About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, April 13, 2011

அ ஞ் ச லை - 6 [ இறுதிப்பகுதி ] பகுதி 6 of 6


முன்பகுதி முடிந்த இடம்:

”இது யார் குழைந்தைங்க?” ஒருவித ஏக்கத்துடனும், மிகுந்த படபடப்புடனும் கேட்டாள், மல்லிகா.
--------------------------------

“தெரியாது மல்லிகா .... ஆனால் இது இன்றுமுதல் நம் குழந்தை தான். அநாதைக் குழந்தைகள் காப்பகத்திற்குப்போய் தத்து எடுத்து வந்துவிட்டேன்.  

அன்றொரு நாள் நீயும் நானும் அங்கு போய் பதிவு செய்துவிட்டு வந்தபோது, இதுபோல நமக்குப்பிடித்தமான குழந்தை ஏதும் அங்கு இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி வந்து விட்டோமே, ஞாபகம் இருக்கிறதா?  

இந்தக்குழந்தை சமீபத்தில் தான் அங்கு வந்து சேர்ந்துள்ளது. தாமதம் செய்தால் இதையும் வேறு யாராவது எடுத்துக்கிட்டு போயிடுவாங்க. அதனால் தான் அவசரமாக இதைக்கூட்டி வந்து விட்டேன். வரும் வழியில் அதற்கு வேண்டிய எல்லாப்பொருட்களையும் ஆசை ஆசையா வாங்கி வந்துவிட்டேன்.

தயவுசெய்து நீயும் இனிமேல் இதை நம் குழந்தையாகவே ஏற்றுக்கொள்ளணும். இவன் வந்தவேளை, நமக்கே கூட, வேறு ஒரு குழந்தை பிறக்கும் பாக்கியம் ஏற்படலாம்”  என்றார், சிவகுரு.

தன் டிஜிட்டல் காமராவையும், வீடியோ காமராவையும் கொண்டு, மல்லிகாவுடன் குழந்தையையும் சேர்த்து, பலவித போஸ்களில் படம் பிடித்து பதிவு செய்தார் சிவகுரு.

குழந்தையின் கன்னத்தில் ஏற்படும் குழிவிழும் சிரிப்பு மல்லிகாவின் மனதை மிகவும் மயக்கத்தான் செய்தது. அவளின் அன்றைய மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இல்லாமல் இருந்தது.

சிவகுரு வாங்கி வந்திருந்த மிகப்பெரிய ஆனால் வெயிட் இல்லாத பந்தை எடுத்து மல்லிகா அந்தக்குழந்தையுடன் ஆசை தீர கைகளாலும், கால்களாலும், தட்டி, அடித்து, உதைத்து, வாசல்புற பெரிய ஹாலில் ஓடி ஆடி மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்தாள். அந்தக்குழந்தையும் கடகடவென்று சிரித்தபடியே அவளுக்கு ஈடு கொடுத்து விளையாடி அவளை மிகவும் மகிழ்வித்தது.

சமீபகாலத்தில் இவ்வளவு ஒரு சந்தோஷமான முகத்துடன் தன் மனைவியைக் கண்டிராத சிவகுரு, தன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம் இந்தக்குழந்தையின் வருகையினால் தொடங்கியுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாகவே உணர்ந்து மகிழ்ந்தார்.  

தான் வாங்கி வந்துள்ள மற்ற விளையாட்டு சாமான்களை ஒவ்வொன்றாகப் பிரித்து மற்றொரு அறையின் தரையில் கடை பரப்பிக்கொண்டிருந்தார், சிவகுரு..........
...................
.............................
........................................சற்று நேரம் கழித்து அங்கு வந்து வாசல் கதவோரம் நின்ற அஞ்சலை, மிகவும் மெதுவாக காலிங் பெல்லை அழுத்த, மல்லிகாவே கதவைத்திறந்தாள். மறுநாள் முதல் பழையபடி வீட்டு வேலைகள் செய்ய வந்து விடுவதாகச் சொன்னாள், மல்லிகாவிடம் அஞ்சலை. 

இதைக்கேட்ட மல்லிகாவுக்கு காதில் தேன் பாய்வது போலத்தோன்றியது.

”கண்டிப்பாக வந்துடு அஞ்சலை. எங்களின் இந்த ராஜாப்பயலை நீ தான் இனிமேல் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளணும்” என்று சொல்லி குழந்தையை அஞ்சலைக்கு அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள் மல்லிகா.

அந்தப்பணக்காரக் குழந்தையை முதன்முதலாக மிகவும் அதிசயமாகப்பார்த்த அஞ்சலையிடம், அந்தக்குழந்தை ஒரே ஓட்டமாக ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டது. 

இதைப்பார்த்துச் சிரித்த மல்லிகா அதன் வேற்றுமுகம் தெரியாத மழலைச்செயலைத் தனக்குள் எண்ணி வியந்து கொண்டாள்.  

“பாரு, அஞ்சலை, இவனை நீ இப்போதான் முதன்முதலாகப் பார்க்கிறாய்; அதற்குள் ரொம்ப நாட்கள் உன்னிடம் பழகியவன் போல ஓடி வந்து உன்னைக்கட்டிக்கொள்கிறான். கொஞ்சம் கூட வேற்றுமுகம் தெரியாத குழந்தையாக இருக்கிறான். யாரைப்பார்த்தாலும் உடனே சிரித்துக்கொண்டே அவர்களிடம் போய் விடுகிறான்” என்று அந்தக்குழந்தயைப்பற்றி அஞ்சலையிடம் சொல்லி பூரித்துப்போனாள், மல்லிகா. 

”ஆமாம்மா, கள்ளங்கபடமில்லாமல், சூதுவாது தெரியாதவனாகத்தான் இருப்பான் போலிருக்கு இந்தக்குழந்தை” என்று சொல்லி ஒருவாறு சமாளிப்பதற்குள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் தவித்தாள், அஞ்சலை. 

முள் போன்ற ஏதோ ஒன்று தன் தொண்டையில் மாட்டி துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவஸ்தை அளிப்பது போல உணர்ந்தாள் அஞ்சலை.

சிவகுரு ஐயாவுக்கு, தான் செய்துகொடுத்த சத்தியம், அது தனக்குப்பிறந்த,  தன் குழந்தையேதான், என்ற உண்மையை மல்லிகாவிடம் கூற வந்த அஞ்சலையைத் தடுத்து நிறுத்திவிட்டது.

அங்கு சிவகுருவால் தரையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த விளையாட்டு சாமான்களின் மேல் அந்தக் குழந்தையின் கவனம் ஈடுபடும் நேரமாகப்பார்த்து, மல்லிகாவிடம் விடைபெற்று, தன் குடிசையை அடைந்தாள் அஞ்சலை.

அந்த லாட்ஜ் ரூமைக்காலிசெய்து விட்டு தன்னை தன் குடிசை வாசலில் காரில் இறக்கி விட்டுச்செல்லும் முன், தன்னிடம் சிவகுரு ஐயா அளித்த மூன்று லட்சம் ரூபாய்க்கான செக் (காசோலை) போடப்பட்ட கவரைத் தேடி எடுத்தாள்.  

அதை உற்று நோக்கி, 3 லட்சங்கள் என்றால் அது எப்படியிருக்கும்? அதில் 3 என்ற நம்பருக்குப்பிறகு எவ்வளவு பூஜ்யங்கள் போடப்பட்டிருக்கும் என்று அறிய விரும்பினாள். 

தன் இன்றைய இல்வாழ்க்கைப்போன்று தோன்றிய அந்த பூஜ்யங்களையே திரும்பத்திரும்ப எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலை.

இன்னும் ஒரு வாரத்திற்குள் போட்டோ படங்கள் எடுத்து, பான் நம்பருக்கு அப்ளை செய்து, பேங்குக்குக்கூட்டிப்போய் ஃபிக்ஸட் டெபாஸிட் ஆக இந்தத்தொகையை போட்டுத்தருவதாகவும், அதுவரை இந்த செக் பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிப்போயிருந்தார், சிவகுரு.  

ஒரு வயது கூட பூர்த்தியாகாத தன் மகனால் தனக்கு மாதாமாதம் சுளையாக ரூ. 2500 க்குக்குறையாமல், இந்த டெபாஸிட் தொகை மூலம், நிரந்தர வருமானமாகக் கிடைக்கும் என்று சிவகுரு ஐயா சொன்னதை எண்ணி ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாள்.

தினமும் தன் குழந்தையைப்போய்,  தான் பார்க்க முடியும், அவனுடன் பழக முடியும், அவனுடனேயே இருந்து அவனைப்பராமரிக்கவும், கொஞ்சவும்கூட முடியும், அதற்கெல்லாம் தனியாக மாத ஊதியமும் பெற முடியும் என்றாலும், தன் குழந்தை என்ற உரிமை கொண்டாடமட்டும் முடியாது என்பதை நினைக்கையில் அவள் மனம் மிகவும் வருந்தியது. 

அதைவிட அந்த மல்லிகா அம்மாவிடம் இந்த உண்மையை மறைப்பது, அவள் மனதுக்கு மிகவும் சங்கடமான சமாசாரமாகவே இருந்தது. 

ஆனாலும்,தான் இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண்டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு, படுத்துத்தூங்கப்போனாள்.

..............
......................
................................

தனிமையில் தவித்த அவளுக்கு, நேற்றுவரை தன்னுடன் இருந்த, தன் குழந்தை இப்போது தன்னுடன் இல்லாததாலும், அந்தக்குழந்தையின் பிரிவு தாங்கமுடியாத வேதனை அளித்ததாலும், அன்று இரவு முழுவதும் தூக்கமின்றித் தவிக்கலானாள்.

இருள் அகலுமா? கோழி கூவுமா? பொழுது விடியுமா? எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ........................ அந்த அஞ்சலை.-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-

இந்தச்சிறுகதை லண்டனிலிருந்து வெளிவரும் “புதினம்” தமிழ் இதழின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி,  2006 ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட ‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு,  வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  

இந்த  “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பதாக, ஒருசில வெளியூர் வாசகர்களின் பாராட்டுக்கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.   

என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்

92 comments:

 1. இந்தச்சிறுகதை லண்டனிலிருந்து வெளிவரும் “புதினம்” தமிழ் இதழின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, 2006 ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட ‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  My wishes too

  ReplyDelete
 2. சிவகுரு வாங்கி வந்திருந்த மிகப்பெரிய ஆனால் வெயிட் இல்லாத பந்தை எடுத்து மல்லிகா அந்தக்குழந்தையுடன் ஆசை தீர கைகளாலும், கால்களாலும், தட்டி, அடித்து, உதைத்து, வாசல்புற பெரிய ஹாலில் ஓடி ஆடி மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்தாள். அந்தக்குழந்தையும் கடகடவென்று சிரித்தபடியே அவளுக்கு ஈடு கொடுத்து விளையாடி அவளை மிகவும் மகிழ்வித்தது.

  touching one

  ReplyDelete
 3. நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!

  http://sagamanithan.blogspot.com/

  ReplyDelete
 4. நல்ல கதை - நல்ல முடிவும் :) பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 5. மிக நிறைவாக முடித்து இருக்கிறீர்கள்...

  புதினம் தொகுப்பில் வந்திருக்கும் விசயம் சந்தோசத்தை அளித்தது..

  வாழ்த்துக்கள் ஐயா..

  ReplyDelete
 6. "பரிசு பெற்ற 'புதினம்' சிறுகதைகள்" நூலில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வாழ்த்துகள்..
  மழலை இல்லா மனதின் உணர்வுப் போராட்டமும் தியாகம் செய்த தாயின் நிலையும் மனதில் அப்படியே கனமாய் உங்கள் எழுத்தால் இறங்கிவிட்டது. ஊரில் இல்லாததால் மொத்தமும் சேர்த்து படித்தாகி விட்டது இன்று.

  ReplyDelete
 8. சிறப்பான சிறுகதை. அதற்கான அங்கீகாரமும் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அருமையான கதை மட்டும் இல்லை
  முடிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இந்த “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பதாக, ஒருசில வெளியூர் வாசகர்களின் பாராட்டுக்கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன். //
  எங்களுக்கு மிகவும் நல்லதொரு கதையை வழ்ங்கிய தங்களுப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. ஆனாலும்,தான் இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண்டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு, படுத்துத்தூங்கப்போனாள்.//
  முத்தாய்ப்பான இந்த வரிகள் அனுபவம் மிக்க அருமையான வேத வாக்கியம்.
  மனம் கவர்ந்த வரிகளுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 12. இருள் அகலுமா? கோழி கூவுமா? பொழுது விடியுமா? எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ........................ அந்த அஞ்சலை.


  ......அஞ்சலையின் வேதனைகளையும் மன குழப்பங்களையும் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப எத்தனிக்கும் போராட்டங்களையும் அருமையாக இந்த வரிகளில் வெளிப்படுத்தி விட்டீர்கள், மாமா!

  ReplyDelete
 13. ‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


  ...Super News! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 14. கண் முன்னே தன் குழந்தையிருந்தும்,என் குழந்தை என வெளியில் சொல்லிக்க முடியாதது கொடுமைதான்.

  //உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது //

  வாழ்த்துகள்,

  ReplyDelete
 15. நல்ல முடிவு""""""""""""""""""வாழ்த்துக்கள்"""""""""""""

  ReplyDelete
 16. sir .adutha kadai enna sir...........Comedy Story. ya ???????...........

  ReplyDelete
 17. ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும் தான்..ஆனால் இழ்ப்பதின் வலி பெறுவதின் சுகத்தை விட அதிகம்..இந்த பிசாத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு அஞ்சலை தினம் விடும் கண்ணீர்த் துளிகளுக்கு ஈடாகுமா?
  ஆக, பணத்தினால் எதுவும் வாங்கலாம், பச்சை மண் முதற்கொண்டு!

  ReplyDelete
 18. இன்றைக்கு பணம்தானே பிரதானம். வேறு எதுவும் இல்லையே ? உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. கோபு சாருக்கு,முதலில் என் வாழ்த்துக்கள். கதை நனறாக இருந்தது. வேறெப்படியாவது கருத்து எழுதினால் நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ என்ற தயக்கம் எனக்குண்டு, சிவகுமாரனின் கருத்துக்கு உங்கள் பதிலைப் படித்த பிறகு அந்த எண்ணம் மேலும் வலுவடைகிறது.

  இருந்தாலும் அப்படியே போக மனமும் இல்லை. ஒரு கதை ஒரு புத்தக இதழில் பரிசு ப்ற்றிருப்பதாலேயே எல்லோராலும் புகழப்பட வேண்டும் என்றோ ரசிக்கப்பட வேண்டும் என்றோ அவசியம் இல்லை. வெறும் பாராட்டும் புகழ்ச்சியும் மட்டுமே எதிர்பார்த்தால் உண்மை நிலை தெரியாமல் போக வாய்ப்புண்டு. நமக்குப் பிடித்ததை ,தெரிந்ததை நாம் எழுதுகிறோம். படிப்பவர்களின் எண்ணம் உண்மையாக வந்தால்தான் நம் எழுத்தைப் பற்றிய அசல் கணிப்பு நமக்குத் தெரியும்.
  உங்கள் கதைக்கரு நன்றாக இருந்தது. மனைவிக்குத் தெரியாமல் ஒரு குழந்தையை கொண்டு வருவதோ சட்ட சிக்கல்கள் இல்லாமல் வளர்ப்பதோ அவ்வளவு எளிதல்ல. அந்த விதத்தில்தான் எங்கோ நெருடல். உரிமை எடுத்துக்கொண்டு எழுதி விட்டேன். விரும்பவில்லை என்றால் தெரியப் படுத்தவும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. G.M Balasubramaniam said...
  //கோபு சாருக்கு,முதலில் என் வாழ்த்துக்கள். கதை நனறாக இருந்தது.//

  ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  //வேறெப்படியாவது கருத்து எழுதினால் நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ என்ற தயக்கம் எனக்குண்டு//

  தயக்கம் ஏதும் தேவையே இல்லை, ஐயா. நீங்கள் தங்களுக்குத் தோன்றும் எந்தக்கருத்தையும் முழுச்சுதந்திரமாகவே எழுதலாம். மனப்பூர்வமாக வரவேற்க, அடியேன் எப்போதும் காத்திருக்கிறேன்.

  //சிவகுமாரனின் கருத்துக்கு உங்கள் பதிலைப் படித்த பிறகு அந்த எண்ணம் மேலும் வலுவடைகிறது.//

  என் அன்புள்ள அருட்கவிஞர் திரு.சிவகுமாரன் அவர்கள், இந்தக்கதையின் முதல் பாகத்தை மட்டும் படித்துவிட்டு, நான்காம் பாகம் முடிந்ததும் வந்து பின்னூட்டம் கொடுத்திருந்தார். அதுவும் அவர் என்னை அவர் வலைப்பூபக்கம் வரவழைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்பதும் எனக்குப்புரிந்தது. மீதி மூன்று பாகங்களையும் சுத்தமாக அவர் படிக்கவே இல்லை என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. பிறகு நான் அவருக்கு எழுதிய பதிலிலும், கதையை முழுவதும் படித்து விட்டு பின்னூட்டம் கொடுக்கவும் என்று தான் கேட்டுக்கொண்டேன். பிறகு அவரே ஏதோ அவசரப்பட்டு தான் முதல்பாகத்தை மட்டுமே படித்துவிட்டு, தவறுதலாகக் கருத்து கூறிவிட்டதாகவும், அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் என்று சொல்லி எனக்கு தனியே ஈ.மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, அவரின் பின்னூட்டத்தையும் அவரே நீக்கிவிட்டார். அவருக்கு நான் தந்த எனது பதிலையும், பின்னூட்டம் பகுதியிலிருந்து நானும் நீக்கிவிட்டேன். இது தான் உண்மையில் நடந்தது.

  தங்களைப்போன்று கதையை முழுவதுமாகப்படித்து விட்டு பின்னூட்டம் தருபவர்களை, அவர்களின் பின்னூட்டம் Positive ஆக இருந்தாலும் Negative ஆக இருந்தாலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வரவேற்கும் எண்ணம் உள்ளவன் தான் நான் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். In fact நாம் எது எழுதினாலும் just உடனே பாராட்டுபவர்களை விட, குற்றம் குறைகளைச்சுட்டிக்காட்டுபவர்களே, நாம் நம்மையும், நம் எழுத்துக்களையும், மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள உதவுபவர்கள் என்று நினைத்து, எதையுமே நல்ல நேர்கோணத்தில் எடுத்துக் கொள்பவன் தான் நான்.

  //இருந்தாலும் அப்படியே போக மனமும் இல்லை//

  Very Good Sir.

  //ஒரு கதை ஒரு புத்தக இதழில் பரிசு பெற்றிருப்பதாலேயே எல்லோராலும் புகழப்பட வேண்டும் என்றோ ரசிக்கப்பட வேண்டும் என்றோ அவசியம் இல்லை. வெறும் பாராட்டும் புகழ்ச்சியும் மட்டுமே எதிர்பார்த்தால் உண்மை நிலை தெரியாமல் போக வாய்ப்புண்டு. நமக்குப் பிடித்ததை தெரிந்ததை நாம் எழுதுகிறோம். படிப்பவர்களின் எண்ணம் உண்மையாக வந்தால்தான் நம் எழுத்தைப் பற்றிய அசல் கணிப்பு நமக்குத் தெரியும்.//

  I do fully agree with you, Sir.

  //உங்கள் கதைக்கரு நன்றாக இருந்தது.//

  Thank you very much, Sir.

  //மனைவிக்குத் தெரியாமல் ஒரு குழந்தையை கொண்டு வருவதோ சட்ட சிக்கல்கள் இல்லாமல் வளர்ப்பதோ அவ்வளவு எளிதல்ல. அந்த விதத்தில்தான் எங்கோ நெருடல்.//

  I have now noted this point, Sir. இதில் உள்ள சட்ட சிக்கல்கள் பற்றி எனக்கும் இன்னும்கூடஎதுவும் தெரியாது. கைக்குழந்தையுடன் கணவனை இழந்த ஒரு எழைப்பெண்ணின் மனப்போராட்டம், குழந்தை பாக்யம் இதுவரை கிடைக்காமல் உள்ள ஒரு பணக்கார தம்பதியின் ஏக்கங்கள், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்க எண்ணி எடுத்துள்ள அவசர முடிவுகளுடன், கதையைப்பாதியில் முடித்துள்ளேன். பிறகு என்னென்ன நடந்திருக்கும் என்பது, வாசகர்களாகிய நீங்களே யூகித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.

  //உரிமை எடுத்துக்கொண்டு எழுதி விட்டேன்.//

  தாங்கள் வயதிலும், அனுபவத்திலும், எழுத்திலும் ஏன் அனைத்திலும் என்னைவிட பெரியவர், உயர்ந்தவர். உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு, சார்.

  //விரும்பவில்லை என்றால் தெரியப் படுத்தவும். வாழ்த்துக்கள்//

  மிகவும் விரும்புகிறேன், உங்களையும், உங்கள் கருத்துக்களையும். நமஸ்காரங்களுடன், vgk.

  ReplyDelete
 21. நல்ல கதை - நல்ல முடிவும் :) பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 22. உங்கள் பெருந்தன்மைகுப் பாராட்டுகள்.வலையுலகில் எனக்கு அனுபவம் மிகக் குறைவு. ஒரு ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.மனசில் பட்டதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்தும் எண்ணம் அறவே இல்லை.நன்றி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. //ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும் தான்..ஆனால் இழ்ப்பதின் வலி பெறுவதின் சுகத்தை விட அதிகம்..இந்த பிசாத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு அஞ்சலை தினம் விடும் கண்ணீர்த் துளிகளுக்கு ஈடாகுமா?
  ஆக, பணத்தினால் எதுவும் வாங்கலாம், பச்சை மண் முதற்கொண்டு!//

  ஆர்.ஆர்.ஆரின் வார்த்தைகளைக் கடன் பெற்றுக் கொள்கிறேன்.

  ஆனாலும் உங்கள் எழுத்தின் லாவகம் குறைகளை நிவர்த்திபண்ணியதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

  ReplyDelete
 24. நான்கைந்து நாட்களுக்குப் பிறகு இன்று தான் கணினிப் பக்கம் வந்தேன். முதல் வேலையாக அஞ்சலையைத் தான் படித்தேன். என் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைக் கூட இன்னும் நான் படிக்கவில்லை. (குற்றவுணர்ச்சி தான் காரணம்) அவசரக் குடுக்கையாக முன்னரே பின்னூட்டமிட்டு விட்டதால் இனி நான் என்ன பின்னூட்டமிட்டாலும் தங்களுக்கு எரிச்சலைத் தான் தரும். உலக அளவில் போட்டியிட்டு பரிசு பெற்ற கதைக்கு கருத்து கூறும் அளவுக்கு நான் தகுதியானவன் அல்லன். இருந்தாலும் சொல்கிறேன்..கதை வெகு அருமை. அனைத்து தரப்பினரையும் கவரும் கதை. எழுத்தாளர் ரமணிசந்திரன் கதையைப் படித்து முடித்தபின் ஏற்படும் உணர்வைத் தந்தது இந்தக் கதை.

  ReplyDelete
 25. சார் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நான்
  3- நாளாக உங்களுக்கு மெயில் அனுப்ப ட்ரை பண்ணிடு
  இருக்கேன். செண்டிங்க் ஃபெய்லியர்னு வரது. நீங்க என் மெயிலுக்கு சீன்னதா எத்ஹானும் ஒரு மெசேஜ் அனுப்புங்க. நான் அதில் ”ரிப்லை” க்ளிக் பண்ணி மெயில் அனுப்பமுடியும். சிரமத்து சாரி. என் மெயில்
  echumi@gmail.com.

  ReplyDelete
 26. சார் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் மூன்று நாட்களாக உங்களுக்கு மெயில் அனுப்பிண்ட்டே
  இருந்தேன். எல்லாமே செண்டிங்க் மெசேஜ் ஃபெயிலியர்னே வருது. ஏன் தெரியலை. நீங்க என் மெயில் ஐ. டிக்கு சின்னதா ஏதானும் மெசேஜ் அனுப்புங்கோ. அதில் ரிப்ளையில் க்ளிக்பண்ணி உங்கலுக்கு அனுப்பினா வந்துடும். சிரமத்துக்கு சாரி
  echumi@gmail.com

  ReplyDelete
 27. Lakshmi said...
  //சார் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் மூன்று நாட்களாக உங்களுக்கு மெயில் அனுப்பிண்ட்டே
  இருந்தேன். எல்லாமே செண்டிங்க் மெசேஜ் ஃபெயிலியர்னே வருது. ஏன் தெரியலை. நீங்க என் மெயில் ஐ. டிக்கு சின்னதா ஏதானும் மெசேஜ் அனுப்புங்கோ. அதில் ரிப்ளையில் க்ளிக்பண்ணி உங்களுக்கு அனுப்பினா வந்துடும். சிரமத்துக்கு சாரி
  echumi@gmail.com //

  தங்களுக்கு என் தமிழ்ப்புத்தாண்டு நமஸ்காரங்கள்.
  தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள். சிரமமே கிடையாது, சந்தோஷம் மட்டுமே;
  சாரி என்றெல்லாம் தயவுசெய்து சொல்லாதீர்கள்.


  நீங்கள் கொடுத்துள்ள ஈ.மெயில் விலாசம் சரியில்லை என்று வருவதால் என்னாலும் உங்களுக்கு மெயில் கொடுக்க முடியவில்லை.
  கீழ்க்கண்ட ERROR MESSAGE ஐப் படித்துப்பார்க்கவும்.

  The address "echumi@gmail.com." in the "To" field was not recognised. Please make sure that all addresses are properly formed.

  ஏதாவது அவசரம் என்றால் உங்களுடைய தொலைபேசி எண்ணைப் பின்னூட்டமாக அளிக்கவும். நான் தொடர்பு கொண்டு பேசுகிறேன். எந்த நேரத்தில் பேசினால் உங்களுக்கு செளகர்யமாக இருக்கும் என்பதையும் சொல்லவும்.

  என் தொடர்பு எண்: 0 9 4 4 3 7 0 8 1 3 8

  அல்லது 0 4 3 1 - 2 7 0 8 1 3 8

  அன்புடன் vgk

  ReplyDelete
 28. Lakshmi said...
  //உங்களுக்கு மெயில் அனுப்பிண்ட்டே
  இருந்தேன். எல்லாமே செண்டிங்க் மெசேஜ் ஃபெயிலியர்னே வருது. ஏன் தெரியலை//

  என் e-mail ID:

  valambal@gmail.com

  [ V A L A M B A L @ G M A I L . C O M ]

  மீண்டும் ஒருமுறை சரியாக டைப் செய்து முயற்சி செய்து பாருங்கோ.

  அன்புடன் vgk

  ReplyDelete
 29. நல்ல தெளிவான நீரோட்டமான நடை ! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  //me the first?
  My wishes too
  touching one
  nice story sir.congratulations//

  THANK YOU VERY MUCH, Sir.

  தாங்கள் முதன் முதலாக என் வலைப்பூவுக்கு வருகை தந்து (அதுவும் தொடர்ந்து நான்கு முறைகள் வருகை தந்து)வாழ்த்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  மாத்தி யோசித்து வைக்கப்பட்டுள்ள உங்கள் விசித்திரமான பெயரும் அதுவும் குறிப்பாக இனிஷியல்களும், ஓனர்ஷிப்பும், படத்தில் உள்ள எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் போலவே மிகவும் நகைச்சுவையாக உள்ளன. அதற்கு என் பாராட்டுக்கள். அன்புடன் vgk

  ReplyDelete
 31. சி.பி.செந்தில்குமார் said...
  //குட்...//

  மிக்க நன்றி, சார்.

  ReplyDelete
 32. வெங்கட் நாகராஜ் said...
  //நல்ல கதை - நல்ல முடிவும் :) பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.//

  ரொம்ப சந்தோஷம், வெங்கட்.

  ReplyDelete
 33. கே.ஆர்.பி.செந்தில் said...
  //மிக நிறைவாக முடித்து இருக்கிறீர்கள்...

  புதினம் தொகுப்பில் வந்திருக்கும் விசயம் சந்தோசத்தை அளித்தது..

  வாழ்த்துக்கள் ஐயா..//

  மிக்க நன்றி, செந்தில், சார்.

  தேர்தல் நெருக்கடியிலும்கூட, தங்கள் தினசரி பதிவுகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்த தாங்கள், எனக்காக சற்று நேரம் ஒதிக்கி இந்தக்கதையைத் தொடர்ந்து படித்து கருத்துகள் கூறியுள்ளதற்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 34. raji said...
  //"பரிசு பெற்ற 'புதினம்' சிறுகதைகள்" நூலில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 35. ரிஷபன் said...
  //வாழ்த்துகள்..//

  மிகவும் நன்றி, சார்.

  //மழலை இல்லா மனதின் உணர்வுப் போராட்டமும் தியாகம் செய்த தாயின் நிலையும் மனதில் அப்படியே கனமாய் உங்கள் எழுத்தால் இறங்கிவிட்டது.//

  உற்சாகம் என்ற உரமிட்டவர் தாங்கள் அன்றோ!

  //ஊரில் இல்லாததால் மொத்தமும் சேர்த்து படித்தாகி விட்டது இன்று.//

  நீங்கள் டெல்லியிலும், நான் திருச்சியிலும் இருந்தாலும் தான் என்ன, சார்.

  நீங்கள் எப்போதுமே என் நெஞ்சினில் நிறைந்திருப்பவர் தானே, பிறகு எனக்கென்ன கவலை.

  இருப்பினும் உங்களை நேரில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, சார்.

  டெல்லி மீட்டிங் வெற்றிகரமாக முடிந்திருக்கும் என்பது நம் நவரத்னா BHEL மஹாரத்னா BHEL ஆக இருப்பதிலிருந்தே தெரிகிறது. அதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  அன்புடன் [வீ.....ஜீ....] vgk

  ReplyDelete
 36. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
  //சிறப்பான சிறுகதை.//

  மிகவும் சந்தோஷம் மேடம்.

  //அதற்கான அங்கீகாரமும் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.//

  புகழ்பெற்ற பிரபல எழுத்தாளராகிய தங்களின் கருத்துக்களையும், வாழ்த்துக்களையுமே, நான் எனக்குக்கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன், மேடம்.

  மிகவும் பணிவான நன்றிகளுடன் vgk

  ReplyDelete
 37. Ramani said...
  //அருமையான கதை மட்டும் இல்லை
  முடிவும் அருமை. தொடர வாழ்த்துக்கள்//

  தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் உற்சாகத்திற்கு என் அன்பு கலந்த பணிவான நன்றிகள், ஐயா.

  ReplyDelete
 38. இராஜராஜேஸ்வரி said...
  இந்த “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பதாக, ஒருசில வெளியூர் வாசகர்களின் பாராட்டுக்கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன். //

  /எங்களுக்கு மிகவும் நல்லதொரு கதையை வழ்ங்கிய தங்களுக்குப் பாராட்டுக்கள்./

  தங்கள் வலைப்பூவில் பெரும்பாலும் தினமும் அளிக்கப்படும், எவ்வளவோ ஸத்விஷயங்களை கண்டு களிப்பதால் தான், ஏதோ எழுதி உங்களையும் என்னால் சற்றே மகிழ்விக்க முடிகிறது. தங்களின் பாராட்டுக்கு நன்றிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 39. innikku thirumpavum meyil anuppi irukkeen en phone 0251-2602429
  09987755553

  ReplyDelete
 40. இராஜராஜேஸ்வரி said...
  //ஆனாலும்,தான் இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண்டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு, படுத்துத்தூங்கப்போனாள்.//

  /முத்தாய்ப்பான இந்த வரிகள் அனுபவம் மிக்க அருமையான வேத வாக்கியம்.
  மனம் கவர்ந்த வரிகளுக்குப் பாராட்டுகள்./

  மீண்டும் வருகை தந்து ஏதேதோ பெரியபெரிய வார்த்தைகள் உபயோகித்து விட்டீர்கள்.

  [வேத வாக்கியங்களுடன் நாம் எதையுமே ஒப்பிடக்கூடாது - என் முன்னோர்கள் ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக வேதம் படித்தவர்கள் - இதைக்கேட்டால் தாங்க மாட்டார்கள்]

  நான் மட்டும் வேதபடிக்காத மக்காக தடம் மாறி வந்துவிட்டவன்.

  மீண்டும் வருகை தந்ததற்கு மீண்டும் நன்றிகள்.

  ReplyDelete
 41. Chitra said...
  //இருள் அகலுமா? கோழி கூவுமா? பொழுது விடியுமா? எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ........................ அந்த அஞ்சலை.//


  /......அஞ்சலையின் வேதனைகளையும் மன குழப்பங்களையும் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப எத்தனிக்கும் போராட்டங்களையும் அருமையாக இந்த வரிகளில் வெளிப்படுத்தி விட்டீர்கள், மாமா!/

  மிக்க நன்றி, சித்ரா !

  ReplyDelete
 42. Chitra said...
  //‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.//


  /...Super News! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!/

  தாங்கள் சொல்லுவது போலவே, எல்லாமே நமக்கும் மேலேயுள்ள SUPER POWER ஆகிய இறை அருள்தான், சித்ரா. பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 43. thirumathi bs sridhar said...
  //கண் முன்னே தன் குழந்தையிருந்தும்,என் குழந்தை என வெளியில் சொல்லிக்க முடியாதது கொடுமைதான்.//

  ஆமாம் சகோதரியே! அதுபோல கொடுமை யாருக்கும் வரக்கூடாது தான்.

  /உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது /

  //வாழ்த்துகள்.//

  தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்.
  அன்புடன் vgk

  ReplyDelete
 44. middleclassmadhavi said...
  //Vaazhthukkal//

  மிக்க நன்றிகள் !

  ReplyDelete
 45. padma hari nandan said...
  //நல்ல முடிவு"""""""""""வாழ்த்துக்கள்""""""//

  மிக்க நன்றி

  padma hari nandan said...
  //Sir .adutha kadai enna sir...........Comedy Story. ya ???????...........//

  இன்னும் முடிவு செய்யவில்லை.
  அநேகமாக “சுடிதார் வாங்கப்போறேன்” என்ற தலைப்பாக இருக்கலாம்.
  ஓரளவு காமெடியாகவே இருக்கும்.
  தயவுசெய்து ஓரிரு நாட்கள் காத்திருங்கள்.

  ReplyDelete
 46. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும் தான்..ஆனால் இழ்ப்பதின் வலி பெறுவதின் சுகத்தை விட அதிகம்..//

  ஆஹா, அருமையாகவே சொல்லி விட்டீர்கள். எனக்கும் இந்த வரிகள் எழுதும்போது உண்மையில் மிகவும் வலித்தது, நண்பரே !

  //இந்த பிசாத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு அஞ்சலை தினம் விடும் கண்ணீர்த் துளிகளுக்கு ஈடாகுமா?
  ஆக, பணத்தினால் எதுவும் வாங்கலாம், பச்சை மண் முதற்கொண்டு!//

  ஸ்வாமி மன்னித்துவிடுங்கள்! சிவகுரு போன்ற நிலைமையில் உள்ள உங்களுக்கு மூணு என்ன முப்பது கூட பிசாத்து தான்.

  என்னைப்போலவும், என் அஞ்சலையைப்போலவும் உள்ள அன்றாடம் காய்ச்சிகளை சற்றே கீழிறங்கி வந்து பாரும் ஸ்வாமி!

  தினமும் நாங்கள் விடும் கண்ணீர் துளிகளால் எங்கள் வயிறு நிரம்பவாப்போகிறது?

  அடுத்த வேளை ஆகாரத்திற்கு பணம்தானே ஸ்வாமி பிரதானமாக உள்ளது;

  உங்களுக்குத் தெரியாததா என்ன? ஏதாவது சொல்லி கொழக்கட்டைப்பூர்ணத்தை கிளற வைக்கிறீர்களே, இது நியாயமா?

  [ஆமாம் உங்களுக்கும், உங்கள் துணைவியாருக்கும், இந்த வருஷம் பிரமோஷன் DUE என்று கேள்விப்பட்டேனே! என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்]

  இதை இதைத்தானே நீங்க எதிர்பார்த்தீங்க! இப்போது மகிழ்ச்சியா ?

  அன்புடன் vgk

  ReplyDelete
 47. எல் கே said...
  //இன்றைக்கு பணம்தானே பிரதானம். வேறு எதுவும் இல்லையே ?//

  ஆஹா, இதை நண்பர் ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்திக்கு சற்று புரியும்படியாகச்சொல்லுங்கள்.

  அவர் புரிந்தும் புரியாது போல நடிப்பார்.

  அவர் சாமான்யமான ஆள் இல்லை. படா ஆளு; நேக்கு இன்னிக்கு நேத்திக்காப் பழக்கம். ரொம்ப நாளாப்பழக்கம். தான் சிரிக்காமல் பிறரை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன் போன்றவர்.

  //உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்தப்புதிய “கர” வருஷம் மகிழ்ச்சியாக அமையட்டும்.

  ReplyDelete
 48. மாலதி said...
  //நல்ல கதை - நல்ல முடிவும் :) பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.//

  மிக்க நன்றி.

  =========================

  மாதேவி said...
  பாராட்டுகள்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 49. G.M Balasubramaniam said...
  //உங்கள் பெருந்தன்மைகுப் பாராட்டுகள்.வலையுலகில் எனக்கு அனுபவம் மிகக் குறைவு. ஒரு ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.மனசில் பட்டதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்தும் எண்ணம் அறவே இல்லை.நன்றி, வாழ்த்துக்கள்.//

  தங்கள் மறு வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார். நானும் நீங்கள் சொல்லுவது போல ஒரு ஆத்ம திருப்திக்காக மட்டும் தான் எழுதுகிறேன். தங்களுக்கு மனசில் பட்டதை எழுதுங்கள். வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அன்புடன் vgk

  ReplyDelete
 50. சுந்தர்ஜி said...

  //ஆர்.ஆர்.ஆரின் வார்த்தைகளைக் கடன் பெற்றுக் கொள்கிறேன்.//

  ஆர்.ஆர்.ஆர். மிகவும் பெரும் புள்ளி சார். வார்த்தைகளை என்ன, எவ்வளவு ஒரு பெரும் தொகையைக்கூட நீங்கள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம், சார்.

  //ஆனாலும் உங்கள் எழுத்தின் லாவகம் குறைகளை நிவர்த்திபண்ணியதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.//

  இதுபோதும். நம்ம சுந்தர்ஜி சாரே தீர்ப்பு சொல்லியாச்சு; வழக்கையும், பஞ்சாயத்தையும், மரத்தடியையும் காலிசெய்துவிட்டுக் கிளம்புவோமாக!

  அன்புடன் vgk

  ReplyDelete
 51. சிவகுமாரன் said...
  //நான்கைந்து நாட்களுக்குப் பிறகு இன்று தான் கணினிப் பக்கம் வந்தேன். முதல் வேலையாக அஞ்சலையைத் தான் படித்தேன். என் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைக் கூட இன்னும் நான் படிக்கவில்லை. (குற்றவுணர்ச்சி தான் காரணம்) அவசரக் குடுக்கையாக முன்னரே பின்னூட்டமிட்டு விட்டதால் இனி நான் என்ன பின்னூட்டமிட்டாலும் தங்களுக்கு எரிச்சலைத் தான் தரும். உலக அளவில் போட்டியிட்டு பரிசு பெற்ற கதைக்கு கருத்து கூறும் அளவுக்கு நான் தகுதியானவன் அல்லன். இருந்தாலும் சொல்கிறேன்..கதை வெகு அருமை. அனைத்து தரப்பினரையும் கவரும் கதை. எழுத்தாளர் ரமணிசந்திரன் கதையைப் படித்து முடித்தபின் ஏற்படும் உணர்வைத் தந்தது இந்தக் கதை.//

  அருட்கவியாகிய தங்கள் கவிதைகள் மேல் எனக்கு அப்போதும், இப்போதும், எப்போதும் மிகவும் காதல் உண்டு. ரசித்துப்படிப்பதுண்டு.

  உங்களுக்கு என் பெரிய பையன் வயது (அவன் வயது 36) இருக்கலாம் என்று நினைக்கிறேன். சொந்த பையன் மேல் அப்பாவுக்கு எப்போதாவது எரிச்சலோ, கோபமோ, வெறுப்போ ஏற்படுமா என்ன?

  குற்ற உணர்ச்சிகள் ஏதும் வேண்டாம். தொடர்ந்து நாம் நல்ல நண்பர்களாக வலைப்பூவினில் வலம் வருவோம்.

  எனக்கு மிகவும் பிடித்த நல்லதொரு கவிஞரின் பாராட்டுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  [எழுத்தாளர் ரமணிச்சந்திரன் அவர்களின் கதைகள் எதையும் நான் இதுவரை படித்ததில்லையாதலால்
  உங்களின் ஒப்பீட்டையும் என்னால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை]

  All the Best ............ Thank you,
  அன்புடன் vgk

  ReplyDelete
 52. மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை said...
  //நல்ல தெளிவான நீரோட்டமான நடை ! வாழ்த்துக்கள்//

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 53. கதையின் முடிவு நல்ல விதமாக இருந்ததில் சந்தோஷம் சார். பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 54. [வேத வாக்கியங்களுடன் நாம் எதையுமே ஒப்பிடக்கூடாது - என் முன்னோர்கள் ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக வேதம் படித்தவர்கள் - இதைக்கேட்டால் தாங்க மாட்டார்கள்]/
  வேதங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் ஐயா. பகவத் கீதை வேதம் என்று எடுத்துக் கொண்டேன். கீதை வகுப்புகளில் அத்தனை ஸ்லோகங்களின் பொருளையும்,வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசங்களையும் தவறாமல் கேட்டிருக்கிறேன்.
  குந்தி கர்ணனை இழந்தே பஞ்சபாண்டவர்களை இழக்கும் அபாயத்திலிருந்து மீண்ட நிகழ்வு நிழலாட எழுதிவிட்டேன்.
  நம்து எழுதாக் கிளவியாகிய வேதத்தை எதனுடனும் ஒப்பிடக்கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.
  நான் மட்டும் வேதபடிக்காத மக்காக தடம் மாறி வந்துவிட்டவன்.//
  குல விச்சை கல்லாமல் பாகம் பட்டு காலத்திற்கேற்ப வந்திருக்கிறது.

  ReplyDelete
 55. தன் குழந்தை செல்வச் செழிப்பில் வளருவது,அதுவும் தன் கண் எதிரில் கொஞ்சப்பட்டு வளருவது ஒரு இழப்பும் இல்லை ஏழையாகிய அஞ்சலைக்கு.

  ReplyDelete
 56. இராஜராஜேஸ்வரி said...
  [வேத வாக்கியங்களுடன் நாம் எதையுமே ஒப்பிடக்கூடாது - என் முன்னோர்கள் ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக வேதம் படித்தவர்கள் - இதைக்கேட்டால் தாங்க மாட்டார்கள்]/
  வேதங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
  பகவத் கீதை வேதம் என்று எடுத்துக் கொண்டேன். கீதை வகுப்புகளில் அத்தனை ஸ்லோகங்களின் பொருளையும்,வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசங்களையும் தவறாமல் கேட்டிருக்கிறேன்.
  குந்தி கர்ணனை இழந்தே பஞ்சபாண்டவர்களை இழக்கும் அபாயத்திலிருந்து மீண்ட நிகழ்வு நிழலாட எழுதிவிட்டேன். நம்து எழுதாக் கிளவியாகிய வேதத்தை எதனுடனும் ஒப்பிடக்கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. நான் மட்டும் வேதபடிக்காத மக்காக தடம் மாறி வந்துவிட்டவன்.//
  குல விச்சை கல்லாமல் பாகம் பட்டு காலத்திற்கேற்ப வந்திருக்கிறது.

  அன்புள்ள மேடம்,
  பகவத் கீதை, வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசங்கள், வேவ்வேறு கோவில்கள் பற்றிய வரலாறுகள், வெளிநாட்டு விஷயங்கள் என அனைத்திலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட உங்களைப்பார்க்க எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

  //குந்தி கர்ணனை இழந்தே பஞ்சபாண்டவர்களை இழக்கும் அபாயத்திலிருந்து மீண்டாள் என்ற நிகழ்வு நிழலாட எழுதிவிட்டேன்// என்று நீங்கள் கூறிய விஷயம் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  அடேங்கப்பா ! எப்பேர்ப்பட்ட ஒரு அருமையான உதாரணம் இது, இதைக்கொண்டு வந்து இங்கு என் கதையுடன் ஒப்பிட்டு நீங்கள் எழுதியதாகச்சொல்வது என்னையே பிரமிக்கச் செய்தது.

  இது உங்களின் ஆன்மீக அறிவு முதிர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

  வேளுக்குடி கிருஷ்ணன், விசாஹா ஹரி, அவரின் கணவர் ஹரி, அவரின் மாமனார் கிருஷ்ணப்ரேமி போன்றவர்களின் உபன்யாசங்களை, நானும் விடியவிடிய தூக்கம் வராமல், கேஸட் போட்டு கேட்ட நாட்கள் பலவும் உண்டு.

  இப்போது வலைப்பூவில் மூழ்கிவிட்டதால் இதற்கே நேரம் பத்தாமல் உள்ளது.

  எல்லாமே ஒவ்வொரு சீசன் போலிருக்கு.

  வலைப்பூவினுள் புகுந்ததில் என்ன லாபம் என்றால் உங்களைப்போன்ற மிகச்சிறந்த அறிவாற்றல் படைத்தவர்கள் சிலரின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது தான் என்று நான் நிச்சயம் சொல்லுவேன்.

  ஆன்மீக அறிவுபூர்வமான உங்கள் பின்னூட்டத்திற்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள். அன்புடன், vgk

  ReplyDelete
 57. இராஜராஜேஸ்வரி said...
  //தன் குழந்தை செல்வச் செழிப்பில் வளருவது,அதுவும் தன் கண் எதிரில் கொஞ்சப்பட்டு வளருவது ஒரு இழப்பும் இல்லை ஏழையாகிய அஞ்சலைக்கு.//

  தங்களின் இந்த பதிலும் எனக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.

  மீண்டும் வருகைக்கு மீண்டும் நன்றி.

  ReplyDelete
 58. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 59. மிக்க நன்றி வை.கோ.சார். நான் தந்தையை இழந்தவன் . அப்பா என்ற வார்த்தையை கேட்டாலே அழுது விடுவேன். மனம் நெக்குருகி நிற்கிறேன். எனக்கும் என் அப்பாவுக்கும் இப்படித்தான் சிறு சிறு மோதல்கள் வரும். ஆனால் அவை அன்பை மேலும் பலப்படுத்தும். வரும் 20 ம்தேதி என் தந்தையாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாள். இந்த தருணத்தில் நீங்கள் என் அப்பாவாய் தெரிகிறீர்கள். நன்றி கலந்த வணக்கங்களுடன் தங்கள் மூத்த மகன் சிவகுமாரன் (40 வயது)

  ReplyDelete
 60. சிவகுமாரன் said...
  //மிக்க நன்றி வை.கோ.சார். நான் தந்தையை இழந்தவன் . அப்பா என்ற வார்த்தையை கேட்டாலே அழுது விடுவேன். மனம் நெக்குருகி நிற்கிறேன். எனக்கும் என் அப்பாவுக்கும் இப்படித்தான் சிறு சிறு மோதல்கள் வரும். ஆனால் அவை அன்பை மேலும் பலப்படுத்தும். வரும் 20 ம்தேதி என் தந்தையாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாள். இந்த தருணத்தில் நீங்கள் என் அப்பாவாய் தெரிகிறீர்கள். நன்றி கலந்த வணக்கங்களுடன் தங்கள் மூத்த மகன் சிவகுமாரன் (40 வயது)//

  அன்புள்ள சிவகுமாரன்,

  தாங்கள் என் மூத்தபிள்ளை என்று எழுதியிருப்பது என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  உங்களுடன் சேர்த்து நான் தஸரதச்சக்கரவர்த்தி போல ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கணர் என்ற 4 பிள்ளைகளுக்குத் தந்தையாகியுள்ளேன்.
  =======
  என் அப்பா பிறந்தது 1900. காலமானது 1975.
  அப்பா காலமானபோது எனக்கு வயது 25.

  என் அம்மா பிறந்தது 1910. காலமானது 1997.
  அம்மா காலமானபோது எனக்கு வயது 47.

  தினமும் நான் ஒரு 5 நிமிடங்களாவது அவர்களைப்பற்றியும் அவர்கள் பட்ட கஷ்டங்களைப்பற்றியும் நினைக்காத நாளே கிடையாது.

  என்ன செய்வது, நாம் நம் அப்பா, அம்மாவுடன் இருக்க கொடுத்துவைத்தது அவ்வளவு தான்.

  அவர்கள் இருக்கும்போது நமக்கு அவர்கள் அருமை ஓரளவுக்குத்தான் தெரியும்.

  அவர்கள் இல்லாதபோதுதான், அவர்களின் அருமை பெருமைகள் முழுமையாகத்தெரிய வரும்.

  [எல்லாக்குடும்பங்களிலும் சிறுசிறு மோதல்கள், கருத்து வேறுபாடுகள், கோபதாபங்கள் அவ்வப்போது வந்துபோவதும் சகஜம் தான். தலைமுறை இடைவெளிகள் தான் இதற்கெல்லாம் காரணம்.]

  உங்களின் தந்தையின் ஆசியால் நீங்கள் மேலும்மேலும் வாழ்க்கையில் பல வெற்றிகளைப்பெற்று, எல்லா நலங்களும்,வளங்களும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள் என அன்புடன் மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 61. அன்பு வை.கோ சார்! கருத்துக்கு தாமதமாகி விட்டது. நான் டூரில் இருந்தேன்! மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட கதை. இரண்டு முறைப் படித்தேன்.. பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள். இப்படி நிறைய எழுதுங்கள் சார்!

  ReplyDelete
 62. மோகன்ஜி said...
  //அன்பு வை.கோ சார்! கருத்துக்கு தாமதமாகி விட்டது. நான் டூரில் இருந்தேன்! மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட கதை. இரண்டு முறைப் படித்தேன்.. பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள். இப்படி நிறைய எழுதுங்கள் சார்!//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும், மிக்க நன்றிகள். நிறைய எழுத முயற்சிக்கிறேன். அன்புடன் vgk

  ReplyDelete
 63. அஞ்சலை சிறுகதை மனதை நெகிழ வைத்தது. நல்லதொரு சிறுகதை.ஒரு ஏழைத்தாயின் மனப்போராட்டங்களை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!

  ReplyDelete
 64. மனோ சாமிநாதன் said...
  //அஞ்சலை சிறுகதை மனதை நெகிழ வைத்தது. நல்லதொரு சிறுகதை.ஒரு ஏழைத்தாயின் மனப்போராட்டங்களை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!//

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்,மேடம்.

  ReplyDelete
 65. ஒரு தாயின் மனப் போராட்டங்களையும், உணர்வுகளையும் அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள்.

  ஹோட்டலில் பசி தீர்ந்து தூக்கத்தில் சிரிக்கும் தன் குழந்தையின் கன்னக்குழியை ரசிக்கும் அஞ்சலையின் கதாபாத்திரம், தன் குழந்தை பசியை மறந்து மகிழ்ந்திருக்க ஒரு தாய் எதையும் சந்திக்க தயாராவாள் என்பதை சொல்லாமல் சொல்லியது.

  வீட்டில் தன் கணவன் கொண்டு வந்த அதே குழந்தையின் கன்னக்குழி சிரிப்பை மல்லிகா ரசிக்கும்போது, தாய்மையின் ஏக்கமும், அவளின் மகிழ்ச்சியும் ஒரு சேர வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

  உங்களின் ஒவ்வொரு படைப்பும் நேர்த்தியாய் அமைந்து மனதை மகிழ்விக்கிறது VGK சார்.

  அன்புடன்,
  ராணி கிருஷ்ணன்.

  ReplyDelete
 66. தன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம் இந்தக்குழந்தையின் வருகையினால் தொடங்கியுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாகவே உணர்ந்து மகிழ்ந்தார்.

  வசந்தகாலத் தொடக்கத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 67. Rani said...
  //ஒரு தாயின் மனப் போராட்டங்களையும், உணர்வுகளையும் அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள்.

  ஹோட்டலில் பசி தீர்ந்து தூக்கத்தில் சிரிக்கும் தன் குழந்தையின் கன்னக்குழியை ரசிக்கும் அஞ்சலையின் கதாபாத்திரம், தன் குழந்தை பசியை மறந்து மகிழ்ந்திருக்க ஒரு தாய் எதையும் சந்திக்க தயாராவாள் என்பதை சொல்லாமல் சொல்லியது.

  வீட்டில் தன் கணவன் கொண்டு வந்த அதே குழந்தையின் கன்னக்குழி சிரிப்பை மல்லிகா ரசிக்கும்போது, தாய்மையின் ஏக்கமும், அவளின் மகிழ்ச்சியும் ஒரு சேர வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

  உங்களின் ஒவ்வொரு படைப்பும் நேர்த்தியாய் அமைந்து மனதை மகிழ்விக்கிறது VGK சார்.

  அன்புடன்,
  ராணி கிருஷ்ணன்.//

  அன்புள்ள கெளரிலக்ஷ்மி,

  தாங்கள் படித்து ரஸித்து மகிழ்ந்த இடங்களை சுட்டிக் காட்டியுள்ளது, அந்தக்கன்னத்தில் குழி விழும் குழந்தையின் சிரிப்பைப்போலவே வெகு அழகாக உள்ளது.

  மிக்க மகிழ்ச்சி. ;)

  ReplyDelete
 68. இராஜராஜேஸ்வரி said...
  //தன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம் இந்தக்குழந்தையின் வருகையினால் தொடங்கியுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாகவே உணர்ந்து மகிழ்ந்தார்.

  வசந்தகாலத் தொடக்கத்திற்கு வாழ்த்துகள்..//

  அன்பு வருகையும், வசந்தகால வாழ்த்துக்களும் ஆறாவது கைக்குழந்தைக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

  மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 69. அருமையான கதை,மல்லிகா வாழ்வில் வசந்தம்,அஞ்சலையின் வாழ்வில் வெறுமை,ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம் என்பது உலக நியதி..கதையை அருமையாக நகர்ந்தி அசத்தலாக முடித்தமைக்கு பாராட்டுக்கள் பல.ஆறுதல் பரிசிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 70. Asiya Omar said...
  //அருமையான கதை,மல்லிகா வாழ்வில் வசந்தம்,அஞ்சலையின் வாழ்வில் வெறுமை,ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம் என்பது உலக நியதி..கதையை அருமையாக நகர்ந்தி அசத்தலாக முடித்தமைக்கு பாராட்டுக்கள் பல.ஆறுதல் பரிசிற்கு வாழ்த்துக்கள்.//

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.

  [சென்ற ஆண்டு [2011] என்னால் வெளியிடப்பட்ட பல சிறுகதைகளைத் தாங்கள் படிக்க முடியாமல் போய்விட்டது.

  நேரம் கிடைக்கும்போது தினமும் ஒன்றோ அல்லது வாரம் ஒன்று வீதமோ படித்துப்பாருங்கள்.

  அவ்வப்போது இதுபோல கருத்தும் கூறுங்கள்.]

  அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 71. முடிச்சிட்டீங்க அண்ணா..அஞ்சலைக்கும் தினம் மகனை பார்த்த திருப்தி..மல்லிகாவிற்கும் குழந்தை ஏக்கம் தீர்ந்து விட்டது.அஞ்சலையின் தாய் பாசம் அதை வெளியே சொல்ல முடியாமல் அவள் படும் அவஸ்தை,அழகா எழுத்தில வடிச்சிரிக்கீங்க அண்ணா..கதை ஆறுதல் பரிசு பெற்றதிற்கு பாராட்டுக்கள் அண்ணா..!

  ReplyDelete
 72. கதையின் முடிவை ஒரு எதிர்பார்ப்போடு கொண்டு போய் ரொம்ப அருமையா முடிசிட்டீங்க..

  ReplyDelete
 73. அன்புச் சகோதரி Mrs.ராதா ராணி Madam,

  வாருங்கள். வணக்கம்.

  ஒரே மூச்சில் இன்று இந்தக்கதையின் ஆறு பகுதிகளையும் படித்ததோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு பகுதிக்கும் உடனுக்குடன் கருத்துக்கள் கூறி என்னை உற்சாகப்படுத்தியுள்ளது, பதிவுலகிலிருந்து சற்றே விலகி ஓய்வில் உள்ள எனக்கு, மிகவும் சந்தோஷத்தைத் தருவதாக உள்ளது.

  இன்று மற்றொரு பதிவர் என்னுடைய படைப்புகள் பலவற்றையும் படித்து விட்டு, அவற்றில் எங்கள் ஊரான திருச்சியைப் பற்றி நான் எழுதியுள்ள கதைகள், கட்டுரைகள் முதலியனவற்றைப் பற்றி மட்டுமே தனியாக ஆய்வு செய்து ஓர் தனிப் பதிவே வெளியிட்டு சிறப்பித்து உள்ளார். இணைப்பு:

  http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html

  தாங்கள் ஒவ்வொருவரும் தந்துவரும் இதுபோன்ற உற்சாகங்கள் என்னை முழுமூச்சில் வலையுலகில் மீண்டும் வலம் வர வழிவகை செய்துவிடும் என்ற நம்பிக்கையை என்னுள் துளிர்க்க வைக்கிறது.

  இந்த அஞ்சலை போன்ற நிறைய கதைகள் 2011 அக்டோபர் முதல் டிஸம்பர் வரை என் வலைப்பதிவினில் கொடுத்துள்ளேன். நேர அவகாசம் இருக்கும்போது அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து, கருத்துக்கள் கூறினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  VGK

  ReplyDelete
 74. ஒரு தாயின் மனப்போரட்டத்தை மிக அழகாக கூறியிருக்கிறீர்கள். ஆனால் என்ன, பணத்தினால் எதனையும் வாங்கலாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
  யதார்த்தமான கதை. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 75. //இளமதி October 7, 2012 10:48 PM
  ஒரு தாயின் மனப்போரட்டத்தை மிக அழகாக கூறியிருக்கிறீர்கள்.

  ஆனால் என்ன, பணத்தினால் எதனையும் வாங்கலாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

  யதார்த்தமான கதை. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா!//

  அன்பின் இளமதி,

  வாங்க, செளக்யமா நல்லா இருக்கீங்களா?

  //ஆனால் என்ன, பணத்தினால் எதனையும் வாங்கலாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். //

  பணம் இல்லாவிட்டால் இந்தக்காலத்தில் ஒன்றுமே செய்ய முடிவது இல்லை என்பதும் உண்மை தான். பணம் இல்லாதவன் பிணம் போலத்தான் மதிக்கப்படுகிறான் என்பது மிகவும் யதார்த்தம் தான்.

  ஆனால் பணத்தினால் மட்டும் எதனையும் வாங்கி விடலாம் என்று நினைப்பது தவறு, இளமதி.

  நம் எந்தச்செயலிலும் அன்பும் பாசமும் ஈவும் இரக்கமும் தயாள குணமும் சேர்ந்த பின்னனியில் இருக்க வேண்டும். அதுவே என்றும் எப்போதும் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் உதவக்கூடும்.

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  என்றும் அன்புடன்
  VGK

  ReplyDelete
 76. அன்பான அஞ்சலைக்கு அழகான அமுதமான குழந்தையுடன் வறுமையும் ஆட்கொண்டது. முடிவில் குழந்தையும் வறுமையும் தூரம் சென்றது.

  அழகான கதை. அருமையான முடிவு.

  தாங்கள் மேலும் பல சிறுகதைகளையும் தொடர்கதைகளையும்
  படைக்க வேண்டும் ஐயா.
  நன்றி.
  வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வேல் September 23, 2013 at 11:26 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அன்பான அஞ்சலைக்கு அழகான அமுதமான குழந்தையுடன் வறுமையும் ஆட்கொண்டது. முடிவில் குழந்தையும் வறுமையும் தூரம் சென்றது.

   அழகான கதை. அருமையான முடிவு.

   தாங்கள் மேலும் பல சிறுகதைகளையும் தொடர்கதைகளையும்
   படைக்க வேண்டும் ஐயா.

   நன்றி.
   வாழ்த்துகள் ஐயா.//

   தங்களின் அன்பான வருகைக்கும், கதையை அழகாகப் பொறுமையாக ஊன்றிப்படித்து, கருத்துக்கள் கூறி பாராட்டி, வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   இப்போது எழுதும் தொடர் முடிந்த பிறகு, மீண்டும் கதைகள் எழுதலாம் என்று தான் நினைத்துள்ளேன். எதற்கும் ஓர் பிராப்தம் இருக்க வேண்டும். பார்ப்போம். நன்றி.

   Delete
 77. உணர்ச்சிப் போராட்டங்களின் வேதனையை அழகான ஒரு சிறுகதையாகக் கொடுத்துள்ள "வைகோ" வைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  ReplyDelete
 78. முதலில் பாராட்டுக்கள் ஒன்றை இழந்தால் தான ஒன்றை பெற முடியும் ஆனாலும பூரா நாளும் அவ குழந்தை கூட இருக்க முடியுதே....

  ReplyDelete
 79. ‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். //

  வாழ்த்துக்கள்.

  அருமையான கதை. ரொம்ப நாள் நினைவில் இருக்கும் உங்களின் பல கதைகள்.

  BLESSING IN DISGUISE குழந்தையை தத்து கொடுத்தாலும் அதன் கூடவே இருக்க முடிவது அஞ்சலையின் பாக்கியம். நல்லதொரு தாதி கிடைத்தது மல்லிகாவின் பாக்கியம்.

  பிடியுங்கள் பாராட்டுக்களை.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya May 17, 2015 at 10:57 PM

   **‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.**

   //வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி ஜெயா. :)

   //அருமையான கதை. ரொம்ப நாள் நினைவில் இருக்கும் உங்களின் பல கதைகள். //

   சந்தோஷம். எப்படியோ நினைவில் இருந்தால் சரிதான்.:)

   //BLESSING IN DISGUISE குழந்தையை தத்து கொடுத்தாலும் அதன் கூடவே இருக்க முடிவது அஞ்சலையின் பாக்கியம். நல்லதொரு தாதி கிடைத்தது மல்லிகாவின் பாக்கியம். பிடியுங்கள் பாராட்டுக்களை.//

   கப்புன்னு பிடிச்சுக்கிட்டேன், ஜெயா, உங்கள் பாராட்டுக்களை மட்டும். :) மிக்க நன்றி.

   Delete
 80. முடிவு நல்லாதா தொணிச்சி ஆனாலும் பெத்த புள்ளய மத்தவங்களுக்கு கொடுத்திருக்க வேணாம். பணமா முக்கியம்.

  ReplyDelete
 81. முடிவு நல்லா இருக்கு. ஆமா ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெறமுடியும் அஞ்சலைக்கு வாழ்க்கை நடத்த தேவையான பணமும் கிடைத்திருக்கு . அதே சமயம் அவ குழந்தைகூடவே நாளெல்லாம் இருக்கவும் முடிகிறதே. உரிமை கொண்டாட முடியலை என்பது கசப்பான உண்மைதான்.

  ReplyDelete
 82. ஆஹா...பரிசுக்கு வாழ்த்துகள்...சட்ட சிக்கல்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு உணர்வுப்பூர்வமாகப் படித்தால் தன்னுடைய ஒரே பெற்ற மகன் வசதியாக வாழ வேண்டும், தக்க சமயத்தில் தனக்கு உதவி செய்த நல்ல மனிதர்கள் மனம் குளிர வேண்டும் என்று நினைத்த அஞ்சலை வேறு எது குறித்தும் அஞ்சலை...நல்ல பாத்திரப்படைப்பு...துணிச்சலான முடிவு...

  ReplyDelete
 83. //அதை உற்று நோக்கி, 3 லட்சங்கள் என்றால் அது எப்படியிருக்கும்? அதில் 3 என்ற நம்பருக்குப்பிறகு எவ்வளவு பூஜ்யங்கள் போடப்பட்டிருக்கும் என்று அறிய விரும்பினாள்.
  தன் இன்றைய இல்வாழ்க்கைப்போன்று தோன்றிய அந்த பூஜ்யங்களையே திரும்பத்திரும்ப எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலை.//
  வலியுணர்த்தும் வரிகள்!

  ReplyDelete
 84. பரிசு வென்றதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...... முடிவு நிறைவு... குழந்தையை தத்து கொடுத்தாலும் நாள் பூரா குழந்தையுடன் இருக்க முடிகிறதே அஞ்சலையால.. அதுவும் இல்லாம போஷாக்கான உணவுகள் நல்ல துணிமணி எல்லாம் கிடைக்குதே குழந்தைக்கு. குழந்தை அஞ்சலையுடன் வறுமை நிலையிலேயே இருந்திருந்தால் ஒரு வேளை பால் வாங்கி கொடுக்க முடியாமல்தானே இருந்திருக்கும் இப்படி ஒரு முடிவு எடுத்ததால அவளின் பணப்ரச்சினையும் தீர்ந்து குழந்தைக்கும் வசதியான வாழ்க்கை கிடைத்திருப்பது நல்ல விஷயம் தானே...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... July 9, 2016 at 1:20 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பரிசு வென்றதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...... முடிவு நிறைவு... குழந்தையை தத்து கொடுத்தாலும் நாள் பூரா குழந்தையுடன் இருக்க முடிகிறதே அஞ்சலையால.. அதுவும் இல்லாம போஷாக்கான உணவுகள் நல்ல துணிமணி எல்லாம் கிடைக்குதே குழந்தைக்கு. குழந்தை அஞ்சலையுடன் வறுமை நிலையிலேயே இருந்திருந்தால் ஒரு வேளை பால் வாங்கி கொடுக்க முடியாமல்தானே இருந்திருக்கும் இப்படி ஒரு முடிவு எடுத்ததால அவளின் பணப்ரச்சினையும் தீர்ந்து குழந்தைக்கும் வசதியான வாழ்க்கை கிடைத்திருப்பது நல்ல விஷயம் தானே...//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete