About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, January 13, 2018

கை மேல், கையோடு ஏறியதோர் .... பரிசு

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். 

2017-ம் ஆண்டு ஆரம்பத்தில் PUSTAKA DIGITAL MEDIA PRIVATE LIMITED நிறுவனத்தினர் பல்வேறு எழுத்தாளர்களையும்,  அவர்களின் எழுத்துக்களையும் மின்னூல் வடிவில் கொண்டுவந்து சிறப்பித்துக்கொண்டு இருந்தனர். 

நானும் என் சார்பில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்னூல்களை வெளியிட ஆர்வம் கொண்டு, எனது ஆக்கங்களைத் தொடர்ந்து, அசராமல் அனுப்பிக்கொண்டே இருந்தேன். 

மார்ச் 2017 ஒரே மாதத்தில், மின்னல் வேகத்தில் என்னுடைய  முதல் பத்து மின்னூல்கள் அவர்களால் வெளியிடப்பட்டிருந்தன. 

அதன்பிறகு நான் தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டே இருந்த என் சரக்குகளைக்கண்டு, அவர்கள் ஒருவேளை அசந்து போனார்களோ என்னவோ ..... கடந்த 10 மாதங்களாக அவர்களிடமிருந்து எனக்கு எந்தவொரு தகவல்களும் இல்லாமல் இருந்து வந்தது.

சரி ..... நம் பதிவுலக நெருங்கிய நட்புகளில் பலர், என்னை நாளடைவில் மறந்து விட்டது போலவே, இவர்களும் என்னை மறந்துவிட்டார்களோ என்னவோ என நினைத்து, என்னை நானே சமாதானம் செய்துகொண்டு, மின்னூல் வெளியீடுகள் பற்றிய, என் இன்பக் கனவுகளை நானும் மறந்தே போய் விட்டேன். :)

ஆனாலும் இன்று [13.01.2018 போகிப் பண்டிகையன்று] ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது! புஸ்தகா மின்னூல் நிறுவனத்திலிருந்து, அடியேனுக்கு ஓர் பதிவுத் தபால், சற்றே முண்டும் முடிச்சுமாக வந்திருந்தது. கையொப்பமிட்டு, வாங்கிப் பிரித்துப் பார்த்தால், 2018 புத்தாண்டுக்கு ஓர் கைகடிகாரத்தை பரிசாக அளித்து மகிழ்வித்துள்ளனர்.

ஆஹா! இதுவும் அந்தக் ’காமதேனு’வின் http://gopu1949.blogspot.in/2018/01/blog-post.html  அருள் என நினைத்து, நான் வரவில் வைத்துக்கொண்டேன். :)






  
புத்தாண்டு பரிசு அனுப்பி வைத்து மகிழ்வித்துள்ள புஸ்தகா மின்னூல் நிறுவனத்திற்கும், இணைப்புக் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ள, அருமை நண்பர்  திரு. R. பத்மனாபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


எனது மின்னூல்கள் சம்பந்தமாக நான் ஏற்கனவே
வெளியிட்டுள்ள என் பதிவு .... தங்களின் நினைவூட்டலுக்காக !      


மின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் !

மார்ச்-2017 இல் மட்டும், 
வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மின்னூல்கள்
மீண்டும் உங்கள் பார்வைக்காக

 

 

 

 

 
For more Details:









என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

65 comments:

  1. மிகுந்த சந்தோஷம் கோபு சார். நேரப்படி நடக்கணும்னு நினைக்கற உங்களுக்கே, நேரத்தை அவ்வப்போது பார்த்துக்கொள்வதற்காக கடிகார பரிசு அனுப்பியிருக்காங்களா?

    என்னவோ நான் சொன்ன வாய் முகூர்த்தம்தான், இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று நினைக்கறேன்.

    'நான் சொன்னதுபோலவே நடந்தது அறிந்து சந்தோஷம் (ஏதேனும் வரவு இருந்தால்தான் இங்கு பதிவு வரும்போலிருக்கு. முதலில் டயரி, இரண்டாவது காமதேனு படம், மூன்றாவது நொறுக்ஸ்/முறுக்ஸ்)"

    இப்போ நாலாவதாக, கைக் கெடிகாரம். (சரி சரி.. உங்கள் கணக்குப்படி இந்த வருடத்தில் மூன்றாவது வரவு கைக்கெடிகாரம்)

    பொங்கல் வாழ்த்துகள் படங்களில் எனக்குப் பிடித்தது கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்திருக்கும் சர்க்கரைப் பொங்கல். நாளை வெளியிடுவதற்குப் பதில் இன்றே வெளியிட்டுவிட்டீர்களே. வந்த கைக்கெடிகாரத்தில், தேதிக்கான ப்ரொவிஷன் இல்லாததுதான் காரணமா?

    ReplyDelete
    Replies
    1. இப்போது சிலபல படங்களையும் இணைத்துள்ளீர்கள். (ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இப்படி நேரம் எடுத்துள்ளீர்கள்?)

      முதலில் கீ கொடுத்து நேரத்தைச் சரிபார்த்து, 2 3/4க்கு இடதுகையில் அணிந்து ஒரு போட்டோ, 2.50க்கு லெட்டரின் மீது பெட்டியில் வைத்து ஒரு போட்டோ, பிறகு 3.30க்கு தெளிவான க்ளோஸப், பிறகு வெகு நேரம் கழித்து திடுமென யோசித்து, வலது கையில் 6.45க்கு கட்டிக்கொண்டு ஒரு போட்டோ...

      வாழ்த்துகள்.

      Delete
    2. நெல்லைத் தமிழன் January 13, 2018 at 5:48 PM

      வாங்கோ ஸ்வாமீ .... வணக்கம்.

      //மிகுந்த சந்தோஷம் கோபு சார். நேரப்படி நடக்கணும்னு நினைக்கற உங்களுக்கே, நேரத்தை அவ்வப்போது பார்த்துக்கொள்வதற்காக கடிகார பரிசு அனுப்பியிருக்காங்களா?//

      மிக்க மகிழ்ச்சி, ஸ்வாமீ. எனக்கு மட்டுமல்ல. ‘புஸ்தகா’ நிறுவனம் மூலம் மின்னூல்கள் வெளியிட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் இது போன்ற கைக்கடிகாரங்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். [மின்னூல் வெளியிட்ட எல்லாப் பதிவர்களுமே, நேரப்படி நடக்கணும்னு நினைப்பவர்களா இருப்பார்களோ என்னவோ .... எனக்குத் தெரியாது. என்னைப்போல உலக மஹா சோம்பேறிகளும் ஒருசிலர் இருக்கக்கூடும் என நினைக்கிறேன். ஏதோ இப்போது எங்கள் நேரம் .... நல்ல நேரம் .... நேரம் காட்டிடும் கைக்கடிகாரம் கிடைத்துள்ளது]

      //என்னவோ நான் சொன்ன வாய் முஹூர்த்தம்தான், இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று நினைக்கறேன்.//

      அதே ..... அதே ..... அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

      //நான் சொன்னதுபோலவே நடந்தது அறிந்து சந்தோஷம் (ஏதேனும் வரவு இருந்தால்தான் இங்கு பதிவு வரும்போலிருக்கு. முதலில் டயரி, இரண்டாவது காமதேனு படம், மூன்றாவது நொறுக்ஸ்/முறுக்ஸ்) இப்போ நாலாவதாக, கைக் கெடிகாரம். (சரி சரி.. உங்கள் கணக்குப்படி இந்த வருடத்தில் மூன்றாவது வரவு கைக்கெடிகாரம்)//

      ஏதோ அது போல அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. எனக்கும் சந்தோஷமே. வீட்டு அடசல்களில் எதை எங்கே, பத்திரப்படுத்தி வைத்தோம் என்பதே மறந்து விடுகிறது, ஸ்வாமீ. அதனால் உடனுக்குடன் பதிவில் ஏற்றி விடுகிறேன். பிற்காலத்தில், அந்தப்பொருளையே தேடி என்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும்கூட, பதிவினைத் தேடிப்பார்த்து, மனதுக்குள் மகிழ்ந்து கொள்ளலாம் ... அல்லவா!

      //பொங்கல் வாழ்த்துகள் படங்களில் எனக்குப் பிடித்தது கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்திருக்கும் சர்க்கரைப் பொங்கல்.//

      எனக்கும்தான். இருப்பினும் தங்களைப் போன்றவாள் ஆத்தில் செய்யும் அக்கார அடிசல் + புளியோதரை மேல் எனக்கு ஒரு தனிக்காதலே உண்டு ..... (முன்பெல்லாம்) :))

      //நாளை வெளியிடுவதற்குப் பதில் இன்றே வெளியிட்டுவிட்டீர்களே. வந்த கைக்கெடிகாரத்தில், தேதிக்கான ப்ரொவிஷன் இல்லாததுதான் காரணமா?//

      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. சில மணி நேரங்களில் விடிந்தால் பொங்கல் பண்டிகை என்று மிகவும் நெருங்கி விட்டதால், போகிப் பண்டிகை அன்றே பொங்கலையும் காட்டிவிட்டேன். இதற்காக வெட்டி வேலையாக இன்னொரு பதிவா வெளியிட முடியும்? :)



      >>>>> தொடரும் >>>>>

      அன்புடன் கோபு

      Delete
    3. நெல்லைத் தமிழன் January 14, 2018 at 11:34 AM

      வாங்கோ ஸ்வாமீ, தங்களின் மீண்டும் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.

      //இப்போது சிலபல படங்களையும் இணைத்துள்ளீர்கள். (ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இப்படி நேரம் எடுத்துள்ளீர்கள்?) முதலில் கீ கொடுத்து நேரத்தைச் சரிபார்த்து, 2 3/4க்கு இடதுகையில் அணிந்து ஒரு போட்டோ, 2.50க்கு லெட்டரின் மீது பெட்டியில் வைத்து ஒரு போட்டோ, பிறகு 3.30க்கு தெளிவான க்ளோஸப், பிறகு வெகு நேரம் கழித்து திடுமென யோசித்து, வலது கையில் 6.45க்கு கட்டிக்கொண்டு ஒரு போட்டோ... வாழ்த்துகள்.//

      பதிவுத்தபாலில் வந்த மேற்படி கைக்கெடிகார பார்ஸலை அந்தச் சிறு வயது தபால்காரப் பெண் [Postwoman] என்னிடம் கொடுத்த போது நேரம் மதியம் 1.05 மணி. அப்போது நான் என் வெளியூர் பயணத்திற்காக பொட்டி/சட்டி வாங்க அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.

      கையொப்பமிட்டு பார்ஸலை வாங்கி, மின்னல் வேகத்தில் பிரித்தேன் .... அதன் உள்ளே இருந்த கடிகாரம், இப்போதே மணி 1.10 எனக்காட்டி என்னைத் துரத்தியது.

      அதனைப் பார்த்துவிட்டு அப்படியே வைக்குமாறு என் மனைவியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டேன்.

      எமகண்ட வேளைக்குள் கடைக்குச்சென்று, எனக்குத்தேவையான அனைத்தையும், அள்ளிக்கொண்டு, அதற்கான பணம் செலுத்திவிட்டு, 2.30 மணி சுமாருக்கு வீடு திரும்பினேன். அதன்பின் எம கண்ட வேளையிலேயே, இதுபற்றி எப்படியும் ஒரு பதிவு வெளியிட வேண்டும் என எனக்குள் திட்டமிட்டபடியே மதிய சாப்பாட்டினை முடித்துக்கொண்டேன்.

      அவசர அவசரமாக 5.20 மணிக்குள், இந்தப் பதிவையும் ஒருவாறு வடிவமைத்து, நான் வெளியிட்டு விட்டேன். ஏனோ இதில் முதலில் எனக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை.

      கெடிகாரம் என் கையில் ஏறிவிட்டது என்பதை நிரூபிக்க வேண்டி, அந்த ’VG’ என்ற எழுத்துக்கள் பொறித்த TV மோதிரத்தைத் தேடி எடுத்து அணிந்து கொண்டேன்.

      (நான் அன்றாடம் அணிந்து கொள்வது வேறு ஒரு புதிய டைட்டான சிறிய சைஸ் மோதிரமாகும்).

      பொதுவாக மோதிரம் வலது கையிலும், கைக்கடிகாரம் இடது கையிலும் மட்டுமே அணிய வேண்டும். ஆனால் முதல் படத்தில் இரண்டையும், என் இடது கையில் அணிந்து வெளியிட நேர்ந்து விட்டது. பிறகு இரண்டையும் வலது கையில் அணிந்து இன்னொரு படம் வெளியிடலாமோ என எனக்குத் தோன்றியது. அதனால் அந்தக் கடைசி படத்தை மாலை 6.30 மணி சுமாருக்கு எடுத்து இணைத்தேன்.

      இடது கைப்படம் கேமராவில் எடுக்கும்போது நல்ல இயற்கை சூரிய வெளிச்சம் இருந்ததால், அது நல்ல கலராக ஜோராக அமைந்துபோனது. இரண்டாவது வலது கைப்படம் எடுப்பதற்குள் இருட்டிப்போய், சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டதால், புகைப்படத்தில் தோன்றிடும் இரு கைகளின் ஸ்கின் கலர்களிலும் கொஞ்சம் வித்யாசமான மாற்றங்கள் தெரிகின்றன.

      ”ஆத்துக்காரிக்கு மஞ்சள் பூசிக் குளிப்பாட்டிவிட்டு வந்த நேரத்தில் எடுக்கப்பட்டதா அந்த இடதுகைப்படம்?” என எங்கட ’அதிரடி அதிரா’ போன்ற யாராவது கேட்டுப்புடுவார்களோ என்ற பயமும் எனக்கு இருந்தது. :)

      பொதுவாகத் தங்க மோதிரம் அணிவதால் என்னென்ன பிரயோசனங்கள் உண்டென்று நகைச்சுவையாக ஓர் பதிவினில் நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/04/7.html

      அதில் என் பதில்கள் உள்பட மொத்தம் 126 பின்னூட்டங்கள் உள்ளன. அதில் உள்ள நிறைவுப் பின்னூட்டம் (The last but one) தங்களுடையதே.

      பதிவின் இறுதியில் உள்ள மோதிரச் செய்திகளை மட்டுமாவது, மீண்டும் படித்து மகிழவும். :))

      அன்புடன் கோபு

      Delete
  2. அன்பின் அண்ணா..
    கற்றார்க்கு சென்ற இடமெல்லாஞ் சிறப்பு..

    கதை பல வடிக்கும் தங்களுக்கு கைக்கடிகாரம் பொருத்தமே..

    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ January 13, 2018 at 5:52 PM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //அன்பின் அண்ணா.. கற்றார்க்கு சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.. கதை பல வடிக்கும் தங்களுக்கு கைக்கடிகாரம் பொருத்தமே..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.:)

      //அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...//

      தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete
  3. ஆஹா பொங்கலுக்கு செமத்தியான பரிசுதான்.கிடைச்சிருக்கு..வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... January 13, 2018 at 5:56 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா பொங்கலுக்கு செமத்தியான பரிசுதான் கிடைச்சிருக்கு..வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  4. ரொம்ப சந்தோஷம்..வாழ்த்துகள்..பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 13, 2018 at 5:59 PM

      //ரொம்ப சந்தோஷம்..வாழ்த்துகள்..பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்.//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  5. கோபூஜி...வாழ்த்துகள்..ரொம்ப சந்தோஷம்

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. January 13, 2018 at 6:01 PM

      வாங்கோ மீனா-முன்னா-மெஹர்-மாமி, வணக்கம்.

      //கோபூஜி...வாழ்த்துகள்..ரொம்ப சந்தோஷம்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
  6. வாச் ரொம்ப நன்னாருக்கு.. உங்க கையில பொறுத்தமா ஜம்முனு அழகா இருக்கு..இன்னிக்கு போகி.....போளி..பருப்புவடை...இன்றய ஸ்பெஷல்....

    ReplyDelete
    Replies
    1. happy January 13, 2018 at 6:05 PM

      வாடீம்மா என் செல்லக்குட்டி .... ஹாப்பி.

      //வாச் ரொம்ப நன்னாருக்கு.. உங்க கையில பொருத்தமா ஜம்முனு அழகா இருக்கு..//

      அப்படியா? என்னிடம் ஏற்கனவே ORIGINAL SONATA WRIST WATCH உள்ளது. கடந்த 20 வருடங்களாக பிரச்சனை ஏதும் இல்லாமல் ஜோராக ஓடிக்கொண்டுள்ளது. நடுவில் இரண்டு முறை பேட்டரி மட்டும் மாற்றியுள்ளேன். அதில் தேதியும் காட்சியளிக்கும். அது Gold Case & Chain Type. Weightless Watch. அதுவும் இன்றுவரை கருக்காமல் பளிச்சென்றுதான் உள்ளது.

      //இன்னிக்கு போகி..... போளி.. பருப்புவடை... இன்றய ஸ்பெஷல்....//

      எனக்குக் கிடையாதா? :(((((

      Delete
  7. கடிகாரம் பரிசாக கிடைத்தது அருமை.ஆனால் எனக்கு அந்த VG மோதிரம்தான் பளிச்சுனு தெரியுது.😀😀😀

    ReplyDelete
    Replies
    1. ஆச்சி ஸ்ரீதர் January 13, 2018 at 6:54 PM

      வாங்கோ ஆச்சி, வணக்கம்.

      //கடிகாரம் பரிசாக கிடைத்தது அருமை.//

      ஆஹா, இதனை அருமையாகச் சொல்லிட்டீங்கோ.

      //ஆனால் எனக்கு அந்த VG மோதிரம்தான் பளிச்சுனு தெரியுது.😀😀😀//

      தங்கமான மனசு உடைய ஆச்சிக்குத் தங்க மோதிரம் பளிச்சுன்னு தெரிவதில் எனக்கு ஆச்சர்யமே ஏதும் இல்லை.

      எனக்கு இப்போது அது கொஞ்சம் லூஸ் ஆகி கீழே நழுவி விழுந்துவிடும் போல உள்ளது. நூல் சுற்றிப் போட்டுக் கொண்டால் சரியாகும். அதில் எனக்கு விருப்பம் இல்லை.

      இரண்டு பவுனில், முரட்டு சைஸில், செய்துகொண்ட அது, இன்றைய ஆச்சியின் விரல் சைஸுக்கு மட்டுமே, ஒருவேளை சரியாகவோ அல்லது டைட்டாகவோ இருக்கலாமோ என்னவோ :))

      அன்புடன் கோபு

      Delete
    2. அன்புள்ள ஆச்சி,

      இன்று [15/01/2018] பிறந்தநாள் கொண்டாடும், தங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !

      அன்புடன் கோபு

      Delete
  8. Replies
    1. middleclassmadhavi January 13, 2018 at 7:08 PM

      வாங்கோ MCM Madam. செளக்யமா?

      //Congrats//

      Thanks a Lot, Madam.

      - vgk

      Delete
  9. வாச் ரொம்ப அழகா இருக்கு சார்...வாழ்த்துகள்

    தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. Thulasidharan V Thillaiakathu January 13, 2018 at 8:20 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வாச் ரொம்ப அழகா இருக்கு சார்...வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

      Delete
  10. பெருமைக்குரிய விஷயமே
    மின்னல் வேகத்தில் நீங்கள் நூல்களை
    மின்னூலுக்கு
    அனுப்பியதைக் கண்டு அசந்து இந்தப் பரிசை
    அனுப்பி இருப்பார்கள்
    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. Ramani S January 13, 2018 at 9:28 PM

      வாங்கோ Mr. S RAMANI Sir, வணக்கம்.

      //பெருமைக்குரிய விஷயமே//

      சந்தோஷம்.

      //மின்னல் வேகத்தில் நீங்கள் நூல்களை
      மின்னூலுக்கு அனுப்பியதைக் கண்டு அசந்து இந்தப் பரிசை அனுப்பி இருப்பார்கள்.//

      மின்னூல் வெளியீட்டினில், என் மின்னல் வேகத்தை மட்டுமே அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு அனுப்பி வைக்கவில்லை. அவர்கள் தொடர்பில் இருந்து, அவர்கள் மூலம் மின்னூல் வெளியிட்டுள்ள அனைத்து நூலாசிரியர்களுக்கும் இந்தப் பரிசு உண்டுதான்.

      //மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன்...//

      தங்களின் அன்பு வருகைக்கும், மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      Delete
  11. வாவ் !! அழகான பரிசு அண்ணா :) வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Angel January 13, 2018 at 11:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வாவ் !! அழகான பரிசு அண்ணா :) வாழ்த்துக்கள்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கோபு அண்ணா

      Delete
  12. ஆஆஆஆவ்வ்வ் மீதான் லாஸ்ட்டில 1ஸ்ட்டூஊஊஊஊ:))..

    ஆஹா அடுத்தடுத்து அழகிய பரிசுகள்.. புஸ்தகா முத்திரையோடு மணிக்கூடு மிக அருமை.. அதுக்குக் காரணம் உங்கள் புத்தகத்தை அதிரா விமர்சனம் செய்தமை தான் என பட்சி ஜொள்ளுது:)).. எனவே மணிக்கூட்டில் பாதியை அனுப்பி வைக்கவும்:)..

    இனிய பொயிங்கல் வாழ்த்துக்கள் கோபு அண்ணன்...

    மணிக்கூடு வந்திட்டுது:) அடுத்து வைரத்தோடு கிடைக்க வாழ்த்துகிறேன்:)..

    ReplyDelete
    Replies
    1. athiraமியாவ் January 14, 2018 at 2:47 AM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //ஆஆஆஆவ்வ்வ் மீதான் லாஸ்ட்டில 1ஸ்ட்டூஊஊஊஊ:))..//

      அதுவும் இல்லை. நீங்க மிடிலில் மட்டுமே 1ஸ்ட்டூஊஊஊஊ ஆக்கும்! :))

      //ஆஹா அடுத்தடுத்து அழகிய பரிசுகள்.. புஸ்தகா முத்திரையோடு மணிக்கூடு மிக அருமை.. அதுக்குக் காரணம் உங்கள் புத்தகத்தை அதிரா விமர்சனம் செய்தமை தான் என பட்சி ஜொள்ளுது:)).. //

      என் மின்னூல்களில் சிலவற்றை அதிரா விமர்சனம் செய்தமையால்தான் இந்தப் பரிசே கிடைத்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகிறது.

      http://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html
      ‘கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும் :)’

      //எனவே மணிக்கூட்டில் பாதியை அனுப்பி வைக்கவும்:).//

      வாட்ச் ஸ்ட்ராப்பில் ஆளுக்குப் பாதியை வைத்துக்கொண்டால் அது இருவருக்குமே பயன்படாது. அதனால் உடனே புறப்பட்டு வந்து ஸ்ட்ராப்பை மட்டும் முழுவதுமாக வாங்கிக்கொண்டு செல்லவும். நான் அந்த வாட்சுக்கு வேறு செயின் போட்டுக் கொள்கிறேன். :)

      //இனிய பொயிங்கல் வாழ்த்துக்கள் கோபு அண்ணன்...//

      அது என்ன ‘பொயிங்கல்’ ?????

      //மணிக்கூடு வந்திட்டுது:) அடுத்து வைரத்தோடு கிடைக்க வாழ்த்துகிறேன்:)..//

      மின்னூலுக்கு விமர்சனங்கள் எழுதியவர்களுக்கு மட்டும், தனியே வைரத்தோடுகள் அனுப்பி வைக்கப்போகிறார்களாம். அதனால் அவை உங்களுக்கே நேரிடையாக வந்து சேர்ந்துவிடும். :) :)

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, அதிரா.

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
    2. [im]https://www.google.co.in/aclk?sa=L&ai=DChcSEwjjvYKXge7YAhVJhY8KHVQCDj4YABAGGgJzYg&sig=AOD64_3LBx1VqMAt9rP0juV67i3r8oYJIg&ctype=5&q=&ved=0ahUKEwiWs_mWge7YAhUSv5QKHYn2CS4Q8w4IcA&adurl=[/im]

      Delete
  13. கடிகாரத்தின் டயல் நம் வயதிற்குப் பொருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ப.கந்தசாமி January 14, 2018 at 5:13 AM

      வாங்கோ ஸார், வணக்கம்.

      //கடிகாரத்தின் டயல் நம் வயதிற்குப் பொருத்தமாக இருக்கிறது.//

      ஆமாம் ஸார். குழப்பம் ஏதும் இல்லாமல் நல்லாத் தெளிவாகத்தான் உள்ளது.

      சிலரிடம் பேசும்போது, மிகத் தெளிவாகச் சொல்வதாக நினைத்து நம்மைக் குழப்புவார்களாம். சிலர் குழப்பமாகப் பேசி நம்மைத் தெளிவாக்க முயற்சிப்பார்களாம். இவை இரண்டுக்கும் உதாரணமாக இரு நகைச்சுவைக்கதைகளை நான் சமீபத்தில் கேட்டேன். முடிந்தால் பிறகு, ஒரு வாரம் கழித்து உங்களுக்காக இங்கேயே அவற்றைப் பகிர்கிறேன்.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, ஸார்.

      அன்புடன் கோபு

      Delete
    2. கதை-1 [விளக்கமாகத் தான் பேசுவார்கள் ... கேட்கும் நமக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கும்]

      ஒருவன் நிறைய ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கிறான். அவனிடம் ஓர் பெரியவர் வருகிறார். இப்போது அவர்களுக்குள் நிகழ்ந்த சுவையான உரையாடல்கள்:

      -=-=-=-=-

      பெரியவர்: தம்பி ... உன்னிடம் உள்ள மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள் இருக்கும்?

      அவன்: நீங்க கருப்பு ஆடுகளைப் பற்றி கேட்கிறீங்களா, அல்லது ... வெள்ளை ஆடுகள் பற்றிக் கேட்கிறீங்களா?

      பெரியவர்: சரி .... கருப்பு ஆடுகள், எத்தனை என்று முதலில் சொல்லு.

      அவன்: அதில் ஒரு ஐம்பது உள்ளன.

      பெரியவர்: அப்போ .... வெள்ளை ஆடுகள் எத்தனை இருக்கும்?

      அவன்: அதிலும் ஒரு ஐம்பதுதான் உள்ளன.

      பெரியவர்: ஒவ்வொரு ஆடும் தினமும் எத்தனை தீனி திங்கும்?

      அவன்: நீங்க கருப்பு ஆடுகளைப் பற்றி கேட்கிறீங்களா, அல்லது ... வெள்ளை ஆடுகள் பற்றிக் கேட்கிறீங்களா?

      பெரியவர்: சரி .... கருப்பு ஆடுகள் எத்தனை தீனி திங்கும் என்று முதலில் சொல்லு.

      அவன்: அது ஒவ்வொன்றும் தினம் பத்து கிலோ தீனி திங்கும்.

      பெரியவர்: அப்போ ..... வெள்ளை ஆடுகள் ????

      அவன்: அதுவும் ஒவ்வொன்றும் தினம் பத்து கிலோ தீனிதான் திங்கும்.

      [இந்த இவனின் பதிலால், பெரியவர் சற்றே குழம்பிப்போகிறார்]

      பெரியவர்: ஒவ்வொரு ஆடும் எத்தனை லிட்டர் பால் கறக்கும்?

      அவன்: மறுபடியும் என்னைக் குழப்புறீங்களே; நீங்க கருப்பு ஆடுகளைப் பற்றி கேட்கிறீங்களா, அல்லது ... வெள்ளை ஆடுகள் பற்றிக் கேட்கிறீங்களா?

      பெரியவர்: சரி .... கருப்பு ஆடுகள் எத்தனை லிட்டர் பால் கறக்கும் என்று முதலில் சொல்லு.

      அவன்: கருப்பு ஆடுகள் ஒவ்வொன்றும் தினமும் இரண்டு லிட்டர் பால் கறக்கும்.

      பெரியவர்: அப்போ ..... வெள்ளை ஆடுகள் ?????

      அவன்: அவையும் தினமும் இரண்டு லிட்டர் பால்தான் கறக்கும்.

      பெரியவர்: ஏனப்பா இப்படி கருப்பு ஆடுகளா, வெள்ளை ஆடுகளா எனப் பிரித்துப் பிரித்துக் கேட்டு, இரண்டுக்கும் ஒரே பதில்களாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்?

      அவன்: இதைப்பற்றி நீங்க என்னிடம் முன்னாடியே கேட்டிருந்தால் விபரமாக, விளக்கமாகச் சொல்லியிருந்திருப்பேன். கருப்பு ஆடுகள் எல்லாமே என் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரனுடையவைகளாகும்.

      பெரியவா: ஓஓஓஓஓ ..... அப்படியா; அப்போ .... அந்த வெள்ளை ஆடுகள் ????

      அவன்: அவைகளும் என் எதிர் வீட்டுக்காரனுடையவைகள் மட்டுமே.

      [இதைக்கேட்டதும் அந்தப் பெரியவர் மயங்கிக் கீழே விழுந்திருப்பார்]

      -=-=-=-=-

      அவன் சொன்னவை எல்லாமே மிகவும் விளக்கமாக இருப்பினும், கேட்கும் நமக்கும் அந்தப் பெரியவரைப் போலவே கொஞ்சம் குழப்பமாக உள்ளது ..... அல்லவா :)))))

      அன்புடன் கோபு

      Delete
    3. கதை-2

      [சித்தர்கள் தங்கள் பதிலை குழப்பமாகச் சொல்லிச் சென்று விடுவார்களாம். பண்டிதன் அல்லாத பாமரனால் அவற்றை சுலபமாகப் புரிந்துகொள்ள இயலாதாம். ஒருவன் தன் கையினால், தன் காதைச்சுற்றி மூக்கைத் தொடும் கதையாகத்தான் அவை இருக்கும்.]

      ஒருவன் நடந்து வரும்போது, அவன் காலில் நெருஞ்சி முள் குத்தி விடுகிறது. காலை நொண்டியபடி வந்த அவன் எதிரில், புலமை வாய்ந்த ஓர் சித்தர் காட்சியளிக்கிறார்.

      அவன்: ஸ்வாமீ ..... வணக்கம். என் காலில் நெருஞ்சிமுள் குத்தியுள்ளது, நான் இப்போது என்ன செய்ய?

      சித்தர் ஒரு பாடல் மூலம் பதிலளிக்கிறார்:

      ”பத்து ரதன், புத்திரனின், மித்திரனின், சத்ருவின், பத்தினியின், கால் வாங்கித் தேய் !”

      இவ்வாறு சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்துவிட்டார், அந்த சித்தர். அவரிடம் இவனால் விளக்கம் கேட்க முடியவில்லை.

      இவன் தன் காலை நொண்டியபடியே ஒரு மைல் தூரம் சென்று வேறு ஒரு முதியவரிடம், தனக்கு நேர்ந்ததைச் சொல்லி, சித்தர் சொன்ன வைத்தியம் பற்றிய பாடலையும் சொல்லி அதற்கான விளக்கம் கேட்கிறான்.

      அந்தப் பெரியவர் விளக்கிச் சொல்கிறார்:

      பத்து ரதன் = தஸரதன்

      பத்து ரதன், புத்திரனின் = தஸரத குமாரனான ராமனின்

      பத்து ரதன், புத்திரனின், மித்திரனின் = தஸரத குமாரனான ராமனின் நண்பனின் (அதாவது சுக்ரீவனின்)

      பத்து ரதன், புத்திரனின், மித்திரனின், சத்ருவின் = சுக்ரீவனின் விரோதியான வாலியின்

      பத்து ரதன், புத்திரனின், மித்திரனின், சத்ருவின், பத்தினியின் = வாலியின் மனைவியான தாரையின்

      பத்து ரதன், புத்திரனின், மித்திரனின், சத்ருவின், பத்தினியின், கால் வாங்கித் தேய் ! = ’தாரை’ என்ற சொல்லில் ‘த’ வுக்கு அடுத்து வரும் காலை வாங்கி விட்டால் (நீக்கி விட்டால்) வருவது ‘தரை’

      ’தரையில் உன் காலைத் தேய் ..... உன் காலில் குத்தியுள்ள நெருஞ்சிமுள் விலகிப்போகும்’ என்பதைத் தான் அந்த புலமை வாய்ந்த சித்தர், இவ்வாறு நீட்டி முழக்கி ஒரு பாடலாகச் சொல்லியுள்ளாராம்.

      -=-=-=-=-

      இது எப்படி இருக்கு!

      அன்புடன் கோபு

      Delete
  14. அன்புள்ள கோபு ஸார் .காலத்தைக் காட்டிச் செல்லும் கைக்கடிகாரம் ....பரிசு மழை அருமை..! உங்கள் தகுதிக்கும், திறமைக்கும்,மனதுக்கும் பெய்கிறது.
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

    ReplyDelete
    Replies
    1. ஜெயஸ்ரீ ஷங்கர் January 14, 2018 at 9:00 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அன்புள்ள கோபு ஸார் .காலத்தைக் காட்டிச் செல்லும் கைக்கடிகாரம் ....பரிசு மழை அருமை..!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //உங்கள் தகுதிக்கும், திறமைக்கும், மனதுக்கும் பெய்கிறது.//

      எல்லாம் ’காமதேனு’வாகிய தாங்கள் அனுப்பி வைத்த ‘காமதேனு’வின் அருளால் மட்டுமே பொழிந்து வருகிறது.

      //பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
      அன்புடன் ஜெயஸ்ரீ ஷங்கர்//

      மிகவும் சந்தோஷம் மேடம்.

      பிரியத்துடன் + நன்றியுடன்
      கோபு

      Delete
  15. அழகிய பரிசு!
    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மனோ சாமிநாதன் January 14, 2018 at 10:45 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அழகிய பரிசு! அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  16. இப்போதுதான் ஃபேஸ்புக்கில் இந்த பதிவைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள். உங்களிடமிருந்து இன்னும் நிறைய பதிவுகள் வர, உங்களுக்கு இன்னும் நிறைய பரிசுகள் வர வேண்டும் என்பது எனது விருப்பம். அடுத்த பரிசு எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்?

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ January 14, 2018 at 3:54 PM

      வாங்கோ ஸார், வணக்கம்.

      //இப்போதுதான் ஃபேஸ்புக்கில் இந்த பதிவைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள்.//

      அப்படியா? ஃபேஸ்புக் பக்கம் நான் அதிகமாகப் போவதே இல்லை. இருப்பினும் அங்கும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருப்பது என் கவனத்திற்கும் வந்தது. மிக்க மகிழ்ச்சி.

      //உங்களிடமிருந்து இன்னும் நிறைய பதிவுகள் வர, உங்களுக்கு இன்னும் நிறைய பரிசுகள் வர வேண்டும் என்பது எனது விருப்பம். அடுத்த பரிசு எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்?//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பார்ப்போம்.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      அன்புடன் VGK

      Delete
  17. அடடே... வாழ்த்துகள். அதுசரி, அனுப்பிய புஸ்தகாஸ் இந்த வருடம் கொத்துக் கொத்தாய் வெளியீடா?

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். January 14, 2018 at 4:55 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //அடடே... வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //அதுசரி, அனுப்பிய புஸ்தகாஸ் இந்த வருடம் கொத்துக் கொத்தாய் வெளியீடா?//

      தெரியவில்லை ஸ்ரீராம்.

      13.01.2018 போகிப்பண்டிகை அன்று திரு. பத்மனாபன் அவர்களிடம் தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமும் நான் பேசி இந்த அன்பளிப்புக்காக என் நன்றிகளைக் கூறிக்கொண்டேன்.

      அவர்கள் நிறுவனம், தங்கள் நிறுவன வளர்ச்சிக்காக, கூகுளுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கிக்கொண்டு வருவதால், இடையில் புதிய ஆசிரியர்கள் அறிமுகம் + புதிய மின்னூல்கள் வெளியீடு ஆகியவை, ஏதும் செய்யப் படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏதேதோ சொன்னார். பார்ப்போம், ஸ்ரீராம்.

      அன்புடன் கோபு

      Delete
  18. எனிக்காக பொங்கலு படம்லா போட்டிகளா குருஜி...வாச்சு நல்லா இருக்குது..மொோதிரம் சூப்பராகீது.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. mru January 14, 2018 at 6:03 PM

      வா...ம்மா, முருகு. வணக்கம்.

      //எனிக்காக பொங்கலு படம்லா போட்டிகளா குருஜி...//

      ஆம். உன் ஒருத்திக்காக மட்டுமே போட்டுள்ளேன். :)

      //வாச்சு நல்லா இருக்குது.. மோதிரம் சூப்பராகீது.. வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு.

      அன்புடன் உந்தன் குருஜி கோபு

      Delete
  19. காமதேனு வந்த நேரம் பரிசுகள் தேடி வருதே..கங்ராட்ஸ்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீனி வாசன் January 14, 2018 at 6:22 PM

      வாங்கோ, வணக்கம்.

      //காமதேனு வந்த நேரம் பரிசுகள் தேடி வருதே.. கங்ராட்ஸ்//

      ஆம் ... அதே, அதே. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  20. எனக்கும் தான். ஆனால் நான் இன்னும் பார்ஸலைப் பிரிக்க வில்லை.. :))

    அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி January 14, 2018 at 10:18 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //எனக்கும் தான்.//

      மிகவும் சந்தோஷம், ஸார்.

      //ஆனால் நான் இன்னும் பார்ஸலைப் பிரிக்க வில்லை.. :))//

      பார்ஸலைப் பிரிக்கவே நேரமில்லாத முழுநேர எழுத்தாளர் + முனைப்புடன் கூடிய வாசகர் + மதிப்புக்குரிய பதிவர் என பல்வேறு முகங்களுடன் எப்போதும் பிஸியோ பிஸியாக உள்ளீர்கள் என்பதை நினைக்க எனக்கும் மிகவும் பெருமையாகவும், கொஞ்சம் பொறாமையாகவும்கூட உள்ளது. :)

      பிரிக்க அவசியம் ஏற்படும்போது, நேரம் ஒதுக்கி, மெதுவாகப் பிரித்துப்பாருங்கோ. ஒருவேளை தங்களின் தனித் திறமைக்கு ஏற்ப, வேறு ஏதேனும், தங்கள் எழுத்துக்கள் போலவே தரம் வாய்ந்த VERY VALUABLE GIFT ஆக அனுப்பியிருக்கக்கூடும். :))))

      //அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      அன்புடன் கோபு

      Delete
  21. நான் ஜீவி (GV) என்ற எழுத்துக்களுடன் மோதிரம் என்றால் நீங்கள் VG என்ற எழுத்துக்களுடனா?..

    ReplyDelete
    Replies
    1. ஜீவி January 14, 2018 at 10:21 PM

      //நான் ஜீவி (GV) என்ற எழுத்துக்களுடன் மோதிரம் என்றால் நீங்கள் VG என்ற எழுத்துக்களுடனா?..//

      ஆஹா! இதனை எங்கேயோ, நானே என் பதிவு ஒன்றினில் உபயோகித்துள்ள ஞாபகம் வந்து தலையைப் பிய்த்துக்கொண்டு தேடிக்கண்டு பிடித்து விட்டேன்.

      -=-=-=-=-

      இதோ அதற்கான இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

      தலைப்பு:-
      ”ஜீவீ + வீஜீ விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-1 of 4 ]

      -=-=-=-=-

      இந்த GV ஐ திருப்பிப்போட்டால் VG என்ற ஆச்சர்யமான [GV .... VG] இதிலிருந்து எனக்குப் புலப்படுவது என்னவென்றால், ’மிகப் பொடியனாகிய அடியேன், தங்கள் அளவுக்குப் பெயரும், புகழும், பாண்டித்யமும், பிரபலமும், ஆயுளும், ஆரோக்யமும், அதிர்ஷ்டமும் அடைய வேண்டுமென்றால், தலை கீழாக நின்றாலும் அது நடக்கவே நடக்காது’ என்பது மட்டுமே. :)))))

      பிரியத்துடன் கோபு

      Delete
  22. Replies
    1. யுவராணி தமிழரசன் January 14, 2018 at 10:46 PM

      வாங்கோ யுவா! வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      //வாழ்த்துக்கள் சார்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கோபு

      Delete
  23. வலைஞர்கள் சொந்த வேலை பளுவால் சிலகாலம் வலையிலிருந்து தொலைவாக போகலாம்...தொலைந்து போவதில்லை...அதுபோலதான் மற்ற வலைஞர்களின் நினைவிலும் நீங்கள்...'நேரம்'- கிடைக்கும்போது உங்களைத் தொடர்வார்கள்-தொடர்புகொள்வார்கள்...இப்பொழுது இது வாத்தியாரின் "நல்ல-நேரம்" மேலும் பல மின்னூல்கள் வெளியாக இது ஒரு முன்னோடி நேரம்தான். மணிஓசை இல்லா மணிகாட்டி முன்னே ...யானை வரும் பின்னே...அதற்கு வாழ்த்துகள் வாத்யாரே என்றும் அன்புடன். உங்கள் எம்.ஜி.ஆர்...

    ReplyDelete
    Replies
    1. RAVIJI RAVI January 15, 2018 at 1:32 PM

      வாங்கோ என் பேரன்புக்குரிய சின்ன வாத்யாரே! வணக்கம்.

      //வலைஞர்கள் சொந்த வேலை பளுவால் சிலகாலம் வலையிலிருந்து தொலைவாக போகலாம்... தொலைந்து போவதில்லை... அதுபோலதான் மற்ற வலைஞர்களின் நினைவிலும் நீங்கள்... 'நேரம்'- கிடைக்கும்போது உங்களைத் தொடர்வார்கள் - தொடர்புகொள்வார்கள்...//

      ஆஹா, ஏதோவொரு அசரீரி போல இதனைச் சொல்லியுள்ளீர்கள். நான் என் மனக்குறையாகச் சொல்லியுள்ள வயலெட் கலர் பத்திக்குத் தாங்கள் தந்துள்ள பதில், எனக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

      பனி காலத்தில் சளி+கபத்தால் மூச்சுவிடத் திணறிடும் கைக்குழந்தைக்கு அதன் அன்னை, தன் மார்பினில் அதை அணைத்தபடி, தாய்ப்பால் ஊட்டிக்கொண்டே, அன்புடன் அதன் மார்பிலும், முதுகிலும், கழுத்திலும், தன் கைவிரல்களால் கொஞ்சூண்டு விக்ஸ்-வேபரப் எடுத்து இதமாகத் தடவி விடுவாளே .... அதுபோலவே உள்ளது .... தங்களின் இந்த இனிய சொற்களும்.

      எனக்கும் நீங்க நல்லாவே தடவி விட்டுட்டீங்கோ, ஸ்வாமீ. :)

      //இப்பொழுது இது வாத்தியாரின் "நல்ல-நேரம்"//

      ”நல்ல-நேரம்” வாத்யாரின் நல்ல படமாச்சே. புரிந்து கொண்டு சிரித்தேன் ஸ்வாமீ. யானைகளுடன் அந்தப் புன்னகை அரசி, எங்கட கே.ஆர்.விஜயாவும் என் நினைவினில் வந்து போனாள்.

      ‘டிக்-டிக்-டிக்-டிக்-டிக்-டிக் ... இது மனசுக்குத்தாளம்’ ‘டக்-டக்-டக்-டக்-டக்-டக் ... இது உறவுக்குத்தாளம். :)))))

      https://www.youtube.com/watch?v=chmDIp6UJ9Q

      //மேலும் பல மின்னூல்கள் வெளியாக இது ஒரு முன்னோடி நேரம்தான். மணிஓசை இல்லா மணிகாட்டி முன்னே ... யானை வரும் பின்னே...அதற்கு வாழ்த்துகள் வாத்யாரே என்றும் அன்புடன். உங்கள் எம்.ஜி.ஆர்...//

      அந்த ”நல்ல நேரம்” விரைவில் வரட்டும்.

      ’யானை-மணியோசை’ மற்றும்
      ’கெடிகாரம்-மின்னூல்கள்’ ஸ்லேடையும்
      அந்த ‘நல்ல நேரம்’ படத்துடன் ஒத்து வருகின்றன.

      என் பேரன்புக்குரிய, அறிவாளியான உங்களைத் தவிர வேறு யாராலும் இதுபோல ஒப்பிட்டுப் பின்னூட்டம் எழுதவே முடியாது .... வாத்யாரே ! :)))))

      என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் ....
      உங்கள் கோபு

      Delete
  24. வலைஞர்கள் சொந்த வேலை பளுவால் சிலகாலம் வலையிலிருந்து தொலைவாக போகலாம்...தொலைந்து போவதில்லை...அதுபோலதான் மற்ற வலைஞர்களின் நினைவிலும் நீங்கள்...'நேரம்'- கிடைக்கும்போது உங்களைத் தொடர்வார்கள்-தொடர்புகொள்வார்கள்...இப்பொழுது இது வாத்தியாரின் "நல்ல-நேரம்" மேலும் பல மின்னூல்கள் வெளியாக இது ஒரு முன்னோடி நேரம்தான். மணிஓசை இல்லா மணிகாட்டி முன்னே ...யானை வரும் பின்னே...அதற்கு வாழ்த்துகள் வாத்யாரே என்றும் அன்புடன். உங்கள் எம்.ஜி.ஆர்...

    ReplyDelete
  25. கைக்கடிகாரத்தை பொங்கல் பரிசாக அனுப்பி நேரம் பொன்னானது என்பதை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் புஸ்தகா நிறுவனத்தார். நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம் இந்த பரிசு. வாழ்த்துகள் பரிசு பெற்றமைக்கு!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி January 15, 2018 at 4:36 PM

      வாங்கோ ஸார், வணக்கம்.

      //கைக்கடிகாரத்தை பொங்கல் பரிசாக அனுப்பி நேரம் பொன்னானது என்பதை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் புஸ்தகா நிறுவனத்தார். நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம் இந்த பரிசு. வாழ்த்துகள் பரிசு பெற்றமைக்கு!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      பிரியத்துடன் VGK

      Delete
  26. அருமை அய்யா
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வை.கோபாலகிருஷ்ணன்January 16, 2018 at 3:08 PM
      Mathu S January 15, 2018 at 10:24 PM

      //அருமை ஐயா ... வாழ்த்துகள்//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  27. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். கைக்கடிகாரம் பரிசு கிடைத்தமைக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam January 16, 2018 at 5:10 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். கைக்கடிகாரம் பரிசு கிடைத்தமைக்கும் வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
  28. இப்போதுதான் பதிவினைக் கண்டேன். மகிழ்ச்சி. உங்களது எழுத்துப்பணி மென்மேலும் தொடர இது ஓர் ஊக்கமோ?

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University January 20, 2018 at 7:24 PM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //இப்போதுதான் பதிவினைக் கண்டேன். மகிழ்ச்சி. //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //உங்களது எழுத்துப்பணி மென்மேலும் தொடர இது ஓர் ஊக்கமோ?//

      இருக்கலாம். ஊக்கமாகவும் இருக்கலாம். ஒருவேளை இனி எனக்குத் தூக்கமாகவும் இருக்கலாம். :)))))

      அன்புடன் VGK

      Delete
  29. உங்கள் அனுபவமும் முயற்சியும் தோற்கவில்லை..வேலைப்பளுவால் பதிவுலகம் பக்கம் அதிகம் வரமுடியவில்லை..உங்களை நிச்சயம் மறக்கமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. கலியபெருமாள் புதுச்சேரி
      January 21, 2018 at 7:45 PM

      வாங்கோ க.உ.க.பு. அவர்களே! [‘கல்லாதது உலகளவு .. கலியபெருமாள் புதுச்சேரி] வணக்கம்.

      //உங்கள் அனுபவமும் முயற்சியும் தோற்கவில்லை..//

      என் அனுபவம் + முயற்சியால், எப்போதோ நான் ஊன்றிய செடி இப்போது மரமாகி கனி தந்துள்ளது.

      //வேலைப்பளுவால் பதிவுலகம் பக்கம் அதிகம் வரமுடியவில்லை..//

      அதனால் பரவாயில்லை. இது பதிவர்கள் அனைவருக்குமே மிகவும் சகஜம்தான்.

      //உங்களை நிச்சயம் மறக்கமுடியாது.//

      ஆஹா! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
  30. உங்கள் கதைகள் மின்னூல் ஆகி வருவது அறிந்து மகிழ்ச்சி.கைகடிகாரம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு January 28, 2018 at 8:34 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் கதைகள் மின்னூல் ஆகி வருவது அறிந்து மகிழ்ச்சி. கைகடிகாரம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete