About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, July 29, 2014

’தனக்குத்தானே நீதிபதி’ போட்டி முடிவுகள் !

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

’தனக்குத்தானே நீதிபதி’  போட்டியின் முடிவுகளை அறிந்து கொள்ளும் முன்பாக நம் உயர்திரு நடுவர் அவர்கள், சிறுகதை விமர்சனப்போட்டிகளில் கலந்துகொள்வோருக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒருசில விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்களின் வெற்றி வாய்ப்புக்களை மேலும் அதிகரித்துக்கொள்ள இவை மிகவும் பயன்படக்கூடும். அதனால் இவற்றை ஊன்றிப்படித்து, மனதில் வாங்கிக் கொள்ளுங்கள். 

இது பற்றிய  தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.  பின்னூட்டமாக நீங்கள் எழுப்பும் எந்த  சந்தேகத்திற்கும் நடுவரிடமிருந்து பதில் பெற்று பிரசுரிக்கிறேன். - அன்புடன் VGK


  'From the Desk of Competition Judge'   

                                                                                                      
  மனம்  திறந்து...'நீங்கள் தான் நடுவராக இருக்க வேண்டும்' என்று அன்புடன் கோபு சார் இந்த நடுவர் பொறுப்பை எனக்கு கொடுக்க முற்பட்ட  பொழுதே அவரிடம் தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னேன்:  "சார்! ஒருவர் மட்டும் நடுவராய் இருக்கும் பட்சத்தில் அந்த நடுவரான ஒருத்தரின் விமரிசனப் பார்வையே தேர்வுக்கான அளவுகோலாக மாறிவிடுமே, சார்!" என்று என் பக்க எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.


"பரவாயில்லை. நீங்கள் தான் எனக்கு இந்தப் பணியை முடித்துத் தர வேண்டும்" என்று ப்ரியத்துடன் கேட்டுக் கொண்டதால் அந்த அன்புக்குக் கட்டுப்பட்டேன்.

போட்டிக்கு கட்டுரைகள் வர ஆரம்பித்ததும் இயல்பாகவே எனக்கும் இந்த போட்டிக்கான தேர்வுகளில் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. தமிழில் விமரிசனக் கலையைக் கற்பிப்பதில் ஒரு வாய்ப்பு ஏற்பட்டதாக நாளாவட்டத்தில் எண்ணத் தலைப்பட்டேன்.  அதற்கு தகுதி எனக்கு உண்டா என்பதை விட அந்தத் தகுதிக்கு என்னை ஆட்படுத்திக் கொள்வதில் ஆர்வம் கூடியது.  பல்வேறு விஷயங்களில் நான் கொண்டிருந்த விமர்சனப் பார்வையும் அந்தப் பார்வை ஏற்படுவதற்காக வாழும் நாளில் வாசித்துத் தேர்ந்ததும் அதற்கு துணையாக நின்றது.

'எங்கோ படித்தது', 'யாரோ சொன்னது' என்று விதவிதமான போர்வைகளைப் போர்த்திக் கொண்டும், எந்த மறைப்பும் இல்லாமல் 'நடுவர் குறிப்பு' என்று நேரடியாகவும், கதைகளுக்கான விமரிசனங்கங்கள் எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று என் யோசனைகளை இதற்கு முன்பாகவே உங்களுடன்  பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அவற்றையெல்லாம் தேடித்தேடிப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய சிரமத்தைக் கூட விமர்சகர்களுக்கு வைக்காமல் ஒரே பதிவில் எல்லாவற்றையும் ஒரு சேர அடக்கி சமீபத்தில் கோபு சார் கொடுத்திருந்தது, [ http://gopu1949.blogspot.in/2014/07/tips-suggestions-for-winning.html ] எந்த அளவுக்கு சிறப்பாக தன் கதைகளைப் பலரின் விமரிசனங்களுக்கு உட்படுத்த வேண்டும் என்கிற அவரது ஆவலைச் சொல்வதாக அமைந்திருந்தது.

எழுதுகோல் பிடித்த எவரும் பொதுவாக தன்  எழுத்துக்களை இன்னொருவர் விமரிசிப்பதை அவ்வளவு பொறுமையுடன் கேட்டு ரசிக்க மாட்டார்கள்.  இதிலும் கோபு சார் விதிவிலக்காக இருப்பதும், பரிசுகள் வழங்கி மகிழ்வதும் எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

வெகு அரிதாகக் காணப்படுகிற, எழுதுகிறவருக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகிற இந்த நல்ல குணம் தான் அவர் வாழ்க்கையிலும் படிந்து அவர் கண்ட பல வெற்றிகளுக்குக் காரணமாகவும் இருக்கலாம்.   அவரை 'ரோல் மாடலாக'க் கொள்ள நினைப்பவர்கள் தங்கள் குறிப்புப் புத்தகத்தில் தாராளமாக இதைக் குறித்துக் கொள்ளலாம்.

இப்படித் தான் எழுத வேண்டும்  போலிருக்கு என்று கதாசிரியரை பாராட்டி எழுதினால் தான் தேர்வாகும் என்கிற பொது அபிப்ராயமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான், வார்த்தைக்கு வார்த்தை வலிந்து பாராட்டாமல் விமர்சகர்கள் இருந்தால் நல்லது என்றும் ஒரு சமயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.  இந்த எனது குறிப்பைக் கூட ரசித்தபடியே பதிவில் பிரசுரித்தார் அவர்.   விமர்சனங்களில் கதாசிரியரின் பெயரைச் சொல்லி அடுத்தடுத்து பாராட்டுவதைக் குறைத்துக் கொண்டு கதாசிரியர் என்று சொன்னால் போதுமே என்று இப்பொழுது கூட நினைக்கிறேன்.

'தல', 'வாத்தியார்' போன்ற திரைப்பட தாக்கத்தால் தாக்குண்டு தன்னுள் முகிழ்க்கும் வார்த்தைப் பிரயோகங்களைக் கூடக் குறைத்துக் கொள்ளலாம்.  கதையைப் படித்த சந்தோஷத்தில் ஏதோ ஓரிரு தடவை குறிப்பிட்டால் வாசித்த வாக்கில் துண்டாகத் தெரியாது போகும்.  ஆனால் அதுவே வழக்கமாகிப் போய் 'ஓகோ, இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும் போலிருக்கு' என்று ஒவ்வொருவரும் இதையே பின்பற்றினால் நாலாந்தர விமரிசனங்களாய் அமைந்து விடுகின்ற ஆபத்தும் இருக்கிறது.   அப்படியான வார்த்தைகளுடன் எழுதப் பட்டிருக்கும் விமர்சனங்களும் தேர்வாகியிருக்கும் பட்சத்தில், அந்த விமரிசனங்களின் வேறான நுண்ணிய பார்வைக்கும் வேறு சிறப்புகளுக்காகவும் தேர்வாகியிருப்பதாகக் கொள்ள வேண்டுகிறேன். ஒரே ஸ்டீரியோ டைப்பாக இல்லாமல் வெவ்வெறு வார்த்தை பிரயோகங்களுடன் மாறுபட்ட பார்வைகளோடு எந்த ஒரு விமரிசனமும் அமைந்து விட்டால் அது புதுமையாக இருக்கும். வாசிப்பவரின் கவனத்தையும் கவரும்.  நாற்பது கதைகளுக்கு விமரிசனம் எழுதப் போகிறோம் என்று ஏற்பட்டான பிறகு விதவிதமாக எழுதுவதென்பது இயல்பாக ஏற்பட்டால் தானே எடுப்பாகவும் இருக்கும்?...  தினமும் காலையில் இட்லி என்றால் எப்படி?....

பார்த்தால் நம் எல்லோருக்கும் தெரிந்த சமாசாரங்கள் தாம் கதை ரூபமெடுக்கின்றன. பாதிக் கதையை படிக்கையிலேயே இப்படித் தான் இதன் முடிவு இருக்கும் என்று கண்டு கொள்வாரும் பலருண்டு. இருந்தும் இதில் கதாசிரியரின் திறமை என்ன இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.  எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை எப்படிச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.  ஒவ்வொரு கதையிலும் இப்படிச் சொன்னது தான் அவரின் சிறப்பு.  அந்த சிறப்பை எடுத்துக் காட்டி இதுவரை சொன்னவர்கள் சிலரே. அவர்களே தொடர்ந்தும் பரிசு பெறுகிறார்களே தவிர, எந்தப் பரிசும் யாருக்கும் நிச்சயப்படுத்தப் பட்டதல்ல.  கதை 'சொல்லப்பட்ட விதம்' குறித்து சிலாகித்துச் சொன்னவர்கள் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். விமரிசனங்களுக்கு இது தான் முக்கியம்.  கதையே அல்ல. 


இதைக் கொஞ்சம் உங்கள் மனசில் படிகிற மாதிரி விளக்க வேண்டும். எந்தக் கதையும் ஒரு நிகழ்வின் அடிப்படையிலே அமைந்து விடுவதால், வாழ்க்கையின் பல நிகழ்வுகள் நமக்கும் பரிச்சயமாகி இருப்பதால் இதே மாதிரியான கதைக்கரு யார் மனதிலும் தோன்றலாம். அதனால் ஒரு கதையைப் பொறுத்தமட்டில் அந்தக் கதையின் அடிநாதம் எழுத்தார்வம் கொண்ட பலருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது.   அப்படியான ஒரு கதைக் கருவை கதையாக சமைத்து அதற்கு கதை என்கிற உருக் கொடுப்பது  தான் எழுத்தாளனின் வேலையாகிப் போகிறது.   அந்தக் கருவையே பலரிடம் கொடுத்து கதையாக இதற்கு வடிவம் கொடுங்கள் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதைச் செய்வார்கள் இல்லையா?.. ஒரு கதையின் அடித்தளத்திற்கு அடுத்து அடுத்து பலவிதமான அடுக்குகள் கொடுத்து உருக்கொண்ட கதையாக ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் உருவாக்குவார்கள் இல்லையா?..   இதை கோபு சார் எப்படிச் செய்திருக்கிறார், எப்படியான அழகழகான அடுக்குகள் கொடுத்து இந்தக் கதைக் கட்டிடத்தை நிர்மாணித்திருக்கிறார் என்று ரசித்து விவரிப்பது தான் நல்ல விமரிசனம். அதுவே விமர்சகர்களின் வேலையாகிப் போகிறது.

இரசனையின் அடிப்படையில் குறைகளும் தோன்றலாம்.  தேர்ந்த ரசனையாளரால் அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.  அதனால் தான், தேர்ந்த ரசனையாளன், தான் ரசித்த ரசிப்பின் தரிசனத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் திறம்பட விவரிப்பவனாய் ஆகிப் போகிறான்.  இவனது வெளிப்பாட்டு ரசனையும் இன்னொருவரின் ரசனையாக ஆகும் பொழுது அந்த விமரிசனமும் கலை ரூபம் கொள்கிறது. கதைகள் மட்டுமல்ல தேர்ந்த விமரிசனங்களும் கலைப் படைப்புகள் தாம்.  

