About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, July 5, 2014

VGK 23 / 03 / 03 - THIRD PRIZE WINNER ...... ‘யாதும் ஊரே யாவையும் கேளிர் !’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 23 - 

’ யாதும் ஊரே யாவையும் கேளிர் !



இணைப்பு:




  


 

 

 



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 





நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  



ஐந்து















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    



முத்தான மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர்



திருமதி


 இராஜராஜேஸ்வரி  




அவர்கள்






http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"




 






 






முத்தான மூன்றாம் 


பரிசினை வென்றுள்ள 


திருமதி



 இராஜராஜேஸ்வரி  





அவர்களின் விமர்சனம் இதோ:









கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்ற முதுமொழிப்படி ஆலயங்கள் பல அமைத்து ஊருக்கு சிறப்பு சேர்த்தவர் நம் முன்னோர்..

மதுரை போன்ற நகரங்கள் கோவில்களை மையப்படுத்தியே அமைந்தவை.. பெரிய தொழிற்சாலைகள் போன்றவை அமையாத போதும் மிகப் பெரும் மாநகரமாக விளங்குவதற்கு மீனாட்சி அம்மன் ஆலயமே ஆதாரம்..

திருவரங்கம், காஞ்சி, திருப்பதி, திருச்சி, தஞ்சாவூர், காசி  ராமேஸ்வரம் என பல நகரங்களின் பெயர்களைக்கேட்டாலே அங்கிருக்கும் பிரம்மாண்டமான ஆலயங்களும் மூலவர்களும் மனதில் உலாவருவார்கள்..

ஒரு ஆலயம் என்றாலே அதைச்சார்ந்து பல மக்களின் வாழ்வாதாரம் இணைக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைச்சக்கரத்திற்கு அச்சாணியாகத் திகழ்ந்து வருவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்..

மனிதர்கள் மட்டுமல்லாமல் எறும்பு முதல் யானை வரை இறைவனைப் பூஜித்த சிறப்புத்தலங்களும் உண்டு..

தேர்த்திருவிழா, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக்களில் கூடும் மக்கள் கூட்டத்தை வைத்து ஆண்டுமுழுவதும் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் ஏராளம்..

பறவைகளுக்குக்கூடு மாதிரி சில எளிய மனிதர்களின் வாழ்விடமாக கோவில்கள் திகழ்வதும் உண்டு..

அப்படி அறுபது ஆண்டுகள் போக்கிடமில்லாமல்  பிள்ளையார் அனுமன் கோவில்களுக்கு இடைப்பட்ட திண்ணையில் மழை குளிர் போன்ற இயற்கை இடர்களைதாங்கி தங்குமிடமாகக்கொண்டு வாழும் கண்ணாம்பாவின் கதையை வர்ணனைகளாலேயும் பொருத்தமான படங்கள் மூலமும் கதையாக்கி சிறப்பித்திருக்கிறார் கதை ஆசிரியர்,,

தன் கண் முன் நடந்த கோவில் இடிப்பு சம்பவத்தை வலிக்க வலிக்க பதிவு செய்திருக்கிறார்..

இன்றைய சம்பவம் நாளைய சரித்திரம்..  பிரசித்திபெற்ற அன்று வரை பக்தியுடன் வணங்கிய ஆலயத்தை இடிபாடுகளுடன் காண்பதற்கு மனம் பொறுப்பதில்லைதான்...!

அதனை அங்கேயே வாழும் ஒரு கதாபாத்திரத்தையும், சார்ந்து வாழும் நிலையிலுள்ள மக்களையும், குரங்குக்கூட்டம், பள்ளிச்சிறுவர்கள் என்று செதுக்கி படிப்பவர்களை சம்பவ இடத்தில் நேரிடையாக  நிற்கும் உணர்வை ஏற்படுத்தும் கைதேர்ந்த நுணுக்கமான திறமையான கதை ஆசிரியரின் எழுத்து திறனுக்கு சான்று பகிர்கின்றன..

சுற்றிலும் அழுக்கும் குப்பையும் வறுமையும் குடிசையும் இருந்தாலும் மரத்திலிருந்து விழுந்து இறந்த குரங்கை மரியாதையுடன் அடக்கம் செய்து அதன் மீது அனுமன் கோவில் எழுப்பும் மனிதாபிமானம் நிறைந்த மக்களை அறிமுகப்படுத்துகிறார்..

அதுவே அடுக்குமாடிக்கட்டிடங்கள் எழுந்து சுற்றுப்புறம் தூய்மையான பிறகு அந்த அழுக்கும் குப்பைகளும் மக்கள் மனதில் குடியேறியது போல கண் முன் வாகனத்தில் அடிபட்டுக் கிடக்கும்  சகமனிதரைத்தொடாமல் சட்ட நிபுணர் போல் கோர்ட் கேஸ் என்று பிதற்றி விலகி ஓடும் அவலத்தையும் அதைக்கண்டு துடிதுடித்துப்போகும் கண்ணாம்பாளையும் பார்த்து  அதலபாதாளத்தில் வீழ்ந்துவிட்ட மனிதாபிமானத்தின் வேற்றுமையையும் மனம் நெகிழும் வண்ணம்  யதார்த்தமாக எளிமையாக சொல்லிப்போகும் கதை..

கருவுற்றுத்தாய்மையடைய முடியாததால் கணவனால் தள்ளிவைக்கப்பட்டு ஆதரவற்ற கண்ணாம்பா  தன் விஷப்புட்டியை தட்டி விட்டு உயிர்காத்த குரங்குக்கூட்டத்திற்குத் தனக்கு கிடைக்கும் உணவை பகிர்ந்து கொடுக்கும் கருணையுற்று தாயானவள் பாத்திரப்படைப்பு உயர்ந்து நிற்கிறது ..... அன்னை தெரஸா போல.. 

கோவில் கட்ட சரீர ஒத்தாசை, மாலை தொடுத்து மலர் கைங்கர்யம், கோலம் போடுதல், கோவிலுக்கு காவல் தொண்டு, பள்ளிப்பிள்ளைகளுக்கு மனம் நிறைந்த ஆசிகள், சுற்றியுள்ள வீடுகளுக்கு தேவையான உதவி  என நிறைய புண்ணியம் சேர்க்கிறாள்.. பணமும் கேட்காமலே சேர்கிறது..

மிகப்பொருத்தமான கோலங்கள், மலர்கள், குரங்குக்கூட்டங்கள் என்று அசத்தலான படத்தொகுப்பு ரசிக்கவைக்கிறது

தன் நீண்டநாள் ஆசையான வடைமாலை சார்த்துதல், பிள்ளையாருக்கு நைவேத்தியத்திற்கும், தன் இறுதி யாத்திரைக்கும் பணம்  கொடுக்கும் முன்யோசனை .. எல்லாவற்றிற்கும்  கிடைத்த பணத்தில் ஏற்பாடும் செய்து அசத்துகிறாள்.., 

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதே.. தன் வாழ்வின் அச்சாணியான கோவில் இடிபடுவதான செய்தியை குருக்கள் மூலமாகக்கேட்ட அடுத்த நொடி உயிர்ப்பறவை கூட்டைவிட்டுப் பறக்க நம் கண்களை கலங்க வைக்கிறாள்..

யாதும் ஊரே என்று அடைக்கலம் புகுந்தவளுக்கு யாவையும் கேளிராகி குரங்குக்கூட்டம் கதறி அழும்போது கதையின் தலைப்பு பளீரிடுகிறது மின்னல் வேகத்தில்..!

கோவில் மூலவர்களும் அந்த துக்கத்தில் பங்கேற்க நடை அடைக்கப்படுகிறது..

பள்ளி விடுமுறைவிடப்பட்டு பள்ளிப்பிள்ளைகளும் கலந்துகொள்ள கோலாகலமாய் இறுதி மரியாதையில் படிப்பவர்களும் அஞ்சலி செலுத்தி அந்த ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்..

கதை என்றோ, எங்கோ நிகழ்வது என்றோ, இல்லாமல் எங்கெங்கும் கண்கூடாகக் காணும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்கச்செய்யும் திறமையான எழுத்து..!!

படிப்பது இராமாயணம்.. இடிப்பது பெருமாள்கோவில் என்று நடந்துகொள்ளாமல் இந்தமாதிரி கோவில் அகற்றும் நடவடிக்கையில் அந்த சிறப்பான கோவில்களின் அதிர்வுகள் பாதிக்கப்படாமல்  அந்த மக்களின் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்..


தன் இலக்கிலேயே கவனம் கொண்டு வெற்றிபெறும் விஜயனைப்போல 

தான் சொல்லவந்த கருத்தை முரசறைவதுபோல வலிமையாக 

ஒலிக்கச்செய்தது ஆசிரியரின் தனித்திறமை..! 



 












மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



அன்பான இனிய நல்வாழ்த்துகள்.








    




 







 
VGK-20 To VGK-23

திருமதி



 இராஜராஜேஸ்வரி  



அவர்கள்



    
  

   
தனது நாலாவது ஹாட்-ட்ரிக் பரிசினை 
நாலாம் சுற்றிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள்.

மனம் நிறைந்த பாராட்டுக்கள் 
அன்பான இனிய நல்வாழ்த்துகள்

 Hat-Trick Prize Amount will be fixed later 
according to Her Continuous Further Success in VGK-24 and VGK-25 

 





    




   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.








இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட உள்ளன. 



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-25 

 தேடி வந்த தேவதை 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


10.07.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.











என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

18 comments:

  1. எமது விமர்சனம் பரிசுக்குத்தேர்வானதற்கு
    உயர்திரு நடுவர் அவர்களுக்கும் கதை ஆசிரிய்யருக்கும்
    மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி July 5, 2014 at 6:29 AM

      வாங்கோ, வணக்கம்.

      எமது விமர்சனம் பரிசுக்குத்தேர்வானதற்கு
      உயர்திரு நடுவர் அவர்களுக்கும் கதை ஆசிரிய்யருக்கும்
      மனம் நிறைந்த நன்றிகள்..

      //கதை ஆசிரிய்யருக்கும் //

      [ஆ + சிரி + அய்யர் = ஆசிரிய்யர்

      - ரஸித்தேன், சிரித்தேன்]

      கதை ஆசிரியர் ஒரு ஐயர் ஆகத்தான் இருக்க வேண்டும் என எப்படியோ யூகித்து எழுதியுள்ளீர்களே ! ;)))))

      ஒருவேளை தங்கள் யூகம் சரியாக இருக்குமோ என்னவோ! ஆனால் எனக்குத் தெரியாதாக்கும். - vgk

      Delete
  2. சகோதரியார் இராஜராஜேசுவரி அவர்களுக்கு மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஹாட்ரிக் பரிசு பெற்ற ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. //படிப்பது இராமாயணம்.. இடிப்பது பெருமாள்கோவில் என்று நடந்துகொள்ளாமல் இந்தமாதிரி கோவில் அகற்றும் நடவடிக்கையில் அந்த சிறப்பான கோவில்களின் அதிர்வுகள் பாதிக்கப்படாமல் அந்த மக்களின் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்..//அருமையாகச் சொன்னீர்கள்! பரிசு பெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! தொடரட்டும் பரிசு ம்ழை! நன்றி!

    ReplyDelete
  6. \\தன் இலக்கிலேயே கவனம் கொண்டு வெற்றிபெறும் விஜயனைப்போல தான் சொல்லவந்த கருத்தை முரசறைவதுபோல வலிமையாக ஒலிக்கச்செய்தது ஆசிரியரின் தனித்திறமை..! \\

    இந்த வரிகள் தங்களுக்கும் பொருந்தும் என்பதுதான் சிறப்பு. பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள் மேடம்.

    ReplyDelete
  7. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமை நண்பர் வை.கோ நடத்தும் சிறுகதை விமர்சனப் போட்டியில் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. மூன்றாம் பரிசு பெற்ற விமர்சனம் நன்று.... பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி அம்மாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்

    ReplyDelete
  12. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya October 23, 2015 at 6:11 PM

      //திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!//

      வாங்கோ ஜெயா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
  13. திருமதி இராஜராஜீஸ்வரி அம்மாவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள் கோவில் விஷயங்கள் பற்றி கதாசிரியர் சொல்லி இருப்பதை உயர் வாக ரசித்து அழகாக விமரிசனம் எழுதி இருக்காங்க.

    ReplyDelete
  15. சகோதரி இராஜராஜீஸ்வரி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
    // தன் இலக்கிலேயே கவனம் கொண்டு வெற்றிபெறும் விஜயனைப்போல

    தான் சொல்லவந்த கருத்தை முரசறைவதுபோல வலிமையாக

    ஒலிக்கச்செய்தது ஆசிரியரின் தனித்திறமை..! // இதுபோல இன்னும் சொல்லிகிட்டே போகலாம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. //படிப்பது இராமாயணம்.. இடிப்பது பெருமாள்கோவில் என்று நடந்துகொள்ளாமல் இந்தமாதிரி கோவில் அகற்றும் நடவடிக்கையில் அந்த சிறப்பான கோவில்களின் அதிர்வுகள் பாதிக்கப்படாமல் அந்த மக்களின் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்..//அருமையாகச் சொன்னீர்கள்! பரிசு பெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! தொடரட்டும் பரிசு ம்ழை! நன்றி!

    ReplyDelete