என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
நன்றி அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்றி அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 நவம்பர், 2014

சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழா - நன்றி அறிவிப்பு







அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

நாம் அறிவித்திருந்த நம் ’சிறுகதை விமர்சனப்போட்டி’ என்ற மாபெரும் விழா 14.01.2014 [பொங்கல் தினத்தன்று] ஆரம்பிக்கப்பட்டு, தொய்வேதும் இல்லாமல் தொடர்ச்சியாக கடந்த 40 வாரங்களாக வெற்றிநடை போட்டு தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 20.10.2014 அன்று போட்டிக்கான அனைத்து 40 கதைகளும் வெளியிடப்பட்டு, 31.10.2014க்குள் போட்டிக்கான அனைத்துப் பரிசுகள் வென்றவர்களையும் அடையாளம் காட்டி சிறப்பிக்க முடிந்தது. இன்னும் இன்றுவரை அது ஒரு மாபெரும் வெற்றிவிழாவாக நம்மால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கடந்த ஓரிரு வாரத் திருவிழாவாக மேலும் பல்வேறு புதிய கூடுதல் பரிசுகளும் விருதுகளும் அளித்து, நம் எழுத்துலக சாதனையாளர்களை மேலும் நம்மால் இயன்றளவு கெளரவித்து நாம் கொண்டாடிவருகிறோம் என்பதை நினைக்க மனதுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. 

இந்த மாபெரும் திருவிழா மிகச்சிறப்பாகவும், வெற்றிகரமாகவும், இதுவரை யாருமே நினைத்துப் பார்க்காத வகையில் புதுமையாகவும், ஆக்கபூர்வமாகவும், மிகச்சிறப்பானதோர் அடிப்படை நோக்கத்துடனும், நடந்து முடிந்துள்ளதில் நிறைய பேர்களின் ஒட்டுமொத்த ஈடுபாடும், ஆர்வமும், பங்களிப்பும், அர்பணிப்புகளும் அடங்கியுள்ளன. ஒவ்வொருவராக இப்போது பார்ப்போமா !



உயர்திரு நடுவர் திரு. ஜீவி அவர்கள்:

மிகச்சிறப்பாக என்னுடன் இணைந்து இராப்பகல் தூக்கமின்றி, இந்த ஒரே சிந்தனையுடன் நடுவராக இருந்து நியாயமானத் தீர்ப்புகளை வேகமாகத் தந்து உதவிய திரு. ஜீவி சார் அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

எழுத்தாற்றலில் மிகத்திறமையும் அனுபவமும் வாய்ந்த இவர், என்மீது கொண்ட தனிப்பிரியத்தினாலும், அவருக்கே இந்தப்புதுமையான போட்டியின் மீது இருந்த ஆர்வத்தினாலும் நடுவராக இருக்க சம்மதித்ததை என் பாக்யமாக நினைத்து மகிழ்கிறேன். 

போட்டிக்கு வரும் ஏராளமான விமர்சனக்கட்டுரைகள் ஒவ்வொன்றையும் பலமுறைகள் திரும்பத்திரும்பப்படித்து, அவற்றில் வடிகட்டி, வடிகட்டி, மிகச்சிறப்பாக உள்ள சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவது என்பது, சாதாரணதோர் காரியமே இல்லை. இதை ஏனோ தானோ என அவரால் செய்யவே முடியாது. எழுதியவர் யார் என்றே தனக்குத் தெரியாத நிலையிலும், எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தரத்தை மட்டுமே, தாரக மந்திரமாக வைத்து, எந்தவித பாரபட்சமும் இன்றி, தேர்வுகள் செய்து தந்துள்ளார்கள். 

மிகவும் கடினமான இந்த வேலைகளை அவரால் மட்டுமே இவ்வளவு நியாயமாகவும், மிகச்சரியாகவும், வேகமாகவும் செய்ய முடியும் என்பது என் அபிப்ராயம். 

மேலும் இவர் நடுவராக பொறுப்பேற்றுக்கொண்டு அவ்வப்போது விமர்சனதாரர்களுக்குக் கொடுத்துள்ள பயனுள்ள ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றால் மட்டுமே இந்த நம் சிறுகதை விமர்சனப் போட்டிக்கே ஓர் இலக்கிய அந்தஸ்து கிடைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.



  

பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய 
நம் நடுவர் திரு. ஜீவி சார் அவர்களுக்கு 
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

நம்மால் என்றும் 
மறக்க முடியாததோர் மாமனிதர் !
வாழ்க .... வாழ்கவே !!



போட்டியில் பங்கு கொண்டவர்கள்:

பரிசினைப்பற்றியெல்லாம் கவலையே படாமல், தங்களின் எழுத்துத் திறமையை பரிசோதித்துக்கொள்ள ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்ததாகவே நினைத்து, போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன், தொடர்ச்சியாகவோ, அவ்வப்போதோ, எப்போதோ சிலமுறைகள் மட்டுமோ, ஒரேஒருமுறை மட்டுமோ கலந்துகொண்டு, ஆயிரக்கணக்கான விமர்சனங்களை அள்ளி அள்ளி எழுதி அனுப்பியுள்ள அனைவருக்கும் என் நன்றிகள்.



வலைச்சர நிர்வாகி அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்:

இந்த நம் சிறுகதை விமர்சனப் போட்டிகளைப்பற்றி, வலைச்சரத்தின் இடது பக்க ஓரமாக நீண்ட நாட்கள் வெளியிட்டு விளம்பரப்படுத்தி உதவிய அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.



2014ம் ஆண்டு வலைச்சர ஆசிரியர்களில் சிலர்:

இந்த ஆண்டு வலைச்சர ஆசிரியராக பொறுப்பில் இருந்தவர்களில் சிலர், நம் சிறுகதை விமர்சனப்போட்டிகளைப்பற்றி, வலைச்சரப் பக்கங்களை அன்றாடம் வாசிக்கும் அனைவரும் அறியுமாறு, அறிமுகம் செய்து சிறப்பித்துள்ளனர். அத்தகைய அறிமுகங்கங்கள் செய்த வலைச்சர ஆசிரியர்களில் என் கவனத்திற்கு வந்தவர்கள்:  

01] கீதமஞ்சரி  திருமதி. கீதாமதிவாணன் அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/01/blog-post_22.html

02] தளிர் திரு. சுரேஷ் அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html

03] திருமதி. ஏஞ்சலின் அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/05/blog-post_4.html

04] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/05/blog-post_9.html

05] மணப்பாறை திரு. அ. பாண்டியன் அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_26.html

06] திருமதி. மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html

07] காவியக்கவி திருமதி இனியா அவர்கள்
http://www.blogintamil.blogspot.in/2014/07/blog-post_25.html

08] அரட்டை திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/08/3.html

09] மாயவரத்தான் MGR திரு. ரவிஜி அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_17.html

10] மீண்டும் கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_21.html

11] Mr. Thulasidharan V Thillaiakathu அவர்கள்

அவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.



பின்னூட்டமிட்டவர்கள்:

ஓரளவு தொடர்ச்சியாகப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சிலரும், அவ்வப்போது பரிசுகள் பெற்றுள்ள சிலரும், போட்டிகளிலேயே சுத்தமாகக் கலந்துகொள்ளாத சிலரும், அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் வருகை தந்து, அனைவரின் விமர்சனங்களையும் ரஸித்துப்படித்துப்பார்த்து, தங்களின் மிகச்சிறப்பானக் கருத்துக்களை எடுத்துக்கூறி, பரிசு பெற்றவர்களை மனதாரப் பாராட்டி, வாழ்த்திப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தி வந்துள்ளனர். இது அவர்களது உயர்ந்த உள்ளத்தினையும், நல்ல பண்புகளையும் காட்டுவதாக உணர்கிறேன். 

அதுபோன்று அன்புடன் வருகை தந்து பண்புடன்  வெற்றியாளர்களை மனதாரப் பாராட்டிப் பின்னூட்டமிட்டு, உற்சாகப் படுத்தியுள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நான் என் நன்றிகளைக்கூறிக்கொள்கிறேன். 

[பிறரைப் பாராட்ட நல்ல மனம் இருந்தால் போதும் .... பணம் வேண்டியது இல்லை. அந்த நல்ல மனமும் குணமும் எல்லோருக்கும் எப்போதும் எல்லோர் விஷயத்திலும் இருப்பது இல்லையே என்பதை நினைத்து சற்றே வருந்தியுள்ளேன். எல்லோருக்கும் இதற்கெல்லாம் போதுமான ஆர்வமும் நேரமும் இருக்காது என்பதையும் நான் நன்கு உணர்கிறேன். 

பின்னூட்டம் இடுபவர்கள் எல்லோருக்குமே ஓர் பரிசு உண்டு என்று நான் அறிவித்திருந்தால் மேலும் பல பின்னூட்டங்கள் வந்திருக்கலாமோ என்னவோ :))))) ]


தான் அனுப்பிவைத்த விமர்சனத்திற்குப் பரிசு ஏதும் உண்டோ இல்லையோ அதைப்பற்றியெல்லாம் சற்றும் கவலையே படாமல், பரிசுக்குத்தேர்வான அனைத்து விமர்சனங்களையும், பொறுமையாகவும், ஆர்வமாகவும் படித்துப்பார்த்துவிட்டு, போட்டிக்கான கதைகள் உள்பட, என் அனைத்துப்பதிவுகளிலும் கையோடு, குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டமாவது அளித்துள்ள பெருமைக்கு உரியவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப்போட்டிக்கான பதிவுகள் மட்டுமல்லாமல், நான் இதுவரை வெளியிட்டுள்ள அனைத்துப் பதிவுகளிலுமே [ As on Date: 680 Posts ] இவர்களின் பின்னூட்டம் ஏதும் இல்லாததோர் பதிவே கிடையாது என்று என்னால் அடித்துச்சொல்ல முடியும்.  :))))) !!!!! 



அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், நல்வாழ்த்துகள் மற்றும் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   

[அவர்களின் http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_23.html#comment-form  பதிவினில் நான் கொடுத்திருந்த ஏராளமான [ 24 ] பின்னூட்டங்களை இன்று அகஸ்மாத்தாக என்னால் மீண்டும் படிக்க நேர்ந்தது. என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. 

என்றும் என்னால் மறக்கவே முடியாத இனிமையான நினைவலைகளை மீட்டுத்தரும் மிக அற்புதமான நாட்கள் அவை .... பாறையின் மீது செதுக்கிவைத்த சொற்சித்திரமாக இன்றும் என் பின்னூட்டங்கள் அங்கு அப்படியே காட்சியளிப்பதில் எனக்கும் ஓர் தனி மகிழ்ச்சியே!  

இதுபோல எவ்வளவோ ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களை இவர்களுக்கு நானும் முன்பெல்லாம் வாரி வாரி வழங்கியிருந்தேன் என்பதை நினைக்கவே எனக்கும் இன்று ஒரே ஆச்சர்யமாகத்தான் உள்ளது.]




என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்கள்:

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ரிஷபன் அவர்களின் சிறுகதைகள் இதுவரை தமிழகத்திலுள்ள அனைத்து வார/மாத இதழ்களிலும் அச்சேறி பிரசுரமாகியுள்ளன. அதன் எண்ணிக்கை சமீபத்தில் 1000ஐத் தாண்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 

2005ம் ஆண்டு வரை குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னை, அவ்வப்போது ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி தொடர்ந்து என்னை எழுதவைக்கத் தூண்டுகோலாக இருந்து, எனக்கு ஓர் வலைத்தளமும் உருவாக்கிக்கொடுத்து, நானும் இன்று ஓர் எழுத்தாளன் + பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளர்த்துவிட்ட பெருமை யாவும் திரு. ரிஷபன் சார் அவர்களை மட்டுமே சாரும். 

திரு. ரிஷபன் அவர்களும் இந்த நான் நடத்தும் போட்டிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்பது, அவர் அவ்வப்போது கொடுத்துள்ள ஒருசில பின்னூட்டங்களால் என்னால் நன்கு அறியமுடிகிறது. இதோ அவற்றில் ஒன்று .... ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக .....


என் மேற்படி பதிவினில் திரு. ரிஷபன் அவர்கள் கொடுத்துள்ள பின்னூட்டம் இதோ:

ரிஷபன் has left a new comment on your post "இப்பொழுது திருப்தியா கோபு சார்?..": 

//எழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். பரவசத்தைத் தொடர்ந்த பேரின்பமோ, யுத்தத்தைத் தொடர்ந்த வசீகர ஆக்கிரமிப்போ எதுவாக இருந்தாலும் அதை விளைவித்த எழுத்தாளனின் எழுத்தின் மீதான ப்ரியமாக மலரும். வாசகனின் இந்தப் ப்ரியத்தை தன் எழுத்துக்குப் பெறுவது தான் எழுத்தாளனின் இலட்சியமாகும். எழுதுவது என்பதே அந்த ப்ரியத்தை வென்று எடுப்பதற்கான போராட்டம் தான்.// 

- இது நடுவர் திரு. ஜீவி அவர்கள் என் கதைக்கான விமர்சனத்தில் சொல்லியுள்ளது


//நடுவர் பதவிக்கு மிகச் சரியான ... பொருத்தமான .. அற்புதமான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். !  //

- இது திரு. ரிஷபன் அவர்கள் எனக்குச் சொல்லியுள்ளது.


என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  



தங்கள் வெற்றியினை தங்கள் பதிவினில் கொண்டாடிக் கொண்டவர்கள்:

விமர்சனம் எழுதி அனுப்பி வைத்து போட்டியில் பரிசினை வென்றவர்களில் சிலர் மட்டும், அதனைப் பெருமையாக தங்களின், வலைத்தளப் பக்கத்தில் தனிப்பதிவாகவே வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.



’வெற்றியோ தோல்வியோ இரண்டும் எனக்குச் சமமே ’
என நினைத்து செயல்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்:

விமர்சனம் எழுதி அனுப்பி தங்களின் விமர்சனம் தேர்வாகவில்லை என்று தெரிந்தபிறகும்கூட, அந்தத் தாங்கள் போட்டிக்கு அனுப்பி வைத்த விமர்சனத்தினை தங்கள் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள் ... ஒருசிலர். இன்னும் இன்றும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள் ... வேறு சிலர்.

அவர்களின் இத்தகைய செயல் எழுத்துலகில் மிகவும் ஆரோக்யமானதுதான். வரவேற்கப்பட வேண்டியதுதான். அவர்களின் இந்தச் செயல்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.


 

போட்டி ஆரம்பிக்கும் முன்பே நான் நடத்தியதோர் 
கருத்துக் கணிப்பினில் பங்குகொண்டு சிறப்பித்தவர்கள்:

இதுபோன்றதோர் புதுமையான இந்தப்போட்டியை நான் ஆரம்பிக்க நினைத்த ஓரு மாதத்திற்கு முன்பே [DURING DECEMBER 2013], குறிப்பிட்ட ஒருசில பதிவுலக நட்புகளுக்கு மட்டும், என் திட்டத்தை விவரித்து DRAFT OF http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html  (டும்..டும்...டும்...டும்... பதிவு) மின்னஞ்சல் மூலம் அனுப்பி, பொதுவாக இதற்கான வரவேற்புகள் எப்படி இருக்கும்? இதுபோல நான் செய்யலாமா? செய்தால் முதலில் தாங்கள் இந்த என் போட்டிகளில் கலந்துகொண்டு ஆதரிப்பீர்களா? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டு ஓர் கருத்துக்கணிப்பே நடத்தியிருந்தேன். 

அதற்கு பெரும்பாலானவர்கள் தங்களின் கருத்தினை விரிவாகவும் விரைவாகவும் எனக்கு பதிலாக மின்னஞ்சலில் அளித்திருந்தார்கள். [அதில் மிகச் சிலரிடமிருந்து மட்டும் இன்றுவரை எனக்கு பதிலே வரவில்லை. மெளனம் சாதித்து சாதனை புரிந்துள்ள அவர்களுக்கும் என் நன்றிகள்.]  பெரும்பாலானோர் அனுப்பியிருந்த பதில் கருத்துக்கள் பலவும் பலமாதிரி இருந்தன. அவற்றைச் மிகச்சுருக்கமாக இப்படிப் பிரித்துக்காட்டியுள்ளேன்:

”நடத்துங்கள், நான் நிச்சயமாகக் கலந்து கொள்வேன். எல்லாப்பரிசுகளையும் நானே தட்டிச்செல்ல இப்போதே தயாராகி விட்டேன். போட்டி பற்றிய அதிகாரபூர்வமான தங்களின் அறிவிப்பினைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளேன்”

”நடத்துங்கள். என் ஆதரவு தங்களுக்கு நிச்சயமாக உண்டு. நானும் நிச்சயமாக பெரும்பாலான போட்டிகளில் கலந்துகொள்ள முயற்சிப்பேன்”

”பரிசுக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காக கலந்துகொள்வேன். தங்களின் கதைகளை ஊன்றி வாசிப்பதே எனக்கு மிகப் பெரிய பரிசு அல்லவா !”

”நீங்கள் தாராளமாக நடத்தலாம். ஆனால் நான் போட்டிகளில் கலந்து கொள்ளவே மாட்டேன். எட்டி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்வேன்”

”நடத்துங்கள், போட்டிகளில் கலந்துகொள்ள நானும் முயற்சிக்கிறேன். ஆனால் தொடர்ந்து கலந்துகொள்வேன் எனச் சொல்ல இயலாது”

என்னை நெகிழவைத்த ஒரிரு கடிதங்கள்:

[ 1 ] 

”தங்களிடம் நான் அன்புடன் பாசத்துடன் பிரியத்துடன் சற்றே அதிக உரிமை எடுத்துக்கொண்டும் பழகி வருகிறேன். தங்களுக்கு என் உள்ளத்தில் மிகவும் உயர்வான இடம் கொடுத்து வைத்துள்ளேன். தங்களிடமும் தங்கள் படைப்புகளிலும் எனக்கு எப்போதுமே மிகுந்த ஆர்வம் உண்டு. இதுவரை தங்களின் படைப்புகள் எதையும் நான் வாசிக்கத்தவறியது இல்லை. பலவற்றிற்கு கருத்தளித்திருக்கிறேன். நேரமின்மை + உடல்நலக்குறைவால் சிலவற்றிற்கு கருத்தளிக்காமலும் இருந்துள்ளேன். 

ஏனோதானோ என கருத்தளிப்பதில் எனக்கு விருப்பம் கிடையாது என்பது தங்களுக்கே நன்கு தெரியும். மெயில் மூலமும், தொலைபேசி மூலமும் பலமுறை இதை நான் தங்களுக்குச் சொல்லியும் உள்ளேன். இதுபோல உள்ள என் நிலைமையில் நான் தங்கள் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன். 

விமர்சனம் என்றும் அதுவும் ஒரு போட்டிக்கு என்றும் எழுத ஆரம்பித்தால் நிறைகள் மட்டுமல்லாது குறைகளையும் எடுத்துச்சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாய நிலைமை எனக்கு ஏற்படும். அது என்னைப்பொறுத்தவரை, அதுவும் உங்கள் விஷயத்தில், மிகவும் தர்மசங்கடமானதும், முடியவே முடியாத காரியமும் ஆகும். 

நான் தங்களிடம் நிறைகளை மட்டுமே எப்போதும் காண்பவள். தங்களிடம் குறை என்பது எனக்கு மிகவும் கஷ்டப்பட்டுத்தேடினாலும்கூட கிடைக்காத ஒன்றாகும். தங்களிடமோ அல்லது தங்களின் படைப்புக்களிலோ பிறர் யாரேனும், சிறிய குறையேதும் சொன்னாலோ, பின்னூட்டமாக எழுதினாலோகூட, என்னால் அதனைத் தாங்கிக்கொள்ள முடிவது இல்லை. அன்பு அபரிமிதமாக போனபின் குறைகள் எப்படித் தெரியக்கூடும்? சிறு குறைகள் இருப்பினும் அவைகளும் நிறைகளாகவே தானே தோன்றக்கூடும்! அதனால் நான் போட்டியில் கலந்துகொள்ளாமல் வெளியே இருந்து வேடிக்கைப் பார்க்கவே விரும்புகிறேன். தாங்கள் இதை நிச்சயமாகப் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  


தாங்கள் மனதில் நினைத்ததோர் திட்டத்திற்கு, மிக அழகாகச் செயல் வடிவம் கொடுத்து, எப்படியும் வெற்றிகரமாக சாதித்துக்காட்டிவிடுவீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத்தெரியும். தாங்கள் தொடங்க உள்ள இந்தப்போட்டிகள் தங்களின் மனசுபோலவே வெற்றிகரமாக நடைபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். 


ஆனால் இதில் தங்களின் உடல்நலம் மிகவும் முக்கியம் என்பதை அன்புடனும், எனக்கே தங்களின் மேல் உள்ள தனி அக்கறையுடனும் வற்புருத்திக் கூறிக்கொள்கிறேன். ...................................... ! ”



ooooooooooooo

[ 2 ]

என்னிடம் தனிப்பிரியமும், என் படைப்புகளில் மிகுந்த ஆர்வமும் கொண்ட என் நலம் விரும்பியான மற்றொருவர் மிகப்பெரிய மடல் எழுதியிருந்தார். அதன் சுருக்கம் இதோ:

நான் எப்போதுமே  தங்களின் நிழல் போலத்தொடர்ச்சியாகத் தொடர்ந்து தங்களின் பதிவுகளை வாசித்து வருபவன் என்பது தங்களுக்கே தெரியும். முன்பெல்லாம் தங்களின் படைப்புகள் வெளியானதும் அவ்வப்போது நீண்ட என் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளேன் என்பதும் தங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே என்னிடமும் இந்தக்கருத்துக்கணிப்பினைக்கேட்டுள்ளீர்கள். மகிழ்ச்சியே.

நல்ல தரமான படைப்புகளை பதிவுகளாக அளித்து, ஏற்கனவே வலையுலகில் ஓரளவு நல்ல பிரபலமாகியுள்ள தாங்கள், இதுபோன்ற போட்டிகளெல்லாம் நடத்தி கைப்பணத்தை செலவழிக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து. 

மொத்தத்தில் இதெல்லாம் வெட்டி வேலைகள் என்பது என் தனிப்பட்ட கருத்து. பதிவிட தன் கையில் தகுந்த தரமான சரக்கு ஏதும் இல்லாமல், இதுபோல வெட்டிவேலைகளை மட்டுமே செய்து தங்களைப் பிறர் மத்தியில் பிரபலமாக்கிக்கொள்ள நினைக்கும் சில ஆசாமிகள் இந்த வலையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நேற்றைய மழையில் இன்று முளைத்துள்ள காளான்கள் மட்டுமே. அவர்களும்கூட எப்போதாவதுதான் இதுபோன்ற வெட்டி வேலைகளைச் செய்துவருகிறார்கள். 

இதே வெட்டி வேலையை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 450 பதிவுகளுக்கு மேல் கொடுத்துள்ள, மிகத்தரமான எழுத்தாளராகிய தாங்கள் அதுவும் தொடர்ச்சியாக 40 வாரங்களுக்குச் செய்ய நினைப்பதையும், இதனால் கெடப்போகும் தங்களின் உடல் நலத்தையும் உத்தேசித்து மட்டும், உங்கள் பதிவுகளை எப்போதும் ஆர்வத்துடன் தொடர்ந்து படித்துவரும், தங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகனாகிய நான் விரும்பவில்லை. 

தாங்கள் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்சம் 12 ஆயிரம் அதிகபட்சம் UNLIMITED என்பது சாதாரணமான ஒரு தொகையே அல்ல. என்னைப்பொறுத்தவரை அது மிகப்பெரிய ஒரு தொகையாகும். அந்தப்பணத்தை வேறு ஏதாவது நல்லவழிகளில் தாங்கள் செலவழிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து” என ஒருவர் மிகவும் உருக்கமான மிக நீண்ட கடிதம், அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியிருந்தார். 

அவரே மேலும்..... ”தங்களின் இந்தப்போட்டியின் அடிப்படை நோக்கம் மிகவும் அழகானது. வரவேற்கத்தக்கது. பாராட்டப்பட வேண்டியது. தங்களின் இந்தப் புதுமையான போட்டிக்கும் நான் மேலே சொல்லியுள்ள சிலரின் போட்டிகளுக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இன்றைய வலையுலகில், பிறரின் பதிவினை ஊன்றிப்படித்து, விரிவாக பின்னூட்டம் இடுபவர்கள் என்று பார்த்தால் எனக்குத் தெரிந்து, இரண்டே இரண்டு பதிவர்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவர் ஆண், மற்றொருவர் பெண்.   மீதிபேர்கள் அனைவரும் பதிவினை முழுவதுமாகப் படிக்காமலேயே டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் கொடுப்பவர்கள் மட்டுமே” எனச் சாடியிருந்தார். 

ooooooooooooo

[அவர் சொல்லியிருந்த குறிப்பிட்ட இருவரின் பெயரையும் நான் இங்கு தனியாகக் குறிப்பிட்டுச்சொல்ல விரும்பவில்லை. அவர் சொன்ன இருவரும் என்னிடமும் மிகவும் நட்பாக இருப்பவர்கள் மட்டுமே; என் பதிவுகளிலும் நிறைய கருத்துகள் கூறியுள்ளவர்கள் மட்டுமே.  அவர்கள் இருவரிடமும் நான் இந்தக் கருத்துக்கணிப்பினையும் பெற்றுள்ளேன்.

மேலே இதற்குமுன் நான் காட்டியுள்ள கடிதம்கூட இந்த இவர் சொல்லும் இருவரில் ஒருவரான பெண்மணி எனக்கு ஆத்மார்த்தமாக எழுதியுள்ள கடிதம் மட்டுமே. 

இவர்கள் இருவர் மட்டுமே டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடாதவர்கள் என்பது அவரின் தனிப்பட்ட கருத்து + கணிப்பு ஆகும். அந்த இருவர் மட்டுமல்ல .... இன்னும் சிலரும்கூட இருக்கிறார்கள் என நானும் அவருக்கு, பிறகு எடுத்துரைத்துப் புரிய வைத்து விட்டேன்.]

ooooooooooooo


இவ்வாறு என் கருத்துக்கணிப்புகளுக்கு, பல்வேறு விதமாக பதில்கள் அளித்து, என்னை சற்றே ஸ்தம்பிக்க வைத்திருந்த, ஊக்கமளித்திருந்த, உற்சாகம் அளித்திருந்த மற்றும் என்னையே மிகவும் குழப்பி விட்டிருந்த அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான நன்றிகளை இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்.



 

என் குடும்பத்தார்:


என் உடல் நலத்தினை உத்தேசித்து, நான் சதாசர்வகாலமும் கணினி முன் அமர்வதை என் குடும்பத்தாரில் சிலர் அவர்களுக்கு உள்ள உரிமையில் கண்டித்தார்களே தவிர, மற்றபடி என் விருப்பங்களுக்கும் செயல்களுக்கும், யாரும் குறுக்கே நின்று தடை செய்தது கிடையாது. பொதுவாக யாரும் அவ்வாறெல்லாம் செய்யத் துணியவும் மாட்டார்கள். என் குடும்பத்தாராகிய அவர்கள் அனைவருக்கும் நான் என் நன்றிகளைக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

’பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என அக்காலத்தில் சொல்வதுண்டு. 

அதுபோலவே நான் தூங்காமலேயே தூங்குவதுபோல பாசாங்கு செய்துவிட்டு, அனைவரும் தூங்கியபின் எழுந்து விடியவிடிய என் பதிவு வேலைகளைச் செய்த நாட்களும் பல உண்டு. அதன்பின் எல்லோரும் எழுந்து விழித்திருக்கும் விடியற்காலம் முதல் நண்பகல்வரை நான் மட்டும் தூங்கிக்கொண்டு இருந்ததும் உண்டு.




உற்சாகமளித்த உறவினர்களில் சிலர்:

என் மூத்த தமக்கை (அக்காள்), என் மூத்த பிள்ளை மற்றும் என் மூன்றாவது மருமகளின் அப்பா (என் சம்பந்தி) ஆகியோர் இந்த நான் நடத்தி வந்த போட்டிகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து, அனைத்தையும் வாசித்து மகிழ்ந்ததுடன், என்னையும் அடிக்கடி தொடர்புகொண்டு, வெகுவாகப் பாராட்டி அவ்வப்போது உற்சாகம் அளித்து ஊக்குவித்துள்ளார்கள். 

அவர்களுக்கான எவ்வளவோ வேலைகளுக்கும் இடையே, அவர்கள் மூவரும்கூட, தாங்களே முன்வந்து, இந்த என் போட்டிகளில் ஒவ்வொருமுறை வீதம் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள். 

என் குடும்ப உறவினர்களில் என் எழுத்துக்களுக்கு முழு ஆதரவாக இருந்துள்ள அவர்கள் மூவருக்கும் என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 







’VGK-30 மடிசார் புடவை’ கதை விமர்சனத்திற்கு முதல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்

'VGK-24 தாயுமானவள்’ கதை விமர்சனத்திற்கு இரண்டாம் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்

’தனக்குத்தானே நீதிபதி’ போட்டியில் கலந்துகொண்டு, மிகச்சரியான 
விடையை யூகித்து எழுதி பரிசினைப் பகிர்ந்துகொண்டவர்.





இன்றுவரை, நம் நடுவருக்கேகூட இந்த விஷயங்களை நான் தெரிவிக்கவில்லை என்பதை இங்கு நான் கூறிக்கொள்கிறேன். என் உறவினர்கள் என்பதால் நடுவர் அவர்களின் தீர்ப்புகள், ஒருவேளை பாரபட்சமாக அமைந்துவிட நானே ஒரு காரணமாக இருந்துவிடக்கூடாது அல்லவா! அதனால் மட்டுமே, நான் இதை அவருக்குத் தெரிவிக்கவே இல்லை.   

ஆனால் கொஞ்சமும் பாரபட்சமற்ற நம் உயர்திரு நடுவர் திரு. ஜீவி சாரைப்பொறுத்தவரை யார் எழுதியது என்பது அவருக்கு முக்கியமல்ல; அதை அவருக்கு நான் தெரிவிக்கவோ அறிவிக்கவோ வேண்டிய அவசியமும் இந்த நம் போட்டியில் எனக்கு இல்லவே இல்லை.  

விமர்சனத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் ... அதை எப்படி எப்படியெல்லாம் கோர்வையாக, வித்யாசமான பாணியில் எழுதி இருக்கிறார்கள் என்பதை மட்டுமே ஆராய்ந்து பரிசுக்குத் தேர்ந்தெடுத்துத் தருபவராகவே இருந்து வந்துள்ளார்கள்.  மிக உன்னதமான அவரின் இந்தப்பார்வைக்கும், மிகத்துல்லியமான துலாக்கோல் போன்ற அவரின் தீர்ப்புக்களுக்கும் நான் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




தனக்குத்தானே நீதிபதியாக 
இருந்து தீர்ப்பளித்தவர்கள்:


அதுபோல நானே ஒரே ஒருமுறை இந்த என் விமர்சனப்போட்டியில் வேறு யாரோபோல இரகசியமாகக் கலந்து கொண்டுள்ளேன். அதுவும் என் விமர்சன அறிவினை நம் நடுவர் அவர்களின் துலாக்கோலில் சுயமதிப்பீடு செய்துகொள்ள மட்டுமே. 

’போட்டி எண்: VGK-26 பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா !’ கதைக்குத்தான் என் விமர்சனத்தையும் எழுதி இரகசியக்குறியீட்டு எண் கொடுத்து நடுவர் அவர்களுக்கு ’கும்பலோடு கோவிந்தா’வாக அனுப்பி வைத்திருந்தேன்.

நான் எழுதி அனுப்பிய அந்த என் விமர்சனமும் நம் நடுவர் அவர்களால் இறுதியில் பரிசுக்குத் தேர்வாகவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. :))))) 

ஆனால் அந்த நான் எழுதிய விமர்சனத்தினை வாசகர்கள் அனைவரின் பார்வைக்கும், வாசித்தலுக்கும் கொண்டுசெல்ல, ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு ஓர் தனி மகிழ்ச்சி. 

‘தனக்குத்தானே நீதிபதி’ போட்டிக்கு நம் நடுவர் அவர்களால் பல்வேறு வடிகட்டல்களுக்குப்பின் சமர்பிக்கப்பட்ட ஒன்பது விமர்சனங்களில் என்னுடையதும் ஒன்று என்பதை, இங்கு நம் நடுவர் அவர்கள் உள்பட, அனைவருக்கும்  பகிரங்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அந்த என் விமர்சனத்திற்கு, போட்டியில் நீதிபதிகளாகச் செயல்பட்டுக் கலந்துகொண்ட பலரும், ’இது வெற்றிபெறக்கூடிய விமர்சனம்’  என்று கணிசமான அளவில் தீர்ப்பு அளித்திருந்தார்கள் என்பதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது.

Ref: VGK-26004  http://gopu1949.blogspot.in/2014/07/blog-post.html  { VGK's OWN }

என் மேற்படி விமர்சனத்தைப் படித்து, சிரித்து, ரஸித்து, இது நிச்சயமாகப் பரிசுக்குத்தேர்வாகும் என்ற நம்பிக்கையுடன் தீர்ப்பு அளித்திருந்த அனைத்து நீதிபதிகளுக்கும் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுவே என் விமர்சனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிப்பரிசாக எண்ணி மகிழ்கிறேன்.


   

இவை அனைத்துமே நம் ’சிறுகதை விமர்சனப்போட்டி’ எந்தவித பாரபட்சமும் இல்லாமல், விமர்சனதாரர்களின் எழுத்துக்களின்  தரத்தின் அடிப்படையில் மட்டுமே,  மிகச்சரியாக ... துல்லியமாக எடைபோடப்பட்டு, நம் நடுவர் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஒருசில அத்தாட்சியாக இருக்கட்டுமே என இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த நம் 40+ போட்டிகளில் மொத்தமாக 255 பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளதில், என் நெருங்கிய உறவினர்கள் மூவருக்காவது தலா ஒரு பரிசு வீதம் கிடைத்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே. 




போட்டி பற்றியதோர் சிறப்புப்பேட்டி அளித்தவர்:


  
  

http://gopu1949.blogspot.in/2014/10/blog-post.html


 


சற்றே அவசரமாகவே இருப்பினும், 
அழகாகவும் அழுத்தமாகவும், 
மஹா மஹா அழுத்தமாகவும்,  
சொல்ல வேண்டிய தனது கருத்துக்களை,  
மிகவும் சமத்தாகவும், 
அழுந்தச் சமத்தாகவும், 
சாமர்த்தியமாகவும் 
எடுத்துக்கூறிச் சிறப்பான 
பேட்டி அளித்தவருக்கு 
என் மனம் நிறைந்த இனிய 
அன்பு நன்றிகளை மீண்டும் 
இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.  









‘நேயர் கடிதம்’ பகுதியில் பங்கு கொண்டவர்கள்:

01.10.2014 அன்று நான் வெளியிட்டிருந்த ’போட்டி பற்றியதோர் சிறப்புப்பேட்டி’ என்ற பதிவினில் http://gopu1949.blogspot.in/2014/10/blog-post.html அடியேன் கொடுத்திருந்த வேண்டுகோளுக்கு இணங்க, தாங்களாகவே முன்வந்து மிகச்சிறப்பாக ‘நேயர் கடிதம்’  வரைந்து அனுப்பி மகிழ்வித்துள்ள அன்புள்ளங்களான 

  [1] பெரியவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
        http://gopu1949.blogspot.in/2014/10/blog-post_2.html 
  [2] திருமதி. ஞா. கலையரசி அவர்கள்
        http://gopu1949.blogspot.in/2014/10/3.html 
  [3] திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 
        http://gopu1949.blogspot.in/2014/10/4.html
  [4] விமர்சன வித்தகி திருமதி கீதா மதிவாணன் அவர்கள் 
        http://gopu1949.blogspot.in/2014/10/5.html
  [5] அருமை நண்பர் மாயவரத்தான் எம்.ஜி.ஆர். திரு. ரவிஜி அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/6-mgr.html 
  [6] பேரன்பிற்குரிய ராதாபாலு அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/7.html 
  [7] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/8.html
  [8] பேரன்புக்குரிய ஜெயந்தி அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/9.html
  [9] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/10.html
[10] அருமை நண்பர் திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
       http://gopu1949.blogspot.in/2014/10/11.html 
[11] திரு. E S சேஷாத்ரி அவர்கள் 
       http://gopu1949.blogspot.in/2014/10/12-es-seshadri.html

ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அதுவும் இந்தப்போட்டிகளில் அவ்வப்போது கலந்துகொண்டு பரிசு பெற்றவர்களில் சிலர்கூட கடைசிவரை ’நேயர் கடிதம்’ எதுவும் எழுதி அனுப்பாமல் இருந்தும்கூட, இந்தப்போட்டிகளில் பரிசு ஏதும் பெறாத திருமதி. ஜெயந்தி யின் நகைச்சுவையான ‘நேயர் கடிதம்’ மிகவும் போற்றத்தக்க ஒன்றாக நான் நினைத்து மகிழ்கிறேன். 

 http://gopu1949.blogspot.in/2014/10/9.html
 
இந்தத் தன் நேயர் கடிதத்தை நான் வெளியிட்டதைக்கூட இன்னும் என் பதிவினில் படிக்கவே வராத, பணி ஓய்வு பெற்றும் எதற்குமே நேரமில்லாத, தன் அருமைப்பேத்தி ’லயா’க்குட்டியுடன் எப்போதும் மிகவும் பிஸியாக உள்ள, என் பேரன்புக்குரிய ’ஜெ’க்கு என் ஸ்பெஷல் நன்றிகள். 

{ தங்கள் அதிரஸம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை :( . 
நினைவிருக்கட்டும் ’ஜெ’. மறந்துடாதீங்கோ :))))))))   }



நான் துவங்கிய இந்தப்போட்டிகளின் மூலம் 
இந்த ஆண்டு எனக்குக் கிடைத்த புதிய  நட்புகள்:

 
  


1] நேரில் சந்திக்கும் பாக்யமும் கிடைத்த 
    திருமதி. ராதாபாலு அவர்கள். :)

2] திருமதி. ஞா. கலையரசி அவர்கள்
3] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
4] முனைவர் திருமதி. இரா. எழிலி சேஷாத்ரி அவர்கள்
5] கவிஞர் கணக்காயன் என்கிற திருவாளர் இ.சே. இராமன் ஐயா அவர்கள்
6] திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்
7] திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
8] திரு. ரவிஜி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.] அவர்கள் 

ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.



தெய்வ அனுக்கிரஹம்:

அவ்வப்போது எதிர்பாராமல் ஏற்பட்டுவந்த மின் தடைகள், ‘நெட்’ கிடைக்காமல் போவது, உடல்நிலை ஒத்துழைக்காமல் போவது, சந்தோஷமான மனநிலை இல்லாமல் போவது போன்ற சிற்சிலப் பொதுவான பிரச்சனைகளை அவ்வப்போது சந்திக்க நேர்ந்தாலும், 40 வாரங்களும் தொடர்ச்சியாக போட்டிக்கான கதைகளை வெளியிடுவதும், ஏற்கனவே வெளியிட்ட கதைக்கான விமர்சனப்போட்டி பரிசு முடிவுகளை அறிவிப்பதும், ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களை அடையாளம் காட்டுவதும், பரிசுத்தொகைகளை அவரவர்களுக்கு உரிய காலத்தில் அனுப்பி வைப்பதும், எதுவுமே நிறுத்தப்படாமல், சிறிதும் காலதாமதமின்றி, சொன்னது சொன்னபடியே, அந்தந்த நாட்களில் நேரங்களில் மிகச்சரியாக நிகழ்த்தப்பட்டுள்ளன. 

இதற்கெல்லாம் என் மிகச்சரியான திட்டமிடுதலும், விடாமுயற்சிகளும் மட்டுமின்றி கூடவே தெய்வானுக்கிரஹமும் சேர்ந்துள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  

இதுவரை இவற்றை நல்லபடியாக நடத்திக்கொடுத்து, அனைவருக்குமே திருப்தியாக நிறைவேற்றிக்கொடுத்துள்ள, என் தாய், தந்தை, குரு மற்றும் குலதெய்வம், கிராம தெய்வம், இஷ்டதெய்வம் போன்ற அனைத்து தேவதைகளுக்கும் என் நன்றியைக் கூறிக்கொண்டு விடை பெறுகிறேன். வணக்கம்.


 


இந்த என் நன்றி அறிவித்தலில் யாரையேனும் 
நான் மறந்துபோய் விட்டிருந்தால் அவர்கள்
என்னை தயவுசெய்து மன்னிப்பார்களாக !

அவர்களுக்கும் என் மனமார்ந்த 
இனிய அன்பு நன்றிகள்.



 
 




    



அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் VGK-31 To VGK-40 போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் பற்றிய ஒட்டுமொத்த விபரங்கள் அவரவர்களுக்கான மொத்தப் பரிசுத்தொகைகளுடன் வெகு விரைவில் [09.11.2014 ஞாயிறு அதிகாலை] வெளியிடப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பரிசுத்தொகைகள் தங்களை வெகுவிரைவில் வந்தடையப்போகும் தேதியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.  





இதற்கிடையில் அடுத்ததோர் பதிவாக ’அன்பான நெஞ்சங்களுக்கு...’ என்ற தலைப்பில் நம் நடுவர் திரு. ஜீவி சார் அவர்களின் கடிதம் ஒன்று வெளியிடப்பட உள்ளது.

காணத்தவறாதீர்கள் !

  
  

என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்