என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 22 மார்ச், 2014

VGK 08 / 03 / 03 - THIRD PRIZE WINNER - "அமுதைப் பொழியும் நிலவே”

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 08 - ” அமுதைப் பொழியும் நிலவே ”


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து


இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:     மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் 

திரு. E.S. சேஷாத்ரி   


அவர்கள்
வலைத்தளம்: 

காரஞ்சன் [சேஷ்] 

esseshadri.blogspot.com  

மூன்றாம் பரிசினை வென்றுள்ள திரு. E.S. சேஷாத்ரி அவர்களின் விமர்சனம் இதோ:
மின்வெட்டு நேரத்தில் காலாற நடந்து, பேருந்தில் ஏறி, காற்று வாங்கப் பயணம் மேற்கொள்ளும் விதம் புதுமை! காற்று வாங்கப் போய் கனவில் மிதந்த கதை! மின்வெட்டு நேரத்தில் மின்சாரம் பாய்ச்சிய வெளிச்சப்பூவை விவரிக்கும் விதம் அருமை!

கதாநாயகனின் வயது எங்கும் குறிப்பிடப் படவில்லை. பில்டிங் கான்ட்ராக்ட் தொடர்பான பணி செய்பவர் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. பேருந்தில் இளவயதுப் பெண்கள் பலர் ஏறியவுடன் இவரது கனவு ஆரம்பித்திருக்கிறது.

ஆழ்மனதில் காதல் ஏக்கம் குடிகொண்டிருந்ததின் வெளிப்பாடாய் அந்த கனவு அமைந்திருக்குமோ? கனவு ஏன் வந்தது? காதல் தான் வந்தது! அதன் கோல வடிவங்களில் கோடி நினைவுகள் தந்தது.

கதாநாயகியின் அறிமுகம் திரைப்படத்தில் காண்பது போலவே கனவிலும் அமைத்தவிதம் அருமை! கதாநாயகி மலையாளம் கலந்த தமிழில் பேசும்  மிக அழகான பருவ வயது மங்கை! அவர் பாலக்காட்டைச் சேர்ந்த 19 வயது அமுதா என்பதும், வெல்டிங் சம்பந்தமாக பயிற்சி பெற வந்திருப்பதாகவும் அழைப்புக் கடிதத்தைப் பார்த்து அறிந்துகொள்வதாக அமைத்தது அருமை!

கதாநாயகியுடன் உரையாடி அவருக்கு உதவத் துடித்தது, பாதுகாப்பாக அவரைத் தங்க வைக்க நினைப்பது, அவருக்கு உதவி தேவைப் படும்போதெல்லாம் தன்னை தொடர்புகொள்ளலாம் எனக் கூறுவதாக அமைத்து இவரைப்பற்றிய விவரங்களை அவளுக்குத் தெரிவிப்பதாக அமைத்தது எல்லாம் அருமை! நவீனமயக் காதலில் செல்போன் இடம்பெறுகிறது. மறக்காமல் செல்போன் எண்ணையும் பதிவு செய்து கொள்வதாகக் காட்டிய விதம் அருமை!

பேருந்தைப் பற்றி விவரிக்கும் போதும், கதாநாயகிக்கு உதவுவதன் மூலம் அவர் உள்ளத்தில் இடம்பிடித்து, அவருடன் தன்னை வெல்டிங் (அ) வெட்டிங் செய்து முயற்சிப்பதாகக் கூறும் இடத்திலும், கனவு கலையும் போது கர்ண கடூரமாகக் கிழவியின் குரல் ஒன்று ஒலிப்பதாக முடிப்பதும்,  அக்குரல் மூலம் அவரின் அருகில் அமுதாவிற்கு பதில் ’ஆயா அமுதா’ அமர்ந்திருந்ததாக அமைத்ததும் ஆசிரியரின்  நகைச்சுவை உணர்வை நன்கு வெளிக்காட்டுகிறது!

விடுமுறை நாளில் வீட்டில் மின்வெட்டு!
காற்று வாங்கக் காலையில் ஒரு பயணம்!

கண்ணிமைகள் மூடவைத்த காற்றின் வேகம்!

காற்றின் குளிர்விப்பில் கனவில் மிதந்த தேகம்!

இளமங்கை அருகிருக்க இவர் மனதில் மோகம்!

இளமனதில் இடம்பிடிக்க இவருக்கோர் தாகம்!

இதற்கான காட்சிகளில் பளிச்சிடும் விவேகம்!

கனவென்று அறிந்தவுடன் கவலைதரும் சோகம்!

கதையெங்கும் மிளிர்கிறதே நகைச்சுவையின் பாகம்!-காரஞ்சன் (சேஷ்)

 மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
        


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:” மறக்க மனம் 


கூடுதில்லையே 

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


27.03.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

24 கருத்துகள்:

 1. அருமையான போட்டி! பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. விமர்சனம் அருமை... திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. அருமையான விமர்சனம்! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 4. மூன்றாம் பரிசினைப் பெற்றுள்ள திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. மூன்றாம் பரிசினை வென்றுள்ள சகோதரர் கவிஞர் திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. என் விமர்சனம் மூன்றாம் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதை அறிந்து மகிழ்வடைந்தேன்! நடுவர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி! வாழ்த்தி ஊக்கமளித்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 8. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திரு. E.S. சேஷாத்ரிஅவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..
  அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 9. இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  http://www.esseshadri.blogspot.in/2014/03/vgk-08.html
  திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 10. 'சிக்'கென்ற விமர்சனம்...
  திரு. காரஞ்சன் அவர்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. அழகான சிக்கென்ற விமரிசனம்...பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 12. நல்ல விமர்சனம். நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. திரு.சேஷாத்திரி அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. திரு சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். விமரிசனம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 15. மூன்றாம் பரிசு பெற்றுள்ள சேஷாத்ரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். தொடர்ந்து பரிசுகளை அள்ள வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. மூன்றாம் பரிசினை வென்றுள்ள சேஷாத்திரி அவர்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 18. பரிசு வென்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 19. பரிசு வென்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. பரிசு வென்ற திரு சேஷாத்திரி சாரலங்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 21. திரு சேஷாத்ரி ஸாருக்கு வாழ்த்துகள். விளரிசனம் நல்லா இருக்கு அதுவும் கதைநெடுகிலும் அள்ளிதெளித்திருந்த நகைச்சுவை எழுத்தை ரசித்து சொல்லி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 22. கண்ணிமைகள் மூடவைத்த காற்றின் வேகம்!

  காற்றின் குளிர்விப்பில் கனவில் மிதந்த தேகம்!//ரசித்தேன். வாழ்த்துகள் நண்பரே..

  பதிலளிநீக்கு