என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 7 நவம்பர், 2014

சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழா - நன்றி அறிவிப்புஅன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

நாம் அறிவித்திருந்த நம் ’சிறுகதை விமர்சனப்போட்டி’ என்ற மாபெரும் விழா 14.01.2014 [பொங்கல் தினத்தன்று] ஆரம்பிக்கப்பட்டு, தொய்வேதும் இல்லாமல் தொடர்ச்சியாக கடந்த 40 வாரங்களாக வெற்றிநடை போட்டு தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 20.10.2014 அன்று போட்டிக்கான அனைத்து 40 கதைகளும் வெளியிடப்பட்டு, 31.10.2014க்குள் போட்டிக்கான அனைத்துப் பரிசுகள் வென்றவர்களையும் அடையாளம் காட்டி சிறப்பிக்க முடிந்தது. இன்னும் இன்றுவரை அது ஒரு மாபெரும் வெற்றிவிழாவாக நம்மால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கடந்த ஓரிரு வாரத் திருவிழாவாக மேலும் பல்வேறு புதிய கூடுதல் பரிசுகளும் விருதுகளும் அளித்து, நம் எழுத்துலக சாதனையாளர்களை மேலும் நம்மால் இயன்றளவு கெளரவித்து நாம் கொண்டாடிவருகிறோம் என்பதை நினைக்க மனதுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. 

இந்த மாபெரும் திருவிழா மிகச்சிறப்பாகவும், வெற்றிகரமாகவும், இதுவரை யாருமே நினைத்துப் பார்க்காத வகையில் புதுமையாகவும், ஆக்கபூர்வமாகவும், மிகச்சிறப்பானதோர் அடிப்படை நோக்கத்துடனும், நடந்து முடிந்துள்ளதில் நிறைய பேர்களின் ஒட்டுமொத்த ஈடுபாடும், ஆர்வமும், பங்களிப்பும், அர்பணிப்புகளும் அடங்கியுள்ளன. ஒவ்வொருவராக இப்போது பார்ப்போமா !உயர்திரு நடுவர் திரு. ஜீவி அவர்கள்:

மிகச்சிறப்பாக என்னுடன் இணைந்து இராப்பகல் தூக்கமின்றி, இந்த ஒரே சிந்தனையுடன் நடுவராக இருந்து நியாயமானத் தீர்ப்புகளை வேகமாகத் தந்து உதவிய திரு. ஜீவி சார் அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

எழுத்தாற்றலில் மிகத்திறமையும் அனுபவமும் வாய்ந்த இவர், என்மீது கொண்ட தனிப்பிரியத்தினாலும், அவருக்கே இந்தப்புதுமையான போட்டியின் மீது இருந்த ஆர்வத்தினாலும் நடுவராக இருக்க சம்மதித்ததை என் பாக்யமாக நினைத்து மகிழ்கிறேன். 

போட்டிக்கு வரும் ஏராளமான விமர்சனக்கட்டுரைகள் ஒவ்வொன்றையும் பலமுறைகள் திரும்பத்திரும்பப்படித்து, அவற்றில் வடிகட்டி, வடிகட்டி, மிகச்சிறப்பாக உள்ள சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவது என்பது, சாதாரணதோர் காரியமே இல்லை. இதை ஏனோ தானோ என அவரால் செய்யவே முடியாது. எழுதியவர் யார் என்றே தனக்குத் தெரியாத நிலையிலும், எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தரத்தை மட்டுமே, தாரக மந்திரமாக வைத்து, எந்தவித பாரபட்சமும் இன்றி, தேர்வுகள் செய்து தந்துள்ளார்கள். 

மிகவும் கடினமான இந்த வேலைகளை அவரால் மட்டுமே இவ்வளவு நியாயமாகவும், மிகச்சரியாகவும், வேகமாகவும் செய்ய முடியும் என்பது என் அபிப்ராயம். 

மேலும் இவர் நடுவராக பொறுப்பேற்றுக்கொண்டு அவ்வப்போது விமர்சனதாரர்களுக்குக் கொடுத்துள்ள பயனுள்ள ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றால் மட்டுமே இந்த நம் சிறுகதை விமர்சனப் போட்டிக்கே ஓர் இலக்கிய அந்தஸ்து கிடைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.  

பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய 
நம் நடுவர் திரு. ஜீவி சார் அவர்களுக்கு 
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

நம்மால் என்றும் 
மறக்க முடியாததோர் மாமனிதர் !
வாழ்க .... வாழ்கவே !!போட்டியில் பங்கு கொண்டவர்கள்:

பரிசினைப்பற்றியெல்லாம் கவலையே படாமல், தங்களின் எழுத்துத் திறமையை பரிசோதித்துக்கொள்ள ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்ததாகவே நினைத்து, போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன், தொடர்ச்சியாகவோ, அவ்வப்போதோ, எப்போதோ சிலமுறைகள் மட்டுமோ, ஒரேஒருமுறை மட்டுமோ கலந்துகொண்டு, ஆயிரக்கணக்கான விமர்சனங்களை அள்ளி அள்ளி எழுதி அனுப்பியுள்ள அனைவருக்கும் என் நன்றிகள்.வலைச்சர நிர்வாகி அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்:

இந்த நம் சிறுகதை விமர்சனப் போட்டிகளைப்பற்றி, வலைச்சரத்தின் இடது பக்க ஓரமாக நீண்ட நாட்கள் வெளியிட்டு விளம்பரப்படுத்தி உதவிய அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.2014ம் ஆண்டு வலைச்சர ஆசிரியர்களில் சிலர்:

இந்த ஆண்டு வலைச்சர ஆசிரியராக பொறுப்பில் இருந்தவர்களில் சிலர், நம் சிறுகதை விமர்சனப்போட்டிகளைப்பற்றி, வலைச்சரப் பக்கங்களை அன்றாடம் வாசிக்கும் அனைவரும் அறியுமாறு, அறிமுகம் செய்து சிறப்பித்துள்ளனர். அத்தகைய அறிமுகங்கங்கள் செய்த வலைச்சர ஆசிரியர்களில் என் கவனத்திற்கு வந்தவர்கள்:  

01] கீதமஞ்சரி  திருமதி. கீதாமதிவாணன் அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/01/blog-post_22.html

02] தளிர் திரு. சுரேஷ் அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html

03] திருமதி. ஏஞ்சலின் அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/05/blog-post_4.html

04] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/05/blog-post_9.html

05] மணப்பாறை திரு. அ. பாண்டியன் அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_26.html

06] திருமதி. மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html

07] காவியக்கவி திருமதி இனியா அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/07/blog-post_25.html

08] அரட்டை திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/08/3.html

09] மாயவரத்தான் MGR திரு. ரவிஜி அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_17.html

10] மீண்டும் கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_21.html

11] Mr. Thulasidharan V Thillaiakathu அவர்கள்

அவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.பின்னூட்டமிட்டவர்கள்:

ஓரளவு தொடர்ச்சியாகப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சிலரும், அவ்வப்போது பரிசுகள் பெற்றுள்ள சிலரும், போட்டிகளிலேயே சுத்தமாகக் கலந்துகொள்ளாத சிலரும், அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் வருகை தந்து, அனைவரின் விமர்சனங்களையும் ரஸித்துப்படித்துப்பார்த்து, தங்களின் மிகச்சிறப்பானக் கருத்துக்களை எடுத்துக்கூறி, பரிசு பெற்றவர்களை மனதாரப் பாராட்டி, வாழ்த்திப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தி வந்துள்ளனர். இது அவர்களது உயர்ந்த உள்ளத்தினையும், நல்ல பண்புகளையும் காட்டுவதாக உணர்கிறேன். 

அதுபோன்று அன்புடன் வருகை தந்து பண்புடன்  வெற்றியாளர்களை மனதாரப் பாராட்டிப் பின்னூட்டமிட்டு, உற்சாகப் படுத்தியுள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நான் என் நன்றிகளைக்கூறிக்கொள்கிறேன். 

[பிறரைப் பாராட்ட நல்ல மனம் இருந்தால் போதும் .... பணம் வேண்டியது இல்லை. அந்த நல்ல மனமும் குணமும் எல்லோருக்கும் எப்போதும் எல்லோர் விஷயத்திலும் இருப்பது இல்லையே என்பதை நினைத்து சற்றே வருந்தியுள்ளேன். எல்லோருக்கும் இதற்கெல்லாம் போதுமான ஆர்வமும் நேரமும் இருக்காது என்பதையும் நான் நன்கு உணர்கிறேன். 

பின்னூட்டம் இடுபவர்கள் எல்லோருக்குமே ஓர் பரிசு உண்டு என்று நான் அறிவித்திருந்தால் மேலும் பல பின்னூட்டங்கள் வந்திருக்கலாமோ என்னவோ :))))) ]


தான் அனுப்பிவைத்த விமர்சனத்திற்குப் பரிசு ஏதும் உண்டோ இல்லையோ அதைப்பற்றியெல்லாம் சற்றும் கவலையே படாமல், பரிசுக்குத்தேர்வான அனைத்து விமர்சனங்களையும், பொறுமையாகவும், ஆர்வமாகவும் படித்துப்பார்த்துவிட்டு, போட்டிக்கான கதைகள் உள்பட, என் அனைத்துப்பதிவுகளிலும் கையோடு, குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டமாவது அளித்துள்ள பெருமைக்கு உரியவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப்போட்டிக்கான பதிவுகள் மட்டுமல்லாமல், நான் இதுவரை வெளியிட்டுள்ள அனைத்துப் பதிவுகளிலுமே [ As on Date: 680 Posts ] இவர்களின் பின்னூட்டம் ஏதும் இல்லாததோர் பதிவே கிடையாது என்று என்னால் அடித்துச்சொல்ல முடியும்.  :))))) !!!!! அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், நல்வாழ்த்துகள் மற்றும் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   

[அவர்களின் http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_23.html#comment-form  பதிவினில் நான் கொடுத்திருந்த ஏராளமான [ 24 ] பின்னூட்டங்களை இன்று அகஸ்மாத்தாக என்னால் மீண்டும் படிக்க நேர்ந்தது. என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. 

என்றும் என்னால் மறக்கவே முடியாத இனிமையான நினைவலைகளை மீட்டுத்தரும் மிக அற்புதமான நாட்கள் அவை .... பாறையின் மீது செதுக்கிவைத்த சொற்சித்திரமாக இன்றும் என் பின்னூட்டங்கள் அங்கு அப்படியே காட்சியளிப்பதில் எனக்கும் ஓர் தனி மகிழ்ச்சியே!  

இதுபோல எவ்வளவோ ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களை இவர்களுக்கு நானும் முன்பெல்லாம் வாரி வாரி வழங்கியிருந்தேன் என்பதை நினைக்கவே எனக்கும் இன்று ஒரே ஆச்சர்யமாகத்தான் உள்ளது.]
என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்கள்:

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ரிஷபன் அவர்களின் சிறுகதைகள் இதுவரை தமிழகத்திலுள்ள அனைத்து வார/மாத இதழ்களிலும் அச்சேறி பிரசுரமாகியுள்ளன. அதன் எண்ணிக்கை சமீபத்தில் 1000ஐத் தாண்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 

2005ம் ஆண்டு வரை குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னை, அவ்வப்போது ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி தொடர்ந்து என்னை எழுதவைக்கத் தூண்டுகோலாக இருந்து, எனக்கு ஓர் வலைத்தளமும் உருவாக்கிக்கொடுத்து, நானும் இன்று ஓர் எழுத்தாளன் + பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளர்த்துவிட்ட பெருமை யாவும் திரு. ரிஷபன் சார் அவர்களை மட்டுமே சாரும். 

திரு. ரிஷபன் அவர்களும் இந்த நான் நடத்தும் போட்டிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்பது, அவர் அவ்வப்போது கொடுத்துள்ள ஒருசில பின்னூட்டங்களால் என்னால் நன்கு அறியமுடிகிறது. இதோ அவற்றில் ஒன்று .... ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக .....


என் மேற்படி பதிவினில் திரு. ரிஷபன் அவர்கள் கொடுத்துள்ள பின்னூட்டம் இதோ:

ரிஷபன் has left a new comment on your post "இப்பொழுது திருப்தியா கோபு சார்?..": 

//எழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். பரவசத்தைத் தொடர்ந்த பேரின்பமோ, யுத்தத்தைத் தொடர்ந்த வசீகர ஆக்கிரமிப்போ எதுவாக இருந்தாலும் அதை விளைவித்த எழுத்தாளனின் எழுத்தின் மீதான ப்ரியமாக மலரும். வாசகனின் இந்தப் ப்ரியத்தை தன் எழுத்துக்குப் பெறுவது தான் எழுத்தாளனின் இலட்சியமாகும். எழுதுவது என்பதே அந்த ப்ரியத்தை வென்று எடுப்பதற்கான போராட்டம் தான்.// 

- இது நடுவர் திரு. ஜீவி அவர்கள் என் கதைக்கான விமர்சனத்தில் சொல்லியுள்ளது


//நடுவர் பதவிக்கு மிகச் சரியான ... பொருத்தமான .. அற்புதமான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். !  //

- இது திரு. ரிஷபன் அவர்கள் எனக்குச் சொல்லியுள்ளது.


என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  தங்கள் வெற்றியினை தங்கள் பதிவினில் கொண்டாடிக் கொண்டவர்கள்:

விமர்சனம் எழுதி அனுப்பி வைத்து போட்டியில் பரிசினை வென்றவர்களில் சிலர் மட்டும், அதனைப் பெருமையாக தங்களின், வலைத்தளப் பக்கத்தில் தனிப்பதிவாகவே வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.’வெற்றியோ தோல்வியோ இரண்டும் எனக்குச் சமமே ’
என நினைத்து செயல்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்:

விமர்சனம் எழுதி அனுப்பி தங்களின் விமர்சனம் தேர்வாகவில்லை என்று தெரிந்தபிறகும்கூட, அந்தத் தாங்கள் போட்டிக்கு அனுப்பி வைத்த விமர்சனத்தினை தங்கள் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள் ... ஒருசிலர். இன்னும் இன்றும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள் ... வேறு சிலர்.

அவர்களின் இத்தகைய செயல் எழுத்துலகில் மிகவும் ஆரோக்யமானதுதான். வரவேற்கப்பட வேண்டியதுதான். அவர்களின் இந்தச் செயல்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.


 

போட்டி ஆரம்பிக்கும் முன்பே நான் நடத்தியதோர் 
கருத்துக் கணிப்பினில் பங்குகொண்டு சிறப்பித்தவர்கள்:

இதுபோன்றதோர் புதுமையான இந்தப்போட்டியை நான் ஆரம்பிக்க நினைத்த ஓரு மாதத்திற்கு முன்பே [DURING DECEMBER 2013], குறிப்பிட்ட ஒருசில பதிவுலக நட்புகளுக்கு மட்டும், என் திட்டத்தை விவரித்து DRAFT OF http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html  (டும்..டும்...டும்...டும்... பதிவு) மின்னஞ்சல் மூலம் அனுப்பி, பொதுவாக இதற்கான வரவேற்புகள் எப்படி இருக்கும்? இதுபோல நான் செய்யலாமா? செய்தால் முதலில் தாங்கள் இந்த என் போட்டிகளில் கலந்துகொண்டு ஆதரிப்பீர்களா? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டு ஓர் கருத்துக்கணிப்பே நடத்தியிருந்தேன். 

அதற்கு பெரும்பாலானவர்கள் தங்களின் கருத்தினை விரிவாகவும் விரைவாகவும் எனக்கு பதிலாக மின்னஞ்சலில் அளித்திருந்தார்கள். [அதில் மிகச் சிலரிடமிருந்து மட்டும் இன்றுவரை எனக்கு பதிலே வரவில்லை. மெளனம் சாதித்து சாதனை புரிந்துள்ள அவர்களுக்கும் என் நன்றிகள்.]  பெரும்பாலானோர் அனுப்பியிருந்த பதில் கருத்துக்கள் பலவும் பலமாதிரி இருந்தன. அவற்றைச் மிகச்சுருக்கமாக இப்படிப் பிரித்துக்காட்டியுள்ளேன்:

”நடத்துங்கள், நான் நிச்சயமாகக் கலந்து கொள்வேன். எல்லாப்பரிசுகளையும் நானே தட்டிச்செல்ல இப்போதே தயாராகி விட்டேன். போட்டி பற்றிய அதிகாரபூர்வமான தங்களின் அறிவிப்பினைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளேன்”

”நடத்துங்கள். என் ஆதரவு தங்களுக்கு நிச்சயமாக உண்டு. நானும் நிச்சயமாக பெரும்பாலான போட்டிகளில் கலந்துகொள்ள முயற்சிப்பேன்”

”பரிசுக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காக கலந்துகொள்வேன். தங்களின் கதைகளை ஊன்றி வாசிப்பதே எனக்கு மிகப் பெரிய பரிசு அல்லவா !”

”நீங்கள் தாராளமாக நடத்தலாம். ஆனால் நான் போட்டிகளில் கலந்து கொள்ளவே மாட்டேன். எட்டி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்வேன்”

”நடத்துங்கள், போட்டிகளில் கலந்துகொள்ள நானும் முயற்சிக்கிறேன். ஆனால் தொடர்ந்து கலந்துகொள்வேன் எனச் சொல்ல இயலாது”

என்னை நெகிழவைத்த ஒரிரு கடிதங்கள்:

[ 1 ] 

”தங்களிடம் நான் அன்புடன் பாசத்துடன் பிரியத்துடன் சற்றே அதிக உரிமை எடுத்துக்கொண்டும் பழகி வருகிறேன். தங்களுக்கு என் உள்ளத்தில் மிகவும் உயர்வான இடம் கொடுத்து வைத்துள்ளேன். தங்களிடமும் தங்கள் படைப்புகளிலும் எனக்கு எப்போதுமே மிகுந்த ஆர்வம் உண்டு. இதுவரை தங்களின் படைப்புகள் எதையும் நான் வாசிக்கத்தவறியது இல்லை. பலவற்றிற்கு கருத்தளித்திருக்கிறேன். நேரமின்மை + உடல்நலக்குறைவால் சிலவற்றிற்கு கருத்தளிக்காமலும் இருந்துள்ளேன். 

ஏனோதானோ என கருத்தளிப்பதில் எனக்கு விருப்பம் கிடையாது என்பது தங்களுக்கே நன்கு தெரியும். மெயில் மூலமும், தொலைபேசி மூலமும் பலமுறை இதை நான் தங்களுக்குச் சொல்லியும் உள்ளேன். இதுபோல உள்ள என் நிலைமையில் நான் தங்கள் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன். 

விமர்சனம் என்றும் அதுவும் ஒரு போட்டிக்கு என்றும் எழுத ஆரம்பித்தால் நிறைகள் மட்டுமல்லாது குறைகளையும் எடுத்துச்சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாய நிலைமை எனக்கு ஏற்படும். அது என்னைப்பொறுத்தவரை, அதுவும் உங்கள் விஷயத்தில், மிகவும் தர்மசங்கடமானதும், முடியவே முடியாத காரியமும் ஆகும். 

நான் தங்களிடம் நிறைகளை மட்டுமே எப்போதும் காண்பவள். தங்களிடம் குறை என்பது எனக்கு மிகவும் கஷ்டப்பட்டுத்தேடினாலும்கூட கிடைக்காத ஒன்றாகும். தங்களிடமோ அல்லது தங்களின் படைப்புக்களிலோ பிறர் யாரேனும், சிறிய குறையேதும் சொன்னாலோ, பின்னூட்டமாக எழுதினாலோகூட, என்னால் அதனைத் தாங்கிக்கொள்ள முடிவது இல்லை. அன்பு அபரிமிதமாக போனபின் குறைகள் எப்படித் தெரியக்கூடும்? சிறு குறைகள் இருப்பினும் அவைகளும் நிறைகளாகவே தானே தோன்றக்கூடும்! அதனால் நான் போட்டியில் கலந்துகொள்ளாமல் வெளியே இருந்து வேடிக்கைப் பார்க்கவே விரும்புகிறேன். தாங்கள் இதை நிச்சயமாகப் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  


தாங்கள் மனதில் நினைத்ததோர் திட்டத்திற்கு, மிக அழகாகச் செயல் வடிவம் கொடுத்து, எப்படியும் வெற்றிகரமாக சாதித்துக்காட்டிவிடுவீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத்தெரியும். தாங்கள் தொடங்க உள்ள இந்தப்போட்டிகள் தங்களின் மனசுபோலவே வெற்றிகரமாக நடைபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். 


ஆனால் இதில் தங்களின் உடல்நலம் மிகவும் முக்கியம் என்பதை அன்புடனும், எனக்கே தங்களின் மேல் உள்ள தனி அக்கறையுடனும் வற்புருத்திக் கூறிக்கொள்கிறேன். ...................................... ! ”ooooooooooooo

[ 2 ]

என்னிடம் தனிப்பிரியமும், என் படைப்புகளில் மிகுந்த ஆர்வமும் கொண்ட என் நலம் விரும்பியான மற்றொருவர் மிகப்பெரிய மடல் எழுதியிருந்தார். அதன் சுருக்கம் இதோ:

நான் எப்போதுமே  தங்களின் நிழல் போலத்தொடர்ச்சியாகத் தொடர்ந்து தங்களின் பதிவுகளை வாசித்து வருபவன் என்பது தங்களுக்கே தெரியும். முன்பெல்லாம் தங்களின் படைப்புகள் வெளியானதும் அவ்வப்போது நீண்ட என் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளேன் என்பதும் தங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே என்னிடமும் இந்தக்கருத்துக்கணிப்பினைக்கேட்டுள்ளீர்கள். மகிழ்ச்சியே.

நல்ல தரமான படைப்புகளை பதிவுகளாக அளித்து, ஏற்கனவே வலையுலகில் ஓரளவு நல்ல பிரபலமாகியுள்ள தாங்கள், இதுபோன்ற போட்டிகளெல்லாம் நடத்தி கைப்பணத்தை செலவழிக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து. 

மொத்தத்தில் இதெல்லாம் வெட்டி வேலைகள் என்பது என் தனிப்பட்ட கருத்து. பதிவிட தன் கையில் தகுந்த தரமான சரக்கு ஏதும் இல்லாமல், இதுபோல வெட்டிவேலைகளை மட்டுமே செய்து தங்களைப் பிறர் மத்தியில் பிரபலமாக்கிக்கொள்ள நினைக்கும் சில ஆசாமிகள் இந்த வலையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நேற்றைய மழையில் இன்று முளைத்துள்ள காளான்கள் மட்டுமே. அவர்களும்கூட எப்போதாவதுதான் இதுபோன்ற வெட்டி வேலைகளைச் செய்துவருகிறார்கள். 

இதே வெட்டி வேலையை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 450 பதிவுகளுக்கு மேல் கொடுத்துள்ள, மிகத்தரமான எழுத்தாளராகிய தாங்கள் அதுவும் தொடர்ச்சியாக 40 வாரங்களுக்குச் செய்ய நினைப்பதையும், இதனால் கெடப்போகும் தங்களின் உடல் நலத்தையும் உத்தேசித்து மட்டும், உங்கள் பதிவுகளை எப்போதும் ஆர்வத்துடன் தொடர்ந்து படித்துவரும், தங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகனாகிய நான் விரும்பவில்லை. 

தாங்கள் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்சம் 12 ஆயிரம் அதிகபட்சம் UNLIMITED என்பது சாதாரணமான ஒரு தொகையே அல்ல. என்னைப்பொறுத்தவரை அது மிகப்பெரிய ஒரு தொகையாகும். அந்தப்பணத்தை வேறு ஏதாவது நல்லவழிகளில் தாங்கள் செலவழிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து” என ஒருவர் மிகவும் உருக்கமான மிக நீண்ட கடிதம், அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியிருந்தார். 

அவரே மேலும்..... ”தங்களின் இந்தப்போட்டியின் அடிப்படை நோக்கம் மிகவும் அழகானது. வரவேற்கத்தக்கது. பாராட்டப்பட வேண்டியது. தங்களின் இந்தப் புதுமையான போட்டிக்கும் நான் மேலே சொல்லியுள்ள சிலரின் போட்டிகளுக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இன்றைய வலையுலகில், பிறரின் பதிவினை ஊன்றிப்படித்து, விரிவாக பின்னூட்டம் இடுபவர்கள் என்று பார்த்தால் எனக்குத் தெரிந்து, இரண்டே இரண்டு பதிவர்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவர் ஆண், மற்றொருவர் பெண்.   மீதிபேர்கள் அனைவரும் பதிவினை முழுவதுமாகப் படிக்காமலேயே டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் கொடுப்பவர்கள் மட்டுமே” எனச் சாடியிருந்தார். 

ooooooooooooo

[அவர் சொல்லியிருந்த குறிப்பிட்ட இருவரின் பெயரையும் நான் இங்கு தனியாகக் குறிப்பிட்டுச்சொல்ல விரும்பவில்லை. அவர் சொன்ன இருவரும் என்னிடமும் மிகவும் நட்பாக இருப்பவர்கள் மட்டுமே; என் பதிவுகளிலும் நிறைய கருத்துகள் கூறியுள்ளவர்கள் மட்டுமே.  அவர்கள் இருவரிடமும் நான் இந்தக் கருத்துக்கணிப்பினையும் பெற்றுள்ளேன்.

மேலே இதற்குமுன் நான் காட்டியுள்ள கடிதம்கூட இந்த இவர் சொல்லும் இருவரில் ஒருவரான பெண்மணி எனக்கு ஆத்மார்த்தமாக எழுதியுள்ள கடிதம் மட்டுமே. 

இவர்கள் இருவர் மட்டுமே டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடாதவர்கள் என்பது அவரின் தனிப்பட்ட கருத்து + கணிப்பு ஆகும். அந்த இருவர் மட்டுமல்ல .... இன்னும் சிலரும்கூட இருக்கிறார்கள் என நானும் அவருக்கு, பிறகு எடுத்துரைத்துப் புரிய வைத்து விட்டேன்.]

ooooooooooooo


இவ்வாறு என் கருத்துக்கணிப்புகளுக்கு, பல்வேறு விதமாக பதில்கள் அளித்து, என்னை சற்றே ஸ்தம்பிக்க வைத்திருந்த, ஊக்கமளித்திருந்த, உற்சாகம் அளித்திருந்த மற்றும் என்னையே மிகவும் குழப்பி விட்டிருந்த அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான நன்றிகளை இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன். 

என் குடும்பத்தார்:


என் உடல் நலத்தினை உத்தேசித்து, நான் சதாசர்வகாலமும் கணினி முன் அமர்வதை என் குடும்பத்தாரில் சிலர் அவர்களுக்கு உள்ள உரிமையில் கண்டித்தார்களே தவிர, மற்றபடி என் விருப்பங்களுக்கும் செயல்களுக்கும், யாரும் குறுக்கே நின்று தடை செய்தது கிடையாது. பொதுவாக யாரும் அவ்வாறெல்லாம் செய்யத் துணியவும் மாட்டார்கள். என் குடும்பத்தாராகிய அவர்கள் அனைவருக்கும் நான் என் நன்றிகளைக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

’பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என அக்காலத்தில் சொல்வதுண்டு. 

அதுபோலவே நான் தூங்காமலேயே தூங்குவதுபோல பாசாங்கு செய்துவிட்டு, அனைவரும் தூங்கியபின் எழுந்து விடியவிடிய என் பதிவு வேலைகளைச் செய்த நாட்களும் பல உண்டு. அதன்பின் எல்லோரும் எழுந்து விழித்திருக்கும் விடியற்காலம் முதல் நண்பகல்வரை நான் மட்டும் தூங்கிக்கொண்டு இருந்ததும் உண்டு.
உற்சாகமளித்த உறவினர்களில் சிலர்:

என் மூத்த தமக்கை (அக்காள்), என் மூத்த பிள்ளை மற்றும் என் மூன்றாவது மருமகளின் அப்பா (என் சம்பந்தி) ஆகியோர் இந்த நான் நடத்தி வந்த போட்டிகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து, அனைத்தையும் வாசித்து மகிழ்ந்ததுடன், என்னையும் அடிக்கடி தொடர்புகொண்டு, வெகுவாகப் பாராட்டி அவ்வப்போது உற்சாகம் அளித்து ஊக்குவித்துள்ளார்கள். 

அவர்களுக்கான எவ்வளவோ வேலைகளுக்கும் இடையே, அவர்கள் மூவரும்கூட, தாங்களே முன்வந்து, இந்த என் போட்டிகளில் ஒவ்வொருமுறை வீதம் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள். 

என் குடும்ப உறவினர்களில் என் எழுத்துக்களுக்கு முழு ஆதரவாக இருந்துள்ள அவர்கள் மூவருக்கும் என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ’VGK-30 மடிசார் புடவை’ கதை விமர்சனத்திற்கு முதல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்

'VGK-24 தாயுமானவள்’ கதை விமர்சனத்திற்கு இரண்டாம் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்

’தனக்குத்தானே நீதிபதி’ போட்டியில் கலந்துகொண்டு, மிகச்சரியான 
விடையை யூகித்து எழுதி பரிசினைப் பகிர்ந்துகொண்டவர்.

இன்றுவரை, நம் நடுவருக்கேகூட இந்த விஷயங்களை நான் தெரிவிக்கவில்லை என்பதை இங்கு நான் கூறிக்கொள்கிறேன். என் உறவினர்கள் என்பதால் நடுவர் அவர்களின் தீர்ப்புகள், ஒருவேளை பாரபட்சமாக அமைந்துவிட நானே ஒரு காரணமாக இருந்துவிடக்கூடாது அல்லவா! அதனால் மட்டுமே, நான் இதை அவருக்குத் தெரிவிக்கவே இல்லை.   

ஆனால் கொஞ்சமும் பாரபட்சமற்ற நம் உயர்திரு நடுவர் திரு. ஜீவி சாரைப்பொறுத்தவரை யார் எழுதியது என்பது அவருக்கு முக்கியமல்ல; அதை அவருக்கு நான் தெரிவிக்கவோ அறிவிக்கவோ வேண்டிய அவசியமும் இந்த நம் போட்டியில் எனக்கு இல்லவே இல்லை.  

விமர்சனத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் ... அதை எப்படி எப்படியெல்லாம் கோர்வையாக, வித்யாசமான பாணியில் எழுதி இருக்கிறார்கள் என்பதை மட்டுமே ஆராய்ந்து பரிசுக்குத் தேர்ந்தெடுத்துத் தருபவராகவே இருந்து வந்துள்ளார்கள்.  மிக உன்னதமான அவரின் இந்தப்பார்வைக்கும், மிகத்துல்லியமான துலாக்கோல் போன்ற அவரின் தீர்ப்புக்களுக்கும் நான் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தனக்குத்தானே நீதிபதியாக 
இருந்து தீர்ப்பளித்தவர்கள்:


அதுபோல நானே ஒரே ஒருமுறை இந்த என் விமர்சனப்போட்டியில் வேறு யாரோபோல இரகசியமாகக் கலந்து கொண்டுள்ளேன். அதுவும் என் விமர்சன அறிவினை நம் நடுவர் அவர்களின் துலாக்கோலில் சுயமதிப்பீடு செய்துகொள்ள மட்டுமே. 

’போட்டி எண்: VGK-26 பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா !’ கதைக்குத்தான் என் விமர்சனத்தையும் எழுதி இரகசியக்குறியீட்டு எண் கொடுத்து நடுவர் அவர்களுக்கு ’கும்பலோடு கோவிந்தா’வாக அனுப்பி வைத்திருந்தேன்.

நான் எழுதி அனுப்பிய அந்த என் விமர்சனமும் நம் நடுவர் அவர்களால் இறுதியில் பரிசுக்குத் தேர்வாகவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. :))))) 

ஆனால் அந்த நான் எழுதிய விமர்சனத்தினை வாசகர்கள் அனைவரின் பார்வைக்கும், வாசித்தலுக்கும் கொண்டுசெல்ல, ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு ஓர் தனி மகிழ்ச்சி. 

‘தனக்குத்தானே நீதிபதி’ போட்டிக்கு நம் நடுவர் அவர்களால் பல்வேறு வடிகட்டல்களுக்குப்பின் சமர்பிக்கப்பட்ட ஒன்பது விமர்சனங்களில் என்னுடையதும் ஒன்று என்பதை, இங்கு நம் நடுவர் அவர்கள் உள்பட, அனைவருக்கும்  பகிரங்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அந்த என் விமர்சனத்திற்கு, போட்டியில் நீதிபதிகளாகச் செயல்பட்டுக் கலந்துகொண்ட பலரும், ’இது வெற்றிபெறக்கூடிய விமர்சனம்’  என்று கணிசமான அளவில் தீர்ப்பு அளித்திருந்தார்கள் என்பதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது.

Ref: VGK-26004  http://gopu1949.blogspot.in/2014/07/blog-post.html  { VGK's OWN }

என் மேற்படி விமர்சனத்தைப் படித்து, சிரித்து, ரஸித்து, இது நிச்சயமாகப் பரிசுக்குத்தேர்வாகும் என்ற நம்பிக்கையுடன் தீர்ப்பு அளித்திருந்த அனைத்து நீதிபதிகளுக்கும் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுவே என் விமர்சனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிப்பரிசாக எண்ணி மகிழ்கிறேன்.


   

இவை அனைத்துமே நம் ’சிறுகதை விமர்சனப்போட்டி’ எந்தவித பாரபட்சமும் இல்லாமல், விமர்சனதாரர்களின் எழுத்துக்களின்  தரத்தின் அடிப்படையில் மட்டுமே,  மிகச்சரியாக ... துல்லியமாக எடைபோடப்பட்டு, நம் நடுவர் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஒருசில அத்தாட்சியாக இருக்கட்டுமே என இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த நம் 40+ போட்டிகளில் மொத்தமாக 255 பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளதில், என் நெருங்கிய உறவினர்கள் மூவருக்காவது தலா ஒரு பரிசு வீதம் கிடைத்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே. 
போட்டி பற்றியதோர் சிறப்புப்பேட்டி அளித்தவர்:


  
  

http://gopu1949.blogspot.in/2014/10/blog-post.html


 


சற்றே அவசரமாகவே இருப்பினும், 
அழகாகவும் அழுத்தமாகவும், 
மஹா மஹா அழுத்தமாகவும்,  
சொல்ல வேண்டிய தனது கருத்துக்களை,  
மிகவும் சமத்தாகவும், 
அழுந்தச் சமத்தாகவும், 
சாமர்த்தியமாகவும் 
எடுத்துக்கூறிச் சிறப்பான 
பேட்டி அளித்தவருக்கு 
என் மனம் நிறைந்த இனிய 
அன்பு நன்றிகளை மீண்டும் 
இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.  

‘நேயர் கடிதம்’ பகுதியில் பங்கு கொண்டவர்கள்:

01.10.2014 அன்று நான் வெளியிட்டிருந்த ’போட்டி பற்றியதோர் சிறப்புப்பேட்டி’ என்ற பதிவினில் http://gopu1949.blogspot.in/2014/10/blog-post.html அடியேன் கொடுத்திருந்த வேண்டுகோளுக்கு இணங்க, தாங்களாகவே முன்வந்து மிகச்சிறப்பாக ‘நேயர் கடிதம்’  வரைந்து அனுப்பி மகிழ்வித்துள்ள அன்புள்ளங்களான 

  [1] பெரியவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
        http://gopu1949.blogspot.in/2014/10/blog-post_2.html 
  [2] திருமதி. ஞா. கலையரசி அவர்கள்
        http://gopu1949.blogspot.in/2014/10/3.html 
  [3] திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 
        http://gopu1949.blogspot.in/2014/10/4.html
  [4] விமர்சன வித்தகி திருமதி கீதா மதிவாணன் அவர்கள் 
        http://gopu1949.blogspot.in/2014/10/5.html
  [5] அருமை நண்பர் மாயவரத்தான் எம்.ஜி.ஆர். திரு. ரவிஜி அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/6-mgr.html 
  [6] பேரன்பிற்குரிய ராதாபாலு அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/7.html 
  [7] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/8.html
  [8] பேரன்புக்குரிய ஜெயந்தி அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/9.html
  [9] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/10.html
[10] அருமை நண்பர் திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
       http://gopu1949.blogspot.in/2014/10/11.html 
[11] திரு. E S சேஷாத்ரி அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/12-es-seshadri.html

ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அதுவும் இந்தப்போட்டிகளில் அவ்வப்போது கலந்துகொண்டு பரிசு பெற்றவர்களில் சிலர்கூட கடைசிவரை ’நேயர் கடிதம்’ எதுவும் எழுதி அனுப்பாமல் இருந்தும்கூட, இந்தப்போட்டிகளில் பரிசு ஏதும் பெறாத திருமதி. ஜெயந்தி யின் நகைச்சுவையான ‘நேயர் கடிதம்’ மிகவும் போற்றத்தக்க ஒன்றாக நான் நினைத்து மகிழ்கிறேன். 

 http://gopu1949.blogspot.in/2014/10/9.html
 
இந்தத் தன் நேயர் கடிதத்தை நான் வெளியிட்டதைக்கூட இன்னும் என் பதிவினில் படிக்கவே வராத, பணி ஓய்வு பெற்றும் எதற்குமே நேரமில்லாத, தன் அருமைப்பேத்தி ’லயா’க்குட்டியுடன் எப்போதும் மிகவும் பிஸியாக உள்ள, என் பேரன்புக்குரிய ’ஜெ’க்கு என் ஸ்பெஷல் நன்றிகள். 

{ தங்கள் அதிரஸம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை :( . 
நினைவிருக்கட்டும் ’ஜெ’. மறந்துடாதீங்கோ :))))))))   }நான் துவங்கிய இந்தப்போட்டிகளின் மூலம் 
இந்த ஆண்டு எனக்குக் கிடைத்த புதிய  நட்புகள்:

 
  


1] நேரில் சந்திக்கும் பாக்யமும் கிடைத்த 
    திருமதி. ராதாபாலு அவர்கள். :)

2] திருமதி. ஞா. கலையரசி அவர்கள்
3] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
4] முனைவர் திருமதி. இரா. எழிலி சேஷாத்ரி அவர்கள்
5] கவிஞர் கணக்காயன் என்கிற திருவாளர் இ.சே. இராமன் ஐயா அவர்கள்
6] திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்
7] திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
8] திரு. ரவிஜி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.] அவர்கள் 

ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.தெய்வ அனுக்கிரஹம்:

அவ்வப்போது எதிர்பாராமல் ஏற்பட்டுவந்த மின் தடைகள், ‘நெட்’ கிடைக்காமல் போவது, உடல்நிலை ஒத்துழைக்காமல் போவது, சந்தோஷமான மனநிலை இல்லாமல் போவது போன்ற சிற்சிலப் பொதுவான பிரச்சனைகளை அவ்வப்போது சந்திக்க நேர்ந்தாலும், 40 வாரங்களும் தொடர்ச்சியாக போட்டிக்கான கதைகளை வெளியிடுவதும், ஏற்கனவே வெளியிட்ட கதைக்கான விமர்சனப்போட்டி பரிசு முடிவுகளை அறிவிப்பதும், ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களை அடையாளம் காட்டுவதும், பரிசுத்தொகைகளை அவரவர்களுக்கு உரிய காலத்தில் அனுப்பி வைப்பதும், எதுவுமே நிறுத்தப்படாமல், சிறிதும் காலதாமதமின்றி, சொன்னது சொன்னபடியே, அந்தந்த நாட்களில் நேரங்களில் மிகச்சரியாக நிகழ்த்தப்பட்டுள்ளன. 

இதற்கெல்லாம் என் மிகச்சரியான திட்டமிடுதலும், விடாமுயற்சிகளும் மட்டுமின்றி கூடவே தெய்வானுக்கிரஹமும் சேர்ந்துள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  

இதுவரை இவற்றை நல்லபடியாக நடத்திக்கொடுத்து, அனைவருக்குமே திருப்தியாக நிறைவேற்றிக்கொடுத்துள்ள, என் தாய், தந்தை, குரு மற்றும் குலதெய்வம், கிராம தெய்வம், இஷ்டதெய்வம் போன்ற அனைத்து தேவதைகளுக்கும் என் நன்றியைக் கூறிக்கொண்டு விடை பெறுகிறேன். வணக்கம்.


 


இந்த என் நன்றி அறிவித்தலில் யாரையேனும் 
நான் மறந்துபோய் விட்டிருந்தால் அவர்கள்
என்னை தயவுசெய்து மன்னிப்பார்களாக !

அவர்களுக்கும் என் மனமார்ந்த 
இனிய அன்பு நன்றிகள். 
 
    அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் VGK-31 To VGK-40 போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் பற்றிய ஒட்டுமொத்த விபரங்கள் அவரவர்களுக்கான மொத்தப் பரிசுத்தொகைகளுடன் வெகு விரைவில் [09.11.2014 ஞாயிறு அதிகாலை] வெளியிடப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பரிசுத்தொகைகள் தங்களை வெகுவிரைவில் வந்தடையப்போகும் தேதியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.  

இதற்கிடையில் அடுத்ததோர் பதிவாக ’அன்பான நெஞ்சங்களுக்கு...’ என்ற தலைப்பில் நம் நடுவர் திரு. ஜீவி சார் அவர்களின் கடிதம் ஒன்று வெளியிடப்பட உள்ளது.

காணத்தவறாதீர்கள் !

  
  

என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்43 கருத்துகள்:

 1. இந்தப் போட்டிக்கான மேலாண்மை நடவடிக்கைகள் 'இப்படி ஒரு போட்டி நடத்தினால் எப்படியிருக்கும்' என்று நீங்கள் கருத்துக் கணிப்பு நடத்திய பொழுதே தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன். அது கூட இப்பொழுது தான் தெரியும்.

  அது மட்டுமல்ல. உங்கள் பெயர் ராசியோ என்னவோ தெரியவில்லை. எத்தனை மாயங்கள் செய்திருக்கிறீர்கள்?
  ப.ப.ப. கதைப் போட்டிக்கு உங்கள் விமரிசனத்தையும் நுழைத்தது, உங்கள் உறவினர்களும் இந்தப் போட்டியில்
  கலந்து கொண்டது, தனக்கு தானே நீதிபதி போட்டியில் நீங்களும் கலந்து கொண்டது-- எத்தனை மாயங்கள் காதும் காதும் வைத்தாற் போலச் செய்திருக்கிறீர்கள்?..

  நடுவரை சுதந்திரமாக சுயமாக எந்தக் குறுக்கீடும் இல்லாமல் செயல்படுவதற்கு வழிவகுத்தது இந்த போட்டியில் நடுநிலை பிறழாமல் எல்லாம் நடக்க வேண்டும் என்று நீங்கள் கொண்டிருந்த அக்கறையையே எனக்குச் சொல்கிறது. அதற்கு நான் நன்றி சொல்வதற்கு தகுந்த நேரம் இது தான்.

  எல்லா நிகழ்ச்சிகளின் நிறைவிலும் இந்த நன்றி நவிதல் உண்டு என்றாலும், உங்கள் நன்றியுரை பிரமாதம். உங்கள் மனசு பேசுவதை உணர்ந்தேன். அது தான் யாரையும் விட்டு விடாத
  நெகிழ்ச்சியில் சிக்குண்டு தத்தளித்தையும் தெரிவித்தது.

  'எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர் எண்ணியர்
  திண்ணிய ராகப் பெறின்'

  -- என்னும் குறள் வாக்கை நடைமுறையில் நிரூபித்தவர் நீங்கள்! வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்றுச் சிறக்க வாழ்த்துக்கள்1..
  '

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.
  உங்கள் பதிவுலக சாதனை பலகாலம் பேசப்படும்.

  பதிலளிநீக்கு
 3. இதற்கெல்லாம் என் மிகச்சரியான திட்டமிடுதலும், விடாமுயற்சிகளும் மட்டுமின்றி கூடவே தெய்வானுக்கிரஹமும் சேர்ந்துள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். //

  உண்மை உண்மை.

  இப்படி ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்ய மன உறுதியும், விடாமுயற்சியும் மிக அவசியம், அதனுடன் தெயவத்தின் துணையும் கூட இருந்தது கண்கூடாக தெரிகிறது சார்.

  எவ்வளவு புள்ளி விபரங்கள்!
  மலைக்க வைக்கும் உழைப்பு.

  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிவுலகில் சாதனை படைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. மாபெரும் போட்டியினை வெகு சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள கோபு சார், உங்களுடைய இந்த திட்டமிடலையும் செயல்திறனையும் கண்டு மீண்டும் மீண்டும் மலைத்துப் போகிறேன். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்னும் வள்ளுவன் குறளுக்கேற்ப இந்த விமர்சனப் போட்டியை ஆரம்பிக்குமுன் உடல்நிலை, மனநிலை, சூழல் அனைத்தையும் உத்தேசித்து, பலமுறை சிந்தித்து, பலரிடமும் கருத்துக் கணிப்பு நடத்தி, ஆலோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். அதன்பின் தொடர்ச்சியாய் அருவியின் வீழ்ச்சி போன்று அநாயாசமாய் தடைகளைத் தகர்த்தெறிந்து போட்டிகளை நடத்தி, வெற்றி இலக்கை எட்டியதோடு மிகவும் அழகான நன்றியறிவித்தலுடன் அனைவரையும் சிறப்பித்துவிட்டீர்கள்.

  தங்களுடைய இந்தப்போட்டிகளுக்கு தக்கதொரு நடுவரை அமர்த்தியதன் மூலம் போட்டி இப்போட்டி இலக்கிய அந்தஸ்து பெற்றுவிட்டது என்பது நூறுசதவீத உண்மை. தேர்ந்த தெளிவான நடுநிலைமையோடு கூடிய தேர்வுகள் இல்லையென்றால் உங்கள் நோக்கமே நிறைவேறாமல் போயிருக்கும். அந்த வகையில் போட்டி நடத்தியதற்கான தங்கள் நோக்கம் நிறைவேறியதோடு போட்டியில் கலந்துகொண்ட எங்களுக்கும் இரட்டை லாபம். பரிசுக்குப் பரிசும் விமர்சனக்கலை பற்றிய நுண்ணறிவும் கிட்டினவே.

  எவ்வளவு பெரிய திட்டமிடலும் ஒரு கூட்டுமுயற்சி இருந்தால்தான் வெகு எளிதில் சாத்தியமாகும். ஆனால் இங்கு தாங்கள் ஒருவரே நின்று அனைத்துப் பொறுப்பையும் ஏற்றுத் திறம்பட நடத்தி, உணவு உறக்கம் தொலைத்து, கைப்பொருளையும் கரைத்து இப்படியொரு மகாப் போட்டியை நடத்தி பரிசும் விருதுகளும் அள்ளி வழங்கி இறுதியில் வெற்றியறிவித்தலும் நிகழ்த்தி.. அப்பப்பா… நினைக்கும்போதே வியப்பாக உள்ளது.

  அத்தனைப் பெருமைகளையும் தன்னிடத்தே கொண்டும் அதை வெளிக்காட்டாமல் அனைவரையும் கூட்டு சேர்த்து நன்றியை நவிலும் பாங்கு எத்தனைப் பெருந்தன்மையானது. தங்களுடைய இந்த நன்றியறிவித்தலில் என் பெயரும் இருக்கக்கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. மனம் நிறைந்த நன்றிகள் கோபு சார்.

  தங்களை நெகிழவைத்த கடிதங்கள் வாயிலாய் தங்கள் அன்புக்குரியவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் அளவுகடந்த அன்பும் அக்கறையும் புரிகிறது. அவர்களுக்கு நன்றி சொல்வது மிக அவசியமே.

  தங்களுடைய இந்த மாபெரும் சாதனைக்கு உதவிய குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், பதிவர்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. நல்ல ஓய்வெடுத்து உடல்நலனைப் பேணி மீண்டும் புத்துணர்ச்சியுடன் வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 6. கடிதங்கள் உங்கள்மேல் உள்ள பாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்துகிறது.

  பரிசு பெற்ற குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நட்புகளுக்கு வாழ்த்துக்கள்.

  நடுவர் அவர்களின் பணியும் மிக நேர்த்தியான , மிக சிறப்பான பணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  அன்பான நெஞ்சங்களுக்கு அவர் எழுதும் கடிதம் படிக்க ஆவல்.

  பதிலளிநீக்கு
 7. நிறைவு விழா பதிவு முழுதும் படித்து
  மனம் நிறைவு கொண்டது
  பதிவுலகில் இதுவரை யாரும் செய்யாத
  இனியும் செய்ய முடியாத அற்புதமான
  அருமையான விமர்சனப் போட்டி

  ஒரு தவம் போல இத்தனை வாரம்
  இதைத் தாங்கள் செய்து
  முடித்துள்ளது பிரமிக்கவைக்கிறது

  பதிவர்களின் ஒட்டுமொத்த அன்பே
  தங்கள் தவத்திற்கு கிடைத்த வரம் என்றால்
  மிகையாகாது

  ஆண்டவன் தொடர்ந்து தங்களுக்கு
  எல்லா வளமும் எல்லா நலனும்
  வாரி வாரி வழங்க பிரார்த்தித்துக் கொள்கிறோம்

  பதிலளிநீக்கு
 8. பரிசு பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் !

  வலைத்தளத்தில் சிறுகதைகளுக்கு
  விமர்சனப்போட்டி நடத்தி ,
  அதற்கான நிறைவு விழாவும்
  நிறைவாக நடத்திய தங்கள் சாதனை பிரமிக்க
  வைக்கிறது !

  பதிவிகளைப் படிக்க , படிக்க
  இந்த போட்டிகளில் முழுமையாக
  கலந்து கொள்ள முடியவில்லையே என்ற எண்ணம்
  ஏற்படுகிறது.

  சிறந்த கதைகளை பதிவிட்ட தங்களுக்கு
  மனமார்ந்த பாராட்டுக்கள் !

  " தாயுமானவள் " என்ற சிறு கதையை
  பதிவிட்டு, எனக்கு வழிகாட்டியாக
  இருந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !

  பதிலளிநீக்கு
 9. நன்றி அறிவிப்பு கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்! நன்றல்லதை அன்றே மறந்து, நன்றி மறவா நல்லுளம் கொண்ட நீங்கள் வாழிய பல்லாண்டு! வலையுலக சேவையைத் தொடர்க! நல்ல ஆரோக்யம் பெற இறையருள் துணைநிற்கும்! வாழிய பல்லாண்டு!

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!
  தாங்கள் நடத்திய “ சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழா” விற்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  இந்த ஆண்டு துவக்கத்தில் (ஜனவரியில்) தொடங்கிய இந்த போட்டியைப் பற்றி தொடர்ந்து 10 மாதங்களுக்கும் மேலாக, உங்கள் வலைத்தளத்திலும் வலையுலகிலும் அனைவரும் பேசும்படி ஒரு சாதனை செய்து விட்டீர்கள் என்பதே உண்மை. எனது பாராட்டுக்கள்!

  நானும் இரண்டு கதைகளுக்கு விமர்சனம் செய்துள்ளேன் என்பதைத் தவிர ( கருத்துரை எழுதியது தனி) வேறு எதுவும் நான் செய்து விடவில்லை. இக்கால இளம்பதிவர்களுக்கு இடையில் என்னால் நுழைய முடியவில்லை என்பதே உண்மை.

  ஆனாலும் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் படித்துள்ளேன். ஒவ்வொருமுறையும் படிக்கும் போதும் உங்களுடைய பதிவு வெளியான தேதி, நேரம் இவற்றை கவனிக்கத் தவறியதில்லை. (ஆனாலும் உங்கள் தளத்தில் நீங்கள் இன்னும் TIME SETTINGS – ஐ இன்னும் சரியாக அமைக்கவில்லை. இதனை நான் ஏற்கன்வே முன்பொருமுறை சொல்லி இருக்கிறேன்) நேரம் காலம் இல்லாமல், உங்களுக்கு விழிப்பு இருக்கும் போதெல்லாம் (குறிப்பாக இரவு 12 மணிக்கு மேலும் ) கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணி செய்து இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களைப் போலவெல்லாம் என்னால் இருக்க முடியாது.

  உங்கள் நடுவர் ஜீவி அவர்களும் உங்களுடனேயே தொடர்ந்து வந்தார். உங்கள் வீட்டு கம்ப்யூட்டரும் எவ்வித சுணக்கமும் இல்லாமல் உங்களை நோகடிக்காமல் உழைத்தது. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு கொடுத்த ஒத்துழைப்பும் பெரிது, பெரிது! எல்லாவற்றிற்கும் மேலாக இந்த காரியம் செவவனே நடைபெற துணை நின்ற இறையருள்!

  போட்டி முடிந்து விட்டது என்று எழுதாமல் இருந்து விட வேண்டாம். தொடர்ச்சியாக எழுதி உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ளாமல், அவ்வவப்போது எழுதவும். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. மிகச்சரியான திட்டமிடுதலும், விடாமுயற்சிகளும் மட்டுமின்றி கூடவே தெய்வானுக்கிரஹமும் சேர்ந்துள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.///

  மிகச்சிறப்பாக பலமுறை படிக்கவைத்த ஆக்கம்..
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
 12. மிகச்சரியான திட்டமிடுதலும், விடாமுயற்சிகளும் மட்டுமின்றி கூடவே தெய்வானுக்கிரஹமும் சேர்ந்துள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். //

  நன்றி அறிவிப்பில் பல செய்திகளைப்பகிர்ந்துகொண்டது சிறப்புசேர்க்கிறது.. பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

  முதலில் அனுப்பிய கருத்துரைகள் காணவில்லை..

  பதிலளிநீக்கு
 13. சாதனை நாயகரான தங்களுக்கு என் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 14. தாங்கள் நடத்திய இந்த பத்து மாதத் திருவிழா பெரும் பண்டிகைகளான பொங்கலில் உற்சாகமாக ஆரம்பித்து அந்த உற்சாகம் சிறிதும் குன்றாமல்,குறையாமல் தீபாவளியில் முடிந்திருப்பது மிக மகிழ்ச்சியைத் தருகிறது. இதனை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த தங்களுக்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்!

  'முயற்சி திருவினை ஆக்கும்' என்பதற்கேற்ப மிக அழகாகத் திட்டமிட்டு, இடையில் சிறிதும் தவறும், தடையும் நேராமல் தாங்கள் நடத்தி முடித்த இந்த விமரிசனப் போட்டி எங்களுக்கெல்லாம் உற்சாகத்தையும், பரிசுகளையும் பெற்றுக் கொடுத்தாலும் தங்கள் உடல்நலம் குறைபட்டதே என்ற வருத்தமும் மனக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. தனி ஒருவராக நின்று தாங்கள் நடத்திய இந்தப் போட்டி சாமானியமானது அல்ல! கண்டிப்பாக ஒரு மகா சாதனைதான்.தாங்கள் சாதாரணமானவர் அல்ல...ஒரு மாபெரும் சாதனையாளரே! இப்பதிவுலகில் தங்கள் வெற்றி பல நாள் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.

  அத்தனை ஏற்பாடுகளையும் தாங்களே செய்து முடித்ததுடன், எல்லாருடைய பெயரையும் விட்டுவிடாமல் சேர்த்து அனைவருக்கும் தாங்கள் நன்றி கூறிய பாங்கு போற்றத்தக்கது; பாராட்டத் தக்கது.ஒரு சிறந்த, திறமையான நடுவரைத் தேர்ந்தெடுத்து அனைவருக்கும் பாகுபாடின்றி பரிசுகளைக் கொடுத்து, அத்தனை போரையும் அன்புடன் பாராட்டி மீண்டும் கலந்து கொள்ள ஊக்கம் கொடுத்து....உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை கோபு சார்! நினைத்து நினைத்து வியக்கிறேன் நான்.

  உங்களுடைய நல்ல நட்பைப் பெற்ற நான்தான் அதிர்ஷ்டசாலி என்று சொல்ல வேண்டும். இந்த வருடம் எனக்கு பயணங்கள் நிறைந்த வருடமாகி விட்டதால் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத ஏக்கம் இன்னமும் எனக்குள் இருக்கிறது. இருப்பினும் உங்கள் ஊக்கத்தாலும், உற்சாகத்தாலும் நானும் சில பரிசுகளைப் பெற்றது எனக்கு பதிவுலகில் ஒரு அறிமுகத்தைக் கொடுத்ததற்கு தங்களுக்கு நன்றி கூறியே ஆகவேண்டும்.

  அத்துடன் என் நவராத்திரி அழைப்பை ஏற்று தாங்களும், தங்கள் துணைவியும் எங்கள் வீட்டுக்கு வந்ததுடன், அதைப் பற்றி தாங்கள் எழுதியதும் எனக்கும்,என் கணவருக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.

  தங்கள் குடும்பத்தார் உட்பட தங்களுக்கு உறுதுணையாக இருந்த அத்துணை பேருக்கும் மறக்காமல் நன்றி கூறிய தங்களின் பெருந்தன்மை பாராட்டத் தக்கது.

  பதிவுலகில் இப்படி ஒரு வித்யாசமான விமரிசனப் போட்டியை வைத்து, பரிசு மழை பொழிந்த தங்களுக்கு மீண்டும் என் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 15. கருத்து அளித்தேன். போகலைனு நினைக்கிறேன். பதிவுலகில் மாபெரும் பிரம்மோற்சவத்தை ஆரம்பத்தில் இருந்த அதே உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், விடாமுயற்சியோடும் செய்து முடித்துவிட்டீர்கள். உண்மையிலேயே மாபெரும் சாதனை இது. எனக்குத் தெரிந்து கடந்த ஒன்பது வருடங்களில் எவரும் செய்யாத சாதனை இந்தப் போட்டியும், அதன் தொடர்பான பரிசளிப்பு விழாவும்.

  பதிலளிநீக்கு
 16. போட்டி வைப்பதோ பரிசளிப்பு விழா நடத்துவதோ பெரிதில்லை. அதைத் தொடர்ந்து பதினோரு மாதங்களுக்கு நடத்தி, போட்டியில் பங்கேற்ற, பங்கு பெறாத அனைவருக்கும் மனம் மகிழும்படி ஏதோ ஒரு பரிசைக் கொடுத்துச் சிறப்பிப்பது மிகப் பெரிய விஷயம். மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல் இதை நடத்தி முடித்த உங்களுக்கு என்ன வார்த்தைகள் சொல்லிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 17. என் அருமை வாத்யாரே! வணக்கம்! துவக்கத்திலிருந்து இவ்வளவு வேலைகளை ஒற்றை ஆளாகவே செய்து முடித்திருப்பது பெரும் பிரமிப்பிற்குரியது! வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த ஒரு வார காலத்திலேயே எனக்கு நாக்கு தொங்கிவிட்டது! நான் எழுதிய விமர்சனங்களில் ஒன்றிரண்டு அந்த சமயத்தில் வெற்றிவாய்ப்பினையும் நழுவவிட்டது! நீங்கள் ஒரு ஆண்டாக எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை நினைத்தால்....இது உண்மையில் ஹிமாலய வெற்றிதான் மாபெரும் சாதனைதான்!!! ஏதோ இடையில் எட்டிப்பார்த்த எனக்கும் வெற்றிகள், பரிசுகள், விருதுகள்வரை கிடைத்திருப்பது...உங்கள் கைங்கரியம்தான்!!! என்னுடைய பேனா முனை உரைநடைபாணியில் கூர்தீட்டப்பட்டது உங்களால்தான்! கவிதைகளைத்தவிர தாங்கள் எனக்களித்த அங்கீரத்தை கெளரவப்படுத்தும் விதமாக மட்டுமே எனது வலைப்பூவில் தனித்தனி இடுகைகளாக வெளியிட்டேன்! தங்களின் 600ம் இடுகை என்னை(யும்) மிகவும் சிலாகித்து இதயத்திலிருந்து என்னை பாராட்டும் விதமாக அமைந்தது நான் பெற்ற பெரும் பாக்கியம்! சிறுகதை விமர்சனப் போட்டிமூலமாக எனக்குக் கிடைத்த தங்களின் நட்பு, என்னை இதயக்கனியாக்கி இதயத்தில் இடம் கொடுத்த அன்பு, விமர்சனத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு தொடர்கதை என்று சொல்லுவேன்! எந்த பிரதிபலனும் கருதாது, மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாகி ஒற்றை நபராக ஒரு மாபெரும் தேரோட்டம் நடத்தி நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தி வலையுலகத்திற்கே ‘வாத்தியார்’ என்ற பெயரை நிலை நிறுத்திக்கொண்டதற்கு மீண்டும் சிரம் வாழ்த்தி வணங்குகிறேன்! நீங்கள் ‘நினைத்ததை முடிப்பவன்” என்பதற்கு இது(வும்) ஒரு உதாரணம்! ஒன்பதாம் வள்ளல் நீங்கள்! எட்டாவது நபரை உலகமே அறியும்! நீங்கள் சிறிது காலம் நன்றாக உண்டு உறங்கி மிக நன்றாக ஓய்வு எடுத்திக்கொள்ளுங்கள்! உங்களின் ஆரோக்கியம் = வலை உலகின் ஆரோக்கியம்! அது எனக்கு – மிக மிக அவசியம்! மலை – பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு சென்று அங்கு எனது மனம் கவர்ந்த உன்னதப் பாடகர் ‘ஜிம் ரீவ்ஸ்’ அவர்களின் பட்டுக்குரலிலான பாடல்களைக் கேட்டு அனுபவியுங்கள்! “one dozen roses, danny body, there will be blue birds, you belong to me, the blizzard, snow flakes, streets of loredo, bimbo, I love you, he will have to go, in the mysty moon light, gypsy feet, fallen star, ….இன்னும் பல!! எல்லாம் யூ டியூபில் கிடைக்கும்!!! மனம் மிகவும் லேசாகும்! அந்த அனுபவத்தைப் பற்றி நேரம் கிடைக்கும்பொழுது எழுதுங்கள்! தாங்கள் எனக்களித்த இந்த வாய்ப்புகளுக்கும், அங்கீகாரங்களுக்கும், வெற்றிகளுக்கும், விருதுகளுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து இவை அனைத்திற்கும் காரணமே நீங்கள் அளித்த ஊக்கமே அன்றி வேறில்லை என்று நன்றியுடன் தெரிவித்து, ஆண்டவனிடம் உங்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்துகொண்டு இப்போதைக்கு (மட்டும்) விடைபெறும் சோம்பேறி வலைஞன், உங்கள் அன்பு = எம்ஜிஆர்


  பதிலளிநீக்கு
 18. என் அருமை வாத்யாரே! வணக்கம்! துவக்கத்திலிருந்து இவ்வளவு வேலைகளை ஒற்றை ஆளாகவே செய்து முடித்திருப்பது பெரும் பிரமிப்பிற்குரியது! வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த ஒரு வார காலத்திலேயே எனக்கு நாக்கு தொங்கிவிட்டது! நான் எழுதிய விமர்சனங்களில் ஒன்றிரண்டு அந்த சமயத்தில் வெற்றிவாய்ப்பினையும் நழுவவிட்டது! நீங்கள் ஒரு ஆண்டாக எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை நினைத்தால்....இது உண்மையில் ஹிமாலய வெற்றிதான் மாபெரும் சாதனைதான்!!! ஏதோ இடையில் எட்டிப்பார்த்த எனக்கும் வெற்றிகள், பரிசுகள், விருதுகள்வரை கிடைத்திருப்பது...உங்கள் கைங்கரியம்தான்!!! என்னுடைய பேனா முனை உரைநடைபாணியில் கூர்தீட்டப்பட்டது உங்களால்தான்! கவிதைகளைத்தவிர தாங்கள் எனக்களித்த அங்கீரத்தை கெளரவப்படுத்தும் விதமாக மட்டுமே எனது வலைப்பூவில் தனித்தனி இடுகைகளாக வெளியிட்டேன்! தங்களின் 600ம் இடுகை என்னை(யும்) மிகவும் சிலாகித்து இதயத்திலிருந்து என்னை பாராட்டும் விதமாக அமைந்தது நான் பெற்ற பெரும் பாக்கியம்! சிறுகதை விமர்சனப் போட்டிமூலமாக எனக்குக் கிடைத்த தங்களின் நட்பு, என்னை இதயக்கனியாக்கி இதயத்தில் இடம் கொடுத்த அன்பு, விமர்சனத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு தொடர்கதை என்று சொல்லுவேன்! எந்த பிரதிபலனும் கருதாது, மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாகி ஒற்றை நபராக ஒரு மாபெரும் தேரோட்டம் நடத்தி நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தி வலையுலகத்திற்கே ‘வாத்தியார்’ என்ற பெயரை நிலை நிறுத்திக்கொண்டதற்கு மீண்டும் சிரம் வாழ்த்தி வணங்குகிறேன்! நீங்கள் ‘நினைத்ததை முடிப்பவன்” என்பதற்கு இது(வும்) ஒரு உதாரணம்! ஒன்பதாம் வள்ளல் நீங்கள்! எட்டாவது நபரை உலகமே அறியும்! நீங்கள் சிறிது காலம் நன்றாக உண்டு உறங்கி மிக நன்றாக ஓய்வு எடுத்திக்கொள்ளுங்கள்! உங்களின் ஆரோக்கியம் = வலை உலகின் ஆரோக்கியம்! அது எனக்கு – மிக மிக அவசியம்! மலை – பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு சென்று அங்கு எனது மனம் கவர்ந்த உன்னதப் பாடகர் ‘ஜிம் ரீவ்ஸ்’ அவர்களின் பட்டுக்குரலிலான பாடல்களைக் கேட்டு அனுபவியுங்கள்! “one dozen roses, danny body, there will be blue birds, you belong to me, the blizzard, snow flakes, streets of loredo, bimbo, I love you, he will have to go, in the mysty moon light, gypsy feet, fallen star, ….இன்னும் பல!! எல்லாம் யூ டியூபில் கிடைக்கும்!!! மனம் மிகவும் லேசாகும்! அந்த அனுபவத்தைப் பற்றி நேரம் கிடைக்கும்பொழுது எழுதுங்கள்! தாங்கள் எனக்களித்த இந்த வாய்ப்புகளுக்கும், அங்கீகாரங்களுக்கும், வெற்றிகளுக்கும், விருதுகளுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து இவை அனைத்திற்கும் காரணமே நீங்கள் அளித்த ஊக்கமே அன்றி வேறில்லை என்று நன்றியுடன் தெரிவித்து, ஆண்டவனிடம் உங்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்துகொண்டு இப்போதைக்கு (மட்டும்) விடைபெறும் சோம்பேறி வலைஞன், உங்கள் அன்பு = எம்ஜிஆர்


  பதிலளிநீக்கு
 19. இனியாவது உங்கள் உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீண்ட ஓய்வை எடுத்துக் கொண்டு நிதானமாக இணையத்துக்கு வாருங்கள். ஆனால் ஒன்று மடிசார் மாமி போட்டியில் வெற்றி பெற்ற மாமி உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் சொந்தமாக இருக்க வேண்டும் என மனதில் பட்டது. மற்றவர்களைப் பற்றி அந்த எண்ணம் தோன்றவில்லை. உங்களைத் தாய் போல் வளர்த்ததாகச் சொல்லி இருந்தீர்கள். அதனால் என்னையும் அறியாமல் தோன்றியதோ என்னவோ! இதையும் இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்துக் கொண்டதும் அதிசயமே! உங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பைப் பாராட்ட வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பு இல்லை எனில் இத்தனை நாட்கள் உங்களாலும் ஈடுபாட்டுடன் செய்திருக்க முடியாது. அவர்களுக்கும் எங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. மாயவரத்தான் MGR என்கிற திரு. ரவிஜி அவர்கள், தான் சமீபத்தில் பெற்றுள்ள 'கீதா விருது’ + ’ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது’ ஆகிய விருதுகளைப்பற்றி தன் பதிவினில் சிறப்பித்து எழுதியுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:

  http://mayavarathanmgr.blogspot.in/2014/11/blog-post.html

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திரு. ரவிஜி அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  என்றும் அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 21. நன்றி அறிவிப்பு என்ற கடிதத்தின் மூலம், நடுவரில் துவங்கி, குருநாதர், குடும்பத்தார், உறவினர், நேயர் கடிதம் எழுதியவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், கருத்துக்கணிப்பு பற்றிக் கருத்துரை வழங்கியவர்கள், வழங்காதாவர்கள், வலைச்சரத்தில் போட்டி பற்றிய பதிவு எழுதி விளம்பரம் செய்தவர்கள், வெற்றிபெறாவிட்டாலும் விமர்சனங்களைத் தங்கள் பதிவுகளில் போட்டவர்கள் என யோசித்து யோசித்து யாரையும் விடாமல் நன்றி தெரிவித்திருக்கும் பாங்கு மலைக்க வைக்கிறது; மனதை நெகிழ வைக்கிறது. இவ்விமர்சனப்போட்டியின் மூலமாக உங்கள் நட்பு எனக்குக் கிடைத்திருப்பதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
  நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடித்து விட்டீர்கள். இனி போதுமான ஓய்வெடுத்து உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.
  உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 22. சார் ... நலம்தானே?
  சிறுகதை விமர்சனப் போட்டியை அருமையாக நடத்திவிட்டீர்கள்.
  தங்களின் இந்த நீண்ண்ட நன்றியுரையில் யாரையுமே விட்டுவிடாமல்
  அனைவருக்கும் நன்றி உரைத்தீர்கள்.
  இந்த நன்றியுரையிலும்கூட தனித்தனி தலைப்புகளில் வகைப்படுத்தி அனைவரையும் பெயர் குறிப்பிட்டுள்ளீர்கள்.
  இறுதியில், 'யார் பெயரையும்விட்டிருந்தால் மன்னிக்கவும்' என்று ஒரு வரி குறிப்பும் கொடுத்துள்ளீர்களே, அதுதான் அனைவரையும் குறிப்பிட்டு விட்டீர்களே சார்???
  =>>>

  பதிலளிநீக்கு
 23. =>>>
  இந்த விமர்சனப் போட்டி ஆரம்பித்த பின்னால் தங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து வந்தேன். சில கதைகளுக்கு விமர்சனமும் அனுப்பினேன் . இரு பரிசுகளும் கிடைக்கப் பெற்றேன்.
  'நேயர் கடிதம்' எழுதினேன். அதையும் அழகிய(ல்) முறையில் வெளியிட்டு எனக்கு பெருமை செய்தீர்கள்.
  =>>>

  பதிலளிநீக்கு
 24. =>>>
  இன்றைய நன்றி அறிவிப்பில் என் பெயரையும் சுட்டி, தங்கள் பூரிப்பினை வெளிக் காட்டி, அன்பில் நனைய வைத்துவிட்டீர்கள். தங்கள் நட்பு வட்டத்தில் என்னையும் இணைத்ததற்கு மனங்கனிந்த நன்றிகள்!

  புதிய நட்புக்களுக்கு நன்றி என்று கூறியதற்கு வரவேற்பும் பதில் நன்றியும் தங்களுக்குத் தெரிவித்து மகிழ்கிறேன்.

  மகிழ்ச்சி! மிக்க மகிழ்ச்சி!!

  பதிலளிநீக்கு
 25. திரு. நடுவர் அவர்களின் மடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. //கிட்டதட்ட பத்து மாதங்களுக்கு மேலே; ஏறத்தாழ இருநூறு விமரிசனங்களின் பிரசுரிப்பு; இது ஒரு சாதனையா என்றால், நிச்சயம் சாதனை தான். அதுவும் பதிவுலகில் நிகழ்வுற்ற சாதனை.//அமர்க்களமான திருவிழா தான் இது மாபெரும் சாதனை !!..பதிவுலகில் முதன்முறையாக இப்படி தொடர் போட்டிகள் ஒருவர் வலைப்பூவில் இருந்து மட்டுமே வருவது மிக சிறந்த சாதனை தான் ..இப்படிப்பட்ட மாபெரும் திருவிழாவை நடத்தி கொடுத்த ஜீவி சாருக்கு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 27. கோபு அண்ணா !! இப்போதான் ஆரம்பித்தது போலிருக்கு அதற்குள் பத்து மாதங்கள் நிறைவாகி விட்டதா !!
  மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ..ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சம்பவத்தையும் நினைவுகூர்ந்து அனைத்தையும் சேமித்து இங்கே பகிர்வது என்பது உண்மையில் மிக ஆச்சர்யமான விஷயம் ....உங்களுக்கு இறைவனின் ஆசிகள் மற்றும் அருள் இருப்பதனால் தான் இவ்வளவும் செய்ய இலகுவாக இருந்தது என்பது எனது அசைக்க முடியா நம்பிக்கை .
  எப்படி அனைத்து பதிவுகளயும் தேதி வாரியாக நினைவு கூறுகிறீர்கள் :) யூ ஆர் ரியல்லி awesome !!!
  .......................
  இப்போ அடுத்து முக்கியமான விஷயம் ..ஒவ்வொரு பதிவிலும் தங்களது அதீத உழைப்பு கண்கூடாக தெரிகிறது ..
  இனி கொஞ்சம் நாட்கள் நன்கு ரெஸ்ட் எடுங்க .டேக் கேர் ..

  பதிலளிநீக்கு
 28. வெற்றித் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அடுத்தடுத்த, இந்த வெற்றிவிழா நிகழ்ச்சிகள் வெளியீட்டு வேலைகளிலும், அதையடுத்து உடனடியாக வரவிருக்கும் என் வெளிநாட்டுச்சுற்றுலா வேலைகளிலுமான பல்வேறு ஆயத்தப்பணிகளில் மூழ்க வேண்டியிருப்பதால், அன்புடன் வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது PRACTICALLY NOT POSSIBLE ஆகவே உள்ளது.

  இது உங்கள் வீட்டு விழா என்பதையும், நம் வீட்டு விழா என்பதையும் யாரும் தயவுசெய்து மறக்காதீங்கோ. நமக்குள் FORMALITIES எல்லாம் எதற்கு?

  தினமும் வருகை தந்து, மனம் திறந்துபேசி, கருத்துக்கள் அளித்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 29. http://esseshadri.blogspot.com/2014/11/blog-post_8.html
  மேற்படி பதிவினில் .....

  ’பா’ எழுதி
  பா ராட்டியுள்ள
  பா சமுள்ள
  பா ண்டிச்சேரி
  பா வலுருக்கு என்
  பா ராட்டுகள்

  VGK

  பதிலளிநீக்கு
 30. அதுவும் இந்தப்போட்டிகளில் அவ்வப்போது கலந்துகொண்டு பரிசு பெற்றவர்களில் சிலர்கூட கடைசிவரை ’நேயர் கடிதம்’ எதுவும் எழுதி அனுப்பாமல் இருந்தும்கூட, இந்தப்போட்டிகளில் பரிசு ஏதும் பெறாத திருமதி. ஜெயந்தி யின் நகைச்சுவையான ‘நேயர் கடிதம்’ மிகவும் போற்றத்தக்க ஒன்றாக நான் நினைத்து மகிழ்கிறேன். ///

  போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத ஏக்கம் தான் அந்தக் கடிதத்திற்கே பிள்ளையார் சுழி போட்டது. தன்யனானேன் கோபு அண்ணா. அந்த அளவுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல.

  //இந்தத் தன் நேயர் கடிதத்தை நான் வெளியிட்டதைக்கூட இன்னும் என் பதிவினில் படிக்கவே வராத, பணி ஓய்வு பெற்றும் எதற்குமே நேரமில்லாத, தன் அருமைப்பேத்தி ’லயா’க்குட்டியுடன் எப்போதும் மிகவும் பிஸியாக உள்ள, என் பேரன்புக்குரிய ’ஜெ’க்கு என் ஸ்பெஷல் நன்றிகள். //

  என்ன செய்ய கோபு அண்ணா. இப்ப கூட இதோ கட்டில்ல உக்காந்துண்டு அவளோட TEDDY கூட என்னமோ பேச்சு வார்த்தை நடத்திண்டிருக்கா. அசந்து, மறந்தா போதும். வாயும் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுத்து. சந்தோஷமா அவள சமாளிச்சுண்டிருக்கோம்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி


  பதிலளிநீக்கு
 31. சரியான திட்டமிட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி வெற்றி பெறறவர்களுக்கு பரிசுகளையும் தானாளமாக வாரி வழங்கிட்டீங்க. என்னாலதான் எதிலயுமே கலந்துக்க முடியாம போச்சு. அடுத்த சந்தர்ப்பத்திற்காக வெயிட்டிங்க்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் September 6, 2015 at 7:12 AM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

   //சரியாகத் திட்டமிட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் தாராளமாக வாரி வழங்கிட்டீங்க.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //என்னாலதான் எதிலயுமே கலந்துக்க முடியாம போச்சு.//

   அதை நினைத்து நான் என் மனதுக்குள் அழுதுள்ளது எனக்கு மட்டுமே தெரியும்.

   //அடுத்த சந்தர்ப்பத்திற்காக வெயிட்டிங்க்//

   இப்போது நல்லதொரு சந்தர்ப்பம் தங்களுக்காகவே என்னால் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. தங்களின் தனிப்பிரியமும், ஆத்மார்த்தமான நட்பும் என் மனதுக்கு அவ்வப்போது மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிப்பதாக உள்ளது. :)

   இந்த அரிய பெரிய சந்தர்ப்பத்தை நீங்க ஒருபோதும் நழுவவே விடமாட்டீர்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன். :))

   :) WELCOME :) ENJOY .... ALL THE BEST ! :))))))))

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 32. கோபு தாத்தா,
  உங்க போன பதிவை படிச்சு மயங்கி விழுந்த ஜெயந்தி பாட்டி இன்னும் மயக்கம் தெளிஞ்சு எழுந்திருக்கல.

  பாட்டி எழுந்ததும் இங்க வர சொல்றேன் தாத்தா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya October 28, 2015 at 8:17 PM

   //கோபு தாத்தா,
   உங்க போன பதிவை படிச்சு மயங்கி விழுந்த ஜெயந்தி பாட்டி இன்னும் மயக்கம் தெளிஞ்சு எழுந்திருக்கல.

   பாட்டி எழுந்ததும் இங்க வர சொல்றேன் தாத்தா//

   அன்புள்ள லயா குட்டி, நல்லா இருக்கியாடா செல்லம்?

   அச்சச்சோ ..... ஜெயா பாட்டி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களா ...... இன்னும் எழுந்திருக்கவே இல்லையா? உடனே ரமணித்தாத்தாகிட்டேச் சொல்லி நல்ல லேடி டாக்டரிடம் கூட்டிப்போகச்சொல்லு. அநேகமாக உனக்கு ஒரு குட்டி ’அத்தையோ அல்லது சித்தப்பாவோ’ பிறக்க நல்ல சான்ஸ் இருக்குதுடி கண்ணே.

   பிரியத்துடன் கோபு தாத்தா

   நீக்கு
 33. பெரிய வெசயத்த திட்டம்போட்டு கடுமயா ஒளச்சி நல்லா செய்துடீக. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 34. இங்க போடவேண்டிய பின்னூட்டத்தை போன பதிவிலேயே போட்டுவிட்டேன். சொல்ல மறந்த விஷயங்கள் இங்கே கொஞ்சமாக... திட்டமிடல் புள்ளி விவரங்கள் அனைவருக்கும் மறக்காமல் நன்றி கூறும் பண்பு விடாமுயற்சி கடின உழைப்பு அத்துடன் எடுத்த காரியத்தை சிறப்பாக நிறைவு செய்ய நினைக்கும் ஆர்லம்+ சுறுசுறுப்பு எல்லாமே நிறய நிறயுங்க கிட்ட இருக்கு.உடல் நிலையிலும் கவனம் செலுத்தவும்.

  பதிலளிநீக்கு
 35. நன்றி அறிவிப்பு கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்! நன்றல்லதை அன்றே மறந்து, நன்றி மறவா நல்லுளம் கொண்ட நீங்கள் வாழிய பல்லாண்டு! வலையுலக சேவையைத் தொடர்க! நல்ல ஆரோக்யம் பெற இறையருள் துணைநிற்கும்! வாழிய பல்லாண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Seshadri e.s. December 20, 2015 at 2:37 PM

   //நன்றி அறிவிப்பு கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்! நன்றல்லதை அன்றே மறந்து, நன்றி மறவா நல்லுளம் கொண்ட நீங்கள் வாழிய பல்லாண்டு! வலையுலக சேவையைத் தொடர்க! நல்ல ஆரோக்யம் பெற இறையருள் துணைநிற்கும்! வாழிய பல்லாண்டு!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)))))

   நீக்கு
 36. http://unjal.blogspot.com/2014/10/blog-post_7.html

  மேற்படி இணைப்பினில் ’சாதனையாளர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!’ என்ற தலைப்பினில் ஓர் தனிப்பதிவு ‘ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி கலையரசி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
 37. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

  தலைப்பு: ’இன்று போல் என்றும்’

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு