About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, December 1, 2018

எழுச்சியுடன் எழுபதை எட்டினேன் !

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.



எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி போன்ற விசேஷ ஹோமங்கள், விசேஷ பூஜைகள் முதலியவற்றை, முறைப்படி வேதவித்துக்கள் மூலமாக பீடாபரிகார சம்ஸ்காரமாக செய்யச்சொல்லி கொண்டாடுவது வழக்கம். 

வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள இவற்றின் முக்கியத்துவம் பற்றியதோர், இனிய மற்றும் நகைச்சுவையான சொற்பொழிவு ஒன்றினை வேதபண்டிதர் பிரும்மஸ்ரீ. நன்னிலம் இராஜகோபால கனபாடிகள் அவர்கள் சமீபத்தில் ஆற்றியுள்ளார்கள்.  அதனை இதோ இந்த இணைப்பினில் அனைவரும் அவஸ்யமாகக் கேட்டு மகிழவும்.





^^ 15.12.2008 கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ’உக்ர ரத சாந்தி’ ஹோமம் (Attaining the age of 60 on Completion of 59 Years)  நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படம். ^^











^^ 05.12.2009 கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ‘சஷ்டியப்த பூர்த்தி’ (Attaining the age of 61 on Completion of 60 years) நடைபெற்ற போது எடுக்கப்பட்ட ஒருசில படங்கள். ^^   Ref:   http://gopu1949.blogspot.com/2011/07/1.html  





சமீபத்தில் 27.11.2018 செவ்வாய்க்கிழமையன்று கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ’பீமரத சாந்தி’ (Attaining the age of 70 on Completion of 69 years) என்ற விழா மிக எளிமையாகவும், சிறப்பாகவும், வைதீக முறைப்படி செய்துகொள்ளப் பட்டது.  அதற்கான ஒரு சில படங்கள் இதோ:





























மேலே காட்டியுள்ள புகைப்படங்கள் எல்லாமே, ஒருசில நண்பர்களும் உறவினர்களும் தங்களின் மொபைல் போன் மூலம் எடுத்துள்ளவைகளாகும். Professional Video / Photographer களால் எடுக்கப்பட்டுள்ளவை இனிமேல் தான் தாமதமாக வரக்கூடும்.  

திடீர் ஏற்பாடுகளால் நம் பதிவுலக நட்புக்களில் யாரையும் என்னால், இந்த விழாவுக்கு நேரில் வருகை தருமாறு அழைக்க இயலவில்லை. இந்த விழாவுக்கு அடியேன் அழைப்பிதழ்கூட எதுவும் அச்சடிக்கவில்லை. 

வைதீக ஜப, ஹோம, பூஜை கார்யங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, சிம்பிளாகவும், சிறப்பாகவும்  செய்துகொண்டோம். உள்ளூரிலேயே உள்ள மிக நெருங்கிய சொந்தங்களில் சிலரை மட்டும், தொலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் அழைத்திருந்தோம். வேத பண்டிதர்கள் உள்பட சுமார் 100 நபர்கள் வரை கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.



 

^^27.11.2018 காலை சிற்றுண்டி விருந்து^^
ஸ்வீட்: பைனாப்பிள் ஃபுட்டிங், 
இட்லி, வெண்பொங்கல், ரவாதோசை, மெதுவடை, 
கொத்ஸு, மிளகாய்ப்பொடி, தேங்காய் சட்னி 
காஃபி


One More
H A P P Y     N E W S


 


’Happy’ என்ற பெயரில், என்னை பிரியத்துடன் ’பெரீப்பா’ என்று மிகச் செல்லமாக அழைத்து, அவ்வப்போது என் பதிவுகளுக்குப் பின்னூட்டமிடும் ‘ஹாப்பி’ பதிவர், செளபாக்யவதி. காயத்ரி என்ற பெண்ணுக்கு இதே நாளில் (27.11.2018) திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஓர் குக்கிராமத்தில் எளிமையாகவும், மிகச் சிறப்பாகவும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அவளும் நானும் பிறந்த ஆங்கிலத் தேதி: 8th  DECEMBER ஆகும். என்னே எங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமை பாருங்கோ!! :))))))))  புதுமணப்பெண்ணாக 27.11.2018 அன்று எங்களைப்போலவே மனையில் அமர்ந்த HAPPY காயத்ரி தன் இல்வாழ்க்கையில் மிகவும் HAPPY யாக இருக்க வேண்டி பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறேன். 

 

 


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

150 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் கோபு அண்ணா ..மிகவும் பிசியாக இருக்கிறதால விரிவா பின்னூட்டமிட அப்புறமா வரேன் .

    ஹாப்பிக்கும் :) இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது அலாப்பி ஆட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)... கோபு அண்ணன் தான் ஏதோ மாபியா பண்ணிக் கொமெண்ட்டை மாத்துறார்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

      Delete
    2. https://goo.gl/images/NYQsQH

      ஆஹா.... பக்ஷணங்கள் சாப்பிட வந்த பூனை, ஆசையாக பக்ஷணங்கள் வைத்திருந்த அட்டைப்பெட்டிக்குள் தொப்பென்று குதித்து, அதில் ஒன்றுமில்லை, காலிப்பெட்டிதான் எனத் தெரிந்ததும், பெட்டியின் பக்க மூடி அட்டைகளை கடுப்புடன் ஆட்டி ஆட்டி தன் கோபத்தை வெளிக் காட்டுகிறதே. பொருத்தமான படம் சூப்பர் !

      Delete
    3. ஞானி:) அதிரா December 2, 2018 at 1:45 AM

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது அலாப்பி ஆட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)... கோபு அண்ணன் தான் ஏதோ மாபியா பண்ணிக் கொமெண்ட்டை மாத்துறார்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️//

      எங்கட அதிரா FIRST ஆக வரமுடியாமல் போய் விட்டதே என்ற வருத்தத்தில் நான் இருக்கும்போது, இப்படி நீங்களும் என் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி’ விட்டீர்களே ! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேறு இலவச இணைப்பாக!!

      Delete
    4. Angel December 1, 2018 at 11:57 PM

      வாங்கோ அஞ்சு, வணக்கம்.

      //மனமார்ந்த வாழ்த்துக்கள் கோபு அண்ணா ..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //மிகவும் பிசியாக இருக்கிறதால விரிவா பின்னூட்டமிட அப்புறமா வரேன்.//

      டிஸம்பர் பிறந்தாலே நீங்க பிஸியாகி விடுவீர்கள். தெரியும். தங்களின் நாளைய பிறந்த நாளுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      //ஹாப்பிக்கும் :) இனிய வாழ்த்துக்கள்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. வெரி வெரி ‘ஹாப்பி’ :)

      Delete
  2. மீஈஈஈஈஈ தான்ன்ன்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊ பூஸோ கொக்கோ.... வருகிறேன்ன்ன்ன். சத்துப் பொறுங்கோ...

    ReplyDelete
    Replies
    1. எப்போதுமே நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ (அஞ்சுவுக்குப் பிறகு).

      பொறுத்திருக்கிறேன் .... பொங்கி வாருங்கள்.

      பூஸோ கொக்கோ அல்லது பூனையோ அல்லது யானையோ என, நீதிமானான நம் நெல்லைத்தமிழன் ஸ்வாமியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு விடுவோம். :)

      Delete
  3. மிக அருமையான விழா, அழகிய படங்கள், இன்னும் பல பல வருடங்கள் விழாக்காணவும் நலமோடும் மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா .... அருமையான வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
  4. ஏன் கோபு அண்ணன் ஆண்களுக்கு மட்டும்தான் இப்படி விழாக்களோ? பெண்களுக்குக் கிடையாதோ?..

    ReplyDelete
    Replies
    1. ஞானி:) அதிரா December 2, 2018 at 12:58 AM

      //ஏன் கோபு அண்ணன் ஆண்களுக்கு மட்டும்தான் இப்படி விழாக்களோ? பெண்களுக்குக் கிடையாதோ?..//

      கணவன் மனைவி என்று ஜோடியானபின் ஆணாவது பெண்ணாவது. இருவரும் ஒருவரே. அவர்களைப் பிரித்து பேசக்கூடாது.

      பொதுவாக வீட்டினுள் அவளுக்குள் அவன் அடக்கம் என்பது உலகறிந்ததோர் மாபெரும் உண்மையாகும்.

      ஆனால் வெளியுலகுக்கு மட்டும், அவனுக்குள் தான் அடக்கம் என்பதுபோல, மிக அடக்கமாக இந்தப் பெண்கள் நன்றாகவே நடிப்பார்கள். :)))))

      சாக்ஷாத் பரம்பொருளான பரமசிவனே தன் உடம்பினில் பாதியை தேவிக்கு அளித்து, அர்தனாரீஸ்வரராகக் காட்சியளித்து மகிழ்கிறார். அதுபோக தன் தலைமுடியில் கங்காதேவியை ஓளித்து வைத்துள்ளார்.

      மஹாவிஷ்ணுவோ தன் வக்ஷஸ்தலத்தில் (மார்பினில்) மஹாலக்ஷ்மியை வைத்துக்கொண்டு, சதா சர்வகாலமும் படுத்தபடி, அனந்த சயனப் பெருமாளாகக் காட்சியளித்து மகிழ்ந்துகொண்டு இருக்கிறார்.

      நம்மையெல்லாம் படைத்த ப்ரும்மதேவன் தன் தேவியான சரஸ்வதியை தன் நாபியில் (தொப்புள்) வெண் தாமரையை வளரச்செய்து, அதில் அமர வைத்து, எப்போதும் அவளைக் கண்டு மகிழ்ந்து வருகிறார்.

      மும்மூர்த்திகளுமே இப்படி ஒரே கிக் ஆக இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்!

      பெண்கள் ஆண்களைப்போல தங்கள் வயதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாததால், இதுபோன்ற விழாக்கள் எடுத்துக் கொண்டாடுவது இல்லை என்பது எனது அபிப்ராயமாகும்.

      எப்போதுமே ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ என்ற நினைப்பு .... இந்தப் பெண்களுக்கு, நம் அதிரடி அதிரா போலவே. :)))))

      Delete
  5. திருமணவிழாக்கண்ட சகோதரி காயத்ரிக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் செல்லக்குட்டி + சிரித்தமுகச் சிங்காரி + கொ.எ.கு. ’ஹாப்பி’ சார்பாக தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  6. இம்முறை உணவுப் பண்டங்களைப் படமெடுத்துப் போடாமல் விட்டிட்டீங்களே:)...

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை Professional Video/photographer பந்தி நடக்கும் போது Coverage செய்திருக்கலாம். காலை Breakfast நடை பெற்றபோது யாரோ மொபைலில் ஓரிரு போட்டோக்கள் எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார்கள். முடிந்தால் அவற்றைத்தேடி இந்தப்பதிவினில் இணைக்க முயற்சிக்கிறேன்.

      ஒவ்வொரு வேளையும் பந்தியில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் என்னென்ன என. என்னிடம் லிஸ்ட் உள்ளது. அதை வேண்டுமானால் வெளியிட முயற்சிக்கிறேன். :)

      Delete
    2. Breakfast Time - Some of the Photos are now added in the Post.

      Menu:-

      ஸ்வீட்: பைனாப்பிள் ஃபுட்டிங், இட்லி, ரவாதோசை, வெண்பொங்கல், மெதுவடை.

      தொட்டுக்கொள்ள: மிளகாய்ப்பொடி, கொத்ஸு + தேங்காய் சட்னி

      ஜீரணமாக: Strong & Hot Coffee :)

      Delete
    3. ரவா தோசைலாம் இப்போ காலை உணவுக்கு போட ஆரம்பிச்சுட்டாங்களா?

      அது என்ன பைனாப்பிள் புட்டிங்? கேசரியை அப்படிச் சொல்றீங்களா?

      மிளகாய்பொடியும் போட்டாங்களா? நல்ல மெனுன்னு தெரிஞ்சும் யாருக்கும் தெரிவிக்காத உங்க நல்ல எண்ணத்தை (கஞ்சத்தனத்தைப்) பாராட்டறேன். ஹா ஹா ஹா.

      Delete
  7. ///
    திடீர் ஏற்பாடுகளால் நம் பதிவுலக நட்புக்களில் யாரையும் என்னால், இந்த விழாவுக்கு நேரில் வருகை தருமாறு அழைக்க இயலவில்லை///
    ம்ஹூம்ம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்... இதை நாங்க நம்புவோம்ம்ம்ம்ம்?:)..

    ReplyDelete
    Replies
    1. நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயணா !

      தயவுசெய்து நம்புங்கோ ....... நாராயணா !

      Delete
    2. அதிரா.. தைரியமா உண்மையைச் சொல்லிட்டீங்க.

      69ம் வயது முடிந்து 70வது வயது ஆரம்பமாவது ரகசியமா திடீரென்று திட்டமிடாமல் வந்துவிட்டது என்று சொல்கிறார். நாங்களும் நம்புகிறோம்.

      Delete
  8. அந்த தலையில் அணிந்த பூங் கிரீடம் எங்கே?.... வச்சிருக்கிறீங்களோ பத்திரமாக?...

    ReplyDelete
    Replies
    1. //அந்த தலையில் அணிந்த பூங் கிரீடம் எங்கே?.... வச்சிருக்கிறீங்களோ பத்திரமாக?...//

      சுமார் ஒன்பது ஆண்டுகள் ஆச்சு. அதை எப்படி பத்திரப் படுத்த முடியும்? பூக்கள் வாடும் வரை ஒன்பது மணி நேரங்கள் எல்லோரும் தங்கள் தங்கள் தலையில் வைத்து அழகு பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.

      பிறகு பூக்கள் வாடி உதிர ஆரம்பித்ததும் என் பேரன் பேத்தி அவற்றை வைத்துக்கொண்டு Football விளையாடினார்கள். அப்புறம் அவை என்ன ஆச்சோ? நினைவில்லை. :))))

      Delete
  9. அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்.எனத் தொடரும் ஔவையின் பாடல் நினைவுக்கு வந்து போனது.இதோ போல் நூறாம் ஆண்டுப் பதிவையும் பதிந்திட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      தங்களின் பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  10. மிக்க மகிழ்ச்சி. 70 வயதை அடைவது ஒரு வகையில் சாதனைதான். நீங்கள் 100 வயது வரை வாழ்ந்து கனகாபிஷேகம் செய்து கொள்ள வாழ்த்துகிறேன.

    ReplyDelete
    Replies
    1. கந்தசாமி சார்.... நானும் நீங்கள் அடுத்த இடுகை எப்போ போடுவீர்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

      நலம்தானே சார்...

      Delete
    2. ப.கந்தசாமி December 2, 2018 at 5:28 AM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //மிக்க மகிழ்ச்சி. 70 வயதை அடைவது ஒரு வகையில் சாதனைதான். நீங்கள் 100 வயது வரை வாழ்ந்து கனகாபிஷேகம் செய்து கொள்ள வாழ்த்துகிறேன.//

      ஆஹா.... பெரியவரும் என் நலம் விரும்பியுமான தங்களின் வாழ்த்துகள், உறங்கிக்கொண்டிருக்கும் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. மிகவும் சந்தோஷம் + நன்றிகள், ஸார்.

      Delete
  11. நமஸ்காரங்கள்.

    உங்கள் எழுபதாவது பிறந்த நாளுக்கு (அட்வான்ஸ்) வாழ்த்துகள். படங்கள் பிரமாதம். பார்த்தால் வீட்டிலேயே செய்தது போலவும் தோன்றுகிறதே...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். December 2, 2018 at 5:34 AM

      வாங்கோ .. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //நமஸ்காரங்கள்.// அநேக ஆசீர்வாதங்கள்.

      //உங்கள் எழுபதாவது பிறந்த நாளுக்கு (அட்வான்ஸ்) வாழ்த்துகள். படங்கள் பிரமாதம்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //பார்த்தால் வீட்டிலேயே செய்தது போலவும் தோன்றுகிறதே...//

      59 to 60 உக்ரரத சாந்தி மட்டும் வீட்டிலேயே நடந்தது.

      60 to 61 ’அன்னதான சமாஜம்’ என்ற திருமண மண்டபத்தில் நடந்தது.

      இப்போது 69 to 70 ‘ஸ்ருதி ஸ்ரீ’ ஹால் என்ற மினி மேரேஜ் ஹால் மண்டபத்தில் நடந்தது.

      Delete
  12. நமஸ்காரம்
    congratulations

    ReplyDelete
    Replies
    1. Durai A December 2, 2018 at 6:19 AM

      //நமஸ்காரம்
      congratulations//

      வாங்கோ, வணக்கம்.

      ஆசீர்வாதங்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  13. வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    ReplyDelete
    Replies
    1. ராமலக்ஷ்மி December 2, 2018 at 7:27 AM

      //வாழ்த்துகளும் வணக்கங்களும்.//

      வாங்கோ, வணக்கம்.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    என் வணக்கங்கள்.
    படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
    குடும்பபடம் அருமை.
    இறைவன் அருளால் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்.
    சாரும் உங்களுக்கு தன் வாழ்த்துக்களை சொல்ல சொன்னார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு December 2, 2018 at 8:03 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் வணக்கங்கள்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
      குடும்பபடம் அருமை.//

      அப்படியா! சந்தோஷம். இந்தப்படங்களில் பலவும், பலரால் தங்கள் மொபைல் போனில் எடுக்கப்பட்டவைகளாகும். புகைப்பட மற்றும் காணொளி நிபுணர்களால் பிரத்யேகமாக எடுக்கப்பட்டவை இனிமேல்தான் சற்று தாமதமாகக் கிடைக்கக்கூடும்.

      //இறைவன் அருளால் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்.//

      ஆஹா..... இதெல்லாம் நம் கையில் இல்லையே. ஈஸ்வர சங்கல்ப்பம் எப்படியோ ! எனினும் என் நலம் விரும்பியான தங்கள் பிரார்த்தனைக்கு என் நன்றிகள்.

      //சாரும் உங்களுக்கு தன் வாழ்த்துக்களை சொல்ல சொன்னார்கள்.//

      மிகவும் சந்தோஷம். ஆர்டிஸ்ட் அரசு சாருக்கும் என் அன்பு நன்றிகளைச் சொல்லவும்.

      Delete
  15. செளபாக்யவதி. காயத்ரிக்கும் வாழ்த்துக்கள்.மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு December 2, 2018 at 8:06 AM

      //செளபாக்யவதி. காயத்ரிக்கும் வாழ்த்துக்கள். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தாயில்லாக் குழந்தை அவள். சொந்தத்தாய் மாமாவைத் தான் கல்யாணம் செய்துகொண்டு இருக்கிறாள்.

      புதுசாக் கல்யாணம் ஆகி முதன் முதலாக, ரயிலில் நீண்ட நேரப் பயணம் மேற்கொண்டு, ஏ.ஸி.கோச், தனி கூபேயில், தன் கணவருடன், திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று இருக்கிறாள். இனி அங்குதான் அவருடன் தனிக்குடுத்தனம் இருப்பாள். மிகவும் நல்ல பொண்ணு. கெட்டிக்காரி. துடுக்கானவள். சமத்தோ சமத்து.

      அவளுக்கான தங்களின் அன்பான வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  16. மிக்க மகிழ்ச்சி. உங்களைச் சேவித்துக் கொள்கிறோம்.

    இடுகை உங்கள் பாணியில் விவரமாக வரவில்லையே... படங்களின் கீழ் யார் யார் என்று எழுதவில்லை. ஆனாலும் உங்கள் இடுகைகளைப் படித்திருக்கிறதால் ஓரளவு எல்லோரும் தெரிந்த முகங்களாகவே இருக்கின்றனர்.

    பிறகு வந்து எழுதறேன்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் December 2, 2018 at 8:06 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //மிக்க மகிழ்ச்சி. உங்களைச் சேவித்துக் கொள்கிறோம்.//

      ஆஹா, பெருமாளைத்தான் நாம் சேவித்துக்கொள்வோம். பெருமாளே ..... இவ்வாறு சொன்னால் எப்படி? எனினும் எங்களின் நல்லாசிகள் தங்களுக்கு எப்போதுமே உண்டு.

      //இடுகை உங்கள் பாணியில் விவரமாக வரவில்லையே...//

      ஆமாம். ஏதோவொரு அவசர அடியில் வெளியிட்டுள்ளேன். அதுதான் வயதாகிவிட்டது என்று என் இந்தப்பதிவிலேயே சொல்லியுள்ளேன் அல்லவா ! :)

      //படங்களின் கீழ் யார் யார் என்று எழுதவில்லை.//

      எழுதலாமா என்றுதான் நினைத்தேன். பிறகு உம்மைத் தவிர இதில் யாரும் ஆர்வம் காட்டமாட்டார்களே என்ற முடிவுக்கு வந்து அப்படியே ஏதோ தூக்கக்கலக்கத்தில் வெளியிட்டு விட்டேன். தேவைப்பட்டால் EDIT செய்து எழுதிவிடலாம். அது ஒன்றும் பெரிய பிரச்சனையே இல்லை.

      //ஆனாலும் உங்கள் இடுகைகளைப் படித்திருக்கிறதால் ஓரளவு எல்லோரும் தெரிந்த முகங்களாகவே இருக்கின்றனர்.//

      உமக்குத் தெரியாத நபர் எங்கள் குடும்பத்தில் யாருமே கிடையாதே ..... ஸ்வாமீ.

      //பிறகு வந்து எழுதறேன்.//

      இப்போ ‘இளநீர் பிட்டு/புட்டு/களி’ போடப்போகணுமோ. ஓக்கே ..... பிறகு மீண்டும் தங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.

      ’காத்திருப்பேன்.... காத்திருப்பேன்.... காலமெல்லாம் காத்திருப்பேன்....’

      Delete
  17. எங்க உடனே இடுகை வெளியிட்டால் ஏன் முன்னமே சொல்லலை, வந்து வாழ்த்தைப் பெற்றுக்கொள்ளலாமான்னு கேட்பார்களோன்னு பயந்து ஆற அமர இடுகை போடறீங்களா?

    கர்ர,ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் December 2, 2018 at 8:09 AM

      //எங்க உடனே இடுகை வெளியிட்டால் ஏன் முன்னமே சொல்லலை, வந்து வாழ்த்தைப் பெற்றுக்கொள்ளலாமான்னு கேட்பார்களோன்னு பயந்து ஆற அமர இடுகை போடறீங்களா?//

      இல்லை. இல்லை. அப்படியெல்லாம் இல்லை. நான் அழைத்திருந்தால் பலரும் (ப்ளேனில்) பறந்தோடி வந்திருப்பார்கள்தான். எதற்கு எல்லோரையும் சிரமப்படுத்தணும் என்ற நல்ல நோக்கத்தில்தான் யாரையும் அடியேன் அழைக்கவில்லை. மேலும் இந்த விழா எடுக்க முடிவு எடுத்ததில் பல்வேறு காரணங்களால் மிகவும் தாமதமாகி, எதற்கும் (பத்திரிகை அச்சடிக்கக்கூட) நேரமில்லாமல் போய்விட்டது. என்னைப் பார்க்க ஆசையாக புறப்பட்டு வருவோர் கஜா புயலில் + மழையில் மாட்டக் கூடாது என்ற அக்கறையுடன் கூடிய கவலையும் எனக்கு இருந்தது.

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

      இது என்ன, இந்த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்-ஐ அதிராவிடமிருந்து சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஸ்வீகரித்துக்கொண்டு விட்டீர்கள். அதிராவுக்கு ராயல்டி கொடுக்க வேண்டியிருக்குமே ஸ்வாமீ. :)))))

      Delete
  18. வாழ்த்துகள் ஆங்கிலபிறந்த நாள் டிசம்பர் 8 ம் நாள் நினைவில் கொள்வேன் மீண்டும் வாழ்த்த

    ReplyDelete
    Replies
    1. G.M Balasubramaniam December 2, 2018 at 8:17 AM

      வாங்கோ, ஐயா .... நமஸ்காரங்கள்

      //வாழ்த்துகள் ஆங்கிலபிறந்த நாள் டிசம்பர் 8 ம் நாள் நினைவில் கொள்வேன் மீண்டும் வாழ்த்த//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா.

      Delete
  19. அன்பின் அண்ணா..

    இந்த வேளையில் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்...

    இன்னும் சிறப்பாக
    ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்ய பாக்யங்கள் அனைத்தும் விளைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ December 2, 2018 at 9:22 AM

      //அன்பின் அண்ணா..//

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //இந்த வேளையில் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்...

      இன்னும் சிறப்பாக ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்ய பாக்யங்கள் அனைத்தும் விளைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்...//

      மிக்க மகிழ்ச்சி. தங்கள் பிரார்த்தனைகளுக்கு என் நன்றிகள்.

      Delete
  20. Gopu Ji! Good morning Ji!

    70-ஆவது பிறந்தநாள் (நட்சத்திர) இனிய வாழ்த்துக்கள். பல்லாண்டு ஆரோக்யத்துடன் வாழ உங்களுக்கும் உங்களது துணைவியாருக்கும் இறையருள் கிடைக்கட்டும். படங்கள் நன்று.

    அது சரி, அழகான நங்கையின் படம்போட்டு அதன்மேலே இகாவ என்று கொட்டை கொட்டையாக எழுதிப் படத்தை மறைக்க நினைத்தால் என்ன அர்த்தம்!?

    பின்னாடி பூட்டு தொங்குதே.. பட்சணக்கூடையைத் தேடிக்கொண்டு ஞானி அ. வரக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கையோ!

    ReplyDelete
    Replies
    1. ஏகாந்தன் Aekaanthan ! December 2, 2018 at 9:46 AM

      //Gopu Ji! Good morning Ji! //

      வாங்கோ வணக்கம். என் பதிவுப்பக்கம், இது தங்களின் முதல் வருகையாக இருக்குமோ என்னவோ? மிக்க மகிழ்ச்சி.

      //70-ஆவது பிறந்தநாள் (நட்சத்திர) இனிய வாழ்த்துக்கள். பல்லாண்டு ஆரோக்யத்துடன் வாழ உங்களுக்கும் உங்களது துணைவியாருக்கும் இறையருள் கிடைக்கட்டும். படங்கள் நன்று.//

      மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //அது சரி, அழகான நங்கையின் படம்போட்டு அதன்மேலே இகாவ என்று கொட்டை கொட்டையாக எழுதிப் படத்தை மறைக்க நினைத்தால் என்ன அர்த்தம்!?//

      ஆமாம். தாங்கள் சொல்வது மிகவும் சரியே. ‘இனிய காலை வணக்கம்’ என்ற கொட்டை எழுத்துக்களால், அந்த அழகியின் இடுப்பின் மடிப்பு + வலது கை ரவிக்கை முதலியன சரிவரத் தெரியாதபடிக்கு படம் மறைக்கப்பட்டுள்ளதில், தங்களைப்போலவே எனக்கும் அர்த்தமில்லாமல் மிகவும் கோபம் கோபமாகத்தான் வருகிறது. :(

      என்னிடம் அதிகப்பிரியமுள்ள பதிவுலகத் தோழி ஒருத்தி தற்சமயம் மும்பையில் இருக்கிறாள். அவளும் இவளைப்போலத்தான் மிக அழகாக, ’நன்கு பழுத்த முரட்டு முழு வெள்ளரிப்பழம்’ போலவே இருக்கக்கூடும் என நான் எனக்குள் கற்பனை செய்து வைத்துள்ளேன். :)

      இருப்பினும் அந்த அவளை (மும்பைக்காரியை) நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. போட்டோ படங்களில் மட்டுமே பார்த்து சொக்கிப்போய் வியந்து மகிழ்ந்துள்ளேன்.

      அவளை சமீபத்தில் நேரில் சந்தித்துள்ள வேறு ஒருத்தி (கொழுப்பெடுத்த குந்தாணி) என்னிடம், “அவளை இவளுடன் மட்டுமல்ல .... வேறு யாருடனுமே நீங்கள் ஒப்பிட்டுக் கூற முடியாது. அந்த ’உங்காளு’ உலகிலேயே மிகப்பெரிய பேரழகியாகும்” என்று சொல்லி என்னை மேலும் நன்கு உசிபேத்தியும் விட்டு இருக்கிறாள்.

      //பின்னாடி பூட்டு தொங்குதே.. பட்சணக்கூடையைத் தேடிக்கொண்டு ஞானி அ. வரக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கையோ!//

      பக்ஷணக்கூடைகளைத் தேடி பூனை ஏற்கனவே பலமுறை சுத்திச் சுத்தி இங்கு வந்திடுச்சு. பக்ஷணங்களை ஒரு தனி அறையிலும், பூனையாரை வேறு ஒரு தனி அறையிலும் வைத்து, மிகப்பெரிய நெளதால் பூட்டாகப் போட்டு பூட்டிவிட்டேன் ..... வண்ணக் கோலமிடும் அழகிய மயிலை நிம்மதியாக, கண்குளிர ரஸிக்க வேண்டும் அல்லவா!

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அன்புடன் கோபு

      Delete
  21. படங்களும் பகிர்வும் அமர்க்களமா இருக்கு.. வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் December 2, 2018 at 10:27 AM

      வாம்மா ..... மை டியர் ராஜாத்தி, வணக்கம்.

      //படங்களும் பகிர்வும் அமர்க்களமா இருக்கு.. வாழ்த்துகள்...//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நம் பதிவுலக நெருங்கிய நட்புக்களிலேயே, நீ ஒருத்திதான் கட்டாயம், இந்த விழாவுக்கு வருகை தருவாய் என நான் மிகவும் எதிர்பார்த்தேன்.

      உனக்கு V.V.I.P. வரவேற்புக் கொடுப்பதாகவும் இருந்தேன். உனக்குப் பொன்னாடை போர்த்தவும், 2015-இல் நடைபெற்ற 100% பின்னூட்டமிடும் போட்டியில் வெற்றியாளராக தேர்வான [(1) https://gopu1949.blogspot.com/2015/12/3.html (2) https://gopu1949.blogspot.com/2015/12/100-2015.html] உனக்காகவே பிரத்யேகமாக என்றோ அலங்கரித்து வைக்கப்பட்ட பரிசுத்தொகையை விநியோகித்து விடவும், மேலும் சில அன்பான கிஃப்ட் பொருட்கள் வழங்கவும், என் கையால் வரையப்பட்ட ஆஞ்சநேயர் கலர் ப்ரிண்ட் + நான் வெளியிட்ட, என் கையொப்பத்துடன் கூடிய, உன் பெயர் எழுதிய, சிறுகதை தொகுப்பு நூல் அளிக்கவும், என பல்வேறு சரக்குகளை ஒரு தனி பாக்ஸில் போட்டு, திருமண மண்டபத்துக்கு ஆசை ஆசையாக எடுத்துச் சென்றிருந்தேன். போட்டோ + வீடியோகிராபர்களிடமும் உன் வருகை, உனக்கு மரியாதை செய்தல் போன்றவற்றை நன்கு கவரேஜ் செய்ய வேண்டும் எனச் சொல்லியும் வைத்திருந்தேன்.

      உன்னை என் குடும்பத்தார்களுக்கும், என் குடும்பத்தார்களுக்கு உன்னையும் அறிமுகம் செய்துவைக்கவும் நினைத்திருந்தேன்.

      என் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும், வழக்கம்போல் இந்த முறையும் நம்மிடையே நிகழ்ந்துவிட்டது. நினைக்க நினைக்க உன் மீது எனக்குக் கோபம் கோபமாக வருகிறது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

      பரவாயில்லை. உனக்கு அங்கு என்ன பிரச்சனைகளோ .... பாவம். ப்ராப்தம் (சாரு) இருந்தால் பிறகு வேறொரு நாள் நாம் சந்திப்போம்.

      பிரியமுள்ள க்ருஷ்

      Delete
  22. /////திருமணவிழாக்கண்ட சகோதரி காயத்ரிக்கும் இனிய வாழ்த்துக்கள்.////

    அதிரா மேடம் உங்கள் ஹாப்பியான. ஸ்பெஷல் வாழ்த்துக்கு நன்றிகள்......


    பெரிப்பா பெரிமா நமஸ் காரம்..என்நைப்பற்றியும் இங்க சொல்லியாச்சா..சந்தோஷமாதான் இருக்கு

    உங்காத்து போட்டோலாம் எவ்வளவு ஸூப்பரா வந்திருக்கு...

    என்னோட. ஸ்டார் பர்த்டே ரயில்ல கொண்டாடினோம்...))))))))))


    இப்படி அடிக்கடி பதிவு போடுங்கோ..படங்களும் பகிர்வும் அட்டகஆசமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. happy December 2, 2018 at 10:37 AM

      வாம்மா ..... ஹாப்பி. செளக்யமா, சந்தோஷமாக இருக்கிறாயா! எங்கட செல்வி: ஹாப்பி, திருமதி: ஹாப்பி ஆனபிறகு எழுதும் முதல் பின்னூட்டமான இதனைப் பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      //பெரிப்பா பெரிமா நமஸ்காரம்..//

      அநேக ஆசீர்வாதங்கள்.

      //என்னைப்பற்றியும் இங்க சொல்லியாச்சா.. சந்தோஷமாதான் இருக்கு//

      27.11.2018 அன்று நம் இருவருக்குமே நடந்துள்ள சுபநிகழ்ச்சிகள் ஆச்சே. என்னால் உன்னைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? உனக்குக் கல்யாணம் ஆனது நம்ம சர்க்கிள் (முன்னா பார்க்) தோழிகளுக்குத் தெரிய வேண்டாமா? :)))))

      //உங்காத்து போட்டோலாம் எவ்வளவு ஸூப்பரா வந்திருக்கு...//

      உன்னுடையதும் இதைவிட ஸுப்பராகத்தான் வந்திருக்குது.

      //என்னோட ஸ்டார் பர்த்டே ரயில்ல கொண்டாடினோம்...))))))))))//

      ’கார்த்திகை .. பூரம்’ ஆச்சே என 01.12.2018 சனிக்கிழமையன்று உன்னையும், உன் நீண்ட ரயில் பயணத்தையும் (புத்தம் புதிய வாழ்க்கைப் பயணத்தையும்) எனக்குள் நினைத்துக்கொண்டேன். ஏ.ஸி. கோச் கூபே நன்னா வசதியாக இருந்ததா? :)))))

      //இப்படி அடிக்கடி பதிவு போடுங்கோ.. படங்களும் பகிர்வும் அட்டகாசமா இருக்கு//

      உன்னுடைய கல்யாண போட்டோக்களையும் இந்தப்பதிவினில் நான் போட்டிருந்தால், படங்களும், பகிர்வும் மேலும் அட்டகாசமாக, மிகவும் இளமையாக, படா ஜோராக, ஜகத்ஜோதியாக இருந்திருக்கும். நீ ஏனோ அதனை விரும்பவில்லை. நானும் சரி, நீ ஏதோவொரு காரணமாகத்தான் சொல்கிறாய் என்று விட்டுவிட்டேன்.

      Delete
  23. அதென்ன. என் போட்டோ பாத்து பெரிமா மட்டும்தான் சந்தோஷ பட்டாளா.. பெரிப்பாக்கு சந்தஓடஷம் இல்லயா
    ..

    ReplyDelete
    Replies
    1. happy December 2, 2018 at 10:39 AM

      //அதென்ன. என் போட்டோ பாத்து பெரிமா மட்டும்தான் சந்தோஷ பட்டாளா.. பெரிப்பாக்கு சந்தோஷம் இல்லயா//

      பெரிப்பாவுக்கும் பரம சந்தோஷம்தான். பெரிப்பா உன் கல்யாண போட்டோக்களைக் கேட்டதும், நீ உடனடியாக அனுப்பாமல், ஏதோ சாக்கு போக்கு சொல்லி பிகு செய்து கொண்டாய். பெரிம்மா கேட்டதும் உடனடியாக அனுப்பி வைத்தாய். அதனால் பெரிம்மாவின் சந்தோஷம் மட்டும் உனக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

      எங்கள் செல்லக்குழந்தை ‘ஹாப்பி’க்கு கல்யாணம் ஆனதில் எங்கள் இருவருக்குமே அளவிடமுடியாத அளவுக்கு மகிழ்ச்சியே. :)))))))

      போகவர கார் வைத்துக்கொண்டு, நம்மாத்து முறுக்கு, லாடு, அதிரஸம், பருப்புத்தேங்காய் முதலிய பக்ஷணங்களுடன், கல்யாணப்பெண்ணை நேரில் சந்தித்து, வாழ்த்திவிட்டு வரலாமா என்றும் யோசித்தோம். அதற்குள் நீ, தனிக்குடுத்தனம் செய்ய மும்பைக்குக் கிளம்பிப் போய் விட்டாய். உன் அவசரம் உனக்கு. :)))))

      Delete
  24. 60____ வயசு கல்யாணத்துல மலர் கிரீடம்லாம் வச்சுண்டிருக்கேளே.. நம்மள்ள இப்படில்லாம் உண்டா

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்க நினைத்ததை நீங்க தைரியமாக் கேட்டுட்டீங்க.

      Delete
    2. happy December 2, 2018 at 10:41 AM

      //60____ வயசு கல்யாணத்துல மலர் கிரீடம்லாம் வச்சுண்டிருக்கேளே.. நம்மள்ள இப்படில்லாம் உண்டா//

      மலர் மாலை போட்டுக்கொள்கிறோம் அல்லவா ! அதுபோல மலர்களால் செய்யப்பட்ட கிரீடம். வழக்கம் என்பது ஒன்றும் இல்லை. நாமாக நம் வாரிசுகளின் விருப்பப்படி எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். நாளடைவில் அதுவே ஓர் வழக்கமாக வந்துவிடும்.

      அப்போது எங்கள் தெருவில் ‘புவனா’ என்ற ஓர் பூக்காரி இருந்தாள். அவள்தான் எங்கள் தலைகளை அளவு எடுத்துக்கொண்டு, உள்ளே மூங்கில் குச்சிகளைக் கொடுத்து அழகாகச் செய்துகொடுத்தாள். அப்படியும் என் தலையில் அழுத்தமாகப் பொருந்தாமல் மிதந்து மிதந்து கீழே விழுந்திடும் போல இருந்தது. சுற்றளவு இன்னும் கொஞ்சம் பெரிதாகச் செய்திருக்கணும்.

      இவை எல்லாமே ஒருவித ஜாலிக்கு அலம்பலாகவும் புதுமையாகவும் செய்வது மட்டும்தான்.

      இந்தமுறை அந்த பூக்காரி புவனா இங்கு எங்கள் தெருவில் இல்லாததால், ‘ராம்ராஜ்’ என்ற துணிக்கடையில், வெள்ளைக்கலரில் ’மஹாராஜா டர்பன்’ ஒன்று ரெடிமேடாக வாங்கி வந்துவிட்டார் எங்கள் சின்னப்பிள்ளை. ஜோடியாக வைக்க மஹாராணிக்குக் கிடைக்கவில்லையாம்.:(

      Delete
  25. இந்த கமெண்ட்லாம் ரயில்ல வச்சுதான் டைப் பண்றேன்...

    ஆமா அதிரா வங்க. சொன்னது போலல சாப்பாட்டு மெனு ஐட்டம் வரலியே

    ReplyDelete
    Replies
    1. happy December 2, 2018 at 10:48 AM

      //இந்த கமெண்ட்லாம் ரயில்ல வச்சுதான் டைப் பண்றேன்...//

      தெரியும்..... தெரியும்..... ஏ.ஸி.கோச் கூபே யில், மெய்மறந்து ஜாலியாக பயணம் செய்யும் போது, கொஞ்சம் கேப் கிடைக்கும் டயத்தில் ஜஸ்ட் ஃபார் ய சேஞ்ச் .. நிறைய எழுத்துப் பிழைகளுடன் டைப் செய்துள்ளாய். :))))

      //ஆமா அதிரா வங்க. சொன்னது போலல சாப்பாட்டு மெனு ஐட்டம் வரலியே//

      முதல் நாள் இரவே வருகை தந்துவிட்ட ஒரு 40-50 பேர்களுக்கு மட்டும்:

      அவல் போட்ட அசோகா ஸ்வீட், கையினால் சேவை நாழியில் பிழிந்த தேங்காய் சேவை, பருப்பு சேவை + எலுமிச்சம்பழ சேவை, உருளைக்கிழங்கு போண்டா + கொத்ஸு + தேங்காய் சட்னி + சூடான சுவையான பால் அல்லது காஃபி

      மறுநாள் காலை டிபன் + காஃபி மெனு மேலே பதிவிலேயே கொடுத்துள்ளேன்.

      >>>>>

      Delete
    2. கோபு பெரிப்பா >>>>> ஹாப்பி (2)

      27.11.2018 செவ்வாய்க்கிழமை மதிய சாப்பாடு (சுமார்: 120 நபர்களுக்கு):

      1) குருவாயூரப்பன் பால் பாயஸம்

      2) மைசூர் பாகு

      3) வெள்ளரி தயிர் பச்சடி

      4) பழப்பச்சடி

      5) பீன்ஸ் பருப்பு உசிலி

      6) வாழைக்காய் பொடிமாஸ்

      7) பூசணிக்காய் மோர்க்கூட்டு

      8) அரிசி அப்பளம்

      9) ஆமவடை

      10) நார்த்தங்காய் புது ஊறுகாய்

      11) கலத்துப் பருப்பு

      12) நெய்

      13) நல்ல பச்சரிசி சாதம்

      14) முருங்கைக்காய் சாம்பார்

      15) மணத்தக்காளி வற்றல் குழம்பு

      16) தக்காளி ரஸம்

      17) புளிக்காத கெட்டி மோர்

      18) சித்ரான்னமாக புளியஞ்சாதம்

      19) நுனி இலையில் சாப்பாடு குடிக்க குடிநீர் பாட்டிலுடன்

      20) ஐஸ் கிரீம்

      21) வெற்றிலை பாக்கு தாம்பூலம்

      -=-=-=-=-

      >>>>>

      Delete
    3. கோபு பெரிப்பா >>>>> ஹாப்பி (3)

      தேங்காய், வெற்றிலை-பாக்கு, பழம் போட்ட முஹூர்த்தப்பை அனைவருக்கும்

      பக்ஷணமாக பெரிய அதிரஸம், 5 சுற்று முறுக்கு, நிதான சைஸ் லாடு, பருப்புத் தேங்காய் - மனோரக்கா வருகை தந்த எல்லா பொம்மனாட்டிகளுக்கும், ஓர் தனிப் பையில் போட்டுக் கொடுக்கப்பட்டது.

      மதியம் மூன்று மணி வரை கூடவே இருந்தவர்களுக்கு, மீண்டும் சூடான காஃபி அளிக்கப்பட்டது. அதுசமயம் கட்டி சாத பார்ஸலாக சுமார் 50-60 நபர்களுக்கு மூன்று டப்பாக்களில் அடைத்து, தனித்தனி பைகளில் போட்டுக் கொடுக்கப்பட்டது.

      முதல் டப்பாவில்: மிளகாய்ப்பொடி தடவிய பஞ்சு போன்ற சுவையான நான்கு இட்லிகள்

      இரண்டாம் டப்பாவில்: நிறைய புளியஞ்சாதம் - தொட்டுக்க உருளைக் கிழங்கு சிப்ஸ் பாக்கெட் உடன்

      மூன்றாம் டப்பாவில்: ரொம்ப கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளரத்தளர தயிர் சாதம் + ஊறுகாய் + ஒரு குடிநீர் பாட்டில்.

      மாலை 4 மணிக்கு கல்யாண சத்திரத்தை காலி செய்துவிட்டு, ஆத்துக்குப் புறப்பட்டோம்

      ஒவ்வொரு வேளைக்கான மெனுவும் ஓரளவுக்கு முழுவதுமாக, ஏதும் விட்டுப்போகாமல் சொல்லி விட்டேன் என நினைக்கிறேன்.

      -=-=-=-=-=-

      >>>>>

      Delete
    4. கோபு பெரிப்பா >>>>> ஹாப்பி (4)

      ஜவுளி எடுக்கப்படாத உறவினர்களுக்கு மட்டும், முழு டிக்கெட் ஆசாமிகளுக்கு தலா ரூ. 500 வீதமும், அரை டிக்கெட் குழந்தைகளுக்கு தலா ரூ. 250 வீதமும், பணமாக கவர்களில் வைத்துக் கொடுத்துக்கொண்டே இருந்தேன்.

      நிறைவுப்பகுதியாக சம்பந்திகளுக்கு எதிர் மரியாதை என்ற பெயரில் மைத்துனர் ஒருவருக்கும், சம்பந்திகள் மூவருக்குமாக நான்கு தம்பதிகளுக்கு புடவை + ரவிக்கைத்துணி + 9*5 வேஷ்டி + தலா ரூ. 1000 பணம் அளிக்கப்பட்டது. சுபம்.

      ஆனந்தம் ..... ஆனந்தம் ..... ஆனந்தமே !

      Delete
    5. //அவல் போட்ட அசோகா ஸ்வீட், கையினால் சேவை நாழியில் பிழிந்த தேங்காய் சேவை, பருப்பு சேவை + எலுமிச்சம்பழ சேவை, உருளைக்கிழங்கு போண்டா + கொத்ஸு + தேங்காய் சட்னி + சூடான சுவையான பால் அல்லது காஃபி//

      இதில் போண்டாவைக் கழட்டிவிட்டுடலாம். ஒத்துக்கொள்ளாது. அசோகா ஸ்வீட்... இது ஒரு மாதிரி ஈஷிக்கொண்டிருக்கும். அதையும் டிராப் பண்ணிடலாம். சேவை-ஆஹா... அதை விட்டுவிடமுடியுமா? நல்லா தலையணைக்கு பஞ்சு அடைக்கிற மாதிரி சாப்பிட்டுட்டு பிறகு நிமிர்ந்து உட்கார, சூடான பாலைக் குடித்தால் ரொம்ப நல்லாத்தான் இருக்கும்.

      மெனு ரொம்ப நல்லா இருக்கு. காசி அல்வா போட்டிருந்தால் பாராட்டியிருக்கலாம்.

      Delete
    6. செவ்வாய் மதியச் சாப்பாடு மெனுவும் நல்லாத்தான் இருக்கு (புளியோதரை தவிர. அது இந்த மாதிரி இலைச் சாப்பாட்டில் சேருவதில்லை என்பது என் எண்ணம். அதுவும், காராசேவு மாதிரி ஏதேனும் போடுவதும் முழுச் சாப்பாட்டின் மேன்மையைக் குறைத்துவிடுகிறதோன்னு தோன்றும்)

      முன்ன மாதிரி இப்போல்லாம் இலைல பாயசம் விடறதில்லை போலிருக்கே... 2 ரூபாய் டீ கப் மாதிரி 1 இஞ்ச் உயரமுள்ள கப்பை வைத்துவிட்டு அதில் நிரம்ப பாயசம் விட்டுட்டுப் போயிடறாங்களே... அன்றும் அப்படித்தானா?

      Delete
    7. //பக்ஷணமாக பெரிய அதிரஸம், 5 சுற்று முறுக்கு, நிதான சைஸ் லாடு, பருப்புத் தேங்காய் - மனோரக்கா வருகை தந்த எல்லா பொம்மனாட்டிகளுக்கும்//

      லேடீஸுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியதுதான். அதுக்காக இப்படியா? வந்திருந்த ஜெண்ட்ஸ்லாம் என்ன தவறு செய்தார்கள்... இப்படி வெறும் கையாக அனுப்பிவிட்டீர்களே...

      Delete
    8. //அதுசமயம் கட்டி சாத பார்ஸலாக சுமார் 50-60 நபர்களுக்கு// - இது ஒரு நல்ல மெதட். சாயந்திரம் வரை இருந்துவிட்டு வெறும்ன வீட்டுக்குப் போய், அங்கு அரக்கப் பரக்க இரவு சாப்பாடு செய்யணும். அதுக்குப் பதில் கட்டு சாதம் கொடுத்தால் அவங்களுக்கும் சுலபமா இருக்கும். வேகவேகமா வீட்டுக்குப் போகறதுலயே (இரவுச் சாப்பாடு செய்வதற்காக) குறியா இருக்கமாட்டாங்க.

      மெனு எல்லாம் நல்லாவே இருக்கு.

      Delete
    9. //காராசேவு மாதிரி ஏதேனும் போடுவதும் முழுச் சாப்பாட்டின் மேன்மையைக் குறைத்துவிடுகிறதோன்னு தோன்றும்//

      அன்று மதிய சாப்பாட்டில் உ.கி.சிப்ஸும் உண்டு. நான் மேலே பட்டியலிடும் போதும் அதை ஏனோ எழுத மறந்துவிட்டேன்.

      Delete
    10. //முன்ன மாதிரி இப்போல்லாம் இலைல பாயசம் விடறதில்லை போலிருக்கே... 2 ரூபாய் டீ கப் மாதிரி 1 இஞ்ச் உயரமுள்ள கப்பை வைத்துவிட்டு அதில் நிரம்ப பாயசம் விட்டுட்டுப் போயிடறாங்களே... அன்றும் அப்படித்தானா?//

      அதற்குக் காரணம், இன்றைக்கு பலருக்கும் சர்க்கரை வியாதி பிரச்சனை இருப்பதால் மட்டுமே. இலையில் வைக்கும் பதார்த்தங்களை சாப்பிடாமல் வீணாக்கக் கூடாது என்பதினாலும் மட்டுமே.

      விரும்பிச் சாப்பிடுவோருக்கு இலையில் ஊற்றிக்கொண்டே இருந்தோம். அதுபோல கப்பில் தீரத்தீர ஊற்றிக்கொண்டே இருந்தார்கள். நானே ஒரு 4-5 கப் வாங்கிச் சாப்பிட்ட ஞாபகம் எனக்கு உள்ளது. :)))))

      நல்ல நாளிலேயே, சிறு வயதிலிருந்தே, எனக்கு இலையில் பாயஸம் ஊற்றினால் பிடிக்காது. தனியாக ஒரு பெரிய சொம்பில் கொடுத்தால் போதும் என்பேன். அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த மோர்/தயிர் சாதம் + காரசாரமான ஊறுகாய் வருவதால், அவையும் நான் சாப்பிடும்போது தித்தித்து வழியும் என்பதால் நான் இலையில் பாயஸம் ஊற்றச் சொல்ல மாட்டேன். மிகவும் உஷாராக தடுத்து விடுவேன். :)

      Delete
    11. //லேடீஸுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியதுதான். அதுக்காக இப்படியா? வந்திருந்த ஜெண்ட்ஸ்லாம் என்ன தவறு செய்தார்கள்... //

      அப்படியெல்லாம் இல்லை. எங்களில் ஒரு குடும்பத்திற்கான பக்ஷணங்களை குறிப்பாக அந்த வீட்டு லேடீஸ்களிடம் ஒப்படைப்பதுதான் வழக்கமாகும்.

      பொதுவாக ஆண்களுக்கு தேங்காய், வெற்றிலை-பாக்கு, பழம் போடப்பட்ட முஹூர்த்தப் பை மட்டும் தரப்படும்.

      அதே முஹூர்த்தப் பை, வேறு கலரில் பிரிண்ட் செய்துள்ளதில், தேங்காய், வெற்றிலை-பாக்கு, பழம் தவிர, ரவிக்கைத் துணி, மஞ்சள் குங்குமம், ரிடர்ன் கிஃப்ட் பொருட்கள், முறுக்கு, லாடு, அதிரஸம், உடைத்த பருப்புத் தேங்காய் வகையறாக்கள் போன்ற பக்ஷணங்கள் போடப்பட்டு லேடீஸுக்கு மட்டும் தரப்படும்.

      அன்று லேடீஸ் யாரையும் கூட்டி வராமல் தனியாக வருகை தந்துள்ள ஆண்களுக்கும் பக்ஷணங்கள் கொடுத்து அனுப்பப்பட்டன.

      //இப்படி வெறும் கையாக அனுப்பிவிட்டீர்களே... //

      அன்று வெறும் கையாக போனவர்கள் யாருமே கிடையாது ஸ்வாமீ. தனக்குக் கிடைத்த பொருட்கள், தாம்பூலப்பை முதலியன தவிர, தன் வீட்டு லேடீஸுக்கு கொடுக்கப்பட்டதையும், பெளவ்யமாக கைகளில் வாங்கிக்கொண்டு, சுமந்து செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த ஆண்களுக்கு மட்டுமே உள்ளது, ஸ்வாமீ. :)

      பட்டுப்புடவை பளபளக்க, நகை நட்டுக்களுடன், சும்மா ஆட்டிக்கொண்டு, ஜாலியாக வெறும் கையை வீசிக்கொண்டு அரட்டை அடித்தபடி அலட்டிக்கொண்டு செல்பவர்கள் ... இந்த அதிர்ஷ்டக்கார பெண்மணிகள் மட்டுமே. :)

      Delete
    12. //இன்றைக்கு பலருக்கும் சர்க்கரை வியாதி பிரச்சனை இருப்பதால் மட்டுமே// - பாசிடிவ் ஆக திங்க் பண்ண வேண்டியதுதான். அதற்காக இப்படியா?

      நான் போகும் கல்யாணம், விழாக்களுக்கு இனிமேல் 'எனக்கு இன்று வரை ஷுகர் இல்லை' என்று ஒரு பதாகை ரெடி பண்ணவேண்டியதுதான். எனக்கு இதுவரை 'இன்னும் வேணுமா'ன்னு ஒருத்தரும் கேட்டதில்லை

      Delete
    13. நெல்லைத் தமிழன் December 6, 2018 at 9:41 AM

      //இன்றைக்கு பலருக்கும் சர்க்கரை வியாதி பிரச்சனை இருப்பதால் மட்டுமே// - பாசிடிவ் ஆக திங்க் பண்ண வேண்டியதுதான். அதற்காக இப்படியா?//

      அதற்காக ..... எப்படியா? என்ன சொல்றீங்கோ?

      அன்று வந்த அனைவருக்கும், பாயஸம் உள்பட ஒவ்வொரு ஐட்டமும் மீண்டும் மீண்டும் கேட்டு பொறுமையாக திருப்தியாக பரிமாறப்பட்டன. வருவோர் எண்ணிக்கையை நன்கு திட்டமிட்டுச் சொல்லி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஐட்டமும் தாராளமாக + ஏராளமாக செய்து பரிமாறப்பட வேண்டும் என உத்தரவு இட்டிருந்தேன். சாப்பிட்டவர்களில் பலரும் என்னிடம் வந்து சாப்பாடு A-1 First Class - Super கவனிப்பு என, திருப்தியுடன் சொல்லி கை குலுக்கிப் பாராட்டி விட்டுச் சென்றனர்.

      தாராளமான நல்ல மனதுடன் எதையும் நன்கு திட்டமிட்டுச் செய்தால் அது மிகச்சிறப்பாகவே இருக்கும். முதல் பந்தியில் முதல் நபராக உட்கார்ந்து கொள்வோருக்கும், கடைசி பந்தியில் கடைசி ஆளாக உட்கார்ந்து கொள்பவருக்கும் ஒரே மாதிரி நிறைவாக பரிமாறப்பட வேண்டியது முக்கியமாகும். நான் அமர்த்திய Catering Contract Chief ஆசாமியும் மிகவும் பொறுமையான Adjustable Type மட்டுமே.

      எங்கள் எல்லோர் மனதுக்கும் திருப்தியாக இருந்தால், தாங்கள் கேட்ட தொகையைவிட 5% சேர்த்துத்தருவேன் என்று சொல்லி அதுபோலவே அவர் கேட்ட தொகையைவிட 5% கூடவே சேர்த்துக் கொடுத்துள்ளேன். அவருக்கும் மிகவும் திருப்தியாகி விட்டது. பலரும் அவரிடம் அவரின் VISITING CARD கேட்டு வாங்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

      //நான் போகும் கல்யாணம், விழாக்களுக்கு இனிமேல் 'எனக்கு இன்று வரை ஷுகர் இல்லை' என்று ஒரு பதாகை ரெடி பண்ணவேண்டியதுதான். எனக்கு இதுவரை 'இன்னும் வேணுமா'ன்னு ஒருத்தரும் கேட்டதில்லை.//

      தாங்கள் சென்ற அனைத்துக் கல்யாணங்களும், சமையல்-சாப்பாட்டு எண்ணிக்கையை சரியாக திட்டமிடாமல், எல்லோருக்கும் எல்லாமே திருப்தியாக பரிமாறப்பட வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான தயார் நிலையும் இல்லாத கல்யாணங்களாக இருந்திருக்கலாம்.

      எங்களின் மிகப் குடும்பத்தில் அடுத்தடுத்து பல கல்யாணங்கள் நடத்திய அனுபவங்கள் எனக்கு உண்டு. அழைப்பிதழ் அச்சிடுவதிலிருந்து, ஒவ்வொருவரையும் அழைப்பதிலிருந்து, ஒவ்வொருவரையும் வரவேற்று நன்கு கவனிப்பதிலிருந்து, கல்யாணம் முடிந்து கட்டிச் சாத கூடை கட்டுவது வரை, ஒவ்வொரு ஸ்டேஜிலும் திட்டமிடல் என்பது மிக மிக அவசியம் ஆகும். எதிலும் ஓர் திட்டமிடல் இல்லையேல், வருகை தருவோருக்கு மட்டுமல்லாமல், அழைத்த நமக்கும் மிகவும் திண்டாட்டம் ஆகிவிடும் என்பதில் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டும்.

      எல்லாவற்றிற்குமே சரியான Budget Calculations & Formula உள்ளன. அதன்படி போனால் சிக்கல் ஏற்பட வாய்ப்பே இல்லை.

      ஒரு விழாவுக்கு அழைக்கும் முன்பே, கல்யாண மண்டபத்தின் வசதிகள் + கொள்ளளவு திறன், நம் பொருளாதார Budget வசதிகள், வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை முதலியவற்றையெல்லாம் நன்கு திட்டமிட்ட பிறகே, அழைக்கப்பட வேண்டியவர்களை முடிவு செய்ய வேண்டும்.

      சும்மா சகட்டு மேனிக்கு, விளம்பர நோட்டீஸ் போல பத்திரிகை கொடுத்து ஆட்களை அழைப்பது மிகப்பெரிய சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். அழைக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் உள்ளூர் ஆசாமிகளாக இருப்பின் 2.5 நபர் வருவார்கள் எனவும், வெளியூர் ஆசாமிகளாக இருப்பின் 1.5 நபர் வருவார்கள் எனவும் ஓரளவு கணக்கிட்டு, மொத்தம் வருகை தருவோர் எண்ணிக்கையை நிர்ணயித்து, அதற்கு ஏற்ப திட்டமிட்டு விருந்து தயாரிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

      Delete
    14. உதாரணமாக .......

      எங்கள் சஷ்டியப்த பூர்த்தி விழா 04.12.2009 & 05.12.2009 ஆகிய இரு நாட்களுக்கு நடைபெற்றது. அது சற்றே பெரிய மண்டபம். ஒரே நேரத்தில் 200-250 நபர்கள் வரை அமரலாம்.

      600 பத்திரிகை அடித்தோம். முதல் நாள் காலையும் மறுநாள் பகலிலும் வைதீக கார்யங்கள் சிறப்பாக நடந்தன. உள்ளூர் மற்றும் வெளியூர் நண்பர்கள் + உறவினர்களை அழைத்திருந்தோம். மொத்தமாக இரு நாட்களும் சுமார் 500-600 நபர்கள் வரை கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள். மாடியில் ஃபங்ஷன், கீழே சாப்பாடு.

      முதல் நாள் மாலை ’சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா’ ஒன்றும் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடைபெற்றது. அதற்கு மட்டும் தனியாக அழைப்பிதழ் அடித்து திருச்சி மாவட்ட எழுத்தாளர் நண்பர்களுக்கும், இதர என் ஆபீஸ் சக உழியர்களுக்கும் மட்டும் விநியோகித்து இருந்தேன். அதற்கு என் உறவினர்கள் + நண்பர்கள் + எழுத்தாளர்கள் ஏன சுமார் 200-250 பேர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

      இரவு விருந்து அனைவருக்கும் அளிக்கப்பட்டது. அத்துடன் என் கையெழுத்திட்ட நூல்கள் இரண்டிலும் ஒவ்வொரு பிரதிகள் வீதம் வருகை தந்திருந்த அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

      இந்த நூல் வெளியீட்டு விழா பற்றிய படங்கள் + செய்திகள் ஏற்கனவே என் பதிவு ஒன்றில் காட்டப்பட்டுள்ளன.

      http://gopu1949.blogspot.com/2015/02/2-of-6.html

      இவை எல்லாம் வெற்றிகரமாக நிகழ மிகச் சரியான திட்டமிடல் மட்டுமே காரணம், ஸ்வாமீ.

      Delete
    15. கோபு சார்... பொதுவா பந்தில பரிமாறுபவர்கள், ஸ்பூன்ல தான் பரிமாறராங்க. தேவையில்லாதபோது (அதாவது மோர் சாதம் போட ஆரம்பிச்சபின்), இன்னும் காய் வேணுமான்னு கேட்பாங்க. பாயசம் பரிமாறின உடனே இன்னும் வேணுமான்னு கேட்பாங்க (அப்போ சாப்பிடுபவர் சாத்துமது சாதமே சாப்பிட்டு முடித்திருக்க மாட்டாங்க). இன்னொருதடவை ஃபார்மாலிட்டிக்காக கேட்டாச்சுனு போயிடுவாங்க.

      நான், லாபம் அதிகமாக்க, கேட்டரிங் காரங்க இப்படிப் பண்ணுறாங்கன்னுதான் நினைத்துக்கொள்வேன். ஏற்பாடு பண்ணினவங்க பாவம், முழுத் தொகையும் கொடுத்திருப்பாங்க. அதனாலதான் கேடரிங் கார்ர்களை சப்போர்ட் பண்ணி "சர்க்கரை டிஸ்ஆர்டர்" காரணமாத்தான் நிறைய பரிமாறுவதில்லை என்று நீங்க சொன்னதை, பாசிடிவ் திங்கிங் என்று சொன்னேன்.

      மற்றபடி, திட்டமிடல் என்பது பெரிய வேலை. உங்களுக்கு இதில் நிறைய அனுபவம் இருக்கும். பாராட்டுகள்.

      இனிப்புகள் படங்களை சென்சார் செய்துட்டீங்க போலிருக்கு. அடுத்த தடவை (80ல்) அதையும் கவனத்துல வச்சுக்கோங்க.

      பேரன்கள் வளர்ந்திருப்பதையும் படங்களில் பார்த்தேன். படங்களில் யார் யார் மிஸ்ஸிங் என்பதையும் அனுமானித்தேன்.

      Delete
    16. நூல் வெளியீட்டு விழாலாம் ஏற்கனவே படித்திருக்கிறேன். சிலர், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்திருந்தால் இன்னும்கூட இரண்டு நூல்கள் வெளியிட்டிருக்கலாம்.

      போதும் என்ற மனநிலை வந்தபிறகு என்ன சொல்வது?

      Delete
  26. கிஷ்ணாஜி நமஸ்தே

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco December 2, 2018 at 10:52 AM

      //கிஷ்ணாஜி நமஸ்தே//

      ஆஹா, வாடியம்மா .... மை டியர் _ _ _ _ ஷம்மு ! :)

      இத்துணூண்டு கமெண்ட் மட்டும் தானா? வர வர எனக்கு உன் கவனிப்பே இல்லை. கஞ்சம் கஞ்சம் ! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      பிரியமுள்ள
      கிஷ்ணா(ஜா)ஜி

      Delete
  27. நமஸ்காரங்கள்....

    வாழ்த்துகளும். மேலும் பல ஆண்டுகள் சிறப்புடன் வாழ எல்லாம் வல்லவனின் பூரண அருள் கிடைத்திடட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் December 2, 2018 at 11:07 AM

      நமஸ்காரங்கள்....

      வாழ்த்துகளும். மேலும் பல ஆண்டுகள் சிறப்புடன் வாழ எல்லாம் வல்லவனின் பூரண அருள் கிடைத்திடட்டும்.//

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      தங்களின் வாழ்த்துகள் + பிரார்த்தனைகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி ஜி.

      Delete
  28. //..நேரில் சந்தித்தது இல்லை. போட்டோ படங்களில் மட்டுமே பார்த்து சொக்கிப்போய்..//

    //நெளதால் பூட்டாகப் போட்டு பூட்டிவிட்டேன் ..... வண்ணக் கோலமிடும் அழகிய மயிலை நிம்மதியாக, கண்குளிர ரஸிக்க வேண்டும் அல்லவா! ..//

    அட! ஆமாம்! ரொம்பவே வெள்ளை நீங்கள். இப்படி இருப்பதில் ஒரு சுகமுண்டுதான். ஆனால் கொஞ்சம் ஜாக்ரதையாக இருக்கவேண்டும்.. இப்படி transparent-ஆகும் இருக்கும் சமயங்களில் உங்கள் துணைவியார் கம்ப்யூட்டர் பக்கம் வராது பார்த்துக்கொள்ளுங்கள்! Transparency, ஏதாவது kitchen emergency-யில் கொண்டுவந்து விட்டுவிடப்போகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஓர் வயதானவன், குளிர்ச்சி + குஜால் ஏற்படுத்தும்
      அழகைத் தன் கண்களால் ரஸிப்பது ஓர் குற்றமா?

      இதற்கே இப்படிச் சொல்கிறீர்கள். நான் எழுதியுள்ள
      கிளுகிளுப்பூட்டும் கதைகள் சிலவற்றைப் படித்தால்
      என்னென்ன ஆலோசனைகள் சொல்லுவீர்களோ?

      என் எழுத்துக்களை என் மனைவிதான் படிப்பது இல்லை.
      நீங்களாவது படித்துவிட்டுக் கருத்துச் சொல்லுங்கோ, ப்ளீஸ்.

      மனசுக்குள் மத்தாப்பூ
      https://gopu1949.blogspot.com/2014/10/vgk-40-1-of-4.html
      https://gopu1949.blogspot.com/2014/10/vgk-40-2-of-4.html
      https://gopu1949.blogspot.com/2014/10/vgk-40-3-of-4.html
      https://gopu1949.blogspot.com/2014/10/vgk-40-4-of-4.html

      ஜாதிப்பூ
      https://gopu1949.blogspot.com/2014/05/vgk-16.html

      வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ.,! புதிய கட்சி ‘மூ.பொ.போ.மு.க’ உதயம்!!
      https://gopu1949.blogspot.com/2014/04/vgk-13.html

      மறக்க மனம் கூடுதில்லையே !
      https://gopu1949.blogspot.com/2014/03/vgk-10.html

      அமுதைப் பொழியும் நிலவே
      https://gopu1949.blogspot.com/2014/03/vgk-08.html

      ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்
      https://gopu1949.blogspot.com/2014/02/vgk-07.html

      காதலாவது கத்திரிக்காயவது !
      https://gopu1949.blogspot.com/2014/02/vgk-05.html

      காதல் வங்கி
      https://gopu1949.blogspot.com/2014/02/vgk-04.html

      சுடிதார் வாங்கப் போறேன் !
      https://gopu1949.blogspot.com/2014/01/vgk-03.html

      Delete
  29. வணங்குகிறேன் ஐயா...

    வாழ்த்துகள் பல...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் December 2, 2018 at 7:15 PM

      //வணங்குகிறேன் ஐயா...
      வாழ்த்துகள் பல...//

      வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  30. //..அழகைத் தன் கண்களால் ரஸிப்பது ஓர் குற்றமா?//

    அப்படி எங்கே நான் சொன்னேன்! கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான காரியங்கள் நடக்கவேண்டியதுதான். அல்லது நடக்கும் -அது இயற்கை!

    ஏகப்பட்டது எழுதிவைத்திருக்கிறீர்களே, பயம் தருகிறதே! நான் ஒரு சோம்பலான வாசகன். கொஞ்சமாகப் படித்து நிறைய யோசிப்பவன்..! பார்க்க முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஏகாந்தன் Aekaanthan !December 2, 2018 at 9:14 PM

      **..அழகைத் தன் கண்களால் ரஸிப்பது ஓர் குற்றமா?**

      //அப்படி எங்கே நான் சொன்னேன்! கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான காரியங்கள் நடக்கவேண்டியதுதான். அல்லது நடக்கும் -அது இயற்கை!//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! அந்த இயற்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, அனுபவஸ்தனான நான் வெளிப்படையாகச் சொல்லியுள்ளேன். பெரும்பாலானோரைப் போல மனதில் வைத்துக்கொண்டு, மருகிக்கொண்டு, ’மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ கூடவே கூடாது. திருக்குறள்: 34 இதையேதான் சொல்கிறது:

      மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
      ஆகுல நீர பிற.

      //ஏகப்பட்டது எழுதிவைத்திருக்கிறீர்களே, பயம் தருகிறதே!//

      நான் எழுதிய பதிவுகளில் 1% மட்டுமே கொடுத்துள்ளேன். இதற்கே பயந்தால் எப்படி?

      //நான் ஒரு சோம்பலான வாசகன்.//

      சோம்பலான வாசகர்களுக்கு சுறுசுறுப்பு அளிப்பதுதான் என் எழுத்துக்களின் தனிச்சிறப்பு என்று சொல்லுவார்கள்.

      மேற்படி ஒன்பது கதைகளையும், சுண்டியிழுக்கும் மிக அருமையான படங்களுடன் பொறுமையாகப் படித்தபின், தாங்களும் இதனை அப்படியே ஒத்துக்கொள்வீர்கள்.

      //கொஞ்சமாகப் படித்து நிறைய யோசிப்பவன்..!//

      மிகவும் நல்லது. இருப்பினும் கொஞ்சமாக யோசித்து நிறைய படியுங்கள்.

      //பார்க்க முயற்சிக்கிறேன்.. //

      https://gopu1949.blogspot.com/2014/10/vgk-40-1-of-4.html முதல் கதையின் முதல் படத்தை முதலில் பாருங்கள். தங்களின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும். வாழ்த்துகள்.

      Delete
  31. உங்களின் எழுத்து எங்களுக்கு ஒரு தூண்டுகோல். இந்நன்னாளில் உங்களை வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University

      வாருங்கள், முனைவர் ஐயா, வணக்கம்.

      //உங்களின் எழுத்து எங்களுக்கு ஒரு தூண்டுகோல்.//

      ஆஹா, இதைத் தங்கள் வாயிலாகக் கேட்க தன்யனானேன்.

      //இந்நன்னாளில் உங்களை வணங்குகிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. எனது மனமார்ந்த ஆசிகள்.

      Delete

  32. மிக்க மகிழ்ச்சி ஐயா....

    எங்களது வணக்கங்களும் ..

    ReplyDelete
    Replies
    1. Anuradha Premkumar December 3, 2018 at 11:53 AM

      ஆஹா, வாங்கோ, வணக்கம்.

      //மிக்க மகிழ்ச்சி ஐயா.... எங்களது வணக்கங்களும் ..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. தங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள்.

      Delete
  33. கோபூஜி நல்லாருக்கிங்களா.

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து December 3, 2018 at 11:53 AM

      //கோபூஜி நல்லாருக்கிங்களா.//

      வாம்மா ..... மீனா மெஹர் மாமி. நான் நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கிறாயா? நீ தற்போது நிறைமாத கர்ப்பிணியாக அல்லவா இருப்பாய். பையன் உன் தொந்திக்குள் இருந்துகொண்டு உள்பக்கமாக உதைக்கிறானா? டெலிவரி இந்த மாதக்கடைசியில் இருக்குமோ!! நல்லபடியாக சுகப்பிரஸவம் ஆகி தாயும் சேயும் நலமாக இருக்க பிரார்த்தித்துகொண்டு இருக்கிறேன். உன் வீட்டுக்காரரிடம் சொல்லி, சீக்கரமாக எனக்கு ஸ்வீட் நியூஸ், முதல் நியூஸ் கொடுக்கச் சொல்லவும். :)))))

      பிரியமுள்ள கோபூஜி

      Delete
  34. கோபூஜி நல்லாருக்கிங்களா...ரொம்ப நாளுக்கு பொறவால வலைப்பதிவுல படங்களுடனும் பதிவுடனும் ஜமாய்ச்சிருக்கிங்க நல்லா இருக்குது

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து December 3, 2018 at 11:56 AM

      //கோபூஜி ... ரொம்ப நாளுக்கு பொறவால வலைப்பதிவுல படங்களுடனும் பதிவுடனும் ஜமாய்ச்சிருக்கிங்க நல்லா இருக்குது//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. உன் உடம்பை மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளவும். மனதை மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவும். ஆபீஸில் ஆறு மாதங்கள் லீவு தருவார்கள். அதன் பிறகு நீ ஆறு மாதம் உன் சொந்த லீவு எடுத்துக்கொள். எதற்குமே கவலைப் படாதே. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் + நல்லாசிகள்.

      அன்புடன் கோபூஜி

      Delete
  35. கோபூப்பா நமஸ்காரம்

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் December 3, 2018 at 12:00 PM

      //கோபூப்பா நமஸ்காரம்//

      வாம்மா..... மை டியர் சாரூஊஊஊ. செளக்யமா? உன் வீட்டுக்காரரும், உன் கொடுக்குகள் மூன்றும் நலமா?

      நீ ... உன் உடம்பு, செளக்யமாக சந்தோஷமாக இருக்கிறாயா?

      எப்போது நீ நம் இந்தியாவுக்குத் திரும்புவாய் என எங்களில் சிலர் மிகுந்த ஏக்கத்துடன் உள்ளோமாக்கும். :)

      Delete
  36. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கிங்க

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் December 3, 2018 at 12:02 PM

      //லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கிங்க//

      அப்போ நம்ம ’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ போல என் தலையும், நாளுக்கு நாள் பளபளப்பாக மாறி வருகிறதுன்னு சொல்கிறாயா? கர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))

      Delete
  37. படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுவது.

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் December 3, 2018 at 12:03 PM

      //படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுது.//

      நீ சொல்வது மிகவும் சரியே. படங்களில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் என்னுடன் ’ஒரு மிகப்பெரிய தொடர்கதை’ அளவுக்கு பரிச்சயமும், பிரியமும், பாசமும், மரியாதையும், அன்பும் உண்டு. இதுபோல அட்டாச்மெண்ட்ஸ் உள்ளவர்களில் 1% மட்டுமே நான் அழைத்துள்ளேன். இன்னும் 99% இருக்கிறார்கள். :))))) அதில் உனக்கு முதலிடம் உண்டு என்று நான் சொல்லவும் வேண்டுமோ !

      Delete
  38. எல்லார் மட்டங்களிலும் என்ன ஒரு சந்தோஷம்.......கலகலப்பு...உங்க குடும்பமே ஒரு ஆலமரம்தான்.


    பவித்ரானு ஒரு பேரம்ண்ணு கூட இருக்கலா.

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் December 3, 2018 at 12:06 PM

      //எல்லார் மட்டங்களிலும் என்ன ஒரு சந்தோஷம்....... கலகலப்பு... உங்க குடும்பமே ஒரு ஆலமரம்தான்.//

      நம் குடும்பமே ஒரு ஆலமரம்தான் என்று சொல்லு ..... சாரூஊஊஊ. கோபுப்பாவின் குடும்பத்தில் என் அன்புக்குரிய நீயும் பிரதானமான ஒருத்திதானே.

      நீ என்னை ’கோபுப்பா’ என்று அழைக்கலாமா என்று கேட்டதிலிருந்து, அப்படித்தான் நான் உன்னை நினைத்துள்ளேன்.

      //’பவித்ரா’ன்னு பேரில் ஒரு பொண்ணுகூட இருக்கலாமோ.//

      எனக்கு மொத்தம் இரண்டு பேத்திகள். அதில் ஒருத்தி உன்னிடம் சமத்தோ சமத்தாக வளர்ந்து வருகிறாள். மற்றொருவள் என் மூத்த பேத்தி. தற்சமயம் துபாயில் இருக்கிறாள். அவள் பெயர்: பவித்ரா :)))))

      Delete
    2. ப்ராப்தம் December 4, 2018 at 8:28 AM

      //Aiyo...evlaav spelling mistake sry.......//

      அதனால் பரவாயில்லை சாரூ. இங்கு தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கே, தமிழ் எழுத்துக்களில் தடுமாற்றம் ஏற்பட்டு, இதுபோல சிற்சில எழுத்துப்பிழைகளுடன் எழுதிவருவது மிகவும் சகஜமே.

      தமிழ்மொழியைப் பள்ளிப்படிப்பினில் படிக்க வாய்ப்பில்லாத, வடநாட்டுக்காரியான நீ, உன்னுடைய ஆர்வத்தால் மட்டுமே தமிழினைக் கற்று, அழகாக எழுதி வருவதும், உனக்கு இன்றுள்ள ஆயிரம் பொறுப்புக்களுக்கு இடையில் இங்கு இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ளதும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றது. பார்ப்போம் சாரூ .... கிங்காங் + தாராசிங் எப்படி உள்ளார்கள்? :)))))

      பிரியத்துடன் உன் கோபுப்பா

      Delete
  39. குருஜி கும்டுகிடுதன்

    ReplyDelete
    Replies
    1. zana z December 3, 2018 at 1:58 PM

      //குருஜி கும்டுகிடுதன்//

      ஆஹா.... ’மஸ்கட் முருகு’வா .... வாம்மா .... வா. நல்லா இருக்கிறாயா? அம்மி, அண்ணன், ஆசிக் எல்லாம் செளக்யமா? ஆளையும் காணோம் ... அட்ரஸ்ஸையும் காணோம் என உன்னைப்பற்றி நான் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். :))

      Delete
  40. இப்பூடி திடுமென வந்து சர்ப்ரைஸு கொடுக்கிகளே...நல்லாதான்கீது போட்டோபடம்லா செம தூளு

    ReplyDelete
    Replies
    1. zana z December 3, 2018 at 2:02 PM

      //இப்பூடி திடுமென வந்து சர்ப்ரைஸு கொடுக்கிகளே... நல்லாதான்கீது போட்டோபடம்லா செம தூளு//

      இப்பூடி திடுமென வந்து சர்ப்ரைஸு கொடுப்பது நீயா நானா? என யோசித்துப்பார்த்துச் சொல்லேன் முருகு.

      நம்மா முன்னா பார்க் ஓனரின் கணவர் ‘காது கொடுத்துக் கேட்டேன் ... ஆஹா குவா குவா சப்தம்’ என்று ஜாலியா பாட்டுப்பாடிக்கிட்டு இருக்கிறார். இந்த 2018-ம் ஆண்டு இறுதிக்குள் அப்பா (வாப்பா) ஆகிவிடுவார். :)))))

      உன் நிக்காவுக்கு என்னால் அனுப்பப்பட்டு நேரில் வந்திருந்த + உனக்குப் பிறகு மிகவும் தாமதமாகவே நிக்கா செய்துகொண்டுள்ள அவள் (அந்த இன்னொரு மெஹருன்னிஸா) இப்போ பேரெழுச்சியுடன் தாயாகப்போகிறாள் ..... அப்போ நீ ?????

      உன்னிடமிருந்து ஸ்வீட் நியூஸ் கேட்க ஆவலுடன் + அன்புடன் உன் குருஜி

      Delete
  41. வணக்கம் ஸார் ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டிருக்கிங்க...நீங்களும் ரெகுலரா பதிவு போடணும்னா உங்கவீட்ல கலகலப்பா ஏதானும்ஃபங்ஷன் வந்துகிட்டே இருக்கணும் போல இருக்குதே... திறமையான எழுத்துக்கு சொந்தக்காரங்கல்லாம் இப்படி நீண்ட இடைவெளி விடலாமா....

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... December 3, 2018 at 2:15 PM

      //வணக்கம் ஸார் ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டிருக்கிங்க... நீங்களும் ரெகுலரா பதிவு போடணும்னா உங்கவீட்ல கலகலப்பா ஏதானும் ஃபங்ஷன் வந்துகிட்டே இருக்கணும் போல இருக்குதே...//

      அடேடே .... வாங்கோ வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      எவ்வளவு இடைவெளி கொடுத்துப் பதிவு போட்டாலும், கருத்திட இப்படிப் பறந்து வந்துவிடுகிறீர்களே! சபாஷ்!! Profile படம் பொருத்தமானதே ! :)))))

      ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடிக்கு ஓர் கல்யாணத்துக்குப் போனீர்களே ... நினைவு இருக்குதா. அந்த மணப்பெண்ணின் தங்கச்சிக்கும், திடீர்ன்னு கல்யாணம் ஆகி, அவள் உண்டாகி, மேலும் குண்டாகி இருக்கிறாள் .... தெரியுமோ? :)))))

      //திறமையான எழுத்துக்கு சொந்தக்காரங்கல்லாம் இப்படி நீண்ட இடைவெளி விடலாமா....//

      ஆஹா .... நான் மிகச் சாதாரணமானவன் மட்டுமே .... ‘திறமையான எழுத்துக்கு சொந்தக்காரர்’ என ஏதேதோ சொல்லி என்னைக் கூச்சப்பட வைத்துள்ளீர்கள்.

      எனினும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      Delete
  42. வணக்கம் சார் / நமஸ்காரங்கள் கோபு அண்ணா.

    தாங்கள் இன்னும் பல பிறைகள் கண்டு நலமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்தனைகள்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. Thulasidharan V Thillaiakathu December 3, 2018 at 3:47 PM

      //வணக்கம் சார் / நமஸ்காரங்கள் கோபு அண்ணா. //

      வாங்கோ மேடம் .. வணக்கம். வாங்கோ பிரதர் .. ஆசீர்வாதங்கள்

      //தாங்கள் இன்னும் பல பிறைகள் கண்டு நலமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்தனைகள்!
      துளசிதரன், கீதா//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  43. வாழ்த்துக்கள் ஐயா.. ! இறைவன் அருள் பெருகட்டும்... சாதனைகள் தொடரட்டும் !!

    ReplyDelete
    Replies
    1. G Perumal Chettiar December 3, 2018 at 8:43 PM

      வாங்கோ ஸார், வணக்கம்.

      //வாழ்த்துக்கள் ஐயா.. ! இறைவன் அருள் பெருகட்டும்... சாதனைகள் தொடரட்டும் !!//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      Delete
  44. நமஸ்காரம் சார்!
    தாங்கள் இன்னும் பல்லாண்டுகள் நலமுடனும், வளமுடனும் வாழ இறையருள் துணை நிற்க!
    என்றும் தங்களின் நல் ஆசிகளை விழையும்
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. December 3, 2018 at 9:02 PM

      //நமஸ்காரம் சார்!//

      வாங்கோ வணக்கம். அநேக ஆசீர்வாதங்கள்.

      //தாங்கள் இன்னும் பல்லாண்டுகள் நலமுடனும், வளமுடனும் வாழ இறையருள் துணை நிற்க!
      என்றும் தங்களின் நல் ஆசிகளை விழையும்
      காரஞ்சன்(சேஷ்)//

      மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். என் நல்லாசிகள் எப்போதும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் உண்டு. வாழ்க!

      Delete
  45. மிகவும் தாமதமாக இன்னிக்குத் தான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். மேன்மேலும் சதாபிஷேஹம், கனகாபிஷேஹம் எனக் கண்டு இதே ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பதிவுலகில் தொடர்ந்து பதிவுகளைக் கொடுத்து வரப் பிரார்த்தனைகள். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் நமஸ்காரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam December 4, 2018 at 6:15 AM

      வாங்கோ, வணக்கம். நமஸ்காரங்கள்.

      //மிகவும் தாமதமாக இன்னிக்குத் தான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன்.//

      அதனால் என்ன .... பரவாயில்லை.

      //மேன்மேலும் சதாபிஷேஹம், கனகாபிஷேஹம் எனக் கண்டு இதே ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பதிவுலகில் தொடர்ந்து பதிவுகளைக் கொடுத்து வரப் பிரார்த்தனைகள்.//

      மிகவும் சந்தோஷம். இதுபோன்ற தங்கள் நல் எண்ணங்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் நமஸ்காரங்கள்.//

      தாங்கள் என்னைவிட ஓரிரு ஆண்டுகள் வயதினில் சிறியவர்களாக இருக்கக்கூடும். இருப்பினும் தங்கள் ஆத்துக்காரர் என்னைவிட கொஞ்சம் வயது பெரியவர் ஆவார். ஸ்தானத்தில் தம்பதியினரான நீங்கள் இருவரும் எங்களைவிட பெரியவர்கள் மட்டுமே.

      அதனால் தாங்கள் எங்களுக்கு நமஸ்காரம் சொல்லாமல்,
      எங்களை ஆசீர்வதிக்கணும்.

      மீண்டும் நமஸ்காரங்களுடன்
      கோபு + Mrs. கோபு

      Delete
    2. கீழிருந்து மேலாக உள்ள 8-வது க்ரூப் போட்டோ படத்தில், என் ஆத்துக்காரிக்கு வலதுகைப்பக்கம் நீலக் கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்துள்ளவர் என் ஒரே மச்சினர். (அதாவது என் மனைவியுடன் கூடப்பிறந்த ஒரே அண்ணா) அவர் என்னை விட இரண்டு வயது பெரியவர்.

      அவர் ஆத்துக்காரி .... அதாவது என் மனைவியின் மன்னியும், என் ஆத்துக்காரியும் சம வயது உடையவர்கள். அதாவது என்னை விட சுமார் 4-5 வயது சிறியவர்கள்.

      இருப்பினும் என் மைத்துனர் என்னை விட பெரியவராக இருப்பதால் அண்ணா-மன்னி என, ஸ்தானத்தில் உயர்ந்தவர்கள் என்ற முறையில், நாங்கள் இருவரும் அவர்கள் இருவரையும் நமஸ்கரிப்பது வழக்கம்.

      Delete
  46. புதுத் திருமணத்தம்பதி காயத்ரி அவர்களுக்கும் எங்கள் ஆசிகள், வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam December 4, 2018 at 6:18 AM

      //புதுத் திருமணத்தம்பதி காயத்ரி அவர்களுக்கும் எங்கள் ஆசிகள், வாழ்த்துகள்//

      தங்களின் பொன்னான ஆசிகள் மற்றும் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      எல்லாவிதத்திலும் மிகவும் நல்ல பொண்ணு அவள். எங்கள் குடும்பத்துப் பையன்கள் யாருக்காவது அவளைக் கொத்திக்கொண்டு வரலாமா என நினைத்தேன். மிகவும் முயற்சித்தேன். ஆனால் ப்ராப்தம் இல்லாமல் போய் விட்டது.

      ஈஸ்வர-பகவத் சங்கல்ப்பம் வேறு மாதிரி இருந்துள்ளது. எனினும் அவள் எங்கிருந்தாலும் செளக்யமாக சந்தோஷமாக இருக்கணும் என்பதே என் அன்றாட பிரார்த்தனைகள். :)

      Delete
  47. வாழ்த்துகள்,நமஸ்காரங்கள்.படங்களும் பதிவும் அருமை.நல்ல சாப்பாடு மிஸ்ஸாகிட்டே...

    ReplyDelete
    Replies
    1. ஆச்சி ஸ்ரீதர் December 4, 2018 at 9:29 AM

      வாங்கோ ஆச்சி, வணக்கம். நல்லா இருக்கீங்களா .... வாட்ஸ்-அப்பில் கூட ஆளையும் காணும் .... தேளையும் காணும். என்ன ஆச்சு திடீர்ன்னு உங்களுக்கு? புது ஜாகை மாறியதிலிருந்தே நீங்க சரியில்லை! :(

      //வாழ்த்துகள், நமஸ்காரங்கள்.//

      மிக்க நன்றி, ஆசீர்வாதங்கள் !

      //படங்களும் பதிவும் அருமை.//

      அப்படியா ! மிக்க மகிழ்ச்சி.

      //நல்ல சாப்பாடு மிஸ்ஸாகிட்டே...//

      ஆச்சி .... உங்களை நினைச்சுக்கிட்டே நாங்க மூக்கைப் பிடிக்க சாப்பிட்டோம். :)))))

      Delete
  48. வணக்கம்....சிறப்பான பதிவு....அழகான படங்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... December 4, 2018 at 11:02 AM

      //வணக்கம்....சிறப்பான பதிவு....அழகான படங்கள் வாழ்த்துகள்//

      அடேடே .... வாங்கோ. உங்களை நான் பார்த்து எத்தனை நாளாச்சு?

      மறக்காம இங்கு வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்குது.

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  49. தங்களது எழுபதாவது பிறந்தநாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் கோபு சார். தாங்கள் எழுச்சியுள்ள இளைஞர் என்பதை தங்கள் எழுத்துக்களே பறைசாற்றுகின்றன. புகைப்படங்கள் விழாவை நேரில் கண்டுகளித்த உணர்வைத் தருகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகான தங்கள் பதிவு பார்த்து மிகவும் மகிழ்ச்சி கோபு சார்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி December 5, 2018 at 9:23 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.
      //தங்களது எழுபதாவது பிறந்தநாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் கோபு சார்.//

      தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //தாங்கள் எழுச்சியுள்ள இளைஞர் என்பதை தங்கள் எழுத்துக்களே பறைசாற்றுகின்றன. //

      ஆஹா..... எண்ணங்களிலும், எழுத்துக்களிலும், பதிவின் தலைப்பிலும் நான் எப்போதுமே எழுச்சி மிக்க 16 வயது இளைஞன் மட்டுமே.

      மற்றபடி தோற்றத்திலும், தொந்தியிலும், சரீர சிரமங்களிலும், சோம்பேறித்தனத்திலும் நான் ஒரு சுத்த ’வழுவட்டை’ மட்டுமே.

      தங்களின் அந்த வழுவட்டை + எழுச்சி விமர்சனத்தை (சங்கீத உபந்யாசத்தை) இப்போது மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு சிரித்து மகிழ்ந்தேன். https://gopu1949.blogspot.com/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html

      //புகைப்படங்கள் விழாவை நேரில் கண்டுகளித்த உணர்வைத் தருகின்றன.//

      மிகவும் சந்தோஷம். Professional Video/Photographers கொடுத்துள்ள rough output இன்னும் படா ஜோராக வந்துள்ளன. இப்போதுதான் பார்த்து மகிழ்ந்தோம். ஒருசில Small Corrections களுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும்.

      //நீண்ட நாட்களுக்குப் பிறகான தங்கள் பதிவு பார்த்து மிகவும் மகிழ்ச்சி கோபு சார்.//

      நீண்ட நாட்களுக்குப் பிறகு, ’விமர்சன வித்தகி’ எழுதியுள்ள இந்த பின்னூட்டம் எனக்கு அதைவிட மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. https://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
  50. தாங்கள் பல்லாண்டுகள் நலமுடனும், வளமுடனும் வாழ இறையருள் துணை நிற்க வேண்டியும் எங்களை ஆசிர்வதிக்குமாறு வணங்குகிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. உஷா அன்பரசு December 5, 2018 at 9:50 AM

      வாங்கோ உஷா டீச்சர், வணக்கம். தாங்கள், தங்கள் மாணவனான என்னைக் காதைப் பிடித்துத் திருகியது எனக்கு இன்னும் வலிக்குது. :)

      நீங்க நல்லா இருக்கீங்களா? தங்கள் வீட்டுக்காரரும் தங்கள் பெண் குழந்தையும் செளக்யமா?

      நீண்ட நாட்களுக்குப் பின் வேலூர் கோட்டையிலிருந்து தங்களின் அபூர்வ வருகையால் திருச்சி மலைக்கோட்டையில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டித் தீர்த்து வருகிறது. :))

      //தாங்கள் பல்லாண்டுகள் நலமுடனும், வளமுடனும் வாழ இறையருள் துணை நிற்க வேண்டியும் எங்களை ஆசிர்வதிக்குமாறு வணங்குகிறேன்...!//

      தங்களின் அன்பான வேண்டுதல்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த ஆசிகள்.

      அன்புடன் (காது வலியுடன்)
      உங்கள் மாணவன்
      கோபாலகிருஷ்ணன்

      Delete
  51. வணக்கம் கோபு சார்! தங்கள் எழுபதாவது பிறந்த நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! தாமதமாக வந்து வாழ்த்து சொன்னதற்கு வருந்துகிறேன். தொடர்ந்து வலைப்பக்கத்தில் பதிவு எழுதுங்கள். தங்களுக்கும் துணைவியாருக்கும் நல்ல உடல்நலத்துடன் கூடிய நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஞா. கலையரசி December 5, 2018 at 8:49 PM

      //வணக்கம் கோபு சார்!//

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //தங்கள் எழுபதாவது பிறந்த நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //தாமதமாக வந்து வாழ்த்து சொன்னதற்கு வருந்துகிறேன்.//

      அதனால் என்ன மேடம். லேட்டாக வந்தாலும் லேடஸ்ட் ஆக வந்து இங்கு கமெண்ட் கொடுத்துள்ளதில் எனக்கு சந்தோஷம் மட்டுமே.

      //தொடர்ந்து வலைப்பக்கத்தில் பதிவு எழுதுங்கள்.//

      அவ்வப்போது ஏற்பட்டுவரும் நிகழ்வுகளை இதுபோலத் தொகுத்து ஓர் பதிவாக வெளியிடுவதால், பிற்காலத்தில் எனக்கே அவை எதற்காவது ஒரு Easy Reference க்கு பயன்பட்டு வருகின்றன.

      //தங்களுக்கும் துணைவியாருக்கும் நல்ல உடல்நலத்துடன் கூடிய நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.//

      எங்கள் நலம் விரும்பியான தங்களின் வாழ்த்துகள் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது மேடம்.

      நன்றியுடன் கோபு

      Delete
  52. நமஸ்காரம்.

    இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  53. நமஸ்காரம். இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  54. நமஸ்காரம். இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies

    1. ஸ்ரீராம். December 8, 2018 at 6:29 AM

      //நமஸ்காரம். இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்த்துகள்.//

      வாங்கோ ’ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்’ .. வணக்கம். ஆசீர்வாதங்கள். தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு எந்தன் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)

      Delete
  55. COMMENT OF CHITRA SOLOMON FROM USA THROUGH MAIL ON 08.12.2018

    அற்புதம்! பல்லாண்டுகள் வாழ்க!
    அருமையான வேளையில், பல ஆசிருடன் சிறப்புப் பெற்ற தங்களின் ஆசிரை வேண்டுகிறோம்.
    வாழ்த்துக்களும் வணக்கங்களும்
    என்றும் அன்புடன்
    சித்ரா

    ReplyDelete
  56. COMMENT OF Mrs. PATTU RAJ THROUGH MAIL ON 09.12.2018

    Super sir. Thank you.
    By god's grace carry on. All the best for good things in life.
    Namaskaram.

    ReplyDelete
  57. COMMENT FROM Mrs. PREMA MADHUPRASAD THROUGH MAIL ON 08.12.1949

    -=-=-=-=-=-

    Dear sir
    Congratulations on your new release. One more feather in ur cap. Thanks to saraswati for giving u a good writing skill.

    Wish u a long life and another release with title enbathai etinen.

    God bless
    Regards
    Madhu n prema

    -=-=-=-=-=-

    ReplyDelete
  58. COMMENT FROM Mrs. NIRMALA MOHAN FROM MUSCUT THROUGH MAIL ON 03.12.2018

    -=-=-=-=-=-

    Namaskars Chitappa. Read all the details. Great with nice photographs. Pranams with loads of prayers.

    Nirmala Mohan

    -=-=-=-=-=-

    ReplyDelete
  59. FaceBook Comments:

    ‎T.v. Krishnan‎ to Vai Gopalakrishnan
    Yesterday at 11:41 AM ·

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வை.கோ. Wish You Many More Happy Returns Of The Day.

    ReplyDelete
  60. FaceBook Comments:

    ‎Venkataraman Nagarajan‎ to Vai Gopalakrishnan
    Yesterday at 9:33 AM

    Many more happy returns of the day. God bless you.

    ReplyDelete
  61. FaceBook Comments:


    ‎Viji Krishnan‎ to Vai Gopalakrishnan
    Yesterday at 9:11 AM·

    Iniya pirandanal nalvalthukkal

    ReplyDelete
  62. FaceBook Comments:

    ‎Ananthasayanam Thiruvenkatachary‎ to Vai Gopalakrishnan
    18 hrs·

    Happy birthday to you sir....

    ReplyDelete
  63. FaceBook Comments:

    Viji Sathya Happy Birthday Vai Gopalakrishnan

    ReplyDelete
  64. FaceBook Comments:

    Venugopalan R இதயம் நிறைந்த வாழ்த்துகள் சார்! அடுத்த தடவை திருச்சி வரும்போது தம்பதிகளிடம் ஆசி வாங்கணும்! :-)

    ReplyDelete
  65. FaceBook Comments:

    Asiya Omar நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  66. FaceBook Comments:

    -=-=-=-
    ‎Ananthasayanam Thiruvenkatachary‎ to Vai Gopalakrishnan
    19 hrs·

    Happy birthday to you sir....
    -=-=-=-

    Vai Gopalakrishnan ஆஹா..... தங்களின் கடைக்கண் பார்வை என் மீதும் பட்டது என் பாக்யமே. தன்யனானேன். மிக்க நன்றி, ஸார். 🙏🤗🙏

    -=-=-=-

    Ananthasayanam Thiruvenkatachary

    swamin....I am blessed...have a nice day...

    -=-=-=-

    Vai Gopalakrishnan Ananthasayanam Thiruvenkatachary வைகுண்ட ஏகாதஸி திருநாள் சமயம், அனந்தசயனப் பெருமாளே நேரில் வருகை தந்து பிரஸன்னமாகி, என்னைத் தடுத்தாட் கொண்டுள்ளது அடியேன் செய்த பாக்யம். 🙏🤗🙏

    -=-=-=-

    Ananthasayanam Thiruvenkatachary Uyarndhavar neengal...

    -=-=-=-

    Vai Gopalakrishnan //Uyarndhavar neengal...// ஆமாம். சுமார் ஆறடி உயரம். 93 கிலோ வெயிட். தும்பிக்கையில்லா பிள்ளையார் போன்ற தொந்தி. மிகவும் மனம் நொந்து போய் ’உனக்கே உனக்காக’ என்ற தலைப்பில் ஓர் கவிதைகூட வெளியிட்டுள்ளேன். 🤔🤔🤔🤔🤔🤔

    http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.html

    ReplyDelete
  67. Replies
    1. வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி.

      Delete
  68. அருமை .... வாழ்த்துக்கள்.....நீண்ட ஆயுளும் சிறந்த ஆரோக்கியமும் பெற இறைவனை வெண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Shakthiprabha June 9, 2019 at 2:56 PM

      வாங்கோ ஷக்தி. வணக்கம். செளக்யமா?

      தங்களின் இந்தப் பின்னூட்டம் எங்கோ மறைந்திருந்ததால் இன்றுதான் என்னால் அதனை கவனித்து வெளியிட முடிந்துள்ளது.

      //அருமை .... வாழ்த்துக்கள்.....நீண்ட ஆயுளும் சிறந்த ஆரோக்கியமும் பெற இறைவனை வெண்டுகிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  69. மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete