என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 28 ஜூலை, 2014

’தனக்குத்தானே நீதிபதி’ தீர்ப்புகள் பற்றி ஓர் அலசல்அன்புடையீர்,

அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்.


பல்லெல்லாம் 

பஞ்சாமியின் பல்லாகுமா ?என்ற நகைச்சுவைக் கதைக்கு வந்து குவிந்திருந்த ஏராளமான

விமர்சனங்களில் நடுவர் அவர்களின் பலகட்ட வடிகட்டலுக்குப்பின்

ஒன்பது விமர்சனங்கள் மட்டும், 

இறுதிச்சுற்று பரிசுக்கு தேர்வாக வேண்டிய

நிலையில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.


இந்த ஒன்பது விமர்சனங்களில் வழக்கம் போல 

முதல் பரிசுக்கு இரண்டு விமர்சனங்களும்,

இரண்டாம் பரிசுக்கு இரண்டு விமர்சனங்களும் 

மூன்றாம் பரிசுக்கு ஒரு விமர்சனமும் 

நடுவர் அவர்களால் இறுதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய

கட்டத்தில் நான் புதுமையாக ஓர் போட்டியினை 

உயர்திரு நடுவர் அவர்களின் ஒப்புதலோடு அறிவித்திருந்தேன்.


அதாவது

தனக்குத்தானே நீதிபதி !  

புதுமையான போட்டி !!  

மிகச்சுலபமான போட்டி !!!


 REF: VGK 26002 To 26010

என்ற தலைப்பினில் ஓர்

 ’போட்டிக்குள்  போட்டி’ 

அறிவித்திருந்தேன்.


அதற்கான இணைப்பு இதோ:

மேற்படி  புதுமையான போட்டியில் ஏராளமான  பதிவர்களும், 

பதிவர்கள் அல்லாத வாசகர்களும், 

VGK-26 விமர்சனப்போட்டியில் கலந்து கொண்டவர்களும், 

VGK-26 விமர்சனப்போட்டியில் கலந்துகொள்ளாதவர்களும் 

என ஏராளமானவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு


’ தனக்குத்தானே நீதிபதியாக ’

தாராளமாகத் தங்களின் தீர்ப்பினை 

எழுதி அனுப்பி அசத்தியுள்ளனர்.இவ்வாறு இந்தப்போட்டியில் கலந்துகொண்டு 

தங்களின் நியாயமான தீர்ப்புக்களை தயங்காமல் 

பளிச்சென்று தெரிவித்துள்ள அனைத்து 

நீதிபதிகளுக்கும் என் அன்பான வணக்கத்தையும், 

நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும் ஒரு கதையினை ஊன்றிப்படித்து, 

மனதில் வாங்கிக்கொண்டு, அதன்பிறகே விருப்பமும், ஆர்வமும், 

எழுத்தாற்றலும், நேர அவகாசமும்  உள்ளவர்களால் மட்டுமே 

விமர்சனங்கள் எழுதி அனுப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு எழுதி அனுப்பப்படும் விமர்சனங்கள், எழுதியவர் யார் 

என்பது மட்டும் மறைக்கப்பட்டு, நடுவர் அவர்களின்  பார்வைக்காகவும்,  

பரிசீலனைக்காகவும், பரிசுக்குத் தேர்ந்தெடுக்கவும் என்னால் ஒரு புதிய 

குறியீட்டு எண் போட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வான விமர்சனதாரர்களின் 

பெயர்கள், புகைப்படம் அல்லது PROFILE PHOTO, வலைத்தளம் இருப்பின் 

அவர்களின் வலைத்தள முகவரி போன்ற விபரங்களுடன், பரிசு பெற்ற 

விமர்சனங்கள் மட்டும் என்னால் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்பட்டு 

