About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, January 28, 2020

மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள்


நேற்று (27.01.2020) திங்கட்கிழமை இரவு 7 மணி சுமாருக்கு
சுடச்சுட சூடாக எடுக்கப்பட்டதொரு அவசரமான நேர்காணல்
https://www.facebook.com/2308489056106322/videos/515924042463509/

பேட்டி எடுத்தவர் திரு. வெற்றிச்செல்வன்
Ntrichy.com ’என் திருச்சி’ ஆசிரியர்மேற்படி 15 நிமிடப் பேட்டியைக் கண்டு, கேட்டு, மகிழ
கீழேயுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
26.01.2020 ஞாயிறு - இந்தியக் குடியரசு தினம்


எனது கைக்குழந்தை (வயது: 37+) G. SRIDHAR, FINANCE MANAGER, BHEL, TIRUCHIRAPPALLI UNIT அவர்களுக்கு, அவரின் மிகச்சிறப்பான செயல்பாடுகளுக்காகவும், உற்பத்திச் செலவுகளை பெரும்பாலும் குறைப்பதற்கான தலை சிறந்த ஆலோசனைகளை வழங்கியதற்காகவும் [ESPECIALLY COST REDUCTION IN PROCUREMENT OF RAW MATERIALS],  BHEL நிர்வாகத்தால், இந்த ஆண்டுக்கான GOLD MEDAL + CERTIFICATE கொடுத்து கெளரவிக்கப்பட்டுள்ளது.  

இவரின் பழைய சாதனையொன்று, ’வெற்றித் திருமகன்’ என்ற தலைப்பினில், என்னால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது http://gopu1949.blogspot.com/2013/12/100-2-2.html    நினைவிருக்கலாம். 
 24.01.2020 தை அமாவாசை, தை வெள்ளிக்கிழமை, 
தை மாத உத்திராஷாடா நக்ஷத்திரம்.


 

அடியேனின் பெரிய தமக்கை செள. லக்ஷ்மி கங்காதரர் அவர்களுக்கு 80 வயது பூர்த்தியாகி 81-வது வயது பிறந்தநாள், மிகவும் சிம்பிளாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது.  சுமார் 108 பெண்மணிகளுக்கு, வெற்றிலை-பாக்கு, புஷ்பம், தேங்காய், வாழைப்பழம், மஞ்சள் கிழங்குகள், ஓர் புதிய விளக்கு வீதம், தாம்பூலமும், காஃபியும் அளிக்கப்பட்டன.


’பாசப்பறவைகள்’ என்ற மேற்படிப்பதிவினில், 
என்னால் காட்டப்பட்டுள்ள ஒரு இளம் ஜோடிக்கு 
10-ம் ஆண்டு திருமணநாள் இனிதே நடைபெற்றது 
[ 26.01.2020 ]

 
மலரும் நினைவுகளைக்காண இதோ ஓர் இனிய காணொளி


மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் + நல்லாசிகள் !


22.01.2020 புதன்கிழமை

காலை 11 மணி சுமாருக்கு BHEL முன்னாள் நிர்வாக இயக்குனர் Dr. VGK அவர்கள் எங்கள் இல்லத்திற்கு திடீர் வருகை தந்து மகிழ்வித்தார்கள். 
26-01-2020 ஞாயிறு மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை
BHEL திருச்சி தமிழ் எழுத்தாளர்களின் 
இரண்டாவது இனிய சந்திப்பு நடைபெற்ற இடம்: 
ஆரண்யநிவாஸ் தோட்டம், திருவானைக்கோயில்.

 

 

 

 22.12.2019 நடைபெற்ற முதல் சந்திப்புக்கான 
படங்கள் உள்ள பதிவுக்கான இணைப்பு:


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

39 comments:

 1. அருமையான செய்திகள். வாட்சப்பிலும் தாங்கள் கொடுத்த சுட்டி கிடைத்தது. உங்கள் அருமைக்குழந்தைக்கு எங்கள் வாழ்த்துகள், ஆசிகள். தொடர்ந்து மேன்மேலும் பற்பல விருதுகளைக் குவிக்கவும் பிரார்த்தனைகள். உங்களால் காட்டப்பட்டுத் திருமணம் புரிந்து கொண்ட தம்பதிகளுக்கு மண நாள் வாழ்த்துகள், ஆசிகள். தமிழ் எழுத்தாளர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன். அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam January 28, 2020 at 7:18 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அருமையான செய்திகள். வாட்சப்பிலும் தாங்கள் கொடுத்த சுட்டி கிடைத்தது.//

   ஆஹா, சந்தோஷம். எனது பேட்டியைத் தங்களால் காண முடிந்ததா? அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.

   //உங்கள் அருமைக்குழந்தைக்கு எங்கள் வாழ்த்துகள், ஆசிகள். தொடர்ந்து மேன்மேலும் பற்பல விருதுகளைக் குவிக்கவும் பிரார்த்தனைகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. எல்லாம் தங்களைப் போன்ற நலம் விரும்பிகளின் ஆசீர்வாதங்கள் மட்டுமே காரணம்.
   //உங்களால் காட்டப்பட்டுத் திருமணம் புரிந்து கொண்ட தம்பதிகளுக்கு மண நாள் வாழ்த்துகள், ஆசிகள்.//

   மிகவும் சந்தோஷம், மேடம். அவர்களிடம் சொல்லி விடுகிறேன். அவர்கள் சார்பில் என் நன்றிகள்.

   //தமிழ் எழுத்தாளர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன். அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகள்.//

   மிகச் சிறப்பாக நடைபெற்றது மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் கோபு

   Delete
 2. பகிர்ந்த அனைத்தும் அருமை.உங்கள் நேர்காணல் காணொளி வரவில்லை.

  உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
  மேலும் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

  உங்கள் அக்காவிற்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பாசப்பற்வை ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.


  எழுத்தாளர் சந்திப்பு அருமை.
  காணொளிகள் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு January 28, 2020 at 9:46 AM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //பகிர்ந்த அனைத்தும் அருமை.//

   சந்தோஷம்.

   //உங்கள் நேர்காணல் காணொளி வரவில்லை.//

   காணொளி மேல் கிளிக் செய்யாமல், கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மேல் கிளிக் செய்யுங்கோ, ப்ளீஸ்.

   //உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
   மேலும் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //உங்கள் அக்காவிற்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.//

   மிகவும் சந்தோஷம், மேடம்.

   //பாசப்பறவை ஜோடிக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //எழுத்தாளர் சந்திப்பு அருமை. காணொளிகள் பார்த்தேன்.//

   மிகவும் சந்தோஷம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 3. கேட்டும் கண்டும் இரசித்தோம்...வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. Yaathoramani.blogspot.com January 28, 2020 at 10:56 AM

   வாங்கோ, வணக்கம்.

   //கேட்டும் கண்டும் இரசித்தோம்...வாழ்த்துக்களுடன்...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 4. COMMENTS OF Mr. T.ANANTHASAYANAM, GENERAL MANAGER OF BHEL, NEW DELHI IN MY FACEBOOK PAGE

  Ananthasayanam Thiruvenkatachary

  மிக்க மகிழ்ச்சி... நேர்காணல் எடுத்தவர் கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால் இன்னும் நிறைய எங்களுக்கு கேட்கக் கிடைத்திருக்கும். Tv காரரோ...?

  ஒரு பெரிய புத்தகம் சில புத்தகங்கள் எழுதியிருப்பதோடல்லாமல் ஒரு சிறு வரலாறும் உருவாக்கி இருக்கிறீர்கள்.. நான் நம் ஸ்ரீதரையும் தான் சொல்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. Ananthasayanam Thiruvenkatachary

     //மிக்க மகிழ்ச்சி...//   

   வாங்கோ ஸார், வணக்கம்.

   //நேர்காணல் எடுத்தவர் கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால் இன்னும் நிறைய எங்களுக்கு கேட்கக் கிடைத்திருக்கும்.//

   தாங்கள் சொல்வது மிகவும் சரியே. முப்பது நிமிடங்களாவது ஒதுக்கியிருக்கலாம். எனக்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதற்குள் பலவிஷயங்களை என்னால் கோர்வையாக சொல்ல இயலவில்லை. அடியேன் அவரிடம் சொன்ன தகவல்களைவிட சொல்லாத தகவல்கள் என்னிடம் மிக அதிகமாக உள்ளன.

   // Tv காரரோ...?//

   Ntrichy.com (என் திருச்சி) என்ற அமைப்பின் ஆசிரியர். மிகச் சாமானியர்கள் முதல், மிகப் பெரிய சாதனையாளர்கள் வரை பேட்டி எடுத்து ஃபேஸ்புக் + யூ-ட்யூப் பில் வெளியிட்டு வருகிறார். எழுத்துத்துறை மட்டுமல்ல. அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களையும் பேட்டி எடுத்து வருகிறாராம். பொதுவாக நம் திருச்சி மாவட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது அந்த Ntrichy.com என்பதை உணர முடிந்தது என்னால்.

   திடீரென்று அன்று, என் எழுத்துலக மானஸீக குருநாதர் என்னை போன் செய்து அழைத்தார். ஒரு ஆட்டோக்காரரை என் வீட்டுக்கே அனுப்பியுள்ளதாகச் சொன்னார். என்னால் வெளியிடப்பட்ட நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரதி வீதம் எடுத்துக்கொண்டு, 10 நிமிடங்களுக்குள் மாடியிலிருந்து கீழே இறங்கி, அங்கு நிற்கும் ஆட்டோவில் ஏறி புறப்பட வேண்டும் என்று திடீர் உத்தரவு (அன்புக் கட்டளை) போட்டுவிட்டார். அதனால் PREPARATION ஏதும் இன்றி மிகவும் CASUAL ஆக அளிக்கப்பட்ட பேட்டி அது.
    
   //ஒரு பெரிய புத்தகம் சில புத்தகங்கள் எழுதியிருப்பதோடல்லாமல், ஒரு சிறு வரலாறும் உருவாக்கி இருக்கிறீர்கள்.. நான் நம் ஸ்ரீதரையும் தான் சொல்கிறேன்.. //

   புரிகிறது, ஸார். எல்லாம் ஸ்ரீரங்கம் ’அனந்தசயனப் பெருமாள்’ அவர்களின்  அனுக்கிரஹம்தான். அவரைப் பெற்றது நானாக இருப்பினும், வரலாறாக உருமாற்றியதில், மேலதிகாரியான தங்களின் வழிகாட்டுதல்கள், மிக அதிகம் என்பது என் எண்ணம். சமீபத்தில் தங்களை புதுடெல்லிக்கு பணி மாற்றம் செய்தபின்பும், நம் ஸ்ரீதரை, நம் அலுவலகத்தில் எல்லோரும், ’ஜூனியர் சயனம்’ என்றே சொல்லி வருகிறார்களாம். இதைக்கேட்க எனக்கே மிகவும் பெருமையாக உள்ளது. :)

   அன்புடன் VGK

   Delete
 5. தமக்கையாருக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.  உங்கள் மானுக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.   காணொளி இரண்டும் இப்போது பார்க்க எனக்கு நேரமில்லை. பின்னர்தான் பார்க்க வேண்டும். ஆரண்யநிவாஸ் தோட்டத்தில் நடந்த  சந்திப்பும் இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். January 29, 2020 at 5:27 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

   //தமக்கையாருக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.//

   சந்தோஷம். தங்களுக்கு எங்கள் இருவரின் ஆசிகளும்.

   //உங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //காணொளி இரண்டும் இப்போது பார்க்க எனக்கு நேரமில்லை. பின்னர்தான் பார்க்க வேண்டும்.//

   பரவாயில்லை. மெதுவாக நேரம் இருக்கும்போது பாருங்கோ, போதும்.

   //ஆரண்யநிவாஸ் தோட்டத்தில் நடந்த சந்திப்பும் இருந்திருக்கும்.//

   ஆமாம். அவையும் புகைப்படங்களாகவும், மிகச்சிறிய காணொளியாகவும் காட்டப்பட்டுள்ளன.

   -=-=-=-=-=-

   ஊசிக்குறிப்பு:-

   ‘எங்கள் ப்ளாக்’கில் அடிக்கடி (குறிப்பாக திங்கள் செவ்வாய்களில்) நெல்லைத்தமிழன் என்ற பெயரில் ஒரு பிரபலம் தோன்றுவாரே .... அவரை எங்கே இப்போதெல்லாம் இங்கு காணும்?

   லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு எங்காவது போய் இருப்பாரோ? அதுபோல லண்டனைச் சேர்ந்த நம் அதிரடி அதிராவையும் காணும். அவர்கள் இருவரையும் தாங்கள் ஒருவேளை தொடர்பு கொள்ள நேர்ந்தால் நான் மிகவும் விஜாரித்ததாகச் சொல்லவும். :))

   -=-=-=-=-=-

   Delete
  2. எந்தத் தளத்துக்கும் போகலை கோபு சார். விட்ட குறை தொட்ட குறையா எபில ஓரிரு இடுகைகளுக்குப் போறேன். (அலைபேசி வழியே). இரண்டு வாரங்களுக்கு அப்புறம்தான் இணைத்துக்கு வரும்படி இணையம் கிடைக்கும். நேரம் கிடைக்கும்.

   Delete
  3. நெல்லைத்தமிழன் February 1, 2020 at 11:12 AM

   வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

   //எந்தத் தளத்துக்கும் போகலை கோபு சார்.//

   ஏன்? என்ன ஆச்சு? ஸ்வாமி.

   //விட்ட குறை தொட்ட குறையா எபில ஓரிரு இடுகைகளுக்குப் போறேன். (அலைபேசி வழியே).//

   தெரியும். அதனால்தான் காணாமல் போனவர்கள் பற்றிய செய்திகளை, குறிப்பாக நம் ஸ்ரீராமிடம் கேட்டுள்ளேன். :)

   //இரண்டு வாரங்களுக்கு அப்புறம்தான் இணைத்துக்கு வரும்படி இணையம் கிடைக்கும். நேரம் கிடைக்கும்.//

   ஓஹோ ... அப்படியா, நல்லது. ஒரே நேரத்தில் உங்கள் இருவரையும் சேர்ந்தாற்போல காணவில்லை என்றதும் மிகவும் கவலையாப்போச்சுது. எனக்கு கையும் ஓடலை, லெக்கும் ஆடலை. தேம்ஸ் பக்கமெல்லாம் போய்கூடத் தேடிப்பார்த்துவிட்டேன். :))

   எங்கோ யாருடனோ, ‘ஆள் இருக்கிறேன்’ என்று, ஜஸ்ட் ஒரு ஆஜர் கொடுத்துள்ளதற்கு என் நன்றிகள்.

   Delete
 6. Very glad to see your interview on NTrichy.com... your humility as a person and your stories based on reality impresses each and everyone in your contacts and that's why today your name is in the list of world's renowned writers. Your awards and your constant determination to achieve something and reach the heights, had thrown light on the path of today's younger generation through this interview. Very inspiring interaction.. congratulations.��
  My heartfelt pranams to your elder sister. My belated birthday wishes to her.
  My belated wedding anniversary wishes to the young couple. I wish them many more happy years of togetherness. Background song is too good.
  2nd year writers' meet ����
  Surprise visit by your ex admin officer surprised me as well...
  Heartfelt congratulations to your son...As I said earlier, "like father like son" is the suitable phrase.
  Overall, January 2020 has brought you a big bonanza. ������

  ReplyDelete
  Replies
  1. Padma Suresh  January 29, 2020 at 2:50 PM

   வாங்கோ MDMT, வணக்கம் மேடம்.

   //Very glad to see your interview on NTrichy.com... your humility as a person and your stories based on reality impresses each and everyone in your contacts and that's why today your name is in the list of world's renowned writers. Your awards and your constant determination to achieve something and reach the heights, had thrown light on the path of today's younger generation through this interview. Very inspiring interaction.. congratulations.��//

   ஆஹா, தாங்கள் என் மீதும், என் குடும்பத்தார் மீதும், வைத்துள்ள அன்பினாலும், வாத்ஸல்யத்தினாலும், என்னைப்பற்றி எனக்கே தெரியாத ஏதேதோ சொல்லி மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளீர்கள். நேர்காணல் காணொளியைப் பார்த்து, பேட்டியைக் கேட்டு, மனதாரச் சொல்லியுள்ள கருத்துக்கள், என்னை அப்படியே சொக்க வைத்து விட்டன.  மிக்க நன்றி.

   //My heartfelt pranams to your elder sister. My belated birthday wishes to her.//

   என் பெரிய அக்காவிடம் சொல்லிவிடுகிறேன். மிகவும் சந்தோஷம்.

   //My belated wedding anniversary wishes to the young couple. I wish them many more happy years of togetherness.//

   சந்தோஷம். அவளிடமும், அவள் கணவரிடமும் தெரிவித்து விடுகிறேன். அவர்கள் சார்பில் என் நன்றிகள்.

   //Background song is too good.//

   ஆம். எனக்கும் அது பிடித்திருந்தது.

   //2nd year writers' meet ����//

   வழக்கம்போல இனிமையாக நடைபெற்றது. அடுத்த மூன்றாவது கூட்டம் வரும் 23.02.2020 ஞாயிற்றுகிழமை Dr. VGK அவர்கள் வீட்டிலேயே நடக்க உள்ளது.

   //Surprise visit by your ex admin officer surprised me as well...//

   ஆம். அனைத்து விஷயங்களிலும் அவர் மிகவும் அறிவாளி + திறமைசாலி + நல்ல நிர்வாகி, பார்ப்பதற்கும் பழகுவதற்கும், மிகவும் எளிமையானவர். மனிதநேயம் மிக்கவர். மிகவும் நேர்மையானவர். ஆரம்பத்திலிருந்தே என்னிடம் கொஞ்சம் பிரியம் கொண்டவர். இருப்பினும் அத்தனை பெரிய புகழ்பெற்ற மனிதர் [V.V.I.P], என் வீடுதேடி, மிகச் சாதாரணமானவனான என்னை, அவர் நேரில் சந்திக்க வந்தது எனக்கும் மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. மிகவும் பதட்டமாகிப் போனேன். எனக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. :) 

   //Heartfelt congratulations to your son...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //As I said earlier, "like father like son" is the suitable phrase.//  

   ஆஹா ...... This is TOO much ! 

   //Overall, January 2020 has brought you a big bonanza. ������//

   ஆமாம். இவை அத்தனைக்கும் காரணம், 20.01.2020 திங்கட்கிழமையன்று, தங்களின் திருக்கரங்களால் எனக்கு அனுஷம் பிரஸாதம் அளிக்கப்பட்டதினால் மட்டுமே இருக்கலாம் என்று அடியேன் நினைத்து மகிழ்கின்றேன்.
    
   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆழமான, விரிவான, விளக்கமான, மிக நீண்ட பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு 

   Delete
 7. Replies
  1. திண்டுக்கல் தனபாலன் January 29, 2020 at 4:26 PM

   வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.

   //வாழ்த்துகள் ஐயா...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 8. உங்கள் மகனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். தமக்கைக்கு நமஸ்காரங்கள். உங்கள் பேட்டியை இனிமேலதான் கேட்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Bhanumathy Venkateswaran January 30, 2020 at 9:49 PM

   //உங்கள் மகனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //தமக்கைக்கு நமஸ்காரங்கள்.//

   சந்தோஷம். அவர்களிடம் சொல்லிவிடுகிறேன்.

   //உங்கள் பேட்டியை இனிமேலதான் கேட்க வேண்டும்.//

   பரவாயில்லை. நேரம் கிடைக்கும்போது, பொறுமையாகக் கேளுங்கோ. மிகச் சிறிய 15 நிமிடப்பேட்டிதான். உங்கள் ஊரான திருச்சி-லால்குடி போன்றவைகள் பேட்டியில் இடம் பெற்றிருப்பதால், தாங்கள், ஒருவேளை அந்தப் பேட்டியை விரும்பலாம்.

   தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 9. WHATS APP COMMENTS FROM [5/23] RAJU ALIAS Mr.S.NAGARAJAN AT 23.46 Hours ON 30.01.2020

  -=-=-=-=-=-

  Yesterday's interview and your reply to the media was wonderful. Your short story books given as free during ur 60th anniversary was also a tip of ice that showed your philanthropy. Further your son's award on republic day by BHEL will surely make my dream of your son's elevation to the highest post in the coming years. Kudos to Sreedhar and my salute to Gopu mama.

  -=-=-=-=-=-

  ReplyDelete
  Replies
  1. My Dear Raju [Gurunatha],

   WELCOME. THANKS A LOT FOR YOUR SWEET COMMENTS!

   Yours affectionately,
   GOPU

   Delete
 10. மகிழ்வான நிகழ்வுகளைப் பகிர்ந்த விதம் அருமை. நல்ல விஷயங்களைப் பகிர்தல், நண்பர்களை அரவணைத்தல், உறவினர்களை அறிமுகப்படுத்துதல், நேரத்தை முழுமையாக பயன்படுத்தல் என்ற பலவற்றை உங்களிடம் கற்கவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University January 31, 2020 at 11:14 AM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //மகிழ்வான நிகழ்வுகளைப் பகிர்ந்த விதம் அருமை.//

   மிக்க மகிழ்ச்சி.

   //நல்ல விஷயங்களைப் பகிர்தல், நண்பர்களை அரவணைத்தல், உறவினர்களை அறிமுகப்படுத்துதல், நேரத்தை முழுமையாக பயன்படுத்தல் என்ற பலவற்றை உங்களிடம் கற்கவேண்டும்.//

   அடடா .... வஸிஷ்டர் வாயால் பிரும்மரிஷி போல, நம் முனைவர் வாயால் இதனைக் கேட்க தன்யனானேன்.

   மிகப் பிரபலமான தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான ஊக்குவிக்கும் அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   Delete
 11. சிறப்பான செய்திகள்.

  உங்களைப் பேட்டி கண்ட காணொளி நன்று.

  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் February 1, 2020 at 7:42 PM

   வாங்கோ, மை டியர் வெங்கட் ஜி, வணக்கம்.

   //சிறப்பான செய்திகள்.//

   மிக்க மகிழ்ச்சி, ஜி.

   //உங்களைப் பேட்டி கண்ட காணொளி நன்று.//

   ஆஹா, சந்தோஷம், ஜி.

   //வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

   நன்றியோ நன்றிகள், ஜி.

   Delete
 12. நேர்காணல் பார்க்க முடியவில்லை. செட்டிங்க்ஸ் மாத்தணுமோ..

  உங்கள் குழந்தையின் சாதனைக்கு வாழ்த்துகள்.

  பத்தாண்டு சிறப்பாக வாழ்ந்து இன்னும் பல்லாண்டு உங்கள் ஆசியோடு வாழப்போகும் தம்பதியர்க்கு எங்களது வாழ்த்துகள்.

  ஆரண்யநிவாஸ் - ராமமூர்த்தி சார் தோட்டமா ? மாதம் ஒருமுறை பதிவர் சந்திப்பு நடைபெறுகிறதா.

  அனைத்துத் தகவல்களும் அருமை. அதிலும் அக்காவின் பாதம் பணிந்து ஆசி வேண்டுகிறோம். கனகாபிஷேகம் காண அவர்களுக்கும் எங்கள் பிரார்த்தனைகள்.

  வாழ்க வளமுடன். பலநாள் கழித்து உங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி விஜிகே சார் :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan  February 3, 2020 at 10:28 PM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //நேர்காணல் பார்க்க முடியவில்லை. செட்டிங்க்ஸ் மாத்தணுமோ..//

   காணொளியை கம்ப்யூட்டரிலிருந்து போட்டோ பிடித்துக் காட்டியுள்ளேன். அதனால் அதை க்ளிக் செய்து பார்த்தால் வராது. அதன் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் போதும். நேர்காணலை பார்த்து + கேட்டு மகிழலாம். 15 நிமிடங்கள் மட்டுமே. 

   //உங்கள் குழந்தையின் சாதனைக்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //பத்தாண்டு சிறப்பாக வாழ்ந்து இன்னும் பல்லாண்டு உங்கள் ஆசியோடு வாழப்போகும் தம்பதியர்க்கு எங்களது வாழ்த்துகள்.//

   மிகவும் சந்தோஷம். அவர்களிடம் தெரிவிக்கிறேன்.

   //ஆரண்யநிவாஸ் - ராமமூர்த்தி சார் தோட்டமா ? மாதம் ஒருமுறை பதிவர் சந்திப்பு நடைபெறுகிறதா.//

   ஆமாம். ஆனால் ஒவ்வொரு மாதமும், அங்கே, அதே தோட்டத்தில் நடைபெறாது.  தமிழ் எழுத்தாளர்கள் that too connected with BHEL ஒவ்வொரு மாதமும், திருச்சியில் ஒவ்வொருவர் வீட்டில் கூடுவதாக உத்தேசித்துள்ளோம்.

   //அனைத்துத் தகவல்களும் அருமை.//

   மிக்க மகிழ்ச்சி.

   //அதிலும் அக்காவின் பாதம் பணிந்து ஆசி வேண்டுகிறோம்.//

   நிச்சயமாக. என் அக்காவிடம் சொல்கிறேன். ஆசீர்வதிப்பார்கள்.

   //கனகாபிஷேகம் காண அவர்களுக்கும் எங்கள் பிரார்த்தனைகள்.//

   தங்கள் வாக்கு விரைவில் பலிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எங்கள் அக்காவின் கணவருக்கும் பூர்வீகம் காரைக்குடிதான். தற்போது அவருக்கு வயது 92. அவர்களின் மூத்த பிள்ளை வழி பேரனுக்கு 2018 ஜனவரியில் சேலத்தில் திருமணம் நடந்து, அவன் மனைவி நிறைமாத கர்ப்பணியாக இருக்கிறாள். சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது. அந்தப் பெண்ணுக்கு பிள்ளை பிறந்தால், இந்த 2020-ம் ஆண்டிலேயே, நூறு ஆண்டுகள் நிறைவுற்றால் செய்துகொள்ளும், கனகாபிஷேகம் போலவே ஒரு மிகப்பெரிய விழா, எங்கள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். எல்லாம் கடவுள் செயல் !    

   //வாழ்க வளமுடன்.//

   சந்தோஷம்.

   //பலநாள் கழித்து உங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி விஜிகே சார் :)//

   ஆம். எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே. நான் முன்புபோல, என் வலைத்தளத்தில் அதிகம் பதிவுகள் வெளியிடுவது இல்லை. தங்களின் பதிவுகளை அவ்வப்போது பார்ப்பேன், படிப்பேன். முன்புபோல யாருக்கும் அதிகமாகப் பின்னூட்டமும் இடுவது இல்லை.

   தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபால்

   Delete
 13. Mail Comment from Chitra Solomon from USA on 04.02.2020/19.00 Hrs.

  -=-=-=-=-=-

  I tried to post my comment there. But I couldn’t post it as I haven’t logged in a very long time to my blog post. Forgot the password too.

  My comment for the post :

  Happy to know about all the wonderful news that you have shared. அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
  We seek your blessings
  Take care

  Chitra Solomon

  -=-=-=-=-=-

  ReplyDelete
  Replies
  1. To Chitra Solomon

   WELCOME TO YOU CHITRA.

   THANKS FOR YOUR KIND COMMENTS FOR THIS POST THROUGH MAIL. :)

   அநேக ஆசீர்வாதங்கள்.

   அன்புடன் கோபு மாமா

   Delete
 14. நேர்காணலை கண்டேன் கேட்டு ரசித்தேன் . .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..அடுத்த பேட்டியை  மொட்டை மாடி திருச்சி கோயில் பின்னணியில் எடுக்க சொல்லுங்க  :)உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள் .உங்கள் சகோதரியை வாழ்த்தி நமஸ்கரிக்கிறோம் .அழகிய தெய்வீக களையுள்ள இன்முகம்.
  10 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் .
  (work பிஸி ..தாமதமானாலும் தாவி வந்து விட்டேன் :))))))))))

  ReplyDelete
 15. நேர்காணலை கண்டேன் கேட்டு ரசித்தேன் . .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..அடுத்த பேட்டியை  மொட்டை மாடி திருச்சி கோயில் பின்னணியில் எடுக்க சொல்லுங்க  :)உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள் .உங்கள் சகோதரியை வாழ்த்தி நமஸ்கரிக்கிறோம் .அழகிய தெய்வீக களையுள்ள இன்முகம்.
  10 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் .
  (work பிஸி ..தாமதமானாலும் தாவி வந்து விட்டேன் :))))))))))

  ReplyDelete
  Replies
  1. Angel  February 6, 2020 at 10:30 PM

   வாங்கோ வணக்கம். தேவதையின் அபூர்வ வருகை ஆச்சர்யமளிக்கிறது.

   //நேர்காணலை கண்டேன் கேட்டு ரசித்தேன் .. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.. //

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //அடுத்த பேட்டியை  மொட்டை மாடி திருச்சி கோயில் பின்னணியில் எடுக்க சொல்லுங்க :)//

   இந்தப் பேட்டிக்கே முதலில் அப்படித்தான் திட்டமிட்டிருந்தார்கள். அதாவது எங்கள் வீட்டின் மொட்டைமாடியில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் பின்னணியில், 29/01/2020 புதன்கிழமை மாலை பேட்டி எடுப்பதாகத்தான் சொல்லியிருந்தார்கள். 

   திடீரென்று 27/01/2020 திங்கட்கிழமை மாலையிலேயே திருவானைக்கோயிலுக்கும்-ஸ்ரீரங்கத்திற்கும் இடையே உள்ள, மாம்பழச்சாலை ராஜகணபதி ஆலயம் அருகே, வேறொருவர் வீட்டில் நடத்த ஏற்பாடு செய்துவிட்டார்கள். அன்று பேட்டி எடுக்கப்பட்ட மொத்தம் எட்டு நபர்களில் ஏழு நபர்களுக்கு, அந்த அவர் வீட்டின் மொட்டை மாடியிலும், கடைசி ஆசாமியான எனக்கு மட்டும், போதிய வெளிச்சம் இல்லாமல் மாடிப்பகுதி இருட்டி விட்டதால், வீட்டுக்குள்ளும் பேட்டி எடுக்கப்பட்டது.
    
   //உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்.//

   ஆஹா, சந்தோஷம். அவரிடம் சொல்லி விடுகிறேன். 

   //உங்கள் சகோதரியை வாழ்த்தி நமஸ்கரிக்கிறோம். அழகிய தெய்வீக களையுள்ள இன்முகம்.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி. அப்படியே இதனை அவர்களிடம் சொல்லி ஆசீர்வதிக்கச் சொல்கிறேன். ஏற்கனவே என் பதிவு ஒன்றில் இவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம் என நினைக்கிறேன்.http://gopu1949.blogspot.com/2014/08/vgk-30-01-03-first-prize-winners.html  

   //10 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.//

   பெங்களூரில் உள்ள அந்த ஜோடியிடம் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து விடுகிறேன். 

   //(work பிஸி .. தாமதமானாலும் தாவி வந்து விட்டேன் :))))))))))//

   தாவி வந்த, பதட்டத்தால், ஒரு முறைக்கு இருமுறையாக பின்னூட்டம் அனுப்பி அசத்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் கோபு

   Delete
 16. வணக்கம் சகோதரரே

  சகோதரி அதிரா அவர்களின் பதிவில் மரியாதை நிமித்தமாகத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். எங்களுக்கெல்லாம் தாங்கள் குரு என்ற அர்த்தத்தில் சொன்னேன். வேறு ஒன்றுமில்லை.அங்கு வந்து என் பதிலை பாராட்டியிருந்ததற்கு மிக்க நன்றிகள்.

  தாங்கள் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி கண்டு முழுவதும் கேட்டேன். மிகவும் அருமையாக இருந்தது. தங்களது சாதனைகள் பிரமிக்க வைத்தன. இன்னமும் சாதனைகளை தொடராக்கி தாங்கள் நிறைய கதைகள் எழுதி வாழ்வில் சிறப்பான இடத்தை பெற வேண்டுமென வேண்டுமென இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

  விருது பெற்ற தங்கள் மகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் அவர் பல விருதுகளைப் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  தங்கள் தமக்கையாருக்கு என்னுடைய வணக்கங்கள். அவர்களின் ஆசிர்வாதங்கள் எல்லோருக்கும் வாழ்வில் வளம் சேர்க்கட்டும்.

  மணநாள் கொண்டாடிய தாங்கள் குறிப்பிட்டுள்ள தம்பதிகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  நான் ஒரு சதாரண இல்லத்தரசி. எனக்கு நிறைய எழுதும்(தமிழில்)ஆர்வம் மட்டும் இருந்ததால், என் குழந்தைகள் மூலமாக இந்த வலை உலகில் பிரவேசித்தேன். இப்போதும் என் நேரங்களை பொறுத்து ஏதோ என் மனதில் பட்டதை கிறுக்கி சந்தோஷமடைகிறேன். அவ்வளவுதான்.. மற்ற சகோதர, சகோதரிகளைப்போல் தாங்களும் ஆரம்பத்தில் என் பதிவுகளுக்கு தாங்கள் வந்து கருத்து தெரிவித்து என் எழுத்துக்களை ஊக்குவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. Kamala Hariharan  February 9, 2020 at 12:56 PM

   //வணக்கம் சகோதரரே//

   ஆஹா, வாங்கோ ‘கனவும் கமலாவும்’ வலைப்பதிவரே, வணக்கம்.  

   //சகோதரி அதிரா அவர்களின் பதிவில் மரியாதை நிமித்தமாகத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.//

   https://gokisha.blogspot.com/2020/02/aubergine-with-garlic-sauce.html  

   //எங்களுக்கெல்லாம் தாங்கள் குரு என்ற அர்த்தத்தில் சொன்னேன். வேறு ஒன்றுமில்லை. அங்கு வந்து என் பதிலை பாராட்டியிருந்ததற்கு மிக்க நன்றிகள்.//

   மிகவும் சந்தோஷம். தங்களுக்கு என் குருவின் (His Holiness காஞ்சி மஹாபெரியவா அவர்களின்) ஆசிகளும், அனுக்கிரஹங்களும் கிட்டிடப் பிரார்த்திக்கிறேன்.  
   http://gopu1949.blogspot.com/2013/04/9.html

   //தாங்கள் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி கண்டு முழுவதும் கேட்டேன். மிகவும் அருமையாக இருந்தது. தங்களது சாதனைகள் பிரமிக்க வைத்தன. இன்னமும் சாதனைகளை தொடராக்கி தாங்கள் நிறைய கதைகள் எழுதி வாழ்வில் சிறப்பான இடத்தை பெற வேண்டுமென வேண்டுமென இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //விருது பெற்ற தங்கள் மகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் அவர் பல விருதுகளைப் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.//

   மிகவும் சந்தோஷம், மேடம்.

   //தங்கள் தமக்கையாருக்கு என்னுடைய வணக்கங்கள். அவர்களின் ஆசிர்வாதங்கள் எல்லோருக்கும் வாழ்வில் வளம் சேர்க்கட்டும்.

   மணநாள் கொண்டாடிய தாங்கள் குறிப்பிட்டுள்ள தம்பதிகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

   சம்பந்தப்பட்டவர்களிடம், தங்களின் கருத்துக்களைச் சேர்த்து விடுகிறேன். மிக்க நன்றி.

   //நான் ஒரு சாதாரண இல்லத்தரசி. எனக்கு நிறைய எழுதும் (தமிழில்) ஆர்வம் மட்டும் இருந்ததால், என் குழந்தைகள் மூலமாக இந்த வலை உலகில் பிரவேசித்தேன். இப்போதும் என் நேரங்களை பொறுத்து ஏதோ என் மனதில் பட்டதை கிறுக்கி சந்தோஷமடைகிறேன். அவ்வளவுதான்.. மற்ற சகோதர, சகோதரிகளைப்போல் தாங்களும் ஆரம்பத்தில் என் பதிவுகளுக்கு தாங்கள் வந்து கருத்து தெரிவித்து என் எழுத்துக்களை ஊக்குவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.// 

   இந்த எழுத்துலகில், அடியேனும் தங்களைப் போன்ற மிகச் சாதாரணமானவன் மட்டுமே. தாங்களாவது ஒரு இல்லத்துக்கு அரசி. அத்துடன் ஓர் மிகச் சிறந்த பதிவரும் கூட. இது மிகவும் இமாலயசாதனை மட்டுமே. எழுத்து என்பது, நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுக்கும் வரமாகும். எழுத்துலகில் தாங்கள் மென்மேலும் ஜொலிக்க சந்தர்ப்பங்கள் கிடைக்கட்டும் என வாழ்த்தி, ஆசீர்வதித்து மகிழ்கிறேன்.

   //நன்றியுடன் கமலா ஹரிஹரன்.//

   கனவா நனவா என, என்னை அதிசயிக்க வைக்கும், தங்களின் அபூர்வ வருகைக்கும், வெகு அழகான விரிவான, வியக்க வைக்கும் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 17. கோபு சார்,
  உங்கள் காணொளி கண்டேன். பன்முகத் திறமை வாய்ந்த உங்களுடன் நட்பாக இருப்பதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.

  நான் வலையுலகத்தில் பிரவேசித்த போது, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தை மட்டும் வைத்துக் கொண்டு, உள்ளே நுழைந்தவள் நான். ஆனால் உங்கள் பின்னூட்டங்களினால், பாராட்டுக்களுடன், எப்படி எழுதலாம் என்கிற ஆலோசனைகளையும் தந்தது மாபெரும் உதவி எனக்கு.இன்றும் நான் வலைத்தளத்தில் எழுதுகிறேன் என்றால் உங்கள் ஊக்கமளிப்பு ஒரு முக்கியக் காரணம். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  விருது பெற்ற உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
  சதாபிஷேகம் நிறைவு பெற்ற உங்கள் தமக்கைக்கு என் நம்ஸ்காரங்கள்.
  வாழ்த்துக்களும், நன்றிகளும்.

  ReplyDelete
  Replies
  1. RajalakshmiParamasivam  February 15, 2020 at 10:50 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கோபு சார்,
   உங்கள் காணொளி கண்டேன். பன்முகத் திறமை வாய்ந்த உங்களுடன் நட்பாக இருப்பதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.//

   ஆஹா, தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //நான் வலையுலகத்தில் பிரவேசித்த போது, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தை மட்டும் வைத்துக் கொண்டு, உள்ளே நுழைந்தவள் நான். ஆனால் உங்கள் பின்னூட்டங்களினால், பாராட்டுக்களுடன், எப்படி எழுதலாம் என்கிற ஆலோசனைகளையும் தந்தது மாபெரும் உதவி எனக்கு. இன்றும் நான் வலைத்தளத்தில் எழுதுகிறேன் என்றால் உங்கள் ஊக்கமளிப்பு ஒரு முக்கியக் காரணம். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.//

   தங்களுக்கே நிறைய சிறப்பான எழுத்துத்திறமைகள் இயற்கையாகவே இருந்தன, மேடம். இதில் என் பங்கு மிகமிகச் சிறியது மட்டுமே. எண்ணெயும், திரியும் உள்ள ஓர் எரியும் தீபத்தின், திரியை ஓர் தீக்குச்சியால் கொஞ்சமாக தூண்டிவிட்டு, நன்கு முத்துப்போல பிரகாசிக்க வைப்பதுபோல மட்டுமே ஆகும்.

   தங்களின் தனித்திறமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

   http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html 

   http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

   http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

   http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html 

   http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html 

   http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html 

   http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

   http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

   http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

   http://gopu1949.blogspot.com/2014/10/4.html 

   http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html 

   //விருது பெற்ற உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்களும், ஆசிகளும். சதாபிஷேகம் நிறைவு பெற்ற உங்கள் தமக்கைக்கு என் நமஸ்காரங்கள். வாழ்த்துக்களும், நன்றிகளும்.//

   நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், மிக்க மகிழ்ச்சியும், மிக்க நன்றிகளும் மேடம்.

   என்றும் அன்புடன்
   கோபு

   Delete
  2. கோபு சார்,

   சலிக்காமல் இத்தனை லின்க் கொடுத்ததற்கு முதலில் என் நன்றிகள் பலப்பல. என் எழுத்துக்களையும், என்னோடு பரிசு வாங்கிய நண்பர்களின் எழுத்துக்களையும் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி கோபு சார்.
   விமர்சனங்களைப் படிக்க...படிக்க...உங்கள் கதைகள் நினைவில் வந்து மோதின...அத்தனையும் அருமை. பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்.
   நன்றி.

   Delete
  3. RajalakshmiParamasivam February 16, 2020 at 9:12 AM

   வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்வளிக்கிறது.

   //கோபு சார்,
   சலிக்காமல் இத்தனை லின்க் கொடுத்ததற்கு முதலில் என் நன்றிகள் பலப்பல.//

   இதில் சலிப்புக்கே இடம் இல்லையே. 2014-ம் ஆண்டு முழுவதும், தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு, தங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், அடியேன் வலைத்தளத்தில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய ‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ சரித்திர சாதனை ஆச்சே! இதற்கு முன்போ அல்லது இனியோ யாராலும் செய்ய முடியாத ஓர் மாபெரும் வெற்றி அல்லவா!!

   //என் எழுத்துக்களையும், என்னோடு பரிசு வாங்கிய நண்பர்களின் எழுத்துக்களையும் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி கோபு சார்.//

   என் இன்றைய மிக முக்கியமான பொழுதுபோக்கே,, இவற்றை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்வது மட்டுமே. அதனால் அனைத்துத் தகவல்களும் என் விரல் நுனிகளில் உள்ளன, மேடம். :)

   //விமர்சனங்களைப் படிக்க... படிக்க... உங்கள் கதைகள் நினைவில் வந்து மோதின... அத்தனையும் அருமை. பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார். நன்றி.//

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.

   என்றும் அன்புடன்
   கோபு

   Delete
 18. நேர்காணல் பேட்டி அருமை.
  மகனுக்கு இனிய வாழ்த்துகள்.

  சகோதரியாருக்கு நமஸ்காரம்.
  பதிவர்கள் சந்திப்பு மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. மாதேவி March 11, 2020 at 2:09 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நேர்காணல் பேட்டி அருமை.
   மகனுக்கு இனிய வாழ்த்துகள்.

   சகோதரியாருக்கு நமஸ்காரம்.
   பதிவர்கள் சந்திப்பு மகிழ்ச்சி.//

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete