About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, March 2, 2014

VGK 05 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - காதலாவது கத்திரிக்காயாவது !





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 05 -  

” காதலாவது கத்திரிக்காயாவது ”





மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து













இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 






    



முதல் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்: 



அதில் ஒருவர்






  



திருமதி. 


இராஜராஜேஸ்வரி 


அவர்கள்




http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"








  











முதல் பரிசினை வென்றுள்ள 


திருமதி. 


இராஜராஜேஸ்வரி


 அவர்களின் விமர்சனம்:




 









'காதலாவது கத்தரிக்காயாவது' என்று காதலர் தினத்தில் தலைப்பைப் பார்த்ததும் சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது..

அடுத்து பளிச் என்று படங்கள் மிகவும்  பொருத்தமாக சேர்ந்து  முதல் பார்வையிலேயே படிக்கவேண்டும் என்று ஆவலைத்தூண்டும் வகையில் மனம் கவர்கிறது..!

கதையின் நாயகன்  பரமு, நாயகி காமாட்சி ஆகியோரின் வர்ணணைகள் அவர்களை நம் கண்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களின் நற்பண்புகள் நம் மனதை கவர்ந்து, அவர்களின் சுக துக்கங்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள, நம்மைத் தயார் படுத்தி விடுவதில் வெற்றி காண்பது, கதாசிரியரின் தனித்தன்மைக்கு சான்று பகர்கிறது..

சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்த பரமு, காமாட்சியின் வாழ்வில் ஏற்பட்ட சோகம், ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற நியதிப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், உதவியாகவும் இருந்து பயன் பெறுகின்றனர்..

சமநிலை தவறி வம்புக்கு இழுக்கும் குடிகாரன் ஒருவனை தராசுத்தட்டிலேயே சமநிலைக்குக் கொண்டுவரும் காமாட்சியின் தைரியமும், வீரமும் பாராட்டத்தக்கது.

கதை ஆசிரியரின் நகைச்சுவை உணர்வும், நவரசங்களையும் மிகச்சரியாக கதையில் பொருத்தியிருக்கும் கைதேர்ந்த ரசனையும் வியக்கவைக்கிறது..!

கணக்கு வழக்குகளில் படு கெட்டிக்காரியான காமாட்சியும்,  படித்த பக்குவமான பண்புள்ள இளைஞனான நேர்மையான கடின உழைப்பாளியான  பரமுவும், வாலிப வயதுக்கேற்ற ஆசைகளை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, பிரிந்து செல்லும் காலமும் வருமோ என மனதுள்  வருத்தமும் படுகின்றனர்.

இருவர் கஷ்டங்களும், நிறைவேறாத சின்னச்சின்ன ஆசைகளும், நம் மனதையும் வருத்துகிறது.. இத்தனை சிரமங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல காமாட்சிக்கு உதவும் நேரத்திலா பரமுவிற்கு எதிர்பாராத விபத்து நிகழவேண்டும்..

சிகிச்சை செலவுகளுக்கு சேமிப்பெல்லாம் கரைந்த நிலையில், இருள்மெல்ல விலகி நம்பிக்கையின் வெளிச்சக்கீற்று, பிள்ளையார் கோவிலின் சுவையான சூடான இனிப்பான சர்க்கரைப்பொங்கலுடன் கிடைத்தது, அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்..!

காதலுக்கு உதவிய காய்கறிகள் என்கிற தலைப்பில் பரமு எழுதிய கதைக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் பரிசு கிடைத்து மகிழ்வித்ததோடு, நிரந்தரமான வங்கி வேலையும் கிடைத்து சந்தோஷ வெள்ளத்தில் திக்குமுக்காடுகிறார்கள்..

சிகரம் வைத்தாற்போல் உண்மைக்காதலுக்கு பச்சைக்கொடியும் காட்டி வாழ்வில் இணைகிறார்கள்..

அழகாக ஆரம்பித்த கதை எந்த இடத்திலும் தொய்வு விழாமல் விறுவிறுப்பு குறையாமல் ஒரே கண்வீச்சில் ஒரு  காதல் சகாப்தத்தை நிகழ்த்திக்காட்டி இருக்கும் அற்புதக் கதைக் கரு உற்சாகமளிக்கிறது..

வாழ்வில் எல்லாம் சுகமாக நிகழும் என்னும் நேர்மறை சிந்தனைகளையும் எண்ணங்களையும், தூவி விதைக்கும் இந்தமாதிரி சிறுகதைகள் படிப்பவர்களின் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும் பாடமாக அமையும் என்பது எனது கருத்து...






 





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




     



முதல் பரிசினை 



வென்றுள்ள 


மற்றொருவர் யார் ?







திருமதி :


ஞா. கலையரசி 

அவர்கள்

வலைத்தளம்: 

“ஊஞ்சல்”


www.unjal.blogspot.com.au














ஜாலியாக ஊஞ்சலில்  ஆடிக்கொண்டிருந்த இவர்

திடீரென  ஊஞ்சலிலிருந்து இறங்கி, 

என் வலைப்பக்கம் முதல் வருகை தந்ததுடன் 

‘முதல் பரிசு’ம் வென்று விட்டார். ;)))))


-oOo-



முதல் பரிசினை வென்றுள்ள


திருமதி. ஞா. கலையரசி 



அவர்களின் விமர்சனம் இதோ: 



காதல் ஒன்று மட்டுமே வாழ்வின் முக்கிய பிரச்சினை என்பது போன்ற ஒரு மாயையை இளைஞர்களிடம் உருவாக்கி, காதலில் எத்தனை வகைகள் உண்டோ, அத்தனையையும் அலுப்பில்லாமல் மீண்டும் மீண்டும் அரைத்துக்கொண்டிருக்கும், நம் தமிழ்ச்சினிமாக்களைப் 
பார்த்துப் பார்த்துச்சலித்தும், வெறுத்தும் போயிருக்கும் இச்சமயத்தில், இன்னும் ஒருகாதல்கதை!

மேல்நாட்டுக்கலாச்சாரத்தை அப்படியே இறக்குமதி செய்து காதலர்தினம் கொண்டாடி பொது இடத்தில் கொஞ்சங்கூட கூச்சமின்றி அநாகரிகமாக நடந்துகொண்டு நம்மை முகம்சுளிக்க வைக்கும் இத்தினத்தில், மீண்டும் ஒருகாதல்கதை!

தலைப்பைப் பார்த்துவிட்டுக் காதலர் தினத்தன்று காதலுக்கு எதிர்மறையான கருத்தைச்சொல்லும் கதை போலிருக்கிறது என்ற எண்ணத்தில் வாசித்துப்பார்த்தால், திரும்பவும் ஒரு காதல்கதை!

இம்மாதிரியான ஒரு தலைப்பைத்தேர்வுசெய்து, காதலைக் கருவாகக்கொண்ட கதையை வாசிக்க விரும்பாதவரையும், இதனை வாசிக்க வைத்த ஆசிரியரின் உத்திக்கு முதல் பாராட்டு. தலைப்புக்கு மட்டுமல்ல, இக்கதை நாயகர்களின் காதலுக்கும் கத்திரிக்காய் உதவுகிறது!

பரமுவுக்கும், காமாட்சிக்கும் பருவ வயதில் ஏற்படுகிற காதலைச்சொல்கிற இக்கதையில்,  துவக்கத்தில் காமாட்சியின் அழகுதான் பரமுவைச்சுண்டியிழுக்கிறது.

அவளுக்கு உதவி செய்வதற்கு அவளது அழகுதான் காரணமோ என்ற சந்தேகம் நமக்கு எழாமலில்லை. ஆனால் வங்கிவேலை கிடைத்தபிறகு, அவள் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி, அதற்கீடாக ஒரு சன்மானத்தைக் கொடுத்துவிட்டு அவன் பறந்திருக்கலாம்.

ஆனால் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்புகிறான் என்றறியும் போது, அவன் அவள் உடலை மட்டும் நேசிக்கவில்லை, உள்ளத்தையும் நேசிக்கிறான் என்ற உண்மை நமக்குப்புலப்படுகிறது.

சிறுவயதிலிருந்து நிறைவேறாத பட்டுப்பாவாடைக்காக அரும்பாடுபட்டுச்சேர்த்து வைத்த பணத்தைப் பரமுவுக்காக எடுத்துச் செலவு செய்யும் போது காமாட்சிக்கு வருத்தம் துளியுமில்லை.

இத்தனைக்கும் அவன் தன்காதலை இதுவரை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை. எதையும் எதிர்பார்த்து அவள் அவனுக்கு உதவவில்லை.

எல்லாவற்றுக்கும் லாபநஷ்டக்கணக்குப் போட்டுச்செலவு செய்யும் மேல்தட்டு, வர்க்கத்தினர், அடுத்தவேளை கஞ்சிக்கில்லாத இந்த எளிய மக்களிடம் இருந்து, மனிதநேயத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்!

கதையை மேலோட்டமாக வாசிக்கையில், ‘பத்தோடுபதினொன்று, அத்தோடுஇதுவொன்று,’ என்று தான் சொல்லத்தோன்றும். ஆனால் ஆழமாக வாசிக்கும்போதுதான், இக்கதைமூலம் ஆசிரியர் இன்றைய இளைய சமுதாயத்துக்குக் காதலைப்பற்றி ஒரு முக்கியமான உண்மையைச் சொல்லியிக்கிறார் என்பது புரியும்.

இன்றைக்குத் திருமண முறிவுகள் அதிகளவில் ஏற்படுவது கவலைக்குரியவிஷயம். நாளிதழில் மணமக்கள் தேவை என்ற விளம்பரத்தில் பாதிக்குப்பாதி விவாகரத்து பெற்றோரின் விபரங்கள்தாம் இடம்பெற்றிருக்கின்றன.

விவாகரத்து பெற்றவர்களுக்கென்றே, இன்று தனி திருமண சேவைமையங்கள் செயல்படுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பிள்ளைகளின் சம்மதம் கேட்காமல், பெற்றோர் பார்த்துவைக்கிற திருமணங்கள் மட்டுமல்ல; பெற்றோரை எதிர்த்துக் ‘காதல்,காதல்,காதல்; காதல்போயிற்சாதல்,’ என்று சபதமெடுத்து, நட்சத்திர உணவகங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு, மணிக்கணக்காக அரட்டையடித்து, இரவுமுழுதும் கண்விழித்துக் குறுஞ்செய்தியனுப்பி, கைபேசி நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கில் மொய்எழுதி, சக்திக்கு மீறிச்செலவழித்து, விலையுயர்ந்த பொருட்கள் வாங்கிப்பரிசளித்து, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டோம் என்று சூளுரைத்து, அவசர அவசரமாகச்செய்துகொள்கிற காதல் திருமணங்களும் அல்லவா, அதேவேகத்தில் முறிந்து போகின்றன?

பருவவயதில் எதிர்பாலாரிடம் ஏற்படும் ஈர்ப்பைக்காதல் என்று எண்ணுவதுதான் பெரும்பாலோர் செய்யும்தவறு. காதலிக்கும் போது நிறைகளை மட்டுமே பார்த்துப்பழகியவர்களுக்குத் திருமணத்துக்குப் பிறகு மற்றவரின் குறைகள் தெரியத்துவங்க, விரிசல் விழத்துவங்குகிறது.  

மோகம்குறையக்குறைய, ‘ ஃபூ இதற்குத்தானா ’  இவ்வளவு ஆசைப்பட்டோம்,’ என்ற விரக்தி தோன்ற, விரிசல் அதிகமாகி மணமுறிவில் முடிகிறது.

இன்பத்தில் மட்டுமின்றித்துன்பத்திலும் பங்கெடுத்துக்கொண்டு, புரிந்துணர்வுடன் ஒருவருக்கொருவர் உதவிசெய்து, உண்மையான அன்புடன் உடலை நேசிக்காமல், உள்ளத்தை நேசிக்கும் காதல் என்றென்றும் நிலைத்து நிற்கும்!  அன்பை அஸ்திவாரமாகக்கொண்டு எழுப்பப்படும் குடும்பம் எனும் கோயில், எத்தகைய இடர்ப்பாடுகளையும் சமாளித்து, நல்லதொரு பல்கலைக்கழகமாகத்திகழும்! என்ற கருத்தை இக்கால இளைய சமுதாயத்துக்கு வலியுறுத்தும் விதமாக பரமு + காமாட்சி காதல் கதையைக் காதலர் தினத்தில் வெளியிட்டமை சிறப்பு!

பரமு இரண்டாவது கவரைப் பிரிக்குமுன்பே, அதில் என்ன இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிவது ஒருகுறை. மார்க்கெட் போன்ற பிறமொழிச்சொற்கள், பலவிடங்களில் வருவதைத் தவிர்திருக்கலாம்.




  



மனம் நிறைந்த பாராட்டுக்கள்  + 

இனிய நல்வாழ்த்துகள்.




    



    


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.









நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் ஏற்கனவே 

வெளியிடப்பட்டுள்ளன.



இணைப்புகள் இதோ:


http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.






oooooOooooo





ஓர் சிறிய அலசல்





இந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’யில், இதுவரை ஏழு சிறுகதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து சிறுகதைகளுக்கான விமர்சனங்களுக்கு பரிசுபெற்றோர் பற்றிய முடிவுகள் முற்றிலுமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

முதல் நான்கு முறைகளிலும் இல்லாததோர் அதிசயமாக, இன்றைய ஐந்தாம் கதை முடிவு அறிவிப்பினில், முதல் பரிசினை, முதன் முறையாக, முற்றிலும் மகளிர் அணியே எட்டிப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கதோர் நிகழ்வாகும்.

சரித்திர சாதனையை ஏற்படுத்தியுள்ள இவர்கள் இருவருக்கும் 

தங்கத் தாமரைக்கும், தங்கநிற மஞ்சள் பறவைக்கும்]  

நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள். 

அன்பான இனிய கூடுதல் நல்வாழ்த்துகள்.

   


காதலாவது ... கத்தரிக்காயாவது ... 

கண்றாவியாவது ...

என  ஒ து ங் கா ம ல், ஒ து க் கா ம ல்  ...

எங்களுக்கு .....

சொத்தையில்லாமல் கத்தரிக்காயைப் பார்த்துப் பார்த்து சந்தையில் வாங்கவும் தெரியும்

அழகாக அவற்றை பூச்சி, புழு இல்லாமல் நறுக்கவும் தெரியும்

நறுக்கியதை பொரியலாக, அவியலாக, துவையலாக வாய்க்கு ருசியாக ஆக்கவும் தெரியும் .....

ஆக்கியதை அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும் தெரியும்

அதே நேரம் ....

காதலைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும்,

காதல் கதைகளைப் படிக்கவும் தெரியும், 

படித்த கதையை மிகவும் ரஸிக்கவும் தெரியும்

ரஸித்த கதையை விமர்சனம் செய்யவும் தெரியும்

விமர்சனத்தில் முதல் பரிசினைத் தட்டிச்செல்லவும் தெரியும்

என்பதை நிரூபித்து விட்டனரே இந்த இரு பெண்மணிகளும் ! 

ச பா ஷ் !!

பெண்கள் நினைத்தால், மனது மட்டும் வைத்து விட்டால், எதையும் சாதித்து விடுவார்கள் என்பதே, இதில் நமக்குப் புலப்படும் ஓர் மிகப் பெரிய உண்மை !

’உலக மகளிர் தினம்’ நெருங்க இருக்கும் இந்த உன்னதமான நேரத்தில் ’முதல் பரிசு என்ற வெற்றிவாகை சூடியுள்ள இருவருக்கும் நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள். 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

மேலும் மேலும் தொடர்ச்சியாக இந்தப் போட்டிகளில் பங்குபெற்று இதேபோலக் கலக்குங்கோ  ........ ப்ளீஸ்ஸ்ஸ்  !

பிரியமுள்ள கோபு [ VGK ]  


 oooooOooooo








இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 
கதையின் தலைப்பு:



”ஆப்பிள் கன்னங்களும் 


அபூர்வ எண்ணங்களும் !”





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


06.03.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள் 











என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

32 comments:

  1. ’உலக மகளிர் தினம்’ நெருங்க இருக்கும் இந்த உன்னதமான நேரத்தில் ’முதல் பரிசு’ என்ற வெற்றிவாகை சூட வாய்ப்பளித்த சிறுகதைப் போட்டியில் எமது விமர்சனத்திற்கு முதல் பரிசு அளித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி March 2, 2014 at 2:15 PM

      வாங்கோ, வாங்கோ .... வணக்கம் + வந்தனங்கள்.

      தங்களின் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //’உலக மகளிர் தினம்’ நெருங்க இருக்கும் இந்த உன்னதமான நேரத்தில் ’முதல் பரிசு’ என்ற வெற்றிவாகை சூட வாய்ப்பளித்த சிறுகதைப் போட்டியில் எமது விமர்சனத்திற்கு முதல் பரிசு அளித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..//

      மிகவும் சந்தோஷம்.

      ஆனந்தம்! ..... ஆனந்தம்!! ...... ஆனந்தமே !!!

      என் சார்பிலும் நடுவர் அவர்கள் சார்பிலும் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      இதுபோன்ற வெற்றிகள் மேலும் மேலும் தங்களுக்குத் தொடரட்டும். ;)))))

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
  2. முதல் பரிசினை எம்முடன் பகிர்ந்துகொண்டு வென்றுள்ள
    திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

    அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. தங்கத் தாமரை திருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், தங்கநிற மஞ்சள் பறவை திருமதி ஞா. கலையரசி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. முதல் பரிசு பெற்ற ராஜராஜேஸ்வரிக்கும் கலையரசிக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள். மேன்மேலும் பற்பல பரிசுகளை வென்றிடவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மகளிர் தினச் சிறப்புப் பரிசாக அமைந்ததும் ஆச்சரியமே.

    ReplyDelete
  6. விமர்சனம் எழுதுவதில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவே, இப்போட்டியில் பங்கு பெற்றேன்.இதில் முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. புதுமையான இப்போட்டியை நடத்தி நம் திறமையைச் சோதித்துக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளித்த திரு கோபு சாருக்கு என் மனமார்ந்த நன்றி. கரும்புத் தின்னக் கூலியாகப் பரிசும் கொடுத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. முதல் பரிசுக்கு என் எழுத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் நன்றி. சிறப்பான விமர்சனம் எழுதி இப்போட்டியில் முதல் பரிசு பெறும் ராஜராஜேஸ்வரி அவர்களுக்குப் பாராட்டுக்கள். மகளிர் தினம் நெருங்குவதால் மகளிரே பரிசை வெல்லட்டும் என்று 'பெரிய மனது' பண்ணி விமர்சன சக்ரவர்த்தி இப்போட்டியில் கலந்துகொள்ளவில்லையோ என்று எனக்கு ஒரு சந்தேகம்? வாழ்த்துத் தெரிவித்த ராஜேஸ்வரி,தனபாலன், கீதா ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Kalayarassy G March 2, 2014 at 3:47 PM

      வாங்கோ .... வாங்கோ .... வணக்கம்.

      //விமர்சனம் எழுதுவதில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவே, இப்போட்டியில் பங்கு பெற்றேன்.//

      அடடா, முதல் இடத்தில் தான் உள்ளீர்கள் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

      அதனால் சந்தேகமே வேண்டாம்.

      >>>>>

      Delete
    2. 2]

      //இதில் முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.//

      எனக்கு அதைவிட மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

      >>>>>

      Delete
    3. 3]

      //புதுமையான இப்போட்டியை நடத்தி நம் திறமையைச் சோதித்துக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளித்த திரு கோபு சாருக்கு என் மனமார்ந்த நன்றி.//

      மிகவும் சந்தோஷம்.

      இந்த என் போட்டியின் அடிப்படை நோக்கத்தினைப் பாராட்டியுள்ளது எனக்கும் மகிழ்வளிக்கிறது.

      >>>>>

      Delete
    4. 4]

      //கரும்புத் தின்னக் கூலியாகப் பரிசும் கொடுத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.//

      நான் பயிராக்கிய, என் கதைகள் எனக்கு எப்போதுமே கரும்புதான் என்றாலும், அதை வேறு யாராவது கசக்கிப்பிழிந்து ஜூஸ் ஆக்கிக் கொடுத்தால் மட்டுமே எனக்கு அதைப்பருகிட சுலபமாகவும், அதிக ருசியாகவும் இருப்பதாகத் தோன்றும்.

      தங்களின் இந்த முதல் பரிசுபெற்ற ‘சிறுகதை விமர்சனம்’ எனக்குக் கரும்பு ஜூஸ் போலவே இனிப்பாக உள்ளது.

      இந்த மிகவும் சுவையான கரும்பு ஜூஸுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கூலி தரலாம் தானே !

      >>>>>

      Delete
    5. 5]

      //முதல் பரிசுக்கு என் எழுத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் நன்றி. //

      ’மறைந்திருந்து பார்க்கும்’ + மகிழும் நடுவர் அவர்கள் சார்பில் தங்களுக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      >>>>>

      Delete
    6. 6]

      //சிறப்பான விமர்சனம் எழுதி இப்போட்டியில் முதல் பரிசு பெறும் திருமதி. ராஜராஜேஸ்வரி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.//

      அவர்கள் ஒரு சாதனைத் திலகம்.

      இந்தக் கதையில் வரும் காமாக்ஷி போலவே அவரும் ஒரு அம்பாளின் அவதாரம்.

      அவரைப்பற்றி மேலும் கொஞ்சூண்டு அறிய இதோ இந்த என் பதிவு தங்களுக்குப் பயன்படும்.

      http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

      தலைப்பு:

      ஆயிரம் நிலவே வா ! ... ... ... ... ... ... ஓர்
      ஆயிரம் நிலவே வா !!

      அவர்களுடைய இன்றைய Total Pageviews: 10 lakhs
      பத்து லக்ஷம் ;))))))

      >>>>>

      Delete
    7. 7]

      //மகளிர் தினம் நெருங்குவதால் மகளிரே பரிசை வெல்லட்டும் என்று 'பெரிய மனது' பண்ணி விமர்சன சக்ரவர்த்தி இப்போட்டியில் கலந்துகொள்ளவில்லையோ என்று எனக்கு ஒரு சந்தேகம்?//

      தங்களுக்கு இப்படியொரு சந்தேகம் வந்ததில் சந்தேகமில்லாமல் ஆச்சர்யமே இல்லை தான்.

      இருப்பினும் இந்தப்போட்டியினை நடத்திக்கொண்டிருக்கும் நான் சில செய்திகளை / உண்மைகளை, வெளிப்படையாக சொல்லக்கூடாத, சொல்ல இயலாத நிலையினில் உள்ளேன் என்பதைப் புரிந்துகொள்ளவும்.

      இதுபோன்ற வெற்றிகள் மேலும் மேலும் தங்களுக்குத் தொடரட்டும். ;)))))

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
  7. ஆஹா என்ன அருமையான விமரிசனம். இரண்டு மூன்று முறை படித்து ரஸித்தேன். திருமதி இராஜராஜேச்வரிக்கும், திருமதி கலையரசிக்கும்,வாழ்த்துக்களும்,பாராட்டுகளும். வெற்றி பெற்றதற்கு. அன்புடன்

    ReplyDelete
  8. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திருமதி. கலையரசி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  9. அருமையான விமர்சனங்கள். முதல் பரிசினை வென்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. முதல் பரிசு பெற்ற இராஜராஜேஸ்வரி மேடத்துக்கும் கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே முதல் பரிசு பெற்ற ஞா.கலையரசி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. திரு VGK அவர்களின் சிறுகதை VGK விமர்சனப் போட்டியில், முதல் பரிசினை வென்ற சகோதரி இராஜராஜேஸ்வரி
    மற்றும் சகோதரி ஞா. கலையரசி இருவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. சிறப்பான விமர்சனம்....

    முதல் பரிசு பெற்ற இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் ஞா. கலையரசி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. முதல் பரிசினை வென்ற இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. பின்னூட்டத்தில் நான் தெரிவித்த கருத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் விளக்கமாகப் பதிலளித்தமைக்குக் கோபு சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ராஜராஜேஸ்வரி அவர்களது பதிவுக்கான இணைப்புக் கொடுத்தமைக்கு . நன்றி. நேரங்கிடைக்கும் போது அவசியம் வாசிப்பேன்.
    பரிசு வென்றமைக்குப் பாராட்டும் வாழ்த்தும் சொன்ன காமாட்சி, தமிழ்முகில் (எவ்வளவு அழகான பெயர்!), ஆதி வெங்கட், கீதா, தமிழ் இளங்கோ, வெங்கட் நாகராஜ், வேல் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  15. அருமையான விமர்சனங்கள்.

    முதல் பரிசினை வென்ற இருவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    ’VGK-05 காதலாவது கத்திரிக்காயாவது’

    இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, முதல் பரிசுக்கு முதன் முதலாகத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://unjal.blogspot.in/2014/11/blog-post.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  17. திருமதி. ராஜேஸ்வரி, திருமதி கலையரசி, இருவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  18. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், கலையரசி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  19. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், ஞா. கலையரசி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 27, 2015 at 7:25 PM

      //பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், ஞா. கலையரசி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      Delete
  20. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் கலையரசி மேடமவங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  21. திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி மேடம் கதா நாயக நாயகியின் வர்ணனைகள் அவர்களின் குணநலன்களை ரசித்து சொல்லி இருக்காங்க. கலையரசி மேடம் கதாசிரியரின் சிறப்பான எழுத்து நடையை ரசித்து சொல்லி இருக்காங்க.

    ReplyDelete
  22. உடலை நேசிக்காமல், உள்ளத்தை நேசிக்கும் காதல் என்றென்றும் நிலைத்து நிற்கும்! அன்பை அஸ்திவாரமாகக்கொண்டு எழுப்பப்படும் குடும்பம் எனும் கோயில், எத்தகைய இடர்ப்பாடுகளையும் சமாளித்து, நல்லதொரு பல்கலைக்கழகமாகத்திகழும்! என்ற கருத்தை இக்கால இளைய சமுதாயத்துக்கு வலியுறுத்தும் விதமாக பரமு + காமாட்சி காதல் கதையைக் காதலர் தினத்தில் வெளியிட்டமை சிறப்பு!// சிறப்பே!!!

    வாழ்வில் எல்லாம் சுகமாக நிகழும் என்னும் நேர்மறை சிந்தனைகளையும் எண்ணங்களையும், தூவி விதைக்கும் இந்தமாதிரி சிறுகதைகள் படிப்பவர்களின் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும் பாடமாக அமையும் என்பது எனது கருத்து...//சரிதான். வாத்யார் என்றாலே பாஸிடிவ் எனெர்ஜிதானே!!!


    ReplyDelete
  23. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    ReplyDelete