About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, September 22, 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1

 
ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை

 

சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது. 

இந்த ஆண்டு அவர்கள்  ‘சிவப்பு பட்டுக் கயிறு’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பு நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு இந்த 2016 செப்டம்பர் மாதம் எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். 

இது .... நம் ஹனி மேடம் அவர்கள் வெளியிட்டுள்ள வெற்றிகரமான ஐந்தாவது நூலாகும். 

ஆனால் சிறுகதைத் தொகுப்பினில் இதுவே இவர்கள் வெளியிடும் முதல் நூலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
புதிய நூலின் முன்/பின் அட்டைகள் 


 இதுவரை ஏற்கனவே இவர்கள் 
’சாதனை அரசிகள்’ (கட்டுரைத் தொகுப்பு)
‘ங்கா...’ (குழந்தைக்கான கவிதைகள்)
‘அன்ன பட்சி’ (கவிதைத் தொகுப்பு)
‘பெண் பூக்கள்’ (கவிதைத் தொகுப்பு)  

ஆகிய நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார்கள்.

இவற்றில் ‘பெண் பூக்கள்’ பற்றிய எனது புகழுரை
இதோ இந்த இணைப்பினில் உள்ளது:இந்த ஆண்டு 2016 மே மாதம் வெளியிடப்பட்டுள்ள 
புத்தம் புதிய நூலான 
‘சிவப்பு பட்டுக் கயிறு’
 என்பதில் கீழ்க்கண்ட மிகச்சிறப்பான
15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

(1) சிவப்பு பட்டுக் கயிறு (2) சூலம் (3) கருணையாய் ஒரு வாழ்வு... (4) கத்திக்கப்பல் (5) பட்டாம் பூச்சிகளும் பூக்களும் (6) செம்மாதுளைச்சாறு (7) நான் மிஸ்டர் Y (8) சொர்க்கத்தின் எல்லை நரகம் (9) அப்பத்தா (10) ரக்‌ஷாபந்தன் (11) பிள்ளைக்கறி (12) எருமுட்டை (13) நந்தினி (14) கல்யாண முருங்கை (15) ஸ்ட்ரோக்.

ஒவ்வொரு கதையையும் நான் ஊன்றிப் படித்து வரும்போது, அவர்கள் எடுத்துக்கொண்டுள்ள வெவ்வேறு விதமான கதைக்கருக்களையும், அவற்றை அவர்கள் எழுதியுள்ள மிகச்சிறப்பான தனிப்பாணியையும், ஒருசில கதைகளில் அவர்களின் எழுத்தினில் உள்ள புரட்சிகரமானத் துணிச்சலையும் நினைத்து, எனக்குள் நான் மிகவும் வியந்துபோனேன். 

10.09.2016 அன்று மட்டுமே இந்த இவரின் தொகுப்பு நூல் என் கைகளுக்கு கிடைத்தது. கடந்த ஒரு வாரத்திற்குள், இந்த நூலினை முழுவதும் படித்து முடிக்காமல், என்னால் அங்கு இங்கு என்று எங்குமே நகரவே முடியாமல் என்னைக் கட்டிப்போட்டு விட்டன.  இந்த சாதனை அரசியின் அறிவு பூர்வமான, அர்த்தமுள்ள, மிக அருமையான ஆக்கங்கள் எனக்குப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தன.

இவற்றில் உள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் ஒருசில வரிகளாவது தங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் நினைத்துள்ளேன். அதனால் இந்த நூலினைப் பற்றிய என் புகழுரை மேலும் ஒரு சில பகுதிகளாகத் தொடர்ந்து வரக்கூடும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த முதல் பகுதி தான் ‘தேன் கூடு’ என்றால் இனி வர இருக்கும் பகுதிகள் ‘தேன் துளிகள்’ போலவே மிக இனிமையாக இருக்கக்கூடும்.  காணத்தவறாதீர்கள் !

கருத்தளிக்க மறவாதீர்கள்!!
  நூல் வெளியீடு:

சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)
நூல் ஆசிரியர்: 
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- onlyஇதுவரை கடந்த எட்டு ஆண்டுகளில் தனது வலைத்தளத்தினில் 

சுமார் 2500 பதிவுகளுக்கு மேல் கொடுத்துள்ள  


எழுத்துலக சாதனை அரசி + சகலகலாவல்லி

திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
பற்றி நான் ஏற்கனவே கீழ்க்கண்ட என் பதிவுகளில்
சிறப்பித்து எழுதியுள்ளவைகள் 
மீண்டும் தங்களின் பார்வைக்காக இதோ

 


இவர்களது வலைத்தளத்தினில் 

என் சிறப்புப் பேட்டி காண இதோ இணைப்பு:

என் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள் பற்றிய 
இவர்களின் விமர்சனங்கள் காண இதோ இணைப்பு:இந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் 
36 மணி நேர இடைவெளிகளில்
வெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:

பகுதி-2 .... 24.09.2016 சனி ...............    பகல்  10 மணிக்கு
பகுதி-3 .... 25.09.2016 ஞாயிறு ........   இரவு  10 மணிக்கு
பகுதி-4 .... 27.09.2016 செவ்வாய் ....   பகல்  10 மணிக்கு
பகுதி-5 .... 28.09.2016 புதன் ..............   இரவு  10 மணிக்கு
பகுதி-6 .... 30.09.2016 வெள்ளி .........  பகல்  10 மணிக்கு

தொடரும்
என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]


‘ப்ராப்தம்’ பதிவர் அனுப்பியுள்ள
’மங்கையர் மலர்’ டிஸம்பர் 2015 இதழின்
இலவச இணைப்பிலிருந்து சில படங்கள்:

  118 comments:

 1. ஆவலுடன் நாங்களும் தொடர்கிறோம்
  அறியாதவர்களை அறிமுகம் செய்வது எளிது
  மிக நன்றாக அறிந்தவர்களை
  மிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதுதான் கடினம்
  அதை மிக நேர்த்தியாகச் செய்துள்ள இந்தப் பதிவு
  மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. Ramani S September 22, 2016 at 9:55 PM

   வாங்கோ Mr. Ramani Sir, வணக்கம்.

   //ஆவலுடன் நாங்களும் தொடர்கிறோம்.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி. :)

   //அறியாதவர்களை அறிமுகம் செய்வது எளிது மிக நன்றாக அறிந்தவர்களை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதுதான் கடினம்.//

   என் அனுபவத்தில் மிகக்கடினமாக நானும் எனக்குள் நினைத்திருக்கும் இந்த ஒரு மாபெரும் உண்மையான சவாலைத் தாங்கள் இங்கு மிக எளிதாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள். :)

   எனக்கு மிக நன்றாக அறிமுகம் ஆகி நான் ஓரளவுக்கு அறிந்தவர்கள் மட்டுமல்ல .... எழுத்துலகிலும், வலையுலகிலும், தங்களைப்போலவே அனைவராலும் அறியப் பட்டுள்ளவராகவும், மிகப்பிரபலமானவராகவும், அதீதத் திறமைசாலியாகவும் இருப்பதனால், அவருடைய நூலினைப்போய் என் பார்வையில் நான் அறிமுகம் செய்வது என்பது எனக்கே மிகவும் கடினமோ கடினமாகத்தான் உள்ளது.

   //அதை மிக நேர்த்தியாகச் செய்துள்ள இந்தப் பதிவு மனம் கவர்ந்தது//

   என் மனம் கவந்தவராகிய தங்களால் இந்த வார்த்தைகளைக் கேட்க மட்டுமே மிக நேர்த்தியாக உணரமுடிகிறது .... என்னாலும்.

   //வாழ்த்துக்களுடன்....//

   இந்தத்தொடர் பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கும், தங்கள் ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியக்கூடிய மிக அழகான + அற்புதமான + வித்யாசமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   இந்த என் மிகச்சிறிய தொடருக்கு தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

   Delete
  2. நன்றி விஜிகே சார் & ரமணி சார்.

   // மிக நன்றாக அறிந்தவர்களை
   மிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதுதான் கடினம்
   அதை மிக நேர்த்தியாகச் செய்துள்ள இந்தப் பதிவு // மிக உண்மை ரமணி சார் !

   Delete
 2. தேனம்மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! தலைப்பிகேற்ப படங்கள் மிக அழகு! தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா? விமர்சனம் படிக்க மறுபடியும் வருகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. மனோ சாமிநாதன் September 22, 2016 at 10:05 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //தேனம்மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!//

   :) மிக்க மகிழ்ச்சி ! :)

   //தலைப்பிகேற்ப படங்கள் மிக அழகு!//

   தலைப்புத் தேர்வுக்குப் பின், ஆடி, ஓடித் தேடி எடுக்கப்பட்டவை இந்த மிக அழகான படங்கள்.

   //தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா? //

   :) மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் எனக்குள் மாற்றி மாற்றி பல்வேறு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்ததில், கடைசியில் என் மனதில் பிசுபிசுப்புடன் தேனாக ஒட்டிக்கொண்டது இந்தத் தலைப்பு மட்டுமே. :)

   //விமர்சனம் படிக்க மறுபடியும் வருகிறேன்!//

   தயவுசெய்து, இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவசியமாக வாங்கோ.

   இந்தப் பகுதிக்கு தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
  2. ///தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா? ///மிக்க நன்றி மனோ மேம்.

   Delete
 3. அஹா. மிக அருமையான ஆரம்பம் மட்டுமல்ல. இன்னும் ஐந்து இடுகைகளிலும் தொடர்ந்து கோலாகலம்தான்.

  ஒவ்வொரு வார்த்தையும் இதயபூர்வமாக எழுதி உள்ளீர்கள். பல நாள் வலையுலக நட்பும் தொடர்ந்த வாசிப்பும் ஊக்கமூட்டுதலும் உங்கள் பெருந்தன்மையான மனதிற்கு உரியது.

  மனம் நெகிழ்கிறது பிரதிபலன் கருதாத தங்கள் அன்பின்முன். மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் சார்.

  ( நாளையிலிருந்து ஒரு வாரம்/பத்து நாட்களுக்கு வெளியூர் செல்வதால் தொடர்ந்து தங்கள் வலைப்பக்கம் வரமுடியாதே என்ற கவலை வாட்டுகிறது.)

  செல்ஃபோனிலும் நான் நெட் பேக் போடுவதில்லை. பார்ப்போம். வர இயலாவிட்டால் தவறாக எண்ணாதீர்கள் சார். அடுத்த வாரம் வந்து மொத்தமாகப் படித்து ரசித்து கமெண்ட் போட்டு ஷேர் செய்கிறேன். :)

  மீண்டும் அன்பும் நன்றியும். :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan September 23, 2016 at 2:11 AM

   வாங்கோ, ஹனி மேடம், வணக்கம்.

   //நாளையிலிருந்து ஒரு வாரம்/பத்து நாட்களுக்கு வெளியூர் செல்வதால் தொடர்ந்து தங்கள் வலைப்பக்கம் வரமுடியாதே என்ற கவலை வாட்டுகிறது.//

   அடடா ... இதற்கெல்லாம் கவலைப்படாமல் தாங்கள் திட்டமிட்டபடி வெளியூருக்கு நிம்மதியாக நல்லபடியாகப் போய்விட்டு நல்லபடியாகத் திரும்பி வாங்கோ.

   இப்போதெல்லாம் நான் உங்களைப்போல் அடிக்கடி பதிவு இடுபவனாக இல்லாததாலும், ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள் மட்டுமே, பதிவுகள் கொடுத்துக்கொண்டிருப்பதாலும், இந்தத் தங்களின் நூல் அறிமுகப்பதிவு மட்டுமே என் வலைத்தளத்தினில் மேலாக, வரும் அமாவாசை தினமாகிய 30.09.2016 வெள்ளிக்கிழமை முதல் பல அமாவாசைகளுக்கும் காட்சியளித்துக்கொண்டே இருக்கக்கூடும்.

   அதனால் தாங்கள், தங்கள் செளகர்யப்படி மெதுவாகவும் பொறுமையாகவும் வருகை தந்து, அருமையாக ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்கவும்.

   அதற்குள் ஒன்றும் .....

   ’எந்த சுனாமியும் வரப் போறதில்லை’

   “அது எப்படித் தெரியும்?”

   என்று கேட்கிறீர்களா ஹனி மேடம்?

   தங்களிடமிருந்து (100ம் பக்கத்திலிருந்து) நான் திருடிக்கொண்டது மட்டுமே :)

   அன்புடன் VGK

   Delete
  2. ///இந்தத் தங்களின் நூல் அறிமுகப்பதிவு மட்டுமே என் வலைத்தளத்தினில் மேலாக, வரும் அமாவாசை தினமாகிய 30.09.2016 வெள்ளிக்கிழமை முதல் பல அமாவாசைகளுக்கும் காட்சியளித்துக்கொண்டே இருக்கக்கூடும். /// மிக்க நன்றியும் அன்பும் சார்

   Delete
 4. நன்றி ரமணி சார் & மனோ மேம் :) அருமையான பின்னூட்டங்கள் கொடுத்துள்ளீர்கள். தன்யளானேன் விஜிகே சார் , ரமணி சார் & மனோ மேம் :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan September 23, 2016 at 2:12 AM

   //நன்றி ரமணி சார் & மனோ மேம் :) அருமையான பின்னூட்டங்கள் கொடுத்துள்ளீர்கள். தன்யளானேன் விஜிகே சார் , ரமணி சார் & மனோ மேம் :)//

   தாயக்கட்டம் விளையாட்டில், எடுத்தவுடன் தாயம் + ஐந்து சேர்ந்து விழுந்தால், எல்லாக்காய்களையும் கொத்தோடு இறக்கிக்கொண்டு விடுவோம் .. நாங்கள்.

   அதுபோல மிகப்பிரபலங்களான இவர்கள் இருவரும் இந்தத்தொடர் வெளியிட்ட உடனேயே (தாயம் + ஐந்து) போல அடுத்தடுத்துப் பின்னூட்டங்கள் கொடுத்து மகிழ்வித்துள்ளார்கள் என்பதில் உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

   உங்களின் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்.

   Delete
  2. மிக்க நன்றியும் அன்பும் சார்

   Delete
 5. வாழ்த்துகள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ப.கந்தசாமி September 23, 2016 at 4:25 AM

   ஆஹா, வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //வாழ்த்துகள். தொடர்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   Delete
  2. நன்றி கந்தசாமி சார்.

   Delete
 6. தாங்கள் சொல்வது போல தேனம்மை ஆச்சி சாதனை அரசிதான். தினம் ஒரு பதிவு போடும் அவர் விரைவில் கின்னஸில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். சகோதரிக்கு வாழ்த்துகள். உங்களின் நூல் விமர்சனத்தை தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ September 23, 2016 at 5:23 AM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //தாங்கள் சொல்வது போல தேனம்மை ஆச்சி சாதனை அரசிதான்.//

   சாதாரண சாதனை அரசியா என்ன? ’சாதனை அரசிகள்’ என்ற தலைப்பினில் ஓர் கட்டுரை நூலையே வெளியிட்டுள்ள சாதனை அரசி ஆச்சே !

   //தினம் ஒரு பதிவு போடும் அவர்//

   தினமும் ஒரு பதிவா? தினம் ஒன்பது பதிவுகள் அல்லவா போட்டு வருகிறார்கள் :)

   அவர்களின் ஆர்வத்திற்கும், துடிப்புக்கும், துள்ளலுக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், வேகத்திற்கும், விவேகத்திற்கும், இளமைக்கும், இன்பமான சூழ்நிலைகளுக்கும், சந்தோஷமான மனநிலைக்கும், தினமும் ஒன்றென்ன ... ஒன்பது என்ன ... 90 பதிவுகள் போட்டலும் ஆச்சர்யப்படுவதற்கே இல்லை. :)

   //விரைவில் கின்னஸில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.//

   பிடிக்கட்டும். பிடிக்கட்டும். நம்மில் ஒரு பதிவர் இவ்வாறு சாதனை படைத்தால், நாம் எல்லோருமே (காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு) மகிழ்ந்து பெரும் விழா எடுத்துக் கொண்டாடலாம் ...... ஹனி மேடத்தின் செலவினிலேயே :)

   //சகோதரிக்கு வாழ்த்துகள். உங்களின் நூல் விமர்சனத்தை தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தாருங்கள், ஸார். என் உற்சாகத்தின் ஊற்றே தங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்களில் மட்டுமே உள்ளது, ஸார். இந்த முதல் பகுதிக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான திருப்தியான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
  2. அஹா ///
   //விரைவில் கின்னஸில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.// மிக்க நன்றி இளங்கோ சார்

   Delete
 7. முதல் கதையே முத்தான கதை. தொடருங்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். September 23, 2016 at 6:01 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //முதல் கதையே முத்தான கதை.//

   ????? அப்போ மற்ற கதைகளெல்லாம்????? :)))))

   //தொடருங்கள். தொடர்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.

   Delete
  2. மிக்க நன்றி ஸ்ரீராம் ! :)

   Delete
 8. நூலாசிரியர் தேனம்மைக்கு வாழ்த்துகள். நூலைப் பற்றிய தங்களின் பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் பதிவுகளைக் காணக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. Dr B Jambulingam September 23, 2016 at 6:34 AM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //நூலாசிரியர் தேனம்மைக்கு வாழ்த்துகள். நூலைப் பற்றிய தங்களின் பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் பதிவுகளைக் காணக் காத்திருக்கிறோம்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா. இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ.

   Delete
  2. மிக்க நன்றி ஜம்பு சார். & விஜிகே சார் :)

   Delete


 9. சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அவரது படைப்பு பற்றிய தங்களின் புகழு(மதிப்பு)ரையை படிக்க காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி September 23, 2016 at 7:46 AM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அவரது படைப்பு பற்றிய தங்களின் புகழு(மதிப்பு)ரையை படிக்க காத்திருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ஸார்.

   Delete
  2. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நடன சபாபதி சார் & விஜிகே சார் . புகழு(மதிப்பு)ரை .. :)

   Delete
 10. திருமதி.தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு
  இனிய வாழ்த்துக்கள்!
  அருமையான நூலறிமுகம்!

  ReplyDelete
  Replies
  1. Jeevalingam Yarlpavanan Kasirajalingam

   வாங்கோ, வணக்கம்.

   //திருமதி.தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு
   இனிய வாழ்த்துக்கள்! அருமையான நூலறிமுகம்!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
  2. மிக்க நன்றி யாழ்பாவண்ணன் சகோ & விஜிகே சார்

   Delete
 11. உங்களால் ஒரு சில வரிகள் எழுத் முடியாது என்று தெரியும்.
  அதனால் நூலில் நீங்கள் ரசித்தவைகளைத் தொடர்ந்து எழுதுங்கள், கோபு சார்!

  ReplyDelete
  Replies
  1. ஜீவி September 23, 2016 at 11:11 AM

   வாங்கோ ஸார், நமஸ்காரங்கள், வணக்கம்.

   //உங்களால் ஒரு சில வரிகள் எழுத முடியாது என்று தெரியும்.//

   ஆமாம் ஸார். அதையே சிலர் என் பலகீனமாகவும், வேறு சிலர் என் பலமாகவும் சொல்லுகிறார்கள் ஸார்.

   இருப்பினும் வேறு சிலரின் பதிவுகள் போல, முதல் நாலு வரிகள் வாசிப்பதற்குள் கொட்டாவியையும், தூக்கத்தையும் வரவழைப்பதாக இல்லாமல் இருக்கும்வரை ஓக்கே என நான் எனக்குள் நினைத்து திருப்திப்பட்டுக்கொண்டு வருகிறேன்.

   //அதனால் நூலில் நீங்கள் ரசித்தவைகளைத் தொடர்ந்து எழுதுங்கள், கோபு சார்!//

   தொடர்ந்து எழுதித் தள்ளப்போவதாக சங்கல்ப்பமே செய்து விட்டேன். :)

   யார் தடுத்தாலும் அது மட்டும் நிற்கப்போவது இல்லை.

   தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் ஊட்டிடும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ஸார்.

   Delete
  2. நன்றி ஜிவி சார் & விஜிகே சார்

   Delete
 12. அருமையான தொடக்கம் நம் சகோவைப் பற்றியும் அவரது புத்தகம் பற்றியும்....தொடர்கின்றோம் சார்...

  சாதனையரசி,தேனம்மை சகோவிற்கும் வாழ்த்துகள்!!

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான தொடக்கம் நம் சகோவைப் பற்றியும் அவரது புத்தகம் பற்றியும்....தொடர்கின்றோம் சார்...

   சாதனையரசி,தேனம்மை சகோவிற்கும் வாழ்த்துகள்!!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.

   Delete
  2. நன்றி துளசி சகோ & கீத்ஸ் & விஜிகே சார்.

   Delete
 13. தேனம்மைக்கு வாழ்த்துக்கள். அருமையாக எழுதுவார், தேனம்மை. அவர் கதையை ரசித்து படித்து விமர்சனம் செய்வதை படிக்க தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு September 23, 2016 at 3:11 PM

   வாங்கோ மேடம், வணக்கம்

   //தேனம்மைக்கு வாழ்த்துக்கள். அருமையாக எழுதுவார், தேனம்மை. அவர் கதையை ரசித்து படித்து விமர்சனம் செய்வதை படிக்க தொடர்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ மேடம், ப்ளீஸ்.

   Delete
  2. அஹா மிக்க நன்றி கோமதி மேம் & விஜிகே சார்

   Delete
 14. தேனின் தேனான கதைகளுக்கு தேனான விமர்சனமா?

  ஜமாயுங்கோ அண்ணா!

  சென்னை பாஷையில சொன்னா ஒவ்வொரு கதையையும் பின்னி பெடல் எடுத்து, பிரிச்சு மேய்ஞ்சுடுவேளே.

  இரட்டை போனஸ் எங்களுக்கு.

  ஒண்ணு தேனின் கதைகள்
  இன்னொன்று உங்களின் விமர்சனங்கள்.

  வாழ்த்துக்கள் தேன்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 23, 2016 at 3:11 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //தேனின் தேனான கதைகளுக்கு தேனான விமர்சனமா?
   ஜமாயுங்கோ அண்ணா!//

   ’ஜெ’ யின் தேனான வருகையும், தெவிட்டாத கருத்துக்களுக்கும் மட்டுமே அண்ணனை ஜமாய்க்க வைக்கிறதாக்கும்.

   //சென்னை பாஷையில சொன்னா ஒவ்வொரு கதையையும் பின்னி பெடல் எடுத்து, பிரிச்சு மேய்ஞ்சுடுவேளே.//

   அடடா, என்னவொரு உற்சாகமான எதிர்பார்ப்பு. எப்படித்தான் மேயப்போகிறேனோ .... ஜெயாவைப் போன்ற என் எழுத்தின் ரசிகைகளை மேய்க்கப்போகிறேனோ ! ஒரே கவலையாக்கீதூஊ.

   //இரட்டை போனஸ் எங்களுக்கு.

   ஒண்ணு தேனின் கதைகள்
   இன்னொன்று உங்களின் விமர்சனங்கள்.//

   ஹைய்யோ ! இரட்டை போனஸ் என்றாலே, ஜெயா ஒரு நாள் என்னிடம் கொடுத்துச்சென்ற நெய்யில் செய்த சீர் அதிரஸமும், மிகப்பெரிய சீர் லாடுவுமே என் நினைவுக்கு வந்து என்னை ஹிம்ஸிக்கிறது.

   //வாழ்த்துக்கள் தேன்.//

   தேன் இப்போது தேன் சிட்டுப்போல எங்கோ பறந்து போய் இருக்கிறார்கள். திரும்பி இங்கு வர ஒரு வாரமோ பத்து நாட்களோ ஆகும்.

   //அன்புடன் ஜெயந்தி ரமணி//

   ஜெயாவின் அன்பு வருகைக்கும், அழகுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ ஜெயா .... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   Delete
  2. சரியா சொன்னீங்க ஜெயந்தி. மிக அருமையா விமர்சனம் ( புகழுரை கொடுத்திருக்கார் விஜிகே சார் :) எனக்கு மூன்று போனஸ். சொல்லப்போனா ஆறு பகுதியிலும் ஆயிரக்கணக்கான போனஸ். :)

   Delete
  3. வந்துட்டேன் சார். ஆனா ஸ்லோவாதான் பின்னூட்டம் போடுவேன். பார்ட் பார்ட் ஆ. :)

   Delete
  4. Thenammai Lakshmanan October 2, 2016 at 10:36 PM

   //வந்துட்டேன் சார்.//

   ஆஹா ... மிக்க மகிழ்ச்சி.

   //ஆனா ஸ்லோவாதான் பின்னூட்டம் போடுவேன். பார்ட் பார்ட் ஆ. :)//

   அது போதும் மேடம். பார்ட் பார்ட் ஆ ஸ்லோவாகவே பின்னூட்டம் போடுங்கோ ... எல்லோருமே இங்கு உங்கள் வருகைக்காக மட்டுமே காத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் மறக்க வேண்டாம். :)

   Delete
 15. தொடருங்கள்! படிக்க காத்திருக்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. ‘தளிர்’ சுரேஷ் September 23, 2016 at 5:34 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தொடருங்கள்! படிக்க காத்திருக்கிறோம்!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
  2. நன்றி சுரேஷ் சகோ & வீஜிகே சார்

   Delete
 16. சாதனை அரசி திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
  அவர்களின் அருமையான தூலை அறிமுகம் செய்யும் கோபு பெரிப்பாவுக்கு பாராட்டுகளும்..
  நன்றிகளும்

  ReplyDelete
  Replies
  1. happy September 23, 2016 at 5:37 PM

   வாம்மா, என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம். நல்லா இருக்கிறாயா? உன்னை நான் பார்த்தே பல நாட்கள் ஆச்சு :(

   //சாதனை அரசி திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

   மிகவும் சந்தோஷம்.

   //அவர்களின் அருமையான [தூலை?] நூலை அறிமுகம் செய்யும் கோபு பெரிப்பாவுக்கு பாராட்டுகளும்.. நன்றிகளும்//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி....டா, செல்லம். நாம் தினமும் சந்திக்கும் நம் முன்னா பார்க்குக்கு இப்போ ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுதால், நேராக தினமும் நீ ஹாப்பியாக இங்கே மறக்காமல் வந்துடு.

   Delete
  2. மிக்க நன்றி ஹேப்பி & விஜிகே சார்.

   Delete
 17. Replies
  1. yathavan nambi September 23, 2016 at 5:37 PM

   //வாழ்த்துகள்.//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
  2. நன்றி யாதவன் நம்பி சகோ & விஜிகே சார்

   Delete
 18. திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள். ..தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு.. படங்களும் அழகா இணைச்சிருக்கீங்க...

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் September 23, 2016 at 5:40 PM

   வாம்மா, ராஜாத்தி. வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? உங்களைப் பார்த்தே பல வருஷங்கள் ஆச்சு :(

   ஒருவேளை லண்டனுக்கு போய் இருக்கீங்களோன்னு நினைச்சேன்.

   //திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..//

   மிக்க மகிழ்ச்சி.

   //தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு..//

   தலையில் வைத்துக்கொள்ளும் ’தலைப்...பூ’ எப்போதுமே ரொம்ப நல்லாத்தானே இருக்கும். கும்முன்னு வாஸனையாகவும் இருக்குமே.

   //படங்களும் அழகா இணைச்சிருக்கீங்க...//

   எந்தப்படத்தைச் சொல்றீங்கோ? அந்த கரகாட்டம் ஆடும் பெண் குட்டியின் படத்தைத் தானே? எனக்கும் அது மிகவும் பிடித்துத்தான் உள்ளது ... அதனால் தான் இணைச்சுப் புட்டேன். :)

   Delete
  2. நன்றி பூந்தளிர் & விஜிகே சார்

   Delete
 19. திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள். ..தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு.. படங்களும் அழகா இணைச்சிருக்கீங்க...

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் September 23, 2016 at 5:40 PM

   வாம்மா, மீண்டும் வருகையா? இரு கொம்புகளுடன் மாடு முட்டுவதுபோல ஒரே பின்னூட்டம் இருமுறை கிடைத்துள்ளன. சந்தோஷமே. :)

   நாம் தினமும் சந்தித்து மகிழும் நம் முன்னா பார்க் அடுத்த ஒரு வாரத்திற்கு இழுத்து மூடப்பட்டுள்ளதால் , தினமும் இங்கு வந்து மறக்காமல் எட்டிப்பாருங்கோ + கமெண்ட்ஸ் எழுதுங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   Delete
  2. நன்றி பூந்தளிர் & விஜிகே சார்

   Delete
 20. தேன்கூடும்..தேன் துளிகளும்...தலைப்புக்கு பொறுத்தமான படங்கள் அழகோ அழகு.. திருமதி தேனம்மை லஷ்மண் அவர்களுக்கு வாழ்த்துகள். திறமையானவர்களின் படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கோபால் ஸாருக்கு பாராட்டுகள்..

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... September 23, 2016 at 5:44 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தேன்கூடும்..தேன் துளிகளும்...தலைப்புக்கு பொருத்தமான படங்கள் அழகோ அழகு.. திருமதி தேனம்மை லஷ்மண் அவர்களுக்கு வாழ்த்துகள். திறமையானவர்களின் படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கோபால் ஸாருக்கு பாராட்டுகள்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.

   Delete
  2. நன்றி ஸ்ரத்தா, ஸபுரி, & விஜிகே சார்

   Delete
 21. சாதனை அரசி திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... September 23, 2016 at 5:46 PM

   //சாதனை அரசி திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.

   Delete
  2. நன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார்

   Delete
 22. திருமதி தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகள்....
  வேர என்ன சொல்லனு தெரியல கிஷ்ணாஜா...

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco September 23, 2016 at 5:52 PM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //திருமதி தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகள்....//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //வேற என்ன சொல்லனு தெரியல கிஷ்ணா(ஜா)...ஜி.//

   சொன்னவரை போதும்மா. தங்களின் அன்பான வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நாம் தினமும் சந்தித்து மகிழும் நம் முன்னா பார்க் அடுத்த ஒரு வாரத்திற்கு இழுத்து மூடப்பட்டுள்ளதால் , தினமும் இங்கு வந்து மறக்காமல் எட்டிப்பாருங்கோ + கமெண்ட்ஸ் எழுதுங்கோ ப்ளீஸ். :)

   Delete
  2. நன்றி ஷாமைன் பாஸ்கோ & விஜிகே சார்

   Delete
 23. சாதனை அரசி அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீனி வாசன் September 23, 2016 at 5:59 PM

   //சாதனை அரசி அவர்களுக்கு வாழ்த்துகள்//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
  2. நன்றி ஸ்ரீனிவாசன் & விஜிகே சார்

   Delete
 24. ஸாரி கிஷ்ணாஜி னு டைப் பண்ணினேன்... கிஷ்ணாஜா னு வந்திடிச்சி.. ஸாரி...

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco September 23, 2016 at 6:01 PM

   //ஸாரி கிஷ்ணாஜி னு டைப் பண்ணினேன்... கிஷ்ணாஜா னு வந்திடிச்சி.. ஸாரி...//

   ஸாரி யெல்லாம் வேண்டாங்க. நான் ஸாரியெல்லாம் கட்டுவதே இல்லை. :)))))

   //கிஷ்ணாஜா னு வந்திடிச்சி..//

   அதுவும் நம்

   ‘ரோ...ஜா’,

   ’பத்ம...ஜா’

   ‘சிந்து...ஜா’

   போன்ற பெண்குட்டிகளின் பெயர்கள் போல அழகாகத்தான் அமைந்துள்ளது. :)))))

   ஸோ டோண்ட் வொர்ரி, மேடம் !

   Delete
 25. கோபால்ஜி நமஸ்காரம்.... பையனுக்கு எக்ஸாம் நடக்குது. அதுதான் லேட்.. சிறப்பான அறிமுகம் இந்த பதிவுல திருமதி தேனம்மை அவர்களின் சாதனைகள் பற்றி சொல்லி இருக்கீங்க.. மாதாபாதம் மங்கையர் மலர்னு ஒரு புக் வாங்கிட்டு இருக்கேன்.. அந்த புக் கூட இலவச இணைப்பாக எப்பவுமே ஒரு குட்டி புக் கொடுப்பாங்க.. பெரும்பாலும் ரெஸிப்பி புக்கா தான் இருக்கும். அப்பாவும் மகனும் வெரைட்டி யா சாப்பாடு பண்ணினா விரும்பி சாப்பிடுவாங்க.. இதல்லாம் எதுக்கு இங்க சொல்றேன்னு தோணுதா... இந்த பதிவில் தேனம்மை அவர்களின் போட்டோ பார்த்ததும் வேர எங்கியோ இந்த போட்டோ முகம் பார்த்த நினைவு வந்தது. கவிதை..கட்டுரை..கதைகள் எழுதுவதில் மட்டும் திறமையானவங்கில்ல..சமையல் கலையிலும் திறமையானவங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது. 16---31--டிஸம்பர் மங்கையர் மலருடன் இவர் எழுதியிருந்த செட்டிநாட்டு காரசார சமையல் புக் இலவச இணைப்பாக கிடைத்தது. சமையல் குறிப்புகள் தெளிவாக விளக்கமாக வித்தியாசமாக இருந்திச்சி சில ஐட்டண்கஸ்ரீ ட்ரை பண்ணி பார்த்தேன். நல்லா டேஸ்டா இருந்திச்சி..தேனம்மை மேடம் தாங்க்ஸ் திறமைசாலிகளை பாராட்டி நாங்களும் அவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள கோபால்ஜி அறிமுகப்பட்த்தி வறாண்க படிக்கவே சந்தேஷமா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் September 24, 2016 at 9:59 AM

   //கோபால்ஜி நமஸ்காரம்.... பையனுக்கு எக்ஸாம் நடக்குது. அதுதான் லேட்..//

   வாங்கோ சாரூஊஊஊஊ. ஆசீர்வாதங்கள்.

   நல்லா இருக்கீங்களா? லேட்டாக நீ ஆடி அசைந்து வந்தாலும்கூட உன்னை இங்கு நான் பார்க்கும் போது ஒரு குடம் நிறைய, கொம்புத்தேனைப் பருகியது போன்றதோர் இன்பமும், மகிழ்ச்சியும் எனக்கு ஏற்படுகிறது. அது ஏனோ? உன்னால் மட்டும் தான் இதற்கு பதில் சொல்ல முடியும். :)

   >>>>>

   Delete
  2. கோபால்ஜி >>>>> சாரூ (2)

   //சிறப்பான அறிமுகம் இந்த பதிவுல திருமதி தேனம்மை அவர்களின் சாதனைகள் பற்றி சொல்லி இருக்கீங்க.. //

   மிக்க மகிழ்ச்சி சாரூ ..... அவர்கள் அஷ்டாவதானி, சதாவதானி போல பல்வேறு திறமைகள் வாய்ந்தவர்கள் என்பதில் எள்ளளவும் எனக்குச் சந்தேகமே இல்லை.

   >>>>>

   Delete
  3. கோபால்ஜி >>>>> சாரூ (3)

   (மாதாபாதம்) மாதாமாதம் மங்கையர் மலர்னு ஒரு புக் வாங்கிட்டு இருக்கேன்.. அந்த புக் கூட இலவச இணைப்பாக எப்பவுமே ஒரு குட்டி புக் கொடுப்பாங்க.. பெரும்பாலும் ரெஸிப்பி புக்கா தான் இருக்கும்.//

   தெரியும். நானும் ஒரு காலத்தில் ரெகுலராக ‘மங்கையர் மலர்’ இதழை வாங்கிக்கொண்டு இருந்தவன் மட்டுமே.

   //அப்பாவும் மகனும் வெரைட்டியா சாப்பாடு பண்ணினா விரும்பி சாப்பிடுவாங்க..//

   அதில் தவறேதும் இல்லை. நாம் கடுமையான உழைத்துச் சம்பாதிப்பதே வெரைட்டியான சாப்பாடுகளை விரும்பிச் சாப்பிட மட்டுமே என்பது என் கொள்கையாகும். :)

   //இதெல்லாம் எதுக்கு இங்க சொல்றேன்னு தோணுதா...//

   இல்லை. அப்படி ஏதும் தோணவில்லை. என்ன சொல்லப்போகிறாய் என்பது எனக்கு உடனடியாகவே புரிந்துவிட்டது.

   //இந்த பதிவில் தேனம்மை அவர்களின் போட்டோ பார்த்ததும் (வேர?) வேற எங்கியோ இந்த போட்டோ முகம் பார்த்த நினைவு வந்தது.//

   அவர்களின் முகராசி அப்படி. பளீரென்று வாய்விட்டுச் சிரிக்கும் அவர்களின் அந்த ஒரு அழகுச் சிரிப்பு ஒன்று மட்டுமே போதுமே.

   >>>>>

   Delete
  4. கோபால்ஜி >>>>> சாரூ (4)

   //கவிதை..கட்டுரை..கதைகள் எழுதுவதில் மட்டும் திறமையானவங்கில்ல.. சமையல் கலையிலும் திறமையானவங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது. 16---31--டிஸம்பர் மங்கையர் மலருடன் இவர் எழுதியிருந்த செட்டிநாட்டு காரசார சமையல் புக் இலவச இணைப்பாக கிடைத்தது. சமையல் குறிப்புகள் தெளிவாக விளக்கமாக வித்தியாசமாக இருந்திச்சி சில (ஐட்டண்கஸ்ரீ) ஐட்டம்ஸ் ட்ரை பண்ணி பார்த்தேன். நல்லா டேஸ்டா இருந்திச்சி..தேனம்மை மேடம் தாங்க்ஸ்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த நன்றிக்கு எங்கட ஹனி மேடமே பதில் அளிப்பார்கள் ..... அடுத்த 10 நாட்களுக்குள்.

   >>>>>

   Delete
  5. கோபால்ஜி >>>>> சாரூ (5)

   //திறமைசாலிகளை பாராட்டி நாங்களும் அவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள கோபால்ஜி அறிமுகப்படுத்தி (வறாண்க) வராங்க. படிக்கவே சந்தேஷமா இருக்கு...//

   திறமைசாலிகள் எங்கிருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்து அவர்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையில்லையா .... சாரூ.

   இதற்கு நல்ல மனம் மட்டும் இருந்தால் போதுமே .... பணம் ஏதும் வேண்டியது இல்லையே.

   இந்த நம் ஹனி மேடமும், உன்னைப்போலவும், நம் ராஜாத்தி-ரோஜாப்பூ போலவும், நம் செல்லக்குழந்தை ஹாப்பி போலவும், நம் முருகு போலவும், நம் ’மீனா-மூனா-முன்னா-மெஹர் மாமி’ போலவும், தினமும் என் வாட்ஸ்-அப் தொடர்புகளில் உள்ள நம் (1) ஜெயந்தி ஜெயா மாமி + (2) அன்புள்ள ஆச்சி + (3) அன்பின் மஞ்சு போலவும், என்னிடம் பிரியமாகவும், மிகுந்த மரியாதையாகவும், இனிமையாகவும் பழகக்கூடியவர்கள் மட்டுமே.

   இரண்டொரு முறை தொலைபேசியிலும் நாங்கள் இருவரும் பேசி எங்களுக்குள் மகிழ்ந்துள்ளோம்.

   கதை, கவிதை, கட்டுரை, சமையல் குறிப்புகள், ஷேர் மார்கெட் சமாச்சாரங்கள் மட்டுமல்லாமல், மேடைப் பேச்சுகள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புகள், வலையுலகம், ஃபேஸ்புக், ட்விட்டர், தமிழ் வார / மாத இதழ்களில் படைப்புகள், கோலங்கள் என, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும், மேலும் அனைத்துத் துறைகளிலும் இன்று கொடிகட்டிப் பறந்து பேரும் புகழும் பெற்றுள்ளவர்கள், இந்த ஹனி மேடம்.

   >>>>>

   Delete
  6. கோபால்ஜி >>>>> சாரூ (6)

   உங்களுக்கு ஒருவேளை இன்னும் மிகவும் டேஸ்டான, ரிச்சான & வெரைட்டியான சமையல் குறிப்புகள் வேண்டுமானால் இங்கு எங்கள் ஊரிலேயே உள்ள, மிகப்பிரபல பதிவரும் பத்திரிகை எழுத்தாளருமான திருமதி. ராதாபாலு மாமியின் ரெஸிப்பிக்களை அவர்களின் பதிவினில் படித்துப்பார்த்துப் பயன் பெறலாம்.

   எங்கள் வீட்டிலேயே விஷேச பண்டிகை நாட்கள் வரும்போது, பெரும்பாலும் அவர்கள், அவர்களின் பதிவினில் என்ன சொல்லியுள்ளார்கள் என்றே, சந்தேகம் வரும்போதெல்லாம் பார்த்துக்கொள்வது உண்டு.

   அவர்களின் வலைத்தளங்கள் மொத்தம் நான்கு:

   (1) 'அறுசுவைக் களஞ்சியம்”
   http://arusuvaikkalanjiyam.blogspot.com

   இதில் மட்டுமே இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட ரெஸிப்பிக்கள் கொடுத்துள்ளார்கள்.
   -=-=-

   (2) ‘எண்ணத்தின் வண்ணங்கள்’
   http://radhabaloo.blogspot.com

   -=-=-

   (3) ‘என் மன ஊஞ்சலிலே’
   http://enmanaoonjalil.blogspot.com

   -=-=-

   (4) ‘கோலங்கள்’
   http://azhaghu-kolangal.blogspot.com

   -=-=-

   >>>>>

   Delete
  7. கோபால்ஜி >>>>> சாரூ (7)

   எனக்கும் திருமதி. ராதா பாலு அவர்களுக்குமான நட்புக்கு அடையாளமாக, அவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஒருசில பதிவுகள் ...... இதோ உன் பார்வைக்காக:-

   http://gopu1949.blogspot.in/2015/02/blog-post.html

   http://gopu1949.blogspot.in/2015/02/3.html

   http://enmanaoonjalil.blogspot.com/2015/01/blog-post_31.html

   உன் அன்பான வருகைக்கும், மிக அழகான + ஆத்மார்த்தமான மிக நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊ.

   Delete
  8. மிக்க நன்றி ப்ராப்தம் & கோபால் சார் !!!!!!!!!!

   ///திறமைசாலிகள் எங்கிருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்து அவர்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையில்லையா .... சாரூ.

   இதற்கு நல்ல மனம் மட்டும் இருந்தால் போதுமே .... பணம் ஏதும் வேண்டியது இல்லையே. /// தன்யளானேன். :)

   வாழ்த்துகள் ராதாபாலு அவர்களுக்கும். :)

   Delete
 26. நிறைய தகவல்களுக்கு நன்றி கோபால்ஜி

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் September 24, 2016 at 3:25 PM

   //நிறைய தகவல்களுக்கு நன்றி கோபால்ஜி//

   தாங்கள், தங்களுக்கு இருக்கும் எவ்வளவோ வேலைகள் + நெருக்கடிக்களுக்கு இடையேயும், மங்கையர் மலர் - டிஸம்பர் 2015 இதழின் இலவச இணைப்பினைத் தேடி எடுத்து, அதிலுள்ள திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய சமையல் குறிப்புக்களைப் புகைப்படமாக எடுத்து அனுப்பி வைத்து அசத்தியுள்ளீர்கள்.

   நான் தான் உங்களுக்கு இதற்காக என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளணும்.

   தாங்கள் அனுப்பியுள்ள அந்தப்படங்களை இப்போது இதே பதிவினில் கடைசியாகக் காட்சிப் படுத்தியும் விட்டேன்.

   மிக்க நன்றி, சாரூ.

   Delete
 27. ‘ப்ராப்தம்’ http://httppraaptham.blogspot.in என்ற வலைப்பதிவர், டிஸம்பர் 2015 மங்கையர் மலரின் இலவச இணைப்பாக வந்துள்ள சமையல் குறிப்புகள் பகுதியில், நம் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் படங்களுடன் பகிர்ந்துள்ளவற்றை, ஒருசில புகைப்படங்கள் எடுத்து எனக்கு இன்று மெயில் மூலம் அனுப்பியுள்ளார்கள்.

  நான் அவற்றை இந்த என் பதிவின் இறுதியில் இப்போது (24.09.2016 மாலை 6 மணி சுமாருக்கு) புதிதாக இணைத்துள்ளேன்.

  இது ஏற்கனவே இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. அசத்துறீங்களே இருவரும். இருங்க போய் பார்த்துட்டு வரேன். !

   மிக்க நன்றி ப்ராப்தம் & விஜிகே சார் !!!

   Delete
 28. நல்லதொரு தொடர்க்கம். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் September 24, 2016 at 9:04 PM

   //நல்லதொரு தொடக்கம். தொடர்கிறேன்.//

   வாங்கோ வெங்கட்ஜி. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
  2. நன்றி வெங்கட் சகோ & விஜிகே சார்

   Delete
 29. கதைகளையும் சிறிது சொன்னால் நன்றாக இருக்கும். உங்கள் விமரிசனங்கள் படிக்க ஆவலைத் தூண்டும். தேனம்மை அவர்களுகு நல் வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. காமாட்சி September 25, 2016 at 1:59 AM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //கதைகளையும் சிறிது சொன்னால் நன்றாக இருக்கும்.//

   கதையைப்பற்றி ஒருசில ஹிண்ட்ஸ்களும், கதையை ஒட்டிய என் பொதுவான சில கருத்துக்களும், கதையில் வரும் ஹை-லைட்டான பகுதிகளில் ஏதேனும் கொஞ்சமும் தேர்ந்தெடுத்துக்கொடுப்பதாக உள்ளேன்.

   //உங்கள் விமரிசனங்கள் படிக்க ஆவலைத் தூண்டும்.//

   இருக்கலாம். பகுதி-2 ஏற்கனவே வெளியாகிவிட்டது. பகுதி-6 உடன் வரும் வெள்ளிக்கிழமை அமாவாசையன்று இந்தச்சிறிய தொடர் முடிந்து விடும்.

   //தேனம்மை அவர்களுக்கு நல் வாழ்த்துகள். அன்புடன்//

   தங்களின் அன்பான வருகைக்கு மிகவும் நன்றி. தினமும் வாங்கோ ப்ளீஸ்..

   Delete
  2. நன்றி காமாட்சி மேம் & விஜிகே சார்

   Delete
 30. நன்றி கோபால்ஜி... சந்தோஷ பெருமையுடன்......சாரூஊஊஊ...

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் September 25, 2016 at 5:33 PM

   //நன்றி கோபால்ஜி... சந்தோஷ பெருமையுடன்...... சாரூஊஊஊ...//

   சந்தேகமே இல்லாமல் நீ என் மூத்த நாட்டுப்பெண் போலவே, மிக அழகாகச் செயல்படுகிறாய். அவளும் உன்னைப்போலத்தான். எது கேட்டாலும் உடனடியாக அதனைத் தேடிப் பிடிச்சு எடுத்துக்கொடுத்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பாள்.

   DECEMBER 2015 மங்கையர் மலர் இதழின் இலவச இணைப்பினை, சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு தேடிப்பிடிச்சு, எனக்கு அனுப்பி வைக்கணும் என்றால் உன் இந்த ஆர்வத்தினை எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை.

   உன்னை நினைக்க எனக்கும் மிகவும் பெருமையாகத்தான் உள்ளது. :)))))

   மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ... சாரூஊஊஊ.

   Delete
  2. அஹா ! தலைய சுத்துதே இன்னொரு நாள் பின்னூட்டம் போட வரலாமா என நினைக்கும் அளவு ஏகப்பட்ட பின்னூட்டம் அதுவும் ஒரே பகுதியிலேயே. :) நன்றி இருவருக்கும். சிரத்தையாக எடுத்து அனுப்பிய சாரு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 31. இன்று இங்கு மீண்டும் வருகைக்குகாரணம்.. ப்ராப்தம்ஜியின் பின்னூட்டங்களும் கோபால்ஸாரின் ரிப்ளை பின்னூட்டங்களும்தான் மங்கையர்மலர்இலவச இணைப்பை போட்டோஅனுப்பி தேனம்மை அவர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள் கோபால்ஸார்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... September 25, 2016 at 6:09 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //இன்று இங்கு மீண்டும் வருகைக்குக் காரணம்.. ப்ராப்தம்ஜியின் பின்னூட்டங்களும் கோபால்ஸாரின் ரிப்ளை பின்னூட்டங்களும்தான்.//

   ஆஹா, பதிவைவிட பின்னூட்டங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது உங்களுக்கும் .. என்னைப்போலவே :) மிக்க மகிழ்ச்சி !

   //மங்கையர்மலர் இலவச இணைப்பை போட்டோ அனுப்பி தேனம்மை அவர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள் கோபால் ஸார்.//

   சகலகலாவல்லியான தேனம்மை ஹனி மேடத்தின் படைப்புகளை நான் அடிக்கடி பத்திரிகைகளில் காண்பது உண்டு. பார்த்த உடனேயே அதை ஒரு போட்டோ பிடித்து அவர்களுக்கு மெயிலிலோ / வாட்ஸ்-அப்பிலோ அனுப்பிப் பாராட்டி விடுவதும் உண்டு.

   சமீபத்தில்கூட 28.08.2016 தினமலர்-வாரமலர் இதழின் பக்கம் 6 to 10 இல் அவர்களின் ஃபேஸ்-புக் கதை ஒன்று ‘திருநிலை’ என்ற தலைப்பினில் வெளியாகியுள்ளது.

   அன்றைக்கே அவர்களுக்கு அனுப்பி பாராட்டியும் விட்டேன்.

   இன்று இங்கு இந்தப்பதிவினில் மங்கையர் மலர் படங்களை நான் இணைத்துள்ள பெருமை அனைத்தும் எங்கட ’ப்ராப்தம்’ ’சாரு’வை மட்டுமே ’சாரு’ம். :)

   Delete
  2. ஆமாம் சார். திருநிலை பற்றி நீங்கள்தான் முதலில் புகைப்படம் அனுப்பினீங்க. :) நன்றி.

   Delete
 32. தேனுக்கு வாழ்த்துகள்....
  ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri September 26, 2016 at 10:44 AM

   //தேனுக்கு வாழ்த்துகள்....//

   தேனுக்கு மட்டும் தானா? :)

   தேனைப் பருகக்கொடுத்த எனக்கு ஏதும் கிடையாதா? :(

   //ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா//

   சொன்னபடி உண்மையிலேயே தொடர்கிறீர்களா என நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.

   நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் என் பதிவுக்குத் தங்களின் வருகைக்கு என் நன்றிகள்.

   Delete
  2. நன்றி உமா & விஜிகே சார்:)

   Delete
 33. வாழ்த்த்துக்கள் தேனம்மை அவர்களுக்கு. வை.கோ அவர்களின் மதிப்புரை அணி சேர்க்கிறது

  ReplyDelete
  Replies
  1. Shakthiprabha September 28, 2016 at 3:02 PM

   //வாழ்த்துகள் தேனம்மை அவர்களுக்கு. வை.கோ அவர்களின் மதிப்புரை அணி சேர்க்கிறது.//

   வாங்கோ ஷக்தி. வணக்கம். செளக்யமா?

   தங்களின் இன்றைய அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

   Delete
  2. நன்றி சக்திப்ரபா & விஜிகே சார்

   Delete
  3. ஆஹா .... ஹனி மேடம், வணக்கம்.

   தங்களின் அன்பான இன்றைய திடீர் வருகையால் இந்த முதல் பகுதியின் பின்னூட்ட எண்ணிக்கைகள் குபீரென ஒரேயடியாக எகிறி 100-ஐ த்தாண்டி விட்டன.

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)

   Delete
  4. அன்புள்ள ஹனி மேடம். வணக்கம்.

   பின்னூட்ட எண்ணிக்கைகள் இத்துடன்: 108 எனக் காட்டுகிறது.

   இதுவரை இங்கு 35 முறைகள் தோன்றியுள்ள தங்களின் ’முகராசி’யே இதற்குக் காரணம். :)

   108 என்பது ’அஷ்டோத்ரம்’ என்னும் அழகான அர்த்தத்தைக்கூறுவதாகும். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
  5. அஹா நன்றி விஜிகே சார். எல்லாப் புகழும் உங்களுக்கே :)

   Delete
 34. ஆஹா... லாஸ்ட் ல...ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊ...கோபூஜி கதை புக் உங்களுக்கு அனுப்பினாங்களா. அதிலேந்துதான் இவ்வளவு விஷயங்க எழுதீறீங்களா.. அடடா நம்ம சாரூஜியும். போட்டோ அனுப்பி இருக்காங்களே..

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. October 3, 2016 at 11:11 AM

   வா ..... மீனா, வணக்கம்.

   //ஆஹா... லாஸ்ட் ல...ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊ...//

   சுத்த சோம்பேறி என்பதனை இப்படியும் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்தான்.

   //கோபூஜி கதை புக் உங்களுக்கு அனுப்பினாங்களா.//

   இல்லாதுபோனால் நான், என் சொந்தக் காசு போட்டு, இதனை வாங்கி விடுவேனா ..... என்ன? :)))))

   இதுபோல பல நூலாசிரியர்கள் அவரவர்களாகவே, ஓர் மரியாதை நிமித்தமாகவும், அன்பளிப்பாகவும் அனுப்பியுள்ள நூல்களை வைக்கவோ, பத்திரப்படுத்தவோ, பராமரிக்கவோ, என் வீட்டில் இடம் இல்லாமல் கஷ்டமாக உள்ளது.

   அத்துடன் என்னைச்சுற்றி எப்போதும் படுத்துக்கொண்டுள்ள இவற்றையெல்லாம், அவ்வப்போது, எப்படியோ பார்த்துவிடும் என் மேலிடத்தின் கோபத்திற்கும் நான் ஆளாக நேரிடுகிறது. :)))))

   //அதிலேந்துதான் இவ்வளவு விஷயங்க எழுதீறீங்களா..//

   முழு நூலையும், பக்கம் பக்கமாக, பத்தி பத்தியாக, வரி வரியாக, வாக்கியம் வாக்கியமாக, எழுத்து எழுத்தாக முழுவதும் ரஸித்து ருசித்து என் மண்டையில் நன்கு ஏற்றிக்கொண்டு, பிறகு அதனை அப்படியே ஜூஸ் பிழிந்து உனக்கு இங்கு சுருக்கமாக, எளிதில் பருகும் வண்ணம் கொடுத்துள்ளேனாக்கும். அதைக்குடிக்கவே உனக்கு மிகவும் வலிக்குதாக்கும்.

   //அடடா நம்ம சாரூஜியும். போட்டோ அனுப்பி இருக்காங்களே..//

   நான் கேட்டிருந்த மும்பை தொந்திப்பிள்ளையார் படமோ என நான் நினைத்து விட்டேன். அதை வரும் டிஸம்பர் ஜனவரியில், பிள்ளையாருக்கு முழுத்தொந்தியான பிறகு அனுப்பினால் போதும் என நான் அவளிடம் சொல்லியும் விட்டேன்.

   பாவம் அவள் ..... இதனை எனக்காகவும், நம் ஹனி மேடத்துக்காகவும் கஷ்டப்பட்டு எங்கோ தேடிப்பிடித்து அனுப்பி மகிழ்வித்திருக்கிறாள்.

   உன் அன்பான வருகைக்கும், குறும்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மீனா.

   Delete
  2. நன்றி சிப்பிக்குள் முத்து. அழகான கடிதம் படித்து ரசித்தேன். சாரின் பதில் கடிதத்தையும் :)

   Delete
 35. தொடரின் மற்ற பதிவுகளைப் பார்த்துவிட்டுக் கடைசியாகத்தான் முகப்புக்கு வந்தேன். 10ம் தேதி செப்டம்பரில் வந்த புத்தகத்துக்கு உடனேயே நல்ல விரிவாக விமரிசனம் செய்துள்ளீர்கள்.

  நல்ல நேர்மையான சரியான சமயத்தில் (ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான். உடனே சரியான சமயத்தில் செய்தது பாராட்டுக்குரியது) விமரிசனம், அதுவும் நீண்ட விமரிசனம் செய்தது பாராட்டத்தக்க முயற்சி. சிறுகதைத் தொகுப்பு, சிறப்பாக இல்லையென்றால் 5 பகுதிகளாக எழுதி, ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்க மாட்டீர்கள்.

  You have done justice to what you intended to do. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 6:01 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தொடரின் மற்ற பதிவுகளைப் பார்த்துவிட்டுக் கடைசியாகத்தான் முகப்புக்கு வந்தேன்.//

   ”போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்திக்கொண்டால் என்ன?” என்று சொல்லுவார்கள். அதுபோல தாங்கள் செய்துள்ள இதுவும் மிகவும் நியாயமாகத்தான் உள்ளது.

   //10ம் தேதி செப்டம்பரில் வந்த புத்தகத்துக்கு உடனேயே நல்ல விரிவாக விமரிசனம் செய்துள்ளீர்கள்.//

   என் கைகளில் பளபளப்பான சிவப்பு பட்டுக்கயிறு கிடைத்ததும், அதை உடனே (பிரித்து இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு இன்புறுவது போலவே) பிரித்துப் படித்துப் பதிவிடும் இதே வேலையாக மட்டுமே நான் இருந்தேன்.

   //நல்ல நேர்மையான சரியான சமயத்தில் (ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான். உடனே சரியான சமயத்தில் செய்தது பாராட்டுக்குரியது) விமரிசனம், அதுவும் நீண்ட விமரிசனம் செய்தது பாராட்டத்தக்க முயற்சி.//

   மிக்க மகிழ்ச்சி. என்னிடம் இன்னும் படிக்கப்படாமல் நிறைய நூல்கள் .... ஆறின கஞ்சி பழங்கஞ்சி போலவே ஆகி .... தேங்கிப்போய் உள்ளன.

   அதனால் தாங்கள் இங்கு சொல்லியுள்ளதும் மிகவும் நியாயமே.

   //சிறுகதைத் தொகுப்பு, சிறப்பாக இல்லையென்றால் 5 பகுதிகளாக எழுதி, ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்க மாட்டீர்கள்.//

   அதுவும் இதில் ஒளிந்துள்ளதோர் மாபெரும் உண்மை மட்டுமே.

   நாம் அவ்வளவாகப் பிரபலமாக இல்லாதிருப்பினும்கூட, நம் ஹனிமேடம் போன்ற பிரபலங்களின் நூல்களைப் படித்து இதுபோல ஓர் மதிப்புரை வழங்குவது நமக்கும் ஓர் சின்ன பெருமை தானே ! :)

   //You have done justice to what you intended to do. வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான, ஆத்மார்த்தமான, ஏதோவொரு JUSTICE உடன் கூடிய இனிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
  2. நன்றி நெல்லைத் தமிழன்.

   ரொம்ப சரியா சொன்னீங்க. ///அதுவும் நீண்ட விமரிசனம் செய்தது பாராட்டத்தக்க முயற்சி. சிறுகதைத் தொகுப்பு, சிறப்பாக இல்லையென்றால் 5 பகுதிகளாக எழுதி, ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்க மாட்டீர்கள்.

   You have done justice to what you intended to do. ///

   என்னது நீங்க ப்ரபலம் இல்லியா என்ன சார் இது கலாய்க்கிறீங்களா. :) அருமையான விரிவான மதிப்புரைக்கு மீண்டும் நன்றி சார் :)

   Delete
 36. வணக்கம் கோபு சார். இன்றுதான் இனிதாய் வலையுலகில் மறுபடியும் காலெடுத்து வைத்துள்ளேன். தங்கள் பதிவுகளை தேன்கூட்டின் முதல்பகுதியோடு துவங்குகிறேன். என்ன அழகான அறிமுகம்.. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்றாலும் பூவாசனை எட்டாதூரத்தில் இருப்போர்க்கு விளம்பரம் அவசியம்தானே.. மிகச்சரியாக அதை செய்திருக்கிறீர்கள்... சாதனை அரசி என்ற பட்டமும் மிகப்பொருத்தம்.. இங்கு குறிப்பிட்டுள்ள கதைகளுள் சிலவற்றை ஏற்கனவே அவருடைய தளத்தில் வாசித்திருக்கிறேன் என்றாலும் உங்களுடைய பார்வையில் அவற்றைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். பதிவை வாசிக்கும் நேரத்தை விடவும் சுவாரசியமான பின்னூட்டங்களை வாசிப்பதில் நேரம் போய்விடுகிறது. இதோ அடுத்த பதிவை நோக்கிச் செல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கீதமஞ்சரி October 4, 2016 at 8:50 AM

   //வணக்கம் கோபு சார்.//

   வாங்கோ மேடம், வணக்கம்.

   இன்றைய பொழுது இனிமையாக விடிந்ததில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது.

   அதற்கு இரண்டு காரணங்கள்.

   1) எழுத்துலகில் தங்களைப்போன்றே என்னிடம் பிரியமாகப் பழகி வந்து, என் வலையுலக ஆரம்ப நாட்களில் (2011), தன் பின்னூட்டங்கள் மூலம், அவ்வப்போது எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்துகொண்டிருந்த, ’கற்றலும் கேட்டலும்’ வலைப்பதிவர் திருமதி. ராஜி அவர்களுக்கு இன்று பிறந்தநாள் என்ற ஃபேஸ்-புக் செய்தி மெயில் மூலம் கிடைக்கப்பெற்றேன்.

   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

   2) நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் 'Number-1 விமர்சன வித்தகி’யான தாங்களே இன்று என் பதிவுப்பக்கம் வருகை தந்து, என் விமர்சனங்களை விமர்சனம் செய்திடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது, நான் செய்துள்ளதோர் மாபெரும் பாக்யம்.

   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

   >>>>>

   Delete
  2. கோபு >>>>> கீதமஞ்சரி (2)

   //இன்றுதான் இனிதாய் வலையுலகில் மறுபடியும் காலெடுத்து வைத்துள்ளேன். தங்கள் பதிவுகளை தேன்கூட்டின் முதல்பகுதியோடு துவங்குகிறேன்.//

   தாங்கள் மறுபடியும் இனிதாய் வலையுலகில் காலெடுத்து வைத்த இடம் தேனாக அமைந்துள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

   //என்ன அழகான அறிமுகம்.. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்றாலும் பூவாசனை எட்டாதூரத்தில் இருப்போர்க்கு விளம்பரம் அவசியம்தானே.. மிகச்சரியாக அதை செய்திருக்கிறீர்கள்... சாதனை அரசி என்ற பட்டமும் மிகப்பொருத்தம்..//

   ஆஹா, மிகவும் அருமையாகவும், அழகாகவும் இதனை இங்கு தகுந்ததோர் உதாரணத்துடன் தங்களின் தனிப்பாணியில் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

   படித்ததும் பூக்கடைக்குள் நுழைந்தது போல கும்மென்றதோர் வாஸனை தூக்கலாக உள்ளது. :)

   //இங்கு குறிப்பிட்டுள்ள கதைகளுள் சிலவற்றை ஏற்கனவே அவருடைய தளத்தில் வாசித்திருக்கிறேன் என்றாலும் உங்களுடைய பார்வையில் அவற்றைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம். அவர்களின் பதிவினில் நாம் வாசித்தது ஓர் தனி புஷ்பம் போல என்றால், இந்த என் தொடர், அழகாக நெருக்கமாகத் தொடுத்ததோர் பூமாலையாகவே தங்களுக்குக் காட்சியளிக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.

   //பதிவை வாசிக்கும் நேரத்தை விடவும் சுவாரசியமான பின்னூட்டங்களை வாசிப்பதில் நேரம் போய்விடுகிறது.//

   அதுதான் எனக்கும், எனக்குள் ஏற்பட்டுவரும் மிகப்பெரிய சுவாரஸ்யமே. :)))))

   //இதோ அடுத்த பதிவை நோக்கிச் செல்கிறேன்.//

   சரி, மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆர்வத்துடன் கூடிய வாசிப்புக்கும், எதையும் நேர்த்தியான முறையில் நேரேட் செய்து, பின்னூட்டத்தில் சொல்லும் தனித்திறமைகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 37. மிக்க நன்றி கீத்ஸ்..

  நமது அன்பிற்கினிய ராஜியின் பிறந்தநாளா.. ஹ்ம்ம். மிஸ் பண்றோம் அவங்கள..

  எனது தனிப்பதிவையும் இங்கே அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சார். :)

  ReplyDelete