About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, June 21, 2014

VGK 21 / 03 / 03 - THIRD PRIZE WINNER ........... மூ க் கு த் தி
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 21 - ’ மூ க் கு த் தி 


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21.html
 

 

 

 


 
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  


ஐந்து


இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:     முத்தான மூக்குத்தியாக மூன்றாம் 

பரிசினை வென்றுள்ளவர்
திருமதி இராஜராஜேஸ்வரி  அவர்கள்


http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna" 


முத்தான மூக்குத்தியாக 

மூன்றாம் பரிசினை வென்றுள்ள


திருமதி.


 இராஜராஜேஸ்வரி  அவர்களின் விமர்சனம் இதோ:

 

மூக்குத்தி என்கிற ஜொலிக்கும்  தலைப்பும் அதனை பிரதானப்படுத்தும் அழகிய 

படங்களும் கதையை வலுவாக்குகின்றன..

தன்னந்தனியே தள்ளாத வயதில் மூக்குத்தி வாங்கப்போன  முதியவர் அதுவும் கிராமத்தைச்சேர்ந்தவர் என்று ஆரம்பிக்கும் போதே மன்னர்கள் காலத்தில் காவல்காரர்கள் பாரா உஷார் பாரா உஷார் என்று எச்சரிக்கைக்குரல் கொடுப்பதுபோல படிப்பவர்களும் எச்சரிக்கை அடைந்து கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்..

படி பத்திரம் .. படி பத்திரம் என்று தடியால் தட்டி திருட்டைத் தவிர்க்கும் காவல் பணியாளர்கள் போலவும், உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு என்று பாடி நிலைமை விளக்கி பொருட்களை பத்திரமாக வைத்திருக்க அறிவுறுத்துவதும் உண்டு.

 நகை, பணம் பத்திரம் என்று திருடர்களும் கூவுவது உண்டு பஸ்ஸில் .. பலர் தன்னை அறியாமல் பணம் வைத்திருக்கும் இடத்தையும், நகைகளையும் தடவிப்பார்த்துக்கொள்ளும் நேரத்தில் அவற்றின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் புத்திசாலிகள்..

என்ன தான் காலம் மாறி இருந்தாலும் பாதுகாப்பதில் கிராமத்து முதியவர்களை  மிஞ்ச முடியாது என்பதை ஆசிரியர் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்..

பொருளாதார அவலம் தங்கத்தின் விலையில் நாற்பது ஆண்டுகளில் நூறு விழுக்காடு அதிகரித்திருப்பதையும், தன் மனைவிக்கு இரட்டைவடச்சங்கிலி வாங்கிய விலையில் இன்று எடை அதிகமில்லாத லேசான மூக்குத்தி வாங்கவே செலவாவதையும் எண்ணி நம்மையும் பெருமூச்சு விடவைக்கிறார்.. 

தங்கம் விலை மேலும் உயரும் என்ற நம்பிக்கையில் வாங்கித்தள்ளுகிறார்களோ எனவும் வியக்கிறார்..

பணவீக்கம், மக்களின் வாங்கும் சக்தி உயர்வு, என பொருளாதாரப் புள்ளிவிவரங்களையும் தரத்தவறவில்லை கதை ஆசிரியர்..

காற்றைப்போல் பறந்து விடும் பொருட்களை வாங்கி அணிய விரும்பும் மக்களின் விருப்பங்களின் மாற்றமும் மிக நேர்த்தியாக சொல்லி மனம் கவர்கிறார் கதை ஆசிரியர்..

பலமாடி அங்காடிகளும் பெருகி இருப்பதையும் அவற்றில் திருவிழாக்கூட்டமாக மக்கள் நிரம்பி ஏதாவது வாங்கியே ஆகவேண்டும் என்கிற சங்கல்பம் போல வாங்கிக்குவிக்கும் சந்தை நிலவரத்தையும் அருமையாகக் காட்சிப்படுத்துவது நிதர்சனத்தைப்படம் பிடித்துக் காட்டுவதாக அமைகிறது..

பொருள்களை பெறும் இடத்தில் இலவசமாகக்கொடுக்கப்படும் பரிசுகளுக்காக அந்த இலக்கை எட்ட மீண்டும் வாங்க அலையும் மனநிலை வியாபாரிகளின் எப்படியாவது லாபம் பார்ப்பது ஒன்றே குறிக்கோள் என்ற நடைமுறை சிந்தனையுடன் எப்படியும் ஏமாற்றுவது என்று அலைவதையும்  பிடித்துக்காட்டி இருப்பது சிறப்புதான்.....

நகை வாங்கும் இடத்திலும் பிரசன்னமாகி திருட்டுப்பயம் பற்றி எச்சரிக்கை செய்து ஜாக்கிரதையாக இருக்க சொல்கிறான் அவன்....  

சாப்பிடும் இடத்தில் மூக்குத்தியும் மொத்தப்பணமும் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் முடிந்துகொண்ட உஷாரான நடவடிக்கை அந்த வெட்டிப்பையன் புளியங்க்கொட்டை சட்டை எதிர்பார்த்திருக்கமாட்டான் தானே.!

குடையை வாங்கி பஸ்ஸின் ஜன்னல் வழியே போட்டு இடம்பிடித்துத் தந்த தந்திரம் என்ன! 

பிளேடு போட்டு காலி மூக்குத்தி டப்பாவை அபேஸ் செய்தது யார்? / யார்?? 

சிதறுகாய் போட சென்ற இடத்தில் மூக்குத்திப்பெட்டி சிதறிக்கிடந்ததைப் பார்க்கும்வரை, அந்த பையன் மேல் சந்தேகப்படாத பெரியவரின் பாத்திரப்படைப்பு கவனத்தை ஈர்க்கிறது..

பாம்பும் சாகாமல் தடியும் உடையாமல் தனக்கு உதவி செய்வதாக வந்த தன் ஊர் பக்கம் தான் என்று சொல்லி வலிய உதவி செய்யும் புளியங்கொட்டை கலர் சட்டை கதாபாத்திரத்திற்கு சந்தேகத்தின் பலனை அளித்து அவன் திருடனாயிருக்கமுடியாது என்று நம்பி இல்லத்திற்கு அழைத்து மோராவது குடிக்க உபசரிக்கும் வெள்ளந்தியான மனிதரைப்பார்த்து பிள்ளையார் மட்டுமா ஆனந்தக்கண்ணீரை வான் மழையாகப் பொழிந்து மின்னல், இடியுடன் கட்டியும் கூறினார்?? !

கொட்டும் முரசாக தண்டோரா சத்தமாக, மகிழ்ச்சி மின்னலாக நமக்கும் வெற்றிச்சத்தம் கேட்கிறதே..

கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தி ஒளி கப்பலுக்கு வழிகாட்டி கரை சேர்த்தாற்போல கதை ஆசிரியரின் கிராமத்து முதியவரின் சமயோசிதமான நடவடிக்கைகள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என உணரவைக்கின்றன..

பதற்றமில்லாத நிதானமான முதியவர் பத்திரமாக மூக்குத்தியையும் மொத்த பணத்தையும் பெட்டியில் பத்திரப்படுத்தும் நேர்த்தி படிப்பவர்களுக்குப் பாடமாக அமைகிறது.. 

விழிப்புணர்வு மிக்க செயல்கள், செய்யும் செயலில் முழுமையான கவனம், நிதானமான செயல்பாடுகள் போன்றவை ஏமாற்றுக்காரரகளிடமிருந்து பாதுகாக்கும் வழிமுறை என அறிவுறுத்துகிறது..

கதை ஆசிரியர் நிதியைக்கையாள்வதில் கைதேர்ந்த நுணுக்கமான பணியில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தவராயிற்றே.. எனவே ஆழ்ந்து யோசித்து சமயோசிதமாக கச்சிதமாக செயல்பட்டு நேர்த்தியான கதைமைப்புடன் நிகழ்த்தியது அனுபவ  பாடமாக அமைகிறது..

மறக்க முடியாத பாத்திரப்படைப்புகள்.. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என நிறுவுகிறது கதை..

இந்தக்காலத்தில் பணம் சம்பாதிப்பதை விடவும் அதை பாதுகாப்பதில் ஒருமுகப்பட்ட  கவனம்   அவசியம் என்பதை அறிகிறோம்..

கொட்டும்மழையில் ஆனந்தமாக அசையும் கரங்கள் நிஜமாக நிதர்சனத்தில் நிறைகிறது.. இடிச்சத்தம், தண்டோரா முழக்கம் இவற்றோடு படிப்பவர்கள் கைதட்டல் சத்தமும் கலக்கிறது..
 
மனம் நிறைந்த பாராட்டுக்கள்  


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


    
  


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:VGK-23

 ! 
 யாதும் ஊரே யாவையும் கேளிர் விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 

26 . 06 . 2014இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

30 comments:

 1. மூன்றாம் பரிசினை அளித்தமைக்கு நடுவர் அவர்களுக்கும், ஜொலிக்கும் வைரமாய் போட்டியை நடத்தும் ஆசிரியர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 2. மூன்றாம் பரிசினை வென்றுள்ள சகோதரியார் இராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பெரியவரின் பாத்திரப்படைப்பு அருமை... மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

  ReplyDelete
 4. COMMENTS FOR THIS POST, GIVEN BY Mr. E.S.SESHADRI WRONGLY ROUTED AND RECORDED IN MY PREVIOUS POST, IS REPRODUCED BELOW:

  Seshadri e.s.June 21, 2014 at 7:43 AM
  *****கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தி ஒளி கப்பலுக்கு வழிகாட்டி கரை சேர்த்தாற்போல கதை ஆசிரியரின் கிராமத்து முதியவரின் சமயோசிதமான நடவடிக்கைகள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என உணரவைக்கின்றன..*****

  அருமை! பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்குப் பாராட்டுகள்! தொடரட்டும் பரிசு மழை!

  ReplyDelete
 5. அழகான விமர்சனத்தோடு மூன்றாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு அன்பான பாராட்டுகள்.

  ReplyDelete
 6. //பாம்பும் சாகாமல் தடியும் உடையாமல் தனக்கு உதவி செய்வதாக வந்த தன் ஊர் பக்கம் தான் என்று சொல்லி வலிய உதவி செய்யும் புளியங்கொட்டை கலர் சட்டை கதாபாத்திரத்திற்கு சந்தேகத்தின் பலனை அளித்து அவன் திருடனாயிருக்கமுடியாது என்று நம்பி இல்லத்திற்கு அழைத்து மோராவது குடிக்க உபசரிக்கும் வெள்ளந்தியான மனிதரைப்பார்த்து பிள்ளையார் மட்டுமா ஆனந்தக்கண்ணீரை வான் மழையாகப் பொழிந்து மின்னல், இடியுடன் கட்டியும் கூறினார்?? !

  கொட்டும் முரசாக தண்டோரா சத்தமாக, மகிழ்ச்சி மின்னலாக நமக்கும் வெற்றிச்சத்தம் கேட்கிறதே..// அருமையான விமர்சனம்! பரிசுபெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடத்திற்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

  ReplyDelete
 7. பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. வாவ்வ்வ்வ் இங்கு ராஜேஸ்வரி அக்காவுக்கு மூன்றாம் இடமோ.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... இத்தோடு விடாதீங்க ராஜேஸ்வரி அக்கா.. வைரம் பதிச்ச காப்பும் கூடாவே கேட்டிடுங்கோ இப்பவே:).

  அதெதுக்கு எப்பவுமே ராஜேஸ்வரி அக்காவின் பெயர் போட்டாலே கூடவே ரெண்டு யானையையும் போட்டு விடுகிறார் கோபு அண்ணன்... :) இதுக்கு என் வன்மையான கண்டனங்கள்... :)

  ReplyDelete
  Replies
  1. athira June 22, 2014 at 2:46 AM

   வாங்கோ அதிரா, வணக்கம்.

   //வாவ்வ்வ்வ் இங்கு ராஜேஸ்வரி அக்காவுக்கு மூன்றாம்
   இடமோ..//

   எவ்வளவோ முறை முதலிடமும், இரண்டாம் இடமும்
   பெற்றுள்ளார்களாக்கும். அதையெல்லாம் பார்க்கத்
   தங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே .... அதிரா ! ;(

   இதுவரை நடந்த VGK-01 to VGK-20 போட்டிகளில்
   அதிகப்பரிசுத்தொகையினை வென்றுள்ள
   ஒட்டுமொத்த வெற்றியாளர்களில் இரண்டாம் இடம்
   வகிக்கிறார்களாக்கும். ;)

   இதுவரை மும்முறை ஹாட்-ட்ரிக் அடித்து ஹாட்-ட்ரிக்
   வெற்றியாளர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்களாக்கும் ! ;)

   //வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...//

   அக்காவை வாழ்த்தியுள்ள அன்புத்தங்கச்சிக்கு என் பாராட்டுக்கள் + நன்றிகள்.

   //இத்தோடு விடாதீங்க ராஜேஸ்வரி அக்கா.. வைரம் பதிச்ச
   காப்பும் கூடாவே கேட்டிடுங்கோ இப்பவே:).//

   ஆஹா, அந்த நாளும் வந்திடாதோ என நினைக்கத்
   தோன்றுகிறதே ....... அதிரா.

   ஆனால் அவர்களுக்கு அதிரா போல எதையுமே என்னிடம் கேட்கத்தெரியாதூஊஊஊஊஊ.

   ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
   நல்லவங்களாக்கும். கொங்கு நாட்டுக் கோவைத் தங்கமாக்கும் ;)))))

   //அதெதுக்கு எப்பவுமே ராஜேஸ்வரி அக்காவின் பெயர்
   போட்டாலே கூடவே ரெண்டு யானையையும் போட்டு
   விடுகிறார் கோபு அண்ணன்... :) //

   நல்ல கேள்வி அதிரா ! தங்களின் அன்பு அக்கா நேற்றுவரை 1312 பதிவுகள் கொடுத்திருக்காங்கோ. அந்த 1312
   பதிவுகளிலும் கோபு அண்ணனின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. **

   அதுபோல கோபு அண்ணன் இதுவரை [நேற்றுவரை] வெளியிட்டுள்ள பதிவுகள்: 566. அவை அனைத்திலும் உங்கள் அன்பு அக்காவின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. **

   IN FACT அவர்களை சிறப்பிக்க இந்த இரண்டு யானைகளே பத்தாதாக்கும். ;)

   //இதுக்கு என் வன்மையான கண்டனங்கள்... :)//

   ** இதுபோன்று ஒரு தனிச்சிறப்பினை வேறு யார் பதிவுகளிலாவது, இந்தப்பதிவு உலகினில்
   உங்களால் காட்டமுடியுமா அதிரா?

   உங்களால் முடியவே முடியாது அதிரா ! சேலஞ்ச்
   செய்கிறேன்.

   அதனால் தங்களின் வன்மையான கண்டனங்களை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

   அன்புடன் கோபு அண்ணன்

   Delete
 9. முத்தான மூன்றம் பரிசை
  வென்ற திருமதி . இராஜராஜேஸ்வரி
  அவர்களுக்கு பாராட்டுக்களும்,
  வாழ்த்துக்களும் !

  ReplyDelete
 10. அன்பின் இராஜ இராஜேஸ்வாரி - சிறுகதை விமரசன்ப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - தங்களீன் விமர்சனம் அருமை - படித்து மகிழ்ந்தேன் -

  சிதறுகாய் போட சென்ற இடத்தில் மூக்குத்திப்பெட்டி சிதறிக்கிடந்ததைப் பார்க்கும்வரை, அந்த பையன் மேல் சந்தேகப்படாத பெரியவரின் பாத்திரப்படைப்பு கவனத்தை ஈர்க்கிறது..

  விமர்சனத்தினையும் முத்தாக எழுதிய தங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

  பாராட்டுகள் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 12. அன்பின் வை.கோ மற்றும் அதிரா

  இருவரும் மறுமொழிப் போராட்டம் நடத்தி ஜமாய்த்து விட்டீர்கள் - அத்தனையையும் படித்து மகிழ்ந்தேன். அருமையிலும் அருமை.

  இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 13. அன்பின் வை.கோ மற்றும் அதிரா

  இருவரும் மறுமொழிப் போராட்டம் நடத்தி ஜமாய்த்து விட்டீர்கள் - அத்தனையையும் படித்து மகிழ்ந்தேன். அருமையிலும் அருமை.

  பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. அன்பின் வை.கோ - தங்களீன் 566 பதிவுகளீன் அன்புச் சகோதரி இராஜ இராஜேஸ்வரியின் மறுமொழிகள் இடம் பெற்றிருப்பதாக புள்ளீ விவரம் அளித்த அதிராவிற்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா) June 22, 2014 at 1:39 PM

   வாங்கோ அன்பின் திரு சீனா ஐயா, வணக்கம் ஐயா.

   //அன்பின் வை.கோ - தங்களின் 566 பதிவுகளிலும் அன்புச் சகோதரி இராஜ இராஜேஸ்வரியின் மறுமொழிகள் இடம் பெற்றிருப்பதாக புள்ளி விவரம் அளித்த அதிராவிற்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   அதிரடி அதிராவுக்கு புள்ளிவிபரங்கள் கொடுத்தது நான். ஆனால் தங்களின் பாராட்டுக்கள் அதிராவுக்கா !

   OK OK அதிர்ஷ்டக்காரி அதிரா ! வாழ்க !! ;)))))

   Delete
 15. அன்பின் அதிரா மற்றும் வை.கோ

  இராஜ இராஜேCSவரியின் 1312 பதிவுகளிலும் வை,கோ வின் மறுமொழிகள் இருப்பதாக பொறுமையாகக் கணக்கெடுத்து - புள்ளி விவர மறுமொழி இட்ட அதிராவிற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா) June 22, 2014 at 1:41 PM

   //அன்பின் அதிரா மற்றும் வை.கோ

   இராஜ இராஜேஸ்வரியின் 1312 பதிவுகளிலும் வை,கோ வின் மறுமொழிகள் இருப்பதாக பொறுமையாகக் கணக்கெடுத்து - புள்ளி விவர மறுமொழி இட்ட அதிராவிற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ !

   இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் ஆளில்லையே !

   அட்டகாச, அலம்பல், அசத்தல். அதிரடி அதிரா திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாளின் 1312 பதிவுகளுக்கும் போய் பொறுமையாக என் மறுமொழிகளைக் கணக்கெடுத்தார்களா?

   அவர்கள் நினைத்தாலும் அது மட்டும் நடக்கவே நடக்காது ஐயா.

   அவர்கள் மட்டுமல்ல யார் முயற்சித்தாலும் அது மட்டும் நடக்கவே நடக்காது, ஐயா.

   ஏனெனில் நான் அவர்களுக்கு இதுவரை இட்டுள்ள பின்னூட்டங்கள், வானத்தில் உள்ள நக்ஷத்திரங்கள் போல எண்ணில் அடங்காதவை என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன், ஐயா.

   ”ஆயிரம் நிலவே வா ....... ஓர் ஆயிரம் நிலவே வா” அல்லவா அவர்கள். மறந்துட்டீங்களா .... இதோ இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

   அன்புடன் VGK

   Delete
 16. மூன்றாம் பரிசு பெற்ற ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களூக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 18. இராஜராஜேஸ்வரி மேடத்துக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
 19. ராஜராஜேஸ்வரிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். தொடர்ந்து பரிசு பெற்றவர்கள் வரிசையில் அவர் இடம்பெறவும் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 20. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 21. திருமதி இராஜராஜேஸ்வரி மேடத்துக்கு பாராட்டுகள்

  ReplyDelete
 22. மூன்றாம் பரிசு பெற்ற ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya October 23, 2015 at 3:00 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //மூன்றாம் பரிசு பெற்ற ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   Delete
 23. திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. //பதற்றமில்லாத நிதானமான முதியவர் பத்திரமாக மூக்குத்தியையும் மொத்த பணத்தையும் பெட்டியில் பத்திரப்படுத்தும் நேர்த்தி படிப்பவர்களுக்குப் பாடமாக அமைகிறது.. // அதுதானே கதையின் ஹைலைட்..ரசித்தேன்.

  ReplyDelete
 26. கொட்டும் முரசாக தண்டோரா சத்தமாக, மகிழ்ச்சி மின்னலாக நமக்கும் வெற்றிச்சத்தம் கேட்கிறதே..// அருமையான விமர்சனம்! பரிசுபெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடத்திற்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

  ReplyDelete