என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 1 மார்ச், 2014

VGK 05 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - காதலாவது கத்திரிக்காயாவது !





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 05 -  ” காதலாவது கத்திரிக்காயாவது   ”





மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து













இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 






    



இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்: 



அதில் ஒருவர்


திரு. J. அரவிந்த் குமார் 


அவர்கள்



பொறியியல் பட்டதாரியான இவர்

தற்சமயம் ஆஸ்திரேலியாவில் 

பணியாற்றி வருகிறார்.


வலைத்தள முகவரி

கதையில் பரமுவின் கண்களுக்கு 
நல்விருந்தாய் காமாட்சி அமைந்தது போல

இந்த இளைஞருக்கு மிகவும் பிடித்தமான
வாழ்க்கைத்துணை  விரைவில் அமையவேண்டி

மனதாரப் பிரார்த்திக்கிறோம்  
அன்புடன் ஆசீர்வதிக்கிறோம்.

{  Who is that Very Lucky Bride !  }

ALL THE BEST !
Mr. J. ARAVIND KUMAR Sir !!










 





இரண்டாம் பரிசினை வென்றுள்ள 



திரு. J. அரவிந்த் குமார் 


 அவர்களின் விமர்சனம் இதோ:






’கத்தரிக்காய் முற்றினால் 
கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் ??!!’

என்று பழமொழிசொல்வார்கள் .. அது உண்மைதான் போலிருக்கிறது..

காதல் வங்கியில் பொக்கிஷமாக பாதுகாப்பாக பூட்டப்பட்ட காதல் இன்றோ ”காதலாவது ..... கத்திரிக்காயாவது” என்று  காய்கறி விற்கும் காமாட்சியாலும், மெஸ்ஸிற்கு காய்கறிகள் வாங்கவரும்  தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பரமுவாலும் பெரியமார்க்கெட்டுக்கே வந்துவிட்டதே..!

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் கட்டியிழுத்தாய் என்று காந்தமாக கவர்ந்து காதலில் வீழ்த்திவிட்டதே இந்த காதல் ..!

மலர்ந்து மணம் பரப்ப தயாராக இருக்கும் வாசமுள்ள மலரை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக  வைத்துப் பூட்டினாலும் அதன் சுகந்தம் விகசித்து வாசம் வீசி காட்டிக்கொடுப்பது போல ஏதோ ஒரு வித பாசமும், நேசமும் மலரத் தொடங்கி பூத்துக்குலுங்கி காட்டிக்கொடுத்துவிட்டதே ..!


எட்டாவது வரை மட்டும் படித்துள்ள போதும், கணக்கு வழக்கில் புலியான காமாட்சியை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது என்று சொற்சித்திரத்தால் காமாட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார் கதை ஆசிரியர்.. 

உண்மைதான். கணிணி படித்த இன்றைய தலைமுறையினருக்குத்தானே கூட்டலுக்கும் கழித்தலுக்கும் கால்குலேட்டர் தேவைப்படுகிறது..!

காய்கறிக்காரர்கள், பால் தயிர் விற்பவர்கள் போன்ற எளிய மக்கள் கணக்கு வழக்கில் மனக்கணக்காகவே சொல்வதை கண்டே இருக்கிறோம்.. 


மார்க்கெட் அராஜகங்கள் நம் கண்முன்னே காண்பவைதான் .. அதை சமாளிக்க கொழுகொம்பு தேடும் கொடியாக காமாட்சி - பரமுவின் ஆதரவான உதவிகளால் அவன் மீது படரத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை.


”தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு?” இவள் மேனியில் தன் கண்களை மேயவிட்டவாறே, ஒரு கேலிச் சிரிப்புடன், அன்றொருநாள் அந்த நடுத்தர வயதுக்காரன், கிண்டலாக இரட்டை அர்த்தத்தில் கேட்டவனுக்கு பத்ரகாளியாய் மாறி வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் என்பது போல் தராசுத்தட்டையே ஆயுதமாக மாற்றி சின்னமார்க்கெட்டே அதிரும் வண்ணம் குடிகாரனை சமநிலைக்குக் கொண்டு வந்தது ஔவை ஷண்முகி படத்தில் கமல்ஹாசனின் காய்கறிமார்க்கெட் சண்டையை நினைவடுத்தவும் தவறவில்லை..! 

படித்த பக்குவமான பண்புள்ள இளைஞனான பரமுவும் தைரியமான காமாட்சியும் ஒருவருக்கொருவர் உதவியாக  இருந்ததால் குடிசை வீட்டில் சிம்னி விளக்குடன் குடியிருந்த காமாட்சி, ஜன்னல் உள்ள ஓட்டு வீட்டில் மின்சார விளக்கு, ஃபேனுடன், வாடகைக்கு குடி போகும் அளவுக்கு, அவளின் காய்கறி வியாபாரம் கை கொடுத்து உதவியது. 

இடுப்பில் கட்டிகொள்ள ஒரு பட்டுப்புடவையும், கழுத்தில் போட்டுக்கொள்ள இரண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கலியும் வாங்க வேண்டும் என்ற  எளிய ஆசைகூட அவளது சேமிப்பினால் கைகூடமுடியாமல் சாண் ஏறினால் முழம் சறுக்கும் இன்றைய விலைவாசி உயர்வையும் சுட்டிக்காட்டுகிறார் கதை ஆசிரியர்..!

காமாட்சிக்கு உதவிய நேரத்தில் காலில் அடிபட்ட பரமுவின் மருத்துவ செலவுக்கு அந்த சேமிப்புப் பணமே கைகொடுக்கிறது ..

விசேஷமாக சூடான சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்துடன் நமக்குக்கிடைக்கும் ஆனந்த செய்தி முதல் பரிசுத் தொகையான ஐயாயிரம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமுவின் சிறுகதையின் பெயர் காதலுக்கு உதவிய காய்கறிகளாம்..!

ஏன் ??! ’காதலாவது கத்தரிக்காயாவது’ என்று தன் கதைக்கு ஆசிரியர் பெயர் வைத்துவிட்டதால் பரமு ’காதலுக்கு உதவிய காய்கறிகள்’ என்று பெயர் சூட்டிவிட்டானோ என்னவோ..!

தவித்த வாய்க்குத்தண்ணீர் கிடைத்தது போல், சேமிப்பெல்லாம் மருத்துவமனை செலவுகளுக்கு கரைந்து போன  நிலையில் பாலைவனத்தில் இளைப்பாறக்கிடைத்த சோலை வனமாய் அவர்களின் நல்லமனதிற்கு இறைவனின் கருணையாகக் கிடைத்த பரிசு மகிழச்செய்கிறது.. உணர்ந்து பார்த்தால் அந்தப் பணத்தின் அருமை புரியும்..!

அடுத்த கடிதமும் -  பரமுக்கு வங்கியில் கிடைத்த நிரந்தர வேலை  கோடி சூரியப்பிரகாசமாய் நம் முகத்தையும் மலரச்செய்கிறது..!

கதையில் லயித்துப்போய் அவர்களின் சுக துக்கங்களில் நாமும் பங்குகொண்டாற்போல்  நல்ல நல்ல செய்திகளாக கடிதத்தில் கொண்டுவந்த காமாட்சியின் கரங்களை கண்களில் ஒற்றிக்கொள்கிறோமே மானசீகமாக .. அது தான் கதாசிரியரின் கதை சொல்லும் கைதேர்ந்த நேர்த்தியின்  தனித்திறமை..!

தன் எதிர்காலக்கனவுகளையும் காதலையும் ஒருங்கே கூறி இயற்கையின் ஆசிகளையும் சுப சகுனங்களாகச் சித்தரிக்கும் கதையின் நிறைவுப்பகுதியில் நாமும் அவர்களுடன் சந்தோஷத்தில் திளைக்கிறோம்..! 

கதாநாயகனுக்கு, கதாநாயகி மேல் ஏற்பட்ட தீராத  காதலைக் கசக்கிப் பிழிந்து, ஜூஸ் ஆக்கி, படிக்கும் வாசகர்கள் அனைவரும் விரும்பிக் குடிக்கும் விதமாக அணு அணுவாக தான் அனுபவித்து வந்த உணர்வுகளை அ னு ப வ த் தே ன் கலந்து எழுதியுள்ள கதைதான் .. காதலாவது ..கத்தரிக்காயாவது .. என்ன ஒரு அழகான கதை..! 

வாழ்க்கையிலும் இப்படி சொல்லி வைத்தாற்போல் உதவிகளும் தரமான உண்மையான காதலும் கிடைத்தால் சொர்க்கமாகத்தான் இருக்கும் ..!! 


 







மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

இனிய நல்வாழ்த்துகள்.




 


Mr. J. ARAVIND KUMAR 

with 


Mrs. N. SINDHU ARAVIND KUMAR




On Wednesday 

the 20th January 2016

at Coimbatore.


 



     



இரண்டாம் பரிசினை 



வென்றுள்ள மற்றொருவர் யார் ?







திருமதி :


ராஜலக்ஷ்மி பரமசிவம்

அவர்கள்

வலைத்தளம்: 

“அரட்டை”

rajalakshmiparamasivam.blogspot.com












இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் 


அவர்களின் விமர்சனம் இதோ: 







கத்திரிக்காய்களுக்கு நடுவில்  காதலும்,  கரை புரண்டோடும் என்று விளக்கும் அழகிய காதல் கதை. ஆசிரியருடைய "காதல் வங்கி" கதை போலவே இந்தக் கதையிலும்  வில்லன் என்று யாரையும்  நடுவில் கொண்டு வராமல்  கதை எழுதிய கதாசிரியரை  எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதே  வில்லனின் செயல்கள் தான். ஆனால் வில்லனே இல்லாமல் அதே சமயத்தில் கதையை தொய்வு இல்லாமல்  எழுதியிருக்கும் நடை  ஆச்சர்யப்பட வைக்கிறது.

இந்தக் கதையில் பரமுவும், காமாட்சியும், நாயகன் நாயகிகள். வில்லன் என்பது  பரமுவின் உள்ளுணர்வு மட்டுமே. பரமு தன் காதலை சொல்லாமல் விட்டு விடுவானோ என்கிற எதிர்பார்ப்பை ஏகத்துக்கு அதிகமாக்கிக் கொண்டே போய், இறுதியில் அவன் காதலை   வெளியிட வைத்து கதையை  முடித்திருப்பது  நல்ல விறுவிறுப்பு. 

காமாட்சி , மற்றும் பரமு இருவருமே  நாம் தினசரி சந்திக்கும் மனிதர்கள்.. அவர்கள் இருவருடைய எண்ணங்கள்  எல்லாம் மிக உயர்ந்தவை. காமாட்சியின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியும், அதைக் கண்டு பயந்து பரமு தன காதலை தன மனதிற்குள்  பூட்டி வைத்து விடுவதும்  அதற்குச் சான்று. 

இருவரும், ஒழுக்கத்தில், குணத்தில் ஒருவரை ஒருவர்  விஞ்சி நிற்கிறார்கள்  என்றே சொல்லலாம். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பரமு , காமாட்சிக்கு உதவுவது  அவன் காதலினால் தான் என்று  நமக்குத் தோன்றுகிறது.. ஆனால் அது  உதவும் மனப்பான்மை   அதிகமாக இருப்பதனால் தான் என்பதே என் கணிப்பு.. அதை தன் கதையில் அவர் சொல்லியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. 

பரமுவை நமக்கு அறிமுகப்படுத்தும் போது அவனை ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தி இருப்பது, ஆசிரியரின் எழுத்தார்வத்தைக்  குறிக்கிறது.

காமாட்சி தானாகட்டும், தன்னுடைய நெடுநாளைய ஆசையான  சேலை, நகை வாங்குவதற்காக சேர்த்து வைத்த பணத்தை, பரமுவின் உடல் நலத்திற்காக செலவிடுவது நெகிழ்ச்சியளிக்கிறது. அங்கே காமாட்சியின் கருணையும், காதலும் வெளிப்பட்டு விட்டது.

பரமு  விபத்தில் சிக்கும் வரை, காமாட்சிக்கு பரமு மேல் காதல் உண்டா இல்லையா என்று வாசகர்களை யூகிக்க வைக்கும் கதாசிரியர், ஆஸ்பத்திரிக்கு  அழைத்து சென்ற அவசரத்திலும், பரமுவை  நன்கு கவனித்துக் கொண்டதாக சொல்லும் போதும் தான் காமாட்சியின் காதலை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். பெண்ணின் இந்தத் தற்காப்பு  குணத்தை  மனதில்  வைத்துக் கதை புனைந்து   யதார்த்தை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

"இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தி விடக் கூடாதா"  .. என்கிற வாசகர்களின் ஆர்வத்தை எகிற வைக்கிறார் ஆசிரியர்.

பரமுவும் குணமாகி, வங்கி வேலையும் கிடைத்து, இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் போது  அப்பாடி... என்றிருக்கிறது.

எனக்கு இந்தக் கதையில் ஒரு சின்னக் குறை. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதை  வெளிப்படையாகச்  சொல்லி  கதையை முடித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.  அதனால் என்ன?

பரமு-காமாட்சி இருவருக்கும் விரைவில் திருமணம் முடிந்து, வங்கியில் மிகப்பெரிய பதவியை பரமு எட்டிப் பிடித்து, கண்ணிற்கு அழகாய் இரு குழந்தைகள் பிறந்து, பல்லாண்டுக் காலம் இந்தக் குடும்பம் எல்லா செல்வமும், நலமும் பெற்று நீடுழி வாழ  என் ஆசிகள் பல!

பாராட்டுக்கள் கோபு  சார் !






  



மனம் நிறைந்த பாராட்டுக்கள்  + 

இனிய நல்வாழ்த்துகள்.




    



    


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.












நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் 

வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo







இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 

கதையின் தலைப்பு:



”ஆப்பிள் கன்னங்களும் 


அபூர்வ எண்ணங்களும் !”





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


06.03.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள் 











என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

VGK 05 / 03 / 03 - THIRD PRIZE WINNER - காதலாவது கத்திரிக்காயாவது !





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 05 -  ” காதலாவது கத்திரிக்காயாவது   ”





மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து













இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 






    



மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் : 



திருமதி. 



தமிழ்முகில் பிரகாசம் 


அவர்கள்






http://muhilneel.blogspot.com/

"muhilneel"








tamizhmuhil.blogspot.com

”முகிலின் பக்கங்கள்”










 





மூன்றாம் பரிசினை வென்றுள்ள 



திருமதி


தமிழ்முகில் பிரகாசம் 


 அவர்களின் விமர்சனம் இதோ:






காதலாவது கத்தரிக்காயாவது என்ற இக்கதையில் ஆசிரியர் பரமு –காமாட்சி இடையே மலரும் அழகான காதலை சொல்கிறார்.

பெண்களிடம் அவ்வளவாகப் பேசிப் பழக்கமில்லாதவன் பரமு. கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவன். அனாதை என்ற எண்ணம் கொண்ட பரமுவிற்கு, காமாட்சி அவன் மீது காட்டும் அன்பினால், அவள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அவனுக்கோ பயம். ஏனெனில், அவளிடம் எவரேனும் தவறாக நடக்க எத்தனிப்பதாக அவளுக்குத் தோன்றினால், கோபத்தில் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடும் அவளது குணம். தானும் தன் காதலை சொல்லப் போக, அதை காமாட்சி ஏதேனும் தவறாக எண்ணி விடுவாளோ என்றெண்ணி அமைதி காக்கிறான் பரமு.

காமாட்சி பரமு இருவருமே ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நடந்து கொள்ள அங்கு ஓர் நல்ல நட்பு நிலவுகிறது.

ஒரு பெண்ணுக்கு நியாயமாக மனதில் தோன்றும் ஆசைகளை காமாட்சியின் வாயிலாகச் சொல்கிறார் ஆசிரியர். ஆம், அது புடவை மீதும் நகை மீதும் ஏற்படும் ஆசை தான். அதற்காக, தன் வருமானத்திலிருந்து சேமித்தும் வருகிறாள். அந்தச் சேமிப்பே பிறிதொரு நாளில் ஏற்பட்ட அவசரத் தேவைக்கு கைகொடுத்தும் உதவுகிறது.

எப்போதும் உடன் ஒத்தாசையாய் இருப்பவர்களது அருமை, அவர்கள் அருகில் இல்லாதபோது தான் தெரியும் என்ற உண்மையை, பரமு விபத்தொன்றில் சிக்கிக் கொண்ட போது காமாட்சி உணர்ந்து கொள்வதாக சித்தரிக்கிறார் ஆசிரியர்.

காமாட்சியின் சேமிப்பாக இருந்த கையிருப்பே மருத்துவ சிகிச்சைக்கு கைகொடுத்து உதவுகிறது.

“கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்” என்பது பழமொழி. அதற்கேற்ப, பரமுவிற்கு ஒரே சமயத்தில் இரு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. பரமு எழுதிய சிறுகதைக்கு ஐயாயிரம் ரூபாய் முதல் பரிசாக கிடைக்கிறது. அதே சமயத்தில், அரசுடைமையாக்கப் பட்ட வங்கி ஒன்றில் நிரந்தர வேலை ஒன்றும் கிடைக்கிறது.

அந்தச் சூழலில் தன் மனதில் உள்ள காதலை பரமு வெளிப்படுத்தும் விதம் மிகவும் அருமையாக ஆசிரியரால் கையாளப்பட்டுள்ளது. காமாட்சியை அம்மனாக உருவகம் செய்து, அம்மனுக்கு பட்டுப் புடவை, தங்கச் சங்கிலி, தோடு, மூக்குத்தி, கொலுசு அனைத்தும் சூட்டி அழகு பார்க்கப் போவதாக சொன்ன விதம் மிகவும் அருமை.

காமாட்சி அம்மன் கருணையாலேயே தனது காதல் நிறைவேறும் என்று சொல்லுமிடத்தில், காமாட்சியையே அம்மனாக பரமு உருவகித்துக் கொண்டதாக சொன்னது அழகு.

மொத்தத்தில், இரு இளம் உள்ளங்களில் உதயமான உன்னதமான காதல் ஒன்றை இந்த “காதலாவது கத்தரிக்காயாவது” கதையில் அழகாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். 

நல்வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பல ஐயா.



இப்படிக்கு,
திருமதி. பி. தமிழ் முகில்


 







மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




     


    


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.







காதலாவது ... கத்திரிக்காயாவது !







இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo







இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 





கதையின் தலைப்பு:



”ஆப்பிள் கன்னங்களும் 


அபூர்வ எண்ணங்களும் !”





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


06.03.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள் 











என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்