About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, June 7, 2014

VGK 19 / 02 / 03 - SECOND PRIZE WINNER - ’எட்டாக்க(ன்)னிகள்’

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 19 - ’ எட்டாக்க(ன்)னிகள்  ’


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-19_23.html


 


    + எட்டிய MONEYகள் மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  மூன்றுஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  மூவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:     


இனிப்பான இரண்டாம்  


பரிசினை வென்றுள்ளவர்  
முனைவர் திருமதி இரா. எழிலி சேஷாத்ரி  


அவர்கள்
 இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


முனைவர் திருமதி இரா. எழிலி சேஷாத்ரி  அவர்களின் விமர்சனம் இதோ: 
எட்டாக்க(ன்)னிகள் - விமர்சனம்


பாரதிராஜா அறிமுகப்படுத்தும் கிராமம் போன்று முதலிலேயே ‘எட்டாக்க(ன்)னிகள்’ கதை தொடங்குகிறது. சாதாரணமாகக் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கும்பல் இருக்காது. தற்போது தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் அவ்விடங்களில் பல பெருகி வருவதால் அதிக கும்பல் (குறிப்பாக இளம்பெண்கள்) ஒன்று வேலை நிமித்தமாகவோ (அ) கல்லூரிப் பிராஜெக்ட் (அ) டிரைனிங் எனப் பயணப்படுவது வாடிக்கையாகிவிட்டது. பெண்கள் என்றாலே மலர்கள்; மணமுடைய மலர்கள் பயணத்தில் வாசம் ஏற்படுத்தியதில் வியப்பில்லை.


கதாநாயகன் வாயிலாக கதாநாயகியைப் பற்றிய வர்ணனை, அந்த இளம் வயதுபெண்கள் கூட்டத்தில் ஒருத்தி மட்டும் ஒட்டடைக்குச்சி போல அசாதாரண உயரம். குதிரை முகம். மோட்டு நெற்றி. அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி வேறு. எலி வால் போன்று குட்டையாகக் கொஞ்சூண்டு தலைமுடி மட்டுமே. ஒரே நிதான உயரமுள்ள மற்ற பெண்களுடன் இவள் சேர்ந்திருப்பது, ஏதோ அழகிய வாத்துக்கூட்டங்களின் நடுவே, கொக்கு ஒன்று நிற்பது போலத்தோன்றியது எனக்கு. .


இத்தகைய வர்ணனையைப் படித்தவுடன் இயல்பாகவே படிப்பவரின் ஊகத்திற்கு கதாநாயகனின் உருவ அமைப்பை ஓடவிட்டு, ஆறடி உயரத்தில் அழகான அரவிந்த்சாமியைக் கண் முன் நிறுத்துகிறார்.


இதற்கு வலு சேர்க்கும் வகையில் கதாநாயகியை வர்ணித்ததுடன் இப்படியும் ஓர் அழகற்ற படைப்பா? என அனுதாபப்பட வைத்தது வேறு.
பின், ”அவள் வலிய வந்து உரையாடியதில் ஒரு வித இரசாயன மாற்றம் ஏற்பட்டு“ என முப்பத்து ஐந்து வயது என அனுமானிக்கமுடியாத ஐ.எஸ்.ஐ பிரும்மச்சாரி விவரிக்கையில் சற்றும் ஐயமே எழவில்லை அந்த உருவம் குறித்து.


மணிகேட்டு, காவிரி நதி நீர் பிரச்சினை பற்றி பேசி, என மிகவும் இயல்பாக நட்பு வளர்ந்து காதலாகி பரிணமிக்கும் வேளை அதைக் கதாநாயகன் கோடிட்டு காட்டியது பொங்கியெழும் இளமை உணர்ச்சிகளையும், ஓடிவரும் நதி நீரையும் ஒருவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது கட்டுக்கடங்காமல் வெள்ளமாய்ப் பாய்ந்து வரும். தாகமும் மோகமும் தீர அனுபவிப்பது அனைவரின் பிறப்புரிமையே” மிகவும் சிறப்பு.


அழகற்ற ஒருவருக்கு அனுதாபத்தினால் தான் வாழ்வளிக்க வந்ததாக எண்ணியதுடன் அவளும் அதை ஆமோதிப்பதாய் எண்ணி “ஒரு கை ஓசையை” எழுப்ப எண்ணியது இயல்பே. அவள் பஸ்ஸில் சில்லரை கொடுத்து உதவியதும் தன் காதலை ஆமோதிப்பதாய் உணரப்பட்டு கடிதம் எழுத வைத்தது என ஒவ்வொன்றிலும் மிகவும் படிப்படியாய் வெகு இயல்பாய் அமைத்த விதம் அழகு.


“அவள் வருவாளா?” என விழிமேல் வழி வைத்து பார்க்கையில் அவள் வராமல் போன போது வருந்தும் எண்ண ஓட்டங்கள் எல்லாமே இயற்கையாய் கதையோடு ஒன்றி விடுகிறது.


இயற்கையாகவே எண்ணங்களைக் கடிதம் வாயிலாக வெளிப்படுத்துவது என்பது சற்று எளிதாகத் தோன்றுவதால் முத்து முத்துக் கையெழுத்தில் எழுத எத்தனித்ததில் அவருடைய சிரத்தை தெரிகிறது. ஆனால் அந்தக் கடிதத்தைச் சேர்க்கமுடியாமல், மீண்டும் மீண்டும் தானே படித்து ஆனந்தப்படுவதும் பின் கசங்கியதால் வேறு பிரதி எடுத்து பத்திரமாய் கவரில் வைத்து எடுத்துச் செல்வதும் அழகிய நடையில் விரிகிறது.


அவளது வாத்துக் கூட்டத்தில் ஒரு வாத்து அவளுடைய கடிதத்தை அளித்தபோது அதைப் பத்திரப்படுத்தி, முத்தமிட்டு அவளது நிச்சயதார்த்த விழா அழைப்பைப் பார்த்து, அழகே இல்லாத அவளை அவளது அத்தைப் பையன் மணக்க இருப்பதாக அறிதல்
“உருவு கண்டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னா ருடைத்து”
என உணர்த்துகிறது.


நமக்குள் ”ஐயோ பாவம்” இவ்வளவு நல்ல மனதுடன் அழகற்ற அவளுக்கு வாழ்க்கை அளிக்க வந்தவர் முன்பே,
“Make hay while the sun shines”
(அ) 
அவள் நெகிழ்ந்ததாய் இவர் கருதிய தருணத்தில்
“Strike while the iron is hot”
என்று செயல்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 


ஒருவேளை கதாநாயகியின் முடிவே வேறாக இருந்திருக்கலாம்?
ஆனால் எல்லாவற்றிற்கும் மணிமகுடம் வைத்தாற்போல் மூன்று அடி மூன்று அங்குல உயரமே உள்ள ஒருவரின் படத்தையும் போட்டு அவர் நம்மை இந்த அளவு பீடிகையின் விளிம்பிற்கே அழைத்துச் சென்று ஒரே போடாய் உடைத்த விதம் “Highly Commendable” எனலாம்.


இனி பிரும்மச்சாரி பற்றிய விளக்கம் மிக அருமை; இனி நான் சொல்ல விழைவதெல்லாம் அனுதாப அலையை காட்சிப் பேழையைச் சற்றே கதாநாயகன் புறம் நகர்த்தி 
“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும்
கல்யாண மாலை!
இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே
தேவன் அன்று!”
என்பதே!!

எட்டிய MONEYகள் விமர்சனம்

கோடிக்கணக்கில் பணம் சேர்த்து விட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில், இப்பவோ அப்பவோ காலன் வரும் வேளை காகிதப்பணம் குறித்தக் கவலை கணவனுக்கு.


“காசு, பணம், துட்டு, money, money”, அது படுத்தும் பாடு வியக்க வைக்கிறது.


தான் இறக்கும்போது தன்னுடனேயே புதைக்கும் படி கணவன் கேட்டதற்கிணங்க கோடியை ஆயிரம் ரூபாய்களாக மாற்றி அவருடைய பழைய டைரிகள் என ஏமாற்றி அவரைப் புதைத்த குழியிலேயே புதைத்து விட்டு வந்தவுடன் மனைவியிடம் அவளுடைய தம்பி சந்தேகமாய் கேட்டதற்கு

”நானா பணத்தின் மதிப்புத் தெரியாதவள்?
நானா பைத்தியக்காரி?
போடா போக்கத்தவனே .....
நான் அவருடன் சூட்கேஸில் அனுப்பியுள்ள தொகை
By way of Cheque  மட்டுமே;
அதுவும் ’Account Payee only’ என்று ’Special Crossing’ செய்யப்பட்டது.
அதுவும் Payable .... in favour of 'MY BELOVED HUSBAND', only ;
அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே வங்கியிலிருந்து
எடுக்க முடியாது;
ஏன் அவரே கூட இனி அந்தப் பணத்தை எடுக்க முடியாது;
பைத்தியக்காரா, நான் உன் அக்கா.......டா;
உனக்கு முன்னாலேயே பிறந்தவளாக்கும்” என்றாள்.


இதை படித்தபோது எதை நொந்துகொள்வது என்றே புரியவில்லை!!
“போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைப் படைத்தானே” எனப் பாடத் தோன்றுகிறது.


“சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”!!


கதைப் படைப்பு அருமை!!

நன்றி!!

 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
       


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை 

இந்த ஒருவருக்கு மட்டுமே  

முழுவதுமாக வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:’ VGK 21 - மூக்குத்தி ‘
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 12 . 06 . 2014இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

22 comments:

 1. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
  முனைவர் திருமதி இரா. எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. திருமதி சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. இரண்டாம் பரிசு கிடைத்தது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த தங்களுக்கும் தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும், வாழ்த்துரைத்த /வாழ்த்தப்போகும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

  ReplyDelete
 4. இரண்டாம் பரிசினை வென்ற முனைவர். திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 5. திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன்

  ReplyDelete
 6. இந்த வெற்றியாளர், முனைவர் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினை அவரின் கணவர் திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். இணைப்பு இதோ:

  http://esseshadri.blogspot.com/2014/06/blog-post_7.html

  அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 7. பரிசு பெறும் திருமதி.எழிலி சேஷாத்ரிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். மிக அருமையாக விமரிசித்திருக்கிறார். வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. உற்சாகமான இந்தப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசினை வென்ற எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .நல்ல நல்ல படங்களைத் தேடிக் கண்டு பிடித்து பகிர்வினை வியந்து பார்க்கும் வண்ணம் பகிரும் படைப்பாளியான தங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் ஐயா .

  ReplyDelete
 9. இரண்டாம் பரிசு பெற்றுள்ள முனைவர் திருமதி இரா. செழிலி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பரிசுகள் பெறவும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. முனைவர் திருமதி. இரா. எழிலி சேஷாத்ரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. வெற்றியாளருக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 12. முனைவர் திருமதி. இரா. எழிலி சேஷாத்ரி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. திரு V.G.K அவர்களின் 19 – ஆவது சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாவது பரிசினை வென்ற, சகோதரி முனைவர் திருமதி இரா.எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. அருமையான விமர்சனம். இரண்டாம் பரிசு பெற்ற திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 15. இரண்டாம் பரிசினை வென்ற எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 16. பரிசு வென்ற திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 17. இரண்டாம் பரிசினை வென்ற திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)

   Delete
 18. பரிசு வென்ற எழிலி சேஷாத்திரி மேடமவங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. திருமதி எழிலி சேஷித்ரி வாழ்த்துகள். விமரிசனம் நல்லா இருக்கு.

  ReplyDelete
 20. பரிசினை வென்றுள்ள திருமதி எழிலி சேஷித்ரி வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. என் மனைவி பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது!வாழ்த்துகள்!

  ReplyDelete