About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, July 21, 2013

28] வாழ்க்கைத்தரம் !

2
ஸ்ரீராமஜயம்


தற்போது பொருளாதாரத் தேவைகளை அதிகமாக்கிக்கொண்டே போவதைத்தான் ‘வாழ்க்கைத்தரம்’ என்கிறார்கள்.

இதைவிட்டு, மனதினால் உயர்ந்து உண்மையாகவே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதைத்தான் பெரிதாக எண்ண வேண்டும்.

மனநிறைவு வெளிப்பொருட்களால் ஒரு நாளும் கிடைக்காது. இவைகளைச் சேர்க்கச் சேர்க்க மேலும் மேலும் செளகர்யத்திற்காக ஆசைப்பட்டுக்கொண்டு, புதுப்புதுப் பொருட்களைக் கண்டுபிடித்து வாங்கிக்கொண்டேதான் இருப்போம்.

நாம் இவ்வாறு இருப்பதைப்பார்த்து, வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை என்ற வெறியை நாம் உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, பொறாமை, சண்டை எல்லாம் உண்டாகின்றான.

ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.


oooooOooooo

அற்புத நிகழ்வுகள் 

வில்வ இலைகளை 
வைத்து விட்டுப்போனது யார்?

மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.



[பகுதி-1  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/21.html  ]

[பகுதி-2  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/22.html  ]     

[பகுதி-3  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/23.html  ]   

[பகுதி-4  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/24.html ]   

[பகுதி-5 படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/26.html ] 

[பகுதி-6 படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/27.html ]                      


பகுதி 7  of  9

”சாமி ! எங்கப்பாரு என்னிடம் அடிக்கடி, ‘புரந்தரா ..... நாம இந்த ஒலகத்துல எதுக்குமே ஆசைப்படக் கூடாது. ஆனா, ஒண்ணே ஒண்ணுக்கு மட்டும் ஆசைப்படணும்!”ன்னு சொல்லிட்டே இருப்பாரு. 

எனக்கு இப்ப ரெண்டே ரெண்டு ஆசை இருக்குது. 

நீங்க உத்தரவு தந்தீங்கன்னா ஒரு ஆசைய இப்பச் சொல்றேன். இன்னொண்ண நீங்க இந்த ஊர்லேர்ந்து பொறப்பட்டு போற அன்னிக்கி சொல்றேன் சாமி....” என்று நமஸ்கரித்து எழுந்தான். 

அவன் கண்களிலிருந்து பொலபொலவென்று நீர்.

உருகிப்போனார் ஸ்வாமிகள். “சொல்லு .... சொல்லு ... ஒனக்கு என்ன ஆசைன்னு சொல்லு” என்று உற்சாகப்படுத்தினார். 

அவன் தயங்கியபடி, “வேற ஒண்ணுமில்லீங்க சாமி. எங்கப்பாரு எனக்கு, நெறய புரந்தரதாசசாமி, தியாகராஜசாமி பாடின பாட்டெல்லாம் சொல்லிக் குடுத்திருக்காரு... 

நீங்க இங்கே தங்கி இருக்கற வரைக்கும் ஒங்க முன்னாடி நா பாடணும் சாமி! நீங்க கேட்டு அருள் பண்ணனும்!” என்று வேண்டினான். 

அதைக்கேட்டுப் பரம மகிழ்ச்சி அடைந்தார் ஆச்சார்யாள்.

”புரந்தரகேசவலு! அவசியம் நீ பாடு...... நா கேக்கறேன். எல்லாரையும் கேக்கச் சொல்றேன். நித்யம் மத்யானம் சரியா மூணு மணிக்கு வந்துடு. ஒக்காந்து பாடு. சந்திரமெளலீஸ்வர ஸ்வாமி கிருபை ஒனக்குக் கிடைக்கட்டும்! க்ஷேமமா இருப்பே நீ!” என்று ஆசீர்வதித்தார்.

மகிழ்ந்து போனான் புரந்தரகேசவலு. 

ஆச்சார்யாள் விடவில்லை. “அது சரி புரந்தரகேசவலு. அந்த இன்னொரு ஆசை என்னன்னு சொல்லேன். கேப்போம்!” என்றார். 

”இந்த ஊரவிட்டு நீங்க பொறப்படற அன்னிக்கு அதை ஒங்ககிட்ட வேண்டிக்கிறேன் சாமி!” என்று மரியாதையோடு பதில் சொன்னான், அவன். *****

ஸ்வாமிகள் அவனுக்குப் பிரஸாதமும், அழகான துளஸி மாலை ஒன்றையும் ஸ்ரீகார்யத்தை விட்டுக்கொடுக்கச் சொன்னார். துளஸி மாலையை வாங்கிக் கழுத்தில் போட்டுக்கொண்ட புரந்தரகேசவலுக்கு பரம சந்தோஷம். 

நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டான்.

தொடரும்.....

*****
பக்குவப்படாத 12 வயதில் புரந்தரகேசவலு, எதற்கும் பெரிதாக ஆசைப்பட்டு, மஹா பெரியவாளிடம் வரம் கேட்கவில்லை.  மிகவும் பக்குவமாகவே தனது சிறிய, நியாயமானதொரு ஆசையைத் தெரிவித்துள்ளான்.  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பரிபூர்ண அனுக்ரஹமும் பெற்று விட்டான்.

இந்த இடத்தில் நான் ஏற்கனவே எழுதியுள்ள ஓர் குட்டியூண்டு நகைச்சுவைச் சிறுகதை என் நினைவுக்கு வருகிறது. 

தலைப்பு ”வரம்”. 

அதில் பக்குவப்பட்ட வயதிலும் நம்மாளு ஒருவர், பக்குவம் இல்லாமல், தன் முன் தோன்றிய தேவதையிடம் வரம் ஒன்று கேட்கிறார். 

அவர் கேட்டபடியே வரமும் தரப்பட்டது. 

ஆனால் நடந்தது என்ன? 

நீங்களே படித்துப்பாருங்கள்: 


*****






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
23.07.2013 செவ்வாய்க்கிழமை வெளியாகும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

42 comments:

  1. கள்ளம்மில்லா வெள்ளை உள்ளம்
    கிடைத்ததை கொண்டு மகிழ்ச்சியுற்றது

    நாமாக இருந்திருந்தால் எதை கேட்பது என்று புரியாமல் நமக்கு தேவையற்ற ஒன்றை யாசித்திருப்போம்

    அருமையான பதிவு.
    படிப்பதற்கும் வாழ்வில் கடைபிடிப்பதர்க்கும் தேவையான உபதேசம்.

    (ஆனால் யாரும் கடைபிடிப்பதில்லை என்பது வேறு விஷயம்)

    ReplyDelete
  2. அடுத்து என்ன வரம் கேட்டிருப்பான் ?..அறிய ஆவலாகவே உள்ளது .

    ReplyDelete
  3. // மனநிறைவு வெளிப்பொருட்களால் ஒரு நாளும் கிடைக்காது... // உண்மை...

    இணைப்பிற்கு செல்கிறேன்... நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. //மனநிறைவு வெளிப்பொருட்களால் ஒரு நாளும் கிடைக்காது. இவைகளைச் சேர்க்கச் சேர்க்க மேலும் மேலும் செளகர்யத்திற்காக ஆசைப்பட்டுக்கொண்டு, புதுப்புதுப் பொருட்களைக் கண்டுபிடித்து வாங்கிக்கொண்டேதான் இருப்போம்.

    நாம் இவ்வாறு இருப்பதைப்பார்த்து, வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை என்ற வெறியை நாம் உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, பொறாமை, சண்டை எல்லாம் உண்டாகின்றான.//
    வைர வரிகள்!

