘இந்த வீட்டில் உன் உறவு முடிந்துவிட்டது. இனி இன்னொரு ஜன்மம் உனக்கு. இன்னொரு பெயர் உனக்கு’ எனப் பிரிப்பதுபோல. 

[தினமணி கதிர்-2012 இல் வெளியாகியுள்ள கதை இது. காரைக்குடி புத்தகத் திருவிழாவின் சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றுள்ள கதை இது]

 

2) சூலம்

ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் விறுவிறுப்பான கதை. த்ரில்லிங்கான + அமானுஷ்யமான முடிவு.

குடியினாலும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களாலும் அதை உபயோகிப்பவர் மட்டுமின்றி, அவரின் மனைவி, மக்கள், கஷ்டப்பட்டு பணம் புரட்டி செலவழித்து கல்யாணம் செய்துகொடுத்த மாமனார், மாமியார் போன்ற குடும்பத்தார் அனைவருமே எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள்  + அவமானப்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லியுள்ள, பாராட்டுக்குரிய கதை.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

’ராசாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்று டி.வி.யில் வாத்தியாரய்யாவும் சரோஜாதேவியும் பாட, இந்தக்கதையில் கதாநாயகியாக வரும் ’தேவி’ வாத்தியாரய்யாவாக நினைத்து மாரியப்பனை காதலிச்சு அவனைத்தான் கட்டிக்குவேன் என்று ஒற்றைக்காலில் நின்று தான் நினைத்ததைச் சாதித்து இருக்கிறாள் அன்று.

’இந்த மூஞ்சியைப் பார்த்தா காதலித்தோம்’ என்று இப்போதெல்லாம் நினைக்கத் துவங்கி விட்டாள் அதே ’தேவி’. 

30 வயதைத்தொடும், நன்கு படித்த பெண்ணான மேகலா,  தன் தந்தை ’மாரியப்பன்’ + தாய் ‘தேவி’ ஆகியோரின் திருமண உறவைப் பார்த்து, தான் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்ற வைராக்கியத்திற்கே வந்து விட்டாள்.

 


3) கருணையாய் ஒரு வாழ்வு....

கருணைக்கொலையை ஆதரித்தும் எதிர்த்தும், மருத்துவ மனை செவிலி ஒருவருக்கும், அந்த நோயாளியின்  சுய சரிதையைக் கதையாக எழுத நினைத்து வந்திருக்கும் எழுத்தாளப் பெண்மணி ஒருவருக்கும் இடையே நடைபெறுவதாக புனைந்து எழுதப்பட்டுள்ளதோர் (கற்பனை) உரையாடல் இது.

ஓர் பட்டிமன்றத்தில் அமர்ந்து,  அவர்கள் இருதரப்பினரின் நியாயமான வாதங்களையும் ஆர்வமாகக் கேட்பதுபோல, இதனைப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளது.

நம் சிந்தனைக்காக .... அவர்களின் பேச்சினில் வரும் ஒருசில வரிகள்:-

வந்தவள்: “இத்தனை நீண்ட நாட்களாகி விட்டதே.... 38 வருடங்கள்.... அவளால் உடலால் அசையவேகூட முடியவில்லையே....?”

செவிலி: “உங்களுக்கு ஒன்று தெரியுமா.... அவளின் மாதாந்திரத் தொந்தரவுகளைக்கூட நாங்கள் பார்த்து சுத்தம் செய்திருக்கிறோம். இப்போது அதைக் கடந்து விட்டாள் அவள்.... எங்களுக்கு ஒருபோதும் அருவருப்பு ஏற்பட்டதே இல்லை.... எங்கள் குழந்தைபோல அவள்.... மாங்கலாய்டு, ஸ்பாஸ்டிக், மெண்டலி டிஸ்ஸாடர் உள்ள குழந்தைகளின் பெற்றோர் என்ன செய்வார்கள்.... அதைவிட அதிகம் ஒன்றும் நாங்கள் செய்துவிடவில்லை. 

மனதின் செயல்பாடு எண்ணங்களில் உறைந்திருக்கிறது.... ந்யூரான்களில் பொதிந்திருக்கிறது. ஏதேனும் அதிசயம் நடக்கலாம்.... அவள் விழிப்பாள்.... அப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது. எங்களைப் பார்த்து அவள் புன்னகைக்க முடியும். அப்போது அவளைப் பாதுகாக்காமல் விட்டோமே எனத் தோன்றக்கூடாது.... ஓர் உயிர் வாழ்வது பற்றியும் இறப்பது பற்றியும் தீர்மானிக்க நாம் யார்....?”    



[இது 04.09.2011 அன்று ‘திண்ணை’யில்  வெளியிடப்பட்டுள்ளது.]




இந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் 
36 மணி நேர இடைவெளிகளில்
வெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:

பகுதி-3 .... 25.09.2016 ஞாயிறு ........   இரவு  10 மணிக்கு
பகுதி-4 .... 27.09.2016 செவ்வாய் ....   பகல்  10 மணிக்கு
பகுதி-5 .... 28.09.2016 புதன் ..............   இரவு  10 மணிக்கு
பகுதி-6 .... 30.09.2016 வெள்ளி .........  பகல்  10 மணிக்கு

தொடரும்

 





என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]

92 கருத்துகள்:

  1. படித்து வருகிறேன். ஒன்றரைக் கதை மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். September 24, 2016 at 10:17 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //படித்து வருகிறேன்.//

      வெரி குட்.

      //ஒன்றரைக் கதை மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன்!//

      அதுபோதுமே ! உங்களுக்குள்ள பல ஜோலிகளில் அதற்குள் 10% முடித்துள்ளதே மிகப் பெரிய விஷயம்தானே.

      இன்னும் ஜஸ்ட் 90% மட்டும் தானே பாக்கியுள்ளது.

      இந்த என் தொடர் முடிந்தபிறகு மெதுவாகக் கூட படித்துக்கொள்ளலாம்.

      நான் திட்டமிட்டு அறிவித்திருந்தபடி, இன்று காலை 9.45 மணிக்கு இந்த பகுதி-2 ஐ வெளியிட்டும்கூட, அது என்னவோ டேஷ் போர்டில் 12 மணிவரை காட்சியளிக்காமலேயே இருந்து வந்தது.

      அப்படியும் உங்களில் சிலர் உடனே பின்னூட்டமளித்துள்ளது ஆச்சர்யமாக இருந்தது.

      ஒருவேளை GOOGLE PLUS or FACEBOOK விளம்பரத்தில் பார்த்துவிட்டு இங்கு வந்திருப்பீர்களோ என்னவோ.

      இந்தப்பகுதிக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஸ்ரீராம் & விஜிகே சார் !

      நீக்கு
  2. தேனம்மை மேடம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    கதைகளை அழகாய் விமரிசனம் செய்திருப்பது, படிக்கத் தூண்டுவதே இருக்கிறது. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam September 24, 2016 at 10:17 AM

      வாங்கோ மேடம், வணக்கம். செளக்யமா இருக்கீங்களா? உங்களை நான் பார்த்தே ரொம்ப நாட்கள் ஆனதுபோலத் தோன்றுகிறது. உங்களின் இன்றைய அபூர்வ வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

      //தேனம்மை மேடம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //கதைகளை அழகாய் விமரிசனம் செய்திருப்பது, படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.//

      கதையை முழுவதுமாகச் சொல்லிவிடாமல், ஆங்காங்கே சஸ்பென்ஸ் வைத்து, எதை எதையோ என் போக்கில் எப்படி எப்படியோச் சொல்லி, மதிப்புரையாக நான் இங்கு வெளியிடுவதன் நோக்கமே, இதனைப் படிக்க நேரும், பெரும்பாலானோர் அந்த நூலினை வாங்கிப் படிக்க ஓர் தூண்டுகோலாக அமைய வேண்டும் என்பது மட்டுமே.

      அதனை அழகாக நீங்களும் இங்கு பிரதிபலித்துச் சொல்லியுள்ளீர்கள்.

      இதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே, மேடம்.

      //வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் கோபு சார்.//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      முடிந்தால் இதன் தொடர்ச்சிகளான அடுத்த பகுதி-3 முதல் பகுதி-6 வரை வாங்கோ, ப்ளீஸ்.

      நீக்கு
    2. மிக்க நன்றி ராஜலெக்ஷ்மி மேடம் & விஜிகே சார்:)

      நீக்கு
  3. நூல் அட்டைப்படம் புத்தகத்தை வாங்கத் தூண்டுகிறது. உங்களுடைய மதிப்புரை, எப்போதும்போல் ஆழமாக எழுதப்பட்டுள்ளது. 'சாப்பாடு நல்லாருந்துச்சு' என்று சொல்வதற்கும், இந்த ஐட்டம் இப்படி இருந்தது, இது எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக இருந்தது என்று சிலாகித்துச் சொல்வது எப்படி சமையல் நிபுணருக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்குமோ அதுபோல் கதைகளையும் அதில் வரும் குறிப்பிட்ட வரிகளையும் எழுதியுள்ளது ஆசிரியருக்கு மிகவும் உகப்பாக இருக்கும். வியக்கிறேன் வை.கோ சார் அவர்களின் அனுபவிக்கும் தன்மையை.

    "வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது ... மண்ணுக்கும் பயிருக்கும்" - இந்த வரியைப் படிக்கும்போதே ஏதேதோ எண்ணங்கள் வருகின்றன. வாங்கும் பட்டியலில் புத்தகம் இடம்பெற்றுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் September 24, 2016 at 11:06 AM

      வாங்கோ ஸார், வணக்கம்.

      //நூல் அட்டைப்படம் புத்தகத்தை வாங்கத் தூண்டுகிறது.//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி.

      //உங்களுடைய மதிப்புரை, எப்போதும்போல் ஆழமாக எழுதப்பட்டுள்ளது.//

      எப்போதும்போல், என் வழக்கம்போல், நூலின் ஒரு பக்கம், ஒருபத்தி, ஒருவரி, ஒரு வார்த்தை, ஒரு எழுத்துக்கூட விடாமல் மிகவும் ஊன்றிப் படித்து, மனதில் முழுமையாக வாங்கிக்கொண்டு, அதன்பின், நான் என் மதிப்புரையை எழுத ஆரம்பித்துள்ளதால், அதில் தாங்கள் சொல்லியிருப்பதுபோல நிச்சயமாக ஆழம் மிக அதிகமாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கும் வியப்பேதும் இல்லைதான்.

      //'சாப்பாடு நல்லாருந்துச்சு' என்று சொல்வதற்கும், இந்த ஐட்டம் இப்படி இருந்தது, இது எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக இருந்தது என்று சிலாகித்துச் சொல்வது எப்படி சமையல் நிபுணருக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்குமோ அதுபோல் கதைகளையும் அதில் வரும் குறிப்பிட்ட வரிகளையும் எழுதியுள்ளது ஆசிரியருக்கு மிகவும் உகப்பாக இருக்கும்.//

      இதனை வெகு அழகாக, தகுந்த உதாரணத்துடன் தாங்கள் இங்கு சொல்லியிருப்பது, எனக்கே மிகவும் உகப்பாகத்தான் உள்ளது. தங்களுக்கு என் கூடுதல் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      //வியக்கிறேன் வை.கோ சார் அவர்களின் அனுபவிக்கும் தன்மையை.//

      என் பதிவுகளுக்கான, ஒரு பின்னூட்டம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேனோ, அப்படி எழுதி மகிழ்வித்துள்ள தங்களை நினைத்து நானும் மிகவும் வியக்கிறேன்.

      ரஸித்து மகிழ்ந்து அனுபவிக்கும் தன்மையுடனேயே இதனையும் இங்கு தங்களுக்கு நான் என் மனம் திறந்து மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் சொல்லியுள்ளேன்.

      //"வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது ... மண்ணுக்கும் பயிருக்கும்" - இந்த வரியைப் படிக்கும்போதே ஏதேதோ எண்ணங்கள் வருகின்றன.//

      நூலாசிரியர் ஒவ்வொரு கதைகளிலும் இதுபோன்று பல இடங்களில் தன் முத்திரையைப் பதித்துள்ளார்கள். நான் ’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக’ மட்டுமே என் மதிப்புரையில், அவற்றை மிகவும் சுருக்கிச் சொல்லியுள்ளேன்.

      //வாங்கும் பட்டியலில் புத்தகம் இடம்பெற்றுவிட்டது.//

      வெரி குட். அதுவே இதில் மிகவும் முக்கியமான சமாச்சாரமாகும். :)

      இதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் பகுதி-3 முதல் பகுதி-6 வரை அவசியமாகத் தாங்கள் வருகை தரவேண்டுமாய், மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
    2. ///'சாப்பாடு நல்லாருந்துச்சு' என்று சொல்வதற்கும், இந்த ஐட்டம் இப்படி இருந்தது, இது எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக இருந்தது என்று சிலாகித்துச் சொல்வது எப்படி சமையல் நிபுணருக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்குமோ அதுபோல் கதைகளையும் அதில் வரும் குறிப்பிட்ட வரிகளையும் எழுதியுள்ளது ஆசிரியருக்கு மிகவும் உகப்பாக இருக்கும். வியக்கிறேன் வை.கோ சார் அவர்களின் அனுபவிக்கும் தன்மையை.// மிக அருமையா சொன்னீங்க நெல்லைத் தமிழன். நானும் விஜிகே சாரின் திறமை கண்டு வியக்கிறேன். :) படிச்சு பார்த்து சொல்லுங்க :) அடுத்து திருநெல்வேலி புத்தகத் திருவிழாவிலும் கிடைக்கும்னு சொன்னாங்க பதிப்பகத்தார் :) மிக்க நன்றி விஜிகே சார் !

      நீக்கு
  4. தேனக்காவின் கதைகள் அருமையாக இருக்கும்...
    ஊருக்கு வரும் போதுதான் சிவப்பு பட்டுக் கயிறு வாங்கணும்...

    மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் ஐயா...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிவை சே.குமார் September 24, 2016 at 11:37 AM

      //தேனக்காவின் கதைகள் அருமையாக இருக்கும்...
      ஊருக்கு வரும் போதுதான் சிவப்பு பட்டுக் கயிறு வாங்கணும்...//

      வெரி குட்.

      //மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் ஐயா...//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      தொடருங்கள்... தொடர்கிறோம்...//

      தொடர்ந்து வாருங்கள் .... வெல்கம். வணக்கம்.

      நீக்கு
    2. அஹா நன்றி குமார் சகோ & விஜிகே சார் !

      நீக்கு
  5. ஓர் உயிர் வாழ்வது பற்றியும் இறப்பது பற்றியும் தீர்மானிக்க நாம் யார்....?”//

    நெகிழ்வான வரிகள்.
    கதை விமர்சனம் அருமை.

    பகிர்ந்து கொண்ட கதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு September 24, 2016 at 12:06 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      **ஓர் உயிர் வாழ்வது பற்றியும் இறப்பது பற்றியும் தீர்மானிக்க நாம் யார்....?”**

      //நெகிழ்வான வரிகள். கதை விமர்சனம் அருமை. பகிர்ந்து கொண்ட கதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      இந்த மிகச் சிறிய தொடரின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, மேடம்.

      நீக்கு
    2. மிக்க நன்றி கோமதி மேம். & விஜிகே சார் :)

      நீக்கு
  6. கதாசிரியரின் கதையைப் புரிந்து கொள்கிற மாதிரி குறிப்பையும் கொடுத்து, 'நம் சிந்தனைக்காக' என்று கதையின் எழுத்து வடிவத்தின் ஒரு பகுதியையும் கொடுப்பது, புது மாதிரியாகவும் இதுவரை யாருமே முயற்சி செய்து பார்க்காத புதுமைப் பாணியாகவும் இருக்கிரது, கோபு சார்! உங்கள் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி September 24, 2016 at 1:58 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள். வணக்கம்.

      //கதாசிரியரின் கதையைப் புரிந்து கொள்கிற மாதிரி குறிப்பையும் கொடுத்து, 'நம் சிந்தனைக்காக' என்று கதையின் எழுத்து வடிவத்தின் ஒரு பகுதியையும் கொடுப்பது, புது மாதிரியாகவும் இதுவரை யாருமே முயற்சி செய்து பார்க்காத புதுமைப் பாணியாகவும் இருக்கிறது, கோபு சார் ! உங்கள் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்..//

      ஏதோ ஒரு வித்யாசமாகத்தான் இருக்கட்டுமே என நினைத்து எனக்குத் தோன்றியதொரு பாணியில், மிகச்சாதாரணமாக மட்டுமே, நான் எழுத ஆரம்பித்தேன்.

      அதனைப்போய்த் தாங்கள் ”புது மாதிரியாகவும் இதுவரை யாருமே முயற்சி செய்து பார்க்காத புதுமைப் பாணியாகவும் இருக்கிறது, கோபு சார்! உங்கள் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்..” எனத்தங்கள் எழுத்துக்களின் மூலம் இங்கு படிப்பது, எனக்கும் புதுமையாகவும், நம்ம முடியாததோர் பெரும் வியப்பாகவுமே உள்ளது.

      இருப்பினும் எழுத்துலகிலும், வலையுலகிலும், பல்வேறு பிரபலங்களின் நூல்களை லயித்துப்போய் வாசித்துள்ளதிலும், ஒப்பற்ற நூல் வெளியீடுகளிலும், சிறுகதை விமர்சனப் போட்டிகளில் மிகவும் நியாயமான பாரபட்சமற்ற நடுவர் பதவி வகித்திருந்ததிலும், பழுத்த அனுபவசாலியான தாங்களே இவ்வாறு இப்படிச் சொல்லும்போது, அடியேனால் அதனை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

      எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் மட்டுமே என்னை எதையுமே சற்றே புதுமையாகவும், வித்யாசமாகவும் செய்திட வழிவகுத்து வித்திட்டுவருகிறது என நம்புகிறேன்.

      இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், ஆச்சர்யமான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.

      பிரியத்துடன் VGK

      நீக்கு
    2. இருவருக்குமே எனது பணிவான வணக்கங்களும் நன்றிகளும் ஜிவி சார் & விஜிகே சார் :)

      நீக்கு
  7. ”சிவப்பு பட்டுக் கயிறு” தலைப்பே அமர்க்களம்.

    தேனா கொக்கா.

    கோபு அண்ணா கோடி காட்டி எல்லாரையும் படிக்கத் தூண்டறேள். பட்டுக்கயிறை (புத்தகத்தை) வாங்கிட வேண்டியதுதான்.

    விமர்சகருக்கும், எழுத்தாளருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 24, 2016 at 2:41 PM

      //”சிவப்பு பட்டுக் கயிறு” தலைப்பே அமர்க்களம்.//

      அப்படியா! சந்தோஷம்.

      //தேனா கொக்கா.//

      ‘கொக்குத்தலையில் வெண்ணெய் வைத்தது போல’ன்னு ஏதோ பழமொழி சொல்லுவார்கள்.

      நீங்க என்னடான்னா கொக்குத்தலையில் தேனைத் தடவி ’தேனா கொக்கா’ என ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள். :)

      //கோபு அண்ணா கோடி காட்டி எல்லாரையும் படிக்கத் தூண்டறேள்.//

      எல்லோரையும் அந்த நூலைப் படிக்க வேண்டி தூண்டிவிட வேண்டியது மட்டுமே இதில் என் வேலையாக உள்ளது.

      //பட்டுக்கயிறை (புத்தகத்தை) வாங்கிட வேண்டியதுதான்.//

      உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால் கேளுங்கோ. நானே என்னிடம் உள்ளதை வேண்டுமானால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். :)

      //விமர்சகருக்கும், எழுத்தாளருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், மனமார்ந்த நல் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

      நீக்கு
    2. ரொம்ப நன்றிடா ஜெயந்தி & விஜிகே சார். உங்க அளவு எல்லாம் பின்னூட்டத்துல சுவாரசியமா எழுதத் தெரியாது எனக்கு மன்னிச்சிடுங்க இருவரும் :)

      நீக்கு
  8. விமர்சனம் அருமையாக தொடர்கிறது! பொதுவாய் புத்தகமாய் வெளிவரும் நூல்களுக்கு பிரபலமாய் இருக்கும் சிலரை வைத்து முன்னுரை எழுதப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு வரியாய் ரசித்து, சிறந்த வரிகளை மேற்கோளிட்டு அனுபவித்து விமர்சிப்பதும் மனந்திறந்து பாராட்டுவதும் பிரதிபலன் நோக்காத‌ உங்களைப்போலவெகு சிலரால் மட்டுமே முடியும். அந்த வகையில் தேனம்மை மிகவும் கொடுத்து வைத்தவர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் September 24, 2016 at 3:02 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //விமர்சனம் அருமையாக தொடர்கிறது!//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //பொதுவாய் புத்தகமாய் வெளிவரும் நூல்களுக்கு பிரபலமாய் இருக்கும் சிலரை வைத்து முன்னுரை எழுதப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.//

      அவ்வாறான பிரபலங்களில் பலரும் அந்த புத்தகத்தை முழுவதும் படிக்காமலேயும், படிக்க விருப்பமோ, நேரமோ இல்லாமலேயேயும், முன்னுரை என்ற பெயரில் ஏதாவது சிலவரிகள் STANDARD ஆக எழுதித்தருவதும் வழக்கமாகத்தான் இருந்து வருகிறது என்பதும் ஓர் கசப்பான உண்மையாகவே உள்ளது.

      இந்த நம் ஹனி மேடம் வெளியிட்டுள்ள இந்த நூலில் அதுபோலெல்லாம், முன்னுரை என்று ஏதும் தனியாக இல்லை. பின்புறம் அட்டையில் மட்டும் திரு. மு. வேடியப்பன் என்பவர் ஏதோ சில வரிகள் பாராட்டி எழுதியுள்ளார்கள்.

      தானே ஒரு பிரபலமாக இருப்பதாலும், சும்மா ஒரு ஃபார்மாலிடிக்காக மட்டுமே பிற பிரபலங்கள் எழுதித்தரும் முன்னுரை என்பது, தன் நூலுக்குத் தேவையில்லை என்றும் நம் ஹனி மேடம் ஒருவேளை நினைத்திருக்கலாமோ என்னவோ.

      தங்களின் அன்புக்கட்டளைக்காக 2011-இல் நான் ‘முன்னுரை என்னும் முகத்திரை’ என்ற தலைப்பினில் எழுதிய தொடர்பதிவு இப்போது ஏனோ என் நினைவுக்கு வருகிறது.

      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> மனோ சாமிநாதன் (2)

      //ஆனால் ஒவ்வொரு வரியாய் ரசித்து, சிறந்த வரிகளை மேற்கோளிட்டு அனுபவித்து விமர்சிப்பதும் மனந்திறந்து பாராட்டுவதும் பிரதிபலன் நோக்காத‌ உங்களைப்போல வெகு சிலரால் மட்டுமே முடியும்.//

      என்னிடம் இதுவரை பலர், ஓர் மரியாதை நிமித்தம் கொடுத்துள்ள புத்தகங்கள், நான் இன்னும் படிக்காமலேயே என் வீட்டில் நிறைய சேர்ந்துபோய் உள்ளன. அவற்றை எனக்குப் படிக்கவும் தோன்றவில்லை. என்னால் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கவும் முடியவில்லை.

      என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்கள் ‘முற்றுப்பெறாத ஓவியங்கள்’ என்ற தலைப்பினில் ஓர் சிறுகதைத் தொகுப்பு நூலை என்னிடம் கொஞ்சம் நாட்கள் முன்பு கொடுத்திருந்தார். அதை மிகுந்த ஆவலுடன் நான் வாசித்து, உடனுக்குடன் அதிலுள்ள ஒவ்வொரு கதைக்கான என் கருத்துக்களையும், அடில் உள்ள தனிச் சிறப்புக்களையும், பாராட்டுக்களையும் அவருடன் மெயில் மூலம் பகிர்ந்துகொண்டே இருந்தேன். அவருக்கும் இதில் மிகத் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

      அதுபோல இந்த நம் தேனம்மை அவர்களின் இந்த நூல், புத்தம் புதிதான சமீபத்திய வெளியீடாக இருந்ததாலும், ஓரளவு ஹாப்பி மூடில் மன அமைதியுடன் ஃப்ரீயாக நான் இருந்தபோது என் கைகளுக்கு கொரியர் தபாலில் வந்து சேர்ந்ததாலும், உடனே எடுத்து உடனே படித்து முடித்துவிட்டேன். அந்த அளவுக்கு கதைகளில் ஓர் விறுவிறுப்பும் இருந்தன என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் அது படிக்க சற்றேனும் விறுவிறுப்பாகப் இருக்குமானால் மட்டுமே ஒரே மூச்சில் ஊன்றி மனதில் வாங்கிக்கொண்டு என்னால் படித்துவிட முடிகிறது.

      ஏதோ நம்முடைய நலம் விரும்பிகளாக இருந்துகொண்டு, நம்முடன் நல்லவிதமாகப் பழகிவருபவர்களின் அன்புக்கும், நட்புக்கும், பிரியத்திற்கும் கட்டுப்பட்டு, அவர்களின் நூல்களை சிரத்தையுடன் வாசித்து, ஒவ்வொரு வரியாய் ரசித்து, சிறந்த வரிகளை மேற்கோளிட்டு அனுபவித்து மதிப்புரை செய்வதையும், புகழுரையாகவே மனந்திறந்து பாராட்டுவதையும் என் கடமையாக நினைத்து மட்டுமே செயல்பட்டு வருகிறேன். அதில் எனக்கு ஓர் ஆத்ம திருப்தியும் இருக்கத்தான் செய்கிறது. அன்புடனும் நட்புடனும் பழகிவரும் நம் நெருங்கிய நண்பர்களும், நம்மைப்போன்ற சக பதிவர்களுமாகிய இவர்களிடம் இதில் என்ன பிரதிபலனை நாம் எதிர்பார்த்திட முடியும்?

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> மனோ சாமிநாதன் (3)

      இதுவரை நம் ......

      ’கீதமஞ்சரி’ வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒரு நாள்’ - http://gopu1949.blogspot.in/2015/09/part-1-of-5.html ஐந்து பகுதிகளாகளாகவும்

      ஏற்கனவே இதே திருமதி. தேனம்மை அவர்களின், ‘பெண் பூக்கள்’ என்ற கவிதை நூல் - தேன் சிந்திடும் பெண் பூக்களாக, http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html ஒரே பகுதியாகவும்

      ’பூ வனம்’ வலைப் பதிவர் திரு. ஜீவி ஸார் அவர்களின் ‘ந. பிச்சைமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை .... மறக்கமுடியாத தமிழ் எழுத்துலகம் http://gopu1949.blogspot.in/2016/03/1.html .. இருபது பகுதிகளாகவும்

      ’சிட்டு’க்குருவி’ வலைப்பதிவர் விமலன் அவர்களின் ‘இச்சி மரம் சொன்ன கதை’ http://gopu1949.blogspot.in/2016/07/blog-post_26.html இரண்டு பகுதிகளாகவும்

      இப்போது மீண்டும் நம் தேனம்மையின் இந்த ’சிவப்பு பட்டுக் கயிறு’ என்ற நூலையும் மட்டும் இப்போது மதிப்புரையாகவும் / புகழுரையாகவும் / விமர்சனமாகவும் / நூல் அறிமுகமாகவும் என் பதிவினில் ஆறு பகுதிகளாகவும் கொண்டுவர எண்ணியுள்ளேன்.

      //அந்த வகையில் தேனம்மை மிகவும் கொடுத்து வைத்தவர்கள்!!//

      :) இதற்கு நம் ஹனி மேடம்தான் வந்து தங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். :)

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.

      நீக்கு
    4. இருவர் கருத்தையும் உள்ளப்பூர்வமாக ஆமோதிக்கிறேன். மனோமேம் & விஜிகே சார்.

      //ஏதோ நம்முடைய நலம் விரும்பிகளாக இருந்துகொண்டு, நம்முடன் நல்லவிதமாகப் பழகிவருபவர்களின் அன்புக்கும், நட்புக்கும், பிரியத்திற்கும் கட்டுப்பட்டு, அவர்களின் நூல்களை சிரத்தையுடன் வாசித்து, ஒவ்வொரு வரியாய் ரசித்து, சிறந்த வரிகளை மேற்கோளிட்டு அனுபவித்து மதிப்புரை செய்வதையும், புகழுரையாகவே மனந்திறந்து பாராட்டுவதையும் என் கடமையாக நினைத்து மட்டுமே செயல்பட்டு வருகிறேன். அதில் எனக்கு ஓர் ஆத்ம திருப்தியும் இருக்கத்தான் செய்கிறது. அன்புடனும் நட்புடனும் பழகிவரும் நம் நெருங்கிய நண்பர்களும், நம்மைப்போன்ற சக பதிவர்களுமாகிய இவர்களிடம் இதில் என்ன பிரதிபலனை நாம் எதிர்பார்த்திட முடியும்?
      // மிக அருமையா சொன்னீங்க சார்.

      என் அன்பும் வணக்கங்களும். வேறென்ன சொல்ல :)

      நீக்கு
  9. இந்த வாட்டி சீக்கிரமே வந்துட்டேன்... விமரிசனம் படிக்கும்போதே முழுகதையும் படிக்க ஆர்வமா இருக்கு. சிவப்பு பட்டு கயிறு வித்யாசமான நமக்கு( எனக்கு) தெரிந்திராத விஷயமா இருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் September 24, 2016 at 6:15 PM

      வாங்கோ சாரூஊஊஊஊ, வணக்கம்மா.

      //இந்த வாட்டி சீக்கிரமே வந்துட்டேன்...//

      அதுவும் பொதுவாக சனி/ஞாயிறு களில், பின்னூட்டமிட வரமுடியாத சூழ்நிலைகளில் உள்ள தாங்கள் இதற்கு சனிக்கிழமையே வந்துள்ளது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது. :)

      //விமரிசனம் படிக்கும்போதே முழுகதையும் படிக்க ஆர்வமா இருக்கு.//

      இப்படியான ஓர் ஆர்வத்தை வாசகர்கள் மத்தியில் தூண்டிவிடுவதே இதில் என் தலையாய பணியாகவும் உள்ளது. :)

      //சிவப்பு பட்டு கயிறு வித்யாசமான நமக்கு (எனக்கு) தெரிந்திராத விஷயமா இருக்குது.//

      பொதுவாக ஆண்கள் தாங்கள் சிறுகுழந்தையாய் இருக்கும் போதிலிருந்து, இறுதி ஊர்வலம் நடக்கும்வரை, தங்கள் இடுப்பினில் ஓர் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

      அதற்கு அரை-நாண்-கயிறு என்று பெயர். அதை சொல்வழக்கில் அரணாக்கயிறு என்றும் சொல்லுகிறார்கள்.

      இதில் பொதுவாக கருப்பு கலர் மற்றும் சிவப்புக் கலர் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் சாதாரணக் கயிறுகளும் உண்டு. வழவழப்பான பளபளப்பான மின்னிடும் பட்டுக்கயிறுகளும் உண்டு. இதில் திக்கான கயிறுகளும் உண்டு, தின் ஆன மெல்லிய கயிறுகளும் உண்டு. மெல்லிய கயிறையே இரட்டையாகப் போட்டுக் கட்டிக்கொள்பவர்களும் உண்டு.

      ஆரோக்யம் கருதி, இதனை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறையாவது, புதிதாக மாற்றிக்கொள்வது நல்லது.

      இவையெல்லாம் நான் அறிந்ததே. எங்கள் குடும்பத்தில், பிறந்த சிறுகுழந்தைகள் முதல் என்வரை அனைவரும் அனுஷ்டித்து வருவதும் ஆகும்.

      வீட்டில் எப்போதும் இந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறப் பட்டு கயிறுகள் மெல்லியதாகவும், கனமானதாகவும் ஸ்டாக்கில் நிறைய இருந்துகொண்டே இருக்கும். இது ஒரு ரக்ஷை போல எனவும் வைத்துக்கொள்ளலாம்.

      -=-=-=-
      இந்த அரணாக்கயிற்றினால் இன்னொரு பயனும் உண்டு. அதை நான் என் இந்தப்பதிவினில் மிகவும் நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பார்க்கவும்.

      http://gopu1949.blogspot.in/2015/02/3.html
      இதிலுள்ள மொட்டைத்தலைக் குழந்தையின் படத்திற்குக் கீழேயுள்ள மூன்றாம் பத்தியில் (பத்தி=Paragraph) அது என்னால் குறிப்பிடப்பட்டுள்ளது.
      -=-=-=-

      ஆனால் ’பட்டுக்கயிறை அறுத்தல்’ என்ற நிகழ்வு ஏதோ ஒரு சமுதாயத்தில், எதற்காகவோ இன்றும் நடைபெற்று வருகிறது என்பது, நம் ஹனி மேடத்தின் இந்தக்கதையைப் படித்தபிறகே நானும் தெரிந்துகொள்ள முடிந்துள்ளது என்பதே இதில் உள்ளதோர் உண்மையாகும்.

      உன் அன்பு வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊஊ.

      தொடர்ந்து பகுதி-3 முதல் பகுதி-6 வரை கண்டிப்பாக வரவும்.

      நீக்கு
    2. இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்கள் பெரும்பாலானவர்களால் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் .

      நீக்கு
    3. ஆல் இஸ் வெல்....... September 25, 2016 at 6:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்கள் பெரும்பாலானவர்களால் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      அந்த அரணாக்கயிற்றினால் இன்னொரு பயனும் உண்டு எனச் சொல்லி ஓர் இணைப்பினைக் கொடுத்துள்ளேனே ... அதைப் படிச்சீங்களோ? :)

      நீக்கு
    4. மிக்க நன்றி ப்ராப்தம், ஆல் இஸ் வெல் & விஜிகே சார் :)

      நீக்கு
  10. சிவப்பு பட்டுக்கயிறு...சூலம்... கருணையாய் ஒரு வாழ்வு மூன்று தலைப்புமே வித்தியாசமா இருக்கு கதையும் அப்படித்தான் இருக்கும்போல தோணுது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. shamaine bosco September 24, 2016 at 6:18 PM

      வாங்கோ மேடம், வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      சற்றுமுன் தான் தாங்கள் அன்புடன் அளித்த, தக்காளி ஊறுகாய், தக்காளி சட்னி + தக்காளி கூட்டு ஆகியவற்றை ரஸித்து, ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தேன். அதற்கு மிக்க நன்றி.

      //’சிவப்பு பட்டுக்கயிறு...சூலம்... கருணையாய் ஒரு வாழ்வு’ மூன்று தலைப்புமே வித்தியாசமா இருக்கு கதையும் அப்படித்தான் இருக்கும்போல தோணுது..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. தொடர்ந்து அடுத்த நான்கு பகுதிகளுக்கும் மறக்காமல் வருகை தாருங்கள், மேடம்.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஷாமெய்ன் போஸ்கோ மேடம் & விஜிகே சார் :)

      நீக்கு
  11. இதுபோல கதைகள்லாம் நான் படிச்சதே கிடையாது.. கோபு பெரிப்பா வால கொஞ்சம் கொஞ்சமா சில விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy September 24, 2016 at 6:22 PM

      என் செல்லக்குழந்தாய் ‘ஹாப்பி’ வாடாக்கண்ணு. உன்னைப் பார்த்தலே எனக்கு ஒரே ஹாப்பியாகி விடுகிறது. :)

      //இதுபோல கதைகள்லாம் நான் படிச்சதே கிடையாது..//

      நீ ஒரு சின்னக்குழந்தை. இளம் நொங்கு போல. தான் உண்டு, தன் வீடு உண்டு, தன் ஸ்லோக பாராயண, புராண, இதிகாஸ பக்திப் புத்தகங்கள் உண்டு, தன் தனித்திறமைகளைக் காட்டி ஸ்வீட்ஸ், காரம், ஸ்ட்ராங் ஃபில்டர் காஃபி, தடபுடல் சாப்பாடுகள் என அனைத்து விதமான சமையல்களை மிக மிக ருசியாக சமைத்து அசத்த உன் சமையல் கட்டு உண்டு என நினைத்து, எளிமையான மற்றும் அருமையானதோர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாய்.

      இந்த மிகச்சிறிய வயதிலேயே பிரபல ’கிட்சன் குயின்’ ஆக விளங்கிடும் உன்னை நினைக்க ’சாப்பாட்டுராமன்’ ஆகிய எனக்கு மிகவும் பொறாமையாகவே உள்ளது. வாழ்க்கையில் இவற்றைத் தவிர வேறு என்ன வேண்டும்?

      எனக்கு மனதில் ஏதேனும் துக்கம் ஏற்படும்போதெல்லாம், உன் சிரித்த அந்த அழகிய முகத்தை நான் எனக்குள் நினைத்துக்கொள்வேன். உடனே என் மனத்தில் உள்ள துக்கமெல்லாம் நீங்கி, எனக்கு மிகவும் சந்தோஷமாகிவிடும்.

      நம் ஹனி மேடத்திற்கும், உனக்கும் அந்த பளீரென்று வாய்விட்டுச் சிரிக்கும் சிரிப்பே மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் ஆக அமைந்துள்ளன.

      இவையெல்லாம் உனக்கு கடவுள் கொடுத்துள்ள ஸ்பெஷல் கிஃப்ட்ஸ் ஆகும்.

      ”இதுபோல கதைகள்லாம் நான் படிச்சதே கிடையாது..” எனச் சொல்லியிருக்கிறாய். எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்.

      எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் அமைந்து விடுவது இல்லை. எல்லோருக்கும் எல்லாமே தெரிந்திருக்கணும் என்ற அவசியமும் இல்லை.

      நெட் உள்பட எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு ... கெட்டதும் உண்டு. புதிதாக நெட்டில் வர ஆரம்பித்திருக்கும் உனக்கு எதுவுமே நன்கு புரிய நீண்ட நாட்களாகும்.

      இருப்பினும் நீ பலருடனும் சகஜமாகப் பழகிவிடாமல், மிகவும் கவனமாக இருக்கணும் என்பதை உன் மீது எனக்குள்ள தனி அக்கறையினால் இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

      //கோபு பெரிப்பா வால கொஞ்சம் கொஞ்சமா சில விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியறது.//

      மிக்க மகிழ்ச்சி-டா, தங்கம். இன்றுபோல் என்றும் நீ வெரி வெரி ‘ஹாப்பி’யாக மட்டுமே வாழ என் அன்பு வாழ்த்துகள்.

      உன் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ‘ஹாப்பி’

      நீக்கு
    2. மிக சரியா சொன்னீங்க விஜிகே சார். இது எல்லாருக்கும் பொருந்தும் அறிவுரை நானும் ஏற்கிறேன். ஹேப்பி நீங்க வந்தது ரொம்ப ஹேப்பிம்மா. நன்றிடா :)

      நீக்கு
  12. அதுக்குள்ள ரெண்டாவது பகுதி போட்டாச்சூ. ரொம்பவே சுறு சுறுப்புதான்...விமரிசனம் நல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... September 24, 2016 at 6:24 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அதுக்குள்ள ரெண்டாவது பகுதி போட்டாச்சூ.//

      நான் எந்த ஒரு வேலையை எடுத்துச் செய்வதாக இருந்தாலும், அதனை முதலில் என் மனதில் முழுமையாக ஓர் படமாகவே வரைந்துகொள்வேன். பலவிதமாக யோசித்து நன்கு திட்டமிட்டுக்கொள்வேன். என் இந்தத் திட்டமிடலுக்கு ஓர் உதாரணமாக இதோ இந்த என் படங்களுடன் கூடிய பதிவுகளை சற்றே பார்க்கவும்.

      https://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

      https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

      அதுபோல நான் இதுவரை என் வலைத்தளத்தினில் எவ்வளவோ தொடர் பதிவுகள் கொடுத்துள்ளேன். அவற்றில் 10 பகுதிகளுக்கு மேல் 20 பகுதிகள் வரை அமைந்திருந்த தொடர் பதிவுகளும் நிறையவே உண்டு.

      28.05.2013 முதல் 11.01.2014 வரை ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் நான் கொடுத்துள்ள 108 பகுதிகள் கொண்ட மெகா தொடர் மிகவும் வெற்றிகரமாக அமைந்து பலரின் பாராட்டுக்களை எனக்குப் பெற்றுத்தந்ததாகும்.

      பகுதி-001 க்கான இணைப்பு: https://gopu1949.blogspot.in/2013/05/1.html

      பகுதி-108 க்கான இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/01/108.html

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> ஆல் இஸ் வெல் (2)

      இவ்வாறான இந்த தொடர்களின் முதல் பகுதியை நான் வெளியிடுவதற்கு முன்பே, அனைத்துப் பகுதிகளையும், நன்கு திட்டமிட்டு, ஓரளவுக்கு DRAFT ஆக என்னிடம் தயாரித்து ஸ்டாக்கில் வைத்துக்கொண்ட பிறகே, என் முதல் பகுதியை நான் வெளியிடுவது என் வழக்கமாகும்.

      பிறகு ஒவ்வொரு பகுதியினையும், நான் வெளியிடுவதற்கு முன்பு அதனை மேலும் மேலும் கொஞ்சம் மெருகூட்டிக்கொண்டே இருப்பேன் என்பது தனி விஷயம். :)

      சொன்னால் சொன்ன தேதியில், சொன்ன நேரத்திற்குள் என் பதிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டு செயல்படுபவன் நான்.

      மின்சாரத் தடை, நெட் கிடைக்காமல் படுத்தல்கள் போன்றவைகளையும் எப்படியாவது சமாளித்துத்தான் என் பதிவுகளை என் COMMITMENTS படி, இதுவரை வெற்றிகரமாகவே வெளியிட்டுள்ளேன்.

      2011 நவம்பர் மாதம் தமிழ்மணத்தில் ஒருவாரம் நட்சத்திரப்பதிவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மின்சாரத்தடையும், நெட் கனெக்‌ஷன் கிடைக்காமலும் பல்வேறு பிரச்சனைகளை நான் என் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.

      அப்போதும்கூட நான் ஏற்கனவே ஒட்டு மொத்தமாகத் திட்டமிட்டு 28 பதிவுகளையும் என்னிடம் முன்கூட்டியே DRAFT ஆக சேமித்து வைத்துக்கொண்டிருந்ததால், என் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வேறு ஒரு ஏரியாவில் உள்ள ப்ரெளஸிங் செண்டருக்கு அவ்வப்போதுபோய், அந்த ஒரு வாரத்தில் மட்டுமே தினம் நான்கு பதிவுகள் வீதம், மொத்தம் 28 பதிவுகள் கொடுத்து மிகப்பெரிய சாதனை செய்திருந்தேன்.

      அந்த ஒரு குறிப்பிட்ட வாரத்தில் எனக்கு தமிழ்மணத்தில் ’முதலிடம்’ கிடைத்திருந்தது என்பதையும் இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

      அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: https://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html

      நிறைவுப் பகுதிக்கான இணைப்பு: https://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

      //ரொம்பவே சுறு சுறுப்புதான்... விமரிசனம் நல்லா இருக்கு...//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. இந்தத் தொடரின் மற்ற பகுதிகளான பகுதி-3 முதல் பகுதி-6 வரை, தொடர்ந்து சுறுசுறுப்புடன் வருகை தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
    3. இப்படி ஆர்வமுடன் எழுத்துலகில் முத்திரை பதிக்க எல்லோராலும் முடியாதுங்க.. விடா முயற்சி கடின உழைப்பு ஏற்றுக்கொண்ட பணியில் ஆர்வம். எல்லாம் இருக்கிறது உங்களிடம்...

      நீக்கு
    4. ஆல் இஸ் வெல்....... September 25, 2016 at 6:19 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இப்படி ஆர்வமுடன் எழுத்துலகில் முத்திரை பதிக்க எல்லோராலும் முடியாதுங்க.. விடா முயற்சி கடின உழைப்பு ஏற்றுக்கொண்ட பணியில் ஆர்வம். எல்லாம் இருக்கிறது உங்களிடம்...//

      இப்படி ஆர்வமுடன் எழுத்துலகில் முத்திரை பதிக்க.. விடா முயற்சி, கடின உழைப்பு, ஏற்றுக்கொண்ட பணியில் ஆர்வம், எல்லாம் இ-ரு-ந்-த-து சென்ற ஆண்டு 2015 வரை என்னிடம்...//

      இப்போதெல்லாம் நான் சுத்த வழுவட்டையாகி, உலக மஹா சோம்பேறியும் ஆகிவிட்டேன். அதற்கு எவ்வளவோ காரணங்கள் உள்ளன.

      ’வழுவட்டை’ என்றால் என்னவென்று அறிய இதோ என் நகைச்சுவைப் பதிவுக்கான இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

      படிக்கத் தவறாதீர்கள் ! :)))))))))))

      நீக்கு
    5. உங்கள் எழுத்தில் மட்டுமல்ல சுறுசுறுப்பிலும் தேனீயாய் அசத்துறீங்க விஜிகே சார். ! நன்றி ஆல் இஸ் வெல் :)

      நீக்கு
  13. மூன்று கதைகளின் முடிச்சு உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். நல்ல அறிமுகம். மற்ற கதைகள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் September 25, 2016 at 6:51 AM

      வாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம்.

      //மூன்று கதைகளின் முடிச்சு உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். நல்ல அறிமுகம்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //மற்ற கதைகள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.//

      தொடர்ந்து வாருங்கள் வெங்கட்ஜி. மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, ஜி.

      நீக்கு
    2. நன்றி வெங்கட் சகோ. சென்னை வந்தால் புக்கை வாங்கிப் படித்து கட்டாயம் கருத்து சொல்லணும். :) நன்றி விஜிகே சார். :)

      நீக்கு
  14. தாங்கள் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் ‘சிவப்பு பட்டு கயிறு’ என்ற கதைத் தொகுப்பில் இருந்து தந்திருக்கும் ‘தேன் துளிகள்’ ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் கதையின் மய்யக் கருத்தை சுவைபட சொல்கின்றன.


    ‘சிவப்பு பட்டு கயிறு’ கதையில் தான் ஆண் வாரிசாகப் பிறந்துள்ள தன் குடும்பத்தையே, முற்றிலுமாகத் துறந்து விட்டு வெளியேறி, வேறொரு வீட்டுக்குச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ‘தன் இடுப்பிலிருந்து ஓர் ஆண்பிள்ளை பட்டுக்கயிறு அறுப்பது என்பது தொப்புள்கொடி அறுப்பதற்குச் சமமாகும்.’ என்ற எடுத்துக்காட்டு பொருத்தமான ஒன்று.

    ‘சூலம்’ கதையில் தன் தந்தை ’மாரியப்பன்’ + தாய் ‘தேவி’ ஆகியோரின் திருமண உறவைப் பார்த்து, தான் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்ற வைராக்கியத்திற்கே வந்து விட்டாள் என்பது குடி எவ்வாறு ஒரு குடியைக் கெடுக்கும் என்பதை சொல்லும் யதார்த்தமான வரிகள்.


    ‘கருணைக்கொலை’ கதையில் முத்தாய்ப்பாக சொல்லப்படும் “ஓர் உயிர் வாழ்வது பற்றியும் இறப்பது பற்றியும் தீர்மானிக்க நாம் யார்....?” என்ற வரி சிந்திக்கவைக்கின்றது.


    மொத்தத்தில் ‘தேன் துளிகள்’ ‘சிவப்பு பட்டு கயிறு’ தொகுப்பில் உள்ள கதைகளை முழுதும் படிக்கத்தூண்டுகிறது என்பது உண்மை. அதற்கு காரணமான தங்களுக்கு பாராட்டுக்கள். எழுத்தாளர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி September 25, 2016 at 9:36 AM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //தாங்கள் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் ‘சிவப்பு பட்டு கயிறு’ என்ற கதைத் தொகுப்பில் இருந்து தந்திருக்கும் ‘தேன் துளிகள்’ ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் கதையின் மய்யக் கருத்தை சுவைபட சொல்கின்றன.//

      மிகவும் சந்தோஷம், ஸார்.

      //.... .... .... மொத்தத்தில் ‘தேன் துளிகள்’ ‘சிவப்பு பட்டு கயிறு’ தொகுப்பில் உள்ள கதைகளை முழுதும் படிக்கத்தூண்டுகிறது என்பது உண்மை.//

      நூலினை முழுவதுமாகப் படிக்கத் தூண்ட வேண்டும் என்பதே, என்னுடைய இந்தச் சிறு தேன் துளிகளின் எதிர்பார்ப்பும்கூட. அது நிறைவேறப்போவதாகத் தெரிவதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

      //அதற்கு காரணமான தங்களுக்கு பாராட்டுக்கள். எழுத்தாளர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! //

      மிக்க மகிழ்ச்சி ஸார். தங்களின் பாராட்டுகளுக்கு என் முதற்கண் நன்றிகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஒவ்வொரு கதையிலும் நான் சொல்லியுள்ள மிகச் சிறிய குறிப்புகளைக்கொண்டு, நன்கு அவற்றைப்பற்றி விரிவாகத் தங்களின் கருத்துக்கள் எழுதி சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

      இந்தப் பகுதிக்கான தங்களின் வருகைக்கு என் நன்றிகள். இந்த என் மிகச்சிறிய தொடருக்குத் தொடர்ந்து அடுத்த நான்கு பகுதிகளுக்கும் வருகை தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. மிக அழகாக சார் எழுதியிருப்பதன் சாரத்தைச் சொன்ன நடன சபாபதி சாருக்கும் விஜிகே சாருக்கும் மனமார்ந்த நன்றிகள் :)

      நீக்கு
  15. //அவ்வாறான பிரபலங்களில் பலரும் அந்த புத்தகத்தை முழுவதும் படிக்காமலேயும், படிக்க விருப்பமோ, நேரமோ இல்லாமலேயேயும், முன்னுரை என்ற பெயரில் ஏதாவது சிலவரிகள் STANDARD ஆக எழுதித்தருவதும் வழக்கமாகத்தான் இருந்து வருகிறது என்பதும் ஓர் கசப்பான உண்மையாகவே உள்ளது. //

    தாங்கள் சொல்லியுள்ளதில் நிறைய உண்மைகள் பொதிந்து உள்ளன. நூலை எழுதியவர் ஒன்றை நினைத்து எழுத நூலுக்கு முன்னுரை எழுதுவோர் வேறொன்றை குறிப்பிட்டு
    எழுதுவதான கேலிக் கூத்துகளையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதனால் நூலை ஆக்கியோனே தன் நூல்லுக்கான முன்னுரை எழுதுவதே மிகவும் அர்த்தமுள்ளதாக அமையும்.

    தான் படைத்த தன் நூலுக்கு தன்னைத் தவிர வேறு யாரும் முன்னுரை எழுதிட இலாயக்கில்லாதவர் என்று கருதியே தன் நூலுக்கு தானே முன்னுரை எழுதும் வழக்கத்தை முதன் முதலாக தமிழ் எழுத்துலகில் அமுலுக்குக் கொண்டு வந்தவர் ஜெயகாந்தன் அவர்கள்.

    பத்திரிகைகளில் வரும் நூலுக்கான மதிப்புரைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அவை இன்னும் வேடிக்கையானவை. இதையெல்லாம் பற்றி விளக்கமாக ஒரு தனிப்பதிவு தான் போட வேண்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி September 25, 2016 at 11:57 AM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள். தங்களின் மீண்டும்
      வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      **அவ்வாறான பிரபலங்களில் பலரும் அந்த புத்தகத்தை முழுவதும் படிக்காமலேயும், படிக்க விருப்பமோ, நேரமோ இல்லாமலேயேயும், முன்னுரை என்ற பெயரில் ஏதாவது சிலவரிகள் STANDARD ஆக எழுதித்தருவதும் வழக்கமாகத்தான் இருந்து வருகிறது என்பதும் ஓர் கசப்பான உண்மையாகவே உள்ளது.-vgk**

      //தாங்கள் சொல்லியுள்ளதில் நிறைய உண்மைகள் பொதிந்து உள்ளன.//

      பொதிந்துள்ள நிறைய உண்மைகளை உண்மையாக உணர்ந்து சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      //நூலை எழுதியவர் ஒன்றை நினைத்து எழுத நூலுக்கு முன்னுரை எழுதுவோர் வேறொன்றை குறிப்பிட்டு எழுதுவதான கேலிக் கூத்துகளையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதிலிருந்து யாருக்கும் எதற்கும் நேரமோ, சிரத்தையோ, பொறுமையோ, பொறுப்புக்களோ இல்லை என்பதைத்தான் தெரிந்துகொள்ள முடிகிறது.

      //இதனால் நூலை ஆக்கியோனே தன் நூலுக்கான முன்னுரை எழுதுவதே மிகவும் அர்த்தமுள்ளதாக அமையும்.//

      மிகவும் ஒத்துக்கொள்ள வேண்டிய யதார்த்தமான அர்த்தமுள்ளதோர் உண்மை இது.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> ஜீவி (2)

      //தான் படைத்த தன் நூலுக்கு தன்னைத் தவிர வேறு யாரும் முன்னுரை எழுதிட இலாயக்கில்லாதவர் என்று கருதியே தன் நூலுக்கு தானே முன்னுரை எழுதும் வழக்கத்தை முதன் முதலாக தமிழ் எழுத்துலகில் அமுலுக்குக் கொண்டு வந்தவர் ஜெயகாந்தன் அவர்கள்.//

      அவர் மிகத்திறமையான, தன்னம்பிக்கைமிக்க, மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லாமல், மிகவும் துணிச்சலானவர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.

      அவர் அன்று இவ்வாறு முடிவெடுத்துச் செய்ததுதான் நியாயமும் கூட.

      தன் படைப்புகளை பிரசுரிக்க விரும்பும் பத்திரிக்கையாளர் தன் வீடு தேடி வர வேண்டும் என்றும், அவ்வாறு அவர் வீடு தேடிச் செல்லும் மிகப்பிரபல பத்திரிகையாளர்களுக்கு அவர் விதித்திருந்த மிகவும் விசித்திரமான + நியாயமான நிபந்தனைகளையும், தங்கள் நூலின் மூலம் அறிந்த நான் எனக்குள் அவரை மனதாரப்பாராட்டி மகிழ்ந்துகொண்டேன்.

      https://gopu1949.blogspot.in/2016/04/14.html

      தங்கள் நூலின் பக்கம் எண்: 148 - இரண்டாம் பத்தியில் சொல்லியுள்ள வரிகள் எனக்கு அவரின் மேல் கூடுதல் பிரியத்தினை ஏற்படுத்தி விட்டது.

      //பத்திரிகைகளில் வரும் நூலுக்கான மதிப்புரைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அவை இன்னும் வேடிக்கையானவை.//

      ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் ஆயிரம் பாலிடிக்ஸ் இருக்கக்கூடும் என்பதை உணர முடிகிறது.

      //இதையெல்லாம் பற்றி விளக்கமாக ஒரு தனிப்பதிவு தான் போட வேண்டும்.//

      அவ்வாறு துணிச்சலுடன் தனிப்பதிவு போட, இன்றைய தேதியில், தங்களை விட்டால் வேறு யாரும் பொருத்தமானவராக இருக்க முடியாது என்பது என் எண்ணம். செய்யுங்கோ. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
    3. எனது நூலுக்கு முன்னுரை யாரிடமாவாது கேட்கலாமென நினைக்கும்போது பதிப்பாளர் அதெல்லாம் வேண்டாம். அப்படியே போடலாம் விடுங்க என்றுசொல்லி விட்டார். நானும் அவருடைய பக்க அளவை மீறிவிடப் போகிறதே என்ற எண்ணத்தில் பிரபலங்களிடம் முன்னுரை வாங்கும் ஆசையைக் கைவிட்டு விட்டேன் :)

      நீக்கு
  16. விமரிசனங்கள் நன்னாருக்கு....இவ்வளவு கனமான ஸப்ஜெக்ட் எனக்கு புரிய கஷ்டம். போன பகுதியில் கடைசியில் "நம்ம".....சாரூவோட மங்கையர்மலன் போட்டோ இணைப்பு நல்லாருக்கு. மூணு கதையோட தலைப்புமே வித்யாசமா இருக்கு. கதையிலிருந்து சில வரிகள் சொல்லியிருப்பது புதுமையா இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் September 25, 2016 at 5:48 PM

      வாங்கோ ரோஜா, வணக்கம்.

      உன்னை இங்கு காணுமேன்னு மிகவும் கவலையாகி எனக்கு அழுகையே வந்துடுச்சு :(

      இப்போத்தான் ரோஜா மலர்ந்தது போல என் முகத்திலும் ஓர் மலர்ச்சி ஏற்பட்டுள்ள்து.

      //விமரிசனங்கள் நன்னாருக்கு....//

      அப்படியா! சந்தோஷம்.

      //இவ்வளவு கனமான ஸப்ஜெக்ட் எனக்கு புரிய கஷ்டம்.//

      என்னவோ, இங்கு வருகை தரும் எல்லோருக்குமே எல்லாமே புரிவது போலவும், உன் ஒருத்திக்கு மட்டும் புரியாத கனமான ஸப்ஜெக்ட் ஆக உள்ளது என்றும் நீ இங்கு சொல்லியுள்ளது கேட்க, எனக்குச் சிரிப்பாணி பொத்துக்கிச்சு. :)

      இன்-ஃபாக்ட், நான் எழுதியுள்ள இதில் எனக்கே ஒன்றுமே புரியவில்லையாக்கும். :)))))

      //போன பகுதியில் கடைசியில் "நம்ம".....சாரூவோட மங்கையர்ம-ல-ர் போட்டோ இணைப்பு நல்லாருக்கு.//

      மிகவும் சமத்துக்குட்டியான, அவளுடையது எல்லாமே நல்லாத்தான் இருக்கும் என என்னிடம் நீ எவ்வளவோ முறை சொல்லியிருக்கிறாய். :) இப்போது மீண்டும் ஒருமுறை அதையே சொல்லியுள்ளது கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. சந்தோஷம்.

      //மூணு கதையோட தலைப்புமே வித்யாசமா இருக்கு. கதையிலிருந்து சில வரிகள் சொல்லியிருப்பது புதுமையா இருக்கு..//

      மிக்க மகிழ்ச்சி. உன் அன்பான அபூர்வ அதிஸய வருகைக்கும், ரோஜாப்பூப்போன்ற அழகான, மென்மையான + மேன்மையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்....டா.

      நீக்கு
    2. அன்பான நன்றிகள்டா பூந்தளிர். & விஜிகே சார் :)

      நீக்கு
  17. மூன்று தலைப்புமே வித்தியாசமாக இருக்கிறது. நம் சிந்தனைக்கு....கதையிலிருந்து சில வரிகள் முழு கதையையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... September 25, 2016 at 6:12 PM

      //மூன்று தலைப்புமே வித்தியாசமாக இருக்கிறது.//

      மூன்றும் வேவ்வேறு தலைப்புகளில், வெவ்வேறு கதைக்கருவுடன் எழுதப்பட்டுள்ள வித்யாசமான கதைகள் அல்லவா! அதனால் அப்படி இருக்கலாம்.

      //நம் சிந்தனைக்கு....கதையிலிருந்து சில வரிகள் முழு கதையையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது..//

      அது போல சிலரின் ஆர்வத்தையாவது தூண்டிவிட வேண்டியதே, இதில் என் வேலையாக அமைந்துள்ளது.

      இந்த என் பதிவின் மூலம் உங்களின் ஆர்வம் தூண்டப் பட்டிருப்பது கேட்க எனக்கும் மகிழ்ச்சியே.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      இதன் தொடர்ச்சியான பகுதி-3 இன்று இரவு 10 மணி சுமாருக்கு வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து வருகை தாருங்கள்.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரத்தா ஸபுரி & நன்றி விஜிகே சார். பெரும்பாலான பேரிடம் என் புக்கை கொண்டு சேர்த்திருக்கிறீர்கள். என்ன சொல்றதுன்னு தெரில :) அன்பும் நன்றியும்

      நீக்கு
  18. கதைகளின் தலைப்பும், தங்களின் விமர்சனமும் ஆவலைத்தூண்டுகிறது....ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri September 26, 2016 at 10:50 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கதைகளின் தலைப்பும், தங்களின் விமர்சனமும் ஆவலைத்தூண்டுகிறது....ஐயா//

      ஆவலை எதற்காகத் தூண்டுகிறது? என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கும் இப்போது தூண்டப்பட்டுள்ளது. :)

      தங்களின் வழக்கமான பின்னூட்டமாக இல்லாமல் ஏதோவொரு அவசர அடியில் அள்ளித்தெளிப்பதாக உள்ளது. :(

      எனினும் தங்களின் அன்பான அவசரடி வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      தொடர்ந்து இந்த வாரம் மட்டும், இந்தத்தொடரின் அடுத்தடுத்த மூன்றே மூன்று பகுதிகளுக்கு மட்டும் வருகை தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. மிக்க நன்றி உமா & விஜிகே சார் :)

      நீக்கு
  19. பிறந்தவீடு,புகுந்த வீட்டிற்கு ஸுவாஸிப்பதை ஈடுகாட்டியும்,நெற்பயிர் பிடுங்கி நடப்பட்டபிறகு பலன்கொடுப்பதையும் அழகாக ஒப்பிட்டுக் கதை செல்வது இப்படியெல்லாம் யோசித்திருக்க மனதுதானே காரணம் என்று நினைத்துக் கொண்டேன். பட்டுக்கயிறு அறுப்பதென்பது ஏதாவது ஒரு வட்டாரத்து ஸ்வீகார முறையாயிருக்கும் என்று தீர்மானித்தேன். அனுபவமாக கற்பனை செய்து எழுதியிருப்பது மிகவும் யோசிக்க வைத்தது. எப்படி இந்த வரிகள் அதே யோசனை செய்ய வைத்து விட்டது. அருமையான கதாசிரியை. புத்தகம் படித்தால் இன்னும் அருமையாக இருக்கும். பாராட்டுகள் தேனம்மை. விமரிசனம் உங்களதும் மிக்க நன்றாக எழுதியுள்ளீர்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி September 26, 2016 at 5:55 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //பிறந்தவீடு,புகுந்த வீட்டிற்கு ஸுவாஸிப்பதை ஈடுகாட்டியும், நெற்பயிர் பிடுங்கி நடப்பட்டபிறகு பலன்கொடுப்பதையும் அழகாக ஒப்பிட்டுக் கதை செல்வது இப்படியெல்லாம் யோசித்திருக்க மனதுதானே காரணம் என்று நினைத்துக் கொண்டேன்.//

      ஆம் ... அழகாக இப்படியெல்லாம் யோசிக்க, அவர்களின் மனமும் எண்ணங்களும்கூட அழகாகவேதான் இருக்க வேண்டும்.

      //பட்டுக்கயிறு அறுப்பதென்பது ஏதாவது ஒரு வட்டாரத்து ஸ்வீகார முறையாயிருக்கும் என்று தீர்மானித்தேன்.//

      ஒருவேளை அதுபோலவும் கூட இருக்கலாம் என்றே நானும் உங்களைப்போலவே தீர்மானித்திருந்தேன் .... ஆனால் .... வேண்டாம் இங்கு ஏதும் இப்போது நான் சொல்ல வேண்டாம்.

      //அனுபவமாக கற்பனை செய்து எழுதியிருப்பது மிகவும் யோசிக்க வைத்தது. எப்படி இந்த வரிகள் அதே யோசனை செய்ய வைத்து விட்டது. அருமையான கதாசிரியை. புத்தகம் படித்தால் இன்னும் அருமையாக இருக்கும். பாராட்டுகள் தேனம்மை.//

      மிகவும் சந்தோஷம் மாமி. நூலாசிரியர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

      //விமரிசனம் உங்களதும் மிக்க நன்றாக எழுதியுள்ளீர்கள். அன்புடன்//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.

      நீக்கு
    2. மிக அழகாக சொல்லி உள்ளமைக்கு நன்றி காமாட்சி மேம் & அதற்கு தக்கபடி அழகான பதிலுக்கு நன்றி விஜிகே சார். இது இங்கே காரைக்குடி செட்டிநாட்டுப் பகுதிகளில் பழக்கம். ஆனால் பெரும்பாலோருக்கே தெரியாது. ஏனெனில் இங்கே இருப்பவர்களே எதையும் ஊன்றிக் கவனிப்பதோ கேட்டுக் கொள்வதோ இல்லை,யாருமே.. ஹ்ம்ம்

      நீக்கு
  20. திரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம்.
    இடையில் சில மாதங்கள் நான் வலையுலகுக்கு வர இயலாச் சூழ்நிலை. அதனால் பல பதிவுகளை வாசிக்க இயலவில்லை.
    சாதனை அரசி தேனம்மை அவர்கள் சிறுகதை நூலொன்றை வெளியிட்டிருக்கிறார் என்பதை உங்கள் பதிவு மூலம் அறிந்தேன். இது அவருடைய முதல் சிறுகதை நூலென்றும் தெரிந்து கொண்டேன்.
    அவருடைய அன்னபட்சி என்ற கவிதை நூலை நான் வாசித்து, அது பற்றிய என் பார்வையை என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.
    சிவப்புப் பட்டுக்கயிறு என்ற தலைப்பு நீங்கள் சொல்லியிருப்பது போல் வித்தியாசமாய் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இது போல் ஆண்மகன் தம் குடும்பத்தைத் துறந்து செல்லும் வழக்கம் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். கதையைப் பற்றிய உங்கள் விமர்சனத்தை வாசிக்கும்போது நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது.
    கதையில் உள்ள சில வரிகளை நம் சிந்தனைக்கு எனக் கொடுத்திருப்பதும் ஆர்வத்தை அதிகப்படுத்துவதாய் உள்ளது
    வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது மண்ணுக்கும், பயிருக்கும் என்ற வரிகள் சிறப்பாக உள்ளன.
    கருணையாய் ஒரு வாழ்வு கருணைக்கொலையைப் பற்றிய ஒரு பார்வை என்றும் சூலம் கதை விறுவிறுப்பாக இருக்கிறது என்றும் உங்கள் விமர்சனத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். வாய்ப்புக்கிடைக்கும் போது வாசிக்கிறேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி September 26, 2016 at 7:54 PM

      //திரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம்.//

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இடையில் சில மாதங்கள் நான் வலையுலகுக்கு வர இயலாச் சூழ்நிலை. அதனால் பல பதிவுகளை வாசிக்க இயலவில்லை.//

      இடையில் சில மாதங்களாக, நீங்கள் மட்டுமல்லாமல், உங்களைப் போன்ற மிகச்சிறந்த வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள், வலையுலகுக்கு வர இயலாச் சூழ்நிலை இருந்ததாலோ என்னவோ நானும், வலையுலகுக்கு வந்து புதுப்பதிவுகள் ஏதும் அதிகமாகத் தரவே இல்லை.

      இந்த ஆண்டு 2016-இல் நான் வெளியிட்டுள்ள மிக மிகக்குறைவான பதிவுகளில், ஜூலை மாதப்பதிவுகள் இரண்டுக்கும், இந்த நடப்பு செப்டம்பர் மாதப்பதிவுகள் இரண்டுக்குமாக மொத்தம் நான்கே நான்கு பதிவுகளுக்கு மட்டுமே தாங்கள் வருகை தராமல் உள்ளீர்கள். அதனால் பரவாயில்லை, மேடம்.

      //சாதனை அரசி தேனம்மை அவர்கள் சிறுகதை நூலொன்றை வெளியிட்டிருக்கிறார் என்பதை உங்கள் பதிவு மூலம் அறிந்தேன். இது அவருடைய முதல் சிறுகதை நூலென்றும் தெரிந்து கொண்டேன்.//

      சந்தோஷம், மேடம்.

      //அவருடைய அன்னபட்சி என்ற கவிதை நூலை நான் வாசித்து, அது பற்றிய என் பார்வையை என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.//

      அது எனக்கும்கூட நன்றாக நினைவில் உள்ளது. அதில் நான் எழுதியுள்ள பின்னூட்டம் கூட நினைவில் உள்ளது :)

      -=-=-=-=-=-=-=-
      வை.கோபாலகிருஷ்ணன் 19 February 2015 at 10:09

      ஏற்கனவே வலிமை மிக்க தேன் போன்ற திருமதி. தேனம்மை அவர்களின் கவிதை நூலுக்குத் தங்களின் மிக அருமையான விமர்சனம் மேலும் வலுவூட்டுவதாக உள்ளது. இருவருக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
      நன்றியுடன் கோபு

      -=-=-=-=-=-=-=-

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> திருமதி. ஞா. கலையரசி மேடம் (2)

      //சிவப்புப் பட்டுக்கயிறு என்ற தலைப்பு நீங்கள் சொல்லியிருப்பது போல் வித்தியாசமாய் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இது போல் ஆண்மகன் தம் குடும்பத்தைத் துறந்து செல்லும் வழக்கம் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.//

      நானும் இப்போதுதான், இவர்களின் இந்த நூல் மூலம் மட்டும்தான், கேள்விப்படுகிறேன், மேடம்.

      //கதையைப் பற்றிய உங்கள் விமர்சனத்தை வாசிக்கும்போது நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது. கதையில் உள்ள சில வரிகளை நம் சிந்தனைக்கு எனக் கொடுத்திருப்பதும் ஆர்வத்தை அதிகப்படுத்துவதாய் உள்ளது.//

      மிக்க மகிழ்ச்சி மேடம். நூலை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உங்களைப்போன்ற சிலருக்காவது, என் இந்த நூல் அறிமுகம் + மதிப்புரை ஏற்படுத்துமானால், அதுவே என் எழுத்துக்களுக்கான மிகப்பெரிய வெற்றிதான் என நினைத்து எனக்குள் சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.

      //வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது மண்ணுக்கும், பயிருக்கும் என்ற வரிகள் சிறப்பாக உள்ளன.//

      ஆம் .... வெகு அழகாகத்தான் + பொருத்தமாகத்தான் கூறப்பட்டுள்ளன.

      //கருணையாய் ஒரு வாழ்வு கருணைக்கொலையைப் பற்றிய ஒரு பார்வை என்றும் சூலம் கதை விறுவிறுப்பாக இருக்கிறது என்றும் உங்கள் விமர்சனத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். வாய்ப்புக்கிடைக்கும் போது வாசிக்கிறேன். தொடர்கிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான + விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.

      நீக்கு
    3. அஹா எந்தப் பதிவுக்கு யார் வந்து கமெண்ட் போட்டார்கள். அதுவும் எந்த வருடம் எந்த மாதம் என்று எல்லாம் சொல்றீங்களே சார். உங்க ஞாபகசக்தி என்ன அதிரச் செய்யுது. :) நான் எல்லாம் ஒப்புக்குச் சப்பாணியா அருமை என்று போட்டுவிட்டுப் போவேன். அடடா.. பின்னூட்டம் கூட ஒரு கலைதான்.. கலையரசி அவர்களுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் சார் :)

      நீக்கு
  21. இந்தப்பதிவுக்கு கமெண்டு போட்ட நினைவு இருக்கே.... .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீனி வாசன் September 27, 2016 at 10:34 AM

      //இந்தப்பதிவுக்கு கமெண்டு போட்ட நினைவு இருக்கே.... .//

      இல்லை. எனக்கு தங்கள் கமெண்ட்ஸ் ஏதும் வந்து சேரவில்லை. நானும் SPAM போன்ற எல்லா இடங்களில் சென்று தேடிப் பார்த்துக் களைத்துப்போய் விட்டேன். :)

      நீக்கு
    2. ஸ்ரீனிவாசன் சார் மொத்தம் ஆறு பாகங்கள் அதனால் தலைப்பு ஒன்றே போலத் தோன்றி இருக்கலாம். நன்றி ஸ்ரீனிவாசன் சார் & விஜிகே சார் :)

      நீக்கு
  22. மிக மிக அற்புதமாக
    கதையின் ஜீவனைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டி
    பின் அந்தக் கதையில் கவர்ந்த வரிகளை
    எடுத்துக்காட்டிச் சென்றவிதம் அருமை
    குறிப்பாக எழுத்து நடை கூட
    கதையின் கருவுக்குத் தகுந்தாற்போல
    அருமையாக மாறிக் கொள்வதை
    தங்கள் எடுத்துக் கொடுத்த வரிகள் மூலம்
    மிகவும் இரசித்தேன்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S September 27, 2016 at 7:22 PM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //மிக மிக அற்புதமாக கதையின் ஜீவனைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டி பின் அந்தக் கதையில் கவர்ந்த வரிகளை
      எடுத்துக்காட்டிச் சென்றவிதம் அருமை.//

      மிகவும் மகிழ்ச்சி, ஸார்.

      //குறிப்பாக எழுத்து நடை கூட கதையின் கருவுக்குத் தகுந்தாற்போல அருமையாக மாறிக் கொள்வதை
      தங்கள் எடுத்துக் கொடுத்த வரிகள் மூலம் மிகவும் இரசித்தேன். வாழ்த்துக்களுடன்...//

      :) தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகமளிக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. அஹா எழுத்து நடையைக் கூடக் கவனித்துச் சொல்லி இருப்பதற்கு நன்றி ரமணி சார், மிக அருமையா அதை வெளிக்கொண்டுவந்து இங்கே பகிர்ந்த விஜிகே சாருக்கு மனமார்ந்த நன்றி. :)

      நீக்கு
  23. சுவாரஸ்யமாக இருக்கிறது. எளிய விஷயங்களையும் சொல்லும் விதத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha September 28, 2016 at 3:25 PM

      வாங்கோ ஷக்தி. வணக்கம்.

      //சுவாரஸ்யமாக இருக்கிறது. எளிய விஷயங்களையும் சொல்லும் விதத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஷக்தி & விஜிகே சார் :)

      நீக்கு
  24. சார் தங்களின் விமர்சனம் அருமை! நாங்களும் வாசித்துக் கொண்டிருக்கின்றோம்...நிறைய புத்தகங்கள் வரிசை கட்டிக் காத்திருப்பதால், நாங்கள் இருவர் வாசித்து எழுத வேண்டியிருப்பதால் ஒவ்வொன்றாக வெளிவரும்...

    நீங்கள் சொல்லிச் செல்லும் விதம் உங்கள் பாணியில்,நடையில் அழகு சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu
      September 29, 2016 at 8:32 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சார் தங்களின் விமர்சனம் அருமை!//

      மிக்க மகிழ்ச்சி.

      //நாங்களும் வாசித்துக் கொண்டிருக்கின்றோம்...//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி.

      //நிறைய புத்தகங்கள் வரிசை கட்டிக் காத்திருப்பதால், நாங்கள் இருவர் வாசித்து எழுத வேண்டியிருப்பதால் ஒவ்வொன்றாக வெளிவரும்...//

      ஒன்றும் அவசரமே இல்லை. மெதுவாகவே நடக்கட்டும்.

      //நீங்கள் சொல்லிச் செல்லும் விதம் உங்கள் பாணியில், நடையில் அழகு சார்...//

      இதை உங்கள் பாணியில் அழகாக எடுத்துச் சொல்லிச் சென்றுள்ள விதம் எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், இனிமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. அஹா துளசி சகோ & கீத்ஸ் நீங்களும் வாசிக்கிறீங்களா. எப்ப எங்க வாங்கினீங்க.இனிய அதிர்ச்சியா இருக்கு இங்கே விஜிகே சார் கொடுத்திருப்பதைப் போல.. :)

      நீக்கு
  25. சிவப்பு பட்டுக்கயிறு ஐ.. லைக் வெரிமச்...கோபூஜி எப்படி இவ்வளவு பெரிய பெரிய ரிப்ளை கமெண்ட் கொடுக்கறீங்க.. டைம் எப்படி கிடைக்குது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. October 3, 2016 at 11:06 AM

      வா ..... மீனா. வணக்கம்.

      //சிவப்பு பட்டுக்கயிறு ... ஐ.. லைக் வெரிமச்...//

      சிவப்புப் பட்டுக்கயிறு, ஓரிரு மீட்டர்களாவது, உடனடியா வாங்கி நீயும் கட்டிக்கொண்டு பார்க்கவும். உன் இடுப்புச் சுற்றளவுக்கு அந்த ஓரிரு மீட்டர்கள் பத்துமோ பத்தாதோ :)))))))

      //கோபூஜி எப்படி இவ்வளவு பெரிய பெரிய ரிப்ளை கமெண்ட் கொடுக்கறீங்க..//

      எல்லாம் நம் முன்னா பார்க்கில், நான் நம் டீச்சர்கள் இருவரிடமும் + உன்னிடமும் கற்றுக்கொண்ட பாடம் மட்டுமே. :)))))

      //டைம் எப்படி கிடைக்குது..//

      நம் முன்னா பார்க் நடுவில் இழுத்து மூடப்பட்டதாலும், அங்கு என் வருகையை நான் இப்போதெல்லாம் மிகவும் குறைத்துக்கொண்டு விட்டதாலும் மட்டுமே, எனக்கு டைம் கிடைத்தது. :)))))

      நீக்கு
    2. பின்னூட்டத்தில் ராஜியும் விஜிகே சாரும் எப்பவும் என்னை வியக்க வைத்திருக்கிறார்கள். இங்கே பின்னூட்டமிடும் அனைவருமேதான். மொத்தத்தில் சோம்பேறி நான் மட்டுமே :) நன்றி சிப்பிக்குள் முத்து & விஜிகே சார் :)

      நீக்கு
  26. நூலின் தலைப்பே சிந்தனையைத் தூண்டும் வண்ணம் இருப்பது சிறப்பு.. சிவப்பு பட்டுக்கயிறு என்றால் என்னவாக இருக்கும் என்று இதுவரை புரியாமல் இருந்த எனக்கு இங்கு தாங்கள் கொடுத்துள்ள கதைக்கான குறிப்பு மூலம் அறிய முடிகிறது. பிரிவு என்பது யாருக்குமே துயரம் தரக்கூடியதொன்று. அதை அடுத்து வரும் இரண்டு கதைகளிலுமே உணரமுடிகிறது.. ஊசலாடிக் கொணடிருக்கும் உயிரை மையமாய் வைத்து புனையப்பட்ட கதையின் வாத சாம்பிள் கதையை முழுமையாக வாசித்தறியத் தூண்டுகிறது. மிக அழகான விமர்சன அறிமுகம். நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி October 4, 2016 at 8:59 AM

      வாங்கோ, மேடம். வணக்கம்.

      //நூலின் தலைப்பே சிந்தனையைத் தூண்டும் வண்ணம் இருப்பது சிறப்பு.. சிவப்பு பட்டுக்கயிறு என்றால் என்னவாக இருக்கும் என்று இதுவரை புரியாமல் இருந்த எனக்கு இங்கு தாங்கள் கொடுத்துள்ள கதைக்கான குறிப்பு மூலம் அறிய முடிகிறது.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //பிரிவு என்பது யாருக்குமே துயரம் தரக்கூடியதொன்று. அதை அடுத்து வரும் இரண்டு கதைகளிலுமே உணரமுடிகிறது.. ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிரை மையமாய் வைத்து புனையப்பட்ட கதையின் வாத சாம்பிள் கதையை முழுமையாக வாசித்தறியத் தூண்டுகிறது. மிக அழகான விமர்சன அறிமுகம். நன்றி கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமாக வாசித்து அற்புதமாக எழுதியுள்ள கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. அன்பான நன்றிகள்டா கீத்ஸ் & விஜிகே சார் :) அப்பாடா ரெண்டாவது நாள் வந்து நீங்கள் போட்ட இரண்டாவது இடுகைக்கு முடிந்த அளவு பின்னூட்டமிட்டுவிட்டேன். ரொம்ப களைப்பா இருக்கு. :) திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க சார் வீட்டம்மாவிடம். மிக்க அன்பும் மகிழ்ச்சியு நன்றியும் சார் . சிவப்புப் பட்டுக் கயிறு நூலை ஆழ்ந்து படித்து அதை அழகாக பகுதி பகுதியாகப் பிரித்து குறிப்பிட்ட இடங்களை ஹைலைட் செய்து உங்கள் கருத்தோடு வெளியிட்டு எனக்கு மிகப் பெரும் இடத்தைக் கொடுத்துள்ளீர்கள். மிக அதிகமான பேர்களிடம் இந்த புக் வந்துள்ளதை கொண்டு சேர்த்திருக்கின்றீர்கள். நான் என்ன நன்றி சொல்வது.. எப்படி இந்த அன்புக் கடனைத் தீர்ப்பது என்று பிரமித்துப் போயிருக்கிறேன் நன்றியும் அன்பும் சார் :)

      நீக்கு
  27. முதல் கதையின் விமர்சனத்தை படித்ததும், கண்ணதாசன் இன்னொரு குடும்பத்திற்கு சுவீகாரப் பிள்ளையாக போக நேர்ந்ததை அவரே எழுதியது நினைவுக்கு வந்தது.
    (இன்று முதல் இந்த நூல் விமர்சனத்தின் தொடரும் மற்றைய பதிவுகளையும் படித்து விடுவேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ October 6, 2016 at 9:51 AM

      வாங்கோ, வணக்கம்.

      //முதல் கதையின் விமர்சனத்தை படித்ததும், கண்ணதாசன் இன்னொரு குடும்பத்திற்கு சுவீகாரப் பிள்ளையாக போக நேர்ந்ததை அவரே எழுதியது நினைவுக்கு வந்தது.//

      அப்படியா ! தங்களின் தங்கமான இந்தத் தகவலுக்கு என் நன்றிகள்.

      //(இன்று முதல் இந்த நூல் விமர்சனத்தின் தொடரும் மற்றைய பதிவுகளையும் படித்து விடுவேன்)//

      ஆஹா, என்னைப்பொறுத்தவரை இது தேனினும் இனிய செய்தியாக உள்ளது.

      தங்களின் வித்யாசமான கருத்துக்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தங்களின் மேல் தனிப் பிரியமுள்ள VGK

      நீக்கு
    2. மிக்க நன்றி இளங்கோ சார் & விஜிகே சார். :)

      நீக்கு
  28. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    விமர்சனத்தையும் பின்னூட்டத்தையும் கூட அதிரடியாகப் போட்டு அசத்தி இருக்கும் விஜிகே சாருக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தையில்லை. இருந்தும் சொல்கிறேன். நன்றி நன்றி நன்றி. :) யப்பாடா ரெண்டாவது பகுதியின் பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் அளிச்சிட்டேன்.யே யப்பா ரொம்பப் பெரிய பரிச்சையா இருக்கும் போலிருக்கே. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan October 20, 2016 at 10:43 AM

      //யப்பாடா ரெண்டாவது பகுதியின் பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் அளிச்சிட்டேன்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

      //யே யப்பா ரொம்பப் பெரிய பரிச்சையா இருக்கும் போலிருக்கே. :)//

      இரண்டு பகுதிகள்தான் முடிச்சிருக்கேள். இன்னும் இதுபோல இரண்டு மடங்கு உள்ளதே. :)

      மெதுவாகவேனும் பரீட்சை எழுத வாங்கோ, ப்ளீஸ். எல்லோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

      நீக்கு