[சிறுகதை - பகுதி 1 of 2 ]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
இந்த காலத்தில் பணம் மட்டும் கையில் இருந்தால், கல்யாணம் செய்வது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெண்ணைப் பெற்றவரோ, பிள்ளையைப் பெற்றவரோ, யாராக இருந்தாலும் எல்லாவற்றிற்குமே காண்ட்ராக்ட்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விடுவதால், யாருக்கும் அந்தக்காலம் போல அதிக சிரமம் இல்லாமல் எல்லாம் நல்லபடியாகவே முடிந்து விடுகிறது.
இருப்பினும் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவற்றை விநியோகிப்பது என்பது மட்டும், இன்றும் சற்று சிரமமான காரியமாகவே இருப்பதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாக என் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவக் கதையை இப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய அருமை நண்பரான அவர் அறுபதைத் தாண்டியவர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர். எதையுமே அழகாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்று விரும்புபவர். சமீபத்திய உடல் உபாதைகளால், உட்கார்ந்த நிலையில் திட்டமிட மட்டுமே முடிகிறதே தவிர, முன்பு போல சுறுசுறுப்பாக செயலாற்ற முடிவதில்லை, என்று கோயிலில் தினமும் என்னை சந்திக்கும் போது கூறுவார்.

பணம் செலவழிப்பதைப்பற்றி அதிகம் கவலையில்லையாம் அவருக்கு. எதுவும் நிறைவாக விரைவாக, மனதில் கற்பனை செய்தபடி, நல்லமுறையில் நிறைவேற வேண்டுமாம்.
அவர் மகனுக்கு இன்னும் நான்கே மாதங்களில் திருமணம் என்று நிச்சயமாகி விட்டதாம். அவரால் அழகாக அழைப்பிதழ்கள் எழுதப்பட்டு, மாதிரி அச்சாகிவந்து, அவரால் அது பலமுறை சரிபார்க்கப்பட்டு, ஒருசில பிழைகள் திருத்தப்பட்டு, ஓரிரு மாதங்கள் முன்பாகவே வெகு அழகாகத் தயாராகி, ஓரங்களில் ஈர மஞ்சள்தூள் தீட்டப்பட்ட உறைகளில் திணிக்கப்பட்டு, அவரால் தயார் நிலையில் பூஜை அறையில் வைக்கப்பட்டு விட்டனவாம்.
வெளியூரிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் தபால் விலாசங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை உறையின் மீது அழகாக எழுதி, நேரில் வந்து அழைத்ததாக பாவித்துக் கொள்ளுமாறு அச்சிடப்பட்ட ஒரு துண்டுக்கடிதம் இணைத்து, தபால் தலைகள் ஒட்டி, தபால் பெட்டியில் அவ்வப்போது சேர்த்துவிட்டு, அனுப்பிய தேதியை சிவப்பு மையால் குறித்தும் வருவதாகச் சொன்னார்.
வெளியூர்காரர்களுக்கு மட்டும் சரியாக ஒண்ணரை மாதம் முன்பே தபாலில் அவரால் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டனவாம். அப்போது தான் அவர்கள் கல்யாணத்திற்கு வந்து போக திட்டமிடவும், ரயில் பயண முன்பதிவுகள் செய்து கொள்ளவும், செளகர்யமாக இருக்கும் என்பதையும், நன்கு திட்டமிட்டே என்னிடம் விளக்கமாக எடுத்துக்கூறினார்.
உள்ளூர்காரர்களுக்கு நேரில் சென்று அழைக்க வேண்டிய அழைப்பிதழ்களை எட்டு திசைகள் வாரியாக தனித்தனியே பட்டியலிட்டு தயார் நிலையில் வைத்துக்கொண்டாராம். தினமும் ஓர் திசையில் ஆட்டோவில் சென்று முடிந்தவரை ஒரு பத்து பேர்களுக்காவது அழைப்பிதழ் கொடுத்து, நேரில் அழைத்து விட்டு வரணும் என்பது அவரின் விருப்பமாம்.
பளபளக்கும் பட்டுப்புடவையுடன், கைகளிலும் கழுத்திலும் நிறைய நகைகள் அணிந்து, சீவி முடித்து சிங்காரித்து, கொண்டையைச்சுற்றி பூச்சூடி,வெள்ளிக் குங்குமச்சிமிழைக் கையிலேந்தி, தன்னுடன் தன் மனைவியையும், பல உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சூறாவளிச் சுற்றுப்பயணமாக அழைத்துப்போகணும் என்பது தான் அவரின் ஆசை என்று சொன்னார்.
ஆனால் அடிக்கும் வெய்யில், அசந்து போயிருக்கும் தன் மனைவியின் உடல்நிலை, அவள் உள்ளத்தில் அவ்வப்போது ஏற்பட்டு மறையும் உற்சாகம் மற்றும் அலுப்பு, அன்றைய தொலைக் காட்சித்தொடர் நாடகங்களின் விறுவிறுப்பான போக்கு முதலியவற்றை ஆராய்ந்து, அன்றைய சிற்றுண்டி, சாப்பாடு, காஃபி, முதலியவற்றை ஓரளவு முடித்துக்கொண்டு, ’அத்திப்பூக்கள்’ முடிந்த கையோடு இவர் தார்க்குச்சி போட ஆரம்பித்தால், எப்படியும் ஒரு வழியாகப்புறப்பட மூணு மணிக்கு மேல் நாலு மணி கூட ஆகிவிடுகிறது, என்று சொல்லி அலுத்துக்கொண்டார்.
ஆட்டோவில் ஏறி அமர்ந்து, ஒரு நாலு வீடுகள் அழைப்பதற்குள் நாக்குத் தள்ளிப் போய்விடுகிறதாம். ஆட்டோக்காரரின் அவசரம், போக்குவரத்து நெரிசலில் ஆமை அல்லது நத்தை வேகத்தில் நகரும் வண்டிகள், டிராஃபிக் ஜாம் ஆகி சுத்தமாக நகரவே முடியாத வண்டிகள், ஒன்வே ட்ராஃபிக், சிக்னலில் நிற்பது என்னும் பல தொல்லைகள் மட்டுமல்ல. போகும் இடத்திலெல்லாம் அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என்ற படுத்தல்கள். லிஃப்ட் உள்ள இடங்கள், லிஃப்ட் இல்லாத இடங்கள், லிஃப்ட் இருந்தாலும் மின்வெட்டு மற்றும் இதர ரிப்பேர்களால் இயங்காது என்ற அறிவிப்பு போன்ற நிலைமைகள், பற்றி மிகவும் நகைச்சுவையாகத் தெரிவிப்பார்.
”ஒரே பெயரில் பல அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். உதாரணமாக “பாரத் வில்லா”, ”பாரத் எம்பயர்”, ”பாரத் வெஸ்ட் அவென்யூ”, ”பாரத் ஈஸ்ட் அவென்யூ”, “பாரத் கார்டன்ஸ்” என்று பலவிதமான கட்டடப் பெயர்களால் வந்திடும் குழப்பங்கள்;
சுப்ரமணியன் என்றாலோ பாலசுப்ரமணியன் என்றாலோ எல்லா அடுக்கு மாடிகளிலும் யாராவது ஒருத்தர் அதே பெயரில் ஆனால் ஆள் மாறாட்டமாக இருந்து வரும் துரதிஷ்டம்;
ஆங்காங்கே உள்ள வாட்ச்மேன்களின் கெடுபிடிகள், நாய்த்தொல்லைகள், பூட்டியிருக்கும் வீடுகள், திறந்திருந்தாலும் உள்ளே தாளிட்டு லேசில் வந்து கதவைத் திறக்காத நபர்கள், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றோ அல்லது ஷாப்பிங் போயோ வீடு திரும்பாமல் இருத்தல் என பல்வேறு சோதனைகள்;
முட்டிக்கால் வலியுடன், ஆயிண்மெண்ட் தடவியபடியே, மகன் கல்யாணம் என்ற மன மகிழ்ச்சியிலும், உடலுக்கு ஒரு தேகப்பயிற்சி தானே என்ற சமாதானத்துடனும், மூச்சு வாங்கியபடி, மாடி மாடியாக ஏறி இறங்கியதில் தினமும் முட்டி வலியும் முழங்கால் வலியும் அதிகமாகி, வீக்கம் கண்டது தான் மிச்சம்” என்றும் நேற்று என்னிடம் கூறினார்.
”வேலை மெனக்கட்டு, பத்திரிக்கை அடித்து, வீடு தேடி வந்து அதை உரியவரிடம் சேர்த்தாலும், மங்கள அக்ஷதைகள் தரையில் சிந்தி யார் கால்களிலாவது குத்தி விடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில், முதல் வேலையாக நமக்குத்தெரியாமல் அதனை, நேராகச்சென்று, டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு, பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;
பிறகு வீட்டில் வைத்த பத்திரிகையை பல இடங்களில் தேடியும் அது கிடைத்தால் அதைப்படிக்க மூக்குக்கண்ணாடி கிடைக்காமலும், மூக்குக்கண்ணாடி கிடைத்தால் பத்திரிகை கிடைக்காமலும், அலுத்துப்போய், முஹூர்த்த தேதியையும் மறந்து விட்டு, பேசாமல் விட்டு விடுபவர்களும் உண்டு;
’தன் திருமணமாகாத பெண் அல்லது பிள்ளைக்கு பொருத்தமான இடமாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ’ என ஜாதகத்தை ஒரு பிரதி எடுத்துத் தருபவர்களும் உண்டு. ஆட்டோ வெயிட்டிங் என்று சொன்ன பிறகு தான், அரை மனதுடன் ஆளை விடுபவர்கள், இந்த மகானுபாவர்கள்;
வீடு தேடி வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று, “வாங்க! உட்காருங்க!! ஜில்லுனு தண்ணீர் குடியுங்க!!! என்று சொல்லி மின்விசிறியை சுழலவிட்டு, டிபன், காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால், ஜூஸ் எல்லாமே உள்ளது, எது சாப்பிடுவீங்க? என்ன கொண்டு வரலாம்? என்று அன்புடன் கேட்டு உபசரிப்பவர்கள், ஒரு ஐந்து சதவீதம் மட்டுமே;
வெகு சுவாரஸ்யமாக தொலைகாட்சிப் பெட்டியிலேயே தங்கள் கவனத்தை முழுவதுமாக வைத்துக்கொண்டு, ஏதாவது சீரியல்களிலோ, வேறு ஏதாவது நிகழ்ச்சிகளிலோ அல்லது கிரிக்கெட் மேட்ச்சிலோ மூழ்கி இருப்பவர்கள் தான் பலரும் உண்டு;
இடையே வரும் வர்த்தக விளம்பர நேரத்திற்குள் நம்முடன் சுருக்கமாகப்பேசி நம்மை அனுப்பிவிட அவர்கள் துடிப்பதை நாமும் நன்றாகவே உணர முடியும்” என்று இன்று அவர் ஒரு பெரிய பிரசங்கமே நிகழ்த்தியது எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது.

அழைப்பு
அனுபவம்
தொடரும் ...
அனுபவம்
தொடரும் ...
[இந்தச் சிறுகதையின் நிறைவுப்பகுதி வரும் 15.09.2011 வியாழன் அன்று வெளியிடப்படும்.]