About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, February 10, 2018

கண்குளிரக் காட்சியளிக்கும் காமதேனு

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


30.12.2017 சனிப்பிரதோஷ தினத்தில், பிரதோஷ வேளையில், என் கைகளை எட்டிய அந்தக் ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற பொக்கிஷம், என்னிடம் வந்த பிறகு என்ன ஆச்சு என்பதை இப்போது பார்ப்போம்.   

படத்தை நல்லமுறையில் எங்கேனும் லேமினேஷன் செய்து கொண்டு வருமாறு என் நண்பர் ஒருவரிடம் பத்திரமாக ஒப்படைத்திருந்தேன். ஒரிரு வாரங்கள் ஆகியும் அது வந்து சேராததால், அவருக்கு நான் நினைவூட்டல் கொடுத்திருந்தேன். ”இதோ வந்திடும் .. அதோ வந்திடும்” எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நேற்று 09.02.2018 தை வெள்ளிக்கிழமையன்று, சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்கு, நானே சற்றும் எதிர்பாராத போது, அந்த லேமினேட் செய்யப்பட்ட படத்தினைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து விட்டார். படத்தினை வாங்கி பரவசத்துடன் கண்களில் ஒத்திக்கொண்டேன். 



அதே தினமான நேற்று 09.02.2018 தை வெள்ளிக்கிழமையுடன் ‘அனுஷ’ நக்ஷத்திரமாகவும் அமைந்திருந்தது மேலும் ஓர் ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.  

புதிய படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, பழங்கள் + புஷ்பங்கள் வாங்கிக்கொண்டு, அந்த ஸ்ரீ பாதுகையின் அனுஷ பூஜையில், இந்தப் படத்தினை வைத்து வணங்கி விட்டு வரப் புறப்பட்டேன்.


லேமினேட் செய்யப்பட்ட இந்த காமதேனு-பெரியவா படம், அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த பூஜையில் என்னால் வைக்கப்பட்டது. அப்படியே நானும் அங்கு நமஸ்கரித்துக் கொண்டேன். 


பாதி பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாலும், ஸ்ரீ பாதுகைகள் மேல் பூக்குவியலாக, உதிரிப் புஷ்பங்கள் போடப்பட்டுக்கொண்டே இருந்ததாலும், ஸ்ரீ பாதுகைகளை, நான் தரிஸிக்க இயலாமல், மலை போன்ற பூக்களால் அவை மறைக்கப்பட்டு இருந்தன. அனுஷ பூஜை முடியும் வரை நானும் அங்கு ஸ்ரீ பாதுகைகளை தரிஸிக்கக் காத்திருந்தேன்.

 

காமதேனு ஸமம் ப்ரோக்தம்
வாஞ்சிதார்த்த ப்ரதாயகம் !

ஸ்ரீ சந்த்ரஷேகரம் வந்தே
நிஸ்ஸீம கருணாலயம் !!

  

பூஜை முடிந்த பிறகு, மாலை அணிவிக்கப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவர் படம், மாலை அணிவிக்கப்பட்ட அவரின் திரு உருவச் சிலை, உதிரிப் புஷ்பக் குவியல்கள், ருத்ராக்ஷ மாலைகள், காமதேனு-பெரியவா படம், வெள்ளிக்கவசங்கள் போடப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பாதுகைகள் ஆகியவை அனைத்தும் நன்கு காட்சியளிக்குமாறு வைத்து, தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. 





14.12.2017 அன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவருக்கு நடைபெற்றுள்ள ஆராதனை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ள இந்த காமதேனு-பெரியவா படம் பற்றிய பல்வேறு சிறப்புக்களை எடுத்துச் சொல்லும், 15 நிமிட வீடியோ காட்சிகள் காண இதோ ஓர் இணைப்பு:  



மேற்படி வீடியோவில் கடைசி நான்கு நிமிடக் காட்சிகளைக் காணத் தவறாதீர்கள். தெப்ப உற்சவத்தில் காமதேனு-பெரியவா, மிதந்து வந்து காட்சியளிப்பது மிகவும் அழகோ அழகாகக் காட்டப்பட்டுள்ளது.  




இந்தக் கிடைப்பதற்கு அரிய, பொக்கிஷமான காமதேனு-பெரியவா படத்தினை எனக்குப் புத்தாண்டு பரிசாக, பிரியத்துடன் அனுப்பி வைத்துள்ள, என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரியத் தோழி திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத், அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


  


  

வரும் 13.02.2018 மஹா சிவராத்திரி + பிரதோஷம் அன்றோ அல்லது 15.02.2018 அமாவாசையன்றோ மேற்படி காமதேனு-பெரியவா படத்தினை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹத்தால், என் வீட்டு பூஜை அறை நுழைவாயில் மேலே நிரந்தரமாகக் காட்சியளிக்குமாறு, ஆணி அடித்து மாட்டவும், புதிய சந்தன மாலை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யலாம் என நினைத்துள்ளேன். 

ஸ்ரீ ஸத் குருப்யோ நம:


பாத ரக்ஷைகள் என்றால் என்ன? அவற்றின் மகத்துவம் என்ன? ஏன் அதனை மிகவும் உயர்வாக நாம் மதித்து வணங்க வேண்டும்? என்ற பல்வேறு விஷயங்களை, மிகப் பிரபலமான எழுத்தாளரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்: 
   

140
https://www.youtube.com/watch?v=c98P9bZzliw&list=PL00QzbpQoXcvob0yaOjcgzpW7RfQFBYqP&index=19

141

142

143

144

145

146

147

148

149

150

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதரக்ஷைகளின் மஹிமைகள் பற்றி மட்டுமே, தினமும் 10 நிமிடங்கள் வீதம் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பேசி வருகிறார். அவர் சொல்லிடும் ஒவ்வொரு அதிசய + அற்புத நிகழ்வுகளையும் பற்றிக் கேட்டு மகிழ, மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது.

oooooOooooo




ஸ்ரீ குருப்யோ நம:  

சுவஸ்திஸ்ரீ ஹேவிளம்பி (ஹேமலம்ப) வருஷம், உத்தராயணம், சிசிர ருதெள, கும்ப மாஸம், கிருஷ்ணபக்ஷம், திரயோதஸி, ஸித்த யோகம், உத்ராஷாடா நக்ஷத்திரம் கூடிய, விஷ்ணுபதி புண்யகாலம், மாசி முதல் தேதி, மங்கள்வார் எனும் மாசிச் செவ்வாய்க்கிழமை, மஹா சிவராத்திரி புண்யதினம், பிரதோஷ நாள், பிரதோஷ வேளையில், 13.02.2018 மாலை 5 மணிக்கு மேல், மேற்படி காமதேனு-பெரியவா அடியேன் இல்லத்தின் பூஜையறை நுழைவாயில் அருகே வந்து அமர்ந்து அருளாசி வழங்க ஆரம்பித்துள்ளார் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதற்கான படங்களில் சில தங்களின் தரிஸனத்திற்காக கீழே காட்டியுள்ளேன்:



^திருமதி. ஜெயஸ்ரீ அவர்களால் 
அன்பளிப்பாக அனுப்பப்பட்ட 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ காமதேனு-பெரியவா படம்^


^அடியேன் இல்லத்து பூஜை அறை நுழைவாயில்^


^பூஜை அறையின் உள்பக்கத்தின் ஒரு பகுதி^ 


என் பெரிய அக்கா தன் காசிப்பயணத்தை
முடித்து வந்ததும், எனக்கு அளித்துள்ள காமதேனு



என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

74 comments:

  1. Replies
    1. ப.கந்தசாமி February 10, 2018 at 4:38 AM

      வாங்கோ ஸார், வணக்கம்.

      //ரசித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      Delete
  2. ஆகா...
    வைபவத்தின் இனிய நிகழ்வுகளை கண்ணாரக் கண்டதில் மகிழ்ச்சி...

    குருவே சரணம்..

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ February 10, 2018 at 5:49 AM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //ஆகா... வைபவத்தின் இனிய நிகழ்வுகளை கண்ணாரக் கண்டதில் மகிழ்ச்சி... குருவே சரணம்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  3. கண்களும் மனமும் குளிர்ந்தது
    மீண்டும் மீண்டும் தரிசித்து மகிழ்ந்தோம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. Ramani S February 10, 2018 at 6:46 AM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //கண்களும் மனமும் குளிர்ந்தது. மீண்டும் மீண்டும் தரிசித்து மகிழ்ந்தோம். வாழ்த்துக்களுடன்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      Delete
  4. // ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.//

    அடடே... வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். February 10, 2018 at 7:26 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //அடடே... வணங்குகிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். :)

      Delete
  5. // தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. //

    கிடைக்காத தரிசனம். பெரியவரை தரிசித்திருக்காத அபாக்யசாலி நான். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். February 10, 2018 at 7:27 AM

      **தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன.**

      //கிடைக்காத தரிசனம். பெரியவரை தரிசித்திருக்காத அபாக்யசாலி நான். நன்றி.//

      அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ ஸ்ரீராம். இந்தப் பதிவினைப் பார்க்கவும், படிக்கவும் தங்களுக்கு நேரிட்டுள்ளதே அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அவர்களின் அனுக்கிரத்தினால் மட்டுமேதான்.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சூட்சும சரீரத்துடன் இன்றும் நம்முடன் வாழ்ந்து, நமக்கெல்லாம் நல்வழி காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.

      தங்களுக்கு முடிந்த போது காஞ்சீபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அதிஷ்டானத்தை, பக்தி சிரத்தையுடன் 12 பிரதக்ஷணங்கள் செய்து, ஒவ்வொரு பிரதக்ஷணம் முடிந்ததும் 4 நமஸ்காரங்கள் செய்து விட்டு வாங்கோ. இதனை முழுவதுமாகச் செய்ய மொத்தமாக ஒரு மணி நேரம் கூட ஆகாது. ஒவ்வொரு பிரதக்ஷண நமஸ்காரங்களுக்கும், உங்கள் ஸ்பீடுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகவே ஆகாது. என்னைப்போன்றவர்களுக்கு மட்டும் 10 நிமிடங்கள் ஆகலாம்

      உங்களால் அவரை இப்போதும், மிகச் சுலபமாக நன்கு உணர முடியும். அங்கு தாங்கள் ஒருமுறை போய் வந்து விட்டாலே, அதுவே தங்கள் வாழ்க்கையில் ஓர் நல்ல திருப்பு முனையாகவும் அமையும்.

      அந்த இடத்தில் எப்போதும் சாந்நித்யம் உள்ளது. ஓர் VIBRATION உள்ளது. மனதுக்கு நிச்சயமாக அமைதி கிடைக்கும்.

      அதே போல முடிந்தால் பாலாற்றங்கரையின் அருகே உள்ள ஓரிக்கை என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மணி மண்டபத்திற்கும் சென்று வாங்கோ.

      இதையெல்லாம்விட மிக முக்கியமாக காஞ்சீபுரம் கலெக்டர் ஆபீஸுக்கு எதிர்புறம், பங்காரு அம்மன் தோட்டம் என்ற குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. அங்குள்ள யாரைக்கேட்டாலும் ‘பிரதோஷம் வெங்கட்ராம ஐயர்’ வீடு எது என்பதைச் சொல்லுவார்கள்.

      அந்த வீட்டில் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா இன்றும் இப்போதும் குடி கொண்டுள்ளார். 64-வது நாயன்மார் என ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களால் அழைக்கப்பட்ட ’பிரதோஷம் வெங்கட்ராம ஐயர்’ என்ற மிகத் தீவிரமான பக்தர் அவர்களின் பெண் வழிப் பேரனும், தங்கள் பெயருள்ள ‘ஸ்ரீராம்’ என்பவரும் அந்த வீட்டில் இப்போது இருக்கிறார். தினப்படி பூஜைகள் நடந்துகொண்டு ஓர் மிகப்புனிதமான கோயிலாகவே அந்த வீடு காட்சியளித்து வருகிறது.

      அவரிடம் திருச்சியில் வடக்கு ஆண்டார் தெருவினில் குடியிருக்கும் கோபு & சுந்தரேஸ சாஸ்திரிகள் அனுப்பினார்கள் எனச் சொல்லி, அங்குள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை தரிஸித்து நமஸ்கரித்து விட்டு வரவும்.

      சென்னையை விட்டு, விடியற்காலம் குளித்து விட்டு, பஸ்ஸில் கிளம்பி காஞ்சீபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கினால், மேற்படி மூன்று இடங்களுக்கும் + ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயத்திற்கும் ஒரே நாளில், ஆங்காங்கே கொஞ்சம் ஆட்டோவில் சென்று தரிஸித்து விட்டு நீங்கள் சென்னைக்குத் திரும்பி விடலாம். :)

      அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் ஸ்ரீராம்.

      Delete
    2. இந்த மாதிரி விஷயமுள்ள மறுமொழிக்குத்தான் தளத்துக்கு வந்து பார்த்தேன். மிகவும் உபயோகமான தகவல். ஸ்ரீராமுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்.

      These additional information make your replies more interesting. மிக்க நன்றி.

      Delete
    3. நெல்லைத் தமிழன் February 14, 2018 at 6:59 PM

      //இந்த மாதிரி விஷயமுள்ள மறுமொழிக்குத்தான் தளத்துக்கு வந்து பார்த்தேன். மிகவும் உபயோகமான தகவல். ஸ்ரீராமுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்.

      These additional information make your replies more interesting. மிக்க நன்றி.//

      _/\_ _/\_ _/\_ _/\_ _/\_

      மிகவும் சந்தோஷம். :)

      _/\_ _/\_ _/\_ _/\_ _/\_

      Delete
    4. நன்றி ஸார். உங்கள் பதிலை காபி செய்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆலோசனையும் ஆறுதலான வரிகளும் இப்போதே சென்று தரிசித்து வந்தது போல ஒரு சந்தோஷம் தருகிறது.

      Delete
    5. ஸ்ரீராம். February 15, 2018 at 9:24 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      //நன்றி ஸார். உங்கள் பதிலை காபி செய்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆலோசனையும் ஆறுதலான வரிகளும் இப்போதே சென்று தரிசித்து வந்தது போல ஒரு சந்தோஷம் தருகிறது.//

      மிகவும் சந்தோஷம் ஸ்ரீராம். எனக்குத் தெரிந்த மேலும் பல யோசனைகளும், தகவல்களும் தங்களுக்கு இப்போது நான் மெயில் மூலம் அனுப்பியுள்ளேன்.

      அன்புடன் கோபு

      Delete
  6. தை வெள்ளி 'அனுஷ நக்ஷத்திரம்' - உங்களுக்கு இதைச் சாக்கிட்டு பாத பூஜையில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்ததே.

    படத்தையும் பூஜையில் வைத்து பிறகு உங்கள் வீட்டில் மாட்டியது அருமை.

    பரமாச்சார்யாரின் படங்களையும் பாதுகைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.

    நேற்று இரவுதான் எதோ காரணத்தில் தேடி, பரமாச்சார்யார் மறைந்த தினத்து வீடியோவை (பிரதமர் பி.வி. நரசிம்ஹராவ் கலந்துகொண்டது) பார்த்துக்கொண்டிருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் February 10, 2018 at 10:56 AM

      வாங்கோ ஸ்வாமி, வணக்கம்.

      //தை வெள்ளி 'அனுஷ நக்ஷத்திரம்' - உங்களுக்கு இதைச் சாக்கிட்டு பாத பூஜையில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்ததே.//

      ஆமாம். கிடைக்கப்பெற்றேன். பூஜை நடைபெறும் இடம், லிஃப்ட் இல்லாத மாடியில். சின்ன குறுகலான இடமாக இருப்பதாலும், அங்கு அனுஷத்தன்று அதிகக்கூட்டம் இருப்பதாலும், என்னால் அங்கு, கால்களை மடக்கி தரையில் நீண்ட நேரம் அமர முடியாமல், என் தேக அசெளகர்யங்கள் இருப்பதாலும், பெரும்பாலும் மாதாமாதம் அனுஷத்தன்று அங்கு செல்வதையும், அப்படியே சென்றாலும் அதிக நேரம் அங்கு அமர்ந்து இருப்பதையும் நானே தவிர்த்து வருகிறேன்.

      இருப்பினும் நான் மற்ற வெறும் நாட்களில், எப்போது நினைத்தாலும் அங்கு செல்லவோ, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பாதுகைகளைக் கண்ணாரக் கண்டு, நமஸ்கரித்து வரவோ என்னால் முடியக்கூடியதாகவே உள்ளது. அதுவரை அதனை நான் ஒரு பாக்யமாகவே கருதி வருகிறேன்.

      நித்தியப்படியே சிவபூஜையுடன், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஸ்ரீ பாதுகைகளுக்கும், அபிஷேகம் + ஆராதனை பூஜைகள் அங்கு நடைபெற்றுத்தான் வருகின்றன. ஒவ்வொரு நாளும் பூஜை நடைபெறும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் வித்யாசங்கள் இருக்கக்கூடும்.

      அனுஷத்தன்று மட்டும் மிக அமர்க்களமாக சாயங்காலம் 6 மணி முதல் இரவு 8 மணி வரை (Standard Timing) நடைபெற்று வருகிறது.

      மற்ற நாட்களில் சாதாரண முறையில் அபிஷேகமும் பூஜைகளும், கொஞ்சம் எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றன.

      //படத்தையும் பூஜையில் வைத்து பிறகு உங்கள் வீட்டில் மாட்டியது அருமை.//

      சுவற்றில் மாட்ட இடம் தேர்வு செய்து ஆணி அடிக்க ஏற்பாடு செய்தாகி விட்டது. நாளை செவ்வாய்க்கிழமை (13.02.2018) அதனை மாட்டி, அலங்கரிக்க உத்தேசித்துள்ளேன்.

      //பரமாச்சார்யாரின் படங்களையும் பாதுகைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நேற்று இரவுதான் எதோ காரணத்தில் தேடி, பரமாச்சார்யார் மறைந்த தினத்து வீடியோவை (பிரதமர் பி.வி. நரசிம்ஹராவ் கலந்துகொண்டது) பார்த்துக்கொண்டிருந்தேன்.//

      நானும் அன்றைய தினம் முழுவதுமே (08.01.1994), பெரும்பாலும் அங்கு காஞ்சீபுரம் ஸ்ரீ மடத்தின் உள்ளே தான், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பக்கத்திலேயேதான் இருந்தேன்.

      அன்புடன் கோபு

      Delete
  7. Replies
    1. தி.தமிழ் இளங்கோ February 10, 2018 at 12:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  8. // ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.//

    உங்கள் பொழுதுகள் நல்லவிதமாக போகிறது நீங்கள் சொன்னது போல்.

    //திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்: //

    கேட்கிறேன் நன்றி.

    பரமாச்சார்யாரின் காமதேனு படம் மிக அருமை.

    தரிசனத்திற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.




    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு February 10, 2018 at 3:30 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      **ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.**

      //உங்கள் பொழுதுகள் நல்லவிதமாக போகிறது நீங்கள் சொன்னது போல்.//

      ஆமாம், மேடம். ஏதோ என்னால் இயன்ற அளவுக்கு மட்டும், போகும் வழிக்குப் புண்ணியம் தேட ஆரம்பித்துள்ளேன்.

      **திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்:**

      //கேட்கிறேன் நன்றி.//

      அவசியமாகக் கேளுங்கோ. முதல் ஒரு பகுதியை 10 நிமிடம் ஒதுக்கிக் கேட்க ஆரம்பித்தாலே, அடுத்தடுத்து அனைத்துப் பகுதிகளையும் கேட்க வேண்டும் என்ற ஆர்வம், நம்மைத் தொற்றிக்கொண்டு விடும்.

      //பரமாச்சார்யாரின் காமதேனு படம் மிக அருமை.
      தரிசனத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  9. மஹாபெரியவாளுக்கு நடந்த பூஜையையும், காமதேனு-பெரியவா படத்தையும் கண்டு மகிழ வாய்ப்புக் கொடுத்ததுக்கு நன்றி. உங்கள் அண்ணா பிள்ளை வீட்டில் ஒவ்வொரு அனுஷத்தின்போது நடைபெறும் ஆராதனை குறித்து ஏற்கெனவே எங்களுக்குச் சொல்லி இருக்கிறீர்கள். நினைவில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam February 10, 2018 at 5:03 PM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //மஹாபெரியவாளுக்கு நடந்த பூஜையையும், காமதேனு-பெரியவா படத்தையும் கண்டு மகிழ வாய்ப்புக் கொடுத்ததுக்கு நன்றி. உங்கள் அண்ணா பிள்ளை வீட்டில் ஒவ்வொரு அனுஷத்தின்போது நடைபெறும் ஆராதனை குறித்து ஏற்கெனவே எங்களுக்குச் சொல்லி இருக்கிறீர்கள். நினைவில் இருக்கிறது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)

      Delete
  10. Replies
    1. கே. பி. ஜனா... February 10, 2018 at 9:51 PM

      //அருமை... நன்றி ஐயா.//

      வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  11. மிக மிக அருமை, பூக்களோடு படத்தைப் பார்க்க மிகவும் பக்தி மயமாக இருக்கு... எனக்கும் இதனால் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. athiraமியாவ் February 11, 2018 at 2:24 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //மிக மிக அருமை, பூக்களோடு படத்தைப் பார்க்க மிகவும் பக்தி மயமாக இருக்கு... எனக்கும் இதனால் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.//

      எனக்கும் மகிழ்ச்சியே. மிக்க நன்றி, அதிரா.

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  12. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். மனதிற்கு நிறைவைத் தருகின்ற படங்கள், செய்திகள். ஆன்மிக சுகம் என்பதானது மிகவும் அலாதியானது. அதனைத் தந்தது இப்பதிவு.

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University February 12, 2018 at 8:21 AM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். மனதிற்கு நிறைவைத் தருகின்ற படங்கள், செய்திகள். ஆன்மிக சுகம் என்பதானது மிகவும் அலாதியானது. அதனைத் தந்தது இப்பதிவு.//

      தங்களின் அன்பு வருகை + அலாதியான கருத்துக்கள், எனக்கும் மனதுக்கு நிறைவு தருகின்றன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  13. நேரில் கலந்துகொண்டது போன்ற உணர்வு தங்களது பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி!திரு இந்திரா சௌந்தராஜன் அவர்களின் சொற்பொழிவை கேட்டு இரசிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி February 12, 2018 at 3:47 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //நேரில் கலந்துகொண்டது போன்ற உணர்வு தங்களது பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      //திரு இந்திரா சௌந்தராஜன் அவர்களின் சொற்பொழிவை கேட்டு இரசிக்க இருக்கிறேன்.//

      அவசியமாகக் கேளுங்கோ ஸார். ஒவ்வொரு பகுதியும் சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். மிகத் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும், நன்கு புரியும் படியும், மனதைக் கவரும்படியும், அவர் பாணியில் வெகு அழகாகச் சொல்லி வருகிறார்.

      Delete
  14. A rose is a rose is a ROSE...மிகவும் ரசித்தேன் வாத்யாரே!!!

    ReplyDelete
    Replies
    1. RAVIJI RAVI February 12, 2018 at 3:58 PM

      வாங்கோ சின்ன வாத்யாரே .... வணக்கம்.

      //A rose is a rose is a ROSE...மிகவும் ரசித்தேன்
      வாத்யாரே!!!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி !!! :)))

      Delete
  15. அருமையும் அழகும் தெய்வீகமா இருக்கு படங்களைக்காணும்போது .
    ஒவ்வோராண்டும் நீங்கள் இந்த பூஜை செய்வது பற்றி சொல்லியிருந்திங்க உங்களது பதிவில் முன்பு .
    ஜெயஸ்ரீ அக்கா அனுப்பிய காமதேனுவை லேமினேட் செய்தாச்சா .வீட்டில் மாட்டியபின்னும் படமெடுத்து போடுங்க இங்கே .

    ReplyDelete
    Replies
    1. Angel February 12, 2018 at 10:51 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையும் அழகும் தெய்வீகமா இருக்கு படங்களைக்காணும்போது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //ஒவ்வோராண்டும் நீங்கள் இந்த பூஜை செய்வது பற்றி சொல்லியிருந்திங்க உங்களது பதிவில் முன்பு.//

      1994 மார்ச் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் அனுஷ நக்ஷத்திரம் உள்ள நாட்களில் இந்த பூஜை, பலரும் பார்க்க மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

      மார்கழி மாதம் ஆராதனை என்பதும், வைகாசி மாதம் ஜெயந்தி என்பதும் மேலும் சிறப்பாக நடைபெறுவதும் உண்டு.

      தினமுமே இந்த பூஜை எளிமையான முறையில் நடைபெற்றும் வருகிறது.

      //ஜெயஸ்ரீ அக்கா அனுப்பிய காமதேனுவை லேமினேட் செய்தாச்சா.//

      ஒருவழியாக செய்து வந்தாச்சு. :)))))

      //வீட்டில் மாட்டியபின்னும் படமெடுத்து போடுங்க இங்கே .//

      நாளை (13.02.2018) இரவு அந்தப்படமும் வெளியிடப்படும். தங்களின் வருகைக்கும் ஆர்வத்திற்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

      அன்புடன் கோபு அண்ணா

      Delete
    2. Angel February 12, 2018 at 10:51 PM

      //வீட்டில் மாட்டியபின்னும் படமெடுத்து போடுங்க இங்கே.//

      தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. :)

      அன்புடன் கோபு அண்ணா

      Delete
  16. பக்திமயமான பதிவு.. எவ்வளவு பூக்கள் படங்கள் அழகோ அழகு..இதுக்குமேல எதும் சொல்ல தெரியல..

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco February 13, 2018 at 12:07 PM

      வாங்கோ மை டியர் ஷம்மு, நமஸ்தே !

      //பக்திமயமான பதிவு.. எவ்வளவு பூக்கள் படங்கள் அழகோ அழகு.. இதுக்குமேல எதும் சொல்ல தெரியல..//

      மிகவும் சந்தோஷம். தங்களின் கருத்துக்களும் அழகோ அழகு தான். உங்களுக்கு இதுக்குமேல் ஏதும் என்னிடம் சொல்லத் தெரியாது தான். நானும் இதனை அப்படியே நம்பிட்டேன். :))))))

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஷம்மு.

      Delete
  17. இந்த பதிவு இன்றுதான் என் கண்களில் பட்டது.. அதுவும் நல்லதுதான்.. புனிதமான சிவராத்திரியில் ஸ்ரீ..ஸ்ரீ. பெரியவாளின் அநுஷ பூஜை படங்கள் காணக்கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்.. காமதேனு படம் உங்க வீட்டு பூஜை அறையில் மாட்டியாச்சா..

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ...ஸ்ரீ.. மஹா பெரியவாளின் அநுஷபூஜையில் நாங்களும் கலந்துகொண்ட சந்தோஷம்... பாதுகையே தரிசிக்க முடியாமல் மலை..மலையாக மலர்கள்..

      Delete
    2. ஆல் இஸ் வெல்.. February 13, 2018 at 12:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இந்த பதிவு இன்றுதான் என் கண்களில் பட்டது.. அதுவும் நல்லதுதான்.. புனிதமான சிவராத்திரியில் ஸ்ரீ..ஸ்ரீ. பெரியவாளின் அநுஷ பூஜை படங்கள் காணக்கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //காமதேனு படம் உங்க வீட்டு பூஜை அறையில் மாட்டியாச்சா..//

      இதைப்படித்ததும் எனக்கு உடனடியாக நான் வெளியிட்டிருந்ததோர் பதிவு நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2013/04/9.html

      1978 பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள்...... அடியேன் வரைந்து கொண்டு போயிருந்த மிகப்பெரிய காமாக்ஷி அம்பாள் படத்தினை தன் திருக்கரங்களால் வாங்கி, உற்று நீண்ட நேரம் தன் அருட்பார்வையினை செலுத்திய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள், அதனை அங்கு (குண்டக்கல்லுக்கு அருகேயுள்ள ஹகரி என்ற சிற்றூர்) புதிதாக கட்டப்பட்டு வந்த ”சிவன் கோயிலில் மாட்டு” என்று ஆக்ஞையிட்டு அனுக்கிரஹித்திருந்தார்கள்.

      அதே கருணாமூர்த்தியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் படத்தினை எங்கள் இல்லத்தின் பூஜை அறை நுழைவாயில் அருகே, இன்று மஹா சிவராத்திரி என்னும் நல்ல நாளில் மாட்டும் பாக்யம் கிடைத்துள்ளது.

      இன்று இப்போது அதனை புஷ்பங்களால் அலங்கரித்து, சுவற்றில் மாட்டும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. :))))))

      அன்புடன் VGK

      Delete
    3. ஸ்ரத்தா, ஸபுரி... February 13, 2018 at 12:25 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஸ்ரீ...ஸ்ரீ.. மஹா பெரியவாளின் அநுஷபூஜையில் நாங்களும் கலந்துகொண்ட சந்தோஷம்...//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. அனைவரும் கண்குளிர தரிஸிக்க வேண்டும் என்பதால் தான் இந்தப் பதிவே கொடுக்கப் பட்டுள்ளது.

      //பாதுகையே தரிசிக்க முடியாமல் மலை.. மலையாக மலர்கள்..//

      ஆம். இது ஒவ்வொரு மாத அனுஷ பூஜையில் வழக்கமாக நடக்கும் ஒன்றே. பாதுகையை மட்டும் தனியாக தரிஸிக்க வேண்டுமானால் நாம் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பு அதாவது மிகச் சரியாக 5.45 PM அல்லது பூஜை முடிந்த பின்பு அதாவது இரவு மிகச் சரியாக 7.45 PM க்கு அங்கு இருந்தால் நல்லது.

      கடைசிவரை இருக்கும் அனைவருக்கும், சாப்பிட திவ்யமான பிரஸாதங்களும் கிடைக்கும் என்பது கூடுதல் விசேஷமாகும். :)))))

      அன்புடன் VGK

      Delete
  18. கோபு பெரிப்பா...பெரிம்மா..நமஸ்காரம்...முதல்ல காமதேனு படம் உங்களுக்கு அனுப்பிதந்த ஜெயஸ்ரீ மாமிக்குதான் எல்லா பெருமையும்..புகழும் சேரணும்...

    அனுஷபூஜை படங்கள் பாக்க பாக்க அவ்ளோ அழகா இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. happy February 13, 2018 at 12:15 PM

      வாடீ .... என் வாயாடி, ஹாப்பிப் பெண்ணே! நான் தான் உன்னுடன் ’டூஊஊஊஊ .. காய்ய்ய்ய்’ விட்டுள்ளேனே!! ஒருவேளை மறந்துட்டாயோ!!!

      சரி ... பரவாயில்லை. வாடீம்மா என் தங்கமே ....
      என் செல்லக்குட்டி .... வெல்லக்கட்டி ....

      //கோபு பெரிப்பா...பெரிம்மா..நமஸ்காரம்...//

      அநேக ஆசீர்வாதங்கள். சிவராத்திரி நல்வாழ்த்துகள்.

      //முதல்ல காமதேனு படம் உங்களுக்கு அனுப்பித் தந்த ஜெயஸ்ரீ மாமிக்குதான் எல்லா பெருமையும்.. புகழும் சேரணும்...//

      அதிலென்ன சந்தேகம். எல்லாப் பெருமைகளும், புகழும் ஜெயஸ்ரீ மாமிக்கு மட்டுமேதான் சொந்தமாகும்.

      அவர்கள் நான் கேட்காமலேயே இதனை அன்புடன் எனக்கு அனுப்பி என்னை இப்படி மகிழ்வித்துள்ளார்கள்.

      நீயெல்லாம் .... அப்படி அல்ல. உலக மஹா சோம்பேறி நீ. நான் மிகவும் ஆசைப்பட்டு உன்னிடம் கேட்டுள்ள சில படங்களைக் கூட, உடனடியாக, மெயிலிலோ வாட்ஸ்-அப்பிலோ எனக்கு அனுப்பணும் என்று இன்னும், என் செல்லக்குட்டிக் குழந்தையான உனக்குத் தோன்றவில்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். :(((((

      //அனுஷபூஜை படங்கள் பாக்க பாக்க அவ்ளோ அழகா இருக்கு..//

      ஆம். அவைகள் அனைத்தும் உன்னைப்போலவே அவ்ளோ அழகாகத்தான் இருக்குது. :)))))

      இன்னும் கோபத்துடனும் ஆனால் உள் அன்புடனும்,
      உன் கோபு பெரிப்பா + பெரிம்மா.

      Delete
  19. நானும் ரொம்ப லேட்டோ....... படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு..

    ஸ்ரீ.ஸ்ரீ.பெரியவாளின் கருணா கடாட்ஷம் உங்க மூலமா எங்க எல்லாருக்கும் கிடைச்சிருக்கு.. நன்றி ஸார்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீனி வாசன் February 13, 2018 at 12:19 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நானும் ரொம்ப லேட்டோ.......//

      இல்லை... இல்லை... நீங்கள் லேட்டு இல்லை. லேடஸ்ட் மட்டுமே.

      //படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு..//

      சந்தோஷம். மேலும் சில படங்கள் இதே பதிவினில் இன்று இரவு புதிதாக இணைக்கப்பட உள்ளன. அதையும் வந்து பாருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      //ஸ்ரீ.ஸ்ரீ.பெரியவாளின் கருணா கடாட்ஷம் உங்க மூலமா எங்க எல்லாருக்கும் கிடைச்சிருக்கு.. நன்றி ஸார்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.:)

      Delete
  20. ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜயம் !
    =====================================

    ஹேவிளம்பி (ஹேமலம்ப) வருஷம்
    உத்தராயணம்
    சிசிர ருதெள
    கும்ப மாஸம்
    கிருஷ்ணபக்ஷம்
    திரயோதஸி
    ஸித்த யோகம்
    உத்ராஷாடா நக்ஷத்திரம் கூடிய

    விஷ்ணுபதி புண்யகாலம்
    மாசி முதல் தேதி
    மங்கலவார் எனும் மாசிச் செவ்வாய்க்கிழமை
    மஹா சிவராத்திரி புண்யதினம்
    பிரதோஷ நாள்
    பிரதோஷ வேளையில்

    மாலை 5 மணிக்கு மேல், மேற்படி காமதேனு-பெரியவா அடியேன் இல்லத்தின் பூஜையறை நுழைவாயில் அருகே வந்து அமர்ந்து அருளாசி வழங்க ஆரம்பித்துள்ளார் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

    இது சம்பந்தமாக மேலும் ஒருசில புகைப்படங்கள் இந்தப்பதிவின் நிறைவுப்பகுதியில், இன்று (13.02.2018) இப்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதனை தரிஸிக்கும் அனைவருக்கும் வாழ்க்கையில் சகலவிதமான க்ஷேமங்களும், செளக்யங்களும், இலாபங்களும், தேக ஆரோக்யமும் ஏற்பட்டு, மன நிம்மதியுடன் சந்தோஷமாக வாழ, காமதேனு ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அனுக்கிரஹம் வேண்டி, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துக்கொள்கிறேன்.

    ’லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !’

    அன்புடன் கோபு

    ReplyDelete
  21. இது என்ன சார் அதிசயமா இருக்கு. புதுசா படங்கள்லாம் இணைச்சிருக்கீங்க (வீட்டில் அந்தப் படத்தை மாட்டி). இன்னைக்கு எதேச்சயா வரலைனா (எங்க பின்னூட்டங்களுக்கு மறுமொழி போட்டிருக்கீங்களா இல்லையான்னு) புதிய படங்கள் இணைத்தது தெரிந்திருக்காது.

    பெரியக்கா கொடுத்த காமதேனுவும், இல்லத்தில் இப்போது மாட்டியுள்ள பெரியவா காமதேனுவும் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் February 14, 2018 at 6:57 PM

      //இது என்ன சார் அதிசயமா இருக்கு. புதுசா படங்கள்லாம் இணைச்சிருக்கீங்க (வீட்டில் அந்தப் படத்தை மாட்டி). இன்னைக்கு எதேச்சயா வரலைனா (எங்க பின்னூட்டங்களுக்கு மறுமொழி போட்டிருக்கீங்களா இல்லையான்னு) புதிய படங்கள் இணைத்தது தெரிந்திருக்காது.//

      13.02.2018 அல்லது 15.02.2018 அன்று படத்தை மாட்டிவிட்டு, அது சம்பந்தமான மேலும் சில படங்களைக் காட்டுவதாகச் சொல்லியிருந்தேன் .... சிலரின் பின்னூட்டங்களுக்கான என் பதிலில்.

      //பெரியக்கா கொடுத்த காமதேனுவும், இல்லத்தில் இப்போது மாட்டியுள்ள பெரியவா காமதேனுவும் ரொம்ப நல்லா இருக்கு.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
  22. தவறா நினைக்காதீங்க.

    இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல், இங்கே ஒரு தினமலர் கார்ட்டூன் போட்டிருக்கிறீர்கள்.

    அதை நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கிறீர்களா அல்லது அதைவைத்து ஏதேனும் சொல்லப்போகிறீர்களா?

    அப்படி ஏதேனும் சொல்லப்போகிறீர்கள் என்றால், இதனை புது இடுகையாகப் போட்டுவிடுங்கள். இங்கு அது, கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல் சம்பந்தமில்லாமல் தெரிகிறது. சம்பந்தம் இருக்கிறது என்றால் அதை விளக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் February 14, 2018 at 7:03 PM

      வாங்கோ ஸ்வாமீ ..... வணக்கம்.

      //தவறா நினைக்காதீங்க.//

      என்னிடம் பேரன்பு கொண்டுள்ள ‘நெல்லைத் தமிழன் ஸ்வாமீஜி’ அவர்களை நான் அப்படியெல்லாம் தவறாக, ஒருபோதும் நினைக்கவே மாட்டேன்.

      //இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல், இங்கே ஒரு தினமலர் கார்ட்டூன் போட்டிருக்கிறீர்கள்.//

      இன்றைக்குத் தேதி: பிப்ரவரி-14 (காதலர் தினம் என இதனைச் சிலர் சொல்லுவார்கள்). இது மட்டுமே இதில் உள்ளதோர் மிகச்சிறிய சம்பந்தமாகும்.

      //அதை நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கிறீர்களா அல்லது அதைவைத்து ஏதேனும் சொல்லப்போகிறீர்களா?//

      எனக்கு ஒருசில கார்ட்டூன்களில் வரையப்படும் நகைச்சுவைக் கருத்துக்கள் மிகவும் பிடித்துப்போகும். அதுபோல இன்று தினமலரில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கார்ட்டூனும் மிகவும் பிடித்துப்போனது. அதனால் நானும் அதனை இங்கு இன்று வெளியிட்டு விட்டேன்.

      //அப்படி ஏதேனும் சொல்லப்போகிறீர்கள் என்றால், இதனை புது இடுகையாகப் போட்டுவிடுங்கள். //

      எப்படியாவது என்னை புதுப்புது இடுகைகள் போட வைத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளீர்கள், நீங்கள் :)))))

      உங்களின் இந்த நல்லெண்ணம் வாழ்க !

      //இங்கு அது, கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல் சம்பந்தமில்லாமல் தெரிகிறது.//

      ஆமாம். எனக்கும் அப்படித்தான் தெரிகிறது. இன்று ஒரு நாள் மட்டும் அது அப்படியே இங்கே இருந்துவிட்டுப் போகட்டும். பிறகு அதனை நீக்கிக்கொண்டால் போச்சு.

      //சம்பந்தம் இருக்கிறது என்றால் அதை விளக்குங்க.//

      ஒரு மிகச்சிறிய கதையாகவே ’சொல்லத்தான் ஆசை .......’ :) ஆனால் இன்று எனக்கு நாளும், நேரமும் சரியில்லை. அதனால் இப்போது வேண்டாம் என நினைக்கிறேன். பிறகு பார்ப்போம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், தெளிவான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், ஸ்வாமீ.

      அன்புடன் கோபு

      Delete
  23. கோபு >>>>> நெல்லைத் தமிழன்

    மேற்படி கார்டூனைப் பார்த்ததும், நான் எப்போதோ கேள்விப்பட்ட கதையொன்று என் நினைவுக்கு வந்தது. அதனை இங்கு இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

    ooooooooooooo

    [ 1 ]

    ஒரு ஆளு .... நல்ல குண்டு. உடலின் எடை மிகவும் அதிகம். எடையைக் குறைக்க வேண்டும் என விரும்புகிறான்.

    முதலில் தன் எடை இப்போது எத்தனை கிலோ இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஓர் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நிற்கிறான். அதில் உள்ள உண்டியலில் காசு போடுகிறான். ஒரு டிக்கெட் வெளியே வந்து விழுகிறது.

    அதில் உள்ள வாசகம்: “ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே இந்த மெஷினில் ஏறி நிற்க வேண்டும்” என்பதாகும்.

    இவன் பயந்து விட்டான். தன் எடை மிகவும் அதிகமாக உள்ளது என்பதைத் தெளிவாகவே புரிந்து கொண்டும் விட்டான்.

    மேற்கொண்டு நாம் என்ன செய்வது என இவன் யோசிக்கும் அதே நேரம் பார்த்து, இவன் அமெரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. [ 2 ]

      புறப்பட்டு அமெரிக்காவுக்கும் சென்றுவிட்டான். அங்கு ஊரைச் சுற்றி வரும்போது, ஓர் விளம்பரம் இவன் கண்களில் படுகிறது:

      ”உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? உடனே ஓடி வாருங்கள் எங்களிடம்!” என்பதே அதில் எழுதப்பட்டிருந்த வாசகமாகும்.

      விளம்பரத்தைப் படித்துப் பார்த்த நம்மாளு, உள்ளே உடனே ஓடினான். அங்கே ரிஸப்ஷனில் ஓர் பெண்மணி இருந்தாள். இவரை வரவேற்றாள்.

      ”என்ன ஸார் வேண்டும் உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

      தான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும், தன் எடை குறைய வேண்டும் என்ற ஆவலில், வெளியே வைத்துள்ள விளம்பரத்தைப் பார்த்து விட்டு, உள்ளே வந்துள்ளதாகவும் இவன் அவளிடம் சொல்கிறான்.

      >>>>>

      Delete
    2. [ 3 ]

      “உங்களுக்கு ஆர்டினரி ட்ரீட்மெண்ட் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் வேண்டுமா? இங்கு ஆர்டினரி மற்றும் டீலக்ஸ் என இரண்டு வகை சிகிச்சைகள் கொடுக்கப் படுகின்றன” எனச் சொல்கிறாள் அந்த ரிஸப்ஷனிஸ்ட் போல உள்ள மேனேஜர் பெண்மணி.

      எதற்கு அநாவஸ்யச் செலவு என்று யோசித்த நம்ம ஆளு, ஆர்டினரி ட்ரீட்மெண்டே தனக்குப் போதும் என்கிறான். அதற்கான ஐம்பது டாலர்களை அவனிடம் வசூல் செய்து விட்டு, ரஸீது போட்டுக்கொடுத்துவிட்டு, ஒரு ரூம் கதவைத் திறந்து உள்ளே அனுப்பி வைக்கிறார், அந்தப்பெண்மணி.

      உள்ளே மிகப்பெரியதொரு ஹால் உள்ளது. மேஜைகளும் நாற்காலிகளும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் ஆங்காங்கே ஹால் பூராவும் சிதறிக்கிடக்கின்றன. அப்படியே அவற்றை நோட்டமிட்ட நம்மாளு கண்களில், அங்கே தூரத்தில் உள்ள ஒரு சுவற்றின் மூலையில் ஒரு 16 வயது பொண்ணு அரைகுறை ஆடைகளுடன் அழகாக நிற்பது தெரிகிறது.

      >>>>>

      Delete
    3. [ 4 ]

      உடனே ஓடிச் சென்று அவளைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு, மேஜை நாற்காலிகளைச் சுற்றிச்சுற்றி ஓடிச் செல்கிறான் நம்மாளு. அந்தப்பெண்ணும் இவனிடம் அகப்படாமல் போக்குக் காட்டியபடி அங்கேயே, அந்த ஹாலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டு இருக்கிறாள். இப்படியாக ஒரு 15 நிமிடங்கள் இருவரும் ஓடிக் கொண்டிருக்க, அந்த ரிஸப்ஷனிஸ்ட்-மேனேஜர் லேடி அங்கு வந்து சேர்கிறாள்.

      >>>>>

      Delete
    4. [ 5 ]

      இவரைப் பார்த்து “ட்ரீட்மெண்டே இவ்வளவு தான், ஸார். இது போல ஒரு பத்து நாட்களுக்கு வந்து போனீர்களானால், உங்கள் உடம்பு எடை குறைந்து போகும்” என்று சொல்லி விடுகிறாள்.

      வெளியே வந்த நம்மாளு வீதியில் நின்று யோசித்தான். ஆர்டினரி ட்ரீட்மெண்டே இத்தனை ஜோராகவும், மனதுக்கு சந்தோஷமாகவும், ஜில்லுன்னு இருக்கும்போது, அந்த ஸ்பெஷல் டீலக்ஸ் ட்ரீட்மெண்ட் என்பது எப்படியிருக்குமோ .... அதையும் பார்த்து விட்டால் நல்லது .... இதற்காகப்போய் மீண்டும் நாம் அமெரிக்கா வருவது என்பது சாத்யமில்லையே என நினைத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் ரிஸப்ஷன் லேடியிடம் போய் தலையை சொறிந்துகொண்டு நிற்கிறான்.

      >>>>>

      Delete
    5. [ 6 ]

      “மேலும், என்ன ஸார் வேண்டும் உங்களுக்கு?” எனக் கேட்கிறாள் ரிஸப்ஷனிஸ்ட் லேடி.

      “அந்த ஸ்பெஷல்-டீலக்ஸ் ட்ரீட்மெண்ட்டையே எடுத்துக்கொள்ளலாமா என நான் மிகவும் யோசிக்கிறேன்” என்கிறான்.

      ”அதற்கு நீங்கள் தனியாக நூறு டாலர்கள் கட்ட வேண்டியிருக்குமே!” என்கிறாள் அந்த லேடி.

      “அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையே இல்லை மேடம்” எனச் சொல்லி நூறு டாலர்களைக் கட்டிவிட்டு ரஸீது பெற்றுக்கொள்கிறான் நம்மாளு.

      >>>>>

      Delete
    6. [ 7 ]

      அவனை வேறு ஒரு ரூமுக்குள், உள்ளே போக அனுப்பி விட்டு, கதவை வெளிப்புறம் பூட்டிவிடுகிறாள் அந்த லேடி.

      அங்கும் ஒரு மிகப்பெரிய ஹால் உள்ளது. அங்குள்ள மேஜைகளும் நாற்காலிகளும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் ஆங்காங்கே ஹால் பூராவும் சிதறிக்கிடக்கின்றன.

      நம்மாளின் பார்வை உடனடியாக அந்த எதிர்புற சுவற்றின் மூலையில் யார் நிற்கிறாள் என்பதிலேயே குறியாக உள்ளது.

      அங்கு ஒரு 90 வயது கிழவி, நீச்சல் உடையில் காட்சியளிக்கிறாள்.

      >>>>>

      Delete
    7. [ 8 ]

      இப்போது அ-வ-ள் (அந்த 90 வயது கிழவி) இவனைத் துரத்திப்பிடிக்க ஆரம்பிக்கிறாள்.

      நம்மாளு அவளிடமிருந்து தப்பித்தால் போதும், என அலறி அடித்து வேக வேகமாக இங்குமங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறான்.

      கதவைத் திறந்துகொண்டு வெளியேறவும் வழி ஏதும் இல்லை.

      இவ்வாறு ஒரு பத்து நிமிட ஓட்டம் முடிந்ததும் வாசல் கதவு திறக்கப்படுகிறது.

      நம்மாளு ஒரே ஓட்டமாக மூச்சு வாங்க ஓடி வந்து ரிஸப்ஷனில் நிற்கிறான்.

      >>>>>

      Delete
    8. [ 9 ]

      “இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்டுக்கு நீங்கள் ஒரு 4-5 நாட்கள் வந்துட்டுப் போனாலே போதும் .... ஸார். உங்க உடம்பு எடை அதற்குள் நன்றாகக் குறைந்துவிடும்” என்கிறாள் அந்த லேடி. :)

      நான் கேள்விப்பட்ட கதை இத்துடன், இவ்வாறு முடிந்து போய் விடுகிறது.

      ooooooooooooo

      Delete
  24. [ 10 ]

    இந்தக் கதை ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவை விவசாயக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் AGRICULTURAL STATISTICS என்னும் DRY SUBJECT ஆன பாடத்தினை தன் மாணவர்களுக்கு நடத்தும்போது, பாடங்கள் மாணவர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக இடையிடையே ஜோக் போல சொன்னதாம்.

    இதுபோன்ற சுவாரஸ்யமான கிளுகிளுப்பூட்டும் கதைகளைக் கேட்பதற்காகவே, அந்த இளம் வயது மாணவர்கள் வகுப்பினில் பொறுமையாக அமர்ந்திருப்பார்களாம்.

    நாளடைவில் அவர் நடத்திய அந்தப்பாடங்கள் சுத்தமாக மறந்துபோய் விட்டாலும், இந்த நகைச்சுவையான கதை மட்டும், 50 ஆண்டுகளுக்குப்பிறகும், என்றுமே தனக்கு மறக்காமல் இருப்பதாக, அந்த வகுப்பில் படித்துள்ள தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் தனக்கே உள்ள நகைச்சுவையுடன் சொல்லி மகிழ்ந்துள்ளார்கள்.

    அவருடைய குரலினில் இந்தக்கதையைக் கேட்க இதோ ஓர் இணைப்பு: https://www.youtube.com/watch?v=ILCSl93SqFg

    >>>>>

    ReplyDelete
  25. [ 11 ]

    இன்று 14.02.2018, திருச்சி தினமலரில் வெளியாகியுள்ள கார்டூனுக்கும், இந்த நான் கேட்டுள்ள + சொல்லியுள்ள கதைக்கும் ஏதோவொரு சம்பந்தம் இருப்பது போல எனக்குப்பட்டது.

    அதாவது கார்ட்டூனில் உள்ள முதல் படத்தில், காதலர் தினமான பிப்ரவரி-14 அன்று, நம்மாளு ஒருவன் கையில் ரோஜாப்பூவுடன் ஒருத்தியைத் துரத்திச் செல்கிறான். அவள் இவனிடம் அகப்படாமல் ஓடுகிறாள்.

    [இது அந்த ஆர்டினரி ட்ரீட்மெண்டில் ஓர் 16 வயதுப் பெண்ணை நம்மாளு துரத்திப் போனதை எனக்கு நினைவூட்டியது]

    அதே கார்ட்டூனில் உள்ள இரண்டாம் படத்தில், குழந்தைகள் தினமான நவம்பர்-14 அன்று, அ-வ-ள் நிறைமாத கர்ப்பணியாகி, இவனைத் துரத்த, இவன் அவள் கையில் அகப்படாதவாறு தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கிறான்.

    [இது அந்த ஸ்பெஷல்-டீலக்ஸ் ட்ரீட்மெண்டில் ஓர் 90 வயது கிழவி நம்மாளைக் கட்டிப்பிடிக்கத் துரத்தியதும், அவளிடம் அகப்படாமல் இருக்க நம்மாளு தலை தெறிக்க ஓடியதும் என் நினைவுக்கு வந்தது]

    இவ்வாறு அந்த நான் சொல்லியுள்ள கதைக்கும், இந்தக் கார்ட்டூனுக்கும் ஏதோவொரு சம்பந்தம் உள்ளது பாருங்கோ. :)

    >>>>>

    ReplyDelete
  26. கோபு >>>>> நெல்லைத் தமிழன்

    [ 12 ]

    இந்தப் பக்திப் பதிவினில் அந்தக் கார்ட்டூன் இருப்பது ..... கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல், சம்பந்தமில்லாமல் தெரிவதாகத் தாங்களே சொல்லி விட்டதால், அந்தக் கார்ட்டூன் இந்தப்பதிவிலிருந்து, இன்று இரவுக்குள் எப்படியும் நீக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. இந்த பக்திபூர்வமானப் பதிவுக்குச் சம்பந்தமில்லாத அந்தக்கார்ட்டூன், ஏற்கனவே நான் மேலே ஒப்புக்கொண்டுள்ளது போலவே, இன்று 15.02.2018 இரவு மணி 8.40 க்கு நீக்கப்பட்டுள்ளது என்பதை நம் நெல்லைத் தமிழன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். :)

      Delete
    2. கதை படிக்கும்போதே சிரிப்பாணி பொத்துகிச்சி..
      உங்கவீட்டு பூஜை ரூம்வாலுல காமதீனுபடம் மாட்டியிருக்கிங்கல்ல அத ஸென்டருல மாட்டியிருக்கலாமோன்னு தோணுதே ஸைடுல மாட்டியிருப்பது..மேச்சாகலியே

      சொன்னது தப்புனா ஸாரி ஜி

      Delete
    3. shamaine bosco February 16, 2018 at 3:05 PM

      வாங்கோ ஷம்மு, வணக்கம்.

      //கதை படிக்கும்போதே சிரிப்பாணி பொத்துகிச்சி..//

      ஆஹா, உங்களுக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சா? ...... எனக்கும் அப்படியே :)

      ‘சிரிப்பாணி பொத்துக்கிச்சு’ என்ற வார்த்தைகளை முதன் முதலாக நம்மிடம் உபயோகித்து அறிமுகப் ப-டு-த்-தி-யவள் நம் முருகு மட்டுமே.

      இப்போது நீங்க, நம் சாரூ, நம் முன்னா-மீனா-மெஹர்-மாமி, நம் ஹாப்பிப் பொண்ணு + உங்களை உங்கள் வீட்டில் நேரில் சந்தித்துச் சென்ற இன்னொருத்தி [எனக்கு அவள் பெயரே சுத்தமாக இப்போது மறந்து போச்சு :)] ஆகிய எல்லோருமே உபயோகித்து வருகிறோம்.

      அந்த முருகுப்பொண்ணு இந்தக் கதையை இன்னும் படிச்சுடுத்தோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை.

      //உங்கவீட்டு பூஜை ரூம்வாசலுல காமதேனு படம் மாட்டியிருக்கிங்கல்ல அத ஸென்டருல மாட்டியிருக்கலாமோன்னு தோணுதே ஸைடுல மாட்டியிருப்பது..மேச்சாகலியே//

      நீங்க சொல்வது மிகவும் கரெக்ட் ஷம்மு. நான் அதை அந்த பூஜை ரூம் நிலைப்படிகள் மேலே செண்டர் செய்து மாட்டத்தான் முதலில் நினைத்திருந்தேன். அதற்கான பென்சில் மார்க்கிங்கூட செய்தும் விட்டேன். மேலே ஒரு ஆணியும் கீழே ஒரு கட்டையும் கொடுத்து சாய்த்துத் தொங்கவிட்டு மாட்டலாமா என்றும் கொஞ்சம் யோசித்தேன்.

      பிறகு அதை, அவ்வப்போது மேல் நோக்கிப் பார்க்க கழுத்தை வலிக்கும் போல இருந்தது. அதனால் பூஜை ரூமுக்கு இடதுபுறம் இருந்த வெற்றிடத்தில் மாட்டி விட்டேன்.

      //சொன்னது தப்புனா ஸாரி ஜி//

      அதெல்லாம் ஒரு தப்பும் இல்லை. இதை என்னிடம் எடுத்துச் சொல்ல எங்கட ஷம்முவுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு.

      நான் ஷம்முவைப்போலவே ’ஸாரி’ எதுவும் கட்டுவது இல்லை. அதனால் ’ஸாரி’யெல்லாம் எனக்கு வேண்டாம். :)))))

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், கதையைப் படித்துவிட்டு சிரிப்பாணி பொத்துக்கொண்டதாகச் சொல்லி மகிழ்வித்ததற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கிஷ்ணாஜி

      Delete
  27. ரசித்தேன் ஐயா....
    மீண்டும் வலையுலகில் தங்கள் பவனி மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பரிவை சே.குமார் February 18, 2018 at 11:28 PM

      //ரசித்தேன் ஐயா.... மீண்டும் வலையுலகில் தங்கள் பவனி மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா...//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
    2. ஆஹா..எடைய. குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா...இந்த கதய. படிச்சா சிரிச்சு...சிரிச்சு எடை கூடத்தான் செய்யும்..

      Delete
  28. எடை குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா.. இந்த. கதைய. படிச்சா யாருக்குமே எடை குறைக்கவே தோணாது.. சிரிச்சு சிரிச்சு...எடை கூடத்தான் செய்யும்

    ReplyDelete
    Replies
    1. happy February 22, 2018 at 10:23 AM

      வாடா .... மை டியர் ’கொழுகொழு மொழுமொழு’ ஹாப்பிப்பொண்ணே ! உன் மீண்டும் வருகைக்கு என் நன்றிகள்.

      //எடை குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா.. இந்த. கதைய. படிச்சா யாருக்குமே எடை குறைக்கவே தோணாது.. சிரிச்சு சிரிச்சு...எடை கூடத்தான் செய்யும்//

      உன் இந்தப் பின்னூட்டத்தைப் படித்ததும் எனக்கு ஒரு சினிமாப் பாட்டுத்தான் நினைவுக்கு வந்தது.

      1961-இல் வெளிவந்த படமான ‘தாய் சொல்லைத் தட்டாதே’!

      கண்ணதாசன் இயற்றிய பாடல்; இசை: கே.வி. மஹாதேவன்.

      இன்னிசைக்குரல்களில் பாடியவர்கள்: டி.எம்.எஸ் + பி.சுசிலா.

      எம்.ஜி.ஆர் + சரோஜாதேவி ...... வெள்ளித்திரையில் வாயசைத்து நடிக்கும் காட்சி இது.

      -=-=-=-=-

      சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
      சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
      நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
      நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

      சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
      சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
      நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
      நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

      சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
      ஓஹோஹோஹோஹோ ஹோ

      பழகப் பழக வரும் இசை போலே தினம்
      படிக்கப் படிக்க வரும் கவி போலே
      பழகப் பழக வரும் இசை போலே தினம்
      படிக்கப் படிக்க வரும் கவி போலே
      அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
      உருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்
      அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
      உருகி நின்றேன் நான் தனிமையிலே

      சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
      அஹஹஹஹா ஹா

      இன்பம் துன்பம் எது வந்தாலும்
      இருவர் நிலையும் ஒன்றே
      இன்பம் துன்பம் எது வந்தாலும்
      இருவர் நிலையும் ஒன்றே

      எளிமை பெருமை எதுவந்தாலும்
      இருவர் வழியும் ஒன்றே
      எளிமை பெருமை எதுவந்தாலும்
      இருவர் வழியும் ஒன்றே
      இருவர் வழியும் ஒன்றே

      சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
      அஹஹஹஹா

      இளமை சுகமும் இனிமைக் கனவும்
      இருவர் மனமும் ஒன்றே
      இளமை சுகமும் இனிமைக் கனவும்
      இருவர் மனமும் ஒன்றே

      இரவும் பகலும் அருகில் இருந்தால்
      வரவும் செலவும் ஒன்றே
      இரவும் பகலும் அருகில் இருந்தால்
      வரவும் செலவும் ஒன்றே

      சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
      சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
      நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
      நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
      சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்

      -=-=-=-=-

      எங்கட ஹாப்பிப் பொண்ணு மேலும் மேலும் சிரித்து மேலும் மேலும் குண்டாக என் அன்பான நல்வாழ்த்துகள். :)

      அன்புடன் பெரிப்பா

      Delete
  29. காமதேனு பெரியவா அனுக்ரஹம் எங்களுக்கும் கிட்டியது. ரசனையான பக்தி கொண்டவர் நீங்கள். பகிர்வுக்கு நன்றி சார் :)

    ReplyDelete
    Replies
    1. Thenammai Lakshmanan March 3, 2018 at 10:57 AM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //காமதேனு பெரியவா அனுக்ரஹம் எங்களுக்கும் கிட்டியது. ரசனையான பக்தி கொண்டவர் நீங்கள். பகிர்வுக்கு நன்றி சார் :)//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. காமதேனு பற்றி தாங்கள் எழுதியிருந்த இதிகாச-புராணச் செய்திகளை சமீபத்தில் (23.02.2018) தினமலர்-சிறுவர் மலரில் படித்தேன். சந்தோஷமாக இருந்தது.

      அதனை என் சமீபத்திய பதிவிலும் கொண்டுவந்து சிறப்பித்துள்ளேன். முடிந்தால் பாருங்கோ.

      http://gopu1949.blogspot.in/2018/02/blog-post_23.html

      அன்புடன் கோபு

      Delete
  30. திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தப் பதிவுக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.

    விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு
    22.09.2018

    ReplyDelete
  31. There is one more speciality on 13th February.....MAHA PERIYAVA took sanyasam on this day.

    ReplyDelete