என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 1 of 3]


வெகு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டிய நிர்பந்தம்.  ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன்.

ஊரில் இல்லாத அதிசயமாக என் மனைவிக்கு மட்டும் கடை வீதிக்கு வருவதோ, கடை கடையாக ஏறுவதோ, மணிக்கணக்காக கும்பலில் நின்று புடவை செலெக்ட் செய்வதிலோ துளியும் விருப்பம் கிடையாது.  நான் பார்த்து ஏதாவது அவளுக்கு எடுத்துக் கொடுத்தால் தான் உண்டு.

எனக்குப் பிடித்த கலர், டிசைன் முதலியவற்றில் புடவையும், மேட்ச் ப்ளவுஸ் பிட்டும் ஆசையாக எடுத்து வந்து விடுவேன்.  வீட்டுக்கு வந்ததும், அதை மனைவியிடம் காட்டி அவளை அசத்த வேண்டும் என்றும் ஆசைப்படுவேன்.  அவள் அநேகமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.  எழுப்பினால் கோபம் வரும்.   அல்லது டி.வி. சீரியலில் மூழ்கி இருப்பாள்.  இடையில் குறுக்கிட்டாலும் பிரச்சனை வரும்.  டி.வி. சீரியல்கள் முடிந்து அவள் வருவதற்குள் பெரும்பாலும் நான் தூங்கி விடுவேன். நள்ளிரவில் இருவரும் விழித்துக் கொண்டால், நான் வாங்கி வந்த புடவையை காட்ட எண்ணுவது உண்டு.  அதிலும் ஒரு சிறிய பிரச்சனை உண்டு. 

அவளாகவே எங்கே போனீர்கள், என்ன வாங்கிண்டு வந்தீர்கள் என்று ஆசையாகக் கேட்க மாட்டாளா என்று நினைப்பேன்.

கல்யாணம் ஆகி மூணு மாமாங்கத்திற்கு மேல் ஆகி விட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை அது போல எதுவும் கேட்டதே கிடையாதே; இன்று மட்டும் புதிதாகக் கேட்டு விடப் போகிறாளா என்ன, என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, புடவை வாங்கி வந்த விஷயத்தை மெதுவாக எடுத்துரைப்பேன்.  ”இப்போ எதுக்குப் புடவை?  வீட்டில் தான் நிறைய புடவைகள் பிரித்துக் கட்டிக் கொள்ளாமல் புதிதாக இருக்கின்றனவே!” என்பாள்.

எதற்கும் ஆசைப் படமாட்டாள்.  அவஸ்தை கொடுக்க மாட்டாள்.  ஒரு விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும். ”இன்னும் நாலு நாட்களில் நமக்கு திருமண நாள் வருகிறதே, அதற்காகத்தான்” என்பேன்.  அதைக் காதில் வாங்கிக் கொண்டாளோ என்னவோ மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதாக அறிந்து கொள்வேன். 

சமயத்தில் வாங்கி வந்த புடவையை அவள் பார்த்து விடும் வாய்ப்பு ஏற்பட்டால் ”நன்றாக இருக்கிறது.  எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது” என்று ஒரு முறையேனும் வாய்தவறியும் சொல்லி விடாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து விடுவாள்.

மின் விளக்கு வெளிச்சத்திலும், சூரிய வெளிச்சத்திலும் பல முறை பார்த்து விட்டு அதை ஒரு ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, ”எந்தக் கடையில் வாங்கினீர்கள், என்ன விலை என்பதைத் தெரிந்து கொண்டு, பில் இருக்கிறதா, அது பத்திரமாக இருக்கட்டும்.  தேவைப்பட்டால் இதைக் கொடுத்து விட்டு வேறு புடவை மாற்றி வாங்கி வந்து விடலாம்” என்பாள்.

“திரும்பத் திரும்ப இந்தப் பச்சையும் நீலமும் தான் அமைகிறது”  என்றும் சொல்வதுண்டு. ”கண்ணைப் பறிப்பது போல, உடம்பு பூராவும் பளபளவென்று ஜரிகையுடன் உள்ளதே, இதெல்லாம் சிறுசுகள் கட்டிக் கொள்ளலாம்.  நான் கட்டிக் கொண்டால் நன்றாக இருக்காது.  குடுகுடுன்னு போய் எதையாவது வாங்கி வந்து விடுகிறீர்கள்.  பரவாயில்லை.  யாராவது சொந்தக்கார சிறுவயசுப் பெண்கள் நம் வீட்டுக்கு வந்தால், வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமத்துடன் கொடுத்து விட்டால் போச்சு” என்பாள்.

அது போல யாராவது வரும் போது இதைப் பற்றிய ஞாபகமே சுத்தமாக வராது என்பது தனி விஷயம்.

உள்ளூரில் உள்ள தன் சமவயதுள்ள மூத்த சம்பந்தி அம்மாள் வரும் போது மட்டும், அந்தப் புடவையை ஞாபகமாக எடுத்துக் காட்டி அபிப்ராயம் கேட்பதுண்டு.

மிகவும் நாகரீகமான மற்றும் விவரமான அந்த அம்மாள் திருவாய் மலர்ந்தருளி என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்தே புடவையை கட்டிக் கொள்வதோ, யாருக்காவது வஸ்த்ர தானமாக கொடுத்து விடுவதோ அல்லது கடைக்குப்போய் அவர்களை விட்டே மாற்றிக் கொண்டு வரச் சொல்வதோ நிகழும்.  இதெல்லாம் அவ்வப்போது நடந்து வந்த பழைய கதைகள்.

சமீபத்தில் ஒரு நாள் நான் வாங்கிக்கொடுத்தப் புதுப் புடவையொன்றை சம்பந்தியம்மாள் தந்த ஒப்புதல் மற்றும் சிவாரிசின் அடிப்படையில் என் மனைவி கட்டிக்கொள்ள நேர்ந்தது.   


அது சமயம், எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து மிகவும் சுவாதீனமாகப் பழகும் பெண் ஒருத்தி, “மாமி, வாவ்.....  இந்தப்புடவை உங்களுக்கு சூப்பராக இருக்கு, திடீரென்று ஒரு பத்து வயசுக்குறைஞ்சாபோல இருக்கிறீங்க, நல்ல கலர், நல்ல டிசைன், லைட் வெயிட்டாக, ஷைனிங் ஆக இருக்கு. பார்டரும், தலைப்பும் படு ஜோர் மாமி; எங்கே வாங்கினேள்? நம்ம ஊரா - வெளியூரா? எந்தக்கடையில் வாங்கினேள்? யார் செலெக்‌ஷன்? என்ன விலை ?” என ஆச்சர்யமாகப் பல கேள்விகளைக் கேட்கலானாள்.

அவளின் எந்தக்கேள்விகளுக்குமே பதில் அளிக்க முடியாத என் மனைவி, “எனக்கு ஒன்றுமே தெரியாதும்மா; எல்லாம் எங்காத்து மாமாவைக் கேட்டால் தான் தெரியும். அவர் தான் வாங்கிவந்தார்” என்று சொல்லி நழுவப்பார்த்தாள் .  


வந்தவள் சும்மா இல்லாமல், ”அதானே பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது மாமி, உங்காத்து மாமா கற்பனையும், ரசனையும் அலாதியானது, நீங்க ரொம்பக்கொடுத்து வச்சவங்க; அடிக்கடி அவர் பெயர் பத்திரிகைகளில் வருகிறது என்றால் சும்மாவா பின்னே?


அடுத்த முறை நான் புடவை எடுக்கப்போகும் போது, என் ஸ்கூட்டர் பின்னாடி உங்காத்து மாமாவை உட்கார வைத்துக்கொண்டு கடைக்குக்கூட்டிப்போய்,அவரைவிட்டே செலெக்ட் செய்யச்சொல்லி,  அவர் எது எடுத்துத்தருகிறாரோ அதைத்தான் வாங்கிக்கட்டிக்கப் போகிறேன் ” என்று உசிப்பி விட்டாள்.

என்னவளுக்கு கண்ணில் நீர் வராத குறை தான்.  விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண். 


என்னவள் என்னைப்பார்த்து ”நீர் எதற்கு இன்னும் இங்கு நிற்கிறீர் என்பதுபோல ஒரு முறை முறைத்துவிட்டு, கையில் கிடுக்கியுடன் சமையல் அறைக்குள் புகுந்தாள். நானும் வெளியில் எங்கோ புறப்படுவதுபோல கிளம்பி விட்டேன்.   பிறகு முழுசா மூன்று நாட்களுக்கு என்னுடன் பேசவே இல்லையே. அவ்வளவு ஒரு பொஸஸிவ்நெஸ், அவளுக்கு என் மேல்.  


அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள். 


சரி ....... சரி, பழம்கதையெல்லாம் இப்போது எதற்கு. இன்றைய புதுக்கதைக்குப் போவோம்.

இன்று அடியேன் ஜவுளிக்கடைக்குச் செல்வது அடியோடு வேறு ஒரு முக்கியமான விஷயமாக.   ஒரு பெண்ணுக்கு சுடிதார் எடுப்பதற்காக.

எங்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே.  முதல் இருவருக்கும் திருமணம் ஆகி வெளி நாட்டிலும், வெளியூரிலும் உள்ளனர்.  மூன்றாவது மகனுக்கும் வெளியூரில் தான் வேலை.  அவனுக்குத் திருமணம் செய்துவைக்க நாங்கள் இருக்கும் உள்ளூரிலேயே பெண் பார்த்து பிடித்துப் போய், நிச்சயதார்த்த தேதி முதலியன பற்றிய பேச்சு வார்த்தைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கும் நிச்சயதார்த்த தினத்திற்கும் இடைவெளி சற்று அதிகம் உள்ளது.   இந்த இடைவெளியில் அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் வருகிறது.

அந்தப் பெண்ணின் பிறந்த நாளுக்கு, வருங்கால மாமனார் மாமியார் என்ற முறையில் ஏதாவது நினைவுப் பரிசுகள் தர வேண்டும் என்ற ஆவலில் இன்று மீண்டும் என்னுடைய ஜவுளிக்கடை பிரவேசம்.

கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளம் வயது பெண் தானே, நல்ல சுடிதார் ஒன்று வாங்கிக் கொடுப்போம்.  பிறகு வயதானால் எவ்வளவோ புடவைகள் கட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்குமே என்று நினைத்து ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.

தொடரும் 


[ இந்தக்கதையின் அடுத்த பகுதி வரும் சனி க்கிழமை 23-04-2011 அன்று வெளியாகும் ]

76 கருத்துகள்:

 1. கொடுத்து வைத்தவர் சார் நீங்க, கடைக்குள்ள போங்க . பின்னாடியே நானும் வரேன்

  பதிலளிநீக்கு
 2. ஆஹா சுடிதார் வாங்கப் போனீங்களா? அதுல நிறைய வகை இருக்கே! முன்னாடியே கேட்டு இருந்தா நிறைய ஐடியா கிடைச்சு இருக்குமே…. அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்புடன்…

  பதிலளிநீக்கு
 3. கணவன் மீதுள்ள காதலை வெளிப்படுத்தத் தெரியாத உருவம்தான் பொசசிவ்னஸ்னு நினைக்கிறேன் .

  மருமகளுக்கு பரிசாக சுடிதார் எடுக்கப் போறீங்களா?

  நானும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. சூப்பர் எழுத்து நடை..... நேரில் இருந்து கதை கேட்டது போல எதார்த்த நடை. sweet!

  பதிலளிநீக்கு
 5. நூறு முறை படித்தாலும் அலுக்கவில்லை

  பதிலளிநீக்கு
 6. ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன//
  வைராக்கியங்கள்,சபதங்கள் எல்லாம் அன்று தொடங்கி அன்றே முடிவுக்கு வருபவை தானே!!.

  பதிலளிநீக்கு
 7. ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.//
  நாங்களும் தானே நீங்கள் செலக்ட் செய்யும் அழகை ரசிக்க பின்னாலேயே வருகிறோம்.
  மாமியிடம் சொல்லிவிடுங்கள் -ஒரு கூட்டமே உங்கள் பின்னால் இருக்கிறது என்று.

  பதிலளிநீக்கு
 8. ஆஹா.............. அப்படியே ஆத்தோடு அடிச்சுக்கிட்டுப் போறதுபோல் நடை அட்டகாசம்.

  மிகவும் ரசித்தேன். மீண்டும் படித்தேன் ரசித்தேன்.

  இனிய பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. சாப்பாடு ப‌ற்றிய ப‌திவில் 'ந‌டு ம‌ரும‌க‌ள் ச‌மைய‌லில் தாளித்து..சாரி த‌ளத‌ளத்துக் கொண்டிருக்கிறேன் எனப் பதிவிட்ட‌தாய் ஞாப‌க‌ம். ஆகவே இந்த‌க் க‌தை ம‌ல‌ரும் நின‌வுதானே?

  ஸ்கூட்ட‌ர் பொண்ணு சொன்ன‌, உங்க‌ள் புட‌வை செல‌க்ஷ்னைவிட‌, ச‌ரியான தேர்ந்த‌ வார்த்தைக‌ளால், எழுத்தால் க‌தையை ஜொலிக்க‌ வைக்கிறீர்க‌ள் வைகோ சார். இப்ப‌டியான உங்க‌ள் ஏக்க‌ங்க‌ளையும், ம‌ன‌ம் திறந்த‌ க‌மெண்டுக‌ளையும் பொறுத்து பெருமைப் ப‌ட்டுக் கொள்ளும் உங்க‌ளின் துணைவியார் போற்றுத‌லுக்கு உக‌த‌ந்த‌வ‌ர்க‌ள். வாழிய‌ ப‌ல்லாண்டு.

  பதிலளிநீக்கு
 10. ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன//
  வைராக்கியங்கள்,சபதங்கள் எல்லாம் அன்று தொடங்கி அன்றே முடிவுக்கு வருபவை தானே!!.

  பதிலளிநீக்கு
 11. சரளமான நடை .தொடரட்டும் . வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 12. அழகாகச் சொல்லியிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 13. வெளிப்படையான எழுத்துன்னு உங்க எழுத்தைச் சொல்லலாம். அதுக்கு உங்க பெட்டர் ஹாஃப்தான் காரணம்னும் சொல்லலாம்.

  இன்னுமொரு சஸ்பென்ஸுடன் இன்னுமொரு கோபு சார் தொடர்.

  பதிலளிநீக்கு
 14. ஆஹா! மாட்டுப்பொண்ணுக்கு சுடிதார் வாங்கப் போன மாமனார்! நாங்களும் பின்னாலேயே வருகிறோம். எங்களுக்கும் சுடிதார் உண்டு தானே?

  பதிலளிநீக்கு
 15. My browser, does not pick up the words .There is some problem in the edited words, I think. My comments at the end of the story, please.

  பதிலளிநீக்கு
 16. சாதாரணமா, சுண்ணாம்பு வாங்கப்போற விஷயத்தையே, சூப்பரா எழுதுவீங்க..சுடிதார்னா, கேக்கணுமா?

  பதிலளிநீக்கு
 17. //”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  சாதாரணமா, சுண்ணாம்பு வாங்கப்போற விஷயத்தையே, சூப்பரா எழுதுவீங்க..சுடிதார்னா, கேக்கணுமா?//

  nothing is better than this compliments

  பதிலளிநீக்கு
 18. அருமையான எழுத்து நடை வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 19. கடைக்குள்ள நீங்க மட்டும் தனியாப்போகலை. ஒரு கூட்டமே தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கோம் :-))

  அசரவைக்கும் எழுத்து நடை..

  பதிலளிநீக்கு
 20. சார்,மிக அருமையாக,யதார்த்தமாக நடந்தவைகளை பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, இரண்டு பேருமே ரொம்ப கொடுத்து வச்சவங்க சார்...நீங்க சுடிதார் எப்படி செலக்ட் செய்றீங்கன்னு பார்க்க ஆவல்..

  பதிலளிநீக்கு
 21. நீங்கள் கடைக்குள் ஆர்வமாய் நுழைந்து உள்ளதைபோலவே
  நானும் கதைக்குள் ஆர்வமாய் நுழைந்து உள்ளேன்
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண்.
  Ha Ha Ha...
  மீண்டும் படித்தேன் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 23. எல் கே said...
  //கொடுத்து வைத்தவர் சார் நீங்க,//

  அப்படியா சொல்றீங்க! இக்கரையிலிருந்து பார்க்கும் எனக்கு அக்கரைப்பச்சையாகத் தோன்றுகிறது. என்னவோ போங்க, எல்.கே. ஏற்கனவே ஒரு நாள் சாட் பண்ணினேன் அல்லவா. அந்த உணர்வுகள் ஆங்காங்கே அள்ளித்தெளிக்கப்பட்டுள்ளன, இந்த கதையில்.

  //கடைக்குள்ள போங்க.
  பின்னாடியே நானும் வரேன்//

  அடாடா, எங்கே போனாலும் விடமாட்டீங்க போலிருக்கே, சரி வாங்க வாங்க !!

  பதிலளிநீக்கு
 24. வெங்கட் நாகராஜ் said...
  //ஆஹா சுடிதார் வாங்கப் போனீங்களா? அதுல நிறைய வகை இருக்கே! முன்னாடியே கேட்டு இருந்தா நிறைய ஐடியா கிடைச்சு இருக்குமே…. அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்புடன்…//

  நன்றி. அடுத்தப்பகுதி நாளை 23.04.2011 வெளிவரும்.

  பதிலளிநீக்கு
 25. thirumathi bs sridhar said...
  //கணவன் மீதுள்ள காதலை வெளிப்படுத்தத் தெரியாத உருவம்தான் பொசசிவ்னஸ்னு நினைக்கிறேன்//

  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்....
  நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்......
  நான் காணும் உலகெல்லாம் நீயாக வேண்டும்......
  நீ பார்க்கும் பொருள் யாவும் நானாக வேண்டும்.....
  என்று ஒரு இனிமையான பாடல் கேட்டிருக்கிறீர்களா?
  அதுதான் உண்மையான பொஸ்ஸெஸ்ஸிவ்நெஸ் என்று நான் நினைக்கிறேன்.

  //மருமகளுக்கு பரிசாக சுடிதார் எடுக்கப் போறீங்களா?//

  ஆமாம்..ஆமாம்..நானே தான் போயாக வேண்டியுள்ளது.

  //நானும் தொடர்கிறேன்.// வாங்க, வாங்க !!

  பதிலளிநீக்கு
 26. Chitra said...
  //சூப்பர் எழுத்து நடை..... நேரில் இருந்து கதை கேட்டது போல எதார்த்த நடை. sweet!//

  நன்றி சித்ரா; உங்கள் Comments are also So Sweet.

  பதிலளிநீக்கு
 27. Girija said...
  //நூறு முறை படித்தாலும் அலுக்கவில்லை//

  உனக்கு எப்படி அலுக்க முடியும்?
  கதை பிறக்கக் காரணகர்த்தாவே நீ தானே?
  Thank you very much, Girija.
  [Please take care of you]

  பதிலளிநீக்கு
 28. இராஜராஜேஸ்வரி said...
  ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன//
  வைராக்கியங்கள்,சபதங்கள் எல்லாம் அன்று தொடங்கி அன்றே முடிவுக்கு வருபவை தானே!!.

  ஆமாம் மேடம். மிகச்சரியாகவே சொல்லி விட்டீர்கள்.

  [Applicable to போளூர் தயாநிதி also]

  பதிலளிநீக்கு
 29. இராஜராஜேஸ்வரி said...
  //ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.//
  நாங்களும் தானே நீங்கள் செலக்ட் செய்யும் அழகை ரசிக்க பின்னாலேயே வருகிறோம்.//

  வாங்கோ ... வாங்கோ .... WELCOME TO YOU Madam!

  //மாமியிடம் சொல்லிவிடுங்கள் - ஒரு கூட்டமே உங்கள் பின்னால் இருக்கிறது என்று.//

  அடடா, அந்த ஸ்கூட்டர் பெண் சொன்னது போல, நீங்களும் ஏதாவது எழுதி என்னை வம்பில் மாட்டிவிடப் பார்க்கிறீர்களே! நல்லவேளையாக என்னவள் என் வலைப்பூப்பக்கமே வருவதில்லை.
  அதனால் இப்போதைக்கு பிரச்சனை ஏதும் இல்லை.

  பதிலளிநீக்கு
 30. துளசி கோபால் said...
  //ஆஹா.............. அப்படியே ஆத்தோடு அடிச்சுக்கிட்டுப் போறதுபோல் நடை அட்டகாசம்.

  மிகவும் ரசித்தேன். மீண்டும் படித்தேன் ரசித்தேன்.

  இனிய பாராட்டுகள்.//

  தங்களின் முதல் வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், மீண்டும் படித்து ரசித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 31. vasan said...
  //சாப்பாடு ப‌ற்றிய ப‌திவில் 'ந‌டு ம‌ரும‌க‌ள் ச‌மைய‌லில் தாளித்து..சாரி த‌ளத‌ளத்துக் கொண்டிருக்கிறேன் எனப் பதிவிட்ட‌தாய் ஞாப‌க‌ம். ஆகவே இந்த‌க் க‌தை ம‌ல‌ரும் நின‌வுதானே?//


  ஓரளவுக்கு மலரும் நினைவுகள் தான். ஆனால் அந்த நடு மருமகளுக்கும் இந்தக்கதைக்கும் சம்பந்தம் இல்லை.


  //ஸ்கூட்ட‌ர் பொண்ணு சொன்ன‌, உங்க‌ள் புட‌வை செல‌க்க்ஷனைவிட‌, ச‌ரியான தேர்ந்த‌ வார்த்தைக‌ளால், எழுத்தால் க‌தையை ஜொலிக்க‌ வைக்கிறீர்க‌ள் வைகோ சார்.//

  மிக்க நன்றி, வாசன் சார்.

  //இப்ப‌டியான உங்க‌ள் ஏக்க‌ங்க‌ளையும், ம‌ன‌ம் திறந்த‌ க‌மெண்டுக‌ளையும் பொறுத்து பெருமைப் ப‌ட்டுக் கொள்ளும் உங்க‌ளின் துணைவியார் போற்றுத‌லுக்கு உக‌ந்த‌வ‌ர்க‌ள். வாழிய‌ ப‌ல்லாண்டு.//

  பொறுத்துக்கொள்வதாகவோ, பெருமைப்பட்டுக்கொள்வதாகவோ எனக்குத்தெரியவில்லை. ஒருவேளை மனதுக்குள் நினைக்கலாம். தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 32. கணேஷ் said...
  //சரளமான நடை .தொடரட்டும் . வாழ்த்துக்கள் .//

  நீண்ட இடைவெளிக்குப்பின் உன் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, கணேஷ்.

  பதிலளிநீக்கு
 33. middleclassmadhavi said...
  //அழகாகச் சொல்லியிருக்கீங்க!//

  மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 34. சுந்தர்ஜி said...
  //வெளிப்படையான எழுத்துன்னு உங்க எழுத்தைச் சொல்லலாம். அதுக்கு உங்க பெட்டர் ஹாஃப்தான் காரணம்னும் சொல்லலாம்.//

  இருக்கலாம், சார். [பானை பிடித்தவள் பாக்கியசாலின்னு சொல்லுவாங்க - இன்னார்க்கு இன்னார்ரென்று எழுதி வைத்தானே.............]

  //இன்னுமொரு சஸ்பென்ஸுடன் இன்னுமொரு கோபு சார் தொடர்.//

  சஸ்பென்ஸே ஒன்றும் கிடையாது. முழுக்க முழுக்க எனக்கு ஏற்பட்ட மிகச்சாதாரண அனுபவங்களை மட்டுமே, எனக்குத்தெரிந்த வரையில் இதில் எழுதியுள்ளேன், சார்.

  பதிலளிநீக்கு
 35. கோவை2தில்லி said...
  //ஆஹா! மாட்டுப்பொண்ணுக்கு சுடிதார் வாங்கப் போன மாமனார்! நாங்களும் பின்னாலேயே வருகிறோம். எங்களுக்கும் சுடிதார் உண்டு தானே?//

  இது என்னங்க பிரமாதம். பின்னாலேயே வருகிறீர்கள் என்றால், உங்களுக்கெல்லாம் இல்லாமலா என்ன? கட்டாயம் உண்டு, மேடம். [நீங்கள் என்னோட மாட்டுப்பொண்ணாக இல்லாவிட்டாலும் எங்க ஊர் மாட்டுப்பொண்ணு தானே, அதனால் நிச்சயம் உண்டு]

  பதிலளிநீக்கு
 36. G.M Balasubramaniam said...
  //My browser, does not pick up the words .There is some problem in the edited words, I think. My comments at the end of the story, please.//

  Dear Sir, No problem at all, Sir. Your affection is always there with me, I know.

  பதிலளிநீக்கு
 37. raji said...
  //POSSESSIVENESS is ladies' special.//

  Yes. I do agree.

  //good narration sir.//

  Thank you very much.

  பதிலளிநீக்கு
 38. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  Well done, GOPU Sir!

  Thank you, Sir.

  //”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  சாதாரணமா, சுண்ணாம்பு வாங்கப்போற விஷயத்தையே, சூப்பரா எழுதுவீங்க..சுடிதார்னா, கேக்கணுமா?//

  அப்படியே சொக்க வச்சுப்புட்டீங்க !
  குபீர்ன்னு சிரிச்சுப்புட்டேன்.

  [சார், ஒரு சின்ன சந்தேகம்.

  சுண்ணாம்புக்கு சுடிதாருக்கும் அப்படியென்ன சார், பெரிய வித்யாசம்; அதுவும் நாம் எழுதும்போது.

  சரி, சரி, நாம் நேரில் சந்திக்கும்போது கொழுக்கட்டை+பூர்ணத்துடன், இந்த சுண்ணாம்பு+சுடிதார் matter ஐயும் சேர்த்து நமக்குள் discuss செய்வோம்]

  பதிலளிநீக்கு
 39. raji said...
  //”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  சாதாரணமா, சுண்ணாம்பு வாங்கப்போற விஷயத்தையே, சூப்பரா எழுதுவீங்க..சுடிதார்னா, கேக்கணுமா?//

  //nothing is better than this compliments//

  YOU TOO ?
  However Thank you very much !

  பதிலளிநீக்கு
 40. MANO நாஞ்சில் மனோ said...
  //அருமையான எழுத்து நடை வாழ்த்துகள்....//

  மிக்க நன்றி, ஐயா !

  பதிலளிநீக்கு
 41. அமைதிச்சாரல் said...
  கடைக்குள்ள நீங்க மட்டும் தனியாப்போகலை. ஒரு கூட்டமே தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கோம் :-))

  அப்படியா, மிகவும் சந்தோஷம்.

  [ஒரு கூட்டமே என்னுடன் தொடர்ந்து வந்தாலும், வரவேண்டிய நபர் வராததில் ஒரு சின்ன வருத்தம் எனக்கு கொஞ்சமாவது இருக்குமல்லவா?]

  //அசரவைக்கும் எழுத்து நடை..//

  ஆஹா, அமைதிச்சாரலில் நனைந்த சிலிர்ப்பு ஏற்படுகிறது. மிக்க நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 42. asiya omar said...
  //சார்,மிக அருமையாக,யதார்த்தமாக நடந்தவைகளை பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, இரண்டு பேருமே ரொம்ப கொடுத்து வச்சவங்க சார்...நீங்க சுடிதார் எப்படி செலக்ட் செய்றீங்கன்னு பார்க்க ஆவல்..//

  தங்களின் முதல்(?) வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும், அடுத்த பகுதிக்கான ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புக்கும் மிக்க நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 43. Ramani said...
  //நீங்கள் கடைக்குள் ஆர்வமாய் நுழைந்து உள்ளதைபோலவே, நானும் கதைக்குள் ஆர்வமாய் நுழைந்து உள்ளேன். நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி ரமணி சார்.

  பதிலளிநீக்கு
 44. ரிஷபன் said...
  //விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண்.
  Ha Ha Ha...
  மீண்டும் படித்தேன் ரசித்தேன்//

  தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும், மிக்க நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
 45. கொஞ்சம் வெளியூர்ப்பயணம், நிரம்ப ஆணி என்று இந்தப் பக்கம் வர முடியாமல் போய் விட்டது ஐயா. முழுவதும் படித்து விட்டு, அப்பாலிக்கா வருகிறேன். :-)

  பதிலளிநீக்கு
 46. சேட்டைக்காரன் said...
  //கொஞ்சம் வெளியூர்ப்பயணம், நிரம்ப ஆணி என்று இந்தப் பக்கம் வர முடியாமல் போய் விட்டது ஐயா. முழுவதும் படித்து விட்டு, அப்பாலிக்கா வருகிறேன். :-)//

  நீங்க பின்னூட்டம் தர வந்த பிறகு தான் சுடிதார் வாங்குவது என்று முடிவுசெய்து, சும்மா, பஜாரில் வெட்டியாச் சுற்றிக் கொண்டிருந்தேன். நல்லவேளையா வந்துட்டீங்க; உங்களின் வருகையால் எப்படியும் 3 வது பகுதியில் ஒருவழியா வாங்கிடலாம்னு இப்போ முடிவே பண்ணிட்டேன்.

  பதிலளிநீக்கு
 47. ’’’அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள். ’’’’  சார் இதெல்லாம் இருந்தால் தான் அவள் பெண்...

  அருமையான எழுத்து நடை .....

  பதிலளிநீக்கு
 48. சார் ..உங்க பதிவை படிக்கும் போது இன்னொன்றும் புரிந்தது இந்த ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்களை கழுவைல்லை என்றால் .......?

  பதிலளிநீக்கு
 49. malar said...
  //’’’அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள். ’’’’  //சார் இதெல்லாம் இருந்தால் தான் அவள் பெண்...
  அருமையான எழுத்து நடை .....//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  malar said...
  //சார் ..உங்க பதிவை படிக்கும் போது இன்னொன்றும் புரிந்தது இந்த ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்களை கழுவைல்லை என்றால் .......?//

  நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என எனக்கு சரியாகப்புரிந்து கொள்ள முடியவில்லை.
  இருப்பினும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 50. மாதேவி said...
  //ஆகா...நன்கு ரசித்தேன்.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 51. ;) ம்.. இமா 1ம் பகுதி படிச்சுட்டாங்க.

  பதிலளிநீக்கு
 52. இமா said...
  //;) ம்..
  இமா 1ம் பகுதி படிச்சுட்டாங்க.//

  இமா, இமயமலை போல மிகப்பெரிய பின்னூட்டமாகக் கொடுத்துள்ளது, மலைப்பை ஏற்படுத்தி, மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

  ;) ம்..

  [தொடர்ந்து இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி, நான்காம் பகுதிகளையும் அவசியமாகப்படித்து, கருத்துகள் கூறலாமே!]

  பதிலளிநீக்கு
 53. ஆமாம் ஆமாம் நானும் இம்முறை ஊருக்கு சென்றபோது அதிசயமாக உடைகள் எடுக்க தெரியாமல் ஜவுளிக்கடை சென்றுவிட்டேன். ஏண்டாப்பா போனோம் என்றாகிவிட்டது?? உங்களுக்கும் அதே போலவா அண்ணா? அங்கு இருக்கும் கூட்டமும் இரைச்சலும் தானே??

  ஆஹா மன்னி எத்தனை அதிர்ஷ்டசாலி..... எந்த டென்ஷனும் எடுக்காமல்... மொத்த டென்ஷனும் அண்ணாக்கு கொடுத்துட்டாங்க.. அதுமட்டுமில்லாம அவங்க ரசனையும் உங்க ரசனையும் ஒரே மாதிரி இருப்பதால் தான் நீங்க தேடி தேடி ரசித்து வாங்கித்தருவதை கட்டிக்கிறாங்க....

  மனைவிக்கு இப்படி ஆசையாக எடுத்துக்கொண்டு வந்து ஆச்சர்யப்படுத்தும்போது அதில் பெருகும் அன்பை அறியமுடிகிறது..... ஆனால் வீட்டுக்கு வரும் நேரம் அவங்க ஆழ்ந்த உறக்கம்... இல்லைன்னா டிவி சீரியல்.. யாருப்பா இந்த டிவி சீரியலை கண்டுப்பிடித்தது ( தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பவரை நான் தமாஷாக சீரியல் கில்லர்ஸ் அப்படின்னு சொல்வதுண்டு) என்னால அவ்ளவு பொறுமையாக உட்கார்ந்து சீரியல் பார்க்கமுடியாது ஸ்வாமி... நள்ளிரவில் லைட் போட்டு அசத்தலா நீங்க வாங்கிக்கொண்டு வந்த புடவையை காண்பிக்கும்போது கண்டிப்பா சந்தோஷப்பூக்கள் ஆச்சர்யமா மலர்ந்திருக்குமே மன்னி முகத்தில்??

  மன்னியே எங்க போனீங்க என்ன வாங்கிண்டு வந்தீங்கன்னு கேட்டாலும் சர்ப்பரைஸ் சர்ப்ரைஸ் அப்டின்னு தான் சொல்வீங்க.. அப்டி தானே அண்ணா?

  ஹாஹா.. அதென்ன மூணு மாமாங்கம்?? எத்தனை மாமாங்கம் ஆனாலும் இயல்பு மாறாது தானே? எவ்ளவு பொறுப்பு பாருங்க மன்னி... சில பேர் வீட்டில் பெண்கள் வீட்டில் பீரோவில் வார்ட்ரோபில் புடவைகள் செட் செட்டாக இருக்கும். ஆனாலும் இன்னும் இன்னும் வாங்கி குவித்துக்கொண்டே இருப்பதில் அவர்களுக்கு விருப்பமாகும்.... ( நான் அப்டி இல்லப்பா... உங்க வீட்டில் நடப்பது போல தான் எங்க வீட்டிலும்.. என் கணவர் எப்பவாவது எதாவது வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தால் வாங்கிப்பேன். நானாக எதுவும் கேட்டதில்லை.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி மஞ்சு, வாங்கோ, வணக்கம்.

   //( நான் அப்டி இல்லப்பா... உங்க வீட்டில் நடப்பது போல தான் எங்க வீட்டிலும்.. என் கணவர் எப்பவாவது எதாவது வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தால் வாங்கிப்பேன். நானாக எதுவும் கேட்டதில்லை.)//

   அதென்ன உங்க வீட்டில் ... எங்க வீட்டில் என்ற பிரிவினை ... அண்ணா தங்கையான நமக்குள்????

   ஓஹோ, பிறந்த வீடு வேறு ... புகுந்த வீடு வேறு அல்லவா!! அதனால் தானே, மஞ்சு. Then it is OK.

   பின்னூட்டத்தில் உள்ள உங்களின் பல கேள்விகளுக்கு என்னால் இங்கு வெளிப்படையாக பதில் அளிக்க முடியவில்லை.

   மஞ்சுவின் அன்பான வருகைக்கும் அழகான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள,
   VGK

   நீக்கு
 54. இப்படி ஒரு பெண் மனைவியாக வாய்க்க நிஜம்மாவே நீங்க அதிர்ஷ்டசாலி தான் அண்ணா.....

  ஹாஹா... ரசித்து வாசித்தேன்... வாய்த்தவறியும் புடவை எனக்கு ரொம்ப பிடித்துள்ளது என்பதை சொல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்துவிடுவார்களாம் மன்னி.. ஏனாம்.?? சொல்லிட்டால் அடுத்த முறை இதே கலர்ல மறுபடி வாங்கிவந்துவிட்டால்?? சொல்லாமல் இருப்பதால் தான் உங்கள் ரசனைக்கேற்ப அழகாக பார்த்து வாங்கி வருகிறீர்கள்.

  சரியான செக்கப் தான்... மின் விளக்கு வெளிச்சத்தில் ஒரு மாதிரி சூரிய வெளிச்சத்தில் ஒரு மாதிரி வெளிச்சமே இல்லாது புடவையை பார்த்தால் இயற்கை நிறம் தெரியும் என்பதால் இருக்கும். இம்முறை புடவை கடைக்கு சென்றபோது அம்மா அப்படி புடவை வெச்சு பார்த்ததை கண்டேன்.. மற்றபடி எனக்கு இந்த ஞானம் எல்லாம் கிடையாது.... ஏன் வேற வாங்கனுமாம்? இதுவே நல்லா தானே இருக்கு. வாங்கி வரும் பொருட்களில் வாங்கி தந்தவரின் அன்பு தென்படும். அதனால் மாற்றாம வெச்சுக்கலாமே...

  அட பச்சை ஃப்ளோரசெண்ட் பச்சை, ஆலீவ் க்ரீன் பச்சை, கிளிப்பச்சை, அடர் நீலம், கடல் நீலம், ஆகாய நீலம், ஹாப்பி ப்ளூ கலர் இப்படி இதுலயே வெரைட்டி இருக்கிறதே.... உடம்பு பூராவும் ஜரிகை இருந்தால் தான் வயது குறைந்தாற்போல் காட்டும். அதெல்லாம் ஐடியா பண்ணி தானே அண்ணா வாங்கி இருந்திருப்பார்.. சும்மா அலுத்துக்கிட்டு இருந்திருப்பாங்க அண்ணா மன்னி... ஆனா மன்னி மனசுக்குள் கண்டிப்பா சந்தோஷப்பட்டிருப்பாங்க அப்டின்னு தான் நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லை.. ஆசை ஆசையா ஆத்துக்காரர் வாங்கித்தந்த புடவையை கண்டிப்பா யாருக்கும் தரமாட்டாங்க. சும்மா உங்களிடம் கலாட்டா செய்திருக்காங்க மன்னின்னு நினைக்கிறேன் அண்ணா...

  ஹுஹும் இது எனக்கு இஷ்டமில்லை.. ஆசையா ஆத்துக்காரர் வாங்கித்தரும் புடவையை சமபந்தி சம்மந்தி அம்மாளிடம் கேட்பதா?? சம்மந்தி அம்மாள் திடிர்னு இப்படி சொன்னால் எப்படி இருக்கும்?? இந்த புடவை நோக்கு நன்னாருக்காதுப்பா... நேக்கு இந்த கலர் சூட் ஆகிறதே.. நேக்கு கொடுத்திறேன் அப்டின்னு சொல்லி இருந்தால் மன்னி அவங்க கிட்ட அபிப்ராயம் கேட்பதையே மொத்தமா நிறுத்தி இருப்பாங்க....

  அது சரி... அந்த அம்மாள் ஒரு முறை கூட எனக்கு கொடுத்திரு புடவையை அப்டின்னு கேட்கலையா?? கேட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி... மன்னி மொத்தமா அந்த அம்மாளை அபிப்ராயம் கேட்பதையே ரப்பர் போட்டு அழிச்சிருப்பாங்க...

  அது சரி !!! சம்மந்தி அம்மாளின் ஒப்புதல் மற்றும் சிபாரிசில் தான் அண்ணாவின் ரசனையான புடவையை கட்டிக்கொண்டார்களா மன்னி...

  அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க.... ஆகமொத்தம் எடுத்து தரும் புடவை எப்படி இருக்கு என்பது முக்கியமில்லை... எடுத்து தரும் ஆத்துக்காரரின் மனசு கஷ்டப்படுமா என்ற கவலையும் இல்லை.. எப்ப பார்த்தாலும் சம்மந்தி அம்மாளின் கருத்துப்படி கட்டிட்டு இருந்த புடவை இப்ப புது கோணத்தில் அதுவும் மற்ற பெண்ணின் கண்ல பட்டு அவளால் ரசிக்கப்பட்டு சிலாகிக்கப்பட்டு மன்னியின் முகமே மாறி இருந்திருக்குமே.... பேஷ் பேஷ்.. இதை இதை இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்....

  ஒரு புடவை வாங்கினால் அண்ணா இப்படி எல்லாம் பார்த்து வாங்குவீங்களா? 10 வயசு குறைச்சு காட்டனும். நல்ல கலர், நல்ல டிசைன், லைட் வெயிட், ஷைனிங் அடேங்கப்பா... நல்ல ரசனையாளர் தான் அண்ணா நீங்க....யார் செலக்‌ஷன்னு போட்டு மன்னிக்கு டென்ஷன் கூடி பிபி கூடி இருந்திருக்குமே... பாவம் மன்னி... திரு திருன்னு முழிச்சிருப்பாங்க...

  அச்சச்சோ மன்னிக்கு வயித்துல புளிய கரைச்சிருக்குமே... மாமாவை கூட்டிண்டு போய் எடுத்து தர சொல்லப்போறேன்னு சொன்னால்... பாவம் மன்னி...

  போதும் போதும் மன்னியை ரொம்ப அழவிடாதேங்கோ.... ரெண்டு பேரும் சேர்ந்து மன்னியை ரொம்பவே பாடாய் படுத்திட்டீங்க. பதிலுக்கு மன்னி கோச்சுக்கிட்டாங்க பாருங்க....

  அட.... மூன்றாவது மகன் நிச்சயதார்த்தத்துக்காக பொண்ணுக்கு சுடிதார் எடுத்துக்கொடுக்க போறீங்களா?? இந்த ஐடியா நல்லாருக்கே... சரி சரி நாங்களும் வரோம் கடைக்கு... அண்ணா என்ன தான் எடுக்கிறார்னு பார்ப்போமே.. புடவை செலக்‌ஷன்ல அசத்தின அண்ணா சுரிதார் செலக்‌ஷன்ல என்ன செய்திருப்பார்?? பொண்ணுக்கு பிடிக்கும்படி தான் எடுத்திருப்பார் அண்ணா... அடுத்த பகுதி படிச்சால் தான் தெரியும்...

  சுவாரஸ்யமாக எழுதி இருக்கீங்க அண்ணா... படிக்கும்போதே வீட்டிற்கு வந்து மன்னியோட அழுகை, கோபம், சிணுங்கல் எல்லாமே கிட்ட இருந்து பார்த்தமாதிரி இருந்தது....

  அடுத்து என்ன நடக்கப்போகிறதோ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VGK to மஞ்சு

   //அது சரி... அந்த அம்மாள் ஒரு முறை கூட எனக்கு கொடுத்திரு புடவையை அப்டின்னு கேட்கலையா??//

   கேட்க மாட்டார்கள். She is a very Gentle Woman. மேலும் எங்களின் சம்பந்தி வேறு. மிகவும் நல்லவங்க. என் மேலும் என் மனைவி மேலும் பேரன்பும் மரியாதையும் கொண்டவர்கள். சம்பந்தி ஆவதற்கு முன்பே சுமார் 20 வருட காலமாக நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நண்பர்கள்,

   ஒரே ஒரு முறை எங்கள் வீட்டின் வேறு ஒரு விசேஷத்துக்காக, அவர்களுக்கும் சேர்த்து ’சிம்ரன் சில்க்’ என்ற புடவை ஒரே டிசைனில் சற்றே வெவ்வேறு கலர்களில் நான் இரண்டாக வாங்கி வந்திருந்தேன்.

   இருவரும் அதை ஆசையாகக் கட்டிக்கொண்டார்கள். போட்டோ எடுத்துக்கொண்டார்கள். ;)))))

   //ஒரு புடவை வாங்கினால் அண்ணா இப்படி எல்லாம் பார்த்து வாங்குவீங்களா? 10 வயசு குறைச்சு காட்டனும். நல்ல கலர், நல்ல டிசைன், லைட் வெயிட், ஷைனிங் அடேங்கப்பா... நல்ல ரசனையாளர் தான் அண்ணா நீங்க.... //

   என்னவோ சொல்லுங்க !

   ஓரளவு பார்த்தமாத்திரத்தில் எனக்கு மனதுக்குத் திருப்தியாக இருக்கணும். இருந்தால் அதை உடனே எடுத்து விடுவேன். போட்டு ஏராளமான புடவைகளைக் காட்டச்சொல்லி, எல்லாவற்றையும் புரட்டி எடுத்து, படுத்த மாட்டேன்.

   //சுவாரஸ்யமாக எழுதி இருக்கீங்க அண்ணா... படிக்கும்போதே வீட்டிற்கு வந்து மன்னியோட அழுகை, கோபம், சிணுங்கல் எல்லாமே கிட்ட இருந்து பார்த்தமாதிரி இருந்தது....//

   நாத்தனார் படுத்தல் என்பது இது தானோ?

   பிரியமுள்ள
   VGK


   நீக்கு
 55. பர்சை காலி பண்ணுவதில் குறியாக இருக்கும் மனைவிகள்தான் இக்காலத்தில் அதிகம். அந்த வகையில் அண்ணன் ரெம்ப ரெம்ம்..ப கொடுத்து வைத்தவர்தான்..இல்லைன்னா இப்படி சிந்தனை கதை, நகைசுவை கதையா எழுத முடியுமா.. அண்ணியும் நல்ல அதிஷ்ட சாலிதான்.மாமனார் வாங்கும் சுரிதார்க்கு சொந்தமாகும் மருமகளும் அதிஷ்டசாலிதான்.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராதா ராணி October 5, 2012 4:06 PM
   //பர்சை காலி பண்ணுவதில் குறியாக இருக்கும் மனைவிகள்தான் இக்காலத்தில் அதிகம். அந்த வகையில் அண்ணன் ரெம்ப ரெம்ம்..ப கொடுத்து வைத்தவர் தான்.. இல்லைன்னா இப்படி சிந்தனை கதை, நகைசுவை கதையா எழுத முடியுமா.. அண்ணியும் நல்ல அதிஷ்ட சாலிதான்.//

   ஆமாம்க .. நீங்கள் சொல்வதும் சரிதானுங்க.

   வைரத்தோடே வாங்கிக்கொடுத்தாலும் காதிலேயே போட்டுக்க மாட்டாங்க எங்க ஆளு. பர்ஸைக்காலி பண்ணாம அது எப்போதும் நிறைந்திருந்தா மட்டும் போதுமாங்க?

   உங்க அண்ணன் கொடுத்து வைத்தவரா அல்லது அண்ணி கொடுத்து வைத்தவரான்னு அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். [இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்து] ஒருவருக்கு ஒருவர் எனக் கொடுத்து வைத்திருப்பவன் அவன் தானே! ;)))))

   //மாமனார் வாங்கும் சுரிதார்க்கு சொந்தமாகும் மருமகளும் அதிஷ்டசாலிதான்.:)//

   உண்மையில் அவளும், அவள் எங்களுக்குக் கிடைத்த நாங்களும் எல்லோருமே அதிர்ஷ்டசாலி தாங்க.

   அதைவிட பெரிய அதிர்ஷ்டம் என்ன தெரியுமா எனக்கு?

   இந்த என் அனுபவக்கதையைப் படித்து விட்டு என்னைப் பாராட்டி நாலு வரியாவது கருத்து எழுத இவ்வளவு பேர்கள் இருக்கீங்களே, அது தாங்க நான் செய்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்.

   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   [நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் 2 மணி வரை இங்கு மின்தடை அதனால் பதில் கொடுக்க சற்றே தாமதம் ஆகிவிட்டதுங்க. ]

   அன்புடன்,
   VGK அண்ணா

   நீக்கு
 56. சார்,

  மிக நன்றாக இருந்தது.
  உங்கள் வீட்டிற்கே வந்து நடந்ததை நேரே பார்த்தது போல் இருந்தது.
  மிக மிக இயல்பாய் இருந்தது.
  மதிய சமையல் பெண்டிங்.அடுத்த பகுதியை படிக்க மிக்க ஆவலாய் இருந்தாலும் ,வேலை எல்லாம் முடித்து விட்டு பிறகு தான் படிக்க வேண்டும்.

  ராஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. rajalakshmi paramasivamDecember 1, 2012 6:53 PM
   //சார், மிக நன்றாக இருந்தது.

   உங்கள் வீட்டிற்கே வந்து நடந்ததை நேரே பார்த்தது போல் இருந்தது.

   மிக மிக இயல்பாய் இருந்தது.

   மதிய சமையல் பெண்டிங்.அடுத்த பகுதியை படிக்க மிக்க ஆவலாய் இருந்தாலும் ,வேலை எல்லாம் முடித்து விட்டு பிறகு தான் படிக்க வேண்டும்.

   ராஜி.//

   அன்புடையீர், வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   சமையல் சாப்பாடு எல்லாம் முடித்து விட்டு மெதுவாகவே நேரம் கிடைக்கும்போது, மீதிப்பகுதிகளைப் படியுங்கோ. ஒன்றும் அவசரமே இல்லை.

   அன்புடன்
   VGK

   நீக்கு
 57. ஹஹஹஹஹ்
  ஆஹா நாங்கள் கூட எங்கள் கதை மன்னாரு அவரது மனைவிக்கு சுடிதார், புடவை வாங்கி வந்தக் கதையை (இதற்குமுன் வைஃப் வைஃபை ஆகிறாள்) என்று சொல்லியிருந்தோம்...அதன் ஒரு பாகமாகத்தான் இது....எழுதி முடிப்பதற்கான தருவாயில் இருந்து கொஞ்சம் கேப் கொடுத்து முடித்துவிடலாம் என்றிருக்கும் போது உங்கள் பின்னூட்டங்கள் பதிவு பார்க்க நேர்ந்த போது இந்தத் தலைப்புக் கண்ணில் பட உள்ளே வந்தால் ...அட....அப்ப எல்லாருக்கும் இப்படித்தானா என்று வியக்க வைத்தது...ம்ம்ம்

  அருமையான நடை.....இதோ அடுத்த பகுதிக்குச் செல்கின்றோம்/....

  பதிலளிநீக்கு
 58. Thulasidharan V Thillaiakathu March 27, 2015 at 8:31 PM

  //அருமையான நடை.....இதோ அடுத்த பகுதிக்குச் செல்கின்றோம்....//

  அடுத்த பகுதிக்கு நடந்தேவா செல்லப்போகிறீர்கள் ?

  OK OK .... 'அருமையான நடை'யுடனேயே செல்லுங்கோ :)

  மிக்க நன்றி !

  பதிலளிநீக்கு
 59. ஆசைப் பெண்டாட்டிக்கு புடவை வாங்கிக்கொடுப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கா? நான் அந்த வழிக்கே போவதில்லை.

  பதிலளிநீக்கு
 60. எநுத மனைவி தான் கணவர் ஆசையுடன் வாங்கித் தரும் புடவையை பாராட்டி இருப்பா. பாராட்டா விட்டாலும் போகட்டும். இந்த கலர்ல நாலு புடவை ஏற்கனவே இருக்கே இந்த கலர் டல்லா இருக்கேன்னுஆயிரம் நொட்டை சொல்வாங்க.

  பதிலளிநீக்கு
 61. எங்காத்துக்காரர் கூட கல்யாணம் ஆன புதிதில் இருந்து சந்தியாவுக்கு விவரம் தெரியும் வரை எனக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விடுவார். ஆனால் நான் புதுப் புடவை வந்ததும் உடனே கட்டிண்டுடுவேன்.

  சந்தியாவுக்கு விவரம் தெரிந்ததும் கட்டாயப் படுத்தி என்னை கடைக்கு அழைத்துச் செல்வாள். அதென்ன அவர் மட்டும் போய வாங்கறது நாம்பளும் போகலாம்ன்னு சொல்வாள். அதுக்கப்புறம் நானும், அவளும் மட்டுமே கடைக்குப் போக ஆரம்பித்தோம். ஆனால் இப்ப அவளுக்குக் கல்யாணம் ஆனப்புறம் அவளே கடைக்குப் போய் புடவை வாங்கிக் கொண்டு தந்து விடுகிறாள். மகனும், மருமகளும் அப்படியேதான். அவர்களே வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். SURPRISE தராங்களாம்.

  நானும் வாங்கிக் கட்டிக் கொண்டு விடுவேன். எவ்வளவோ புடவை கட்டிக்கப்போறோம். இதுவும் இருக்கட்டுமே. ஆனால் மகன், மகள், மருமகள், எங்காத்துக்காரர் எல்லாருமே நன்னாவே SELECT பண்ணுவா.

  அடடா! எங்கயோ போயிட்டேனே. அப்புறம் என்னத்த சொல்ல. இந்த கோபு அண்ணா கதை எழுதினா, வழக்கம் போல அருமையான நடை, பொருத்தமான தலைப்பு, ட்விஸ்ட், சஸ்பென்ஸ். அவர் எழுதிய வ.வ.ஸ்ரீ கதையில் வரும் பொடி போல் மணம், குணம், காரம் நிறைந்த அருமையான பொடி (எனக்கில்ல, பொடி போடறவங்களுக்கு) போல் சூப்பர் கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya May 18, 2015 at 12:14 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   தங்களின் விலாவரியான கமெண்ட்ஸ் எனக்கு எப்போதுமே படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. :)

   அதனால் மட்டுமே, தங்களுக்கு மட்டுமே, அவ்வப்போது நான் பதில் அளித்து வருகிறேன். போட்டியில் கலந்துகொள்ளும் வேறு யாருக்கும் நான் இப்போதெல்லாம் பதில் அளிப்பது இல்லை.

   மிக்க நன்றி, ஜெயா.

   பிரியத்துடனும் நன்றியுடனும்
   கோபு அண்ணா

   நீக்கு
 62. சூடிதார் வாங்க போனத ரசிச்சு சொல்லினிங்க. முன்னாலே போங்க பின்னாடியே வந்துகிட்டிருக்கேன்

  பதிலளிநீக்கு
 63. அடுத்த நகைச்சுவை ஸ்பெஷலா. வேடீஸோட டிரஸ் பத்திலாம் கூட தெருமா. சகலகலா வல்லவராச்சே. இதுகூட தெரிஞ்சிருக்கலைனா எப்படி.

  பதிலளிநீக்கு
 64. ஆஹா...'தில்'தான்...அடுத்த எபிசோட்ல பாக்கலாம்...

  பதிலளிநீக்கு
 65. //என்னவள் என்னைப்பார்த்து ”நீர் எதற்கு இன்னும் இங்கு நிற்கிறீர் என்பதுபோல ஒரு முறை முறைத்துவிட்டு, கையில் கிடுக்கியுடன் சமையல் அறைக்குள் புகுந்தாள். நானும் வெளியில் எங்கோ புறப்படுவதுபோல கிளம்பி விட்டேன். பிறகு முழுசா மூன்று நாட்களுக்கு என்னுடன் பேசவே இல்லையே. அவ்வளவு ஒரு பொஸஸிவ்நெஸ், அவளுக்கு என் மேல்.


  அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள்.
  //
  இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 66. கணவன் மனைவிக்குள்ள என்ன ஒரு அன்னியோன்னியம்.... ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க....சூடிதார் வாங்க நீங்க போறதா சொன்னதும் பெரிய கும்பலே உங்க பின்னால கூட வர வரிசை கட்டி நிக்குறாங்க..... ஆளாளுக்கு ஐடியா கொடுத்து உங்கள குழப்பி அடிக்க போறாங்க.. எதுக்கும் கவனமாகவே இருந்துகிடுங்க ஸார்..))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... July 11, 2016 at 7:43 AM

   //கணவன் மனைவிக்குள்ள என்ன ஒரு அன்னியோன்னியம்.... ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க....//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //சூடிதார் வாங்க நீங்க போறதா சொன்னதும் பெரிய கும்பலே உங்க பின்னால கூட வர வரிசை கட்டி நிக்குறாங்க.....//

   :)))))) அன்றைக்கு என் எழுத்துக்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் / ரசிகைகள் இருந்துள்ளனர். :))))))

   //ஆளாளுக்கு ஐடியா கொடுத்து உங்கள குழப்பி அடிக்க போறாங்க.. எதுக்கும் கவனமாகவே இருந்துகிடுங்க ஸார்..))))//

   தங்களின் அன்பான வருகைக்கும், பின்னூட்டங்கள் உள்பட அனைத்தையும் ரசித்துப்படித்துக் கருத்து அளித்து வருவதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 67. மேற்படி என் சிறுகதையினை மிகவும் பாராட்டி, ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவரும் எனது ஆருயிர் நண்பருமான திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ஓர் தனிப்பதிவு எழுதி இன்று ’ஸ்ரீராமநவமி’ புண்ணிய தினத்தில் (25.03.2018) வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:
  https://tthamizhelango.blogspot.com/2018/03/vgk-03.html

  இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு
  珞

  பதிலளிநீக்கு