About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, April 9, 2011

அந்த நாளும் வந்திடாதோ !


கிராமத்திலேயே பெரிய வீடு
மொத்த நபர்கள் பதினெட்டு
பச்சைப் பசேலென பரந்து விரிந்த
சொந்த வயல்வெளிகள்

ஆற்றுப் பாசனத்தில்
அருமையான சாகுபடி
வீட்டின் அனைவர்
தொழிலும் விவசாயம்

மூட்டை மூட்டையாய்
நெல்மணிகள்
வீடு முழுவதும்
விளை பொருட்கள்

சதங்கை ஒலியுடன்
வண்டி மாடுகள்
கூப்பிட்ட குரலுக்கு
வேலையாட்கள்

செல்வச் செழிப்பிலும்
பாச மழையிலும் 
வளர்ந்த என் 
மழலைச் செல்வங்கள்

சத்தான உணவு
முத்தான உழைப்பு
நிம்மதியான வாழ்வு
கவலையற்ற உறக்கம் - அன்று.



திடுக்கிட்டு எழுந்தேன் - இன்று



ரேஷன் கடைக் க்யூவில்
நின்ற நிலையில் தூங்கியுள்ளேன்
கனவில் கண்ட அந்த அருமையானக்
கூட்டுக் குடும்ப நாளும் வந்திடாதோ?



=========================================================================
ஓர் அறிவிப்பு

இன்றும் நாளையும், நான் வெளியிடுவதாக இருந்த "அஞ்சலை" சிறுகதைத்தொடரின் பகுதி-5  மற்றும் பகுதி-6,  ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால், வரும் செவ்வாய் (12.04.2011) மற்றும் புதன் (13.04.2011)வெளியிட உத்தேசித்துள்ளேன்.

இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். 

அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன்   

51 comments:

  1. இந்த காலத்தில் இதையெல்லாம் கனவில்தான் பார்க்க முடியும். இதைப் படித்த பின்பு பழைய காலத்திற்குள் சென்றுவந்த ஒரு அனுபவம். நன்றி...வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால், வரும் செவ்வாய் (12.04.2011) மற்றும் புதன் (13.04.2011)வெளியிட உத்தேசித்துள்ளேன்.


    ......தேர்தல் தினங்கள்...... பலர் வாசிக்க தவறி விடலாம். :-(

    ReplyDelete
  3. ரேஷன் கடைக் க்யூவில்
    நின்ற நிலையில் தூங்கியுள்ளேன்
    கனவில் கண்ட அந்த அருமையானக்
    கூட்டுக் குடும்ப நாளும் வந்திடாதோ?


    .....நீங்களே தான் "பகல் கனவு" கண்டேன் என்று சொல்லாமல் சொல்லிட்டீங்களே!

    ReplyDelete
  4. மிக அருமை
    கனவுக்கும் நிஜத்திற்கும்
    நீங்கள் தேர்ந்தெடுத்த களங்கள் மிக அருமை
    இடையிடையே இப்படியும் வாருங்கள்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  5. அந்தக் காலங்களைக் கனவில்தான் காணமுடியும்.

    ReplyDelete
  6. 'அந்த நாளும் வந்திடாதோ'ன்னு ஏங்க வேண்டியது தான்.

    ரேஷன் கடை க்யூ நகருமான்னு கூட கவலைப்படாம தூங்கிருக்கீங்க!! :-))

    ReplyDelete
  7. ரேஷன் கடைக் க்யூவில் இப்படி ஒரு அற்புதக் கனவா?

    வைரமுத்து ஸ்டைலில் சொன்னால் ”இதற்காகவே க்யூவில் நிற்கலாம் போலிருக்கிறதே?”.

    இன்னா சார் டபாய்க்கிறீங்கோ? அஞ்சல-சிவகுரு இன்னா பேசிருப்பாங்களோன்னு பதபதச்சு வந்தாங்காட்டியும் மூணு நாளக்கித் தள்ளி வெச்சு ராங் பண்ணிட்டீங்கோ.

    எங்கானும் இறுதிகட்ட எலெக்ஸன் ப்ரசாரத்துக்குக் கெளம்பிட்டீங்களா சார்?

    ReplyDelete
  8. இனிய கனவுகள்.கனவுகளில் மட்டுமே இனிமை.

    ReplyDelete
  9. ஆஹா!நின்னுகிட்டு தூங்கும்போதே இவ்ளோ பசுமையான கனவா?

    ReplyDelete
  10. அந்த நாளும் வந்திடாதோ என எண்ண வைக்கிற எத்தனையோ விஷயங்களில் முன்னிலை இருப்பது எப்போதும் கூட்டுக் குடும்ப அமைப்பே. மிக அருமை.

    ReplyDelete
  11. கனவுதானே கோபு சார். தடையேதுமில்லை. நன்றாக அநுபவியுங்கள். இன்னுமொரு கனவில் பாதகஙகளையும் காணத்தவறாதீர்கள்.

    ReplyDelete
  12. அருமையான கவிதை....
    ஏக்கம் எனக்கும் வருகிறது....

    ReplyDelete
  13. அருமையான கவிதை. இந்த ஏக்கம் பல விஷயங்களில் எல்லோருக்கும் இருக்கிறது.

    ReplyDelete
  14. நீங்கள் கொடுத்து வைத்தவர் கோபு சார்...எனக்கெல்லாம், நின்று கொண்டு தூங்க தெரியாது! நிற்க..கவிதையில் ஏக்கம் கொஞ்சம் தூக்கல்!!!

    ReplyDelete
  15. அன்று நாம் அந்த சுகத்தை எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம். இன்று ஏங்குகிறோம்.இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை.!

    ReplyDelete
  16. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    //அருமையான கவிதை. இந்த ஏக்கம் பல விஷயங்களில் எல்லோருக்கும் இருக்கிறது.//

    எழுத்துலகில் மிகவும் புகழ்பெற்ற, நிறைய இலக்கிய விருதுகள் பெற்ற தாங்கள், இன்று முதன்முதலாக என் வலைப்பூவுக்கு விஜயம் செய்துள்ளது, நான் செய்த பெரும் பாக்யமாகக்கருதி மகிழ்கின்றேன்.

    தங்களை வருக! வருக!! வருக!!! என இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

    தங்களின் பாராட்டு எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

    தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  17. அஞ்சலை இன்றும் அஞ்சாமல் நாங்கள் குடிசையில் காத்திருக்க ,சொகுசாக குழந்தையுடன் குளிர்சாதன அறையில் இருக்கிறாள்.

    ReplyDelete
  18. அன்புடன் வருகைதந்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, வாழ்த்திய அனைத்து உடன்பிறப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    [எனக்கு ரேஷன்கடைக்குச்சென்றோ, நீண்ட க்யூ வரிசையில் நின்றோ, நின்ற நிலையில் தூங்கியோ,பகல்கனவு கண்டோ எந்த ஒரு அனுபவமும் இதுவரை கிடையாது.

    கடும் வெய்யிலில் ரேஷன் கடைக்குப்போய், நீண்ட நேரம் நின்று, களைப்புடன் வந்து புலம்பிய ஒரு பெண்மணிக்கு, குடிக்கக் குடிநீர் கொடுத்து, ஆசுவாசப்படுத்தி, அவர்களின் அந்த அனுபவத்தை (புலம்பலை/வேதனையை) என் காதால் கேட்டு, கற்பனையில் எழுதப்பட்டதே இது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்]

    ReplyDelete
  19. நீங்களும் பழமை விரும்பி என்று தெரிகிரது. என் பளாக் பக்கம் வந்து எட்டிப்பாருங்க சார். நிரைய கிடைக்கும் பழமை அனுபவங்கள்.

    ReplyDelete
  20. என்ன சார் நீங்க! அஞ்சலையை எதிர்பார்த்தா திடீர்னு கவிதைப் பக்கம் போய்ட்டீங்க! சீக்கிரமா அஞ்சலை கதை என்னாச்சுன்னு சொல்லுங்க!

    ReplyDelete
  21. கோபல் சார், கனவு எல்லாம் வரனும்னா அதுக்கு ஒரு யோகம் வேணும் சார். நீங்க யோகம் பண்ணியிருக்கேள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. உங்க கவிதை படித்ததும் எனக்கும் மலர்ந்தன நினைவுகள்..

    ReplyDelete
  23. அந்த நாள் வந்தால் சந்தோஷம் தான்! அழகான கவிதை சார்.
    அஞ்சலைக்காக காத்திருக்கிறேன் விரைவில் வெளியிடுங்கள்.

    ReplyDelete
  24. அந்த நாளும் வந்திடாதோ என எண்ண வைக்கிற எத்தனையோ விஷயங்களில் முன்னிலை இருப்பது எப்போதும் கூட்டுக் குடும்ப அமைப்பே. மிக அருமை. இந்த ஏக்கம் பல விஷயங்களில் எல்லோருக்கும் இருக்கிறது.

    ReplyDelete
  25. 'அன்று' க்கும் 'இன்று' க்கும் தான் எத்தனை வித்தியாசங்கள், மாற்றங்கள்.
    மனித மனங்கள் அன்று வளம் பெற்றிருந்தன. பூமியும் வளம் பெற்று
    தன் குழந்தைகளை ரக்ஷித்தாள்.உறவும் சுற்றமும் புடை சூழ வாழ்க்கை அமைந்தது.
    இன்றோ காட்டையும் வயல்களையும் அழித்து வீடாக்கினால்
    வீடு எப்படி வீடாக இருக்கும்?

    ReplyDelete
  26. அன்புடன் வருகை தந்து, மேலான கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  27. \\"மொத்த நபர்கள் பதினெட்டு
    பச்சைப் பசேலென பரந்து விரிந்த
    சொந்த வயல்வெளிகள்"
    "வீட்டின் அனைவர்
    தொழிலும் விவசாயம்"
    "சத்தான உணவு
    முத்தான உழைப்பு
    நிம்மதியான வாழ்வு
    கவலையற்ற உறக்கம்"\\ மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் மறுபடி வருவதுதான் முடியாத ஒன்று சார்...

    உங்களை மட்டுமல்ல எங்களையும்தான்
    ஏங்க வைத்தது இந்தப் பதிவு.

    அன்புடன்,
    ராணி கிருஷ்ணன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் நுண்மதி,

      வாங்கோ. எப்படி இருக்கிறீர்கள்? நலம் தானே?

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள
      VGK

      Delete
  28. ஏக்க உணர்வை அருமையாய் வெளிப்படுத்தியது அருமை.

    ReplyDelete
    Replies
    1. Asiya Omar October 2, 2012 11:45 AM
      ஏக்க உணர்வை அருமையாய் வெளிப்படுத்தியது அருமை.//

      வாங்கோ, வணக்கம், மிக்க நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      Delete
  29. வயலும், பயிரும், பாசமிகு கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், ஆரோக்கியமான உணவு, உழைப்பு, உறக்கம்........ அடடா அந்த வாழ்க்கை, அந்த சுகானுபவம் மீளக்கிட்டிடாதோ???
    உங்கள் கவிதையால் மனதை அங்கலாய்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா.
    அருமை. வாழ்த்துக்கள்!!!

    மேலும் இப்படி நல்ல, உயர்ந்த உயிரோட்டமான படைப்புக்களை காண ஆவலோடு உள்ளேன் ஐயா. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இளமதி October 3, 2012 12:23 PM
      //வயலும், பயிரும், பாசமிகு கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், ஆரோக்கியமான உணவு, உழைப்பு, உறக்கம்........ அடடா அந்த வாழ்க்கை, அந்த சுகானுபவம் மீளக்கிட்டிடாதோ???//

      சு கா னு ப வ ம் மீ ள க் கி ட் டி டா தோ ????

      என்ற தங்களின் சொல்லாடல் வெகு அருமை.
      படித்து, திரும்பத்திரும்பப் படித்து மகிழ்ந்து போனேன்.;)

      Delete
    2. VGK to இளமதி....

      //உங்கள் கவிதையால் மனதை அங்கலாய்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா. அருமை. வாழ்த்துக்கள்!!!//

      அடடா ... தங்கள் மனதை நான் அங்கலாய்க்க வைத்துவிட்டேனா?

      அது என்னவோ புதுப்புது வார்த்தைகளாகப் போட்டு என் மனதையும் இப்படி ஒரேயடியாக அங்கலாய்க்க வைத்து விடுகிறீர்களே! ;)))))

      Delete
    3. VGK to இளமதி.....

      //மேலும் இப்படி நல்ல, உயர்ந்த உயிரோட்டமான படைப்புக்களை காண ஆவலோடு உள்ளேன் ஐயா. தொடர்ந்து எழுதுங்கள்.//

      இளமதியின் கருத்துக்கள் என் அனைத்துப் படைப்புக்களிலும் முதலில் இடம் பெறட்டும். பிறகு தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என யோசிக்கிறேன்.

      இளமதியின் வலைத்தளம் இப்போது முழு அமாவாசை போல ஒரே இருட்டாக உள்ளதே! ;(

      அதில் எப்போது மூன்றாம் பிறையும், முழுப் பெளர்ணமி நிலவும் எனக்குத் தென்படும்? ;)

      அட்வான்ஸ் வாழ்த்துகள்.

      பிரியமுள்ள,
      கோபு

      Delete
  30. GREAT MEN THINK ALIKE

    ஆமாம். நம்ப ரெண்டு பேரோட கவிதையின் சாரமும் ஒன்றுதான்.
    வார்த்தைகளும், கவிதை எழுதுபவர் இருக்கும் இடமும்தான் வித்தியாசம்.

    என்னை ‘வீடு’ என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார்கள். நாங்கள் தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் என்ற இடத்தில் கிட்டத்தட்ட 21 வருடங்கள் குடி இருந்தோம். இன்று அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு குழந்தைகளுக்காக CITY க்கு வாடகைக்கு வந்தோம். பிறகு என் பையன் தற்பொழுது கோவிலம்பாக்கம் என்ற இடத்தில் வாங்கிய வீட்டில் குடி இருக்கிறோம். ஐந்துக்கு மூணு பழுதில்லை என்பது போல் நகரத்தின் முழு சாயலும் இல்லாத இடம் என்று சொல்லலாம். இருந்தாலும் என் கவிதையில் இருந்த வீடு போல் இல்லை.

    ReplyDelete
  31. JAYANTHI RAMANI January 24, 2013 at 2:07 AM

    வாங்கோ, வணக்கம்.

    //GREAT MEN THINK ALIKE//

    ஆஹா! என்னன்னவோ சொல்றீங்கோ! நிறைய படிச்சிருப்பீங்க போலிருக்கு, ;)

    //ஆமாம். நம்ப ரெண்டு பேரோட கவிதையின் சாரமும் ஒன்றுதான்.
    வார்த்தைகளும், கவிதை எழுதுபவர் இருக்கும் இடமும்தான் வித்தியாசம்.//

    உண்மை தான். ஒரு படைப்பு வெளியாக வேண்டுமானால், நம் கற்பனை மட்டுமல்ல, சுற்றுப்புறத்தில் நாம் காண்பது, கேட்பது, அறிவது, தெரிவது, உணர்வது போன்ற அனைத்துமே சேர்ந்து நம் கற்பனையுடன் கூட வெளிப்படுகிறது என்பதே உண்மை.

    நம் இருவர் படைப்புக்களின் சாரம் ஒன்றாகவே இருப்பினும் கூட,
    இடம் பொருள் ஏவல், சுற்றுச்சூழல், அவரவர் அனுபவம், பார்வை எல்லாமே வேறுபடுகிறது தானே! ;)

    உதாரணமாக ஒரு நாள் காலை, நான் அலுவலகம் செல்ல பஸ்ஸைப்பிடிக்க, பேருந்து நிலையத்திற்கு வழக்கம் போலச் செல்கிறேன். பேருந்திலும் ஏறி அமர்ந்தும் விட்டேன்.

    ஓரிரு நிமிடங்களில் பஸ் நகரப்போகிறது.

    அப்போது அங்கு ஓர் இள்ம் வயது அழகான பூக்காரியைக் கண்டேன்.

    பஸ் நகர்ந்தும் அந்தப் பூக்காரி என் மனதிலிருந்து நகரவில்லை.

    உடனே என் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டேன், பஸ்ஸில் பயணம் செய்யும் போதே, மனதில் எழுதிக்கொண்டேன்.

    40 நிமிடங்களில் அலுவலகம் அடைந்தேன். நேராக கேண்டீனுக்கு டிபன் + காஃபி சாப்பிடச் செல்ல வேண்டிய நான் அவ்வாறு அன்று மட்டும் செல்லவில்லை.

    என் மனதில் தோன்றியவற்றை / எழுதியதை, அப்படியே ஒரு பேப்பரில் பேனாவால் எழுதினேன்.

    அதில் பிறந்ததோர் குட்டிக்கதை தான் நான் எழுதிய “ஜாதிப்பூ”..

    "பூக்களை விட அந்தப்பூக்காரி நல்ல அழகு."

    என்று நான் கொடுத்திருந்த, என் முதல் வரிகளே, அந்தக்கதையினை உடனே படிக்க, அனைவரையும் சுண்டியிழுப்பதாக அமைந்திருந்தது.

    இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011_09_01_archive.html

    அதற்கு 50க்கும் மேற்பட்டோர் எழுதியுள்ள பின்னூட்டங்களில், பலவற்றில் பூமணம் கமழ்வதை நுகர முடிகிறது பாருங்கோ.! ;)))))

    //ஐந்துக்கு மூணு பழுதில்லை என்பது போல் நகரத்தின் முழு சாயலும் இல்லாத இடம் என்று சொல்லலாம். இருந்தாலும் என் கவிதையில் இருந்த வீடு போல் இல்லை.//

    இருக்காது ..... இருக்கவே இருக்காது. மீதி ஐந்துக்கு இரண்டு தங்களின் கற்பனையாகவும், என்றோ அனுபவித்ததோர் சுகானுபவமாகவும், ஆழ்மனத்தில் உள்ள நம் எதிர்பார்ப்பாகவும் தான் அவை இருக்கக்கூடும்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனம் திறந்த, ஆத்மார்த்தமான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  32. சென்றதிநீ மீளாது.........மகா கவி பாரதி

    ReplyDelete
  33. Pattabi Raman June 22, 2013 at 5:26 AM

    வாங்கோ .... வணக்கம், நம்ஸ்காரம்..

    //சென்றதிநீ மீளாது.........மகா கவி பாரதி//

    அன்பான வருகைக்கும், பாரதியின் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  34. கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களது ”வேதாவின் வலை” வழியே இங்கே வந்தேன். ரேசன் கடையில் நின்ற நிலையிலேயே தூங்கிய அனுபவம் நல்ல நகைச்சுவை!

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ August 28, 2013 at 1:09 AM

      வாங்கோ, வணக்கம் ஐயா.

      //கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களது ”வேதாவின் வலை” வழியே இங்கே வந்தேன். ரேசன் கடையில் நின்ற நிலையிலேயே தூங்கிய அனுபவம் நல்ல நகைச்சுவை!//

      மிக்க நன்றி, ஐயா.

      Delete
  35. மிக மிக அருமை!
    பதிவு வாசிக்க மகிழ்வாக உள்ளது.
    எனது தொலைத்தவை எத்தனையோ தொடருக்கு இதில் கரு கிடைத்தது.
    மிக்க நன்றி. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  36. kovaikkavi August 28, 2013 at 1:10 AM

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //மிக மிக அருமை! பதிவு வாசிக்க மகிழ்வாக உள்ளது.//

    மிகவும் சந்தோஷம் மேடம்.

    //எனது தொலைத்தவை எத்தனையோ தொடருக்கு இதில் கரு கிடைத்தது.//

    அப்படியா மேலும் மகிழ்ச்சி மேடம்.

    நான் இதுவரை 4 அல்லது 5 கவிதைகள் மட்டுமே என் வலைத்தள்த்தினில் வெளியிட்டுள்ளேன். அவைகளில் மேலும் சிலவற்றின் இணைப்புகள் இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html

    http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_07.html

    http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_9035.html

    http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_12.html

    மிகவும் சுவையானதோர், என் கவிதை அனுபவம் பற்றி இந்த இணைப்பின் பின்னூட்டப்பகுதியில் சென்று பாருங்கள்

    http://tamilyaz.blogspot.com/2013/01/jail.html

    பொதுவாக கவிதைகளைப்பற்றிய என்னுடைய சொந்த அபிப்ராயம் என்ன என்பது இதோ இந்த கீழ்க்கண்ட இணைப்பினில், அன்றைய வலைச்சர ஆசிரியருக்கு நான் எழுதியுள்ள பல பின்னூட்டங்களில் ஒன்றில் உள்ளது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே,

    http://blogintamil.blogspot.in/2013/01/2518.html

    //மிக்க நன்றி. இனிய வாழ்த்து. வேதா. இலங்காதிலகம்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  37. நல்ல கனவுதான். இப்படியான கனவு காண்பதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

    ReplyDelete
  38. உண்மைதான் இனி கூட்டுக் குடும்பங்களை கனவில கண்டுதான ஏங்க வேண்டும் போல...

    ReplyDelete
  39. இதெல்லா இனிமேக்கொண்டு கனவுலதா பாக்கோணும்.

    ReplyDelete
  40. அஞ்சலைக்கு இடைவேள நின்று கொண்டே கூட தூங்க முடியுமா முடிஞ்சதாலதானே கவிதயும் வந்திருக்கு. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இப்ப நினச்சுகூட பார்க்க முடியாது. கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதே இன்றய கூட்டுக்குடும்பம்

    ReplyDelete
  41. ஒரு நெடிய சிறுகதையினை புதுக்கவிதையாக வடித்தது...அருருருருமை.....

    ReplyDelete
  42. கனவும்... கவிதையும்... வாய்க்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... அந்த கனவையும் ரசனையுடன் எழுத்தில் வெளிப்படுத்துவது ரொம்ப பெரிய திறமை.. எல்லாருக்கும் கை வந்து விடாது.. நான்லாம் கமெண்ட் என்கிற பெயரில் என்னலாமோ மனதில் தோன்றுவதை எழுதி வருகிறேன்.. அவ்வளவில்தான் என் எழுத்து திறமை. கோபால் ஸார் பதிவு பக்கம் மட்டுமே வந்து ஏதோ நாலு வரி கிறுக்கலாக சொல்கிறேன். எழுத வரலையே தவிர ரசிக்க முடிகிறது...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... June 28, 2016 at 11:03 AM

      //கனவும்... கவிதையும்... வாய்க்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... அந்த கனவையும் ரசனையுடன் எழுத்தில் வெளிப்படுத்துவது ரொம்ப பெரிய திறமை.. எல்லாருக்கும் கை வந்து விடாது..//

      ஆஹா, தங்களின் பாராட்டு தனிச்சிறப்பானது. மிக்க மகிழ்ச்சி :)

      //நானெல்லாம் கமெண்ட் என்கிற பெயரில் என்னலாமோ மனதில் தோன்றுவதை எழுதி வருகிறேன்.. அவ்வளவில்தான் என் எழுத்து திறமை.//

      அதுவேதான் மிகச்சிறப்பாக உள்ளது ... எனக்கு. :)

      //கோபால் ஸார் பதிவு பக்கம் மட்டுமே வந்து ஏதோ நாலு வரி கிறுக்கலாக சொல்கிறேன். எழுத வரலையே தவிர ரசிக்க முடிகிறது...//

      எதையும் நன்கு ரசிக்கத்தெரிந்த உண்மையான ரசிகரைக் காண்பதுதான் அரிதிலும் அரிது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
    2. என் பழைய பதிவுகள் ஒவ்வொன்றுக்காக தங்களின் தினசரி வருகையால், மேலே ஒருவர் சொல்லியுள்ளதுபோல, “அந்த சுகானுபவம் மீளக்கிட்டிடாதோ???” என நினைக்கத்தோன்றுகிறது எனக்கு.

      மேலும் உங்கள் பின்னூட்டங்களால் என் மனதை அப்படியே அங்கலாய்க்க வைத்துவிடுகிறீர்கள். :)

      இதுவும் மேலே ஒருவர் சொல்லியுள்ளது மட்டுமே.

      மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      Delete