என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 28 ஜூன், 2014

VGK 22 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’வடிகால்’
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 22 - ’ வ டி கா ல் 
 

 

மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து 

இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:      இனிப்பான இரண்டாம் 


பரிசினை வென்றுள்ளவர்கள் இருவர் 


அதில் ஒருவர் திரு.   E.S. சேஷாத்ரி  


அவர்கள்


 

இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திரு. E.S. சேஷாத்ரி - காரஞ்சன் [சேஷ்]

அவர்களின் விமர்சனம் இதோ:
முதியோர் சந்திக்கும் உளவியல் ரீதியான பாதிப்புகளை விளக்கி ஒரு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எழுதப்பட்ட கதை இது.

கதாசிரியர் தாம் சந்திக்க நேர்ந்த முதியவரின் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்த சிறுகதையை எழுதியுள்ளார். உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து, உணர்வு பூர்வமாகவும் தீர்வுகளைச் சொன்னவிதம் பாராட்டுக்குரியது.


பொதுவாக “வித்தையுள்ளவன் தூங்கமாட்டான். விசாரமுள்ளவனும் தூங்கமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. கதாசிரியர் வித்தையுள்ளவர். முதியவர் விசாரமுள்ளவர். தூங்காமல் விழித்திருந்த இருவரும் சந்திக்க நேர்கிறது.


அந்த முதியவரைப் பொறுத்தவரை 80 வயதைத் தாண்டியவர். 7 பெண்களையும் 4 பையன்களையும் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தெய்வம். ஓய்வூதியம் பெறுபவர். பையன்களும் இவரை பொருளாதார ரீதியாக எந்தக் குறையும் இல்லாமல் விமானத்தில் சென்றுவருவது வரை ஏற்பாடு செய்து கொடுத்துவிடுகிறார்கள். ஏழு வெவ்வேறு நகரங்களில் உள்ள மகள்களின் வீடுகளுக்கு சீதோஷ்ண நிலைக்குத் தக்கவாறு, சென்று ஒரு மாதம் தங்கி வருபவர்.

அப்படியிருப்பவருக்கு வேறென்ன குறையிருக்க முடியும் என எண்ணும்போதுதான்ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் No peace of Mind” என்ற உண்மை வெளிப்படுகிறது.

“ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன?
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்”

என்ற கவியரசரின் வரிகள் மனைவியின் அருமையை விளக்கிய வரிகள். மூன்றாண்டுகளாக அம்முதியவர் வேரறுந்த நிலையில் இருப்பதை உணர முடிகிறது. உலகமே வீடாகி, தம் மன அழுத்தங்களுக்கு வடிகால் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலை விளங்குகிறது.


மன்னர்கள் காலத்தில் வழிப்போக்கர்களின் சிரமம் குறைக்க சுமைதாங்கிக் கல்லை நட்டு வைத்திருப்பார்கள். தலைச்சுமையை இறக்கி வைத்து, ஓய்வெடுத்து மீண்டும் சுமந்து செல்ல ஏதுவாக.

கூட்டுக் குடும்பமுறை சிதைந்து, தனிக்குடும்பங்கள் பெருகி வரும் இந்நாளில் தன் மன வேதனைகளை, மகிழ்வான தருணங்களின் நினைவுகளை, கடந்தகால அனுபவங்களை, நிகழ்கால நிகழ்வுகள் குறித்த தம் கருத்துகளை பகிர்ந்துகொள்ள ஆளில்லாத அல்லது இருந்தும் கேட்கத் தயாரில்லாத நிலையில்தான் இத்தகு முதியவர்கள் வடிகால் தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இன்றைய குடும்ப நிலையை யதார்த்தமாகச் சொல்லிப்போன ஆசிரியரின் திறன் வியக்க வைக்கிறது. பொருளீட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பார்த்து பேசிக்கொள்ளும் நிலையே குறைந்து அலையும் நிலை. பள்ளிப்பாடம் பாரமாகி, போட்டி நிறைந்த உலகமாகி, மதிப்பெண் ஒன்றே தகுதியை நிர்ணயிக்கும் நிலையில் அதை அடைய புத்தகத்திற்குள் புதைந்து, விளையாட்டை மறந்து, கிடைக்கும் சிறிது நேரத்தையும் கணினி அல்லது தொலைக்காட்சியில் தொலைத்து நிற்கும் இன்றைய குழந்தைகள், வயதான முதியவர்கள் இருமுவதும், தும்முவதும் கூட இவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் நிலையாக உள்ளதை அருமையாக எடுத்துரைக்கிறார்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அக்கம் பக்கம் இருப்பவர் கூட அறிமுகமில்லா நபராகிவிடுகிறார்கள். அநேகமாக நகரங்களில் அடைபட்டிருக்கும் கதவுகளைத்தான் காண வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

மகள் (சிண்டிகேட் பேங்க் சிங்காரி) வீட்டிற்கு வந்த முதியவர் உறக்கம் வராமல், கதாசிரியரை, அவருடைய புத்தகங்களைப் படிக்க நேர்ந்ததினால்(?) பார்த்துவிட்டுச் செல்ல வந்திருக்கிறார்.

எழுத்தாளர் என்பதால் தம் எண்ணங்களை, பிறருக்குப் பயனுள்ள வகையில் எடுத்துரைப்பார் என்று எண்ணியிருக்கலாம் அல்லவா? ஆனால் ஆசிரியர் தம் அனுபவத்தால், இனி இப்படி ஒரு சந்திப்பு நிகழாமல் இருந்தால் நல்லது என எண்ணியுள்ளார். ஏன் சார்? இதற்கே ஒரு சிறுகதை எழுத முடிந்த தங்களால், இன்னும் இந்த சந்திப்பு தொடர்ந்திருந்தால் ஒரு காவியம் எழுத முடிந்திருக்குமே.தனிமையை இனிமையாகக் கழிக்க மேலும் சில நல்ல புத்தங்கங்களைத் தர ஆசிரியர் விழைந்தபோது, அவருடைய புத்தங்கங்கள் இரண்டையுமே இன்னும் படிக்கவில்லை என்ற பதில் கேட்டு ஆசிரியர் எரிச்சல் அடைந்தது நியாயமே. அட்டைப் படத்தில் ஆசிரியரின் புகைப்படத்துடன் வெளியாகியிருந்த ஆசிரியரைப் பற்றிய குறிப்பை மட்டும் படித்து, அவரை தமக்கு வடிகாலாக்க முயன்ற விஷயம் வெளிப்பட்டு வேதனை அளிப்பதாக அமைகிறது.

இரவில் வாட்ச்மேன் அவருக்கு வடிகாலாய் அமைவதும், அதற்காக அவருக்கு டீ, காபி, சிற்றுண்டி மற்றும் அவ்வப்போது செலவுக்குக் கைமாத்தாகப் பணம் இவர் மூலம் கிடைப்பதும் கரும்பு தின்னக் கூலிதான். கண்விழித்திருக்க வேண்டியது வாட்ச்மேனின் வேலை என்றாலும், காது கொடுத்து முதியவரின் உரைகளைக் கேட்பதால் அவருக்குப் பயன் என்பதால் செவிமடுத்துத் தலையாட்டி வைக்கிறார். அதனால் வாட்ச்மேன் மனதில் முதியவர் கொடைவள்ளலாய்த் திகழ்கிறார். முதியவரின் மகளிடத்தும் இதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்துவிடுகிறார்.

அதிகாலையில் பேப்பர் போடுபவரும், பால்காரரும் கூட அந்த இடத்தைப் பிடிக்கின்றனர். இது யாருடைய அலட்சியத்தால் நிகழ்வது?

வீட்டிற்கு வந்த தன் மாமனாருக்கு மொட்டைமாடியில் கட்டில், குடிக்க வெந்நீர், தலையணை, வீட்டிற்குள் வந்து படுக்க நினைத்தால் டூப்ளிகேட் சாவி இவற்றை ஒப்படைத்தால் மட்டும் போதுமா? அவர் சரியாக உறங்குகிறாரா? என்பதை எப்போதாவது (கண்விழிக்க நேரும் சமயங்களில்) பார்த்திருக்க வேண்டாமா? இவ்வளவு வயதானர் மாடிப்படியிறங்கி ஏறி நள்ளிரவில் சாலையில் பிறருடன் செல்வது மாப்பிள்ளை / மகளின் பொறுப்பின்மையால் மட்டுமே நிகழ்வது எனக் கூறலாம்..

“தந்தை தாய்ப் பேண்” என்றாள் அவ்வை. பெற்றோரின் முதுமைக் காலத்தில், அவர்களை நன்கு கவனித்து இறுதிவரை அவர்களின் தேவை அறிந்து சேவை செய்வது நம் கடனன்றோ? இந்த முதியவருடன் அவருடைய மகளோ அல்லது மருமகனோ அவர் தங்கியிருக்கும் ஒரு மாத காலத்தில் தினமும் சிறிது நேரமாவது அவருடன் மனம்விட்டுப் பேசி, உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தால் இந்நிலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

மற்ற பிள்ளை மற்றும் பெண்கள் வீட்டிலும் இதே நிலைதானோ? பொதுவாக முதியவர்கள் முதியோர் இல்லங்களை நாடும் நிலைக்குத் தள்ளப்படுவது இரண்டு காரணங்களினால்.

1.   தங்களைக் கவனிக்க வாரிசுகள் யாருமே இல்லை எனும் நிலை.

2.   வாரிசுகள் இருந்தும் கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் நிலை. இதில் இரண்டாம் நிலை மிகக் கொடியது.


ஆசிரியரின் முதியோர் இல்லம் குறித்த கருத்து ஒருசிலரின் சூழலுக்கு ஏற்புடையதாக அறிவுபூர்வமான நிலையில் இருந்தாலும், இதை உணர்வு பூர்வமாக அணுகும்போது இந்த முதியவரைப் போன்றோரின் நிலை வருத்தப்படத் தக்கதாக உள்ளது. வடிகால் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

பேராசிரியர் அறிவொளி பட்டிமன்றங்களில் கூறும் விஷயம் ஒன்று ஞாபகம் வருகிறது. “சரியானது சரியாக இருக்கவேண்டுமென்றால் சரியானதற்குள் ஒரு தவறானது இருக்க வேண்டும்” என்பார். இதற்கு விளக்கமளிக்கையில் பிரஷர் குக்கரைக் குறிப்பிடுவார். பிரஷர் வெளியேறாமல் இருப்பது அதன் தத்துவம். ஆனால் அழுத்தம் மிகும்போது அதற்கு வடிகாலாக விசில் என்ற ஒன்றால் அவ்வழுத்தம் வெளியேற்றப் படுவதால்தான் அது ஒழுங்காக இயங்குகிறது என்பார்.

மனிதனும் அதைப்போல்தான். அவனுடைய உணர்வுகளுக்கு வடிகால் இல்லையெனில் சரியாக அவனால் செயல்பட முடியாது. இந்த இடத்தில் முதியோர் இல்லம் குறித்து நான் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதியோர் இருக்கும் இல்லங்கள் பெருகட்டும்.
முதியோர் இல்லங்கள் பெருகாமலிருக்க!

என்னுடைய இன்னொரு பாடலும் கதாசிரியரின் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாய் அமைகிறது என்ற எண்ணத்தில் அதையும் குறிப்பிட விழைகிறேன்.

(இளமை கொலுவிருக்கும்  ... பாடல் மெட்டில்)..


உடலில் வலுவிருக்கும் உளத்தில் தெளிவிருக்கும்

எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை

இல்லாமல் பயனில்லை பருவத்திலே!

உடலில் வலுவிருக்கும், உளத்தில் தெளிவிருக்கும்,

எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை

இல்லாமல் பயனில்லை பருவத்திலேஉயிரைச் சுமந்தவளும் தாயல்லவோ?
ஊட்டி வளர்த்தவளும் அவளல்லவோ?

பெற்று வளர்ப்பவர்கள் கண்ணல்லவோ?

பேணிக்காப்பது நம் கடனல்லவோ?

பொறுப்பைச் சுமந்து நமை போற்றி தினம் வளர்த்து

ஏற்றம் அளித்தவர்கள் இவரல்லவோ?-பெற்றோர்

போற்றி வணங்க வந்த உறவல்லவோ?இயற்கை தந்த வரம் மூப்பல்லவா?  இது

நமக்கும் நாளை வரும் நிலையல்லவா?

குழந்தை  மனதைக் கொள்ளும் முதியவர்க்கே- நாம்

விழைந்து சேவை செய்ய ஒரு வாய்ப்பல்லவா?

இளமை ஓடி விடும் முதுமை கூடிவிடும்

பிணிகள் நாடிவரும் வேளையிலே அவர்

வாட்டம் போக்குவது பெரும் சுகமல்லவோ? நாம்

வேர்களை மறவா விழுதல்லவோ?


விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் இந்தக் கதையைப் படைத்த கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! நன்றி! 


காரஞ்சன் [சேஷ்]

esseshadri.blogspot.com

                                                                      -


 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
    


இனிப்பான இரண்டாம் 


பரிசினை வென்றுள்ள மற்றொருவர்திருமதி இராஜராஜேஸ்வரி  அவர்கள் 


http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"


  

இனிப்பான இரண்டாம் 


பரிசினையும் வென்று


மேலும் மேலும் பலமுறை


ஹாட்-ட்ரிக் அடித்து வரும்


 ஹாட்-ட்ரிக் சாதனைத் திலகம் 


திருமதி. இராஜராஜேஸ்வரி  அவர்களின் விமர்சனம் இதோ:

 

வ டி கா ல் என்னும் வலிமையான தலைப்பு கச்சிதமாக பொருந்துகிறது.. படங்களும் கதை சொல்வதில் பங்கேற்கின்றன... 

"கல்லிலே கலைவண்ணம் காண்பது போல், பார்க்கும், பாதிக்கும் எல்லா விஷயங்களையும் எளிமையாக எடுத்தியம்பும் கலை ஆசிரியருக்கு கைவந்த கலை என்பதை நிரூபித்திருக்கிறார்... ஆசிரியரின் கைவண்ணத்தில் இந்த கதை முதியோர்களின் உளவியல் பிரச்சினையை சுட்டுகிறது 

கதவின் வெளிப்புறம் யாரோ நிற்பது போல மூடியிருந்த ஜன்னல் கண்ணாடிகளில் நிழல் தெரிந்தது வெள்ளையில் வேட்டி- சட்டை- அழைப்பு மணி ஒலிக்க -- டிக் ..டிக்..டிக்.. என்று துப்பறியும் மர்மநாவல் போல  ஆரம்பம் ஒரு அமானுஷ்யத் தன்மையுடன் நடு ராத்திரி 11 மணிக்குக் கதவைத் தட்டியதிலிருந்து கதை கன வேகத்தில் கிளம்பி கதை ஆசிரியரின் வாடிக்கையான கைதேர்ந்த சுவாரஸ்ய  விறுவிறுப்பான வேகமான எழுத்து நடையில் போக்குக்காட்டி கதையையும் மடை திருப்பி வ டி கா ல் களுக்கும் வசதி செய்து விட்டார் ..

பெரியவரின் தூக்கமின்மை நம்மையெல்லாம் எழுப்பிவிட்டது என்பதுதான் உண்மை

அவசரம் நேரமில்லை என்கிற தப்பித்தல் வார்த்தைகளால் உறவில் விரிசல் விழுந்துள்ளது.

சிறு குழந்தையாயிருக்கையில் அதன் கண்ணீரைத் துடைத்தே பழக்கப்பட்ட பெற்றோருக்கு, அவர்களின் முதிய பிராய‌த்தில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீரே சிந்தாமல் பார்த்துக்கொள்வது எத்தனை புண்ணியம்!!

ஒருகாலத்தில் அம்மாவின் முந்தானையைப்பிடித்துக்கொண்டு நகராமல் வளைய வந்த இரத்த பந்தம் இன்று தனக்கென ஒருத்தி வந்து தலையணை மந்திரம் போட்டு தாயா தாரமா ஏதாவது ஒன்றைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளும் நிர்ப்பந்தம் நிலவுகிறதே.. காலத்தின் கோலம் கொடுமைதான்.. 

பணத்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்கிற மனோபாவம் பணம் வாங்க முடியாது தோற்றுப்போகும் இடங்களில்தான் ஒருவரின் சுயம் விழிக்கிறது.

இனிமையான வார்த்தைகள் மட்டுமே முதியவர்களுக்குப் போதும். அவர்கள் மனதும் வயிறும் குளிர்ந்துவிடும்.

முதியவர்களின் இன்றைய நிலையையும் அவர்களுக்கு எந்த அளவிற்கு காருண்யமும் அன்பும் ஆதரவும் தேவைப்படுகிறது என்பதையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார் கதை ஆசிரியர்...!

நல்ல விதைகளாய் விதைக்க வேன்டும். குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே அன்பையும் கருணையையும் பிறரை மதிக்கவும் சொல்லிச் சொல்லி பழக்க வேண்டும். அப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் நிச்சயம் பின்னாளில் பெற்றோருடைய ஊன்றுகோலுக்குப் பதிலாக தானே இருப்பார்கள்! 

வயதான பெற்றோர்களுக்கும் பிள்ளை, மருமகள், பேரக்குழந்தைகள் மத்தியில் கிடைத்த வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழ்வது, விலைமதிப்புள்ள வைட்டமின் மாத்திரைகள் தருவதை விட சக்தி மிக்கது.. அடிப்படையான மனநலமே பல நோய்களை அணுகாமல் தடுக்கும் தடுப்பு அரண்...

வீண் வறட்டு கெளரவங்களால் வாழ்வில் சந்தோஷ தருணங்களை இழக்காமல்  உப்புப் பெறாத சின்ன சின்ன விஷயங்களில் பெரியோர்--சிறியோர் இருசாராரும் கொஞ்சமே அனுசரணையுடன் நடந்து  கொண்டால், எந்த வடிகாலுக்கும் வேலையே இல்லை. 

அந்த சந்தோஷத்தை நினைத்தால், எந்த சொந்த இழப்புக்கும் தயாராகிற மனோபாவம் வரும்! வேண்டியதெல்லாம், மனசை கொஞ்சமே கொஞ்சம் செய்துகொள்ளும்  அட்ஜெஸ்ட்மெண்ட் ஆயிரம் தொந்தரவுகளை கிட்டத்தில் அண்ட விடாமல் கட்டிக் காப்பாற்றும்..

முதியோர் இல்லங்களிலும் முகம் தெரியாத பலரிம் ஆயிரம் அட்ஜஸ்மெண்ட் செய்துகொள்ள நேரிடுமேஅதை விட தன் குடும்பத்தில் ஈகோ பாராமல் இணைந்து வாழ பழகுவது சுலபம் 

'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' ! அல்லவா.. பெற்றோரே முதல் ஆசிரியர்கள்.. அவர்கள் தங்கள் தாய்தந்தையரை நடத்தும் விதத்தை அருகிருந்து மனதில் பதிய வைத்துக்கொள்ளும் இளைய தலைமுறை தானும் அவ்வாறே நடக்கத் தலைப்படுகிறார்கள்..

தன் அப்பாவுக்கு சாப்பாடு போட்ட மண் தட்டு , கிழிந்த படுக்கை எல்லாம் மீள் சுழற்சியாக தானே பயன்படுத்தும் நிலையில் தான் உண்மை சுடுகிறது...

பெற்ற கடனும், வளர்த்த கடனும் ஆளானவுடனே மறந்து விடுகிறதோ, அல்லது மறப்பது போல் நடிக்கக் கற்றுக்கொண்டு விடுகின்றனரோ. கடவுளுக்கே வெளிச்சம்.

அவரவர்க்குத் தேவையானதை தேர்ந்து கொள்கிற மாதிரி,  பாயசத்தில் அலங்கரித்த சுவை கூட்டும் நெய்யில் வறுத்த முந்திரி திராட்க்ஷை ஏலக்காய் மணம் போல ஆலோசனைகள் சொல்லியிருப்பன் நல்ல நோக்கம் பளிச்சிடுகிறது. மணம் கமழ்ந்து மனம் நிறைக்கிறது..

முதியவர்களிடம் அறிவு கொண்டு செயல்படுவதை விட, இதயத்தின அன்பு கொண்டும் உணர்வு கொண்டும் செயல்படுவதே சிறந்தது.

மிகச் சரியாக தனிமையில் உள்ளவர்களின் உணர்வுகளை அதுவும் வயதானவர்களைப் பற்றி வெளிச்சமிட்டு சமுதாய சிந்தனைகளுடன் சிறப்பான ஆக்கம்.. இன்றைய வாழ்வியல் பிரச்னையை சிந்திக்கும் வகையில் சொல்லி இருக்கிறது..

உயிருடன் இருந்தால் முதுமை எல்லோரும் சந்திக்கவேண்டியதுதான் .. அதற்கான முன்னேற்பாடுகளை கலங்கரை விளக்கமாக காட்சிப்படுத்துகிறது கதை அமைப்பு..  

இன்றைய காலகட்டத்தில் உள்ள பரவலான ஒரு பிரச்சனையை கதை கருவாகக் கொண்டு சிறுகதையின் எல்லை மீறாமல் அதை தெளிவாக ரசிக்கும்படியாக சொல்ல அக்குவேறாக ஆணிவேறாக அலசி இருப்பது சிறப்பான  பரிசோதனை முயற்சி 

வயதானவர்களின் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிக்கும் உண்மையான கதை . 

அதுவரை குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்துவிட்டு பிறகு ஓய்வு பெற்ற பின்பு குடும்பத்தினருடன் பேச நிறைய விசயம் இருப்பதை உணரும்போது தானே வயதாகிவிட்டது என்று புரிகிறது. !!

ஆனால், காலம் மாறிப்போய்  குடும்பத்தினர் எப்போதும் அப்பா என்றால் இடைவேளியுடனே பழக்கப்பட்டுப்போய்   ஒட்டாமல் - சங்கடமாக.. அப்பா வீட்டில் இருந்தால் கொண்டாட்டமோ சந்தோஷமோ மட்டுப்பட்டுப்போய் அசௌகர்யமாகவே உணர்கின்றனர்..

இளமையில் வறுமையை போல் முதுமையில் தனிமை மிகக்கொடுமை என்பதை அழகாய் சரளமான நடையில்சொல்லும் சாமர்த்தியம் அருமை

முதியோர் இல்லம் செல்வதை ஆண்கள்தான் விரும்புகின்றனர். . 
முதியோர் இல்லங்களையும் அனாதை இல்லங்களையும் இணைத்துவிடலாம்..

முதியோர் இல்லத்தையும் அனாதை இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள். பாட்டி தாத்தாவும் பேரக் குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும் !!

முதியவர்களுக்கு தேவை தன் பேச்சுக்களை காது கொடுத்துக்கேட்கும் ஒருவர்.. குழந்தைகளின் ஆசை  தன்னிடம் கதை பேசி விளையாடும் உறவு.. தாய்தந்தையரை விட தாத்தா பாட்டி அத்தை மாமா உறவுகள் குழந்தைகளைக் கவர்வது இதனால்தான்.. 

இந்தக்கதையிலும் சகல வசதிகளும் கொண்டவர் வாட்ச்மேனிடம் சரிக்குச்சரியாக அந்தஸ்து வேறுபாடு பார்க்காமல் டீ குடிக்கவும் சாப்பாடு வாங்கித்தந்து கைச்செலவுக்குப் பணமும் கொடுத்து தன் குடும்ப விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வது என்பது எந்த அளவு தனிமையில் பாதிக்கப்பட்டு தூக்கம் வராமல் அவதிப்படுகிறார் என்பதை நல்ல படியாக கவனிக்கப்பட்டுவரும் பெரியவர்கள் கூட திருப்தியில்லாமல் இருப்பதும் கண்கூடாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது

வாட்ச்மேனும் அவரது பலவீனத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு குடும்பத்தினரிடம் அதை சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்வது சிந்திக்கத்தக்கது..

ஓடும் நதியாக தன்னைக்காலத்திற்கு ஏற்ப புதுப்பித்துக்கொண்டு தானும் சந்தோஷமாக தன் இரண்டாவது குந்தைப்பருவமான முதுமைப்பருவத்தை எதிர்கொள்ளுதல் அவசியம் ..

மழைகாலத்திற்கு எறும்பு சிறுகச்சிறுக சேமிப்பதுபோல முதுமைக்கு பணத்தாலும் ஆரோக்கியமான  பழக்கத்தாலும் பாதை அமைத்துக்கொள்ள வேண்டும் ..என்பதைத்தான் கதைக்கு நடுவில் ஆங்காங்கே சுறுசுறுப்பிற்குப் பெயர்பெற்ற எறும்புகள் சோர்வில்லாமல் ஓடுவது குறிப்பிடும் செய்தியாக எடுத்துக்கொள்ளலாம்.. சிம்பாலிக் ஷாட்...  

நமக்கே இந்தமாதிரி பிரச்சினை வரலாம் .. எனவே மழைக்காலத்திற்கு உணவு சேமிக்கும் எறும்பு போல நாமும் பிறர் அனுபவங்கள் மூலமாக புத்தி கொள்முதல் செய்ய ஆரம்பிக்கவேண்டும்..

ஆன்மீகம், உயர்ந்த சிந்தனைகள், வானப்பிரஸ்த ஆஸ்ரமம் போன்று உயர் வழிகாட்டியாக சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வழிகாட்டும் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம்..

இந்தியப்பார்லிமெண்டே ஒரு முதியோர் இல்லம் போல அனைவரும் வயது முதிர்ந்தவர்களாக அங்கம் வகித்த காலமும் இருந்ததே..! 

வடிகால் தேடி ஓடாமல் இளையவர்கள் தேடி வந்து யோசனை கேட்டு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் ற்கால வேகமான மாற்றங்களில் அறிவு பெற வேண்டியது அவசியம்..

மொத்தத்தில் தேங்கிப்போய் இளையவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சுமையாக இல்லாமல்  முதியவர்கள் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்..

கதையும் அதைத் தொடர்ந்து  கருத்துக்களும் நீண்ட நேரம் யோசிக்க வைக்கும்..

மனம் விட்டு பேச ஆளற்ற தனிமை.. எவரையுமே நோகடிக்கும். முதியவர்களுக்கு கூடுதலாய் அதன் சோகம் தாக்கும்..

நியாயமான "VALUE ADDED CONCEPT" நல்லதொரு தீர்வாக அமையும் 

என்னதான் பாசம் நேசம் என்று பேசினாலும், இன்றைய சூழ்நிலையில் பெரியவர்களை சரியானபடி பார்த்துக் கொள்ள ஒரு குடும்ப அமைப்பை இழந்து நிற்கிறோம் என்பது உறுதி.

பொதுப்படையாக நாம் பேசுவதோ, எழுதுவதோ, பிறருக்கு உபதேசம் செய்வதோ மிகவும் எளிது. 

ஆனால் ப்ராக்டிகலாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து நடப்பது என்பது நடக்கக்கூடிய காரியமாகவே இருப்பதில்லை, 

பல இடங்களில் பல வீடுகளில் இந்தப்பெரியோர்கள் படும் பாடும், இவர்களால் மற்றவர்கள் படும் பாடும் சொல்லிக்கொள்ள முடியாத பலவித சிக்கல்கள் நிறைந்தவைகளாகவே உள்ளன.

வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் பிரச்சனைகளும், அவற்றின் நீள, அகல, ஆழமும் வித்யாசப்பட்டு குட்டையைக் குழப்புவதாகவே உள்ளது. பல வீடுகளில் அரங்கேறிக் கொண்டிருக்கும் உண்மை 

இந்தமாதிரி கதைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள், கருத்துக்களால், ஏரி, குளங்களை தூர் எடுப்பதுபோல, கொஞ்சமாக தூர் வாரத்தான் முடியும். வேறு ஒன்றும் பெரியதாக செய்வதற்கில்லை, என்பதை  நன்றாகவே உணரமுடிகிறதுதான்..

யதார்த்தமான உணர்வுகளோடு எழுதப்பட்ட  சிறுகதை அவரவர் போக்குப்படி, செளகர்யப்படி எது நல்லதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

முதியவர்களைப் பற்றி பலரும் சிந்திப்பதில்லை என்பதை விட இயந்திர மயமாகிவிட்ட இவ்வுலகில் தன்னைப் பற்றி சிந்திக்கவே நிறைய பேருக்கு நேரம் இருப்பதில்லை.

வயதான காலத்தில் மனைவியின் தேவை குறித்து மிகச் சரியாக விளக்கம் கொடுத்து கதையின் மையப் புள்ளிக்கும் கதையை மிக அழகாக நகர்த்திவிட்டார் ஆசிரியர்..

தனிமை தரும் வேதனையை மிக எளிய நடையில் மிக அழகாக, மிக ஆழமாகச் சொல்லியிருக்கிறார்.

முதியோர் இல்லங்களே இருக்கக் கூடாது என்பதுதான் விருப்பமாக இருந்தாலும் ... முதியோர் இல்லத்தின் தேவைகள் மற்றும் அவசியத்தை "வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல்" மறுப்புத் தெரிவிக்க முடியாத அழுத்தத்துடன் சொல்லிவிட்டார் கதை ஆசிரியர்.. விழிப்புணர்வு பெறுவது காலத்தின் கட்டாயம்..

வயதாகிறது என்பது ஒரு transformation. அந்த மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு ஒரு நதிபோல கடலில் கலக்கும்வரை ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். 

ஒப்புக்கொள்ளாத பலர் தேங்கிவிடுகிறார்கள். 

மனைவி போனா எல்லாமே போச்சு என்பதை அழகாய் சொல்லி  WIFE IS LIFE.. வயதான காலத்தில்தான் துணை தேவை. உண்மையான கருத்து. பாட்டிகள்கூட சமாளித்துக் கொள்கிறார்கள் .... தாத்தாக்கள்தான் பாவம் .... என்று உணரவைக்கிறார்  ஆசிரியர்.

பெண்கள் ஆண்களை விட தைரிய சாலிகள் அதனால் தான் கணவனை இழந்ததும் பலபேர் வாழ்க்கையை தெளிவாய் எதிர்கொள்கிறார்கள், ஆனால் ஆண்கள் பாடு திண்டாட்டம் தான் 

பெருங்குடும்பம் பெருங்குற்றமாய்க் கருதப்படும் இன்றைய நாளில் பெரியவரின் பதினோரு குழந்தை வளர்ப்பு இன்றைய கால ஐந்து குடும்பங்களின் பொறுப்பு.

.**ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில். காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலும்,  நம்பிக்கையிலும்.**

கதை சொல்லும் ஆற்றல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.. அதுவும் சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களைக் கூட விட்டு விடாமல் சொல்லிப் போகிற ஆற்றல் ஸ்பெஷாலிட்டி

சின்ன ஆசைகள் கூட நிறைவேறமுடியாத தனிமை என்றுமே கொடியது தான். அதுவும் மனைவியை இழந்த கணவனுக்கும், கணவரை இழந்த மனைவிக்கும் அது இன்னும் கொடுமையான விஷயம். 

முதுமையெய்திய ஆண்களின் இன்றைய நிலையை மிக அழகாக அலசியிருக்கிறார்..

நிகழ்கால வாழ்க்கை முறையாய் அப்படியே சொல்லி உள்ள நிதர்சனமான கதை, நடைமுறை வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது

நமக்கே ஞாபகம் இல்லாததை அடுத்தவர்கள் நினைவு வைத்து கேட்கும்போது வரும் குழப்பத்தை தெளிவாகக் காட்டி இருக்கிறார்

நிதர்சனமாக உணர்வதை நிதானமான நினைவுடன் நிகழ்சிகளை அருமையாக நிலைபெறும் வண்ணம்  நகரங்களில் இருக்கும் நடைமுறை விவரங்களை நிரவிய கதை 

அழகான எதுகை மோனையுடன் பெயர்கள்பெயருக்கே தனி அதிகாரம் எழுதி ஆங்காங்கே இயல்பாக நகைச் சுவை இழையோட எழுதியுளளார்..

பழுத்த இலையைப்பார்த்து பச்சை ஓலை சிரிக்கும் .. சிறிது காலத்தில் தானும் பழுத்து உதிர்வதை நினைக்காமல்.. 

தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால் ஊரே திரண்டு வருமாம். தாசில்தாரே செத்துப் போனால் ஒரு நாய்கூட வராதாம்!  இது எப்படி இருக்குஎதார்த்தமா இருக்குல்லஆமாம் அவ்வளவுதான்பதவிக்காலத்தில் ஆடுகிறவர்கள் அதை இழந்ததும்மனத்தளவில் செத்துப் போவது அதனால்தான்.ஏற்றிவைத்த கிரீடத்தை இறக்கி வைக்கவே சிரமப்பட்டு அந்தச்சாதனைகள் அவர்களுக்கே மறந்துபோய் விடுவதுதானே  நடந்துவருகிறது ...

சொல்லுறத சொல்லிப்புட்டேன் செய்யுறத செஞ்சிடுங்க...        
நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க...         
எல்லாம்தான் படிச்சீங்க... என்ன பண்ணிக் கிழிச்சீங்க..

பட்டுக்கோட்டையார்  பாடலுடன் விமர்சனம் நிறைவுற்றாலும் என்றென்றும் மறக்காத தொடரும் கதை..
 மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.    

 


  

திருமதி இராஜராஜேஸ்வரி  அவர்கள்

மீண்டும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ளார்கள்.  
VGK-20 TO VGK-22 ஹாட்-ட்ரிக் சாதனைத் திலகம் 


திருமதி இராஜராஜேஸ்வரி  அவர்கள் பற்றிய சில சிறப்புச்செய்திகள்.

ஏற்கனவே மூன்று முறைகள் ஹாட்-ட்ரிக் அடித்து இப்போது நான்காவது முறையாகவும் ஹாட்-ட்ரிக் அடித்துள்ளார்கள். இதுவரை அதிக முறைகள் ஹாட்-ட்ரிக் அடித்துள்ள பெருமை இவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த நான்கில் மூன்று சாதாரண ஹாட்ரிக். மற்றொன்று ஆறாம் சுற்றுவரை நீடித்து உச்சத்தை எட்டிய மிகப்பெரிய ஹாட்-ட்ரிக்.

இவர்கள் VGK-04, VGK-05 + VGK-06 ஆகிய மூன்று சிறுகதை விமர்சனப் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பின்னரே, ஹாட்-ட்ரிக் பரிசு என்ற ஒன்று என்னால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தப் புதிய பரிசினை அடியேன் அறிமுகம் செய்த நாளாகிய சர்வதேச மகளிர் தினத்திலேயே முதல் ஹாட்-ட்ரிக் பரிசினை வென்ற முதல் பெண் பதிவர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.  மேலும் விபரங்களுக்கு  http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-03-03-third-prize-winner.html

சிலர் தொட்டதெல்லாம் துலங்கும் என்று சொல்வதுண்டு. இந்த அதிர்ஷ்ட தேவதை இதுவரை பெற்றதெல்லாம் [பெற்ற பரிசுகளெல்லாம்] ஹாட்-ட்ரிக்குடன் சேர்ந்தவை மட்டுமே என்பது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. 

  VGK-04 TO VGK-06 தொடர்ச்சியாக 3 முறைகள் வெற்றி 

 VGK-08 TO VGK-10 தொடர்ச்சியாக 3 முறைகள் வெற்றி  

 
VGK-12 TO VGK-17 
தொடர்ச்சியாக 6 முறைகள் வெற்றி

* VGK-20 TO VGK-22 தொடர்ச்சியாக 3 முறைகள் வெற்றி *
*இந்த ஹாட்-ட்ரிக் வெற்றி மேலும் 3 சுற்றுகள் வரைத்தொடரவும் வாய்ப்புகள் உள்ளன * ]


ஆகமொத்தம் இதுவரை இவர்கள் பெற்றுள்ளவை 15 வெற்றிகள். 
இந்தப் பதினைந்துமே ஹாட்-ட்ரிக் பரிசுடன் 
இணைந்த வெற்றிகள் ஆகும். ;)))) 


திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு
 நம்  ஸ்பெஷல் பாராட்டுக்கள். 
இனிய நல்வாழ்த்துகள்.
 IN HAT-TRICK ACHIEVEMENTS ! 
 


    


   
மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்


சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:
 ’ தாயுமானவள் ‘ 
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை *03. 07. 2014*
இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.
 

 * Third July .... the Sweetest Day ! *  


 
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

24 கருத்துகள்:

 1. இனிப்பான இரண்டாம் பரிசினையும் அளித்து
  ஹாட்ட்ரிக் பரிசுக்கும் தேர்வு செய்தமைக்கும்
  மனம் நிறைந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 2. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள :
  திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கு மனம் நிறைந்த
  வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 3. " வடிகாலை" அருமையாக விமரிசித்து இரண்டாம் பரிசு வாங்கிய
  திரு சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. திரு E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. என்னுடைய விமர்சனம் பரிசுக்குத் தெரிவாகி உள்ளது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி! வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 6. பணத்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்கிற மனோபாவம் பணம் வாங்க முடியாது தோற்றுப்போகும் இடங்களில்தான் ஒருவரின் சுயம் விழிக்கிறது.


  //இனிமையான வார்த்தைகள் மட்டுமே முதியவர்களுக்குப் போதும். அவர்கள் மனதும் வயிறும் குளிர்ந்துவிடும்.
  // அருமையான விமர்சனம் எழுதி என்னுடன் பரிசு பெற்றிருக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கும் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. http://esseshadri.blogspot.com/2014/06/blog-post_29.html
  காரஞ்சன் [சேஷ்] திரு E S சேஷாத்ரி அவர்கள்

  இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 9. நான் மூன்றாம் முறையாக போட்ட கமெண்ட்டாவது வந்து சேர்ந்ததா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI June 29, 2014 at 1:59 PM

   நான் மூன்றாம் முறையாக போட்ட கமெண்ட்டாவது வந்து சேர்ந்ததா?

   இல்லை ..... இல்லை ..... இல்லவே இல்லை.

   >>>>>

   நீக்கு
  2. RAVIJI RAVI June 29, 2014 at 1:59 PM

   //நான் மூன்றாம் முறையாக போட்ட கமெண்ட்டாவது வந்து சேர்ந்ததா?//

   SINCERE ஆக ஒருவருக்கு நாம் கமெண்ட்ஸ் கொடுக்க நினைத்தால் அதை முதலில் ஓர் இடத்தில் தனியாக அடித்து, SAVE செய்து கொண்டு பிறகே அனுப்ப வேண்டும்.

   நாம் அனுப்புவது சரியாகப் போய்ச்சேராமல் பிரச்சனை ஏற்படும்போது, அதை திரும்பவும் அனுப்பி வைக்க, அந்த நாம் SAVE செய்து வைத்தது நமக்கு உதவக்கூடும்.

   நான் பின்பற்றுவது இந்த முறை மட்டும். லேஸில் யாருக்கும் கமெண்ட்ஸ் கொடுக்க மாட்டேன் என்பது தனி விஷயம். ;)))))

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 10. 1. இனிப்பான இரண்டாம் பரிசை வென்றுள்ள, அன்பு நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கும் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
  2. சகோதரி ரா.ரா. அவர்கள் வென்றது எல்லாமெ HATTRICK பரிசுதானா? அய்யோடா! அந்த HATஐ ஒரு நாளக்காவது இரவல் தாங்களேன்! அந்த HATல அப்படி என்னதான் TRICK இருக்குன்னு பாத்துட்டு தரேனே! (-//ஒருவேள உங்க நாயனத்துல மட்டும்தேன் இந்த MUSIC வருதான்னு…தில்லானா மோமனாம்பாள் மனோரமா ஆச்சி மாதிரி//- -//DAADY எனக்கு ஒரு DOUBT…!//-கேட்டாக்க அதாண்டா திறமைன்னுவீங்க! நான்…அம்பேல்… தொடர் வெற்றிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.
  3. அன்புடன் MGR

  பதிலளிநீக்கு
 11. 1. இனிப்பான இரண்டாம் பரிசை வென்றுள்ள, அன்பு நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கும் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
  2. சகோதரி ரா.ரா. அவர்கள் வென்றது எல்லாமெ HATTRICK பரிசுதானா? அய்யோடா! அந்த HATஐ ஒரு நாளக்காவது இரவல் தாங்களேன்! அந்த HATல அப்படி என்னதான் TRICK இருக்குன்னு பாத்துட்டு தரேனே! (-//ஒருவேள உங்க நாயனத்துல மட்டும்தேன் இந்த MUSIC வருதான்னு…தில்லானா மோமனாம்பாள் மனோரமா ஆச்சி மாதிரி//- -//DAADY எனக்கு ஒரு DOUBT…!//-கேட்டாக்க அதாண்டா திறமைன்னுவீங்க! நான்…அம்பேல்… தொடர் வெற்றிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.
  3. அன்புடன் MGR

  பதிலளிநீக்கு
 12. இரண்டாம் பரிசுக்குரிய சிறப்பான விமர்சனமெழுதித் தேர்வாகியுள்ள திரு சேஷாத்ரி அவர்களுக்கும் தொடர் ஹாட்ரிக் பரிசுகள் பெற்று சாதனை படைத்துவரும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் அன்பான பாராட்டுகள். தொடரும் வெற்றிப்பயணத்துக்கு முன்கூட்டிய இனிய வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
 13. இரண்டாம் பரிசினை வென்றுள்ள சகோதரர் கவிஞர் E.S. சேஷாத்ரி (காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கும் ஆன்மீகப் பதிவர் சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. இரண்டாம் பரிசு பெற்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. இனிப்பான இரண்டாம் பரிசை வென்ற
  திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்
  திரு. E . S . சேஷாத்ரி அவர்களுக்கும்
  பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 16. இரண்டாம் பரிசை வென்றுள்ள, அன்பு நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கும் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 17. திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. இரண்டாம் பரிசை வென்றுள்ள, திரு சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு சேஷாத்திரி அவங்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு