About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, March 29, 2014

பனை [பண] விசிறி !

தொடர்ந்திடும் ...... 
மேலும் சில பதிவர் சந்திப்புக்கள் !என் மீது தனிபிரியம் கொண்டுள்ள,  நம் ”மணம் (மனம்) வீசும்” பதிவர் http://manammanamviisum.blogspot.in/ அன்புச் சகோதரி திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின் ஒரே அன்பு மகளுக்கு 21.02.2014 அன்று சென்னையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. அதைப்பற்றி நான் என் பதிவினில் எழுதியிருந்தேன்.  


தலைப்பு:

பூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி ! “ 
இணைப்பு இதோ: 
    

அந்த இனிய திருமண நிகழ்ச்சிக்கு என்னால் நேரில் சென்று கலந்து கொள்ள இயலாமல் போய் விட்டது. 

அதுபோல ஒரு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு திருமதி ஜெயந்தி ரமணி தம்பதிக்கு நடைபெற்ற “சஷ்டியப்த பூர்த்தி” விழாவிலும் என்னால் நேரில் சென்று கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.

அந்த அவர்களின் மங்களகரமான சஷ்டியப்தபூர்த்தி நிகழ்ச்சிக்கும் நான் ஒரு சிறப்புப் பதிவு கொடுத்திருந்தேன்.  

அந்தப் பதிவின் பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை மட்டும்: 211

தலைப்பு: “அறுபதிலும் ஆசை வரும்” 


 


மேற்படி இரு விழாக்களிலும் நேரில் சென்று கலந்துகொண்டு தம்பதியினரை வாழ்த்தி கெளரவிக்க முடியாமல் போய்விட்டதே என்ற தாபம் மட்டும் என் மனதில் இருந்து வந்தது.   

அதனால் என்ன ?  நாங்களே நேரில் வந்து தங்களிடம் ஆசிகள் பெற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி, இவ்விரு தம்பதிகள் மட்டுமின்றி, அவர்களின் சம்பந்தியான மற்றொரு தம்பதியையும் அழைத்துக்கொண்டு, என் இல்லத்திற்கு விஜயம் செய்து நமஸ்கரித்து ஆசிபெற்று மகிழ்வித்துச் சென்றார்கள்.  

21.02.2014 அன்று சென்னையில் திருமணம் ஆன ஜோடியை அடுத்த ஐந்தாவது நாளே அதாவது 25.02.2014 அன்றே திருச்சியில் உள்ள என் இல்லத்துக்கு அழைத்து வந்தது, எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. 

ஹாரத்தி சுற்றி அவர்களை வரவேற்று, ஏதோ என்னால் இயன்ற அளவில் என் அன்புச் சகோதரிக்கும், அவர் கணவருக்கும், புதுமணப் பெண்ணுக்கும், மாப்பிள்ளை அவர்களுக்கும், மாப்பிள்ளையின் பெற்றோர்களுக்கும், மரியாதை செய்து அனுப்பி வைத்தேன்.  

அப்போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் இதோ .... தங்களின் பார்வைக்காக.


புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நாள்: 25.02.2014
இடம்: அடியேன் வீட்டு அடசல்களுக்கு நடுவில்

 

திருமதி ஜெயந்தி அவர்களின் 
அன்பு மகள் + மாப்பிள்ளை
[21.02.2014 அன்று திருமணமான ஜோடி.]


அமர்ந்திருக்கும் வெள்ளை சட்டைக்காரர்
திரு. ரமணி அவர்கள், 
அருகே முன்னால் நிற்பவர் 
திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்
பின்னால் நிற்பவர்கள் 
திரு. ஜெயந்தி ரமணி அவர்களின் சம்பந்திகள்

 

“எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு”
சிறுகதைத்தொகுப்பு நூல்
மூன்று ஜோடிகளுக்கும் 
அடியேன் கையொப்பத்துடன்
அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
முழு நேர மின்தடை அமுலில் இருந்த நாளில்
மதியம் கடும் வெயில் வேளையில் 
இவர்களின் வருகை அமைந்துவிட்டதால் - 
ஜில்லென்ற மேங்கோ ஜூஸும்
ஆளுக்கு ஒரு விசிறியும் தந்ததில் 
அவர்களுக்கோர்  கூடுதல் மகிழ்ச்சி.

இதோ அந்த விசிறிகளின் மாதிரிப்படங்கள்: 

 

அன்புள்ள ஜெயந்தி  !

என் இல்லத்திற்கு தங்கள் கணவருடனும்
அன்பு மகளுடனும் மாப்பிள்ளையுடனும்
சம்பந்தி மாமா + மாமியுடனும்


வருகை தந்து மகிழ்வித்ததற்கு 
என் மனம் நிறைந்த 
இனிய அன்பு நன்றிகள் 

என் வலைத்தளத்தில் 
’சிறுகதை விமர்சனப்போட்டி’
மும்முரமாக நடைபெற்று வருவதால்
இந்தப்பதிவு கொடுக்க தாமதமாகிவிட்டது.

மேலும் வரும் 02.04.2014 அன்று  
கோவையிலிருந்து
பிரபல பதிவர் ஒருவர்  குடும்பத்துடன்
என் இல்லத்திற்கு வருகை தர உள்ளார்கள்.

அவர்களின் வருகையையும் பதிவிட வேண்டும் 
என்பதால் இதை இப்போது 
அவசரமாக வெளியிட்டுள்ளேன்.

பிரியமுள்ள கோபு அண்ணா

-oOo-40 comments:

 1. தொடரும் பதிவர் சந்திப்புகள்.....

  உற்சாகமான நினைவுகள்.

  ReplyDelete
 2. இனிய சந்திப்பு... சொன்னவிதம் தித்திப்பு...!

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஜில்லென்ற மேங்கோ ஜூஸும்
  ஆளுக்கு ஒரு விசிறியும் தந்ததில்
  அவர்களுக்கோர் கூடுதல் மகிழ்ச்சி/
  தங்கள் கைவண்ணத்தில் மிளிரும் விலைமதிக்கமுடியாத பண விசிறி மனம் கவர்ந்தது...

  மணம் வீசும் மனம் கொண்ட வலைப்பூவைக்கு அளித்த வரவேற்புக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 4. இணைய உறவுகள் இல்ல உறவுகளாக காட்சியளித்ததில் பெருமகிழ்வு எங்களுக்கும்.

  ReplyDelete
 5. மகிழ்ச்சி தரும் பதிவர் சந்திப்புகள் தொடரட்டும்.
  வாழ்த்துக்கள்.
  விசிறி அழகு.

  ReplyDelete
 6. இனிமையான பகிர்வு! நல்வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு! நன்றி உங்களுக்கு! விசிறி அழகு! புதுமையான சிந்தனை!

  ReplyDelete
 7. அருமையான பதிவர் சந்திப்புகள் தொடரட்டும். பண விசிறி ஜோரா இருக்கு, தங்களின் கைவண்ணத்தில்.

  ReplyDelete
 8. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
  இரண்டு புதுமணத் தம்பதிகளுக்கும்
  என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. aha........
  gill endra juice....
  panavisiri......
  pogattum ithellam perithalla, ungal inmuga varaverpuuku munnal.

  ReplyDelete
 10. புதுத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

  விருந்தோம்பலுடன் வரவேற்கும் தங்கள் அன்பு + பண்பு'க்கு எனது பாராட்டுக்கள் ஐயா!

  ReplyDelete
 11. எல்லாம் இன்ப மயம்! இங்கு எல்லாம் இன்ப மயம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. இணைய உறவு இனிய உறவாகின்றது.... வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 13. பதிவர் சந்திப்பு பற்றிய பகிர்வு அருமை. புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்! தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்!

  ReplyDelete
 14. ஆனந்தம் அளிக்கும் பதிவர் சந்திப்புகள் தொடரட்டும் ஐயா! நன்றி!

  ReplyDelete
 15. இந்த எங்கள் இனிய சந்திப்பினைப்பற்றி அன்புச் சகோதரி ஜெயந்தி அவர்கள் அவர்களின் புதிய தளத்தினில் இன்று ஓர் பதிவு வெளியிட்டுள்ளார்கள். இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே. இணைப்பு இதோ:

  http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 16. இந்த மாதிரி ஒரு விசிறி வேண்டுமே? எங்கே கிடைக்கும்?

  ReplyDelete
 17. பழனி. கந்தசாமி June 13, 2015 at 4:50 PM

  //இந்த மாதிரி ஒரு விசிறி வேண்டுமே? எங்கே கிடைக்கும்?//

  ரூபாய் ஆயிரம் அல்லது ரூபாய் ஐநூறு அல்லது ரூபாய் இருநூற்று ஐம்பது போல ஏதாவது என்னிடம் வீசினீர்களானால் விசிறி என்னால் செய்கூலி, சேதாரம் ஏதுமின்றி இலவசமாகவே தாங்கள் கொடுக்கும் தொகைக்குத் தகுந்தவாறு செய்துதரப்படும்.

  தங்களுக்கு 80 வயது பூர்த்தியாகும் வைபவம் ஏதாவது சமீபத்தில் நடக்க இருப்பதாக இருந்தால் சொல்லுங்கோ. அழைப்பிதழ் அனுப்புங்கோ. தங்களுக்கு எந்தச்செலவும் இல்லாமல் செய்து அனுப்பி வைக்கிறேன்.

  அதெல்லாம்கூட வேண்டாம். ஒரு மிகச்சுலபமாக வழியுள்ளதே. இப்போது அறிவித்துள்ள போட்டியில் எப்படியும் தங்களுக்கு Minimum Rs. 500 or Maximum Rs. 1000 கிடைக்கப்போவது உறுதியாகத் தெரிகிறது.

  தாங்கள் விரும்பினால் அந்தப்பணத்தினை இதுபோல வடிவமைத்து வைக்கிறேன். அதை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியது தங்கள் பொறுப்பு மட்டுமே. தபால் அல்லது கொரியரில் பணத்தை அனுப்பினால் அது தவறு மட்டுமல்ல ..... தொலைந்து போய்விட வாய்ப்பும் உண்டு.

  மற்றவை தங்களின் அன்பான பதில் பார்த்து மட்டுமே.

  அன்புடன் VGK

  ReplyDelete
 18. அருமையான சந்திப்பு. அதைச் சொன்ன விதம் ரொம்ப சூப்பர்

  ReplyDelete
 19. இன்றும் என் மகள் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ‘அம்மா உனக்கு ஒரு அருமையான மனிதர் நண்பர் மற்றும் அண்ணாவாகக் கிடைத்திருக்கிறார் என்று.

  எங்கள் வீட்டில் அனைவரும் லயாக்குட்டி உட்பட உங்கள் ரசிகர்கள்.

  உங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 28, 2015 at 9:06 AM

   //இன்றும் என் மகள் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ‘அம்மா உனக்கு ஒரு அருமையான மனிதர் நண்பர் மற்றும் அண்ணாவாகக் கிடைத்திருக்கிறார் என்று.

   எங்கள் வீட்டில் அனைவரும் லயாக்குட்டி உட்பட உங்கள் ரசிகர்கள்.

   உங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன்.//

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

   தங்களைப்போன்ற நல்ல மனதுடையவர்களை குடும்பத்துடன் சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 20. அடிக்கடி ஒங்கூட்டுல பதிவர்கள் சந்திப்பு நடக்குது. அத அளகா சொல்லினிங்க. பண( பனை) விசிறி அளகு.

  ReplyDelete
 21. இனிமையான சந்தோஷமான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் பண விசிறி நல்லா இருக்கு.

  ReplyDelete
 22. அருமையான பதிவு. கூ....ல்!!! எழுத்தாளரே விசிறி வழங்குவது...வாத்யார்னாலே வாரித் தரும் வள்ளல்தானே...

  ReplyDelete
 23. ஆனந்தம் அளிக்கும் பதிவர் சந்திப்புகள் தொடரட்டும் ஐயா! நன்றி!

  ReplyDelete
 24. இப்பதான் ஜெயந்தி மேடம் பயணகட்டுரை பதிவு பாத்து கமெண்ட் போட்டுகிட்டு வந்தேன். இங்க வந்தா நீங்கல்லாம் பல வருஷங்கள் பழக்கமானவங்களா இருக்கீக. போட்டோவில் எல்லாரையும் பார்த்ததில் தனி சந்தோஷம்..

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. May 31, 2016 at 10:19 AM

   வாங்கோ, முன்னாக்குட்டி. வணக்கம்.

   //இப்பதான் ஜெயந்தி மேடம் பயணகட்டுரை பதிவு பாத்து கமெண்ட் போட்டுகிட்டு வந்தேன்.//

   அடேடே, அங்கேயும் போய்ட்டு வந்துட்டீங்களா? மிக்க மகிழ்ச்சி. என்னைத்தவிர யாருமே தன் பக்கம் வருவதில்லை என என்னிடம் அடிக்கடி அவள் புலம்புவது உண்டு .... நல்லவேளையாக நீங்களும் போய்ட்டு வந்தது கேட்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மின்னலு முருகுப்பொண்ணும், எங்கட ரோஜா டீச்சரும், சாரூவும் போனால் மேலும் அவங்க மகிழ்ச்சியடைவாங்கதான். ஒவ்வொருவரையும் நான் கழுத்தைப்பிடித்தாத் தள்ள முடியும்?

   //இங்க வந்தா நீங்கல்லாம் பல வருஷங்கள் பழக்கமானவங்களா இருக்கீக.//

   அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ உங்களுடனான சமீபகால பழக்கம் + நட்பு போலத்தான் எங்களுக்குள் ஓர் பழக்கம் + நட்பு அன்று ஒருநாள் ஏற்பட்டது. அது என்னவோ ஃபெவிகால் போட்டதுபோல ஒரேயடியா ஆத்மார்த்தமாக ஒட்டிக்கிச்சு. :)

   //போட்டோவில் எல்லாரையும் பார்த்ததில் தனி சந்தோஷம்..//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், முன்னா. - பிரியமுள்ள கோபூஜி.

   Delete
 25. பெரிப்பா பதிவு போட்டோல்லாம் பாத்து ரொம்ப சந்தோஷமா இருக்கு...சிப்பிக்குள் முத்து கூட கமெண்ட் போட்டிருக்காங்களே..

  ReplyDelete
  Replies
  1. happy October 23, 2016 at 3:07 PM

   வாம்மா..... கண்ணு, ஹாப்பி. வணக்கம்.

   //பெரிப்பா பதிவு போட்டோல்லாம் பாத்து ரொம்ப சந்தோஷமா இருக்கு...//

   அப்படியா, மிக்க மகிழ்ச்சி....டா தங்கம்.

   //சிப்பிக்குள் முத்து கூட கமெண்ட் போட்டிருக்காங்களே..//

   அவளுக்கு என்ன ஸ்பெஷலா இரண்டு எக்ஸ்ட்ரா கொம்புகளா முளைத்துள்ளன ????? இதில் என்ன ஆச்சர்யம் உனக்கு?

   ஏன் .... அவள் என் பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் போடக்கூடாதா?

   நான் அவளுக்கு இதுவரை 500 கமெண்ட்ஸ்களுக்கு மேல் போட்டிருப்பேன். ஆராய்ந்து பார்த்தால் அவள் ஏதோ ஒரு ஐந்து மட்டுமே எனக்குப் போட்டிருப்பாள்.

   இது விஷயத்தில் அவள் ஓர் கஞ்சம். மஹா மஹா கஞ்சம். :)

   நீ தான் சமத்தோ சமத்துக்குட்டி. பட்டுக்குட்டி. செல்லக்குட்டி. வெல்லக்கட்டி. :)))))

   Delete
 26. //ஏன் .... அவள் என் பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் போடக்கூடாதா?//

  ஐயோ... அப்படிலாம் இல்ல பெரிப்பா... இப்பதானே உங்க பதிவெல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. எனக்கு முன்னா பார்க்ல கமெண்ட் போடற 4,5- பேரை மட்டும்தானே தெரியும்... பூந்தளிர் மேடம்...ப்ராப்தம் மேடம் கமெண்ட்...உங்க பதில் கமெண்டெல்லாம் அடிக்கடி பாக்க முடிந்தது..ஆனா சிப்பிக்குள் முத்து கமெண்ட்... இங்க மட்டும் தானே பாத்தேன்...அதானன் சொன்னேன்

  ReplyDelete
  Replies
  1. happy October 24, 2016 at 12:12 PM

   **ஏன் .... அவள் என் பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் போடக்கூடாதா?**

   //ஐயோ... அப்படிலாம் இல்ல பெரிப்பா...//

   ’ஐயோ’ன்னு சொல்லக்கூடாது.

   ’ராமா .... ராமா, கிருஷ்ணா .... கிருஷ்ணா, கோபாலகிருஷ்ணா .... கோகுல கிருஷ்ணா’ன்னு சொல்லிட்டு, உடனே கன்னத்திலே போட்டுக்கோ.

   //இப்பதானே உங்க பதிவெல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்..//

   இப்போதாவது என் வலையில் மாட்டியுள்ளாயே! மிகவும் சந்தோஷம்.....டா, என் தங்கமே.

   //எனக்கு முன்னா பார்க்ல கமெண்ட் போடற 4,5- பேரை மட்டும்தானே தெரியும்...//

   ஓஹோ, நீ என்னைவிட ’மச் மோர் பெட்டர்’. எனக்கு அவாளெல்லாம் யாருன்னே சுத்தமாகவே தெரியாதாக்கும்.

   //பூந்தளிர் மேடம்... ப்ராப்தம் மேடம் கமெண்ட்... உங்க பதில் கமெண்டெல்லாம் அடிக்கடி பாக்க முடிந்தது..//

   அப்படியா? அவாள் கமெண்ட்ஸ் போட்டதும், நான் அவாளுக்கு பதில் கமெண்ட்ஸ் போட்டதும் எனக்கு சுத்தமா ஞாபகத்திலேயே இல்லை. நீ சொல்லித்தான் இப்போ நேக்குத் தெரிய வருகிறது. வயசாச்சோள்யோ .... மண்டை மழுங்கிப்போய் எல்லாம் மறந்து போய் இருக்கும் என நினைக்கிறேன்.

   //ஆனா சிப்பிக்குள் முத்து கமெண்ட்... இங்க மட்டும் தானே பாத்தேன்...அதானன் சொன்னேன்.//

   நீ மேலே சொல்லியுள்ள இருவரும் உண்மையிலேயே முத்துப் போன்றவர்கள். :))

   ஆனால் இந்த ’சிப்பிக்குள் முத்து’ என்ற பெயருடன் ஒருத்தி இருக்கிறாளே, இவள் மஹா மஹா லங்கிணி. இவள் ஆக்சுவலாக ஒரிஜினல் முத்து அல்ல. வெறும் சிப்பி மட்டுமே.

   இதை அவளிடம் போய்ச் சொல்லி விடாதே. நீ மட்டும் இரகசியமாகப் படிச்சுட்டு, கிழிச்சுப்போட்டுடு.

   Delete
  2. அப்படி போகுதா விஷயம்.. கோபூஜி உங்களுக்கே தெரியும் என் பதிவு பக்கம் கமெண்ட் போடுறவங்களுக்கு கூட நான் ரிப்ளை பண்ண டயமே கிடைக்குதில்ல. ஆமா நா வெறும்
   "சிப்பி" மட்டுமேதான்...டீச்சரம்மா 1--- டீச்சரம்மா 2--- அவங்களையே தெரியாதுன்னுபோட்டிங்க பொறவு நான்லாம் எம்மாத்திரம்.. அம்பூட்டுதான்....

   Delete
  3. சிப்பிக்குள் முத்து. October 24, 2016 at 4:51 PM

   வாம்மா ..... மீனா, செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? வீட்டில் எல்லோரும் நலமா?

   //அப்படி போகுதா விஷயம்..//

   எந்த விஷயம் ..... எப்படிப் போகுதா????

   //கோபூஜி உங்களுக்கே தெரியும் என் பதிவு பக்கம் கமெண்ட் போடுறவங்களுக்கு கூட நான் ரிப்ளை பண்ண டயமே கிடைக்குதில்ல.//

   ஆமாம். நீ எவ்ளோ பிஸியானவள் என்று ..... அதுதான் எனக்கு நல்லாவே தெரியுமே. அதனால் என்ன? தினமும் நாலு பதிவு போடுவதே பெருசு. வந்துசேரும் பின்னூட்டங்களை மட்டறுத்தி வெளியிடுவதே பெருசு. இதில் கமெண்ட்ஸ் போடுகிறவர்களுக்கு ரிப்ளை வேற பண்ணனுமா? ரிப்ளை பண்ணாவிட்டால் ஒன்றும் தப்பே இல்லையாக்கும். அதற்கெல்லாம் டோண்ட் வொர்ரி மீனா.

   //ஆமா நா வெறும் "சிப்பி" மட்டுமேதான்...//

   மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு வெறும் சிப்பி மட்டுமேதான் கண்களுக்குத் தெரியும். உட்புகுந்து திறந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே முத்துக்கள் காட்சியளித்து மகிழ்விக்கும்.

   ’சிப்பி இருக்குது .... முத்துமிருக்குது .... திறந்து பார்க்க .... நேரமில்லடி .... ராஜாத்தி’ன்னு எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஸ்வீட் ஸாங்க் இருக்கிறதே. அதைக்கூட என் நேயர் விருப்பமாக நான் கேட்டு, நீ உன் வலைத்தளத்தினில் ஒருநாள் வெளியிட்டிருந்தாயே ! :)

   இதெல்லாம் இந்த எங்கட ஹாப்பி பொண்ணுக்கு, எவ்வளவு நான் எடுத்துச் சொன்னாலும் ஒன்றுமே தெரிவதில்லை / புரிவதும் இல்லை. அவளும் மிகச் சின்னூண்டு பொண்ணு தானே. போகப்போகத் தெரிந்து கொள்ளுவாள்.

   [இரகசியமாகப் படிச்சுட்டு, தாமரவர்ணி ஆற்றிலே கிழித்துப்போட்டு விடு என்று சொன்னேன். இப்படி என்னை உன்னிடம் மாட்டி விட்டுட்டாள், அந்த ஹாப்பி. :((((( ]

   //டீச்சரம்மா 1--- டீச்சரம்மா 2--- அவங்களையே தெரியாதுன்னு போட்டிங்க பொறவு நான்லாம் எம்மாத்திரம்.. அம்பூட்டுதான்....//

   ஆமாம். இந்தப் பெயர்களையெல்லாம் எங்கேயோ, எப்போதோ கேள்விப்பட்டதுபோல ஒரு சொப்பண ஞாபகம் எனக்கும் வருகிறது.

   இவர்களெல்லாம் யாரு மீனா? எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? எல்லோரையும் நான் மிகவும் விஜாரித்ததாகச் சொல்லவும், ப்ளீஸ்.

   Delete
  4. கோபூஜி...திஸ் இஸ் டூஊஊஊஊஊ மச்.. ரெண்டு பேர பத்தியும் உங்களுக்கு நல்லாவே தெரியும்குது எனக்கும் நல்லா வே தெரியும். அவங்க இருவரும் இந்த உங்க கமெண்டு பாத்தா ரொம்ப வேதனை படுவாங்க ஜி...(((

   Delete
 27. ஐயோ பாவம் முன்னா மட்டும் இந்த கமெண்ட் பாத்தா அடுத்த நிமிஷமே
  " கோபூஊஊஊஊஜிஇஇஇ"..ன்னு வந்துடுவா...பூந்தளிர்மேடம் ப்ராப்தம் மேடம் லாம் யாருன்னே தெரியாமலேயா இவ்ளவு பெரிய பதில் சொல்லி இருக்கீங்க. ஆனாலும் ரொம்பத்தான்...ம்..ம்.....லொள்ளு உங்களுக்கு. நாளைக்கு என்னையும் யாருன்னு கேட்டுடுவேள்

  ReplyDelete
  Replies
  1. happy October 24, 2016 at 12:58 PM

   //ஐயோ பாவம் முன்னா மட்டும் இந்த கமெண்ட் பாத்தா அடுத்த நிமிஷமே " கோபூஊஊஊஊஜிஇஇஇ"..ன்னு வந்துடுவா...//

   அப்படியாவது அவள் தன் ஷார்ப்பான கொம்புகள் இரண்டையும் நீட்டிக்கிட்டு என்னை முட்ட வராளான்னு நாமும் பார்ப்போம்.

   >>>>>

   Delete
  2. கோபு >>>>> ஹாப்பி (2)

   //பூந்தளிர் மேடம் ப்ராப்தம் மேடம் லாம் யாருன்னே தெரியாமலேயா இவ்வளவு பெரிய பதில் சொல்லி இருக்கீங்க.//

   சத்தியமா எனக்கு அவர்கள் யாருன்னே இன்னும் தெரியாதும்மா...... இதுவரை அவர்கள் யாரையும் நான் நேரில் பார்த்ததே இல்லை.

   அவர்களை மட்டுமில்லை. என் வலைப்பதிவின் Followers ஆக சுமார் 400 பேர்களும், G+ Followers ஆக சுமார் ஒரு 500 பேர்களும் இருக்கிறார்கள்.

   இதில் நான் இதுவரை நேரில் சந்திக்க நேர்ந்துள்ளவர்கள் ஒரு 41 பேர்கள் மட்டுமே தேறும். அதில் ஒருசில உள்ளூர் ஆசாமிகளை 41 முறைகள்கூட நான் சந்தித்துள்ளேன். இந்த 41 பேர்களில் பெரும்பாலானோர், அவர்களாகவே விரும்பி என் வீடு தேடி வந்து சந்தித்துப்போனவர்கள் மட்டுமே.

   அவர்கள் எல்லோருடைய போட்டோக்களும் நீ உடனடியாகப் பார்க்க விரும்பினால் இதோ இந்த இணைப்புகளுக்குப் போ.

   ( 1 to 39 )

   சந்தித்த வேளையில் .....
   ==============================
   பகுதி 1 of 6
   http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html
   பகுதி 2 of 6
   http://gopu1949.blogspot.in/2015/02/2-of-6.html
   பகுதி 3 of 6
   http://gopu1949.blogspot.in/2015/02/3-of-6.html
   பகுதி 4 of 6
   http://gopu1949.blogspot.in/2015/02/4-of-6.html
   பகுதி 5 of 6
   http://gopu1949.blogspot.in/2015/02/5-of-6.html
   பகுதி 6 of 6
   http://gopu1949.blogspot.in/2015/02/6-of-6_18.html

   சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் ......
   =============================================
   பகுதி-1 of 7
   http://gopu1949.blogspot.in/2015/02/1.html
   பகுதி-2 of 7
   http://gopu1949.blogspot.in/2015/02/2.html
   பகுதி-3 of 7
   http://gopu1949.blogspot.in/2015/02/3.html
   பகுதி-4 of 7
   http://gopu1949.blogspot.in/2015/02/4.html
   பகுதி-5 of 7
   http://gopu1949.blogspot.in/2015/02/5.html
   பகுதி-6 of 7
   http://gopu1949.blogspot.in/2015/02/6.html
   பகுதி-7 of 7
   http://gopu1949.blogspot.in/2015/02/7.html

   ( 40 & 41)

   மேலும் சில புதிய பதிவர்கள் சந்திப்பு:

   http://gopu1949.blogspot.in/2016/03/6.html

   >>>>>

   Delete
  3. கோபு >>>>> ஹாப்பி (3)

   //ஆனாலும் ரொம்பத்தான்...ம்..ம்.....லொள்ளு உங்களுக்கு.//

   அடாடா ...... நீ உள்பட என்னை லொள்ளு + ஜொள்ளு பார்ட்டின்னு சொல்லிவிட்டாயே!

   துக்கம் தொண்டையை அடைக்கிறது.....டா எனக்கு. :(

   //நாளைக்கு என்னையும் யாருன்னு கேட்டுடுவேள்//

   ஆமாம். அதில் என்ன சந்தேகம்? ஒன்று நாம் நேரில் சந்தித்திருக்கணும் அல்லது தினசரி என்னுடன் ஏதாவது ஒரு வழியில் கொஞ்சம் ’டச்’சில் ஆவது இருக்கணும் ..... இல்லாட்டி எனக்கும் மறந்து போயிடும் இல்லையா. வயசாச்சோள்யோ!.

   ஆனால் தினமும் காயத்ரி மந்திரம் உச்சரிக்கும், ஏழை- எளிய- ஏமாந்த- அந்தணனாகிய என்னால் எங்கட ‘காயத்ரி’ அம்பாளையும், அவளின் பெயரினை ஹாப்பியாக வைத்துக் கொண்டுள்ள உனது குழந்தைத்தனத்தையும், சிங்காரச் சிரிப்பழகையும் மட்டும் என்னால் என்றும் எப்போதும் மறக்கவே முடியாதாக்கும். :)

   Delete
  4. ம்கும்....இதுக்கு பேருதான் செம லொள்ளு ஜி..

   Delete
 28. 21.02.2014 அன்று சென்னையில் திருமணம் ஆன ஜோடியை, அடுத்த ஐந்தாவது நாளே அதாவது 25.02.2014 அன்றே திருச்சியில் உள்ள என் இல்லத்துக்கு, திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள் அழைத்துக் கொண்டு வருகை தந்து மகிழ்வித்தார்கள் என இந்தப்பதிவினில் சொல்லியிருக்கிறேன் அல்லவா.

  அந்த புதுக்கல்யாண தம்பதியினருக்கு, சுமார் ஐந்து ஆண்டுகள் + ஐந்து மாதங்கள் + ஐந்து நாட்களுக்குப் பின், அமெரிக்காவில், 27.07.2019 அமெரிக்க நேரம் காலை 10.25 க்கு, மிக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் தாயாரும் நலம்.

  தன் பெண் செள. சந்தியாவுக்கு, பிரஸவ நேரத்தில் கூடமாட ஒத்தாசைகள் செய்ய, அமெரிக்காவுக்குப் பறந்து சென்றுள்ள நம் பதிவர் ஜெயா அவர்களுக்கு இது முதன்முதலாக பிறந்துள்ள பேரக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

  ஜெயந்தி ரமணி தம்பதியினரின் பேரக் குழந்தை நீண்ட ஆயுளுடனும், ஆரோக்யத்துடனும், அறிவாளியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் திகழ நாம் அனைவரும் வாழ்த்தி, ஆசீர்வதித்து மகிழ்வோம்.

  அன்புடன் கோபு

  ReplyDelete