என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 1 மார்ச், 2014

VGK 05 / 03 / 03 - THIRD PRIZE WINNER - காதலாவது கத்திரிக்காயாவது !

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 05 -  ” காதலாவது கத்திரிக்காயாவது   ”

மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து

இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 

  


மற்றவர்களுக்கு: 


    மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் திருமதி. தமிழ்முகில் பிரகாசம் 


அவர்கள்


http://muhilneel.blogspot.com/

"muhilneel"
tamizhmuhil.blogspot.com

”முகிலின் பக்கங்கள்”


 

மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி


தமிழ்முகில் பிரகாசம் 


 அவர்களின் விமர்சனம் இதோ:


காதலாவது கத்தரிக்காயாவது என்ற இக்கதையில் ஆசிரியர் பரமு காமாட்சி இடையே மலரும் அழகான காதலை சொல்கிறார்.

பெண்களிடம் அவ்வளவாகப் பேசிப் பழக்கமில்லாதவன் பரமு. கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவன். அனாதை என்ற எண்ணம் கொண்ட பரமுவிற்கு, காமாட்சி அவன் மீது காட்டும் அன்பினால், அவள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அவனுக்கோ பயம். ஏனெனில், அவளிடம் எவரேனும் தவறாக நடக்க எத்தனிப்பதாக அவளுக்குத் தோன்றினால், கோபத்தில் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடும் அவளது குணம். தானும் தன் காதலை சொல்லப் போக, அதை காமாட்சி ஏதேனும் தவறாக எண்ணி விடுவாளோ என்றெண்ணி அமைதி காக்கிறான் பரமு.

காமாட்சி பரமு இருவருமே ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நடந்து கொள்ள அங்கு ஓர் நல்ல நட்பு நிலவுகிறது.

ஒரு பெண்ணுக்கு நியாயமாக மனதில் தோன்றும் ஆசைகளை காமாட்சியின் வாயிலாகச் சொல்கிறார் ஆசிரியர். ஆம், அது புடவை மீதும் நகை மீதும் ஏற்படும் ஆசை தான். அதற்காக, தன் வருமானத்திலிருந்து சேமித்தும் வருகிறாள். அந்தச் சேமிப்பே பிறிதொரு நாளில் ஏற்பட்ட அவசரத் தேவைக்கு கைகொடுத்தும் உதவுகிறது.

எப்போதும் உடன் ஒத்தாசையாய் இருப்பவர்களது அருமை, அவர்கள் அருகில் இல்லாதபோது தான் தெரியும் என்ற உண்மையை, பரமு விபத்தொன்றில் சிக்கிக் கொண்ட போது காமாட்சி உணர்ந்து கொள்வதாக சித்தரிக்கிறார் ஆசிரியர்.

காமாட்சியின் சேமிப்பாக இருந்த கையிருப்பே மருத்துவ சிகிச்சைக்கு கைகொடுத்து உதவுகிறது.

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது பழமொழி. அதற்கேற்ப, பரமுவிற்கு ஒரே சமயத்தில் இரு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. பரமு எழுதிய சிறுகதைக்கு ஐயாயிரம் ரூபாய் முதல் பரிசாக கிடைக்கிறது. அதே சமயத்தில், அரசுடைமையாக்கப் பட்ட வங்கி ஒன்றில் நிரந்தர வேலை ஒன்றும் கிடைக்கிறது.

அந்தச் சூழலில் தன் மனதில் உள்ள காதலை பரமு வெளிப்படுத்தும் விதம் மிகவும் அருமையாக ஆசிரியரால் கையாளப்பட்டுள்ளது. காமாட்சியை அம்மனாக உருவகம் செய்து, அம்மனுக்கு பட்டுப் புடவை, தங்கச் சங்கிலி, தோடு, மூக்குத்தி, கொலுசு அனைத்தும் சூட்டி அழகு பார்க்கப் போவதாக சொன்ன விதம் மிகவும் அருமை.

காமாட்சி அம்மன் கருணையாலேயே தனது காதல் நிறைவேறும் என்று சொல்லுமிடத்தில், காமாட்சியையே அம்மனாக பரமு உருவகித்துக் கொண்டதாக சொன்னது அழகு.

மொத்தத்தில், இரு இளம் உள்ளங்களில் உதயமான உன்னதமான காதல் ஒன்றை இந்த காதலாவது கத்தரிக்காயாவது கதையில் அழகாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். 

நல்வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பல ஐயா.இப்படிக்கு,
திருமதி. பி. தமிழ் முகில்


 மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
     


    


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.காதலாவது ... கத்திரிக்காயாவது !இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 

கதையின் தலைப்பு:”ஆப்பிள் கன்னங்களும் 


அபூர்வ எண்ணங்களும் !”

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


06.03.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

43 கருத்துகள்:

 1. சுருக்கமான ஆயினும் மிக மிக
  அருமையான விமர்சனம்
  பரிசு பெறும் தமிழ்முகில் பிரகாசம்
  அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

   நீக்கு
 2. தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . விமர்சனம் சிறப்பாக உள்ளது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
   சகோதரி.

   நீக்கு
 3. எனது விமர்சனம் பரிசு பெற்றிருப்பது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது ஐயா.

  நல்வாய்ப்பளித்த தங்களுக்கும், என் விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Tamizhmuhil Prakasam March 1, 2014 at 3:40 AM

   வாங்கோ, வணக்கம்.

   //எனது விமர்சனம் பரிசு பெற்றிருப்பது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது ஐயா.

   நல்வாய்ப்பளித்த தங்களுக்கும், என் விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//

   நடுவர் சார்பிலும், அடியேன் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் + அன்பான நல்வாழ்த்துகள்.

   மேலும் மேலும் தொடர்ந்து. இதே போட்டியில் வாராவாரம் கலந்து கொண்டு பல பரிசுகள் வென்றிடப்போகும் தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   தங்களின் இந்த மாபெரும் வெற்றிக்காகத் தங்கள் வலைத்தளத்தினில் சுடச்சுட ஓர்

   http://muhilneel.blogspot.com/2014/02/blog-post_28.html

   தனிப்பதிவாக இதை வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கும், தனியாக எனக்குத் தகவல் கொடுத்து அழைப்பிதழ் அனுப்பியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வாழ்க !

   என்றும் அன்புடன் தங்கள் கோபு [ VGK ]

   நீக்கு
 4. விமர்சனம் அருமை... திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

   நீக்கு
 5. சிறப்பான விமர்சனம் எழுதி மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
   சகோதரி.

   நீக்கு
 6. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் -
  இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி March 1, 2014 at 7:37 AM

   //மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் -
   இனிய நல்வாழ்த்துகள்.//

   ஆஹா, மீண்டும் வாழ்த்தியுள்ள அன்பு உள்ளத்திற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளும் உரித்தாகுக ! ;) VGK

   நீக்கு
  2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
   சகோதரி.

   நீக்கு
 7. VGK சிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்ற சகோதரி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
   ஐயா.

   நீக்கு
 8. மூன்றாம் பரிசை வென்ற தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துகள். அருமையான விமர்சனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
   சகோதரி.

   நீக்கு
 9. விமர்சனப்போட்டியில் பங்கு பெற்று பரிசு வென்றுள்ள தமிழ்முகில் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
   சகோதரி.

   நீக்கு
 10. மிக அருமையான விமர்சனம்.. அன்பு வாழ்த்துகள் தமிழ்முகில் அவர்களுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
   சகோதரி.

   நீக்கு
 11. சிறந்த முறையில் கதைக்கு விமர்சனத்தை எழுதி மூன்றாம் இடத்தைப்
  பெற்றுக் கொண்ட சகோதரர் தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு என்
  மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .கூடவே அடுத்த கதைக்கு
  விமர்சனம் எழுத இங்கே அழைப்பினை அறிவித்திருக்கும் ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் .உடல் நிலை ஈடு கொடுத்தால் எனது விமர்சனமும் தொடரும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
   சகோதரி.

   நீக்கு
 12. எனது இனிய வாழ்த்துக்கள் தமிழ்முகில்

  பதிலளிநீக்கு
 13. Thirumathi Thamizh Mukilukkum vaazththukal. thodarnthu parisukalai vellavum piraarththanaikaL.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

   நீக்கு
 14. விமரிசனம் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

   நீக்கு
 15. மூன்றாம் பரிசு பெற்றுள்ள தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் பல சகோதரி.

   நீக்கு
 16. மூன்றாம் பரிசினை வென்ற திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!

   நீக்கு
 17. இந்த வெற்றியாளர் அவர்கள், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  http://muhilneel.blogspot.com/2014/02/blog-post_28.html
  திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 18. தமிழ்முகில் பிரகாசத்திற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்முகில்பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துகள்

   நீக்கு
 19. திருமதி தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. பரிசு வென்ற திருமதி தமிழ் முகில் பிரகாசமவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. திருமதி தமிழ்முகில்பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துகள். விமரிசனம் நல்லா இருக்கு பரமு காமாட்சியின் காதல் மலர்ந்த விதத்தை ரசிச்சு சொல்லி இருக்காங்க.

  பதிலளிநீக்கு
 22. கதையை உள்வாங்கி விமர்சனம் எழுதியுள்ளீர்கள்...வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு