About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, July 13, 2013

24] மெளனம் .. அழகு .. அலங்காரம்


2
ஸ்ரீராமஜயம்




மெளனத்தைக் கடைபிடித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இருக்காது. இப்படிக் கெடுதலைத் தவிர்ப்பது மட்டுமல்ல, நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மெளனத்திற்கு உண்டு. 

“மெளனம் கலக நாஸ்தி”

“மெளனம் சர்வார்த்த சாதகம்” 

“ரொம்பவும் அழகாக இருக்கிறோம். பிரமாதமாக அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்” என்று அகங்காரப் படுகிறவர்களுக்கு பெரிய தண்டனை, அவர்களை யாரும் ஏறெடுத்துப் பார்க்காமல் அலட்சியப்படுத்தும்படி செய்வது தான்.

பெரியவர்கள், மற்றவர்கள் செய்த பெரிய தவறுகளையும் மறந்துவிட்டு, தாங்கள் செய்த சிறு தவறுகளைத்தான் பெரிதாக நினைப்பார்கள்.



oooooOooooo

அற்புத நிகழ்வுகள் 

வில்வ இலைகளை 
வைத்து விட்டுப்போனது யார்?

மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.

[பகுதி-1  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/21.html  ]
[பகுதி-2  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/22.html  ]     
[பகுதி-3  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/23.html  ]       



பகுதி 4  of  9

அன்று மாலையும் வழக்கம்போல் ஸ்வாமிகளின் ஸ்ரீமத் ராமாயண உபந்யாசம் நடந்தது. மொத்த கிராமமுமே திரண்டு வந்து கேட்டு மகிழ்ந்தது. 

மூன்றாவது நாள் விடியக்காலை நேரம்.  சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பஜனை கோஷ்டிகளெல்லாம் சத்திர வாசலில் கூடி பாடிக்கொண்டிருந்தனர்.

ஸ்ரீகார்யம் இரண்டு கைங்கர்யபரர்களுடன் வாசல் பந்தலை ஒட்டியிருந்த ஒரு பெரிய ஆலமரத்து மறைவில் நின்று உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.  

மணி 8.30 கீழண்டைப்புறம் சத்திரத்தையொட்டிய மாந்தோப்பிலிருந்து தயங்கியபடி வெளிப்பட்டான் ஒரு சிறுவன். அவன் தலையில் பெரிய காய்ந்த ஓலைக்கூடை. தலையில் கட்டுக்குடுமி. அழுக்கடைந்த வேஷ்டியை மூலக்கச்சமாகக் கட்டியிருந்தான். 

அங்குமிங்கும் திரும்பிப்பார்த்துவிட்டு, ஒரு பந்தக்கால் அருகே கூடையை மெதுவாக இறக்கி வைத்துவிட்டு, நைஸாக வந்த வழியே திரும்ப முற்பட்டான். 

ஓடிப்போய் அவன் முன் நின்றார் ஸ்ரீகார்யம்.

அவரைப்பார்த்ததும், அவனுக்குக் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. உடனே ஸ்ரீகார்யத்தின் கால்களில் விழுந்து வணங்கினான் அவன்.  

அவர் கேட்டார்: ‘ரண்டு நாளா நீதான் இந்த வில்வக் கூடைய ஒருத்தருக்கும் தெரியாம வெச்சுட்டுப் போறயா?”

”ஆமாம்” என்பது போலத் தலையை ஆட்டினான்.

உடனே ஸ்ரீகார்யம் அவனிடம், “சரி.... சரி.... நீ போய் நன்னா குளிச்சுப்டு, ஒங் குடுமிய நன்னா முடிஞ்சுண்டு, நெத்தியிலே என்ன இட்டுப்பியோ அத இட்டுண்டு, மத்யானத்துக்கு மேல இங்க வா! ஒன்ன பெரிய சாமிகிட்ட [ஆச்சார்யாள்] அழச்சிண்டு போறேன். ஆசீர்வாதம் வாங்கிக்கலாம். இப்டி அழுக்கு வேஷ்டி இல்லாம பளிச்சுனு வா .... என்ன புரியறதா?” என்றார். 

’புரிகிறது  ’ என்ற பாவனையில் தலையை ஆட்டி விட்டு ஓடி விட்டான்.

ஸ்வாமிகளிடம் சென்று நடந்ததை விவரித்தார் ஸ்ரீகார்யம். 

சந்தோஷத்துடன், “பேஷ் ... பேஷ் ... அவன் ரண்டு மூணு நாளா பெரிய உபகாரம்னா பண்ணிண்டு வரான். வரட்டும். ஆசீர்வாதம் பண்ணி பிரஸாதம் கொடுப்போம்!” என்று கூறிவிட்டு ஸ்நானத்துக்குக் கிளம்பினார், மஹா ஸ்வாமிகள்.

தொடரும்.....

oooooOooooo


மகிழ்ச்சிப்பகிர்வு

தேடினேன் ...... வந்தது !
நாடினேன் ........ தந்தது !!
வாசலில் ........ நின்றது!!!
வாழவா ....... என்றது!!!!

தேடினேன் ...... வந்தது !
நாடினேன் ........ தந்தது !!
வாசலில் ........ நின்றது!!!
வாழவா ....... என்றது!!!!

என் மனத்தில் ஒன்றைப்பற்றி!
நான் நினைத்ததெல்லாம் வெற்றி!!

நான் இனி .... பறிக்கும் மலர் .... அனைத்தும்
அணைக்கும் ..... மணம் பரப்பும் சுற்றி!!

பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்துகொள்ளாதோ !

தேடினேன் ...... வந்தது !
நாடினேன் ........ தந்தது !!
வாசலில் ........ நின்றது!!!
வாழவா ....... என்றது!!!!

இனி கலக்கம் என்றும் இல்லை ...
இதில் விளக்கம் சொல்வதும் இல்லை ...

இனி கலக்கம் என்றும் இல்லை ...
இதில் விளக்கம் சொல்வதும் இல்லை ...

இனி உறக்கம் உண்டு
விழிப்பதுண்டு
மயக்குமுண்டு நெஞ்சே!


இனி உறக்கம் உண்டு
விழிப்பதுண்டு
மயக்குமுண்டு நெஞ்சே!

பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்துகொள்ளாதோ !

தேடினேன் ...... வந்தது !
நாடினேன் ........ தந்தது !!
வாசலில் ........ நின்றது!!!
வாழவா ....... என்றது!!!!


இந்த அழகான பாடலைப்பாடியது யார்? என்று கேட்டால் உங்களில் பலரும் சொல்லிவிடுவீர்கள். 

1967ல் எனக்கு 16-17 வயதாக இருந்தபோது வெளிவந்த “ஊட்டி வரை உறவு” என்ற படத்தில் வரும் முதல் பாடல் இது. 

பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன் 

மிக அருமையாக இசை அமைத்தவர்: எம்.எஸ்.விஸ்வநாதன் 

மிக இனிமையாகப் பாடியவர்: பி.சுசிலா 

அற்புதமாக நடனமாடி நடித்தவர்: புன்னகை அரசி K.R.விஜயா 

இந்தப்படம் வந்து இன்று 46 ஆண்டுகள் ஆகிவிட்டன.. 

தன் நிஜ வாழ்க்கையில் தனக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள ஓர் சந்தோஷத்தால் இதே உணர்வுகளுடன் ஓர் இளம்பெண் [பதிவர்] இதே பாடலை இப்போது பாடிக்கொண்டிருக்கிறார்.   

அந்த இளம்பெண் [பதிவர்] யார்? அவருக்கு என்ன அப்படியோர்  திடீர் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது?

அதைப்பற்றிய முழு விபரங்கள் வேறொரு நாள் வேறொரு பதிவினில் தெரிவிக்கப்படும். 


oooooOooooo




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி  
15.07.2013 திங்கட்கிழமை வெளியாகும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

42 comments:

  1. அப்பாடா... சிறுவன் என்று தெரிந்து விட்டது...!

    ஆனால்...

    அந்த பதிவர் யார்? என்பதை அறிய ஆவலுடன்...

    ReplyDelete
  2. யார் அந்த இளம்பதிவாரக இருக்கும் ! :) சிறப்பான ஆக்கம் .இன்று எனது புதிய முயற்சியால் வெளியிட்ட படைப்பு ஒன்றிற்குத் தங்கள் கருத்தினையும் பெருமகிழ்வுடன் எதிர்பார்க்கின்றேன் ஐயா .
    முடிந்தால் வாருங்கள் .http://rupika-rupika.blogspot.com/2013/07/blog-post_13.html

    ReplyDelete

  3. சஸ்பென்ஸ் ...வைகோ சார்... எனக்கு மட்டும் உடனே சொல்லுங்களேன்....@

    ReplyDelete
  4. yaar antha pathivar seekkiram ezhuthunga..suspensana vishayathukku eppavume mariyathai...

    ReplyDelete
  5. மெளனத்தைக் கடைபிடித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இருக்காது. இப்படிக் கெடுதலைத் தவிர்ப்பது மட்டுமல்ல, நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மெளனத்திற்கு உண்டு.

    “மெளனம் கலக நாஸ்தி”

    “மெளனம் சர்வார்த்த சாதகம்”

    பேச்சு வெள்ளி .. மௌனம் தங்க அல்லவா...!!
    மௌனமாய் அங்கீகரிக்கவேண்டியதுதான் ..!

    ReplyDelete
  6. “ரொம்பவும் அழகாக இருக்கிறோம். பிரமாதமாக அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்” என்று அகங்காரப் படுகிறவர்களுக்கு பெரிய தண்டனை, அவர்களை யாரும் ஏறெடுத்துப் பார்க்காமல் அலட்சியப்படுத்தும்படி செய்வது தான்.

    ஆழ்ந்த பொருளுள்ள தண்டனை ...

    ReplyDelete
  7. பெரியவர்கள், மற்றவர்கள் செய்த பெரிய தவறுகளையும் மறந்துவிட்டு, தாங்கள் செய்த சிறு தவறுகளைத்தான் பெரிதாக நினைப்பார்கள்.


    ஆச்சரியம் என்ன !!??

    பெரியோர் என்று நிரூபிக்கும் வழி தன் தவறுகளை நினைத்துப்பார்த்து பெரிதாக வருந்துபவர்கள்
    பெரியவர்கள் என்னும் மதிப்புக்குத் தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்..!

    ReplyDelete
  8. சந்தோஷத்துடன், “பேஷ் ... பேஷ் ... அவன் ரண்டு மூணு நாளா பெரிய உபகாரம்னா பண்ணிண்டு வரான். வரட்டும். ஆசீர்வாதம் பண்ணி பிரஸாதம் கொடுப்போம்!” என்று கூறிவிட்டு ஸ்நானத்துக்குக் கிளம்பினார், மஹா ஸ்வாமிகள்.

    எத்தனையோ பேர் மஹா ஸ்வாமிகள் ஆசீர்வாதத்திற்கும் ,பிரசாதத்திற்கும் காத்திருக்க தானே ஆளனுப்பி ஆசீர்வாதம் பண்ணி பிரஸாதம் கொடுப்போம் என அமுதமழை வர்ஷிக்கக்காத்திருந்த தெய்வத்திற்கு நமஸ்காரங்கள்...!

    ReplyDelete
  9. Athisaya nigazhvu suspense Poga, puthu suspense-aa.!!

    ReplyDelete
  10. you have not broken the suspense... just waiting for it sir...
    I too love that song...

    ReplyDelete
  11. அய்யா யார் அந்தச் சிறுவன்.
    அந்தப் பதிவர் யார்?
    காத்திருக்கின்றேன் ஆவலுடன்

    ReplyDelete
  12. யார் அந்த சிறுவன்?
    யார் அந்த பதிவர்?
    ஆவலுடன் காத்திருக்கின்றேன் அய்யா

    ReplyDelete
  13. வில்வம் கொண்டு வந்த சிறுவன் யாரோ.... சஸ்பென்ஸ் வைத்து முடித்த பதிவர் யாரோ... அறிந்து கொள்ளும் ஆவலுடன்....

    ReplyDelete
  14. வில்வம் கொண்டு வந்தது திரும்பவும் யாரா? மௌனம் பலவிதங்களில் உடல் நலத்திற்கும் உதவி செய்கிறது. மௌனம் விரதமாகக் கூட அனுஷ்டிக்கப் படுகிரது இதனால்தான் போலும்.
    அலங்காரம், அகங்காரம், எல்லாவற்றிர்கும் மற்றவர்கள் கண்டுகொள்ளாதிருப்பதே சிறந்த வழி. நல்ல பதிவு,சஸ்பென்ஸ் ஜாஸ்தி. காக்க வைத்து விடுகிறீர்கள். அன்புடன்

    ReplyDelete
  15. சிறுவனைக் கண்டுபிடித்து விட்டோம்...
    அந்தப் பதிவரைக் கண்டு பிடிக்கணுமே..?

    ஆவலாய் இருக்கிறோம்...

    ReplyDelete
  16. ஒரு பதிவில் இரண்டு சஸ்பென்ஸ்
    அடுத்த பதிவை எதிர்பார்த்து கூடுதல் ஆர்வத்தோடு...

    ReplyDelete
  17. வைகோ சார், இப்படி சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்சாக வைத்திருக்கிறீர்களே! விரைவில் அதை வெளிப்படுத்துங்கள் .
    அறிய ஆவல்.....

    ReplyDelete
  18. விறுவிறுப்பாக செல்கிறது தொடர்!

    ReplyDelete
  19. பெரியவர்கள், மற்றவர்கள் செய்த பெரிய தவறுகளையும் மறந்துவிட்டு, தாங்கள் செய்த சிறு தவறுகளைத்தான் பெரிதாக நினைப்பார்கள்.//
    அற்புதம்! நன்றி ஐயா!

    ReplyDelete
  20. மௌனத்தின் சிறப்பை எடுத்தியம்பிய மகத்தான வரிகள்.

    கட்டுக்குடுமி சிறுவன் யார்? ஏன் எவருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு ஓடுகிறான்? ஆர்வம் பீறிடுகிறது.

    தேடியது கிட்டியதால் ஆடிப்பாடி ஆனந்திக்கும் பதிவர் யாரென அறியவும் ஆவலோடு காத்திருக்கிறோம். தொடருங்கள் வை.கோ.சார்.

    ReplyDelete
  21. ரொம்பவும் அழகாக இருக்கிறோம். பிரமாதமாக அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்” என்று அகங்காரப் படுகிறவர்களுக்கு பெரிய தண்டனை, அவர்களை யாரும் ஏறெடுத்துப் பார்க்காமல் அலட்சியப்படுத்தும்படி செய்வது தான்.

    amamam periya thandanai than.

    ethu enna suspence seekeram akattum
    waiting waiting......

    ReplyDelete
  22. // 1967ல் எனக்கு 16-17 வயதாக இருந்தபோது வெளிவந்த “ஊட்டி வரை உறவு” என்ற படத்தில் வரும் முதல் பாடல் இது. //

    உங்கள் ” டீன் ஏஜ் “ வயது நினைவலைகளில் ஒன்று. நானும் ரசித்த பாடல்தான். .


    //அந்த இளம்பெண் [பதிவர்] யார்? அவருக்கு என்ன அப்படியோர் திடீர் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது? அதைப்பற்றிய முழு விபரங்கள் வேறொரு நாள் வேறொரு பதிவினில் தெரிவிக்கப்படும். //

    என்னங்க சார்? ஒரு பாட்டைச் சொல்லி, இதிலும் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள். ஏற்கனவே வில்வ இலைக் குடலை அப்படியே இருக்கிறது. நல்ல சுவாரஸ்யம்தான்.


    ReplyDelete
  23. மனித உருவில் வந்து வில்வம் கொடுத்துவிட்டுப் போன சிறுவன் மஹா பெரியவாளின் அனுக்ரஹத்திற்கு பரிபூரண பாத்திரமாகி இருப்பான். எத்தனை பாக்கியசாலி!

    நீங்கள் கடைசியில் குறிப்பிட்டிருக்கும் பாட்டையும், அதை பாடும் பதிவரையும் பற்றி தனியாக ஒரு புதிவு போட்டிருக்கலாம். ஆன்மிகம் கமழும் பதிவில் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மனதில் பட்டதை சொன்னேன். தவறானால் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய மேற்கண்ட பின்னூட்டத்திற்கு திரு கோபு அவர்கள் எனக்கு அனுப்பிய தனிமடலின் காபி இதோ:

      ///நீங்கள் கடைசியில் குறிப்பிட்டிருக்கும் பாட்டையும், அதை பாடும் பதிவரையும் பற்றி தனியாக ஒரு புதிவு போட்டிருக்கலாம். ஆன்மிகம் கமழும் பதிவில் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மனதில் பட்டதை சொன்னேன். தவறானால் மன்னிக்கவும். //

      தவறு தான். எனக்கும் நெருடல் தான். தவறு என்று சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் தொடர் முழுவதும் முடியும் வரை வேறு எந்தத்தனிப்பதிவும் கொடுப்பது இல்லை என்ற சங்கல்ப்பத்தில் இருக்கிறேன்.

      அதனால் தான் அவ்வப்போது நான் சந்தித்த பதிவர்களான மஞ்சு, சுந்தர்ஜி, பாலகணேஷ், அஜீம்பாஷா, GMB Sir போன்ற அனைவரும் சந்திப்புக்களையும், ஸ்ரீ பெரியவா தொடருடனேயே இணைக்கும்படி ஆகிவிட்டது.

      மேலும் இந்தப்பெண் பதிவர் விஷயமும், ஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் நல்ல செய்தியொன்றைத்தாங்கித்தான் வரப்போகிறது.

      பாடல் மட்டும் ஒரு விறுவிறுப்புக்காகக் கொடுத்துள்ளேன். தவறு தான். கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்.//


      நான் எழுதியதைத் தவறாக எண்ணாமல் உங்கள் பக்கத்து நியாயத்தை சொன்ன உங்களுக்கு நன்றி!

      நாம் அறியாமல் செய்யும் சின்னச்சின்ன தவறுகளை மஹா பெரியவா மன்னிக்கட்டும்.

      Delete
    2. மெளனத்தைக் கடைபிடித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இருக்காது. இப்படிக் கெடுதலைத் தவிர்ப்பது மட்டுமல்ல, நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மெளனத்திற்கு உண்டு.

      “மெளனம் கலக நாஸ்தி”



      ஒத்துக்கொள்கிறோம் அய்யா .உண்மைதான்
      நமக்கு ஒத்துப்போகாத விஷயத்தில் மௌனம் கடைபிடித்தால் நமக்குதான் நஷ்டம். அதனால் வரும் பல கஷ்டம்.

      சில நேரங்களில் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து மௌனத்தை கடைபிடித்தால் நம் எதிரிகள் அதை சம்மதம் என்று அவர்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு நம்மை வம்பில் மாட்டவிட்டுவிடுவார்கள்

      சில நேரங்களில் நம் எதிரே இருப்பவர் இரண்டுபேரும் நமக்கு வேண்டியவர்களாக இருந்தால் நாம் யார் பக்கம் சாய்ந்தாலும் வம்பை விலைக்கு வாங்க வேண்டி வந்துவிடும்.

      சில நேரங்களில் நாம் கருத்து எதுவும் சொல்லவேண்டாம் என்று நினைத்து மெளனமாக உட்கார்ந்திருந்தால் செய்வதையும் செய்துவிட்டு ஊமைகோட்டான் போல் உட்கார்ந்துகொண்டிருப்பதை பாருங்கள் என்று திட்டும் வாங்க வேண்டி வரலாம்.

      மவுனமே ஒரு பார்வையால் ஒரு பாட்டும் பாடலாம்

      வாயிருந்தும் மவுனமாக சிலர் அரசவையில் அமர்ந்திருந்ததாலல்லவொ ஒரு மகா பாரத போரே நிகழ்ந்துவிட்டது.

      திரௌபதி என்னும் அந்த பேதை போட்ட சபதத்தால்
      அல்லவோ நமக்கு பகவத் கீதை கீதை கிடைத்தது.

      சிலபேர் வாயை மூடிக்கொண்டிருந்தால் உலகமே நன்மை பெறுகிறது

      சிலர் வாயை திறந்தால் போதும் நாடும் நகரமும் பற்றி எரிகிறது.

      மேடைகளில் சிலர் வாயை திறந்தால் எப்போதுதான் இவர் வாயை மூடப் போகிராரோ என்று பலர் அங்கலாய்க்கும் நிலை ஏற்படுகிறது


      “மெளனம் சர்வார்த்த சாதகம்”

      உண்மைதான். அது சில பேரால்தான் முடியும்.
      எல்லோருக்கும் அது சாத்தியமில்லை.

      “ரொம்பவும் அழகாக இருக்கிறோம். பிரமாதமாக அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்” என்று அகங்காரப் படுகிறவர்களுக்கு பெரிய தண்டனை, அவர்களை யாரும் ஏறெடுத்துப் பார்க்காமல் அலட்சியப்படுத்தும்படி செய்வது தான்.

      அலங்காரம் செய்வதே பிறர் நம்மை பிறர் பாராட்டவேண்டும் என்பதற்க்காகத்தானே.

      அதுவும் நம் எதிரிகளிடம் ஜம்பம் அடித்துக்கொள்ளத்தானே.

      நாமும் பெரிய மனது பண்ணி பாராட்டினால் என்ன குறைந்தா போய்விடும். ?
      அதனால் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லையே. எதிரியாய் இருக்கும் ஒருவர் அதனால் நம் நண்பராய் மாறக்கூடும் வாய்ப்பை நாம் என் இழக்கவேண்டும்.

      பெரியவர்கள், மற்றவர்கள் செய்த பெரிய தவறுகளையும் மறந்துவிட்டு, தாங்கள் செய்த சிறு தவறுகளைத்தான் பெரிதாக நினைப்பார்கள்.

      அதனால்தான் அவர்கள் பெரியவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். நாமும் அவர்போல் நடக்க தினம் தினம் முயற்சி செய்வோம். முயற்சி திருவினை ஆக்கும்.

      Delete
  24. பையன் யார்னு தெரிஞ்சது. ஆனால் அந்தப் பதிவர் யார்னு தெரியலை. காத்திருக்கேன். :)))))

    ReplyDelete
  25. சந்தோஷத்துடன், “பேஷ் ... பேஷ் ... அவன் ரண்டு மூணு நாளா பெரிய உபகாரம்னா பண்ணிண்டு வரான். வரட்டும். ஆசீர்வாதம் பண்ணி பிரஸாதம் கொடுப்போம்!” என்று கூறிவிட்டு ஸ்நானத்துக்குக் கிளம்பினார், மஹா ஸ்வாமிகள்.//

    பையனுக்கு ஆசீர்வாதம் கிடைத்து இருக்கும். கொடுத்து வைத்த பையன்.
    பதிவர் விஜியா?

    ReplyDelete
  26. மௌனமை சிறந்த ஆயுதம்..

    சிறுவன் என்று தெரிந்துவிட்டது,இப்போ பதிவர் யார்ன்னு தெரிந்துக்கனும்...

    ReplyDelete
  27. "மெளனத்தைக் கடைபிடித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இருக்காது. இப்படிக் கெடுதலைத் தவிர்ப்பது மட்டுமல்ல, நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மெளனத்திற்கு உண்டு." நல்ல கருத்து.

    மனஅமைதி, இறைசிந்தனைக்காகவும் சிலர் மெளன விரதம் கடைப்பிடிக்கின்றார்கள்.

    பையனையும், பதிவரையும் அறியக்காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  28. அந்த பையன் திரும்ப வந்து ஆசீர்வாதம் வாங்கிண்டானா? அந்த பதிவர் யார்? ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  29. “மெளனம் சர்வார்த்த சாதகம்”//

    முற்றிலும் உண்மை. ஆனா என்னை மாதிரி ஆட்களுக்கு ரொம்ப கஷ்டமாச்சே.

    எங்க அம்மா சொல்வது:
    ஒரு பெண்ணுக்கு பேசாமலே இருக்க முடியாதாம். அவளுக்குத் திருமணமாம். அவள் பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஈச்ச முள்ளால் வாயைத் தைத்து விட்டார்களாம். அப்படியும் அந்தப் பெண் சும்மா இருந்தாளா என்ன. ஈச்ச முள்ளை இறுகத் தெச்சாலும், “தேங்காய்க்கு மஞ்சள் பூசலையே பெண்டுகளே” என்றாளாம்.

    குடலை நிறைய வில்வ இலையைக் கொண்டு வெச்சது யார்ன்னு தெரிஞ்சுண்டாச்சு. மேல என்ன ஆகறதுன்னு பார்ப்போம்.

    யார் அந்தப் பதிவர். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

    எப்பப்பாரு சஸ்பென்ஸ் தான் கோபு அண்ணாவுக்கு.

    எங்களுக்கு சஸ்பென்ஸ் கொடுப்பதில் உங்களுக்கு இணை நீங்களே தான்.

    ReplyDelete
  30. மெளனம்! என்னால் முடியாத ஒன்று.

    வில்வத்தை வச்சது அந்த சிறுவன்தானா?

    y வச்சான்? தொடருவோம்.

    அந்த பாடலின் முதல் 4 வரியை படித்தபோது இவருக்கு என்னாச்சுனு நினைச்சேன்.அந்த பதிவரின் சந்தோசத்தை தெரிவிக்க அந்த பாடலையே டைப்ப உங்களால் மட்டுமே முடியும்.

    ReplyDelete
  31. அன்பின் வை.கோ - மௌனம் அழகு - அலங்காரம் - விளக்கம் வழக்கம் போல் அருமை - வில்வ இலைகளை வைத்து விட்டுப் போனது யார் ? கண்டு பிடிக்க காரியஸ்தர் வெளியில் நின்று பார்த்து - ஒரு சிறுவன் கொண்டு வது தினந்தின்பம் வைக்கிறான் எனக் கண்டுபிடித்தார் - வில்வத்தினை வாங்கிக் கொண்டு - அச்சிறுவனிடம் பெரிய சாமியிடம் அழைத்துப் போகிறேன் - ஆசிர்வாதம் வாங்கிக் கொள் எனக் கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தொடர் தொடர்கிறது.

    தேடினேன் வந்தது - மகிழ்ச்சிப் பதிவு நன்று - யாரந்தப் பதிவர் - தெரிந்து கொள்ள அவா - சஸ்பென்சை விரைவினில் உடைத்தெறிக. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  32. அந்தப் பையன் ஆராக இருக்கும்????.

    முடிவிலே பாடலைக் கூறி, பாடியவர் ஆரென சஸ்பென்ஷா?:))

    ReplyDelete
  33. பையனின் அழுக்கு வேஷ்டிதான் காரியஸ்தரின் கண்ணை உறுத்துகிறது. அதில்தான் ஏதோ சூட்சுமம் இருக்கிறது.

    ReplyDelete
  34. ஓ..... சிறுவன் ரூபத்தில் வந்து விட்டாரா. அடுத்து என்ன நடக்க போகிறதுன்னு எதிர்பார்ப்பு

    ReplyDelete
  35. ஓ.. அந்த சின்ன பய புள்ள ஆரு.நல்லா சொல்லிகிட்டு வாரீக.

    ReplyDelete
  36. அந்த சின்ன பையனுக்கு அருள் செய்ய பெரியவா தீர்மானித்து விட்டார்கள் அந்த பையன் பாக்கியசாலிதான்.

    ReplyDelete
  37. மெளனத்தைக் கடைபிடித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இருக்காது. இப்படிக் கெடுதலைத் தவிர்ப்பது மட்டுமல்ல, நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மெளனத்திற்கு உண்டு.

    “மெளனம் கலக நாஸ்தி”

    “மெளனம் சர்வார்த்த சாதகம்” /// இரண்டுகைகளும் தட்டினால்தானே ஓசை. மெளனம் - மாபெரும் பலம்.

    ReplyDelete
  38. ஓ....அந்த பையன் யாரா இருக்கும்... அடுத்த பகுதி படிக்கறதுக்குள்ள என்ன அவசரகுடுக்கைத்தனம்....????))))

    ReplyDelete
    Replies
    1. happy November 4, 2016 at 6:19 PM

      வாம்மா ..... ஹாப்பி ! செளக்யமா?

      //ஓ....அந்த பையன் யாரா இருக்கும்...//

      தெரியலையே ! :)

      //அடுத்த பகுதி படிக்கறதுக்குள்ள என்ன அவசரக் குடுக்கைத்தனம்....????))))//

      நீ அவசரக் குடுக்கையெல்லாம் இல்லை. ஆமை+நத்தை போன்ற மிகவும் பொறுமைசாலி.

      அதனால் தான் தினமும் இங்கு வராமல் எப்போதாவது வருவது என வைத்துக் கொண்டுள்ளாய். எப்படியோ நீ வந்தவரை எனக்கும் மிகவும் சந்தோஷமே !!

      மிக்க நன்றி.....டா, ஹாப்பி.

      Delete
  39. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (02.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=407075946461772

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete