About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, January 30, 2012

பீஷ்மாஷ்டமி 31.01.2012

பீஷ்மாஷ்டமி

தை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாம் நாள் ரத ஸப்தமி என்றும் எட்டாம் நாள் “பீஷ்மாஷ்டமி” என்றும் அழைக்கப்படுகின்றன.

மஹாபாரதத்தில் பீஷ்மருக்கு என்று ஒரு தனி இடமும், மிகச்சிறப்பும் உண்டு என்பது நம் அனைவருக்குமே தெரியும். தன் இளம் வயதிலேயே, தன் இளமை முழுவதையுமே தன் தந்தைக்குக் கொடுத்து விட்டு, இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் பிரும்மச்சாரியாகவே இருந்தவர்.  சத்தியம் தவறாமல் வாழ்ந்த மாபெரும் வீரர் “பீஷ்மர்”. ஆட்சிப் பொறுப்பு ஏற்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டதால், ஆட்சிக்கு யார் வந்து அமர்ந்தாலும் அவர்களுக்கு, மிகச்சிறந்த அரசியல் ஆலோசகராக மட்டுமே கடைசிவரை வாழ்ந்தவர், பீஷ்மர். 

மஹாபாரதப்போரில் பீஷ்மரை வீழ்த்த ஒருவனாலும் முடியாத நிலையில், மாயக்கண்ணன் செய்த சூழ்ச்சியால் ‘சிகண்டி’ என்றவரை அவருடன் போரிடச்செய்து, அவரை வீழ்த்தினார்கள். “சிகண்டி” என்பவர் தனக்கு சரிநிகர் சமானமான ஆண் அல்ல என்ற ஒரே காரணத்தினால் பீஷ்மர், சிகண்டியுடன் போர் செய்யாமல் இருந்து விட்டார்.  

இந்த ரத ஸப்தமி + பீஷ்மாஷ்டமி பற்றிய மற்ற பல அருமையான விஷயங்கள் யாவும், அழகான படங்களுடன் நம் பதிவர் “மணிராஜ்” அவர்களால் (திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களால்) இன்று வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு இதோ:

பீஷ்மாஷ்டமி பிரவாகம்

நலம் தரும் ரதசப்தமி

நான் இந்தப்பதிவினில் சொல்ல வந்த முக்கியமான விஷயம் என்னவென்றால் நீண்ட ஆயுள், ஆரோக்யம், குடும்ப ஒற்றுமை ஏற்பட, சந்ததி ஏதும் இல்லாமல் போன, பீஷ்மருக்கு நாம் ஒவ்வொருவரும் நாளை செவ்வாய்க்கிழமை 31.01.2012 அன்று நீர்க்கடன் [மிகச் சுலபமான தர்ப்பணம்] செலுத்த வேண்டியது மிகமிக அவசியம் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும், முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.

இதை திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள், அப்பா உயிருடன் உள்ளவர்கள், அப்பா உயிருடன் இல்லாதவர்கள் என ஆண்கள் அனைவருமே செய்யலாம். மிகவும் சுலபமான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காலையில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு, தூய ஆடை அணிந்து, சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மானுஷ்டங்களையும் முடித்து விட்டு, ஒரு பித்தளை சொம்போ அல்லது வேறு பாத்திரத்திலோ சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு தாம்பாளம் வைத்துக்கொண்டு, ஆசனப்பலகையில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.

“பீஷ்மாஷ்டமி புண்யகாலே பீஷ்ம தர்ப்பணம் கரிஷ்யே”  என்று சங்கல்ப்பம் சொல்லிவிட்டு,

இடது கையினால் தீர்த்த பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டு, ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் [”இத3ம் அர்க்யம்” என்று முடியும் இடத்தில்], வலது உள்ளங்கையில் நீரை ஊற்றி, விரல்கள் வழியாக நிறைய ஜலத்தை தாம்பாளத்தில் விடவேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டிய மிகச் சுலபமான வேலை.

பீஷ்ம: [பீஷ்மஹா] சாந்தனவோ வீர: [வீரஹா] 
ஸத்யவாதீ ஜிதேந்திரிய: [ஜிதேந்திரியஹா]
ஆபி4ரத்3பி3 ரவாப்நோது புத்ர பெளத்ரோசிதாம்
க்ரியாம், பீ4ஷ்மாய நம: [நமஹா] 
இத3ம் அர்க்யம்

வையாக்4ரபாத் கோ3த்ராய ஸாங்க்ருத்ய ப்ரவராய ச
அபுத்ராய த3தா3ம் யர்க்4யம் ஸலிலம் 
பீஷ்ம வர்மணே, பீ4ஷ்மாய நம: [நமஹா]
இத3ம் அர்க்யம்.

க3ங்கா புத்ராய சாந்தாய சந்தநோ: 
ஆத்மஜாய ச அபுத்ராய த3தா3ம் யர்க்4யம் ஸலிலம் 
பீஷ்ம வர்மணே, பீ4ஷ்மாய நம: [நமஹா]
இத3ம் அர்க்யம்.

”அனேன அர்க்4ய ப்ரதா3னேன பீ4ஷ்ம; ப்ரீயதாம்”

என்று சொல்லி எல்லா ஜலத்தையும் அர்க்யம் 
செய்து விட்டு எழுந்து நமஸ்காரம் செய்யவும்.         


-o-o-o-o-o-o-

[மீண்டும் நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்]

25 comments:

 1. ஆட்சிப் பொறுப்பு ஏற்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டதால், ஆட்சிக்கு யார் வந்து அமர்ந்தாலும் அவர்களுக்கு, மிகச்சிறந்த அரசியல் ஆலோசகராக மட்டுமே கடைசிவரை வாழ்ந்தவர், பீஷ்மர்.

  அந்த மாதிரி சீலர்களை இப்போது பார்க்கமுடியாது!

  ReplyDelete
 2. நல்ல விஷயம்.... பீஷ்மர் பற்றிய இது போன்ற நிறைய தகவல்கள் இருக்கிறதே... ஒவ்வொன்றாகச் சொல்லுங்களேன் உங்கள் பக்கத்தில்....

  ReplyDelete
 3. “சிகண்டி” என்பவர் தனக்கு சரிநிகர் சமானமான ஆண் அல்ல என்ற ஒரே காரணத்தினால் பீஷ்மர், சிகண்டியுடன் போர் செய்யாமல் இருந்து விட்டார். //

  சிகண்டியை முன்னால் நிறுத்தி பீஷ்மரின் வீரத்தைக்குறைத்தது மாயக்கண்ணன் அல்லவா...

  ReplyDelete
 4. பீஷ்மாஷ்டமி 31.01.2012"

  விவரமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. இணைப்பு இதோ:
  http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_6124.html பீஷ்மாஷ்டமி பிரவாகம்
  http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_30.html நலம் தரும் ரதசப்தமி

  எமது பதிவின் இணைப்பு தந்து பபெருமைப்படுத்தியமைக்கு நன்றி ஐயா..

  ReplyDelete
 6. “சிகண்டி” முன் ஜென்மத்தில் பெண் என்ற காரணத்தால் தன் வீரத்தைக் காட்ட மறுத்த பீஷ்மர்..அவருக்கு நினைவுநாளை அனுஷ்டித்து நலம் பெற்ப்பிரார்த்திப்போம்..

  ReplyDelete
 7. மஹாபாரதத்தில் பீஷ்மருக்கு என்று ஒரு தனி இடமும், மிகச்சிறப்பும் உண்டு //

  பீஷ்மரைப் பற்றிய செய்திகள் அருமை.
  உயர்ந்தவரை போற்றுவோம்.

  ReplyDelete
 8. இப்பத்தான் அங்கே படிச்சுட்டு வந்தேன்..
  தந்தைக்காகக் காட்டுக்குப் போன ராமனை விட தந்தைக்காக வாழ்க்கையைக் குறுக்கிக்கொண்ட பீஷ்மன் என்னை அதிகம் பாதித்திருக்கிறான்..
  பீஷ்மாஷ்டமி இத்தனை பிரசித்தம் என்று தெரியாது..

  ReplyDelete
 9. உப‌யோக‌மான‌ ப‌திவு!

  ReplyDelete
 10. பீஷ்மருடைய தியாகம் போற்றுதலுக்குறிய ஒன்று. பீஷ்மாஷ்டமி பற்றி சிறப்பான பதிவு. நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 11. மகாபாரதத்தில் எனக்கு பீஷ்மர் மிகவும் பிடிக்கும் அவரை பற்றிய ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள் அருமை.

  ReplyDelete
 12. பீஷ்மருக்கான நினைவுக் கடன் செலுத்துவதே பீஷ்மாஷ்டமி என்று இதுவரை தெரியாது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. நல்ல பதிவு.தேதியை பார்த்தவுடன் இப்பதான் வருஷம் பிறந்தது,ஜனவரி ஓடியேபோயிட்டுன்னு மட்டும்தான் தோனுச்சு.

  ReplyDelete
 14. நல்ல தகவல்...காலையிலேயே படிக்க நேரவில்லை.

  ReplyDelete
 15. நல்ல பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 16. உண்மையிலேயே பீஷ்மர் மிகவும் சிறந்தவர்தான். கௌரவர்களுடன் சேர்ந்தது செஞ்சோற்றுக்கடனுக்காகவா?

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 27, 2015 at 6:21 PM

   //உண்மையிலேயே பீஷ்மர் மிகவும் சிறந்தவர்தான். கௌரவர்களுடன் சேர்ந்தது செஞ்சோற்றுக் கடனுக்காகவா?//

   பீஷ்மர் ஒரு மஹா வீரர். உத்தம புருஷர். ஸத்யம் தவறாதவர். போரில் அவரை யாராலும் வெல்லவே முடியாத பராக்ரமசாலி.

   தன் தந்தையின் முதுமைகால காதலுக்காக, தன் இளமையையே தியாகம் செய்தவர் மஹாபுருஷர். அதனால்தான் அவருக்கு பீஷ்மர் என்றே பெயர் ஆனது.

   செஞ்சோற்றுக்கடனுக்காக என்பது இவருக்குப் பொருந்தவே பொருந்தாது. அது கர்ணனுக்குத்தான் பொருந்தும்.

   பஞ்ச பாண்டவாளோ அல்லது கெளரவர்களோ யார் நாட்டை ஆண்டாளும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை தன் கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தவர் இந்த பீஷ்மர்.

   அதெல்லாம் ஒவ்வொன்றும் மிகப்பெரிய கதைகள். கதைக்குள் கதை என ஏராளமாக மஹாபாரதத்தில் வரும்.

   :) ஒரு நாள் உங்களுக்கு நான் எல்லாக்கதைகளையும் சொல்வேன் :)

   Delete
 17. பீஷ்மப் பிதாமகர் பற்றிய தகவல்கள் அருமை.

  தெரிந்தவையாக இருந்தாலும் மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டும் தகவல்கள்.

  அடுத்த வருடம் கண்டிப்பாக இவரை பீஷ்மாஷ்டமி அன்று தர்ப்பணம் செய்யச் சொல்கிறேன்.

  நன்றியுடன்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 18. ராமயாணம் மஹாபாரதம்லாம் வெளங்கிகிடலியே

  ReplyDelete
  Replies
  1. mru October 14, 2015 at 3:15 PM

   //ராமயாணம் மஹாபாரதம்லாம் வெளங்கிகிடலியே//

   உங்களுக்கு இதையெல்லாம் நான் விளங்க வைப்பதும் மிகவும் சிரமம் தான். :) ஏனெனில் எங்களுக்கே இதெல்லாம் முற்றிலுமாக விளங்குவது இல்லை. :))

   Delete
 19. பீஷ்மரின் பிறப்பிலிருந்து ஆட்சி பொறுப்பை தியாகம் செய்து பிரும்மச்சரிய வரதம் மேற்கொண்டு அவரைப்பற்றிய விஷயங்கள் எல்லாமே சிறப்புதான். கௌரவர்களுடன் சேர்ந்து அவர் எவ்வளவு தூரம் எடுத்துரைத்தும் கேட்காத கௌரவர்களை மீறி அவரால் எதுவுமே செய்ய முடியவில்லையே. சிகண்டி பெண் என்று போரிடாமல் தவிர்த்து தான் வரும்பிய நாளில் உயிரைர விட வரம் பெற்ற ஞானியல்லவா. பீஷ்மாஷ்டமி சிறந்த பகிர்வு

  ReplyDelete
 20. இதை திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள், அப்பா உயிருடன் உள்ளவர்கள், அப்பா உயிருடன் இல்லாதவர்கள் என ஆண்கள் அனைவருமே செய்யலாம். மிகவும் சுலபமான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன./// பயனுள்ள செய்தி...

  ReplyDelete
 21. பயனுள்ள தகவல் பகிர்வு! நன்றி ஐயா!

  ReplyDelete