கதையின் தலைப்பு
VGK 07 -
” ஆப்பிள் கன்னங்களும்
அபூர்வ எண்ணங்களும் ”
அபூர்வ எண்ணங்களும் ”
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
முதல் பரிசினை
வென்றுள்ளவர்கள்
இருவர் :
இருவர் :
முதல் பரிசினை வென்றுள்ள
திருமதி.
கீதா மதிவாணன்
திருமதி.
கீதா மதிவாணன்
மாமீ….
வசுவா? வாடிம்மா வா… என்னடி எங்காத்துப் பக்கம் திடீர்விஜயம்?
தையக்கடையில் ஜாக்கெட் கொடுத்திருந்தேன் மாமி… வாங்கிண்டுபோக வந்தேன்.
எத்தனை ஜன்னல் வச்சிருக்கே?
எங்காத்துக்கா மாமீ?
உங்காத்துக்கில்லடீ.. உன் ஜாக்கெட்டுக்கு?
என்ன மாமி வெளையாடறேள்?
அதில்லடீ… கோபு சாரோட ’ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’ கதையை வாசிட்டிருந்தேனா? அதில் வர ஜிகினாஸ்ரீ மாதிரி நீயும் தச்சிருக்கியோனு கேட்டேன்.
நானும் அந்தக் கதையை படிச்சேன் மாமி. நன்னா ஜில்லுனு ஒரு தலைப்பு. ஆனா பாருங்கோ… ஜெயஸ்ரீனு அழகான பேர் இருக்கிறச்சே… ஜிகினாஸ்ரீனு அந்த சீமாச்சு பேர் வச்சிருக்கறது மாத்திரம் நன்னாவே இல்ல.
அவ மாத்திரம் ஸ்ரீனிவாசன்ற அழகான பேரைச் சுருக்கி சீமாச்சூன்னு சொல்லலாமா? அதுவுமில்லாமே ஜிகினாஸ்ரீனு சொல்றதுக்கு காரணமும் சொல்லியிருக்கானே!
ஆமாம் மாமி. வாசிக்குபோதே சிரிப்புதான் எனக்கு. கூடவே ஒரு சிந்தனையும் வந்தது. இந்த பெண்குழந்தைகள் வயசுக்கு வர சமயத்திலே சடங்கு சம்பிரதாயம்னு கொண்டாடும்போது ஒத்த வயசுள்ள ஆண்குழந்தைகள் எதுவுமே புரியாமே தவிக்கிற தவிப்பிருக்கே… ஒருவகையிலே அதுகள் பாவம் மாமி. எனக்கென்ன தோண்றதுன்னா… அந்தந்த வயசுக்கேத்தாப்போல நம்மாத்து ஆண்குழந்தைகளுக்கு நாம கொஞ்சமாச்சும் எடுத்துச் சொல்லணும். அப்போதான் மத்தவாகிட்ட போய் கேட்டு அவமானப்படுறதையும், தெரியாதவாகிட்ட கேட்டு தப்பு தப்பா புரிஞ்சிக்கறதையும் தவிர்க்கமுடியும். அதையுங்கூட கோபு சார் சாமர்த்தியமா கதையில் நுழைச்சி நம்மளை யோசிக்கவச்சிருக்கார் பாருங்கோ…. அவரை அதுக்காகப் பாராட்டியே ஆவணும்.
சரிதான்டியம்மா நீ சொல்றது. தெரியாத்தனமா அதை அந்த ஜிகினாஸ்ரீ கிட்டயே கேட்டு மூக்குடைபட்டுப்போறானே பாவம்டி குழந்தே. இந்த புள்ளையாண்டான் என்னமா மனசிலே காதலை வளர்த்துண்டு அவளுக்காக நித்தமும் உருகுறான். அவள் என்னடான்னா தன் காரியங்களுக்கு அவனை நன்னா உபயோகப்படுத்திண்டு கடேசில கறிவேப்பிலையாட்டமான்னா அவனைத் தூக்கியெறிஞ்சிட்டா…
அவள் எங்கயுமே அவன்கிட்ட தன் காதலைக் காட்டவே இல்லையே மாமி. அவள் என்னமோ இவனண்டை ஈஷி ஈஷி காதல் பண்ணிண்டு கடேசில கைவிட்டாமாதிரியில்லே சொல்றேள்?
ஈஷிண்டாதானா? அவன் மனசில ஆசையைத் தூண்டிவிடறாப்போல நடந்துண்டிருக்காளே போறாதா? இந்த சீமாச்சூவும் சரியான அம்மாஞ்சி… அந்த ஜிகினாஸ்ரீ சொல்ற எடுபிடி வேலையெல்லாம் செஞ்சுண்டு அவள் சொல்றதுக்கெல்லாம் பூம்பூம் மாடு கணக்கா தலையை ஆட்டிண்டு…
நேக்கு கதையை வாசிக்கிறச்சயே அவன் மேல கோவம் கோவமா வந்தது.
நல்லவேளை புள்ளையாண்டானுக்கு கடைசியிலயாவது புத்திவந்ததோ பொழைச்சான். விட்டதடீ ஆசை விளாம்பழத்து ஓட்டோடங்கறாப்போல விட்டுட்டு வந்தான். இல்லையானா… கடேசிவரைக்கும் அவளுக்கு சேவகம் செஞ்சே அவன் வாழ்க்கை அழிஞ்சிபோயிருக்கும்.
நேக்கு கதையை வாசிக்கிறச்சயே அவன் மேல கோவம் கோவமா வந்தது.
நல்லவேளை புள்ளையாண்டானுக்கு கடைசியிலயாவது புத்திவந்ததோ பொழைச்சான். விட்டதடீ ஆசை விளாம்பழத்து ஓட்டோடங்கறாப்போல விட்டுட்டு வந்தான். இல்லையானா… கடேசிவரைக்கும் அவளுக்கு சேவகம் செஞ்சே அவன் வாழ்க்கை அழிஞ்சிபோயிருக்கும்.
எனக்கென்னவோ ஜெயஸ்ரீ மேல எந்த தப்புமில்லேன்னு தோணறது மாமி. அவள் விகல்பமில்லாம ஸ்ரீனிவாசனோட ஒரு உடம்பொறந்தானாட்டம் பழகியிருக்கா… அதை அந்த அசமஞ்சம் தப்பா புரிஞ்சிண்டு அவள் மேலே காதலையும் மனசிலே கற்பனைகளையும் வளர்த்துண்டு திரிஞ்சிருக்கறதுன்னு நினைக்கறேன் மாமி.
அதெப்படிடீ… எந்த பொண்ணு உடம்பொறந்தானாட்டம் நெனைக்கிறவனாண்ட உள்பாவாடைக்கு நாடா கோக்கச் சொல்லுவா? அப்படியே அவ சொன்னாலும் இந்த பித்துக்குளிக்கு எங்க போச்சுது புத்தி?
ஏன் மாமீ… மனசுக்குப் பிடிச்சவளுக்கு அதெல்லாம் செய்யறதிலே என்ன தப்பு? எங்காத்துக்காரர் கூடத்தான் நேக்கு அவசரத்துக்கு பாவாடைக்கு நாடா கோத்துத் தருவார்.
டீ… அது உரிமையுள்ளவா பண்ற வேலைடீ…
அந்த ஜிகினாஸ்ரீ அவனை ஒரு ஆண்பிள்ளையாவே மதிக்கலயே… வேலையாள் மாதிரி நடத்தறான்னு அவன் வாயாலயே அதை ஒப்புத்துக்கறதா கோபு சார் எழுதியிருக்காரே.
மாமி, சின்னக்குழந்தையிலிருந்தே ரெண்டும் ஒண்ணா வெளையாடி ஒண்ணா பழகி இருக்கிறதுகள். ஒருத்தரை ஒருத்தர் நன்னா புரிஞ்சி வச்சிருக்கையிலே பிரியத்தோட வாடா போடான்னு பேசறதிலே என்ன தப்பு?
நல்ல பிரியம்! ஆனா.. ஒண்ணு கவனிச்சயா? அந்த ஜிகினாஸ்ரீதான் இவனை நிமிஷத்துக்கொரு டா போடறாளே தவிர இவன் என்னவோ அவளை மரியாதையாத்தான் பேசறான்.
வெளியிலே மரியாதை காட்டினா போறுமா? மனசிலே வேணாமா? இல்லையானா… அவ படத்தை வரைஞ்சதோட நிறுத்தாமே… ஆப்பிளை வெட்டி அவ கன்னத்தோட கன்னமா வச்சி ஆசையா திங்கறானே… அதை என்னன்னு சொல்றது?
அது அந்த வயசுக்கான ஈர்ப்புடீ… முந்தின நாள் வரைக்கும் அவ மேலே அவ்வளவு ஈர்ப்பிலே இருந்தவன், அவ வேறொருத்தனுக்கு ஆம்படையாளாவப் போறாள்னு தெரிஞ்ச க்ஷணமே மனசைக் கட்டுப்படுத்திண்டு வலியை மறைச்சிண்டு அவமேலே வச்சிருந்த ஆசையை மனசிலிருந்து நீக்கிடறானே… அந்த இடம் போறுமே… சீமாச்சூவோட மனமுதிர்ச்சியைக் காட்டுறதுக்கு.
ஆனாலும் அப்பகூட தன் கல்யாண வேலையைப் பார்க்க அவனை அழைக்கிறாளே… அந்த ஜிகினாஸ்ரீ….
அவன் எங்கே மாமி, அவமேலே வச்சிருந்த ஆசையை மனசிலிருந்து நீக்கறான்?
அடி மக்கு.. நோக்கு இதுகூடத் தெரியலையா? கடேசில என்ன எழுதியிருக்கார், அவன் கைகழுவிட்டானாம். எதை? கையில ஒட்டிண்ட பலகாரத்தை மாத்திரமில்லே… மனசிலே ஒட்டிண்ட விவகாரத்தையும் சேத்துதான்.
ஓ… நேக்கு இது தோணவே இல்ல மாமி. நான் என்ன நினைச்சேனா… இவனும் தேவதாஸ் மாதிரி தாடி வளர்த்துண்டு பாரு பாருன்னு பாட்டு பாடிண்டு திரிவானோன்னு.
மாட்டான்டீ…
சீனிவாசனுக்கு அவள் மேலே ஒரு இனக்கவர்ச்சிதான் இருக்கு. அந்த ஜிகினாஸ்ரீ அவனை விடவும் அழகு, அவனை விடவும் நெறைய படிச்சிருக்காங்கிற தாழ்வு மனப்பான்மையும் கூடவே இருக்கு. அவா ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிட்டிருந்தா வாழ்க்கை சுபிட்சமா இருந்திருக்குமா? கல்யாணத்துக்கப்புறம் இவனுடைய தன்மானம் எந்த சமயத்திலயாவது தலைதூக்கிட்டா… அப்புறம் எல்லாமே பாழாப்போயிடும். இதுமாதிரி ஒருதலைக்காதல் நிறைவேறாமல் முடியற கதையில் எல்லாம் அடப்பாவமேன்னு மனசு கெடந்து தவிக்கும். எப்படியாவது ரெண்டுபேரையும் சேர்த்து வச்சிட மாட்டாரா கதாசிரியர்னு உள்ளுக்குள்ள ஏங்கும்.
வெறும் இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு காதல் வயப்பட்டு கல்யாணமும் கட்டிண்ட பிற்பாடு நித்தமும் பிக்கல் பிடுங்கல்னு இருந்தா ரெண்டு பேர் வாழ்க்கையுமோன்னோ பாதிக்கப்படும்? ஸ்ரீனிவாசனுக்கு கொஞ்ச நாளைக்கு கஷ்டமா இருந்தாலும் கூடிய சீக்கிரமே மனசு ஏத்துக்கும் என்கிறதைத்தான் சொல்லாமல் சொல்லியிருக்கார்.
நன்னா சொன்னேள். இந்தக் கதையில் பொருந்தாக் காதல் பத்தி அற்புதமா எழுதியிருக்கார். இது ஒருவகையில் ஒருதலைக் காதலா இருந்தாலும் அதொண்ணும் மனசின்பால் உள்ள ஈர்ப்பால் வரல. ஒரு பையனோட பார்வையில் ஒரு பொண்ணோடான சிநேகம் படிப்படியா இனக்கவர்ச்சி, உடற்கவர்ச்சி, காதல்னு உருமாறி கடேசியில் இன்னதுதான் வாழ்க்கைன்னு புரிஞ்சிக்கறாமாதிரி அழகா கதையை நகர்த்தி அதுக்கொரு நல்ல முடிவையும் வழங்கியிருக்கார் கோபு சார். சரி மாமி, நான் கெளம்பறேன். நேரமாயிடுத்து.
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
இனிய நல்வாழ்த்துகள்.
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய
திருமதி. கீதா மதிவாணன் அவர்களே !
வணக்கம்.
நான் இந்தக்கதையை முதன் முதலாக எழுதிய போதும்,
அது ஒரு தமிழ் வாரஇதழில் அச்சாகி வெளிவந்தபோதும்,
என் வலைப்பதிவினில் இந்தக்கதையை முன்பே வெளியிட்ட போதும்,
சிறுகதை விமர்சனப்போட்டிக்காக இந்தக்கதையினை
மீண்டும் இப்போது வெளியிட்டபோதும்
எனக்குள் எவ்வளவு ஒரு ‘கிக்’ ஏற்பட்டதோ
அதே அளவு ‘கிக்’ தங்களின் மாறுபட்ட,
வித்யாசமான, மிகச்சிறந்த
இந்த விமர்சனத்தைப் படித்து மகிழ்ந்தபோதும்
எனக்கு ஏற்பட்டது.
தங்களின் இந்த அழகான கற்பனைக்கும்,
நகைச்சுவையான எழுத்துக்களுக்கும்
அடியேன் தலை வணங்குகிறேன்.
இதை எழுதிய தங்கள் விரல்களுக்கு இதோ:
தங்களுக்கு என் ஸ்பெஷல்
பாராட்டுக்கள், வாழ்த்துகள் + நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய
திருமதி. கீதா மதிவாணன் அவர்களே !
வணக்கம்.
நான் இந்தக்கதையை முதன் முதலாக எழுதிய போதும்,
அது ஒரு தமிழ் வாரஇதழில் அச்சாகி வெளிவந்தபோதும்,
என் வலைப்பதிவினில் இந்தக்கதையை முன்பே வெளியிட்ட போதும்,
சிறுகதை விமர்சனப்போட்டிக்காக இந்தக்கதையினை
மீண்டும் இப்போது வெளியிட்டபோதும்
எனக்குள் எவ்வளவு ஒரு ‘கிக்’ ஏற்பட்டதோ
அதே அளவு ‘கிக்’ தங்களின் மாறுபட்ட,
வித்யாசமான, மிகச்சிறந்த
இந்த விமர்சனத்தைப் படித்து மகிழ்ந்தபோதும்
எனக்கு ஏற்பட்டது.
தங்களின் இந்த அழகான கற்பனைக்கும்,
நகைச்சுவையான எழுத்துக்களுக்கும்
அடியேன் தலை வணங்குகிறேன்.
இதை எழுதிய தங்கள் விரல்களுக்கு இதோ:
ஒன்று தங்களுக்கு !
மற்றவை தங்களின்
கற்பனை கதாபாத்திரங்களான
மாமிக்கும், வசுவுக்கும் !!
தங்களுக்கு என் ஸ்பெஷல்
பாராட்டுக்கள், வாழ்த்துகள் + நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
வென்றுள்ள
மற்றொருவர் யார் ?
மிகச்சிறிய
இடைவேளைக்குப்பின்
அறிவிக்கப்படும்.
’பகவத் கீதா’ போல
இரண்டு '' கீதா ''களுக்கும்
இடையே அகப்பட்டுள்ள
இந்த அடியேன்
கோபாலகிருஷ்ணனின்
இன்றைய இந்தப்பதிவு
என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.
02.01.2011 அன்று முதன் முதலாக என்
வலைத்தளத்தினில் நான்
எழுதத் துவங்கி இன்றுடன்
167 வாரங்கள் ஆகின்றன.
சராசரியாக வாரம்
மூன்று பதிவுகள் வீதம்
கொடுத்து இன்று
ஐநூறாவது
பதிவினை எட்ட முடிந்துள்ளது.
என் எழுத்துக்களுக்கு அவ்வப்போது
பின்னூட்டங்கள் என்ற
உற்சாக பானம் அளித்து வந்துள்ள
அனைத்து நட்புள்ளங்களுக்கும்
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இன்றைய முதல் பரிசினை
வென்றுள்ள சாதனையாளர்கள்
இருவர் பெயர்களும் “கீதா” என்று
அமைந்துள்ளது ஓரே ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்
பெயர்களைத்தவிர மேலும் இவர்களுக்குள்
ஒருசில ஒற்றுமைகள் உள்ளன.
இவர்கள் இருவருமே
VGK-03, VGK-04 and VGK-07
ஆகிய மூன்று கதைகளுக்கான
விமர்சனங்களிலும் பரிசு பெற்றவர்கள்.
இருவருமே தலா ஒரு இரண்டாவது பரிசும்,
தலா இரண்டு முதல் பரிசும் பெற்றுள்ளவர்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசினை
வென்றுள்ள
மற்றொருவர்
திருமதி.
கீதா சாம்பசிவம்
அவர்கள்.
வலைத்தளம்:
முதல் பரிசினை வென்றுள்ள
திருமதி.
கீதா சாம்பசிவம்
அவர்களின் விமர்சனம் இதோ :
இதுவும் உளவியல் ரீதியான கதையே. பதின்ம வயதுப் பெண்ணின் மனமும், ஆணின் மனமும் இயங்கும் விதம் குறித்து எழுதப் பட்டுள்ளது. பெண் சகஜமாய்ப்பழகுவதாலேயே அவள் மனம் இப்படித் தான் என நிர்ணயிப்பது கடினம். அதையே இந்தக் கதையும் சுட்டிக் காட்டுகிறது. தேனை அருந்த வண்டு மலரை மொய்க்கிறது. அருந்தவும் ஆரம்பிக்கிறது. ஆனால் ஆதவனைக் கண்டதும் மலர்ந்த மலரோ, ஆதவன் மறைந்ததும் கூம்பி விடுகிறது. இதை அறியாத வண்டோ பூவுக்குள் மாட்டிக் கொள்கிறது. அது நினைப்பதோ தான் மலரின் மனதில் இடம் பெற்றிருப்பதாகவே. ஆனால் அதுவோ மலரின் மனதுக்கு அருகே கூடச் செல்லவில்லை. மலரின் கைக்குள் சிக்கிக் கொண்டு அதன் தாங்க முடியா காதல் வெள்ளத்திற்கு ஒரு தடுப்புச் சுவராகவே பயன்படுகிறது இதை அறியா வண்டோ மலரின் மணம் புவியெங்கும் பரவுவதை உணராமல் தனக்காகவே மணம் வீசுவதாக நினைக்கிறது.
சிறு வயதில் இருந்தே ஒன்றாகப் பழகியவர்கள் ஸ்ரீநிவாசனும் ஜெயஸ்ரீயும். குழந்தை முதல் ஒன்றாகவே பழகியதால் ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசனை ஒரு ஆணாகவே நினைக்கவில்லை, அல்லது நினைத்தாலும், புரிந்தாலும் அவள் மனம் பளிங்கு போல் இருப்பதால் கல்மிஷம் இல்லாமல் பழகி வருகிறாள். இங்கே ஜெயஸ்ரீ பழகுவது ரகசியமாகவே இல்லை, இரு தரப்புப் பெற்றோருக்கும் தெரிந்தே என்பதில் இருந்து பெற்றோரும் தவறாகவே நினைக்கவில்லை எனப் புரிகிறது. ஜெயஸ்ரீ தன் வழக்கப்படி டெய்லரிடம் தன் ரவிக்கையின் சின்ன சின்ன மாறுதல் செய்யக் கூட ஸ்ரீநிவாசனிடம் கொடுத்து அனுப்புகிறாள்.
முதலில் எல்லாம் அவள் கொழு மொழு கன்னங்களின் அழகில் மயங்கிய ஸ்ரீநிவாசனுக்கு நாளாக, ஆக, அவள் உடலின் மாற்றங்கள் கண்களை மட்டுமில்லாமல் மனதையும் ஈர்க்கிறது. அவள் வயதுக்கு வந்திருக்கும் விஷயமே புரியாத அளவுக்கு வெகுளியான ஸ்ரீநிவாசனுக்கு அவள் உடலின் மாற்றங்கள் விளைவிக்கும் விபரம் தெரியா உணர்ச்சிகள் புரியாத புதிராகவே இருக்கிறது.
ஸ்ரீநிவாசன் அளவுக்கு ஜெயஸ்ரீ வெகுளியே அல்ல என்பது டெய்லரைக் குறித்த அவள் விமரிசனத்திலும், ஸ்ரீநிவாசனை விபரம் தெரியாத முட்டாள் என்பதிலும் தெரிந்தாலும், அவள் மனதில் ஸ்ரீநிவாசன் இடம் பெறவே இல்லை என்பதும், அவள் ஒரு சகோதரன் போலவோ, அல்லது நல்லதொரு நண்பனாகவோ தான் கருதி வருகிறாள் என்பதும் தெரிகிறது. ஸ்ரீநிவாசனின் மனதில் தான் சலனத்தைக் கிளப்பி விட்டிருக்கிறோம் என்பதை அவள் சற்றும் உணரவே இல்லை. அப்படி உணர்ந்திருந்தால் அவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு எங்கும் சென்றிருக்க மாட்டாளே.
ஒரு தோழியாக, சிநேகிதியாக, எல்லாவற்றுக்கும் மேல் சகோதரியாக, தாயாக என ஜெயஸ்ரீ அவனிடம் நடந்து கொள்கிறாள். அது தான் அவள் அவன் பசி பார்த்து வயிறு முட்ட உணவு வாங்கிக் கொடுக்கும்படி நடந்து கொள்வது காட்டுகிறது. இதில் காதல் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை. ஆனால் ஸ்ரீநிவாசனுக்கு வயது காரணமாகவும் இயல்பாகவே ஆண், பெண் மாற்றுப் பாலினத்திடம் உள்ள ஈர்ப்புக் காரணமாகவும் அவளிடம் இனம் தெரியா உணர்வு பூர்வமான பாசம் தோன்றுகிறது. இது தான் காதலோ என்றெல்லாம் யோசிக்கிறான் ஸ்ரீநிவாசன். படிப்பில் சுமார் ரகமான அவன் அவள் படிப்பிற்கும், அழகுக்கும் தான் தகுதியா என்றெல்லாம் யோசித்து அவளை எவ்விதத்திலேனும் கவர எண்ணுகிறான்.
சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் தேர்ச்சி பெற்றிருந்த ஸ்ரீநிவாசன், ஜெயஸ்ரீக்குப் படங்கள் வரைந்து உதவி செய்த ஸ்ரீநிவாசன், இப்போது ஜெயஸ்ரீயைக் கவர்வதற்காகவும் தன் முழுத் திறமையும் காட்டி அவன் மிகவும் ரசிக்கும் ஜெயஸ்ரீயின் ஆப்பிள் கன்னங்களை நன்றாகத் தெரியும்படி அவள் படத்தை மிக அழகாக வரைந்து ரசிப்பதோடு அல்லாமல் அவள் மேல் கொண்டிருக்கும் காதல் வெளிப்படும் வண்ணம் கடையில் இருந்து வாங்கி வந்த ஆப்பிள் பழத்தோடு அவள் கன்னங்களை ஒப்பிட்டு ரசிக்கிறான். இது அவள் மேல் அவன் கொண்டிருக்கும் காதலின் வெளிப்பாடு என நினைப்பு வந்தாலும், அடுத்து அவன் செய்யும் காரியம் ஒருவேளை இது வாலிப வயதில் அனைத்துப் பதின்ம வயது விடலை வாலிபருக்கும் பெண்ணின் கவர்ச்சியான உடல் மீது தோன்றும் ஈர்ப்போ என்னும் எண்ணமும் வருகிறது.
அந்த ஆப்பிளைக் காதலின் சின்னமான இதய வடிவில் வெட்டித் தான் வரைந்த ஓவியத்தின் கன்னங்களின் மீது வைத்து அதைக் கடித்து ருசி பார்க்கிறான். இங்கே தான் கொஞ்சம் சந்தேகம் வருகிறது இது வெறும் உடல் ஈர்ப்புத் தானோ என. பொதுவாக இந்த வயதிலேயே எல்லா ஆண், பெண்ணிற்கும் ஒருவர் மீது ஒருவருக்குத் தோன்றும் ஈர்ப்புத் தான் என உறுதியாகவும் ஆகிறது.
விபரம் புரியா வயது. பெண்ணின் உடல் காட்டும் கோணங்கள், சுண்டி இழுக்கும் பார்வை, சகஜமான பேச்சு எல்லாம் சேர்ந்து அவன் மனதில் புதியதோர் உலகமே சிருஷ்டி ஆகிறது. அந்த ஓவியத்தைத் தன் தாயிடம் மறைக்காமல் காட்டி விடுகிறான்.
இங்கே அவன் போடும் கணக்கு, தாய்க்குத் தெரியட்டும் என்பதாகவும் இருக்கலாம். தாயின் மூலம் அவளிடம் தான் கொண்டிருக்கும் காதலைத் தெரிவிக்கலாம். இரு தரப்புப் பெற்றோரும் நெருங்கிய நண்பர்கள் ஆதலால் சுலபமாகத் தன் ஆசை நிறைவேறும் என்ற மனக்கோட்டையாகவும் இருக்கலாம். இத்தனைக்கும் பின்னரே அவள் தன் ரவிக்கையை ஆல்டர் செய்ய அவனிடம் கொடுத்து அனுப்புகிறாள்.
அவனைப்பொறுத்தவரை அவள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்யும் நிலைமையில் இருந்தான். அதோடு அவள் ரவிக்கையைத் தொடுவதும் அவனுக்கு அவளையே தொடுவது போன்ற உணர்வையும் தந்திருக்கலாம்.
ஆனால் டெய்லர் தூக்கிப் போடும் குண்டில் அவனுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அவன் கண்ணுக்கு இனிய காதலி யாருடனோ சுத்துவதாக டெய்லர் சொல்லக் கேட்ட அவனுக்கு ஒரே திகைப்பு. அவளிடம் காதலைத் தெரிவித்துவிட வேண்டும் என முடிவு செய்தும் ஏனோ தயங்குகிறான். அவளே ஏதேனும் சொல்லுவாளோ என்னும் எண்ணம். ஆனால் அவளோ இவனைக் குறித்தோ இவன் எண்ணங்களைக் குறித்தோ நினைக்கவே இல்லை. அவனும் மழுப்பலாகப் பேசி விட்டு வீடு திரும்பிப் படத்தைப் பூர்த்தி செய்து தன் தாயிடம் காட்டி ஒப்புதலும் வாங்கி விட்டான். அவள் பிறந்த நாள் பரிசாகக் கொடுக்க வேண்டும் எனத் தாய் சொல்ல அவனும் காத்திருந்து அவள் பிறந்த நாளுக்குத் தன் தாயோடு அந்தப் படத்தையும் அழகாகப் பரிசுப் பாக் செய்து எடுத்துச் சென்றால்!
சென்றவனுக்கு ஒரே அதிர்ச்சி காத்திருக்கிறது. அவள் அத்தை பிள்ளை, முறை மாப்பிள்ளை வந்திருக்கிறான். காதலுக்கு அவன் வில்லனோ என்று பார்த்தால் கடவுளே, அவன் தான் கதாநாயகன், நம் ஸ்ரீநிவாசன் வெறும் தோழனே. ஜெயஸ்ரீ சுற்றியதெல்லாம் அந்த அத்தை பிள்ளையோடு தான் என்பதும், இருவருக்கும் திருமணம் ஏற்கெனவே நிச்சயம் செய்யப்பட்டு விட்டது எனவும் தெரிந்து கொள்கிறான். ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளையின் கம்பீரத்தையும், அழகையும், படிப்பையும், வேலையையும் பார்த்துவிட்டு ஜெயஸ்ரீயின் அழகுக்கும், படிப்புக்கும் இவனே ஈடு கொடுக்கக் கூடியவன் என்ற சத்தியமான உண்மை ஸ்ரீநிவாசனுக்குப் புரிகிறது. தான் கொண்டு வந்த பரிசைக் கூடக் கொடுக்காமல் பிரமையுடன் இருக்கும் அவனிடம் இருந்து அதை வாங்கிப் பார்த்த ஜெயஸ்ரீ ஆச்சரியம் அடைவதோடு வருங்காலக் கணவனிடமும் காட்டி மகிழ்கிறாள். அவள் தன்னைப் பற்றி அவனிடம் கூறி இருப்பதை அந்த மாப்பிள்ளை மூலமே அறிந்து கொண்ட ஸ்ரீநிவாசன் இப்போது அவள் துளியும் கல்மிஷமில்லாமல் தான் வரைந்து வந்த படத்தைக் கூட வருங்காலக் கணவனிடம் மறைக்காமல் காட்டி மகிழ்வதைக் கண்டதும் அவள் மனதில் தான் இருக்கும் இடம் என்னவென்று புரிந்து கொள்கிறான். ஸ்ரீநிவாசன் மனதில் இத்தனை நாட்கள் மறைந்திருந்த அன்பெனும் சூரியன் இப்போது ஆசை என்னும் மேகத்திலிருந்து வெளி வந்து பளிச்செனப் பிரகாசிக்க அவன் மனதிலும் தெளிவு பிறக்கிறது. ஆனாலும் படத்தை மாட்ட அடிக்கும் சுத்தியலில் இருந்து பறந்து வந்த ஆணி அவன் நெற்றியில் மோதியதை எவருமே கவனிக்காத மாதிரி அவன் மனதிலும் சிறு வலி ஒன்று ஏற்படுகிறது. இதையும் எவரும் அறியவே முடியாது. கோடையில் தெரியும் மேற்கு வானின் மின்னல் போல் ஸ்ரீநிவாசன் மட்டுமே அறிவான். நாளாக ஆக அந்த வலி மறையும், ஸ்ரீநிவாசனுக்கு என ஒருத்தி வருகையில். அது வரை அவன் காத்திருக்கத் தான் வேண்டும் என்றாலும் இந்த முதல் காதல் அவனால் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின்
வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுக்கான தொகை
இவ்விருவருக்கும்
சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் ஏற்கனவே
வெளியிடப்பட்டுள்ளன.
இணைப்புகள் இதோ:
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இதுவரை முதல் ஏழு கதைகளுக்கான
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள்
முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரை ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள்
பட்டியலில் உள்ளோர் :
1] திரு. ரமணி அவர்கள்
[VGK-01 to VGK-04]
மற்றும்
2] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
[VGK-04 to VGK-06]
மட்டுமே !
இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?
இதைப்படித்துக்கொண்டிருக்கும்
நீங்களாகவும் இருக்கலாம் !
oooooOooooo
இதுவரை முதல் ஏழு கதைகளுக்கான
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள்
முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரை ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள்
பட்டியலில் உள்ளோர் :
1] திரு. ரமணி அவர்கள்
[VGK-01 to VGK-04]
மற்றும்
2] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
[VGK-04 to VGK-06]
மட்டுமே !
இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?
இதைப்படித்துக்கொண்டிருக்கும்
நீங்களாகவும் இருக்கலாம் !
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
”அ ஞ் ச லை ”
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
VGK அவர்கள் நடத்தும் சிறுகதை விமர்சனப் போட்டியில், ஏழாவது கதைக்கான முதல் பரிசினை வென்றுள்ள சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.
நீக்குஇரண்டு விமர்சனங்களுமே மிக அருமை... முதல் பரிசினை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட கீதமஞ்சரி அவர்களுக்கும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குதங்களது 500-வது பதிவு. மிக்க மகிழ்ச்சி வை.கோ. ஜி!...... மேலும் பல நூறு பதிவுகள் வெளியிட எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வெங்கட்.
நீக்கு500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
கீதமஞ்சரிக்கும், கீதாசாம்பசிவம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான விமர்சனம்.
இருவருக்கும் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.
நீக்குஐநூறாவது பதிவுக்கு மனமார்ந்த அன்பான வாழ்த்துக்கள் அண்ணா .முதல் பரிசை வென்ற இருவருக்கும் ..வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் .ஐநூறு ஆயிரமாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு501 வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகீதா ..அசத்திட்டீங்க ..இருவர் உரையாடல் மிக அருமை ..
பதிலளிநீக்குரெண்டு பேர் பேசும்போது ..காற்றுவாக்கில் (ஒட்டு கேட்பதில்லை :) ) கேக்கற மாதிரியே ரியலிஸ்ட்டிக்கா இருந்தது :)
Angelin.
இந்த வித்தியாச முயற்சியை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.
நீக்குஎதிர்பாரா அதிர்ச்சியை விளைவித்த இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி. இதுவரையிலும் ஒரு இரண்டாம் பரிசையும், இரண்டு முதல் பரிசையும் கொடுத்து அசத்திட்டீங்க!
பதிலளிநீக்கு500 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். மேலும் பற்பல சிறப்புப் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு வரவும் வாழ்த்துகிறேன். இத்தனை சிரமப்பட்டுப் படங்களை எல்லாம் தேடி எடுத்துப் போட்டுப் பதிவுகளைச் சிறப்பாக வெளியிடும் உங்கள் உழைப்புப் பாராட்டத் தக்கது.
பதிலளிநீக்குஇங்கு வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியும். இனி வாழ்த்தப் போகும் அன்பர்களுக்கும் என் நன்றி.
பதிலளிநீக்கு500 பதிவுகள் என்பது
பதிலளிநீக்குஅதுவும் தரமான பதிவுகள் இத்தனை
குறுகிய காலத்தில் என்பது ஒரு இமாலயச் சாதனையே
சாதனைகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நான் விரும்பித் தவறாது தொடரும்
பதிலளிநீக்குபதிவர்கள் இருவரும் முதல் பரிசுப் பெற்றது
அதிக மகிழ்வளிக்கிறது
பரிசுகள் தொடர நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு மிகவும் நன்றி ரமணி சார். தங்களிடமிருந்து கற்றதன் பலனே இந்தப் பரிசுகள். மிக்க நன்றி சார்.
நீக்குஐந்நூறாவது பதிவுக்கு சிறப்புப் பாராட்டுகள் கோபு சார். வாரந்தவறாமல் சரியாக பதிவுகளை முறைப்படுத்தித் தொகுத்து வெளியிடும் தங்கள் நேர மேலாண்மைக்கு தலைவணங்குகிறேன்.
பதிலளிநீக்குமூன்றாவது முறையாக பரிசுக்குரியதாய் என் விமர்சனம் நடுவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் அதுவும் முதல் பரிசு என்பதில் அளவிலா மகிழ்ச்சி கோபு சார். அதைவிடவும் மகிழ்ச்சி தங்கள் கையால் மோதிரங்கள் வழங்கி கௌரவித்திருப்பது. மோதிரக்கையால் குட்டு வாங்கவேண்டும் என்பார்கள். தாங்களோ தங்கள் மோதிரக்கையால் மோதிரமே பரிசாய் அளித்து நெகிழ்த்திவிட்டீர்கள். எனக்கு மட்டுமல்லாது என் கதாபாத்திரங்களுக்கும் பரிசளித்த தங்கள் பெருந்தன்மைக்கு மனமார்ந்த நன்றி.
முதல் பரிசு பெற்ற கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கும் இனிய பாராட்டுகள். மிக அருமையாக விமர்சனம் எழுதியுள்ள அவர்களோடு பரிசைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன். பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
தங்கள் ஆயிரமாவது. பதிவுக்காக காத்திருக்கிறோம் நண்பரே!
பதிலளிநீக்கு500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குகீதமஞ்சரிக்கும், கீதாசாம்பசிவம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான விமர்சனம்.
இருவருக்கும் பாராட்டுக்கள்
மீண்டும் வரும் பதிவுகளை எதிர்பார்கிறேன்.
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி விஜி.
நீக்குதிருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் (வித்தியாசமான விமர்சனம்), திருமதி. கீதா சாம்பசிவம் (ரசிக்க வைக்கும் விமர்சனம்) அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு500 வது பதிவு...! வாழ்த்துக்கள் பல...
ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்கு500 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஇரண்டு பேருக்கும் பெயர் ஒற்றுமை பரிசு ஒற்றுமை.. திருமதிகள்
கீதா மதிவாணன், கீதா சாம்பசிவம் இருவருக்கும் மனப்பூர்வமான பாராட்டுகள் !
தங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ரிஷபன் சார்.
நீக்கு[VGKயின்] 500வது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குகீதமஞ்சரிக்கும்,
பதிலளிநீக்குகீதாசாம்பசிவம் அவர்களுக்கும்
இனிய வாழ்த்துக்கள்.
அருமையான விமர்சனம் எழுதிய
இருவருக்கும் பாராட்டுக்கள்
தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.
நீக்குமுதற்பரிசு பெற்ற இரு விமரிசனங்களுமே ரொம்ப அருமை!.. இரண்டும் மிக வித்தியாசமாக அமைந்திருந்தன!!.. கீதாம்மாவுக்கும் கீதமஞ்சரிக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!...
பதிலளிநீக்குஐநூறாவது பதிவுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!..பாராட்டுக்கள்... மேலும் பல ஆயிரம் பதிவுகள் காண வாழ்த்துகிறேன்!!!
தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி மேடம்.
நீக்கு
பதிலளிநீக்குஇன்றைய முதல் பரிசினை வென்றுள்ள சாதனையாளர்கள்
இருவர் பெயர்களும் “கீதா” என்று
அமைந்துள்ளதும் இருவருமே தலா ஒரு இரண்டாவது பரிசும்,
தலா இரண்டு முதல் பரிசும் பெற்றுள்ளவர்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரே ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.தொடரட்டும்..!
பரிசு பெற்ற அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகள்!
பதிலளிநீக்குதங்களின் 500ஆவது பதிவு என்பது மகிழ்வளிக்கிறது! தொடரட்டும் உங்கள் அருமையான சாதனைப் பதிவுகள்! ஆயிரமாவது பதிவினை விரைவில் அளிக்க இறையருள் துணைபுரிய வேண்டுகிறேன்! நன்றி ஐயா!
தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.
நீக்குஉங்களின் 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள் கோபு
பதிலளிநீக்குசார். முதல் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ....
தங்கள் இனிய வாழ்த்துக்கு மிகவும் நன்றி மேடம்.
நீக்கு"....அதுவும் சிறுகதை, நாவல் போன்ற படைப்புகளுக்கு விமர்சனம் எழுதுகையில், எழுதுகின்ற அப்படிப்பட்ட விமர்சனங்களும், கதை போல வாசிக்கிறவர்களை ஈர்க்கிற மாதிரியான புதுமைகளைக் கொண்டிருந்தால் எடுப்பாக இருக்கும்.
பதிலளிநீக்கு"இப்படியான புதுமைகள், விமர்சனம் செய்வோரின் கற்பனை வளத்தையும், அவர்தம் எழுத்துத்திறமையையும் எடுத்துச் சொல்வதாக அமைந்து விமர்சிப்பவருக்கும் பெருமை சேர்க்கும்."
-- சென்ற பதிவில் தான் கோபு சார் தான் எங்கோ படித்ததாக மேலே சொன்ன குறிப்பைக் கொடுத்திருந்தார். அவர் சுட்டிக் காட்டிய குறிப்புக்கு உரு கொடுத்த மாதிரி அற்புதமாக விமரிசனம் எழுதியிருக்கிறீர்களே! வாழ்த்துக்கள், கீதா மதிவாணன் அவர்களே!
ரொம்ப ரசித்துப் படித்தேன். பாலைவனச் சோலை தான். ஒரே ஒரு குறை.. இருவர்களுக்கிடையான உரையாடல் -- conversation-- இது என்று படிப்பவர்கள் சட்டென்று புரிந்து கொள்ள ஒவ்வொருவர் சொல்வதையும் "............. " இப்படி அடைத்துக் கொடுத்திருக்கலாம்.
அப்படிச் செய்திருந்தால், எடுத்துப் பிரசுரிக்கும் பொழுது உரையாடலின் ஊடே ஓரிரு இடங்களில் ஏற்பட்டிருக்கும் லேசான தடுமாற்றத்தைக் களைந்திருக்கலாம்.
உங்கள் ஈடுப்பாட்டுடனான எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்!
தங்களுடைய பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ச்சி ஜீவி சார். மேற்கோள்களுக்குள் அடைத்துக் கொடுத்திருக்கலாம். நிறவேறுபாடே போதுமென்று நினைத்துவிட்டேன். இனி கவனத்தில் வைக்கிறேன். தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.
நீக்குஉங்கள் மகிழ்ச்சி புரிகிறது. 500-ஐ எட்டி அடைந்தமைக்கு வாழ்த்துக்கள், கோபு சார்! சரளமான எழுத்து பாணி உங்களது. அது தொடரட்டும்.. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குCongratulations! 500 th post! WOW!
பதிலளிநீக்குஅசர வைக்கும் வேகத்துடன் 500-ஆவது பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்...
தொடரட்டும் பய..........ண...............ம்...........................
சகல கோணங்களிலும் அலசி, ஆராய்ந்து,
பதிலளிநீக்குதுவைத்து, காயப்போட்ட விமர்சனங்கள் எழுதிய...
திருமதி. கீதா மதிவாணன்,
திருமதி. கீதா சாம்பசிவம் ஆகிய
இருவரும் "முதல்" பரிசு வென்றமைக்கு...
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.!
தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி முஹம்மது.
நீக்குஐந்நூறாவது பதிவு...ஒவ்வொன்றும் அற்புதமான பதிவுகள்; அருமையான கதைகள்; மீண்டும் படிக்கத் தூண்டும் நிகழ்வுகள். என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுதல் பரிசு பெற்ற இரண்டு விமரிசனமுமே முத்தான பதிவுகள்! புதுவிதமாக எழுதி பரிசை வென்ற கீதா மதிவாணனுக்கும், அருமையாக எழுதி முதல் பரிசை பகிர்ந்து கொண்ட கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி மேடம்.
நீக்குமுதல் பரிசினை வென்றுள்ள சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும், கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கு மிகவும் நன்றி தமிழ்முகில் பிரகாசம்.
நீக்கு500 ஆவது பதிவிட்ட கோபு அண்ணாவிற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு500 .... 5000 ஆகவும் என் பிரார்த்தனைகள்...
இப்படி பதிவிட்டிருக்கிறேன் மஞ்சு வந்து பாரு என்று சொல்லி மெயில் அனுப்பினதற்கு அன்பு நன்றிகள் அண்ணா...
ஆயுளும் ஆரோக்கியமும் சீராக இருந்து இனியும் பதிவுகள் தொடர்ந்துக்கொண்டே இருக்க மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா...
ஆஹா நம்ம கீதாஸ் அதான்பா ரெண்டு கீதாவும் அசத்தி இருக்காங்க விமர்சனத்தில்..
கீதாம்மா அமைதியா இருக்கிற இந்த பிள்ளைக்குள்ள இப்படி ஒரு நகைச்சுவை உணர்வா... என்ன ஒரு க்ரியேட்டிவிட்டிப்பா.. அசந்துட்டேன் நீங்க எழுதிய விமர்சனத்தை நாலு வரி படிச்சிட்டு அட இது ஒரு வேளை கோபு அண்ணா எழுதிய கதையோன்னு குழப்பமாகி மீண்டும் படிச்சப்பின் அட நம்ம கீதுக்குட்டி தான் இப்படி அசத்தி இருக்குன்னு தெரிஞ்சப்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்ததுப்பா... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா கீதா..
அடுத்த முதல் பரிசு வெற்றியாளர் கண்ணனின் ப்ரியசகி... தோழி.... பக்தை... இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம்.. ரொம்ப அழகா ஜனரஞ்சகமா பதிவுகள் மட்டுமில்ல விமர்சனமும் எழுதமுடியும்னு நிரூபிச்சிருக்கீங்கப்பா.. வாவ்வ்வ்...... என்ன இந்தப்பிள்ளை ரெண்டே வரில முகநூலில் ரிஷபன் சாரோட பதிவுகளில் கமெண்ட்களை பார்த்து ஆச்சர்யப்படுவேன். எப்படி தெளிக்கிறாப்பா ரெண்டே வரில எசென்ஸ் போல இத்தனை அழகா கமெண்ட் எனக்கு மட்டும் ஏன் எழுதவே வரமாட்டேங்குதுன்னு நினைப்பேன்..
இங்க விமர்சனம் வந்து படிச்சுப்பாரு புள்ள அதை விட இன்னும் அட்டகாசமா இருக்கும்னு சொல்ல வெச்ச விமர்சனம்பா கீதா...
லவ்லிப்பா.... இன்னும் ஆச்சர்யம் விலகவே இல்ல எனக்கு. எது கேட்டாலும் ரெண்டே வரில பதில் எழுதற புள்ளையா இது இத்தனை அற்புதமா விமர்சனம் எழுதி இருக்கேன்னு பிரமிப்பும் சந்தோஷமுமாக வாழ்த்துகிறேன்பா..
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா... அடுத்த முறை இந்தியா வந்தால் கீதாசாம்பசிவம் உங்களை மிஸ் பண்ணாம வந்து பார்த்துடனும்.. மூளி பராத்தாவை செய்யச்சொல்லி சாப்பிடனும்.. நினைவிருக்காப்பா? :) நாம் லாங் பேக் போனில் பேசியது?
வெற்றியாளர்கள் கீதாஸ் ரெண்டு பேரும், ரமணி சார், ராஜராஜேஸ்வரி எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...
உங்களுடைய அன்புக்கு ஈடு வேறேதுமில்லை மஞ்சு. மனம் நெகிழ்வான நன்றி உங்களுக்கு. நீங்கள் பின்னூட்டம் எழுதுவதே விமர்சனம் போலத்தான் இருக்கும். நீங்கள் இன்னும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லையென்று நினைக்கிறேன். விரைவில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ள என் வாழ்த்துக்களும் உங்களுக்கு.
நீக்கு500 ஆவது பதிவிட்ட கோபு அண்ணாவிற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு500 .... 5000 ஆகவும் என் பிரார்த்தனைகள்...
இப்படி பதிவிட்டிருக்கிறேன் மஞ்சு வந்து பாரு என்று சொல்லி மெயில் அனுப்பினதற்கு அன்பு நன்றிகள் அண்ணா...
ஆயுளும் ஆரோக்கியமும் சீராக இருந்து இனியும் பதிவுகள் தொடர்ந்துக்கொண்டே இருக்க மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா...
ஆஹா நம்ம கீதாஸ் அதான்பா ரெண்டு கீதாவும் அசத்தி இருக்காங்க விமர்சனத்தில்..
கீதாம்மா அமைதியா இருக்கிற இந்த பிள்ளைக்குள்ள இப்படி ஒரு நகைச்சுவை உணர்வா... என்ன ஒரு க்ரியேட்டிவிட்டிப்பா.. அசந்துட்டேன் நீங்க எழுதிய விமர்சனத்தை நாலு வரி படிச்சிட்டு அட இது ஒரு வேளை கோபு அண்ணா எழுதிய கதையோன்னு குழப்பமாகி மீண்டும் படிச்சப்பின் அட நம்ம கீதுக்குட்டி தான் இப்படி அசத்தி இருக்குன்னு தெரிஞ்சப்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்ததுப்பா... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா கீதா..
அடுத்த முதல் பரிசு வெற்றியாளர் கண்ணனின் ப்ரியசகி... தோழி.... பக்தை... இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம்.. ரொம்ப அழகா ஜனரஞ்சகமா பதிவுகள் மட்டுமில்ல விமர்சனமும் எழுதமுடியும்னு நிரூபிச்சிருக்கீங்கப்பா.. வாவ்வ்வ்...... என்ன இந்தப்பிள்ளை ரெண்டே வரில முகநூலில் ரிஷபன் சாரோட பதிவுகளில் கமெண்ட்களை பார்த்து ஆச்சர்யப்படுவேன். எப்படி தெளிக்கிறாப்பா ரெண்டே வரில எசென்ஸ் போல இத்தனை அழகா கமெண்ட் எனக்கு மட்டும் ஏன் எழுதவே வரமாட்டேங்குதுன்னு நினைப்பேன்..
இங்க விமர்சனம் வந்து படிச்சுப்பாரு புள்ள அதை விட இன்னும் அட்டகாசமா இருக்கும்னு சொல்ல வெச்ச விமர்சனம்பா கீதா...
பதிலளிநீக்குலவ்லிப்பா.... இன்னும் ஆச்சர்யம் விலகவே இல்ல எனக்கு. எது கேட்டாலும் ரெண்டே வரில பதில் எழுதற புள்ளையா இது இத்தனை அற்புதமா விமர்சனம் எழுதி இருக்கேன்னு பிரமிப்பும் சந்தோஷமுமாக வாழ்த்துகிறேன்பா..
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா... அடுத்த முறை இந்தியா வந்தால் கீதாசாம்பசிவம் உங்களை மிஸ் பண்ணாம வந்து பார்த்துடனும்.. மூளி பராத்தாவை செய்யச்சொல்லி சாப்பிடனும்.. நினைவிருக்காப்பா? :) நாம் லாங் பேக் போனில் பேசியது?
வெற்றியாளர்கள் கீதாஸ் ரெண்டு பேரும், ரமணி சார், ராஜராஜேஸ்வரி எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...
சலிக்காமல் ஒவ்வொரு பதிவும் ரசனையும் க்ரியேட்டிவிட்டியும், படங்களும் என்று பதிவுகள் இடும் கோபு அண்ணாவின் ஈடுபாடும் உழைப்பும் பாராட்டக்கூடிய விஷயம்.
பதிலளிநீக்குமஹா பெரியவா பற்றி நீங்க தொடர்ந்து போட்ட பதிவு இப்ப விஜய் தொலைக்காட்சில சீரியலாக தொடர்கிறது..
இதை பார்க்கும்போது உடனே நான் என் வீட்டில் உள்ளோரிடம் சொன்னது அட பெரியவா பற்றி கோபு அண்ணாவே தொடர் ரொம்ப அருமையா தந்தாரே என்று தான்...
ஆல்வேஸ் யூ ராக் அண்ணா...
அன்பு வாழ்த்துகள் !!!
ரமணி சார் சொன்னது போல் ஜனரஞ்சகமா கதைகள் தந்து எல்லோரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பதிவுகள் அத்தனையுமே....
இறையாசி என்றும் நல்கட்டும் அண்ணா உங்களுக்கு...
வெற்றி பெற்ற இரண்டு விமர்சனங்களும் அருமையாக இருக்கின்றன. இருவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஐந்நூறு பதிவை எட்டியிருக்கும் உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.
நீக்குஅன்பின் வை.கோ - 500 வது பதிவினிற்கு - அதுவும் 167 வாரத்தில் - 500 பதிவுகள் - பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - தங்களின் கடும் உழைப்பும் - சிந்தனையும் கற்பனையும் - படங்களைத் தேடித் தேடி எடுத்து பிரசுரிப்பதும் - படிப்பவர்களீன் மனதைக் கவரும் வண்ணம் பதிவுகள் இடுவதும் - தங்களின் ஒவ்வொரு செயலுமே பாராட்டத்தக்கவை. தங்களீன் முழு நேரமும் ப்திவுகள் இடுவதிலேயே செல்வாகிறது என நினைக்கும் போது பிரமிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - முதல் பரிசு பெற்ற இருவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - கீதா மதிவானனின் புதுமையான விமர்சனம் அருமையான விமர்சனம். கீதா சாம்பசிவத்தின் விமர்சனமும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குதங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அகமார்ந்த நன்றி ஐயா.
நீக்கு167 வாரங்களில் 500 பதிவுகள்.
பதிலளிநீக்குதங்களின் சாதனை மலைக்க வைக்கின்றது ஐயா.
சாதனை நாயகருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஐந்நூறாவது பதிவை வெற்றியுடன் கொண்டாடும் மகிழ்ச்சியான வேளையில் முதல் பரிசுகளை மகளிரணியே கீதம்பாடி ,
பதிலளிநீக்குபகிர்ந்து வென்று சாதனை படைத்தது சந்தோஷமளிக்கிறது .. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
அதுவும் விமர்சன வித்தகர் ரமணி ஐயாவையே இரண்டாம் பரிசுக்கு அனுப்பிவிட்டு முதல் பரிசுகளைப் பகிர்ந்துகொண்டது சாதரணமான சாதனை அல்ல..இமாலயச்சாதனைதான்..!
மகிழவாக உள்ளது,மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.விரைவில் ஆயிரம் பதிவுகள் எட்ட வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமகிழ்வாக உள்ளது.விரைவில் ஆயிரம் பதிவுகளை எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் திரு வை.கோ. சார்,
பதிலளிநீக்குதங்களுடைய 500 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல ஆயிரம் ஆக்கப்புர்வமான பதிவுகள் காணவும் வாழ்த்துகள்.
சிறுகதை விமர்சனப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள சகோதரி கீதா மதிவாணன் மற்றும் திருமதி கீதாஜி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
பவள சங்கரி
congrats on your major milestone for crossing 500 posts in your blog..all the best to reach many more such milestones in life :)..
பதிலளிநீக்குபரிசுபெற்றவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.ஆசிகள்.
பதிலளிநீக்குஉங்களின் 500 ஆவது பதிவிர்க்கு நல் வாழ்த்துகள்.உடல் நலம் ஸரியில்லை. சென்னை வந்துள்ளேன். அதிகம் எழுத முடியவில்லை. அன்புடன்
சொல்ல மறந்த செய்தி! தங்களது 500 ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமுதலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழத்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குஇப்போது தொழில் முறை மாற்றம் காரணமாக வலைத்தளப்பக்கம் எட்டிப் பார்ப்பதே குறைவு அதற்குள் தாங்கள் 500 ஐ தொட்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
ஐநூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள் கோபு சார்! இன்னும் பல்லாயிரம் பதிவுகள் வெளியிட வாழ்த்துக்கள்! புதுமையாகவும் நகைச்சுவையாகவும் விமர்சனம் எழுதி முதல் பரிசு பெறும் கீதாவுக்குப் பாராட்டுக்கள்! நன்கு ரசிக்கும்படியாக இருந்தது. முதல் பரிசு பெறும் கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வை.கோ சார். மிக அற்புதமான 500 பதிவுகள்.மேலும் பல 500 பதிவுகளை ஆவலோடு எதிபார்க்கிறோம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
http://sivamgss.blogspot.in/2014/03/blog-post_19.html
திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
அடியேனின் இந்த 500வது பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, வாழ்த்தியுள்ள
பதிலளிநீக்குதிருவாளர்கள்:
01. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
02. வெங்கட் நாகராஜ் அவர்கள்
03. கே.பி. ஜனா அவர்கள்
04. ரமணி அவர்கள்
05. செல்லப்பா யக்ஞஸ்வாமி அவர்கள்
06. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
07. பிரியமுள்ள ரிஷபன் அவர்கள்
08. E S சேஷாத்ரி அவர்கள்
09. பிரியமுள்ள ஜீவி ஐயா அவர்கள்
10. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
11. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
12. அன்பின் சீனா ஐயா அவர்கள்
13. கரந்தை ஜெயகுமார் அவர்கள்
14. மதிசுதா அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
நேரமின்மை மற்றும் பல்வேறு சொந்த வேலை நிர்பந்தங்களால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளிக்க முடியாத சூழ்நிலையில் நான் இப்போது உள்ளேன். தயவுசெய்து தவறாக ஏதும் நினைக்க வேண்டாம்.
பிரியமுள்ள கோபு [VGK]
அடியேனின் இந்த 500வது பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, வாழ்த்தியுள்ள
பதிலளிநீக்குதிருமதிகள்:
01. கோமதி அரசு அவர்கள்
02. அன்புத்தங்கை நிர்மலா [ஏஞ்சலின்] அவர்கள்
03. கீதா சாம்பசிவம் அவர்கள்
04. கீதமஞ்சரி அவர்கள்
05. அன்புச்சகோதரி விஜி அவர்கள்
06. இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்கள்
07. பார்வதி இராமசந்திரன் அவர்கள்
08. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
09. அன்பு மறுமாள் சித்ரா அவர்கள்
10. ராதா பாலு அவர்கள்
11. தமிழ்முஹில் பிரகாசம் அவர்கள்
12. அன்புத்தங்கச்சி மஞ்சு [மஞ்சுபாஷிணி] அவர்கள்
13. ஸாதிகா அவர்கள்
14. நித்திலம்-சிப்பிக்குள் முத்து பவள சங்கரி அவர்கள்
15. பிரியமுள்ள லீலா கோவிந்த் [Leela Govind] அவர்கள்
16. பிரியமுள்ள காமாக்ஷி மாமி அவர்கள்
17. ஞா கலையரசி அவர்கள்
18. ராம்வி ரமாரவி அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
நேரமின்மை மற்றும் பல்வேறு சொந்த வேலை நிர்பந்தங்களால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளிக்க முடியாத சூழ்நிலையில் நான் இப்போது உள்ளேன். தயவுசெய்து தவறாக ஏதும் நினைக்க வேண்டாம்.
பிரியமுள்ள கோபு [VGK]
முதல் பரிசு பெற்ற இருவருக்கும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு500வது பதிவை எட்டிய ஐயாவுக்கு வாழ்த்துகள்.
வேல் March 20, 2014 at 9:17 AM
நீக்கு//500வது பதிவை எட்டிய ஐயாவுக்கு வாழ்த்துகள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
தங்கள் 500 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...வெகு சீக்கிரமே 1000 வது பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமுதல் பரிசு பெற்ற கீதாக்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Usha Srikumar March 20, 2014 at 7:21 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்கள் 500 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... வெகு சீக்கிரமே 1000 வது பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு [VGK]
500வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்குமுதல் பரிசினை பகிர்ந்து கொண்ட கீதா மாமிக்கும், கீதமஞ்சரி அவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ADHI VENKAT March 21, 2014 at 2:09 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//500வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அன்புடன் VGK
500th post தங்கள் சாதனைகளில் ஒன்று,நீங்கள் பலருக்கும் எனர்ஜி பூஸ்டர்.தங்களுக்கு நீண்ட ஆயுளும் ,மகிழ்வும் பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.
பதிலளிநீக்குthirumathi bs sridharApril 4, 2014 at 2:23 PM
பதிலளிநீக்கு500th post தங்கள் சாதனைகளில் ஒன்று, நீங்கள் பலருக்கும் எனர்ஜி பூஸ்டர். தங்களுக்கு நீண்ட ஆயுளும், மகிழ்வும் பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.//
வாங்கோ ஆச்சி, வணக்கம்மா ! நல்லா இருக்கீங்களாப்பா ?
”உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல .........”ன்னு பாட்டுப்பாடணும் போல உள்ளதும்மா.
பார்த்து எவ்ளோ நாளாச்சு ! ;(
நம் செல்லக்குட்டிக் குழந்தைகள் அம்ருதா + யக்சிதாஸ்ரீ எப்படி
இருக்காங்கோ?
சின்னவளுக்கு 04 06 2014 அன்று 2 வயது பூர்த்தியாகும் பிறந்த
நாள் சிறப்பாகக் கொண்டாடணும். மறந்துடாதீங்கோ.
என் 500வது பதிவுக்காவது மறக்காமல் வரணும்ன்னு தோன்றி
வந்திருக்கீங்களே ஆச்சி ....... மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான். ;)))))
அதுவும் அந்த 500வது பதிவு ஆப்பிள் கன்னங்களாக அமைந்துள்ளதும், அந்த ஆப்பிள் கன்னங்களுக்கு, ஆ.க + உ.உ.கி. ஆகிய தாங்கள் வருகை தந்துள்ளதும் எவ்ளோ பொருத்தமாக உள்ளது பாருங்கோ ;))))) http://gopu1949.blogspot.in/2013/08/35.html
எனக்கு எனர்ஜி பூஸ்டரான தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் அழகான ‘நச்’ கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஆச்சி.
ஒரு தந்தை ஒரு மிகப்பெரிய விழா நடத்திக்கொண்டு இருக்கிறார். யார் யாரோ விழாவுக்கு வருகை தந்து மகிழ்விக்கிறார்கள். இருப்பினும் அவருக்கு ஆச்சி என்ற பெயரில் ஓர் அன்பு மகள் உண்டு. அவளிடம் இவருக்கு ஓர் தனிப்பிரியமும் உண்டு. விழாவுக்கு அந்த அன்புமகள் நேரில் வந்து கலந்துகொள்ளாமல் இருக்கிறாளே என அந்தத்தந்தையின் மனம் வருந்தும் தானே ! அதே வருத்தத்தில் நானும் இருக்கிறேன் .... ஆச்சி.
ஆச்சியும் ஆச்சியின் குடும்பத்தாரும் குழந்தைகளும் எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ்க என மனம் நிறைய ஆசீர்வதிக்கிறேன்.
பிரிமுள்ள கோபு [VGK]
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]
இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இணைப்பு: http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஇணைப்பு:
http://www.geethamanjari.blogspot.com.au/2014/04/blog-post.html
தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
திருமதிகள் கீதா மதிவாணன், கீதா சாம்பசிவம் ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள். தங்களுடைய 500 வது பதிவிற்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு500---வது பதிவுக்கு வாழ்த்துகள் பரிசு வென்ற திருமதிகள் கீதாசாம்பசிவம் கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு500வது பதிவுக்கு வாழ்த்து சொல்ல முடியாமல் திகைத்து நிற்கிறேன். எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது. பரிசு வென்ற திருமதிகள் கீதாசாம்பசிவம் கீதாமதிவாணன் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்குJayanthi Jaya September 28, 2015 at 8:43 AM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்.
//500வது பதிவுக்கு வாழ்த்து சொல்ல முடியாமல் திகைத்து நிற்கிறேன். எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது.//
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. ஏதோ உங்களைப்போன்ற ஒருசிலரின் ஆதரவு இன்னும் தொடர்ந்து இருந்துகொண்டு இருப்பதால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகிறது.
//பரிசு வென்ற திருமதிகள் கீதாசாம்பசிவம் கீதாமதிவாணன் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்//
உங்கள் பாணியில் மிகவும் நகைச்சுவையாக எழுதியிருக்கும் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் விமர்சன உரையாடல்களை ரசித்துப்படித்தீர்களா ? அதைப் பற்றி எதுவும் எழுதவில்லையே, ஜெயா. நான் நிறைய எதிர்பார்த்தேனே ! :(
பிரியமுள்ள கோபு அண்ணா
ஆத்தாடியோவ்500---வது பதிவா??????????.
பதிலளிநீக்குபரிசு வென்றவங்களுக்கும் ஒங்களுக்கும் வாழ்த்துகள்
500--- வது பதிவுக்கு வாழ்த்துகள். திருமதி கீதாமதிவாணன் திருமதி கீதாசாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள். கீதா ளதிவாணன் விமரிசனம் பக்கத்து வீட்டு மாமிகூட உரையாடல் ஸ்டைலில் ரசனையுடன் இருந்தது. வெரி இண்ட்ரஸ்டிங்.
பதிலளிநீக்குஇதை அறியா வண்டோ மலரின் மணம் புவியெங்கும் பரவுவதை உணராமல் தனக்காகவே மணம் வீசுவதாக நினைக்கிறது.//அடடா..அடி பின்றீஙளே!!
பதிலளிநீக்குமாமீ….
வசுவா? வாடிம்மா வா… என்னடி எங்காத்துப் பக்கம் திடீர்விஜயம்?// தினசரி கதாகாலட்சேபம் மாதிரியே ஆரம்பிச்சி விமர்சனம் எழுதுனது புதிய உத்திதான். வெற்றி பெற்ற இருவர்க்கும் வாழ்த்துகள்.
பரிசு பெற்ற அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகள்!
பதிலளிநீக்குதங்களின் 500ஆவது பதிவு என்பது மகிழ்வளிக்கிறது! தொடரட்டும் உங்கள் அருமையான சாதனைப் பதிவுகள்! ஆயிரமாவது பதிவினை விரைவில் அளிக்க இறையருள் துணைபுரிய வேண்டுகிறேன்! நன்றி ஐயா!
:) சந்தோஷம். மிக்க நன்றி :)
நீக்குMail message received today 31.03.2017 at 09.46 Hrs.
பதிலளிநீக்கு=====================================================
அன்பின் கோபு ஸார்,
சீமாச்சுஊஊஊ கதை அல்ல திரைப்படம்.
மனதோடு ரீல் புகுந்து ஓடியது போலவே இருந்தது. கடைசி டச்....... நச்.... என்று ஆணி அடித்த கதை.
தகுதிக்கு மீறியும், நிகழ்கால உரிமையையும் இவ்வளவு அழகாக எழுத்தில் ஜிகினாஸ்ரீக்கு சிலை வடித்த விதம் அருமை.
கதை சிறிது ......... சாரம் பெரிது.
இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
பரம ரஸிகை