சில கதைகளில் அந்தக் கதையின் முடிவில் உங்களுக்கு திகைப்பை ஏற்படுத்துவதற்காக கதாசிரியர் கதையின் போக்கில் வாசிக்கும் உங்களை வெவ்வேறு கோணங்களில் திசைதிருப்பலாம்.  அப்படி செய்தால் தான் அந்தக் கதையின் முடிவில் உங்களுக்கு திகைப்பு ஏற்படும். துப்பறியும் கதைகளின் பெரும்பாலான கதைகள் இத்தகைய வடிவங்களை தவிர்க்கவே முடியாமல் கொண்டிருக்கும்.  சமூக கதைகளிலும் கோபு சார் சிலவற்றில் இந்த முயற்சியை செய்திருக்கிறார். (உ-ம்: அதிகாலையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு போக வேண்டியிருக்க முதல் நாள் இரவே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்குப் போய்ச் சேர்ந்த ஒரு முன் எச்சரிக்கை நபரைப் பற்றிய கதை!)  அந்தக் கதையில் கோபு சார் கடைசி முடிவை நீங்கள் எதிர்பார்க்காமல் இருப்பதற்கு தானே வெகு சிரமப்பட்டு வெவ்வேறு சிந்தனைகளில் உங்களை சிறைப்படுத்துகிறார்? அப்படி அவர் செய்திருந்த 'வழி திருப்பல்'களை ஒவ்வொன்றாக உணர்ந்து ரசித்து பாராட்டியிருந்தால் ரொம்பவும் சிறப்பாக இருந்திருக்கும். அதை விட்டு விட்டு அந்த முன் எச்சரிக்கை பேர்வழி இதையெல்லாம் செய்திருந்தால் இப்படி ஏற்பட்டிருக்காது என்று 'பிரிஸ்கிரிப்ஷன்' கொடுத்தால் எப்படி?..

ஆக, கதையின் போக்கை கதையின் போக்கிலேயே ரசிக்க வேண்டும். அந்த ரசனையை விமரிசனமாக்க வேண்டுமே தவிர அந்தக் கதையை அல்ல.  கதையின் கருவை எடுத்துக் கொண்டு அலசோ அலசோ என்று அலசக் கூடாது.  அப்படி அலசுவதற்கென்று சில பிரச்னை கதைகள் இருக்கின்றன.  சமூக மாற்றங்களுக்காகவும் மாறுபட்ட சிந்தனைகளுக்காகவும் இலட்சிய வேட்கையோடு எழுதப்படுகின்ற கதைகள்.

கோபு சாரின் கதைகளோ பெரும்பாலும் நமது நடைமுறை வாழ்க்கை அவலங்களை, அலட்சிய போக்குகளை, கோணல் மாணல்களை, குடும்பப் போக்குகளை சித்திரமாக்குகின்ற நகைச்சுவை தூக்கலாக இருக்கின்ற கதைகள்.  படிப்பவர்களை ரொம்பவும் சிரமப்படுத்தாத கதைகள்.  பெரும் பாலும் நான்கு வரிக் கதைகள்.   இந்த நான்கு வரிக் கதையையும் மறுபடியும் பல வரிகளில் எடுத்துச் சொன்னால் எப்படி?.. அந்த நான்கு வரிக் கதையை நான்கு பக்கங்களுக்கு நாம் ரசிக்கிற மாதிரி அவர் எப்படி எழுதியிருக்கிறார் என்பதே அவரின் சிறப்பு. அந்தச் சிறப்பை/சிறப்பின்மையை விமரிசனமாய்ச்  சொல்வதே நம் எதிர்பார்ப்பு. 


கதையின் நிகழ்வுகளில் கோபு சார் இழைத்திருக்கும் நகாசு வேலைகளைப் பற்றிச் சொல்லுங்கள்.  உங்களை மயக்கும் சொக்குப் பொடி தூவல்களைப் பற்றிச் சொல்லுங்கள். 'குபுக்'கென்று சிரிப்பை வரவழைக்கும் அவர் திறமையை நீங்களும் சிரித்தபடியே சிலாகியுங்கள்.

அது தானே வேண்டும்?.. அது தானே தேர்வாகும் தகுதிக்கான சுலபவழி?.. ஆக, இனி அவரின் கதையையே மறுபடியும் நீங்கள் வர்ணித்து ஊடே ஊடே விமரிசன வரிகளைச் சேர்க்க வேண்டாம்.  அப்படி எழுதித்தான் உங்களுக்குப் பழக்கம் என்றால் மாற்றி எழுதிப் பார்த்தீர்களானால் உங்கள் விமரிசன எழுத்தை நீங்களே ரசிக்கிற வாய்ப்பு வாய்க்கலாம். 'எழுதுகிற எதுவும் யாருக்காகவும் அல்ல; தனக்காக; தன் சுயரசனைக்காக' என்கிற எண்ணம் முழுசாய் நம்மை மூழ்கடிக்கிற பொழுது எழுத்தும் வசப்படும்.  முடியாதது எதுவுமே இல்லை;  நாம் முயல வேண்டும். அவ்வளவு தான்.  

அடுத்தாற் போல் கோபு சார் தன் கதைப் பதிவுகளின் இடையே எங்கிருந்தெல்லாமோ உருவி எடுத்துப் போடும் படங்களைப் பற்றி. அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற்   போல் அவர் பதிக்கும் சித்திரங்களைப் பாராட்டி பல வரிகள் விமரிசனத்திற்கு ஊடே.   கோபு சாரின் எழுத்தைப் பற்றி எழுதுவதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்றால் தான் நீங்கள் சித்திரங்களுக்குப் போக வேண்டும்.  இந்த சித்திரங்கள் இல்லாமல் ஒரு புத்தகத்தில் கோபு சாரின் கதைகள் இருந்து அதைப் படித்தால் எப்படி விமர்சிப்பீர்களோ, அப்படி விமரிசனம் செய்யுங்கள். ஒன்று தெளிவாக வேண்டும் நமக்கு.   அந்த படங்கள் தகுந்த இடத்தில் தகுந்த படமாக அமைத்தது நமது வாசிப்புணர்வை மேம்படுத்தவே.

அவற்றை ரொம்பவும் ரசித்தீர்களென்றால், அவை இல்லாமல் இவர் எழுத்து இல்லை என்று ஆகிப்போகும்.  அந்தக் கோணத்தில் கோபு சாரின் கதைகளை ரசிப்பது ஆகச்சிறந்த ஒரு எழுத்தாளரை நாம் குறைத்து மதிப்பீடு செய்தவர்களாய் ஆகிப்போவோம்.  அதனால் படங்களைப் பற்றி அடக்கி வாசிப்போம்;  அறவே வேண்டாம் என்றாலும் சரியே.

எதையாவது எடுத்துக் காட்டாக எழுதி (பொதுவாக பலர் திரைப்படப் பாடல்கள்) கதைகளை விமரிசிக்கிறார்கள்.  விமரிசனத்திற்காகவோ, விமரிசன ரசனையின் மேம்பாட்டுக்காகவோ திரைப்பாடல்களும் உள் நுழைகின்றன.  அப்படி நுழையும் பொழுது எதற்காக எது என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும்.  கதைக்காக பாடலா, பாடலுக்காக கதையா என்கிற தெளிவு வேண்டும்.  இது இவர் கதைகளைப் பற்றி விமரிசனப் பகுதியாதலால் இவர் கதைப்போக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பதே முக்கியமாகிப் போகும்.  இவரும் அந்தந்த திரைப் பாடல்களை நினைவில் கொண்டு அந்தந்த கதைகளை எழுதவில்லை என்பதும் நம் நினைவில் நீங்காது இருக்க வேண்டும். இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் அந்தந்த திரைப்பாடல்களிலிருந்து தனியே கோபு சாரின் கதைகளைப் பிரித்துப் பார்த்து கோபு சாரின் கதைகளை ரசிக்கிற பக்குவம் கொள்ள வேண்டும்.

அடுத்து சிலரது விமரிசனக் கட்டுரைகளில் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகள்.  சொல்லப் போனால் இவ்வளவு தேர்ச்சியுடன் எழுதிப் பரிசு பெறுபவர்கள் எழுத்துப் பிழைகளுடன் எழுதக் கூடியவர்கள் அல்லர். அப்படியான  பிழைகளுக்குக் காரணம் அவசரகதியில் திருப்பிப் படித்துப் பார்க்கக்கூட  நேரமில்லாமல் கட்டுரைகளை அனுப்புவதாகத் தான் இருக்க வேண்டும்.  பல்வேறு பணிகளுக்கிடையே இதுவும் ஒன்றாக இருப்பதைத் தவிர்த்து பல்வேறு பணிகளில் இதையும் ஒன்றாக அமைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் கோபு சாருக்கு இதுவே உங்களிடம் எதிர்ப்பார்க்கும் ஒன்றாக அமைந்து அதற்கு பரிசளித்து தானும் ஆனந்தப்பட வேண்டும்  உங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்கிற ஆசை இருப்பதினால்.

எழுதியதை  திருப்பிப் படித்தல் என்பது ஒரு நல்ல அனுபவம்.  மறுபடியும் படித்துப் பார்க்கும் பொழுது தான் இடையில் இன்னொரு கருத்தைச் சேர்க்கலாமே என்று தோன்றும்.  எழுதியது போதாது என்றால் மேலும் எழுதுவதற்கு ஏதாவது கிடைக்காதா என்று தேடச் சொல்லும்.. பிழைகளைத் திருத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லாவற்றையும் விட நாம் எழுதியதை நாமே திருப்பிப் படிக்கையில் மனதிற்கு ஒரு நிறைவு ஏற்பட்டு நம்மை நாமே பாராட்டிக் கொள்ளத் தோன்றும். அந்த பாராட்டு கிடைக்கிற வரை ஏதோ குறை இருப்பதாகவே மனசு நினைக்கும்.  ஆனால் நிறைவும் திருப்தியும் கிடைத்து விடுகிற தருணம் இருக்கிறதே, ஆயிரம் பொன் கிடைத்தாலும் கிடைக்காத மன சந்துஷ்டி இது.  பொருளாதார சுகத்தால் கிடைக்காத ஆரோக்கியத்தை இந்த திருப்தி மனசுக்கு அளிக்கும். 


ஒரு தடவை கோபு சார் சொல்லியிருப்பது  நினைவுக்கு வருகிறது.  'தேர்வாகும் இந்த விமரிசனங்களை புத்தகமாகக் கூட நான் போடலாம்' என்று எப்பவோ சொன்னது நினைவுக்கு வருகிறது.  'லாம்' தான்; இருந்தாலும் நினைத்துப் பாருங்கள்.   பதிவு என்பதால், பதிவுப் போட்டி என்பதால் மனம் போன போக்கில் எந்த வார்த்தையோ, என்ன வரியோ என்று எல்லாமே அமைகிறது.

இந்த எழுத்துக்களே புத்தக உருக்கொண்டால் எப்படியிருக்கும்?.. நினைத்துப் பாருங்கள்.  

அப்படிப் புத்தகமாக பிரசுரித்தால் அதற்கு தகுதி பெறும் அளவில் உங்கள் விமரிசன எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

இது தான் சிறப்பான தேர்வு என்று தனியாக எதுவும் இல்லை;  போட்டிக்கு வரும் கட்டுரைகளிலிருந்து தான் சிறப்பு தேர்வு பெற வேண்டும். கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

பதிவுலகில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட எழுத்தில் கொள்ளாத சிறப்பு சேரவேண்டும் என்பதற்காக இவற்றையெல்லாம் குறிப்பிடத் தலைப்பட்டேன்.

நிறைய  எதிர்பார்ப்பும் இருக்கிறது.  வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நடுவர்  
 


Dear Sir / Madam,

THANK YOU VERY MUCH FOR SHARING YOUR 
VERY VALUABLE VIEWS.

பிரியமுள்ள கோபு  [ VGK ]

    
 ’தனக்குத்தானே நீதிபதி’  

போட்டியில்
பரிசு வென்றவர்கள் 
பற்றிய அறிவிப்பு

போட்டிக்கான இணைப்பு:

மேற்படி போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நீதிபதிகளுக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

’VGK-26 பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா’ 
என்ற நகைச்சுவைக் கதைக்கு வந்து குவிந்திருந்த ஏராளமான விமர்சனங்களில் உயர்திரு நடுவர் அவர்களால் பல கட்ட வடிகட்டலுக்குப்பின்பு, 
இறுதியாக ஐந்து விமர்சனதாரர்களுக்கு மட்டும் பரிசளிக்க வேண்டி, 
ஒன்பது விமர்சனங்களை தேர்ந்தெடுத்து, 
மேலும் அதில் நான்கை வடிகட்ட வேண்டிய நிலையில் 
இந்தப்போட்டி நடுவர் அவர்களின் ஒப்புதலோடு என்னால் அறிவிக்கப்பட்டிருந்தது.


கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது விமர்சனங்களில்
முதல் பரிசு  இருவருக்கு, 
இரண்டாம் பரிசு இருவருக்கு
 மூன்றாம் பரிசு ஒருவருக்கு 
என ஆகமொத்தம் ஐந்து பரிசுகளைத்
தேர்வு செய்வதற்கான போட்டி என
அனைத்துப்பதிவர்களும், வாசகர்களும் 
கலந்துகொள்ளும் விதமாக 
அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப்புதுமையான போட்டிக்கான 
பரிசுத்தொகை ரூ. 300 என்றும்
இதை யார் வேண்டுமானாலும் சுலபமாக 
வெல்ல முடியும் எனவும் அறிவித்திருந்தோம்.

தில் நாம் அறிவித்திருந்த ஒரே நிபந்தனை...
நீதிபதியாகிய தங்களின் தீர்ப்பு
தலைமை நீதிபதியாகிய உயர்திரு நடுவர் அவர்களின்
இறுதித்தீர்ப்புடன் எல்லாவிதத்திலும் 
100% பொருத்தமாக அமைய வேண்டும் என்பது மட்டுமே.

ஒருவருக்கு மேற்பட்டவர்களால் மிகச்சரியான தீர்ப்புகள் 
வழங்கப்பட்டிருந்தால் பரிசுத்தொகை சமமாகப் பிரித்தளிக்கப்படும் 
எனவும் சொல்லியிருந்தோம்.

தன்படி இந்தப்போட்டியில் கீழ்க்கண்ட மூன்று நபர்கள் மட்டுமே 
தங்களின் தீர்ப்பு உயர்திரு நடுவர் அவர்களின் இறுதித்தீர்ப்புடன் 
100% பொருத்தமாக அமையும் விதமாக எழுதி அனுப்பியுள்ளனர்.
மொத்தப்பரிசுத்தொகை இந்த மூவருக்கும் 
சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.
[ 1 ]


 திருமதி ராதாபாலு அவர்கள்
http://enmanaoonjalil.blogspot.com/
[ என் மன ஊஞ்சலில்..! ]


[ 2 ]


 திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
http://jaghamani.blogspot.com/
[ மணிராஜ் ][ 3 ]


 திரு.  சுந்தரேசன் கங்காதரன் அவர்கள்
ASST. EXECUTIVE ENGINEER, T.N.E.B., 
[இவருக்கு தற்சமயம் வலைத்தளம் ஏதும் இல்லை]மூவருக்கும் நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


    மேலும் ஒரே ஒருவருக்கு மட்டும் 

கூடுதலாக ஊக்கப்பரிசாக 


ரூ. 50 வழங்கிட விரும்புகிறேன்.


இவரின் தீர்ப்பு மட்டும் நடுவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

அதே ஐந்து வெற்றியாளர்களின் விமர்சனங்களையே 

பிரதிபலிப்பதாக இருந்தும்கூட

முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வகைப்படுத்தியுள்ளதில் 

சற்றே வித்யாசத்துடன் அமைந்து போய் உள்ளது. 


இவர் அளித்துள்ள தீர்ப்பு:

 VGK 26002 + VGK 26003 for First Prize

VGK 26010 + VGK 26009 for Second Prize

VGK 26007 for Third Prize


 உயர்திரு நடுவர் அவர்களின் இறுதித் தீர்ப்போடு

இவரின் தீர்ப்பினை ஒப்பிடும்போது 


VGK 26002 மற்றும் VGK 26010 ஆகிய இரண்டு மட்டுமே 


ஒன்றின் இடத்தில் மற்றொன்றாக மாறி அமைந்துள்ளது.எனினும் இவருடைய முயற்சியினையும், 
கருத்துக்கணிப்பினையும், தீர்ப்பினையும் 
நான் மிகவும் உளமாற பாராட்டி மகிழ்கிறேன்.


இந்த ஊக்கப்பரிசினைப் பெறுபவர்:

கவிஞர் கணக்காயன் என்கிற

திருவாளர் இ.சே. இராமன் ஐயா அவர்கள்

kanakkaayan.blogspot.com 


தங்களுக்கு என் மனம் நிறைந்த 
பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஐயா.
- vgk

    
அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு: VGK-28 வாய் விட்டுச் சிரித்தால் .... 


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


31.07.2014
இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்
    

62 comments:

 1. நடுவரின் யோசனைகள் பிரமாதம். விமர்சனம் எழுதுபவர்களுக்குச் சொல்லப் பட்ட யோசனைகள்தான். ஆனால் நுண்ணியமாகப் பார்க்கும்போது எழுதுவோருக்கும் அதில் டிப்ஸ் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்;தெரிந்து கொண்டேன்.

  விமர்சனம் செய்கிறேன் என்று தனக்குத் தெரிந்த எல்லா சப்ஜெக்டையும் அதில் புகுத்த நினைக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் நடுவர் சொல்லியிருக்கும் ஒத்த திரைப்படப் பாடல்களைச் சொல்லும் முயற்சி.

  யானை மறைந்து நின்றாலும் காட்டிக் கொடுக்கும் தும்பிக்கைகள் சில நேரம்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்.July 29, 2014 at 6:13 AM

   வாங்கோ ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ ! தங்களின் அபூர்வ முதல் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது, அந்த சாக்ஷாத் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே நேரில் வந்தது போல ;)

   //நடுவரின் யோசனைகள் பிரமாதம். விமர்சனம் எழுதுபவர்களுக்குச் சொல்லப் பட்ட யோசனைகள்தான். ஆனால் நுண்ணியமாகப் பார்க்கும்போது எழுதுவோருக்கும் அதில் டிப்ஸ் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்; தெரிந்து கொண்டேன்.//

   கற்றாரைக் கற்றாரே ........... என ஏதோ சொல்லுவார்கள்.

   //விமர்சனம் செய்கிறேன் என்று தனக்குத் தெரிந்த எல்லா சப்ஜெக்டையும் அதில் புகுத்த நினைக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் நடுவர் சொல்லியிருக்கும் ஒத்த திரைப்படப் பாடல்களைச் சொல்லும் முயற்சி.//

   யார் யாருக்கு என்னென்ன சப்ஜெக்ட் பற்றித்தெரியுமோ, எதில் நாட்டம் அதிகமோ அதையே ஒருவேளை எழுதி வருகிறார்களோ ?

   //யானை மறைந்து நின்றாலும் காட்டிக் கொடுக்கும் தும்பிக்கைகள் சில நேரம்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதில் ஏதோ பொடி வைத்துள்ளதாக நம் வல்லியம்மா சொல்லியிருக்காங்கோ ஸ்ரீராம். அப்படியா ? தயவுசெய்து விளக்கவும்.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 2. ஒர் விமர்சனம் சிறப்பாக, வித்யாசமாக, கதையை விட்டு விலகாமல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை அழகாக எடுத்துச் சொன்ன நடுவர் அவர்களுக்கு நன்றி.

  எழுதும் விமரிசனம் நடுவரின் எதிர்பார்ப்பில் எள்ளளவேனும் இருக்க வேண்டுமே என்ற பொறுப்பும் கூடுகிறது.

  நீதிபதிப் போட்டியில் என்னுடைய தேர்வு பரிசுக்கு தேர்வாகி இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

  இது போன்ற சிறப்பான போட்டியை வைத்து, பரிசுகளையும் அள்ளித் தரும் திரு கோபு ஸார் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

  போட்டி விரைவில் முடிந்து விடுமே என்ற ஏக்கம் இப்பொழுதே ஏற்பட்டு விட்டது!

  ReplyDelete
  Replies
  1. Radha Balu July 29, 2014 at 9:31 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஒர் விமர்சனம் சிறப்பாக, வித்யாசமாக, கதையை விட்டு விலகாமல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை அழகாக எடுத்துச் சொன்ன நடுவர் அவர்களுக்கு நன்றி.//

   அவர் அழகாகச் சொன்னதை மேலும் அழகாக இங்கு எடுத்துச்சொல்லியுள்ள தங்களுக்கு நடுவர் அவர்கள் சார்பில் என் நன்றிகள்.

   //எழுதும் விமரிசனம் நடுவரின் எதிர்பார்ப்பில் எள்ளளவேனும் இருக்க வேண்டுமே என்ற பொறுப்பும் கூடுகிறது.//

   ஆஹா, எள்ளளவு மட்டுமா ? இல்லை... இல்லை... ஏராளமாகவே எதிர்பார்க்கிறார்... குறிப்பாக மிக அருமையான + பிரபலமான பத்திரிகை எழுத்தாளராகிய உங்களிடமிருந்து ;)

   உங்களைப்பற்றி நிறையவே அவரிடம் சொல்லியிருக்கிறேன் ..... நம்மூர்க்காரர் ஆச்சே என்று. ;)

   //நீதிபதிப் போட்டியில் என்னுடைய தேர்வு பரிசுக்கு தேர்வாகி இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. //

   எனக்கும் இதில் உங்களைவிட மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

   //இது போன்ற சிறப்பான போட்டியை வைத்து, பரிசுகளையும் அள்ளித் தரும் திரு கோபு ஸார் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.//

   வார்த்தைகள் எதற்கு? வரிகளாக, வாக்கியங்களாக, பத்திகளாக, பக்கம் பக்கமாக, ருசியோ ருசியாக விமர்சனம் எழுதி அனுப்புங்கோ, போதும்.

   //போட்டி விரைவில் முடிந்து விடுமே என்ற ஏக்கம் இப்பொழுதே ஏற்பட்டு விட்டது!//

   அடடா, என்னவொரு வாத்ஸல்யமான வார்த்தைகள் !!!!

   நான் போட்டி நடத்த ஆரம்பித்த நேரத்தில் பார்த்துதான் தங்களுக்கு மேலும் மேலும் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப்பயணங்களாக அடுத்தடுத்து அமைந்து படுத்தி வருகிறது. என்ன செய்ய !

   எப்படியும் ‘அவன் போட்ட கணக்கு’ தப்பப்போவது இல்லை.

   மேலும் இருக்கும் ஒருசில வாய்ப்புகளையாவது நழுவ விடாதீர்கள். ஒவ்வொரு வாரமும் JUST ஒரு மணி நேரம் கோபுவுக்காக ஒதுக்குங்கோ போதும். உங்களின் எழுத்துத்திறமைகளுக்கு அதுவே [ஒரு மணி நேரம் என்பதே] மிகவும் ஜாஸ்தியாக்கும்.

   எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் கூட NET தொடர்பு கிடைக்குமே. நம்ம ஊரைவிட அங்கெல்லாம் மிகச்சுலபமாகக் கிடைக்குமே.

   அன்பு வருகைக்கும் புலிவால் போல நீண்ட உறுதியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 3. //அவற்றையெல்லாம் தேடித்தேடிப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய சிரமத்தைக் கூட விமர்சகர்களுக்கு வைக்காமல் ஒரே பதிவில் எல்லாவற்றையும் ஒரு சேர அடக்கி சமீபத்தில் கோபு சார் கொடுத்திருந்தது, [ http://gopu1949.blogspot.in/2014/07/tips-suggestions-for-winning.html ] எந்த அளவுக்கு சிறப்பாக தன் கதைகளைப் பலரின் விமரிசனங்களுக்கு உட்படுத்த வேண்டும் என்கிற அவரது ஆவலைச் சொல்வதாக அமைந்திருந்தது.//
  உண்மையிலேயே அந்தப் பதிவு விமர்சனம் எழுதுவது எப்படி? என்பதை அருமையாக விளக்கிய பதிவு. தொகுத்து வெளியிட்ட திரு வை.கோ ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. July 29, 2014 at 10:30 AM

   வாங்கோ ... வணக்கம்.

   *****அவற்றையெல்லாம் தேடித்தேடிப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய சிரமத்தைக் கூட விமர்சகர்களுக்கு வைக்காமல் ஒரே பதிவில் எல்லாவற்றையும் ஒரு சேர அடக்கி சமீபத்தில் கோபு சார் கொடுத்திருந்தது, [ http://gopu1949.blogspot.in/2014/07/tips-suggestions-for-winning.html ] எந்த அளவுக்கு சிறப்பாக தன் கதைகளைப் பலரின் விமரிசனங்களுக்கு உட்படுத்த வேண்டும் என்கிற அவரது
   ஆவலைச் சொல்வதாக அமைந்திருந்தது.*****

   //உண்மையிலேயே அந்தப் பதிவு விமர்சனம் எழுதுவது
   எப்படி? என்பதை அருமையாக விளக்கிய பதிவு. தொகுத்து
   வெளியிட்ட திரு வை.கோ ஐயா அவர்களுக்கு என்
   உளமார்ந்த பாராட்டுகள்!//

   எல்லாப்புகழும் நடுவருக்கே.

   தொகுத்தளித்து தனிப்பதிவாக வெளியிட்டது மட்டுமே
   இதில் என் வேலை.

   Delete
 4. //எழுதுகோல் பிடித்த எவரும் பொதுவாக தன் எழுத்துக்களை இன்னொருவர் விமரிசிப்பதை அவ்வளவு பொறுமையுடன் கேட்டு ரசிக்க மாட்டார்கள். இதிலும் கோபு சார் விதிவிலக்காக இருப்பதும், பரிசுகள் வழங்கி மகிழ்வதும் எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.


  வெகு அரிதாகக் காணப்படுகிற, எழுதுகிறவருக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகிற இந்த நல்ல குணம் தான் அவர் வாழ்க்கையிலும் படிந்து அவர் கண்ட பல வெற்றிகளுக்குக் காரணமாகவும் இருக்கலாம். //
  அவரது தனித்துவமே அதுதான். மனம் திறந்து அடுத்தவர் படைப்பைப் பாராட்டுவதிலும் அவர் உயர்ந்து நிற்கிறார். தொடரட்டும் அவரது படைப்புகள் வலையுலகிற்கு விருந்தாக!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. July 29, 2014 at 10:37 AM

   *****எழுதுகோல் பிடித்த எவரும் பொதுவாக தன் எழுத்துக்களை இன்னொருவர் விமரிசிப்பதை அவ்வளவு பொறுமையுடன் கேட்டு ரசிக்க மாட்டார்கள். இதிலும் கோபு சார் விதிவிலக்காக இருப்பதும், பரிசுகள் வழங்கி மகிழ்வதும் எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

   வெகு அரிதாகக் காணப்படுகிற, எழுதுகிறவருக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகிற இந்த நல்ல குணம் தான் அவர் வாழ்க்கையிலும் படிந்து அவர் கண்ட பல வெற்றிகளுக்குக் காரணமாகவும் இருக்கலாம்.*****

   //அவரது தனித்துவமே அதுதான். மனம் திறந்து அடுத்தவர் படைப்பைப் பாராட்டுவதிலும் அவர் உயர்ந்து நிற்கிறார்.//

   தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி. நான் சென்று படித்துவரும் வலைத்தளங்களே மிகமிகக்குறைவு தான். என் பதிவுக்கு ஒருவர் வருகை தந்துள்ளார் என்பதற்காக உடனடியாக அவரின் பதிவுக்கு ஓடிப்போய் கருத்தளிப்பவன் நான் அல்ல. எனக்கு அதற்கெல்லாம் நேரமும் இருப்பது இல்லை. விருப்பமும் இருப்பது இல்லை.

   நிலத்தடி நீர் கிடைக்க நாம் ஒரே இடத்தில் அல்லது ஒருசில இடங்களில் மட்டுமே தோண்டிக்கொண்டே செல்ல வேண்டும். அப்போது தான் வாய்க்கு ருசியான தண்ணீர் குடிக்க நமக்குக் கிடைக்கும். அதுபோலவே வலைத்தளங்களிலும், ஒருசில குறிப்பிட்ட நம் மனதுக்கு இதமான, நல்ல விஷயங்களை நயம்படச்சொல்லும் பதிவுகள் பக்கம் மட்டுமே நான் செல்வதாக கொள்கை வகுத்துக்கொண்டுள்ளேன்.

   சும்மாவாவது தினமும் நூற்றுக்கணக்கான பதிவுகள் பக்கம் [கோயில் மாடு போல] மேய்ந்து, அந்தப்பதிவுகளை முழுவதும் படித்து மனதில் வாங்கிக்கொள்ளாமல் ஏனோ தானோ என்று கருத்தளிப்பதில் யாருக்கு என்ன பயன் ஏற்பட முடியும்?

   மொய்க்கு மொய் தேவைப்படுபவர்களே, வோட் தேவைப்படுபவர்களே இதுபோன்ற வேலைகளில் பொதுவாக இறங்குகிறார்கள். எனக்கோ மொய்க்கு மொய்யும் வேண்டாம், வோட்டும் வேண்டாம்.

   //தொடரட்டும் அவரது படைப்புகள் வலையுலகிற்கு விருந்தாக!//

   மிக்க நன்றி. உண்மையாக வாசிக்கும் பசியுடன் என்னிடம் வருபவர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்க வேண்டும் என்பதே என் ஆசையும் கூட.

   Delete
 5. //அடுத்தாற் போல் கோபு சார் தன் கதைப் பதிவுகளின் இடையே எங்கிருந்தெல்லாமோ உருவி எடுத்துப் போடும் படங்களைப் பற்றி. அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற் போல் அவர் பதிக்கும் சித்திரங்களைப் பாராட்டி பல வரிகள் விமரிசனத்திற்கு ஊடே. கோபு சாரின் எழுத்தைப் பற்றி எழுதுவதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்றால் தான் நீங்கள் சித்திரங்களுக்குப் போக வேண்டும். இந்த சித்திரங்கள் இல்லாமல் ஒரு புத்தகத்தில் கோபு சாரின் கதைகள் இருந்து அதைப் படித்தால் எப்படி விமர்சிப்பீர்களோ, அப்படி விமரிசனம் செய்யுங்கள். //

  உண்மைதான்! ஆனால் அவரது படத்தேர்வை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கதைக்கேற்ப, கதாபாத்திரங்களை மனதில் பதியவைக்க, அவர் இணைக்கும் படங்களை எங்கிருந்துதான் தேடிப் பிடிப்பாரோ? என எண்ணவைப்பதால் அதைப்பற்றி விமர்சனத்தில் குறிப்பிடுவது தவிர்க்க இயலாமற்போகிறது!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. July 29, 2014 at 10:41 AM

   *****அடுத்தாற் போல் கோபு சார் தன் கதைப் பதிவுகளின் இடையே எங்கிருந்தெல்லாமோ உருவி எடுத்துப் போடும் படங்களைப் பற்றி. அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற் போல் அவர் பதிக்கும் சித்திரங்களைப் பாராட்டி பல வரிகள் விமரிசனத்திற்கு ஊடே. கோபு சாரின் எழுத்தைப் பற்றி எழுதுவதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்றால் தான் நீங்கள் சித்திரங்களுக்குப் போக வேண்டும். இந்த சித்திரங்கள் இல்லாமல் ஒரு புத்தகத்தில் கோபு சாரின் கதைகள் இருந்து அதைப் படித்தால் எப்படி விமர்சிப்பீர்களோ, அப்படி விமரிசனம் செய்யுங்கள்.*****

   //உண்மைதான்! ஆனால் அவரது படத்தேர்வை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கதைக்கேற்ப, கதாபாத்திரங்களை மனதில் பதியவைக்க, அவர் இணைக்கும் படங்களை எங்கிருந்துதான் தேடிப் பிடிப்பாரோ? என எண்ணவைப்பதால் அதைப்பற்றி விமர்சனத்தில் குறிப்பிடுவது தவிர்க்க இயலாமற்போகிறது!//

   நான் 2011 ஜனவரி முதல் 2011 ஜூன் வரை எழுதி வெளியிட்ட கதைகள் எதிலுமே படங்கள் ஏதும் இணைத்தது கிடையாது. ஏனெனில் படத்தை எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதே எனக்கு அப்போதெல்லாம் தெரியவே தெரியாது.

   இருப்பினும் நடுவர் அவர்கள் சொல்வதுபோல என் படமில்லாக் கதைகளை ரஸித்துப் படித்து ஆதரவாகக் கருத்துச்சொல்லி ஊக்குவித்தவர்கள் ஏராளம்.

   ஒரு பெண் பதிவர்கூட எனக்கு அப்போது கீழ்க்கண்டவாறு மெயில் கொடுத்திருந்தார்:

   ”சார், படமே ஏதும் இணைக்காமலேயே பதிவுகள் வெளியிட்டு வெற்றி பெற்று பல வாசகர்களை தங்கள் பக்கம் இழுத்து வருவதைப்பார்க்க எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது” என எழுதியிருந்தார்.

   பிறகு 01.07.2011 அன்று என் கைக்குழந்தை [அப்போது அவனுக்கு வயது 29] எனக்கு பதிவுகளில் படத்தை எவ்வாறு இணைப்பது என பாடம் கற்றுக்கொடுத்தான். அதன் பிறகே ஆங்காங்கே ஒருசில படங்களை மட்டும் நான் இணைக்க ஆரம்பித்தேன்.

   பொதுவாகவே ஓவியங்கள் வரைவதிலும், ஓவியங்களை ரஸிப்பதிலும் எனக்கு ஆர்வம் உண்டு.

   அதுவும் அசையும் படங்கள் என்றால் [ANIMATION] அதைப் பார்த்து ரஸிப்பது எனக்கு அல்வா சாப்பிடுவதுபோல. அவற்றைக்காணும் போதெல்லாம் நானே ஓர் சின்னக்குழந்தை போல மாறிவிடுவேன்.

   எங்கேயாவது எனக்கு மிகவும் பிடித்தமான ANIMATION படங்கள் கண்களில் தென்பட்டால் அவற்றை எப்படியாவது தனி FILE / FOLDER போட்டு சேமித்து வைத்துக்கொள்வேன்.

   அவற்றை கதைக்குப் பொருத்தமான இடத்தில் சேர்த்து மகிழ்வேன்.

   தாங்கள் இதுசம்பந்தமாகச் சொல்லியுள்ள பதில் கருத்துக்கள் எனக்கு மனதுக்கு நிறைவாகவே உள்ளன.

   Delete
 6. ஒரு சிறந்த விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என எல்லாவகையிலும் விளக்கிய நடுவர் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி! கடினமான இந்தப் பணியைத் திறம்படத் தொடரும் அவருக்கு என் மனம் திறந்த பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. July 29, 2014 at 10:42 AM

   //ஒரு சிறந்த விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என எல்லாவகையிலும் விளக்கிய நடுவர் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி! கடினமான இந்தப் பணியைத் திறம்படத் தொடரும் அவருக்கு என் மனம் திறந்த பாராட்டுகள்!//

   அவருடைய பணி மிகவும் கடுமையானது தான். மிகவும் திறம்படவே செய்து வருகிறார்கள் தான். இதை தங்களைப் போன்ற பலர் புரிந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   உயர்திரு நடுவர் அவர்கள் சார்பில் தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

   Delete
 7. மற்றுமொரு செய்தி. திரு இ.சே.இராமன் (கவிஞர் கணக்காயன்) அவர்கள் என்னுடைய மாமனார்தான். அவருக்கும் ஊக்கப்பரிசளித்து ஊக்குவித்த திரு. வை.கோ ஐயா அவர்களுக்கு என் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. July 29, 2014 at 10:44 AM

   //மற்றுமொரு செய்தி. திரு இ.சே.இராமன் (கவிஞர் கணக்காயன்) அவர்கள் என்னுடைய மாமனார்தான். //

   இந்த செய்தி எனக்கு இதுவரை தெரியாத ஒன்று தான். தாங்களும், தங்கள் மனைவியும், தங்கள் பெண்ணும் ஆக குடும்பத்தில் உள்ள மூவருமே என் கதைகளுக்கு அவ்வப்போது விமர்சனம் எழுதுபவர்களாக இருக்கிறீர்கள் என்று மட்டும் மகிழ்ச்சியாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

   மாமனாரும் ஒரு எழுத்தாளர் + பதிவரா? மிக்க மகிழ்ச்சி.

   //அவருக்கும் ஊக்கப்பரிசளித்து ஊக்குவித்த திரு. வை.கோ ஐயா அவர்களுக்கு என் நன்றி!//

   அவரின் ‘கணக்காயன்’ என்ற புனைப்பெயர் போலவே கணக்குத்தப்பாமல் ஓரளவுக்கு 5 விமர்சனங்களையும், நடுவர் அவர்களின் தேர்வை ஒட்டியே கொண்டு வந்துள்ளார்.

   இவரைப்போலவே ஓரளவு 5க்கு 5 வேறு யாருமே யூகிக்க வில்லை. பரிசுக்கான வகைப்படுத்தலில் மட்டுமே மிகச் சிறிய சறுக்கல் நிகழ்ந்துள்ளது. மற்றவர்களில் நிறைய பேர்கள் 4 விடைகள் வரை சரியாக யூகித்துள்ளனர்.

   பொதுவாகவே எனக்கு 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் + சுமார் 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண் ஆகியோரிடமும் பேசவும் பழகவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் மிகவும் பிடிக்கும். அவர்கள் அனுபவமும், இந்த உலகத்தை அவர்கள் பார்க்கும் பார்வையும் மிகவும் வித்யாசமாக அழகாக இருக்கும்.

   அதனாலும் நான் இவருக்கு ஒரு ஸ்பெஷல் பரிசளிக்க விரும்பினேன். போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ள அவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

   Delete
 8. அன்பின் வை.கோ

  அயராத உழைப்பு - ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் செலவிடும் நேரம் - பிரமிக்க வைக்கிறது - நடுவரின் நீண்டதொரு பதிவு - அறிவுரைகளை அள்ளி வீசி இருக்கிறார். அனைத்துமே பாராட்டுக்குரியவை - கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் - வெற்றி பெற்ற ஐவருக்கும், போட்டியினை நடத்திய வை,கோவிற்கும், நடுவர் அவர்களுக்கும் - கலந்து கொண்டு மகிழ்ந்து - துரதிருஷ்ட வசமாக பரிசுகள் பெறாமல் போனவர்களுக்கும் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 9. அன்பின் வை.கோ

  அயராத உழைப்பு - ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் செலவிடும் நேரம் - பிரமிக்க வைக்கிறது - நடுவரின் நீண்டதொரு பதிவு - அறிவுரைகளை அள்ளி வீசி இருக்கிறார். அனைத்துமே பாராட்டுக்குரியவை - கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் - வெற்றி பெற்ற ஐவருக்கும், போட்டியினை நடத்திய வை,கோவிற்கும், நடுவர் அவர்களுக்கும் - கலந்து கொண்டு மகிழ்ந்து - துரதிருஷ்ட வசமாக பரிசுகள் பெறாமல் போனவர்களுக்கும் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா) July 29, 2014 at 2:09 PM
   //அன்பின் வை.கோ //

   வாருங்கள் என் அன்பின் சீனா ஐயா அவர்களே !
   தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

   //அயராத உழைப்பு - ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் செலவிடும் நேரம் - பிரமிக்க வைக்கிறது - நடுவரின் நீண்டதொரு பதிவு - அறிவுரைகளை அள்ளி வீசி இருக்கிறார். அனைத்துமே பாராட்டுக்குரியவை - கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் -//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   // வெற்றி பெற்ற ஐவருக்கும்,//

   வெற்றி பெற்றுள்ளவர்கள் மொத்தமே 3+1=4 [நான்கு] நபர்கள் மட்டுமே ஐயா. அவசரத்தில் தாங்கள் கவனிக்கவில்லை போலும். அதனால் பரவாயில்லை.

   //போட்டியினை நடத்திய வை,கோவிற்கும், நடுவர் அவர்களுக்கும் - கலந்து கொண்டு மகிழ்ந்து - துரதிருஷ்ட வசமாக பரிசுகள் பெறாமல் போனவர்களுக்கும் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - நட்புடன் சீனா//

   அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

   அன்புடன் VGK

   Delete
 10. நடுவரின் கட்டுரையே அருமையாக அமைந்திருக்கிறது. எழுதுவது எப்படி என்று ஒரு நூலே அவர் எழுதலாம்.விமர்சிப்பது என்றும் இன்னோரு நூல் வரலாம். மிக நன்றி கோபு சார். இந்த மாதிரி ஒரு அற்புதமான கதைப் போட்டிகள்,விமரிசனப் போட்டிகள் என்று குவிக்கும் உங்கள் ஆதர்ச குணத்தை வியக்காமல் இருக்க முடிய வில்லை. நடுவர் யானை ரசிகரா, இல்லை பிள்ளையார் பெயர் கொண்டவரா என்று யூகிக்க வைக்கிறது ஸ்ரீராமின் பின்னூட்டம்.

  ReplyDelete
  Replies
  1. வல்லிசிம்ஹன் July 29, 2014 at 5:32 PM

   வாங்கோ வணக்கம். நமஸ்காரம். தங்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

   //நடுவரின் கட்டுரையே அருமையாக அமைந்திருக்கிறது. எழுதுவது எப்படி என்று ஒரு நூலே அவர் எழுதலாம். விமர்சிப்பது என்றும் இன்னோரு நூல் வரலாம்.//

   மிகச்சரியாக வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

   //மிக நன்றி கோபு சார். இந்த மாதிரி ஒரு அற்புதமான கதைப் போட்டிகள்,விமரிசனப் போட்டிகள் என்று குவிக்கும் உங்கள் ஆதர்ச குணத்தை வியக்காமல் இருக்க முடிய வில்லை. //

   மிக்க நன்றி ! ... நன்றி !! ... நன்றி !!!

   //நடுவர் யானை ரசிகரா, இல்லை பிள்ளையார் பெயர் கொண்டவரா என்று யூகிக்க வைக்கிறது ஸ்ரீராமின் பின்னூட்டம்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   இதற்கு நம் ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ தான் தகுந்த பதில் அளிக்க வேண்டும். அவரிடமிருந்து தும்பிக்கைபோல பதில் வரும் என்று நாமும் நம்பிக்கை வைத்துக் காத்திருப்போம். ;)

   பிரியமுள்ள கோபு

   Delete
 11. விமர்சனத்தின் இலக்கணமாகக் கட்டுரை அமைந்துள்ளது. படிக்க,புரிந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் அடங்கிய கட்டுரை. பரிசு பெற்ரவர்களுக்கு நல் வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. Kamatchi July 29, 2014 at 5:36 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரம்.

   //விமர்சனத்தின் இலக்கணமாகக் கட்டுரை அமைந்துள்ளது. படிக்க,புரிந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் அடங்கிய கட்டுரை. பரிசு பெற்றவர்களுக்கு நல் வாழ்த்துகள். அன்புடன்//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கு நல்வாழ்த்து சொல்லி ஆசீர்வதித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 12. மிக மிக பயனுள்ள அற்புத வழிகாட்டுதல்! அதுவும் சில குறிப்புகள் எனக்காகவே சொல்லப்பட்டதைப்போல இருந்தது! இந்த குறிப்புகள் எல்லாம் விமர்சிப்பவர்களுக்கு மட்டுமல்ல போட்டிக்கும் 'பலம்'தான்! என்னைபோன்ற இலுப்பைப்பூ வெற்றியாளனும் சர்க்கரையாக மாட்டானா என்ற எண்ணம் மிகச்சரியே! கரும்பு போன்ற கதைகளைப்படைத்து அதை விமர்சிக்க கூலியும் கொடுத்து மகசூலை அதிகப்படுத்திக்கொள்ள அதற்கு நடுவரை வைத்தே ஆலோசனையும் வழங்கி...! அடேங்கப்பா பிரம்மிக்கவைக்கிறது! அன்பின் வைகோ மற்றும் நடுவர் அவர்களின் எல்லோரும் வளரவேண்டும் என்ற மிக உயர்ந்த எண்ணத்திற்கும் பெருந்தன்மைக்கும் ஹேட்ஸ் ஆப்! 5/9 போட்டியில் வெற்றி பெற்ற சகோதரியர் இருவருக்கும், புது வெற்றியாளர் சுந்தரேசன் கங்காதரன் அவர்களுக்கும் (என்ன ஒரு போஸ்!!) எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! கவிஞர் கணக்காயர் அவர்களே! வாங்க! புதுக் கணக்க துவங்கியாச்சா? கலக்குங்க! வாழ்த்துக்கள்! அன்புடன் உங்கள் MGR

  ReplyDelete
  Replies
  1. RAVIJI RAVI July 29, 2014 at 6:28 PM

   வாங்கோ வாத்யாரே ! வணக்கம்.

   //மிக மிக பயனுள்ள அற்புத வழிகாட்டுதல்! அதுவும் சில குறிப்புகள் எனக்காகவே சொல்லப்பட்டதைப்போல இருந்தது!//

   அடடா ! பாத்தீங்களா உங்களிடம் கொஞ்சநாட்கள் பழகியதற்குள் எனக்கும் ‘வாத்யார்’ என்ற சொல் பழகிப்போயிடுச்சு. இதைத்தான் நடுவர் அம்மா/ஐயா அவர்களும் வேண்டாம் என்று சொல்கிறார் போலிருக்கு.

   //இந்த குறிப்புகள் எல்லாம் விமர்சிப்பவர்களுக்கு மட்டுமல்ல போட்டிக்கும் 'பலம்'தான்! //

   ஆமாம் வாத்யாரே ;) ஸாரி. ஆமாம் ரவிஜி அவர்களே !

   //என்னைபோன்ற இலுப்பைப்பூ வெற்றியாளனும் சர்க்கரையாக மாட்டானா என்ற எண்ணம் மிகச்சரியே! கரும்பு போன்ற கதைகளைப்படைத்து அதை விமர்சிக்க கூலியும் கொடுத்து மகசூலை அதிகப்படுத்திக்கொள்ள அதற்கு நடுவரை வைத்தே ஆலோசனையும் வழங்கி...! அடேங்கப்பா பிரம்மிக்கவைக்கிறது! அன்பின் வைகோ மற்றும் நடுவர் அவர்களின் எல்லோரும் வளரவேண்டும் என்ற மிக உயர்ந்த எண்ணத்திற்கும் பெருந்தன்மைக்கும் ஹேட்ஸ் ஆப்! //

   நன்றி ! நன்றி !! நன்றி !!!

   கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ........
   அவன் யாருக்காகக் கொடுத்தான் ?
   ஒருத்தருக்காக் கொடுத்தான்? ...
   இல்லை ..... ஊருக்காகக் கொடுத்தான்.

   //5/9 போட்டியில் வெற்றி பெற்ற சகோதரியர் இருவருக்கும், புது வெற்றியாளர் சுந்தரேசன் கங்காதரன் அவர்களுக்கும் (என்ன ஒரு போஸ்!!) எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! கவிஞர் கணக்காயர் அவர்களே! வாங்க! புதுக் கணக்க துவங்கியாச்சா? கலக்குங்க! வாழ்த்துக்கள்! அன்புடன் உங்கள் MGR//

   அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 13. வலையுலகில் இதுவரையில்லாத ஒரு சிறப்பான தொடர் போட்டிக்களத்தை உருவாக்கிக் கொடுத்ததோடு அக்களத்தில் தொடர்ந்து பங்கேற்கவும் வெற்றி பெறவும் கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கவுமான கருத்துரைகளைத் தந்து மேலும் மேலும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட வழிவகுத்துக்கொண்டிருக்கும் கோபு சார் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி July 30, 2014 at 5:43 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வலையுலகில் இதுவரையில்லாத ஒரு சிறப்பான தொடர் போட்டிக்களத்தை உருவாக்கிக் கொடுத்ததோடு அக்களத்தில் தொடர்ந்து பங்கேற்கவும் வெற்றி பெறவும் கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கவுமான கருத்துரைகளைத் தந்து மேலும் மேலும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட வழிவகுத்துக்கொண்டிருக்கும் கோபு சார் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், நன்றிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புள்ள கோபு

   Delete
 14. நடுவர் அவர்களது தீர்ப்போடு ஒத்துப்போன முடிவுகளை யூகித்து வழங்கிய திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு. சுந்தரேசன் கங்காதரன் அவர்களுக்கும் ஊக்கப்பரிசு பெறும் கவிஞர் கணக்காயன் ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி July 30, 2014 at 5:45 AM

   //நடுவர் அவர்களது தீர்ப்போடு ஒத்துப்போன முடிவுகளை யூகித்து வழங்கிய திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு. சுந்தரேசன் கங்காதரன் அவர்களுக்கும் ஊக்கப்பரிசு பெறும் கவிஞர் கணக்காயன் ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.//

   தங்களின் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு அனைவர் சார்பிலும் என் நன்றிகள். இந்த நால்வரில் எனக்குத்தெரிந்தே இருவர் தற்சமயம் சுறுசுறுப்பான சுற்றுப்பயணத்தில் உள்ளார்கள்.

   Delete
 15. பதிவுலகை புதிய பரிணாமத்திற்கு அழைத்துச்செல்லும்
  புதிய முயற்சி ..எத்தனை உழைப்பு .. அத்தனையும் சிந்தாமல் சிதறாமல் பலனளிக்கட்டும் .

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. இனிய நல்வாழ்த்துகள்..

  முதலில் அளித்த கருத்துரை காணவில்லை ..
  எனவே இது இரண்டாவது..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி July 30, 2014 at 7:44 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பதிவுலகை புதிய பரிணாமத்திற்கு அழைத்துச்செல்லும்
   புதிய முயற்சி ..எத்தனை உழைப்பு .. அத்தனையும் சிந்தாமல் சிதறாமல் பலனளிக்கட்டும்.//

   அசரீரி போன்ற அம்பாளின் அருள் வாக்கு அப்படியே சிந்தாமல் சிதறாமல் பலிக்கட்டும் / பலனளிக்கட்டும்.

   //மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. இனிய நல்வாழ்த்துகள்..//

   தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த அழகான பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் கனிந்த இனிய அன்பு நன்றிகள்.

   //முதலில் அளித்த கருத்துரை காணவில்லை ..
   எனவே இது இரண்டாவது..//

   அது எங்கே போனதோ, எனக்கும் தெரியவில்லை. SPAM போன்றவற்றிலும் தேடிப்பார்த்து விட்டேன்.

   பதிவு வெளியிட்டு 31 மணி நேரமாகியும் தங்களின் கருத்துக்களைக் காணுமே என மிகவும் கவலைப்பட்டேன்.
   இதுபோல எப்போதுமே ஆனது இல்லையே என எனக்கு அப்போதே சந்தேகம் வந்தது.

   ஒருவேளை ஊரில் இல்லையோ, பயணத்தில் ஏதும் இருக்கின்றீர்களோ எனவும் நினைத்தேன், ஆனால் வேறுசில பதிவுகளுக்கு தாங்கள் போய் இருந்ததைக் காண நேர்ந்தது.

   சரி .... அவர்களாகவே எப்போது தோன்றுகிறதோ அப்போது வரட்டும் என பேசாமல் இருந்துவிட்டேன். கடைசியில் இப்போது தாங்கள் எழுதியுள்ளதைப்படித்துத்தான் அது ’காக்கா ஊஷ்’ ஆகியுள்ளது என்பதே எனக்குப் புரிகிறது.

   எனினும் தங்களின் தன்நிலை விளக்கங்களுக்கு நன்றிகள்.

   Delete
 16. நான் இதற்குமுன் இட்ட மூன்று பின்னூட்டங்களில் ஒன்றைக் காணவில்லை. எனவே மறுபடியும் அந்தப் பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.
  விமர்சனம் பற்றிய நடுவர் அவர்களது விமர்சனப் பார்வையும் கருத்துரையும் என் போன்ற பலருக்கும் மிகவும் பயனுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
  போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வமும் எழுத்தாற்றலும் இருந்தாலும் முறையான விமர்சனப் பயிற்சி இல்லாமையால் இப்படி எழுதுவதா அப்படி எழுதுவதா என்று தெளிவின்றி தடுமாறிக்கொண்டிருந்த வாசக விமர்சக உள்ளங்களுக்கு அவ்வப்போது தேவையான பல விமர்சனக் குறிப்புகளை யாரோ சொன்னது, எங்கோ படித்தது போன்ற தலைப்புகளில் தந்து சரியான பாதையில் திருப்பியமை நடுவர் அவர்களின் பெருந்தன்மையையும் வழிகாட்டுந்தன்மையையும் காட்டுகிறது.
  நடுவர் என்னும் மேலான பொறுப்பு வகிப்பதோடு விமர்சகர்களை சரியான முறையில் களமிறக்க அவர் மேற்கொண்ட பல முயற்சிகளும் போற்றுதற்குரியவை.
  இந்தக் கருத்துரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பல குறிப்புகளும் தொடர்ந்து எழுதவிருக்கும் விமர்சனங்களுக்கு நல்ல பாதையமைத்துக் கொடுக்கும் என்பது தெளிவு. நடுவர் அவர்களுக்கும் இப்படியொரு அற்புதமான வாய்ப்பினை வழங்கிய கோபு சார் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி July 30, 2014 at 9:33 AM

   வாங்கோ .... வணக்கம்.

   //நான் இதற்குமுன் இட்ட மூன்று பின்னூட்டங்களில் ஒன்றைக் காணவில்லை. எனவே மறுபடியும் அந்தப் பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.//

   அடடா, நான் மேலே அவர்களுக்குச் சொல்லியுள்ளது போலவே தங்களுடைய மூன்றில் ஒன்றையும் காக்கா தூக்கிப்போய் இருக்குமோ என்னவோ. இதற்கு முந்திய பதிவுக்கு திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் கொடுத்ததாகச் சொல்லும் கருத்துக்களையும் இதுவரை காணோம். இதுபோலெல்லாம் சமயத்தில் மாயமாக மறைந்து விடுகிறது. ஸ்பேம், மட்டறுத்தல் பகுதி போன்றவற்றிலும் கூட நான் தேடிப்பார்த்து விட்டேன். ஆனால் எங்கேயுமே காணும். ஏதோ போதாத காலம் தான்.

   //விமர்சனம் பற்றிய நடுவர் அவர்களது விமர்சனப் பார்வையும் கருத்துரையும் என் போன்ற பலருக்கும் மிகவும் பயனுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. //

   நெல்லிக்கனி சாப்பிட்டுவிட்டு தண்ணீர் அருந்தியதுபோல மிகவும் இனிப்பாக உள்ளது தாங்கள் சொல்வது. ;) சந்தோஷம்.

   //போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வமும் எழுத்தாற்றலும் இருந்தாலும் முறையான விமர்சனப் பயிற்சி இல்லாமையால் இப்படி எழுதுவதா அப்படி எழுதுவதா என்று தெளிவின்றி தடுமாறிக்கொண்டிருந்த வாசக விமர்சக உள்ளங்களுக்கு அவ்வப்போது தேவையான பல விமர்சனக் குறிப்புகளை யாரோ சொன்னது, எங்கோ படித்தது போன்ற தலைப்புகளில் தந்து சரியான பாதையில் திருப்பியமை நடுவர் அவர்களின் பெருந்தன்மையையும் வழிகாட்டுந்தன்மையையும் காட்டுகிறது.//

   ஆமாம். நிச்சயமாக. ’யாரோ சொன்னது’ + ’எங்கோ படித்தது’ என நான் வெளியிட்டதெல்லாம் நடுவர் அவர்கள் என்னைவிட்டு வெளியிடச்சொன்னவைகள் மட்டுமே.

   //நடுவர் என்னும் மேலான பொறுப்பு வகிப்பதோடு விமர்சகர்களை சரியான முறையில் களமிறக்க அவர் மேற்கொண்ட பல முயற்சிகளும் போற்றுதற்குரியவை.
   இந்தக் கருத்துரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பல குறிப்புகளும் தொடர்ந்து எழுதவிருக்கும் விமர்சனங்களுக்கு நல்ல பாதையமைத்துக் கொடுக்கும் என்பது தெளிவு.//

   எவ்வளவு அருமையாகவும் பொறுமையாகவும் ஒவ்வொன்றையும் எடுத்துச்சொல்லியுள்ளார், பாருங்கோ! நானே வியந்து போனேன். தாங்களாவது இதை இங்கு குறிப்பிட்டு விரிவாகப் பாராட்டிப் போற்றியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   //நடுவர் அவர்களுக்கும் இப்படியொரு அற்புதமான வாய்ப்பினை வழங்கிய கோபு சார் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். //

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான அற்புதமான கருத்துக்களுக்கும், உயர்திரு நடுவர் அம்மா / ஐயா சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 17. நான் தங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் மிகவும் ஆர்வமாகப் படித்து வருபவன். ஸ்ரீ மஹாபெரியவா பற்றிய பதிவுகளைத் தாங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்த சமயம் முன்பெல்லாம் சில கருத்துக்களையும் நான் சொல்லி வந்துகொண்டிருந்தேன். நினைவிருக்கலாம்.

  இப்போதும் தங்கள் கதைகளை நான் ஆர்வமாகப்படிப்பது உண்டு. இந்தப்போட்டி பற்றிய செய்திகளையும் அதற்குத் தேர்வாகும் விமர்சனங்களையும் கூட நான் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது படித்து மகிழ்வதுண்டு. ஆனால் என் கருத்துக்களை எடுத்துக்கூற மட்டும் எனக்கு நேரம் இருப்பது இல்லை. அதுபோல விமர்சனப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தும் ஏனோ என்னால் இதுவரை கலந்துகொள்ள இயலாமலும் உள்ளது.

  ’தனக்குத்தானே நீதிபதி’ என்ற இந்தப்புதுமையான போட்டி சுலபமாக இருப்பதுபோலத் தோன்றியதால் நானும் ஏதோ ஒரு ஆர்வத்தில் மட்டுமே கலந்துகொண்டேன். அதில் எனக்கு பரிசு அளிக்கப்படும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. லாட்டரியில் பரிசு கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. அதுவும் என் புகைப்படத்தைத் தாங்கள் கேட்டு வாங்கி தங்களின் இந்தப் பதிவினில் வெளியிட்டுள்ளது மேலும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

  நடுவர் அவர்கள் சொல்லியுள்ள விஷயங்களை முழுவதுமாக ரசித்துப் படித்தேன். எல்லாவற்றையும் மிக அருமையாகவும் பொறுமையாகவும் எழுதியுள்ளார்கள். சிறுகதை இலக்கிய மேம்பாட்டுக்காகத் கதாசிரியரான தாங்களும் நடுவர் அவர்களும் செய்துவரும் சேவைகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவைகள்.

  நடுவர் அவர்களின் இந்த மிக அருமையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நானும் இனிவரும் ஏதேனும் ஒரு விமர்சனப் போட்டியிலாவது கலந்துகொண்டு பரிசு வாங்க வேண்டும் என எனக்கும் மிகுந்த ஆவலாக உள்ளது. உற்சாகம் ஊட்டுவதாக அமைந்துள்ளது. முயற்சிக்கிறேன்.

  மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள்.

  அன்புடன்,
  சுந்தரேசன் கங்காதரன்

  ReplyDelete
  Replies
  1. Sundaresan Gangadharan July 30, 2014 at 5:27 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நான் தங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் மிகவும் ஆர்வமாகப் படித்து வருபவன். ஸ்ரீ மஹாபெரியவா பற்றிய பதிவுகளைத் தாங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்த சமயம் முன்பெல்லாம் சில கருத்துக்களையும் நான் சொல்லி வந்துகொண்டிருந்தேன். நினைவிருக்கலாம்.//

   ஆஹா, அவை மறக்க முடியாத இனிய நாட்கள் அல்லவா ! நான் மொத்தமாக வெளியிட்டிருந்த அந்தத்தொடரில் ..... 108 பகுதிகளில் ..... 67 பகுதிகளுக்கு ..... More than 60% வருகை தந்து சிறப்பித்தவர் அல்லவா தாங்கள் !

   அதில்கூட நான் தங்கள் பெயருக்கு சிறப்பிடம் தந்து நன்றி தெரிவித்து ஒரு தனிப்பதிவு வெளியிட்டிருந்தேனே.

   இதோ அதன் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html

   //இப்போதும் தங்கள் கதைகளை நான் ஆர்வமாகப்படிப்பது உண்டு. இந்தப்போட்டி பற்றிய செய்திகளையும் அதற்குத் தேர்வாகும் விமர்சனங்களையும் கூட நான் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது படித்து மகிழ்வதுண்டு.//

   தெரியும். என்னை சந்திக்கும் போதெல்லாம் தாங்களே சொல்லி நான் இதைக் கேள்விப்பட்டுள்ளேன்.

   //ஆனால் என் கருத்துக்களை எடுத்துக்கூற மட்டும் எனக்கு நேரம் இருப்பது இல்லை. அதுபோல விமர்சனப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தும் ஏனோ என்னால் இதுவரை கலந்துகொள்ள இயலாமலும் உள்ளது.//

   அதனால் பரவாயில்லை. எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்க முடியாது என்பதை நானும் அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.

   //’தனக்குத்தானே நீதிபதி’ என்ற இந்தப்புதுமையான போட்டி சுலபமாக இருப்பதுபோலத் தோன்றியதால் நானும் ஏதோ ஒரு ஆர்வத்தில் மட்டுமே கலந்துகொண்டேன். //

   சந்தோஷம். மிக்க நன்றி.

   //அதில் எனக்கு பரிசு அளிக்கப்படும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.//

   யாருமே இதை முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க முடியாதே. அதுதானே இந்தப் புதுமைப்போட்டியின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது !

   //லாட்டரியில் பரிசு கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டுள்ளது.//

   அடடா. இந்தத் தங்களின் மகிழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   //அதுவும் என் புகைப்படத்தைத் தாங்கள் கேட்டு வாங்கி தங்களின் இந்தப் பதிவினில் வெளியிட்டுள்ளது மேலும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.//

   பொதுவாகப் பரிசுக்குத் தேர்வானவர்களை விருப்பப்பட்டால் போட்டோ அனுப்பச்சொல்லி நான் கேட்பது வழக்கம். யாரையும் வற்புருத்துவது இல்லை. போட்டோவையும் அனுப்பி வெளியிடச்சொல்லி அவர்கள் சம்மதித்தால் மட்டுமே வெளியிட்டு வருகிறேன். உங்கள் கேஸும் அப்படியே தான். கேட்டவுடன் அனுப்பி வைத்தீர்கள். உடனே நானும் வெளியிட செளகர்யமாகப்போய் விட்டது.

   //நடுவர் அவர்கள் சொல்லியுள்ள விஷயங்களை முழுவதுமாக ரசித்துப் படித்தேன். எல்லாவற்றையும் மிக அருமையாகவும் பொறுமையாகவும் எழுதியுள்ளார்கள். //

   ஆம். மிக அழகாக பொறுமையாக தெளிவாகத்தான் எழுதியுள்ளார்கள்.

   //சிறுகதை இலக்கிய மேம்பாட்டுக்காகத் கதாசிரியரான தாங்களும் நடுவர் அவர்களும் செய்துவரும் சேவைகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவைகள்.//

   சந்தோஷம். மிக்க நன்றி.

   //நடுவர் அவர்களின் இந்த மிக அருமையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நானும் இனிவரும் ஏதேனும் ஒரு விமர்சனப் போட்டியிலாவது கலந்துகொண்டு பரிசு வாங்க வேண்டும் என எனக்கும் மிகுந்த ஆவலாக உள்ளது. உற்சாகம் ஊட்டுவதாக அமைந்துள்ளது. முயற்சிக்கிறேன்.//

   கட்டாயம் முயற்சி செய்யுங்கோ. கலந்துகொள்ளவும் வெற்றி பெறவும் என் வாழ்த்துகள்.

   //மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள்.
   அன்புடன்,
   சுந்தரேசன் கங்காதரன்//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 18. நடுவர் அவர்கள் விமர்சனங்களை தேர்வு செய்யும் கடுமையான பணியோடு விமர்சனம் எழுதுபவர்களுக்கு எப்படி எழுத வேண்டுமென்று அருமையாக நிறைய யோசனைகள் சொல்லி இருக்கிறார்கள் . அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.


  பரிசு பெற்ற திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு. சுந்தரேசன் கங்காதரன் அவர்களுக்கும் ஊக்கப்பரிசு பெறும் கவிஞர் கணக்காயன் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  இப்படி பரிசுகளை புதுமையாக ஏற்பாடு செய்த உங்களுக்கும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சார்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு July 30, 2014 at 7:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நடுவர் அவர்கள் விமர்சனங்களை தேர்வு செய்யும் கடுமையான பணியோடு விமர்சனம் எழுதுபவர்களுக்கு எப்படி எழுத வேண்டுமென்று அருமையாக நிறைய யோசனைகள் சொல்லி இருக்கிறார்கள் . அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

   நடுவர் என்னைப்போல சாதாரணமானவரோ, சாமான்யமானவரோ அல்ல.

   மிகவும் நல்லவர், வல்லவர், நேர்மையானவர், பாரபட்சம் பார்க்காதவர், அறிவு, அடக்கம், அன்பு, பண்பு, சகிப்புத்தன்மை, மென்மை, மேன்மை முதலான அனைத்துச் சிறப்புகளுக்கும் ஓர் உதாராணமானவர். அவரை தாங்கள் இங்கு பாராட்டி வாழ்த்தியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   //பரிசு பெற்ற திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு. சுந்தரேசன் கங்காதரன் அவர்களுக்கும் ஊக்கப்பரிசு பெறும் கவிஞர் கணக்காயன் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   பரிசு கிடைத்த மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் உள்ள அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் அன்பான நன்றிகள்.

   //இப்படி பரிசுகளை புதுமையாக ஏற்பாடு செய்த உங்களுக்கும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சார்.//

   ஏதோ ஓர் ஆர்வத்தில் ஆரம்பித்தது. இன்றுவரை தொய்வில்லாமல் வெற்றிகரமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எல்லாம் ‘அவன் போட்ட கணக்கு’ ;)

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   இன்னும் 13 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முடிந்தால் தாங்கள் கூட, வாராவாரம் நடைபெற்றுவரும் விமர்சனப் போட்டிகளில் கலந்துகொள்ள முயற்சிக்கலாம். பரிசு பெற்றால் மட்டுமே தாங்கள் போட்டியில் கலந்து கொண்ட விஷயம் பிறருக்குத் தெரியவரும். அதனால் இந்தப்போட்டிகளில் யாரும் சங்கோஜம் ஏதும் இன்றி சந்தோஷமாகக் கலந்து கொள்ளலாம்.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 19. ஒவ்வொரு போட்டியாக தொடர்ந்து நடத்துதல்
  வெற்றியாளர்களை அறிவித்தல்
  வெற்றியாளர்களின் விமர்சனங்களைப் பகிர்தல்
  சொந்த நிதியினைக் கொண்டு பரிசு வழங்குதல்
  தங்களின் அயராதப் பணியும் செயலும்
  வியக்க வைக்கிறது ஐயா
  தங்களின் பணி தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. கரந்தை ஜெயக்குமார்July 30, 2014 at 7:26 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம்.

   //ஒவ்வொரு போட்டியாக தொடர்ந்து நடத்துதல்//

   ஆம். இறையருளால் இன்றுவரை தொய்வில்லாமல் தொடர்ந்து ஏதோ என்னால் வெற்றிகரமாக நடத்த முடிகிறது.

   //வெற்றியாளர்களை அறிவித்தல்//

   இது மட்டும் உயர்திரு நடுவர் அம்மா / ஐயா அவர்களால் எனக்கு அறிவிக்கப்படுகிறது.

   அதன்பின் என்னால் மற்றவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. போட்டி என்றால் அதில் வெற்றியாளர்கள் என்பவர்கள் அறிவிக்கப்பட வேண்டியவர்கள் அல்லவா !

   //வெற்றியாளர்களின் விமர்சனங்களைப் பகிர்தல்//

   வெற்றியாளர்களின் விமர்சனங்களைப் பகிர்ந்தால் தானே மற்ற அனைவரும் அதனைப் படித்து மகிழ்ந்து எந்த அடிப்படையில் இந்த விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகியுள்ளது என யோசிக்க முடியும். இவ்வாறு அதனைப்படித்து மகிழ்ந்து அதிலுள்ள ஒருசில
   வரிகளையாவது மேற்கோள் காட்டி பாராட்டி கருத்தளிப்பவர்கள் இல்லையே என்பது தான்
   எங்களுக்கும் குறையாக உள்ளது. தங்களைப்போன்ற ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் இதனை மிக நன்றாகவே செய்ய முடியும். ஆனாலும் ஏனோ செய்வது இல்லை. ;(

   //சொந்த நிதியினைக் கொண்டு பரிசு வழங்குதல்//

   இதற்காக நான் உலக வங்கியில் கடனா வாங்க முடியும்? ;)))))

   ஏதோ மிக நேர்மையாக சம்பாதித்து, மிக எளிமையாக வாழ்ந்து, சேமிப்பில் என்னிடம் இருப்பதை கொஞ்சூண்டு [சுண்டைக்காய் அளவு] தமிழ் சிறுகதை இலக்கியப் பணிகளுக்காக செலவிடத் தீர்மானித்தேன். அதைத்தான் செய்தும் வருகிறேன். ஒவ்வொருவரின் மிக அருமையான எழுத்துத்திறமைக்கும், இன்னும் எவ்வளவோ செய்யத்தான் வேண்டும். ஏதோ என்னால் என் முதல் முயற்சியில் இன்றளவு முடிந்தது இவ்வளவு மட்டுமே.

   //தங்களின் அயராதப் பணியும் செயலும் வியக்க வைக்கிறது ஐயா//

   விளையாட்டாக இதனை ஆரம்பித்து விட்ட என்னையும் இன்று எனக்குள்ள பல்வேறு நெருக்கடியான சூழலில் [பண நெருக்கடி அல்ல] வியக்கத்தான் வைக்கிறது.

   //தங்களின் பணி தொடரட்டும்//

   எல்லாம் ‘அவன் போட்ட கணக்கு’ ப்படி மட்டுமே .... தொடரக்கூடும். பார்ப்போம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா. - VGK

   Delete
 20. தொடர்ந்து போட்டிகளை அறிவித்து ஊக்கப்பரிசும் கொடுத்து வரும் உங்களை வாழ்த்துவதா? குடும்பத்தோடு போட்டிகளில் கலந்து கொள்வதோடு அல்லாமல் அனைவருமே ஏதேனும் ஒரு பரிசை வெல்லும் திரு சேஷாத்ரி குடும்பத்தை வாழ்த்துவதானு புரியலை. அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam July 31, 2014 at 9:53 AM

   வாங்கோ, வணக்கம்.

   //தொடர்ந்து போட்டிகளை அறிவித்து ஊக்கப்பரிசும் கொடுத்து வரும் உங்களை வாழ்த்துவதா? குடும்பத்தோடு போட்டிகளில் கலந்து கொள்வதோடு அல்லாமல் அனைவருமே ஏதேனும் ஒரு பரிசை வெல்லும் திரு சேஷாத்ரி குடும்பத்தை வாழ்த்துவதானு புரியலை. அனைவருக்கும் என் வாழ்த்துகள்.//

   எல்லோரையுமே ஒட்டுமொத்தமாக வாழ்த்துங்கோ ! பிறரை ... அதாவது வாழ்த்தப்பட வேண்டியவர்களை வாழ்த்துவதாலோ, பாராட்டப்பட வேண்டியவர்களை நம் மனம் திறந்து பாராட்டுவதாலோ நமக்கொன்றும் நஷ்டம் இல்லை.

   பாராட்டுக்களும், வாழ்த்துகளும் நாம் நமக்குப் பெறுவதைவிட நாம் பிறருக்குக் கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியே உள்ளது என்பதே உண்மை.

   இந்த உண்மை நம்மைப்போன்றவர்களுக்கு நம் அனுபவத்தில் நாளடைவில்தான் தெரிய வருகிறது என்பதும் உண்மை.

   திரு. சேஷாத்ரி அவர்களும், அவர் மனைவியும் விமர்சனப்பரிசும், ஹாட்-ட்ரிக் பரிசும் பெற்றவர்கள்.

   அவர்களின் ஒரே அன்பு மகள் பவித்ராவுக்கு VGK-24 இல் போனஸ் பரிசு அளிக்கப்பட உள்ளது.

   அவரின் மாமனாருக்கு இப்போது ஊக்கப்பரிசு அளிக்கப்பட உள்ளது.

   அவர்கள் அனைவரும் குடும்பத்தோடு போட்டிகளில் கலந்து கொள்வது நமக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 21. நடுவர் அவர்களின் விமரிசனத்தைத் திரும்பத் திரும்பப் படிச்சதிலே இருந்து ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களை வைத்து அவர் யார்னு ஓரள்வுக்கு யூகம் செய்திருக்கிறேன். அது சரியா, தப்பானு தெரியலை! :)))) இந்த விமரிசனத்துக்கு விமரிசனக் கட்டுரை எனக்காகச் சொன்னது போல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam July 31, 2014 at 9:54 AM

   //நடுவர் அவர்களின் விமரிசனத்தைத் திரும்பத் திரும்பப் படிச்சதிலே இருந்து ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களை வைத்து அவர் யார்னு ஓரள்வுக்கு யூகம் செய்திருக்கிறேன். அது சரியா, தப்பானு தெரியலை! :)))) //

   இதில் ஆச்சர்யமே ஏதும் இல்லை. உங்கள் யூகம் சரியாகவே தான் இருக்கும். நடுவர் யார் கண்டு பிடியுங்கள் போட்டியில் ரூ. 108 பரிசு பெறப்போவதும் தாங்களாவே தான் இருக்கும் என எனக்குத்தோன்றுகிறது. ;)))))

   //இந்த விமரிசனத்துக்கு விமரிசனக் கட்டுரை எனக்காகச் சொன்னது போல் இருக்கிறது.//

   எல்லோருக்குமே அதே போலவே தோன்றுகிறதாம். அது தான் நம் உயர்திரு நடுவர் அவர்களின் தனிச்சிறப்பு. ;)

   VGK

   Delete
  2. தாங்கள் 40 வரிகள் அல்லது 200 வார்த்தைகளுக்குக் குறையாமல் எழுத வேண்டிய போட்டி நிபந்தனைகளுக்காக .........

   400 வரிகள் அல்லது 2000 வார்த்தைகள் போட்டு மிகப்பிரமாதமாக அமர்க்களமாக எழுதித்தள்ளியும் நடுவர் அவர்களால் சமயத்தில் பரிசு அளிக்கப்படாமல் போகிறதே என்று அடிக்கடி நான் எனக்குள் வருந்தியது உண்டு.

   இப்போதுதான் இந்த நடுவரின் கட்டுரையைப்படித்த பிறகு தான் எனக்கும் நடுவர் அவர்களின் உண்மையான எதிர்பார்ப்புகள் என்ன என்பதே தெரிகிறது.

   நல்லவேளையாக இப்போதாவது மனம் திறந்து பேசினாரே அந்த மனுஷ்யர் அல்லது மனுஷ்யி ! ;)))))

   இனிமேல் அனைத்துப்போட்டிகளிலும் தங்களுக்கே கூட பரிசுகள் வரிசையாகக் கிடைக்கக்கூடுமோ என்னவோ !

   வாழ்த்துகள். VGK

   Delete
 22. இந்த என் பின்னூட்டங்கள் காக்காய் கொண்டு போகாமல் போய்ச் சேரணும். :)

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam July 31, 2014 at 9:55 AM

   //இந்த என் பின்னூட்டங்கள் காக்காய் கொண்டு போகாமல் போய்ச் சேரணும். :)//

   இவைகள் மூன்றும் கரெக்டா வந்து சேர்ந்துடுத்து. மற்றவை நீங்கள் அனுப்பும்போதே உங்காத்துப்பக்கத்திலே சுற்றி வரும் ஏராளமான குரங்குகளில் ஏதோவொன்று ஒருவேளை தூக்கிச்சென்றிருக்கலாம் ;) என்று நினைக்கிறேன்.

   VGK

   Delete
 23. திருபதிக்கே லட்டு! திருநெல்வேலிக்கே அல்வா! – என்பது போல விமர்சனங்களுக்கே ஒரு விமர்சனம். விமர்சனம் என்றால் என்ன, எப்படி எழுத வேண்டும், எவற்றைத் தள்ள வேண்டும் என்பது குறித்து நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 24. தி.தமிழ் இளங்கோ July 31, 2014 at 6:47 PM

  என் அன்புக்குரிய திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களே ... வாருங்கள் ... வணக்கம் ஐயா.

  //திருபதிக்கே லட்டு! திருநெல்வேலிக்கே அல்வா! – என்பது போல விமர்சனங்களுக்கே ஒரு விமர்சனம். விமர்சனம் என்றால் என்ன, எப்படி எழுத வேண்டும், எவற்றைத் தள்ள வேண்டும் என்பது குறித்து நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி! //

  தங்களின் அன்பான வருகைக்கும் நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

  ReplyDelete
 25. விமர்சனம் எழுதுவது எப்படி? என்பதை அருமையாக விளக்கிய பதிவு. தொகுத்து வெளியிட்ட திரு வை.கோ ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. kovaikkavi August 1, 2014 at 11:11 AM

   வாங்கோ, வணக்கம்.

   //விமர்சனம் எழுதுவது எப்படி? என்பதை அருமையாக விளக்கிய பதிவு. தொகுத்து வெளியிட்ட திரு வை.கோ ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!
   Vetha.Elangathilakam.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், உளமார்ந்த பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 26. வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 27. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

  அன்புடையீர்,

  வணக்கம்.

  31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 ஜூலை வரையிலான 43 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக, எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

  என்றும் அன்புடன் VGK

  ReplyDelete
 28. நடுவரின் கட்டுரையே அருமையாக அமைந்திருக்கிறது. எழுதுவது எப்படி என்று ஒரு நூலே அவர் எழுதலாம்.விமர்சிப்பது என்றும் இன்னோரு நூல் வரலாம். மிக நன்றி . இந்த மாதிரி ஒரு அற்புதமான கதைப் போட்டிகள்,விமரிசனப் போட்டிகள் என்று குவிக்கும் உங்கள் ஆதர்ச குணத்தை வியக்காமல் இருக்க முடிய வில்லை. நடுவர் யானை ரசிகரா, இல்லை பிள்ளையார் பெயர் கொண்டவரா என்று யூகிக்க வைக்கிறது ஸ்ரீராமின் பின்னூட்டம்.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் August 29, 2015 at 6:10 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நடுவரின் கட்டுரையே அருமையாக அமைந்திருக்கிறது. எழுதுவது எப்படி என்று ஒரு நூலே அவர் எழுதலாம். விமர்சிப்பது என்றும் இன்னோரு நூல் வரலாம். மிக நன்றி . இந்த மாதிரி ஒரு அற்புதமான கதைப் போட்டிகள், விமரிசனப் போட்டிகள் என்று குவிக்கும் உங்கள் ஆதர்ச குணத்தை வியக்காமல் இருக்க முடிய வில்லை. நடுவர் யானை ரசிகரா, இல்லை பிள்ளையார் பெயர் கொண்டவரா என்று யூகிக்க வைக்கிறது ஸ்ரீராமின் பின்னூட்டம்.//

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   :) Exact ஈயடிச்சான் Copy from the Comments of Mrs. Valli Simhan Madam !!!!! :)

   ’ஈ அடிச்சான் காப்பி பற்றிய மேல் அதிக விபரங்கள் இதோ இந்தப்பதிவின் இறுதி வரிகளில் உள்ளது:

   http://gopu1949.blogspot.in/2012/03/5.html

   Delete
  2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஜூலை வரை முதல் 43 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 29. //எழுதுகோல் பிடித்த எவரும் பொதுவாக தன் எழுத்துக்களை இன்னொருவர் விமரிசிப்பதை அவ்வளவு பொறுமையுடன் கேட்டு ரசிக்க மாட்டார்கள். இதிலும் கோபு சார் விதிவிலக்காக இருப்பதும், பரிசுகள் வழங்கி மகிழ்வதும் எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.//

  எனக்கு ஆச்சரியமே இல்லை. கோபு அண்ணா ஒரு UNIQUE PERSONALITY. யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு மனிதர்.

  நடுவரின் கட்டுரை அருமையோ அருமை.

  ReplyDelete
 30. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:

  அன்புள்ள ஜெயா,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஜூலை மாதம் வரை முதல் 43 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  ReplyDelete
 31. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 32. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

  அன்புள்ள (mru) முருகு,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜூலை மாதம் வரை, முதல் 43 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் அல்லது சில பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

  ReplyDelete
 33. விமரிசனத்துக்கே விமரிசனம் இவ்வளவு கடுமையான உழைப்பாளிக்கும் ஏதாவது பரிசை எடுத்து தனியாக வைத்திருப்பீர்கள்தானே.

  ReplyDelete
 34. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  591 out of 750 (78.8%) within
  20 Days from 15th Nov. 2015 ! :)
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


  அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
  திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜூலை மாதம் முடிய, என்னால் முதல் 43 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 35. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  591 out of 750 (78.8%) that too within
  14 Days from 26th Nov. 2015.
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜூலை மாதம் வரை, என்னால் முதல் 43 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete