என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 16 மார்ச், 2014

VGK 07 / 02 / 03 SECOND PRIZE WINNERS - "ஆப்பிள் கன்னங்களும் .... அபூர்வ எண்ணங்களும் !”

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 07 - 


” ஆப்பிள் கன்னங்களும் 


அபூர்வ எண்ணங்களும் ”


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து

இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 

  


மற்றவர்களுக்கு:     இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர் 
அதில் ஒருவர்திருமதி. ராதா பாலு


அவர்கள்

வலைத்தளங்கள்: 

” எண்ணத்தின் வண்ணங்கள் ”

http://radhabaloo.blogspot.com/


“அறுசுவைக் களஞ்சியம் ”

http://arusuvaikkalanjiyam.blogspot.com/


“ என் மன ஊஞ்சலில் “

http://enmanaoonjalil.blogspot.com/எனக்குப் புதிய அறிமுகமாகியுள்ள 


திருமதி. ராதா பாலு அவர்கள் 

எங்கள் ஊராம் ’திருச்சி’யிலேயே உள்ள பதிவர்

என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியே !  

இரண்டாம் பரிசினை வென்றுள்ள 
திருமதி. ராதா பாலு
 அவர்களின் விமர்சனம் இதோ:

இது ஒரு கிளுகிளு காதல் கதை!ஆனால் ஒருதலைக் காதல் கதை!ஒரு பெண் யதார்த்தமாகப் பழகுவது அவளது  நல்ல மனம்! அதை அவளுடன் பழகும் ஆண்  காதலாக 
எடுத்துக் கொள்வது அவனுடைய  இயல்பு குணம் !என்னதான் ’அண்ணன்-தங்கை’  என்று நினைத்துப் பழகினாலும் இத்தனை 'டா'க்களா? ! அது கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது!


சின்ன வயதில் பழகும் குழந்தைகளுக்குள் ஆண் ,பெண் என்ற பேதமோ, வித்தியாசமோ தெரிவதில்லை. வளர்ந்த பின்பே மனம் களங்கப்படுகிறது. 

இருவரும் பிறந்தது முதலே ஒன்றாகப் பழகியதால் ஜெயஸ்ரீ விகல்பமில்லாமல் பழகுகிறாள்.  

அவள் மனம் சுத்தமாகத்தான் இருக்கிறது.


ஏன்..சீமாச்சுவின் மனதிலும் காதல் தோன்றவில்லை, அவள் உள்பாவாடைக்கு நாடா கோர்த்துத் தரும்வரை! ஒரு நல்ல நண்பனாக, சகோதரனாகத்தான்  இருக்கிறான்.சிறு வயதில் நோஞ்சானாக இருந்த ஜெயஸ்ரீ வயதுக்கு வந்ததும் பளபளவென மெருகேறி ஜொலித்ததை ஆசிரியர் அழகாக வர்ணித்திருக்கிறார்! 

பருவம் அடைவதைப் பற்றி ஒன்றும் அறியாத அப்பாவியான சீமாச்சு ..... பாவம்! அவனுக்கு அதைப் பற்றிச் சொல்ல யாரும் இல்லை. பொதுவாக அந்தக் காலத்தில் எந்த பையனுக்கும் இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.
.......... 
         .......... 
                  ..........  ..........  .......... ..........  


நோஞ்சானாக அவள் இருந்தபோது ஈர்க்கப்படாத அவன் மனம் அவள் 'பளபள, தளதள' என்று  ஆனதும் காதல் வயப்பட  ஆரம்பித்த வாலிப உணர்வை பாயிண்ட், பாயிண்டாக எழுதியிருக்கிறார் கதாசிரியர்!

'ஆப்பிள் போன்ற கன்னங்கள், அங்கங்கே  மேடுபள்ளங்கள்' என ஒரு இளம்பெண்ணின் அங்க அழகை சாண்டில்யன் போல இளமை ததும்ப  விவரித்திருக்கிறார் ஆசிரியர்!


ஜிகினாஸ்ரீயின் அழகை அப்படியே கண்ணில் பார்த்து மனதில் பதித்து, அங்க லாவண்யங்களை வரைந்த  சீமாச்சு, நறுக்கிய  ஆப்பிளை அவள் படத்தின் கன்னத்தில் வைத்து கடித்து சாப்பிட்டதை அவனது காதலுடனான காமத்தை வெளிப்படுத்துவதை ரசமாக விவரித்திருக்கிறார் கதாசிரியர்!


சீமாச்சுவுக்கே தன்  தகுதிக்கு அவள் தன்னைக் காதலிப்பாளா என்ற சந்தேகம் ஏற்பட்டு, அவளைத் தன்னைக் காதலிக்கத் தூண்டவே அவளைப் படமாய் வரைந்தான். ஆனால் அதற்குள் அவள் திருமணம் நிச்சயமாகிவிட்டதே? அவன் இந்த விஷயத்தை ஜெயஸ்ரீயிடம் சொல்லியிருந்தால் அவள் அவனை விட்டு விலகியிருப்பாள்.


தையல்காரர் சொன்ன அவளுடைய காதலன் விஷயம், அவளோடு கூடவே இருக்கும் சீமாச்சுவுக்கு தெரியாதது வியப்பாக உள்ளது. எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் ஜெயஸ்ரீ சுரேஷ் பற்றியும், தன்  திருமணம் பற்றியும் சொல்ல மறந்து விட்டாளா அல்லது சொல்ல விரும்பவில்லையோ? சீமாச்சு மனதில் அவள்மேல் காதல் இருக்கும் என்பதை அவள் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை என்பது அவளது  நல்ல மனத்தைக் காட்டுகிறது.அவளுக்கு தன்மேல் ஈடுபாடு   இல்லை என்பதைத் தெரிந்துகொண்டதாலேயே அவனுக்கு தான் வரைந்த படத்தை அவளிடம் கொடுக்க முடியவில்லை. ஆனால் அவனைத் தவறாக நினைக்காத ஜிகினாஸ்ரீ அனைவரிடமும் அவன் திறமையைப் புகழ்ந்ததுடன், சுரேஷிடமும் அவனைப் பற்றி உயர்வாகச் சொல்லியிருக்கிறாள்.சீமாச்சுவை திருமணம் முடியும்வரை தன்னுடன் இருந்து உதவி செய்ய வேண்டும் என்றும், நீதான் என்னுடைய சகோதரன் என்றும் ஜிகினாஸ்ரீ சொன்னது அவள் அவனிடம் கொண்டிருந்த பரிசுத்தமான அன்பையே காட்டுகிறது. 

ஆணி சீமாச்சுவின் நெற்றியில் பட்டு வலித்தபோது, தன்  காதல் நிறைவேறாமல் போனதால் ஏற்பட்ட வலியை உணர்ந்தான் என்பதையும், வாஷ் பேசினில் கை அலம்பியதோடு, அவள் மேலிருந்த ஆசை, காதலையும் சேர்த்து அலம்பி விட்டதையும்  ஆசிரியர் சிம்பாலிக்காக எழுதியுள்ளார்!
ஒரு பெண் ஆணுடன் பழகும்போது களங்கமில்லாமல், சுத்தமான மனதுடன்தான் பழகுகிறாள். அவள் கொஞ்சம் உரிமை எடுத்துப் பழகினால், இயல்பான இனக்கவர்ச்சியால் ஒரு ஆண்தான் முதலில் காதல் வயப் படுகிறான்.


அவளை தன்  சகோதரி போன்றோ, தோழி போன்றோ எண்ணாமல், அந்தப் பெண் தன்னைப் பற்றி எப்படி நினைக்கிறாள் என்பதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் உடன் பிறந்த பாசத்துடன் பழகினாலும், அவளைக் கட்டாயப்படுத்தி தன்னைக் காதலிக்கத் தூண்டும் பல திரைக் கதைகளை நாம் காண்கிறோம். 

பிடிக்காத பெண்ணின் பின்னாலேயே துரத்தி, துரத்தி அவள் நிலையைப் பற்றி சற்றும் எண்ணாமல் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் கதாநாயகர்கள்தான் இன்று சினிமாவில் அதிகம். அந்தப் பெண் நிறையப் படித்திருப்பாள், பணக்காரியாக இருப்பாள்... ஆனால் இவனோ படிப்பறிவில்லாமலோ, தாதாவாகவோ வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான். அதுதான் உண்மையான காதல் என்று முடியும் திரைப்படம்!


இந்தக் கதையிலும் ஜிகினாஸ்ரீ சீமாச்சுவிடம் வித்யாசமே இல்லாமல் பழகியதைக் காதல் என்று எடுத்துக் கொண்டு அவளைக் காதலித்த சீமாச்சு பாவம்.... ஒரு அப்பாவி! அவனுக்கு ஒரு நல்ல பெண் மனைவியாக அமையவும், ஜிகினா...இல்லை...ஜெயஸ்ரீயும்,சுரேஷும் மணம் முடித்து நீண்ட நாள் நல்வாழ்வு வாழவும் வாழ்த்துக்கள்!கதையின் ஆரம்பத்தில்  காணப்படும் குண்டு ஆப்பிளும்,கொழுகொழு கன்ன குட்டியும் சூப்பர்!!

 மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
     இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள 


மற்றொருவர் யார் ?


திரு. ரமணி அவர்கள்


வலைத்தளம்:


”தீதும் நன்றும் பிறர் தர வாரா” 

yathooramani.blogspot.com

இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. ரமணி 


அவர்களின் விமர்சனம் இதோ : 

குழந்தைப் பருவத்திற்கும் காளைப்பருவத்திற்கும்
இடையிலான பருவம், ஒரு சிக்கலான பருவம் மட்டுமல்ல
ஒரு விசித்திரமான பருவமும் கூட.


காயுமாக இல்லாது பழமும் ஆகாது வித்தியாசமாக இருக்கும்
"ஒதைப்பழம் " போல எனக் கூடச் சொல்லலாம்.


இந்த சிக்கலான பருவத்தை அதன் அர்த்தமற்ற
எண்ணங்களை, செயல்களை ,பெரியவர்கள் மனமுதிர்சியோடு
புரிந்து கொள்ளவேண்டும் என்கிற உயரிய நோக்கில்
எழுதப்பட்ட கதையாகத்தான் இந்த
"ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்" என்கிற
கதை இருக்க வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம்.


சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்தாலும்
பருவ வயது ஆண்களிடத்தில் ஒரு வகையான மனக் கிளர்ச்சியையும்
பெண்களிடத்தில் ஒருவகையான மன முதிர்ச்சியையும்

ஏற்படுத்திப் போவதுதான் இயற்கையின் விசித்திரம்.


அந்த வித்தியாசமான விசித்திரத்தை விடலைப் பையனின்
மாறுபாடான எண்ணங்கள் மூலமும், அந்த விடலைப் பெண்ணின்
முதிர்ச்சியை அதன் மாறுபாடுகள் இல்லாத செயல்களின் மூலம்
மட்டும் சொல்லிப் போனதுதான் இந்தக் கதையின் சிறப்பு.


புறவெளித் தாக்கங்கள் அதிகம் தாக்கவிடாது பெண்கள்
தங்களைக் காத்துக் கொள்ளும்படியாக  சமூக அமைப்பும்
குடும்பப் பாதுகாப்பும் இருப்பதால் பெண்கள் ஓரளவுக்குமேல்
தங்கள் எண்ணச் சிறகுகளை அதிகம் விரித்து அவதிக் கொள்வதில்லை.


பருவமடைந்ததும் பெண்களுக்கென செய்யப்படுகிற அந்த
மங்களச் சடங்குகள் கூட உறவுகளின் அவசியத்தை
அதன் நெருக்கத்தை அவளுக்குள் ஆழ விதைத்துப் போகிறது.


அதற்கு மாறாக விடலைப் பருவத்து ஆணோ
மிக அதிகம் புறவெளித் தாக்குதலுக்கு உள்ளாவதுடன்

குடும்பத்திலும் பெரியவனாக வளர்ந்துவிட்டவன் என்கிற நிலையில்
தாய் தந்தை மற்றும் சகோதரிகளிடம் இருந்தும்
ஒரு இடைவெளியைப் பராமரிக்க வேண்டிய அவசியத்திற்கு
உட்படுத்தப் படுகிறான்.


அந்த இடைவெளிக்குள் காதல் தவிர அந்த வயதிற்கான விஷயம்
வேறொன்றுமில்லை என விஷ விதையை ஊடகங்களும்
உடன் பழகும் நண்பர்களும் விதைத்துப் போக
அதுவரை கள்ளம் கபடமற்று இருக்கும் அவன் மனம்
கண்டதையும் நினைக்கத் துவங்குகிறது ....
மெல்ல மெல்ல தடம் மாறி நடக்கவும் தொடங்குகிறது.


அதன் உச்சக் கட்டமே இக்கதையில் கதை நாயகன்
அவன் வரைந்திருந்த படத்தின் கன்னத்தின் மேல்
ஆப்பிளை வைத்துக் கடிக்கத் துணிவதும்
அப்படி கடித்ததே  அவள்  அழகிய ஆப்பிள் கன்னத்தைக்கடித்து
ருசித்ததைப் போன்ற அற்ப மகிழ்ச்சியைக் கொள்வதுவும்...


கதையில் மட்டுமல்ல, நிஜவாழ்விலும் விடலைப் பருவத்தில்
தன் வயப்பட்ட அதீத காதல் சிந்தனையில், பருவம் அவனுள்
ஏற்படுத்திப்போகும் புரிந்து கொள்ளமுடியாத அந்த உணர்வுப்
பாய்ச்சலில், கற்பனை எண்ணங்களில் இருந்து, தனிமைச் சூழலில்
இப்படி அரைவேக்காட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுபவன்
அதனால் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில் மகிழத் துவங்குதல்தான்
ஒரு இளைஞனை நரக லோகத்திற்கு இட்டுச் செல்லும்
தலைவாசல் என்றால் நிச்சயம் அது மிகை இல்லை.


இந்தக் கதை நாயகனின் குடும்பச் சூழல் மிகச் சரியானதாக
இருப்பதால்தான் பிறந்த நாள் பரிசாக அந்தப் பெண்ணின்
படத்தை வரையத் துவங்குவதையோ, பரிசாகத் தருவதையோ
தவறாக கற்பனை செய்து கொண்டு தடைவிதிக்க முயலவில்லை
இப்படி எத்தனை பேரின் குடும்பத்தில் சாத்தியம் ?


அதனால்தான் அவள் அவனுக்கு இல்லை என்கிற போது
மிக இயல்பாக சுவற்றில் அவள் ஓவியத்தை ஆணி அடித்து
மாட்டுகையில் அந்த நினைவையும் அத்துடன் ஆணி அடித்து மாட்டவும்
கை கழுவுகையில் அவள் நினைவுகளையும்
மெல்லக் கை கழுவவும் வைக்கிறது.இல்லையெனில் "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி "
தனக்கில்லாதது நிச்சயம் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது" போன்ற
வில்லத்தனமான விஷ எண்ணங்ளை உடன் வளர்ந்து
அவனை அழித்துக் கொள்ளச் செய்துவிடும்
அல்லது அடைய முடியாததை அழித்து கொடூரச் சுகம் காண விழையும்.இது போன்று நம் அன்றாட வாழ்வில்  காண்கிற, கேள்விப்படுகிற
காதல் தற்கொலைகளும் ஆசிட் வீச்சுகளும்தான் இந்தக்கதையை
எழுதும்படியான ஒரு உத்வேகத்தை கதை கதாசிரியரின் மனதில்
உருவாகி இருந்திருக்க வேண்டும்  என நான் நினைக்கிறேன்.அந்த சிந்தனையை, மிக நேர்த்தியான கதையாக விரிவாக்கி
நம்முள் அற்புதமான காட்சியாக விரிவாகும் வண்ணம்
தன் எழுத்தாற்றலால் மிகச் சிறப்பாகப் பதிவு செய்த சிறு கதை மன்னன்
திருவாளர் வை.கோ அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


(தலைப்பு மட்டும் ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’ என இல்லாது ஆப்பிள் கன்னங்களும் அழிச்சாட்டிய எண்ணங்களும்என்பதுபோல் இருந்திருக்கலாமோ என எனக்குப்பட்டது. காரணம் இந்த அபூர்வ என்கிற வார்த்தை அதிகம் நேர்மறையான விஷயத்திற்குத்தான் மிகச் சரியாகப் பொருந்தும் என நினைக்கிறேன் )


 மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.

     

   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக 


பல மணி நேர இடைவெளிகளில் 


வெளியிடப்பட்டு வருகின்றன.
காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான 

கதையின் தலைப்பு:”அ ஞ் ச லை 

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


20.03.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

26 கருத்துகள்:


 1. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி.ராதா பாலு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

  அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 2. திருமதி. ராதா பாலு அவர்களுக்கும், திரு. ரமணி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. ரமணி ஐயா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

  அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 4. என்னது??? ரமணி சாருக்கு இரண்டாம் பரிசா? நிஜம்மாவே அதிர்ச்சி. இரண்டாம் பரிசைப் பெற்ற திருமதி ராதா பாலுவுக்கும், ரமணி சாருக்கும் நல்வாழ்த்துகள். தொடர்ந்து பல பரிசுகளைக் குவிக்கவும் வாழ்த்துகள். ரமணி சார் அடுத்த விமரிசனத்தில் விட்ட இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 5. இரண்டுமே நல்ல விமர்சனம்......

  இரண்டாம் பரிசினை பகிர்ந்து கொண்ட திருமதி ராதா பாலு அவர்களுக்கும் ரமணி ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி. ராதா பாலு அவர்களுக்கும், திரு. ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. திருமதி ராதா பாலுவுக்கும் திரு ரமணி சாருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. ரமணி ஐயா அவர்களுக்கும், திருமதி. ராதா பாலு அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் !!

  பதிலளிநீக்கு
 9. திரு கோபு சார் அவர்களுக்கு

  எனக்குஇரண்டாம் பரிசா? நம்ப முடியாமல் கண்ணைக் கசக்கிப் பார்த்தேன். முதல் முதலாகப் பெற்ற பரிசு... மிக்க மனம் மகிழ்ந்தேன். நன்றிகள் பல.

  ஒவ்வொரு முறையும் தவறாமல் வென்று வரும் திரு ரமணி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள VGK அவர்கள் நடத்தும் சிறுகதை விமர்சனப் போட்டியில், ஏழாவது கதைக்கான இரண்டாம் பரிசினை வென்றுள்ள சகோதரி திருமதி ராதா பாலு அவர்களுக்கும் நமது கவிஞர் ரமணி அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

  திருச்சியில் ராதா பாலு என்ற ஒரு பதிவர் இருப்பதே இந்த பதிவின் மூலம் இப்பொழுதான் தெரியும். அவர் எங்கள் ஊர் திருச்சி என்பதில் மிக்க மகிழ்ச்சி! இனிமேல்தான் அவரது வலைத்தளம் சென்று பார்க்க வேண்டும். VGK அவர்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. இரண்டாம் பரிசு பெற்றுள்ள திருமதி ராதா பாலு அவர்களுக்கும் விமர்சன வித்தகர் ரமணி சார் அவர்களுக்கும் அன்பான பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 12. இரண்டாவது பரிசினை வென்றுள்ள
  திருமதி. ராதா பாலு அவர்களுக்கும்
  திரு. ரமணி சாருக்கும்
  எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 13. அன்பின் வை.கோ - பரிசுகள் பெற்ற திருமதி இராதா பாலு மற்றும் ரமணி - இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 14. இந்த இரு வெற்றியாளர்களும் தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  http://enmanaoonjalil.blogspot.com/2014/03/blog-post_17.html
  திருமதி ராதா பாலு அவர்கள்

  http://yaathoramani.blogspot.in/2014/03/blog-post_17.html
  திரு. ரமணி அவர்கள்

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 15. அன்பின் வை.கோ - பரிசு பெற்ற இருவரும் தங்களீன் தளத்தில் இந்நற்செய்தியினைப் பகிர்ந்து கொண்டமை நன்று. சென்று பார்த்து படித்து மகிழ்ந்து மறுமொழிகளூம் இட்டு வந்தேன் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துகள் இருவருக்கும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 17. திருமதி ராதா பாலு அவர்களுக்கும் திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 18. பரிசு வென்ற திருமதி ராதாபாலு திருரமணிசார் அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 19. பரிசு வென்ற திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருரமணிசார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 28, 2015 at 8:39 AM


   //பரிசு வென்ற திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருரமணிசார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ. :)

   நீக்கு
 20. பரிசு வென்ற திருமதி ராதாபாலு திரு ரமணி சாரவங்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 21. திருமதி ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துகள் விமரிசனம் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 22. திரு ரமணி சார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 23. இந்தக் கதையிலும் ஜிகினாஸ்ரீ சீமாச்சுவிடம் வித்யாசமே இல்லாமல் பழகியதைக் காதல் என்று எடுத்துக் கொண்டு அவளைக் காதலித்த சீமாச்சு பாவம்.... ஒரு அப்பாவி! அவனுக்கு ஒரு நல்ல பெண் மனைவியாக அமையவும், ஜிகினா...இல்லை...ஜெயஸ்ரீயும்,சுரேஷும் மணம் முடித்து // சரிதான்.
  சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்தாலும்
  பருவ வயது ஆண்களிடத்தில் ஒரு வகையான மனக் கிளர்ச்சியையும்
  பெண்களிடத்தில் ஒருவகையான மன முதிர்ச்சியையும்
  ஏற்படுத்திப் போவதுதான் இயற்கையின் விசித்திரம்.// கதையின் ஆணிவேரைத்தொட்டு விட்டீர்கள் ஐயா,,அருமை,,அருமை, வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. அருமையான விமர்சனம் எழுதிய திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திரு ரமணி சார் அவர்களுக்கும் பாராடுகள்!

  பதிலளிநீக்கு
 25. Mail message received today 31.03.2017 at 09.46 Hrs.
  =====================================================

  அன்பின் கோபு ஸார்,

  சீமாச்சுஊஊஊ கதை அல்ல திரைப்படம்.

  மனதோடு ரீல் புகுந்து ஓடியது போலவே இருந்தது. கடைசி டச்....... நச்.... என்று ஆணி அடித்த கதை.

  தகுதிக்கு மீறியும், நிகழ்கால உரிமையையும் இவ்வளவு அழகாக எழுத்தில் ஜிகினாஸ்ரீக்கு சிலை வடித்த விதம் அருமை.

  கதை சிறிது ......... சாரம் பெரிது.

  இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
  பரம ரஸிகை

  பதிலளிநீக்கு