    ReplyDelete
  5. ஆம் பொருள் கூடக் கூட அடசல்தான்
    வீட்டில் மட்டும் இல்லை மனதிலும்தான்
    அந்த சிறுவனின் வேண்டுதலைப்படிக்க
    ஆச்சரியமாகத்தான் இருந்தது
    அடுத்த வேண்டுதலையறிய மிக மிக ஆவலாய்..

    ReplyDelete
  6. ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.

    // அருமை! சிறுவனின் அடுத்த ஆசை என்ன? அறியக் காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  7. ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.
    உண்மையான வார்த்தைகள் அய்யா.
    சிறுவனின் அடுத்த வேண்டுகோளை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன். நன்றி

    ReplyDelete
  8. சிறுவன் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்காமல் அவனுக்கு வேண்டியதை அழகாக கேட்டிருக்கிறான்....

    ReplyDelete
  9. // பக்குவப்படாத 12 வயதில் புரந்தரகேசவலு, எதற்கும் பெரிதாக ஆசைப்பட்டு, மஹா பெரியவாளிடம் வரம் கேட்கவில்லை. மிகவும் பக்குவமாகவே தனது சிறிய, நியாயமானதொரு ஆசையைத் தெரிவித்துள்ளான். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பரிபூர்ண அனுக்ரஹமும் பெற்று விட்டான். //

    அவரவர், அவரவர் நிலைக்குத் தகுந்தவாறு வரம் (ஆசையைக்) கேட்கின்றனர். புராணங்களில் கேட்கப்பட்ட வரங்கள் இதனைத்தான் காட்டுகின்றன. உங்கள் “வரம்’ நல்ல நகைச் சுவையான கதை. நாம் என்ன கேட்டு இருப்போம்?


    ReplyDelete
  10. சிறுவனின் கள்ளமில்லாத ஆசை ஆச்சர்யமா இருக்கு,அடுத்து என்ன வரம் கேட்டிருப்பான் தெரிந்துக்கொள்ள ஆசையா இருக்கு..

    ReplyDelete
  11. பக்குவப்பட்ட பக்தர்கள் பகவானிடம் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கமாட்டார்கள்; நீயே வேண்டும் என்று கேட்பார்களாம். புரந்தர கேசவலுவும் இப்படித்தான் கேட்டிருப்பான்!

    ReplyDelete
  12. புரந்தர கேசவலு பாடினானா? அதை கேட்கும் பாக்கியம் அந்த ஊராருக்கு மட்டும் கிடைத்திருக்கிறதே!. அவனுடைய அடுத்த வரம் என்னவாயிருக்கும் யோசிக்கிறேன்.....

    ReplyDelete
  13. பக்குவப்பட்ட மனம் பற்றிய பதிவு.
    ஆழமாக வாசித்தேன்.
    நன்று.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. //மனநிறைவு வெளிப்பொருட்களால் ஒரு நாளும் கிடைக்காது. இவைகளைச் சேர்க்கச் சேர்க்க மேலும் மேலும் செளகர்யத்திற்காக ஆசைப்பட்டுக்கொண்டு, புதுப்புதுப் பொருட்களைக் கண்டுபிடித்து வாங்கிக்கொண்டேதான் இருப்போம்.//

    ஆசைக்கு அளவேது..... மனநிறைவு மட்டும் மனிதர்களுக்கு இருந்துவிட்டால்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  15. ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.

    ஆனந்தமான பகிர்வுகள்...!

    ReplyDelete
  16. துளஸி மாலையை வாங்கிக் கழுத்தில் போட்டுக்கொண்ட புரந்தரகேசவலுக்கு பரம சந்தோஷம்.

    எத்தனை அனுக்கிரஹம் அளித்த மாலை ..!

    ReplyDelete
  17. பக்குவப்படாத 12 வயதில் புரந்தரகேசவலு, எதற்கும் பெரிதாக ஆசைப்பட்டு, மஹா பெரியவாளிடம் வரம் கேட்கவில்லை. மிகவும் பக்குவமாகவே தனது சிறிய, நியாயமானதொரு ஆசையைத் தெரிவித்துள்ளான். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பரிபூர்ண அனுக்ரஹமும் பெற்று விட்டான்.


    பக்குவமான வரம் பெற்ற விவேகி ...!

    ReplyDelete
  18. நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.

    பக்குவமில்லாதவர் பெற்றதால் வரமும் குழப்பமாகிவிட்டது ..!

    ReplyDelete
  19. நியாயமான ஆசை, புரந்தர கேசவலுவுக்கு. நீங்க சொன்ன சுட்டிக்கு இனிமேல் தான் போகணும். பேராசை என்பதற்கு அளவே இல்லை. வசதியானவங்களைப் பார்த்து வசதியில்லாதவங்களும் ஆசைப்பட்டுக் கடன் வாங்கிச் செலவு செய்யும் அளவுக்குப்போயிட்டாங்க. :((((

    ReplyDelete
  20. ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.
    For getting this stage, a lot of experience and open heart requires.

    I can guess what the lucky boy was asking.....
    Let me wait and see....
    viji





    ReplyDelete
  21. Now a days devathais are not presenting befor e us because of our greedyness..... Correct>
    ?
    viji

    ReplyDelete
  22. ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.//
    அருமையான பொன்மொழி.

    புரந்தர கேசவலு என்ன வரம் கேட்டார் என்று படிக்க ஆவல்.

    ReplyDelete
  23. ஆசையே அனைத்திற்கும் காரணம், அதனை அழித்து விட்டால் நாமும் மட்டுமல்லாது நம்மைச் சார்ந்தவர்களையும் நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்...!

    ReplyDelete
  24. "மிகவும் பக்குவமாகவே தனது சிறிய, நியாயமானதொரு ஆசையைத் தெரிவித்துள்ளான். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பரிபூர்ண அனுக்ரஹமும் பெற்று விட்டான்." பாக்கியவான். தொடர்கின்றேன்.........

    ReplyDelete
  25. \\நாம் இவ்வாறு இருப்பதைப்பார்த்து, வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை என்ற வெறியை நாம் உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, பொறாமை, சண்டை எல்லாம் உண்டாகின்றான.\\

    மிகவும் சரியான கருத்து. ஒவ்வொருவரும் நம்மை விடவும் ஏழ்மை நிலையிலுள்ளவர்களைப் பார்த்து நாம் நம் நிலையை எண்ணி திருப்தி அடையவேண்டுமே தவிர, நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்து ஏங்கி வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ளக்கூடாது.

    புரந்தரகேசவலுவின் முதல் ஆசை நிறைவேறப்போகிறது. இரண்டாவது ஆசை என்னவாக இருக்கும். அறியும் ஆவலுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  26. Very beautiful the boy is asking only what he wants, nowadays we all want for everything,this is good thing for us follow...

    ReplyDelete
  27. தங்களுடைய வரம் சிறுகதையை வாசித்து மகிழ்ந்தேன். வயதுக்கும் மனத்தின் பக்குவத்துக்கும் தொடர்பு இல்லையோ? சிந்தனையைத் தூண்டும் கதை. பாராட்டுகள் சார்.

    ReplyDelete
  28. ஆசையும்,துவேஷமும், மனதை விட்டுப் போகணும். துவேஷம் கூட போய்விடும். இந்த ஆசையை அடக்குவதுதான் கஷ்டம்.
    இதை ஸமாளித்து விட்டால், அல்லது போதுமென்ற மனப்பான்மை
    வந்து விட்டாற்கூட போதும். விட்டுப் போனதை திரும்பக் கூப்பிடக் கூடாது. புரந்தர கேசவுலுக்கு சின்ன வயதில் எவ்வளவு பக்குவம்?
    அருமையான நீதி. அன்புடன்

    ReplyDelete
  29. நாம் இவ்வாறு இருப்பதைப்பார்த்து, வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை என்ற வெறியை நாம் உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, பொறாமை, சண்டை எல்லாம் உண்டாகின்றான.//

    எளிமை, இனிமை என்பதை மறந்து விடுகிறோம்.

    புரந்தர கேசவலுவின் தந்தையையும் பாராட்ட வேண்டும். பசுமரத்தில் ஆணி பதிவது போல் மகனின் மனதில் எதற்கும் ஆசைப் படக்கூடாது என்று பதித்திருக்கிறாரே அதற்கு.

    இதை விட எளிமையானதொரு வரத்தை யாராவது கேட்டிருப்பார்களா என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
  30. சிறுவனின் மற்றொரு ஆசை என்னவென்று தெரிந்துகொள்ள ஆவல்.

    ReplyDelete
  31. புரந்தரகேசவலு கேட்ட முதல் ஆசை அருமை. இரண்டாவது பெரியவாளுடன் கூடவே இருந்து பணிவிடை செய்ய என்று இருக்குமோ....ஆவலுடன்.. அடுத்த பகிர்வுக்கு செல்கிறேன்.

    ReplyDelete
  32. அன்பின் வை.கோ - பதிவு அருமை - வாழ்க்கைத்தரம் அருமை - சந்திர முளீஸ்வரர் பூசைக்கு வில்வம் தினந்தினம் கொண்டு வந்து கொடுக்கும் சிறுவனின் ஆசையான - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா முன்னிலையில் தனக்குத் தெரிந்த புரந்தர தாசர் மற்ரும் தியாகராசர் பாடல்களைப் பாடவேண்டுமென்ற ஆசைஅயை நிறைவேற்றிக் கொண்டான் - பெரியவாளிடம் இருந்து பரிசும் பெற்றான் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  33. வாழ்க்கைத்தரம் உயர உயர... மனதின் தரமெல்லாம் குறைவதுபோல இருக்கு உலகில்..

    ReplyDelete
  34. சிறுவனானாலும் பக்குவப் பட்ட மனசு.

    ReplyDelete
  35. பரவால்லையே பாடுவதற்கு ஸ்வாமிகளிடமே உத்தரவு வாங்கிட்டானே

    ReplyDelete
  36. அந்த புள்ளக்கு குருசாமி முன்னாடி பாடி காட்டோணும்னு ஆசயா. குருசாமியும் சரின்னுபிட்டாங்களே.

    ReplyDelete
  37. புரந்தரகேசவலு பாட்டை கேக்க ஸ்வாமிகள் கூட நாங்களும் காத்துண்டு இருக்கோம்

    ReplyDelete
  38. ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.// அதற்கு பெரும் மனப்பக்குவம் வேண்டும்.. தொடர் தொடரட்டும் இதே சுவாரசியத்துடன்.

    ReplyDelete
  39. ஆஹா புரந்தர கேசவலுவுக்கு ஸ்வாமிகள் முன்னாடி உக்காந்து பாடற பாக்கியம் கிடைச்சிருக்கே. படிக்கும்போதே சிலிர்க்குது..

    ReplyDelete
    Replies
    1. happy November 12, 2016 at 6:02 PM

      வா...ம்மா, ஹாப்பி. செளக்யமா?

      //ஆஹா புரந்தர கேசவலுவுக்கு ஸ்வாமிகள் முன்னாடி உக்காந்து பாடற பாக்கியம் கிடைச்சிருக்கே. படிக்கும்போதே சிலிர்க்குது..//

      இன்றைய உன் திடீர் அபூர்வ வருகையைக்கண்டு நானும் அப்படியே சிலிர்த்துப்போய் விட்டேனாக்கும். :)

      Delete
  40. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (05.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=408625986306768

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete