என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 27 ஏப்ரல், 2011

சுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 3 of 3] இறுதிப்பகுதிமுன்கதை முடிந்த இடம்:

திடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.

நான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்;  முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்;  தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.

இருந்தும் எனக்கொரு பெரிய குறை.  இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது! என்ற வருத்தம் ஏற்பட்டது.   


=================================
தொடர்ச்சி .................................பகுதி-3  


”இதே கலர்  இதே டிசைனில் கை வைத்ததாக வேண்டும்” என்றேன்.

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அவர்களுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. மல்லாக்காக இருந்த அந்தச் சுடிதாரை குப்புறப்படுக்கப்போட்டாள் அந்த விற்பனைப்பெண்.  கைகள் இரண்டும், சுடிதாரின் பின்புறம் முதுகுப்புறமாக பின் போட்டு ஒட்டப்பட்டிருந்ததை என்னிடம் சுட்டிக் காட்டினாள்.

அச்சச்சோ! அந்தக்கைகளுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி வெட்டி பின்புறமாக ஒட்டி வைத்துள்ளீர்கள்?  ஒருவித அனுதாபத்துடன் வினவினேன் அப்பாவியாக நான்.  

“கைகளைத்தனியே இப்படித்தான் இங்கே வைத்திருப்பார்கள் சார்; அவைகளைத் தனியே வைத்து அவரவர் விருப்பப்படி தைத்துக்கொள்ள வேண்டும்; ஒரு சிலர் கைகள் ஏதும் வேண்டாம், அப்படியே காத்தாட இருக்கட்டும் என்பார்கள்; அதனால் தான் அவற்றைத் தைக்காமல் தனியாக இப்படி வைத்திருக்கிறார்கள்” என்றாள்.

இந்த விளக்கத்தைக்கேட்ட நான் ஒரு வழியாக நிம்மதி அடைந்தேன். அப்படித்தனியே தொங்கிய கைகளும், தோள்பட்டையையொட்டி தைக்கப்பட வேண்டிய இடத்தில் கும்மென்று எக்ஸ்ட்ரா துணிகொடுத்து பஃப் வைத்ததாகவும், கீழே அழகிய கண்ணைக்கவரும் தங்கக்கலரில் பார்டர் கொடுத்கப்பட்டதாகவும், கரும்பச்சை நிறத்தில் ஜம்மென்று இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.  

என் முகம் வெளிப்படுத்திய திருப்தியை உணர்ர்ந்த அந்த விற்பனைப்பெண் , ”விலை ரூபாய் 2400 மட்டுமே, அதிலும் 10% தள்ளுபடி உண்டு, சார்”  என்றாள். 

“இதற்கு மேட்சாக இதே கலரில் கால் குழாயும் (பேண்ட்டும் ) அங்கவஸ்திரமும் ( துப்பட்டாவும் ) தருவீர்கள் அல்லவா?” என்றேன்.

மறுபடியும் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள், “அதே கலரில் வராது சார், யூனிஃபார்ம் மாதிரி போட மாட்டார்கள்” என்றாள்.

“இதற்கு ஜோடி இது தான்” என்று ஒரு வித அழுகமாங்காய் [அழுகலான மாவடு] கலர் போன்ற பழுப்புக் கலரில், ஆனால் மிகவும் நயமான கொசுவலை போன்ற துணியில் துப்பட்டாவும், கால் குழாயும் எடுத்துக் காட்டினாள். உள்புறம் துணி கொடுத்து, டபுள் ஸ்டிச்சிங் செய்து தொளதொள என்று இருந்தது அந்தக் கால்க்குழாய் (பேண்ட்).   


எனக்கு மட்டும் அதே கரும்பச்சைக் கலரில் மேட்ச்சாக இல்லாமல் மங்கிய கலரில் உள்ளதே என்று ஒரு பெரும் குறை மனதுக்குள் இருந்தது. 

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் இருந்த போது, அவற்றைப் பேக் செய்து கொண்டே, “ஒன்று போதுமா சார், வேறு ஏதாவது பார்க்கிறீங்களா” என்றாள்.

கால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ என்ற விசாரத்துடன், பணம் ரூ. 2160 மட்டும் செலுத்தி விட்டு, பார்ஸலை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து புறப்பட்டேன். 


அந்த பரபரப்பான பஜாரில், வழிநெடுகிலும் பல இளம் வயதுப் பெண்கள் சுடிதாருடன் தென்பட்டனர். நான் அந்தத் தெருவின் ஒரு ஓரமாக நின்றபடி, வாழ்க்கையில் முதன் முதலாக, அந்த இளம் வயது பெண்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்று நோட்டமிடலானேன். அவர்களைப்பார்த்துக்கொண்டே என் மனதினுள் சுடிதார்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தலானேன்.

அவர்களில் பாதிப் பேர் முக்கால் சைஸாக தொடை வரையிலும், மீதிப்பேர் முழுவதும் மறைப்பது போல முழங்காலுக்குக்கீழ் சற்றே இறக்கமாக (ஃபுல் ஸ்லீவ்ஸ்) சட்டையும் அணிந்திருந்தனர். 

அவர்களில் முக்கால் வாசிப்பேர் சுடிதார் ஒரு கலரிலும், துப்பட்டாவும், கால் குழாயும்வேறு கலரிலும் அணிந்திருந்தனர்.

மீதி கால்வாசிப் பேர்கள், எல்லாம் ஒரே கலரில் மேட்ச் ஆக அணிந்திருந்தனர்.  

இந்த டீன் ஏஜ் பெண்களையெல்லாம் விதவிதமான சைஸ்களிலும், கலர்களிலும், இன்று மட்டும் லுக் விட்ட எனக்கு மீண்டும் மனதில் ஓர் சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது.  

தவறாக நினைத்து விடாதீர்கள்.  நான் வாங்கி வந்துள்ள சுடிதார் செட்டில், சுடிதார் ஒருகலரும், கால்க்குழாய் வேறு கலருமாக இருப்பதாலும், அதுவும் ஆஃப் ஸ்லீவ்ஸுடன் தொடைவரையுள்ள மாடலாக இருப்பதாலும், அது இன்றைய நவ நாகரீகப் பெண்கள்  உபயோகிக்கக் கூடிய பேஷன் தானா, என்பது தான் என் சஞ்சலமும், சந்தேகமும்.   

இதுபோல சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் சுடிதார் அணிந்த பல பெண்களை, பலவடிவங்களிலும், பல்வேறு ஆடைகளுடனும் கண்குளிர தரிஸித்து வந்த நான், இனிமேல் சுடிதார் அணிந்த எந்தப் பெண்ணையும் பார்த்து மனதைச் சஞ்சலப் படுத்திக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன், மலைவாசல் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து என் வீடு நோக்கிப் புறப்பட்டேன். 

ஆட்டோவில் வரும்போதும் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின.  பெரிய பையன்கள் கல்யாணத்திற்கு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புடவைகள், பல்வேறு கலர்கள், டிசைன்கள், விலைகள் என அள்ளி வந்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அளித்து மகிழ்வித்த அனுபவம் எனக்கு உண்டு.   இன்று முதன்முதலாக ஒரு சுடிதார் எடுக்கப்போய் அதிலும் பல புதிய அனுபவங்களையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதிலும் ஒரு மகிழ்ச்சியே ஏற்பட்டது என்றாலும், மனதில் ஏதோ ஒரு சின்ன விசாரம் இருந்து வந்தது.

புடவையில் கூட எனக்கு என்று ஒருசில தனி அபிப்ராயங்கள் உண்டு. அதாவது ஒருசில புடவைகள் ஒருசிலர் கட்டிக்கொண்டால் மட்டுமே மிக அழகாக இருப்பதுபோல எனக்குத் தோன்றும். அதுபோல ஒருசிலர் எந்த ஒரு புடவை கட்டிக்கொண்டாலும் நல்ல அழகாகவே தென்படுகிறார்களே என்றும் நினைத்துக்கொள்வதுண்டு.   ஒருசில புடவைகள் புடவைக்கடை வாசலில் உள்ள பொம்மைக்கு கட்டினால் மட்டுமே ஆடாமல், அசங்காமல், கசங்காமல் வெகு அழகாக இருப்பதுபோல அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.    

இவ்வாறான பல நினைவுகளுடன் வந்த என்னை, ஆட்டோக்காரர் என் வீட்டு வாசலில் அடித்த சடர்ன் ப்ரேக், நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது. ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு, நான் என் வீட்டை அடைந்தேன்.    

வழக்கம்போலவே, எங்கே போனீர்கள், என்ன வாங்கி வந்தீர்கள் என எதுவும் கேட்காவிட்டாலும், நானே சுடிதாரைப்பிரித்து என் மனைவியிடம் நீட்டினேன்.  வாங்கிப்பார்த்தவள், அதிசயமாக ஒரு சின்ன புன்னகை புரிந்தாள். 

“நீ ஒருமுறை இந்தச்சுடிதாரை அணிந்து பார்த்து, சைஸ் ஓரளவுக்கு அவளுக்கு சரியாக இருக்குமா என்று சொல்கிறாயா?” என்று கேட்டு என்னுடைய வெகுநாள் ஆவலை, மெதுவாக வெளிப்படுத்தலானேன்.

“எல்லாம் அந்தப்பொண்ணுக்கு சரியாகத்தான் இருக்கும்; பேசாமல் கசங்காமல் கொள்ளாமல், அப்படியே அந்த அட்டைப்பெட்டியில் போட்டு பத்திரமாக வையுங்கோ” என்று சொல்லிவிட்டு, ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரில் கையைவிட்டு, இட்லிமாவை தன் விரல்களால் எடுத்து பதம்பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

அடிக்கடி ஏற்பட்டு வரும் மின் தடை இப்போது ஏற்படாமல், அந்த கிரைண்டர் தொடர்ந்து ஓடியதில் எனக்கு சற்றே எரிச்சல் ஏற்பட்டது.

சுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத்திரும்பி விட்டேன்.

ஒரு வழியாக வெற்றிலை பாக்கு, பழங்கள், புஷ்பங்கள்,  சாக்லேட்டுகள், மற்றும் ஸ்வீட் பாக்கெட்களுடன், நான் வெகு கஷ்டப்பட்டு வாங்கி வந்திருந்த சுடிதாரை, என் மனைவி கையால் என் வருங்கால மருமகளுக்கு வழங்க  ஏற்பாடு செய்தேன் நான்.   அந்தப் பெண்ணிடம், அவற்றைச் சந்தோஷமாகக் கொடுத்தாள் என் மனைவி.  

கலரோ, டிசைனோ, சைஸோ  சரியில்லாவிட்டால் உடனே 2 நாட்களுக்குள் கடையில் கொடுத்து விட்டு வேறு ஒன்று மாற்றி வந்து விடலாம் என்றோம் அந்தப் பெண்ணிடம். ஆனால் அவள் இதுவே நன்றாக இருப்பதாகச் சொல்லி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள். பெண் பார்க்கும் படலம் முடிந்து நிச்சயதார்த்தம் நடைபெற நாள் குறித்துள்ள இடைக்காலத்தில்,  அவள் இன்று இருக்கும்  நிலைமையில் வேறு என்னதான், எங்களிடம், தைர்யமாகச் சொல்லிவிட முடியும் என்று என் மனதினுள் நினைத்துக் கொண்டேன்.

தனியாகத் தொங்கிக்கொண்டிருந்த கைகள் இரண்டையும் அழகாகத் தைத்து, அதை அப்படியே அணிந்து கொண்டு வருங்கால மாமியாரிடம் காட்டிவிட்டு, ”தனது ஸ்நேகிதிகள் எல்லோருமே இந்த டிரஸ் ரொம்பவும் சூப்பராக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார்கள்” என்றும் கூறி, நன்றி கலந்த நாணத்துடன், பிறந்த நாள் அன்று எங்களை நமஸ்கரித்துச் சென்றாள், அந்தப் பெண்.

அவள் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடம் என் மூன்றாவது மகனிடமிருந்து எனக்குத் தொலைபேசியில் ஒரு அழைப்பு.

“நீ வாங்கிக் கொடுத்துள்ள சுடிதார் அவளுக்கு மிகவும் நன்றாக இருக்குப்பா. சூப்பர் செலக்‌ஷன், ரொம்பவும் தாங்ஸ்ப்பா” என்றான்.   

திருச்சியிலிருந்து 400 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவன் எப்படி அதற்குள் இந்த சுடிதாரைப் பார்த்தான்? என்று எனக்குள் ஒரே வியப்பு.  அவனிடமே  நான் இதைப்பற்றி அப்பாவித்தனமாகக் கேட்டு விட்டேன்.

“மெயிலை ஓபன் செய்து பார் தெரியும்” என்றான்.  டிஜிடல் கேமராவில் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் எங்கள் வருங்கால மருமகள். 

எது எப்படியோ, நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. 

-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-

[ இந்தச்சிறுகதை 25.02.2009   தேதியிட்ட ”தேவி ”
 தமிழ் வார இதழில் சற்றே சுருக்கப்பட்டு வெளியிடப்பட்டது ]

87 கருத்துகள்:

 1. தங்குதடைகளற்ற ஆற்று நீரோட்டம்போல
  தெளிவான நடைமட்டும் அல்ல கதையும் கூட
  நல்ல கதையைப் படித்த நிறைவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. சுடிதார் வாங்கிவந்த அனுபவத்தை மட்டுமே ஒரு இடுகையாய் எழுதும் பேரெழுச்சியும் தைரியமும் கொண்ட நபர் நீங்கள் மட்டும்தான் என்று பி.பி.சி. இன்று தெரிவித்தது.

  பதிலளிநீக்கு
 3. சூப்பர் போங்க!!!!! உங்க மருமகள் கொடுத்து வச்சவுங்க.

  பதிலளிநீக்கு
 4. பாத்துப்பாத்து ட்ரெஸெல்லாம் எடுத்துக்கொடுக்கும்
  இந்த அன்பு என்றும் நிலைத்து இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 5. நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.//
  We also மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறம். மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 6. ”தனது ஸ்நேகிதிகள் எல்லோருமே இந்த டிரஸ் ரொம்பவும் சூப்பராக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார்கள்” என்றும் கூறி, நன்றி கலந்த நாணத்துடன், பிறந்த நாள் அன்று எங்களை நமஸ்கரித்துச் சென்றாள், அந்தப் பெண்.//
  Happy Birthday wishes.

  பதிலளிநீக்கு
 7. //சுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத்திரும்பி விட்டேன்///

  ஹா ஹா ஹா ஹா சின்ன சின்ன ஆசைகளில் இதுவும் ஒன்று.....

  பதிலளிநீக்கு
 8. சுடிதார் ஒண்ணு வாங்கணும்.. கூட வரேளா..

  பதிலளிநீக்கு
 9. கதையில் ஒரு நல்ல விசயம் புரிந்தது. பெரியோர் மனம் அறிந்து நடத்தல். இந்த காலத்துப் பெண்களுக்கு தேவையானது.இது கதையா? அனுபவமா?

  பதிலளிநீக்கு
 10. சுடிதார் வாங்கிய அனுபவம்/கதை அருமை. ஒவ்வொரு விஷயத்தினையும் கதையாக ஆக்குவதில் உங்களுக்கு இருக்கும் திறமை அசத்த வைக்கிறது. தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
 11. I compared the story with my own experience when I, who always wears only sarees when going to work, was asked to attend a training program with chudis! I sought the help of the salespersons since having no daughters, I had to experience in the field!
  Thanks for sharing this nice story!
  Sorry for english comment - some problem in my pc!

  பதிலளிநீக்கு
 12. கடைசியில் சுடிதர் ரிஜெக்ட் ஆகிவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு எனுக்குள்ளும் இருந்தது.

  இந்த மாதிரியான ரிஸ்க் நம்மால் முடியாது என்று தீர்க்கமாக முடிவு செய்து விட்டேன். பல நாட்களுக்குப்பிறகு லயித்துப் படித்த சிறுகதை.

  பதிலளிநீக்கு
 13. வைகோ சார், நான் ஒன்று எழுத‌ நினைத்து, கீ போர்டைத் த‌ட்டினால், வேறு என்ன‌வோ ப‌திவாக வ‌ந்து நிற்கும். உங்க‌ளுக்கு ம‌ட்டும் எப்ப‌டி எண்ணுவ‌தெல்லாம் எழுத்தாய்? நடை அபார‌ம். சுரிதார் வாங்கும் சாக்கில் நல்லா க‌ல‌ர் பார்த்திருக்கிறீர்க‌ள். (ம‌ணைவிக்குத் தெரியாம‌ல் ப‌டிக்க‌வும்)

  பதிலளிநீக்கு
 14. இரண்டாவது பகுதியில் உங்கள் மருமகள் அழகான பெண் என்று புரிந்துவிட்டது.

  முதன் முதலில் சுடிதார் எடுக்கப்போகும்,அதுவும் ஒரு ஆணுக்கான அனுபவத்தை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.மிக ரசித்தேன்.

  //திருச்சியிலிருந்து 400 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவன் எப்படி அதற்குள் இந்த சுடிதாரைப் பார்த்தான்? என்று எனக்குள் ஒரே வியப்பு//
  that is love

  பதிலளிநீக்கு
 15. சுடிதார் வாங்கிய அனுபவத்தை அழகாக வெளியிட்டிருக்கிறீர்கள். நாட்டுப்பெண் கொடுத்து வைத்தவர்.

  மாமியார், மாமனார் வருகை தந்துள்ளதால் அரட்டையடித்து கொண்டிருந்ததில் வலைப்பக்கம் வர முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 16. Ramani said...
  //தங்குதடைகளற்ற ஆற்று நீரோட்டம்போல
  தெளிவான நடைமட்டும் அல்ல கதையும் கூட
  நல்ல கதையைப் படித்த நிறைவு
  தொடர வாழ்த்துக்கள்//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.
  தங்கள் பின்னூட்டமும் எனக்கு நிறைவாகவே உள்ளது, ரமணி சார்.

  பதிலளிநீக்கு
 17. சுந்தர்ஜி said...
  //சுடிதார் வாங்கிவந்த அனுபவத்தை மட்டுமே ஒரு இடுகையாய் எழுதும் பேரெழுச்சியும் தைரியமும் கொண்ட நபர் நீங்கள் மட்டும்தான் என்று பி.பி.சி. இன்று தெரிவித்தது.//

  ஆஹா, ஒரேயடியாக என்னை நீங்கள் இப்படிப்புகழ்வது எனக்கு மிகவும் பயமாக உள்ளது, சார்.

  ஏதோ எனக்கு ஏற்பட்ட 80% உண்மையான ஒருசில அனுபவங்களை, (சமையலுக்கு கருவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, பெருங்காயம் முதலியன சேர்ப்பதுபோல) சற்றே 20% நகைச்சுவை கலந்து எழுதியுள்ளேன். அவ்வளவு தான் சார்.

  பதிலளிநீக்கு
 18. துளசி கோபால் said...
  //சூப்பர் போங்க!!!!! உங்க மருமகள் கொடுத்து வச்சவுங்க.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 19. Lakshmi said...
  //பாத்துப்பாத்து ட்ரெஸெல்லாம் எடுத்துக்கொடுக்கும்
  இந்த அன்பு என்றும் நிலைத்து இருக்கட்டும்.//

  திருமணம் ஆகிவிட்டதால் பாத்துப்பாத்து ட்ரெஸ் எடுப்பதெல்லாம் இனி அவர்கள் பாடு. நம் பக்க அன்பு என்றும் நிலைத்திருக்கும்.

  வருகைக்கும், அறிவுரைக்கும் நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 20. இராஜராஜேஸ்வரி said...
  //நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.//
  We also மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறம். மகிழ்ச்சி
  April 27, 2011 5:52 AM

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிகள், மேடம்.

  இராஜராஜேஸ்வரி said...
  //”தனது ஸ்நேகிதிகள் எல்லோருமே இந்த டிரஸ் ரொம்பவும் சூப்பராக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார்கள்” என்றும் கூறி, நன்றி கலந்த நாணத்துடன், பிறந்த நாள் அன்று எங்களை நமஸ்கரித்துச் சென்றாள், அந்தப் பெண்.//
  Happy Birthday wishes.

  Thank you very much Madam.

  பதிலளிநீக்கு
 21. MANO நாஞ்சில் மனோ said...
  //சுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத்திரும்பி விட்டேன்///

  ஹா ஹா ஹா ஹா சின்ன சின்ன ஆசைகளில் இதுவும் ஒன்று.....

  ஆமாம்,ஐயா. சின்ன சின்ன(ஆனால் நிறைவேறாத)
  ஆசைகள் தான்.

  பதிலளிநீக்கு
 22. ரிஷபன் said...
  //சுடிதார் ஒண்ணு வாங்கணும்.. கூட வரேளா..//

  வேணாம் சார். நீங்க தனியாப்போனீங்கன்னா இதைவிட சூப்பரான அனுபவப்பதிவு எங்களுக்குக் கிடைக்கக்கூடும்.

  வருகைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 23. சாகம்பரி said...
  //கதையில் ஒரு நல்ல விசயம் புரிந்தது. பெரியோர் மனம் அறிந்து நடத்தல். இந்த காலத்துப் பெண்களுக்கு தேவையானது.இது கதையா? அனுபவமா?//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  80% அனுபவம் + 20% கற்பனை சேர்ந்த கதை.

  பதிலளிநீக்கு
 24. வெங்கட் நாகராஜ் said...
  //சுடிதார் வாங்கிய அனுபவம்/கதை அருமை. ஒவ்வொரு விஷயத்தினையும் கதையாக ஆக்குவதில் உங்களுக்கு இருக்கும் திறமை அசத்த வைக்கிறது. தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி, வெங்கட்.

  பதிலளிநீக்கு
 25. middleclassmadhavi said...
  //I compared the story with my own experience when I, who always wears only sarees when going to work, was asked to attend a training program with chudis! I sought the help of the salespersons since having no daughters, I had to experience in the field!
  Thanks for sharing this nice story!
  Sorry for english comment - some problem in my pc!//

  தாங்கள் தான் என்னைப்போலவே சுடிதார் பற்றிய போதிய அனுபவங்கள் இல்லாமல், சுடிதார் அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு, பிறர் உதவியுடன் சூழ்நிலையை சமாளித்துள்ள அனுபவித்ததனால்,என் நிலைமையை மிக நன்றாகப்புரிந்து கொண்டு எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 26. Since my pc is out of order, I am not able to read enjoy and make comments. I will read all the postings in one go and make my views known shortly.

  பதிலளிநீக்கு
 27. VENKAT said...
  //கடைசியில் சுடிதார் ரிஜெக்ட் ஆகிவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு எனக்குள்ளும் இருந்தது.//

  என்னைப்போலவே தாங்களும் உணர்ந்துள்ளீர்கள்.

  //இந்த மாதிரியான ரிஸ்க் நம்மால் முடியாது என்று தீர்க்கமாக முடிவு செய்து விட்டேன்.//

  நானும் பல தடவைகள் ஒதுங்க நினைத்தும் வேறு வழியில்லாமல், ரிஸ்க் எடுக்க வேண்டியதாகப் போகிறது, சார்.

  //பல நாட்களுக்குப்பிறகு லயித்துப் படித்த சிறுகதை.//

  தங்களின் முதல் வருகையும், கருத்துக்களும், பல நாட்களுக்குப்பிறகு லயித்துப்படித்த சிறுகதை என்ற பாராட்டும் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
 28. vasan said...
  //வைகோ சார், நான் ஒன்று எழுத‌ நினைத்து, கீ போர்டைத் த‌ட்டினால், வேறு என்ன‌வோ ப‌திவாக வ‌ந்து நிற்கும்.//

  இது உங்கள் தன்னடகத்தைக்காட்டுகிறது. நீங்கள் எது எழுதினாலும் நாட்டுநலனே குறியாக எழுதுகிறீர்கள். எனக்கு அதுபோல அரசியல் ஈடுபாடு கொண்ட எழுத்துக்கள் சுட்டுப்போட்டாலும் வராது. தங்கள் அரசியல் கட்டுரைகளுக்கு பின்னூட்டம் கொடுக்கவே மிகவும் தயங்குபவன் நான்.

  என்னைப்போல சுடிதார் பற்றியும், சுண்ணாம்பு பற்றியும் வெட்டியாக ஏதும் தாங்கள் எழுதுவதில்லையே!

  என்னைப்பொருத்தவரை உங்கள் எழுத்துக்களே சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், மிகவும் பயனுள்ள எழுத்துக்களாகும்.

  //உங்க‌ளுக்கு ம‌ட்டும் எப்ப‌டி எண்ணுவ‌தெல்லாம் எழுத்தாய்? நடை அபார‌ம்.//

  ஏதோ உங்களைப்போன்ற ஒருசிலர் அடிக்கடி இவ்வாறு கூறுவதால், இறைவன் அருளால் நான் எண்ணுவதை என் எழுத்தில் கொண்டுவர இயலுகிறது என்று நம்புகிறேன்.

  //சுரிதார் வாங்கும் சாக்கில் நல்லா க‌ல‌ர் பார்த்திருக்கிறீர்க‌ள்.//

  ஆமாம். ஆமாம். நிறைய கலர்களில் சுடிதார் பார்க்க முடிந்தது.

  //(ம‌னைவிக்குத் தெரியாம‌ல் ப‌டிக்க‌வும்)//
  எங்களுக்குள் ஒளிவுமறைவே கிடையாது. அவளுக்குத்தெரியாமல் எதுவும் நான் செய்ய விரும்ப மாட்டேன். இருப்பினும் நீங்களே சொல்லி விட்டதால், ஓ.கே. சார்.

  பதிலளிநீக்கு
 29. thirumathi bs sridhar said...
  இரண்டாவது பகுதியில் உங்கள் மருமகள் அழகான பெண் என்று புரிந்துவிட்டது.

  முதன் முதலில் சுடிதார் எடுக்கப்போகும்,அதுவும் ஒரு ஆணுக்கான அனுபவத்தை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.மிக ரசித்தேன்.

  //திருச்சியிலிருந்து 400 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவன் எப்படி அதற்குள் இந்த சுடிதாரைப் பார்த்தான்? என்று எனக்குள் ஒரே வியப்பு//
  that is love


  உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 30. கோவை2தில்லி said...
  //சுடிதார் வாங்கிய அனுபவத்தை அழகாக வெளியிட்டிருக்கிறீர்கள். நாட்டுப்பெண் கொடுத்து வைத்தவர்.

  மாமியார், மாமனார் வருகை தந்துள்ளதால் அரட்டையடித்து கொண்டிருந்ததில் வலைப்பக்கம் வர முடியவில்லை.//

  உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  [தாமதமான வருகைக்கான காரணம் புரிந்து கொண்டேன், எங்க ஊரிலிருந்து வந்துள்ளவர்களை நன்றாக கவனியுங்கள் - அது தான் முக்கியம்]

  பதிலளிநீக்கு
 31. மாதேவி said...
  //சூப்பர். மகிழ்ச்சி.//

  மிக்க நன்றி, மாதேவி, மேடம்.

  பதிலளிநீக்கு
 32. G.M Balasubramaniam said...
  //Since my pc is out of order, I am not able to read enjoy and make comments. I will read all the postings in one go and make my views known shortly.//

  I understood your position, Sir.
  You may take your own time for offering your comments. அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 33. நல்ல அனுபவம் உங்களுக்கு,அருமையான பகிர்வு எங்களுக்கு.மகன், மருமகளுக்கு வாழ்த்துக்கள்.மிக நல்ல குடும்பம் :).அடுத்து நிச்சயம் தங்கள் மனைவிக்கு சுடிதார் வாங்கி கொடுத்து ஒரு போட்டோ எடுத்து மொபைலில் வைக்க வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 34. asiya omar said...
  //நல்ல அனுபவம் உங்களுக்கு,அருமையான பகிர்வு எங்களுக்கு.மகன், மருமகளுக்கு வாழ்த்துக்கள்.மிக நல்ல குடும்பம் :).அடுத்து நிச்சயம் தங்கள் மனைவிக்கு சுடிதார் வாங்கி கொடுத்து ஒரு போட்டோ எடுத்து மொபைலில் வைக்க வாழ்த்துக்கள் சார்.//


  உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 35. அருமையான நடை..அற்புதம்...
  முப்பது நாளில் சுடிதார் வாங்குவது எப்படி என்று புஸ்தகமே போடலாம்..போங்க...

  பதிலளிநீக்கு
 36. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //அருமையான நடை..அற்புதம்...//

  ஆஹா, சுடிதாருடன் கூடிய நடையல்லவா அதனால் தான் அற்புதமோ....?

  //முப்பது நாளில் சுடிதார் வாங்குவது எப்படி என்று புஸ்தகமே போடலாம்..போங்க...//

  முப்பது நாளா? ரொம்ப ஜாஸ்தி, சார்.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 37. maatruppennukku chudithaar vaangith thantha maamanaar avarkaL vaazhga!

  ennidamum idhe combination colour la oru chudidhaar ondru ulladhu.andha combination azhagaga irukkum.adhuvum embroidary irunthaal ketkave vendam.

  superb narration!

  பதிலளிநீக்கு
 38. raji said...
  //maatruppennukku chudithaar vaangith thantha maamanaar avarkaL vaazhga!//

  A detailed mail is sent to you, separately.

  //ennidamum idhe combination colour la oru chudidhaar ondru ulladhu.andha combination azhagaga irukkum.adhuvum embroidary irunthaal ketkave vendam.//

  நான் ஆசையாக வாங்கிவந்த அதே கலர், டிசைன் காம்பினேஷனில், உங்களிடம் சுடிதார் செட் ஒன்று இருப்பதாகச்சொல்வதும், அது அழகாகவே இருக்கும் என்று சொல்வதும், அதில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தால் இன்னும் கேட்கவே வேண்டாம் என்று சொல்வதும் எனக்கு மேலும் அங்கீகாரம் கொடுத்த ஒரு திருப்தியை ஏற்படுத்துகிறது.
  மிகவும் சந்தோஷம்.

  //superb narration!//

  நீண்ட நாட்களாக குடிநீர் கிடைக்காமல் வரண்டு போன தொண்டைக்கு,

  பானகம் + நீர்மோர் + நல்ல குடிநீர்
  மூன்றும் அடுத்தடுத்து அளித்தது போல உள்ளது.

  நெஞ்சார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 39. ஒரு வாரம் வலைப்பக்கம் வரமுடியவில்லை. முழுவதையும் படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன் .
  --- சூடு வாங்கிய பூனை

  பதிலளிநீக்கு
 40. சுடிதார் வாங்கிய அனுபவம் சுவையா இருந்தது.. கொடுத்துவெச்ச மருமகள்.

  பதிலளிநீக்கு
 41. சிவகுமாரன் said...
  //ஒரு வாரம் வலைப்பக்கம் வரமுடியவில்லை. முழுவதையும் படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்.//

  ஒண்ணும் அவசரமில்லை சார். நீங்கள் எல்லாம் உத்யோகத்திற்கு செல்பவர்கள். ஆபீஸிலும், வீட்டிலும் நிறைய வேலைகள் இருக்கும்.

  ஓய்வாக வீட்டில் உள்ள எனக்கே பலவித உடல் உபாதைகளால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன்பு உட்கார முடிவதில்லை.

  Please take your own time, to read.

  I don't mind, even if there is no comments from you, Sir.

  Now-a-days I am also not able to give comments to all, then & there.

  Have a very Nice Day & Be Happy.

  பதிலளிநீக்கு
 42. அமைதிச்சாரல் said...
  //சுடிதார் வாங்கிய அனுபவம் சுவையா இருந்தது.. கொடுத்துவெச்ச மருமகள்.//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பெண் இல்லாக்குறைதீர, லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி போல முப்பெரும் தேவிகளாக, மிகச்சிறந்த மூன்று மருமகள்களைப்பெற்றுள்ள நாங்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்களே, மேடம்.

  பதிலளிநீக்கு
 43. நல்ல அனுபவம் உங்களுக்கு,அருமையான பகிர்வு கடைசியில் சுடிதர் ரிஜெக்ட் ஆகிவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு அருமையான நடை..அற்புதம்...

  பதிலளிநீக்கு
 44. கால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ என்ற விசாரத்துடன்,/// இதைப் படித்தவுடன் அடக்கமுடியாமல் சிரித்தேன் கோபால் சார்..:))

  பதிலளிநீக்கு
 45. போளூர் தயாநிதி said...
  //நல்ல அனுபவம் உங்களுக்கு,அருமையான பகிர்வு கடைசியில் சுடிதர் ரிஜெக்ட் ஆகிவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு அருமையான நடை..அற்புதம்.//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுகும் மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 46. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //கால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ என்ற விசாரத்துடன்,/// இதைப் படித்தவுடன் அடக்கமுடியாமல் சிரித்தேன் கோபால் சார்..:))

  முதன்முதலாக வருகை தந்துள்ள தங்களை வருக! வருக!! வருக!!! என இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 47. சுடிதார் வாங்கிய அனுபவம் அருமை! கதை அதையும்விட சிறப்பு! ' கால் குழாய், அங்கவஸ்திரம், பானுமதி பைஜாமா' போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் சிரிப்பை வரவழைத்தது! ‌

  பதிலளிநீக்கு
 48. மனோ சாமிநாதன் said...
  //சுடிதார் வாங்கிய அனுபவம் அருமை! கதை அதையும்விட சிறப்பு! ' கால் குழாய், அங்கவஸ்திரம், பானுமதி பைஜாமா' போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் சிரிப்பை வரவழைத்தது! ‌//

  வாங்க மேடம். வணக்கம். தாங்கள் வந்து பின்னூட்டம் அளித்து சிறப்பித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 49. எப்பொழுதோ படித்து முடித்துவிட்டேன். இப்பதான் கமென்ட் போடறேன் அதுக்கு ஒரு மன்னிப்பு.

  பொதுவாக உடை விஷயத்தில் பெண்களை திருப்தி செய்வது கடினம். ஆனால் இதுவரை நான் எடுதுகொடுத்த என்ற உடையும் நல்லா இல்லை என்று தங்கமணி சொல்லவில்லை.

  கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் ..

  பதிலளிநீக்கு
 50. எல் கே said...
  //எப்பொழுதோ படித்து முடித்துவிட்டேன். இப்பதான் கமென்ட் போடறேன் அதுக்கு ஒரு மன்னிப்பு.//

  பல்வேறு அன்றாட அவசர அவசியப்பணிகளால், இந்த தாமதம் யாருக்குமே தவிர்க்க இயலாத ஒன்று தானே; மன்னிப்பெல்லாம் எதற்கு எல்.கே.?

  //பொதுவாக உடை விஷயத்தில் பெண்களை திருப்தி செய்வது கடினம். ஆனால் இதுவரை நான் எடுத்துகொடுத்த என்ற உடையும் நல்லா இல்லை என்று தங்கமணி சொல்லவில்லை. //

  ”நல்லா இருக்கு; ரொம்ப நல்லா இருக்கு; சூப்பர் செலெக்‌ஷன்” என்று சொல்லி ஸ்பெஷல் கவனிப்பு உண்டா? அது தானே நம்முடைய ஒரு மிகச்சிறிய + நியாயமான எதிர்பார்ப்பு !.

  வருகைக்கும் கருத்துப்பரிமாற்றத்திற்கும் நன்றிகள்.

  //கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் ..//

  கொஞ்சமா? மஹா மஹா ........

  [KB's சிந்து பைரவியின் சுலக்‌ஷணா தங்களுக்கு இதைப்படிக்கும்போது ஆங்காங்கே கொஞ்சமாவது ஞாபகம் வந்தாளா?]

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 51. கோபு சார்,உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது உங்கள் ஸரளநடை பிடித்திருக்கிறது. வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பவர் என்று தெரிகிற்து. சுடிதார் வாங்குவதில் நீங்கள் எடுத்த முயற்சி, கூர்ந்த பார்வையையும் சின்ன விஷயங்களிலும் காட்டும் அக்கறையும் தெளிவாகிறது. அனுபவத்தை அருமையாக பகிர்கிறீர்கள் தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 52. கோபு சார், மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ் ப்ரௌசரில் போனால், சரியாக எடிட், ஆகாத பதிவாக வருகிறது.படிக்க முடிவதில்லை.இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் மூலம் வந்தால் லேட்டெஸ்ட் இடுகை வரவில்லை. படிக்க முடியாமல் முழிக்கிறேன்,

  பதிலளிநீக்கு
 53. G.M Balasubramaniam said...
  //கோபு சார்,உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது உங்கள் ஸரளநடை பிடித்திருக்கிறது. வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பவர் என்று தெரிகிற்து. சுடிதார் வாங்குவதில் நீங்கள் எடுத்த முயற்சி, கூர்ந்த பார்வையையும் சின்ன விஷயங்களிலும் காட்டும் அக்கறையும் தெளிவாகிறது. அனுபவத்தை அருமையாக பகிர்கிறீர்கள் தொடர வாழ்த்துக்கள்.//

  ஐயா, வணக்கம். தங்கள் வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும், மனம் திறந்த பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  G.M Balasubramaniam said...
  //கோபு சார், மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ் ப்ரௌசரில் போனால், சரியாக எடிட், ஆகாத பதிவாக வருகிறது.படிக்க முடிவதில்லை.இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் மூலம் வந்தால் லேட்டெஸ்ட் இடுகை வரவில்லை. படிக்க முடியாமல் முழிக்கிறேன்//

  அன்புள்ள ஐயா, நீங்கள் கூறுவதுபற்றியெல்லாம் எனக்கும் ஒன்றுமே தெரியவில்லை.

  இங்கு எனக்கும் மின்தடை, கம்ப்யூட்டர் இயங்குவதில் பலவித பிரச்சனைகள், அதுபற்றிய தொழில்நுட்பங்கள் பற்றிய என் அறியாமை என பல தொல்லைகள் உள்ளன.

  கடந்த 2 நாட்களாக ப்ளாக்கர் ஓபன் ஆகாமல், என்னுடைய கடைசி பதிவே (தங்கமே தங்கம் என்ற குட்டிக்கதை) காணாமல் போய் விட்டது.

  பிறகு ஒரு வழியாக இன்று 14.05.2011 அன்று திரும்ப வந்துள்ளது. இருப்பினும் சுமார் 25 பேர்கள் அதற்கு எழுதிய பின்னூட்டம் காணாமல் போய் விட்டது. மிகவும் வருத்தமாக உள்ளது. என்ன செய்வது என்றே புரியாமல் நானும் முழிக்கிறேன்.

  வேறு யாராவது விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

  It seems that we both are sailing on he same boat.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 54. கொடுத்து வைத்த அந்த பெண் நான் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
  --

  பதிலளிநீக்கு
 55. girijasridhar said...
  //கொடுத்து வைத்த அந்த பெண் நான் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது //

  உனக்கு சுடிதார் வாங்கச்சென்றதில் எனக்கு பல இலாபங்கள்.

  1) இந்தக்கதைக்கான கரு கிடைத்தது.
  2) அனுபவத்தை சற்றே நகைச்சுவை கலந்து உடனடியாக எழுத முடிந்தது.
  3) அனுப்பிய 10 நாளில் அது பத்திரிகையில் வெளியிடப்பட்டு, என்னை ஆச்சர்யத்தில் திக்குமுக்காட வைத்தது.
  4) என்னுடைய Big Boss & HOD General Manager/Finance அவர்களின் மனைவி படித்துப்பார்த்து பாராட்டி விட்டு, GM அவர்களுக்கும் படித்துக் காட்டியதால்,என்னுடைய Send off Party யில் பலர் முன்னிலையில், GM/Finance அவர்கள் இதைப்பற்றியும் பேசிப்பாராட்ட வழி வகுத்தது. அது என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தியது.
  5) படித்த பலரும் என்னைப் பாராட்டினர். இங்கு பின்னூட்டமிட்டவர்களும், வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
  6) சிறுகதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ராஜிராதா அவர்கள் இந்தக்கதையைப்பற்றியும் குறிப்பிட்டு பெரிதும் பாராட்டியது நினைவிருக்கலாம்.
  7) உங்கள் திருமணத்திற்கு முன்பே இந்தக்கதை வெளிவந்து, நான் உனக்குத் தகவல் கொடுத்து, நீயும் அந்தப்பத்திரிகையை வாங்கிப்படித்து விட்டு மகிழ்ந்ததில், நமக்குள் ஒரு நல்ல புரிதல் ஏற்பட வழிவகுத்தது. அதுவே உனக்கு ஒரு மகிழ்ச்சியான நினைவலையாக என்றும் இருக்கும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.
  8) எல்லா மகிழ்ச்சியையும் சேர்த்து ஒன்றாக்கி, உங்களின் காதலுக்கும் அன்புக்கும் சாட்சியாக, நீ குட்டிப்பயல் ‘அநிருத்’ துவைப் பெற்றுக்கொடுத்து, இல்வாழ்க்கையை முழுமையடையச் செய்திருப்பது தான், நான் எழுதிய இந்தக்கதைக்காக, குறிப்பாக எனக்கும், மற்றும் எங்கள் எல்லோருக்கும் நீ கொடுத்துள்ள மிக மதிப்பு வாய்ந்த பரிசாகும்.

  இறைவன் அருளால் சகல க்ஷேமங்களுடனும், சகல சந்தோஷங்களுடனும், நீங்கள் இருவரும் + குட்டிப்பயலும், பல்லாண்டு, பல்லாண்டு நீடூழி வாழ என் மனமார்ந்த ஆசிகள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 56. இறைவன் அருளால் சகல க்ஷேமங்களுடனும், சகல சந்தோஷங்களுடனும், நீங்கள் இருவரும் + குட்டிப்பயலும், பல்லாண்டு, பல்லாண்டு நீடூழி வாழ என் மனமார்ந்த ஆசிகள்.
  எங்கள் பிரார்த்தனைகளும் ஆசிகளும் கூட அவர்களுக்கு.

  பதிலளிநீக்கு
 57. ;)))

  சூப்பர். கதை கதைபோல் இல்லாமல் உங்கள் அனுபவம் என்பதாகவே பதிவாகி உள்ளதாலும் ஏற்கனவே கதாபாத்திரங்களின் முகங்கள் புகைப்படங்கள் மூலம் அறிமுகமாகி இருப்பதாலும் படிக்கும் போதே மனதில் படம் ஓடிக்கொண்டிருந்தது. ;D ரசித்தேன்.

  எனக்கும் ஒரே...ஒரு முறை, ஒரே...ஒரு சுடி அன்பளிப்பாகக் கிடைத்தது, அன்பழிப்பாகி விடாமல் காக்க பெரும் பாடுபட்டுப் போனேன் நான். யோசித்துத் தெரிவு செய்திருக்கிறீர்கள், நல்ல மாமனார்.

  பதிலளிநீக்கு
 58. இமா said...
  ;)))

  //சூப்பர். கதை கதைபோல் இல்லாமல் உங்கள் அனுபவம் என்பதாகவே பதிவாகி உள்ளதாலும் ஏற்கனவே கதாபாத்திரங்களின் முகங்கள் புகைப்படங்கள் மூலம் அறிமுகமாகி இருப்பதாலும் படிக்கும் போதே மனதில் படம் ஓடிக்கொண்டிருந்தது. ;D ரசித்தேன்.//

  மிகவும் சந்தோஷம் இமா.

  //எனக்கும் ஒரே...ஒரு முறை, ஒரே...ஒரு சுடி அன்பளிப்பாகக் கிடைத்தது, அன்பழிப்பாகி விடாமல் காக்க பெரும் பாடுபட்டுப் போனேன் நான்.//

  அடடா! அந்தக்கதையை நீங்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லாவிட்டால், என் தலையே வெடித்து விடும் போல உணர்கிறேன், இப்போது. என் இமா எதையும் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள், என்ற நம்பிக்கை உள்ளது. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், தங்கள் மெயிலை. அவசரமே இல்லை. நேரமும் நல்ல மூடும் உள்ளபோது மட்டுமே!

  //யோசித்துத் தெரிவு செய்திருக்கிறீர்கள், நல்ல மாமனார்.//

  அது ஒரு பெரிய கதை. பிறகு தனியாக ஒரு நாள் தெரிவிக்கிறேன்.

  அன்புடன் உங்கள் vgk

  பதிலளிநீக்கு
 59. சுடிதார் கதையின் மூன்று பகுதியையும் படித்து விட்டேன்.
  //நல்ல நிறமாகவும், ஓரளவு நல்ல அழகாகவும் இருந்தால் அவர்கள் அவ்விடம் விற்பனையாளராகவே இன்னும் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன! அல்லது அதுபோன்றவர்களை நிம்மதியாக வேலை செய்யத்தான் நம்ம ஆட்கள் விட்டு விடுவார்களா என்ன! என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.// ( பகுதி 2)
  விற்பனையாளர் பகுதியான இதில், உங்களுக்கே உரிய தனி நகைச்சுவை இழைந்தோடுகிறது. ஒரு சுடிதாரை மையமாக வைத்து சிக்கல் எதுவும் இல்லாத ஒரு கதை. நீங்களே சொல்வது போல் அமைந்ததால், இது உங்கள் சொந்தக் கதையா அல்லது கற்பனையா என்ற எண்ணம் வந்தது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

   தங்களின் அன்பான வருகையும், கதையின் மூன்று பகுதிகளையும் நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   //இது உங்கள் சொந்தக் கதையா அல்லது கற்பனையா என்ற எண்ணம் வந்தது..//

   80% சொந்த அனுபவமே தான் சார். மீதி 20% மட்டும் எனக்கே உரித்தான நகைச்சுவைகளை ஆங்காங்கே சேர்த்துள்ளேன்.

   அப்போது தான் இதைப் படிப்பவர்களுக்கு ஒரு ருசி ஏற்படும்.
   இதன் ஒவ்வொரு பகுதியிலும் பலரின் பாராட்டுக்களும், தங்களின் ஒட்டுமொத்தப் பாராட்டுக்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி, சார்.

   அன்புடன் தங்கள்,
   vgk

   நீக்கு
 60. நகைச்சுவையோடு கூடிய நல்ல அனுபவப் பகிர்வு.
  உங்களை மாமாவாக கிடைத்த உங்கள் மருமகள் உண்மையில் அதிஷ்டக்காரிதான்.

  வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 61. அன்பின் இளமதி,

  வாங்கோ, வாங்கோ. செளக்யமா? நல்லா இருக்கீங்களா?

  //நகைச்சுவையோடு கூடிய நல்ல அனுபவப் பகிர்வு. //

  சரி, சந்தோஷம். ;)

  //உங்களை மாமாவாக கிடைத்த உங்கள் மருமகள் உண்மையில் அதிஷ்டக்காரிதான்//

  சரி, இருந்தாலும் இருக்கலாம்.

  //வாழ்த்துக்கள் ஐயா!//

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான குட்டியூண்டு கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  [”நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்” என்ற சினிமா பாடல், என்னவோ என் ஞாபகத்திற்கு இப்போது வந்துபோனது.]

  பிரியமுள்ள
  VGK

  பதிலளிநீக்கு
 62. சுடிதார் வாங்க போன அனுபவம் நல்ல நகைசுவையா ரசனையோட சொல்லி இருக்கீங்க அண்ணா. ரசித்து படித்தேன் . சின்ன சின்ன ஆசை.. சில சமயம் நிராசையா போயிடுது ..

  பதிலளிநீக்கு
 63. //ராதா ராணி October 5, 2012 4:50 PM
  சுடிதார் வாங்க போன அனுபவம் நல்ல நகைசுவையா ரசனையோட சொல்லி இருக்கீங்க அண்ணா. ரசித்து படித்தேன் . சின்ன சின்ன ஆசை.. சில சமயம் நிராசையா போயிடுது ..//

  நகைச்சுவை விரும்பியான தாங்கள் இந்த என் அனுபவக் கதையினைப் படித்துப்பார்த்து, ரஸித்து கருத்துக்கள் எழுதியுள்ளதில் .... என் சின்னச் சின்ன ஆசைகளும் நிராசையாகாமல் நிறைவேறியது போன்ற சந்தோஷத்தினைத் தந்தது.

  மிக்க நன்றியம்மா.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 64. வைகோ சார்,
  அருமை, மிக அருமை.அது சூடிதார் செலக்‌ஷன் இல்லை.அது சூடிதார் ரகளை.பொறுப்பான மாமனாராக வரப்போகும் மருமகளுக்கு
  சூடிதார் வாங்க ஒரு மூன்று வாரம் செலவிட்டுள்ளீர்கள் அபாரம்.
  எழுத வார்த்தைகளே வரவில்லை.
  பகிர்விற்கு நன்றி.

  ராஜி

  பதிலளிநீக்கு
 65. rajalakshmi paramasivam December 3, 2012 1:48 AM
  வைகோ சார்,
  அருமை, மிக அருமை.அது சூடிதார் செலக்‌ஷன் இல்லை.அது சூடிதார் ரகளை.பொறுப்பான மாமனாராக வரப்போகும் மருமகளுக்கு
  சூடிதார் வாங்க ஒரு மூன்று வாரம் செலவிட்டுள்ளீர்கள் அபாரம்.
  எழுத வார்த்தைகளே வரவில்லை. பகிர்விற்கு நன்றி.

  ராஜி//

  அன்புடையீர், வாங்கோ, வணக்கம்.

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 66. சுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத்திரும்பி விட்டேன்.// ஆஹா ! என்ன அருமையான ஒரு கணவர்!

  ம்ம் கணவர் மட்டுமல்ல! ஒரு நல்ல தோழமையான அப்பாவும் கூட, மாமனாரும் தான் என்று உறுதியாகின்றது. உங்கள் குடும்பம் கொடுத்துவைத்தவர்கல் அதிலும் மருமகள்கள் கொடுத்துவைத்தவர்கள். மிகவும் ரசித்து, அனுபவித்து வாழ்க்கையை வாழ்கின்றீர்கள் சார்! சரி உங்கள் பிறந்த தேதி 3/12/21/30 இதில் ஏதேனும் ஒன்று தானே??!!! அதுவும் அக்டோபர் 3 ஆ? !!! சார்?!!!!!
  இது என்ன வம்பு என்று நினைத்துவிட வேண்டாம் சார். லிப்ரா காரர்கள் இப்படித்தான் இருப்பார்கள் பொதுவாக அதான் சார்.....

  அருமை! மிகவும் ரசித்தோம்...

  பதிலளிநீக்கு
 67. Thulasidharan V Thillaiakathu March 27, 2015 at 9:15 PM

  வாங்கோ ... வணக்கம்.

  **சுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத்திரும்பி விட்டேன்.**

  //ஆஹா ! என்ன அருமையான ஒரு கணவர்! //

  மூட்-அவுட் ஆகியும் இயல்பு நிலைக்கு உடனே வந்துவிட்ட அருமையான கணவர் என்கிறீர்களா ? என்னவோ போங்க ! :)

  //ம்ம் கணவர் மட்டுமல்ல! ஒரு நல்ல தோழமையான அப்பாவும் கூட, மாமனாரும் தான் என்று உறுதியாகின்றது. உங்கள் குடும்பம் கொடுத்துவைத்தவர்கள் அதிலும் மருமகள்கள் கொடுத்துவைத்தவர்கள். //

  அவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்களே தான் .... ஏன் நாங்களும் கூடத்தான்.

  //மிகவும் ரசித்து, அனுபவித்து வாழ்க்கையை வாழ்கின்றீர்கள் சார்!//

  மிகவும் ’அ னு ப வி த் து’ வாழ்க்கையில் நடந்தவற்றை ஏதோ எழுதுகிறேன் என்று சொன்னால் அது இன்னும் சரியாக இருக்குமோ என நினைக்கிறேன். :)

  //சரி உங்கள் பிறந்த தேதி 3/12/21/30 இதில் ஏதேனும் ஒன்று தானே??!!! அதுவும் அக்டோபர் 3 ஆ? !!! சார்?!!!!!//

  இல்லை. என் பிறந்த தேதி இதோ இந்தப்பதிவினில் உள்ளது.
  http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

  //அருமை! மிகவும் ரசித்தோம்...//

  மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 68. வாழ்க்கையில் அங்கீகாரம் கிடைப்பதற்காகத்தான் எல்லோரும் இவ்வளவு பாடு படுகிறோம்.அது உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 69. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

  அன்புடையீர்,

  வணக்கம்.

  31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி + மார்ச் + ஏப்ரில் ஆகிய நான்கு மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 70. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் உதாரணம் டக்கர்..இது போல மாமனார் மாமியார் டிடைத்த அந்த பொண்ணு லக்கி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள பூந்தளிர் அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரில் ஆகிய நான்கு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   நீக்கு
 71. //“மெயிலை ஓபன் செய்து பார் தெரியும்” என்றான். டிஜிடல் கேமராவில் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் எங்கள் வருங்கால மருமகள். //

  காலம் மாறித்தான் போச்சு. பெண்டாட்டி என்ன கலர் புடவை கட்டி இருக்கிறாள் என்பது கூட தெரியாமல் இருந்தது அந்தக்காலம்.

  ஆனா இப்ப திருமணத்துக்கு புடவை வாங்கும்போதே என் பெண் WHATSAPP ல் அனுப்பி மாப்பிள்ளையின் விருப்பம் தெரிந்து வாங்கிக் கொண்டாள்.

  //எது எப்படியோ, நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. //

  BETTER LATE THAN NEVER ஓ

  எங்களுக்கும் ஒரு நல்ல சிறுகதை படித்த நிறைவுதான் கிடைத்து விட்டதே வழக்கம் போல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya May 18, 2015 at 12:32 PM

   //காலம் மாறித்தான் போச்சு. பெண்டாட்டி என்ன கலர் புடவை கட்டி இருக்கிறாள் என்பது கூட தெரியாமல் இருந்தது அந்தக்காலம்.

   ஆனா இப்ப திருமணத்துக்கு புடவை வாங்கும்போதே என் பெண் WHATSAPP ல் அனுப்பி மாப்பிள்ளையின் விருப்பம் தெரிந்து வாங்கிக் கொண்டாள்.//

   சூப்பர் ! ஜெயா ..... புத்திசாலிப்பெண் :)))))

   //BETTER LATE THAN NEVER ஓ

   எங்களுக்கும் ஒரு நல்ல சிறுகதை படித்த நிறைவுதான் கிடைத்து விட்டதே வழக்கம் போல்.//

   மிகவும் சந்தோஷம், ஜெயா ! :)

   நீக்கு
  2. பிரியமுள்ள ஜெயா,

   -=-=-=-=-=-
   girijasridhar June 16, 2011 at 12:31 PM
   கொடுத்து வைத்த அந்த பெண் நான் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
   -=-=-=-=-=-

   இந்தப்பதிவினிலேயே மேலே ஒரு கமெண்ட் உள்ளது பாருங்கோ. அதற்கு நான் அளித்துள்ள விரிவான பதிலையும் படித்துப்பாருங்கோ.

   அவள் தான் என் மூன்றாம் மருமகள். என் பேரன்கள் அநிருத் (வயது 4)+ ஆதர்ஷ் (வயது 1+) ஆகிய இருவரின் அன்புத்தாயார்.

   என் பேரன் அநிருத் உங்கள் பேத்தி லயாக்குட்டிக்கு ஒருவேளை பிற்காலத்தில் அமையவும் பிராப்தம் இருக்கலாம் :)))))))

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 72. அன்புள்ள ஜெயா,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி + மார்ச் + ஏப்ரில் ஆகிய நான்கு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற இப்போதே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

  பிரியமுள்ள நட்புடன்
  கோபு அண்ணா

  பதிலளிநீக்கு
 73. கால்கொளாயும் அங்கவஸ்திரமும்னு சொல்லினத படிச்சு சிரிப்பாணி பொத்துகிச்.

  பதிலளிநீக்கு
 74. சூடிதார் அமர்க்களமா வாங்கி பாராட்டுகளையும் பெற்று விட்டீர்கள். இந்த பதிவுல தான் பின்னூட்டங்களையும் கொஞ்சம் படிக்க முடிந்தது. சூடிதார் கிடைத்த பெண்ணோட கருத்து உங்க ரிப்ளை எல்லாமே வெரி இன்ட்ரஸ்டிங்க்.

  பதிலளிநீக்கு
 75. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஏப்ரல் மாதம் முடிய, என்னால் முதல் 4 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 76. ரசனை...'கலர்' சென்ஸ்...சுடிதார் வாங்கப் போய்...நல்ல மறுமகளின் மனமகிழ்ச்சி பெற்று வந்தேன்...பாஸிடிவ் அப்ரோச்..

  பதிலளிநீக்கு
 77. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஏப்ரல் மாதம் வரை, என்னால் முதல் 4 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 78. //
  இந்த டீன் ஏஜ் பெண்களையெல்லாம் விதவிதமான சைஸ்களிலும், கலர்களிலும், இன்று மட்டும் லுக் விட்ட எனக்கு மீண்டும் மனதில் ஓர் சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது.
  தவறாக நினைத்து விடாதீர்கள். நான் வாங்கி வந்துள்ள சுடிதார் செட்டில், சுடிதார் ஒருகலரும், கால்க்குழாய் வேறு கலருமாக இருப்பதாலும், அதுவும் ஆஃப் ஸ்லீவ்ஸுடன் தொடைவரையுள்ள மாடலாக இருப்பதாலும், அது இன்றைய நவ நாகரீகப் பெண்கள் உபயோகிக்கக் கூடிய பேஷன் தானா, என்பது தான் என் சஞ்சலமும், சந்தேகமும். //
  அப்பாடா!நம் சந்தேகம் தீர்ந்தது!

  பதிலளிநீக்கு
 79. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஏப்ரல் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, 4 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 80. புது டிரஸ் எடுக்க பெண்களே போனால்கூட இந்தளவுக்கு ஆராய்ச்சி பண்ணியிருக்க மாட்டாங்க.. ஒவ்வொரு விஷயத்திலும் அவ்வளவு கவனம்.. பாவம் உங்க ஆசையை உங்க வீட்டம்மா நிறைவேற்றி இருக்கலாம் அடுத்த வாட்டி அவங்களுக்காகவே எடுத்து கொடுங்கள் போட்டு காட்டி உங்க ஆசையை நிறைவேத்துவாங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... July 21, 2016 at 11:11 AM

   //புது டிரஸ் எடுக்க பெண்களே போனால்கூட இந்தளவுக்கு ஆராய்ச்சி பண்ணியிருக்க மாட்டாங்க.. ஒவ்வொரு விஷயத்திலும் அவ்வளவு கவனம்..//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி.

   //பாவம் உங்க ஆசையை உங்க வீட்டம்மா நிறைவேற்றி இருக்கலாம் அடுத்த வாட்டி அவங்களுக்காகவே எடுத்து கொடுங்கள் போட்டு காட்டி உங்க ஆசையை நிறைவேத்துவாங்க...//

   என்னத்த எடுத்து, என்னத்தக் கொடுத்து, என்னத்தப் போட்டுக்காட்டி, என்னத்த என் ஆசையை நிறைவேற்றி ... :(.

   ‘நான்’ என்ற மிக அருமையான எனக்குப் பிடித்தமான திரைப்படத்தில் கண்ணையா என்ற ஒரு நடிகர், எதற்கெடுத்தாலும் இதுபோல அடிக்கடிச் சொல்லிச் சொல்லி அலுத்துக் கொள்வார்.

   அதனால் அவர் பெயர் பிறகு என்னத்தக் கண்ணையா என்றே பிரபலமாகிவிட்டது. :)

   வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

   நீக்கு
 81. மேற்படி என் சிறுகதையினை மிகவும் பாராட்டி, ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவரும் எனது ஆருயிர் நண்பருமான திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ஓர் தனிப்பதிவு எழுதி இன்று ’ஸ்ரீராமநவமி’ புண்ணிய தினத்தில் (25.03.2018) வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:
  https://tthamizhelango.blogspot.com/2018/03/vgk-03.html

  இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு
  珞

  பதிலளிநீக்கு