என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 21 ஜூலை, 2014

தனக்குத்தானே நீதிபதி ! - புதுமையான போட்டி !! - மிகச்சுலபமான போட்டி !!!

தனக்குத்தானே நீதிபதி !

 வாசகர்கள் விமரிசகர்கள் எல்லோரும் கலந்து கொண்டு 
சிறப்பிக்கப் போகும் ஒரு புதுமையான போட்டி



பல்லெல்லாம் 
பஞ்சாமியின் பல்லாகுமா ?




'பல்லெல்லாம் பஞ்சாமியின்  பல்லாகுமா?' கதைக்கு நிறைய விமரிசனங்கள் வந்து குவிந்திருக்கின்றன.  ஒவ்வொரு கட்டத் தேர்விலும் தேர்ச்சி பெற்று இறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுத் தேர்வில் கீழ்க்கண்ட ஒன்பது விமரிசனங்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றுத் தேர்வான வெற்றிப் பட்டியலுக்குக் காத்திருக்கின்றன, என உயர்திரு நடுவர் அவர்களிடமிருந்து ஓர் இடைக்கால அறிவிப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

இவற்றில் முதல் பரிசுக்கு இரண்டு, இரண்டாம் பரிசுக்கு இரண்டு, மூன்றாம் பரிசுக்கு ஒன்று என்று மொத்தம் ஐந்து விமரிசனக் கட்டுரைகளை அந்தந்த பரிசுக்கு வகைப்படுத்தித் தேர்ந்தெடுக்க வேண்டும்.  இது தான் தங்களுக்கான போட்டி.

இந்தக் கதைக்காக நடுவர் தேர்ந்தெடுக்கும் பரிசுத் தேர்வுப் பட்டியலோடு எல்லா வகைகளிலும் ஒத்துப் போகும் தேர்வுப் பட்டியலை அனுப்பியவருக்கு ஸ்பெஷலாகப் பரிசு உண்டு.

முதல் இரண்டு, மூன்று என்று மூன்று பரிசுகளுக்கும் அப்படியே முதல் இரண்டு, மூன்று என்று நடுவர் பரிசுக்காக தேர்ந்தெடுக்கும் பட்டியலோடு 100% ஒத்துப் போனால் தான் பரிசு என்பது முக்கியமான விதி.

பரிசுத் தொகை ரூ.300/-.   ஒருவருக்கு மேலாக சரியான விடையை அனுப்பி வைத்திருந்தால் பரிசுத்தொகை சமமாக பிரித்துத் தரப்படும்.

பதிவர்கள், வாசகர்கள் மட்டுமல்ல இந்தக் கதைக்கு விமரிசனம் அனுப்பி வைத்த அத்தனை விமரிசகர்களும்  கூட இந்த சிறப்புப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறலாம் என்பது இந்தப் புதுமைப் போட்டியின் சிறப்பம்சம்.

ஒவ்வொரு விமரிசனக் கட்டுரைக்கும் அந்தக் கட்டுரையின் தலைப்பில் ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கிறது.  முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று பரிசுக்கான அந்தந்த கட்டுரைகளை வகைப்படுத்தி அந்தந்த கட்டுரைக்கான எண்ணையும் அந்த கட்டுரையின் ஆரம்ப வரியின் முதல் வாக்கியத்தை மட்டும் குறிப்பிட்டு  நீங்கள் உங்கள் தேர்வுப் பட்டியலை அனுப்பி வைத்தால் போதும்.

'பல்லெல்லாம் பஞ்சாமியின்  பல்லாகுமா?' கதையின் சுட்டியும் உங்கள் வசதிக்காக மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

25.07.2014 வெள்ளிக்கிழமை காலை இந்திய நேரம் 10 மணிக்குள் வந்து சேரும் தேர்வுப் பட்டியல்களே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் தேர்வுப் பட்டியலை valambal@gmail.com என்ற என் மெயில் முகவரிக்கு மட்டுமே நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதையும் உங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். மெயிலில் Subject என்ற இடத்தில் ”தனக்குத்தானே நீதிபதி - போட்டி” என எழுதி அனுப்பவும்.

இறுதிக் கட்டத் தேர்வுக்குக் காத்திருக்கும் 9 விமரிசனக் கட்டுரைகளும் அவற்றிற்கான குறியீட்டு எண்ணும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ooooooooooooooooOoooooooooooooooo

Reference Number : VGK 26002

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கதை எல்லாம் நம் கதாசிரியரின் கதைபோல் சிரிக்கவைக்குமா?

பல்லெல்லாம் பஞ்சாமியின பல்லாகுமா?
சொல்லெல்லாம்  நகைச்சுவை சொக்குப்பொடி தூவி நகைக்கவைக்குமா?

வெடிச் சிரிப்பு மட்டுமே வாழ்க்கைப்பாடம் நடத்துமா? 
வர்ணணைகளெல்லாம் சுவையோடு விழுந்து எழுந்து உயிர்பெறுமா?

பல் என்ற ஒரே ஒரு இரண்டெழுத்து ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு நகைச்சுவைப் பல்லாங்குழி விளையாட்டு விளையாடி வெற்றியும் பெறுகிறார்
 கதை ஆசிரியர்..

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ..!
உழைத்து வாழவேண்டும் ..போலி பல்டாக்டர் போல 
பிறர் உழைப்பில் வாழ நினைந்திடாதே..!

சொட்டுத் தண்ணீர் வைத்து சட்டிசாந்து வழிக்கும் அளவுக்கு கருமை நிறக் கண்ணன்கள் கூட சினிமாநட்சத்திரங்களின் அழகு சாதன சோப்புகளையும் சிவப்பழகு கிரீம்களையும் நாடுவதை சிரிக்கச்சிரிக்க சொல்லி  சிந்திக்கவும் வைக்கிறார் கதை ஆசிரியர்.. 

பஞ்சாமி பல்லவராயன் என்னும் போலி டாக்டரிடம் பெற்ற அதீத அவஸ்தைகளைப் பக்கத்திலிருந்து பார்த்தமாதிரி பல்கலைகழ்கமாய் பல்வேறு தகவல்களையும் நகைச்சுவை ததும்ப ததும்ப பதிவு செய்திருக்கிறார் கதை ஆசிரியர்..

தேன் - தானே மருந்தாகி நோய் தீர்ப்பதோடு , மருந்து உண்ணவும் துணைபுரிந்து  இனிமை கூட்டுவது போல நகைச்சுவைத்தேன் குழைத்து  பற்கள் பற்றிய விழிப்புணர்வும் போலி மருத்துவர் பற்றிய எச்சரிக்கை உணர்வும் தோழமையாய் ஊடுருவி கலந்து கதையாக சிரிக்கச் சிரிக்க ரசித்து  அளிக்கப்பட்டிருக்கிறது..

திரைப்படத்தை வெற்றியடைய வைக்க  ரிப்பீட்டட் ஆடியன்ஸ் என்ற நிலையில்  திரும்பத் திரும்பப் பார்த்து அபிமான நட்சத்திரங்களை சூப்பர் நிலைக்கு ஜொலிக்கச்செய்யும் ரசிகர்களே..காரணமாகிறார்கள்..

மனதில் சோகமோ , சலிப்போ படரும் நிலையில் இந்த மாதிரி நகைசுவைச் சித்திரங்கள் நினைவில் மலர்ந்து மீண்டும் படித்து  மனதில் படிந்த கவலைக் கறைகளை அகற்றி புத்துணர்வு பெறச்செய்கிறது..!.

ஈஸ்ட்மென் கலரில் ஒன்றோடொன்று இணைந்து தேங்காய் துருவிப்பல் பஞ்சாமியின் பெருமை மிகு அடையாளச்சின்னமாம் -

பற்களில் பாறைகளாய் படிந்த காறைகளை  பாளம் பாளமாக பெயர்ந்து எடுப்பதை ரசிக்கும் போது நம் கவலைகளும் பெயர்த்து எடுக்கப்பட்டது போன்ற உணர்வில்  புன்னகை மலர்வதை தடுக்கமுடியுமா என்ன??

துணி துவைக்கும் சொரசொரப்பான கல்லுக்கும் அலசி பிழிந்துவைக்க பக்கத்துப் பல்லையும்  உவமானமாக சொல்லும் நேர்த்தியில் நம் துயரங்களும் துவைத்து அலசி பிழிந்து  காணாமல் போனதாக சிரிப்பின் மூலம் மாயாஜாலம் நிகழ்த்துகிறார் கதை ஆசிரியர்..

ஏனுங்க . கதாசிரியரே ! பல்லு கொஞ்சம் எடுப்பாக இருந்தால் ஆளாளுக்கு எகத்தாளமாகவா பேசுவீர்கள் ??!! .உங்களுக்கும் எடுப்பான தேங்காய் துருவ வசதியான , துணிதுவைக்க, அலசிபிழிந்து வைக்க சௌகர்யமான சொரசொரப்பான வண்ணமயமான பல் இல்லையே என்ற பொறாமைதான்.. வேறென்ன??  

சிரிக்காமலேயே வெளியில் சம்மனில்லாமல் ஆஜராகும் முந்திரிக்கொட்டைப் பற்களுடன் இருப்பவரைப் பார்த்துசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் என்று பாடவேண்டிய மனைவியே நிலவைப் பார்த்து என்னைத்  தொடாதே என்று சொன்ன வானமாக - தீண்டுவீராகில் திருநீலக்கணடம் - மாதிரி பல்லிருக்கும் வரை பக்கத்தில வரத்  தடையாணை பிறப்பித்த பிறகே  பல்லுப் போனபின் பக்கத்தில் வரவேண்டிய அவசியம் என்ன என் தனக்குத் தானே வினவி -சத்தமாக கேட்க ஒரு பயம் தான் - கஸ்தூரி மான் தன் வயிறிலிருந்து வரும் கஸ்தூரி வாசத்தை உணராதது போல - தன் சாக்கடை நாற்றம் தனக்கே தெரியாத -நாறவாய் நாராயணசாமியான பஞ்சாமி பல்லழகராக மாற முடிவெடுத்தவருக்கு ஒரு போலி டாக்டரா கிடைக்கவேண்டும்??

   தான் சீராட்டி வெற்றிலை போட்டு ஈஸ்ட்மென் கலரில் வண்ணமயமான பற்களை சுத்தம் செய்ய முடிவெடுக்கிறார்.. 

கஸ்தூரி மான் குட்டியோ கண்ணீரை ஏன் சிந்துதோன்னு தாலாட்டி சீராட்டி பக்குவமாக பார்த்துக் கொள்ளவேண்டிய  பற்களைப் போய் அதிர அதிர வெடு வெடுக் என்று பிடுங்கி பணமும் பிடுங்கப் படும்போது படிப்பவர் மனமும் பற்களும் கிடுகிடுத்துத்தான் போகின்றன..


கூடவே மாமனார்  வேறு பல்செட்  பார்ட்டியானாலும் கரகரன்னு கடித்து கரக்முறக்குன்னு சாப்பிட்டு வெறுப்பேத்துவாரா... 

 அவ்வழியே ஆசைப்பட்டு கட்டிக்கொண்ட பல் செட் பாத்ரூமில் உடைபட்டும் , காலி மணிபர்சாக ஆரஞ்சு பழத்தோலாக காட்சிப்படும் போதும் , நாக்கு மட்டும் பற்கள் இருந்த இடத்தில் நலம் விசாரிக்கும் சோகத்திலும் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கிறார் கதை ஆசிரியர்

உரலுக்கு ஒருபக்கம் இடி .. மத்தளத்திற்கு இருபக்கம் அடி.. பஞ்சாமிக்கோ திரும்பின பக்கமெல்லாம் இடியா .??. என்னதான் செய்வார் பாவம் மனிதர்..

நம் அபிமான திரை நட்சத்திரங்களும் பல்மருத்துவர்களும் விளம்பரத்தின் மூலம் ஆக்ரமித்து என்னதான் பல் பாதுகாப்பை போதித்தாலும் அலட்சியமாக கடந்து செல்லுபவர்கள் கூட அந்த அதிர அதிர பல் மருத்துவம் செய்யும் கருவியையும் குத்துசண்டை போட்டியும்   ஒரே குத்தில் எதிராளியை வீழ்த்தி வெற்றி வாகை சூடும்  மைக் டைசனிடம் குத்து வாங்கியது போல வாய் வீங்கி ரத்தக்களறியான பஞ்சாமி வாயையையும் , கண்ணீர் சிந்தும் பல்லின் படமும்   பல்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவரவருக்கு உணரவே வைக்கும் உறுதியாக..

பல்லோடு  பலபேரின் சொத்துக்களையும் வெடுக்கென்று பறித்துக் கொள்ளும் பல்டாக்டர் போலி பல்லவராயன்  நல்லவேளை பல்கலைகலைகழகம் பக்கம் பயணம் செய்யும்போது  போலீசால் பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்..

இதுமாதிரி இன்னும் எத்தனை பேர் போலியாக உலவி எததனை பேர் பல்லைப்பதம் பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ என்று விழிப்புணர்வும் தருகிறார்  கதை ஆசிரியர்.. 

சந்தையில் மாடுபிடிக்கும்போது மாட்டின் பல்லைப் பார்த்து தேர்ந்தெடுப்பது போல டாகடரையும் தேர்ந்தெடுக்கமுடிந்தால் நன்றாக இருக்கும்தான்.. தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப்பார்க்காதே என்று ஆராயாமல்  போய் பல்லை இழந்துவிட்டாரே பஞ்சமி?!  

பல் தேய்த்த பற்பொடிகளில் உலகநாடுகளை அறிந்துகொள்ள வைத்த ரோஸ் கலர் தித்திக்கும் பல்பொடி மலரும் நினைவுகளை கிளர்ந்தெழ வைக்கிறது..

பல்லுபோனால் சொல்லுப்போச்சு  அத்தோடு விருப்பப்பட்டதை சாப்பிடமுடியாமல் பலமும் போய் அவஸ்தைப்பட்டு  பணமும் செலவாகி அதிர்ச்சியடையும் போது இறைவன் நமக்களித்த உறுப்புகளின் கொடைக்கு நன்றி செலுத்துகிறோம் .. 

பல், கண் , காது கை கால் இதயம் -ஏன்  நகம் ,தலை முடிகள் கூட ஆரோக்கியமாக இருக்கும் போது நம் கவனத்துக்கு வராமல் அதனதன் வேலைகளைக் கவனிக்கின்றன..

உதிர்ந்தால் முகச்சுளிப்புடன் குப்பைக்குப்போகும் முடி கூட  வழுக்கையான பின் எத்தனை கவனம் பெறுகிறது ..!

நிழலின் அருமையை வெயிலில் உணருவது போல் ஆரோக்கியமோ செல்வமோ உறவோ நட்போ  இருக்கும்போது கவனம் பெறாமல் விலகியபின் எத்தனை துன்பமும் செலவும் கொடுத்து ஏங்க வைக்கிறது..!!

சிறு உடற் குறைபாடுகள்-   நேர்ந்தால் செயற்கைக்கு அடி எடுத்துவைக்கும் போது எத்தனை தொல்லைகளை எதிர்நோக்கநேரிடுகிறது என்பதை வலிக்கவலிக்க உணருகிறோம்

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப்போனால் அங்கு இரண்டு கொடுமை  டிங்கு டிங்குன்னு ஆடிக் கொண்டிருந்தாற் போலத்தானே காட்சிகள் அமைகின்றன..!! கடவுளே..கடவுளே..!!

பணம் இன்னிக்குப் போனால் போனது போனதுதான்..
போனால் வாராது திரும்பக் கிடைக்காது ..ஆரோக்கியமும் இயற்கை நமக்களித்த உறுப்புகளும் அப்படித்தான் என பொட்டில் அடித்தாற்போல் நச் என ஆணி அறைந்தாற்போல் மனதில் பதிய வைக்கிறார் கதை ஆசிரியர்..! 

அதுவும் குத்துச்சண்டைப் போட்டியில் ஒரேகுத்தில் எதிராளியின் வாயை ரத்தக்களறியாக்கி வெற்றி வாகைசூடும் மைக்டைசனின் காட்சி வேறு படிப்பவர்கள் கையது கொண்டு வாயது பொத்தி மரியாதை செய்ய அநிச்சையாக தூண்டப்படுகிறார்களே..!

கூந்தலுள்ள மகராசி இடமும் முடிவாள் வலமும் முடிவாள் 
பல்லிருப்பவன் பக்கோடா  சாப்பிடுகிறான்.. கடித்து மென்று ,  ருசித்துச் சாப்பிடமுடியாமல் மிக்ஸியில் பத்தியமாய் பொடித்துச் சாப்பிட்டு  உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பார்த்து ஏங்குவதுபோல -சின்னக்குழந்தை மிட்டாய்க்கு ஆசைப்படுவதுபோல பாவம் பரிதாபப்படவைக்கிறார்..

வாய்க்கொழுப்பு சீலையில் வடிய கொழுப்பெடுத்துப்போய் எதிராளியையை நாக்கு மேலே பல்லைப் போட்டு ஏதாவது பேசப் போய் அங்கே பழி ஒரு பக்கம் பாவம் ஒருபக்கமாக வாங்கிக் கட்டிக்கொள்வது ஒரு பாவமும் அறியாத பல்தானே.. 

பல்லைத் தட்டிக் கையில் கொடுத்திடுவேன் என்பார்கள்.. சண்டையில் பல்தான் உடையும் .. காரணமான நாக்கு பத்திரமான  முப்பத்திரண்டு சிப்பாய்களான பற்களின்  கோட்டை நடுவில் பத்திரமாக அரசோச்சி பாதுகாப்பாக இருந்துகொள்ளுமே..! எல்லாச்சோதனைகளும் பல்லுக்குத்தானே..!

ஆனால் இத்தனை சோதனைகளுக்குப்பிறகும் தேனிருக்கும் இடத்தினைத்தேடி நாடும் வணடுபோல பல்லிருந்த வெற்றிடத்தை அடிக்கடி தேடி நலம் விசாரிக்கும் நன்றியுள்ளதாக இருக்கிறதே நாக்கு..!

கதாசிரியர் தானாகட்டும் பல் சுளுக்கும் அளவுக்கு சிரிக்க வைக்க வரிக்கு வரி நகைச்சுவை சொக்குப்பொடி தூவி எழுதி சொக்கவைத்துவிடுகிறாரே..

விழுந்து விழுந்து சிரித்து எழுந்து பார்த்தால் காணாமல் போன பற்களுக்கு கதை ஆசிரியரே பொறுப்பு...
முழுமையான கவனத்துடன்  இலக்கின் மீது வைத்த விஜயனின் குறி தவறாதது போல முரசின் முழக்கமாக நகைச்சுவை வெடிச்சிரிப்பு  அதிர , படங்கள்  கதைக்கு மகுடம் சூட்ட  .உயிரோட்டமான கதை ...!

ooooooooooooooooOoooooooooooooooo

Reference Number : VGK 26003

கதையின் மிகப்பொருத்தமான தலைப்பபே மாணிக்கக் கல்லாக ஜொலித்து பஞ்சாமியின் பற்களே கதையின் கதாநாயகன் என்று  முரசறைகிறது  ..

ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில்  பந்தலிட்டு அதிலே தேன்மாரி பெய்தாற்போல் நகைச்சுவைப் பந்தலில் கதைமழை, படங்களுடன் பொழிந்து ஆனந்தப்படுத்துகிறது..

பல்போனால்- இந்தப்பல்போனால் ...பின்னாலே பணம் போகும் , சொல்லும் போகும், தேடிக்கொண்டு ஆரோக்கியமும் ,மகிழ்ச்சியும் ,சந்தோஷமும் பின்னாலேயே போய்விடும்.. வாழ்வின் அச்சாணிக்கு உத்தரவாதமில்லை  என்பதை பளிச் என உணர்த்துகிறது கதை..!

ஆடம்பரக் கப்பல் அரண்மனையாக கடலில் மிதக்கும் போது அதன் சொகுசு கண்டு பிரம்மிக்கும் போதே அதன் அஸ்திவாரமாக, கடலில் மூழ்கி பார்வைக்குப் புலப்படாத கப்பலின் அடித்தளம் பிரம்மாண்டமான நுணுக்கமும் ஆழ்ந்து யோசிக்கும்போது உணர்ந்து வியப்போம்.. 

இந்தக் கதையிலும் அலங்காரமான வர்ணனைகளில் திளைத்து சிரித்து ரசிக்கும்போதே , அதன் உள்ளுறை கனமான நீதி நம்மை அறியாமலே மனதில் பதிவது கதாசிரியரின் திறமைமையைப் பறைசாற்றுகிறது..

பல் ஜொலிக்கிறது..அழுகிறது ..டூயட் பாடுகிறது ..பல்செட் சிரிக்கிறது..சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைக்கிறது நேர்த்தியாக..

அந்த பல்டாக்டரின் அதிரும் உபகரணமாகட்டும் , உலக சாம்பியனின் குத்துச்சண்டை அசையும் படமாகட்டும் பயமுறுத்தி பற்களின் பாதுகாப்பை அலட்சியம் செய்யக்கூடாது என்று உணர வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன..

 கண்ணீர்விட்டு அழும் பல்லின் படமும் , டூயட் பாடி ஆடும் பற்களின் படமும், சிரிக்கும் பல்செட்டும்  நிச்சயம் பல் பாதுகாப்பையும் விழிப்புணர்வையும் உறுதிசெய்யப் போதுமானவையே.!

எத்தனையோ பெரும்பணம் செலவழித்து  எடுக்கப்படும் பற்பசை , டூத்பிரஷ் விளம்பரங்களும் தின,வார மாத பத்திரிக்கைகளிலும் , தொலைக்காட்சியில் நொடிக்கொரு முறை ஆக்ரமித்தும் , சினிமா தியேட்டர்களிலும் கவனத்தைக் கவரும் வியாபார முயற்சிகளில்,  பல் பாதுகாப்பை சுலபமாக சாய்சில் விட்டுவிட்டு, அந்த நட்சத்திரங்களை ரசிப்பதையே அதிகம் கண்டுரமுடியும்.. 

இந்தக் கதையிலோ எந்த விளம்பர முயற்சியும் இல்லாமலே கதை ஆசியர் நயந்தும் , பயந்தும் , நகைச்சுவையிலும் , படத்துடனும் வர்ணணைகளிலும் பஞ்சாமியின் அவஸ்தைகளை பட்டியலிட்டுக் காட்சிப்படுத்தும் போது  நிச்சயம் பற்களின் மீது கவனம் செலுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்போம்..  

அத்தனை நேர்த்தியான வாழைப்பழத்ததில் ஊசி ஏற்றுவதுபோல் ,  கைதேர்ந்த  மனோ தத்துவ நிபுணர் சிரிக்கச் சிரிக்கப் பேசியே உள்ளத்தில் ஆழ்ந்திருக்கும் அறியாமை இருளை நீக்குவது போன்ற அரிய பணியை செய்கிறார் ஆசிரியர்..

பஞ்சாமியின் பற்களில் படிந்த காறைகளை பாறைகளைப் போல் டாக்டர் பெயர்த்து எடுக்கும் காட்சியில் நாம் மூக்கின் மீது விரலை வைக்கிறோம்..

தேங்காய் துருவி , துவைக்கும் கல் , ஈஸ்ட்மென்கலர் பல், இணைபிரியாத பற்கள் , உதட்டுக்குள் அடங்காமல் எப்போதும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பற்கள் அவர் வாய் வீச்சம், மனைவியின் புறக்கணிப்பு எல்லாம் வாய்விட்டு சிரிக்கவைக்கும் வர்ணணைகளில் ஆசிரியர் சிரிப்புக் கச்சேரியே நடத்திவிடுகிறார்..  

நோகாமல் நொங்கு கிடைத்தாற் போல்,   தேனில் ஊறிய சுவையான பலாப்பழத்தை தித்திக்கத் தித்திக்கத் திகட்டாமல் ரசித்து உண்டாற் போல் கதையின் சுவையில்- சிரிப்பில் கிறங்க வைக்கிறார் கதை ஆசிரியர்..  

ஹவாய் செருப்பு போட்டு ஹாய்யாக நடப்பவனை இழுத்து நிற்கவைத்து ஹாங்காங் ஷூ போட்டு இறுக்க கட்டினற் போல் பல் செட் கட்டிய  பஞ்சாமியை வைத்தே   பஞ்ச் வைத்து ரணகளத்திலும்  கிளுகிளுக்கவைக்கிறார் ஆசிரியர்..…

 புதிதாய் எண்ட்ரி ஆன பல்செட்  தன் கூர் பல்லால் ரம்பத்தால் பதம் பார்த்தது போல் அதன்  சீட்டையே அசைத்து பார்த்து படுத்துகிறது..… நாக்கும்  பாவம்.. நாக்கோட ஓனர் பஞ்சாமியும்  ரொம்ப ரொம்ப பாவம்.

பல் செட்டாகாத போது கத்தி சாணைப்பிடிப்பது போல சாணைக்கல்லால் பஞ்சாமியின் பல்லை பதம் பார்க்க பாவம் பஞ்சாமி உடல் முழுக்க டிஸ்கோ டான்ஸ் ஆடின தேள்கடி டான்ஸ் போல உதறி போடுவதே… ரொம்ப ரகளை..!

பல்சிகிச்சையின்போது நடக்கும் அத்தனை விஷயங்களையும் அப்படியே சுவைபட சினிமா போல படம் பிடித்துக் காட்டுகிறார்..

 எவ்வளவோ செலவழித்து வாங்கிய பல்செட்டை அது கஷ்டமா இருக்குன்னு கழட்டி வைத்துவிட்டு  பொக்கை வாயோட   காலி மணிபர்ஸ் போல் , பொத்தை ஆரஞ்சுப் பழத்தோல் போல் தொளதொள வாயில் நாக்கைத் துழாவிக்கொண்டு பொக்கை வாயோடு தன் மாமனார் பல் செட் பார்ட்டியானாலும் அதோடு அன்னியோன்னியமாக சுகமாக கடித்துச்சாப்பிட்டு ரசிக்க- பஞ்சாமி மட்டும் பல்செட்டோடோடு ஒத்துப்போகமுடியாமல் டைவர்ஸ் பண்ணி -அதகளம்தான் கதை..!

மிட்டாய்க்கு ஏங்கும் குழந்தையாக சாப்பிடுபவர்கள் வாயைப் பார்த்து ஏங்கி பத்தியமாக மிக்ஸியில் பொடித்து சாப்பிட்டு வாய்ப் புண்ணோடு அல்லாடி  கடித்து சாப்பிடுவதை கடித்து மென்று சாப்பிடும் அனுபவத்துக்கு ஏங்கி  படிப்பவர்களை உஷார் படுத்துகிறார்..

கதை போல இல்லாமல்  நேரடி ஒளிபரப்புபோல்
அத்தனை சுவரஸ்யமாக விளக்கி இருந்தது அருமை
டெயில் பீஸ் மிக மிக அருமை

கதை படித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே மறந்துபோய் பஞ்சாமியின் வலியிலும் உணர்வுச் சுழல்களிலும் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டாற் போல் திறமையான வர்ணனைகளில் நகைச்சுவை விரவியிருக்கும் கதாசிரியரின் திறமை ஜொலிக்கிறது..
ரசிக்கத் தக்க பதிவாகவும் கொஞ்சம் விஷயங்களை
நாசூக்காக புரிந்துகொள்ளும்படியாகவும் கதை..

 போலி மருத்துவரிடம் சென்றதால் பஞ்சாமியின் பற்களைப் பிடுங்கி  பல்லாங்குழி ஆடி பணத்தையும் இழந்து வலியுடன் நேரத்தையும் இழந்து ஈடு செய்யமுடியாத இழப்புக்கு ஆளானவர் படிப்பவர்க்கு பாடமாக அமைகிறார்..
செயற்கையாய் பொருத்திக்கொள்வதை விட சும்மா இருந்துவிடலாம்.... ஒருபோதும் இயற்கைக்கு மாற்றான செயற்கை உறுப்புகள் சிலருக்கு உபயோகத்துக்கு ஒத்துவராது என்று உணர வைக்கிறது கதை..

 கதை விவரித்த நிறைய விசயங்கள் பொதுவாகவே பல் சிகிச்சையில் நடைபெறுவதுதான். 

படிக்கும்போத சிறப்பான  வர்ணனையால் பல் கூசி பற்கல் தந்தியடிக்கைன்றன..

தான் செல்லும் இடங்களிலெல்லாம் வெளிச்சத்தை விதைத்துச்செல்லும் சூரியன்போல் முதல் வரியிலிருந்து ஆரம்பித்து  கதை நெடுக சிரிப்பு விதைகளை துவிச்செல்கிறார் திறமை மிக்க கதாசிரியர்..
 அவை ஆங்காங்கே வெடிச்சிரிப்பை விளைவிக்கின்றன..
"பல்" :லவ சாம்ராஜ்ஜியத்தை பத்திரமாக பார்த்து பாதுகாத்து - படை எடுத்து வரும் நோய்களை வரும்முன் காத்துக்கொள்வதோடு, வந்தபின்பும் சரியான்  மருத்துவரிடம் செல்லவேண்டும் என்று பாடம் படிக்கிறோம் ..

"பல்"பல்லாய் கீறிப்போட்ட தேங்காய் ருசிக்கும் பாயசத்தை ஆயாசம் தீர ருசிக்கும் போது முந்திரிப் பருப்பைக்கூட தூ ..தூ என்று வெளியே துப்பி கடித்துசாப்பிடமுடியாத பஞ்சாமி பரிதாபத்தை வாவழைக்கிறார்..

இந்த கதி யாருக்கும் வரவேண்டாம் ..ருசித்துச்சாபிடக்கிடைத்த இந்த அருமையான பிறவியை தவறான முடிவெடுத்து போலிகளிடம் சிக்கிச் சீரழிந்து சின்னாபின்னமாக்க வேண்டாமே

வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ  என்று அத்தனை பற்களையும் பறிகொடுத்து பல் செட்டும் செட்டாகாமல் பஞ்சாமி தறிபடுமோ தாளம் படுமோ என்கிற உச்சபட்ச அவஸ்தையில் படும் சிரமங்களைப்படம் பிடித்துக் காட்டுவது படிக்கும் அனைவருக்கும் பாடமாக அமைகிறது..

பல்லைப் பத்திரமாக பாத்துக்கோங்க ...

பல் போன பதிவைப் படித்து சிரித்து படிப்பவர் பற்களும் சுளுக்கிக்கொண்டு விட்ட உணர்வைத் தோற்றுவிக்கிறார் கதை ஆசிரியர்....

வெற்றி முரசின் முழக்கத்தோடு கதையைப் படித்து சிரிக்கும் சிரிப்பொலியும் சேர்ந்து மின்னலோடு மின்னி முழங்கி கதையின் வெற்றியைப் பறைசாற்றுகின்றன..!  

ooooooooooooooooOoooooooooooooooo

Reference Number : VGK 26004

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ?

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

 கதையெல்லாம் கோபு சாரின் கதையாகுமா? 

எனப்பாடலாம் போலத் தோன்றுகிறது.

மனிதனின் எந்த ஒரு உறுப்புமே அவனுடன் ஒத்துழைக்காவிட்டால் அது மஹா மஹா அவஸ்தை தான் என்பது மறுப்பதற்கு இல்லை.

நாம் அன்றாடம் உண்ணும் உணவை நன்கு மென்று அசைபோட உதவும் பற்களின் பங்கும் இதில் மிகவும் முக்கியமானதாகத் தான் உள்ளது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 

இந்தக்கதையை ஆரம்பம் முதல் கடைசிவரை நான் அசை போட்டுப்பார்த்ததில், என் பற்களே தந்தியடிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்காங்கே வரிக்கு வரி சிரித்ததினால் என் பற்களே சுளிக்கிக்கொண்டது போல உணர்ந்தேன். 

கதையை இந்த ஆசிரியர் எட்டு பகுதிகளாகப்பிரித்து மேய்ந்துள்ளார். ஒவ்வொரு பகுதிகளிலும் குறைந்தது நான்கு இடத்திலாவது நம்மைச் சிரிக்க வைக்கிறார் கூடவே சிந்திக்கவும் வைக்கிறார்.  ஆக நம் 8 x 4 = 32 பற்களுமே ஒழுங்காக பராமரிக்கப்பட்டு, இந்தக்கதையை வாசிப்பவர்களுக்கு இது நல்லதொரு நகைச்சுவை விருந்தாகும்.

பல்லினால் இதுபோன்ற அவஸ்தைகள் பட்டவர்கள் நம்மில் பலரும் இருக்கலாம். அவர்களுக்கு இந்தக்கதை ஓர் சொந்த அனுபவத்தை மீண்டும் [பல் இருந்தாலும் இல்லாவிட்டாலும்] அசை போட வைப்பதாக இருக்கலாம்.

கதாசிரியருக்கே இது தன் சொந்த அனுபவமா? அல்லது தன் வீட்டிலோ, அக்கம்பக்கத்து உறவினர்களிடம் / நண்பர்களிடம் கேட்ட, பார்த்த, புரிந்துகொண்ட அனுபவங்களின் தொகுப்பா என, இந்தக்கதை நம்மை மிகவும் வியக்க வைக்கிறது. எல்லோராலும் இதுபோலெல்லாம் எழுச்சியுடன் எழுதிவிட முடியாது.

நாம் சிகிச்சை பெறப்போவது ஒரு போலி பல் டாக்டரோ அல்லது நல்ல தகுதி வாய்ந்த உண்மையான பல் டாக்டரோ, யாராகவே இருந்தாலுமே, இத்தனை அவஸ்தைகளையும் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது பட்டுத்தான் ஆகவேண்டும் என்பது தான் இதிலுள்ள உண்மையே.

எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் இதே போல புதிதாக பல் செட் கட்டிக்கொண்டார். ஆனாலும் அவரால் அதனுடன் நிம்மதியாக பல்லைக் கடித்துக்கொண்டு காலம்தள்ள முடியவில்லை. அதை அந்த பல் டாக்டரிடமே ரிடர்ன் செய்து விட்டு, பாதிப்பணமாவது தாருங்கள் என மன்றாடியும் பார்த்தார். டாக்டர் அதற்கு சம்மதிக்கவில்லை. கோபம் வந்த அவர், தன் பல் செட்டைக்கழட்டி, தன் தலையைச்சுற்றி மூன்று சுற்று சுற்றிவிட்டு, அங்கிருந்த மிகப்பெரிய குப்பைத்தொட்டியில் என் கண் எதிரேயே போட்டு விட்டுப்போனார்.  அவரைப்பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.

இந்தக்கதையில் ஒளிவீசும் பற்கள் போலவே ஆங்காங்கே நகைச்சுவை மிளிர்வதுடன், நவரசமும் கலந்து கொடுத்துள்ள கதாசிரியரைப் பாராட்டத் தான் வேண்டும். 

வரிக்கு வரி கதையை மிகவும் ரஸித்து மீண்டும் மீண்டும் படித்தேன். வீட்டிலுள்ள வேறு சில பல்போன வயதானவர்களுக்கும் பொறுமையாகப் படித்துக்காட்டினேன். கதை உள்ளது உள்ளபடி தத்ரூபமாகவே எழுதப்பட்டுள்ளதென தங்கள் பொக்கை வாயுடன் சிரித்துக்காட்டினர். இதுவே ஆசிரியரின் வெற்றிக்கு உத்தரவாதம் என நானும் நினைத்துக்கொண்டேன்.

இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்தமான இடங்கள் எனச் சொல்ல வேண்டுமானால், முழுக்கதையையுமே வரிக்குவரி மீண்டும் நான் இங்கு எடுத்துச்சொல்லி சிரிக்க வேண்டியிருக்கும். விமர்சனத்தைப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்போகும் நடுவர் அவர்களுக்கும், இதைப்படிக்கும் வாசகர்களுக்கும் அவை சலிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்பதனால் நான் அந்த அதிகப்பிரசங்கித்தனமான வேலையைச் செய்ய விரும்பவில்லை.

என் வீட்டருகே ஒருவருக்கு இளம் வயதிலேயே தலைமுடி லேஸாக நரை முடியாக ஆக ஆரம்பித்தது. அவர் தன் தலைக்கு ‘டை’ அடிப்பதைத் தன் நித்ய கர்மானுஷ்டானங்களில் ஒன்றாக தவறாமல் செய்து வரலானார். இதனால் அவர் பார்ப்பதற்கு சற்றே இளமைத் தோற்றத்துடன் விளங்கி வந்தாலும், விரைவில் நாற்பது வயதுக்குள்ளேயே அவரின் முடி முழுவதுமே, நரைத்துப்போய் விட்டதுடன், கருப்பு, வெள்ளை, சிவப்பு என ஈஸ்ட்மென் கலரில் செம்பட்டையாக மாறி விட்டது. பார்க்க சகிக்கவில்லை. மேலும் இதனால் அவரின் உடலில் சில பக்க விளைவுகளும் வந்து விட்டன. பிறகு அவர் முடியே போச்சு [மயிரே போச்சு] என ஓர் முடிவுக்கு வந்து அப்படியே ’டை’ அடிக்காமல் விட்டுவிட்டார்.  இயற்கைக்கு மாறாக நாம் எது செய்தாலும், அது மிகப்பெரிய அவஸ்தைதான் எனச் சொல்வதற்காக இதை இங்கு குறிப்பிட்டுள்ளேன். 

’முடி’யென்றதும்  எனக்கு மற்றொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. மயிலுக்குத் தோகையும், சேவலுக்குக் கொண்டையும், யானைக்குத் தந்தமும் போல பெண்களுக்கு அவர்களின் நீண்ட கூந்தல் நல்ல ஒரு அழகு தான். 

ஒரு நாள் நான் பஸ்ஸில் பயணம் செய்தேன். முன்புறம் பஸ்ஸில் ஏறும் வழி அருகே, ஜன்னல் பக்க சீட்டில் அமர்ந்திருந்தேன். ஆரம்பத்தில் கும்பல் இல்லாத அந்தப்பேருந்தில் ஆங்காங்காங்கே உள்ள நிறுத்தங்களில் பலரும் முண்டியடித்து ஏறினர். பலரும் படிக்கட்டினில் தொத்தி பயணம் செய்யும் நிலையும் ஏற்பட்டு விட்டது. 

தன் அழகான மிக நீண்ட சடையைப் பின்னியபடி ஓர்  தாய்க்குலம் அதே பஸ்ஸில் படிக்கட்டில் தொத்தியது. அவரின் பின்னலுக்குப் பின்னால் ஓர் ஆடவரும் ஒட்டியபடி ஏறினார். ஒருவேளை அவர்கள் கணவன்-மனைவியாக இருப்பார்களோ .... அடியேன் அறியேன். அவசரமாக பஸ்ஸில் ஏறிய இவர்கள் இருவரும் தங்களுக்குள் தகுந்த பிடிமானம் ஏற்படுத்திக்கொள்வதற்குள், பஸ் நகரத்தொடங்கியதால், அந்த அம்மாவின் நீண்ட கூந்தலை அந்த கூடவே ஏறியவர் பற்றிக்கொண்டதில், அது அப்படியே அவர் கையோடு தனியாகப் பிரிந்து வந்து விட்டதால் பஸ்ஸிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.  நல்லவேளையாக அவரின் பின் மண்டையில் லேஸான அடி மட்டுமே. தப்பினார். இப்போது பார்த்தால் அந்த அம்மாவுக்குக் கொத்தமல்லிக் கட்டுபோல கொஞ்சூண்டு தான் தலையில் முடி உள்ளது. அதை அழகு படுத்திக்கொள்ள மிக நீண்ட செளரி வைத்துப் பின்னிக்கொண்டுள்ளார் என பிறகுதான் எனக்கும் மற்றவர்களுக்கும் தெரியவந்தது. அனைவருக்கும் சிரிப்பு வர, அந்த அம்மாவுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது.

பொதுவாக பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுக்கக்கூடாது என்பார்கள். பாஞ்சாலியின் தலைமுடியைப் பிடித்து ஒருவன் சபைக்கு இழுத்து வந்து அவமானப்படுத்தியதால், அவன் குலமே அழிந்ததாக மஹாபாரதக்கதை நமக்குச்சொல்கிறது. இந்த பஸ்ஸில் நடந்த ’செளரி’க்கதையும் அதையே எனக்குச் சொல்வதாக நான் அன்று நினைத்துக் கொண்டேன்.

இதையெல்லாம் ஏன் இங்கு சொல்லியுள்ளேன் என்றால், பல்லோ, தலை முடியோ எதுவுமே ஒரிஜினல் ஒரிஜினல் தான் .... டூப்ளிகேட் டூப்ளிகேட் தான்.  இந்தப்பேருண்மையை நமக்கெல்லாம் ஓர் மிகப்பெரிய கதை மூலம் நகைச்சுவை விருந்தாக அளித்து மகிழ்வித்துள்ள கதாசிரியர் கோபு சாரை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  

தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள அசையும் படங்கள் கதை என்ற பற்களுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது, மகிழ்ச்சியளிக்கின்றன. 

விமரிசனம் எழுத வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.


ooooooooooooooooOoooooooooooooooo

Reference Number : VGK 26005

தலைப்பே அருமை.  ஆசிரியர் தாம் கூர்ந்து நோக்கும் வாழ்க்கைச் சம்பவங்களை நகைச்சுவையோடு நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ஒவ்வொரு கதையிலும் அவருடைய அனுபவங்கள் மிளிர்கின்றன. அதோடு உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பற்களைக் குறித்தும், அதைப் பராமரிப்பு இல்லாமல் வைத்திருப்பது சரியல்ல என்பது குறித்து  அவருக்கு எழுந்த நியாயமான கவலையினாலும் மனிதர்கள் எப்படி எல்லாம் தங்கள் ஆரோக்கியத்தில் கவனக்குறைவாகப் பற்கள் பாதுகாப்பில் கோட்டை விடுகிறார்கள் என்பதை இந்தக் கதையில் பஞ்சாமிக்கு வந்த பல்வலி பற்றி நகைச்சுவை இழையோடச் சொல்வதன் மூலம் தெரியப் படுத்தி உள்ளார். . மனிதர்களிலே மட்டும் பலவிதம் பார்க்க முடியுமா என்ன?  பற்களிலும் பல விதங்கள் பார்க்கிறோமே!  பஞ்சாமிக்கு அவர் ஆஜாநுபாகுவான உடலுக்கேற்ற எடுப்பான பற்கள்.  பார்க்கிறவர்களுக்கு அந்தப் பற்களில் தேங்காய் துருவும் ஆசை வேறு வருகிறது. அவரோட மற்றப்பற்களின் நீள, அகலங்களையும் இவர் குறிப்பிடுவதில் இருந்து எவ்வளவு நுணுக்கமான பார்வை என்பதும் புரிகிறது.


பொதுவாகப் பற்களை நாம் சரியாகவே பாதுகாப்பது இல்லைதான்.  அதை ஏதோ வேண்டாத ஒன்றாகவே நினைக்கிறோம். சாப்பிடக் கஷ்டப்படும்போதோ, பல்வலியால் அவதிப்படும்போதே தான் பற்கள் குறித்தே நினைக்கிறோம். ஐம்பது வருடங்கள் முன்னர் வரையிலும் கூடப் பற்பசைகள் இப்போது போல் விதவிதமாக இல்லை என்பதையும் இங்கே ஆசிரியர் அந்தக் காலத்துப் பற்பொடிகளை வரிசைப்படுத்திக் காட்டுவதோடு வீட்டுத் தயாரிப்பான உமிக்கரியையும் ஞாபகமான நினைவூட்டுகிறார். அதே போலப்பற்களைப் பாதுகாக்க அவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் பஞ்சாமி வெற்றிலை, பாக்கு, புகையிலை போடுவதால் பற்கள் பாழாவதைச் சுட்டிக் காட்டிச் சொல்லுகிறார். என்ன செய்தாலும் அவர் வாய் துர்நாற்றத்தால் மனைவி விலகி இருப்பது கொடுமை தான்.  வாய் துர்நாற்றத்துக்குப் பற்கள் மட்டுமே காரணமல்ல.  வயிறு சுத்தமாக இல்லை எனினும் வாய் துர்நாற்றம் இருக்கும்.

அவ்வப்போது பல் மருத்துவரைப் பார்த்துப் பற்களைச் சுத்தம் செய்து கொள்வதும் அவசியமான ஒன்றே. முன்பெல்லாம் அது வழக்கத்தில் இல்லை. பணக்காரர்கள், சினிமாக்காரர்களே பற்களுக்காக வைத்தியம் செய்து கொள்வது வழக்கமாய் இருந்தது.  ஆனால் இப்போதெல்லாம்  சாமானியர்களுக்கும் பற்கள் குறித்த விழிப்புணர்வால் பல் மருத்துவர்களும் பெருகிவிட்டனர்.  அவர்களிடம் கூட்டமும் பெருகி விட்டது. எனினும் இந்தப் பல் சுத்தப்படுத்தும்போது வாயில் இருக்கும் பாக்டீரியா உள்ளே சென்று விடும் சாத்தியங்களும் உள்ளன.  அதனால் பாக்டீரியல் ஜூரம் வரலாம்..  எல்லாவற்றையும் யோசித்துப் பஞ்சாமி மருத்துவரிடம் போனாரானு சொல்ல முடியாது.  ஆனால் தன் பற்களும் மற்றவர்கள் பற்களைப் போல் வெண்மையாக இருக்கணும் ஆசை.  எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான். பல்சுத்தத்துக்குப் போன இடத்தில் தேங்காய்த் துருவிகளை அகற்றிவிட்டு வரிசையான முத்துப்பற்களை வைத்துக்கொள்ள ஆசை.  அதற்காக மருத்துவரிடம் பேசி முன்னேற்பாடுகள் செய்து கொள்கிறார். 

மனிதர்களுக்குப் பற்கள் எவ்வளவு முக்கியம் என்பது அது அகற்றப்படும்போது தான் புரிகிறது.  பல்லில்லையானால் சொல் மட்டுமா இல்லை!  அடை, பக்கோடா, முறுக்கு, சீடை, தேன்குழல், மனோகரம் போன்ற கரகரப்பான தின்பண்டங்களைக் கண்ணால் மட்டுமே பார்த்து ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டியது தான்.  வாயில் எதுவும் போட முடியாது. அதோட போனாலும் பரவாயில்லை.  வலி, வீக்கத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். புதிதாய்ப் பொருத்தப்பட்ட பற்கள் வாயில் சரியாகப் பதியும் வரை ஏற்படும் தர்மசங்கடத்தையும் பொறுத்துக்கொள்ளவேண்டும்.  அதோடு இல்லாமல் பற்களுக்குக் கிளிப் பொருத்தப்பட்டிருப்பதால் அவை எந்நேரமும் சாப்பிடும்போது கூடவே வயிற்றுக்குள் செல்லும் அபாயம் ஏற்படும்.  அதற்கான முன்னெச்சரிக்கையும் இருக்க வேண்டும்.

இது குறித்து நிஜத்தில் நிகழ்ந்ததொரு நிகழ்வை நம் பதிவர் திரு வெங்கட் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்..  நமக்கு வேண்டுமானால் அதை நினைத்தால் நகைச்சுவையாக நினைத்துச் சிரிக்கத் தோன்றலாம்.  சம்பந்தப்பட்டவர்களின் மன அழுத்தமும், கவலையும், வேதனையும் பட்டால் தான் தெரியும். நம்ம ஊரிலேயே ஒரு வழக்கம்.  ஒருத்தருக்கு உடம்பு சரியில்லைனா அவரவருக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சொல்லி அதைப் பின்பற்றச் சொல்வாங்க. அது நமக்குப் பொருந்துமா, பொருந்தாதானு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க.  தனக்கு எல்லாம் தெரியும், அனுபவம் உள்ள ஆள் என்னும் எண்ணம் ஒவ்வொருத்தரையும் எல்லா விதத்திலும் ஆட்டிப் படைக்கிறது. அதுபோல் இங்கே பஞ்சாமிக்கு 80க்கு மேல் வயசான மாமனார் எல்லாப் பற்களையும் எடுத்துப் புதிதாகக் கட்ட ஆலோசனை கொடுக்கிறார். முன் பற்களால் பட்ட அவஸ்தை போறாதா எனப் பஞ்சாமி நினைக்கவே இல்லை. பஞ்சாமியின் பொறுமையே பொறுமை.  இவ்வளவு நடந்தும் புதுப்பல்செட்டைப் பொருத்திக்கொள்ளத் தயாராகிறார்.  உண்மைப் பற்களை இழந்த பஞ்சாமியின் முகத்தைக் காலியான ஜிப் பேகோடும், கன்னப்  பகுதிகளைக் கமலா ஆரஞ்சுத் தோலோடும் ஒப்பிட்டது பிரமாதம். ஆசிரியரின் கற்பனைகள் இவற்றில் சிறகடித்துப் பறக்கிறது.

பல்செட் தயாராகும் விதம் குறித்து மிக அழகானதொரு வர்ணனையை ஆசிரியர் கொடுக்கிறார்.  உண்மையில் அப்படித் தான் தயாரிக்கிறார்களா என்பது தெரியவில்லை எனினும் பல் மருத்துவர் என்றால் எந்த அளவுக்கு நோயாளியின் வாய்க்குள் போய் ஆதிக்கம் செலுத்த வேண்டி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கென்னமோ இவர் பொய்ப்பல் தயாரிக்கும் விதத்திலேயே சந்தேகம் வந்தது. ஆனாலும் பஞ்சாமிக்கு சந்தேகமே இல்லை.  பற்களைப் பொருத்திக் கொண்டு அதனால் அவஸ்தையும் படுகிறார். முகவீக்கம், உணவுப் பொருட்கள் அதில் ஒட்டிக்கொள்ளுதல், எந்நேரமும் ஏதோ வாய்க்குள் அடைபட்டிருப்பதாக உணர்வு போன்றவை குறித்துக் குறிப்பிடுவதில் இருந்தே பல் செட் கட்டிக் கொண்டவர்களின் அவஸ்தையை அருகில் இருந்து பார்த்திருக்கிறார் ஆசிரியர் என்பதும் புலப்படுகிறது.  பொய்ப்பல்லோடு அவஸ்தை ஏன்? என்று சொல்வது போல் ஒரு நாள் குளிக்கும்போது பஞ்சாமியின் பல்செட் கீழே விழுந்து இரண்டாக உடைந்ததோடு அல்லாமல், இன்னொரு பாகம் கழிவறை வழியாக வெளியேறியும் விடுகிறது.  பாவம் பஞ்சாமி!  உலகமே இடிந்து விழுந்தாற்போன்ற அதிர்ச்சியுடன் மருத்துவரைப் பார்க்கச் சென்றவருக்கு ஸ்க்ரூ முறையில் பற்களை வைத்து முடுக்குவதாக மருத்துவர் சொன்னதைக் கேட்டு மயக்கமே வந்துவிடுகிறது என்றால் அதை விட அதிர்ச்சி மருத்துவரே உண்மையானவர் இல்லை;  போலி என்பது தான்.

இப்போதெல்லாம் உண்மை மருத்துவர்களையும் போலிகளையும் அடையாளம் காணுவது சிரமமாகவே இருக்கிறது.  ஏனெனில் அடையாள அட்டைகள் கூடப்போலி அட்டைகள் உண்மையானது போலவே வந்து விடுகிறது.  அவ்வளவு திறமையாக மக்களை ஏமாற்றுகிறார்கள்.  இங்கே பஞ்சாமி ஏமாந்ததாகச் சொல்ல முடியாது.  ஏனெனில் பல்செட் பொருத்தப்பட்டிருக்கிறது. யாருமே இவர் போலி மருத்துவர் என்று சொல்லவும் இல்லை. எச்சரிக்கவும் இல்லை. பஞ்சாமி ஏமாந்தாற்போல் பலர் ஏமாந்திருக்கிறார்கள்.  நமக்குப் பஞ்சாமியைத் தான் நன்கு தெரியும் என்பதால் அவர் மேல் பரிதாபம் ஏற்படுவது இயற்கையே!  மொத்தத்தில் நல்லதொரு எச்சரிக்கைப் பகிர்வை நகைச்சுவையாக நம்முடன் பகிர்ந்த ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.  அனைத்துமே அனுபவப் பகிர்வுகள்.

ooooooooooooooooOoooooooooooooooo

Reference Number : VGK 26006

தலைப்பிலிருந்து பின்குறிப்பு வரை பல் பல் பல் என்று பல்லைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடாமல் அங்கிங்கு கண்ணை நகர்த்தவிடாமல் கண்பட்டையிடப்பட்ட குதிரை போன்று வாசகரின் கவனத்தை ஒரே நேர்ப்பாதையில் கொண்டுசெல்லும் தனித்துவமான கதை. கதையை வாசித்து முடிக்கும்போது வாசகர்களாகிய நமக்கும் பல் மருத்துவரிடம் அலையாய் அலைந்த அலைச்சலும் ஆயாசமும்பல் பிடுங்கப்பட்டிருப்பது போன்றதொரு அவதியும் அவஸ்தையும் ஏற்படுவது நிஜம்.

உடல் உறுப்புகளை முன்வைத்து ஒருவரை கேலி செய்வதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை என்றாலும் இந்தக் கதையின் மையமே பஞ்சாமியின் கோளாறான பல்தான் என்பதாலும் இது ஒரு நகைச்சுவைக் கதை என்பதாலும் நகைச்சுவைக் கதைக்குள்ளும் ஒரு விழிப்புணர்வு இருக்கிறது என்பதாலும் என் சொந்த விருப்பு வெறுப்பை ஒத்திவைத்துவிட்டு கதைக்குள் நுழைகிறேன்.

கதையை வாசிக்கையிலேயே கதாசிரியரின் திறமைக்கு சபாஷ் போடவைக்கும் இடங்கள் பல.

 பஞ்சாமியின் பல் அறிமுகப் படலமே அசத்தல். அடுத்த அசத்தல் பல் துலக்கும் சமாச்சாரங்களின் பட்டியல்.ஆலங்குச்சிவேலங்குச்சி முதல் அடுப்பு உமிக்கரி வரை அட,இத்தனையா என்று வியக்கவைத்தன அத்தனையும். அதில் முக்கியமாக கோபால் பல்பொடியை பெயரிடாமல் வானொலி விளம்பரத்தால் வர்ணித்த வரிகள் அந்நாளைய பால்யத்துக்கே அழைத்துச்செல்கின்றன.

கதை முழுக்க விரவிக்கிடக்கும் ஏராளமான உவமைகள்கதாசிரியரின் கற்பனைத் திறனுக்கு பலமான சான்றுகள். பலமற்ற பற்களுக்கு உவமை ஆதரவற்ற அகதிகளாம். பல்லில்லாத வாய்க்கு காலியான ஜிப்-பேக்காம்ஒட்டிப்போனகன்னப்பகுதிக்கு உரித்துப் போட்ட கமலாரஞ்சுத் தோலாம்இவை உதாரணங்கள்தாம். கதை முழுக்ககொட்டிக்கிடக்கின்றன ஏராளமாய்புது செருப்புக்கும் புது பல்செட்டுக்குமான ஒப்பீட்டு வர்ணனைகள் வியப்புண்டாக்கும் சிறப்பான ரசனை.

மருத்துவர் உபயோகிக்கும் உபகரணங்களை கதாசிரியர் வர்ணிக்கும் இடங்களைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். எந்த அளவுக்கு தீவிரமாகக் கவனித்திருந்தால் அவற்றை இந்த அளவுக்கு தெளிவாக விளக்கி எழுதமுடியும்.இந்தக் கதையில் பல் மருத்துவ உபகரணங்களைப் பற்றி கதாசிரியர் வர்ணித்திருக்கும் வர்ணனைகளை எந்தக் கதையிலும் வேறெந்தக் கதாசிரியரும் கையாண்டிருக்க மாட்டார். பல் மருத்துவர் பக்கமே போகாதவர்களுக்கும் அந்த உபகரணங்கள் எப்படியிருக்கும் என்பது நிச்சயம் புரிந்திருக்கும்.

பல் மருத்துவரிடம் சிக்கி பஞ்சாமி என்னென்ன பாடுபட்டாரோ அத்தனைப் பாடுகளையும் வாசகர்களாகிய நம்மை உணரவைப்பதிலும் வெற்றி கதாசிரியருக்கேபல்லை மருத்துவர் ராவும்போது நம் பல்லுக்குள் கூச்சம் பரவுகிறது.ரோஸ் கலர் சப்பாத்தி மாவுப் பசையின் துளி பஞ்சாமியின் தொண்டைக்குள் பாயும்போது நம் தொண்டைக்குள்ளும் குமட்டல் எட்டிப்பார்க்கிறதுபஞ்சாமியின் வாயில் க்ளிப் போட்டு பற்களை நிறுத்தியபின் விண்விண் என்ற வலிஉண்டாவதை வாசிக்கும் எவரும் தம்மையறியாமல் தாடையைத் தாங்கிப்பிடிப்பது உறுதிஎதையும் ரசித்து ருசித்து கடித்து மென்று சாப்பிட முடியாமல் பஞ்சாமி ஏங்கும்போதுநமக்குள்ளும் எழுகிறதே ஏக்கம்.

ஒரு புதிய இடத்துக்கு வந்தால் அந்த இடத்துக்கு முன்பே வந்திருப்பது போன்ற உணர்வோ அல்லது ஒரு புதிய சூழலை அனுபவிக்கையில் முன்பே அனுபவித்தது போன்ற உணர்வோ எழுவதை தேஜாவூ என்று சொல்வார்கள்அதுபோல் இந்தக் கதையை வாசிப்பவர்களுள் இதுவரை பல் சிகிச்சையின் பக்கம் போயிராதவர்கள் இருந்தால் இப்படியொரு சிகிச்சை உண்மையில் தங்களுக்கு நடந்ததாகவே எண்ணத்தோன்றும்வகையில் படிப்படியாக பஞ்சாமியின் பற்களின் பரிணாம மாற்றத்தை நமக்குணர்த்தி அனுபவப்பட வைக்கிறார்கதாசிரியர்.

பொதுவாக வாயில் துர்நாற்றம் என்றால் வயிற்றில் புண் என்பார்கள். அது தெரியாத நம் பஞ்சாமி பல்லில்தான் பிரச்சனை என்று எண்ணிவிட்டார். போதாக்குறைக்கு அவரது பற்களும் பலரும் பரிகாசம் பண்ணுவது போல் அமைந்திருக்க,அதையும் சரிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று உள்ளுக்குள் நமைச்சலெடுக்கும் ஆசையையும் தீர்த்துக்கொள்ள விழைந்துவிட்டார். யாருக்குதான் தன்னை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்காதுஆனால்பஞ்சாமிக்கு நல்ல மருத்துவர் யார்போலி மருத்துவர் யார் என்று தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்லநமக்கும்தான் தெரிய வாய்ப்பில்லை.

பிரச்சனை என்று மருத்துவரை நாடிப் போகிறோம். கிளினிக்கில் யாருமில்லாமல் காற்றுவாங்கிக் கொண்டிருந்தாலாவது சரி,இவர் கைராசிக்காரர் இல்லை போலும்வேறு மருத்துவரைப் பார்க்கலாம்’ என்று எண்ணத் தோன்றும். ஆனால் பஞ்சாமி சென்ற பல் மருத்துவர் பல்லவராயனின் கிளினிக்கில் நீண்ட கியூவே நிற்கிறது. அப்படியிருக்கையில் இவர் ஒரு போலி மருத்துவராக இருக்கலாம் என்ற சந்தேகம்தான் எப்படித் தோன்றும்நாமென்ன மருத்துவரின் சான்றிதழை வாங்கியா பார்க்கமுடியும்?

மொத்தத்தில் அசல் அசல்தான்நகல் நகல்தான் என்பதை நகைச்சுவை மிளிர சொல்லிவிட்டார். அழகில்லாவிடினும் அசலுக்குள்ள மதிப்பு அழகான போலிக்கு என்றுமே கிடைக்காது என்பதை போலி பல்லையும் போலி பல் மருத்துவரையும் கொண்டு அழகாக மெய்ப்பித்துவிட்டார்.

முன்பே குறிப்பிட்டது போல் கதையானது தொடக்கம் முதல் சீரான கோட்டில் பயணித்து செம்மையுற முடிந்துவிட்டது. ஆனால் பாவம் பஞ்சாமிக்குதான் கதையின் துவக்கத்தில் இருந்த பற்கள் முடிவில் காணாமல் போய்விட்டன. இப்போது அசலையும் இழந்து நகலையும் இழந்து அல்லாடிக்கொண்டு நிற்கிறார். போகட்டும்மேலும் பணம் பிடுங்கப்படுவதற்குமுன் பல் மருத்துவரின் லைசன்ஸ் பிடுங்கப்பட்டதே. பல் மருத்துவரை நம்பி பல்லையும் இழந்து பல்லாயிரம் ரூபாயையும் இழந்த பஞ்சாமிக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்?    

ooooooooooooooooOoooooooooooooooo

Reference Number : VGK 26007

நகைச்சுவை எழுத்து  என்பது மிகவும் கனமான ஒரு விஷயம்...அதை எழுதுபவருக்கு!!!

அதனால் தான் , "Humor is serious business!" என்று ஆங்கிலத்தில் சொல்ல்வார்கள்...

நான் கொடுக்கப்போவது ஒரு முழு நீள நகைச்சுவை விருந்து...

நீங்கள் சிரித்து ,சிரித்து  உங்கள் பல் சுளுக்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல  என்று வார்னிங் கொடுக்காத குறையாக  கதைத்தலைப்பிலிருந்தே நம்மை மூச்சுக்கு மூன்று முதல் முந்நூறு தடவை சிரிக்க வைப்பதையே இலட்சியமாகக்  கொண்டு இந்த முழு நீள  நகைச்சுவைக் கதையை எழுதிய ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்...

"கல் எல்லாம் மாணிக்கக் கல்  ஆகுமா..." என்ற பாடலைத்  தழுவி ஆசிரியை திரு.வை.கோ. அவர்கள்  சிரிப்புத்  தேன்  தடவிய  "பல்லெல்லாம்  பஞ்சாமி பல்லாகுமா..."என்ற தலைப்புடன் ஆரம்பிக்கிறார் இந்தசிறப்பான  சிரிப்பு விருந்தை!

இந்த விருந்தில் சுவையை அதிகரிக்க அவர் பயன் படுத்தும்   யுக்திகள்....

#சிரிப்பை வரவழைக்கும் உபமான உபமேயங்களின் தாராள உபயோகங்கள்...

#கடுகு போன்ற விஷத்தை இமாலயப்பிரச்சனையாக விஸ்வரூபமெடுக்க வைத்து உற்சாகப்பட்டசு கொளுத்திப்போடுதல் !

#நுணுக்கமான குபீர் சிரிப்பு உத்தரவாதம் தரும் வர்ணனைகள்...

#அட்டகாசமான ஆண்டி கிளைமாக்ஸ் ....


ஆதிகாலதிலிருந்து இன்று வரை மனிதன் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம்...
"அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களும் ஒரு சேரப் பொருந்திய ஒரு ஆணோ பெண்ணோ இன்னும் பிறக்கவில்லை!" என்பதே...

ஒருவர் பார்க்க ராஜா மாதிரி இருந்தால் அவர் குட்டை!
ஒருத்தி நல்ல நிறம் என்றால் அவள் கூந்தல்  எலிவால்!
ஒருவன் ஆறடி என்றால் அவன் குரல் "கீச்..கீச் .."என்று இருக்கும்!
ஒருவன் முகத்தில் அவ்வளவு தேஜஸ்...கண்களை நன்றாகப் பார்த்தல் ஒன்று கிழக்கே பார்த்தல் ஒன்று மேற்குப்பக்கம் பார்க்கும் !

என்ன செய்வது !

பிரம்மன் கார்ட்டூன் வரையும் மூடில் இருக்கும் போது  நம்மில் சிலரைப்  படைத்துவிடுகிறான்!

அதிலும் இந்தப் பற்கள் விஷயத்தில் பிரம்மன் அவ்வப்போது ரொம்பவுமே விளையாடிவிடுவான்....

ஒருவேளை பல் மருத்துவர்கள் ஒரு குழுவாக பிரம்மனை சந்தித்து தனியே சம்திங் கொடுத்து கவனிதுக்கொண்டார்களோ? அதனால் தான் அவன் இந்தப் பல்லு மேட்டரில் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாகவே கார்ட்டூன் போட்டு விடுகிறாரோ?

நம் ஹீரோ பஞ்சாமி கேஸ்ஸில்  நடந்த மாதிரி?

சிலருக்கு தெத்துப்பல்லு...சிலருக்கு துருவிப்பல்லு...சிலருக்குக் காவிப்பல்லு சிலருக்குக்கோணல் பல்லு....சிலருக்கு சொத்தைப்பல்லு...சிலருக்கு சிங்கப்பல்லு...ஆகக்கூடி கே .ஆர் .விஜயா போல முத்துப்பல் அழகு மிக சிலருக்குதான் வாய்க்கிறது!

நம்ம ஹீரோ சாருக்கு இதெல்லாம் விட ஒரு படி மேல்! துருவி + காரை + வாய்  நாற்றம்!

நம்ம ஊருப் பெண்ணானதால் அவள்  பஞ்சாமியின்  வாய் நாற்றத்தை காரணம் காட்டி விவாகரத்துக் கேட்கவில்லை!

இதனை பிரச்சனைகளையும் வாய்க்குள் வைத்த  நம் ஹீரோ போவது ஒரு பல் வைத்தியரிடம்!

சாதாரணமாகவே பலருக்கும் பல் வைத்தியரின் கிளினிக்குக்கு  போவது என்றால் ஈரல் கொலை நடுங்கும்!

(எனக்கு  அது யமலோகத்து சித்திரவதைகூடதை நினைவு படுத்தும்...)

அதுவும் அவர் நாற்க்களை,கிரைண்டர் சத்தம் ,கொறடு ,ஊசி,சுத்தியல்,சுரண்டும் கருவிகள்...எல்லாமே அச்சத்தை உண்டாக்கும்!

பல் டாக்டரிடம் ஒரே ஒரு நாளில் வைத்தியம் முடிந்ததாக சரித்திரமே இல்லை!

நம்ம ஹீரோவும் காரை எடுக்கப் போயி மொத்தப் பற்களையும் சாப்ஜாடாகதட்டி எடுத்து முடித்து மங்களம் பாடி முடித்து புது பல்செட் வைத்துக்கொண்டு திரும்பும் நிலையில் பரிதாபமாக நிற்க நமக்கு பரிதாபமும் ,சிரிப்பும் மாறி மாறி வருகிறது!

பொய்ப் பல் வைத்துக்கொண்டவர்கள் பலர் படும் அவஸ்தைகளையும் ,உணர்வுகளும் அழகாக வர்ணிக்கும் ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்!

கடைசியில் வந்த ஆண்டி கிளைமாக்ஸ் அருமை....

அப்படியே ..

போலி டாக்டர்களை அடையாளம் காண்பது எப்படி என்று ஆசிரியர் சிரிக்க ,சிரிக்க சொல்லிக்கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்!

எப்படியோ....புதுப்பல்வைத்துக்கொண்ட பஞ்சாமியின் வாழ்வில் வசந்தம் மலர்ந்தால் சரி...

ooooooooooooooooOoooooooooooooooo

Reference Number : VGK 26008

ஆசிரியருக்கு என்று எப்படித்தான் கதைக்கருவும் கதைக்களமும் கற்பனை வளமும் குன்றாமல் குறையாமல் அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரமாய் அமைகின்றனவோ நானறியேன் ஆனால் விளம்பரங்களில் வருவது போல் பக்கத்துக்குப்பக்கம் பரவசமூட்டும் விறுவிறுப்பான கதையமைப்பதில் அவருக்கு நிகர் அவரே. தலைப்பே நம்மைப் பல்லைக்காட்ட வைக்கிறதென்றால் , பஞ்சாமியின் பல்லைப்பற்றிய
 வர்ணனையை நாம் படிக்க நம்மையறியாமல் இளித்த பல் இளித்தபடியிருக்கப் பக்கத்தில் இருப்பவர் உரைப்பது, பார்த்துப் பார்த்து பல் சுளுக்கிக்கப்போறது ; நல்லாத்தானே இருந்தே? என்பதே!


பஞ்சாமியைப்பற்றிய வர்ணனை கதாசிரியர் ஆனாலும் துணி துவைக்க கசக்கிப்பிழிய என பாறைக்கு ஒப்பீடு செய்தது மிகைப்படுத்தலேயன்றி வேறென்ன? எல்லவற்றிற்கும் மணிமகுடம் எழுத்திலே இத்தனை நையாண்டிக்கும் ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

‘பல் போனால் மனிதர்களுக்கு முக வடிவமே மாறிவிடுகிறது.முத்துப் பற்கள் அமைந்துவிட்டால் ஒரு confidence வந்து விடுகிறது.ஆள் பாதி ஆடை பாதி அல்லவா?’ நம் பஞ்சாமிக்கோ பல்லில் துர்நாற்றம் பாங்கான மனைவியே மயங்கி விழும் அளவு எனும்போது ‘ஆளைப் பார்த்து ஆசனம் போடு , பல்லைப் பார்த்துப் பாக்குப் போடு’ எனும் பழமொழி கண்முன் விரிகிறது.

சாதாரணமாக ஒரு வயதானவர் பல் விழுந்துவிட்டதென்றோ கடிக்கமுடியவில்லை என்றோ கூறும்போது மிக எளிதாக ஒன்றுமே தமக்கு நிகழாதது போல் என்னவோ பல் டாக்டர் கிட்ட போனவுடனே readymade ஆ பல்லைத் தூக்கி வாய்ல பொருத்திவுட்டுட்ர மாதிரி ஒரு buildup கொடுத்து நான் பாரு எல்லாம் சாப்பிட்றேன் இப்போ என உசுப்பேத்த வேண்டியது பல்லை ஈறை ரணகளமாக்கி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையம் என
 பரிந்துரைப்பர்.எருது நோவு காக்கைக்குத் தெரியுமா? தலவலியும் பல்வலியும் தனக்கு வந்தாதானே தெரியும்? அப்பா! இந்த கதையைப் படிச்சவுடனே ஓரளவுக்கு பல்லு கட்டிக்கறதுக்கு முன்னாலேயும் பின்னாலேயும் இருக்கற இன்ப துன்பங்கள புரிஞ்சுக்கலாம்.அதற்கு ஒரு ஷொட்டு!

இயற்கையாகவே எதைத் தின்னால் பித்தம் தெளியும் என எண்ணும் நாம்,ஆசிரியர் சொன்னபடி பல்பொடி,பற்பசை பலவித பல் டாக்டர்களின் பரிந்துரைகள் என பயணிப்பது உண்மை. இப்படி எழுதி கதாசிரியர் சரியான முறையில் பல்லை பாதுகாக்க வேண்டியதை உணர்த்துகிறார்.

பல் பொருத்துவதில் பல் சுத்தம் செய்யும்போது இரத்தம் வெளியேறுதல் குறித்தும் ஒவ்வொரு சிட்டிங்கிற்கும் பல்வேறு ஆயத்தங்கள் நடந்தது பற்றியும்
அதற்குரிய கட்டணங்கள் பற்றியும் புண்ணாகிப் போன ஈறுகளையும்,இதயத்தையும் இலகுவாக உணரவைக்கிறார்.பல் டாக்டரின் பல்வேறு உபகரணங்கள் படிப்படியான நிலைகள் அனைத்தையும் தனக்கே உரிய நகைச்சுவைப் படங்களுடன் பசுமரத்தாணியாய் பதியவைக்கிறார். உவமான உவமேயங்கள், பழையகாலத்து மனிதர் முதல் நவீன மாந்தர் வரை அறியவைக்கிறார்.இப்படி மிக நுணுக்கமாய் நகைகளுக்கு நகாசு வேலை
 செய்வதுபோல கதைக்கு கற்பனை வளம் சேர்த்து கருத்தையும் நிலைநிறுத்தி நம் போன்றோர் கருத்தைக் கவர ஆங்காங்கே நகைச்சுவையை நாட்டியமாட வைத்துள்ளர் ஆசிரியர்.

ஆனல் இத்தனைக் கஷ்டப்பட்டுப் பொருத்திக் கொண்ட பல்செட் பாத்ரூமில் பாய்ந்தோடிச் செல்ல படித்த நமக்கு சிரித்து சிரித்து பல்வலிக்கிறது. பல்செட்காரர்களே உஷார் பல்செட் பத்திரம். இங்கே மைக்கேல் மதனகாமராஜன் ஊர்வசியும் பாட்டியும் ஞாபகம் வருகிறது. ஒரு படி மேலே போய் பல் டாக்டர் போலி டாக்டர் என்றும் அவர் பயணித்த பஸ் அவருடைய ஊர் என ஒவ்வொன்றையும் பல் பல்லாய் சாரி சொல்
 அமைத்து சொக்க வைத்துவிட்டார் ஆசிரியர். என்னே அவரது பற்ஜாலம் சாரி சொற்ஜாலம்! இதனால் நாம் அறிவது என்னவென்றால் பல்லைக்காட்டினால் பணத்தைப் பாராது படித்த அதாவது பல் வைத்தியதை பக்குவமாய் படித்த பல் டாக்டரிடமே காட்டவேண்டும்.

பல் சீராக அமையாவிட்டால் பல வித நோய்கள் ஆட்கொள்ளும், மனைவிகூட மயங்கி விடுவாள் பல் நாற்றத்தால்! பல் கட்டுவதற்கு முன்னும் பின்னும் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்பல. எனவே பஞ்சாமியை நினைவில் நிறுத்தி இன்று முதல் இரு வேளை பல் துலக்கி வாய் கழுவி பல் டாக்டரிடம் முறையான பரிசோதனை செய்துகொள்ள உறுதி பூணுவோம்.பல் சுளுக்குக்கு மருந்திருந்தால் பரிந்துரையுங்கள்.
 அருமையான படைப்பிற்கு நன்றி ஆசிரியரே!!

ooooooooooooooooOoooooooooooooooo

Reference Number : VGK 26009

“பல் போனால் சொல் போகும்” என்பது பழமொழி. முகத்திற்கு அழகூட்டுவதில் பற்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பற்களைப் பராமரிப்பதின் அவசியத்தை பற்பல கோணங்களில் அலசி ஆராய்ந்து பல்வேறு உதாரணங்களுடன், முழுநீள நகைச்சுவைக் கதையாய் வடித்து, அனைவரையும் பல்லைக்காட்டி சிரிக்க வைத்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
“பற்கள் அமைவது கூட பகவான் கொடுக்கும் வரமோ?” என எண்ணத் தோன்றுகிறது. பல்வேறு விதமான வர்ணனைகள் மூலம் பஞ்சாமியின் பற்களை நம் மனக்கண்ணில் பதிய வைத்து விடுகிறார் கதாசிரியர். பாத்திரத்தைப் படைப்பதில் மட்டுமின்றி, மனதில் பதிய வைப்பதும் அவருக்கே உரித்தான கலை.
பல்தானே என அலட்சியப் படுத்தினால் பற்பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை அழகாக விளக்கிச்செல்கிறார். தன் பற்கள் அழகாகப் பளிச்சிட வேண்டுமென்று, உமிக்கருக்கு முதல் நவீன பற்பசைகள் உபயோகித்துப் பார்ப்பதுவரை பற்பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் பலனளிக்காததில் வருத்தமடைகிறார் பஞ்சாமி.
இதற்கிடையில் வாய்நாற்றம் வேறு. நெருங்கியவர்கள் சொன்னாலும் நம்பாத நம் கதாநாயகன், கட்டிய மனைவியே கண்டித்துச் சொல்லும் அளவுக்குப் போனபின்தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தவராகிறார். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சிறுவயதிலேயே கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் பற்களை சீரமைத்து இருக்கலாம். தாம்பூலம் தரிக்கும் பழக்கம் உள்ளவராய் இருப்பதால் கண்டிப்பாக கறைபடிவதை தடுக்க கவனமுடன் இருந்திருக்கலாம். ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும் கூட காரணமாக இருக்கும். எனவே கூச்சப்படாமல், குடும்பத்தினர் எச்சரித்தால் உடனே அதற்கான உரிய நிவாரணத்தைத் தேட வேண்டுமென்பதை அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
மருத்துவமனையில் தன்னைப் போன்ற பிரச்சினையால் பலர் அவதியுறுவது கண்டு ஆறுதல் அடைவதாகக் காட்டியது, மனித மனங்களின் இயல்பான சிந்தனை என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான்.
பல்மருத்துவரிடம் சென்றவுடன் அவர் பட்ட பாடுகள் அனைத்தும் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டவிதம், பல்வேறு பல்டாக்டர்களிடம் இக்கதையை எழுதுவதற்காகக் குறிப்புகள் சேகரித்திருப்பாரோ என எண்ணவைத்து விடுகிறது.
படங்கள் வேறு ஆங்காங்கே பல்மருத்துவமனையில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்துவிடுகிறது. பல்லை சுத்தம் செய்யும் படத்திற்கு ஒலியும் சேர்ந்திருந்தால் நிச்சயம் நாம் பயந்திருப்போம்.
போலிப் பற்களைக் கட்டிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் போலியான டாக்டரிடம் சென்றதுதான் தவறு. முகம் அழகு பெறும், வாய்நாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணச் சென்று, அடுக்கடுக்காக பல இன்னல்களைச் சந்தித்து, பொறுமையுடன் அவற்றைத் தாங்கியும் பலனளிக்கவில்லை என அறிகையில் பஞ்சாமி மீது நமக்கு இரக்கம் ஏற்பட்டுவிடுகிரது.
போதாக்குரைக்கு மாமனாரின் வருகையால் ஏற்பட்ட மனமாற்றம் அவரை அனைத்துப் பற்களையும் எடுத்துவிடத் தூண்டிவிடுகிறது. பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகி, கட்டிக்கொள்ளப்போகும் பல்செட்டைக் கண்ணில் கண்டதும், காதலியுடன் டூயட் பாடும் காதலன் நிலைக்குக் கதாநாயகனைச் சித்தரித்த விதம் கற்பனையின் உச்சம்.
பற்கள் கட்டிக்கொண்ட பின்னர், ஒருவித அசெளகர்யத்தை உணர்வதும், ஏதோ வேண்டாத பொருள் உள்ளே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதும், எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? என எண்ணவைத்ததும் மிக இயல்பாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த இன்னல்கள் நாளடைவில் அவருக்குப் பழகிப்போன விஷயங்கள் ஆகி, பல்செட்டைக் கழற்றி வைத்துவிட்டு வாயைக் காற்றாட வைத்துக் கொள்ளும் அளவிற்குப் போனது நகைச்சுவை கலந்த எதார்த்தம்.
ஒரு தெள்ளிய நீரோட்டம் போல் நகைச்சுவையுடன், கதை தொய்வில்லாமல் சென்ற விதம் அருமை.
ஒவ்வொரு முறையும் பற்கள் எடுக்கப்படும்போது அவரது முகமாற்றத்தை வர்ணிக்கும் இடங்கள் அருமை. கட்டிய பற்கள் கொட்ட நேர்வதும், விட்டுப் பிரிய மனமின்றி நிரந்தரமாகப் பற்களை பொருத்துவதற்காக ஆகும் செலவைக் கேட்டவுடன், ‘பல்’ பிரச்சனையால் ‘பல்ஸ்’ வீக்காகி விழும் நிலைக்கு ஆளாகிவிடுவதாகக் காண்பித்ததன் மூலம், எந்த ஒரு நோய்க்கும் அல்லது பிரச்சனைக்கும் உரிய நேரத்தில் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, முறையான சிகிச்சையை மேற்கொள்ளுவதன் மூலம் பல்வேறு இன்னல்களைத் தவிர்த்து, பல்வேறு வகையிலும் பாராட்டுக்குரியவராகி பல்லாண்டு நலமுடன் வாழலாம் என்பதை உணர்த்திய ஆசிரியருக்கு பற்பல பாராட்டுகள்! பல்லாவரத்தைச் சேர்ந்த போலி டாக்டர் பல்லவராயன் இனி பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகட்டும் என பஞ்சாமியின் குரல் சபிப்பது நம் காதில் ஒலிக்கிறது.
நன்றி!

ooooooooooooooooOoooooooooooooooo

Reference Number : VGK 26010

கதையின் தலைப்பே இது ஒரு நகைச்சுவை இழையோடும் யதார்த்தக் கதை என்பதை பறைசாற்றுகிறது! பஞ்சாமி என்ற கதாநாயகரின் பெயரும் அவரது தோற்றம் குறித்த கதாசிரியரின் வர்ணனையும் இது ஒரு வெள்ளந்தி மனிதரின் உருவத்தை கண்முன்னே நிறுத்துவதாக இருக்கிறது!  முத்துப்பற்களாக இல்லாவிட்டாலும் மற்றபடி ‘எடுப்பாக இருந்தாலும் நல்ல உறுதியான பற்களை இயற்கையாகவே பெற்றிருந்த பஞ்சாமி, வெற்றிலைபாக்குபுகையிலை போடும்ஆசாமியானதாலும்,  பராமரிப்பு குறைவின் காரணமாகவும் துர்நாற்றம் கிளம்பிவிட அதை மற்றவர்கள் சொன்னபோதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை! அதைப்போக்கவும், முத்துப்போன்ற பற்களை பெறவும் பஞ்சாமி செய்யும் முயற்சிகள் ஒரு நகைச்சுவை கலந்த நடையில் சொல்லியிருப்பது சிறப்பு! ஒருநாள் மனைவியே துர்நாற்றம் தாங்காது மயக்கம்போட்டு விழுந்து, தெளிந்தவுடன் இனி பல்லிருக்கும்வரை பக்கத்திலே வராதீர் என்று சொல்லிவிட -துவங்குகிறது கதை!

     நண்பர் சொல்லியபடி ஒரு பல் டாக்டரைத்தேடி செல்கிறார் பஞ்சாமி! (சொந்த செலவிலேயே சூனியம் வைத்துக்கொள்ளவா?!)

பல் டாக்டர் கிளினிக்கின் காட்சியமைப்பு யதார்த்தம்.! டாக்டர் பல்லை சுத்தம் செய்வதை கிராபிக்ஸ் எபக்டுடன் படம் போட்டுக்காட்டியது அற்புதம். சுத்தம் செய்யும்பொழுதே, டாக்டர் செய்யும் வேலைகள் அவர்மீது லேசான ஒரு சந்தேகம் எழுமாறு அமைத்துள்ளது, நல்ல கதையோட்டம். பற்கள் அப்பொழுதே ஆட்டம் காணத்துவங்கிவிட்ட்தாக ஒரு ‘பிட்போட்டுவைக்கிறார் கதாசிரியர்.  கதையை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த?!

     டாக்டர் தனது அடுத்த ஆலொசனையை வழங்குகிறார்! அதாவது எடுப்பான (அரோக்கியமான) பற்களை நீக்கி ‘முத்து’ப்பற்களை பொறுத்துவதாம்!  கிளிப் போடும் அலோசனையை அவர் ஏன் வழங்கவில்லை? எப்படியாவது காசு வாங்கியாகவேண்டுமே!

     முன் ஆறு பற்களைப்பிடுங்கிக்கொண்டு புதுப்பற்களை பொருத்தியதும்தானே தெரிகிறது ஒரிஜினலின் மகிமை!  முன்வரிசைப்பற்கள் பொருத்தியதும் உள்ள உறுத்தல் . அவஸ்தை நாமே உணர்வதைப்போல சொல்லப்பட்டுள்ளது அருமை!

     ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டாமா?  வினை வந்தது கம்ப்ளீட் பல் செட் கட்டிய மாமனாரின் ரூபத்தில்! உடல் விஷயத்தில் ஒருத்தருக்கு ஒத்துவருவது மற்றவருக்கு ஒத்துவராது!  இதனை புரிந்துகொள்ளாது மாமனாரின் சொல்லைக்கேட்டு - நொறுவலாகத் தின்ன ஆசைப்பட்டு கிளைமாக்ஸ் நோக்கி நகருகிறது பஞ்சாமியின் பல் கதை!

     எல்லாப்பற்களையும் வலிய பிடுங்கிக்கொண்டு பஞ்சாமிபடும் அவஸ்தை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது! எதையும் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்! மறுமுறை பார்க்கும் டாக்டர் ஈறுகளை சமன் செய்வதாக சொல்லி ராவுவதில் நமக்கு மீண்டும் ஒரு சந்தேகம் முளைவிடுகிறது! பல் செட் செய்ய மோல்ட் செய்யும்போது பஞ்சாமி படும் அவஸ்தையும் நகைச்சுவையுடன் ரசிக்கும்படியாக சொல்லப்பட்டுள்ளது! அதுவும் பல் செட்டோடு பஞ்சாமி பாடும் டூயட்!!! ரொம்பவே குசும்பு கதாசிரியருக்கு!

     பல் செட்டைபோட்டால் தோற்றப்பொலிவு வந்துவிடும் என்று எண்ணமிட்டு புதிய பல் செட்டைப்போட்டால்… அதை சரியாக செட் செய்வதற்குள் இம்சையோ இம்சை! ஏதோ வாசகனே இந்த அவஸ்தைகளையெல்லாம் படுவதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிடுவது கதாசிரியரின் மாபெரும் வெற்றி என்றே சொல்லலாம்! கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவிற்கு அவரது பெரிய சற்றே எடுப்பான பற்களே ஒருவித அழகைக்கொடுக்கும்!  அதுபோல இருந்த பஞ்சாமிக்கு கடைசியில் எல்லாம் போச்சு! கடைசியில் பஞ்சரான சைக்கிள் டியூப் போல வாய் ஆனதுதான் மிச்சம்!  பிளாஸ்டிக் சர்ஜரியே செய்ததுபோல முகமே அல்லவா மாறிவிட்டது! NO LOOKING BACK என்றான நிலையில் அதோடு வாழப்பழகிக்கொள்ள முயற்சி செய்யும் பஞ்சாமியின் முயற்சி! கதைநெடுகிலும் ஆசிரியர் நமக்கு கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டே இருக்கிறார்!

     கடைசியாக பாத்ரூமில் செட்டே ஆகாத ‘பல்’ செட்டை துலக்கப்போக ஒன்று டமால் மற்றது சாக்கடைக்குள் அம்பேல்!
டாக்டரைப் போய்பார்த்தால் PERMANENT FIXURE செய்கிறேன் பேர்வழியென வெறும் முக்கால் லட்சம் மட்டும் கேட்க நம்பாள் மயக்கமே போட்டுவிழ – திரை!  அவனொரு போலிப்’பல்’ டாக்டர்!!???
     துர்நாற்றத்தோடு கூடிய பல்கறையில் துவங்கி கடைசியில் ‘திரை’யில் கொண்டுவந்து முடித்துவிட்டாரே!
     உடல்தோற்றம் இறைவன் கொடுப்பது; பெற்றோர் கொடுப்பது; மனமும் குணமுமே உண்மையில் அழகு; மற்றவைகள் செய்துகொள்ளும் சிகிச்சைகள் நனக்கு பொருந்தாமல் சிக்கலில் முடியலாம், பற்களைப்பராமரிப்பது மிக மிக அவசியமே ஆனால் போலிப் ‘பல்’லவராயன்களைக்கண்டு ஏமாறவேண்டாம், ஒரிஜினல் ஒரிஜினல்தான் டூப்ளிகேட் டூப்ளிகேட்தான் என்று ஏகப்பட்ட செய்திகளை ஏதோ சிரிக்கச் செய்து நம்மைபல்’லைக்காட்ட வைப்பதுபோல நகைச்சுவையுடன் செய்திகளையும் கோர்த்து ‘பல்’சுவைகதையை அளித்த வைகோ அவர்கள் ‘பல்’லாண்டு நலமே வாழ பல்லாண்டு பாடி சிரித்து சிரித்துசுளுக்கியபல்லுடன் விடைபெறுவோம்
நன்றி!
ooooooooooooooooOoooooooooooooooo

இந்தப்புதுமைப் போட்டிக்காகத் தாங்கள் அனுப்பப்போகும் 
மின்னஞ்சல் எனக்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 

25.07.2014 வெள்ளிக்கிழமை 
 இந்திய நேரம் காலை மிகச்சரியாக 
10 மணிக்குள் மட்டுமே.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

[ V A L A M B A L @ G M A I L . C O M ]   

Subject என்ற இடத்தில் குறிப்பிட வேண்டியது:
”தனக்குத்தானே நீதிபதி - போட்டி” 

Matter is expected as follows:

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

முதல் பரிசுக்குத் தேர்வாகும் 
என நினைக்கும் இரு விமர்சனங்கள்: 

1] REFERENCE NUMBER: VGK XXXXX

விமர்சனக்கட்டுரையின் ஆரம்ப முதல் வாக்கியம் முழுவதுமாக:

.........................................................................................................................

2] REFERENCE NUMBER: VGK XXXXX

விமர்சனக்கட்டுரையின் ஆரம்ப முதல் வாக்கியம் முழுவதுமாக:

.........................................................................................................................

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகும் 
என நினைக்கும் இரு விமர்சனங்கள்: 

1] REFERENCE NUMBER: VGK XXXXX

விமர்சனக்கட்டுரையின் ஆரம்ப முதல் வாக்கியம் முழுவதுமாக:

................................................................................................

2] REFERENCE NUMBER: VGK XXXXX

விமர்சனக்கட்டுரையின் ஆரம்ப முதல் வாக்கியம் முழுவதுமாக:

...............................................................................................

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

மூன்றாம் பரிசுக்குத் தேர்வாகும் 
என நினைக்கும் ஒரு விமர்சனம்: 

1] REFERENCE NUMBER: VGK XXXXX

விமர்சனக்கட்டுரையின் ஆரம்ப முதல் வாக்கியம் முழுவதுமாக:

...............................................................................................


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


தங்களின் தேர்வு, கொடுக்கப்பட்டுள்ள விமர்சனங்களின் தரத்தின் அடிப்படையில் மட்டுமே, குழப்பம் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது விமர்சனங்களில் மிகத்தரமான ஐந்தை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு RANK-1, RANK-2, RANK-3, RANK-4 and RANK 5  என பிரித்துக்கொண்டால் தங்களின் வேலை சுலபமாகிவிடும். 

இந்தச் சிறப்புப் போட்டிக்கான முடிவினை மெயில் மூலமாக மட்டுமே எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். யாரும் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கக்கூடாது.  அவ்வாறு பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கும் முடிவுகள் என்னால் வெளியிடப்படமாட்டாது. அவைகள் போட்டிக்கு வந்ததாக எங்களால் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.  



இந்தப் புதுமையான போட்டியில் வெற்றி பெற அன்பான வாழ்த்துகள்.












oooooOooooo



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார  வழக்கமான சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-27 


 அவன் போட்ட கணக்கு 



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 



24 . 07. 2014



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.




கலந்துகொள்ள மறவாதீர்கள்.


oooooOooooo



என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

25 கருத்துகள்:

  1. புதுமையான போட்டி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  2. உற்சாகமான போட்டி -சிந்தனைக்குப் பாராட்டுக்கள்..

    நடுவர் இப்படி விமர்சனங்களுக்கு
    நடுவில் எப்படி திணறிப்போய்
    பரிசுக்குரியவற்றை தேர்ந்தெடுக்கிறார்
    என்பதை சுவாரஸ்யமாக விளக்குகிறது இந்தப்போட்டி..!
    வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. புதுமையான போட்டியும் சிறக்கட்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. போட்டிக்குள்ளே போட்டியா.......அருமை.....

    பதிலளிநீக்கு
  5. புதுசு புதுசாக நிறைய போட்டிகளை கண்டுபிடித்து வைக்கிறீர்கள் சார். பாராட்டுகள். கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வை.கோ

    புல்லரிக்கிறது - தங்களின் கடமை உணர்ச்சியும் பெருந்தன்மையும் - மனம் மகிழ்கிறது - நெகிழ்கிறது.

    தங்களின் கடும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. தங்களீன் பொன்னான நேரம் உறக்கத்தினையும் ஒதுக்கி விட்டு இவ்வளவு நீண்ட பதிவுகளைத் தட்டச்சு செய்யச் செலவிடப் படுகிறது.

    யாரும் செய்ய முயலாத அரிய செயல்களைச் செய்யும் தங்களின் சிந்தனை மற்றும் குணம் பிரமிக்க வைக்கிறது.

    மனதாரப் பாராட்டி வாழ்த்தி தங்களின் உழைப்பினிற்கு ஏதேனும் பரிசு அளிக்க வேண்டும் என எண்ணுகிறோம்.

    நீண்ட உரைகள் - பல்வேறு வண்ணங்களில் பத்திகள் - தவறில்லாத உரைகள். கடின உழைப்பு.

    தொடர்ந்து பதிவுகள் இடும் உழைப்பு - நேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்து திட்டமிட்டு பணியாற்றும் கடமை உணர்வு - அனைத்துமே பாராட்டுக்குரியவை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வை.கோ

    புல்லரிக்கிறது - தங்களின் கடமை உணர்ச்சியும் பெருந்தன்மையும் - மனம் மகிழ்கிறது - நெகிழ்கிறது.

    தங்களின் கடும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. தங்களீன் பொன்னான நேரம் உறக்கத்தினையும் ஒதுக்கி விட்டு இவ்வளவு நீண்ட பதிவுகளைத் தட்டச்சு செய்யச் செலவிடப் படுகிறது.

    யாரும் செய்ய முயலாத அரிய செயல்களைச் செய்யும் தங்களின் சிந்தனை மற்றும் குணம் பிரமிக்க வைக்கிறது.

    மனதாரப் பாராட்டி வாழ்த்தி தங்களின் உழைப்பினிற்கு ஏதேனும் பரிசு அளிக்க வேண்டும் என எண்ணுகிறோம்.

    நீண்ட உரைகள் - பல்வேறு வண்ணங்களில் பத்திகள் - தவறில்லாத உரைகள். கடின உழைப்பு.

    தொடர்ந்து பதிவுகள் இடும் உழைப்பு - நேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்து திட்டமிட்டு பணியாற்றும் கடமை உணர்வு - அனைத்துமே பாராட்டுக்குரியவை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வை.கோ

    புல்லரிக்கிறது - தங்களின் கடமை உணர்ச்சியும் பெருந்தன்மையும் - மனம் மகிழ்கிறது - நெகிழ்கிறது.

    தங்களின் கடும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. தங்களீன் பொன்னான நேரம் உறக்கத்தினையும் ஒதுக்கி விட்டு இவ்வளவு நீண்ட பதிவுகளைத் தட்டச்சு செய்யச் செலவிடப் படுகிறது.

    யாரும் செய்ய முயலாத அரிய செயல்களைச் செய்யும் தங்களின் சிந்தனை மற்றும் குணம் பிரமிக்க வைக்கிறது.

    மனதாரப் பாராட்டி வாழ்த்தி தங்களின் உழைப்பினிற்கு ஏதேனும் பரிசு அளிக்க வேண்டும் என எண்ணுகிறோம்.

    நீண்ட உரைகள் - பல்வேறு வண்ணங்களில் பத்திகள் - தவறில்லாத உரைகள். கடின உழைப்பு.

    தொடர்ந்து பதிவுகள் இடும் உழைப்பு - நேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்து திட்டமிட்டு பணியாற்றும் கடமை உணர்வு - அனைத்துமே பாராட்டுக்குரியவை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. ​அன்பின் வை.கோ

    தங்களீன் பெருந்தன்மை வியக்க வைக்கிறது.

    அனைவருக்கும் ஏதேனும் ஒரு பரிசு கொடுத்தே ஆக வேண்டும் என்ற கொள்கையின் அடிப்ப்படையில் போட்டிகளை அறிவித்த வண்ணமே இருக்கிறீர்கள் - நல்ல செயல் - பாராட்டுகள் -

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் பரிசு கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. ​அன்பின் வை.கோ

    தங்களீன் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. அனைவருக்கும் ஏதேனும் ஒரு பரிசு கொடுத்தே ஆக வேண்டும் என்ற கொள்கையின் அடிப்ப்படையில் போட்டிகளை அறிவித்த வண்ணமே இருக்கிறீர்கள் - நல்ல செயல் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் பரிசு கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு சீனா ஐயா அவர்களே, வணக்கம் ஐயா.

      தொடர்ச்சியாக பல பின்னூட்டங்கள் கொடுத்து சாதனை படைத்து என்னையும் மற்றவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறீர்கள். மிகவும் சந்தோஷம்.

      தாங்கள் அவசியமாக இந்த எளிமையான புதுமையான போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், ஐயா.

      ’தனக்குத்தானே நீதிபதி’ என்பது ஒவ்வொருவருக்குமே பெருமை தந்திடும் மிகச்சிறப்பானதோர் பதவி அல்லவா!

      ஏற்கனவே வலையுலக மற்றும் வலைச்சரத் தலைமை நீதிபதியாகவே விளங்கி வரும் தங்களுக்கும் என் மூலம் இப்போது கிடைத்துள்ள அரியதோர் வாய்ப்பு இது.

      ’வாய்ப்புகள் எப்போதாவது ஒருமுறை தான் நம் வீட்டுக்குக் கதவைத்தட்டும் - அப்போது நாம் விழித்திருந்து கதவைத்திறக்க வேண்டும்’ எனச்சொல்லுவார்கள்.

      இப்போது என் பேரன்புக்கும் பெரும் மரியாதைக்கும் உரிய தங்களையும், தங்களைப்போன்ற மற்ற தங்கங்களையும் நான் அளித்துள்ள இந்த அரிய பெரிய எளிய வாய்ப்பு கதவைத்தட்டி அழைத்துள்ளது.

      எனவே கதவைத்திறந்து, இந்த அரிய வாய்ப்பினை கப்பென்று உள்ளே அழைத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டு நன்கு பயன் படுத்திக்கொள்ளுங்கள் ஐயா. ;)))))

      தங்களின் நியாயமான தீர்ப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  11. புதுமையான போட்டி அறிவித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    போட்டியில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. இந்த புதிய போட்டி சுவாரசியமாகத்தான் இருக்கிறது! இந்த 9ல் நமது விமர்சனமும் இருக்கிறதா என்பது முதல் ஆர்வம்! அடுத்தது 5/9ல் வருகிறதா என்பது! நாம் எழுதிய விமர்சனம் எவ்வாறு நடுவரிடம் சென்று சேர்கிறது என்பதை பார்க்க இது ஒரு அரிய வாய்ப்பு! போட்டி சற்றே எளிமையாகத் தோன்றினாலும் உண்மையில் கதையை ஊன்றிப்படித்து, அடுத்தது விமர்சனங்கள் 9ஐயும் படித்து உள்வாங்கி வரிசைப்படுத்தினால் மட்டுமே சரியான வரிசையை நெருங்க முடியும்! இல்லையேல் PERMUTATION COMBINATION எல்லாம் போட்டுப்பார்த்து அன்னியன் படத்தில் நடிகர் விவேக் போல கம்பிகும்பா - கும்பாகம்பி என்று தலைபிய்த்துக்கொள்ளவேண்டியதுதான்! நல்ல போட்டி! ரசித்தேன்! எனது வரிசையை அனுப்பிவிட்டேன்! வாழ்த்துகள்! நம்ப வாத்யாரைப்போல - வை.கோ. வாத்யாரும் ஒரு புதுமைப்பித்தன் தான்!
    என்றும் அன்புடன்
    உங்கள் MGR

    பதிலளிநீக்கு
  13. புதுமையான போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. உற்சாகமான போட்டி -சிந்தனைக்குப் பாராட்டுக்கள்..

    நடுவர் இப்படி விமர்சனங்களுக்கு
    நடுவில் எப்படி திணறிப்போய்
    பரிசுக்குரியவற்றை தேர்ந்தெடுக்கிறார்
    என்பதை சுவாரஸ்யமாக விளக்குகிறது இந்தப்போட்டி..!
    வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 29, 2015 at 6:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உற்சாகமான போட்டி -சிந்தனைக்குப் பாராட்டுக்கள்..

      நடுவர் இப்படி விமர்சனங்களுக்கு
      நடுவில் எப்படி திணறிப்போய்
      பரிசுக்குரியவற்றை தேர்ந்தெடுக்கிறார்
      என்பதை சுவாரஸ்யமாக விளக்குகிறது இந்தப்போட்டி..!
      வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!//

      தங்களின் அன்பான வருகைக்கும், எம் சிந்தனைக்கான தங்களின் உற்சாகமான வாழ்த்துகள் + பாராட்டுகள் ஆகியவற்றிற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  15. மந்திரம் பண்ணறவங்க ஒரு பெட்டிக்குள்ள, பெட்டிக்குள்ள, பெட்டிக்குள்ள, பெட்டிக்குள்ளன்னு ........... மந்திரம் (MAGIC) பண்ணுவாங்க.

    இந்த கோபு அண்ணா என்னடான்னா புதுமையா போட்டிக்குள்ள, போட்டிக்குள்ள, போட்டிக்குள்ள ஒரு போடி வைக்கறாரே.........

    பதிலளிநீக்கு
  16. இன்னாங்க இது போட்டிக்குள்ளார போட்டினு வச்சுகிட்டே போயிகிட்டிருக்கீங்க. கலந்துக்குறவங்களுகுகல்லா வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. போட்டிக்குள்ள போட்டியா. நடுவர் ஐயா பாவங்க. சிறந்த விமரிசனத்து தேர்வு செய்வதற்குள் ஆளை விடுங்கப்பானு ஓடிடாம பாத்துக்கோங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரணாகதி. December 4, 2015 at 11:50 AM

      //போட்டிக்குள்ள போட்டியா. நடுவர் ஐயா பாவங்க.//

      இந்தப் போட்டிக்குள் போட்டியினால் நடுவருக்கு ஏதும் உபரி வேலைகள் இல்லையே. அவர் வழக்கம்போல ஐந்து விமர்சனங்களை இறுதியாகத் தேர்ந்தெடுத்துத் தருவார். அத்தோடு சரி.

      IN FACT இதுபோல ஒரு புதுமையான போட்டியைக்கூட நாம் இடையில் அறிவிக்கலாம் என எனக்கு ஒரு IDEA கொடுத்தவரே நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நடுவர் ஐயா / அம்மா அவர்கள் மட்டுமே. அவர் ஒரு சின்ன கோடு போட்டார் ..... நான் அதில் மிகப்பெரிய ரோடே போட்டுவிட்டேன். :)

      இதனால் நடுவர் பதவி என்பதில் எவ்வளவு பொறுமையும், திறமையும், கடும் உழைப்பும் அடங்கியுள்ளது என்பதை (வெற்றிபெறும் அல்லது வெற்றி வாய்ப்பினை இழக்கும்) அனைத்து விமர்சனதாரர்களும் உணர ஓர் வாய்ப்பாக அமைந்ததில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி மட்டுமே.

      அன்புடன் VGK

      நீக்கு
  18. என்ன சார் இவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க. ஒவ்வொரு விமரிசனமா படிச்சு பரிசுக்கு தகுதியான விமரிசனத்த தேர்வு செய்வது எவ்வளவு கடினமான பொறுப்பு. இதைவிட உபரி வேலை வேறு வேணுமா?

    பதிலளிநீக்கு
  19. தேர்வு செய்வது எவ்வளவு கடினமான பணி என்பதை உணரமுடிகிறது!

    பதிலளிநீக்கு
  20. ’தனக்குத் தானே நீதிபதி’ போட்டியில் வெற்றிபெற்று
    பரிசு பெறத் தேர்வானவர்கள் பற்றிய முடிவுகள் அறிய
    இதோ இணைப்பு:

    https://gopu1949.blogspot.in/2014/07/blog-post_29.html

    பதிலளிநீக்கு