About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, July 25, 2013

30] இந்தியப் பண்பாடு

2
ஸ்ரீராமஜயம்



தன் உயிரே போவதாக இருந்தாலும், அறிவை எங்கிருந்தாலும் பெறப்பாடுபடுவது. அதே மாதிரி தன் உயிரையே எடுக்கக் கூடியவனாக இருந்தாலும் தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பது இதுதான் இந்தியப்பண்பாடு.

நம் வரையறைகளை [LIMITATIONS] புரிந்துகொண்டு, நம்முடைய அறிவுரை [ADVISE] எங்கே எடுபடுமோ, அங்கே மட்டும் நல்லது பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வது தான், நம்மாதிரி சாதாரண நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.

”அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் என்று இல்லை, அறிவுக்கும் அப்படியே என்பதே பாரதீயர்கள் கடைப்பிடித்த உன்னத நெறி.”

நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.



oooooOooooo

அற்புத நிகழ்வுகள் 

வில்வ இலைகளை 
வைத்து விட்டுப்போனது யார்?

மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.


[பகுதி-1  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/21.html  ]

[பகுதி-2  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/22.html  ]     

[பகுதி-3  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/23.html  ]   

[பகுதி-4  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/24.html ]   

[பகுதி-5  படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/26.html ] 

[பகுதி-6  படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/27.html ]     

[பகுதி-7  படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/28.html ] 

[பகுதி-8  படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/29.html ]

பகுதி 9  of  9


”புரந்தரகேசவலு! ஒனக்கு இருக்கற பக்தி, சிரத்தை, ஞானத்துக்கு நீ க்ஷேமமா இருக்கணும். 

அது சரி ..... நா பொறப்படற அன்னிக்கு இன்னொரு ஆசைய சொல்றேன்’னு சொன்னயே! அது என்னப்பா?”

புரந்தரகேசவலு சொன்னான்: 

“எங்கப்பாவோட மாடு மேய்க்கிற நேரத்ல அவரு சொல்வாரு, சாமி! .... 


‘புரந்தரா ... கடவுள்ட்ட நாம என்ன வேண்டணும் தெரியுமா? கடவுளே, எனக்கு மறு பொறவி [பிறவி] வேண்டாம். நா மோட்சத்துக்கு போவணும். நீ அதற்குக் கருணை பண்ணுன்னு வேண்டிக்கணும். அதுக்கு நாம சத்தியம் தர்மத்தோடு வாழணும். 

நீ மஹானுங்க யாரையாச்சும் எப்பனா சந்திச்சேன்னா, அவங்க கிட்ட மோட்சத்த வாங்கிக் குடுங்கன்னு வேண்டிக்க’ ... அப்டீனு சொல்வாருங்க சாமி. 


எனக்கு அந்த மோட்சத்தை நீங்க வாங்கிக் கொடுக்கணும், சாமி!”

பன்னிரண்டு வயதுச் சிறுவனின் நாவிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டது அந்த பரப்பிரம்மம்.

பிறகு சிரித்தபடி, “கவலைப்படாதே. உரிய காலத்லே ஒனக்கு பகவான் அந்த மோக்ஷ பிராப்தியை அநுக்ரஹம் பண்ணுவார்!” என்று ஆசீர்வதித்து விட்டு, அந்த ஊர் ஜமீன்தாரைக் கூப்பிட்டு, ‘இந்த புரந்தரகேசவலுவைப் பற்றிய விஷயம் எதுவாக இருந்தாலும் அதை ஸ்ரீமடத்துக்கு உடனே தெரிவிக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார். 

அனைவரும் ஊர் எல்லைவரை வந்து ஸ்வாமிகளை வழியனுப்பி வைத்தனர்.

ooooo இடைவேளை ooooo

இது நடந்து பல வருஷங்களுக்குப் பிறகு, ஒரு நாள் மத்யானம் இரண்டு மணி இருக்கும். ஸ்ரீ காஞ்சி மடத்தில் பக்தர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்த ஆச்சார்யாள், திடீரென்று எழுந்து மடத்தை விட்டு வெளியே வந்து வேகமாக நடந்தார். அனைவரும் பின்தொடர்ந்தனர். 

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் புஷ்கரணிக்கு வந்தவர், ஸ்நானம் பண்ணினார். பிறகு, ஜலத்தில் நின்றபடியே கண்மூடி ஏதோ ஜபிக்க ஆரம்பித்தார். 

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை ஸ்நானம் பண்ணி ஜபம். வழக்கத்திற்கு மாறாக இப்படி மாலை ஆறு மணி வரை ஏழெட்டு தடவை ஸ்நானம் செய்து ஜபம் பண்ணினார் ஸ்வாமிகள். 

ஸ்வாமிகள் கரையேறி படிக்கட்டில் அமர்வதற்குள் மடத்தைச் சேர்ந்த ஒருவர் வேகமாக ஓடிவந்து நின்றார். 

’என்ன?’ என்பதுபோல அவரைப் பார்த்தார் ஆச்சார்யாள். 

உடனே அவர், “கர்னூல்லேந்து ஒரு தந்தி. ‘புரந்தரகேசவலு சீரியஸ்’னு இருக்கு! யாருன்னு தெரியல பெரியவா” என்றார்.

ஸ்வாமிகள் அங்கிருந்தவர்களிடம், “அந்தப் புரந்தரகேசவலு இப்போது இல்லை! சித்த முன்னாடிதான் காலகதி அடஞ்சுட்டான். 

நா அவா ஊர்ல போய்த்தங்கியிருந்து கிளம்பற அன்னிக்கு, ‘எனக்கு நீங்க மோக்ஷம் வாங்கிக் கொடுக்கணும்’னு கேட்டான். ‘சந்திரமெளலீஸ்வர ஸ்வாமி கிருபையால ஒனக்கு அது கெடைக்கும்’ன்னு நான் சொன்னேன். 

திடீர்னு அவனுக்கு ஏதோ விஷக்காச்சல் ஏற்பட்டிருக்கு. மோக்ஷத்தையே நெனச்சுண்டு அவதிப்பட்டிருக்கான். 

கிரமமா அவன் மோக்ஷத்துக்குப்போய்ச் சேரணும்னா, இன்னும் ஆறு ஜன்மா [பிறவி] எடுத்தாகணும்.   

எப்படியாவது அவன் மோக்ஷத்தை அடையணும் என்பதற்காகத்தான் நான் இப்போ ஜபம் பண்ணி பிரார்த்திச்சேன். 

புரந்தரகேசவலு ஒரு நல்ல ஆத்மா!” என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று ஸ்ரீமடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார் மஹா ஸ்வாமிகள்.

குளத்தின் படிக்கட்டில் நின்றிருந்த மடத்து ஆசாமிகள் பிரமித்துப் போயிருந்தனர். 

மறுஜன்மா இல்லாமல் செய்ய இதுபோன்ற மிகச்சிறந்த மஹான்களின் தபோவலிமையினால் மட்டுமே முடியும்.

இந்த பூலோகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து, பிறவிப்பெருங்கடலை நீந்தாமலேயே [அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல - அடுத்தடுத்து ஆறு பிறவிகள் எடுக்காமலேயே] புரந்தரகேசவலு இறைவன் திருவடிகளை அடையுமாறு செய்தவர் நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள். 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா போன்ற மஹான்கள் நினைத்தால் செய்ய முடியாத அற்புதங்களும் உண்டோ?


[இந்தக்குறிப்பிட்ட 
அற்புத நிகழ்வு மட்டும் 
இத்துடன் நிறைவடைகிறது.] 

oooooOooooo









ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
27.07.2013 சனிக்கிழமை வெளியாகும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

45 comments:

  1. இனியொரு பிறவி வேண்டாம் என்ற புரந்தரகேசவலுக்கு சின்ன வயதில் மரணம். சிந்திக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  2. \\நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.\\

    நிறைவான மனமே நிறைந்த செல்வம் என்பதை அறியாதவர்கள் அறியவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறக்கும்.

    புரந்தரகேசவலு தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்துகாட்டியிருக்கிறான். நிறைவான தொடர் நிறைவைத் தந்தது. பாராட்டுகள் வை.கோ.சார். அடுத்து பொழியவிருக்கும் அமுதமழைக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி July 25, 2013 at 12:56 AM

      //நிறைவான தொடர் நிறைவைத் தந்தது. பாராட்டுகள் வை.கோ.சார். அடுத்து பொழியவிருக்கும் அமுதமழைக்காகக் காத்திருக்கிறேன். //

      தங்களை முதன்முதலாக இன்று புகைப்பட்த்தின் மூலம் பார்த்தது, நேரில் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியை அளித்தது. ;)))))

      தங்களின் தொடர் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
    2. நன்றி வை.கோ.சார்.

      Delete
  3. ”அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் என்று இல்லை, அறிவுக்கும் அப்படியே என்பதே பாரதீயர்கள் கடைப்பிடித்த உன்னத நெறி.”

    நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.//

    உயர்ந்த அமுதமொழி . போதும் என்ற மனநிலை இல்லை என்றால் தரித்திரர்கள் தான்.

    சிறிய வயதில் அது வேண்டும், இது வேண்டும் என்ற ஆசிகள் இல்லாமல் உயர்ந்த, உன்னதமான மோட்சநிலையை புரந்தரகேசவலு கேட்டது சிறுவயதில் அவரின் மனப்பக்குவத்தை காட்டுகிறது.
    குருவின் அருளால் மோக்ஷபேறு பெற்று விட்ட புரந்தரகேசவலு எல்லோர் மனதிலும் நிறைவாய் இருப்பார்.
    நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.




    ReplyDelete
  4. அபூர்வமான அனுபவம்.

    ReplyDelete
  5. புரந்தர கேசவலுக்கு பிறவி இல்லா வாழ்வு தந்த மஹா பெரியவாளின் தபோ பலம் போற்றுதற்குரியது! இந்திய பண்பாடு குறித்த கருத்துக்களும் சிறப்பு! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. //நம் வரையறைகளை [LIMITATIONS] புரிந்துகொண்டு, நம்முடைய அறிவுரை [ADVISE] எங்கே எடுபடுமோ, அங்கே மட்டும் நல்லது பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வது தான், நம்மாதிரி சாதாரண நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.//

    அமுதமொழியாயிற்றே.. இனிக்கிறது.

    ReplyDelete

  7. அமுத மழை தொடரும் என்பதில் மகிழ்ச்சி. கோபு சார் நீங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அற்புதம்...

    அமுத மழையில் நனைய காத்திருக்கிறேன்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. //நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.//

    அருமையான வரிகள்....

    புரந்தரகேசவலுவிற்கு மறுபிறப்பு இருக்கப்போவதில்லை எனத் தெரிந்து மகிழ்ச்சி......

    சிறப்பான தொடருக்கு நன்றி.

    ReplyDelete
  10. //ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா போன்ற மஹான்கள் நினைத்தால் செய்ய முடியாத அற்புதங்களும் உண்டோ?// Unmai!

    ReplyDelete
  11. //ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா போன்ற மஹான்கள் நினைத்தால் செய்ய முடியாத அற்புதங்களும் உண்டோ?// Unmai!!

    ReplyDelete
  12. ”அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் என்று இல்லை, அறிவுக்கும் அப்படியே என்பதே பாரதீயர்கள் கடைப்பிடித்த உன்னத நெறி.”

    பாரதப்பண்பாடு பற்றி பகிர்வுகள் அருமை..
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. நம் வரையறைகளை [LIMITATIONS] புரிந்துகொண்டு, நம்முடைய அறிவுரை [ADVISE] எங்கே எடுபடுமோ, அங்கே மட்டும் நல்லது பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வது தான், நம்மாதிரி சாதாரண நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.

    வரையறை தாண்டிய அறிவுரைகள்
    கேலிச்சித்திரமாக கேவலமாக மதிப்பை இழக்கும் ..

    ReplyDelete
  14. பன்னிரண்டு வயதுச் சிறுவனின் நாவிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டது அந்த பரப்பிரம்மம்.

    எத்தனை ஆச்சரியமான மனமுதிர்ச்சி ..!
    மாடு மேய்த்திடும் சிறுவன் மதிப்பில் உயர்கிறான் ..!

    ReplyDelete
  15. நம் வரையறைகளை [LIMITATIONS] புரிந்துகொண்டு, நம்முடைய அறிவுரை [ADVISE] எங்கே எடுபடுமோ, அங்கே மட்டும் நல்லது பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வது தான், நம்மாதிரி சாதாரண நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.//
    உண்மைதான்! அருமையான தத்துவம்!

    //ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா போன்ற மஹான்கள் நினைத்தால் செய்ய முடியாத அற்புதங்களும் உண்டோ?//

    மெய் சிலிர்த்தது! பகிர்விற்கு நன்றீ ஐயா!


    ReplyDelete
  16. மோக்ஷத்தையே நெனச்சுண்டு அவதிப்பட்டிருக்கான். ..

    தன் அனுக்ரஹ அமிர்தத்தை வர்ஷித்து பிறவிப்பெருங்கடலை நீந்தாமலேயே [அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல - அடுத்தடுத்து ஆறு பிறவிகள் எடுக்காமலேயே] புரந்தரகேசவலு இறைவன் திருவடிகளை அடையுமாறு செய்தவர் நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள்.[நமஸ்காரங்கள்..!

    ReplyDelete
  17. இந்த பதிவை படித்த‌தும் மெய் சிலிர்த்தது..தொடருங்கள் ஐயா!!

    ReplyDelete
  18. நம் வரையறைகளை [LIMITATIONS] புரிந்துகொண்டு, நம்முடைய அறிவுரை [ADVISE] எங்கே எடுபடுமோ, அங்கே மட்டும் நல்லது பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வது தான், நம்மாதிரி சாதாரண நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்
    Very very correct. Elderly persons must know this.

    What a lucky fellow is he?
    Who else will get a moksham like this.
    Pranams to Periyava.
    viji

    ReplyDelete
  19. புரந்தர கேசவலுவுக்கு மோக்ஷம் கிடைத்து விட்டது.
    புண்ணிய ஆத்மா ! அவனுக்கு மஹா பெரியவரே அதை கிடுமாறு செய்து விட்டார்.
    அருமையான தொடர்.....

    ReplyDelete
  20. புரந்தரகேசவலுக்கு மோட்சம் கிடைத்தாலும் நம்மை கண்கலங்க வைத்துவிட்டது இளம் வயது மரணம்...

    அருமையான தொடர்,

    ReplyDelete
  21. It is really very very sad, though Purandhakesavalukku got the moksha it is sad...
    Thank youvery much sir for sharing...

    ReplyDelete
  22. பாகவதத்தில் வரும் நாவல் பழக்காரியின் நினைவு வந்தது. நாவல் பழத்திற்கு கண்ணன் அரிசி கொடுத்த போது எனக்கு மோட்சம் கொடு என்று கேட்டு வாங்கியவள் போல புரந்தலு ஜகத் குருவிடம் மோட்சம் கேட்டு பெற்றுக் கொண்டார் போலும்!
    //வேணும் வேணும் என்று நினைக்கிறவரையில் நாம் எல்லோரும் தரித்திரர்களே// என்ன அழுத்தமான வார்த்தைகள் படிப்பவர் மனதை கூறு போடும் சொற்கள்!

    ReplyDelete
  23. "கத்தி'யில் ஆரபித்த அந்த வைகோவா இது?
    இப்போ "கதி' பற்றிய ஞான போதனயாய் விஸ்வரூபம் எடுத்திருகிறீர்கள்.
    நான் நிறைய உங்களின் பதிவுகளை படிக்காமல் (அந்த பேறு இன்றி) இருந்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. ”அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் என்று இல்லை, அறிவுக்கும் அப்படியே என்பதே பாரதீயர்கள் கடைப்பிடித்த உன்னத நெறி.”

    இனியொரு பிறவி வேண்டாம் என்ற புரந்தரகேசவலுக்கு சின்ன வயதில் மரணம். சிந்திக்க வேண்டிய விஷயம். நன்றி அய்யா

    ReplyDelete
  25. படித்து மெய்சிலிர்த்துத்தான் போனோம். நல்ல ஆத்மாவுக்கு பெரியவாள் அநுக்கிரகத்தில் மோட்சம் கிடைத்தது.

    "நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே." நல்ல சிந்தனை.

    ReplyDelete
  26. //மறுஜன்மா இல்லாமல் செய்ய இதுபோன்ற மிகச்சிறந்த மஹான்களின் தபோவலிமையினால் மட்டுமே முடியும்.//

    உண்மைதான். புரந்தர கேசவலு போன்ற தொண்டர்களின் பெருமை சொல்லவும் முடியுமோ? நேரடியாக குருவின் திருவருள் வாய்க்கப் பெற்றிருந்தார் அல்லவா! அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  27. குருவின் திருவருள் பெற்றவர்கள் எல்லாம்
    பாக்கியவான்களே
    அவர்களுக்கு நரகமேது மறுபிறப்பேது
    மனதுக்கு இதம் தரும் அருமையான தொடர்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. \\நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.\\

    திருப்தி இல்லாதவர்களுக்கு என்றுமே வாழ்வில் நிறைவு இருக்காது.

    படித்த, பண்பாளர்கள் கூட அடுத்த பிறவியில் இப்படிப் பிறக்க வேண்டும், அப்படிப் பிறக்க வேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு பனிரெண்டு வயது சிறுவன் பிறவா வரம் வேண்டும் என்று கேட்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆச்சரியம்.

    புரந்தர கேசவலு எடுக்க வேண்டிய ஆறு பிறவிகளை ஜபத்தால், தன் அருளால் தீர்த்த மகா பெரியவாளின் கருணையே கருணை. மெய் சிலிர்க்கிறது.

    ReplyDelete
  29. வாளைஎப்போதும் பத்திரமாக
    உறையில்தான்
    போட்டு வைக்க வேண்டும்


    அதை எப்போது எடுக்கவேண்டுமோ
    அப்போதுதான் அதை வெளியில் எடுத்து பயன்படுத்தவேண்டும்

    பயன்படுத்தியபிறகு
    அதை சுத்தப்படுத்தி உள்ளே வைத்துவிடவேண்டும்

    அதைபோல்தான் அறிவும்

    பிறருக்கு அறிவுரை வழங்குவதற்கு முன்
    பலமுறை யோசிக்கவேண்டும்.

    அதனால்தான் அறிவை உறையில் வைத்து பத்திரமாக உபயோகிக்கும்போருட்டே இறைவன் மனிதனின் நாக்கை 32 பற்கள் காவல் காக்கும்படி வைத்துள்ளான்.

    ஆனால் நாம்தான் நம் அகந்தையின் காரணமாக பாதுகாப்புகளை மீறி பிறருக்கு துன்பத்தை கொடுக்கிறோம் நாமும் துன்பத்தில் சிக்கிகொள்கிறோம்

    தவளை தான் இருக்கும் இடத்தை சத்தம் போட்டே பாம்பிற்கு காட்டிகொடுத்து மாய்கிறது.

    அதனால்தான் மௌனம்
    பல நேரங்களில். நம்மை காக்கிறது.

    மகான்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள்
    அனைத்தும் மனித குலம் உய்வதர்க்காகவே

    அதை மனதில் நிறுத்தி நம் வாழ்வை செம்மைபடுத்திகொள்ளவேண்டும்.

    ReplyDelete
  30. நம்முடைய அளவு என்று கூட ஒன்று இருக்கிரது. லிமிட் தாண்டினால் தண்டனைதான் கிடைக்கும். நல்ல வயதானவர்களுக்கு அனுபவத்தினைல் இது ஓரளவு புரிந்திருக்கும். போதும் என்ற மனமே
    பொன் செய்யும் மருந்து.புரந்தர கேசவலுக்கு பண்பை அவன் தகப்பனார்
    போதித்தார். இருந்தாலும் வழி மொழி நடந்து, அமரத்தைப் பெற்றதுதான் அதிசயம். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வளவையும் எழுதவில்லை. எப்பேர்ப்பட்ட குரு. எல்லோருக்கும் கிடைக்குமா? வேண்டும்,வேண்டும் என்று நினைப்பது கடவுளின் பக்தியே. இதுதான் பண்பானதும். அன்புடன்

    ReplyDelete
  31. சிறுவனின் கதையும் பெரியவரின் அருளும் வியப்பாக இருந்தாலும்,சற்று பயமாகவும் இருக்கு.

    ReplyDelete
  32. //மறுஜன்மா இல்லாமல் செய்ய இதுபோன்ற மிகச்சிறந்த மஹான்களின் தபோவலிமையினால் மட்டுமே முடியும்// நிச்சயமாக...

    புரந்தரகேசவலுவுக்கு மோட்சம் கிடைக்க செய்த பெரியவாளின் அனுக்ரஹமே மெய்சிலிர்க்க வைத்தது.

    ReplyDelete
  33. அன்பின் வை.கோ - இந்தியப் பண்பாடு பதிவு அருமை - புரந்தர கேசவலுக்கு மோட்சம் வாங்கித்தந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் கருணைக்கு அளவே இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  34. //நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.
    // போதும் எனும் மனமே......

    இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது...

    ReplyDelete
  35. சிறுவனுக்கு மோக்ஷப் பிராப்தி கிடைத்து விட்டது குறித்து ஆனந்தம் அடைகிறேன்.

    ReplyDelete
  36. சிறுவனுக்கு மோஷம் கிடைக்க ஆசார்யா எவ்வளவு பிரயத்னபட்டிருக்கா

    ReplyDelete
  37. அந்த புள்ளக்காக குருசாமி ரொம்ப கருண காட்டிருக்காங்க. எந்த எடத்துல என்ன நடந்தாலும் இவுகளுக்கு எப்பூடிதேன் தெரியவருதோ

    ReplyDelete
  38. அந்த பையனுக்கு மோட்சம் கிடைக்க ஸ்வாமிகளே பிரார்தனை பண்றாங்கன்னா எவ்வளவு உன்னதமான விஷயம்.

    ReplyDelete
  39. தன் உயிரே போவதாக இருந்தாலும், அறிவை எங்கிருந்தாலும் பெறப்பாடுபடுவது. அதே மாதிரி தன் உயிரையே எடுக்கக் கூடியவனாக இருந்தாலும் தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பது இதுதான் இந்தியப்பண்பாடு/// இப்படி எடுத்து குரு சொன்னால்தான் சிலருக்காவது புரிகிறது...

    ReplyDelete
  40. புரந்தரகேசவலுவின் இந்த நிகழ்வை எத்தனை முறை படித்திருக்கிறேன். இதுவும், பெரியவா, தன் ஜ்வரம் தீர சகஸ்ர'நாம பாராயணை பண்ணின சம்பவமும், சர்க்கரைப் பொங்கலுக்காக நடந்த தேப்பெருமா'நல்லூர் சம்பவமும் எப்போதும் மறக்க இயலாதவை.

    ReplyDelete
    Replies
    1. 'நெல்லைத் தமிழன் October 18, 2016 at 6:05 PM

      வாங்கோ, வணக்கம்.

      //புரந்தரகேசவலுவின் இந்த நிகழ்வை எத்தனை முறை படித்திருக்கிறேன். இதுவும், பெரியவா, தன் ஜ்வரம் தீர சகஸ்ர'நாம பாராயணை பண்ணின சம்பவமும், சர்க்கரைப் பொங்கலுக்காக நடந்த தேப்பெருமா'நல்லூர் சம்பவமும் எப்போதும் மறக்க இயலாதவை.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
  41. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (07.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/409663309536369/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete