About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, June 27, 2014

VGK 24 - தா யு மா ன வ ள்இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 03.07.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 24

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

’தாயுமானவள் ’

சிறுகதைத்தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச் சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீய்ச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.   


  

 


ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள அரசமரப் பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டும், இனிய சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் முதலியன தயாரிக்கப்பட்டும் ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


 


வேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள், கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக! 


 


  


முனியாண்டி தன் தொழிலில் மும்முரமாக இருக்கும் நேரம். அவனைச்சுற்றி ஒரே மழலைகள்கூட்டம். கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன், கூடிய பெரியதொரு குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள கலர் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள், நீர் நிரம்பிய பலூன் பந்துகள், ஊதினால் மகுடிபோல் ஆகி குழந்தை அழுவதுபோல சப்தமெழுப்பி பிறகு ஓயும் பலூன்கள், ஆப்பிள், பறங்கி, பூசணி, புடலங்காய் போன்ற பல்வேறு வடிவங்களில் பலவிதமான கலர்களில் பலூன்கள் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் விதமாக. அவனைச் சுற்றி நின்ற குழந்தைகளுக்கோ ஒரே குதூகலம். 


முனியாண்டியின் உள்ளத்தில் ஓர் உவகை.    இன்று எப்படியும் மாரியம்மன் அருளால் முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆக வேண்டும். டாக்டர் சொன்ன தொகை மூவாயிரத்துக்கு இந்த முன்னூறு மட்டுமே பாக்கி. கடந்த மூன்று வருடங்களாக நினைத்து ஏங்கிய ஒரு காரியம் நிறைவேறப்போகிறது. மனைவி மரகதத்தை எப்படியும் மகிழ்விக்க வேண்டியது அவன் கடமை.

காலையிலிருந்து நாஸ்தா செய்யக்கூட நேரமில்லை முனியாண்டிக்கு. நாக்கு வரண்டு விட்டது.  நீர் மோரை ஒரு குவளையில் வாங்கி ஒரே மடக்காகக் குடித்துவிட்டு, பலூன்களை ஊதுவதும், ஊதியவற்றைக் கயிறு போட்டுக்கட்டுவதும், கேட்பவர்களுக்குக் கேட்பவற்றை எடுத்துக்கொடுத்து வியாபாரம் செய்வதும், காசை வாங்கி ஜோல்னாப்பையில் போடுவதும் என அவனின் பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.


இத்தகையத்  தேர்திருவிழாக்களில், முனியாண்டியைச் சுற்றி எப்போதும் குழந்தைகளின் கூட்டம்.  ஆனாலும் தனக்கென இதுவரை ஒரு வாரிசு உருவாகவில்லையே என்ற ஏக்கம் உண்டு முனியாண்டிக்கு. திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஏழு ஆண்டுகள் உருண்டோடிப் போய் விட்டன.

மரகதமும் தன்னால் முடிந்த கூலி வேலைகளுக்குப்போய், சம்பாதித்து வரும் அன்பான அனுசரணையான மனைவி தான்.  முனியாண்டியும் மரகதமும் மனம் ஒத்த மகிழ்வான தம்பதிகளே. கஞ்சியோ கூழோ இன்பமாகப் பகிர்ந்துண்டு, கடன் ஏதும் இல்லாமல் காலம் தள்ளிவரும் ஜோடிகளே. காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை.  

திடீரென்று அடுத்தடுத்து பெரிய வேட்டுச்சத்தங்கள். குழந்தைகள் அனைவரும், தங்கள் காதைப்பொத்திக்கொண்டு, பலூன்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இங்கும் அங்கும் ஓடுகிறார்கள். போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நடுரோட்டில் யாரும் நிற்காதபடி கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். முனியாண்டியும் ரோட்டின் ஒரு ஓரத்திற்குத் தள்ளப்படுகிறான். கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று பலூன்கள் பட்பட்டென வெடித்துச் சிதறுகின்றன. 

தேரில் அம்மன் தெருமுனைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டுக்கொண்டு தேர் வடத்தை எப்படியாவது தொட்டுக்கும்பிட முண்டியடித்து வருகின்றனர். 

அர்ச்சனை சாமான்களுடன் அலைமோதும் பக்தர்கள் முன்னுரிமை எடுத்துக்கொண்டு தேரின் நடுவே நெருங்க, கையில் அதை அப்படியே வாங்கி தேங்காயை மட்டும் தன் கை அரிவாளால் ஒரே போடு போட்டு குருக்கள் அவர்களிடம் எம்பியபடி அனுப்பி வைக்க ஒருசிலர் தேரில் தொங்கிக்கொண்டிருந்தனர். கட்டிக்கட்டியாக சூடம் அம்மனுக்குக் கொளுத்திய வண்ணமாக இருந்தனர். மிக முக்கியமான தெரு முனையானதால் தேர் நகரவே மிகவும் தாமதம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. 

வியர்த்துக்கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும் ஆட்களில் சிலர், கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கியும், ஆங்காங்கே உள்ள ஒரு சில கிணறுகளில் தண்ணீர் இழுத்து மொண்டும், தங்கள் தலைகளில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர். வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த மாரியம்மனுக்கே வெளிச்சம்.  

”பலூன்காரரே! இந்தப்பாப்பாவைக்கொஞ்சம் பார்த்துக்கோ! பத்தே நிமிடத்தில் தேரிலுள்ள அம்மனைச்சற்று அருகில் சென்று கும்பிட்டுவிட்டு ஓடியாறேன்”  என்று மின்னல் வேகத்தில் சொல்லிச்சென்ற கைலிக்காரனின் முகம் கூட மனதில் சரியாகப்பதியவில்லை முனியாண்டிக்கு.

குழந்தை முகம் மட்டும் பளிச்சென்று, அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது.

நல்ல அழுக்கேறிய ஒரு ஆடை [கெளன்] ; கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள்; காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள்; காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.

பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.  


”கொஞ்சம் பொறுத்துக்கும்மா, இப்போ அப்பா வந்துடுவாரு” என்றான் முனியாண்டி.

”அப்பாவும் அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களாமே! எப்படி இப்போ வருவாங்க? என்றது அந்தப்பெண்குழந்தை.

அதைக்கேட்ட முனியாண்டிக்குத் தலை சுற்றியது.

”உங்க வீடு எங்கம்மா இருக்கு” என்றான்.

”நாகப்பத்திணம். (நாகைப்பட்டிணம் என்பதை மழலையில் சொல்கிறது) நான் ஸ்கூல் விட்டு ஆட்டோவில் திரும்ப வீட்டுக்கு வருவதற்குள் அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.

”இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா” முனியாண்டி அவள் கண்களை தன் வேட்டித் தலைப்பால் துடைத்து விட்டு, பரிவுடன் வினவினான்.

”அவரு யாருன்னு எனக்குத்தெரியாது அங்கிள்; அவரு தான் எங்க ஊர்லேந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்கே உங்கள்ட்டே விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பஸ்ஸிலே வரும்போதே பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிட எதுவுமே வாங்கித்தராம பயமுறுத்திக்கிட்டே வந்தாரு. அவரு வெரி வெரி பேடு [BAD] அங்கிள்” என்றது அந்தப்பெண் குழந்தை.

சுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது. 

தேர் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் இருந்த “ராமா கஃபே” என்ற ஹோட்டலுக்குக் குழந்தையைக் கூட்டிச்சென்றான்.

சுற்றிமுற்றிப்பார்த்தும், அந்தத் தேர்த்திருவிழாக் கும்பலில் அந்தக் கைலிக்காரனை முனியாண்டியால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

சூடான சுவையான இரண்டு இட்லிகளை மட்டும் சாம்பார் சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த குழந்தையின் முகத்தில் ஓர் புதுப்பொலிவு.

“பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.

முனியாண்டிக்கு இது ஒரு இனம் புரியாத பேரின்பத்தையும், அதே நேரம் இந்தக் குழந்தையை நான் என்ன செய்வது? என்ற கவலையையும் அளித்தது.

அம்மனின் தேர் அந்த முச்சந்தியையும், அந்த ”ராமா கஃபே” ஹோட்டலையும் தாண்டி நகரத்தொடங்கியதில், அந்தப்பகுதியில் சற்றே கூட்டம் குறைந்திருந்தது.

குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே, தேரின் பின்புறமாகச் சற்று தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் கைலிக்காரனையும் தன் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான் முனியாண்டி.

தன் வயிற்றுப்பசிக்கு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர்ப் பந்தல்களில் கிடைத்த நீர்மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோவொன்றை வாங்கிக்குடித்து வந்தான் முனியாண்டி. 

ஆசையுடன் தன் கையில் பெரிய பலூன் ஒன்றை இறுக்கிப்பிடித்து நடந்து வந்த குழந்தைக்கு, நல்லதொரு ஸ்வீட்டான ”பலூன்அங்கிள்’ கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.

ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்தது அந்தக்குழந்தை.

மதியம் மூன்று மணி. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. அம்மன் தேர், உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தாண்டி,  “சாரதாஸ்” ஜவுளிக்கடலுக்கும், “மங்கள் மங்கள்”  நகைக்கடலுக்கும் இடையே, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.

உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் புகுந்து, குழந்தையுடன் மாணிக்க விநாயகர் சந்நதியை அடைந்தான், முனியாண்டி.


 

  


மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.

அங்குள்ள குருக்கள் ஐயா ஒருவர் தொன்னையில் சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு, அந்தக்குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அநேகமாக விற்றுத்தீர்ந்திருந்தன. 

தன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப்படுக்க வைத்தான். தானும் தன் வியாபாரப்பொருட்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.  

குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது.  அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான். 

  

குழந்தையின் அருகே உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த முனியாண்டியை, ஐந்து மணி சுமாருக்கு பக்தர் ஒருவர் உடைத்த சதிர் தேங்காய்த்துண்டு ஒன்று தெரித்துத் தட்டி எழுப்பியது. அங்கிருந்த குழாய் நீரில் தன் முகத்தைக்கழுவிய முனியாண்டி, குழந்தையுடன் படிவாசல் பிள்ளையாராகிய மாணிக்க விநாயகரை வணங்கி விட்டு, தெப்பக்குளத்தையும் வலமாகச் சுற்றி வந்து, அப்போது தான் தேரில் நிலைக்கு வந்து சேர்ந்துள்ள வாணப்பட்டரை மாரியம்மனை மிக அருகில் சென்று வணங்கி விட்டு, தன் வீடு நோக்கிப்புறப்பட்டான்.

தெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கெளன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தையுடன் நுழைந்தான்.சூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்த மரகதம், குழந்தை ஒன்றுடன் வந்துள்ளத் தன் கணவனை, தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு பார்வை பார்க்கும் போதே, குழந்தை விஜியோ “அ..ய்..ய்..யா.....தோசை ! மம்மி .... மம்மி ....  ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ... எனக்கு ஒரு தோசை வேணும் .... தருவீங்களா?”  எனச்சொல்லி வெட்கம் கலந்த ஆசையுடன், தன் பிஞ்சு விரல்களைக் குவித்தபடி தன் கையை நீட்டியது.    

குழந்தையை ஒருவித வாஞ்சையுடன் தன் மடியில் அமர்த்திக்கொண்ட மரகதம், தோசையை அதற்கு ஊட்டிக்கொண்டே, அதன் கதை முழுவதையும் முனியாண்டி சொல்லச்சொல்ல கவனத்துடன் கேட்டுக்கொண்டாள்.


ஆசையுடன் தோசை சாப்பிட்டு முடித்த குழந்தையை பாய் ஒன்றைத் தட்டிப்போட்டு படுக்க வைத்தபின், மேற்கொண்டு இந்தக்குழந்தையை நாம் என்ன செய்வது என இருவரும் நெடுநேரம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்துப் பேசிக்கொண்டிருந்ததில், நள்ளிரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

காலையில் எழுந்த குழந்தைக்கு உடல் அனலாகக் கொதித்தது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. அழ ஆரம்பித்தது. முனியாண்டியும், மரகதமும் என்னவெல்லாமோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றனர்.

“காஃபி, டீ ... ஏதாவது வாங்கி வரட்டா? உனக்கு என்னடாக் கண்ணு வேணும்? ஏன் அழுவறே? என்று பரிவுடன் பரிதவித்துப்போய்க் கேட்டனர். 

”எனக்கு ஒண்ணும் வேணாம். என்னயத்தான் போலீஸ் ஸ்டேஷன்லே கொண்டுபோய் விடப்போறீங்களே! நேத்து ராத்திரி நீங்க பேசிட்டு இருந்தீங்களே! நான் உங்க கூடவே இருக்கேனே .... ப்ளீஸ் ... என்னய நீங்க எங்கேயும் கொண்டுபோய் விட்டுடாதீங்க .... ப்ளீஸ் ... ப்ளீஸ்” எனக்கெஞ்ச ஆரம்பித்தக் குழந்தையின் மேனியும் நடுங்கிக்கொண்டிருந்தது.


குழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா? அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்.

குழந்தைத்தலைக்கு எண்ணெய் தடவி, படிய தலைவாரி, ரிப்பன் கட்டி, புதுச்சொக்கா போட்டு விட்டாள், மரகதம்.

திருவிழாவில் பலூன் விற்ற பணத்தை எண்ணி முடித்த முனியாண்டி, ”செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய, அந்த டாக்டரம்மா நம்மிடம் கேட்டிருந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்து விட்டது தாயீ!” என மரகதத்திடம் சொல்லிவிட்டு, எப்போது நாம் டாக்டர் அம்மாவைப் பார்க்கப்போகலாம்?” என வினவினான்.”இதோ பாருய்யா, மச்சான்! அந்த வாணப்பட்டரை மகமாயீ, மாரியாத்தாளே இந்தப்பச்சப்புள்ளைய, நமக்கே நமக்குத்தான் சொந்தம்னு இந்தத் தேர் திருவிழாவிலே கொடுத்திருக்கும் போது, நமக்கு இப்போ இன்னொரு குழந்தை எதுக்குய்யா வேணும்?; 

இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.

திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை ஆசையுடன் அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.  


  

  oooooOooooo

இந்தச் சிறுகதை சுனாமி என்ற இயற்கைப் பேரிடர் 
தமிழகத்துக்கு வந்து மனித சமுதாயத்தையே 
உலுக்கிவிட்டுச்சென்ற பின்பு 
2005 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்டது.

இது தான் என் வாழ்க்கையில் 
நான் எழுதிய முதல் சிறுகதையாகும்.

பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய 
சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதையும்கூட.

அடியேன் மேலும் மேலும் எழுத ஒரு பலத்த 
அஸ்திவாரமாக அமைந்ததும்
பரிசுக்குத்தேர்வான இந்தக்கதை மட்டுமே.

இதுபற்றி மேலும் பல்வேறு 
சுவையான தகவல்களுக்கு
http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

oooooOooooo

21.04.2015 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 
சித்திரைத் தேர்த்திருவிழாவில்
பவனி வரும் திருச்சி டவுன் 
வாணப்பட்டரை மாரியம்மன் 
தேர்ப்படங்களில் சில
இன்று இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
oooooOooooo 

 VGK-22 
’வ டி கா ல்’
சிறுகதை விமர்சனங்களுக்காக
பரிசுபெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு
நாளை சனி / ஞாயிறு
வெளியிடப்படும்.

காணத்தவறாதீர்கள்.

ஒவ்வொருவாரப் போட்டிகளிலும்
கலந்துகொள்ள மறவாதீர்கள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

59 comments:

 1. தாயுமானவர் சந்நிதி அமைந்த இடத்திலிருந்து அரும்பிய அருமையான முதல் கதையையே பரிசு பெற்று மலைக்கோட்டையாய் உயர அடித்தளம் அமைத்திருக்கிறது.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி June 27, 2014 at 12:24 AM

   வாங்கோ, வணக்கம்.

   //தாயுமானவர் சந்நிதி அமைந்த இடத்திலிருந்து அரும்பிய அருமையான முதல் கதையே, பரிசு பெற்று மலைக்கோட்டையாய் உயர, அடித்தளம் அமைத்திருக்கிறது..//

   இதிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களையும், அவைகளால் அமைக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் கோ[ர்]வையையும் வெகுவாக ரஸித்தேன்.

   மலைக்கோட்டை போலவே என் மனக்கோட்டையிலும் மிக உயரமான + உயர்வான + ஒஸத்தியான இடத்தில் தான் தாங்களும் உள்ளீர்கள்.

   // பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

   தங்களின் உற்சாகமூட்டிடும் பல்வேறு கருத்துக்களே என்னை மேலும் மேலும் பதிவிட வைத்தன என்பதே உண்மை.

   தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk

   Delete
 2. மீண்டும் திருச்சியை சுற்றி வந்த உணர்வு. அருமையாக அமைந்த வர்ணனைகள் அம்மனின் அருள். எல்லாமே உணர்ச்சிப் பிரவாகம்.முதல் புத்தகம் என்று நம்புவது கடினமாக இருக்கிறது. அப்படி ஒரு ஈஸி ஃப்ளோ. மனம் நிறைந்த வாழ்த்துகள். அற்புதமான கதை.

  ReplyDelete
  Replies
  1. வல்லிசிம்ஹன் June 27, 2014 at 2:16 AM

   வாங்கோ, நமஸ்காரம், வணக்கம்.

   //மீண்டும் திருச்சியை சுற்றி வந்த உணர்வு. அருமையாக அமைந்த வர்ணனைகள் அம்மனின் அருள். எல்லாமே உணர்ச்சிப் பிரவாகம்.முதல் புத்தகம் என்று நம்புவது கடினமாக இருக்கிறது. அப்படி ஒரு ஈஸி ஃப்ளோ. மனம் நிறைந்த வாழ்த்துகள். அற்புதமான கதை.//

   சந்தோஷம். உணர்ச்சிப் பிரவாகமான உள்ளன்போடு தாங்கள் கூறியுள்ள இந்த அற்புதமான கருத்துக்கள் என் மனதிலும் ஈஸி ஃப்ளோ ஆகி என்னை மகிழ்விக்கிறது.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk

   Delete
 3. முதல் சிறுகதை முத்தான கதை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் June 27, 2014 at 7:10 AM

   வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.

   //முதல் சிறுகதை முத்தான கதை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...//

   தங்கள் அன்பான வருகைக்கும் முத்தான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - vgk

   Delete
 4. மிக அருமை........

  ReplyDelete
  Replies
  1. Anuradha Prem June 27, 2014 at 9:34 AM

   வாங்கோ, வணக்கம். முதல் வருகையோ ! மிக்க மகிழ்ச்சி.

   //மிக அருமை........//

   மிக்க நன்றி - vgk

   Delete
  2. sir .. i missed to follow your blog .. but now i started to follow u... ..tamil typing is big problem to me..so now i am practing....and i try to participate the ’சிறுகதை விமர்சனப்போட்டி’....

   ஒவ்வொருவாரப் போட்டிகளிலும்
   கலந்துகொள்ள மறவாதீர்கள்........

   நன்றி........

   Delete
  3. Anuradha Prem June 30, 2014 at 11:41 AM

   WELCOME ! தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

   //sir .. i missed to follow your blog .. but now i started to follow u... //

   Thank you very much and Thanks a Lot, Madam.

   //..Tamil typing is big problem to me..so now I am practicing....and I try to participate the ’சிறுகதை விமர்சனப்போட்டி’....//

   தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

   தமிழில் நன்கு எழுதப்பழகுவதற்காகவே கூட இந்தப்போட்டியில் தாங்கள் வாராவாரம் கலந்துகொள்ளலாம். அவ்வப்போது தங்களுக்குப் பரிசுகளும் கிடைக்கலாம்.

   எப்போதாவது அதிசயமாக போனஸ் பரிசும் கிடைக்கலாம். போனஸ் பரிசு பற்றிய மேலும் விபரங்களுக்கு VGK-03, VGK-10 and VGK-13 PRIZE WINNERS LIST ஐப் பார்க்கவும்.

   மாதிரிக்கு இதோ ஓர் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-02-04-second-prize-winners.html

   எழுத்துப்பிழைகளுக்காக எந்த ஒரு விமர்சனமும் உயர்திரு நடுவர் அவர்களால் நிராகரிக்கப்படுவது இல்லை என்பதை இங்கு தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

   அவ்வாறு ஒரு சில இடங்களில் தமிழ் எழுத்துப்பிழைகள் இருப்பினும், பரிசுக்குத்தேர்வாகி, என் வலைத்தளத்தினில் அவை என்னால் வெளியிடப்படும்போது, பெரும்பாலும் என் கண்களில் படும் எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டே பிறகு வெளியிடப்பட்டு வருகின்றன. அதனால் தாங்கள் கூச்சம் ஏதும் இல்லாமல் தமிழில் விமர்சனங்களை எழுதி அனுப்பலாம்.

   பரிசுக்குத்தேர்வான விமர்சனங்கள் மட்டுமே, எழுதி அனுப்பி வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், புகைப்படங்கள், Profile Photo, வலைத்தள முகவரி போன்றவைகளுடன் என் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதை அறியவும்.

   போட்டியில் கலந்துகொண்டு பரிசுக்குத் தேர்வாகாதவர்கள் பற்றிய பெயர்கள் + மற்ற விபரங்கள் எல்லாமே, வெளியிடப்படாமல் இரகசியமாகவே எங்களால் காக்கப்பட்டு வருவதால், தாங்கள் எந்தவிதமான சங்கோஜமும் இல்லாமல் ஆர்வத்துடன் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

   இந்த ’VGK-24 தாயுமானவள்’ கதைக்கே தங்களிடமிருந்து ஓர் முதல் விமர்சனத்தை நான் எதிர்பார்க்கிறேன். அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   அன்புடன் VGK

   Delete
  4. VGK To Ms. Anuradha Prem [ 2 ]

   தங்களைப்போலவே வேறொரு பதிவருக்கும் இதே தமிழ் மொழிப்பிரச்சனை இருந்தது + இப்போதும் இருந்து வருகிறது.

   இருப்பினும் அவர்கள் அவ்வப்போது மிகுந்த ஆர்வத்துடன் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

   Google transliteration உதவியுடன் ENLIGH TO TAMIL ஆக்கி போட்டியில் கஷ்டப்பட்டு கலந்து கொள்கிறார்கள்.

   இதுவரை நான்கு முறை வெற்றிபெற்று பரிசும் வாங்கியுள்ளார்கள். ;))))

   அதிலும் ஒரு முறை முதல்பரிசே அவர்களுக்குக் கிடைத்துள்ளது !!!!!

   ‘முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்’ என்பதற்கு அவர்கள் நல்லதொரு உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்கள்.

   இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
  5. நானும் விமர்சனத்தை டைப் அடிக்க ஆரம்பித்துவிட்டேன்............

   Delete
  6. Anuradha Prem June 30, 2014 at 4:38 PM

   மீண்டும் வருகைக்கும் தகவலுக்கும் மகிழ்ச்சி !

   //நானும் விமர்சனத்தை டைப் அடிக்க ஆரம்பித்துவிட்டேன்............//

   ஆஹா, பேஷ் .. பேஷ் ! இந்தமுறை போட்டி மிகவும் பலமாகத்தான் இருக்கப்போகிறது என நினைக்கிறேன்.

   டைப் அடிக்க ஆரம்பித்தால் மட்டும் போதாது.

   1] அதை போட்டியின் விதிமுறைகளின்படி சுமார் 200 வார்த்தைகள் அல்லது சுமார் 40 வரிகளில் வடிவமைக்க வேண்டும். அதாவது டைப் அடித்து முடிக்க வேண்டும்.

   2] வரும் வியாழக்கிழமை இந்திய நேரம் இரவு 7.59 க்குள் மின்னஞ்சலில் valambal@gmail.com {VALAMBAL@GMAIL.COM} என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

   3] Word documents, PDF போன்ற தனி Attachments ஆக அனுப்பாமல் Straight ஆக மெயிலிலேயே அடித்து அனுப்பினால் மிகவும் நல்லது.

   4] தாங்கள் விமர்சனம் அனுப்பிவைத்த சிலமணி நேரங்களுக்குள் [Maximum 8 Hours] என்னிடமிருந்து தங்களுக்கு ஓர் STANDARD ACKNOWLEDGEMENT வரவேண்டும். அது மிகவும் முக்கியம். அது தங்களுக்குக் கிடைத்தால் மட்டுமே தங்களின் விமர்சனம் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அர்த்தமாகும்.

   5] வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் எனக்கு வந்துசேரும் விமர்சனங்களை, போட்டிக்கு வந்ததாக கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. அவற்றிற்கு STD. ACK. அனுப்பப்படுவதும் இல்லை.

   அதனால் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் முதல் நாளே [அதாவது புதன்கிழமையே] அனுப்பி வைப்பது நல்லது.

   வாழ்த்துகள். வாழ்த்துகள். வாழ்த்துகள்.

   [ நான் எழுதிய முதல் கதைக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதி அனுப்ப உள்ள தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியே. ஏதோவொரு பரிசு தங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.;) ]

   அன்புடன் VGK

   Delete
  7. ஒரு வழியாக அனுப்பிவிட்டேன்...............உஸ் அப்பா முடியல SIR....

   நான் எழுதிய முதல் கதைக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதி அனுப்ப உள்ள தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியே. ஏதோவொரு பரிசு தங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.;) ]

   என்னுடைய முதல் எழுத்து பதிவு...........

   நன்றி ஐயா............

   Delete
  8. Anuradha Prem July 2, 2014 at 10:25 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஒரு வழியாக அனுப்பிவிட்டேன்...............//

   கிடைத்து விட்டது. மிக்க நன்றி. தாங்கள் அனுப்பி வைத்த அடுத்த 42 நிமிடத்தில் என்னிடமிருந்து தங்களுக்கு STANDARD ACKNOWLEDGEMENT அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். முதன்முதலாக இருப்பதால் STD.ACK. கிடைத்ததா என சரி பார்த்துக்கொள்ளவும். அல்லது எனக்குத் தெரிவிக்கவும்.

   //உஸ் அப்பா முடியல SIR....////

   அடடா, என்ன ஆச்சு ! அதற்குள் இப்படி ஒரேயடியாகக் களைத்துப் போய் விட்டீர்களே! ;)

   என் கீழ்க்கண்ட இந்தப்பதிவுகளில் உள்ளப் படங்களைப் பாருங்கோ. உடனே உங்களுக்கு ஓர் உற்சாகம் ஏற்படும்.

   http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html

   http://gopu1949.blogspot.in/2014/06/vgk-01-to-vgk-20-total-list-of-hat.html

   *****நான் எழுதிய முதல் கதைக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதி அனுப்ப உள்ள தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியே. ஏதோவொரு பரிசு தங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.;) ]*****

   //என்னுடைய முதல் எழுத்து பதிவு...........//

   The First One is Always the Best One ! ;) All the Best !!

   //நன்றி ஐயா............//

   தங்களின் மீண்டும் வருகைக்கும், வெளிப்படையான கருத்துப்பகிர்வுகளுக்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - vgk

   Delete
 5. Replies
  1. கே. பி. ஜனா... June 27, 2014 at 10:43 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வாழ்த்துகள்!//

   மிக்க நன்றி - vgk

   Delete
 6. Dear VG,
  A nice 'feel-good' story. Thanks
  Chandramouli

  ReplyDelete
  Replies
  1. D. Chandramouli June 27, 2014 at 11:12 AM

   //Dear VG,//

   Dear Sir, Welcome ! ;))))) How are you, Sir?

   //A nice 'feel-good' story. Thanks
   Chandramouli //

   Thanks a Lot, Sir.

   With very kind regards,
   Yours affectionately
   - VG

   Delete
 7. சார் வணக்கம். முதல் முறையாக உங்க பக்கம் வரேன்.முதலில் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.கதை போல இல்லாம எளிமையான மனதைத் தொடும் வர்ண்னைகள். இதுதான் அனுபவம். நேரிலேயே இருந்து பார்த்து ரசிப்பது போஅவே இருந்தது. நன்றி

  ReplyDelete
  Replies
  1. sreevadsan June 27, 2014 at 11:35 AM

   வாங்கோ, வணக்கம்.

   //சார் வணக்கம். முதல் முறையாக உங்க பக்கம் வரேன்.//

   மிகவும் சந்தோஷம்.

   //முதலில் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.கதை போல இல்லாம எளிமையான மனதைத் தொடும் வர்ணனைகள். இதுதான் அனுபவம். நேரிலேயே இருந்து பார்த்து ரசிப்பது போலவே இருந்தது. நன்றி//

   தங்களின் அன்பான முதல் வருகைக்கும், ரசனையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - vgk

   Delete
 8. நான் வந்து கமெண்ட் போட்ட உடனேயே என் பக்கமும் வந்ததற்கு கருத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றி

  ReplyDelete
  Replies
  1. sreevadsan June 27, 2014 at 12:06 PM

   வாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றிகள்.

   //நான் வந்து கமெண்ட் போட்ட உடனேயே என் பக்கமும் வந்ததற்கு கருத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றி.//

   பொதுவாக நான் இதுபோல, நீங்க இங்கே வந்ததும், நான் அங்கே வந்து கருத்துச்சொல்லும் ஆசாமியே இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளவும்.

   தங்களின் முதல் பதிவினில் நான் தங்களுக்கு நிறைய அறிவுரைகள் அளித்துள்ளேன். அதன்படியே தாங்களும் நடந்துகொண்டீர்களானால், வலையுலகில் நீண்ட நாட்கள் தாங்கள் நீடித்து ஓர் சிறப்பான இடத்தினைத் தக்க வைத்துக்கொள்ள இயலும்.

   இந்த பதில் தங்களுக்காக மட்டும் நான் கொடுத்துள்ளதாக தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம்.

   என் பதிவுகள் பக்கம் வருகை தந்தும் நான் அவர்கள் பக்கம் வருகை தந்து கருத்தளிக்காமல் உள்ளேனே என நிறைய பேர்கள் நினைத்து, என்னிடமிருந்து ஒதுங்கியுள்ளார்கள்.

   அவர்களுக்காகவும் இங்கே இதனை SPECIFIC ஆகக்குறிப்பிட்டுள்ளேன். மிரண்டுவிட வேண்டாம். vgk

   Delete
 9. முதல் கதை என்று நம்பவே முடியவில்லை. பாராட்டுகள் சார். மீண்டும் படித்தாலும் சுவைத்தது.

  ReplyDelete
  Replies
  1. ADHI VENKAT June 27, 2014 at 1:18 PM

   வாங்கோ, வணக்கம்.

   //முதல் கதை என்று நம்பவே முடியவில்லை. பாராட்டுகள் சார். மீண்டும் படித்தாலும் சுவைத்தது.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான சுவையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk

   Delete
  2. முன்பு இந்த கதையைப் படித்த போது கண்கள் பனித்தன.
   இப்போதும் அப்படித்தான். ஏழைகளாக இருந்தாலும் முனியாண்டியும் அவர் மனைவியும் குழந்தையிடம் காட்டும் அன்பு எல்லாம் அழகாய் கண்முன் காட்டிவிட்டீர்கள்.
   தாயுமானவள் மிக சிறந்த கதை.
   கதைகளுக்கு படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
   வாழ்த்துக்கள்.

   Delete
  3. கோமதி அரசு June 27, 2014 at 9:22 PM

   வாங்கோ, வணக்கம்.

   //முன்பு இந்த கதையைப் படித்த போது கண்கள் பனித்தன. இப்போதும் அப்படித்தான். ஏழைகளாக இருந்தாலும் முனியாண்டியும் அவர் மனைவியும் குழந்தையிடம் காட்டும் அன்பு எல்லாம் அழகாய் கண்முன் காட்டிவிட்டீர்கள். தாயுமானவள் மிக சிறந்த கதை. கதைகளுக்கு படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
   வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் உருக்கமான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk

   Delete
 10. kovaikkavi June 27, 2014 at 12:07 PM

  வாங்கோ, வணக்கம்.

  //மிக அருமையாக உள்ளது கதை. இனிய வாழ்த்து ஐயா.
  வழக்கம் போல விமரிசகர்களிற்கும் தங்களிற்கும் இனிய வாழ்த்து.//

  தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.

  இதோ..இதையும் சுவையுங்கள். http://kovaikkavi.wordpress.com/2014/06/25/30-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
  Vetha.Elangathilakam.//

  ஆகட்டும். சுவைக்க முயற்சிக்கிறேன். - vgk

  ReplyDelete
 11. மிக அருமையான விவரிப்பு! திருச்சி நகரை கண்முன் நிறுத்திய கதையில் பலூன் விற்கும் முனியாண்டியும் அந்த குழந்தையும் அப்படியே மனசைத்தொடுகிறார்கள்! முதல் சிறுகதையிலேயே கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 12. ஏற்கனவே இதை வாசித்திருக்கிறேன் . எத்தனை முறை யும் வாசிக்கக்கூடிய கதையே . அதனாலேயே பரிசு பெற்றிருந்தது . பெற்றால் தான் பிள்ளையா ? என்பதை அற்புதமாக காட்டியிருக்கின்றீர்கள். தாயுமானவர் தலைப்பும் அருமை

  ReplyDelete
  Replies
  1. Chandragowry Sivapalan June 28, 2014 at 11:51 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஏற்கனவே இதை வாசித்திருக்கிறேன் . எத்தனை முறை யும் வாசிக்கக்கூடிய கதையே . அதனாலேயே பரிசு பெற்றிருந்தது . பெற்றால் தான் பிள்ளையா ? என்பதை அற்புதமாக காட்டியிருக்கின்றீர்கள்.

   தா யு மா ன வ ள் ..... தலைப்பும் அருமை//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk   Delete
 13. T20 ஆட்டத்தில் முதல் Ball-லேயே சிக்சர் அடிப்பது போல, முதல் கதையே முத்தான கதை. ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் படித்து ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் June 29, 2014 at 5:41 AM

   வாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.

   //T20 ஆட்டத்தில் முதல் Ball-லேயே சிக்சர் அடிப்பது போல, முதல் கதையே முத்தான கதை. ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் படித்து ரசித்தேன். //

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், வெங்கட்ஜி. - vgk

   Delete
 14. பகவான் எங்கேயிருந்து கொண்டுவந்து எங்கே சேர்த்தார். அருமையாக இருக்கு. தாயுமானாள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. Kamatchi June 29, 2014 at 6:20 PM

   வாங்கோ மாமி ... நமஸ்காரம், வணக்கம்.

   //பகவான் எங்கேயிருந்து கொண்டுவந்து எங்கே சேர்த்தார். அருமையாக இருக்கு. தாயுமானாள். அன்புடன்//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி - அன்புடன் கோபு.

   Delete
 15. சுனாமி யின் பாதிப்பு குறித்து ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா? என ஒரு கவிதை இட்டிருந்தேன். அப்பொது தாங்கள் இந்தக் கதையின் இணைப்பை அனுப்பியிருந்தீர்கள். அப்போது படித்து வியந்தேன். மீண்டும் ஒரு வாய்ப்பு! அருமையான் கதை. விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன் சார். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. June 30, 2014 at 9:42 PM

   வாங்கோ, வணக்கம்.

   //சுனாமி யின் பாதிப்பு குறித்து ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா? என ஒரு கவிதை இட்டிருந்தேன். அப்போது தாங்கள் இந்தக் கதையின் இணைப்பை அனுப்பியிருந்தீர்கள். அப்போது படித்து வியந்தேன். மீண்டும் ஒரு வாய்ப்பு! அருமையான் கதை. விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன் சார். நன்றி!//

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். மகிழ்ச்சி. - vgk

   Delete
 16. அழகான எழுத்து நடையால் அமைந்த அருமையான சிறுகதை. வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வேல் July 1, 2014 at 8:54 PM

   வாருங்கள், வணக்கம்.

   //அழகான எழுத்து நடையால் அமைந்த அருமையான சிறுகதை. வாழ்த்துகள் ஐயா.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - vgk

   Delete
 17. இந்தக்கதையினை திருவாளர். G. பெருமாள் செட்டியார் என்ற ஒரு பதிவர் ஆழ்ந்து படித்துள்ளார்கள்.

  அவரால் இந்த விமர்சனப்போட்டியில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  எனினும் இந்த என் கதையின் தாக்கம் அவருக்குள் எழுப்பியுள்ள உணர்வுகளை மிகவும் உருக்கமாக தன் வலைத்தளத்தில் தனிப்பதிவாக எழுதி சிறப்பித்துள்ளார்கள்.

  இதோ இணைப்பு:
  http://gperumal74.blogspot.in/2014/10/blog-post_25.html

  காணத்தவறாதீர்கள்.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 18. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

  இந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு இதோ:

  http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_26.html

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன் கோபு [VGK]

  ooooooooooooooooooooooooooo

  ReplyDelete
 19. இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

  இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-24.html

  போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  VGK

  ReplyDelete
 20. திருச்சி டவுன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவிழா இன்று 21.04.2015 செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

  மதியம் 1 மணி சுமாருக்கு என் குடியிருப்புப் பகுதி வாசலுக்கு வாணப்பட்டரை மாரியம்மன் அழகுத்தேரில் மெல்ல நகர்ந்து பவனி வந்து அருள் பாலித்தாள்.

  அப்போது என் வீட்டு பால்கனி ஜன்னல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில இதோ இந்தப்பதிவினில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  ReplyDelete
 21. புதிய படங்களை பழைய பதிவில் இணைக்காமல், புதிய பதிவாகவே வெளியிட்டிருக்கலாமே...

  படங்கள் பார்த்து ரசித்தேன்.

  ReplyDelete
 22. ஸ்ரீராம். April 21, 2015 at 3:55 PM

  வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் ! வணக்கம்.

  //புதிய படங்களை பழைய பதிவில் இணைக்காமல், புதிய பதிவாகவே வெளியிட்டிருக்கலாமே...//

  புதிய பதிவுகள் இப்போதைக்கு வெளியிடுவது இல்லை என்ற பிரஸவ வைராக்யத்தில் :) அல்லவா இப்போது நான் கட்டாய ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளேன். அதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. :)

  மேலும், இந்த நான் எழுதிய என் முதல் கதை, அதுவும் பரிசு பெற்றக்கதை, உருவாவதற்கு, சிறுவயதிலிருந்து என் மனதில் வெகு ஆழமாக ஊறிப்போய் உள்ள இந்த மாரியம்மன் தேர்த்திருவிழாவும் ஓர் முக்கியக் காரணமாக உள்ளது. அதனை இந்தப்பதிவினில் இணைப்பதே மிகப்பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தும் இணைத்துள்ளேன்.

  //படங்கள் பார்த்து ரசித்தேன்.//

  மிக்க நன்றி, ஸ்ரீராம்.

  அன்புடன் VGK

  பின்குறிப்பு:
  ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தங்கள் மாமா திரு. ஜவர்லால் அவர்கள் தினமலர் செய்தித்தாளில் கொடுக்கும் நகைச்சுவைப் பகுதியைப் படித்து ரஸித்து வருகிறேன். 2 நாட்கள் முன்பு (19.04.2015) மிகவும் குறும்புடன் ஓர் காட்சியை வர்ணித்து எழுதியுள்ளார். அதில் “லைட்டை அணைச்சுட்டா எல்லா ரமணியும் ஒன்றுதான்” என குவார்ட்டர் உள்ளே ஏற்றிய ஒரு மாதிரியான பெண் ஒருத்தி சொல்வதாக ஒருவரி எழுதியுள்ளார். விழுந்து விழுந்து சிரித்தேன். அவருக்கு என் பாராட்டுக்களைச் சொல்லவும்.

  VGK

  ReplyDelete
 23. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல் குழந்தைகளற்ற தம்பதியினருக்கு கடவுளே ஒரு குழந்தையை அனுப்பியுள்ளார்.

  ReplyDelete
 24. இதுபோலல்லாம் கதைகளில் வேணும்னா நடக்கலாம் நிஜத்தில் நிலமை வேர மாரிதான் இருக்கு

  ReplyDelete
 25. முத்தான மொத்தக் கதைகளில் இதுவும் ஒரு சத்தான, உள்ளத்தை நெருடிய கதை.

  உங்களை வாழ்த்துவதற்கே ஒரு தனி ஜென்மம் எடுக்க வேண்டும் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya October 23, 2015 at 3:10 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //முத்தான மொத்தக் கதைகளில் இதுவும் ஒரு சத்தான, உள்ளத்தை நெருடிய கதை. //

   ஆஹா, முத்தான + சத்தான தங்களின் பாராட்டுகள் என் உள்ளத்தை நெருடிவிட்டது, ஜெ :)

   //உங்களை வாழ்த்துவதற்கே ஒரு தனி ஜென்மம் எடுக்க வேண்டும் அண்ணா.//

   ஜென்ம ஜென்மமாகவே தொடர்வதுபோன்ற இந்த நம் நட்புறவு இன்னும் பல ஜென்மங்களுக்கும் நீடிக்கட்டும், ஜெயா. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 26. சரியான இடத்துலதா அந்த கொளந்த சேர்ந்திருக்கு. கொளந்த இல்லாத முனியாண்டியும் மரகதமும் தன் கொளந்த போலவே பாத்துப்பங்கனுதா தோணுது.

  ReplyDelete
 27. :))))))
  தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி. குழந்தை இல்லாத அன்பு தம்பதிகளுக்கு குழந்தையை அனுப்பியது ஆண்டவரே.

  ReplyDelete
 28. அற்புதக் காட்சி அமைப்பு. தேர்திருவிழாவை கண்முன் நிறுத்தியமைக்கு காரணம்..ஜன்னல்கள்..அற்புதப் பாத்திரப்படைப்புகள். நெகிழச்செய்த உன்னதக் கதை..

  ReplyDelete
 29. ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்த அந்தக்குழந்தை நாகப்பட்டினத்திலிருந்து அந்தக் கைலிக்காரனால் கடத்தி வரப்பட்டதும், அந்தக் குழந்தையின் பெற்றோர் சுனாமியில் அடித்துச்செல்லப்பட்டு இறக்க நேர்ந்ததை அந்த மழலையின் வார்த்தைகளில் வடித்திருப்பது நம் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது. ஒருவாசல் மூடினால், மறுவாசல் திறப்பவன் இறைவன் அன்றோ?

  ReplyDelete
  Replies
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 30. பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:
  http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  ReplyDelete
 31. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், மூன்று பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

  59 + 66 + 123 = 248

  அதற்கான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html

  http://gopu1949.blogspot.in/2011/12/2-of-3.html

  http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

  ReplyDelete
 32. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/07/vgk-24-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/07/vgk-24-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/07/vgk-24-03-03-third-prize-winner.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  ReplyDelete
 33. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 14.06.2021

  தாயுமானவள் தரமான படைப்பு. மிகச்சாதாரண  சாமானியன் குடும்ப உணர்வுகளை மிக அழகாக படம்பிடித்துள்ள உங்களுக்கு எக்ஸ்ட்ரா எக்ஸ்ரே கண். தேவையறிந்து கொடுக்கும் தெய்வம், குழந்தைக்கும் பெற்றோரைக்கொடுத்த வாணப்பட்டறை மாரியம்மன் மீண்டும் தாயுமானாள். நன்றி. _துரை.மணிவண்ணன்.

  -=-=-=-=-

  THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. 
  - VGK 

  ReplyDelete