About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, July 28, 2011

காது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவா சப்தம்!




2
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை
ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத 
ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வர ஸ்வாமி துணை






[தூய தமிழில்: ஸ்ரீ மட்டுவர்குழலம்மை உடனுறை தாயுமானவர் துணை]



கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் ப்ரஸவம் ஏற்பட
சொல்லவேண்டிய ஸ்லோகம்:


ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத 
மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின் 
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ
ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!



இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்ரஸவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும். முன்னோர்கள் தொன்றுதொட்டு சொல்லிவந்த ஸம்பிரதாயமான ஸ்லோகம் இது. 

மேலும் கடவுள் க்ருபையால் சுகப்ரஸவம் ஆனபிறகு ஸ்ரீதாயுமான ஸ்வாமிக்கு தாரோடு வாழைப்பழமும், பசும்பாலும் அர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகும். 

மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதிக்கு அருகே உள்ள கடைகளில் வாழைத்தார் வேண்டுமென்று சொல்லி பணம் கொடுத்து விட்டால் அவர்களே ஆள் போட்டு வாழைத்தாரை மேலே உள்ள ஸ்ரீ தாயுமானவர் சந்நதி வரை கொண்டு வந்து நம்மிடம், உடனே ஒப்படைத்து விடுவார்கள்.  

உள்ளூர்காரர்கள் பிறந்த குழந்தையை ஸ்ரீ தாயுமானவர் சந்நதியில் சற்று நேரம் போட்டுவிட்டு, பிறகு அர்ச்சனை செய்து கொண்டு, நைவேத்யம் செய்து தரும் பிரசாதமான வாழைத்தாரில் உள்ள பழங்களை அங்கேயே தரிஸனம் செய்ய வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து விடுவது வழக்கம்.

வெளியூர்க்காரர்கள் கருவுற்றது முதல் பிரஸவம் ஆகும் வரை தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தாலே போதும்.






திருச்சி மலைக்கோட்டை கோயில் யானை

சுபம்

57 comments:

  1. தகவல் பகிர்விற்கு நன்றி. கோவில் படம் கவனத்தைக் கவர்கிறது. யானை மனதை கொள்ளை கொள்கிறது.

    ReplyDelete
  2. இறைவன் தாயுமான வரலாறு தொடர்பான படம் பெருப்பித்துப் பார்க்க முயன்றேன். இயலவில்லை.

    ReplyDelete
  3. ஜனரஞ்சக தலைப்பு கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான்

    ReplyDelete
  4. அற்புதம். தாயுமானவ சுவாமியோடு எனக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது எனது பதிவில் நான் அதை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  5. நன்றி சார். நலம்தானே

    ReplyDelete
  6. நம்பிக்கை தான் வாழ்க்கை.

    ReplyDelete
  7. தலைவர் பாட்டை, அதுவும் இந்தப் பாட்டைத் தலைப்பாப் போட்டதும் ’ஆஹா’ன்னு ஓடி வந்தேன்.! :-)))

    ReplyDelete
  8. திருச்சி கோவில் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. பயன்தரும் சுலோகப்பகிர்வுக்கு நன்றி..

    நன்றுடையானைத்தீயதில்லானை
    நரைவெள்ளேறு ஒன்றுடையானை
    சென்றடையாத திருவுடையானை
    குன்றுடையானைக்கூற என்னுள்ளம்
    குளிருமே--

    என்கிற அழகுத்தமிழ் பாடலை பாட கூறியிருக்கிறேன்..நிறைய பெண்களுக்கு.

    ReplyDelete
  10. கர்ப்பரட்சாம்பிகை வரலாற்றுப் புத்தகத்தையும், இந்த சுலோகங்களையும் பரிசளித்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. அழகான படங்களுடன் அருமையான தகவல்.பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  12. நல்ல படங்கள் ,பகிர்வுக்கு நன்றி ...

    ReplyDelete
  13. ஐயா உங்கல் பதிவினூடாக பார்த்துவிட்டேன்.குறைவிடாமல் யானையையும் காட்டிட்டிங்கள்..
    நல்ல பகிர்வு..
    நன்றி..

    உங்கள் பக்கம் இப்பதிவிற்கு முதல்பதிவிற்கு அடிவைத்தேன்,,
    சிந்திக்க வேலை கொடுத்திருந்தீங்கள்...அதனால அனைத்தையும் வாசித்துவிட்டு சத்தமில்லாமல் போய்விட்டேன்.ஏனென்றால் சிந்திக்க மனசு ஒரு நிலையில் இல்லை ஐயா மன்னிக்கவும்....

    ReplyDelete
  14. நல்ல பதிவு.நலமா அய்யா..

    ReplyDelete
  15. அற்புதம். தாயுமானவ சுவாமியோடு எனக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது .....கோவில் படம் கவனத்தைக் கவர்கிறது.......

    ReplyDelete
  16. தாய்மானவரைப் பற்றிய ஆன்மீக பதிவு மெய்ச்லிர்க்க வைக்கிறது. நானும் ஒருமுறை திருச்சி மலைக் கோட்டைக் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது குட்டியாக யானை இருந்தது.அழகாக கோவிலுக்கு வரும் அனைவரையும் கவர்ந்தது. அந்த யானைப் புகைப்படத்தைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது. இது அந்த யானைதானா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  17. அருமையான பதிவு ஐயா
    கருவுற்ற தாய்மார்கள் அனைவரும்
    அறிய வேண்டிய
    அரிய மந்திரமும்
    வழிபாட்டு முறையும்

    ReplyDelete
  18. பிரமாதமாக இருந்தது,அதிலும் நீங்கள் சொல்லியுள்ள ஸ்லோகங்கள் உபயோகமானவை, அது எதுக்கு யானை ஸ்டில்

    ReplyDelete
  19. படங்கள் சூப்பர்

    ReplyDelete
  20. படங்களும் பகிர்வும் அருமை. மலைக்கோட்டை யானை அழகு. என்ன பெயரோ?

    ReplyDelete
  21. அடுத்த‌வ‌ர் ப‌ய‌னுற‌ விழையும் த‌ங்க‌ள் எண்ண‌ம் போற்றுத‌லுக்குரிய‌து! சினேகிதியின் உற‌வின‌ருக்காக‌ குறிப்பெடுத்துக் கொண்டேன் த‌ங்க‌ள் த‌க‌வ‌ல்க‌ளை... ந‌ன்றி!

    ReplyDelete
  22. நல்ல படங்கள்... பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  23. அழகான அமைதியான கோயில்.. எங்களுக்கு ரொம்பவே அந்த சூழல் பிடிச்சிருந்தது. நாங்க போயிருந்தப்பவும் ஒரு குடும்பம் வாழைப்பழங்களை வினியோகிச்சுக்கிட்டு இருந்தாங்க..

    ReplyDelete
  24. தாயுமானவரின் கருணையில் சுக பிரசவம் ஏற்படுவது உறுதி. கருணைக்கடலான இறைவன் தாயுமாகி நின்ற திருச்சியின் மேன்மை மகிழ்ச்சி தருகிறது. நன்றி சார்.

    ReplyDelete
  25. அருமையா படைப்பு பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.........

    ReplyDelete
  26. //இமா said...
    இறைவன் தாயுமான வரலாறு தொடர்பான படம் பெருப்பித்துப் பார்க்க முயன்றேன். இயலவில்லை.//

    அந்தப்படத்தில் உள்ள எழுத்துக்கள் படிக்குமாறு பெரிதாக்கி வெளியிட முடியாமல் தான் இருந்தது. நான் பெரிதும் முயற்சி செய்தும் நடக்கவில்லை.

    இருப்பினும் அந்தப்படக்கதை பற்றி சுருக்கமாகக்கூறுகிறேன்:

    இரத்தினாவதி என்ற வணிககுலத்துப்பெண், மலைக்கோட்டை சிவன் மேல் மிகுந்த பக்தி கொண்டவள். கர்ப்பம் தரிக்கிறாள். பிரஸவ நேரம் நெருங்குகிறது.

    உதவிக்கு காவேரி பூம்பட்டினத்தில் உள்ள தன் தாயை திருச்சிக்கு அழைக்கிறாள். தாயும் வருகிறாள்.

    காவிரி நதியில் அப்போது வெள்ளப்பெருக்கு அதிகமாகிறது. கொள்ளிடம்+காவிரி நதிகளைக்கடந்து தான் அந்தக்காலத்தில், நடந்தே திருச்சிக்கு வரவேண்டும்.

    வெள்ளப்பெருக்கினால் தாயால் குறித்த நேரத்தில் தன் பெண் வீட்டுக்கு வந்து சேர முடியவில்லை.

    பிரஸவ வலியால் இரத்தினாவதி துடிக்கிறாள். தாயும் வராததால் கடவுளை மனமுருகி வேண்டுகிறாள்.

    கடவுளே இரத்தினாவதியின் தாய் போல உருவம் மாறி அவளுக்கு பிரஸவ நேரத்திற்கான உதவிகள் யாவும் செய்து, குழந்தையும் அழகாகப்பிறக்கிறது. பிரஸவித்த இரத்தினாவதியும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

    இவ்வாறு 4 நாட்கள் சென்றபின், வெள்ள நீர் கட்டுக்கு அடங்கியதால், உண்மையான தாய் ஓடி வந்து சேருகிறாள். அங்கு தன்னைப்போலவே வேறொருவள் இருப்பதைக் காண்கிறாள்.

    இரத்தினாவதியும் இரண்டு தாய்களையும் ஒரே நேரத்தில் கண்டு ஆச்சர்யப்பட்டு, திடுக்கிடுகிறாள்.

    அப்போது ஒரு தாய் மறைந்து அந்த இடத்தில் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர் காட்சி அளித்து அருளுகிறார்கள்.

    இந்த திருச்சி மலைக்கோட்டை சிவன் இது போல தாயும் ஆனதால் அதன் பிறகு 'தாயுமானவர்' என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.

    இப்போது இந்தக்கதையைப்படித்த பிறகு அந்தப்படங்களைப் பார்த்தால் உங்களுக்கே அந்தப் படங்கள் என்ன சொல்லுகின்றன என்பது புரியக்கூடும்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  27. ஐயா!
    பதிவுக்கு தலைப்பு வைப்பதே
    கலை
    வை கோ வுக்கு கைவந்த
    கலை! நிகர் இலை!
    என் வலை வந்து நெஞ்சம்
    நெகிழக் கருத்துரைத் தந்தீர்
    நன்றி
    புலவர்சா இராமாநுசம்

    ReplyDelete
  28. சென்ற பதிவைப்படித்து, சிவாஜி கனேசன் தஞ்சையைச் சார்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தேன். உங்கள் விளக்கங்களை படித்த பிறகு சிவாஜி கனேசன் திருச்சியைச் சார்ந்தவர் என்று தெரிந்தது. தவறுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  29. "நன்றுடையானைத் தீயதிலானை" என்றொரு பதிகம் தினமும் பாடி தாயுமானவரை வேண்டித்தான் என் மகன் பிறந்தான். படியேறி வாழைத்தார் காணிக்கையாக்கினோம்.
    நினைவலைகளைத் தூண்டிய பதிவு.

    ReplyDelete
  30. அன்பின் ஐயா அவர்களுக்கு,

    என் கருத்துக்கு இத்தனை மதிப்புக் கொடுத்து, பொறுமையாக முழுக் கதையையும் தட்டச்சு செய்து பதிலாகத் தந்துள்ள உங்கள் செய்கை மனதை நெகிழ வைக்கிறது. என் வலைப்பூவிலும் பதிலைப் பதிவு செய்திருந்தீர்கள்.

    'தாயுமானவர்' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கதை இதுவென்று தெரியாது. அறியத் தந்தமைக்கு நன்றி. உங்கள் தயவால், எனக்கு மட்டுமல்லாமல் வேறு சிலருக்கும் இப்போ தெரிய வந்திருக்கிறது.

    இந்துமத தெய்வங்களின் படங்கள், கோயில்களில் உள்ள சிலைகள் எப்பொழுதும் என்னைக் கவர்ந்திருக்கிறது. கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை ஆர்வமாகப் படிப்பேன். அப்படித்தான் அந்தப் படத்தையும் பெருப்பித்துப் பார்க்க முயன்றேன், இயலவில்லை. ஆனால் நான் கேளாமலே தேவைக்கு மேல் விபரம் கிடைத்து விட்டது. உதவிக்கு மிக்க நன்றி.

    - இமா க்றிஸ்

    ReplyDelete
  31. இந்த ஸ்லோகத்தை சொல்லி நானும் பயன் பெற்றிருக்கிறேன்.
    தாயுமானவர் கோவிலின் பிரகாரத்தில் மேலே வரைந்திருக்கும் ஓவியங்கள் அழகானவை.
    சென்ற அக்டோபரில் வந்த போதும் சென்று வந்தோம்.

    ReplyDelete
  32. தாயுமானவர் கோயிலுக்கு மிக அற்புதமான ஸ்தல வரலாறு சொல்லி, அழகிய படங்களும் பகிர்ந்து தலைப்பு மிக அருமை அண்ணா...

    இந்த கோயிலுக்கு (உச்சிப்பிள்ளையார் கோயில்) ஒவ்வொரு மாதமும் அம்மாவும் அப்பாவும் திருச்சி வந்து ( நான் அப்போது எஸ் ஆர் சி ஹாஸ்டல்ல இருந்து படித்துக்கொண்டிருந்தேன்) அழைத்துச் செல்வார்கள்....

    அப்போது தாயுமானவர் சன்னதி, மாணிக்க விநாயகரை தரிசித்து பின் உச்சிப்பிள்ளையார் கோயிலும் போய் தரிசித்த நினைவு வருகிறது எனக்கு...

    மிக அழகாய் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் அண்ணா...

    தெய்வத்திடம் நேர்மையான நம் கோரிக்கைகள் என்றுமே இறைவனால் ஏற்கப்பட்டு தத்தம் என்று நம் எதிரில் வந்து நம்முடனே இருந்து நமக்கு நன்மைகள் செய்வார் என்று அறியவும் முடிந்தது...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா பகிர்வுக்கு....

    ReplyDelete
    Replies
    1. மஞ்சுபாஷிணி October 12, 2012 2:18 AM
      தாயுமானவர் கோயிலுக்கு மிக அற்புதமான ஸ்தல வரலாறு சொல்லி, அழகிய படங்களும் பகிர்ந்து தலைப்பு மிக அருமை அண்ணா...//

      அன்பின் மஞ்சு, வாங்கோ வாங்கோ,
      இதையும் படிச்சுட்டீங்களா? ரொம்பவும் சந்தோஷம்.மா..

      ’தலைப்பூ’ அருமையா? எங்கள் ஊர் ’இருவாச்சி மல்லிகைப்பூ’ போல அது. சும்மா மலர்ந்து சிரித்து, கும்மென்ற வாஸனையுடன் ஆளை அப்படியே மயக்கும்.மா.

      அதுபோலவே இந்தத் தலைப்பு எல்லோரையும் சுண்டி இழுத்துள்ளதும்மா... ;)))))

      ... தொடரும்

      Delete
    2. VGK to மஞ்சு ....

      //இந்த கோயிலுக்கு (உச்சிப்பிள்ளையார் கோயில்) ஒவ்வொரு மாதமும் அம்மாவும் அப்பாவும் திருச்சி வந்து ( நான் அப்போது எஸ் ஆர் சி ஹாஸ்டல்ல இருந்து படித்துக்கொண்டிருந்தேன்) அழைத்துச் செல்வார்கள்....//

      அடடா! எங்கள் ஊரில் படிச்சப்பொண்ணு நீங்க. ஆனால் அதே S R C Hostel பக்கத்திலேயே நான் குடி இருந்தும், உங்களை நானும், என்னை நீங்களும் சந்திக்கவே இல்லை பாருங்கோ. இப்போ எங்கேயோ எட்டாக்கையில் குவைத்தில் நீங்க இருந்தும் நமக்குள் எவ்வளவு தூரம் Friend ஆகிவிட்டோம்! நினைத்தால் மிகவும் ஆச்சர்யமாக உள்ளதம்மா... எல்லாம் வலைத்தளத்தால் அல்லவோ! ;)

      அதேபோல இந்தப் பதிவுக்குப்பிறகே நானும் இமாவும் மிகவும் நெருங்கிய நண்பர்களானோம். அவர்களும் உங்களைப்போலவே வேறு ஒரு வெளிநாட்டில் டீச்சர் ஆக இருக்கிறார்கள்.

      //அப்போது தாயுமானவர் சன்னதி, மாணிக்க விநாயகரை தரிசித்து பின் உச்சிப்பிள்ளையார் கோயிலும் போய் தரிசித்த நினைவு வருகிறது எனக்கு...//

      எப்படியோ எங்கள் ஊர் நினைவு அவ்வப்போது வந்தால் சரிதான். மகிழ்ச்சியே. என் வீட்டு எந்த ஜன்னலைத் திறந்தாலும் நேரிடையாக உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் கோயில்களையும் மலையையும் தரிஸிக்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன், வீட்டிலிருந்தே ஓரிரு நிமிடங்கள் உச்சிப்பிள்ளையார் மலையைப்பார்த்து வணங்கி குட்டிப்போட்டுக்கொண்டே மற்ற வேலைகளைத் துவங்குவோம்.

      //மிக அழகாய் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் அண்ணா...//

      மிக்க நன்றி, மஞ்சு....

      தொடரும்.....

      Delete

    3. VGK to மஞ்சு ....

      //தெய்வத்திடம் நேர்மையான நம் கோரிக்கைகள் என்றுமே இறைவனால் ஏற்கப்பட்டு தத்தம் என்று நம் எதிரில் வந்து நம்முடனே இருந்து நமக்கு நன்மைகள் செய்வார் என்று அறியவும் முடிந்தது...//

      அதே அதே .... x x x x ! ;))))))

      //மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா பகிர்வுக்கு....//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த சந்தோஷங்கள், மஞ்சு.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      Delete
    4. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகுடன் கருத்துக்களைக் கூறியுள்ள அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      Delete
    5. VGK to மஞ்சு ....

      //தினமும் காலையில் எழுந்தவுடன், வீட்டிலிருந்தே ஓரிரு நிமிடங்கள் உச்சிப்பிள்ளையார் மலையைப்பார்த்து வணங்கி குட்டிப்போட்டுக்கொண்டே மற்ற வேலைகளைத் துவங்குவோம்.//

      இதில் ”குட்டிப்போட்டுக்கொண்டே” என்று
      தவறாக டைப் அடித்து விட்டேன், மஞ்சு.

      அது உச்சிப் பிள்ளையாருக்காக தலையில்

      “கு ட் டு ப் போ ட் டு க் கொ ண் டே”

      என்று இருக்கணும் மஞ்சு. தவறுக்காக இப்போது இரண்டு குட்டுப்போட்டுக்கொண்டு விட்டேன், நான். ;)

      VGK

      Delete
  33. இங்கயும் வந்துட்டேன். இமாவின் பின்னூட்டத்துக்கு உங்க பதில் பின்னூட்டமும் படிச்சுட்டேன். இங்க எனக்கு என்ன பின்னூட்டம் போடனும்னே தெரியல்லே என்ன சொன்னாலும் டெம்ப்ளேட் கமெண்ட் போல ஆயிடும். ஸோ படித்து ரசித்தேன் என்பதை மட்டுமே சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் January 14, 2013 at 8:49 PM

      //இங்கேயும் வந்துட்டேன்.//

      ஆஹா, வாங்கோ வாங்கோ; நீங்க எங்கேயும் வரலாம். இது உங்கள் வீடு போலவே. முழுச்சுதந்திரம் உங்களுக்கு உண்டு.

      //இமாவின் பின்னூட்டத்துக்கு உங்க பதில் பின்னூட்டமும் படிச்சுட்டேன்.//

      அதையும் படிச்சுட்டேளா? சபாஷ்.

      என் படைப்புகளை விட எனக்கு வரும் பின்னூட்டங்களும் அதற்கு நான் கொடுக்கும் பதில்களும் மேலும் சுவையாக இருப்பதாக பலபேர் சொல்லிட்டாங்கோ. மகிழ்ச்சி, மகிழ்ச்சி.

      //இங்க எனக்கு என்ன பின்னூட்டம் போடனும்னே தெரியல்லே என்ன சொன்னாலும் டெம்ப்ளேட் கமெண்ட் போல ஆயிடும். ஸோ படித்து ரசித்தேன் என்பதை மட்டுமே சொல்லிக்கொள்கிறேன்.//

      OK OK நீங்க எது சொன்னாலும் OK தான். ஆனால் எதுவும் சொல்லாமல் மட்டும் போயிடாதீங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான “பூந்தளிர்” போன்ற க்ருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள,
      VGK

      Delete
  34. தாயுமானவர் பெயர் காரணமும் தல வரலாறும் கேள்விப்பட்டிருக்கிரேன்..இதை போல் சுக பிரசவத்திற்கு கர்ப்ப ரட்சாம்பிகை கோவில் பற்றி கேள்வி பட்டிரிக்கிறேன் . அதை பற்றிய விபரம் தெரியுமா அண்ணா..

    ReplyDelete
  35. ராதா ராணி January 20, 2013 at 10:32 PM
    தாயுமானவர் பெயர் காரணமும் தல வரலாறும் கேள்விப்பட்டிருக்கிரேன்..இதை போல் சுக பிரசவத்திற்கு கர்ப்ப ரட்சாம்பிகை கோவில் பற்றி கேள்வி பட்டிரிக்கிறேன் . அதை பற்றிய விபரம் தெரியுமா அண்ணா..//

    வாருங்கள் சகோதரி திருமதி. ராதா ராணி அவர்களே, வணக்கம்.

    கர்ப்பரக்ஷாம்பிகை கோயிலுக்கு நானே சென்று வந்துள்ளேன்.

    அதைப்பற்றிய முழுவிபரங்களை, என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய நம் தெய்வீகப்பதிவர் [செந்தாமரையே செந்தேன் நிலவே] அவர்கள் ஏற்கனவே எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன்.

    அதை நான் தேடிப்பார்த்து கூடிய சீக்கரம் உங்களுக்கு அதன் இணைப்பினை இங்கேயே தெரிவிக்கிறேன். மேலும் உங்கள் பின்னூட்டப் பெட்டியிலும் கூட தெரிவிக்கிறேன்.

    இன்று, கொஞ்சம் அதற்கு நேரம் சாதகம் இல்லாமல் உள்ளது.

    அன்புடன்
    கோபு அண்ணா

    ReplyDelete
  36. உடன் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா ..

    ReplyDelete
    Replies
    1. ராதா ராணி January 21, 2013 at 12:22 AM
      உடன் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா ..//

      OK THANK YOU FOR YOUR THANKS. VGK

      Delete
  37. //இதை போல் சுக பிரசவத்திற்கு கர்ப்ப ரட்சாம்பிகை கோவில் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். அதை பற்றிய விபரம் தெரியுமா அண்ணா..//

    அன்புச்சகோதரி Mrs. ராதா ராணி அவர்களே!

    இதோ நீங்கள் கேட்ட தகவல்கள் இந்தக்கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளன. போய்ப்பார்த்து படித்து விட்டு, அங்கு ஓர் கருத்தும் சொல்லிவிட்டு வாருங்கள் ... ப்ளீஸ்.

    நான் அனுப்பிவைத்து தாங்கள் வந்ததாகக் கூறிக்கொள்ளுங்கள். மேலும் சந்தோஷப்படுவார்கள்.

    நீங்கள் ஊர் ஊராக ஒவ்வொரு கோயிலாக அலைய வேண்டிய அவசியமே இல்லை.

    தினமும் காலை எழுந்தவுடன் இந்தப்பதிவரின் பதிவுப்பக்கம் போய் கண்குளிர ஓர்முறை படங்களை தரிஸித்துவிட்டு வந்தாலே போதும்.

    எல்லாப் புண்ணியங்களும், உங்களுக்கு உங்கள் இடத்திலேயே, மிகச்சுலபமாகக் கிடைத்து விடும்.

    http://jaghamani.blogspot.com/2012/08/blog-post.html

    ”கற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி”

    பிரியமுள்ள
    கோபு அண்ணன்

    ReplyDelete
  38. அன்பின் வை.கோ - காது கொடுத்துக் கேட்டென் - குவா குவா சத்தம் - பதிவு அருமை - படங்களும் அருமை - கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கூற வேண்டிய ஸ்கோகம் பகிர்வினிற்கு நன்றி - தாரோடு வாழைப்பழமும் பசும்பாலும் அர்ப்பணம் செய்வது குறித்த செய்தி நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) May 9, 2013 at 11:23 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //அன்பின் வை.கோ - காது கொடுத்துக் கேட்டென் - குவா குவா சத்தம் - பதிவு அருமை - படங்களும் அருமை - கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கூற வேண்டிய ஸ்கோகம் பகிர்வினிற்கு நன்றி - தாரோடு வாழைப்பழமும் பசும்பாலும் அர்ப்பணம் செய்வது குறித்த செய்தி நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      Delete
  39. மனத்தின் ஸ்வரூபம் மிகவும் விந்தையானது. எதை ஆழாமாஎ நம்புகிறோமோ அது கட்டாயம் நடக்கும்.

    ReplyDelete
  40. ஏற்கனவே பார்த்த இடங்களாக இருந்தாலும், மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் உள்ளது உங்கள் பதிவு.

    நமக்காக நம் முன்னோர்கள் எப்பேர்ப்பட்ட பொக்கிஷங்களைக் கொடுத்துள்ளார்கள். அவற்றை சரியான முறையில் பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.

    ReplyDelete
  41. இங்கத்து இன்னா கமண்டு போடதாவும். வெளங்கலியே.

    ReplyDelete
    Replies
    1. mru October 11, 2015 at 5:55 PM

      //இங்கத்து இன்னா கமண்டு போடதாவும். வெளங்கலியே.//

      ’அந்த யானை, பூனை போல இல்லாமல் மிகவும் பெரிசா இருக்கு. பதிவின் தலைப்பு ஜோராக்கீதூ. எல்லோருடைய கமெண்ட்ஸ்களையும் படிச்சுட்டேன். தாயுமானவர் பற்றிய கதையையும் இன்று இதன் மூலம் அறிந்துகொண்டேன்’ என எவ்வளவு விஷயங்கள் எழுதலாம்.

      போங்கோ முருகு ....... நீங்க சொல்வதும் எனக்கும் ஒன்றும் விளங்கலியே.

      Delete
  42. தலைப்பு பார்த்து கதைப் பதிவோன்னு நினச்சேன் படங்களுடன் பகிர்வும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  43. மலைக்கோட்டையைப்போல யானையும் மெகா சைஸ்தான்...ஸ்லோகம் மிகவும் பலனளிக்கும் எல்லா குடும்பஸ்தர்களுக்கும்...

    ReplyDelete
  44. தலைப்பும் தகவலும் அருமை சார்!

    ReplyDelete
  45. தலைப்புகள் ரொம்ப ரசனைனா பதிவுகளும் பின்னாட்டங்களும் செம ரகளைதான்.உங்க பதிவுபக்கம் வருபவர்களுக்கு செம விருந்து கொடுகக்கறிங்க. படங்கள் எல்லாம் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தலைப்புகள் ரொம்ப ரசனைனா பதிவுகளும் பின்னாட்டங்களும் செம ரகளைதான். உங்க பதிவுப்பக்கம் வருபவர்களுக்கு செம விருந்து கொடுக்கறீங்க. படங்கள் எல்லாம் சூப்பர்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete