About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, November 5, 2014

”ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம்! [Part-4 of 4]




அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும், உற்சாகமான ஈடுபாடுகளினாலும், நமது சிறுகதை விமர்சனப்போட்டிகள், திட்டமிட்டபடி வெகு அழகாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. 

இந்த மாபெரும் விழா வெகு அமர்க்களமாக நிறைவு பெற்றதில் எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

இந்த மகிழ்ச்சியான என் மனநிலையில், புதிதாக மேலும் சில விருதுகளை [பரிசுகளை] அறிமுகப்படுத்தி இந்த மாபெரும் விழாவினை நிறைவுக்குக்கொண்டுவர விரும்புகிறேன்.

புதிதாகவும் கூடுதலாகவும் 

இப்போது அறிமுகப்படுத்தும் நான்கு விதமான

விருதுகளின் மொத்தப் பரிசுத்தொகை :

ரூபாய்:




 

முதல் விருதுக்கான அறிவிப்பு பற்றிய 

வெளியீட்டுக்கான ணைப்பு: 

http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

[ ஜீவீ + வீஜீ விருது ]



 

இரண்டாம் விருதுக்கான அறிவிப்பு பற்றிய 

வெளியீட்டுக்கான ணைப்பு: 

http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html

[ சேஷ் விருது ]

 


மூன்றாம் விருதுக்கான அறிவிப்பு பற்றிய 

வெளியீட்டுக்கான ணைப்பு: 



[ கீதா விருது ]

 


நான்காம் அறிவிப்பு


  ’ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது ’ 


 

 


இந்த நம் சிறுகதை 
விமர்சனப்போட்டிகளில் 
மிக அதிகமான தடவைகள்
ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
திருமதி. இராஜராஜேஸ்வரி 
அவர்களின் சாதனைகளை
கெளரவிக்கும் விதமாக 
இந்த விருதுக்கு
‘ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’
என மிக நீ...ண்...ட 
கம்பீரமான பெயர் 
சூட்டப்பட்டுள்ளது.

-oOo-




 


 

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் அஷ்டகம்
படிக்க விரும்புவோருக்கு மட்டும்
இதோ இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html




இந்தத்தொடர் போட்டியில் 
மூன்று முறை அல்லது 
மூன்று முறைகளுக்கு மேல் 
’ஹாட்-ட்ரிக்’ பரிசினை 
வென்றுள்ளவர்களுக்கு மட்டும் 
இந்த விருது வழங்கப்படுகிறது. 


இதற்கான பரிசுத்தொகை: 

முதலிடம்  ரூ. 150 

இரண்டாம் இடம் ரூ. 100 

மூன்றாமிடம் 
[ இருவருக்கு ]
ரூ. 75+75 = 150



இந்த

 
 ஸ்ரீ ராஜராஜேஸ்வரி  


விருதினைப் பெற 
தகுதியுடையோர் பட்டியல் இதோ:

 

முதலிடம்

      

’மணிராஜ்’
திருமதி:
 இராஜராஜேஸ்வரி
அவர்கள்

ஏழுமுறை ஹாட்-ட்ரிக் 
அடித்தவர்கள் 

http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html


!!! ! !!!




 

இரண்டாமிடம்

   

’கீதமஞ்சரி’
திருமதி.
 கீதா மதிவாணன்
அவர்கள்

ஐந்துமுறை ஹாட்-ட்ரிக் 
அடித்தவர்கள் 




!! ! !!






 


மூன்றாமிடம்  ( இருவர் )

 

   

 



'காரஞ்சன் (சேஷ்)’   
 திரு. E.S. சேஷாத்ரி 
அவர்கள்.

 and  


'மாயவரத்தான் MGR’ 
 திரு. ரவிஜி 
அவர்கள்.


இருவருமே தலா
நான்குமுறை ஹாட்-ட்ரிக் 
அடித்தவர்கள் 




! ! ! !






 


 






அனைவரும் மிகுந்த ஆவலுடன் 
எதிர்பார்க்கும் 
VGK-31 TO VGK-40 
ஒட்டுமொத்த 
வெற்றியாளர்கள் பட்டியல் + 
ஒவ்வொருவருக்குமான 
பரிசுத்தொகைகள்
பற்றிய விபரங்கள்
விரைவில் வெளியிடப்படும்.

அதற்கு முன்பு  இந்த நம் 
போட்டியைப் பற்றிய
மேலும் பல்வேறு அலசல்கள் +
புள்ளிவிபரங்கள் தனிப்பதிவாக
பல்வேறு படங்களுடன் 
மிகவும் சுவாரஸ்யமாக
வெளியிடப்பட உள்ளன.

இன்று இரவோ அல்லது 
நாளை காலையோ
வெளியிடப்படலாம்.

காணத்தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !!








என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

31 comments:

  1. எமது பெயரிலும் விருதளித்துப்பெருமைப்படுத்தியதற்கு
    மனம் நிறைந்த நன்றிகள்..!

    பரிசு பெற்ற அனைவருக்கும்
    இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  2. எமது பெயரிலும் விருதளித்துப்பெருமைப்படுத்தியதற்கு
    மனம் நிறைந்த நன்றிகள்..!

    பரிசு பெற்ற அனைவருக்கும்
    இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  3. திருச்சியில் மையம் கொண்டு உலகமெங்கும் அடித்து வரும் வைகோ பரிசு மழை.

    ReplyDelete
  4. பரிசுகளைக் கொடுத்து சிறப்பிப்பதோடு பரிசினைப் பெற்றவர்கள் பெயரில் விருதுகளையும் கொடுத்து சிறப்பிக்கும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி கோபு சார்.

    திருமதி இராஜராஜேஸ்வரி மேடத்தின் சாதனைகளை சிறப்பிக்கும் விதமாய் வழங்கப்பட்டுள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருதை நானும் பெறுகிறேன் என்பதில் அளவிலா மகிழ்ச்சி. மிக்க நன்றி சார்.

    என்னோடு இந்த விருதினைப் பெறும் திருமதி. இராஜராஜேஸ்வரி மேடம், திரு.சேஷாத்ரி அவர்கள், திரு.ரவிஜி அவர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஒவ்வொருவரும் பல்வேறு வகைகளில் பரிசு பெற்றிருக்கிறார்கள். படிக்கும்போது குழப்பமாக இருக்கிறதே... எப்படி மேனேஜ் செய்தீர்கள்?

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். November 5, 2014 at 5:51 AM

      அன்புள்ள ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
      வாங்கோ, வணக்கம்,

      //ஒவ்வொருவரும் பல்வேறு வகைகளில் பரிசு பெற்றிருக்கிறார்கள். படிக்கும்போது குழப்பமாக இருக்கிறதே...//

      இதற்கு அடுத்து நான் வெளியிடப்போகும் பதிவு மிக மிக முக்கியமானது. மிகவும் சுவாரஸ்யமானது. மொத்தமாக நடுவர் அவர்களின் விமர்சனத்தேர்வுகளின் அடிப்படையில் 198 பரிசுகளும், என்னால் தனிப்பட்ட முறையில் 57 பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆகமொத்தம் அறிவிக்க முடிந்த பரிசுகளின் எண்ணிக்கை = 255.

      இதைத்தவிர அறிவிக்க இயலாத பரிசுபெற்ற நபர்களும் இந்த ஆட்டத்தில் பலர் உள்ளார்கள். அதாவது விமர்சனப்பரிசுகள் ஏதும் பெறாமல் போட்டியில் கலந்துகொண்டதற்காக மட்டுமே என்னால் அளிக்கப்பட்ட ‘போனஸ் பரிசுகள்’ மட்டும் பெற்றவர்கள். அது ஹனுமார் வால் போன்ற மிகப்பெரிய லிஸ்ட் ஆக உள்ளது. அவற்றை ஒருசில குறிப்பிட்ட காரணங்களால் எனக்கு வெளியிட விருப்பமில்லாமல் உள்ளது]

      இந்த அறிவிக்கத்தகுந்த 255 வெற்றியாளர்களின் பெயர் + அவர்களின் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படத்துடன் அடுத்த பதிவு அமர்க்களமாக வெளியிடப்பட உள்ளது.

      அதை மட்டுமாவது அவசியமாக தாங்கள் ஊன்றி கவனித்துப் பார்த்தீர்களானால் தங்கள் குழப்பங்கள் அனைத்துமே விலகிவிடும் என்பதை சர்வ நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்.

      //எப்படி மேனேஜ் செய்தீர்கள்?//

      மிக மிக கஷ்டப்பட்டுதான் மேனேஜ் செய்துள்ளேன். நான் இரவினில் சரிவரத் தூங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிறது ஸ்ரீராம்.

      இந்தப்போட்டி மட்டும் அல்ல ஸ்ரீராம். நான் எந்த ஒரு பொறுப்பினை ஏற்றுக்கொண்டாலும் [வீட்டிலோ, அலுவலகத்திலோ, வேறு எங்கோ] என் வேலைகளில் ஒரு முழுமையும் [PERFECTION], தனித்தன்மையும், கலாரசனையும் அதில் கலந்திருக்கும்.

      அதே சமயம் ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் அனைவரும் ரஸித்துப்பாராட்டும்படியாகவும் அது இருக்கும்.

      நான் எடுத்துக்கொண்ட என் வேலைகளில் எனக்கே முழுத்திருப்தி ஏற்படும்வரை என் எண்ணமெல்லாம் அதிலேயே முழுவதுமாக ஒன்றிப்போய்விடும். இதில் நான் மூழ்கியிருக்கும்போது பிறர் பேசுவதோ செய்வதோ என் கவனத்திற்கே வராது.

      நான் ஒரு ஸ்ட்ராங்க் காஃபி பிரியன். ஒரு நாளைக்கு குறைந்தபக்ஷம் நான்கு முறை அதனை ரஸித்து ருசித்துக் குடிப்பவன். இந்த ஓராண்டில் எவ்வளவோ முறை என் மனைவி வைத்துவிட்டுச் சென்ற, எனக்கு மிகவும் பிடித்தமான சூடான சுவையான காஃபியைக்கூட குடிக்காமல் மறந்துபோய் ஆற வைத்துள்ளேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்த அளவுக்கு இதில் மிகத்தீவிரமாகவே ஈடுபட்டு வந்துள்ளேன்.

      பிறர் தொந்தரவுகள் ஏதும் இல்லாமல் சிந்தித்துச் செயல்படக்கூடிய இரவுப்பொழுதுகளை நான் தூங்காமல் பெரும்பாலும் பயன்படுத்திக்கொண்டு வந்துள்ளேன். இதனால் என் உடல்நிலை ஓரளவு பாதித்துள்ளது என்பதும் உண்மைதான். இதிலிருந்து நான் நிச்சயம் வெளியேறித்தான் ஆகவேண்டும் என்பது எனக்கே நன்கு தெரிகிறது. பார்ப்போம்.

      //வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

      ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      பிரியமுள்ள கோபு

      Delete
    2. நீங்கள் சொல்லியுள்ளதைப் பார்க்கும்போது மனதுக்குக் கஷ்டமாகவே இருக்கிறது. இரவு பகல் பாராது அதே சிந்தனை, இஷ்டமான காபியைக் கூடத் துறந்து.... இப்படி எல்லாம் கூட பாடுபடத் தோன்றுமா என்று பிரமிப்பாகவே இருக்கிறது. உடல்நிலையில் கவனம் வைக்கவும்.

      உங்கள் வித்தியாசச் சிந்தனை பற்றி அறிந்திருக்கிறேன். நண்பர்களின் விசேஷ நாட்களுக்கு உங்களின் பண விசிறி போன்ற வித்தியாசமான கற்பனைகளால்!

      Delete
  6. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    இவர்களின் சாதனைகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது ’பெறும் கீதமஞ்சரி, சேஷாத்ரி, ரவிஜி மூவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    பரிசு மழை பொழியும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    தன் பணியை மிக சிறப்பாக செய்த நடுவர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்! என்னுடன் விருதினைப் பெறும் அனைவருக்கும் என் பாராட்டுகள்! திரு வைகோ சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. November 5, 2014 at 6:53 AM

      //’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்! என்னுடன் விருதினைப் பெறும் அனைவருக்கும் என் பாராட்டுகள்! திரு வைகோ சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      Delete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. ராஜராஜேஸ்வரி பரிசு பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். எல்லாவிதத்திலும் தகுதியானவர்களே.

    ReplyDelete
  10. உங்கள் உடல்நிலைதான் இப்போது மிக முக்கியம். அதைக் கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா. நல்ல ஓய்வும், தூக்கமும் உங்களுக்கு மிக அவசியம்.

    ReplyDelete
  11. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருதைப் பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    'இன்னும் என்ன புதுமை வைத்திருக்கிறீர்கள்' என்று நான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்து விட்டீர்கள்! இன்னும் 255 பரிசா? மயக்கமா வருது சார்! எப்படி சார் இது? நம்பவே முடியவில்லை.பார்த்துப் பார்த்து, தனித் தனியாகப் பிரித்து எத்தனை பரிசுகள்! நிச்சயம் இதற்காக உங்கள் உடல்நிலையையும் பாராமல் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறீர்கள்.

    உங்கள் போட்டியில் பங்கு கொண்ட அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு பரிசைக் கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று நினைத்து புதிசு புதுசாக விருதுகளை உண்டாக்கி, கூடவே பணப்பரிசும் கொடுத்து கௌரவிக்கும் அள்ளிக் கொடுக்கும் வள்ளலான உங்களுக்கு 'பதிவுலகக் கர்ணன்' என்ற பட்டத்தை நான் அளிக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். (இதுவரை இந்தப் பட்டம் தங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.)

    உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.இன்னும் நான்கு நாட்கள்தான்....அதன் பிறகு நல்ல ரெஸ்ட் எடுத்து பிள்ளை வீட்டுக்கெல்லாம் சென்று விட்டு வந்து அடுத்த புத்தாண்டு 2015 முதல் உங்கள் பதிவுலக எழுத்துக்களைத் தொடருங்கள்!

    ReplyDelete
  12. கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். அதிலும் கௌரவப் படுத்தி, அவர்களின் பெயராலும்
    பரிசுகளை அளித்து, இவையெல்லாவற்றையும் செய்ய ஒரு அலாதியான அன்புள்ளம் வேண்டும். எல்லாவிதத்திலும்,எல்லோருக்கும், ஸந்தோஷமான ஒரு பரிசுச்
    சாரலை அநுபவிக்கக் கொடுத்த உங்களுக்கும்,பெற்றுக்கொண்ட
    யாவருக்கும், என் தனித்தனியான பாராட்டுகள். அன்புடன்

    ReplyDelete
  13. உங்கள் ஆரோக்கியம் என்றும் உயர்வாக இருக்க பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  14. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
    செய்யும் காரியம் நன்றாக நடைபெற வேண்டும் என்ற கவனத்தில் உடல்நலததை அலட்சியம் செய்யக் கூடாது.
    உங்களுக்கு பதிவுலக கர்ணன் பட்டம் கொடுத்து இருக்கும் ராதாபாலு அவர்களுக்கு நன்றி.
    பதிவர்களுக்கு பின்னூட்டம் கொடுத்து ஊக்குவிப்பதில் கொடைவள்ளல், இப்போது பரிசு மழையை கொட்டிக்கொண்டு இருக்கும் கொடை வள்ளல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. //நான் எடுத்துக்கொண்ட என் வேலைகளில் எனக்கே முழுத்திருப்தி ஏற்படும்வரை என் எண்ணமெல்லாம் அதிலேயே முழுவதுமாக ஒன்றிப்போய்விடும். இதில் நான் மூழ்கியிருக்கும்போது பிறர் பேசுவதோ செய்வதோ என் கவனத்திற்கே வராது. //

    என்னைப் போலவே ஒருவர்!

    ஜீவீ-வீஜீ விருதின் பெயர்ப் பொருத்தம் ரொம்ப சரி தான்!

    ReplyDelete
  16. போட்டியில் பங்கேற்று சாதனை படைத்தவர்களின் பெயர்களில் விருதுகள் ஏற்படுத்தி அவர்களுக்கே விருது கொடுப்பது இதுவரை யாரும் செய்யாத புதுமை தான். புதுப்புது விருதுகளை ஏற்படுத்திப் பரிசுகளை அள்ளிக் கொடுப்பதில் அலாதி இன்பம் காணும் கோபு சாருக்குத் திருமதி இராதாபாலு அவர்கள் கொடுத்திருக்கும் பதிவுலகக் கர்ணன் என்ற பட்டம் மிகப்பொருத்தம் தான்.
    போட்டி முடிந்த பிறகு உடல்நலனிலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.
    ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி விருது பெரும் சாதனையாளர்க்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  17. தூக்கம் தொலைத்து பிலாக்ல கவனமா இருந்தாலும் போகட்டும்.. சூடான காபி ஆற விட்டீங்களா? நியாயமா?

    உடல் நலத்தில் கவனம் செலுத்த கொஞ்சம் ஓய்வு எடுங்கள் சார்.

    ReplyDelete
  18. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    ’VGK-10 மறக்க மனம் கூடுதில்லையெ’

    இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://unjal.blogspot.in/2014/11/4.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  19. வெற்றித் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இதில் இன்று விருதுபெற்றுள்ள நம் சின்ன வாத்யார் திரு. ரவிஜி மாயவரத்தான் MGR அவர்களின் வருகை இதுவரை நடைபெறாவிட்டாலும் அவருக்கும் என் நன்றிகள்.

    அடுத்தடுத்த, இந்த வெற்றிவிழா நிகழ்ச்சிகள் வெளியீட்டு வேலைகளிலும், அதையடுத்து உடனடியாக வரவிருக்கும் என் வெளிநாட்டுச்சுற்றுலா வேலைகளிலுமான பல்வேறு ஆயத்தப்பணிகளில் மூழ்க வேண்டியிருப்பதால், அன்புடன் வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது PRACTICALLY NOT POSSIBLE ஆகவே உள்ளது.

    இது உங்கள் வீட்டு விழா என்பதையும், நம் வீட்டு விழா என்பதையும் யாரும் தயவுசெய்து மறக்காதீங்கோ. நமக்குள் FORMALITIES எல்லாம் எதற்கு?

    தினமும் வருகை தந்து, மனம் திறந்துபேசி, கருத்துக்கள் அளித்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]

    ReplyDelete
  20. மாயவரத்தான் MGR என்கிற திரு. ரவிஜி அவர்கள் தான் பெற்றுள்ள இந்த விருதினைப்பற்றி தன் பதிவினில் சிறப்பித்து எழுதியுள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு:

    http://mayavarathanmgr.blogspot.in/2014/11/blog-post.html

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திரு. ரவிஜி அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் VGK

    ReplyDelete
  21. உடல் நிலை மிகவும் முக்கியம் வை.கோ. சார். அதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.....

    பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. பரிசு சுனாமி வந்து விட்டது.

    ReplyDelete
  23. பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  24. சொல்ல ஒரு வார்த்தை இல்லை.

    வியந்து, மயங்கி நிற்கிறேன்.

    ReplyDelete
  25. பரிசு பெற்றவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. பரிசு வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. விருது பெற்ற அனைவர்க்கும் எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete