என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 13 ஜூன், 2014

VGK 20 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’முன்னெச்சரிக்கை முகுந்தன்’
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 20 - ’ முன்னெச்சரிக்கை முகுந்தன்மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து


இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:       நடுவரின் குறிப்பு


தேர்வான ஒவ்வொரு விமரிசனக் கட்டுரையையும் வெளியிடும் பொழுது கதாசிரியரே எந்தக் கதைக்கான விமரிசனம் இது என்று வாசிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்படி அந்தக் கதையின் சுட்டியை தலைப்பிலேயே கொடுத்து விடுகிறார்.  

அப்படியிருக்க தாங்கள் விமரிசிக்கும் விமரிசனத்திலும் அந்தக் கதையையே மறுபடியும் narrate பண்ணுகிற மாதிரி நீங்கள் விமரிசன வரிகளை அமைக்க வேண்டுமா?...

இது உங்கள் விமரிசங்களை வாசிக்கிற வாசக அன்பர்களுக்கு  சலிப்பேற்படுத்தும் இல்லையா?..

கதாசிரியரின் கதை வரிகளை எடுத்தாண்டு  சீராட்டிச் சிறப்பிப்பதோ சிந்திக்க வைப்பதோ இல்லை அந்தக் கதையைப் படித்ததினால் தனக்கு என்ன உணர்வேற்பட்டது என்பதை கதாசிரியருக்கே தெரியப்படுத்துவதோ நல்ல விமரிசனம் ஆகும் தான்; ஒப்புக்கொள்கிறேன்.

அதற்காக தாங்கள் எழுதும் விமரிசனக் கட்டுரையிலும் மீண்டும் அந்தக் கதையையே கோர்வையாகச் சொல்வது விமரிசனங்களின் தகுதிச் சிறப்பைக் குறைவு படுத்தும், இல்லையா?..

உங்கள் விமரிசனத்தை வாசிக்க வரும் அன்பர்கள் எல்லாம் எந்தக் கதைக்கு நீங்கள் விமரிசனம் எழுதுகிறீர்களோ அந்தக் கதையை அதன் வெளியீட்டு நிலையிலேயே ஏற்கனவே படித்தவர்கள் தாம்.  பின்னூட்டம் கூட போட்டவர்கள் தாம்.  அப்படியிருக்க படித்த கதையையே உங்கள் விமரிசனத்திலும் மீண்டும் படிக்க விரும்ப மாட்டார்கள், இல்லையா?..

விமரிசனங்கள் எழுதுவோர் இனி எழுதவிருக்கும் விமரிசங்களிலாவது இந்தக் குறைப்பாட்டை சீர்படுத்திக் கொள்ள விழைகிறேன்.

உங்கள் எழுத்துக்கு நீங்களே நீதிபதி.  அந்த நிலையில்  உங்கள் எழுத்து  அமைய வேண்டுகிறேன்.   அது இந்த மாதிரியான வேறு எந்த போட்டியிலும் உங்கள் வெற்றியை நிச்சயப்படுத்தும்.விமர்சனப்போட்டியில் பங்குகொள்வோருக்கு பயனுள்ள 
வழிகாட்டுதல்களை எடுத்துச் சொல்லியுள்ள 
உயர்திரு நடுவர் அவர்களுக்கு முதற்கண் 
என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

பிரியமுள்ள கோபு [VGK]


   மூன்றாம் பரிசினை முத்தாக வென்றுள்ளவர் 
திருமதி


 கீதா சாம்பசிவம்  


அவர்கள்
 வலைத்தளம்: ’எண்ணங்கள்’

sivamgss.blogspot.in
 

முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ளதிருமதி


 கீதா சாம்பசிவம்  


அவர்களின் விமர்சனம் இதோ:


முன்னே எல்லாம் வயசானா ஞாபகமறதினு சொல்வாங்க.  இப்போல்லாம் அப்படி இல்லை. எந்த வயசானாலும் மறதி சகஜமாப் போயிருக்கு.  அப்படி இருக்கும்போது ஐம்பது வயதுக்கு மேலான முகுந்தனுக்குக் கேட்கவே வேண்டாம்.  அவசரக்காரர், படபடப்புக்காரர்.  அதோடு உடல்நலக்குறைவும் கூட. அலுவலகம் எடுத்துச் செல்லும் பொருட்களைக் கூட முன் கூட்டியே தயார் செய்து எடுத்து வைக்கும் பழக்கம். ஆனால் இந்தப் பழக்கம் பெரும்பாலோரிடம் உள்ளது.  பள்ளி செல்லும் குழந்தைகள் முதல்நாளே ஷூவுக்கு பாலிஷ் போட்டு, யூனிஃபார்ம் அயர்ன் பண்ணி எடுத்து வைத்து, மறுநாளையப் பாடத்திட்டத்துக்கு ஏற்பப் புத்தகங்களையும் தயார் செய்து வைத்துவிட்டுப் படுக்கச் சென்றால் தான் மறுநாள் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் எதையும் மறக்காமல் இருக்க முடியும்.  

இங்கே முகுந்தனும் அப்படியே தயார் செய்துக்கிறார்.  கூடவே மாற்று உடைகளும், அதுக்கு இங்கே சொல்லப்பட்டிருக்கும் காரணம் வேறாக இருந்தாலும் பல அலுவலகம் செல்லும் ஆண், பெண்களும் இப்படி ஒரு மாற்று உடையை அலுவலகத்தில் வைத்திருப்பார்கள் தான். கொஞ்ச நாட்கள் அலுவலகம் போய்க் குப்பையைக் கொட்டியதில் இதை நானும் கண்டிருக்கிறேன்.  உடை கிழிந்து போகும் என்று இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் மட்டுமின்றி, மழைக்காலத்தில் ஈர உடையோடு இருப்பதைத் தவிர்க்கும் வண்ணமாகவும் ஒரு மாற்று உடை கட்டாயமாய் இருக்கும். இவை எல்லாமே நல்ல முன்னேற்பாடுகளே. குறை சொல்ல முடியாதவையே. ஆனாலும் இந்த அதீத முன்னெச்சரிக்கை அவரை எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது என்பதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகுதையா!

ஆனால் இந்த நிகழ்ச்சி நடக்கும் தினம் சனிக்கிழமை அரை நாள் விடுமுறையில் வீட்டுக்கு வரும் முகுந்தன்  மறுநாள் பிள்ளைக்குப் பெண்பார்க்கவேண்டி சென்னைக்குப்பல்லவனில் கிளம்ப வேண்டும்.  பல்லவன்  வண்டி தினமும் காலை ஆறரை மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பும்.  சனிக்கிழமை மத்தியானம் வீட்டுக்கு வந்தவர் கொண்டு போகவேண்டிய சாமான்களைச் சரி பார்த்துவிட்டு உணவு உண்டுவிட்டுத் தூங்கப் போகிறார்.  இங்கே தான் எனக்கு முதல்முறையாக இடித்தது. அவர் தூங்கச் சென்றதோ மதிய நேரம்.  என்னதான் தூங்கினாலும் மணி 5-30 என்று பார்க்கையில் அது காலையா, மாலையா எனப் பார்க்கவில்லை. அவ்வளவு நேரம் தூங்கி இருப்போமா என்னும் சந்தேகம் கூட அவருக்கு எழவில்லை.  அவ்வளவு ஆழ்ந்த நித்திரை. ஒரு விதத்தில் கொடுத்து வைத்தவரும் கூட.  தன்னை மறந்து தன் நிலை மறந்து தூங்கினாரெனில் அவர் மனம் எவ்வளவு நிஷ்களங்கமாக எவ்வித சிந்தனைகளுமின்றி இருந்திருக்க வேண்டும்!  ஆனால் முதல்நாள் மத்தியானம் படுத்தவர் அப்புறமா எழுந்ததாகச் சொல்லவே இல்லையே?  என்ன இருந்தாலும் அத்தனை நேரமா ஒருத்தர் தூங்கி இருப்பார் என எனக்கு சந்தேகம் வந்தது என்னமோ உண்மை!  கிட்டத்தட்டப் பதினேழு, பதினெட்டு மணி நேரமா உறங்கி இருப்பார்!   அதெல்லாம் அவருக்கு இருந்த அவசரத்தில் தோணவே இல்லை. 

மெய்ம்மறந்த தூக்கத்திலிருந்து மழைச்சாரல் பட்டு விழித்தவருக்குக் கால நிலை புரியவில்லை.  மணி 5-30 என்பதும், ஊருக்குப் போக வேண்டும் என்பதுமே நினைவில் இருக்கிறது.  முதல்நாள் மதியம் படுத்தோம் என்பதெல்லாம் அவர் நினைவிலேயே இல்லை போலிருக்கிறது.  அதோடு மழைக்கால இருட்டு வேறு வானத்தை மூடி இருக்கிறது. ஆகவே  அன்று தான் கிளம்பவேண்டிய நாள் என நினைத்து, குளிக்கக் கூட அவகாசமில்லை எனப் பல், கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு, பெட்டியை எடுத்துக்கொண்டு ரயிலுக்குத் தயாராகக் கிளம்பி விடுகிறார். செல்லும்போதே மழை தொடரும் என்பதும் தெரியவர, இவ்வளவு நேரம் கழித்துக் கிளம்பி இருக்கும் தாம் திருச்சி சென்றால் ரயிலைப் பிடிக்க முடியாது என்பதால் ஶ்ரீரங்கம் ஸ்டேஷனுக்குச் செல்லவேண்டி ஆட்டோ பிடித்து ஶ்ரீரங்கம் செல்கிறார். சரியாக ஆறரைக்கே அங்கே சென்று விடுகிறார்.  குளிருக்கு இதமாக காஃபி ஒன்றைச் சாப்பிடுகிறார்.   

6-45 ஆகியிருந்தும் இன்னும் இருட்டாகவே இருந்ததோடல்லாமல் ஸ்டேஷனிலும் யாரும் இருந்திருக்க மாட்டாங்களே!  அதைக் கூடக் கவனிக்கவில்லை இவர் அவசரத்திலும் பதட்டத்திலும். அங்கிருந்த ரயில்வே ஊழியரிடம் பல்லவன் இந்த ப்ளாட்ஃபார்ம் தானேனு கேட்கவே, அவனோ ராத்திரி ராக்ஃபோர்ட் தான் வருமென்றும், பல்லவன் மறுநாள் காலைதான் எனவும் சொல்லவே தூக்கிவாரிப் போட்ட முகுந்தன் ரயில்வே ஸ்டேஷன் கடிகாரத்தைப் பார்த்தால்.  முன்னிரவு ஏழு மணி என்பதை 19-00 எனக் காட்டிக் கொண்டு சிரிக்கிறது அது.

ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர் போலிருக்கு.  அதனால் அன்றைய தின ராசிபலனில் வெட்டிச் செலவு, அலைச்சல்னு போட்டிருந்தது உடனே நினைவுக்கு வரத் தன்னைத் தானே சமாதானமும் செய்து கொள்ள அது ஒரு காரணமாகவும் ஆகிறது.  தான் பகலில் படுத்துத் தூங்கியதில் எழுந்திருக்கும்போது மாலை  5-30 என்பதை மறுநாள் காலை 5-30 என்று நினைத்துக் குழம்பிவிட்டதையும், மறுநாள் பிடிக்க வேண்டிய ரயிலை முதல் நாளே பிடிக்க வேண்டித் தான் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதையும் நினைத்து அவருக்கு இப்போது அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.  முன்னெச்சரிக்கை முன்னெச்சரிக்கை எனத் தான் பாடுபட்டு முன்னெச்சரிக்கையாக இருந்தது ரொம்பவே ஓவராப் போய்விட்டது என்றும் புரிந்தது.  அதுக்கப்புறமா அவர் வீட்டுக்குப் போயிருப்பார்.  கதையில் அதெல்லாம் சொல்லலை தான்.  என்றாலும் நாமே நினைச்சுக்கணும்.  எனக்கு என்ன கவலைன்னா, மறுநாள் பிடிக்க வேண்டிய பல்லவனை அவர் ஒழுங்காப் பிடிச்சாரா என்பது தான்.

அதோடு இன்னொரு விஷயமும் இதிலே இருக்கிறது.  ரயில்வே, பேருந்துப் பயணங்கள், விமானப் பயணங்கள் ஆகியவற்றில் இரவு 12-00 மணியிலிருந்து மறுநாள் தேதி ஆரம்பிப்பதால் இரவு 12--05 என்றால் கூட மறுநாள் தேதியில் தான் டிக்கெட் கொடுத்திருப்பார்கள்.  அதை வைத்து நாம் அந்தத் தேதியன்று இரவு போனோமானால் பயணத்தை மேற்கொள்ள முடியாது.  உதாரணமாக மே ஒன்பதாம் தேதி இரவு 12--05 என்றால் எட்டாம் தேதி இரவே நாம் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் எட்டாம் தேதி இரவு பனிரண்டுக்குப் பின்னர் தேதி ஒன்பது ஆக மாறி விடும்.  இந்தத் தேதிக் குழப்பத்தில் பலரும் விமானப் பயணத்தைக் கூடத் தவற விட்டிருக்கின்றனர்.  ஆகவே இதை நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.


 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
       


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:’ வடிகால் ‘
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 19. 06. 2014


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

19 கருத்துகள்:

 1. நறுக் - சுருக் என்று சிறப்பான விமர்சனம்.
  3-ஆம் பரிசு வென்ற கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள
  திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு
  இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 3. உங்கள் எழுத்துக்கு நீங்களே நீதிபதி. அந்த நிலையில் உங்கள் எழுத்து அமைய வேண்டுகிறேன். அது இந்த மாதிரியான வேறு எந்த போட்டியிலும் உங்கள் வெற்றியை நிச்சயப்படுத்தும்.

  பயனுள்ள நடுவர் குறிப்புகளுக்கு நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 4. திருமதி கீதா சாம்பசிவம் அம்மா அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  உயர்திரு நடுவர் அவர்களின் முத்தான கருத்திற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 5. அருமையான விமர்சனம்! மூன்றாம் பரிசினைப் பெற்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்குப் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 6. முத்தான மூன்றம் பரிசை
  வென்ற திருமதி . கீதா சாம்பசிவம்
  அவர்களுக்கு பாராட்டுக்களும்,
  வாழ்த்துக்களும் !

  பதிலளிநீக்கு
 7. உண்மையில் பரிசு பெற்ற மகிழ்ச்சியை விட அதற்கு நான் தகுதியா என்ற கேள்வியே ஒவ்வொரு முறையும் எழும். இம்முறையும் அதுவே! ஆச்சரியம் தான். :)))) வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam June 14, 2014 at 1:54 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உண்மையில் பரிசு பெற்ற மகிழ்ச்சியை விட அதற்கு நான் தகுதியா என்ற கேள்வியே ஒவ்வொரு முறையும் எழும்.//

   தாங்கள் முற்றிலும் தகுதியானவரே என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதே ! இதுவரை நடைபெற்ற 20 போட்டிகளில் 7 முறை வெற்றி பெற்று பரிசு வாங்கியுள்ளீர்கள் போலிருக்கே !

   மிகக்கடுமையான + திறமையான + பாரபட்சமற்ற நடுவர் அவர்களிடம் தங்கள் எழுத்துக்கள் ONE THIRD வெற்றிகளை எட்டியுள்ளது என்றால் அது என்ன சாதாரண எழுத்துக்களா !!!!!

   சும்மா ஜகத்ஜோதியாக அல்லவா பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறீர்கள் ! எழுத்துப்பிழைகளே கொஞ்சமும் இல்லாமல் அடைஅடையாக பக்கம் பக்கமாக சலிப்பில்லாமல் எழுதுவது என்பது எல்லோராலும் முடியக்கூடிய காரியமா என்ன ?

   தங்களின் ஆர்வத்திற்கும், ஈடுபாட்டுக்கும், விடா முயற்சிகளுக்கும் தலை வணங்கத்தான் வேண்டும்.

   வாழ்த்துகள்.

   //இம்முறையும் அதுவே! ஆச்சரியம் தான். :)))) வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.//

   எங்களுக்கு குறிப்பாக எனக்கு இதில் ஆச்சர்யமே எதுவும் இல்லை. ;)))))

   அன்புடன் கோபு

   நீக்கு
 8. http://sivamgss.blogspot.in/2014/06/blog-post_9057.html
  திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்

  இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 9. நல்லதொரு விமர்சனமெழுதி மூன்றாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள திருமதி கீதா சாம்பசிவம் மேடத்துக்கு இனிய வாழ்த்துக்கள்.

  நடுவர் அவர்களின் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. அடுத்தடுத்த விமர்சனங்களில் நேர்த்தியைக் கொண்டுவர இவை உதவும்.நடுவர் அவர்களுக்கும் இப்படியொரு அற்புதமான போட்டியின் மூலம் தயங்கும் பலரின் எழுத்துத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் கோபு சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நல்ல விமர்சனம்.....

  மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 12. பரிசு வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. மூன்றாம் பரிசினை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. பரிசு வென்ற கீதா சாம்பசிவம்மேடமவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. திருமதி கீதாசாம்பசிவம் வாழ்த்துகள். விமரிசனம் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 16. //அதுக்கப்புறமா அவர் வீட்டுக்குப் போயிருப்பார். கதையில் அதெல்லாம் சொல்லலை தான். என்றாலும் நாமே நினைச்சுக்கணும். எனக்கு என்ன கவலைன்னா, மறுநாள் பிடிக்க வேண்டிய பல்லவனை அவர் ஒழுங்காப் பிடிச்சாரா என்பது தான்.// சரிதான்....ரசித்தேன்.வாழ்த்துகள் சகோதரி..

  பதிலளிநீக்கு
 17. அருமையான விமர்சனம்! மூன்றாம் பரிசினைப் பெற்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்குப் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு