About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, April 16, 2013

9] "நானும் என் அம்பாளும் !" .............. அதிசய நிகழ்வு !




”பொக்கிஷம்”

தொடர்பதிவு 
By
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



                                                                          





ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா ஸ்வாமிகளுடன் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. எவ்வளவோ MIRACLES நிகழ்ந்துள்ளன. 

இதுவரை அவ்வாறான என் அனுபவங்கள் எதையும் நான் யாரிடமும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டது இல்லை. 

எனக்கு மட்டுமல்ல. தரிஸனத்திற்குச் சென்று வந்த எவ்வளவோ பக்தர்களுக்கு அவர்களின் அருளால் எவ்வளவோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறான பலரின் சுகானுபவங்களையெல்லாம் தொகுத்து ‘கவிஞர் நெல்லை பாலு’ என்பவர் 1995 இல் “தெய்வ தரிஸனம்” என்ற தலைப்பினில் ஸ்ரீ பரமாச்சார்யார் ஸ்வாமிகளின் முதலாண்டு நினைவஞ்சலிக்காக ஓர் சிறப்பு நூல் வெளியிட்டிருந்தார்கள். 


அந்த நூலில் ஸ்ரீ ஸ்வாமிகளுடனான தங்களின் அனுபவங்களை பலரும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.  அதில் முன்னாள் இந்திய ஜனாதிபதி [PRESIDENT OF INDIA] திரு. ஆர். வெங்கட்ராமன்  அவர்களில் ஆரம்பித்து நூற்றுக்கணக்கான பிரபலங்கள் எழுதியுள்ள அனுபவக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.


அடியேன் எழுதியதோர் அனுபவமும் அதில் பக்கம் எண்கள்: 155-157 இல் 

இடம் பெற்றுள்ளது. அந்தப் புத்தகத்தை இன்றும் நான் மிக உயர்ந்த 

பொக்கிஷமாக என்னிடம் வைத்துள்ளேன். 








நான் அந்த புத்தகத்தில் எழுதியுள்ள பகுதியை மட்டும் இங்கு கீழே


பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 





கோவிலில் மாட்டு ....


பரமாச்சாரியார் உத்தரவு


By V. கோபாலகிருஷ்ணன் BHEL திருச்சி.


-oOo-



1978-ம் வருஷம், விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள். அடியேன் என் 

குடும்பத்தாருடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா ஸ்வாமிகளை தரிஸிக்கச் 

சென்றிருந்தேன்.


அதுசமயம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்கள், குண்டக்கல் ரெயில்வே

ஸ்டேஷனுக்கு அருகேயுள்ள ‘ஹகரி’ என்ற சிற்றூரில், ஹகரி ரெயில்வே 

ஸ்டேஷனை ஒட்டி அமைந்துள்ள “பண்யம் சிமிண்ட் ஃபேக்டரி” 

வளாகத்தில் முகாமிட்டு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்தார்கள்.


அங்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆக்ஞைப்படி மிகவும் துரிதமாக ஓர் 

சிவன் கோயில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் இருந்தது.


வழக்கப்படி நான், என் தாயார், என் மனைவி என் முதல் இரு குழந்தைகள் [வயது முறையே 4-1/2 மற்றும் 3] தரிஸனத்திற்குச் சென்றிருந்தோம். 

எனக்குப் படம் வரைவதில் சிறுவயது முதற்கொண்டே ஆர்வம் உண்டு. என் கையால் நானே சிரத்தையாக வரைந்து வர்ணம் தீட்டி மிகப்பெரிய அளவில் ஒரு காஞ்சி காமாக்ஷி அம்மன் ஓவியத்தை அட்டை மடங்காமல் வெகு ஜாக்கிரதையாகச் சுற்றி எடுத்துச்சென்றிருந்தேன்.

நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்தபோது மாலை சுமார் 4 மணி இருக்கும்.

சுமார் 100 பக்தர்கள் மட்டுமே ஸ்ரீ பெரியவா தரிஸனம் செய்து கொண்டிருந்தார்கள். அதிகமாகக் கூட்டம் இல்லாத நேரம்.

ஸ்ரீ மஹா பெரியவாளை நெருங்கி நாங்கள் நான்கு நமஸ்காரங்கள் செய்து விட்டு, கொண்டு சென்ற ஸ்ரீ காமாக்ஷி அம்மன் படத்தை பழத்தட்டுடன் சமர்ப்பித்தோம். 

அருகில் உதவியாளர்களாக இருந்த **’ராயபுரம் ஸ்ரீ பாலு’** அவர்களும், **’திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன்’** அவர்களும் ஸ்ரீ பெரியவாளிடம் படத்தைப் பிரித்துக் காட்டினார்கள்.


[** இவர்கள் இருவரையும் பற்றி கீழே தனியே எழுதியுள்ள்ளேன் ** ]

அதை தன் திருக்கரங்களால் வாங்கிக்கொண்ட ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள், தன் திருக்கரங்கள் இரண்டையும் அந்தப்படத்தில் நன்றாக ஊன்றிய வண்ணம், கீழே தரையில் அமர்ந்த நிலையில், வெகு நேரம் சுமார் 10-15 நிமிடங்கள் நன்றாக ஊன்றிப்பார்த்து, மிகவும் ரஸித்து, சந்தோஷத்துடன் புன்னகை புரிந்தார்கள்.

நான் அந்தக்காட்சியைக்கண்டு மெய்சிலிர்த்துப்போய் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தேன். பிறகு தன் உதவியாளர்களிடம் ஏதோ சில விபரங்கள் என்னைப்பற்றி கேட்டது போல உணர்ந்து கொண்டேன். 

பிறகு அங்கு கூடியிருந்த பக்தர்களில் சிலர், “ஸ்ரீ மஹா பெரியவா திரும்பவும் காஞ்சீபுரத்திற்கே வந்து விட வேண்டும். ஸ்ரீ மஹா பெரியவாளை அழைக்கவே ஸ்ரீ காமாக்ஷி அம்மன் இங்கு இப்போது வந்திருக்கிறாள்” என்று தங்கள் ஆசையை மிகவும் பெளவ்யமாக வெளிப்படுத்தினார்கள். ஸ்ரீ மஹா பெரியவாளும் சிரித்துக்கொண்டார்கள்.

ஸ்ரீ மஹாபெரியவா தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு வட இந்திய பாத யாத்திரை மேற்கொண்டு, சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாகி, தமிழ்நாட்டுப்பக்கம் எப்போ திரும்பி வருவாரோ என பக்தர்களை ஏங்க வைத்திருந்த காலக்கட்டம் அது. 

நான் வரைந்து எடுத்துச்சென்ற படத்தை அனுக்கிரஹம் செய்து திரும்பத் தந்து விடுவார்கள், அதை ஃப்ரேம் செய்து நம் கிருஹத்தில் பூஜையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு, மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி அங்கு காத்திருந்தது.

ஸ்ரீ மஹாபெரியவா யாரோ ஒருவரை குறிப்பாக அழைத்து வரச்சொல்லியிருந்தார்கள். வந்தவர் அந்த பண்யம் சிமிண்ட் ஃபேக்டரியின் மிக உயர்ந்த அதிகாரியோ அல்லது மேனேஜிங் டைரக்டரோ என்று நினைக்கிறேன்.

அவர், பஞ்சக்கச்சத்துடன், உத்திரியத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டு, மேலாடை ஏதும் அணியாமல், மிகவும் பெளவ்யமாக வந்து, ஸ்ரீ மஹாபெரியவாளை நமஸ்காரம் செய்து கொண்டார்.  


அவரிடம் மேற்படி படத்தை ஒப்படைத்து பெரியதாக FRAME செய்து, அங்கு கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள சிவன் கோயிலில் மாட்டிவிடும் படி ஆக்ஞை செய்தார்கள்.

எனக்கு ஒரு 9 x 5 வேஷ்டியும், என் மனைவிக்கு 9 கெஜம் நூல் புடவையும், என் தாயாருக்கு குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் சால்வையும், என் குழந்தைகள் இருவருக்கும் பழங்கள் + கல்கண்டு + குங்குமப்பிரஸாதம் போன்றவைகளையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து, ஸ்ரீ மஹாபெரியவா நன்றாக ஆசீர்வதித்து அனுக்கிரஹம் செய்து கொடுத்தார்கள். அனைவரும் நமஸ்கரித்து விட்டுவாங்கிக்கண்களில் ஒத்திக்கொண்டோம்.

மறுநாள் விடியற்காலை, விநாயக சதுர்த்திக்காக, அந்த ஊர் கலைஞர் ஒருவரால் மிகப்பெரிய விநாயகர் சிலை களிமண்ணால் வெகு அழகாகச் கையினாலேயே வடிவமைக்கப்பட்டு, செய்யப்பட்டதை அருகில் நின்று கவனிக்கும் பாக்யம் பெற்றேன்.  


விநாயக சதுர்த்தி பூஜை ஸ்ரீ மஹாபெரியவா சந்நிதானத்திலேயே மிகச்சிறப்பாக நடைபெற்றதை நேரில் காணும் பாக்யம் பெற்றோம்.

இந்த நிகழ்ச்சிகள் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாத ஒரு நல்ல பேரின்ப அனுபவம் ஆகும்.

[அனுபவக் கட்டுரை இத்துடன் முடிந்தது]

oooooOooooo





இவ்வளவு மிகப்பெரிய படத்தினை FRAME செய்து வீட்டில் மாட்டுவது என்பதோ, அதைப்பாதுகாத்து, பராமரிப்பது என்பதோ நாளடைவில் மிகுந்த சிரமமாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தே கோயிலில் மாட்டச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருப்பார்கள், என என்னையே நான் சமாதானம் செய்துகொண்டேன். 

எப்படியோ நான் வரைந்த ஒரு ஓவியம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அவர்களின் திருக்கரங்களுக்கு சென்று சிறிது நேரம் அவர் அதில் தன் அருட்பார்வையைச் செலுத்தி, அதனை கோயிலில் மாட்டச்சொல்லி ஆக்ஞையிட்டதே, எனக்குக்கிடைத்த மாபெரும் பொக்கிஷமான  அனுக்கிரஹம் என நான் எண்ணி மகிழ்ந்தேன்.

ஒவ்வொருமுறை நான் தரிஸனத்திற்குச் சென்றபோதும் இதுபோன்று எனக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்ஹாபெரியவாளுடன் ஏற்பட்டுள்ள பல்வேறு சுகானுபவங்களை நான் யாரிடமும் அதிகமாக வெளிக்காட்டிக்கொள்வது இல்லை.  

இந்த நான் வரைந்த ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஓவியத்தை, கோயிலில் மாட்டச்சொல்லி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆக்ஞை இட்ட விஷயம்  மட்டும், கவிஞர் நெல்லை பாலு அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விட்டதால், அவர்  என்னை மிகவும் வற்புருத்தி, அதைப்பற்றி ஓர் கட்டுரையாக என்னைவிட்டு எழுதித்தரச்சொல்லி வாங்கிக்கொண்டு விட்டார். 

அவரால் 1995ல் வெளியிடப்பட்ட “தெய்வ தரிஸனம்” என்ற புத்தகத்தில் அச்சேற்றி வெளியிட்டும் விட்டார். 

ஏற்கனவே அச்சேறி வெளியிடப்பட்டுள்ள உண்மை நிகழ்ச்சி என்பதால் நானும் இதை இங்கு இப்போது உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். 




 தொடரும்



  


    



oooooooooooooooooooooooooooooooooo



**’ராயபுரம் ஸ்ரீ பாலு’** அவர்கள் + 
**’திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன்’** அவர்கள் 
பற்றிய சில முக்கியமான செய்திகள்: 

இருவருமே தங்கள் வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளாத பிரும்மச்சாரிகள். இருவருமே காசு பணத்தைத் துச்சமாக நினைத்தவர்கள். இடுப்பு வேஷ்டி துண்டு தவிர மற்ற எல்லாவற்றையும் உதறி எறிந்துவிடும் உத்தமர்கள். ஸ்ரீமடத்தில் சம்பளம் ஏதும் வாங்காமல் உண்மையான பக்தியுடன் கடைசிவரை உழைத்து பகவத் கைங்கர்யம் செய்தவர்கள். 

இருவருமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் கூடவே இருந்து, சுமார் 30 வருடங்களுக்கு மேல் [1965-1994] ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள். இது சாதாரணதோர் விளையாட்டு விஷயம் அல்ல. மிகவும் குறிப்பறிந்து நடக்க வேண்டிய கஷ்டமான வேலை. 

இரவு பகல் எந்நேரமும் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும். பசிபட்டினி இருக்க வேண்டும். ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு பிக்ஷை நடைபெறாமால், பிக்ஷை நடத்தி வைக்காமல் இவர்கள் எதையும் சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ கூட முடியாது. ஸ்வாமிகள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் விரதம் பட்டினியென்றால் இவர்களும் பட்டினி இருக்கத்தான் வேண்டியிருக்கும். 

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல ஸ்ரீ ஸ்வாமிகள் எப்போது எழுந்து நிற்பார், எப்போது எங்கே புறப்படுவார் என யாராலும் கேட்கவோ, சொல்லவோ, தீர்மானிக்கவோ, அனுமானிக்கவோ முடியாது. 

அதனால் எப்போதுமே இவர்கள் இருவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் தான் இருக்க வேண்டும். ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு ஸ்நானத்திற்கான ஏற்பாடுகள், மடி வஸ்திரங்கள், தியானம், பூஜை, நித்யப்படி அனுஷ்டானங்கள் முதலியவற்றிற்கான அடுத்தடுத்த தேவைகளை கவனிக்க வேண்டியிருக்கும். 

திடீரென்று ஸ்வாமிகள் விடியற்காலம் 3 மணி சுமாருக்கு எங்கேயாவது புறப்பட்டால், இவர்களும் அதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும். 

சின்னக்காஞ்சீபுரம், தேனம்பாக்கத்தில் சிவாஸ்தானம் என்ற இடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா நீண்ட நாட்கள் தனியே, ஓர் கிணற்றடிக்குப்பின்புறம் கொட்டகை போட்டுக்கொண்டு தங்கியிருந்தார்கள். தரிஸனத்திற்கு வருவோர் அந்தக்கிணற்றுக்கு முன்புறம் நின்றே, கிணற்றுக்குப்பின்னால் உள்ள  அவர்களை தரிஸிக்க வெண்டும் என ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். 

முதல் நாள் மாலை தரிஸனம் செய்த நானும் என் குடும்பத்தாரும் மறுநாள் காலையில் மீண்டும் தரிஸனம் செய்ய வேண்டும் என விரும்பியதால், அங்கே அருகில் இருந்த உபநிஷத் ப்ரும்மேந்திர மடம் என்னும் இடத்தில் ஸ்ரீ கோபால தீக்ஷதர் என்பவர் வீட்டில் ஓர் இரவு தங்க நேர்ந்தது. 

அது மிகவும் குளிரான மார்கழி மாதம். விடியற்காலம் 4 மணிக்குள் வாசலில் ஒரே ஒரே பரபரப்பு.  விடியற்காலம் 3.30 மணிக்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா புறப்பட்டு, மிகப்பெரிய வரதராஜ பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரத்தை படுவேகமாக பிரதக்ஷணம் செய்யக்கிளம்பி விட்டார்கள், எனக்கேள்விப்பட்டு நானும் ஓடினேன். 

விளக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டு இவர்கள் இருவரும் [ஸ்ரீ பாலுவும் ஸ்ரீ ஸ்ரீகண்டனும்] கூடவே ஓடுகிறார்கள்.  அதற்குள் நிறைய ஜனங்களும் தரிஸனத்திற்கு வந்து சேர்ந்து கொண்டு விட்டார்கள். 

ஜனங்கள் யாரும் நமஸ்காரம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீ மஹாபெரியவா மேல் பட்டுவிடாதபடி, கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியதும் இவர்கள் வேலையாகவே இருந்தது. 

பலர் வீடுகளில் வாசல் தெளித்து கோலம் போட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்பதும், ஹாரத்தி சுற்றி கற்பூரம் ஏற்றுவதுமாக விடியற்காலம் நாலு மணிக்கே வெளிப்பிரகார நான்கு வீதிகளிலுமே ஒரே அமர்க்களமாக இருந்ததைக்கண்டு ரஸித்தேன்.

சிலசமயங்களில் ஸ்ரீ ஸ்வாமிகளை இவர்கள் இருவரும் உரிமையோடு கோபித்துக்கொண்டு, எப்படியாவது கொஞ்சம் ஆகாரம் அவர்கள் எடுத்துக்கொள்ள வைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.  

சின்னக் கைக்குழந்தைக்கு அதன் தாய் வாத்சல்யத்துடன், விளையாட்டுக்காட்டி, செல்லமாக கோபித்து, சோறு ஊட்டுவது போல மிகவும் கஷ்டமான வேலை தான், ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு பிக்ஷை செய்து வைப்பது என்பதும். 

அவர்களுக்கான உணவுகளில் நிறைய கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உண்டு. சில மாதங்களில் அரிசி, பருப்பு வகைகள் போன்ற தான்யங்களே எதுவும் சேர்க்கக்கூடாது.   சிலமாதங்க்ளில் காய்கறிகள், சில மாதங்களில் பழ வகைகள், சில மாதங்களில் பால் தயிர் போன்றவை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும். அவரின் வாழ்நாளில் கடைசி காலங்களில் ஒரே ஒரு வேளை மட்டும், ஒரு கொட்டாங்கச்சி அளவு நெல் பொரியில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்ததாகச் சொல்வார்கள். அவர்களின் தபஸ் வலிமையினால் மட்டுமே நீண்ட காலம் ஆரோக்யமாக வாழ்ந்துள்ளார்கள்.

இந்த பாலுவும், ஸ்ரீகண்டனும் தனக்காகவே இப்படிப் பட்டினி கிடக்கிறார்களே என்று இரக்கப்பட்டு, ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களும் பிக்ஷைக்கு அமர்வதும் நடைபெற்றதுண்டு எனக் கேள்விப்பட்டுள்ளேன்.  

அதுபோல ஆயுர்வேத வைத்யமும், மருந்து தயாரிப்புகளும் தெரிந்துகொண்டிருந்த ஸ்ரீ ஸ்ரீகண்டன் அவர்கள், ஸ்ரீ பெரியவாளை மிகவும் கெஞ்சிக்கூத்தாடி வற்புருத்தி ஒருசில சூர்ணங்கள், லேகியங்கள், கஷாயங்கள் முதலியன, சிரத்தையாகத் தானே தன் கைப்படத் தயாரித்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை அவ்வப்போது சாப்பிட வைப்பதும் உண்டு எனக்கேள்விப்பட்டுள்ளேன். 

இதுபோல கண்களை இமைகள் காப்பது போல ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு இவர்கள் இருவரும் தூய அன்புடனும், வாத்சல்யத்துடனும், பக்தியுடனும் பகவத் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்றிருந்தார்கள்.  THEY WERE ONLY, LOOKING AFTER ALL THE PERSONAL NEEDS OF "HIS HOLINESS MAHA SWAMIGAL"  FOR MORE THAN 30 YEARS FROM 1964 TO 1994.

இவர்கள் இருவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சுவையான  MIRACLE  அனுபவங்களைச் சொல்லச்சொல்ல நான் அவற்றை மிகவும் ஆர்வமாகக்கேட்டு அறிந்து, மகிழ்ந்தது உண்டு. 

இதில் ஸ்ரீ. ஸ்ரீகண்டன் என்கிற வைத்யலிங்க ஸர்மா பிறந்த ஊர் : காரைக்குடி அருகில் உள்ள வேலங்குடி என்ற கிராமம். அவர் பிறந்த நாள்: 04.04.1937. ஆனால் இவரின் சொந்த ஊர் : திருச்சி. பூர்வீகம்: லால்குடிக்கு அருகே உள்ள ஆங்கரை கிராமம். 

இவரும் பிறகு சந்நியாசம் வாங்கிக்கொண்டார். சந்நியாச ஆஸ்ரமம் காஞ்சீபுரம் காமாக்ஷி அம்மன் கோயில் குளத்தில் மேற்கொண்ட நாள்: 24.02.2002.  அதுமுதல் ஸ்ரீ ஸதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார்.



இவர் சந்நியாஸம் மேற்கொண்ட 24.02.2002 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் உயரமாக நிற்பவர் ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்கள்.

இந்த ஸ்ரீ.ஸ்ரீகண்டன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள் ஸித்தியடைந்து ப்ருந்தாவனப்பிரவேசம் ஆன நாள்: 11.05.2003

இவரின் அதிஷ்டானம் திருச்சி லால்குடிக்கு அருகில் உள்ள ஆங்கரை என்னும் கிராமத்தில் காயத்ரி நதி என்ற வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ளது. 

வரும் 21.04.2013 அன்று இவருக்கு திருச்சி டவுனில் 10ம் ஆண்டு நிறைவு ஆராதனையும், அதே தினம் ஆங்கரையில் அமைந்துள்ள இவரின் அதிஷ்டானத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா 
குளத்தில் ஸ்நானம் செய்யும் போது
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 
எடுக்கப்பட்டுள்ள புகைப்படம்.

உடன் இருக்கும் ஆறு பேர்களில்
முதலில் இருப்பது ராயபுரம் ஸ்ரீ பாலு அவர்கள்
மூன்றாவதாக இருப்பது திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள்



குளக்கரையில் தியானத்தில் / அனுஷ்டானத்தில்
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அமர்ந்துள்ளார்
அருகே நிற்பது ஸ்ரீ. ஸ்ரீகணடன் அவர்களும் 
+ ஸ்ரீ. பாலு அவர்களும்


இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 
எடுக்கப்பட்டுள்ள புகைப்படம்.
பரிசலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பயணிக்க
இடது ஓரமாக ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்களும்
வலது ஓரம் திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்களும்
உடன் பயணம் செல்லுகிறார்கள்.


ஸ்ரீ ராயபுரம் பாலு என்பவர் சமீபத்தில், சென்ற மாதம் [மார்ச் 2013 முதல் வாரத்தில்]  கும்பமேளா நடந்தபோது, அலஹாபாத் திரிவேணியில், சந்நியாஸம் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் இனி ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என அழைக்கப்படுவார்கள். இவர்கள் இப்போது ஸ்ரீ காஞ்சி சங்கரமடத்தில் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் அதிஷ்டானத்தின் அருகே ஓர் குடிலில் தங்கியுள்ளார்கள். 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பக்தகோடிகள் அனைவருக்குமே, இந்த ராயபுரம் ஸ்ரீ பாலு + திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் ஆகிய இருவரையும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. 

அடியாருக்கு அடியாராக அருந்தொண்டுசெய்து வந்த இவர்கள் இருவரையும் பற்றி மற்ற அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என எண்ணி இங்கு இவர்களைப்பற்றி சிறப்பித்து எழுதியுள்ளேன்.


சிவன் அடியார்களாக விளங்கிய 63 நாயன்மார்கள் பற்றி புத்தகங்களில் படித்துள்ளேன். அவர்களில் யாரையும் நான் நேரில் பார்த்தது இல்லை. 


என்னைப்பொறுத்தவரை, பரமேஸ்வரனின் அவதாரமாகத் திகழ்ந்து வந்த   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு அருந்தொண்டு ஆற்றிய இந்த ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்களையும், திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்களையும் 64வது + 65வது நாயன்மார்களாகவே என்னால் நினைத்து மகிழமுடிகிறது.  



-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-



ooooooooooooooooooooooooooooooooooooooooo



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பல்லாண்டுகள் கைங்கர்யம் செய்துள்ள 
ராயபுரம் ஸ்ரீ பாலு என்ற பிரும்மச்சாரி 
2013 மார்ச் மாதம் சந்நியாசம் பெற்றபின், 
ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 
என அழைக்கப்பட்டு வந்தார்கள்.



பூர்வாஸ்ரமத்தில் ராயபுரம் ஸ்ரீ பாலு என்று அனைவராலும் 
அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 
நேற்று 19.01.2016 இரவு காஞ்சிபுரத்தில் ஸித்தியடைந்து, 
இன்று 20.01.2016 அங்கேயே காஞ்சிபுரத்தில் அவருக்கான 
பிருந்தாவனப்பிரவேஸம் நடைபெற்றுள்ளது. 



அதற்கான படங்கள் இந்தப்பதிவினில் இங்கு கீழே
புதிதாக இப்போது இணைக்கப்பட்டுள்ளன. 


இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. 



பூர்வாஸ்ரமத்தில் ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்கள்

19.01.2016 இரவு காஞ்சிபுரத்தில் 
ஸித்தியடைந்த நிலையில்




 


 

20.01.2016 காஞ்சிபுரத்தில் 
பிருந்தாவனப் ப்ரவேஸம் செய்தபோது

ooooooooooooooooooooooooooooooooooooooooo



oooooooooooooooooooooooooooooooooo

இந்தப் ’பொக்கிஷம்’  
தொடரின் அடுத்த பகுதி
21.04.2013 ஞாயிறு அன்று
வெளியிடப்படும்.


oooooooooooooooooooooooooooooooooo





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


149 comments:

  1. பெரும்பேறு பெற்றவர் நீங்கள்.

    படம் உங்களிடமிருப்பதை விட கோயிலில் இருந்ததால் அம்பாளின் அருள் உங்களையும் சேர்த்து அனைவருக்கும் கிடைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அமைதிச்சாரல் April 16, 2013 at 4:03 AM

      வாங்கோ, வணக்கம். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //பெரும்பேறு பெற்றவர் நீங்கள். படம் உங்களிடமிருப்பதை விட கோயிலில் இருந்ததால் அம்பாளின் அருள் உங்களையும் சேர்த்து அனைவருக்கும் கிடைக்கிறது.//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  2. Indha pokisham padikkum podhey romba deyvigama irrukku. Indha madhiri anubavam kidaikka romba koduthu vachirukkanum. I feel Iam very lucky to have read about the miracles. Thanks for sharing. Romba Nandri Iyyah...

    ReplyDelete
    Replies
    1. Priya AnandakumarApril 16, 2013 at 4:24 AM

      WELCOME TO YOU Madam. வாங்கோ, வணக்கம்.

      //Indha pokisham padikkum podhey romba deyvigama irrukku. இந்தப்பொக்கிஷம் படிக்கும் போதே ரொம்ப தெய்வீகமா இருக்கு.//

      மிகவும் சந்தோஷம்.

      // Indha madhiri anubavam kidaikka romba koduthu vachirukkanum. I feel Iam very lucky to have read about the miracles. Thanks for sharing. Romba Nandri Iyyah... இந்த மாதிரி அனுபவம் கிடைக்க ரொம்பக் கொடுத்து வைத்திருக்கணும். இதுபோன்ற ஆச்சர்யமளிக்கும் அற்புத அதிசயத் தகவல்களைப் படிக்க நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவளாக உணர்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள் ரொம்வ நன்றி ஐயா..//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  3. பொக்கிஷம் பதிவு
    தருகிறது மனதிற்கு நிறைவு

    அளித்த தகவல்கள் யாவும் அருமை.
    இவைகளை படிப்பதற்கு வேண்டும்
    பொறுமை.

    அறிந்துகொள்வோம்
    மகான்களின் பெருமை
    அறிந்தால் நீங்கும் நம் சிறுமை.

    திருவனந்தபுரம்
    கள்ளரா பொக்கிஷம்போல்
    உள்ளது தகவல்கள்.

    பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. Pattabi Raman April 16, 2013 at 4:53 AM

      ஆஹா, வாங்கோ சார், வணக்கம் சார். பகுதி-1 க்குப்பிறகு தங்களைக் காணோமோ எனக்கவலைப்பட்டேன்.

      பகுதி-8 க்கும், பகுதி-9க்கும் அபூர்வ வருகை தந்து என் ஏக்கத்தைத் தணித்து விட்டீர்கள்.

      ஸ்ரீராமநவமி நெருங்கும் வேளையில், என் இஷ்ட தெய்வங்களில் ஒன்றான, அந்த சாக்ஷாத் எம்பெருமான் ஸ்ரீ பட்டாபி ராமனே நேரில் வந்து பாராட்டி வாழ்த்தியுள்ளதுபோல பெருமகிழ்ச்சியை உணர வைக்கிறது, தங்களின் இந்த அபூர்வ வருகை.

      //பொக்கிஷம் பதிவு .. தருகிறது மனதிற்கு நிறைவு

      அளித்த தகவல்கள் யாவும் அருமை... இவைகளை படிப்பதற்கு வேண்டும் பொறுமை.

      அறிந்துகொள்வோம், மகான்களின் பெருமை; அறிந்தால் நீங்கும் நம் சிறுமை.

      திருவனந்தபுரம் கள்ளரா பொக்கிஷம்போல் உள்ளது தகவல்கள். பாராட்டுக்கள்//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், Mr Pattabi Raman Sir.

      Delete
    2. இந்த பட்டாபிராமனுக்கு கிடைத்த ஆஞ்சநேய சுவாமியின் கற்பூர ஜோதி தரிசனம் அனுப்பியுள்ளேன்.தரிசித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

      Delete
    3. Pattabi Raman April 20, 2013 at 5:28 AM

      வாங்கோ, வாங்கோ, தங்களின் மீண்டும் வருகை, எம்பெருமான சாக்ஷாத் இராமச்சந்திர மூர்த்தியின் வருகை போல மகிழ்ச்சியளிக்கிறது. ;)

      //இந்த பட்டாபிராமனுக்கு கிடைத்த ஆஞ்சநேய சுவாமியின் கற்பூர ஜோதி தரிசனம் அனுப்பியுள்ளேன்.தரிசித்துக் கொள்ள வேண்டுகிறேன்.//

      ஆஹா, ஆஹா, இதற்கு நான் என்ன பாக்யம் செய்துள்ளேனோ !! மிக்க நன்றி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி, சார்.

      Delete
  4. படிக்கும்போது உணர்ச்சி வசமாக இருந்தது. நல்ல மகான்களிடமிருந்து
    ஆசிகள் பெற கொடுத்து வைக்க வேண்டும். தெய்வத்தின் படம் வரைந்தது, ஒரு கோவிலின் வரும் பக்தர்களுக்குத் தரிசனம் என்ற முறையில் அங்கு மாட்டப்பட்டது அந்த சமயம் எவ்வளவு ஸந்தோஷத்தை அனுபவித்திருப்பீர்களென்று உணர முடிகிறது.
    மற்றும் அவரின் அடியார்களாயிருந்து ,ஸன்யாஸ ஆசிரமம் பெற்றவர்களின் அருமையையும் உணர முடிகிறது. மொத்தத்தில்
    நீங்களும்.பரமாசாரியாரின் பக்தரென்பதும், அழகாகப் புரிகிரது. பக்தி வலையிற் படுவோன் காண்க என்பதற்கேற்ப உங்களையும் பக்திமானாக உணரமுடிகிறது. அழகான பொக்கிஷம்.சில சொன்னால்தான் தெரியும். நிறைய விஷயங்களடங்கிய பொக்கிஷம். பாதுகாருங்கள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi April 16, 2013 at 5:33 AM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //படிக்கும்போது உணர்ச்சி வசமாக இருந்தது. நல்ல மகான்களிடமிருந்து ஆசிகள் பெற கொடுத்து வைக்க வேண்டும். தெய்வத்தின் படம் வரைந்தது, ஒரு கோவிலின் வரும் பக்தர்களுக்குத் தரிசனம் என்ற முறையில் அங்கு மாட்டப்பட்டது அந்த சமயம் எவ்வளவு ஸந்தோஷத்தை அனுபவித்திருப்பீர்களென்று உணர முடிகிறது. மற்றும் அவரின் அடியார்களாயிருந்து, ஸன்யாஸ ஆசிரமம் பெற்றவர்களின் அருமையையும் உணர முடிகிறது. ..................... //

      ரொம்பவும் சந்தோஷம், மாமி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகளும், நமஸ்காரங்களும் மாமி. அன்புடன் கோபாலகிருஷ்ணன்.

      Delete
  5. enna solla? 'gopu'ramaaga uyarnthu kondE pOgiRirgal!

    ReplyDelete
    Replies
    1. middleclassmadhavi April 16, 2013 at 5:48 AM

      வாங்கோ வாங்கோ, வணக்கம்.

      //enna solla? என்ன சொல்ல?//

      என்னையே கேட்டால் எப்படி?

      ஏதாவது இனிய கருத்துக்கள் சொல்லக்கூடாதா?

      அதையும் பொக்கிஷமாக நினைத்து மகிழ்வேனே!

      //’gopu'ramaaga uyarnthu kondE pOgiRirgal!
      ‘கோ பு’ ர மா க உயர்ந்துகொண்டே போகிறீர்கள் !//

      அழகாகப்பொடி வைத்து எழுதியுள்ளது மகிழ்ச்சியளித்தது. அதுவே ’கோபு’வுக்கு ’ரம்’ சாப்பிட்ட கிக்கைக்கொடுத்துள்ளது. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், மனதை மயக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      Delete
  6. இதைப் படிக்க நாங்களும் கொடுத்து வைத்துள்ளோம் ஐயா... இணைத்துள்ள படங்களும் பொக்கிசங்கள்...

    ராயபுரம் ஸ்ரீ பாலு அவர்கள் மற்றும் திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் பற்றிய விரிவான விளக்கங்களும் அருமை...

    நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் April 16, 2013 at 5:54 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இதைப் படிக்க நாங்களும் கொடுத்து வைத்துள்ளோம் ஐயா... இணைத்துள்ள படங்களும் பொக்கிசங்கள்... ராயபுரம் ஸ்ரீ பாலு அவர்கள் மற்றும் திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் பற்றிய விரிவான விளக்கங்களும் அருமை... நன்றிகள் பல...//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், Mr. DD Sir.

      Delete
  7. Naan kittaththatta 35 varushaththukku mun Mahaa periyavaalai Kinatrukku andappuram paarththein. Naan kojam kullam, adanaal, yetti paarthein. Avar siriththukkonde yennaip paarththaar. Oru velichchakkeetru avar kannilirundu yen mel vizhunthathu polirundathu. Yenakku yennamo maadiri irundathu. Anda feeling innum yennaal unara mudigirathu.

    Avarai maadiri manusha kadavul veru yaarum irundadillai, varappovathum illai.

    Ungal experience padiththu, mei silirththathu. Mighavum nandri!

    Yen relativeskku forward panrein.

    ReplyDelete
    Replies
    1. Sandhya April 16, 2013 at 5:56 AM

      வாங்கோ வாங்கோ, வணக்கம்.

      //Naan kittaththatta 35 varushaththukku mun Mahaa periyavaalai Kinatrukku andappuram paarththein. Naan kojam kullam, adanaal, yetti paarthein. Avar siriththukkonde yennaip paarththaar. Oru velichchakkeetru avar kannilirundu yen mel vizhunthathu polirundathu. Yenakku yennamo maadiri irundathu. Anda feeling innum yennaal unara mudigirathu.

      நான் கிட்டத்தட்ட 35 வருஷங்களுக்கு முன்பு மஹா பெரியவாளை அதே தாங்கள் சொல்லும் கிணற்றுக்கு அந்தப்பக்கம் பார்த்தேன். நான் கொஞ்சம் குள்ளம். அதனால் எட்டிப்பார்த்தேன். அவர் சிரித்துக்கொண்டே என்னைப்பார்த்தார்.

      ஒரு வெளிச்சக்கீற்று அவர் கண்ணிலிருந்து என் மேல் விழுந்தது போலிருந்தது. எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. அந்த உணர்வுகளை இன்னும் என்னால் உணர முடிகிறது.//

      அவர்களை இது போல தரிஸித்து, அவர்களின் அருட்பார்வை உங்கள் மேல் பட்டதில், தாங்கள் மிகவும் 'உ ய ர் ந் து' போய் விட்டீர்கள். மஹா பாக்யம் செய்திருக்கிறீர்கள். கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. நானும் இப்போது தங்களுடன், அதே சின்ன காஞ்சீபுரம், சிவாஸ்தான கிணற்றடியில், ஸ்ரீ மஹாபெரியவாளை கண்குளிர தரிஸனம் செய்து கொண்டிருப்பது போலவே உணர்கிறேன்.

      //Avarai maadiri manusha kadavul veru yaarum irundadillai, varappovathum illai. அவரை மாதிரி மனுஷ்யக்கடவுள் வேறு யாரும் இருந்தது இல்லை. இனி வரப்போவதும் இல்லை//

      வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். என்னால் அங்கு வரமுடியாத சூழ்நிலையாக இருப்பதால், நீங்களே உங்கள் வாயில் சர்க்கரை ஒரு ஸ்பூனாவது எடுத்துப்போட்டுக் கொள்ளுங்கோ. கல்கண்டாக இனிக்கும் கருத்தினைச்சொல்லியுள்ளீர்கள். என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். ;)

      //Ungal experience padiththu, mei silirththathu. Mighavum nandri! தங்களின் அனுபவத்தினைப்படித்ததும் மெய் சிலிர்த்துப்போனேன் மிகவும் நன்றி//

      மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

      //Yen relativeskku forward panrein. இந்தத்தங்களின் பதிவினை என் சொந்தக்காரர்களுக்கு அனுப்பப்போகிறேன்.//

      ரொம்பவும் சந்தோஷம்மா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான சுவாரஸ்யமான இனிய கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம். அன்புடன் VGK

      Delete
  8. தெய்வதரிசனத்தில் உங்கள் அனுபவம் இடம்பெற்றது பெரிய பொக்கிஷம் தான்.

    //எப்படியோ நான் வரைந்த ஒரு ஓவியம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அவர்களின் திருக்கரங்களுக்கு சென்று சிறிது நேரம் அவர் அதில் தன் அருட்பார்வையைச் செலுத்தி, அதனை கோயிலில் மாட்டச்சொல்லி ஆக்ஞையிட்டதே, எனக்குக்கிடைத்த மாபெரும் பொக்கிஷமான அனுக்கிரஹம் என நான் எண்ணி மகிழ்ந்தேன்.//

    உண்மை, மாபெரும் பொக்கிஷம் தான்.

    //அவரிடம் மேற்படி படத்தை ஒப்படைத்து பெரியதாக FRAME செய்து, அங்கு கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள சிவன் கோயிலில் மாட்டிவிடும் படி ஆக்ஞை செய்தார்கள்.//

    சிவன் கோயிலில் இடம் பெற்றது மிக மகிழ்ச்சி.

    ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் உங்கள் குடும்பத்தினர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கொடுத்த பரிசுகள் நீங்கள் கொடுத்து வைத்தவர் என்பதை சொல்கிறது.
    பொக்கிஷ பகிர்வை தனி புத்தகமாய் போடலாம் நீங்கள் எல்லோரும் வாங்கி படித்து பொக்கிஷமாய் வைத்துக் கொல்ளலாம்.
    வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசுApril 16, 2013 at 6:41 AM

      வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      //தெய்வதரிசனத்தில் உங்கள் அனுபவம் இடம்பெற்றது பெரிய பொக்கிஷம் தான்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //உண்மை, மாபெரும் பொக்கிஷம் தான்.//

      //சிவன் கோயிலில் இடம் பெற்றது மிக மகிழ்ச்சி. //

      மிகவும் சந்தோஷம்.

      //ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் உங்கள் குடும்பத்தினர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கொடுத்த பரிசுகள் நீங்கள் கொடுத்து வைத்தவர் என்பதை சொல்கிறது.//

      அது ஏதோவொரு எதிர்பாராத அதிர்ஷ்டம் தான்.

      //பொக்கிஷ பகிர்வை தனி புத்தகமாய் போடலாம் நீங்கள். எல்லோரும் வாங்கி படித்து பொக்கிஷமாய் வைத்துக் கொள்ளலாம். வாழ்த்துக்கள் சார்.//

      ஏதோ தொடர்பதிவு என்று நான் எழுத ஆரம்பிக்கப்போய், இன்று வரை நானும் ஏதேதோ எழுதிக்கொண்டிருப்பதும் ஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹம் தான் என்று நினைக்கிறேன். ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  9. பக்தி உணர்வு பூர்வமான அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. T.N.MURALIDHARAN April 16, 2013 at 7:12 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பக்தி உணர்வு பூர்வமான அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      Delete
  10. அம்பாளின் படம் அருமையாக இருக்கு ஐயா... அதுவும் கோவிலில் இருப்பது தான் தாங்கள் செய்த பெரும் பாக்கியம்..... தங்களின் பொக்கிஷத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை... தொடரட்டும் பொக்கிஷம்......

    ReplyDelete
    Replies
    1. VijiParthiban April 16, 2013 at 7:22 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அம்பாளின் படம் அருமையாக இருக்கு ஐயா... //

      இந்தப்பதிவினில் நான் காட்டியுள்ள படம் நான் வரைந்தது அல்ல. அது ஓர் மாதிரிப்படம் மட்டுமே.

      அதைப்பார்த்து, அதேபோல, நான் மிகப்பெரியதாக வரைந்து எடுத்துச்சென்றேன்.

      இப்போது போல எதையுமே போட்டோ பிடித்து வைத்துக்கொள்ளும் வசதிகள் அப்போது என்னிடம் இல்லை. அதனால் அதன் நகல் ஏதும் என்னிடம் இல்லை. ;(

      //அதுவும் கோவிலில் இருப்பது தான் தாங்கள் செய்த பெரும் பாக்கியம்..... தங்களின் பொக்கிஷத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை... தொடரட்டும் பொக்கிஷம்......//

      மிக்க நன்றி. ஒரு சின்ன வேண்டுகோள். இந்தத்தொடர் பதிவில் இதுவரை 9 பகுதிகள் வெளியாகியுள்ளன. அவற்றில் 6 பகுதிகளுக்கு மட்டும் தாங்கள் வருகை தந்து கருத்தளித்துள்ளதாக என்னிடம் உள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

      பகுதி-1, பகுதி-2 மற்றும் பகுதி-8 ஆகிய மூன்றுக்கும் தங்களின் கருத்துக்கள் கிடைத்தால் அவற்றை பொக்கிஷமாக நினைத்து நான் மகிழ்வேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  11. அதை தன் திருக்கரங்களால் வாங்கிக்கொண்ட ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள், தன் திருக்கரங்கள் இரண்டையும் அந்தப்படத்தில் நன்றாக ஊன்றிய வண்ணம், கீழே தரையில் அமர்ந்த நிலையில், வெகு நேரம் சுமார் 10-15 நிமிடங்கள் நன்றாக ஊன்றிப்பார்த்து, மிகவும் ரஸித்து, சந்தோஷத்துடன் புன்னகை புரிந்தார்கள்.

    நெகிழவைக்கும் அருமையான காட்சி
    பக்திப்பரவசம் தரும் அருமையான பகிர்வுகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 16, 2013 at 7:26 AM

      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!
      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!
      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய அம்பாளுக்கு என் முதற்கண் வந்தனங்கள்.

      *****அதை தன் திருக்கரங்களால் வாங்கிக்கொண்ட ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள், தன் திருக்கரங்கள் இரண்டையும் அந்தப்படத்தில் நன்றாக ஊன்றிய வண்ணம், கீழே தரையில் அமர்ந்த நிலையில், வெகு நேரம் சுமார் 10-15 நிமிடங்கள் நன்றாக ஊன்றிப்பார்த்து, மிகவும் ரஸித்து, சந்தோஷத்துடன் புன்னகை புரிந்தார்கள்.*****

      //நெகிழவைக்கும் அருமையான காட்சி. பக்திப்பரவசம் தரும் அருமையான பகிர்வுகள்..//

      தங்களின் இந்தப்பொக்கிஷம் போன்ற அருமையான வார்த்தைகளும் என்னை மிகவும் நெகிழவைக்கிறது. பக்திப்பரவசம் அடைந்தேன். ;)))))

      Delete
  12. அடியாருக்கு அடியாராக அருந்தொண்டுசெய்து வந்தவர்கள் இருவரையும் பற்றி மற்ற அனைவரும் தெரிந்து கொள்ள சிறப்பித்துப்பதிவு செய்த உயர்வான செம்மையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 16, 2013 at 7:28 AM

      //அடியாருக்கு அடியாராக அருந்தொண்டுசெய்து வந்தவர்கள் இருவரையும் பற்றி மற்ற அனைவரும் தெரிந்து கொள்ள சிறப்பித்துப்பதிவு செய்த உயர்வான செம்மையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//

      மிகவும் சந்தோஷம்.

      ஓர் தைப்பூசத்தன்று திருச்சி மலைக்கோட்டை கோயிலில், ஸ்வாமி தூக்கிச்செல்பவர்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களிடம் அன்புடனும் கருணையுடனும்பேசி, அவர்களையும் நமஸ்கரித்துக்கொண்டதாகச் சொல்லியிருந்தீர்களே!

      ஏனோ எனக்கு இந்தத்தங்களின் கருத்துக்களைப்படித்ததும் அந்த ஞாபகம் தான் வருகிறது.

      கருணை கொண்ட நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார்

      தங்களின் கருணை உள்ளத்திற்கு என் வாழ்த்துகள் + நன்றிகள்.

      Delete
  13. படங்கள் அனைத்தும் அபூர்வமான கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 16, 2013 at 7:29 AM

      //படங்கள் அனைத்தும் அபூர்வமான கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள்..//

      இதுபோல ஏராளமான ஸ்ரீமஹாபெரியவா படங்கள் ஒரு பெட்டி நிறைய பொக்கிஷங்களாகச் சேகரித்து சேர்த்து வைத்துள்ளேன். தங்களைப்போல என்னால் அவைகள் அனைத்தையும் பதிவேற்றத்தான் முடியவில்லை.

      ஏதோ ’பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல’ என்னால் கொஞ்சூண்டு மட்டுமே கொடுக்க முடிந்துள்ளது.

      Delete
  14. உண்மையில என் கிட்ட எல்லாம் இந்த மாதிரி பொக்கிஷங்கள் கிடையாது. படிக்கப் படிக்க புல்லரிக்குது. இப்ப சந்தியா (நேத்து அவகிட்ட டோஸ் வாங்கினேன். உங்க மெயில பாத்துட்டு ஏன் பின்னூட்டம் கொடுக்கலைன்னு திட்டினா)க்கு கம்ப்யூட்டர் வேண்மாம். மீண்டும் நேரம் கிடைக்கும் போது வந்து எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் கொடுக்கிறேன்.

    கொஞ்சம் பொறாமையுடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANI April 16, 2013 at 7:33 AM

      வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      //உண்மையில என் கிட்ட எல்லாம் இந்த மாதிரி பொக்கிஷங்கள் கிடையாது. படிக்கப் படிக்க புல்லரிக்குது.//

      புல்லரிக்கும் இடங்களை சீப்பால் ... இல்லை .... இல்லை, தங்க மோதிரத்தால் சொரிந்து கொள்ளுங்கள்.

      //இப்ப சந்தியா (நேத்து அவகிட்ட டோஸ் வாங்கினேன். உங்க மெயில பாத்துட்டு ஏன் பின்னூட்டம் கொடுக்கலைன்னு திட்டினா)க்கு கம்ப்யூட்டர் வேண்மாம். மீண்டும் நேரம் கிடைக்கும் போது வந்து எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் கொடுக்கிறேன்.//

      தங்கள் அருமை மகள் சந்தியாவுக்கு மட்டும் என் நன்றிகள்.

      உங்களிடம் நான் மிகுந்த கோபத்தில் இருக்கிறேனாக்கும். ஏதும் நான் இங்கு பேசுவதாக இல்லை.

      எட்டாம் பகுதிக்கு சுத்தமாக வருகை தராமல் இங்கு இப்போது ஒன்பதாம் பகுதிக்கு வருவதெல்லாம் ஒன்றும் சரியில்லையாக்கும்.

      ஏற்கனவே சில பகுதிகளில் ஏதோ ஒரு அவசரத்தில் கருத்தளித்து விட்டு, அன்னபிராஸனம் செய்ய வேண்டி பேத்தி லயாக்குட்டியுடன் குருவாயூர் போகிறேன். வந்து தொடர்வேன் என்று சொல்லிப்போனீர்கள். ஆனால் ஆளையே காணோம்.

      ஹே! குருவாயூரப்பா !! நீயே இதற்கு சாட்சியப்பா !!!

      //கொஞ்சம் பொறாமையுடன் - ஜெயந்தி ரமணி//

      ”அதுலே ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆட்டுடா பூசாரி” என்று
      ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல உள்ளது உங்கள் பொறாமையும். எப்படியோ போங்கோ ... எனக்கென்ன?

      >>>>

      Delete
  15. மொத்தத்தில் நீங்கள் ஒரு பாக்கியவான்.
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANI April 16, 2013 at 7:34 AM

      //மொத்தத்தில் நீங்கள் ஒரு பாக்கியவான். வாழ்க வளமுடன்//

      சந்தோஷம், வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அவசரக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      கொஞ்சூண்டு கோபம் ஒருபக்கம் இருந்தாலும்
      என்றும் தங்கள் மீது பிரியமுள்ள கோபு

      Delete
  16. ஒரே ஒரு வேளை மட்டும், ஒரு கொட்டாங்கச்சி அளவு நெல் பொரியில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்ததாகச் சொல்வார்கள். அவர்களின் தபஸ் வலிமையினால் மட்டுமே நீண்ட காலம் ஆரோக்யமாக வாழ்ந்துள்ளார்கள்.

    அந்த அவல் பிரியமாக விரும்பிச்சாப்பிடுகிறார் என்ற பொருளில் ஒரு பத்திரிகையில் எழுதிவிட அதற்காக சில நாட்கள் உண்ணாமல் நோன்பு நோற்றாராம் ..

    முற்றும் துறந்த் முனிவராக வாழ்ந்துகாட்டியவருக்கு ஏது விருப்பு வெறுப்பு -- அதுவும் உணவில் ...!

    கொஞ்சம் வாழைக்காய் மட்டுமே சாப்பிடுவாராம் ..
    மற்ற காய் கனிகள் போன்றவை விதைத்தால் முளைக்கும் திறன் பெற்றவை ..வாழை மட்டுமே விதை இல்லாதது ..
    கர்ம வினைக்களைக் களைய இப்படி எளிமையாக வாழ்ந்துகாட்டியவர் ..பாரதம் முழுவதும் அந்த திருபாதங்களாலே நடந்து புனிதப்படுத்திய மஹான் ..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 16, 2013 at 7:39 AM

      *****ஒரே ஒரு வேளை மட்டும், ஒரு கொட்டாங்கச்சி அளவு நெல் பொரியில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்ததாகச் சொல்வார்கள். அவர்களின் தபஸ் வலிமையினால் மட்டுமே நீண்ட காலம் ஆரோக்யமாக வாழ்ந்துள்ளார்கள்*****

      //அந்த அவல் பிரியமாக விரும்பிச்சாப்பிடுகிறார் என்ற பொருளில் ஒரு பத்திரிகையில் எழுதிவிட அதற்காக சில நாட்கள் உண்ணாமல் நோன்பு நோற்றாராம் ..//

      நானும் இதைக்கேள்விப்பட்டுள்ளேன். ;(

      //முற்றும் துறந்த் முனிவராக வாழ்ந்துகாட்டியவருக்கு ஏது விருப்பு வெறுப்பு -- அதுவும் உணவில் ...! //

      மிகச்சரியாகப் புரிந்துகொண்டு சொல்லியுள்ளீர்கள்.

      //கொஞ்சம் வாழைக்காய் மட்டுமே சாப்பிடுவாராம் .. மற்ற காய் கனிகள் போன்றவை விதைத்தால் முளைக்கும் திறன் பெற்றவை ..வாழை மட்டுமே விதை இல்லாதது ..//

      ஆஹா, வாழையைப்பற்றி அருமையானதொரு விளக்கமும் கொடுத்து விட்டீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். எதுவுமே நீங்கள் சொல்லி நான் கேட்டால், மனதில் அப்படியே, பசுமரத்து ஆணிபோலப் பதிந்து போகிறது.

      ஆனால் ஏதும் வெளிப்படையாகச் சொல்லத்தான் மாட்டேன் என்கிறீர்கள். ;( ஏதோ இதுபோன்று பிரமயம் வரும்போது மட்டுமே இவைகளையெல்லாம் தங்களிடமிருந்து நான் கேட்டு மகிழ முடிகிறது.

      //கர்ம வினைக்களைக் களைய இப்படி எளிமையாக வாழ்ந்துகாட்டியவர் .. பாரதம் முழுவதும் அந்த திருபாதங்களாலே நடந்து புனிதப்படுத்திய மஹான் ..//

      ஆமாம். அவர்கள் பாதம் பட்ட இடங்களெல்லாம், பாரதத்தில் இன்றும் செழிப்புடனேயே விளங்கி வருகின்றன.

      கர்னூலில் அவர்கள் இருந்த போது இரண்டு முறை தரிஸிக்கச் சென்று வந்தோம். அப்போது ஓர் இரவு, ஸ்ரீ மஹாஸ்வாமிகள் பிக்ஷையாக எடுத்துக்கொண்ட நிர்மால்ய பிரஸாதம் எனச்சொல்லி எங்களுக்கு ஓர் தையல் இலையில் சுருட்டி அளிக்கப்பட்டது.

      ஏதோ ஒன்று ரவா கேசரி போல ஆனால் வெள்ளை நிறத்தில் [கல்கண்டு பாத் போல] + மாதுளைப்பழ முத்துக்கள் + நெல்பொரி ஆகியவை. மிகவும் கிடைத்தற்கு அரிய பொக்கிஷப்பிரஸாதம் எனச்சொல்லியே கொடுத்தார்கள். நாங்களும் ஆளுக்குக் கொஞ்சம் சாப்பிட்டோம்.

      [காலையில் எழுந்ததும், காஃபி கூட சாப்பிடாமல், குமுட்டியை அலம்பிவிட்டு, அதில் கரி போட்டு, தேங்காய் நாரால் பற்றவைத்து, ஓர் சுத்தமான இலுப்பச்சட்டியை அதில் போட்டு, மடியாகக் குளித்துவிட்டு, நல்ல நெல்லை அதில் இட்டு பொரித்து, பிறகு அதில் பொரிந்து வரும் பொரியை ஓர் புது முறத்தில் போட்டு, நெல்லை முழுவதுமாக நீக்கி விட்டு, வெறும் பொரியை மட்டும் காற்றுப்புகாதபடி ஒரு சம்படத்தில் அடைத்துக்கொண்டு, ஸ்ரீ பெரியவா தரிஸனத்திற்குப்போகும் போது எடுத்துச்செல்வோம்.

      அது மட்டும் அவர்கள் பிக்ஷையில் நிச்சயமாக இடம் பெற்று, அவர்களின் குட்சிக்குள் செல்லக்கூடும் எனக் கேள்விப்பட்டதிலிருந்து இது போல சில முறைகள் செய்தோம். அதெல்லாம் இப்போது இனிமையான நினைவலைகளாக ஞாபகம் வருகின்றது.]

      Delete
  17. நாராயணீயம் பாராயணம் செய்யும் போது வந்து

    மூலம் இல்லாமலா = என்ற வார்த்தைகளால் மூலத்தைத்தேட வைத்து பாகவதம் கற்க வழிகாட்டினார் ..

    சுந்தரகாண்டம் ,தேவிமஹாத்மியம், திருப்புகழ், பகவத்கீதை , நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரம் ,மூகபஞ்சதி என்று அரிய பெரிய பொக்கிஷங்களை கற்றுத்தர நிறைய குரு கிடைத்தார்கள்..

    எத்தனை அர்த்தமுள்ள விஸ்வரூப அருட்கடாட்சத்தை பெரியவரின் வாக்கு வர்ஷித்திருக்கிறது என்று எண்ணிப்பார்த்தால் மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது ...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 16, 2013 at 7:52 AM

      //நாராயணீயம் பாராயணம் செய்யும் போது வந்து

      மூலம் இல்லாமலா = என்ற வார்த்தைகளால் மூலத்தைத்தேட வைத்து பாகவதம் கற்க வழிகாட்டினார் ..//

      அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். அவர்கள் மூலம் தாங்களும் தங்கள் மூலம் நாங்களும், எதற்கும் மூலம் தான் முக்கியம் என்பதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது. எல்லாவற்றிற்கும் மூலம் தான் மூலம்.

      “மூலம்” என்ற நக்ஷத்திரத்தன்று, ஸ்ரீபெரியவா முழுவதும் மெளனமாகவே இருப்பார்கள்.

      மூலத்தை உணரவைத்த மூல மூர்த்தியை நினைவு படுத்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      //சுந்தரகாண்டம் ,தேவிமஹாத்மியம், திருப்புகழ், பகவத்கீதை , நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரம் ,மூகபஞ்சதி என்று அரிய பெரிய பொக்கிஷங்களை கற்றுத்தர நிறைய குரு கிடைத்தார்கள்..//

      இதுபோல தங்களுக்கு குரு கிடைத்ததற்கு மூல காரணம் ஜகத்குருவின் கருணை என்கிறீர்கள். உங்களைப்பற்றி கேட்கக் கேட்க எனக்கு உங்கள் மேல் மிகவும் பொறாமையாகவும், மிகப்பெருமையாகவும் உள்ளது. என்னவெல்லாம் படித்துத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். YOU ARE SO SO SO SO GREAT ! ;)

      //எத்தனை அர்த்தமுள்ள விஸ்வரூப அருட்கடாட்சத்தை பெரியவரின் வாக்கு வர்ஷித்திருக்கிறது என்று எண்ணிப்பார்த்தால் மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது ...//

      எல்லாவிஷயங்களையும் இப்படி அற்புதமாக அறிந்து வைத்துள்ள ஞான சரஸ்வதி போன்ற தங்களை இந்த வலையுலகின் மூலம் எனக்கு அடையாளம் காட்டியுள்ளதற்கும், அந்த மஹானின் கருணை மட்டுமே காரணம், என்பதை நான் உணர்கிறேன்.

      ஞான சரஸ்வதியான தங்களை உடனடியாக தரிஸிக்க வேண்டும் போல, எனக்குள் ஒரு ஆவல் பிறந்துள்ளது. ;)

      Delete
  18. இவ்வளவு மிகப்பெரிய படத்தினை FRAME செய்து வீட்டில் மாட்டுவது என்பதோ, அதைப்பாதுகாத்து, பராமரிப்பது என்பதோ நாளடைவில் மிகுந்த சிரமமாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தே கோயிலில் மாட்டச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருப்பார்கள், என என்னையே நான் சமாதானம் செய்துகொண்டேன்.

    எத்தனை அர்த்தம் பொதிந்த உத்தரவு ..!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 16, 2013 at 7:56 AM

      *****இவ்வளவு மிகப்பெரிய படத்தினை FRAME செய்து வீட்டில் மாட்டுவது என்பதோ, அதைப்பாதுகாத்து, பராமரிப்பது என்பதோ நாளடைவில் மிகுந்த சிரமமாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தே கோயிலில் மாட்டச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருப்பார்கள், என என்னையே நான் சமாதானம் செய்துகொண்டேன். *****

      //எத்தனை அர்த்தம் பொதிந்த உத்தரவு ..!//

      ஆமாம் மேடம். 28 வயதில் என்னால் உணர முடியாத அதை நான் இப்போது நன்றாகவே உணர்கிறேன்.

      எங்கள் வீட்டில் ஏராளமான மிகப்பெரிய ஸ்வாமி படங்கள் பல இருந்தன. மிகவும் பழமை வாய்ந்தவை. வைக்க இடமில்லை. நாளடைவில் அவை ஒரு மாதிரி அழுக்கடைந்து விட்டன.

      வேறு வழியின்றி ஒரு நாள் காரில் ஏற்றி, ஓர் கோயிலில் கொண்டு போய் வைத்து விட்டு வரும்படியாக நேர்ந்தது.

      ஸ்ரீ மஹாபெரியவா எது சொன்னாலும் / என்ன உத்தரவு பிரப்பித்தாலும், நிச்சயம் அதில் ஓர் அர்த்தம் பொதிந்து தான் இருக்கக்கூடும். ;)

      Delete
  19. மிகப்பெரிய வரதராஜ பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரத்தை படுவேகமாக பிரதக்ஷணம் செய்யக்கிளம்பி விட்டார்கள், எனக்கேள்விப்பட்டு நானும் ஓடினேன்.

    அவர் சாதாரணமாகவே மிக வேகமாக நடப்பார் என்று கேள்விப்பட்டு நேரிலும் பார்த்திருக்கிறோம் ..

    காந்திஜி அவர்களும் வேகமான நடைதானாம் ..

    மற்றவர்கள் அவர்களைப்பின்பற்ற ஓடவேண்டியதிருக்குமாம் ...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 16, 2013 at 8:00 AM

      *****மிகப்பெரிய வரதராஜ பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரத்தை படுவேகமாக பிரதக்ஷணம் செய்யக்கிளம்பி விட்டார்கள், எனக்கேள்விப்பட்டு நானும் ஓடினேன்*****.

      //அவர் சாதாரணமாகவே மிக வேகமாக நடப்பார் என்று கேள்விப்பட்டு நேரிலும் பார்த்திருக்கிறோம் .//

      ஆமாம் மேடம், அவர்கள் மிகவும் வேகமாகவே நடப்பார்கள். நாம் ஓடித்தான் அவர்களைத் தொடரமுடியும்.

      கடும் தபஸ் செய்ததனால் ஏற்பட்டுள்ள பலனும், பஞ்சு போன்ற தேகவாகுமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

      //காந்திஜி அவர்களும் வேகமான நடைதானாம் ..//

      ஆமாம் நானும் படித்துள்ளேன். வீடியோக்களிலும் இதைப் பார்த்துள்ளேன் / கவனித்துள்ளேன்.

      //மற்றவர்கள் அவர்களைப்பின்பற்ற ஓடவேண்டியதிருக்குமாம் ...//

      ;)))) ஆம் உண்மை தான்.

      [மஹாத்மா காந்திஜி அவர்கள் ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்தபோது, மூதறிஞர் இராஜாஜி அவர்களுடன் மஹாஸ்வாமிகளை தரிஸிக்க வந்துள்ளார்கள்.

      சாயங்காலம் 6 மணி முதல் 7 மணி வரை தரிஸித்து விட்டு, அந்த சந்திப்பில் இருவருமாக பல உலக விஷயங்களைப்பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

      காந்திஜி தன் இரவு உணவை சாயங்காலம் மிகச்சரியாக 6.30 மணிக்குள் முடித்து விடக்கூடியவராம். அதைப்பற்றி இராஜாஜி அவர்கள், காந்திஜிக்கு நினைவு படுத்தியுள்ளார்கள்.

      அதற்கு காந்திஜி, ”பரவாயில்லை, எனக்கு இன்று இரவு உணவே தேவையில்லை. ஸ்வாமிகள் தரிஸனமே இன்று எனக்குக் கிடைத்துள்ள மாபெரும் இரவு விருந்தாகும்” எனச் சொல்லி விட்டாராம்.

      இதை நான் ஓர் புத்தகத்தில் படித்தேன். ]

      Delete
    2. தமிழ்நாடு இல்லை.பாலக்காடு.

      Delete
    3. [மஹாத்மா காந்திஜி அவர்கள் ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்தபோது, மூதறிஞர் இராஜாஜி அவர்களுடன் மஹாஸ்வாமிகளை தரிஸிக்க வந்துள்ளார்கள்.

      சாயங்காலம் 6 மணி முதல் 7 மணி வரை தரிஸித்து விட்டு, அந்த சந்திப்பில் இருவருமாக பல உலக விஷயங்களைப்பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

      காந்திஜி தன் இரவு உணவை சாயங்காலம் மிகச்சரியாக 6.30 மணிக்குள் முடித்து விடக்கூடியவராம். அதைப்பற்றி இராஜாஜி அவர்கள், காந்திஜிக்கு நினைவு படுத்தியுள்ளார்கள்.

      அதற்கு காந்திஜி, ”பரவாயில்லை, எனக்கு இன்று இரவு உணவே தேவையில்லை. ஸ்வாமிகள் தரிஸனமே இன்று எனக்குக் கிடைத்துள்ள மாபெரும் இரவு விருந்தாகும்” எனச் சொல்லி விட்டாராம்.

      இதை நான் ஓர் புத்தகத்தில் படித்தேன். ]

      - VGK

      -=-=-=-=-=-=-

      Narayanan Varagooran August 30, 2014 at 8:44 AM

      //தமிழ்நாடு இல்லை.பாலக்காடு.//

      -=-=-=-=-=-

      Dear Sir,

      வாங்கோ, வணக்கம்.

      //தமிழ்நாடு இல்லை. பாலக்காடு//

      அப்படியா ! இருக்கலாம். இருக்கலாம்.

      இங்கு அன்புடன் வருகைதந்து, இந்த என் கட்டுரையைப் பொறுமையாக வாசித்து, வந்து குவிந்திருக்கும் பின்னூட்டங்களையும் ரஸித்து வாசித்து, இதுபோலக் கூடுதல் தகவல் கொடுத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  20. விநாயக சதுர்த்தி பூஜை ஸ்ரீ மஹாபெரியவா சந்நிதானத்திலேயே மிகச்சிறப்பாக நடைபெற்றதை நேரில் காணும் பாக்யம் பெற்றோம்.

    கண்கள் பெற்றதன் பயனே பெற்றதாக உணரவைத்த பகிர்வுகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 16, 2013 at 8:02 AM

      *****விநாயக சதுர்த்தி பூஜை ஸ்ரீ மஹாபெரியவா சந்நிதானத்திலேயே மிகச்சிறப்பாக நடைபெற்றதை நேரில் காணும் பாக்யம் பெற்றோம்.*****

      //கண்கள் பெற்றதன் பயனே பெற்றதாக உணரவைத்த பகிர்வுகள்..//

      ஆஹா, அதுவும் ஓர் விநாயக சதுர்த்தியாக நேர்ந்துள்ளது பாருங்கோ ! அது தான் அதில் உள்ள மேலும் சிறப்பாக்கும். ;)))))

      Delete
  21. மிகவும் பாக்கியம் செய்திருக்கிறீர்கள் நீங்கள். இப்படி
    மகா பெரியவரின் அருளாசி நேரடியாக கிடைத்திருக்கிறதே.
    உங்கள் புத்தகம் பதிப்பகம் எல்லாம் குறித்துக் கொண்டேன்.

    தொண்டர்களைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது மிகவும் விசேஷம்.
    அவர்களைப் பற்றி என்னைப் போன்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பேயில்லை. வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி.
    அடுத்து என்ன...... தெரிந்து கொள்ள ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam April 16, 2013 at 8:05 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிகவும் பாக்கியம் செய்திருக்கிறீர்கள் நீங்கள். இப்படி
      மகா பெரியவரின் அருளாசி நேரடியாக கிடைத்திருக்கிறதே.
      உங்கள் புத்தகம் பதிப்பகம் எல்லாம் குறித்துக் கொண்டேன். //

      மிகவும் சந்தோஷம்,

      //தொண்டர்களைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது மிகவும் விசேஷம். அவர்களைப் பற்றி என்னைப் போன்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பேயில்லை. வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி.//

      தரிஸனத்திற்கு சென்ற போதெல்லாம், இவர்கள் இருவரும், என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தவர்கள். பல மணி நேரங்கள் நான் அவர்களில் யாராவது ஒருவருடன் பேசிக்கொண்டே இருப்பேன். பல சுவையான, அபூர்வமான, அழகான நிகழ்வுகளையும் தகவல்களையும் எனக்கு கதைபோலச் சொல்லியுள்ளார்கள். என்றும் மறக்கவே முடியாத மிக நல்ல மனிதர்கள்.

      //அடுத்து என்ன...... தெரிந்து கொள்ள ஆவல்.//

      20.04.2013 சனிக்கிழமை இரவு இதன் அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.


      Delete
  22. மதிப்பான பதிவு. மிகுந்த பேறு பெற்றவர் நீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். April 16, 2013 at 8:08 AM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      நாளைக்கு ஸ்ரீராமநவமி . ”ஸ்ரீராமஜயம்” நல்வாழ்த்துகள்.

      //மதிப்பான பதிவு. மிகுந்த பேறு பெற்றவர் நீங்கள்.//

      தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.

      Delete
  23. ரொம்ப பெரிய பகிர்வு.தொடருங்க,ஒன்பதுவரை என் பகிர்வில் எண்ட்ரி செய்தாச்சு.

    ReplyDelete
    Replies
    1. Asiya Omar April 16, 2013 at 8:14 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ரொம்ப பெரிய பகிர்வு.தொடருங்க.//

      ரொம்ப பெரிய கருத்துக்களுக்கு நன்றிங்கோ. ஆகட்டும் தொடகிறேனுங்கோ.

      //ஒன்பதுவரை என் பகிர்வில் எண்ட்ரி செய்தாச்சு.//

      ஆஹா, மிகவும் சந்தோஷம்...ங்க.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் நன்றிகள், மேடம்.

      Delete
  24. மிகமிக பக்திமயமான பதிவு ஐயா. உண்மையில் மிகவும் பாக்கியசாலிதான் நீங்கள். சொல்வதற்கு அதிகம் இல்லை.

    இறை அருளும் குருவருளும் கிடைக்கப் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

    எல்லாம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. மேலும் மேலும் சிறப்படைந்து வாழ்க்கை அமோகமாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.

    வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. இளமதி April 16, 2013 at 8:27 AM

      வாங்கோ, என் மனதுக்குப் பிடித்தமான கவிதாயினி இளமதி அவர்களே! வணக்கம். எல்லாம் நலம் தானே?

      //மிகமிக பக்திமயமான பதிவு ஐயா. உண்மையில் மிகவும் பாக்கியசாலிதான் நீங்கள். சொல்வதற்கு அதிகம் இல்லை.//

      அடடா, ஏன் இப்படி? ‘சொல்வதற்கு அதிகம் இல்லை’ன்னு சொல்லிவிட்டு நழுவ நினைக்கிறீர்களே! இது நியாயமா? ;(

      //இறை அருளும் குருவருளும் கிடைக்கப் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.//

      மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீகள்.

      //எல்லாம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.//

      எனக்கு என்ன கிடைத்துள்ளது, என்ன கிடைக்கவில்லை. மேலும் என்ன கிடைக்க நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், என்பதெல்லாம் என்னைவிட உங்களுக்கே மிக நன்றாத் தெரியும். ஒருவேளை எல்லாவற்றையும் சப்ஜாடாக நீங்கள் மறந்திருக்கலாம். எல்லாம் கடவுள் செயல். யார் யாருக்கு என்னென்ன கொடுப்பினை உள்ளதோ அது மட்டுமே நிச்சயமாக ஒருநாள் கிடைக்கக்கூடும்.

      //மேலும் மேலும் சிறப்படைந்து வாழ்க்கை அமோகமாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன். வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!//

      மிக்க மகிழ்ச்சி.

      நாளுக்கு நாள் உங்கள் எழுத்தில் ஓர் முதிர்ச்சியும், அழகும், வசீகரமும் என்னால் உணரப்படுகிறது.

      இங்கு சொல்லும் கருத்துக்களில் மட்டுமல்ல. தங்கள் பதிவுகளிலும் தான் சொல்கிறேன்.

      மிகவும் அழகாக பதிவுகள் தருகிறீர்கள்.

      தங்களின் மனதினில் நெடுநாள் தேக்கி வைத்திருக்கும் உணர்வுகளையும், அசாத்தியமான தனித் திறமைகளையும், குற்றால அருவி நீர் போல, மிக நன்றாகவே வெளிப்படுத்தி வருகிறீர்கள்.

      இப்போத்தான் 01.12.2012 இல் வலைப்பதிவு ஆரம்பித்து, பொறுமையாக நிதானமாக, மிகச்சிறப்பாக இதுவரை 17 பதிவுகள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

      உங்களுக்கு இதுவரை 44 FOLLOWERS கிடைத்துள்ளார்கள்.

      நிறைய பேர்கள் ஒவ்வொரு பதிவுக்கும் வருகை தந்து கருத்தளித்து தங்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

      தாங்களும் பல பதிவுகளுக்குச்சென்று கருத்துக்கூறி வருகிறீர்கள்.

      மிகக்குறுகிய காலத்தில் பலமுறை வலைச்சரத்தில் தங்களைப்பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்கள்.

      எல்லாவற்றையுமே கவனித்து வரும் எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

      இவ்வாறு புகழின் உச்சியில் ஏறிக்கொண்டு வரும் தாங்கள், என்னையும் என் வலைத்தளத்தையும் மறக்காமல் இந்த தொடர்பதிவுக்கு, இதுவரை தொடர்ந்து வருகை தந்து கருத்தளித்து வருவது மேலும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ய்ங்மூன் மேடம்.

      Delete
  25. ஆஆஆஆஆஆஆ மீ லாண்டட்ட்ட்ட்ட்ட்.... மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:))...

    ReplyDelete
    Replies
    1. athira April 16, 2013 at 10:00 AM

      ஆஹா, வாங்கோ அதிரா வாங்கோ. வணக்கம்.

      //ஆஆஆஆஆஆஆ மீ லாண்டட்ட்ட்ட்ட்ட்....//

      ஆஆஆஆஆஆஆஆ அதற்குள் லாண்டட்ட்ட்ட்ட் ஆஆ.

      எனினும் மிக்க மகிழ்ச்சி.

      உங்களைக்காணாமல் எல்லோரும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகத்தான் இருந்தோம். ;(

      ஒபாமா அங்கிள் உங்களை பனி ஆராய்ச்சி மேற்கொள்ளும் பணி கொடுத்து அண்டார்டிக்காவுக்கு அனுப்பியதாகச் சொன்னீர்களே, அந்த வேலை வெற்றிகரமாக முடிந்ததா?

      [பாவம் அந்த ஒபாமா அங்கிள் ;) ]

      //மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:))...//

      நீங்க தான் எதிலும் எங்கேயேயும் எப்போதும் 1ஸ்ட்டூஊஊஊஊ.
      டோண்ட் வொர்ர்ர்ரீஈஈஈஈஈஈஈஈஈ, அதிராஆஆஆஆஆஆ.

      Delete
  26. தாமதமான, இனிய விஜய வருஷ வாழ்த்துக்கள் கோபு அண்ணன்... இனிப்பாகக் கொண்டாடினனீங்களோ?..

    ReplyDelete
    Replies
    1. athira April 16, 2013 at 10:01 AM

      //தாமதமான, இனிய விஜய வருஷ வாழ்த்துக்கள் கோபு அண்ணன்...//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      //இனிப்பாகக் கொண்டாடினனீங்களோ?..//

      இல்லை. தாங்கள் ஊரில் இல்லாததால், விஜயாவிடம் அவ்வளவாக இனிப்பு இல்லை.

      Delete
  27. //அடியேன் எழுதியதோர் அனுபவமும் அதில் பக்கம் எண்கள்: 155-157 இல்

    இடம் பெற்றுள்ளது. அந்தப் புத்தகத்தை இன்றும் நான் மிக உயர்ந்த

    பொக்கிஷமாக என்னிடம் வைத்துள்ளேன். //

    வாழ்த்துக்கள்... புத்தகங்களில் வெளிவரும் நம் எழுத்துக்கள் அனைத்தும் பொக்கிஷமேதான்ன்ன்....

    ReplyDelete
    Replies
    1. athira April 16, 2013 at 10:02 AM

      *****அடியேன் எழுதியதோர் அனுபவமும் அதில் பக்கம் எண்கள்: 155-157 இல் இடம் பெற்றுள்ளது. அந்தப் புத்தகத்தை இன்றும் நான் மிக உயர்ந்த பொக்கிஷமாக என்னிடம் வைத்துள்ளேன். *****

      //வாழ்த்துக்கள்... புத்தகங்களில் வெளிவரும் நம் எழுத்துக்கள் அனைத்தும் பொக்கிஷமேதான்ன்ன்....//

      மிக்க மகிழ்ச்சி அதிரா, அதே அதே சபாபதே, அதிரபதே ! ;)

      Delete
  28. ஆஆஆஆஆஆஆஆ ஒரே பதிவிலேயே நிறைய விஷயங்கள்.. எல்லோருக்கும் கிடைக்காது இப்படி தெய்வீக அனுபவங்கள்.. உங்களுக்கு கிடைச்சிருக்கு அந்த வகையில் நீங்க கொடுத்து வச்சவரே....

    ReplyDelete
    Replies
    1. athira April 16, 2013 at 10:51 AM

      //ஆஆஆஆஆஆஆஆ ஒரே பதிவிலேயே நிறைய விஷயங்கள்.. எல்லோருக்கும் கிடைக்காது இப்படி தெய்வீக அனுபவங்கள்.. உங்களுக்கு கிடைச்சிருக்கு அந்த வகையில் நீங்க கொடுத்து வச்சவரே....//

      மிக்க மகிழ்ச்சி அதிரா.

      இந்தத் தொடரின் பகுதி-4, பகுதி-5 மற்றும் பகுதி-6 க்கு மட்டும் தங்களின் பொன்னான கருத்துக்கள் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை அதிரா.

      அவற்றிற்கும் தாங்கள் கருத்தளித்தால் அவற்றையும் நான் பொக்கிஷமாக நினைத்து மகிழ்வேனாக்கும். ஹூக்க்க்க்கும் ! ;)

      தங்களின் அன்பான வருகைக்கும், அசத்தலான எல்லாக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.

      Delete
  29. படிக்கும்போதே மனமெல்லாம் பரவசம் ..மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் அனுபவங்கள் .
    அந்த படம் இன்னமும் அங்கே இருக்கிறதா அண்ணா ..
    பதிவில் இணைத்துள்ள படங்களும் மிக அரிய பொக்கிஷம் !!!!
    நீங்கள் கொடுத்து வைத்தவர் ,இறைவனின் அருள் கொடுத்துவைத்தவர் .

    ReplyDelete
    Replies
    1. angelin April 16, 2013 at 12:53 PM

      வாங்கோ நிர்மலா, வாங்கோ, வணக்கம்.

      //படிக்கும்போதே மனமெல்லாம் பரவசம் .. மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் அனுபவங்கள்.//

      மிக்க மகிழ்ச்சி, நிர்மலா.

      //அந்த படம் இன்னமும் அங்கே இருக்கிறதா அண்ணா ..//

      தெரியாதும்மா. 1978க்குப்பிறகு நான் அந்த இடத்திற்கு திரும்பச்செல்லும் வாய்ப்பு ஏதும் எனக்கு அமையவில்லை. 1979 இல், கோயில் கட்டி முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது மட்டும் கேள்விப்பட்டேன்.

      //பதிவில் இணைத்துள்ள படங்களும் மிக அரிய பொக்கிஷம் !!!! //

      ஆம், அவைகளெல்லாம் மிகவும் RARE PHOTOS. இதுபோன்ற ஸ்ரீமஹாபெரியவா போட்டோக்கள் என்னிடம் நிறைய சேகரித்து வைத்துள்ளேன். நூற்றுக்கணக்கில் பொக்கிஷமாக உள்ளன.

      //நீங்கள் கொடுத்து வைத்தவர், இறைவனின் அருள் கொடுத்துவைத்தவர் .//

      மிகவும் சந்தோஷம் நிர்மலா. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  30. மகாபெரியவருடனான தங்கள் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. மகாபெரியவரின் ஆசி பெற்ற, தாங்கள் வரைந்த காமாட்சியின் திருவுருவப் படத்தைக் காணும் பாக்கியம் எங்களுக்கும் கிட்டியிருந்தால் இன்னும் மகிழ்வாயிருந்திருக்கும்.

    ராயபுரம் ஸ்ரீ பாலு அவர்கள் பற்றியும் திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் பற்றியும் பகிர்ந்திருந்த செய்திகள் அனைத்தும் நெகிழவைத்தன. உன்னதமான உள்ளங்கள்!

    பொக்கிஷங்களின் மதிப்பு கூடிக்கொண்டே போவதை அறிந்து வியக்கிறேன். பாராட்டுகள் வை.கோ.சார்.

    ReplyDelete
    Replies
    1. கீதமஞ்சரி April 16, 2013 at 4:59 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மகாபெரியவருடனான தங்கள் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைத்தன.//

      மிகவும் சந்தோஷம்.

      //மகாபெரியவரின் ஆசி பெற்ற, தாங்கள் வரைந்த காமாட்சியின் திருவுருவப் படத்தைக் காணும் பாக்கியம் எங்களுக்கும் கிட்டியிருந்தால் இன்னும் மகிழ்வாயிருந்திருக்கும்.//

      அந்தக்காலத்தில் [1978 என் வயது 27-28] அதை ஒரு போட்டோ எடுக்கணும் என எனக்குத்தோன்றவில்லை. அதற்கான கேமரா போன்ற வசதி வாய்ப்புக்களும் என்னிடம் இல்லை. மேலும், அந்தப்படம் அங்கேயே தங்கிவிடப்போகிறது என்பதையும் நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் அந்தக் காமாக்ஷியின் திருவுருவப்படத்தை என்னால் இங்கு காட்ட இயலவில்லை.

      //ராயபுரம் ஸ்ரீ பாலு அவர்கள் பற்றியும் திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் பற்றியும் பகிர்ந்திருந்த செய்திகள் அனைத்தும் நெகிழவைத்தன. உன்னதமான உள்ளங்கள்! //

      ஆமாம். அவர்கள் இருவருமே மிகவும் உன்னதமான உள்ளங்கள் படைத்தவர்களே.

      //பொக்கிஷங்களின் மதிப்பு கூடிக்கொண்டே போவதை அறிந்து வியக்கிறேன். பாராட்டுகள் வை.கோ.சார். //

      மிக்க ம்கிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர்ச்சியான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  31. இந்தப் புத்தகம் இப்போது கிடைக்கும கோபு சார். அன்னையின் அருள் விரவி நிற்கும் பதிவு.
    காமாட்சியின் அருள் படம்,ஓவியம் என்றே நம்பமுடியவைல்லை .அத்தனை அழகாக் இருக்கிறது.
    ஸ்வாமிகளின் அருள் பிரவாகம் உங்கள் பதிவு வழியாக எங்களைவந்து அடைகிறது

    இந்த அனுபவங்களை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது
    இதையே நீங்கள் ஒடு பொக்க்கிஷப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும்.வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. வல்லிசிம்ஹன் April 16, 2013 at 6:07 PM

      வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

      //இந்தப் புத்தகம் இப்போது எங்கே கிடைக்கும கோபு சார்.//

      தெரியவில்லை மேடம். அதில் ஏதோவொரு பதிப்பக விலாசம் படிக்கும்படியாக உள்ளது, பாருங்கோ. அங்கு ஒருவேளை கிடைக்கலாமோ என்னவோ தெரியவில்லை.

      //அன்னையின் அருள் விரவி நிற்கும் பதிவு.//

      சந்தோஷம்.

      //காமாட்சியின் அருள் படம், ஓவியம் என்றே நம்பமுடியவில்லை .அத்தனை அழகாக் இருக்கிறது.//

      இங்கு இந்தப்பதிவில் நான் காட்டியுள்ள காமாக்ஷி அம்மன் படம் நான் வரைந்தது அல்ல. அதுபோன்ற ஓர் சிறிய படத்தினை மாடலாக வைத்து மிகப்பெரிய அளவில் நான் வரைந்து சென்றிருந்தேன்.

      //ஸ்வாமிகளின் அருள் பிரவாகம் உங்கள் பதிவு வழியாக எங்களை வந்து அடைகிறது//

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //இந்த அனுபவங்களை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது. இதையே நீங்கள் ஒரு பொக்க்கிஷப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும். வேண்டுகோள்.//

      தங்களின் ஆலோசனை நல்லாத்தான் இருக்கு. மிக்க நன்றி.

      ஏதோ தொடர்பதிவு என்று நான் எழுத ஆரம்பிக்கப்போய், இன்று வரை நானும் ஏதேதோ எழுதிக்கொண்டிருப்பதும் ஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹம் தான் என்று நினைக்கிறேன். ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  32. படிக்கும்போதே மனமெல்லாம் பரவசம் ..மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் அனுபவங்கள் .பக்திப்பரவசம் தரும் அருமையான பகிர்வுகள்..நீங்கள் கொடுத்து வைத்தவர் ,இறைவனின் அருள் கொடுத்துவைத்தவர்.

    M J Raman, Vashi

    ReplyDelete
    Replies
    1. Manakkal April 16, 2013 at 6:59 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //படிக்கும்போதே மனமெல்லாம் பரவசம் ..மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் அனுபவங்கள் .பக்திப்பரவசம் தரும் அருமையான பகிர்வுகள்..நீங்கள் கொடுத்து வைத்தவர் இறைவனின் அருள் கொடுத்துவைத்தவர்.//

      தங்களின் தமிழ் FONT என்னாச்சு? Copy & Paste போட்டுள்ளீர்களே, அதனால் தான் கேட்கிறேன்.

      எனினும் தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      Delete
  33. திருவருளும் , குருவருளும் கூடி அருளும்
    அருமையான பொக்கிஷப்பகிர்வுகளுக்கு நமஸ்காரங்கள்...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 16, 2013 at 7:49 PM

      //திருவருளும் , குருவருளும் கூடி அருளும் அருமையான பொக்கிஷப்பகிர்வுகளுக்கு நமஸ்காரங்கள்...//

      திருவருள் + குருவருளுடன், என் அம்பாள் அருளும் ஸ்பெஷலாக, அருமையாகச் சேர்ந்துள்ளது என்பது, தங்களின் அழகான ஒன்பது [நவராத்திரி போல] செந்தாமரைகள் பொக்கிஷமாக இந்த ஒரே பதிவுக்குக் கிடைத்து, மனதை மகிழ்வித்துள்ளதிலிருந்து என்னால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.

      நான் கொடுத்துள்ள தலைப்பும் அதையே தான் சொல்கிறது என நினைக்கிறேன். இவ்வாறு அதிசய நிகழ்வை நடத்தி, பதிவினைச் சிறப்பித்துக்கொடுத்துள்ளீர்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள், மேடம்.

      தங்களின் அன்பு நமஸ்காரங்களுக்கு ஸ்ரீ மஹாபெரியவாளின் பரிபூர்ண அனுக்கிரஹம் கிடைக்கப்பிரார்த்திக்கிறேன்.

      Delete
  34. பொக்கிஷம் மாபெரும் பொக்கிஷம் தான்.
    என்னால முடியாதப்பா இப்படி எழுத....ம்ம்....
    களைக்கிறது. முயற்சிக்கு வாழ்த்து. இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. vettha.(kovaikavi)April 16, 2013 at 11:28 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பொக்கிஷம் மாபெரும் பொக்கிஷம் தான். என்னால முடியாதப்பா இப்படி எழுத....ம்ம்.... களைக்கிறது. முயற்சிக்கு வாழ்த்து. இறையாசி நிறையட்டும். வேதா. இலங்காதிலகம்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.

      Delete
  35. கொடுத்துவைத்தவர் ஐயா நீங்கள் கொடுத்துவைத்தவர் மிக பெரிய பதிவு பொறுமையுடன் தெளிவாக புரியும் படியும் எழுதி அதுவும் காண கிடைக்காத படங்களுடன் பெரியவரின் ஆசியைய் பெற்ற நீங்கள் உங்கள் ஆசியை இப்படி நீங்கள் பதவின் மூலம் எங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. poovizi April 17, 2013 at 12:50 AM

      வாங்கோ, வணக்கம்.

      //கொடுத்துவைத்தவர் ஐயா நீங்கள் கொடுத்துவைத்தவர் மிக பெரிய பதிவு பொறுமையுடன் தெளிவாக புரியும் படியும் எழுதி அதுவும் காண கிடைக்காத படங்களுடன் பெரியவரின் ஆசியைய் பெற்ற நீங்கள் உங்கள் ஆசியை இப்படி நீங்கள் பதவின் மூலம் எங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  36. தங்கள் பதிவை படிக்கும் பாக்கியம் கிடைத்தது....

    ReplyDelete
    Replies
    1. கே. பி. ஜனா... April 17, 2013 at 1:05 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்கள் பதிவை படிக்கும் பாக்கியம் கிடைத்தது....//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      Delete
  37. உங்க அனுபவ பொக்கிஷம் என்னையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. பெரியவர் தரிசனம் கிடைப்பதே கஷ்டமாயிருக்கும்போது நீங்க வரைந்த அம்பாளை கொடுத்ததும், அதை அவர் அவ்வளவு நேரம் பார்த்ததும் எவ்வளவு அதிர்ஷ்டம். உண்மையில் நீங்க புண்ணியம் செய்தவர்தான். அதிர்ஷ்டசாலி.உங்களுக்கு அவரின் பரிபூரணஆசியே கிடைத்திருக்கிறது. நீங்க பெரும் பாக்யம் பெற்றவர். அவர் உங்க படத்தை கோவிலில் மாட்டச்சொன்னது நீங்க செய்த பாக்யம். அவருக்கு தொண்டாற்றியவர் களைப்பற்றி எழுதி சிறப்பித்தமை அருமை.தங்களின் பொக்கிஷத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. படங்களும் அபூர்மானவை. நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ammulu April 17, 2013 at 1:32 AM

      வாங்கோ அம்முலு, வாங்கோ வணக்கம்.

      //உங்க அனுபவ பொக்கிஷம் என்னையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. பெரியவர் தரிசனம் கிடைப்பதே கஷ்டமாயிருக்கும்போது நீங்க வரைந்த அம்பாளை கொடுத்ததும், அதை அவர் அவ்வளவு நேரம் பார்த்ததும் எவ்வளவு அதிர்ஷ்டம். //

      மிகப்பெரியதோர் அதிர்ஷ்டம் தான் அம்முலு, நான் சற்றும் எதிர்பார்க்காததோர் அதிர்ஷ்டம் தான்.

      //உண்மையில் நீங்க புண்ணியம் செய்தவர்தான். அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு அவரின் பரிபூரணஆசியே கிடைத்திருக்கிறது. நீங்க பெரும் பாக்யம் பெற்றவர். அவர் உங்க படத்தை கோவிலில் மாட்டச்சொன்னது நீங்க செய்த பாக்யம். //

      இதைக்கேட்கவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, அம்முலு.

      //அவருக்கு தொண்டாற்றியவர் களைப்பற்றி எழுதி சிறப்பித்தமை அருமை. தங்களின் பொக்கிஷத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. படங்களும் அபூர்மானவை. நன்றிகள்.//

      ரொம்ப ரொம்ப சந்தோஷம்ம்ம்மா!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள், அம்முலு.

      Delete
  38. மனதுக்கு நிம்மதியும்,அமைதியும் தரும் தெய்வீக அனுபவங்களின் பகிர்வு சிறப்பாக இருந்தது. நீங்கள் பொக்கிஷங்களாக சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. உஷா அன்பரசு April 17, 2013 at 2:21 AM

      வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

      //மனதுக்கு நிம்மதியும்,அமைதியும் தரும் தெய்வீக அனுபவங்களின் பகிர்வு சிறப்பாக இருந்தது. நீங்கள் பொக்கிஷங்களாக சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அருமை!//

      தங்களின் அன்பான தொடர்ச்சியான வருகைக்கும், அழகான அருமையான பொக்கிஷமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  39. 9] "நானும் என் அம்பாளும் !" .............. அதிசய நிகழ்வு ! - அருமையான அனுபவங்கள். தங்கள் ஓவியத் திறமைக்கு தாங்கள் வணங்கும் பெரியவர் அவர்களே அளித்த அங்கீகாரம்.
    ( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ April 17, 2013 at 2:32 AM

      வாங்கோ ஐயா, வணக்கம் ஐயா,

      //9] "நானும் என் அம்பாளும் !" .............. அதிசய நிகழ்வு ! - அருமையான அனுபவங்கள். தங்கள் ஓவியத் திறமைக்கு தாங்கள் வணங்கும் பெரியவர் அவர்களே அளித்த அங்கீகாரம். //

      மிக்க மகிழ்ச்சி ஐயா.

      //( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)//

      மிக்க நன்றி, ஐயா.

      தங்களின் அன்பான தொடர்ச்சியான வருகைக்கும், அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள், ஐயா.

      Delete
  40. அடடா என்ன ஒரு அனுபவம்...பொக்கிஷம் என்பதையும் மீறி என்ன சொல் இருக்கிறது? அருமை..திறமைசாலிகளைக்கொண்டது திருச்சி மாநகரோ!

    ReplyDelete
    Replies
    1. ஷைலஜா April 17, 2013 at 2:59 AM

      வாங்கோ மேடம். வணக்கம் மேடம்.

      //அடடா என்ன ஒரு அனுபவம்...பொக்கிஷம் என்பதையும் மீறி என்ன சொல் இருக்கிறது? அருமை..//

      இந்தத்தொடரின் ஒன்பதாவது பகுதிக்கு மட்டும், தாங்கள் அபூர்வ வருகை தந்துள்ளதே, ஒரு மாபெரும் பொக்கிஷமாக நினைத்து என்னை மகிழ வைத்துவிட்டது. ;).

      //திறமைசாலிகளைக்கொண்டது திருச்சி மாநகரோ!//

      ஆம் .... அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

      ஆனாலும் திருச்சியைச்சேர்ந்த தங்களைப்போன்ற பல திறமைசாலிகள், திருச்சியிலிருந்து கிளி போலப்பறந்து எங்கெங்கோ சென்று செட்டில் ஆகியுள்ளது தான் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், [தங்களின் பிறந்த வீடான] நம் திருச்சி மாநகரத்தையே ஒட்டு மொத்தமாகப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  41. மனித உருவில் தெய்வம் உன்மைதான்

    ReplyDelete
    Replies
    1. கவியாழி கண்ணதாசன் April 17, 2013 at 4:42 AM

      வாங்கோ கவிஞர் அவர்களே, வணக்கம்.

      //மனித உருவில் தெய்வம் உண்மை தான்//

      மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  42. மஹா பெரியவாளுடன் உங்களுக்கேற்பட்ட அனுபவங்கள் நிச்சயம் பொக்கிஷம் தான்.....

    எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ்April 17, 2013 at 7:26 AM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      தங்களின் அபூர்வ வருகை மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.

      இந்தத்தொடரின் முதல் மூன்று பகுதிகளுக்குப்பிறகு பகுதி-4, பகுதி-5, பகுதி-6, பகுதி-7 மற்றும் பகுதி-8 க்கு தாங்கள் வருகை தந்து கருத்துச்சொல்லவில்லை என என்னிடம் உள்ள புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

      அதுபோலவே தங்களின் இல்லத்தரசி அவர்களும் முதல் ஐந்து பகுதிகளுக்கு மட்டுமே வருகை தந்துள்ளார்கள். அதன் பிறகு பகுதி-6, பகுதி-7, பகுதி-8 மற்றும் இந்தப்பகுதியான பகுதி-9 க்கு ஏனோ வருகை தரவில்லை.

      தங்கள் இருவரின் பொக்கிஷமான கருத்துக்கள் கிடைக்காததில் எனக்குச் சற்றே வருத்தமாக உள்ளது.

      //மஹா பெரியவாளுடன் உங்களுக்கேற்பட்ட அனுபவங்கள் நிச்சயம் பொக்கிஷம் தான்..... எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், வெங்கட்ஜி.

      Delete

  43. ஸ்ரீகண்டன் அவர்கள் நம்ம ஆங்கரை தான் என்று எங்கப்பா சொல்லி இருக்கார்.
    அது ஞாபகம் இருக்கு.
    ஆனா அவர் அதிஷ்டானம் அங்கே வாய்க்கால் பக்கத்திலே இருக்கா ?

    நான் 2003 அப்பறம் ஒரே தடவை மாந்துறையான் பாத்துட்டு வரபோது சென்றேன்.
    அப்ப எங்க ஆங்கரைக்கு செல்லாமல் வந்துட்டேன். போயிருந்தா ஒருவேளை
    என்னோட பந்துக்கள் யாராவது சொல்லியிருப்பா.

    இந்த தகவல் தந்ததற்கு ரொம்ப நன்றி. சந்தோஷம்.

    ஆங்கரைலே பிறந்தவா அனேகம் பேர் பெரிய பெரிய உத்யோகத்துலே டில்லி ராஜாங்கத்திலே
    எல்லாம் இருந்திருக்கா.

    ஆனா, ஸ்ரீகண்டன் இருந்தது அத விட பெரிய பெரிய உத்யோகம். அது கிடக்கிறதெ பூர்வ புண்யம்.

    சுப்பு தாத்தா.
    பி.கு. நீங்க இப்ப இருக்கும் வீடு நாராயண ஸ்டோர் இருந்த இடத்தில் தான் இருக்கிறதா ?

    ReplyDelete
    Replies
    1. sury Siva April 17, 2013 at 8:19 AM

      வாங்கோ, வாங்கோ, அநேக நமஸ்காரங்கள்.

      //ஸ்ரீகண்டன் அவர்கள் நம்ம ஆங்கரை தான் என்று எங்கப்பா சொல்லி இருக்கார். அது ஞாபகம் இருக்கு.//

      அவர் சாக்ஷாத் ந ம து திருச்சி + ந ம து ஆங்கரையே தான்.

      [பிறந்தது மட்டுமே காரைக்குடி பக்கம் உள்ள வேலங்குடி]

      //ஆனா அவர் அதிஷ்டானம் அங்கே வாய்க்கால் பக்கத்திலே இருக்கா ?//

      ஆம் அங்கு தான் அமைந்துள்ளது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, மிக அழகாக நித்யப்படி ஒருவேளை பூஜையுடன் அதிஷ்டானம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

      அதன் சாவி மட்டும் ஆங்கரை அக்ரஹாரத்தில், பெருமாள் கோயில் அருகேயுள்ள ஆடிட்டர் விஜி அவர்களிடம் உள்ளது. [அன்னதானம் - பெரிய ஆஹம் Mr. R. Venkatasubramanian Sir உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்குமே]

      //நான் 2003 அப்பறம் ஒரே தடவை மாந்துறையான் பாத்துட்டு வரபோது சென்றேன். அப்ப எங்க ஆங்கரைக்கு செல்லாமல் வந்துட்டேன். போயிருந்தா ஒருவேளை என்னோட பந்துக்கள் யாராவது சொல்லியிருப்பா. இந்த தகவல் தந்ததற்கு ரொம்ப நன்றி. சந்தோஷம். //

      அடுத்தமுறை தங்கள் குலதெய்வமான மாந்துறைக்குச் செல்லும் போது அவசியம் போய் தரிஸித்து விட்டு வாருங்கள் ஐயா.

      //ஆங்கரைலே பிறந்தவா அனேகம் பேர் பெரிய பெரிய உத்யோகத்துலே டில்லி ராஜாங்கத்திலே எல்லாம் இருந்திருக்கா.
      ஆனா, ஸ்ரீகண்டன் இருந்தது அத விட பெரிய பெரிய உத்யோகம். அது கிடைக்கிறதே பூர்வ புண்யம். சுப்பு தாத்தா.//

      மிகவும் அழகாகச் சொல்லிவிட்டீர்கள். பூர்வ புண்ணியமே தான்.

      //பி.கு. நீங்க இப்ப இருக்கும் வீடு நாராயண ஸ்டோர் இருந்த இடத்தில் தான் இருக்கிறதா ?//

      ஆம் அதே இடத்தில் தான் உள்ளது. தற்சமயம் வந்தால் தங்களால் அடையாளம் கண்டுபிடிக்கவே கஷ்டமாக இருக்கும். எல்லாம் அடியோடு மாறிவிட்டன. கீழ்க்கண்ட என் பதிவுகளைப் படித்தால் வீட்டைக்கண்டு பிடிக்க சுலபமாக இருக்கலாம்.

      தலைப்பு:

      “என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்”

      இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html பகுதி-1

      http://gopu1949.blogspot.in/2013/02/2.html பகுதி-2

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html பகுதி-3

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      Delete
    2. நான் ஆங்கரை சுப்பையர் என்கிற அன்னதானமய்யரின் எள்ளுப்பேரன் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் வரலாறு பெரியவாளும்,உ,வே,சா.வும் சொல்லியிருக்கிறார்கள்.

      Delete
    3. Narayanan Varagooran September 4, 2014 at 10:45 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நான் ஆங்கரை சுப்பையர் என்கிற அன்னதானமய்யரின் எள்ளுப்பேரன் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் வரலாறு பெரியவாளும், உ,வே,சா.வும் சொல்லியிருக்கிறார்கள்.//

      இதைக்கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நான் இன்று மாலை சுமார் 5 மணி முதல் இரவு 9 மணி வரை தங்களின் ஆங்கரை சுப்பையர் என்கிற அன்னதானம் ஐயர் கிருஹத்தில் தான் இருப்பேன். இப்போது காருக்காக நாங்கள் வெயிட்டிங்.

      தற்சமயம் அந்த புண்ணியமான பொக்கிஷமான மிகப்பெரிய க்ருஹத்தில் வசித்து வரும் Mr. R. Venkatasubramania Iyer [Auditor] அவர்களின் பிள்ளை ஸ்ரீ. பாலகிருஷ்ணனுக்கு நாலு நாள் விவாஹம் சாஸ்திரப்படி நடைபெற்று இன்று மாலை Reception அங்கேயே நடக்க உள்ளது. அது தவிர ஆடிட்டர் R.V. தம்பதியனருக்கு நாளையும் நாளை மறுநாளும் சஷ்டியப்தபூர்த்தி விழாக்கள் அங்கேயே பெரிய ஆத்திலேயே [அதே க்ருஹத்திலேயே] நடைபெற உள்ளது.

      மேலும் நமது குலதெய்வமான மாந்துரையான் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

      தங்களுக்கும் இதுபற்றியெல்லாம் தெரிந்திருக்கலாம் என் நினைக்கிறேன்.

      நமது சங்கிருதி கோத்ர சகோதரரான தாங்கள் தங்களைப்பற்றி கொடுத்துள்ள இந்தத்தகவலுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      வாழ்க ! அன்புடன் கோபு [VGK]

      Delete
  44. மஹா பெரியவருடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் உண்மையிலேயே மிகப்பெரியய்ய்ய்ய் பொக்கிஷம்தான் ஐயா!!

    அவருடைய சிஷ்யர்களைப்பற்றி விரிவாக எழுதியதில் மிக்க மகிழ்ச்சி,அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டேன் தங்களால்...அந்த காமாட்சி அம்மன் அருளும் மஹா பெரியவரின் அருளும் தங்களு என்றும் கிடைக்க வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்.இதுபோல் யாருக்கும் அமையாது.மிக்க மகிழ்ச்சி ஐயா!!

    ReplyDelete
    Replies
    1. S.Menaga April 17, 2013 at 10:23 PM

      வாங்கோ மேனகா, வணக்கம்.

      //மஹா பெரியவருடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் உண்மையிலேயே மிகப்பெரியய்ய்ய்ய் பொக்கிஷம்தான் ஐயா!!//

      ரொம்பவும் சந்தோஷமம்மா !

      //அவருடைய சிஷ்யர்களைப்பற்றி விரிவாக எழுதியதில் மிக்க மகிழ்ச்சி, அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டேன்//

      மிக்க மகிழ்ச்சி.

      //தங்களால்... அந்த காமாட்சி அம்மன் அருளும் மஹா பெரியவரின் அருளும் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்.//

      மிக்க நன்றியம்மா!

      //இதுபோல் யாருக்கும் அமையாது.மிக்க மகிழ்ச்சி ஐயா!!//

      Yes, So Sweet Experience.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேனகா.

      Delete
  45. தெய்வ சந்நிதானத்தில் நீங்கள் வரைந்த படம் வைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தெய்வ அநுக்கிரகம் கிடைத்திருக்கின்றது.

    காணக்கிடைக்காத பல படங்கள் கண்டுகொண்டோம் உங்கள் பகிர்வில்..மிகவும் மகிழ்கின்றோம். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மாதேவி April 18, 2013 at 7:12 AM

      வாங்கோ வணக்கம். தொடர்ச்சியாக இந்தத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்தளித்து சிறப்பித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + நன்றி.

      //தெய்வ சந்நிதானத்தில் நீங்கள் வரைந்த படம் வைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தெய்வ அநுக்கிரகம் கிடைத்திருக்கின்றது.//

      மிகவும் சந்தோஷம்.

      //காணக்கிடைக்காத பல படங்கள் கண்டுகொண்டோம் உங்கள் பகிர்வில்.. மிகவும் மகிழ்கின்றோம். நன்றிகள்.//

      ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஆம் அவைகள் காணக்கிடைக்காத படங்களே தான். அதுபோல ஸ்ரீமஹாபெரியவா படங்கள் நிறைய சேகரித்து வைத்துள்ளேன். அவைகளும் பொக்கிஷமே.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,

      Delete
  46. ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளைப் பற்றியும், அவருக்காகவே வாழ்ந்த இரு மனிதரில் மாணிக்கங்களைப் பற்றியும் படிக்கப் படிக்க வியப்பு ஏற்படுகிறது. என்ன ஒரு அர்பணிப்பு வாழ்க்கை!என்ன ஒரு நிறைவான வாழ்க்கை. பிறவிப் பயன் இருவருக்கும் கிடைத்திருக்கும். இவர்களைப் பற்றிப் படித்து நாங்களும் எங்கள் பிறவிப் பயன் பெற்றோம்.

    ReplyDelete
    Replies
    1. Ranjani Narayanan April 18, 2013 at 7:23 AM

      வாங்கோ மேடம், வணக்கம். தரிஸனத்திற்கு இன்னும் வரவில்லையே என இப்போத்தான் நினைத்தேன். கரெக்டா வந்துட்டேள். உங்களுக்கு ஆயுஷு : 100 + தான்..

      //ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளைப் பற்றியும், அவருக்காகவே வாழ்ந்த இரு மனிதரில் மாணிக்கங்களைப் பற்றியும் படிக்கப் படிக்க வியப்பு ஏற்படுகிறது. என்ன ஒரு அர்பணிப்பு வாழ்க்கை! என்ன ஒரு நிறைவான வாழ்க்கை. பிறவிப் பயன் இருவருக்கும் கிடைத்திருக்கும். //

      ஆமாம், மேடம். அர்ப்பணிப்பு வாழ்க்கை தான். நிறைவான வாழ்க்கை தான். பிறவிப்பயன் அடைந்தவர்களே தான். எல்லோராலும், ஸ்ரீ மஹாபெரியவாளை நெருங்கி விட முடியுமா? அவர்களுக்கு இவர்களைப்போல பொறுப்பாக, தன்னலமற்ற கைங்கர்யம் தான் செய்துவிட முடியுமா? மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான்.

      //இவர்களைப் பற்றிப் படித்து நாங்களும் எங்கள் பிறவிப் பயன் பெற்றோம்.//

      சபாஷ் மேடம்.

      தொடர்ச்சியாக இந்தத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்தளித்து சிறப்பித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  47. மகாப் பெரியவா என்றதன் முழு அர்த்தமும் அவரோடு போய்விட்டது.

    உங்க பொக்கிஷங்கலெல்லாம் மிக அரிதானவை.

    ReplyDelete
    Replies
    1. நிலாமகள் April 18, 2013 at 9:42 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மகாப் பெரியவா என்றதன் முழு அர்த்தமும் அவரோடு போய்விட்டது.//

      ஆம்.

      //உங்க பொக்கிஷங்கலெல்லாம் மிக அரிதானவை.//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் அர்த்தமுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  48. http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html


    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 18, 2013 at 8:17 PM

      //http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html
      வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ...//

      வாங்கோ, வணக்கம்.

      தங்கள் மூலம் தான் இதனை நான் அறியப்பெற்றேன். தங்களின் அன்பான முதல் தகவலுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      ATM தங்களையும் அறிமுகப்படுத்தி இ ரு க் கா க !

      அதற்கு என் அன்பான வாழ்த்துகள்.

      ஸ்ரீராமநவமி வாழ்த்துகளுடன் ..... பிரியமுள்ள VGK

      Delete
  49. தாங்கள் வரைந்த படம் கோவிலில் இடம்பெறப் பாக்கியம் செய்துள்ளீர்கள். இறையருள் என்றும் உங்களோடு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ராமலக்ஷ்மி April 19, 2013 at 1:49 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தாங்கள் வரைந்த படம் கோவிலில் இடம்பெறப் பாக்கியம் செய்துள்ளீர்கள். இறையருள் என்றும் உங்களோடு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், இனிமையான ஆறுதலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  50. //மகாப் பெரியவா என்றதன் முழு அர்த்தமும் அவரோடு போய்விட்டது.//

    அடுத்தவர் வந்தார் ..ஒரு அட்சய திருதியை அன்று 108 திருவிளக்குகள் ஏற்றி நாராயணீயம் சேவித்துக்கொண்டிருந்தோம் ..

    என்ன என்று கேட்டார் ..நாராயணீயம் பாராயணம் ..வருடம் இருமுறை சப்தாகமாக பாகவதம் நாராயணீயம் ,திருப்புகழ், பகத்கீதை ,சுந்தரகாண்டம் என்று மூலநூல்களை பாராயணம் செய்கிறோம் என்றோம்..

    ReplyDelete
  51. அவரோ நூற்றுக்கணக்கான் பேர் இப்படி காலை முதல் மாலைவரை அமர்ந்து இருந்தால் ஆத்தில் வேலை இல்லையோ என்று ஆதங்கப்பட்டார் ..

    இல்லத்துக்கடமைகளையும் விரைவாக முடித்து, குழந்தைகளை பள்ளி கல்லூரிகளுக்கும் , கணவரை அலுவலகத்திற்கும் அனுப்பி , நைவேத்தியத்தியத்திற்கு ஏதாவது செய்து கொண்டுவந்து படைத்து என்று கைங்கர்யமாக உற்சாகமாக நிகழ்ந்தவற்றையோ உணரும் எந்த ஞானமும் இல்லாத வார்த்தைகள் ...

    மூலமில்லாமலா என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து பத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு குரு அறிமுகமும் செய்துவைத்த பெரியவாளின் பெருமைகளோ ஞானமோ துளியும் கலக்காத வார்த்தைகள் ...

    ஒரு சொல் வெல்லும்
    ஒருசொல்கொல்லும் ......

    ReplyDelete
    Replies

    1. ஒரு சொல் வெல்லும் ;)))))


      ஒரு சொல் கொல்லும் ...... ;(((((

      Delete
  52. மகா பெரியவாளுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் படித்து மெய்சிலிர்த்தேன்.பார்வை ஒன்றே போதுமே! உண்மையில் மிகப்பெரிய பாக்யம் செய்தவர் நீங்கள்!

    ReplyDelete
  53. Seshadri e.s. April 20, 2013 at 9:14 AM

    வாங்கோ சார், வணக்கம்.

    //மகா பெரியவாளுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் படித்து மெய்சிலிர்த்தேன்.பார்வை ஒன்றே போதுமே! உண்மையில் மிகப்பெரிய பாக்யம் செய்தவர் நீங்கள்!//

    மிக்க சந்தோஷம் சார். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மெய்சிலிரித்து இட்டுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    ReplyDelete
  54. வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. என்றாலும் பொறாமை கொள்ளச் செய்த பகிர்வு. ரொம்பவே அதிர்ஷ்டம் செய்திருந்தால் தான், முன் ஜென்மத்தில் செய்த பூர்வ புண்ணியத்தால் தான் இப்படிப் பட்டதொரு பாக்கியம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. இங்கே இருந்தே உங்களை வணங்கிக்கறேன். உங்களை வணங்கினாலே மஹாபெரியாவளின் அனுகிரஹம் கிடைச்சாப்போல். வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam April 21, 2013 at 1:05 AM

      வாங்கோ வாங்கோ, வணக்கம்.

      //வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது.//

      அதனால் பரவாயில்லை.

      //என்றாலும் பொறாமை கொள்ளச் செய்த பகிர்வு.//

      அடடா!

      //ரொம்பவே அதிர்ஷ்டம் செய்திருந்தால் தான், முன் ஜென்மத்தில் செய்த பூர்வ புண்ணியத்தால் தான் இப்படிப் பட்டதொரு பாக்கியம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு.//

      இருக்கலாம். என் முன்னோர்கள் செய்த புண்ணியங்களும் இதில் நிறைய சேர்ந்திருக்கும். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு என் அப்பாவை மிகவும் நன்றாகத்தெரியும். நிறையவே பேசியிருக்கிறார்கள்.

      //இங்கே இருந்தே உங்களை வணங்கிக்கறேன். உங்களை வணங்கினாலே மஹாபெரியாவளின் அனுகிரஹம் கிடைச்சாப்போல். வணக்கம்.//

      அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ. நான் மிகச்சாதாரண மானிடப்பிறவி மட்டுமே.

      உங்களை சந்திக்கும் போது நானே கூட்டிச்சென்று ஸ்ரீ பாதுகைகளை தரிஸிக்க வைக்கிறேன்.

      ஏதாவது ஒரு அனுஷத்தன்று சாயங்காலம் 5.45 மணி சுமாருக்கு இவ்விடம் வாருங்கோ. வரும்முன் தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு வாருங்கோ. 6 முதல் 7.30க்குள் பூஜை முழுவதும் முடிந்து விடும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  55. புராணக் கதை படிக்கும்போது நம்பவும் முடியாது,நம்பாமல் இருக்கவும் முடியாது அது போன்ற உணர்வு ஏற்பட்டது சார்,

    இப்போ அந்த அம்மன் படம் எங்குள்ளது.ஸ்ரீ பாலு,கண்டன் என்பவர்களின் விபரம் பகிர்ந்ததுள்ளது சிறப்பு,எத்தனை முறை உங்களின் பாக்கியம் பெற்றவர்னு சொல்வது !அநியாயத்துக்கு பாக்கியசலியா இருகிங்களே !

    ReplyDelete
    Replies
    1. thirumathi bs sridhar April 22, 2013 at 4:25 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //புராணக் கதை படிக்கும்போது நம்பவும் முடியாது,நம்பாமல் இருக்கவும் முடியாது அது போன்ற உணர்வு ஏற்பட்டது சார்,//

      கரெக்ட், அதுபோலவே தான் எனக்கும் இந்த சம்பவம் இருந்தது.

      //இப்போ அந்த அம்மன் படம் எங்குள்ளது?//

      அங்கு அந்த குண்டக்கல்லிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் உள்ள
      ஹகரி என்ற இரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகே உள்ள பண்யம் சிமிண்ட் ஃபேக்டரி வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் மாட்டப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

      //ஸ்ரீ பாலு, ஸ்ரீகண்டன் என்பவர்களின் விபரம் பகிர்ந்ததுள்ளது சிறப்பு//

      மிக்க நன்றி. அவர்கள் இருவரும் மஹா பாக்கியம் செய்தவர்கள். பழக மிகவும் இனிமையானவர்கள். அவர்களிடம் ஏராளமானக் கதைகள் [உண்மையில் நடந்த சம்பவங்கள்] உள்ளன.

      ஸ்ரீ பாலு அவர்களைப்பேட்டி கண்டு சமீபத்தில் ஓர் வலைத்தளத்தில் கூட வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பினை தங்களுக்கு தனியே அனுப்பி வைக்கிறேன்.

      //எத்தனை முறை உங்களின் பாக்கியம் பெற்றவர்னு சொல்வது !அநியாயத்துக்கு பாக்கியசாலியா இருக்கீங்களே !//

      அடாடா, போதும் உங்கள் கிண்டல். ;) நான் ஒன்றும் உங்கள் அளவு பாக்கியசாலி அல்ல. ஏற்கனவே இதே தொடரில் தங்களுக்கான என் பதில் ஒன்றில் தாங்கள் தான் மிகவும் பாக்கியசாலி என்பதை விளக்கமாக எடுத்துச்சொல்லியுள்ளேன். மீண்டும் படித்துப்பாருங்கோ.

      நான் எப்போதுமே, மிகச்சாதாரணமானவன் மட்டுமே.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  56. ரொம்ப அதிர்டசாலி சார் நீங்க... கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு படிக்கும் பொது :)

    ReplyDelete
  57. Sangeetha Nambi April 23, 2013 at 1:48 AM

    வாங்கோ, வணக்கம்.

    //ரொம்ப அதிர்டசாலி சார் நீங்க... கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு படிக்கும் பொது :)//

    சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  58. பாக்கியம் செய்தவர் தாங்கள்.... வீட்டில் இருப்பதை விட கோவிலில் இருப்பது சிறப்பு.

    ReplyDelete
  59. கோவை2தில்லி April 25, 2013 at 12:14 AM

    வாங்கோ, வணக்கம்.

    //பாக்கியம் செய்தவர் தாங்கள்.... வீட்டில் இருப்பதை விட கோவிலில் இருப்பது சிறப்பு.//

    மிக்க மகிழ்ச்சி. ஆம், அது கோயிலில் இருப்பதுதான் சிறப்பு என்பதை நானும் பிறகு உணர்ந்து கொண்டேன்.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    ReplyDelete
  60. ஒரு பொக்கிஷ பதிவையே நான் இன்னும் எழுத முடியாமல் இருக்கீறேன்

    நீங்க தேர்வில் தாள் தாளாக எழுதி தள்ளுவது போல் சர்வ சாதாரணமாக எழுதி கொண்டே இருக்கிறீர்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Jaleela Kamal April 28, 2013 at 5:05 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒரு பொக்கிஷ பதிவையே நான் இன்னும் எழுத முடியாமல் இருக்கிறேன்.//

      நீங்கள் என்ன என்னை மாதிரி சாதாரண ஆசாமியா? உங்களிடம் உள்ளவைகள் சாதாரண பொக்கிஷங்களா? ;)))))

      உங்களிடம் உள்ளவை எதையும் அவ்வளவு எளிதில் வெளியே சொல்லமுடியாத மஹா மஹா பொக்கிஷங்கள் அல்லவா. ;)))))

      இனிய இல்லத்தரசி, பிரபல பதிவர், சமையலில் அட்டகாசம் செய்பவர், அவற்றையெல்லாம் விட ஏராளமான பிஸிநெஸ்கள் அதுவும் நாடு விட்டு நாடு பிஸிநெஸ் என்றால் சும்மாவா! ;)))))

      //நீங்க தேர்வில் தாள் தாளாக எழுதி தள்ளுவது போல் சர்வ சாதாரணமாக எழுதி கொண்டே இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

      எழுதித்தள்ளுவது ஒன்று மட்டுமே கொஞ்சம் கைவந்த கலையாக உள்ளது எனக்கு.

      மற்ற எல்லா விஷயங்களிலும் நான் ஒரு பூஜ்யமே என எனக்கே நன்கு தெரியும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  61. Very interesting post Gopu sir. Bhagavanin padam bhagavanuke arpanamayulladhu. Have you been to that temple again? is the photo still there? Have you taken any photograph of your painting that is framed and kept in the shiva temple?

    ReplyDelete
    Replies
    1. Mira April 28, 2013 at 5:52 AM

      வாங்கோ மீரா, வணக்கம்.

      //Very interesting post Gopu sir.//

      மிகவும் சந்தோஷம்மா.

      //Bhagavanin padam bhagavanuke arpanamayulladhu.//

      ஆமாம். அப்படித்தான் ஆகியுள்ளது. ;)

      //Have you been to that temple again?//

      இல்லையம்மா. அதற்கான சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை.

      //is the photo still there?//

      இருக்கும், இருக்கணும் என நம்புகிறேன்.

      //Have you taken any photograph of your painting that is framed and kept in the shiva temple?//

      இல்லையம்மா.

      அந்தக்காலக்கட்டத்தில் என்னிடம் கேமரா ஏதும் கிடையாது.

      ஸ்டுடியோவில் போய் அதை போட்டோ பிடித்து வைத்துக்கொள்ளணும் என்றும் எனக்குத் தோன்றவில்லை.

      மேலும் அது அவ்விடமே கோயிலில் மாட்டச்சொல்லி உத்தரவு ஆகும் என்பதை நான் கனவிலும் கூட நினைத்துப்பார்க்கவில்லை.

      இன்று நினைத்தாலும் அதே போல, ஏன் அதைவிட இன்னும் ஜோராக, அதே படத்தை என்னால் சுலபமாக வரைய முடியும்.

      ஆனால் அது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் திருக்கரங்களுக்குப் போய் நீண்ட நேரம் அதில் அவரின் அருள் பார்வை பட்டது என்பது தான் அதன் தனிச்சிறப்பு. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான அக்கறையான கேள்விகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மீரா.

      Delete
  62. Aha aha......
    deiveekam.
    Usually, i read your post and comment also. Because sometimes i will get nice information through your comments. But now directly i came here to write something...
    Enna athirstam.......
    Ungalai therinthavar ennru cholave enakku pokishayam pol errukku...
    viji

    ReplyDelete
  63. viji May 5, 2013 at 1:17 AM

    வாங்கோ விஜி மேடம், வணக்கம்.

    Aha aha...... deiveekam. Usually, i read your post and comment also. Because sometimes i will get nice information through your comments. But now directly i came here to write something... Enna athirstam....... Ungalai therinthavar ennru cholave enakku pokishayam pol errukku... viji

    ஆஹா ஆஹா, தெய்வீகம்.

    பொதுவாக தங்களின் பதிவுகளையும், அதில் உள்ள பின்னூட்டங்களையும் நான் படித்து விடுவேன். ஏனென்றால் பின்னூட்டங்கள் + பதில்களில் எனக்கு மிகவும் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைப்பதுண்டு.

    ஆனால் இந்தப்பதிவினை மட்டுமே படித்துவிட்டு, பின்னூட்டங்கள் எதையும் படிக்காமலேயே, நான் கருத்துக்கொடுக்க வந்துள்ளேன்.

    என்னவொரு அதிர்ஷ்டம். உங்களைத்தெரிந்தவர் என்று சொல்லிக்கொள்ளவே எனக்குப்பொக்கிஷம் போல இருக்கு. -விஜி//

    மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், விஜி மேடம்.

    ReplyDelete
  64. காஞ்சி பெரியவர் பற்றிய அற்புதமான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி ஐயா திரு வை.கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
    Replies
    1. Rathnavel NatarajanMay 21, 2013 at 4:30 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //காஞ்சி பெரியவர் பற்றிய அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி ஐயா திரு வை.கோபாலகிருஷ்ணன்//

      மிக்க மகிழ்ச்சி ஐயா. மிக்க நன்றி ஐயா.

      Delete
  65. என்னே நீங்கள் செய்த பாக்கியம் ..எனக்கு இந்த ஜென்மாவில் ஒரு குறை இருக்கிறது அது பெரியவரை தரிசிக்க இயலாத ஒன்றுதான்

    ReplyDelete
    Replies
    1. எல் கேMay 21, 2013 at 4:50 AM

      வாங்கோ எல்.கே. வணக்கம்.

      //என்னே நீங்கள் செய்த பாக்கியம் ..//

      மிக்க மகிழ்ச்சி, எல்.கே.

      //எனக்கு இந்த ஜென்மாவில் ஒரு குறை இருக்கிறது அது பெரியவரை தரிசிக்க இயலாத ஒன்றுதான்//

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இன்றும் பல பக்தர்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டு, அவர்களை நல்வழிப்படுத்திக்கொண்டு தான் உள்ளார்கள்.

      தங்கள் மனக்குறை நீங்க ஓர் சிறிய உபாயம் சொல்லத் தோன்றுகிறது எனக்கு.

      காஞ்சி சங்கரமடத்திற்குச்செல்லுங்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானம் உள்ளது. மிகச்சிறிய பகுதி தான். காலை ஸ்நானம் செய்துவிட்டு, மடி வஸ்த்ரங்களுடன் அதிஷ்டானத்தை முடிந்தால் 12 பிரதக்ஷணம் செய்யுங்கள். ஒவ்வொரு பிரதக்ஷண முடிவிலும் 4 நமஸ்காரங்கள் செய்யுங்கள். பக்தி சிரத்தையுடன், நம்பிக்கையுடன் செய்யுங்கோ. அன்று இரவே உங்கள் கனவில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா, பிரத்யக்ஷமாகக் காட்சி தருவார்.

      முடிந்தால் வரும் 25.05.2013 சனிக்கிழமையே செய்யுங்கள். அல்லது வேறு ஏதாவது ஒரு மாத அனுஷத்தில் இதைச்செய்யுங்கள். வில்வம் அல்லது துளஸி மாலை மட்டும் வாங்கிச்செல்லுங்கள். அதிஷ்டானத்திற்கு அந்த மாலையைப் போடச்சொல்லுங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  66. அன்பின் வை.கோ

    அருமையான பதிவு

    முழுவதும் இரசித்துப் படித்தேன் . மகிழ்ந்தேன்

    காஞ்சி காமாட்சி அம்மனைப் படமாக வரைந்து - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளிடம் சமர்ப்பிக்க, அவரோ புதிதாகக் கட்டப் பட்ட சிவன் கோவிலில் வைக்கக் கூறி கோவிலுக்கு அனுப்பி விட்டார்.

    காஞ்சி காமாட்சி காஞ்சிக்கு அழைக்கிறாள் என ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளும் புறப்பட்டு அங்கு சென்றாராம்.

    அருமையான பதிவு

    வெளியில் ஒரு வேலையாகச் செல்வதனால் - மீண்டும் இன்றிரவு படித்து - 128 மறுமொழிகளையும் படித்து மீண்டும் மறுமொழி இடுகிறேன்.

    நல்வாழ்த்துகள் வை.கோ
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) October 23, 2013 at 2:46 AM

      //அன்பின் வை.கோ, அருமையான பதிவு. முழுவதும் இரசித்துப் படித்தேன் . மகிழ்ந்தேன்

      காஞ்சி காமாட்சி அம்மனைப் படமாக வரைந்து - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளிடம் சமர்ப்பிக்க, அவரோ புதிதாகக் கட்டப் பட்ட சிவன் கோவிலில் வைக்கக் கூறி கோவிலுக்கு அனுப்பி விட்டார். அருமையான பதிவு

      வெளியில் ஒரு வேலையாகச் செல்வதனால் - மீண்டும் இன்றிரவு படித்து - 128 மறுமொழிகளையும் படித்து மீண்டும் மறுமொழி இடுகிறேன். //

      அன்பின் திரு. சீனா ஐயா, வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. தங்களின் பின்னூட்டங்கள் மேலும் மேலும் கிடைக்க வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பேன், ஐயா.

      பொறுமையாக சென்று வாருங்கள், வேலையை வென்று வாருங்கள் ஐயா.

      //நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா //

      வாழ்த்துக்களுடன் + வணக்கங்களுடன் தங்கள் அன்புள்ள VGK.

      Delete
  67. Nice information.. thanks for sharing...

    ReplyDelete
    Replies
    1. srikars kitchen October 25, 2013 at 8:22 AM

      வாங்கோ, வணக்கம்.

      //Nice information.. thanks for sharing...//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  68. தாங்கள் வரைந்த ஓவியம் பெரியவாளால் அனுக்ரஹிக்கப்பட்டது பெரிய புண்ணியம்.

    ReplyDelete
  69. மஹா பெரியவா தரிசனம் கிடைப்பதற்கே மிகவும் புண்ணியம் செய்திருக்கணும் தாங்கள் வரைந்த படத்தை பெரியவா கையால் தொட்டு ஆசிர்வதித்து கோவிலிலீயே வைக்க சொன்னது பெரும் பேறுதான்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 17, 2015 at 3:24 PM

      வாங்கோ, வணக்கம்மா.

      //மஹா பெரியவா தரிசனம் கிடைப்பதற்கே மிகவும் புண்ணியம் செய்திருக்கணும்.//

      தங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போட வேண்டும். :)

      //தாங்கள் வரைந்த படத்தை பெரியவா கையால் தொட்டு ஆசிர்வதித்து கோவிலிலேயே வைக்க சொன்னது பெரும் பேறுதான்//

      ஆமாம்மா. ஏதோ ஒரு கொடுப்பிணைதான் அதுபோன்றதோர் பேறு கிடைத்தது. இப்போது அந்த சம்பவத்தினை நினைத்தாலும் மிகவும் Thrilling ஆகவே என்னால் உணர முடிகிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  70. நானு கூட மேல உள்ளன படம்தா நீங்க வரஞ்சிபிட்டதுன்னு நெனச்சிபிட்டேன். ஒரு அம்மாவுக்கு நீங்க போட்ட ரிப்ளைல வெவரம் வெளங்கிகிட்டேன். ஏன் அந்த படம் இங்கன போடல

    ReplyDelete
    Replies
    1. mru October 24, 2015 at 5:44 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //நானு கூட மேல உள்ளன படம்தா நீங்க வரஞ்சிபிட்டதுன்னு நெனச்சிபிட்டேன். ஒரு அம்மாவுக்கு நீங்க போட்ட ரிப்ளைல வெவரம் வெளங்கிகிட்டேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா.

      //ஏன் அந்த படம் இங்கன போடல//

      மேலே ‘கீதமஞ்சரி’ வலைப்பதிவருக்கு நான் கொடுத்துள்ள பதிலை தயவுசெய்து படித்துப்பாருங்கோ, முருகு.

      அன்புடன் குருஜி

      Delete
  71. நீங்க வரைந்த அம்பாள் படம் பெரியவர் கைகளால் தொட்டு கொவிலில் மாட்டச்சொன்னது பிரமிப்பு. திருமதி ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு எழுதியிருக்கும் ரிப்ளை பின்னூட்டத்தையே ஒரு பதிவாக போடலாம்போல அவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  72. ஒரு ஓவியராக உங்களுக்கு இதைவிட மிகப்பெரிய அங்கீகாரம் இருக்கமுடியாது! பிரமாதம். மேலே தரப்பட்ட படம்தான் தாங்கள் தீட்டியதா?

    ReplyDelete
    Replies
    1. RAVIJI RAVI December 5, 2015 at 7:44 PM

      //ஒரு ஓவியராக உங்களுக்கு இதைவிட மிகப்பெரிய அங்கீகாரம் இருக்கமுடியாது!//

      ஆமாம். இதைவிட என்ன பெரிய அங்கீகாரம், யாரிடமிருந்து கிடைக்க வேண்டும்? :)

      கிடைத்தாலும் அது தேவையே இல்லையே !

      //பிரமாதம். மேலே தரப்பட்ட படம்தான் தாங்கள் தீட்டியதா?//

      இல்லை. பதிவினையும், வந்துள்ள பின்னூட்டங்களையும், அதற்கு நான் அளித்துள்ள பதில்களையும் மீண்டும் பொறுமையாகப் படித்துப்பார்த்தால், உங்களுக்கு இதுபற்றி தெரியவரும். ஆனால் அதற்கு ஒரு முழுநாளே தேவைப்படும். :)

      MIRA என்பவருக்கு நான் எழுதியுள்ள பதிலை மட்டும் இப்போதைக்குப் படித்துக்கொள்ளவும். - vgk

      Delete
  73. ஓர் முக்கிய அறிவிப்பு:
    =======================

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பல்லாண்டுகள் கைங்கர்யம் செய்துள்ள ராயபுரம் ஸ்ரீ பாலு என்ற பிரும்மச்சாரி 2013 மார்ச் மாதம் சந்நியாசம் பெற்றபின், ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டு வந்தார்கள்.

    பூர்வாஸ்ரமத்தில் ராயபுரம் ஸ்ரீ பாலு என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேற்று செவ்வாய்க்கிழமை 19.01.2016 இரவு காஞ்சிபுரத்தில் ஸித்தியடைந்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா திருவடிகளை அடைந்துவிட்டார்கள்.

    இன்று புதன்கிழமை 20.01.2016 அங்கேயே காஞ்சிபுரத்தில் அவருக்கான பிருந்தாவனப்பிரவேஸ நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

    அதற்கான படங்கள் இந்தப்பதிவினில் புதிதாக இப்போது இணைக்கப்பட்டுள்ளன.

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - VGK

    ReplyDelete
  74. உங்கள் அனுபவம் மிக்க சந்தோஷத்தைக் கொடுத்தது. தாங்களே எழுதியுள்ளபடி, சரியான சமயத்தில் மஹாப்பெரியவாளை காமாட்சி அம்மன் காஞ்சியை ஞாபகப்படுத்தும்படியாக தெய்வசங்கல்பத்தால் நீங்கள் ஓவியத்தை வரைந்து பெரியவாளிடம் சமர்ப்பித்துள்ளீர்கள். அவரின் ஆசீர்வாதம் கிட்டிய படம் தங்களின் பூஜை அறைக்கு வரும் என்று எண்ணியிருந்த உங்கள் உள்ளமும் அதைவிட, பக்தர்கள் தரிசனத்திற்கு கோவிலிலேயே அந்த்ப் படத்தை வைத்திருக்கவேண்டும் என்று எண்ணின பெரியவாளின் உள்ளமும் தெளிவாகத் தெரிந்தது.

    பதிவு முழுவதும் படித்தபின்பு, என் மனத்தில்
    "ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள். இது சாதாரணதோர் விளையாட்டு விஷயம் அல்ல. மிகவும் குறிப்பறிந்து நடக்க வேண்டிய கஷ்டமான வேலை"
    என்ற வரிகள்தான் இடம் பிடித்துக்கொண்டது. உடல் பொருள் ஆவி இவைகளை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்தான் இத்தகைய உதவியாளர்களாக இருக்கத் தகுதியானவர்கள். இவர்கள் இருவருக்கும் என்ன பாக்கியம் கிடைத்தது. பெறர்க்கரிய பேரு. அதுவும் கிட்டத்தட்ட 30 வருடம் இருந்திருப்பதற்கு எத்தகைய மன வலிமையும் இறை அருளும் தேவை... வை.கோ சார்... இதனைப் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. 'நெல்லைத் தமிழன் September 25, 2016 at 8:31 PM

      வாங்கோ ஸார், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், வியப்பளிக்கும் விரிவான + நெகிழ்வான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      2013-ம் ஆண்டு மே மாதம் துவங்கி, 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளைப் பற்றியே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தொடர்ச்சியாக 108 பகுதிகளுடன் ஒரு மெகா தொடர் பதிவு வெளியிட்டுள்ளேன். பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அவற்றில் என்னால் எழுதப்பட்டுள்ளன.

      தாங்கள் விரும்பினால் தினம் ஒரு பதிவு வீதம் படித்துப் பயன் பெறலாம்.

      முன்னுரை:
      http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

      பகுதி-001 க்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2013/05/1.html

      பகுதி-108 க்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2014/01/108.html

      முடிவுரை (நன்றி அறிவிப்பு):
      http://gopu1949.blogspot.in/2014/01/108108.html

      Delete
  75. https://mahaperiyavaa.wordpress.com/ சைட்டுல இந்த நிகழ்ச்சியை இன்று பார்க்க நேர்ந்தது. நிறைய பேர் தன் ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை. அவர்கள் எல்லோரும் அந்த அனுபவம் தனக்கே தனக்கானது என்று எண்ணிவிடுகிறார்கள். அதில் தவறு இல்லையாயினும், பகிர்ந்துகொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பலப் படுத்துகிறீர்கள். அதுவுமன்றி, வழி தெரியாதிருப்பவர்களுக்கு வழியையும் காண்பிக்கிறீர்கள். பெரியவாளுக்கு மட்டும்தான் 'நடமாடும் தெய்வம்' என்ற பெயர் அவர் வாழ்ந்த காலத்திலேயே பக்தர்களால் மனம் குளிர அழைக்கப்பெற்றது.

    நிற்க.. நீங்கள் வரைந்த படம் எது? அதைத் தெளிவாகக் காண இயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. 'நெல்லைத் தமிழன் September 28, 2016 at 10:42 AM

      //https://mahaperiyavaa.wordpress.com/ சைட்டுல இந்த நிகழ்ச்சியை இன்று பார்க்க நேர்ந்தது.//

      சிங்கப்பூரில் உள்ள என் உறவினர் ஒருவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னதால் மட்டுமே நானும் இதனைக் கவனித்துக் கண்டு களிக்க முடிந்தது.

      //நிறைய பேர் தன் ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை. அவர்கள் எல்லோரும் அந்த அனுபவம் தனக்கே தனக்கானது என்று எண்ணிவிடுகிறார்கள்.//

      அதை ஒரேயடியாக நாம் இப்படி எண்ணிவிடக்கூடாது. சிலருக்கு அந்த சுகானுபவங்களை என்றும் தன் நினைவில் நிறுத்திக் கொள்ளவோ, அதனை பிறரிடம் எடுத்துச் சொல்லவோ அல்லது எழுதவோ தெரியாமலும் இருக்கலாம்.

      மேலும் இவற்றைப் பற்றியெல்லாம் இன்று ஆளாளுக்கு தலைக்குத்தலை ஏதேதோ எழுத ஆரம்பித்தும் விட்டனர். வணிக வியாபார நோக்கில் எழுதியும் அதனால் கொஞ்சம் காசு சம்பாதிக்கவும் ஆரம்பித்து விட்டனர். இன்று இவர்களெல்லாம் எழுதும் அத்தனையும் உண்மை எனவும் நினைக்க முடியாமல் உள்ளன. ஏதேதோ சுவாரஸ்யத்திற்காக அள்ளித் தெளிப்பவர்களும் இதில் ஏராளமாகவே உண்டு.

      //அதில் தவறு இல்லையாயினும், பகிர்ந்துகொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பலப் படுத்துகிறீர்கள். அதுவுமன்றி, வழி தெரியாதிருப்பவர்களுக்கு வழியையும் காண்பிக்கிறீர்கள்.//

      உண்மையில் ஒருவரின் தன் சொந்த அனுபவமாக இருந்து, அவர்களுக்கு அதை நல்ல முறையில் (விளம்பர, வியாபார வணிக நோக்கம் ஏதும் இல்லாமல்) நேரேட் செய்து எழுதும் திறமையும் இருந்து செய்தால், தாங்கள் இங்கு சொல்வது சரியாகவே இருக்கும். நானும் ஒத்துக்கொள்கிறேன்.

      //பெரியவாளுக்கு மட்டும்தான் 'நடமாடும் தெய்வம்' என்ற பெயர் அவர் வாழ்ந்த காலத்திலேயே பக்தர்களால் மனம் குளிர அழைக்கப்பெற்றது.//

      ஆமாம். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. இன்றும் அவரே என்னையும் என் குடும்பத்தையும் ரக்ஷித்து வருவதாகவே நாங்கள் நினைக்கிறோம்.

      //நிற்க.. நீங்கள் வரைந்த படம் எது? அதைத் தெளிவாகக் காண இயலவில்லை.//

      அது 1978 இல் நடந்ததோர் நிகழ்ச்சி. அப்போதெல்லாம் வாழ்க்கையில் எனக்கு இப்போதுபோல வசதி வாய்ப்புகள் ஏதும் கிடையாது.

      அதனை நான் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளக்கூட எனக்குத் தோன்றவே இல்லை. அப்படியே போட்டோ எடுப்பதானால் ஸ்டுடியோவுக்குத்தான் போகணும். அதற்கு செலவாகும். அதுவும் உடனடியாகக் கிடைக்காது. ஃபிலிம் காய்ந்து ப்ரிண்ட் போட்டு அவர்கள் தர ஒரு 15 நாட்களாவது ஆகிவிடும்.

      இன்றுபோல டிஜிடல் கேமரா, உடனே பார்க்கும் கேமரா, ஸெல் ஃபோன் போன்ற வசதிகளெல்லாம் வராத காலம் அது. கலர் போட்டோக்களோ, வீடியோ எடுக்கும் வசதிகளோ இந்தியாவுக்குள் வராத காலம் அது.

      மேலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹம் செய்து கொடுத்து விடுவார்கள் - அதன்பின் அது என் வீட்டு பூஜை அறைக்கே திரும்ப வந்துவிடும் என்ற எண்ணத்தில் மட்டுமே நான் அன்று, அந்த நான் வரைந்த மிகப்பெரிய படத்துடன் ஸ்ரீ பெரியவா தரிஸனத்திற்குப் புறப்பட்டுப்போனேன்.

      ஆனால் அங்கு நடந்ததோ வேறு ஒரு மிராக்கிள் ஆகி விட்டது. எல்லாம் நன்மைக்கே.

      அன்று நான் என் கையால் வரைந்த மிகப்பெரிய ஸ்ரீ காமாக்ஷி அம்மன் படம், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா உத்தரவுப்படி, குண்டக்கல் சமீபம் உள்ள, ஹகரி என்ற இரயில்வே ஸ்டேஷனை ஒட்டி அமைந்துள்ள பன்யம் சிமிண்ட் ஃபேக்டரி வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் மாட்டப்பட்டிருக்கலாம் என நம்புகிறேன்.

      அதன்பிறகு நானும் அங்கு இதுவரை போகவோ அதனை பார்க்கவோ எனக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.

      Delete
  76. Mail message received on 4th May 2017 at 11.43 AM

    எனது அன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய, உயர்திரு. கோபு ஸார் அவர்களுக்கு,

    ஆச்சரியமாக இருக்குமே. எனக்குள்ளும் ஆச்சரியம் தாண்டவமாடுகிறது.

    இன்று உங்களின் பொக்கிஷம் என்ற தாங்கள் எனக்கு அளித்த பரிசு புத்தகத்தைப் படித்தேன்.

    ஆஹா... புத்தகமே பொக்கிஷம் தான். அதில் இருக்கும் தங்களது அத்தனை பொக்கிஷங்களும் எனக்குப் பொக்கிஷமாகவே தெரிந்தது.

    மஹா பெரியவரின் அருகில் நீங்கள் நிற்கும், குளிக்கும், பண்டரிபுர அனுபவம்... அவருக்கு மிக சமீபத்தில் ஆற்றில் குளித்த அனுபவங்கள் அனைத்தையும் படித்ததும், மனதுக்குள் ஒரு இதமான நெகிழ்ச்சி.

    இது போன்ற பாக்கியங்கள் தான் பூர்வஜென்ம புண்ணியங்கள். தங்களது எழுத்துக்களில் நிறைய ஹாஸ்யங்கள், குறும்புகள் எனப் படித்திருந்தாலும்.... இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது கண்களில் நீர் தாரையாகி வழிந்தது என்பது தான் நிஜம்.

    பெரியவாளின் பாதுகைகள்..... கண்ணில் கண்டதற்கே நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன்.

    குடும்ப உறுப்பினராகவே இருந்தாலுமே, எத்தனை பேர்களுக்கு தங்களது பொக்கிஷத்தையும் தாண்டிய இது போன்ற உயர்ந்த புதையலை அவருக்குத் தரும் மனம் வரும்? நீங்கள் செய்திருக்கிறீர்கள். இது மஹா விந்தையிலும் விந்தை.

    பூஜை படங்கள் அற்புதக் காட்சியெனக் கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.... என்று காதினுள் ஒலித்ததை மனம் உணர்ந்து கொண்டது.

    நீங்கள் ஒரு அற்புத மாமனிதர்.

    அன்னை காமாக்ஷியின் தாங்கள் வரைந்த படம் இப்போதும் அந்தக் கோயிலில் இருக்கும் அல்லவா? வரங்கள் பல பெற்ற பேறு பெற்றவர். பொக்கிஷம் என்ற அனுபவக் குவியல்..... அபாரம்.

    இப்படிக்குத் தங்கள்
    எழுத்துக்களின் பரம ரஸிகை

    ReplyDelete