என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 28 ஜனவரி, 2017

நினைவாற்றல் - பகுதி 1 of 3




நினைவாற்றல் என்பது இறைவனால் நம்மில் சிலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள ஓர் வரம். 

எனக்கு ஓரளவு நினைவாற்றல் உள்ளது என, என்னைச் சுற்றியுள்ள பலராலும் அடிக்கடி சொல்லப்படுவதில், எனக்கும் கொஞ்சம் சந்தோஷம் ஏற்படுவதுண்டு. 

என் நினைவாற்றல்களின் உதவியினால் மட்டுமே, நான் என்றோ நடந்த என் பள்ளிவாழ்க்கையைப் பற்றி, 40-45 ஆண்டுகளுக்குப்பின், 7+1=8 பகுதிகளாக, ஓர் சுவையான தொடர் பதிவாகத் தர முடிந்தது.  சுமார் 500 பின்னூட்டங்களுடன் பலரின் பாராட்டுக்களை நான் பெறவும் முடிந்தது.   

அந்தத் தொடரின் ஆரம்பப்பதிவின் இணைப்பு: 

பொதுவாக நேற்று நாம் என்ன சாப்பிட்டோம்; எந்த உடையை உடுத்தியிருந்தோம்; எங்கெல்லாம் சென்று வந்தோம்; யார் யாரை சந்தித்தோம் என்பதே நமக்குப் பெரும்பாலும் மறந்து விடுகிறது என்பதே உண்மை. இவையெல்லாம் எனக்கும்கூட மறந்துதான் போகும். ஏனெனில் இதெல்லாம் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த சமாச்சாரங்களே அல்ல. அன்றாடம் நடைபெறும் மிகச்சாதாரண சில நிகழ்வுகள் என்பதால் மட்டுமே.

அந்த நிகழ்வால் நமக்கு ஒரு பெரும் ஆதாயமோ அல்லது பெரும் பாதிப்புகளோ ஏற்பட்டால் மட்டுமே அவற்றை நம்மால் லேஸில் மறக்க முடிவது இல்லை. 


’நன்றி மறப்பது நன்றன்று’ எனச்சொல்லுவார்கள். அதுபோல நாம், நம்மிடம் பாசமும் நேசமும் காட்டிவரும் நம் நல்ல உறவினர்களையும், நல்ல நண்பர்களையும், நம் நலம் விரும்பிகளையும், அவர்கள் அவ்வப்போது நமக்குச் செய்துள்ள சிறுசிறு உதவிகளையும்கூட, நாம் என்றுமே மறக்காமல் இருப்பதே நல்லது.

’மறப்போம் மன்னிப்போம்’ என்பதுபோல  மறதி என்பதும் ஓர் வரமே என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். 

உதாரணமாக, நம்மிடம் இருந்த நகைகளோ, பெரியதொரு தொகையோ திருட்டுப்போய் விட்டது அல்லது நம் அன்புக்குரிய ஒருவர் திடீரென இறந்துவிட்டார் என அறிந்ததும் ஓர் அதிர்ச்சி, அழுகை, துக்கம் முதலியன வரத்தான் செய்யும். சிலர் விஷயத்தில் அவை ஒருசில ஆண்டுகள் வரை நம்மிடம் நீடிக்கவும் செய்யும். 

இருப்பினும், நாம் இழந்துவிட்ட அவைகள் அல்லது அவர்கள் நினைவாகவே நாம் எப்போதும் அழுதுகொண்டு, சாப்பிடாமல், தூங்காமல், வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் இருந்து விடவே முடியாது என்பதுதானே நிதர்சனமான உண்மையாக உள்ளது. 

இதன்படி, நல்லவைகளையும், நல்ல நட்புகளையும், வாழ்க்கையின் மிக முக்கியமான சில சம்பவங்களையும், கூடுமான வரையில் நாம் என்றும் மறக்கவே கூடாது. அதே சமயம் மறக்க வேண்டிய சிலவற்றை நாம் மறந்துதான் ஆக வேண்டியதாகவும் உள்ளது. 

இதில் காலமும், மறதியும் மற்றும் இன்று நடக்கும் சில சந்தோஷமான அல்லது துக்கமான நிகழ்ச்சிகளும் மட்டுமே நமது பழைய துக்கங்களைக் குறைக்க உதவும் காரணிகளாக உள்ளன. 

இதையெல்லாம் ஏன் இங்கு நான் சொல்லுகிறேன் என்றால், வயதானாலும் மிகச்சிறப்பான நினைவாற்றல் உள்ள, தனித்திறமைகள் வாய்ந்த, ஒரு நபரை நான் மூன்றாம் முறையாக 25.01.2017 புதன்கிழமை ஓர் நிகழ்ச்சியில் நேரில் சந்திக்க நேர்ந்தது.  



அந்த நிகழ்ச்சியின் மெயின் ஹீரோவே அவர்தான். ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 பேர்கள் கலந்துகொண்ட இனிய நிகழ்ச்சி அது. 

அவரை நான் முதன் முதலாக சந்தித்த நாள்: 02.08.2014


இரண்டாம் முறையாக சந்தித்த நாள்: 22.02.2015 


 


70+ ஆன வயதிலும்
நினைவாற்றலில் இன்றும் 
ஓர் புலியாகத் திகழ்ந்து வரும் இவர் பெயர்:
அஷ்டாவதானி 
திரு. V. மஹாலிங்கம் அவர்கள்.
M.Com., L.L.B., C.A.I.I.B., 

Phone: 0431-2432340
Mobile: 9952469372
e-mail:-  vmaali@gmail.com

Residing now at

Dhanraj Complex
B-6, First Floor
15, Veereswaram Main Road
Srirangam  
Thiruchirappalli-620 006  

-oOo-

 

அந்த சிறப்பு நிகழ்ச்சிக்கான
அழைப்பிதழ் இதோ



Book Club Trichy Invites you
to our  meeting
on 25th January, 2017 at 6.30 pm.

For a Lecture Demonstration
on Ashtaavadaanam
by
Sri V.Mahalingam, 
(Former AGM, UCO BANK- Retd.)


Time:  6.30 PM to 8 PM
Venue: Thathachariar House,
No.152, South Chitra Street, 
Srirangam, Trichy-620006.

Note : Ashtaavadaanam is an ancient Indian art which was in active practice in our Country Earlier .   Literally means  doing eight things simultaneously  Please Do make it a point  not to miss this meeting

Invitees are requested to bring each a pencil and pen and INDIA TODAY ENGLISH EDITION with Cover date 23 January 2017 and Thuglak Tamil Magazine with Cover date 18 January 2017. This will help to  understand and appreciate the skills of the ASHTAVADHANI


The Book Club Trichy meets on the Fourth Wednesday of every month.
E-Mail: bookclubtrichy@gmail.com 
Coordinator: Brigadier B. Narayanswamy, EME (Retd)
Tel: 2761497. Mobile: 94437- 71497





நான் நேரில் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், என் பார்வையில், அங்கு நடைபெற்ற சிறப்பம்சங்கள் + வியப்புகள் பற்றி இதன் அடுத்த பகுதியில் தொடர்வேன். 

என்றும் அன்புடன் தங்கள்,

 

(வை. கோபாலகிருஷ்ணன்)



வெள்ளி, 30 டிசம்பர், 2016

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே !





அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். 

வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது.

புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'எனது எண்ணங்கள்’ http://tthamizhelango.blogspot.com/  வலைப்பதிவருமான திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்கள் என்னை சந்திப்பதும், புத்தாண்டுக்கான நாட்குறிப்புப் புத்தகம் (DIARY) கொடுத்துவிட்டுச் செல்வதும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார். இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை நினைக்க, எனக்கே மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.  

25.12.2013 அன்று என் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து 2014-ம் ஆண்டுக்கான புதிய டைரியை முதன் முதலாகக் கொடுத்துச் சென்றார்.

25.12.2014 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2015-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/12/9.html



25.12.2015 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2016-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

 


அதே போல நேற்று 29.12.2016 வியாழக்கிழமை மாலை சுமார் 5.45 மணிக்கு திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் என் இல்லத்திற்கு நேரில் விஜயம் செய்து, பிறக்கவுள்ள 2017-ம் ஆண்டுக்கான புத்தம் புதிய DIARY கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி  மகிழ்வித்திருந்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள் இதோ தங்களின் பார்வைக்காக:






2014 முதல் 2017 வரை தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக, நேரில் வருகை தந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்துகளும் சொல்லிப் புது வருட நாட்குறிப்புப் புத்தகமும் (DIARY) கொடுத்துச்செல்லும், அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் இனிய  ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.








என்றும் அன்புடன் தங்கள்


[ வை. கோபாலகிருஷ்ணன் ]


திங்கள், 5 டிசம்பர், 2016

எங்கள் ஊரில், எங்கள் தெருவில் NUMBER ONE பிள்ளை.....யார்?



திருச்சிராப்பள்ளி நகரின் மிகப் பிரபலமான 
உச்சிப்பிள்ளையார் கோயிலைச் சுற்றி
தேரோடும் வீதிகள் நான்கு உள்ளன.

அவற்றில் ஆங்காங்கே பல 
பிள்ளையார் கோயில்கள் உள்ளன.

அவை பற்றிய மேலும் விபரங்களை
‘ஏழைப் பிள்ளையார்’
என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள சுவையான 
http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html
இந்தப் பதிவினில் படிக்கலாம்.

இவற்றில் உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து
பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் போது ஐந்தாவது
பிள்ளையாராகவும், வடக்கு ஆண்டார் தெருவின் 
ஆரம்பத்திலேயே முதல் பிள்ளையாராகவும்
வீற்றிருப்பவர் ஸ்ரீ வரசித்தி விநாயகர்.

மிகப்பெரிய அரசமரத்தின் அடியில் பல நூறு ஆண்டுகளாக
வீற்றிருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகர் இவர்.

இந்தப் பிள்ளையாருக்கு 04.12.2016 ஞாயிறு காலை
9.30 to 10.30 மணிக்கு வெகு சிறப்பாக 
கும்பாபிஷேகம் நடைபெற்றது.



மேலும் கீழும் உள்ள இந்தப் படங்கள் 
என் பழைய பதிவிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.


கீழேயுள்ள படங்கள் 03.12.2016 சனிக்கிழமையன்று
[கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள்] 
பாலாலயம் செய்யப்பட்ட ஸ்வாமியை 
பிரதிஷ்டை செய்யும் முன்பு எடுக்கப்பட்டவை





கீழேயுள்ள படம், கும்பாபிஷேகத்திற்கான 
யாகசாலை பூஜைகள் நடக்குமிடம்
03.12.2016 சனிக்கிழமை எடுக்கப்பட்டது


04.12.2016 ஞாயிறு காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்
வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நறைபெற்றபோது
எடுக்கப்பட்டுள்ள படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



^தெற்கு பார்த்த மிகச்சிறிய கோயில் 
கோபுரத்தின் உச்சி^



^கோபுர உச்சியைக் 
கிழக்கு திசையில் மேற்கு நோக்கி நின்று 
எடுக்கப்பட்ட புகைப்படம்
EASTERN SIDE VIEW  ^




^யாகசாலை பூஜைகள் + ஹோமங்கள்^






^தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் மூலவர்
ஸ்ரீ வரசித்தி விநாயகர்^


^மேற்கு நோக்கி நின்ற நிலையில்
ஸ்ரீ ஆஞ்சநேயர்^

[இந்த மிகச்சிறிய கோயிலின், பிரக்ஷண பாதையில் 
கிழக்குச் சுவர்புறம்  ..... கிழக்கு நோக்கி 
ஸ்ரீ முருகனுக்கு ஓர் சந்நதியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.]







^ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு எதிரே
சமீபத்தில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற
வடக்கு நோக்கி அமைந்துள்ள ஸ்ரீ கருப்பர் கோயில்^



கும்பாபிஷேகத்திற்கு முன் இருந்த கருப்பர் கோயில்
என் பழைய பதிவிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 

-சுபம்-



என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]