என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 15 மார்ச், 2014

VGK 07 / 03 / 03 THIRD PRIZE WINNER "ஆப்பிள் கன்னங்களும் .... அபூர்வ எண்ணங்களும் !”

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 07 - ” ஆப்பிள் கன்னங்களும் 

அபூர்வ எண்ணங்களும் ”


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து

இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:     மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் 

திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்  


அவர்கள்

வலைத்தளம்: 

”நிஜாம் பக்கம்”


  

மூன்றாம் பரிசினை வென்றுள்ள திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்   அவர்களின் விமர்சனம் இதோ:

கதையின்  தலைப்பு  'ஆப்பிள்  கன்னங்களும்  அபூர்வ  எண்ணங்களும்' என்று இருக்கின்றது. தலைப்பு எதுகை மோனையுடன் கவிதைமாதிரி இருந்தாலும் பொருந்தாத் தலைப்பு என்றே சொல்ல வேண்டும். '


ஆப்பிள் கன்னங்கள்' என்று குழந்தையின் கன்னங்களைச் சொல்வர்; அதுபோல் பெண்களின் கன்னங்களையும் சொல்வதுண்டு. 


இந்தக் கதை, ஒரு பதின்ம வயது இளைஞன் (சிறுவன்?) தனது மன எண்ணங்களைச் சொல்வதாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது 'பரு(வ) வயது இனக்கவர்ச்சி'  (Teen age infatuation) என்ற கோணத்தில் கதை சொல்லப்படுகின்றது. பருவ வயது நடக்கும் அனைவருமே, பருவ வயதைக் கடக்கும் அனைவருமே இவ்வாறான சிக்கலில் மாட்டித்தான் வருவார்கள்.


இதில் மற்ற யாருக்கும் தோன்றாத நினைவுகளோ அபூர்வ எண்ணங்களோ இல்லையே? எனவே கதைத் தலைப்பில் வரும் 'அபூர்வ' என்ற வார்த்தை பொருத்தமல்ல என்பது என் எண்ணம். (அபூர்வ எண்ணம்?) 


"ஆப்பிள் கன்னங்களும் அசட்டு எண்ணங்களும்" என்று தலைப்பிட்டிருக்கலாம்.  

    
சிறுவயதிலிருந்தே பழக்கமான சிறுமி, வளர்ந்து மேஜரானதும் அப்பொழுது, அவளிடம் ஓர் ஆண்மகனுக்கு சில மன ஓட்டங்கள் எழும். பலப்பல கற்பனைகள் தோன்றி, இன்பக் கடலில் தள்ளி, மனம் கற்பனையில் மிதந்து, உயரத்தில் பறப்பார்கள். அதுவேதான் இக்கதை நாயகனான சீனிவாசனுக்கும், ஏற்பட்டுள்ளது. 


எனினும் பால்ய சிநேகத்தில் பழகும்போது, கூப்பிட்ட அதே, 'சீமாச்சு' என்கிற வார்த்தை, தற்போது புதுசாய், ஒரு தினுசாய், கிளுகிளுப்பாய் தோன்றுகின்றது.


ஜிகினாஸ்ரீ (ஜெயஸ்ரீ)  அப்பாவும் நம்ம சீமாச்சு (ஸ்ரீனிவாசன்) அப்பாவும் நண்பர்கள். அம்மாக்களும் தோழிகள். ஆனால், சீமாச்சு வீட்டில் அவனைத் தவிர வேறு பெண் பிள்ளைகளே இல்லையோ? கதாசிரியர் அந்த விவரம் தர மறந்துவிட்டார். ஏனெனில், ஜிகினாஸ்ரீக்கு எடுக்கப்பட்ட  பூச்சூட்டு விழா, அவன் அதுவரையிலும் அறிந்திராத ஒன்றாய் இருந்திருக்கின்றது. 

ஒரே வீட்டில் இருவருமே தனிமையில் இருக்க விட்டுச் செல்வது சரியல்ல என்று ஏன் ஜிகினாஸ்ரீயின் பெற்றோர் எச்சரிக்கையோடு செயல்படவில்லை என்று ஆச்சரியமாக இருக்கின்றது. 

அப்படி தனிமையில் இருந்தாலும்  கண்ணியமாய் இருந்துள்ளான் நம்ம சீமாச்சு. பாராட்டுக்கள் சீமாச்சு.  (நல்லவேளை - அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை!!!)


இந்த இடத்தில் கண்ணியமான முறையில் கதையை ந(ட)(கர்)த்தி  சென்ற ஆசிரியருக்கு மிக்க நன்றி ! அதைப்போல், எந்த இடத்திலும் நழுவி விடாமல், வழுவி விடாமல் கொண்டு சென்றார் கதாசிரியர். 


ஜிகினாஸ்ரீ ஒரு சமயம் சீமாச்சூவை 'மக்கு, மக்கு' என்பாள். ஆனால், அவளுக்கு ஓர் அத்தைப் பையன் சுரேஷ் என்ற பெயரில் இருக்கிறான் என்று புரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ளாத மக்குவாகத்தான் இருந்துள்ளான்.

  
அந்த சுரேஷுடன்தான் ஜிகினாஸ்ரீக்குத் திருமணம் என்றதும் மன'வலி'யுடன் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, அவளைப் பற்றிய நினைவுகளையும் ஆசைகளையும் சீனிவாசன் கை கழுவும்போது  நமக்கும் வலித்தது. 


சீனிவாசன் கதை சொல்வதாய் இக்கதை அமைந்ததால், அவன்மேல் பரிதாபத்தை ஏற்படுத்திவிட்டார் ஆசிரியர்.  


இதையே, ஜெயஸ்ரீ சொல்வதாகவோ, பொதுவாய் சொல்வதாகவோ எழுதியிருந்தால், அந்த வேளையில், சுரேஷுக்குப்   பதிலாய் ஜெயஸ்ரீ வந்து, "உளறாதே சீமாச்சு.... லூஸு மாதிரி என்னை நினைச்சிட்டிருக்காதே, ஒழுங்கா படிக்கிற வழியைப் பார் "  என்று சொல்லி திட்டி அனுப்பியிருந்தாள் என்றால், நமக்கும் சீனிவாசன்மேல் கோபம் வந்திருக்கும். அப்படியில்லாமல், பரிதாபத்தை வரவைத்துவிட்டார் ஆசிரியர்.


சீனிவாசனுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான்:


"சீமாச்சூ...


உனக்கென்றே எங்கோ ஒரு பொண்ணு பொறந்திருப்பா...டா...
கவலைப்படாதே...டா... அவளைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளைக் காதல் பண்ணு...டா...! "
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.      


 மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
        


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:”அ ஞ் ச லை 

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


20.03.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.

என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

33 கருத்துகள்:

 1. //"சீமாச்சூ...
  உனக்கென்றே எங்கோ ஒரு பொண்ணு பொறந்திருப்பா...டா...
  கவலைப்படாதே...டா...
  அவளைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளைக் காதல் பண்ணு...டா...! "//

  அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின் விமர்சனம் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நண்பர் நிஜாமுதின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 3. விமர்சனம் அருமை...

  திரு. அ. முஹம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. பரிசு வென்ற திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கு வாழ்த்துகள்..

  அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 5. பரிசு பெற்ற முகம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. திறமையான விமர்சனம் எழுதி மூன்றாம் பரிசு பெற்றுள்ள முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. மூன்றாம் பரிசினைத் தட்டிஸ் சென்றுள்ள திரு. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள்! சில தவிர்க்க முடியாத சூழலினால் இந்த போட்டியின் கதைகளை தொடர்ந்து வாசிக்க முடியாமல் போய்விட்டது. நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @‘தளிர்’ சுரேஷ்


   பரவாயில்லை அன்பரே! இனிவரயிருக்கும்
   கதைகளைப் படிக்கலாம்.
   விமர்சனம் எழுதலாம்.
   பரிசுகள் பெறலாம்.
   வாருங்கள்!

   நீக்கு
 9. மூன்றாம் பரிசைப் பெற்ற திரு முஹமது நிஜாமுதீன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். தொடர்ந்து பரிசுகளைக் குவிக்கவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. மூன்றாம் பரிசைப் பெற்ற திரு முஹமது நிஜாமுதீன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...... மேலும் பல பரிசுகள் அவருக்கு கிடைக்கட்டும்....

  பதிலளிநீக்கு
 11. மூன்றாம் பரிசைப் பெற்ற திரு முஹமது நிஜாமுதின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 12. சகோதரர் ”நிஜாம் பக்கம்” திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. முகமது நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. பரிசு வென்ற முஹமது நிஜாமுதீன் சாருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. ////"சீமாச்சூ...
  உனக்கென்றே எங்கோ ஒரு பொண்ணு பொறந்திருப்பா...டா...
  கவலைப்படாதே...டா...
  அவளைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளைக் காதல் பண்ணு...டா...! "//

  அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின் இந்த வரிகள் இந்தக்கால இளைஞர்களுக்காகவே சொன்னது போல் இருக்கிறது.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 27, 2015 at 10:42 PM

   ////"சீமாச்சூ... உனக்கென்றே எங்கோ ஒரு பொண்ணு பொறந்திருப்பா...டா... கவலைப்படாதே...டா... அவளைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளைக் காதல் பண்ணு...டா...! "////

   //அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின் இந்த வரிகள் இந்தக்கால இளைஞர்களுக்காகவே சொன்னது போல் இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. :)

   நீக்கு
 16. பரிசு வென்ற திரு முஹம்மது நிஜாமுதீன் சாருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. திரு நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துகள் இவர் கதை தலைப்பையே மாற்றி இருக்கணும் என்கிறார் தலைப்பில்தொடங்கி வரிகுகுவரி விமரிசனம் எழுதிஇருக்கிறார் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 18. சீனிவாசனுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான்:


  "சீமாச்சூ...


  உனக்கென்றே எங்கோ ஒரு பொண்ணு பொறந்திருப்பா...டா...
  கவலைப்படாதே...டா...  அவளைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளைக் காதல் பண்ணு...டா...! "// எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியதுதான். வாழ்த்துகள் நிஜாமுதீன்.


  பதிலளிநீக்கு
 19. Mail message received today 31.03.2017 at 09.46 Hrs.
  =====================================================

  அன்பின் கோபு ஸார்,

  சீமாச்சுஊஊஊ கதை அல்ல திரைப்படம்.

  மனதோடு ரீல் புகுந்து ஓடியது போலவே இருந்தது. கடைசி டச்....... நச்.... என்று ஆணி அடித்த கதை.

  தகுதிக்கு மீறியும், நிகழ்கால உரிமையையும் இவ்வளவு அழகாக எழுத்தில் ஜிகினாஸ்ரீக்கு சிலை வடித்த விதம் அருமை.

  கதை சிறிது ......... சாரம் பெரிது.

  இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
  பரம ரஸிகை

  பதிலளிநீக்கு