என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

”ஜீவீ + வீஜீ விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-1 of 4 ]



அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும், உற்சாகமான ஈடுபாடுகளினாலும், நமது சிறுகதை விமர்சனப்போட்டிகள், திட்டமிட்டபடி வெகு அழகாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. 

இந்த மாபெரும் விழா வெகு அமர்க்களமாக நிறைவு பெற்றதில் எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

இந்த மகிழ்ச்சியான என் மனநிலையில், புதிதாக மேலும் சில விருதுகளை [பரிசுகளை] அறிமுகப்படுத்தி இந்த மாபெரும் விழாவினை நிறைவுக்குக்கொண்டுவர விரும்புகிறேன்.

புதிதாகவும் கூடுதலாகவும் 

இப்போது அறிமுகப்படுத்தும் நான்கு விதமான

விருதுகளின் மொத்தப் பரிசுத்தொகை :

ரூபாய்: 





முதல் அறிவிப்பு 


  ’ஜீவீ  + வீஜீ ’ விருது  

  
 
 G.V                              V.G  

VGK-01 முதல் VGK-40 வரையிலான 
அனைத்துக்கதைகளுக்கும் விமர்சனம் 
எழுதி அனுப்பியுள்ள மூவருக்கும் 
மேலும் குறிப்பிட்ட இருவருக்கும் 
இந்த விருது இப்போது வழங்கப்படுகிறது. 


ஒவ்வொருவருக்கும் 
பரிசுத்தொகை 
ரூ. 100 [ரூபாய் நூறு ]

இந்த

    ' ஜீவீ  + வீஜீ  '  

விருதினைப் பெற 
தகுதியுடையோர் 
பட்டியல் இதோ:

 


  

’மணிராஜ்’
திருமதி.
 இராஜராஜேஸ்வரி
அவர்கள்

 40 out of 40 


 


  

'மன அலைகள்’ 
முனைவர் திரு. 

 பழனி கந்தசாமி ஐயா 
அவர்கள்.

 40 out of 40 

 

   

’எண்ணங்கள்’
திருமதி.
 கீதா சாம்பசிவம்
அவர்கள்

 40 out of 40 


 




இதே ’ஜீவீ + வீஜீ’ விருதுக்கு 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
மற்றொருவர்

  

’தீதும் நன்றும் பிறர்தர வாரா ’
திரு. 
ரமணி 
அவர்கள்

இந்தப்போட்டியின் ஆரம்ப காலக்கட்டங்களில் எட்டு முறைகள் மட்டும் கலந்துகொண்டு அதில் ஏழு முறைகள் பரிசுகள் வாங்கியுள்ளார்கள். 


பரிசுக்குத் தேர்வாகாத அந்த ஒரே ஒரு விமர்சனத்தையும் பெருந்தன்மையுடன் தனது வலைப்பக்கத்தில் மிகச்சிறப்பாக மாற்றுச்சிந்தனையுடன் எழுதி http://yaathoramani.blogspot.in/2014/05/blog-post_8735.html மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள்.

VGK-01 To VGK-04 ஆகிய முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக முதல் பரிசினை வென்று ஹாட்-ட்ரிக் அடித்ததுடன், சிறுகதைக்கு ஓர் விமர்சனம் என்றால் அது எப்படி எப்படியெல்லாம் வித்யாசமாக எழுதப்படலாம் என்பதற்கு ஓர் உதாரணமாகவும், மற்ற அனைவருக்கும் ஓர் வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருந்துள்ளார்கள்.  

அதனால் இவருக்கு இந்தச் சிறப்பு விருதினை அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

 




இதே ’ஜீவீ + வீஜீ’ விருதுக்கு 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
மற்றொருவர்

  
’ஊஞ்சல்’

திருமதி. 
ஞா. கலையரசி
அவர்கள்


இவர்கள் நம் போட்டிகள் சிலவற்றில் அவ்வப்போது கலந்து கொண்டுள்ளார்கள். ஆரம்ப கட்டத்தில் VGK-05, VGK-06, VGK-09 and VGK-10 ஆகியவற்றில் பரிசுகளும் பெற்றுள்ளார்கள்.  முதன் முதலாக தான் கலந்துகொண்ட  'VGK-05 காதலாவது ... கத்திரிக்காயாவது  என்ற சிறுகதைக்கான விமர்சனப் போட்டியிலேயே முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெருமைக்கும் உரியவர். http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html


நடுவில் இவரால் தொடர்ச்சியாக நம் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டன. இருப்பினும் போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு VGK-37 To VGK-40 ஆகிய நான்கில் மட்டும் கலந்துகொண்டு அனைத்திலுமே பரிசுக்குத்தேர்வானதுடன், முதன்முதலாக ஓர் ஹாட்-ட்ரிக் அடித்து சாதனை புரிந்துள்ளார்கள்.   

இந்தப் போட்டி நடத்திய எனக்கு, பக்கபலமாக இருந்து மிகவும் முக்கியமான பல உதவிகள் செய்துள்ளார்கள். பரிசு வென்றவர்களுக்கும் எனக்கும் இடையே மறைமுகமான ஓர் இணைப்புப்பாலமாக விளங்கி சுமுகமான உறவினை வலுப்படுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு.


  


பரிசுக்கான தொகைகளை வெற்றியாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு உடனுக்குடன் மின்னல் வேகத்தில் அனுப்பி வைத்து இவர்கள் எனக்குக் காலத்தினால் செய்துள்ள பேருதவியை மனதாரப் பாராட்டி, இந்த விருதினை இவருக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.  


 





மற்ற மூன்று  புதிய மற்றும் கூடுதல் விருதுகள் 
பற்றிய அறிவிப்பு நாளையும் தொடரும்.

காணத்தவறாதீர்கள் !



என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்


43 கருத்துகள்:

  1. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  2. அத்தனை கதைகளுக்கும் விமரிசனம் எழுதியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். very impressed.

    பதிலளிநீக்கு
  3. விருதுகள் பெற்ற அனைவர்க்கும் எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. விருது, பரிசுப் பணம் எல்லாம் உங்களுடையதாய் இருக்க, என்னையும் சேர்த்துக் கொண்டு விருதுப்பெயரை coin பண்ணின
    உங்களின் பெருந்தன்மைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் ஒரு சிறப்பு விருதினை வழங்கியமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அட?? இதுக்கெல்லாமா விருது?? ரொம்பவே ஆச்சரியப்படுத்தறீங்க வைகோ சார். என்னுடன் சேர்ந்து பரிசுகளைப் பகிரும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. பாராட்டு அனைவருக்கும் மகிழ்வளிப்பதுதான்
    என்றாலும் மிக உயர்ந்தவர்களால்
    மிகச் சிறப்பாகப் பாராட்டப்படுவது பெரும் பாக்கியமே
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  8. சிறப்பு விருதளித்து பெருமைப்படுத்தியதற்கு
    நிறைவான நன்றிகள்,..!

    பதிலளிநீக்கு
  9. விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!.. விருது வழங்கிச் சிறப்பித்த தங்களுக்கும், போட்டி நடுவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  10. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அருமை கோபு சார் & ஜி வி சார் ! :) :)

    பதிலளிநீக்கு
  11. விருதுகளுக்கு மேல் விருது. எந்த வகையிலும் போட்டியில் பங்கேற்ற எவரும் மனந்தளர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதுடன் போட்டி முடிந்தபின்னரும் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து சிறப்பிக்கும் தங்கள் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன் கோபு சார்.

    நடுவராகப் பொறுப்பாற்றிய ஜீவி சாரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர் பெயரையும் தங்கள் பெயரோடு இணைத்து வழங்கப்பட்ட இவ்விருதினைப் பெற்றுள்ள ஐவருக்கும் என்னினிய வாழ்த்துகள்.

    நாற்பது போட்டிகளிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாது பங்கேற்று சாதித்த இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் திரு.பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும் கீதா மேடம் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    விமர்சனங்களை எப்படி எழுதுவது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த வேளையில் வழிகாட்டியாய் அமைந்த விமர்சனங்கள் ரமணி சாருடையவையே. நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்த ரமணி சாரும், தன்னால் விமர்சனங்களை எழுதி அனுப்பவியலா சூழலிலும் இப்போட்டிக்கான பரிசுப்பண பட்டுவாடா பொறுப்பை ஏற்று சிறப்புடன் செயல்பட்ட கலையரசி அக்கா அவர்களுக்கும் இவ்விருதினை அளித்து சிறப்பிப்பது சாலப்பொருத்தம். இருவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. பரிசுக்கு மேல் பரிசு...அதற்கும் மேல் தனிப்பட்ட விருது...அள்ளித்தரும் தங்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    அயராமல், தளராமல் 40 கதைகளுக்கும் விமரிசனம் எழுதி விருதைத் தட்டிச் செல்லும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள், திரு. பழனி கந்தசாமி அய்யா அவர்கள், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    விமரிசனம் எழுதும் வித்தையை வித்யாசமாக எழுதுவதற்குக் கற்றுக் கொடுத்து விருது பெரும் திரு ரமணி அவர்களுக்கு இனிய பாராட்டுக்கள்!

    காலத்தினால் செய்த திருமதி கலையரசியின் உதவி ஞாலத்திலும் பெரிதாயிற்றே? விருதைப் பெற்ற தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    வங்கிக் கணக்கில் காலம் தவறாமல் மிகச் சரியாக பரிசுப் பணம் கிடைத்ததற்கு காரணமான திருமதி கலையரசி அவர்களுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. விருது பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  14. கலக்கறீங்க கோபு சார். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. நான் செய்த மிக மிகச் சாதாரண உதவியைப் பெரிதாக எண்ணி, சிறப்பு விருது கொடுத்துக் கெளரவப்படுத்தியிருக்கும் செயல், கோபு சாரின் பெருந்தன்மையையும், தயாள குணத்தையையும் காட்டுவதாக அமைந்துள்ளது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
    வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், நாற்பது போட்டிகளிலும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு போட்டிக்குச் சிறப்புச் சேர்த்த ராஜேஸ்வரி மேடம்,பழனி கந்தசாமி அய்யா, கீதா சாம்பசிவம் ஆகியோர்க்கு என் பாராட்டுக்கள்!
    போட்டி துவங்கிய நேரத்தில், விமர்சனம் எழுதும் முறையை மற்றவர்களுக்குக் கற்றுகொடுக்கும் ஆசானாய் விளங்கிய திரு ரமணி சாருக்கு விருது கொடுத்துக் கெளரவப்படுத்தியிருக்கும் செயல் பாராட்டத்தக்கது.
    விருது பெற்றவர்களை வாழ்த்திப் பாராட்டிய அனைவருக்கும், குறிப்பாக கீதா மதிவாணன், இராதாபாலு ஆகியோர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  17. விடா முயற்சியுடன் 40/40ல் பங்குபெற்று சிறப்பாக மேலும் ஒரு பரிசினைப் பெறும் அனைவருக்கும் என் பாராட்டுகள்! பரிசுமழையில் நனைக்கும் பண்பாளர் திரு வைகோ சார் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  18. ஜி வி - வி ஜி. விருதுகளைப் பெறுகின்ற
    1) திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்கள்,
    2) முனைவர். பழனி கந்தசாமி அவர்கள் ,
    3) திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்
    ஆகியோருக்கும்
    சிறப்பு பரிசுகள் பெறுகின்ற
    1) திரு. ரமணி அவர்கள்,
    2) திருமதி. கலையரசி அவர்கள்
    ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. வெற்றி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  20. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    ’VGK-06 உடம்பெல்லாம் உப்புச்சீடை’

    இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://unjal.blogspot.in/2014/11/2.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  21. ’ஜீவீ + வீஜீ விருது’ பெற்ற சாதனையாளர்களில் ஒருவரான நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ரமணி சார் அவர்கள், தான் பெற்ற இந்த விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டதோடு, அதனை இன்று அவர்களின் வலைத்தளத்தினில் பெருமையுடன் தனிப்பதிவாகவே வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இணைப்பு: http://yaathoramani.blogspot.in/2014/11/part-1-of-4_2.html

    தலைப்பு: ’பதிவுலகப் பிதாமகர் தந்த உற்சாக டானிக்’

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    இதனை இன்று தனிப்பதிவாக அவர்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள பெருந்தன்மைக்கும், மிகச்சிறியதோர் விருதாகினும் அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு கெளரவித்த அவர்களின் அன்புள்ளத்திற்கும், திரு. யாதோ ரமணி சார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  22. இனிமையான பரிசளிப்பு விழாவை அழகாய் நடத்திக்கொன்டிருக்கும் தங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்! இனிய பாராட்டுக்கள்!

    பரிசுகள் பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  23. ராஜேஸ்வரி அவர்களோடெல்லாம் என்னை ஒப்புவமை செய்ய இயலாது. நான் நாற்பதுகளிலும் கலந்து கொண்டமைக்கு முக்கியக்காரணமே வைகோ சார் தான். திரும்பத் திரும்ப நினைவூட்டுவார். எத்தனையோ தரம் வேலைப் பளுவினால் அவர் வெளியிட்ட கதைகளைப் படிக்கக் கூட முடியாமல் இருந்திருக்கிறேன். என்றாலும் சலிக்காமல் நினைவூட்டிவிட்டு என்னிடமிருந்து விமரிசனத்தைப் பெற்று உற்சாகவார்த்தைகள், பாராட்டுக்களுடன் அதை ஏற்றுக் கொள்வார். இந்த அளவுக்காவது நான் பரிசுகள் பெற்றேன் என்றால் அதற்கு முழுக்காரணம் வைகோ அவர்களின் தூண்டுதலும் நடுவர் அவர்களின் திறமையான தேர்ந்தெடுப்பும் தான் காரணம். எனினும் என் விமரிசனங்களை விட மற்றவை மிகச் சிறப்பாக அமைந்தன என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. பல சமயங்களிலும் கதையை ஆழ்ந்து படிக்கவே முடியாமல் போயிருக்கிறது. மேம்போக்காகப் படித்துவிட்டும் எழுதி இருக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  24. 40/40 மிகவும் பெரிய விஷயம்தான்! விழா களைகட்டிவிட்டது! விரு(ந்)தை கொடுத்து கெளரவித்தமைக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! செல்விரு(ந்)து போக வருவிரு(ந்)து நோக்கிக் காத்திருப்போம்! என் கம்ப்யூடர் மட்டையாகிவிட்டது சரியான புது(வை)மை கம்ப்யூடரால்ல இருக்கு!!!என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

    பதிலளிநீக்கு
  25. அடுத்தடுத்த வேலைப்பளுவினாலும் வீட்டுச் சூழலாலும் போட்டியிலிருந்து விலகுவோம் என நினைத்தாலும் வைகோ சாரின் தூண்டுதல் என்னை விலக விடவில்லை. இது ஒரு சாதனை என்றால் அதைச் செய்ய வைத்தது வைகோ அவர்களே. திரு ரமணி சார் அவர்கள் போட்டியில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாமல் போனதில் வருத்தமே. ஆனாலும் அவருக்கும் ஒரு சிறப்பு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள். திருமதி கலையரசி அவர்களின் சிறப்பான தொண்டிற்குக் கிடைத்த பரிசிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. ராஜேஸ்வரி அவர்களோடெல்லாம் என்னை ஒப்புவமை செய்ய இயலாது. நான் நாற்பதுகளிலும் கலந்து கொண்டமைக்கு முக்கியக்காரணமே வைகோ சார் தான். திரும்பத் திரும்ப நினைவூட்டுவார். எத்தனையோ தரம் வேலைப் பளுவினால் அவர் வெளியிட்ட கதைகளைப் படிக்கக் கூட முடியாமல் இருந்திருக்கிறேன். என்றாலும் சலிக்காமல் நினைவூட்டிவிட்டு என்னிடமிருந்து விமரிசனத்தைப் பெற்று உற்சாகவார்த்தைகள், பாராட்டுக்களுடன் அதை ஏற்றுக் கொள்வார். இந்த அளவுக்காவது நான் பரிசுகள் பெற்றேன் என்றால் அதற்கு முழுக்காரணம் வைகோ அவர்களின் தூண்டுதலும் நடுவர் அவர்களின் திறமையான தேர்ந்தெடுப்பும் தான் காரணம். எனினும் என் விமரிசனங்களை விட மற்றவை மிகச் சிறப்பாக அமைந்தன என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. பல சமயங்களிலும் கதையை ஆழ்ந்து படிக்கவே முடியாமல் போயிருக்கிறது. மேம்போக்காகப் படித்துவிட்டும் எழுதி இருக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  27. ரமணி சாரைப் பற்றிய கருத்து எழுதும்போது கணினி தகராறு! :)))) போச்சா என்னனு தெரியலை. திரு பழனிசாமி ஐயா அவர்கள் கொஞ்சம் கூடச் சலிக்காமல் தொடர்ந்து எழுதியது அவரின் விடாமுயற்சிக்கு ஒரு சான்று. விருதுக்குப் பெயர் வைக்கக் காரணமாய் அமைந்த நடுவருக்கும், போட்டியை நடத்திய வைகோ சாருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. இன்னிக்குத் தான் உங்க பதிவுகளை நிதானமாய்ப் படிக்கணும். சும்மா ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனேன். இனி ஒவ்வொன்றாய்ப் படிக்க வேண்டும். :)

    பதிலளிநீக்கு
  29. வெற்றி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அடுத்தடுத்த, இந்த வெற்றிவிழா நிகழ்ச்சிகள் வெளியீட்டு வேலைகளிலும், அதையடுத்து உடனடியாக வரவிருக்கும் என் வெளிநாட்டுச்சுற்றுலா வேலைகளிலுமான பல்வேறு ஆயத்தப்பணிகளில் மூழ்க வேண்டியிருப்பதால், அன்புடன் வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது PRACTICALLY NOT POSSIBLE ஆகவே உள்ளது.

    இது உங்கள் வீட்டு விழா என்பதையும், நம் வீட்டு விழா என்பதையும் யாரும் தயவுசெய்து மறக்காதீங்கோ. நமக்குள் FORMALITIES எல்லாம் எதற்கு?

    தினமும் வருகை தந்து, மனம் திறந்துபேசி, கருத்துக்கள் அளித்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  30. வெளிநாட்டுப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். அங்கே போயாவது முழு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  31. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

    உங்கள் அயராத உழைப்பு எங்களுக்கு ஒரு வழிகாட்டி.

    வெளிநாட்டுப் பயணம் மிகச் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  32. வெற்றி விழா தொடர்ந்து சிறப்பாக நடப்பது பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிரது. பரிசுகள்பெற்ற, பங்கு கொண்ட யாவரையும் பாராட்டுகிறேன். என்ன அழகாக கட்டுக் கோப்பாகத்,தளர்வே இல்லாத ஒரு முயற்சியை இவ்வளவு மேன்மையாகத் திறம்படச் செய்து உற்சாகத்தை வாரி வழங்கிய உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
    செம்மையாக வெளிநாட்டுப் பிரயாணம் அமைய வேண்டுகிறேன்.
    நல்ல திறமைசாலிதான் நீங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  33. வெளிநாட்டு சுற்றுலா இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்.

    உங்கள் பெயரிலும், ஜீவி சார் பெயரிலும் விருது அருமை. போனில் இருந்து சில நேரம் டைப் செய்வதால் நிறைய எழுத முடியவில்லை.

    வெற்றி விழா சிறப்பாக நடந்து வருகிறது. கீதா சொன்னது போல் வெளிநாடு சென்று கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு, மீண்டும் உற்சாகத்துடன் பதிவுலகம் வரலாம். புதிய சிந்தனைகளுடன்.
    எங்களுக்கும் பயண அனுபவ பதிவுகள் கிடைக்கும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. அன்பின் வை.கோ

    தங்களின் இடை விடாத முயற்சிக்கும், கடும் பணியினை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கும் அத்தனை சாதனையாளர்க்ளுக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தமைக்கும் - இவை அனைத்தும் ஒருங்கே சேர்ந்த இமாலயச் சாதனையினை சிறப்புடன் நடத்தியமைக்கும் பாராட்டுகள்.

    வெளி நாட்டுச் சுற்றுலா தங்கள் அருமைப் பேத்தியுடன் இனிதாக நடை பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  35. பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  36. விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!.. விருது வழங்கிச் சிறப்பித்த தங்களுக்கும், போட்டி நடுவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  37. விருது வென்ற அல்லாவங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  38. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  39. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு