என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 10 மார்ச், 2014

VGK 06 / 02 / 03 SECOND PRIZE WINNERS "உடம்பெல்லாம் உப்புச்சீடை”
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 06 - ” உடம்பெல்லாம் உப்புச்சீடை ”


இணைப்பு:


மேற்படி 'நெடுங்கதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 


நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து
இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 
  


மற்றவர்களுக்கு: 

    


இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள்


இருவர்  
அதில் ஒருவர்திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்  


அவர்கள்

வலைத்தளம்: 

”நிஜாம் பக்கம்”இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்   அவர்களின் விமர்சனம் இதோ:


*  'உடம்பெல்லாம் உப்புச்சீடை' என்கிற இக்கதையின் தலைப்பே வித்தியாசமானது. முகத்திலோ, உடலின் மற்ற பாகங்களிலோ, அல்லது அனைத்து இடங்களிலுமோ சிலருக்கு சருமத்தில் முண்டும் முடுச்சுமாக கொப்புளங்கள் இருப்பதுண்டு. அவற்றை பொதுவாக, 'கொப்புளம்' என்றுதான் நாமெல்லாம் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், கதாசிரியரோ அதை 'உப்புச் சீடை' என்று குறிப்பிடுவது, அவரின் 'அதீத கற்பனையின் உச்சம்' எனலாம். * 'உடம்பெல்லாம் உப்புச்சீடை' கதை உணர்வுப்பூர்வமாக இருந்தது. புகைவண்டி, பேருந்து, விமானம் போன்ற பொதுசுமை கடத்திகளில் (Public Carrier)  நாம் பயணம் செய்யும்போது உடன் வரும் சக பயணிகளை நாம் தேர்வு செய்ய இயலாது. "நாம் ஒரு காரணமாக பயணம் மேற்கொள்ளுதல் போலவே அவரும் ஏதோ ஒரு காரியமாக பயணம் செய்கிறார்" என்பதை நாம் ஏனோ யோசிக்க மறந்துவிடுகிறோம். * அவரும்  சக பயணி; அவரும் சக உயிர் என்பதை  நாம் நமது வசதிக்காக மறந்துவிடுகிறோம்.  "இறைவனது  படைப்பில் அனைவரும் சமம், அதோடு எவ்வுயிரும் அவனது படைப்பே" என்பதை வலியுறுத்தும் படைப்பு இக்கதை!*   பட்டாபி, பங்கஜம் மற்றும் குழந்தைகள் ஐவரும் ரயிலில் ஏறியதும் ஆரம்பமாகும் மிதமான கதையோட்டம், பயங்கரமான உருவம், தன்னை முறைத்துப் பார்த்ததினால் பயந்து ஓடி வந்ததாய் விமலா சொன்னதும் விரைவான கதையோட்டமாக மாறுகின்றது. * ஆரம்பம் முதலே அந்த நபரை பயங்கரமான உருவம், கை, கால்கள், உடம்பு எங்கெங்கும் கொப்புளங்கள் என்று வர்ணனை, அந்த உருவம் என்றும் 'அது' என்ற அஃறிணை வர்ணிப்பு என்றெல்லாம் அந்த நபரை கதாசிரியர் குறிப்பிடும்போது அந்த உருவத்தின்பால் அல்லது உருவத்தின்மேல் நமக்கும் அருவெறுப்பை புகுத்தி விட்டு விடுகிறார் கதாசிரியர். இது அவரின் யுக்தி அல்லது அவரின் வெற்றி!இறைவன் யாரையும் தேவையில்லாமல் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியதி இறைவனால் படைக்கப் பட்டிருக்கின்றது. அதனால், யாராலும் அவற்றிலிருந்து தப்பவே முடியாது. இதை உணர்பவர்கள், தப்ப முடியாமல் தவிப்பவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை கண்டெடுப்பதுண்டுதான்.* ஆனால், அந்த வழிகளும் கூட இறைவனால் வகுக்கப்பட்டதுதான். இன்னும் சில நேரங்களில், இறைவனை யாசிப்பதிலிருந்தும் அவனிடம் பிரார்த்திப்பதிலிருந்தும் இறைவனால் மீட்கப்படலாம். அது அவனின் திருவிளையாடல்களில் ஒன்று.* இறைவனை நம்புபவர்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது. நம்மாலேயே அனைத்தும் நடக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. மற்றவர்களால் நாம் எப்போதாவது உதவிபெறப்படலாம்.* வெளித் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுதலும் மிகத் தவறு ஆகும். இங்கே பட்டாபி மறந்து வைத்துவிட்டு வந்த அவரது தந்தையின் அஸ்திக் கலயத்தை, அவரால் வெறுக்கப்பட்ட அந்த மனிதர் தனது தொடர் பயணத்தையும் துறந்துவிட்டு பட்டாபியைத் தேடி எடுத்து வந்து தருகின்றார். ஆக, இங்கும் இறைவனின் விளையாட்டைக் காணலாம்.* புகைவண்டி மற்றும் வாழ்க்கை - இவை இரண்டும் ஏறக்குறைய ஒன்றேதான். புகைவண்டியும் பயணம்; வாழ்க்கையும் பயணம். புகைவண்டி ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்கிறது. வாழ்க்கையும் பிறப்பில் ஆரம்பமாகி இறப்பில் சென்று முடிவடைகிறது.* இந்தக் கதையும் புகைவண்டிப் போலத்தான். வளைந்து, நெளிந்து ஓடுகின்றது, பல திருப்பங்களுடன். அந்தப் பெரியவரை பயங்கரத் தோற்றமுள்ளவரா ஆரம்பத்தில் காட்டி, நம்மையும் அருவெறுப்பு கொள்ள வைக்கிறார், கதை சொல்லி. (Narrator).* பின்  குழந்தை ரவியிடம் அன்பு பாராட்டி, பேசி மகிழ்ந்து, ஐஸ் கிரீம் வாங்கித் தந்து, சக மனிதரிடத்தில் அன்பு காட்டும் மனித நேயம் மிக்கவராக காட்டி புருவம் உயர்த்த வைக்கிறார் நம்மை.* அடுத்து, தன் வழியுண்டு தானுண்டு என்று சகிப்புத் தன்மையுள்ளவராய் ஒதுங்கி கொள்கிறார். * அடுத்ததாக, அஸ்திக் கலயத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் உதவி செய்யும் பரோபகாரியாய் மிளிர்கிறார். * பெரிய வித்வான், பண்டிதர் , சிரியர் என அவரது அறிவு வெளிச்சம் கதை முழுவது பரவி, அவரது மைனஸ் பாயிண்ட்கள் அனைத்தும் அடிபட்டுப் போகின்றன கதைசொல்லும் சாமர்த்தியத்தினால். * ஆகக் கூடி, மன்னிப்பு கேட்கும் பட்டாபி குடும்பத்தையும் மன்னித்து, அருளாசியுடன் நல்லுபதேசம் செய்து, அருளுரை அளிக்கிறார்.    இக்கதை ஒரு மனிதர் என்று காட்டி, அவர் மகா மனிதர் என்று முடிகின்றது. அதோடு, மனதினில் பல இறை சார்ந்த உணர்வுகளை மனிதர்களின்பால் உருவாக்கியிருக்கும் என்றால் மிகையில்லை.-அ. முஹம்மது நிஜாமுத்தீன். மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.
     

இரண்டாம் பரிசினை வென்றுள்ள


மற்றொருவர் யார் ?


திருமதி  

ஞா.கலையரசி

அவர்கள்

வலைத்தளம்:


”ஊஞ்சல்” 

http://www.unjal.blogspot.com.au/
இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி  


ஞா. கலையரசி  


 அவர்களின் விமர்சனம் இதோ:இக்கதையில் வரும் நீண்ட ரயில் பயணம் என்பது நம் வாழ்க்கைப் பயணத்தின் குறியீடு என்பது என் கருத்து.

இந்த விளம்பர யுகத்தில் தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர், வேத வித்து, பெரிய மகான் போன்ற அடைமொழிகளுடன் கூடிய விளம்பரங்களை அடிக்கடிக் காண்பதாலோ என்னவோ, மகான் என்றால் காவியுடை தரித்திருப்பார், மழிக்கப்படாமல் நீண்டு தொங்கும் தாடியிருக்கும், கழுத்தில் உத்திராட்ச மாலை அணிந்திருப்பார் போன்ற அங்க அடையாளங்களை, நமக்கு நாமே கற்பித்துக்கொள்கிறோம்.
  . 
அதனால் தான் காவியுடையில் திரியும் பகற்கொள்ளைக்காரர்களை, வேடதாரிகளை ஞானிகள் என்று தேடிச் சென்று நீண்ட வரிசையில் பொறுமையாகக் காத்திருந்து பெரும் பொருளை இழப்பதுடன், சில சமயங்களில் நம் குடும்பப் பெண்களின் மானத்தையும் அடகு வைக்கிறோம்.

ஆனால் வாழ்க்கைப்பயணத்தில் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் சக பிரயாணியை, வெகு அருகாமையில் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எளிமையாக நிறைகுடங்களாக இருக்கும் தத்துவ ஞானியை அடையாளம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்கிறோம்.

கண்ணுக்குத் தெரியும் புறத்தோற்றம் கண்டு எள்ளி நகையாடுகிறோம்;  வெறுத்து ஒதுக்குகிறோம்.  ஆனால் அக அழகைத் தரிசிக்கத் தெரியாமல், கண்ணிருந்தும் குருடராகிவிடுகிறோம்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். அதனால் தான் தெய்வாம்ச குணங்கள் நிரம்பிய பெரியவரின் தூய்மையான அன்பைக் கள்ளங்கபட மில்லாத குழந்தை ரவி எளிதாக இனங்கண்டுகொள்கிறான். 

தமக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையைத் தாமே முன்வந்து பட்டாபி குடும்பத்துக்குக் கொடுத்து விட்டு, எண்பது வயதில் கஷ்டப்பட்டு மேலே ஏறும் முதியவரைக் கண்டு, அவர்களுக்குச் சற்றும் குற்ற உணர்வோ, பச்சாத்தாபமோ ஏற்படவில்லை.

அவருக்கேற்பட்ட அவமானத்தை மறந்து, அவர்கள் தவறவிட்ட முக்கியமான பையை எடுத்துப் போய், அவர்களிடம் சேர்ப்பிக்கும் நேரத்திலும் கூட, நன்றியுணர்வுக்குப் பதிலாகப் ‘பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே,’ என்ற வருத்தம் தான் ஏற்படுகிறது பட்டாபிக்கு.

இக்காலத்துக் கடைந்தெடுத்த சுயநலவாதியின் பிரதிநிதியாக கதை முழுக்க வளைய வருகிறார் பட்டாபி.

அவர்களுக்கு உதவி செய்யுமுகமாகத் தமக்கு ஒதுக்கப்பட்ட கீழ் இருக்கையைத் தாமே முன் வந்து தாரை வார்த்து விட்டு, மேலே ஏறும் கணத்திலேயே அவர்களது உதாசீனம், அவமதிப்பு, நிந்தனை பற்றிய சிந்தனை சுமைகளைக்  கீழே இறக்கி வைத்து விடுகிறார் பெரியவர். 

எனவே தான் பட்டாபி மன்னிப்புக் கேட்கும் போது, “நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவேயில்லை,” என்று அவரால் முழுமனதுடன் உண்மையாகச் சொல்ல முடிகிறது.  பெரிய மகான்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

உள்ளே தேனினும் இனிய சுளைகள் கொண்ட, வெளியே கரடுமுரடாகத் தெரிகிற பலாப்பழத்தை அருவருத்து ஒதுக்குவதால், யாருக்கு நஷ்டம்?

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்’

‘தவறு செய்வது மனித இயல்பு,  மன்னிப்பது தெய்வீக குணம்’

‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’, போன்ற நீதிகள் பலவற்றை வாசிப்பவர் மனதில் அலையலையாக ஏற்படுத்திச் சிந்திக்கத் தூண்டும் அருமையான கதை.  

பாராட்டுக்கள் கோபு சார்!  


நன்றியுடன்,
ஞா.கலையரசி.
  
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.
     

   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.-oOo-இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooமீண்டும் ஓர் புதிய பரிசு 


பற்றிய அறிவிப்பு

போட்டிக்கான நிபந்தனைகள்  பற்றிய என் முதல் டும் .. டும் .. டும் .. டும் .. அறிவிப்புப் பதிவினில் அடியேன் தெரிவித்துள்ளது ’ஊக்கப்பரிசு’. 

இது நான் என் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’க்காக வெளியிட நினைக்கும் 40 கதைகளில் ஏதாவது 30 கதைகளுக்காவது விமர்சனம் எழுதி அனுப்பி, போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, கடைசிவரை, நடுவர் அவர்களால் ஒருமுறையேனும் பரிசுக்குத் தேர்வாகாத நபர்களுக்கு மட்டும், என்னால் தனியாகத் தரப்படப் போவது இந்த ”ஊக்கப்பரிசு”அதுபற்றிய விபரம் காண இணைப்பு:
-oOo-அதன்பின் நான் அறிவித்துள்ளது ’போனஸ் பரிசு’ என்பதாகும். 

இது போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்குமே  என்னால் அளிக்கப்பட உள்ள ஓர் சிறப்பு வாய்ந்த மகிழ்ச்சிப் பரிசாகும். ஆனால் இந்தப்பரிசு, நான் என் மனதில் நினைத்துள்ள,  ஒருசில குறிப்பிட்ட கதைகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.

இந்த போனஸ் பரிசு என்பது, என் மனதில் நான் நினைத்துள்ள அந்தக் குறிப்பிட்ட ஒருசில கதைகளுக்கான விமர்சனப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்குமே கூடுதலாகக் கிடைக்கும் ஒன்றாகும். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வானவர்கள், தேர்வாகாதவர்கள் என அனைவருக்குமே கிடைக்கக்கூடியது இந்த ”போனஸ் பரிசு”


உதாரணம்: VGK 03 “சுடிதார் வாங்கப் போறேன்”

அதுபற்றிய விபரம் காண இணைப்புகள்:இந்த போனஸ் பரிசினால் மேலே சொல்லியுள்ள ஊக்கப்பரிசு கிடைப்பது எந்த விதத்திலும் யாரையும் பாதிக்காது.  இது வேறு, அது வேறு.


-oOo-

இப்போது மேலும் ஓர் 
புதிய பரிசு பற்றிய அறிவிப்பு 

இதன் பெயர் ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்பதாகும்.

இந்தப்புதிய ’ஹாட்-ட்ரிக்’ பரிசினை 

இப்போது அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஹாட்-ட்ரிக் பரிசு பற்றிய விபரங்கள்:

முதல் பரிசோ, 
இரண்டாம் பரிசோ 
அல்லது மூன்றாம் பரிசோ 
எதுவாக இருந்தாலும் 
தொடர்ச்சியாக அடுத்தடுத்து மும்முறை 
’சிறுகதை விமர்சனப் போட்டி’யில்
பரிசு வென்றவர்களுக்கு மட்டும் 
இந்த ’ஹாட்-ட்ரிக்’ பரிசு 
கூடுதலாக வழங்கப்பட உள்ளது.


தொடர்ச்சியாக அடுத்ததடுத்து மூன்று முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 50] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.


தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்கு முறைகள்  பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, இரண்டாம் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 100] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.


தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஐந்து முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, முதல் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 150] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.


தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறு முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, ஊக்கப் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 200] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.

ஆறுமுறைகளுக்கு மேல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பரிசுக்குத் தேர்வாகி சாதனை படைப்பவர்களுக்கு மட்டும், ஒவ்வொரு ஆறுடனும் கணக்கினை முடித்துக்கொண்டு, அதற்கு மேலான வெற்றிகளை, புதிய சங்கலித் தொடராக 1 to 3, 1 to 4, 1 to 5, 1 to 6 என பாவித்து மேற்படி அட்டவணைப்படி மீண்டும் கணக்கிட்டு, மீண்டும் ‘ஹாட்-ட்ரிக்’ பரிசு கூடுதலாக வழங்கப்படும்.

-oOo- -oOo- -oOo- -oOo-


இந்த புதிய அறிவிப்பின் படி 

முதல் நான்கு கதைகளுக்கும் 
[ VGK-01 to VGK-04 ] அடுத்தடுத்து, தொடர்ச்சியாகப் 
பரிசினை வென்றுள்ள 


திரு. ரமணி அவர்களுக்கு, 

இரண்டாம் பரிசுக்குச் சமமான தொகை 
கூடுதலாக 'ஹாட்-ட்ரிக் பரிசு' என்ற பெயரில் 
வழங்கப்பட உள்ளது.
இவரே மேலும் பலமுறை இதே 
‘ஹாட்-ட்ரிக்’ பரிசினைப்பெறவும் 
வாய்ப்புகள் உள்ளன.


 -oOo- -oOo- -oOo- -oOo-VGK-04 to VGK-06

ஆகிய மூன்று கதைகளுக்கும் 

அடுத்தடுத்து, தொடர்ச்சியாகப் 

பரிசினை வென்றுள்ள திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 

இந்த ’ஹாட்-ட்ரிக்’ பரிசினைப்பெற 
முற்றிலும் தகுதியுள்ளவராக 
இப்போது ஆகியுள்ளார்கள் 
என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் 
தெரிவித்துக்கொள்கிறேன்.
[ அவர்களின் தொடர் வெற்றியினைப்பொறுத்து,
மேலே சொல்லியுள்ள அட்டவணைப்படி,
அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய 
‘ஹாட்-ட்ரிக்’ பரிசுத்தொகை பிறகு நிர்ணயிக்கப்படும். ]

 -oOo- -oOo- -oOo- -oOo-ஹாட்-ட்ரிக் பரிசுகளைக் கூடுதலாகப் 
பெறப்போகும் இவர்கள் இருவருக்கும்

என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். 

அன்பான இனிய நல்வாழ்த்துகள். 

-oOo-

இனி வரப்போகும் ஒவ்வொருவார
போட்டி முடிவுகளிலும் 
நாம் எவ்வளவோ 
ஹாட்-ட்ரிக்” 
வெற்றியாளர்களை
தொடர்ந்து பார்க்கத்தான் போகிறோம் !


ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !!

சிறுகதை விமர்சனதாரர்களா ..... 
கொ க் கா !!!

-oOo-

மகிழ்ச்சியான செய்திகள்


கண்ணன் பிறந்தான் எங்கள் 

கண்ணன் பிறந்தான் ....

புதுக் கவிதைகள் 

பிறந்ததம்மா ....


மன்னன் பிறந்தான்  எங்கள்  

மன்னன் பிறந்தான்  ....

மனக் கவலைகள் மறந்ததம்மா  !


09.03.2014 ஞாயிறு 

அதிகாலை  2.47 மணிக்கு 

என் வாரிசுக்கு வாரிசு பிறந்துள்ளது.இவரின் புதிய வருகையைச் சேர்த்து 

‘VGK’ குடும்ப உறுப்பினர்கள்


எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மீதி 11 பேர்கள் யார் ... யார்? 
எனக் காண இதோ இணைப்பு

http://gopu1949.blogspot.in/2011/07/1.html-oOo-

நம் வேலூர் பதிவர் திருமதி. ’உஷா அன்பரசு’ அவர்கள் கேள்விகள் கேட்க என் அன்பு மனைவி விரிவாக பதிலளிக்க,  அந்த சிறப்புப்பேட்டிச் செய்திகள், 08.03.2014 தினமலர் - பெண்கள் மலர் - பக்கம் 22 இல் பெட்டிச்செய்தி போல, மிகவும் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ளது, என்பதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


தலைப்பு:

குடும்பத்தின் மகிழ்ச்சி ..... 

கூட்டுக்குடும்பமா ?  தனிக்குடும்பமா  ?


-oOo-
இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


கதையின் தலைப்பு:


 ”அமுதைப்பொழியும் நிலவே !”

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


13.03.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்
37 கருத்துகள்:

 1. விமர்சனங்கள் அருமை...

  அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கும் திருமதி ஞா. கலையரசி அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  அழகான குட்டிச் செல்லத்திற்கு வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ திரு. திண்டுக்கல் தனபாலன்...

   பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தந்த தங்களுக்கு எனது அன்பு நன்றி!

   நீக்கு
 2. இரண்டாம் பரிசு பெற்ற திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கும் திருமதி. ஞா.கலையரசி அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ Tamizhmuhil Prakasam

   வாழ்த்துக்கள் தந்த தங்களுக்கு எனது அன்பு நன்றி!

   நீக்கு
 3. *
  எனது விமர்சனத்தை, பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கு நன்றி!
  பலரது விமர்சனத் திறமையை வெளிக் கொணரும் பரிசுப் போட்டியினை நடத்தி வரும் வி.ஜி.கே. ஐயா அவர்களுக்கும் நன்றி!
  ==>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 10, 2014 at 9:28 PM

   வாருங்கள், வணக்கம்.

   //எனது விமர்சனத்தை, பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கு நன்றி!//

   உயர்திரு. நடுவர் அவர்கள் சார்பில் தங்களுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள். தங்களின் நன்றிக்கு நன்றிகள்.

   //பலரது விமர்சனத் திறமையை வெளிக் கொணரும் பரிசுப் போட்டியினை நடத்தி வரும் வி.ஜி.கே. ஐயா அவர்களுக்கும் நன்றி!//

   மீண்டும் என் நன்றிகள். மேலும் மேலும் உற்சாகமாகக் கலந்துகொண்டு, மேலும் மேலும் பரிசுகளை வென்றிட என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 4. *
  இரண்டாம் பரிசு பெற்றுள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான விமர்சனம் எழுதி இரண்டாம் பரிசு பெறும்
  முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கும் திருமதி
  ஞா. கலையரசி அவர்களுக்கும் பாராட்டுக்கள்...
  இனிய் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. இரண்டாம் பரிசு பெற்ற இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. முதல் பரிசில் திரு ரமணி அவர்கள் இடம் பெற்றிருப்பார் என எண்ணுகிறேன். :))))

  பதிலளிநீக்கு
 8. இரண்டாம் பரிசினை வென்ற சகோதரர் அ. முஹம்மது நிஜாமுத்தீன் மற்றும் திருமதி ஞா.கலையரசி இருவருக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்! சகோதரர் நிஜாமுத்தீன் அவர்களைப் பாராட்டி நான் வலைச்சரத்தில் எழுதியது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா...
   எனக்கும் இரண்டாம் பரிசு பெற்ற திருமதி கலையரசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வழங்கியதற்கு நன்றி!

   தாங்கள் எனது பதிவுகளைக் குறிப்பிட்டு, என்னையும் பாராட்டி, வலைச்சரத்தில் எழுதியதற்கு மிக்க நன்றி. அதை இங்கு நினைவாக சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி!

   அந்த வலைச்சர இணைப்பு இதோ:

   http://www.blogintamil.blogspot.com/2013/02/5.html

   நீக்கு
 9. போட்டியில் வென்றவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. மறுபடியும் தாத்தாவானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கும் திருமதி ஞா. கலையரசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  Hat trick சாதனயாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
  மீண்டும் தாத்தாவானதற்கு என் வாழ்த்துக்கள்...

  குட்டிக்கண்ணனுக்கு என் உளமார்ந்த ஆசிர்வாதங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ Usah Srikumar...

   @ மனோ சாமிநாதன்

   வாழ்த்துக்கள் வழங்கியதற்கு நன்றி!

   நீக்கு
 12. தங்கள் குடும்பத்தின் புதிய வரவான குட்டிக் கண்ணனுக்கு வாழ்த்துக்கள்! இரண்டாம் பரிசு கொடுத்துக் கெளரவித்த நடுவர் அவர்களுக்கும் திரு.கோபு சார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இரண்டாம் பரிசு பெறும் முகமது நிஜாமுத்தீன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்! எனக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்த அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kalayarassy G March 11, 2014 at 7:14 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தங்கள் குடும்பத்தின் புதிய வரவான குட்டிக் கண்ணனுக்கு வாழ்த்துக்கள்! //

   குட்டிப்பயலுக்கான தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. சந்தோஷம்.

   //இரண்டாம் பரிசு கொடுத்துக் கெளரவித்த நடுவர் அவர்களுக்கும் திரு.கோபு சார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.//

   உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்குப்பாராட்டுக்கள் + வாழ்த்துகள். தங்களின் நன்றிக்கு நன்றிகள்.

   மேலும் மேலும் இந்தப்போட்டிகளில் தொடர்ந்து உற்சாகமாகக் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல பரிசுகளை வென்றிட என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள கோபு [VGK]

   நீக்கு
  2. @ Kalayarassi...

   @ மனோ சாமிநாதன்

   வாழ்த்துக்கள் வழங்கியதற்கு நன்றி!

   நீக்கு
 13. இரண்டாவது பரிசு பெற்ற திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கும் திருமதி கலையரசி அவர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள் பல.

  பதிலளிநீக்கு
 14. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

  ’VGK-06 உடம்பெல்லாம் உப்புச்சீடை’

  இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு இதோ:

  http://unjal.blogspot.in/2014/11/2.html

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன் கோபு [VGK]
  ooooooooooooooooooooooooooo

  பதிலளிநீக்கு
 15. இந்த எனது விமரிசனத்தை எனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன். வந்து படித்து கருத்தளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  http://nizampakkam.blogspot.in/2015/02/124.html

  பதிலளிநீக்கு
 16. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

  ’VGK-06 உடம்பெல்லாம் உப்புச்சீடை’

  இந்த சிறுகதைக்கு திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு இதோ:

  http://nizampakkam.blogspot.in/2015/02/124.html

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன் கோபு [VGK]
  ooooooooooooooooooooooooooo

  பதிலளிநீக்கு
 17. நல்லதொரு விமரிசனம் கொடுத்த முகமது நிஜாமுதீனுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 18. மத்தவங்க கற்பனைத்திறனையும் எழுத்து திறமையும் எல்லாருக்கும் தெரியணும்னு தானே விமரிசன போட்டி அறிமுகப்படுத்தினீங்க. விமரிசனம் எழுதுரவங்க உங்க ஆசையை நல்லாவே பூர்த்தி பண்றாங்க இல்லயா??

  பதிலளிநீக்கு
 19. அருமையான கதைக்கு அருமையான விமர்சனம் எழுதி பரிசு பெற்ற திரு அ. முஹம்மது நிஜாமுதீன் அவர்களுக்கும் திருமதி ஞா கலையரசி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 27, 2015 at 10:35 PM

   //அருமையான கதைக்கு அருமையான விமர்சனம் எழுதி பரிசு பெற்ற திரு அ. முஹம்மது நிஜாமுதீன் அவர்களுக்கும் திருமதி ஞா கலையரசி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

   வாங்கோ .... மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 20. பரிசு வென்றதிரு முஹம்மது நிஜாமுதீன் திருமதி கலையரசி அவங்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 21. திருமதி கலையரசி திரு முஹம்மது நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துகள் இவர் வித்யாசமான தலைப்பிலிருந்து ரயில்வேஸ்டேஷனின் பெயர்கள் நடைமுறைகள் என்று வரிக்கு வரி ரசிச்சு சொல்லியிருக்கார்.

  பதிலளிநீக்கு
 22. * அவரும் சக பயணி; அவரும் சக உயிர் என்பதை நாம் நமது வசதிக்காக மறந்துவிடுகிறோம். "இறைவனது படைப்பில் அனைவரும் சமம், அதோடு எவ்வுயிரும் அவனது படைப்பே" என்பதை வலியுறுத்தும் படைப்பு இக்கதை!// கதையின் கருவினை சரியாகத் தொட்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள் நிஜாமுதீன்.

  இக்காலத்துக் கடைந்தெடுத்த சுயநலவாதியின் பிரதிநிதியாக கதை முழுக்க வளைய வருகிறார் பட்டாபி.

  அவர்களுக்கு உதவி செய்யுமுகமாகத் தமக்கு ஒதுக்கப்பட்ட கீழ் இருக்கையைத் தாமே முன் வந்து தாரை வார்த்து விட்டு, மேலே ஏறும் கணத்திலேயே அவர்களது உதாசீனம், அவமதிப்பு, நிந்தனை பற்றிய சிந்தனை சுமைகளைக் கீழே இறக்கி வைத்து விடுகிறார் பெரியவர். // நல்ல காரக்டர் ஸ்டடி...வாழ்த்துகள் சகோதரி.

  பதிலளிநீக்கு