வருகின்றன.இவ்வாறு தேர்வாகி பரிசு பெற்ற விமர்சனங்களை முழுவதுமாக படித்து 

ரஸித்து, எந்த அடிப்படையில் இநத விமர்சனம் பரிசுக்குத்

தேர்வாகியிருக்கிறது என்றெல்லாம் யோசித்து, விமர்சனம் 

எழுதியவரின் விமர்சனங்களில் ஒருசில வரிகளையாவது 

மேற்கோள் காட்டி பாராட்டாமல், பரிசு பெற்ற So and So வுக்குப்

பாராட்டுக்கள், வாழ்த்துகள் என பலராலும் பின்னூட்டம்

கொடுக்கப்பட்டு வருகின்றன. இது சற்றே வருத்தமளிப்பதாகவும் 

உள்ளது.
இந்தப்புதுமைப்போட்டியின் அடிப்படை நோக்கமே, போட்டிக்கான 

கதையையும், போட்டிக்கு வந்துள்ள விமர்சனங்களையும் 

முழுமையாகவும், பொறுமையாகவும் படித்து, அவற்றை மனதில் 

வாங்கிக்கொண்டால் மட்டுமே, இதில் நீதிபதியாகக் கலந்து 

கொண்டவர்கள் தங்களின் தீர்ப்பினை வழங்க முடியும் என்ற 

ஓர் சிறிய எதிர்பார்ப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தப்போட்டிக்கு நடுவராக இருந்து செயல்படுபவர் பாடு 

எவ்வளவு மஹா மஹா கஷ்டமாக இருக்கும் என்பதையும் நம்மால் 

நன்கு அறிய ஓர் வாய்ப்பாய் இந்தப்புதுமைப்போட்டி  அமைந்துள்ளது. 

போட்டிக்கு வந்து குவியும் பல விமர்சனங்களை அவர் பொறுமையாக, 

ஆழமாக, ஆர்வத்துடன் படித்து, பல கட்ட வடிகட்டல்கள் நடத்தி, 

இறுதித் தேர்வுக்கு முன்பு ஒன்பதே ஒன்பது மட்டுமே நம்முடைய 

தேர்வுக்கு அளித்துள்ளார்கள். இந்த அவர் நமக்குக்கொடுத்துள்ள 

ஒன்பது விமர்சனங்கள் என்ற எண்ணிக்கை, மொத்தம் வந்து 

குவிந்துள்ள விமர்சனங்களில் ஒரு 10% முதல் 20% வரை மட்டுமே 

இருக்கலாம் என்பதையும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டும். இந்த கொடுக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஒன்பது  விமர்சனங்களில் 

ஐந்தைத் தேர்ந்தெடுப்பது என்பதே நமக்கு மிகவும் கஷ்டமான 

வேலையாக இருக்கும்போது, போட்டிக்கு வந்துள்ள மொத்த 

விமர்சனங்களையும் படித்துப்பார்த்து வடிகட்டி வடிகட்டி ஒரு 

ஸ்டேஜில் ஒன்பது என்ற எண்ணிக்கைக்குக் கொண்டு வந்துள்ள 

நடுவர் அவர்களுக்கு இதைப்போல ஐந்து அல்லது பத்து மடங்கு 

கஷ்டமல்லவா ஏற்பட்டிருக்கும் ! அதையும் நம்மால் இந்தப் 

புதுமைப்போட்டியின் வாயிலாக சுலபமாக அறிய முடிகிறது.நான் பார்த்த வரையில் அனைவருமே தங்களின் விமர்சனங்களை 

இப்போதெல்லாம் மிக நன்றாகவே, ஜோராகவே, மாறுபட்ட 

முறையிலேயே, மிகத்தெளிவாக எழுதி வருகிறார்கள். 


இருப்பினும் நடுவர் அவர்களால் ஏதோ ஒரு அடிப்படையில் இந்த 

ஒன்பதில் ஐந்து விமர்சனங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு,  

ஏதோ ஒரு நான்கு விமர்சனங்கள் மேலும் வடிகட்டப்பட்டு, 

வேறு வழியே இல்லாமல் பரிசுக்கான பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணங்களையும், பரிசுக்கான  தேர்வில் 

மேற்கொள்ளப்படும் சில நுணுக்கமான வழிமுறைகளையும்  


நடுவர் அவர்களே எடுத்துரைத்தால் நாமும் தெரிந்து கொள்ளலாம்... கஷ்டப்பட்டு சிரத்தையுடன் சிறப்பாக விமர்சனம் எழுதி அனுப்பியுள்ள 


அந்த விமர்சனதாரர்களும் சற்றே மன சமாதானம் அடையலாம்... 
இதுவே அவர்களின் அடுத்த விமர்சனத்தை மேலும் சிறப்பாக எழுதவும் 

ஊக்கமளிக்கலாம் என நான் நினைக்கிறேன்.


இந்த என் அன்பு வேண்டுகோள்களுக்கு செவி சாய்த்து 

உயர்திரு நடுவர் அவர்கள் நாளைக்கு பதில் அளிப்பார் 

என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இந்தப்புதுமைப்போட்டியில் கலந்து கொண்ட நீதிபதிகள் 

அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், ஒவ்வொரு 

விமர்சனத்திற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ள வெற்றி வாய்ப்புக்களை, 

சதவீத அடிப்படையில் மிகத்துல்லியமாக இங்கு கீழே கொடுத்துள்ளேன். 


ஒவ்வொரு நீதிபதியும் ஐந்து விமர்சனங்களைத் 

தேர்ந்தெடுக்க  வேண்டியிருப்பதால், ஒவ்வொரு 

விமர்சனத்திற்கும், ‘20% நீதிபதிகளால் ஏதோவொரு

பரிசுக்குத் தேர்வாகியுள்ளது’ என்பதையே  மிக அதிகபட்ச  

வெற்றி இலக்காக நாம் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.


[ இதில் நான் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு 

என்றெல்லாம் பிரிக்கவே இல்லை - ஐந்துக்குள் ஏதோவொரு 

பரிசு என்ற அடிப்படையில் மட்டுமே கொடுத்துள்ளேன் ]


இன்றும் நம்மில் பலரின் 

நீங்காத நினைவலைகளில் இருந்து வருபவர் நம்

வாத்யார், மக்கள் திலகம், புரட்சித்தலைவர், இதயக்கனி, 

எங்க வீட்டுப் பிள்ளை, பொன்மனச்செம்மல், பாரத் ரத்னா 


 எம்.ஜி.ஆர்.  


அவர்கள் தான் என்பது மறுப்பதற்கு இல்லை.


  


It is needless to state that even today 

Our MGR is so popular !
அதுபோலவே இந்தப்புதுமைப் போட்டியிலும் 

வெகு ஜன ஆதரவு M G R அவர்களின் விமர்சனத்திற்கே 

மிக அதிகமாகக் கிடைத்துள்ளது.
VGK 26010 


[ எழுதியவர்: திரு. ரவிஜி என்கிற 


மாயவரத்தான்    M G R  அவர்கள் ]18% நீதிபதிகளால் ஏதோவொரு பரிசுக்கு 

இவரின் விமர்சனம் தேர்வு செய்யப்பட்டு 


முதலிடம் வகிக்கின்றது. ;)VGK 26007

[ எழுதியவர்: திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள் ]


16% நீதிபதிகளால் ஏதோவொரு பரிசுக்கு 

இவரின் விமர்சனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
VGK 26003

[ எழுதியவர்: திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ]


12% நீதிபதிகளால் ஏதோவொரு பரிசுக்கு 

இவரின் விமர்சனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
VGK 26009 

[ எழுதியவர்: திரு. E.S. சேஷாத்ரி அவர்கள் ] 


12% நீதிபதிகளால் ஏதோவொரு பரிசுக்கு 

இவரின் விமர்சனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.VGK 26005

11% நீதிபதிகளால் ஏதோவொரு பரிசுக்கு 

இந்த விமர்சனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


VGK 26002

[ எழுதியவர்: திரு. J. அரவிந்த் குமார் அவர்கள் ] 

10% நீதிபதிகளால் ஏதோவொரு பரிசுக்கு 

இவரின் விமர்சனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-=-=-=-=-=-=-=-=-=-=-
VGK 26004

9% நீதிபதிகளால் ஏதோவொரு பரிசுக்கு 


இந்த விமர்சனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நகைச்சுவை என்ற பெயரில் நான் எழுதியுள்ள இந்தக்கதைக்கு,  நகைச்சுவையாகவே இந்த விமர்சனமும் எழுதப்பட்டுள்ளது.

இவர் எழுதியுள்ள விமர்சன எழுத்துக்கள் அப்படியே  என் பாணியிலேயே அமைந்துள்ளதாக நடுவர் அவர்கள் என்னிடம் பேசும் போது தெரிவித்திருந்தார்கள்.

ஒருவேளை கதாசிரியரே விமர்சனமும் எழுதி அனுப்பியிருப்பாரோ என்ற சந்தேகம் நடுவருக்கு மனதுக்குள் ஏற்பட்டதோ என்னவோ ! அடியேன் அறியேன்.

எனினும் இந்த விமர்சனமும் இறுதிச்சுற்றினில் பரிசுக்குத் தேர்வாகவில்லை. 

விமர்சனம் செய்யப்பட வேண்டிய கதைப்பகுதியிலிருந்து விமர்சனதாரர் வெகுதூரம் விலகி தனித்து நின்று,  வேறு ஏதேதோ  தன் சொந்த அனுபவங்களை மிகவும் நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டுள்ளதால், பரிசுக்குத்தேர்வாகாமல் உயர்திரு நடுவர் அவர்களால் இறுதிச்சுற்றினில். இது வடிகட்டப்பட்டிருக்கலாம் என்பது என் சொந்தக் கருத்து.   

விமர்சனம் எழுதியவருக்கு ஒரு தகவலாக இருக்கட்டும் என்று மட்டுமே இதை இங்கு நான் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். 

இந்த ’VGK 26004’ என்ற விமர்சனத்தை எழுதியவர் யாராக இருக்கும் என்றுகூட ஓர் போட்டி வைக்கலாமா என எனக்குத் தோன்றுகிறது. ;))))) 

போட்டிக்குள் போட்டி என எவ்வளவு போட்டிகள் தான் நானும் நடத்துவது?  எனக்கு இப்போதெல்லாம் மூச்சுவிடவே நேரமில்லாமல் அல்லவா உள்ளது !!!!! 

இந்தப் புதுமைப் போட்டியில் ஒரு சின்ன சந்தோஷம் என்னவென்றால் SEMI FINAL வரை தேர்வாகி வந்துள்ள இந்த ஒன்பது விமர்சனங்களும் பல நூற்றுக்கணக்கான வாசகர்களால் முழுவதுமாக ஊன்றி மனதில் வாங்கிக்கொண்டு படிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு படித்த பின்னரே அவர்களால் அவர்களின் தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த அரிய வாய்ப்பு இதுவரை நடைபெற்ற ’சிறுகதை விமர்சனப்போட்டி’ கதைகளில் பரிசு பெற்ற அல்லது பரிசு பெறாத விமர்சனங்கள் எதற்குமே கிட்டியதே இல்லை. இதுவே இந்த விமர்சனங்களை எழுதியனுப்பியுள்ள ஒன்பது விமர்சனதாரர்களுக்கும் கிடைத்துள்ள ’மாபெரும் ஸ்பெஷல் பரிசு’ என்று என்னால் அடித்துச்சொல்ல முடியும்.

இந்த விமர்சனப் போட்டிகளின் அடிப்படை நோக்கமே ஒருவரின் பதிவுகளை ஊன்றிப்படித்து, மனதில் வாங்கிக்கொண்டு, அதன் பிறகே விமர்சனமோ அல்லது பின்னூட்டக் கருத்துக்களோ அளிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. அந்த அடிப்படை நோக்கம் இந்தப்போட்டியின் மூலம் மட்டுமே ஓரளவுக்கு நிறைவேறியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே. 

அன்புடன் VGK

-=-=-=-=-=-=-=-=-=-=-


VGK 26006

7% நீதிபதிகளால் ஏதோவொரு பரிசுக்கு 

இந்த விமர்சனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


VGK 26008

5% நீதிபதிகளால் ஏதோவொரு பரிசுக்கு 

இந்த விமர்சனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நம் தலைமை நீதிபதியான உயர்திரு நடுவர் அவர்களின் 

இறுதிக்கட்ட தேர்வின்படி ..... 


முதல் பரிசுக்கு தேர்வானவைகள் :             

 VGK 26010 and VGK 26003
இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவைகள்:   

VGK 26002 and VGK 26009

http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-02-03-second-prize-winners_26.htmlமூன்றாம் பரிசுக்குத் தேர்வானவை :            

VGK 26007 

http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-03-03-third-prize-winner.htmlஇதையெல்லாம் விட எனக்கு மிகுந்த ஆச்சர்யம் 

என்னவென்றால், இந்தப் புதுமைப்போட்டியான 

‘தனக்குத் தானே நீதிபதி’ யில் மூவர் எழுதி 

அனுப்பியுள்ள தீர்ப்புகள்  மட்டும் உயர்திரு நடுவர் 

[தலைமை நீதிபதி] அவர்களின் தீர்ப்புகளுடன் 

100% ஒத்துப்போவதாக அமைந்துள்ளன. 


அவர்கள் மூவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மேலும் ஒரே ஒருவரின் தீர்ப்பு மட்டும் நடுவர் அவர்களால் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதே ஐந்து வெற்றியாளர்களின் 


விமர்சனங்களையே பிரதிபலிப்பதாக இருந்தும்கூட

முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வகைப்படுத்தியுள்ளதில் 

சற்றே வித்யாசத்துடன் அமைந்து போய் உள்ளது. 


அவருடைய முயற்சியினையும், கருத்துக்கணிப்பினையும்,


தீர்ப்பினையும் நான் மிகவும் உளமாற பாராட்டி மகிழ்கிறேன்.

இந்தப்புதுமைப் போட்டியினை அடியேன் நடத்த ஒப்புதல் அளித்து

என்னை ஊக்குவித்த நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


உயர்திரு நடுவர் அவர்களின் பல்வேறு கருத்துக்கள் + 

ஆலோசனைகளுடன் நாளை ஒரு பதிவு  

வெளியிடப்பட உள்ளது. விமர்சனதாரர்கள் மேலும் மேலும் 

வெற்றி வாய்ப்பினை மிகச்சுலபமாகப் பெற்றிட அதில் 

பல பயனுள்ள விஷயங்கள் அடங்கியுள்ளன.அத்துடன் அந்த வெற்றியாளர்கள் மூவர் யார் என்ற  

முழு விபரங்களும் நாளை வெளியிடப்பட உள்ளன. காணத்தவறாதீர்கள் ! 


கருத்தளிக்க மறவாதீர்கள் !!’தனக்குத்தானே நீதிபதி’ போட்டியில் பங்கு கொண்டு சிறப்பித்துள்ள 

அனைத்து நீதிபதிகளுக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகள்.


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு: VGK-28 வாய் விட்டுச் சிரித்தால் .... 


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


31.07.2014
இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.

என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

20 கருத்துகள்:

 1. போட்டிகள் நடத்துவதில் த்ங்களுக்கு நிகர் தாங்கள் தான் ஐயா

  பதிலளிநீக்கு
 2. தனக்குத்தானே நீதிபதி போட்டியின் மூலம் நடுவர் அவர்களின் பொறுப்பு எத்தகைய சிரமத்துக்குரியது என்பதையும் எவ்வளவு பொறுமையும் தேர்ந்த வாசிப்புத்திறனும் நேரமும் தேவைப்படுகிறது என்பதையும் அனுபவபூர்வமாக எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள் கோபு சார். நடுவர் அவர்களுக்கு வாசக விமர்சனதாரர்கள் அனைவரின் சார்பாகவும் மிகப்பெரிய கரகோஷத்தோடு கூடிய பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. இத்தனை விமர்சனங்களில் மூவரது யூகங்கள் நடுவர் அவர்களது முடிவோடு நூறு சதம் ஒத்துப்போயிருப்பதை அறிந்து மிக மிக வியப்பு. அந்த மதியூக வாசகர்கள் யாராயிருக்கும் என்று அறிய ஆவல். அவர்கள் அனைவருக்கும் கூடவே, வரிசை மாறியிருந்தாலும் சரியான விமர்சனங்களைக் குறிப்பிட்ட அந்த மற்றொரு வாசகருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. விமர்சனப் போட்டிகளின் அடிப்படை நோக்கமே ஒருவரின் பதிவுகளை ஊன்றிப்படித்து, மனதில் வாங்கிக்கொண்டு, அதன் பிறகே விமர்சனமோ அல்லது பின்னூட்டக் கருத்துக்களோ அளிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. //

  சிரத்தையான வழிகாட்டுதல்கள்...
  புதிய சகாபதத்தைத்தோற்றுவிக்கும் புதுமையான போட்டிகள்..
  மனம் நிறைந்த வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
 5. அன்பின் வை.கோ

  நான் தேர்ந்தெடுத்த விமர்சனங்கள் ஐந்தில் மூன்று விமர்சனங்கள் நடுவர் பார்வையில் முதல் இரணடாம் மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கின்றன . ஆனால் நடுவரின் தர வரிசையும் என் தர வரிசையும் மாறு பட்டிருகின்றன.

  கலந்து கொண்ட போட்டியில் ஐந்தில் மூன்று தர வரிசை மாறினும் பரிசு கொடுப்பதில் ஒற்றுமை இருக்கிறது என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

  இப்போட்டியினை அறிவித்த அருமை நண்பர் வை.கோ அவரகளுக்குப் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள்

  தலைமை நீதிபதியினால் தேர்ந்தெடுக்கப் பட்ட போட்டியாளர்கள் மற்றும் என்னால் தேர்ந்தெடுக்கப் பட்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்.

  தர வரிசை நீதிபதிக்கு நீதிபதி மாறுவது இயற்கை தான்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 6. நான் ஏற்கனவே எனது பின்னூட்டத்தில் இட்டதுபோல 9x8x7x6x5x4x3x2x1 permutation combination கம்பி கும்பா … கும்பா கம்பி எல்லாம் அம்பேல்! உண்மையில் விமர்சனங்களைப் படித்து உள்வாங்கி அதற்கு விமர்சன வரிசை தந்தவர்களே இன்று 5/9 புதுமைப்போட்டியின் வெற்றி வரிசையில்! அவர்களுக்கு எனது வாழ்த்துகள்! 9 விமர்சனங்களுக்கே இப்படியென்றால் ஏகப்பட்ட விமர்சனங்களைப் படித்து – பிடித்ததைப் பிடித்து பட்டியலிட்டு short list செய்து, வெற்றியாளர்களை முடிவு செய்யும் நடுவர் அவர்களின் வேலை??? ஐயோடா! இதே வெலயா அலஞ்சாத்தான் உண்டு போல இருக்கே! MGR என்றாலே மக்களின் வாக்கு அள்ளிகிட்டு போகுமே! அது மூன்றெழுத்து மந்திரமாச்சே! (VGK யும் அப்படித்தான்!) ஒரு வேளை அப்படி இந்த மாயவரத்தான் MGRக்கும்ஒர்க் அவுட் ஆகியிருக்குமோ?! 18% விமர்சகர்கள் தெரிவுசெய்து எனது விமர்சனத்திற்கு முதலிடம் வாங்கித்தந்து உச்சம் தொட்ட வாத்தியார், மக்கள் திலகம் MGR அவர்களின் பெயரோடு - புகைப்படங்களோடு இந்த வாத்தியார் FAN மாயவரத்தான் MGR பெயரையும் வெளியிட்டு ….ஆஹா! என்ன ஒரு பெருமைப்படுத்தும் விஷயம்! ஆஸ்கர், ஞானபீடம், சாகித்ய அகாடமி…..எல்லாத்தையும் சேத்துவாங்குனமாதிரி ஜிவ்வ்வ்ன்னு இருக்கு வாத்தியாரே! வாத்தியார் பாட்டுமாதிரி நான் உயர உயரப் போகிறேன்….வாக்காளர்களால் இரண்டு, மூன்று மற்றும் அனைத்து வரிசை வெற்றிகளையும் பெற்ற விமர்சன வித்தகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! VGK வாத்யாருக்கும், வாக்களித்தவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி!!! என்றும் அன்புடன் “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” - M G R

  பதிலளிநீக்கு
 7. விமர்சனங்களைப் படித்து தேர்வு செய்வது என்பது எவ்வளவு சிரமமான செயல் என்பதை தங்களின் போட்டி உணர வைத்துவிட்டது. 9ல் 5 தெரிவு செய்வதே கடினம்தான். என்னுடைய மாமனாரும் இதில் கலந்து கொண்டு தன்னுடைய தீர்ப்பை அளித்திருந்தார். நடுவர் அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிந்து கொள்ள ஆவல். நன்றி! பேராதரவு பெற்ற போட்டியாளர்களுக்கும் என் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. இரண்டு நாட்களாக வீட்டில் இல்லாமல் வெளியே செல்லும்படி ஆகி விட்டது. மறுபடியும் நாளை காலை வெளியூர் செல்ல வேண்டும். வந்த பிறகு இந்த பதிவை நன்கு ஆற அமர படித்துவிட்டு கருத்துரை எழுத வேண்டும். மீண்டும் வருவேன்..

  பதிலளிநீக்கு
 9. இதுக்கு ஏற்கெனவே கொடுத்த பின்னூட்டம் போகலை! :) அப்போ என்ன கொடுத்தேன்னு நினைவில் இல்லை. ஆனால் விமரிசனங்களைப் படித்துத் தொடர்ந்து தேர்வு செய்து வரும் நடுவரின் பொறுமையான குணத்தைப் பாராட்டியே ஆகணும். நடுவரும் யார்னு போட்டி வைச்சிருக்கீங்க! அதான் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறேன். யார்னே தெரியலை! :)))))

  பதிலளிநீக்கு
 10. //இந்த ’VGK 26004’ என்ற விமர்சனத்தை எழுதியவர் யாராக இருக்கும் என்றுகூட ஓர் போட்டி வைக்கலாமா என எனக்குத் தோன்றுகிறது. ;))))) //

  ஹிஹிஹி, வைங்க, வைங்க!

  பதிலளிநீக்கு
 11. சிறுகதைப் போட்டி நடத்துவது மிகவும் கஷ்டம்தான்.

  பதிலளிநீக்கு
 12. \\விமர்சனப் போட்டிகளின் அடிப்படை நோக்கமே ஒருவரின் பதிவுகளை ஊன்றிப்படித்து, மனதில் வாங்கிக்கொண்டு, அதன் பிறகே விமர்சனமோ அல்லது பின்னூட்டக் கருத்துக்களோ அளிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே.\\
  தனக்குத்தானே நீதிபதி போட்டியின் மூலம் நடுவர் அவர்களின் பொறுப்பு எத்தகைய சிரமத்துக்குரியது என்பதையும் எவ்வளவு பொறுமையும் தேர்ந்த வாசிப்புத்திறனும் நேரமும் தேவைப்படுகிறது என்பதையும் அனுபவபூர்வமாக எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள் கோபு சார். நடுவர் அவர்களுக்கு வாசக விமர்சனதாரர்கள் அனைவரின் சார்பாகவும் மிகப்பெரிய கரகோஷத்தோடு கூடிய பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் August 29, 2015 at 6:07 PM

   வாங்கோ, வணக்கம்.

   \\விமர்சனப் போட்டிகளின் அடிப்படை நோக்கமே ஒருவரின் பதிவுகளை ஊன்றிப்படித்து, மனதில் வாங்கிக்கொண்டு, அதன் பிறகே விமர்சனமோ அல்லது பின்னூட்டக் கருத்துக்களோ அளிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே.\\
   தனக்குத்தானே நீதிபதி போட்டியின் மூலம் நடுவர் அவர்களின் பொறுப்பு எத்தகைய சிரமத்துக்குரியது என்பதையும் எவ்வளவு பொறுமையும் தேர்ந்த வாசிப்புத்திறனும் நேரமும் தேவைப்படுகிறது என்பதையும் அனுபவபூர்வமாக எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள் கோபு சார். நடுவர் அவர்களுக்கு வாசக விமர்சனதாரர்கள் அனைவரின் சார்பாகவும் மிகப்பெரிய கரகோஷத்தோடு கூடிய பாராட்டுகள்//

   மொபைல் போனில் Copy & Paste செய்து எதையும் Highlight செய்ய முடியாமல் உள்ளது என்று சொன்னீர்கள். ஆனால் இங்கு எப்படியோ மேலேயுள்ள சிலவற்றை அப்படியே Copy & Paste செய்துள்ளீர்கள். எனினும் மகிழ்ச்சி + நன்றி. :)

   நீக்கு
 13. நடுவர் பொறுப்பு என்பது மிகவும் கடினமானது தான். இந்தப் போட்டியால் அது தெளிவாகி விட்டது. நடுவருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆஹா நம்ம வேலை எவ்வளவு கஷ்டம்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சேன்னு.

  பதிலளிநீக்கு
 14. நடுவர் ஐயா எந்த விமரிசனத்த தேர்வு செய்யுறதுன்னுபிட்டு தெணறித்தா போயிடுவாங்க. பொறுப்பான பதவிதா.

  பதிலளிநீக்கு
 15. நடுவர் ஐயாவின் சிரமங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு சிரமமான பதவி என்று தெரிந்தும் தைரியமாக இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் நடுவர் ஐயாவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

  பதிலளிநீக்கு
 16. விமர்சனங்களைப் படித்து தேர்வு செய்வது என்பது எவ்வளவு சிரமமான செயல் என்பதை தங்களின் போட்டி உணர வைத்துவிட்டது. 9ல் 5 தெரிவு செய்வதே கடினம்தான். என்னுடைய மாமனாரும் இதில் கலந்து கொண்டு தன்னுடைய தீர்ப்பை அளித்திருந்தார். நடுவர் அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிந்து கொள்ள ஆவல். நன்றி! பேராதரவு பெற்ற போட்டியாளர்களுக்கும் என் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 17. ’தனக்குத் தானே நீதிபதி’ போட்டியில் வெற்றிபெற்று
  பரிசு பெறத் தேர்வானவர்கள் பற்றிய முடிவுகள் அறிய
  இதோ இணைப்பு:

  https://gopu1949.blogspot.in/2014/07/blog-post_29.html

  பதிலளிநீக்கு