என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

மீண்டும் ஓர் இனிய சந்திப்பு !




முத்துச்சிதறல் 
வலைப்பதிவர்
திருமதி. 
மனோ சாமிநாதன் 
 
அவர்களுடன் 
மீண்டும் ஓர் இனிய சந்திப்பு  

நாள்: 01.09.2016 வியாழக்கிழமை
இடம்:  ‘பவித்ராலயா’  ( நமது இல்லம் )
நேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை

சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப்பின், இன்று நம் ‘முத்துச்சிதறல்’ வலைத்தளத்தின் பிரபல வலைப்பதிவரும், பல்வேறு தனித்திறமைகள் வாய்ந்தவருமான திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்,  மீண்டும் என்னை சந்தித்து மகிழ்வித்தார்.  

ஏற்கனவே இவரை மட்டும், நான் 20.02.2011 அன்று என் இல்லத்தின் அருகேயுள்ள ஓர் திருமண மண்டபத்தில், எங்கள் வீட்டு விழா ஒன்றில் சந்திக்க நேர்ந்தது.

இன்று இவர் தன் அன்புக் கணவருடன் என் இல்லத்திற்கே நேரில் வருகை தந்திருந்தது மேலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்களின் இன்றைய அபூர்வ வருகையின்போது, என் இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள்:

(திருமதி. மனோ சுவாமிநாதன் தம்பதியினராக)


[ அவர்களுடன் நாங்களும் ]

அவர்கள் முகத்தில் காட்டிய புன்சிரிப்புடன்கூடிய பேரன்பினைத்தவிர, ஓர் பை நிறைய இங்கு எங்கள் வீட்டில் விட்டுச்சென்றுள்ள அன்பு, எங்களை மேலும் திக்குமுக்காட வைத்துள்ளன. அவற்றின் ஒருசில புகைப்படங்கள் இதோ:


கலைநயம் மிக்க அழகிய முக்கோணத்தட்டு.
அதில் சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து
மூன்று சிமிழ்கள்.  

  
அத்துடன்  அரை டஜன் ராயல் ஆப்பிள்கள் !
[ Imported from New Zealand ]

 ஒளிமயமான எதிர்காலத்தின் 
அடையாளச் சின்னமாக .....

ஒளியூட்டிடும்  டார்ச் லைட் +
ரீ-சார்ஜபிள் பேட்டரி + ப்ளக் + 
ஒயர் கனெக்‌ஷன்களுடன்
சப்ஜாடாக ....... :)


எங்கள் இல்லத்திற்கு இன்று அன்புடன் வருகைதந்து, 
சுமார் ஒரு மணி நேரம் பேசி மகிழ்ந்து, 
எங்களையும் மகிழ்வித்துச்சென்ற இனிய தம்பதியினரான
திரு. சுவாமிநாதன் அவர்களுக்கும்
திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்கும்  
எங்கள் குடும்பத்தாரின் சார்பிலும், என் சார்பிலும் 
 என் இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


எங்களின் முதல் சந்திப்பு
நிகழ்ந்த நாள்: 20.02.2011
பல்வேறு படங்களுடன் காண இதோ இணைப்பு: 

http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html  




என்றும் அன்புடன் தங்கள்,


(வை. கோபாலகிருஷ்ணன்)

80 கருத்துகள்:

  1. இனிய நட்புகளின் சந்திப்புகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். September 1, 2016 at 9:53 PM

      //இனிய நட்புகளின் சந்திப்புகள் தொடரட்டும்.//

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை மிகுந்த சந்தோஷமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இந்த பதிவை வாசித்த போது தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக்கொண்டது. படங்களும் பரிசுகளும் அருமை. தங்களுக்கும் மனோ சாமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ S P SENTHIL KUMAR

      வாங்கோ ஸார், வணக்கம்.

      //இந்த பதிவை வாசித்த போது தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக்கொண்டது. படங்களும் பரிசுகளும் அருமை. தங்களுக்கும் மனோ சாமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

      உங்களையும் தொற்றிக்கொண்டுள்ள மகிழ்ச்சியுடன் அருமையாகவும், மனதாரவும் வாழ்த்தியுள்ளதற்கு எங்கள் நன்றிகள்.

      நீக்கு
  3. முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
    அகம் நக நட்பது நட்பு.

    என்ற வள்ளுவரின் வாக்குக்கான விளக்கம் தங்களின் பதிவில் தெரிகிறது. நட்பு தொடர வாழ்த்துகள்! தங்களுக்கும் திருமதி மனோ சாமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ வே. நடனசபாபதி

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
      அகம் நக நட்பது நட்பு.

      என்ற வள்ளுவரின் வாக்குக்கான விளக்கம் தங்களின் பதிவில் தெரிகிறது. நட்பு தொடர வாழ்த்துகள்! தங்களுக்கும் திருமதி மனோ சாமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்! //

      குறளுடன் கூடிய தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு எங்களின் இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  4. வாழ்த்துக்கள் கோபு சார். இது போன்ற இனிய சந்திப்புகள் மென்மேலும் தொடரட்டும்.!
    விருந்தினர்களை உபசரிப்பது மட்டுமில்லாமல், சந்திப்பைப் பதிவு செய்து, அவர்களை ஆனந்தத்தில் மூழ்கடித்து விடுகிறீர்கள்.
    சந்திப்புப் பதிவு மிக சுவராஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Rajalakshmi Paramasivam

      வாங்கோ மேடம், வணக்கம் மேடம். தங்களின் அபூர்வ திடீர் வருகை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டது. :)

      //வாழ்த்துக்கள் கோபு சார். இது போன்ற இனிய சந்திப்புகள் மென்மேலும் தொடரட்டும்.!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //விருந்தினர்களை உபசரிப்பது மட்டுமில்லாமல், சந்திப்பைப் பதிவு செய்து, அவர்களை ஆனந்தத்தில் மூழ்கடித்து விடுகிறீர்கள்.//

      இன்றைய தேதியில், ஏதோ என்னால் ஆனது, இது ஒன்று மட்டுமே, மேடம்.

      //சந்திப்புப் பதிவு மிக சுவராஸ்யம்.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களுமே எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்து என்னை இப்போது ஆனந்தத்தில் மூழ்கடித்து விட்டன.

      மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  5. கோபு பெரிப்பா இனிய சந்திப்புக்கும எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.... வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Happy

      வாம்மா என் செல்லக்குழந்தாய், செளக்யமா?

      //கோபு பெரிப்பா ... இனிய சந்திப்புக்கும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி .... வாழ்த்துகள்..//

      ஹாப்பியே இங்கு ஹாப்பியாக வருகை தந்து ஹாப்பியாக வாழ்த்தியுள்ளது எனக்கும் மிகவும் ஹாப்பியாக உள்ளது. மிக்க நன்றிடா .... செல்லம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. @ Middle Class Madhavi

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //Pathivai parthu magizhchchi!! பதிவைப்பார்த்து மகிழ்ச்சி//

      மிக நீண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் உங்களை இங்கு திடீரென அதிசயமாப் பார்த்ததில் எனக்கு மேலும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

      செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? எங்கிருந்தாலும் வாழ்க !

      தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  7. அருமையாக சந்திப்பை பதிவு செய்து விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கோமதி அரசு

      வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

      //அருமையாக சந்திப்பை பதிவு செய்து விட்டீர்கள்.
      வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  8. உங்கள் சந்திப்பு விவரங்கள் மகிழ்ச்சி அளித்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ப. கந்தசாமி

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //உங்கள் சந்திப்பு விவரங்கள் மகிழ்ச்சி அளித்தன.//

      அதே போல தங்களின் வருகையும் எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மிக்க நன்றி.

      ஏனோ, இதேபோன்ற நம் இருமுறை சந்திப்புகள் நினைவுக்கு வந்தன. :)

      http://gopu1949.blogspot.in/2015/10/2015-via.html

      http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html

      நீக்கு
    2. நினைவுகள் எப்போதும் சுகமானவைகளே. அனைத்து பின்னூட்டங்களையும் படித்து மகிழ்ந்தேன். உங்கள் பொறுமை வாழ்க!

      நீக்கு
    3. @ ப. கந்தசாமி

      //நினைவுகள் எப்போதும் சுகமானவைகளே. அனைத்து பின்னூட்டங்களையும் படித்து மகிழ்ந்தேன். உங்கள் பொறுமை வாழ்க!//

      ஆஹா, வாங்கோ ஸார்.

      தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

      அனைத்துப் பின்னூட்டங்களையும் பொறுமையாகத் தாங்கள் படித்துள்ளதாகச் சொல்வது, நம் சந்திப்பின் நினைவலைகளைப் போலவே மிகவும் சுகமாகத்தான் உள்ளது. மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  9. இதுபோன்ற சந்திப்புகள் என்றும் மகிழ்ச்சியே. குங்குமச் சிமிழ் நயமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ அருள்மொழிவர்மன்.

      வாங்கோ ஸார், வணக்கம். என் பதிவுப்பக்கம் தங்களின் முதல் வருகையாக இருக்குமோ என நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

      //இதுபோன்ற சந்திப்புகள் என்றும் மகிழ்ச்சியே.//

      ஆமாம். இவை நமக்கு புத்துணர்வூட்டும் மகிழ்ச்சிகளே.

      //குங்குமச் சிமிழ் நயமாக இருக்கிறது.//

      ஆம். மிகவும் அழகாக ஒருவித கலை நுணுக்கத்துடன் அது வடிவமைக்கப் பட்டுள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  10. அருமையான சந்திப்பு..படங்களுடன் பதிவும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ADHI VENKAT

      வாங்கோ மேடம். வணக்கம். செளக்யமா?

      //அருமையான சந்திப்பு..படங்களுடன் பதிவும் சூப்பர்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான + சூப்பரான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      ஏதோ நாம் சிலமுறைகள் நேரில் சந்தித்தது நினைவுக்கு வந்தது. அதனால் அவற்றின் இணைப்புகளையெல்லாம் தேடி கீழே கொடுத்துள்ளேன். :)

      நீக்கு
  11. ஒரு மணி நேர சந்திப்பு தான். வந்தார்கள்--போனார்கள் என்று கூட இருந்திருக்கலாம். ஆனால் அதை எப்படி அழகு படுத்திப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பது உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது.

    உங்கள் மகிழ்ச்சியில் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள். ஆசிர்வதிக்கப்பட்ட உள்ளங்களால் தான் இதெல்லாம் முடியும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு >>>>> ஜீவி (1)

      வாங்கோ ஸார். நமஸ்காரங்கள் / வணக்கங்கள் ஸார்.

      //ஒரு மணி நேர சந்திப்பு தான். வந்தார்கள்--போனார்கள் என்று கூட இருந்திருக்கலாம்.//

      பொதுவாகவே யார் விஷயத்திலும் நான் அப்படி இருப்பது இல்லை, ஸார்.

      மேலும் இவர்கள் விஷயமே தனியானது.

      1) முதலில் இவர்கள் என் உண்மையான நலம் விரும்பி

      2) நான் பதிவுலகுக்கு வரவும், பதிவுகள் எழுதவும், என்னைத் தூண்டிவிட்ட முக்கிய நபர்கள் சிலரில் இவரின் பங்கும் மிக அதிகம்.

      3) நான் 02.01.2011 அன்றுதான் முதல் பதிவு வெளியிட்டிருப்பினும், 2010 இறுதியிலேயே இவர்களின் பதிவுகளைப் படித்துத் தட்டுத்தடுமாறி பின்னூட்டங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.

      4) 'இனி துயரம் இல்லை’ என்ற என் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டம் கொடுத்து, எனக்கு அன்று ஊக்கமும் உற்சாகமும் கொடுத்திருந்ததும் இவர்களே. http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html

      5) இவர்களின் வேண்டுகோளுக்காகவே 2011-இல் நான் வெவ்வேறு தலைப்புக்களில் ஒருசில தொடர்பதிவுகள் என் வலைத்தளத்தினில் கொடுத்துள்ளேன்.

      i) http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html உணவே வா ! உயிரே போ !! [சமையல் பற்றிய நகைச்சுவை]

      ii) http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html முன்னுரை என்னும் முகத்திரை.

      iii) http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html மழலைகள் உலகம் மகத்தானது.

      6) ஓரளவு என் சமவயதில் உள்ளவர்கள். எங்களின் நட்பினில் மட்டுமல்லாமல், எங்கள் உடலிலும் இரத்தத்திலும்கூட இனிப்போ இனிப்பு உண்டு.

      (அதாவது நாங்கள் இருவருமே இன்று டயாபடீஸ் கேஸ்கள்)

      7) அஷ்டாவதானி போல பல்வேறு தனித் திறமைகள் கொண்டவர்கள். குறிப்பாக இவர் பத்திரிகைகளில் வரும் கதைகளுக்குப் பொருத்தமான ஓவியம் வரைபவராகவும் ஒரு காலக்கட்டத்தில் இருந்து வந்துள்ளார்கள் என்பதால் எனக்கு இவர்கள் மேல் ஓர் கூடுதல் பிரியம் உண்டு.

      8) உங்களுக்கும் எனக்கும் போலவே, எங்கள் இருவருக்குள்ளும் அவ்வப்போது கொஞ்சம் மெயில் தொடர்புகளும், தொலைபேசித் தொடர்புகளும் உண்டு.

      9) என் பெரிய பிள்ளை தற்சமயம் இருந்துவரும் வெளிநாட்டிலேயே இவர்களும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளார்கள் என்பதால் இவர்களிடம் எனக்கு மேலும் கொஞ்சம் தனி ஈடுபாடும் ஆரம்பத்தில் (2010-2011 இல்) ஏற்பட்டது உண்டு.

      10) என்னை நேரில் சந்திக்க விரும்பிய இவர்களின் வருகை மிகவும் அழகாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, சந்திப்புக்கு முதல்நாள் வரை, பலமுறை என் இல்லத்து + உள்ளத்து செளகர்யா செளகர்யங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மட்டுமே, நடந்துள்ளது. இத்தகைய திட்டமிட்ட செயல்களை மட்டுமே நான் மிகவும் விரும்புபவனும்கூட. முன்கூட்டியே சொல்லாமல் கொள்ளாமல், திடீரென்று வந்து நின்றால், ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் வெறும் ஏமாற்றம் மட்டுமே ஏற்படக்கூடும். நாங்கள் சந்தித்த தினமான நேற்று அமாவாசையாகவும் இருந்ததால் நான் எல்லாவற்றையும் இவர்களிடம், முன்கூட்டியே மிகத் தெளிவாகப் பேசிக்கொண்டு விட்டேன். அதனால் எந்தப்பிரச்சனையும் எனக்கோ அவர்களுக்கோ இல்லாமல், எங்கள் சந்திப்பு மிகவும் ஸ்மூத் ஆகவே நடைபெற்று முடிந்தது. இரு தரப்பினருக்குமே இதில் மிகவும் மகிழ்ச்சி மட்டுமே.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> ஜீவி (2)

      //ஆனால் அதை எப்படி அழகு படுத்திப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பது உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது.//

      அடடா, இதனைத் தங்கள் வாயிலாக இங்கு இப்போது கேட்பதில் தன்யனானேன், ஸார்.

      //உங்கள் மகிழ்ச்சியில் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள்.//

      ஆஹா, நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்க இதுபோல ஓர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளேன் போலிருக்குது. அவ்வளவுதான், ஸார்.

      //ஆசிர்வதிக்கப்பட்ட உள்ளங்களால் தான் இதெல்லாம் முடியும். வாழ்த்துக்கள்.//

      எல்லாவற்றிற்குமே தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதம் மட்டுமே காரணமாகும், ஸார்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      பிரியத்துடன் கோபு

      நீக்கு
  12. நான் இதுவரை நேரில் சந்தித்துள்ள
    41 பதிவர்கள் பற்றி விபரங்கள் இதோ
    இந்தப்பதிவுகளில் அழகழகான
    படங்களுடன் உள்ளன.

    =========================================
    முதல் 38 நபர்களின் சந்திப்பு பற்றி
    இதோ இந்த ஆறு பதிவுகளில் உள்ளன.
    =========================================

    http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html

    http://gopu1949.blogspot.in/2015/02/2-of-6.html

    http://gopu1949.blogspot.in/2015/02/3-of-6.html

    http://gopu1949.blogspot.in/2015/02/4-of-6.html

    http://gopu1949.blogspot.in/2015/02/5-of-6.html

    http://gopu1949.blogspot.in/2015/02/6-of-6_18.html
    [ இதில் 1 to 38 அனைவரின் பெயர்களும் உள்ளன ]

    ================================================
    39-வது நபரை, திருச்சி பதிவர்கள் சிலருடன்
    ஓர் சிறிய கூட்டமாக சந்தித்தது ....
    இதோ இந்த ஏழு பதிவுகளில் உள்ளன.
    ================================================

    http://gopu1949.blogspot.in/2015/02/1.html

    http://gopu1949.blogspot.in/2015/02/2.html

    http://gopu1949.blogspot.in/2015/02/3.html **
    (** இது மிகவும் சுவாரஸ்யமான
    படங்களுடன் கூடிய இனிய பதிவு)

    http://gopu1949.blogspot.in/2015/02/4.html

    http://gopu1949.blogspot.in/2015/02/5.html

    http://gopu1949.blogspot.in/2015/02/6.html

    http://gopu1949.blogspot.in/2015/02/7.html

    ==================================
    40-வது மற்றும் 41-வது நபர்களை
    சந்தித்தது பற்றிய விபரங்கள்
    இதோ இந்தப்பதிவினில் உள்ளது.

    http://gopu1949.blogspot.in/2016/03/6.html

    ==================================

    இது தங்கள் அனைவரின் பொதுவானதோர்
    தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  13. பதிவர்களை சந்திப்பது மகிழ்ச்சி தரும் விஷயம் அதுவும் நம்மைத் தேடி வந்து சந்தித்தால் இன்னும் மகிழ்ச்சி வாழ்த்துகள் கோபு சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ GMB

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //பதிவர்களை சந்திப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.//

      ஆம். நிச்சயமாக. அதிலும் நம் எண்ணங்களோடும், எழுத்துக்களோடும் ஒத்துப்போகும், குறிப்பிட்ட ஒருசில பதிவர்களை சந்திக்கும்போது பெரும் மகிழ்ச்சியாகத்தான் நம்மால் உணர முடிகிறது.

      //அதுவும் நம்மைத் தேடி வந்து சந்தித்தால் இன்னும் மகிழ்ச்சி//

      இந்த ஆண்டு நான் புதிய பதிவுகள் ஏதும் தர விரும்பாமல் பெரும்பாலும் வலைப்பதிவுகளிலிருந்தே ஒதுங்கிக்கொண்டு இருப்பதால், அது ஏன்? எதனால்? என்ற உண்மைக்காரணங்களை நேரில் கண்டறியவே, ஒருவேளை நம்மைத் தேடி வந்து சந்திக்க நினைக்கிறார்களோ எனவும் எனக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன்.

      ஆனால் இவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட, என் நலம் விரும்பியாக மட்டுமே என்னை சந்திக்க விரும்பி, வந்திருந்தார்கள். சந்திப்பிலும்கூட நம் பதிவுகள் பற்றிய விஷயங்களே அதிகம் இல்லாத மற்ற பொதுவான விஷயங்களை மட்டுமே அன்புடன் பேசி விட்டுச் சென்றார்கள்.

      //வாழ்த்துகள் கோபு சார்//

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  14. பதிவர்கள் ஸந்திப்பு என்பது அருமையான விஷயம். எனக்கென்னவோ அவர்களை நானும் ஸந்தித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. சில வலைதளங்களில் உங்கள் பின்னூட்டங்களைத் அபூர்வமாகப் பார்க்க முடிகிறது. க்ஷேமம் அதன் மூலம் தெரிந்து கொள்வேன். நான் ஜெனிவா வந்திருக்கிறேன் ஒரு மாதத்திற்காக. ஒரு மாற்றம் தேவை என்பதற்காக. ஒரு மனதிற்கு உற்ற தோழமையை ப்ளாகுகள் வாயிலாகப் பெறமுடிகிறது. வயதானவர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? அழகாக உங்கள் ஸந்திப்பை மற்றவர்களும் அறிந்து ஸந்தோஷப்பட வைத்ததற்கு நன்றி. யாவருக்கும் என் ஆசிகளும் அன்பும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி September 2, 2016 at 6:09 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள். செளக்யமா?

      //பதிவர்கள் ஸந்திப்பு என்பது அருமையான விஷயம். எனக்கென்னவோ அவர்களை நானும் ஸந்தித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //சில வலைதளங்களில் உங்கள் பின்னூட்டங்களைத் அபூர்வமாகப் பார்க்க முடிகிறது. க்ஷேமம் அதன் மூலம் தெரிந்து கொள்வேன்.//

      ஆமாம் மாமி. பல்வேறு காரணங்களாலும், ஆத்து நெருக்கடிகளாலும், நான் முன்புபோல வலைப்பக்கங்களில் இப்போதெல்லாம் வர இயலவில்லை. எப்போதாவது அபூர்வமாகத்தான் வரமுடிகிறது. உங்கள் பக்கம்கூட வரணும் என அடிக்கடி நான் நினைத்துக்கொள்வேன். ஆனால் முடிவதில்லை. தப்பா நினைச்சுக்காதீங்கோ.

      //நான் ஜெனிவா வந்திருக்கிறேன், ஒரு மாதத்திற்காக. ஒரு மாற்றம் தேவை என்பதற்காக.//

      ஆஹா, அப்படியா? மிகவும் சந்தோஷம் மாமி. நம் லைஃப்பில் இதுபோன்ற மாற்றங்கள் மிகவும் தேவைதான்.

      //ஒரு மனதிற்கு உற்ற தோழமையை ப்ளாக்குகள் வாயிலாகப் பெறமுடிகிறது. வயதானவர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?//

      ஆமாம். நம் தனிமை உணர்வினைத் தவிர்க்கவும், கண்ணுக்குத்தெரியாத பல தோழமைகளுடன் நட்புடன் பேசிப்பழகி, நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், குறிப்பாக வயதானவர்களுக்கு, ப்ளாக் என்பது இன்றைக்கு கிடைத்துள்ள ஓர் வரப்பிரஸாதம் மட்டுமே.

      //அழகாக உங்கள் ஸந்திப்பை மற்றவர்களும் அறிந்து ஸந்தோஷப்பட வைத்ததற்கு நன்றி. யாவருக்கும் என் ஆசிகளும் அன்பும். அன்புடன்//

      தங்களின் அன்பான வருகைக்கும், இயல்பான அழகான தெளிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் + நமஸ்காரங்கள், மாமி.

      நீக்கு
  15. அவர்கள் இந்தியா வருவது குறித்து
    ஏற்கென்வே என் பின்னூட்டம் ஒன்றில்
    சொல்லி இருந்தார்கள்

    எனக்கும் அவர்களைச் சந்திக்கும்
    பேராவல் இருந்தது

    தற்சமயம் நான் இங்கு (யு.எஸ் )
    உள்ளதால் சந்திக்க இயலவில்லை

    படங்களுடன் சந்திப்புக் குறித்துப் படிக்க
    எங்களையும் உற்சாகமும் சந்தோசமும்
    பற்றிக் கொண்டது

    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Ramani S

      வாங்கோ M. Ramani Sir, வணக்கம் ஸார்.

      //அவர்கள் இந்தியா வருவது குறித்து ஏற்கனவே என் பின்னூட்டம் ஒன்றில் சொல்லி இருந்தார்கள். எனக்கும் அவர்களைச் சந்திக்கும் பேராவல் இருந்தது. தற்சமயம் நான் இங்கு (யு.எஸ்) உள்ளதால் சந்திக்க இயலவில்லை.//

      இனி அவர்கள் பெரும்பாலும் தஞ்சாவூரில்தான் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டேன். தாங்கள் இந்தியா திரும்பியபின், எப்போது வேண்டுமானாலும், நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் சுலபமாக சந்திக்க இயலும் என நினைக்கிறேன்.

      //படங்களுடன் சந்திப்புக் குறித்துப் படிக்க எங்களையும் உற்சாகமும் சந்தோசமும் பற்றிக் கொண்டது. வாழ்த்துக்களுடன்....//

      மிக்க மகிழ்ச்சி ஸார். தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் + சந்தோஷத்துடன் கூடிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  16. சந்திப்பு விபரங்களைப் படிக்க சந்தோஷம்...
    பகிர்ந்தமைக்கு நன்றி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Usha Srikumar September 2, 2016 at 6:41 PM

      //சந்திப்பு விபரங்களைப் படிக்க சந்தோஷம்...
      பகிர்ந்தமைக்கு நன்றி ...//

      வாங்கோ மேடம், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், சந்தோஷத்துடன் கூடிய கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  17. மிக அருமையான இனிமையான சந்திப்பு. பரிசுப் பொருட்கள் அழகு. வாழ்க வளமுடன் மனோ மேம் & விஜிகே சார் & இருவர் குடும்பத்தாரும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan September 2, 2016 at 9:14 PM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //மிக அருமையான இனிமையான சந்திப்பு. பரிசுப் பொருட்கள் அழகு.//

      தேனினும் இனிய தெவிட்டாத வார்த்தைகளாகச் சொல்லியுள்ளீர்கள்.

      //வாழ்க வளமுடன் மனோ மேம் & விஜிகே சார் & இருவர் குடும்பத்தாரும். :) //

      ஆஹா, சந்தோஷம். தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  18. நமது சந்திப்பினைப்பற்றி இங்கே பதிவாகப் பகிர்ந்து கொண்டதைப்ப‌டித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வழக்கம்போல அழகாக எழுதியிருக்கிறீர்கள்! இதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.

    மேலும் வாசல் வரை வ‌ந்து எங்களை உங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றதற்கும் திரும்பவும் வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பியதற்கும் நான் மறுபடியும் நன்றி சொல்ல வேண்டும்! உங்கள் வீட்டு காஃபி மணம் இன்னும் நாவில் மணக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ மனோ சாமிநாதன்

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நமது சந்திப்பினைப்பற்றி இங்கே பதிவாகப் பகிர்ந்து கொண்டதைப்ப‌டித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.//

      ஆஹா, எனக்கும் மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //வழக்கம்போல அழகாக எழுதியிருக்கிறீர்கள்!//

      எல்லாப்புகழும் என்னை வலைப்பதிவினில் எழுதத்தூண்டிய மிக முக்கியமானவர்களில் ஒருவரான உங்களையே சாரும்.

      //இதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.//

      அடடா ..... தம்பதி ஸமேதராய்த் தங்களின் அன்பான வருகையும், இனிமையான கலந்துரையாடலும், எங்களை அன்று மிகவும் மகிழ்வித்தது. ‘நன்றி’ என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் நமக்குள் எதற்கு?

      //மேலும் வாசல் வரை வ‌ந்து எங்களை உங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றதற்கும் திரும்பவும் வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பியதற்கும் நான் மறுபடியும் நன்றி சொல்ல வேண்டும்!//

      அடடா, மிக நெருங்கிய நட்புகள், அதுவும் மிகச்சரியான நேரத்தில் பலமுறை மெயிலிலும், ஃபோனிலும் பேசிவிட்டு, முதன்முதலாக என் இல்லத்தைத்தேடி, வருகை தரும்போது, இதையெல்லாம் செய்ய வேண்டியது மிகச் சாதாரணதோர் விஷயம் தானே. தங்களின் தனிப்பட்ட பேரன்புக்காக இதையெல்லாம் செய்ய வேண்டியது என் கடமையும் அல்லவா!

      //உங்கள் வீட்டு காஃபி மணம் இன்னும் நாவில் மணக்கிறது!//

      ஆஹா, பேஷ் பேஷ் ...... மிகவும் மிகைப்படுத்தி ஒருவேளை இதனைத் தாங்கள் சொல்லியிருந்தாலும், இதில் நேரிடையாக சம்பந்தப்பட்டுள்ள என் மேலிடமான என் மனைவி + என் மருமகளிடம் இதனைத் தெரிவித்து விடுகிறேன். :)

      இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  19. அருமையான சந்திப்புகள்
    தொடர வேண்டும்!

    பதிலளிநீக்கு
  20. அருமையான இனிய சந்திப்பு...
    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ பரிவை சே.குமார்

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், இனிய சந்திப்பு எனச்சொல்லி வாழ்த்தியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  21. தொடரட்டும் சந்திப்புகள்.....

    பதிவுகளும் தான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ மை டியர் வெங்கட்ஜி, வணக்கம்.

      //தொடரட்டும் சந்திப்புகள்..... பதிவுகளும் தான்! :)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வேண்டுகோள்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் ... வெங்கட்ஜி.

      நீக்கு
  22. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நலம்தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அதுவும் ஒரு பிரபல பதிவருடான சந்திப்பு பற்றிய ஒரு பதிவு. மகிழ்ச்சியான விஷயம்தான். மேடம் மனோ சாமிநாதன் அவர்கள் பதிவர்களை சந்திப்பதில் எப்போதுமே ஆர்வம் உள்ளவர்.

    நானும் கடந்த மாதம், உங்கள் ஆண்டார் தெரு பக்கம், இரண்டுமுறை வந்து இருந்தேன். உங்களை அடிக்கடி சந்தித்து தொந்தரவு தர வேண்டாம் என்று வரவில்லை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ தி. தமிழ் இளங்கோ

      //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.//

      என் பேரன்புக்குரிய இனிய நண்பர் திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள். வாங்கோ ஸார்.

      //நலம்தானே. //

      எப்போதும் போல ..... நலமே :)

      //நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அதுவும் ஒரு பிரபல பதிவருடான சந்திப்பு பற்றிய ஒரு பதிவு. மகிழ்ச்சியான விஷயம்தான்.//

      இதன்மூலம், நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் உங்களில் ஒருசில பிரபலங்களை மட்டுமாவது மீண்டும் என் வலைப் பதிவுப்பக்கம் சந்திப்பதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

      //மேடம் மனோ சாமிநாதன் அவர்கள் பதிவர்களை சந்திப்பதில் எப்போதுமே ஆர்வம் உள்ளவர்.//

      ஆமாம். இதனை மிகச்சரியாகவே உணர்ந்து, இங்கு வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

      //நானும் கடந்த மாதம், உங்கள் ஆண்டார் தெரு பக்கம், இரண்டுமுறை வந்து இருந்தேன்.//

      ஆஹா, எனக்கு இதுவிஷயம் ஏனோ தெரியாமல் போய்விட்டது. தாங்களும் தெரிவிக்கவில்லை. :(

      //உங்களை அடிக்கடி சந்தித்து தொந்தரவு தர வேண்டாம் என்று வரவில்லை.//

      அடடா, நம் இல்லம் ‘பவித்ராலயா’ தங்களின் சொந்த வீடு போல. தாங்கள் என் நெருங்கிய உறவினர் போல.

      அடிக்கடி வந்து என்னையும் சந்தித்துவிட்டு, ஒரு கப் காஃபியாவது உரிமையுடன் கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டுச் செல்ல வேண்டுமென, தங்களை ஒருவித அன்புடனும், பாசத்துடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

      உள்ளூர்காரர்களாகிய நாம் நமக்குள் அடிக்கடி சந்தித்துக்கொள்வதில், நம் இருவருக்குமே ஒருவித இன்பம் மட்டுமே ஏற்படக்கூடும். இதில் என்ன தொந்தரவு இருக்க முடியும்?

      வடக்கு ஆண்டார் தெருவில் வசித்து வந்த, தங்களின் மற்றொரு நண்பரான (அந்தப் பெரியவர் .... வாத்யார் அவர்கள்), தன் மகனின் வற்புருத்தல் காரணமாக, இப்போது ஸ்ரீரங்கம் ஸ்ரீ இராகவேந்திர மடத்துக்கு எதிர்புறம் ஒரு மிக வசதியான, மிகப்பெரிய FLAT வாங்கிக்கொண்டு, அங்கு குடிபோய் விட்டார்கள் என, எங்கள் இருவரின் ஆஸ்தான ஆட்டோக்காரர் ‘ஏழுமலை’ என்பவர் மூலம் சமீபத்தில் தெரிந்துகொண்டேன்.

      தங்களுக்கே ஒருவேளை இதுவிஷயம் தெரிந்திருக்கலாம்.

      //வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
  23. பதிவர்கள் சந்திப்பைக் கலைநயத்துடன் விருந்தினர்களைப் பாராட்டி, பெருமைப்படுத்தி உங்கள் பதிவுகளில் regularஆக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ நெல்லைத் தமிழன்

      வாங்கோ, வணக்கம்.

      //பதிவர்கள் சந்திப்பைக் கலைநயத்துடன் விருந்தினர்களைப் பாராட்டி, பெருமைப்படுத்தி உங்கள் பதிவுகளில் regularஆக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  24. சந்திப்புக்களுடன் உங்கள் பதிவுகளும் தொடரட்டும்! வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ‘தளிர்’ சுரேஷ் September 3, 2016 at 6:54 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சந்திப்புக்களுடன் உங்கள் பதிவுகளும் தொடரட்டும்!//

      இதுபோன்ற சில அபூர்வ சந்திப்புகள் நான் சற்றும் எதிர்பாராதது மட்டுமே.

      பதிவுகளை நான் தொடர எனக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட வேண்டும். முடியும் போது முயற்சிப்பேன். பார்ப்போம்.

      //வாழ்த்துக்கள் சார்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  25. சந்திப்பு செய்திளை ம கி ழ் ேவ ாடு பகிர்ந்த விதம் குறித்து மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      அருமை நண்பரே, வாருங்கள், வணக்கம். நலமா?

      //சந்திப்பு செய்திகளை மகிழ்வோடு பகிர்ந்த விதம் குறித்து மிக்க மகிழ்ச்சி!//

      தங்களின் மகிழ்ச்சியுடன் கூடிய வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, நண்பரே.


      நீக்கு
  26. பதிவர்கள் சந்திப்பு என்பது எப்போதும் மகிழ்ச்சியே. அதுவும் தங்களது எழுத்தின்மூலமாகப் படிக்கும்போது இன்னும் நெருக்கம் ஏற்படுவதை உணரமுடிகிறது. உணர்வுகளை அப்படியே எழுத்துக்களால் கொண்டுவரும் உங்களின் பாணி எங்களைக் கவர்ந்துவிடுகிறது. உங்களுக்கும் அவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Dr. B. Jambulingam

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //பதிவர்கள் சந்திப்பு என்பது எப்போதும் மகிழ்ச்சியே.//

      ஆம். எப்போதும் அதில் ஓர் தனி மகிழ்ச்சியேதான். மறுப்பதற்கு இல்லை.

      //அதுவும் தங்களது எழுத்தின்மூலமாகப் படிக்கும்போது இன்னும் நெருக்கம் ஏற்படுவதை உணரமுடிகிறது. உணர்வுகளை அப்படியே எழுத்துக்களால் கொண்டுவரும் உங்களின் பாணி எங்களைக் கவர்ந்துவிடுகிறது. //

      ஆஹா, தங்களின் மூலம் இதைக்கேட்பதில் என் மகிழ்ச்சி மேலும் பன்மடங்கு அதிகரித்து, என்னையும் தங்களின் இந்தப்பாராட்டுகள் அப்படியே சுண்டி இழுத்து கவர்ந்து விட்டன.

      //உங்களுக்கும் அவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், தனிப்பாணியில் தாங்கள் சொல்லியுள்ள, அழகான, இதமான, பதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  27. உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    அழுவாச்சியா வருது. நாம எப்ப மறுபடியும் சந்திக்கறது.

    நீங்க நக்கலா சிரிக்கறது தெரியறது. இவளுக்கு போன்ல பேச நேரம் இல்ல. வலைத்தளத்துக்கு வர நேரம் இல்ல. எதுக்கும் நேரம் இல்ல.

    எனக்கும் ஒரு காலம் வரும். அப்ப நானும் திருச்சிக்கு வருவேன். சந்திப்பேன்.

    இருந்தாலும், சிரிப்பழகி மனோவும், நீங்களும் சந்தித்தது ரொம்ப சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Jayanthi Jaya

      அன்புள்ள ஜெயா, வாங்கோம்மா, வணக்கம்மா.

      செளக்யமா, சந்தோஷமா இருக்கேளா? இப்போத்தான் நினைத்தேன். உடனே வந்துட்டேள். உங்களுக்கு ஆயுஷு போனதுபோக மீதி நூறு :)

      இப்போ நீங்க இருப்பது இந்தியாவிலா? அல்லது வெளிநாட்டிலா? சமீபத்தில் உங்களை சிலோனில் பார்த்ததாக யாரோ என்னிடம் சொன்னார்கள். எங்கிருந்தாலும் எங்கட ’ஜெ’ வாழ்க !

      //உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

      அடடா .... இது எதற்கு இவ்வளவு பெரிய பெருமூச்சுடன் ஒரு ’உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்’

      //அழுவாச்சியா வருது.//

      பொம்மனாட்டிகள் எப்போதும் எதற்கும் அழவே கூடாது.
      அது ஆகாது ... தெரியுமோள்யோ ! உடனே சிரியுங்கோ, ப்ளீஸ் !!

      //நாம எப்ப மறுபடியும் சந்திக்கறது. //

      இது ஒரு பெரிய விஷயமா? நினைத்தால் நீங்க உங்க பொறாந்தாத்துக்கு (கோபு அண்ணாவாத்துக்கு) உடனே ஒரே ஓட்டமாக ஓடியே வந்துடலாமே.

      //நீங்க நக்கலா சிரிக்கறது தெரியறது. இவளுக்கு போன்ல பேச நேரம் இல்ல. வலைத்தளத்துக்கு வர நேரம் இல்ல. எதுக்கும் நேரம் இல்ல.//

      சிரித்தேன். ஆனால் நக்கலாச் சிரிக்கவில்லை. நீங்க வேலையிலிருந்து ரிடயர்ட் ஆகி விட்டாலும், சும்மாவா, ஜெயா?

      மகனும், நாட்டுப்பெண்ணும் வேலைக்குப்போவதால், குட்டியூண்டு பேத்திகள் இருவரையும் சமாளிக்கவே உங்களுக்கு நேரம் பத்தாது என எனக்கும் தெரியும் ஜெயா.

      அத்தோடு சமையல் சாப்பாடு போன்ற ஆத்து ரொட்டீன் கார்யங்களையும் பார்த்துக்கொண்டு, ஆத்துக்காரரையும் அடிக்கடி கவனித்துக் கொள்ளும்படியாக இருக்கும். :)

      பேசாமல் BSNL வேலையிலேயே Extension கிடைத்து நாம் நீடித்திருக்கக்கூடாதா என்றுகூட நினைக்கத் தோன்றியிருக்கும்தான். :)

      லிமிடட் ஹவர்ஸ் ஆபீஸ் வேலைகளைவிட 24 ஹவர்ஸ் ஆத்து வேலைகள் மிகவும் கஷ்டம்தான். எனக்கு புரிகிறது. ஆனால் என்ன செய்வது?

      //எனக்கும் ஒரு காலம் வரும். //

      ‘எங்களுக்கும் காலம் வரும் .......
      காலம் வந்தால் வாழ்வு வரும் .....
      வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே’ ன்னு ஒரு பாட்டு உண்டே. ஏனோ அந்த ஞாபகம் எனக்கு வருது. :)

      //அப்ப நானும் திருச்சிக்கு வருவேன். //

      *அந்த நாளும் வந்திடாதோ* என்ற ஆவலுடன் நானும்.

      [*வரும்போது நெய்யில் செய்த சீர் அதிரஸம் + சீர் முறுக்கு + சீர் லாடு ஆகியவற்றுடன் வருவீர்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளதால் மட்டுமேவாக்கும்* ]

      For your ready Reference & Reminder:

      http://gopu1949.blogspot.in/2014/10/9.html

      http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2014/02/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html

      //சந்திப்பேன்.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. ததாஸ்து. அடுத்த முறை வரும்போதாவது இரண்டு பேத்திகளையும் கூடவே கூட்டிட்டு வாங்கோ, ஜெயா. எனக்கும் அவாளைப் பார்க்கணும்போல ஆசையா இருக்குது.

      //இருந்தாலும், சிரிப்பழகி மனோவும், நீங்களும் சந்தித்தது ரொம்ப சந்தோஷம்.//

      ஜெயாவின் அன்பான வருகைக்கும், ஆதங்கத்துடன் கூடிய ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  28. Very nice... happy for both of u... social medias have made too many genuine friendship blossom.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Shakthiprabha

      வாங்கோ ஷக்தி, வணக்கம்.

      //Very nice... happy for both of u... social medias have made too many genuine friendship blossom.//

      தங்களின் அன்பான வருகைக்கும், GENUINE ஆன கருத்துக்களுக்கும், சந்தோஷமான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  29. இனிமையான சந்திப்புக்கு வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ பூந்தளிர்

      வாராய் .... என் தோழி .... வாராயோ ! வணக்கம்.

      நன்னா செளக்யமா சந்தோஷமா இருக்கேளா?

      நீண்ண்ண்ண்ட நாட்களாக ஆளையேக் காணுமேன்னு மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். :(

      //இனிமையான சந்திப்புக்கு வாழ்த்துகள்..... //

      இந்த மூன்று வார்த்தைகளை யோசித்து எழுத ஐந்து நாட்களா?

      ஏதோ பிரஸாதம் போல கொஞ்சூண்டாவது, இன்று பிள்ளையார் சதுர்த்தியன்று கிடைத்தவரை, இந்தப்பிள்ளையாருக்கும் சந்தோஷமே. :)

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  30. இனிய பதிவாளர் சந்திப்புக்கு வாழ்த்துகள். அந்த சந்தோஷத்தை எல்லாருடனும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. shamaine bosco September 6, 2016 at 9:51 AM

      வாங்கோ .... வாங்கோ .... வணக்கம் மேடம்.

      //இனிய பதிவாளர் சந்திப்புக்கு வாழ்த்துகள். அந்த சந்தோஷத்தை எல்லாருடனும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்..//

      ஆஹா, தங்களின் அன்பான வருகைக்கும், சந்தோஷத்துடன் கூடிய இனிய வாழ்த்துகள் + நன்றிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  31. இத சரியா கவனிக்கல அதான் லேட் விருந்தினர் வருகை.. சனி ஞாயிறு திங்கள் லீவு எல்லாமா சேந்துகிட்டது.இனிய பதிவர் சந்திப்ப சுவாரசியமா படங்களுடன் பகிர்ந்து கிட்டதுக்கு நன்றி....சந்தோஷம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ப்ராப்தம்

      வாங்கோ சாரூ .... வணக்கம்.

      //இத சரியா கவனிக்கல .. அதான் லேட். விருந்தினர் வருகை.. சனி ஞாயிறு திங்கள் லீவு எல்லாமா சேந்துகிட்டது.//

      அதனால் பரவாயில்லை. புரிந்துகொண்டேன்.

      லேட்டானாலும் லேடஸ்டா இங்கு, மும்பைப் பிள்ளையார்போல, பெரும் தொந்தியுடன் வந்திருக்கீங்க சாரூ :)

      என்னையே ‘ஆச்சி’ என்ற பெயரில் தற்சமயம் வட இந்தியாவில் வாழும் ஒரு கொ.எ.கு. பதிவர் ’தும்பிக்கை இல்லாத பிள்ளையார்’ என்று ஒருமுறை கிண்டலாகச் சொல்லியிருக்கிறாள். :)

      இதோ இந்த என் பதிவுகளில் அவளின் படம் உள்ளது பாருங்கோ.

      http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html

      http://gopu1949.blogspot.in/2015/01/20.html

      //இனிய பதிவர் சந்திப்ப சுவாரசியமா படங்களுடன் பகிர்ந்து கிட்டதுக்கு நன்றி....சந்தோஷம்....//

      பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் என்னையும் மறக்காமல் இங்கு வருகை தந்து, கருத்தளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      மூன்றாம் பிறை போல எப்போதாவது அதிசயமாகத் தோன்றிடும் நம் டீச்சர்-1 அவர்களே இங்கு வருகை தந்துட்டாங்களே, வழக்கமாக வரும் உங்களை இன்னும் காணுமே என கலங்கிப் போய் இருந்தேன். :)

      மெதுவாக ஆடி அசைந்து வரும் தேர் போன்ற உன் இன்றைய வருகைக்கு மீண்டும் மிக்க நன்றி, சாரூ.

      Please take care of your health !

      நீக்கு
  32. அன்புள்ள வாத்யாரே! வணக்கம். வாத்தியாரின் மனத்தில் பதிந்த பல பதிவர்களில் இவரும் ஒருவர். அதிலும் நேரில் சந்திப்பது இரட்டிப்பு மகிழ்ச்சிதான். தொடரட்டும் சந்திப்புகளும், பதிவுகளும். எதையும் சரியான இடத்தில் சரியானபடி அறியத் தந்து மகிழ்விப்பதே விஜிகே வாத்யாரின் ஸ்டைல். மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ RAVIJI RAVI

      //அன்புள்ள வாத்யாரே! வணக்கம்.//

      வாங்கோ என் பேரன்புக்குரிய சின்ன வாத்யாரே ! வணக்கம்.

      //வாத்தியாரின் மனத்தில் பதிந்த பல பதிவர்களில் இவரும் ஒருவர்.//

      ஆமாம். அதுவும் உங்களைப்போலவேதான் வாத்யாரே !

      http://gopu1949.blogspot.in/2014/10/6-mgr.html

      http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

      http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

      //அதிலும் நேரில் சந்திப்பது இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.//

      தம்பதி ஸமேதராய் அவர்கள் எழுந்தருளியுள்ளதால் என் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆனது. :)

      //தொடரட்டும் சந்திப்புகளும், பதிவுகளும்.//

      ஆகட்டும். பார்க்கலாம். :)

      //எதையும் சரியான இடத்தில் சரியானபடி அறியத் தந்து மகிழ்விப்பதே விஜிகே வாத்யாரின் ஸ்டைல். மகிழ்ச்சி. நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், தங்கள் ஸ்டைலில் எழுதியுள்ள கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், வாத்யாரே !

      நீக்கு
  33. எல்லா உயிரையும் தம் உயிர் போல் கொண்டாடித் தீர்க்கும் பெருந்தகைக்கு விளக்கம் தாங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் September 6, 2016 at 7:22 PM

      வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் அபூர்வ வருகை ஆச்சர்யமளிக்கிறது. :)

      //எல்லா உயிரையும் தம் உயிர் போல் கொண்டாடித் தீர்க்கும் பெருந்தகைக்கு விளக்கம் தாங்கள்!//

      அடடா, ஏதேதோ பெருந்தன்மையுடன், பெரிய பெரிய விஷயங்களாகச் சொல்லி, என்னை இப்படிப் பெரிதும் கூச்சப்பட வைத்து விட்டீர்களே !

      எனினும் தங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் வித்யாசமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  34. ரொ....ம்...ப...வே... லேட்டுதான்.. காரணம்லாம் சொல்லி போரடிக்க வேணாம்ல.. பதிவர்களாம் உங்கள தேடிவந்து சந்தித்து உங்கள சந்தோஷப்படுத்தி அவங்களும் சந்தோஷப்படுறாங்க... நீங்க அதையெல்லாம் எங்க எல்லாருடனும் பகிர்ந்து கவண்டு எல்லாரையும் சந்தோஷப்படுத்துறீங்க.. எங்கட கோபூஜியால மட்டுமே இப்படில்லாம் பண்ணிகிட முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. September 7, 2016 at 10:01 AM

      வாங்கோ மீனாக்குட்டி, வணக்கம்.

      //ரொ....ம்...ப...வே... லேட்டுதான்.. காரணம்லாம் சொல்லி போரடிக்க வேணாம்ல..//

      காரணமெல்லாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அனைத்தும் யாம் அறிவோம். :)

      ஆறே ஆறு நாட்களுக்குள் 50+50=100 மணி நேர இரயில் பயணம் என்றால் சும்மாவா? உங்களின் உடம்புக்கு மஹா அலுப்பாகத்தானே இருக்கும் !!

      நான் இதே போல முன்பெல்லாம் பயணம் மேற்கொண்டால் பயணத்திற்கு முன்பு ஒரு வாரமும் + பயணத்திற்கு பின்பு ஒரு மாதமும் நன்கு ஓய்வு எடுத்துக் கொள்வேன். :)

      அதனால்தான் இப்போதும் பயணங்களை நான் சுத்தமாக விரும்புவதே இல்லை. இன்று ஐந்து கிலோமீட்டருக்குள் என்றால் ஆட்டோ; இருபது கிலோ மீட்டருக்குள் என்றால் கால் டாக்ஸி, முந்நூறு கிலோ மீட்டருக்குள் என்றால் முரட்டு ஏ.ஸி. கார் என முடிவெடுத்துக் கொண்டுவிட்டேன்.

      தாங்கள் சமீபத்தில் சென்றுவந்த இதுபோன்ற மிகவும் அவசியப் பயணம், தவிர்க்க முடியாத பயணம், இந்தியாவுக்குள் ஆன எட்டாக்கை ஊர்கள் (300 கிலோ மீட்டர்களுக்கு மேல்) என்றால் ப்ளேனில் மட்டுமே போய் வந்து கொண்டிருக்கிறேன்.

      எக்ஸ்ப்ரஸ் இரயிலின் 50 மணி நேரப் பயணத்தை, ப்ளேனில் சென்றால் ஒரு மணி நேரத்திலேயே நாம் முடித்துக்கொண்டு விடலாம். இதனால் நமக்கு நம் பொன்னான நேரமும் மிச்சமாகும். பயண அலுப்பும் இருக்கவே இருக்காது. எக்ஸ்ப்ரஸ் இரயில் ஏ.ஸி. கோச்சு கட்டணத்துடன் ஒப்பிடும்போது ப்ளேன் பயணத்தில் கட்டணப் பணமும் ஒன்றும் அதிகமாக ஆகி விடாது. இரண்டுக்கும் பயணக்கட்டண வித்யாசம் மிகவும் குறைவு மட்டுமே.

      //பதிவர்களெல்லாம் உங்களைத் தேடிவந்து சந்தித்து உங்களை சந்தோஷப்படுத்தி அவங்களும் சந்தோஷப்படுறாங்க... நீங்க அதையெல்லாம் எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டு எல்லாரையும் சந்தோஷப்படுத்துறீங்க..//

      ஏதோ என்னால் இன்று முடிந்தது இதுமட்டுமே, மீனா.

      //எங்கட கோபூஜியால மட்டுமே இப்படில்லாம் பண்ணிக்கிட முடியும்//

      தாங்களும் தங்களின் சமீபத்திய நீண்ட பயணத்தில், எனக்கு மிகவும் பிடித்தமான, என்னிடம் மிக அதிக பாசமுள்ள ஒரு பதிவரை நேரில் சந்தித்துவிட்டு வந்துள்ளீர்கள். அவர்களுடனேயே சுமார் இரண்டு நாட்கள் முழுவதுமாகத் தங்கி கொஞ்சிக் குலாவிவிட்டு வந்திருக்கிறீர்கள். உங்களாலும் அவற்றை அழகாக நேரேட் செய்து, என்னைவிட மிகவும் அழகாக அற்புதமாக எழுத முடியும். அதற்கு ஓர் தூண்டுகோல் மட்டுமே இந்த என் பதிவு என்பதை அறியவும். :)

      தங்களின் சமீபத்திய பயணக் கட்டுரையை + பதிவர் சந்திப்பினை மிகுந்த ஆவலுடன் படிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

      அதனைத் தனிப்பதிவாக தங்கள் வலைத்தளத்தில் பதிவிட விருப்பமில்லை என்றாலும், எனக்கு மட்டுமாவது மெயிலில் அனுப்பி வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      பாஷை தெரியாத ஒரு புது ஊருக்கு, முதன்முதலாக, குடும்பத்தார் அனைவருடனும் பயணம் செய்ய இருக்கிறோமே, திக்குத்தெரியாத காட்டுப்பயணம் போல இருக்கிறதே என அஞ்சி நடுங்கி என்னிடம் புலம்பினீர்கள்.

      முன்பின் சந்தித்திராத உங்கள் இருவருக்கும் ஓர் இணைப்புப்பாலமாக நான் இருந்து, நீங்கள் அந்தப்பதிவரின் உதவியை நாடலாம் என தைர்யம் சொல்லி உங்களை அங்கு அனுப்பிவைத்ததும் நான் மட்டும் தானே!

      அதனால் தங்களின் அந்த மிக நிம்மதியான + மிக ஸ்வீட்டான பயண அனுபவங்களைக் கேட்டு மகிழ, எனக்குள் ஓர் கூடுதல் ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளன. :)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் .... மீனா.

      நீக்கு
    2. நீங்க சொல்லி இருப்பது கரெக்டுதான்.. ஆனா எங்களுக்கு ரயில்வேலதானே பாஸ் இருக்குது.. அதுவும் ஏ.ஸி.. ஃபர்ஸ்ட்க்ளாஸ் பாஸு.. ஏர் வேஸ்ல பாஸ் இல்லியே..... ஒரு பைசா செலவே இல்லாம நாலு பெரிய டிக்கட்டுக மும்பை போயி வர என்ன செலவாகும்ல... இலவசமாக பயணம் கிடைக்கும்போது நேர கணக்கை பொறுத்துதானே போகணும். நோ..கெயின்....வித் அவுட் பெயரின்....இல்லீங்களா கோபூஜி....

      நீக்கு
    3. சிப்பிக்குள் முத்து. September 9, 2016 at 9:38 AM

      வாங்கோ மீனா .... வணக்கம். உன் மீண்டும் வருகை மீண்டும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

      //நீங்க சொல்லி இருப்பது கரெக்டுதான்.. ஆனா எங்களுக்கு ரயில்வேலதானே பாஸ் இருக்குது.. அதுவும் ஏ.ஸி.. ஃபர்ஸ்ட்க்ளாஸ் பாஸு.. ஏர் வேஸ்ல பாஸ் இல்லியே..... ஒரு பைசா செலவே இல்லாம நாலு பெரிய டிக்கட்டுக மும்பை போயி வர என்ன செலவாகும்ல... இலவசமாக பயணம் கிடைக்கும்போது நேர கணக்கை பொறுத்துதானே போகணும். நோ..கெயின்....வித் அவுட் பெயரின்....இல்லீங்களா கோபூஜி....//

      இதனை மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டுதான், நான் உங்களை ப்ளேனில் செல்லுமாறு வற்புருத்தவே இல்லை.

      என்னதான் ஏ.ஸி. ஃபர்ஸ்ட் க்ளாஸ் பயணம் என்றாலும், சுமார் 40-50 மணி நேரப்பயணம் என்றால் எப்போடா இரயிலைவிட்டு கீழே இறங்கப்போகிறோம் என்று மஹா அலுப்பாகிவிடும்.

      நானும் நீங்கள் சொல்லியுள்ளதுபோல ட்ரெயின் ஏ.ஸி. ஃபர்ஸ்ட் கிளாஸில், திருச்சியிலிருந்து மும்பைக்கு இருமுறையும், டெல்லிக்கு ஒருமுறையும், ஜாம்ஷெட்பூருக்கு ஒரு முறையும், ஹைதராபாத்துக்கு ஒருமுறையும் சென்று வந்துள்ளேன். அப்போதெல்லாம் எனக்குக் கொஞ்சம் உடம்பில் தெம்பு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் லாங்க் ஜர்னிகளை இரயிலில் சென்றுவர நினைத்தாலே, எனக்குத் தலையை சுற்றுகிறது.

      தங்களின் மீண்டும் வருகைக்கும், எனக்கு ஏற்கனவே மிக நன்றாகத் தெரிந்துள்ள, தங்களின் இந்த விளக்கங்களுக்கு மிக்க நன்றி, மீனா.

      பிரியமுள்ள கோபூஜி

      நீக்கு
  35. இப்பதான் இந்த பதிவு பற்றி பார்க்க முடிஞ்சது.. உடனே பறந்து வந்தேன். கோபால் ஸார் பதிவு என்றாலே சவாரசியம்தான்.... இந்த பதிவர்சந்திப்பையும் சந்தோஷமாக எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்.... September 7, 2016 at 10:24 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இப்பதான் இந்த பதிவு பற்றி பார்க்க முடிஞ்சது..//

      அதனால் என்ன? பரவாயில்லை.

      //உடனே பறந்து வந்தேன்.//

      தங்களின் Profile Photo மூலம் இதனை என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது. சந்தேகமே சற்றும் இல்லாமல் பறந்து மட்டுமே வந்துள்ளீர்கள் ! :)

      //கோபால் ஸார் பதிவு என்றாலே சவாரசியம்தான்....//

      இதனை நீங்கள் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் சொல்லியுள்ளீர்கள். அச்சா .... பஹூத் அச்சா ! :)

      //இந்த பதிவர்சந்திப்பையும் சந்தோஷமாக எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், சந்தோஷமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  36. படங்களுடன் பகிர்வு அமர்க்களமா இருக்குது..நான்தான் லேட்டா வந்திருக்கேன். பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... September 7, 2016 at 10:30 AM

      வாங்கோ, வணக்கம்.

      //படங்களுடன் பகிர்வு அமர்க்களமா இருக்குது..//

      ஆஹா, அதனைத் தாங்களும் அமர்க்களமாகவே சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம். :)

      //நான்தான் லேட்டா வந்திருக்கேன்.//

      லேட்டானால் என்ன? லேடஸ்டாக வந்துள்ளீர்கள் ! மிக்க மகிழ்ச்சி. :))

      //பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  37. ஸார் பதிவு பக்கம் நான் வந்தே வெகு நாட்களாகிவிட்டது.. இப்பதான் தகவல் தெரிந்தது. பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் ஸார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீனி வாசன் September 7, 2016 at 10:33 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஸார் பதிவு பக்கம் நான் வந்தே வெகு நாட்களாகிவிட்டன..//

      ஆமாம். இதனை நானும் நன்கு உணர்ந்துள்ளேன்.

      //இப்பதான் தகவல் தெரிந்தது.//

      தங்களுக்குத் தகவல் கொடுத்திருக்கும் வாய்ப்புள்ள அந்த ஒரேயொரு நண்பருக்கு என் நன்றிகளையும் தயவுசெய்து தாங்களே சொல்லிவிடவும்.

      //பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் ஸார்..//

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  38. இனிமையானதோர் சந்திப்பு....நாங்களும் உடன் இருந்த உணர்வு....வந்தது ஐயா...

    வலைப்பக்கம் இன்று தான் வந்தேன்....ஆகையால்...கலதாமதமாகிவிட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri September 26, 2016 at 10:38 AM

      வாங்கோ மேடம், வணக்கம். உங்களை நான் பார்த்தே பல வருஷங்கள் இருக்கும்.

      இன்றைய தங்களின் அபூர்வ வருகையால் தமிழ்நாடு முழுவதுமோ, அல்லது எங்கள் ஊராம் திருச்சியில் மட்டுமோ மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, காவிரி நதி கரை புரண்டு ஓடக்கூடும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது.

      எப்படியாவது காவிரிக்குத் தண்ணீர் கிடைத்தால் எங்கள் எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியே.

      இப்போதெல்லாம் இன்றுவரை இங்கு ஒரேயடியாக வெயில் கொளுத்தி வருகிறது. மழையையே காணும்.

      //இனிமையானதோர் சந்திப்பு....நாங்களும் உடன் இருந்த உணர்வு....வந்தது ஐயா...//

      அப்படியா!!!!! மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //வலைப்பக்கம் இன்று தான் வந்தேன்.... //

      எப்படியோ இன்றாவது வரணும் என்று தோன்றியதே ... சந்தோஷம். :)

      //ஆகையால்...கலதாமதமாகிவிட்டது...//

      அதனால் பரவாயில்லை. வரும் 30.09.2016 வெள்ளிக்கிழமை அமாவாசை வரை மட்டுமாவது, தினமும் இங்கு வந்து கொஞ்சம் எட்டிப்பாருங்கோ.

      அதன்பிறகு இப்போதைக்கு என் தொந்தரவுகள் அநேகமாக இருக்காது என்ற மகிழ்ச்சியான தகவலை உங்களுக்கு மட்டும் பரம இரகசியமாக நானும் இங்கு சொல்லிக்கொள்கிறேன். :)

      நீக்கு