என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 12 ஜூலை, 2014

VGK-24 / 03 / 03 - THIRD PRIZE WINNER - 'தாயுமானவள்’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :


VGK 24 - 

’ தாயுமானவள் ‘


 

 

          

 

 


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 





அனைவருக்கும் 


ஓர் மகிழ்ச்சியான செய்தி



  





ஏற்கனவே  VGK-03, VGK-10, VGK-13 ஆகிய கதைகளின்

விமர்சனங்களுக்கு அளிக்கப்பட்டது போலவே

இந்தக் கதை VGK-24க்கும் விமர்சனம் எழுதியனுப்பி


போட்டியில் கலந்துகொண்டுள்ள

 அனைவருக்குமே


என்னால் போனஸ் பரிசு அளிக்கப்பட உள்ளது என்பதை

பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


போனஸ் பரிசு பற்றிய மேலும் விபரங்களுக்கு







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து











நடுவர் அவர்களின் குறிப்பு:



தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்களில் ஓர் ஒற்றுமை இழையோடுவதை வாசகர்கள் உணரலாம்.

கதாசிரியரின் கதை வரிகளை கூடியவரை வரிக்கு வரி வலிந்து பாராட்டாமல்---

கதாசிரியரின் கதையையே மறுபடியும் எடுத்துச் சொல்லி ஆங்காங்கே ஓரிரு வரிகளை விமரிசனமாய் நுழைக்காமல் ---

எழுத்தாக்கங்களில் சில தவறுகள் இருந்தாலும் மொத்த  கதையையும் உள்வாங்கிக் கொண்டு தங்கள் மனப்பிரதிபலிப்பினை விமரிசனம் ஆக்கியவர்கள் இவர்கள்.

படித்துப் பாருங்கள்.

  

                                                                     - நடுவர்                                                                          











இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    



முத்தான மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர்







திருமதி



 உஷா ஸ்ரீகுமார்  



அவர்கள்




usha-srikumar.blogspot.in

'உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்’



 



முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள




திருமதி  



 உஷா ஸ்ரீகுமார்  



அவர்களின் விமர்சனம் இதோ:

 



ஒருவர் எழுத்தாளராக வேண்டுமென்றால் அவருடைய முதல் தேவை எது ஒன்றையும் கூர்ந்து நோக்கும் திறன் ...



அடுத்தது- பார்த்ததை அப்படியே எழுத்தில் கொண்டு வரும் திறமை...

மேலும்...


பார்த்ததை அப்படியே "ரிப்போர்ட்" போல சுவாரஸ்யமின்றி எழுதாமல் சிறிது கற்பனை, வார்த்தை நகாசு மற்றும் உணர்ச்சிகளைத் தொடும் சொல்  விளையாட்டுக்கலையில் அனாயாச திறமை....


இந்த மூன்று திறமைகளும் சரிவிகிதத்தில் கனக்கச்சிதமாக அமைந்துள்ள திரு வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களின் எழுத்துத் திறமைக்கு  "தாயுமானவள்" சிறுகதையே சாட்சி... இக்கதை ஒரு பிரபல பத்திரிகையில் பரிசு பெற்ற கதை என்பதில் அதிசயமே இல்லை...



வார்த்தைகளாலேயே  நம் கண் முன் திரு. வை. கோபாலகிருஷ்ணன் வாணப்பட்டரை  மாரியம்மன் தேர்த்திருவிழாவை சித்திரமாகத் தீட்டிவிட்டார்... நம்மை அந்த சூழலுக்குள் (atmosphere) முதல் 10 வரிகளிலேயே அழைத்துச்சென்றுவிட்டார்.... இதுவே அவர் கூர்ந்துநோக்கும் திறனுக்கும், பார்த்ததை - சொல் சித்திரமாக வடிக்கும் திறனுக்கும் சான்று!



நம்மை அந்தச் சூழலுக்குள் மேலும் அமிழ்த்த அருமையாய் தேர்ந்தெடுக்கப்பட்டு, கதைக்கு அழகாகப் பொருந்தக்கூடிய படங்கள் எழுத்தோவியத்துடன் போட்டி போடுகின்றன... நம் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றன...


கதை மாந்தர் ஒவ்வொருவருக்கும் ... நம்மைப் போலவே ஆளுக்கு ஒரு பிரச்சனை... தேவை...


குழந்தை பாக்கியம் வேண்டி அந்த அம்மனிடம் முறையிடும் கதாநாயகன் தனக்கு குழந்தைப்பேறு அளிக்க மருத்துவர் கேட்ட அந்த சிறிய (அவருக்குப்  பெரிய) தொகைக்காக  வேண்டி நிற்க ....



பெற்றோரை அந்தப் பேரலைக்கு விருந்தாகக் கொடுத்த அந்த சின்னஞ்சிறுமி, என்ன வேண்டுவது என்பதையே அறியாத வயசில் அனாதையாய் நிற்க...



பெற்றோரை இழந்த அச்சிறுமியை ஒரு பிள்ளைக்காக ஏங்கும் பெற்றோருடன் இணைக்கும் அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் லீலையே இந்த மனதை நெகிழ வைக்கும் கதை...


 

இந்த நல்ல ஜோடிக்கு ஒரு அன்பான, அழகான குழந்தையை தருவதற்காகவே அவள் இச்சிறுமியை இந்தத் திருவிழாவுக்கு வரவழைத்தாளோ ? இது எந்த ஜன்ம பந்தம் என்பதை அந்த வேப்பிலைக்காரி  மட்டுமே அறிவாளோ?




வசதியான சூழலில் வளர்ந்த அந்தக்குழந்தைக்கு இந்த பலூன் வியாபாரியும் அவன் மனைவியும் பொருத்தமான பெற்றோர்களாக இருப்பார்களா, என்று சிலர் நினைக்கலாம்... ஆனால் அந்த பலூன் காரரும் அவர் மனைவியும் பணத்தால் எழைகளானாலும் குணத்தால் கோடீஸ்வரர்கள் என்பதை அந்த ஓங்காரி அறிந்து தான் இந்த பந்தத்தை ஏற்படுத்தினாளோ ?



பல லட்சங்கள் செலவழித்து செயற்கையாகக் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க fertility clinic களில் தவமிருக்கும் பல தம்பதிகளுக்கு அந்த லோக மாதா இந்தக் கதை மூலம் சொல்ல விரும்புவது என்ன ....



"ஒரே ஒரு  குழந்தைக்காக தவமாய் தவமிருக்கிறீர்களே .... உங்களைப்போன்ற ஒரு நல்ல பெற்றோருக்காக  எத்தனை குழந்தைகள் தவமாய் தவமிருக்கிறார்கள் தெரியுமா? 



காத்திருக்காமல் உடனே அம்மா, அப்பா ஆகுங்கள் ... அவர்களில் ஒரு குழந்தைக்கு உங்கள் இதயத்திலும், இல்லத்திலும் இடம் தாருங்கள்... இந்த உலகத்தில் அனாதை என்று யாருமில்லை என்ற நிலை உருவாக்குங்கள்....” என்று நம்மிடம் சொல்லாமல் சொல்ல திருத்தேரில் அலங்கார பவனி வந்தாளோ ?



இந்தக் கருத்தை சொல்லும் ஒரு கருவியாக கதாசிரியரை பயன் படுத்தினாளோ ?



அந்தத் "தாயுமானவளே" அறிவாள்!


 



VERY SIMPLE and SUPERB ! 
Thanks a Lot ..... Madam.

- vgk 










   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.







இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட உள்ளன.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-26 



       பல்லெல்லாம்  


பஞ்சாமியின் பல்லாகுமா !  

  
[ நகைச்சுவை விருந்து ]


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


17.07.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்
    

27 கருத்துகள்:

  1. ரத்தினச் சுருக்கமான விமர்சனத்திற்கும் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள் சகோதரி! welcome back!
    அன்புடன் MGR

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் July 12, 2014 at 1:48 AM

      //வாழ்த்துகள் உஷா ஸ்ரீராம்.//

      Madam, அவர்கள் பெயர் திருமதி. உஷா ஸ்ரீகுமார். This is just for your information, please. - Gopu

      நீக்கு
  3. வாழ்த்துக்கள் சகோதரி. பாராட்டுக்கள். வை.கோ. சார் . அருமையான கதைக்கேற்ப அழகான விமர்சனம்

    பதிலளிநீக்கு
  4. மூன்றாம் பரிசினை வென்றுள்ள உஷாரஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள
    திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. http://usha-srikumar.blogspot.in/2014/07/blog-post_12.html
    திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு

  7. " இந்த உலகத்தில் அனாதை என்று யாருமில்லை என்ற நிலை உருவாக்குங்கள்....”

    சிறந்த கருத்துடன் கூடிய விமர்சனம் ! பரிசு பெற்ற திருமதி . உஷா ஸ்ரீகுமாருக்கு
    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  8. விமர்சனம் அருமை ஐயா...

    உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. நறுக்கென்று நல்ல விமரிசனம்.
    எழுதிய திருமதி. உஷா ஸ்ரீ குமார் அவர்களுக்கு
    நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. மூன்றாம் பரிசு பெற்றுள்ள திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். இன்ப அதிர்ச்சியாக இந்த வார விமர்சனதாரர்கள் அனைவருக்கும் போனஸ் பரிசு அளிக்கப்படவுள்ள செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக மிக நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  11. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள் விமர்சனம் மிக அருமை. மூன்றாவது பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். அவர்கள் வலைத்தளத்திலும் வாழ்த்தினேன்.
    போனஸ் பரிசு அளித்து விமர்சனப் போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்ச்சி படுத்திய உங்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  12. மூன்றாம் பரிசினை வென்றுள்ள உஷாரஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. மிக அருமை திருமதி உஷா ஶ்ரீகுமார் அவர்களே, பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள் முதலில் வர வாழ்த்துக்கள்!


    பதிலளிநீக்கு
  15. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி உஷா ஸ்ரீகுமார் aவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. பரிசு வென்ற திருமதி உஷாஸ்ரீகுமாருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. மூன்றாம் பரிசினை வென்றுள்ள உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. தருமதி உஷாஸ்ரீகுமாரவங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. திருமதி உஷாஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துகள். அந்த குழந்தை பெற்றோரை இழந்து குழந்தை இல்லாத ஏழை தம்பதியிடம் வந்து சேர்ந்த விதத்தை சிறப்பாக விமரிசித்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரணாகதி. December 4, 2015 at 11:04 AM

      //திருமதி உஷாஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

      கதைக்கான விமர்சனப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளவர் பெயர்: திருமதி. ’உஷா ஸ்ரீகுமார்’ என்பது ஆகும்.

      //அந்த குழந்தை பெற்றோரை இழந்து குழந்தை இல்லாத ஏழை தம்பதியிடம் வந்து சேர்ந்த விதத்தை சிறப்பாக விமரிசித்து இருக்கிறார்.//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      நீக்கு
  21. ஸாரி உஷாஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    பை மிஸ்டேக்கா உஷாஸ்ரீராம் என்று டைப் பண்ணிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரணாகதி. December 4, 2015 at 11:14 AM

      //ஸாரி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
      பை மிஸ்டேக்கா உஷாஸ்ரீராம் என்று டைப் பண்ணிட்டேன்.//

      OK .... OK .... Thank you, Sir. - vgk

      நீக்கு
  22. மூன்றாம் பரிசினை வென்றுள்ள உஷாரஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  23. பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை (தாயுமானவள்) என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு:
    http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு