என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 1 அக்டோபர், 2014

போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி !




 அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


அடியேன் இந்த ஆண்டு 2014 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகள், தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெற்றி நடை போட்டு வருவதுடன், இந்த அக்டோபர் மாத இறுதியில் வெற்றிகரமாக முடிவடைய உள்ளது என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள். 

இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்சாகங்களுடனும் கலந்துகொண்டு தங்களில் பலரும் இதுவரை அளித்துள்ள ஒத்துழைப்புக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றி, நம் பிரபலப் பதிவர்களில் ஒருவருடன் மின்னஞ்சல் மூலம் சமீபத்தில் நான் ஒரு பேட்டி எடுத்தேன். அதில் நான் கேட்டிருந்த சில கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்களும் இதோ இங்கே தங்கள் அனைவரின் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். 


 

போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி !

   


 

 { பேட்டிக்கு முன்பு ஓர் அறிமுகமாக ..... சற்றே என் கற்பனை கலந்தது }

 வணக்கம் மேடம். நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா ? எப்போதுமே பிஸியாத்தான் இருப்பீங்கோ. இருந்தாலும் நான் கொஞ்சம் உங்களுடன் பேசணுமே ...... இப்போ அதற்கு நேரம் சரிப்பட்டு வருமா?

 வாங்கோ ஸார் ... வணக்கம். ஒரு நாளைக்கு 24 மணி நேரமே எனக்குப்போதவில்லை. நடுவினில் நீங்க வேறு வந்துட்டீங்களா? சரி... சரி.. வாங்கோ;  உங்களுக்கு இப்போ என்ன வேண்டும்? அதுதான் உங்கள் கதைக்கான என் விமர்சனங்களை உடனுக்குடன் அனுப்பி விடுகிறேனே ! வேறென்ன இப்போ உங்களுக்கு என்னிடம் வேண்டும் ?

 


 கோச்சுக்காதீங்கோ ... மேடம். தாங்கள் எனக்கு ஒரு சின்ன பேட்டி தரவேண்டும். ஒரு பத்தே பத்து நிமிஷம் மட்டுமே எனக்காக தாங்கள் ஒதுக்ககூடாதா? 

 சரி .... சரி ..... சீக்கரமா என்னை என்ன கேட்கணுமோக் கேட்டுட்டுக் கிளம்புங்கோ. எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. அடுத்த ஒரு வாரத்திற்கான தினசரிப்பதிவுகளை இன்று ஒரே நாளில் நான் கம்போஸ் பண்ணி, நூற்றுக்கணக்கான படங்களைத் தேடித்தேடி ஆசைதீர என் பதிவுகளில் இணைக்க வேண்டியதாக உள்ளதாக்கும் ...... !

  

[அவர்கள் மனதுக்குள் ஏதோ முணுமுணுப்பதுபோல எனக்குத் தோன்றியது:  ”ஹூக்க்கும் ! மூச்சு விடவே இங்கு எனக்கு நேரமில்லை. இதில் இவருக்கு என் பேட்டி வேறு வேண்டுமாம் .....” என்று தான் முணுமுணுத்திருப்பார்கள் :) - உடனே கட்டெறும்பு என்னைக் கடித்ததைப்போல சுருக்கென்று உணர்ந்தேன்.  சரி ... அது போகட்டும் .... மளமளன்னு நம் பேட்டியை ஆரம்பித்து முடித்து விடுவோம் என இதோ நானும் ஆரம்பித்து விட்டேன் .....]

 


 

{ இப்போது நிஜமான பேட்டி சூடாக ஆரம்பிக்கிறது }

 இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியின் பொதுவான சிறப்பு அம்சங்களாகத் தாங்கள் நினைப்பவற்றைக் கொஞ்சம் சொல்லுங்கோ மேடம்.

 சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் எழுத எழுத வித்தையை கற்கும் உற்சாகம் கொடுத்தது விமர்சனப்போட்டி.. புதிதான ஒரு கதவு திறந்தாற்போல் புதிய காற்றை சுவாசித்தாற்போன்ற உற்சாகம் ஏற்படுத்திக்கொடுத்தது. இதுவரை அறியாத ஓரு தளம் விமர்சனம் ..  ஒரு கதைக்கு கருத்துரை தருவது வேறு... விமர்சனம் எழுதுவது வேறு என்னும் அடிப்படைப்பாடத்தை கற்றுக்கொடுத்தது..

 

 வெரி குட் ... நல்ல பதிலாக வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். 
இந்த என் போட்டிகளில் நான் காட்டிவரும் ஆர்வம் மற்றும் ஈடுபாடுகளைப்பற்றி பொதுவாகத் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

 பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அதே அர்ப்பணிப்புடன், உற்சாகத்துடன், ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு காணமுடிகிறது.. உடன் பிறந்த அந்த குணங்கள் பின்னிப்பிணைந்து திட்டமிடுதல், நடத்திக்காட்டுதல்,  இதனை இதனால் இவர் முடிக்கும் என தெளிவுடன் நடுவரைத்தேர்ந்தெடுத்தல், ஆரம்பத்திலிருந்து நடுவர் யார்... நடுவர் யார் என்று சஸ்பென்ஸ் 35 பதிவுகளுக்கு கட்டிக்காத்தது ...  நடுவருக்கும் விமர்சனம் எழுதியது யார் என்று இன்றுவரை அறிவிக்காத ஒரு நடுநிலைமை போன்ற நுணுக்கங்கள் எல்லாம் எவ்வளவு திறமையான நிர்வாகச் சிறப்புமிக்கவை என எண்ணிப்பார்த்து வியப்பில் ஆழ்த்துகிறது.. 

 

 ஆஹா வெகு அருமையாச் சொல்லிட்டீங்கோ .....  நானும் இந்தத்தங்களின் அற்புதமான பதிலை எண்ணிப்பார்த்து மிகவும் வியப்பில் ஆழ்ந்து போனேனாக்கும்! 
இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியில் உள்ள அடிப்படை நோக்கங்களாக தாங்கள் நினைப்பது என்னவோ ?

 புத்தகம் போடுவதை விட குறைந்த முதலீட்டில் , தங்கள் கதைகள் நிறைய பேரை விமர்சனம் எழுதவும் அசை போடவும் வைத்திருக்கின்றன..

புத்தகமாகப்போட்டால் கூட ஒருமுறை வாசிப்பதோடு நிறுத்திடக்கூடிய சாத்தியம்தான் இருக்கிறது..

விமர்சனம் எழுத நிறைய முறை படிக்கவேண்டி இருப்பதால் தங்கள் பதிவின் பக்கப்பார்வை - ‘பேஜ்வியூஸ்’ கூடியிருப்பதை கண்கூடாகக்காணமுடிகிறது..


 

  ஆஹா ... ’பேஜ்வியூஸ்’ என்று எனக்கு இதுவரை தெரியாத, நான் இதுவரை கவனிக்காத ஒன்றைப்பற்றி புதிதாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.  தங்கள் வலைத்தளத்தின் ’பேஜ்வியூஸ்’ இப்போது 13 லட்சங்களை நெருங்க இருப்பதைப்பார்த்து நான் மிகவும் வியந்து மகிழ்ந்து போனேன் .... :)

இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் குறிப்பாகத் தங்களைக் கவர்ந்த அம்சங்கள் என்னென்ன எனச் சொல்ல முடியுமா ?

 போட்டிக்காக  வெளியிடப்பட்ட கதைகளில் பொருத்தமான படங்களை இணைத்தது... கதையை அமர்களமாக எடிட் செய்து சிக் என பரிமாறியது... பரிசு பெற்றவர்களை  அறிவிக்கும் உற்சாகமான கைதட்டல்கள்... சஸ்பென்ஸ் நீடிக்கவைக்கும் தனித்தன்மை...

நடுவரிடம்  அவ்வப்பொழுது குறிப்புகள் வாங்கி வெளியிட்டு விமர்சனம் செல்லவேண்டிய பாதையை ஒழுங்குபடுத்தி .. கட்டை விரல் கேட்காத குருவாக ஒரு வித்தையை கற்றுக்கொடுத்தது சிறப்பம்சம்.

ஒரு திறனாய்வு திறமையை வாசகர்களிடம் வளர்த்தது  இந்த விமர்சனப்போட்டியின் ஒட்டு மொத்த சாதனை என பெருமைப்படலாம்.




 சபாஷ் .... என் சாதனைகளை ரஸித்துப் பட்டியல் இடுவதிலேயே தாங்கள் ஒரு சாதனையாளர் என நிரூபித்து விட்டீர்கள்! சரி, அதுபோகட்டும்.....  

நம் நடுவர் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்ப்புகள் எவ்வாறு இருந்ததாக தங்களுக்குத் தோன்றியது எனக் கொஞ்சம் சொல்லுங்கோ ! 


 எந்தவிதமான பாரபட்சமும் இன்றி,  தகுதி ஒன்றையே இலக்காகக்கொண்டு  நடுவர் செயல்படுவதாகத் தான்  தோன்றுகிறது..!





 நடுவரைப்பற்றி நன்னாவே சொல்லிட்டீங்கோ ..... ஓக்கே. 

அடுத்தது சற்றே சங்கடமான கேள்விதான். இருப்பினும் கேட்கிறேன். இந்த என் விமர்சனப்போட்டிக்காக நான் அளித்து வரும் ஏதோவொரு மிகச்சிறிய பரிசுத்தொகைகளில் தங்களுக்குள்ள திருப்தி அல்லது திருப்தியின்மையைப் பற்றி தயவுசெய்து உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுகிறேன் ..... சொல்லுங்கோ ப்ளீஸ் !



 பரிசுத்தொகை என்பது குதிரையின் முன் கட்டிவிட்ட காரட் போலத்தான்.. அது ஒன்றும் என்னைப்பொறுத்தவரை இலக்கு இல்லை..



புத்தகங்களாக அனுப்பியிருந்தால் எங்கள்  இல்லத்தில் கேலிப்பார்வைக்கு ஆளாக்கியிருக்கும் .. இப்போது வங்கிக்கணக்கில் பரிசுத்தொகை பணமாகவே சேர்ந்துவிடுவதால் பிரச்சனை இல்லை..


 

 மிகவும் புத்திசாலித்தனமாக தகுந்த உதாரணத்துடன் பதில் சொல்லி சமாளித்துத் தப்பித்து  விட்டீர்கள். சரி, அது போகட்டும்... 

அந்தக்குதிரைக்கான கேரட் போன்ற பரிசுத்தொகைகளை கணக்கிட்டு அவ்வப்போது நான் அனுப்பி வைக்கும் முறைகளில் உள்ள திருப்தி அல்லது திருப்தியின்மை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோளேன் ..... 

 அதெல்லாம்மிகச்சரியாக டாண்-டாண்ன்னு வந்து சேர்ந்துவிடுகின்றன.. மிகவும் திருப்தியாக மட்டுமே உள்ளது.


 

 அப்பாடீ ...... அம்மாடீ ...... ஒரு மிகப்பெரிய நிம்மதி எனக்கு! 

பிரத்யேகமாகத் தங்களுக்கு இந்த என் போட்டிகளில் இதுவரை ஏற்பட்டுள்ள ஆர்வம் + அனுபவங்கள் + மகிழ்ச்சி அல்லது அதிருப்தி .. பற்றி கொஞ்சம் விலாவரியாகத்தான் சொல்லுங்கோளேன் ..... ப்ளீஸ் !

 விமர்சனமே எழுதத்தெரியாது .. போட்டிகளிலும் பங்கேற்க முடியாது .. என்ற நிலையில் வெளிநாடுசெல்ல பயண ஏற்பாட்டில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக என் மகனே இங்கு என்னைப்பார்க்க வந்துவிட்டதால் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது..

ரமணி ஐயாவின் விமர்சனத்தை முன்னோடியாகக்கொண்டும், நடுவர் குறிப்புகளையெல்லாம் அடிப்படையாகக்கொண்டும் எழுதிய விமர்சனங்கள் பரிசு பெற ஆரம்பித்ததும் உற்சாகம் ஏற்பட்டது.. பல திறமையாளர்கள் கலந்துகொள்ளாமல்   கற்றுக்குட்டியான எனக்கு வழிவிட்டதும் நான் பரிசு பெற காரணமாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

சிறுகதை விமர்சனப் போட்டிக்கான கதைகள் ஏற்கனவே தங்கள் பதிவினில் வெளியிடப்பட்டு, அவற்றிற்குப் பலமுறை நான்  கருத்தளித்திருப்பதால், வியாழன் இரவு 12 மணி அளவில் படிக்கும்போதே, எழுதப்பட வேண்டிய விமர்சனம் முந்திரிக்கொட்டையாய் என் மனதில் உருவாகிவிடுகிறது..

என்னுடைய பல விமர்சனங்களை நான் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையே தங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன்.. பிறகுதான் பரிசு பெற்றவர்களை அறிவிக்கும் பதிவுக்குத் தாங்கள் தயாராகிக்கொண்டிருப்பீர்கள் என நினைத்து,  சில நாட்கள் கழித்து அனுப்ப ஆரம்பித்தேன்.. ஆனால் விமர்சனம் எதையும் நான் உடனே எழுத ஆரம்பித்து விடுவேன்.. அதுதான் என் வழக்கம்.


 

 ’மங்கள்யான் விண்கலம்’ போன்ற தங்களின் இந்த அதிவேகமும், சுறுசுறுப்பும் என்னை எவ்வளவோ முறைகள் வியக்கவும், மயக்கவும், மயங்கவும் வைத்துள்ளன! அதுதான் எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்ததோர் விஷயமே ஆகும்.

தங்களுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பதிவு வேலைகளுக்கு இடையேயும், நேர நெருக்கடிகளுக்கு இடையேயும், எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தங்கள் மனதில் பட்டதைப் பட்...பட்... எனச் சொல்லி, பேட்டியளித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், Madam ..... Thank you very much ..... Bye for now !

 Welcome, Sir. Good Bye ! 


 [மனதுக்குள்] 

பேட்டி காண வந்த என்னை ஏனோ இவங்க சீக்கரமாகத் துரத்தி விடுவதிலேயே குறியாக இருக்காங்க! ........ பாவம் அவர்கள். மிகவும் தங்கமானவங்கதான்... அதுவும் சாதா தங்கமல்ல... கொங்கு நாட்டுக் கோவைத் தங்கமேதான் ........ ஒருவேளை ஏதேனும் சுவையற்ற சூழ்நிலையில், இக்கட்டான தர்மசங்கடமான நிலைமையில் தற்போது அங்கே உள்ளார்களோ என்னவோ?  அது நமக்கு எப்படித்தெரியும்? மனம்விட்டுச் சொன்னாலாவது ஆறுதலாகச் சில வார்த்தைகள் நாமும் பகிர்ந்துகொள்ள முடியும்! 

எது எப்படியோ, அவங்க எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தாலும், மனதை எப்போதும் ஜிலு-ஜிலுன்னு வைத்துக்கொண்டு, என்றும் செளக்யமா, சந்தோஷமா, நிம்மதியா, நீடூழி வாழணும் என நான் என் மனதாரப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். 

காணக்கிடைக்காத, கண்ணைப்பறிக்கும், அற்புதமானப் படங்களுடனும், தகவல் களஞ்சியமாக அரிய பெரிய அருமையான செய்திகளுடனும், தினசரி பதிவுகளாக இன்றுவரை 1,416 [ஆயிரத்து நானூற்றுப் பதினாறு] பதிவுகளை கொடுத்து மிகப்பெரிய சாதனை செய்துள்ள இவர்கள், மேலும் மேலும் பல ஆயிரம் பதிவுகளைத் தந்து நம் எல்லோரையும் தினமும் தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும் என இவர்களை நான் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றியுடன் .....
VGK 

   

 



 

பேட்டி அளித்தவர் யார் ? 
எனத்தெரியாதவர்களுக்கு மட்டும் இதோ இந்த இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html




 




    


அனைவரின் கவனத்திற்கும் !


மேலேயுள்ள பேட்டி போல இல்லாவிட்டாலும், இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றிய தங்களின் மேலான கருத்துகளை மற்ற அனைவரும் என்னுடன் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம். 

தங்களின் கருத்துக்களை சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் கட்டுரை வடிவில் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு valambal@gmail.com அனுப்பி வைக்கலாம். 

வரும்  05.10.2014 ஞாயிற்றுக்கிழமைக்குள்  எனக்குக் கிடைக்குமாறு தயவுசெய்து அனுப்பி வைக்கவும். Mail இல் Subject என்ற இடத்தில் ‘நேயர் கடிதம்’ எனக்குறிப்பிடவும். 

 இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியில் கலந்துகொண்டு விமர்சனம்  எழுதி அனுப்பியவர்கள், போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள்,  பார்வையாளர்கள், வாசகர்கள், பதிவர்கள், பதிவர் அல்லாதோர் என யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை எழுதி மின்னஞ்சல் மூலம்  எனக்கு 05.10.2014க்குள் அனுப்பி வைக்கலாம்.

அவ்வாறு எனக்கு வந்துசேரும் சிறப்பான கட்டுரைகள் இந்த அக்டோபர் மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் இடவசதிக்கு ஏற்ப தனித்தனிப்பதிவுகளாக என் வலைத்தளத்தினில், தங்கள் பெயர் மற்றும் Photo or Profile Photo வுடன் என்னால் வெளியிடப்படும்.  





    



நினைவூட்டுகிறோம்

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான

இணைப்பு:


கதையின் தலைப்பு:

VGK-37 
எங்கெங்கும்...
எப்போதும்...
என்னோடு... !

விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்

02.10.2014
நாளை வியாழக்கிழமை
இந்திய நேரம் 
இரவு 8 மணிக்குள் .

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !

இன்னும் தங்களுக்கு இருப்பதோ 
நான்கு வாய்ப்புகள் மட்டுமே !


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்