About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, March 16, 2017

முனைவர் ஐயாவுடன் ஹாட்-ட்ரிக் சந்திப்பு - 15.03.2017


கோவையின் மிகப் பிரபல பதிவர்
முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுடன் 
மூன்றாம் முறையாக மீண்டும் ஓர் இனிய சந்திப்பு !

02.04.2014 முதல் வருகையினைக்காண
http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html


10.10.2015 இரண்டாவது 
வருகையினைக் கண்டு களிக்க


நேற்று 15.03.2017 புதன்கிழமை 
மூன்றாவது முறையாக 
’ஹாட்-ட்ரிக்’ வருகை தந்து
மகிழ்வித்த போது ..... 


கடும் வெயிலில் மதியம் 12 மணிக்கு 
வீட்டுக்கு வந்தவரை வரவேற்று, 
கட்டிலில் அமர வைத்து, 
ஏ.ஸி.யையும், ஃபேனையும் போட்டு
  ‘தீர்த்தம்’ அளித்தபோது !


 

தீர்த்தம் சாப்பிடும்போது சைடு-டிஷ் ஆக
இருக்கட்டும் என்று நினைத்து அவர் அன்புடன் 
 கோவையிலிருந்து கொண்டுவந்து அளித்த 
ஏராளமான + தாராளமான தீனி ஐட்டம்ஸ் இதோ

 ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் மைசூர்ப்பா
கால் கிலோவில் இரண்டு பாக்கெட்டுகள்
A1 நேத்திரங்காய் சிப்ஸ்  
100 கிராம் ஸ்பெஷல் பாக்கெட்
PARLE - MONACO - SIXER SALTED
BISCUITS 200 GRAMS SUPER PACK

எங்கள் வீட்டின் சார்பில் மதியம் ஒரு மணி சுமாருக்கு
பாயஸம், வாழைக்காய் பொடிமாஸ், பூசணிக்காய் கூட்டு, 
அப்பளம், சித்ரான்னம், சாதம், சாம்பார், மோர்க்குழம்பு, 
ரஸம், தயிர், மோர், ஊறுகாயுடன், நுனி இலையில்  
மதிய விருந்து அளித்தபோது


உண்ட களைப்புத் தொண்டனுக்கும் உண்டல்லவா!

மதியம் 2 மணி முதல் 4.00 மணி வரை சற்றே
ஓய்வாக கட்டிலில் கால் நீட்டிப் 
படுத்துக்கொண்டு விட்டார்கள்.


அதன்பின் பஜ்ஜி, வடை, உளுத்தம் போண்டாக்களுடன் 
சூடான ஃபில்டர் காஃபி அளித்து 
அவரை எழுச்சியுடன் எங்கள் கட்டடத்தின் 
உச்சிக்கே  கூட்டிச்சென்று 
உச்சிப்பிள்ளையாரைக் காட்டி
சற்று நேரம் உச்சி குளிர வைத்தேன்.


எங்கள் இல்லத்தில் எடுக்கப்பட்ட மிகவும் 
கேஷுவலான சில புகைப்படங்கள் 


 மாலை மிகச்சரியாக ஆறு மணிக்கு 
மாப்பிள்ளை போல சில்க் ஜிப்பா  + ஜரிகை வேஷ்டி அணிந்துகொண்டு என்னுடன் 
ஓர் முக்கியமான இடத்திற்குப் புறப்படத் தயாராகி விட்டார்.இவர் நேற்று திடீரென்று
திருச்சிக்கு எதற்காக வருகை தந்திருந்தார்?

மாலை 6 மணிக்கு 
சில்க் ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன்  
மாப்பிள்ளை போல ட்ரெஸ் செய்துகொண்டு
என்னுடன் எங்கு புறப்பட்டார்?

அங்கு வந்திருந்த இதர பதிவர்கள் 
யார் யாரை இவர் சந்தித்தார்?

அங்கு மேற்கொண்டு என்னதான் நடந்தது?

போன்ற மற்ற சுவையான விபரங்கள் 
இதன் அடுத்த பகுதியில் .....

தொடரும் 


71 comments:

 1. ஆஆவ்வ்வ்வ்வ் மீ த 1ச்ட்டூஊஊஊஊ:) நில்லுங்க பின்பு வந்துதான் படிப்பேன்:).

  ReplyDelete
  Replies
  1. athira March 16, 2017 at 4:28 PM

   //ஆஆவ்வ்வ்வ்வ் மீ த 1ச்ட்டூஊஊஊஊ:)//

   ஃபர்ஸ்டாக வந்துள்ள உங்களுக்கும் எங்களிடம் ‘தீர்த்தம்’ உண்டு.

   // நில்லுங்க பின்பு வந்துதான் படிப்பேன்:).//

   நீங்கள் பின்பு வரும்வரை நான் நின்றுகொண்டேதான் இருப்பேன். :)

   நின்றுகொண்டே நிதானத்துடன் ஸ்டெடியாகத் தீர்த்தம் ஆடுவேன். :)

   Delete
 2. ஸூப்பர் தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. KILLERGEE Devakottai March 16, 2017 at 4:39 PM

   //ஸூப்பர் தொடர்கிறேன்...//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 3. மூத்த வலைப்பதிவர் முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்கள், தங்கள் இல்லம் வந்து இருக்கிறார் என்று செல்போனில் சொன்னவுடனேயே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த பதிவு இது. அப்புறம் அவரையும் உங்களையும் நானும் கண்டு உரையாடியதும் ஒரு மகிழ்வான தருணம்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ March 16, 2017 at 5:11 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மூத்த வலைப்பதிவர் முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்கள், தங்கள் இல்லம் வந்து இருக்கிறார் என்று செல்போனில் சொன்னவுடனேயே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த பதிவு இது.//

   அப்படியா ! ஆம் இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபூர்வ சந்திப்புக்களை பதிவாக்கி வைத்தால், நம்மிடம் அது ஒரு நிரந்தர ஆவணமாக இருக்கக்கூடும் .... சந்தித்த தேதிகள் + நினைவுகள் முதலியன மறக்காமலும் இருக்கக்கூடும். அதனால் மட்டுமே பதிவு செய்து வெளியிட்டுள்ளேன்.

   //அப்புறம் அவரையும் உங்களையும் நானும் கண்டு உரையாடியதும் ஒரு மகிழ்வான தருணம்.//

   ஆம். தங்களையும் மீண்டும் ஒருமுறை அங்கு அன்று நான் சந்திக்க நேர்ந்ததில் எனக்கு மனதுக்கு மேலும் மிகவும் மகிழ்ச்சியானது.

   இதன் தொடர்ச்சியான பகுதி-2 ஐ நான் வெளியிட தாங்கள் செய்துள்ள புகைப்பட உதவிகளுக்கு, தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 4. இன்றைக்குக் காலைலதான் நினைத்தேன்.. என்ன கோபு சார் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே அப்படின்னு.

  ‘தீர்த்தம்’ (என்னன்னு கீழ போட்டிருக்கும் படத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டேன்) அவருக்கு மட்டும்தானா? வீட்டில் எடுத்த படமெல்லாம் கொஞ்சம் ஆடியதுபோல் ஃபோகஸ் குறைவாக வந்திருக்கிறதே.

  மதுரா ஹோட்டல் மெனு அட்டஹாசமா இருக்கு. சுவையும் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லியிருக்கீங்க. பொதுவா என்ன பாயசம்னுலாம் விவரமாக எழுதுவீங்களே. இப்போ இனிப்பு சாப்பிட வீட்டில் தடை போட்டுவிட்டார்களா?

  முனைவரும் நீங்களும் இளமையாத்தான் இருக்கீங்க.

  மாடில கந்தசாமி சார் பின்புலத்துல மலைக்கோட்டை ரொம்ப நல்லா வந்திருக்கு.

  'தீனி' லிஸ்ட், எங்களைப்போல் கஷ்டப்பட்டு டயட்டில் இருப்பவர்களைப் பழிவாங்கவா?

  உங்க ரூம்லயும் தொலைக்காட்சி இடம் மாறியிருக்கா அல்லது புதிதாக வந்திருக்கா?

  'எதற்காக வந்திருந்தார்' என்று அவர் பதிவில் கொஞ்ச நாள் முன்னால் திருச்சி வரப்போவதாக எழுதியிருந்ததைப் படித்த ஞாபகம். 'காவலன்'ல வடிவேலு கேட்கிறமாதிரி, 'கந்தசாமி எழுதியிருந்தாரா அல்லது கோபு சாரா?'

  வரும் பதிவுகள்ல, மற்ற பதிவர்களோட லேடஸ்ட் புகைப்படத்தைப் பார்க்கலாம். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் March 16, 2017 at 5:48 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றைக்குக் காலைலதான் நினைத்தேன்.. என்ன கோபு சார் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே அப்படின்னு.//

   அடடா, என்னைப்பற்றி நினைக்கவும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் இருக்கிறார் என நினைக்கும் போது எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குது.

   [புல் அரிப்பதால் எப்போதும் சீப்பும் கையுமாகவே உள்ளேன் :) ]

   //‘தீர்த்தம்’ (என்னன்னு கீழ போட்டிருக்கும் படத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டேன்) அவருக்கு மட்டும்தானா?//

   உங்களுக்கும் உண்டு ..... அதுவும் மிக ஒஸத்தியான + மிகப்புனிதமான + உங்களுக்குப் பிடித்தமான துளஸி ’தீர்த்தம்’ மாகவே ! அதன் பெயர் கூட எனக்கு மறந்தே போச்சு ....... (Scotch ?) ஸ்காட்ச் ஆ ????? :)

   //வீட்டில் எடுத்த படமெல்லாம் கொஞ்சம் ஆடியதுபோல் ஃபோகஸ் குறைவாக வந்திருக்கிறதே.//

   ஆமாம். எனக்கும் திருப்தியாக இல்லை. வீடும் வீட்டில் உள்ளோருமே ஆடிப்போய் இருக்கும்போது, படமெல்லாம் ஆடாமல் என்ன செய்யும்? :)

   //மதுரா ஹோட்டல் மெனு அட்டஹாசமா இருக்கு. சுவையும் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லியிருக்கீங்க. பொதுவா என்ன பாயசம்னுலாம் விவரமாக எழுதுவீங்களே. //

   ரவையில் செய்த பால் பாயஸம் என்று நினைக்கிறேன். குட்டியூண்டு கப்பில் ஊற்றிப் போனார்கள். நான் விரும்பிக் குடித்ததும் எனக்கு மீண்டும் மீண்டும் 2-3 தடவை ஊற்றிக் கொண்டே இருந்தார்கள்.

   Unlimited Meals அல்லவா ... அதனாலும் இருக்கலாம். ஒருவேளை சாப்பிட வருவோரில் ஷுகர் பேஷண்ட்ஸ் அதிகமாகிப் போய் விட்டதாலும், அந்தப் பாயஸம் தீரவேண்டுமே என்ற கவலையிலும் இருக்கலாம்.

   நாளை இந்நேரம் எவன் இப்படி அன்புடன் நமக்கு பாயஸம் தரப்போகிறான் என நினைத்து நானும் 2-3 ரெளண்ட்ஸ் ஸ்மால் கட்டிங் எடுத்துக்கொண்டேன். இருப்பினும் மொத்தத்தில் கணக்குப்பார்த்தால் அது ஒரு குவார்டர் கூட தேறாது. அதற்கு மேலும் எடுத்துக்கொள்வது நியாயமாகவும், நாகரீகமாகவும் இருக்காது என்பதால், ஃபுல் கிக் ஏற்பட்டவன் போல நானே ”போதும்” என்று சொல்லிவிட்டேன். :)

   //இப்போ இனிப்பு சாப்பிட வீட்டில் தடை போட்டுவிட்டார்களா?//

   வீட்டில் இருக்கும்போது தான் எதற்குமே தடை போட முடியும். வெளியில் நான் தனியாகப் போகும்போது, எனக்கு யார் எப்படித் தடை போட முடியும்? :)

   //முனைவரும் நீங்களும் இளமையாத்தான் இருக்கீங்க. //

   உண்மையிலேயே அவர் என்னைவிட மிகவும் இளமையாகவே இருக்கிறார். :) நாங்கள் இருவருமே மனதளவில் என்றும் மார்க்கண்டேயன்கள் மட்டுமே. ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டுமே. இதோ இந்தப் பதிவினைப் பாருங்கோ: http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html

   //மாடில கந்தசாமி சார் பின்புலத்துல மலைக்கோட்டை ரொம்ப நல்லா வந்திருக்கு.//

   அது மாலை 5.30 மணி சுமாருக்கு வெயிலின் கடுமை சற்றே குறைந்து, இருட்டும் முன்பு, சற்றே வெளிச்சத்தில் எடுத்த படம். அதனால்தானோ என்னவோ நல்லா வந்திருக்குது.

   //'தீனி' லிஸ்ட், எங்களைப்போல் கஷ்டப்பட்டு டயட்டில் இருப்பவர்களைப் பழிவாங்கவா?//

   அப்படியெல்லாம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை என்னைப் பார்க்க வரும்போதும், இதுபோல ஏதேனும் தீனிகளை ஏராளமாகவும் தாராளமாகவும் வாங்கி வந்து விடுகிறார். அதைப்பற்றி நானும் என் பதிவினில் காட்டிச் சொன்னால் தானே அழகாக இருக்கும். அதனால் மட்டுமே அவற்றைக் காட்டியுள்ளேன். [ஒருவேளை வெறுங்கை வெங்கம்மாவாக வந்திருப்பாரோ என வாசகர்களாகிய நீங்கள் எல்லோரும் தப்பாக ஏதும் நினைத்து விடக்கூடாது அல்லவா ..... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா :) ]

   //உங்க ரூம்லயும் தொலைக்காட்சி இடம் மாறியிருக்கா அல்லது புதிதாக வந்திருக்கா?//

   அது என் ரூம் அல்ல. பொதுவான வெளி ஹாலில் உள்ளது. அதன் வழிக்கே நான் அதிகமாகச் செல்வது இல்லை. புதிதாகத்தான் வாங்கப்பட்டுள்ளது. பழசு ரிப்பேர் ஆகி தூக்கிப்போட்டாச்சு. அந்த டீ.வி. மட்டும் அங்கு இல்லாது போனால் என் பாடு திண்டாட்டமாகி விடும். என்னை என் ரூமில் நிம்மதியாகக் கம்ப்யூட்டர் பார்க்கவிடாமல் மேலிடத்தின் குறுக்கீடுகள் எனக்கு அதிகமாகி தொல்லையாகி விடும். :)

   //'எதற்காக வந்திருந்தார்' என்று அவர் பதிவில் கொஞ்ச நாள் முன்னால் திருச்சி வரப்போவதாக எழுதியிருந்ததைப் படித்த ஞாபகம். 'காவலன்'ல வடிவேலு கேட்கிறமாதிரி, 'கந்தசாமி எழுதியிருந்தாரா அல்லது கோபு சாரா?'//

   அவரின் இந்தத் திருச்சி வருகை ஒரு மாதம் முன்பே மிகவும் திட்டமிட்ட பயணம்தான்.

   //வரும் பதிவுகள்ல, மற்ற பதிவர்களோட லேடஸ்ட் புகைப்படத்தைப் பார்க்கலாம். தொடர்கிறேன்.//

   ஏதோ நாங்கள் அங்கு போகும் வேளையில், எங்களிடம் வசமாக மாட்டக்கூடிய ஒருசில பதிவர்களை மட்டுமே நீங்கள் படத்தில் பார்க்கலாம். அதிலும் சிலர் தங்களின் லேடஸ்ட் புகைப்படம் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்ற கூச்சத்தில் (தங்கள் இமேஜ் கெட்டுவிடும் என்பதாலும்கூட இருக்கலாம்) போஸ் கொடுக்கவே மாட்டார்கள். :)))))

   Delete
  2. "அந்தப் பாயஸம் தீரவேண்டுமே என்ற கவலையிலும் இருக்கலாம்" - உணவகங்களைப் பற்றி (Serving contracts in marriages as well) சரியாகக் கணித்திருக்கிறீர்கள். ஆரம்பித்த உடன் சென்றால், எல்லாம் புதிதாக இருக்கும் (உணவுகளில் தேவைக்கு அதிகமாகச் சூடுசெய்திருக்கமாட்டார்கள்). ஆனால் எல்லாவற்றையும் ஜாக்கிரதையாக, கொஞ்சம் கொஞ்சம் server செய்வார்கள். உணவு நேரம் முடிவடையும் தருணம், அதிகமாக உள்ளதை எவ்வளவு கேட்டாலும் போடுவார்கள். (இப்போ எனக்கு சந்தேகம்.. ஆரம்பத்தில் போவதா அல்லது கடைசி நேரத்தில் போவதா? கடைசி நேரத்தில் பெரும்பாலும் நிறைய ஐட்டங்கள் காலியாகிவிட்டிருக்கும்)

   இங்கெல்லாம் மதியம் செய்த உணவை, பொதுவாக 4 மணிக்கு (மாலை சிற்றுண்டி ஆரம்பிப்பதற்கு முன்) தூரப்போட்டுவிடுவார்கள். சரவண பவன் போன்ற exceptionம் உண்டு. சரியா மாலை டிஃபன் ஆரம்பிக்கும் நேரம் போனால், மதியம் உள்ள சாம்பார், மற்ற ஐட்டங்களெல்லாம் நமக்கு வந்துவிடும்.

   Delete
  3. 'நெல்லைத் தமிழன் March 19, 2017 at 1:26 PM

   **அந்தப் பாயஸம் தீரவேண்டுமே என்ற கவலையிலும் இருக்கலாம்** - //உணவகங்களைப் பற்றி (Serving contracts in marriages as well) சரியாகக் கணித்திருக்கிறீர்கள்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   அந்த மதுரா ஹோட்டலில் பாயஸம் தினமும் தயார் செய்யப்படுவது இல்லை. எப்போதாவது சில நாட்கள் மட்டுமே (அமாவாசை போன்ற சில விசேஷ நாட்களில் மட்டுமே) பாயஸம் உண்டு. இவர் வந்த அன்று அது அங்கு கிடைத்ததில் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

   ஒருவேளை தயிருக்கு வேண்டிய பாலை உறையூற்றியபின்னும் பால் நிறைய மிஞ்சிப்போய் இருக்குமோ என்னவோ. :)))))

   பல நாடுகள் + ஊர்கள் + இடங்களுக்குச் சுற்றியுள்ள உங்களுக்கு உள்ள அனுபவம் நிச்சயமாக எனக்குக் கிடையாது.

   Delete
 5. ஐயா, தீர்த்தத்திற்கான புகைப்படம் சற்றே மாறுதலாக உள்ளதே. எந்த தீர்த்தம் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.என்னதான் நடந்தது என்று தெரிந்துகொள்ள ஆவலாகக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. Dr B Jambulingam March 16, 2017 at 6:04 PM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //ஐயா, தீர்த்தத்திற்கான புகைப்படம் சற்றே மாறுதலாக உள்ளதே. எந்த தீர்த்தம் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.

   அந்தப்படங்கள் கூகுளில் தேடிய போது கிடைத்தது. ஒரு ஜாலிக்காக (பார்த்ததும் ஒரு கிக் ஏற்பட) மட்டுமே இங்கு காட்டப்பட்டுள்ளது. அவர் அந்த மாம்பழச்சொம்பினில் குடிப்பது, சாதாரணமான, ஆறிய வெந்நீர் தீர்த்தம் (குடிநீர்) மட்டுமே.

   //என்னதான் நடந்தது என்று தெரிந்துகொள்ள ஆவலாகக் காத்திருக்கிறோம்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா.

   Delete
 6. அருமையான படங்கள் இனிமையான சந்திப்பைச் சொல்கின்றன.

  அடுத்த பதிவில் மேலும் சில நட்புகளுடன் உரையாடிய விவரங்கள் வருவதைப் படிக்க ஆவல்.

  மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் தரிசனம் சங்கடஹரசதுர்த்தி அன்று கிடைத்தது மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 16, 2017 at 6:41 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அருமையான படங்கள் இனிமையான சந்திப்பைச் சொல்கின்றன. அடுத்த பதிவில் மேலும் சில நட்புகளுடன் உரையாடிய விவரங்கள் வருவதைப் படிக்க ஆவல்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் தரிசனம் சங்கடஹரசதுர்த்தி அன்று கிடைத்தது மகிழ்ச்சி.//

   ஆஹா, இதனைத் தாங்கள் இங்கு குறிப்பிட்டு எடுத்துச் சொல்லியுள்ளது என் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 7. ஆஹா!
  "பாயஸம்,
  வாழைக்காய் பொடிமாஸ்,
  பூசணிக்காய் கூட்டு,
  அப்பளம்,
  சித்ரான்னம்,
  சாதம்,
  சாம்பார்,
  மோர்க்குழம்பு,
  ரஸம்,
  தயிர், மோர்,
  ஊறுகாயுடன்,
  நுனி இலையில்
  மதிய விருந்து"

  கிடைக்குமானால்,
  அடுத்தமுறை திருச்சி வரும்போது உங்கள் வீட்டுக்கு வந்துவிடவேண்டியதுதான்!

  - இரண்டு சீனியர் இன்டர்நெட் ஜர்னலிஸ்ட்களை ஒரு சேரப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது!

  - இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. Chellappa Yagyaswamy March 16, 2017 at 7:55 PM

   வாங்கோ, வணக்கம்.

   ஆஹா! "பாயஸம், வாழைக்காய் பொடிமாஸ், பூசணிக்காய் கூட்டு, அப்பளம், சித்ரான்னம், சாதம், சாம்பார், மோர்க்குழம்பு, ரஸம், தயிர், மோர், ஊறுகாயுடன், நுனி இலையில் மதிய விருந்து" கிடைக்குமானால், அடுத்தமுறை திருச்சி வரும்போது உங்கள் வீட்டுக்கு வந்துவிடவேண்டியதுதான்!//

   வாங்கோ, வாங்கோ, வணக்கம். WELCOME ! யார் எப்போது வந்தாலும் கவலையில்லை. என் வீட்டருகே உள்ள ’மதுரா ஹோட்டல்’, ’ராமா கஃபே’, ’மாயவரம் லாட்ஜ்’ போன்றவற்றில் ஏதேனும் ஒன்றாவது விடுமுறை இல்லாமல் திறந்திருந்தால் போதுமானது.

   அதுபோல என் வீட்டருகே உள்ள பஜ்ஜி/வடைக் கடையும் திறந்திருக்கணும். அது வருவோரின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்த கூடுதல் இலாபம்.

   எப்படியும் எப்போதும் என் வீட்டில் ஃபில்டரில் போடும் டிகிரி காஃபி மட்டும் (24 Hrs. & 365 days) கட்டாயமாகக் கிடைக்கும். நம்பி வரலாம். :)

   //இரண்டு சீனியர் இன்டர்நெட் ஜர்னலிஸ்ட்களை ஒரு சேரப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது!//

   அவர் இதில் சீனியர் மோஸ்ட் இன்டர்நெட் ஜர்னலிஸ்ட் ஆவார்.

   //- இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி//

   ஆஹா, அமெரிக்காவின் நியூஜெர்சியிலிருந்து ஜெர்சி காளை போன்ற வேகத்துடன் கூடிய தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   Delete
 8. சந்தித்தவேளை :) ஆஹா சூப்பர் சந்திப்பு இனிமை என்பதை படங்கள் அனைத்துமே சொல்கிறதே ..இருவர் அமர்ந்திருக்கும் படத்தில் உங்க பின்னாலிருந்து கிருஷ்ணர் குறும்பாக பார்க்கிறார் :) சிலவேளை பேசுவதை ஒட்டுக்கேட்கிறாரோ :)
  பதார்த்தங்கள் எல்லாம் அருமை அவர் கொண்டுவந்த நொறுக்ட்ஸில் அந்த நேந்திரம் சிப்ஸ் :) ஹைலைட் செய்து என்னை மீண்டும் பார்க்க வச்சிட்டீங்க :) நேந்திரம் சிப்ஸ்னாலே கோயமுத்தூர் வெரைட்டிதான் மெலிதாக டேஸ்டியாவும் இருக்கும்
  அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ..

  ReplyDelete
  Replies
  1. Angelin March 16, 2017 at 8:23 PM

   வாங்கோ அஞ்சு, அஞ்சாமல் வாங்கோ, வணக்கம்.

   //சந்தித்தவேளை :) ஆஹா சூப்பர். சந்திப்பு இனிமை என்பதை படங்கள் அனைத்துமே சொல்கிறதே..//

   அப்படியா சொல்றீங்கோ ! மிகவும் சந்தோஷம்.

   //இருவர் அமர்ந்திருக்கும் படத்தில் உங்க பின்னாலிருந்து கிருஷ்ணர் குறும்பாக பார்க்கிறார் :) சிலவேளை பேசுவதை ஒட்டுக்கேட்கிறாரோ :)//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அப்படியும் இருக்கலாம். (கோபால)கிருஷ்ணனுக்கு எப்போதுமே குறும்பு கொஞ்சம் ஜாஸ்திதான். :)

   //பதார்த்தங்கள் எல்லாம் அருமை அவர் கொண்டுவந்த நொறுக்ஸில் அந்த நேந்திரம் சிப்ஸ் :) ஹைலைட் செய்து என்னை மீண்டும் பார்க்க வச்சிட்டீங்க :) நேந்திரம் சிப்ஸ்னாலே கோயமுத்தூர் வெரைட்டிதான் மெலிதாக டேஸ்டியாவும் இருக்கும்.//

   ஆமாம். அது தாங்கள் சொல்வதுபோலவே மிகவும் சூப்பராக, மெல்லியதாகவும், டேஸ்ட் ஆகவும் இருந்தது. உங்களை நினைத்துக்கொண்டேதான் நானும் சாப்பிட்டேன். :)

   //அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 9. இரு பதிவுலக வித்தகர்கள் சந்திப்பு எனில்
  சுவாரஸ்யம் களைக்கட்டச் சொல்லவா வேண்டும் ?
  படங்களுடன் பதிவும் சுவாரஸ்யம்
  அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
  வாத்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. Ramani S March 16, 2017 at 9:12 PM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //இரு பதிவுலக வித்தகர்கள் சந்திப்பு எனில் சுவாரஸ்யம் களைக்கட்டச் சொல்லவா வேண்டும் ? படங்களுடன் பதிவும் சுவாரஸ்யம். அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து... வாழ்த்துகளுடன்...//

   தங்களின் அன்பான வருகைக்கும், சுவாரஸ்யமான களைகட்டும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 10. இப்போதான் படங்களைப் பார்த்து முடிச்சேன்ன், நான் எங்கட டெய்சியைப் பக்கம் பக்கமாகப் படமெடுப்பதைப்போல , அந்த பெரியவரை நிக்கவிட்டு, இருக்கவிட்டெல்லாம் படம் பிடிச்சுப் போட்டிருக்கும் அழகே அழகு.... கமெராமான் நீங்களோ???

  ReplyDelete
  Replies
  1. athira March 16, 2017 at 10:10 PM

   வாங்கோ அதிரா, வாங்கோ.

   நீங்க ஆரம்பத்தில் ஃபர்ஸ்டு கமெண்டில், ’நில்லுங்கோ’ ன்னு சொல்லிவிட்டுச் சென்றதால் நான் இன்னும் நின்றுகொண்டே இருக்கிறேன். காலெல்லாம் மிகவும் வலிக்குதாக்கும்.

   //இப்போதான் படங்களைப் பார்த்து முடிச்சேன்ன், நான் எங்கட டெய்சியைப் பக்கம் பக்கமாகப் படமெடுப்பதைப்போல, அந்த பெரியவரை நிக்கவிட்டு, இருக்கவிட்டெல்லாம் படம் பிடிச்சுப் போட்டிருக்கும் அழகே அழகு....//

   மிக்க மகிழ்ச்சி அதிரா.

   //கமெராமான் நீங்களோ???//

   அந்தப் பெரியவருடன் நான் உள்ள படங்கள் எங்கள் வீட்டு டெய்சிக்களால் எடுக்கப் பட்டன.

   அந்தப் பெரியவர் மட்டும் உள்ள படங்கள் என்னால் எடுக்கப்பட்டவைகளாகும்.

   சாப்பிடும் போட்டோ மட்டும் வாழ்க்கையில் முதன் முதலாக என்னால் செல்ஃபி யாக எடுக்கப்பட்டது. அதனால் மிகவும் ஸ்லிம்மான நானும் அதில், குளோஸப்பில் சற்றே குண்டாகக் காட்சியளிக்கிறேன்.:(

   Delete
 11. வீட்டுக்கு வந்தவரை கதிரையில்தான் அமர வைக்கவேணும்... சரி அதை விடுங்கோ... உங்கட வீட்டுக்கு குதிரை வண்டியில் போலீஸ் வருகிறது... தீர்த்தம் எனச் சொல்லி என்னமோ குடிக்கக் கொடுத்துள்ளதால்:).

  ReplyDelete
  Replies
  1. athira March 16, 2017 at 10:15 PM

   //வீட்டுக்கு வந்தவரை கதிரையில்தான் அமர வைக்கவேணும்... சரி அதை விடுங்கோ...//

   கதிரை என்றால் என்ன அதிரா? நாற்காலியாக இருக்குமோ? .... சரி அதை விட்டுட்டேன்.

   //உங்கட வீட்டுக்கு குதிரை வண்டியில் போலீஸ் வருகிறது... தீர்த்தம் எனச் சொல்லி என்னமோ குடிக்கக் கொடுத்துள்ளதால் :) //

   நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள ’குடி மகன்கள்’ (அதாவது தூய தமிழில்: ஸிடிஸன்ஸ்).

   இங்கெல்லாம் தீர்த்தம் குடிக்காதவர்களை மட்டுமே போலீஸ் பிடித்துச் செல்வது வழக்கம் .... அதுவும் குடிக்காதவர்களால் அரசாங்கத்திற்கு வரவேண்டிய வருமானம் குறைகிறது என்ற குற்றச் சாட்டினால் மட்டுமே.

   ’குதிரை வண்டியில்’ போலீஸா? ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பிரித்தானியா மஹாராணியின் செல்லப்பேத்தியாகையால் இன்னும் ‘குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு உள்ளீர்கள்’ போலிருக்குது.

   எங்கட தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் தெருக்களில் எங்கும் குதிரைகளையும் கழுதைகளையும் கண்ணால் பார்க்கவே முடிவது இல்லை. ZOO வுக்கு போனால் அங்கு ஒருவேளை அவைகள் இருக்குமோ என்னவோ.

   Delete
 12. ஆஹா மிகச் சுவையான சுவீட்கள் கொண்டு வந்திருக்கிறார். நிறைய ஐட்டங்கள் சமைச்சிருக்கே... ஆன்ரியை கஸ்டப்பட்டு சமைக்கப் பண்ணி விட்டு, நீங்க சொகுசா பேசிப் பேசி அல்வா சாப்பிட்டுக்கொண்டிருந்தமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:).

  ReplyDelete
  Replies
  1. athira March 16, 2017 at 10:33 PM

   //ஆஹா மிகச் சுவையான சுவீட்கள் கொண்டு வந்திருக்கிறார்.//

   ஆமாம். மைசூர்ப்பா மிகவும் ஸ்மூத்தாக நாக்கில் வைத்ததும் கரைந்து உள்ளே தொண்டை வழி வழிக்கிச் செல்லும் வகையில் சூப்பராக இருந்தது. இது நம் அதிராவுக்கு மிகவும் பிடிக்குமே என, அதிராவை நினைத்துக்கொண்டே சாப்பிட்டேன். நம்புங்கோ அதிரா.

   //நிறைய ஐட்டங்கள் சமைச்சிருக்கே... ஆன்ரியை கஸ்டப்பட்டு சமைக்கப் பண்ணி விட்டு, நீங்க சொகுசா பேசிப் பேசி அல்வா சாப்பிட்டுக்கொண்டிருந்தமைக்கு என் வன்மையான கண்டனங்கள். :) //

   யார் என் வீட்டுக்கு வந்தாலும், அவர்களுக்காக சமையல் செய்யச்சொல்லி, ஆன்ரியை நான் கஷ்டப்படுத்தவே மாட்டேன். இது உங்கட ஆன்ரிக்கும் நன்றாகவே தெரியும்.

   சூப்பரான சுவையான ஃபில்டர் காஃபி மட்டுமே ஆன்ரியோ அல்லது நானேவோ கூட போட்டுத் தருவோம்.

   சாப்பாடு, டிஃபன் போன்றவற்றை வெளியிலிருந்து வரவழைத்து நன்கு உபசாரம் செய்து அனுப்பிவைத்து விடுவோம்.

   அதுதான் மிகவும் ஆரோக்யமான தொல்லையில்லாத நல்ல வழக்கமாகும்.

   வீட்டுக்கு வருவோர் போவோர், அடிக்கடி தினமும் தான் இருக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்குமாக ஆன்ரியைக் கஷ்டப்படுத்திக்கொண்டே இருந்தால், அவர்கள் போனபின் ஆன்ரியுடன் நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். :)

   என்னால் பிறர் கஷ்டப்படுவதையோ, அதனால் பிறகு IN TURN நான் கஷ்டப்பட வேண்டியிருப்பதையோ ஒருபோதும் நான் விரும்பவே மாட்டேன்.

   எல்லோரும் எப்போதும் ஜாலியாக அவரவர் விருப்பம்போல சுதந்திரமாக இருக்கணும் என்பதே என் பாலிஸியாகும்.

   அதிராவோ அஞ்சுவோ அல்லது இருவரும் சேர்ந்தோ என் வீட்டுக்கு வந்தாலும் கூட, உங்களையும் அழைத்துக் கொண்டு, நாங்கள் எல்லோரும் (ஆன்ரி உள்பட) ஹோட்டலில் சாப்பிடக் கிளம்பி விடுவோமாக்கும். :)))))

   [ஹோட்டலுக்கான பில் முழுவதும் நானே கொடுத்து விடுவேன். உங்களில் யாரையும் அங்கு மாவாட்ட விட மாட்டேன். அதனால் நீங்க கவலைப்படாதீங்கோ ... அதிரா.]

   Delete
 13. உங்கள் பில்டிங் மொட்டைமாடியில் நின்றால் , திருச்சி முழுவதும் தெரியும்போலிருக்கே... அதில் தெரிவது உச்சிப்பிள்ளையார் கோயில் மலையோ? கோபுர தரிசனம் கோடி புண்ணியம்...

  ReplyDelete
  Replies
  1. athira March 16, 2017 at 10:36 PM

   //உங்கள் பில்டிங் மொட்டைமாடியில் நின்றால், திருச்சி முழுவதும் தெரியும்போலிருக்கே...//

   ஒரேயடியாகத் திருச்சி முழுவதும் தெரியாது. ஓரளவு மட்டுமே தெரியும். திருச்சி மிகப்பெரிய ஊராகி விட்டது.

   உங்கட அஞ்சுவுக்காகவே நான் திருச்சியைப் பற்றி ஓர் பதிவு வெளியிட்டுள்ளேன். இதோ இந்தப் பதிவினில் போய் பாருங்கோ. அதுவே என்னால் மிகச்சுருக்கமாகத்தான் எழுத முடிந்துள்ளது. :)

   http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html
   இப்போது மிகச்சரியாக 100 கமெண்ட்ஸ்களுடன் அது நிக்குது. 101 முதல் 108 வரை உங்களுக்காகவே அது காத்திருக்குது. :)

   //அதில் தெரிவது உச்சிப்பிள்ளையார் கோயில் மலையோ?//

   ஆம். அதே ... அதே ... ஸபாபதே ... அதிரபதே ! :)

   //கோபுர தரிசனம் கோடி புண்ணியம்...//

   சந்தோஷம். கோபுரம் என்பது வேறு. மலைக்கோயில் என்பது வேறு. நெட்டில் போய் ’ராஜகோபுரம் ஸ்ரீரங்கம்’ எனத் தட்டுங்கோ. மிகப்பெரிய கோபுரம் வரும். நீங்களும் தரிசனம் செய்து கோடி புண்ணியத்தைத் தேடிக்கொள்ளுங்கோ.

   Delete
  2. விரைவில் படிக்கிறேன் நன்றி.

   Delete
  3. athira March 20, 2017 at 2:35 AM

   //விரைவில் படிக்கிறேன் நன்றி.//

   ஆஹா மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி!

   ‘நீ ... ஒரு நாள் ... வரும் வரையில் ... நான் இருப்பேன் ... நதிக் கரையில்*’

   [*சுத்தமாகத் தண்ணீரே இல்லாத
   ’திருச்சி காவிரி நதிக்கரையில்’
   அடி சுடும் மணலில். :) ]

   Delete
 14. ///

  மாலை மிகச்சரியாக ஆறு மணிக்கு
  மாப்பிள்ளை போல சில்க் ஜிப்பா + ஜரிகை வேஷ்டிஅணிந்துகொண்டு என்னுடன்
  ஓர் முக்கியமான இடத்திற்குப் புறப்படத் தயாராகி விட்டார்./////
  புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊஊ கோபு அண்ணனின் 60 ஆம் கல்யாணம்தானே..... எல்லோரும் கச்சானும் வறுத்து பொப்கோனும் கொண்டு வந்து ரெடியா இருங்கோ அடுத்த போஸ்டில் கல்யாண வீடியோவைக் கண்டு மகிழ்வோம்.

  நல்ல சந்தோசமான பதிவு, உங்கள் தொடர் சந்திப்புக்கள் மனதை நெகிழச் செய்கிறது... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. athira March 16, 2017 at 10:40 PM

   **மாலை மிகச்சரியாக ஆறு மணிக்கு மாப்பிள்ளை போல சில்க் ஜிப்பா + ஜரிகை வேஷ்டிஅணிந்துகொண்டு என்னுடன் ஓர் முக்கியமான இடத்திற்குப் புறப்படத் தயாராகி விட்டார்.**

   //புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊஊ கோபு அண்ணனின் 60 ஆம் கல்யாணம்தானே.....//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! அதற்கு இன்னும் 44 ஆண்டுகள் உள்ளன. இப்போது நம் இருவருக்குமே ஸ்வீட் 16 வயது மட்டுமே நடக்கிறது .... மறந்துட்டேளா?

   மேலும் அதிரா, அஞ்சு, மஞ்சு ஆகியோர் வராமல் எனக்கு 60-ஆம் கல்யாணம் நடக்குமா என்ன? உங்களின் இந்தக் கணிப்பு மிகவும் தவறாகும்.

   //எல்லோரும் கச்சானும் வறுத்து பொப்கோனும் கொண்டு வந்து ரெடியா இருங்கோ அடுத்த போஸ்டில் கல்யாண வீடியோவைக் கண்டு மகிழ்வோம்.//

   அது என்ன கச்சான்? வெஜிடேரியன் ஐட்டம் தானே? ஓஹோ .... உங்கள் பாஷையில் கச்சான் என்றால் வேர்க்கடலை என்று முன்பே அஞ்சு என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறாங்கோ.

   //நல்ல சந்தோசமான பதிவு, உங்கள் தொடர் சந்திப்புக்கள் மனதை நெகிழச் செய்கிறது... வாழ்த்துக்கள்.//

   அதிரடி, அலம்பல், அட்டகாச, அதிரஸ, அழும்பு, அல்டி அதிராவின் அன்பான வருகைக்கும், ஏராளமான தாராளமான கலக்கலான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு அண்ணன்

   Delete
 15. மூத்த பதிவர் ஒருவரை அறியச்செய்தமைக்கு மிக்க நன்றி . சாப்பாட்டு ஐட்டங்களைப் பார்க்கும்போது அவர் திடீரென்று வந்தததாய் நம்ப இயலவில்லை . மேற்கொண்டு நடந்தவற்றைத் தெரிந்துகொள்ள மிகுந்த ஆவல் .

  ReplyDelete
  Replies
  1. சொ.ஞானசம்பந்தன் March 17, 2017 at 11:31 AM

   வாங்கோ ஐயா, நமஸ்காரங்கள். வணக்கம்.

   //மூத்த பதிவர் ஒருவரை அறியச்செய்தமைக்கு மிக்க நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி.

   //சாப்பாட்டு ஐட்டங்களைப் பார்க்கும்போது அவர் திடீரென்று வந்தததாய் நம்ப இயலவில்லை.//

   ஒரு மாதம் முன்பே அவரால் திட்டமிடப்பட்டதோர் பயணம் மட்டுமே.

   //மேற்கொண்டு நடந்தவற்றைத் தெரிந்துகொள்ள மிகுந்த ஆவல் .//

   அதனையும் வெளியிட்டுள்ளேன்.

   தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   Delete
 16. பதிவுலக நண்பர் திரு.பழனி கந்தசாமி அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பினைப்பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் தங்களின் மெனு போலவே சிறப்பாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. மனோ சாமிநாதன் March 17, 2017 at 12:32 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //பதிவுலக நண்பர் திரு.பழனி கந்தசாமி அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பினைப்பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் தங்களின் மெனு போலவே சிறப்பாக இருக்கிறது!//

   ஆஹ்ஹாஹ்ஹா! ‘என் மெனு போலவே’வா? :)

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 17. அருமையான தகவல்
  தொடரும் சந்திப்புகள்
  பயன்தருமே!

  ReplyDelete
  Replies
  1. Jeevalingam Yarlpavanan Kasirajalingam

   //அருமையான தகவல். தொடரும் சந்திப்புகள் பயன்தருமே!//

   வாங்கோ வணக்கம். மகிழ்ச்சி + நன்றி.

   Delete
 18. அருமையான சந்திப்பு. படங்களுடன் பார்க்கவே சந்தோஷமா இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் March 17, 2017 at 5:57 PM

   அடேடே ..... பூந்தளிரா? வாங்கோம்மா. வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? நீண்ட நாட்களுக்குப்பின் இங்கே உங்களைப் பார்த்ததும், எனக்குக் கையும் ஓடலை லெக்கும் ஆடலை. இது கனவா நனவா என சந்தேகப்பட்டு என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

   என்ன ஆச்சும்மா? ஏன் ரொம்ப நாட்களாகவே உங்களைக் காணோம்?

   என்னுடைய முதல் 1 to 750 பதிவுகளுக்கும் தொடர்ச்சியாக வந்து பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள். :)

   அதன் பின் உங்களை (அதிகமாக) ஆளையும் காணும் அட்ரஸ்ஸையும் காணும்.

   2016-இல் நான் வெளியிட்டதே 33 பதிவுகள் மட்டுமே. அதில் ஏதோ ஒரு பத்து பதிவுகளுக்கு மட்டுமே வந்து கமெண்ட்ஸ் கொடுத்திருந்தீர்கள்.

   //அருமையான சந்திப்பு. படங்களுடன் பார்க்கவே சந்தோஷமா இருக்கு..//

   இப்போது அத்திப்பூத்தாற்போல இந்தப் பதிவுக்கு மட்டும் வந்துள்ளீர்கள். எனக்கும் ஒரே சந்தோஷமாத்தான் இருக்குது.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ராஜாத்தி.

   Delete
 19. முனைவர் பழனி,கந்தசாமி ஐயா அவர்கள் தங்களின் இல்லத்திற்கு வந்ததை நாங்களும் நேரில் இருந்து பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது தங்களின் பதிவு. மாலை 6 மணிக்கு இருவரும் எங்கு சென்றீர்கள் என அறியக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி March 17, 2017 at 6:03 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் தங்களின் இல்லத்திற்கு வந்ததை நாங்களும் நேரில் இருந்து பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது தங்களின் பதிவு.//

   மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //மாலை 6 மணிக்கு இருவரும் எங்கு சென்றீர்கள் என அறியக் காத்திருக்கிறேன்.//

   அதுபற்றிய பதிவு வெளியிட்டு விட்டேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 20. இனிய சந்திப்புகள் தொடரட்டும். உங்கள் வீட்டு விருந்தின் மெனு படிக்கும்போதே வயிறு நிறைகிறது. அது இங்கேயே இப்படி ஒரு கட்டு கட்டிவிட்டால் கல்யாண விருந்தை எப்படி ஒரு பிடி பிடிக்க முடியும்?!!!!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். March 17, 2017 at 6:31 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

   //இனிய சந்திப்புகள் தொடரட்டும்.//

   மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம்.

   //உங்கள் வீட்டு விருந்தின் மெனு படிக்கும்போதே வயிறு நிறைகிறது.//

   அது என் வீட்டு சார்பில், என் வீட்டின் அருகே உள்ள ஹோட்டலில் கொடுக்கப்பட்ட விருந்து மட்டுமே.

   //அது இங்கேயே இப்படி ஒரு கட்டு கட்டிவிட்டால் கல்யாண விருந்தை எப்படி ஒரு பிடி பிடிக்க முடியும்?!!!!//

   இங்கு நாங்கள் சாப்பிடும்போது பகல் சுமார் 1 மணி இருக்கும்.

   நாங்கள் அங்கு கல்யாண விருந்து சாப்பிடும்போது இரவு 8 மணி இருக்கும். அங்கு எனக்குப் பிடித்தவற்றை மட்டும் நான் கொஞ்சமாகப் பிடித்துக்கொண்டேன். :)

   தங்களின் அன்பு வருகைக்கும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான சந்தேகங்களுக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம். :)

   Delete
 21. திண்டுக்கல் தனபாலன் March 16, 2017 at 5:28 PM

  //வாழ்த்துகள் ஐயா...//

  வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  ReplyDelete
 22. படிக்கும்போதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது..மதியமும் ஹெவி லஞ்ச் இரவும் கல்யாண டின்னரா. சூப்பர்.. படங்கள் எல்லாமே நல்லா இருக்கு.. கோபால்ஸார் உங்கள தேடி உங்க வீட்டுக்கு நிறைய பதிவர்கள் வந்திருக்காங்க. நீங்க எந்த பதிவர் வீட்டுக்காவது போயிருக்கிங்களா...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... March 19, 2017 at 5:57 PM

   வாங்கோ, வணக்கம்.

   //படிக்கும்போதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது..//

   மிக்க மகிழ்ச்சி.

   //மதியமும் ஹெவி லஞ்ச் இரவும் கல்யாண டின்னரா.//

   மதியம் எப்போதும் சாப்பிடும் நார்மல் லஞ்ச் மட்டுமே. இரவு கல்யாண டின்னரில் பஃபே சிஸ்டமாக போய் விட்டது. எனக்கென்னவோ இந்த பஃபே சிஸ்டம் என்பது அவ்வளவாகப் பிடிப்பது இல்லை. நிம்மதியாக இலை போட்டு வரிசையாக உட்கார வைத்து ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டு சாப்பிடுவது போல வரவே வராது.

   இந்த பஃபே சிஸ்டத்தில், 100க்கு ஒரு 30-40 பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட முடிகிறது. மீதி பேரெல்லாம் நின்றுகொண்டே சாப்பிட வேண்டிய கஷ்டமும் கட்டாயமும் உள்ளது. உட்கார இடம் கிடைத்தவர் பாதி சாப்பாட்டில் தன் தட்டுடன் வேறு ஒரு ஐட்டத்தை வாங்கிக்கொண்டு திரும்பும் போது அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் வேறொருவர் உட்கார்ந்து இருப்பார். இதெல்லாம் சீனியர் சிடிஸன்ஸ்களுக்கு கஷ்டம் .. மஹா கஷ்டம்.

   அதனால் அங்கு ஒரு 15-20 ஐட்டம்ஸ் இருந்திருப்பினும், நான் பூரி + தயிர்சாதம் + ஊறுகாய்கள் மட்டுமே ஒரே ட்ரிப்பில் வாங்கிக்கொண்டு, நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட ஓரிடத்தையும் தேர்ந்தெடுத்துக்கொண்டு விட்டேன். வேறு எதுவும் எனக்கு வாங்கி சாப்பிடத் தோன்றவில்லை. அங்கு போய் வாங்கி வந்தால் இங்கு இடம் போய் விடும். என்னால் நின்று கொண்டே சாப்பிடவும் முடியாது.

   இதை ஏன் இங்கு நான் குறிப்பிட்டு எழுதுகிறேன் என்றால், இதைப்படிக்கும் சிலராவது, தங்கள் வீட்டு விழாக்களில், பஃபே சிஸ்டத்தில் உணவு அளித்தாலும்கூட, அங்கு ஒரு 100 பேர்களாவது நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட போதுமான சேர்களும் டேபிள்களும் போட ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி வைத்துக்கொள்ள மட்டுமே.

   //சூப்பர்.. படங்கள் எல்லாமே நல்லா இருக்கு..//

   மிக்க மகிழ்ச்சி.

   >>>>>

   Delete
  2. VGK >>>>> ஸ்ரத்தா, ஸபுரி... (2)

   //கோபால்ஸார் உங்கள தேடி உங்க வீட்டுக்கு நிறைய பதிவர்கள் வந்திருக்காங்க. நீங்க எந்த பதிவர் வீட்டுக்காவது போயிருக்கிங்களா...//

   நான் இருக்கும் திருச்சியில் உள்ளூரிலேயே உள்ள ஒருசில பதிவர்களின் வீடுகளுக்கு மட்டும் செல்லும்படியாக நேர்ந்துள்ளது.

   1) பதிவர் ‘ரிஷபன்’ திரு. R. ஸ்ரீநிவாஸன் அவர்களின் வீடு. FLYING VISIT FOR 5 MINUTES ONLY. என் பிள்ளை கல்யாணத்தின் போது, இவருக்கு நான் பத்திரிகை கொடுக்கச் சென்று வந்தேன். (2009)

   2) 'கோவை2டெல்லி' பதிவர் ஆதி வெங்கட் + பதிவர் செல்வி. ரோஷ்ணி அவர்களின் வீடு. FLYING VISIT OF 5-10 MINUTES ONLY. வெளியூரிலிருந்து வந்திருந்த ஓர் பதிவர் தம்பதியினரை இவர்கள் வீட்டுக்கு நான் 06.10.2013 இரவு, காரில் ஓர் வழிகாட்டிபோல அழைத்துப்போக நேர்ந்தது. அதற்கான தகவல்கள் மட்டும் இதோ இந்தப் பதிவினில் உள்ளன:

   https://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html

   3) ’ஆரண்யநிவாஸ்’ பதிவர் திரு. ஆர். இராமமூர்த்தி அவர்களின் வீடு. இவர்கள் வீட்டில் ஓர் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அது பற்றிய படங்கள் இந்தப்பதிவினில் உள்ளன:

   http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html

   4) பதிவர் திருமதி. ராதாபாலு அவர்களின் வீடு. இவர்களின் வீட்டு (2014) நவராத்திரி கொலுவுக்கு என் மனைவியுடன் வருமாறு ஒருநாள் என்னை அன்புடன் அழைத்திருந்தார்கள். அந்த கொலு படங்கள் இதோ இந்த என் பதிவினில் உள்ளன:

   https://gopu1949.blogspot.in/2015/02/6-of-6_18.html

   5) பதிவர் திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களின் வீடு. இவர்களின் வீட்டினில் ஓர் ’பதிவர்கள் சந்திப்பு’ சிறிய அளவில் நடைபெற்றது. அதற்கான படங்கள் இதோ இந்தப்பதிவினில் உள்ளன:

   https://gopu1949.blogspot.in/2015/02/2.html

   6) பதிவர் திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களின் வீடு. இவர்களின் வீட்டினில் ஓர் ’பதிவர்கள் சந்திப்பு’ சிறிய அளவில் நடைபெற்றது. அதற்கான படங்கள் இதோ இந்தப்பதிவினில் உள்ளன:

   https://gopu1949.blogspot.in/2016/03/6.html

   வேறு எந்தப்பதிவர் வீட்டுக்கும் நான் சென்று வந்ததாக என் நினைவில் இல்லை.

   Delete
 23. இடுகையைப் படிக்கும்போதே மிக்க ஸந்தோஷமாக இருந்தது. சினேகம் இப்படியல்லவோ இருக்க வேண்டும். முனைவர் ஐயா செவிக்கு விருந்தளித்திருப்பார். நீங்களும் சுவைக்க எல்லா விருந்துகளும் அளித்தீர்கள். படிக்க படிக்க வியப்பாகவும் உள்ளது. யாவரும் வாழ்க. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. காமாட்சி March 19, 2017 at 9:04 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //இடுகையைப் படிக்கும்போதே மிக்க ஸந்தோஷமாக இருந்தது. சினேகம் இப்படியல்லவோ இருக்க வேண்டும். முனைவர் ஐயா செவிக்கு விருந்தளித்திருப்பார். நீங்களும் சுவைக்க எல்லா விருந்துகளும் அளித்தீர்கள். படிக்க படிக்க வியப்பாகவும் உள்ளது. யாவரும் வாழ்க. அன்புடன்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சிறப்பான நல்ல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.

   Delete
 24. //புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊஊ கோபு அண்ணனின் 60 ஆம் கல்யாணம்தானே.....////


  அதிரா அவங்க மறந்துட்டாங்க.... கோபு பெரிப்பாக்கு 60---ம் கல்யாணமாகி 5, 6,,-- வருஷத்துக்கு மேல ஆச்சே...

  அச்சச்சோ பெரிப்பா அவசர குடுக்கை ஒளறிட்டேனோ.....

  உங்க ரிப்ளை பாக்கமலே இத எழுதிட்டேனே...

  ReplyDelete
  Replies
  1. happy March 20, 2017 at 2:26 PM

   வாடா என் செல்லக்குழந்தாய் ... கொழுகொழு மொழுமொழு ஹாப்பி ! நல்லா இருக்கிறாயா? உன்னை ஆளையே காணுமே என மிகவும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தேன்...டா.

   **புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊஊ கோபு அண்ணனின் 60 ஆம் கல்யாணம்தானே.....** - அதிரா

   //அதிரா அவங்க மறந்துட்டாங்க.... கோபு பெரிப்பாக்கு 60---ம் கல்யாணமாகி 5, 6, -- வருஷத்துக்கு மேல ஆச்சே... அச்சச்சோ பெரிப்பா அவசர குடுக்கை ஒளறிட்டேனோ..... உங்க ரிப்ளை பாக்கமலே இத எழுதிட்டேனே...//

   நீ எப்போதுமே ஒரு அவசரக்குடுக்கை மட்டுமே. எனக்கு நீ மிகவும் செல்லக்குழந்தையானதால், நீ இவ்வாறு மழலைபோல உளறியதும், எனக்கு ஏனோ மகிழ்ச்சி அளிக்கத்தான் செய்கிறது. :)

   ”குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள்
   மழலைச் சொல் கேளாதவர்.”

   - திருக்குறள்.

   இதோ இந்தப்பதிவினை தயவுசெய்து படித்துப்பார். பொதுவாக அது ஹாப்பியாக இருக்கும்...டா ஹாப்பி.

   (ஆனால் இதைப் படிக்க உனக்கு எப்படி இருக்குமோ?)

   http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

   பிரியத்துடன் உன் பெரிப்பா

   Delete
 25. மகிக்ஷ்ச்சியான பதிவர் சந்திப்பு படங்டளுடன் அசத்தலாட இருக்கு.. கூடவே உங்க நகைச்சுவை விருந்தும் இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... March 20, 2017 at 2:32 PM

   //மகிழ்ச்சியான பதிவர் சந்திப்பு. படங்டளுடன் அசத்தலாக இருக்கு.. கூடவே உங்க நகைச்சுவை விருந்தும் இருக்கு...//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   என் நகைச்சுவை விருந்தினை விரும்பிச் சாப்பிட்டுள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   Delete
 26. திருச்சி வரும் எந்தப் பதிவரும் தங்களை சந்திக்காமல் திரும்புவதில்லை என்று நினைக்கிறேன். திருச்சியின் மலைக்கோட்டைக்குப் பிறகு centre of attraction நீங்கள்தான்.. அந்த அளவுக்கு நட்போடும் உரிமையோடும் பழகுகிறீர்கள். முனைவர் பழனி கந்தசாமி ஐயா இந்த வயதில் தனியாளாகப் புறப்பட்டு பயணித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு மட்டுமல்ல.. சும்மா சோம்பியிருக்கும் என் போன்றவர்களுக்கும் நல்லதொரு முன்மாதிரி. அடுத்த பகுதியையும் ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன். அங்கு சென்று கருத்திடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி March 20, 2017 at 2:42 PM

   வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

   //திருச்சி வரும் எந்தப் பதிவரும் தங்களை சந்திக்காமல் திரும்புவதில்லை என்று நினைக்கிறேன்.//

   அப்படியெல்லாம் நாம் நினைப்பதற்கு இல்லை மேடம்.

   திருச்சியிலேயே பிறந்து, திருச்சியிலேயே வளர்ந்து, திருச்சியிலேயே படித்து, இன்று ஆஸ்திரேலியாவிலேயே மிகப்புகழ் பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளரும், உலகிலேயே மிகப்பிரபலமான தமிழ் வலைப்பதிவராகவும் உள்ள தங்களையும், தங்களைப்போன்ற மிகப்பிரபலமான வேறு சிலரையும் என்னால் இன்னும் சந்திக்க முடியவில்லையே என்ற சிறு ஏக்கம் எனக்குள் எப்போதுமே உண்டு, மேடம்.

   //திருச்சியின் மலைக்கோட்டைக்குப் பிறகு centre of attraction நீங்கள்தான்.. அந்த அளவுக்கு நட்போடும் உரிமையோடும் பழகுகிறீர்கள்.//

   ஏதோ அதுபோல ஒரு பாக்யம் இதுவரை எனக்குக் கொஞ்சம் கிடைத்துள்ளது. அதிலும் இங்கு வந்துபோவோர் ஒருசிலரிடம் மட்டும் என்னை அறியாமலேயே ஒருவித ஆத்மார்த்தமான நட்பும், உரிமையும், பாசமும் அதுவாகவே ஏற்பட்டு விடுகிறது.

   இருவரின் மனதும் எண்ணங்களும் மிகத் தெளிவாக ஒரே நேர்க்கோட்டில், ஒரே அலை வரிசையில், அமையும் போது மட்டுமே இது சாத்தியமாகிறது.

   இங்கு நம் திருச்சிக்கு எவ்வளவோ பேர்கள் இதுவரை வந்துபோய் உள்ளார்கள். எனக்கு எல்லோரிடமும் எல்லா நேரங்களிலும் இதுபோல நட்பும், உரிமையும், பாசமும் ஏனோ ஏற்படுவது இல்லை. நானும் அதனை கஷ்டப்பட்டு ஏற்படுத்திக்கொள்ள முயல்வதும் இல்லை.

   அது அதுவாகவே இருவரிடமும் அனிச்சை செயல் போல ஏற்பட வேண்டும்.

   //முனைவர் பழனி கந்தசாமி ஐயா இந்த வயதில் தனியாளாகப் புறப்பட்டு பயணித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு மட்டுமல்ல.. சும்மா சோம்பியிருக்கும் என் போன்றவர்களுக்கும் நல்லதொரு முன்மாதிரி.//

   என் போன்ற உலக மஹா சோம்பேறிகளுக்கு அவர் நல்லதொரு முன்மாதிரிதான். இதில் சந்தேகமே இல்லை.

   //அடுத்த பகுதியையும் ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன். அங்கு சென்று கருத்திடுகிறேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கம் போல மிகத் தெளிவான, அழகான, வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 27. //மிகவும் ஸ்லிம்மான நானும் அதில், ////குளோஸப்பில் சற்றே குண்டாகக் காட்சியளிக்கிறேன்.:(//

  ஆனாலும் இது ரொம்ப ஓவரா இருக்குதே..)))

  பதிவும் படங்களும் வெகு ரசனை. கமெண்ட்& ரிப்ளை கமெண்ட் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco March 20, 2017 at 2:55 PM

   **மிகவும் ஸ்லிம்மான நானும் அதில், குளோஸப்பில் சற்றே குண்டாகக் காட்சியளிக்கிறேன்.:(**

   //ஆனாலும் இது ரொம்ப ஓவரா இருக்குதே..)))//

   ஓவர் தான். இதனை கரெக்டாகக் கண்டுபிடித்து இங்கு சொல்லியுள்ள உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குப் புரியவில்லை. :)))))

   எங்கள் பரம்பரையில் என் அப்பா, தாத்தா போன்ற அனைவருமே என்னைப்போலவே செம குண்டுதான். இருப்பினும் அதைப்பற்றி நான் இதுவரைக் கவலையே பட்டதில்லை.

   ஆனால் என்றைக்கு உங்களின் படு ஸ்லிம்மான படத்தினைப் பார்த்தேனோ அன்று முதல் எனக்குத் தூக்கமே வருவது இல்லை (ஏற்கனவே நான் இரவினில் தூக்கம் வராத ஒரு கேஸ்தான் - இதுபற்றி நம் ரோஜாவுக்கும் தெரியும்)

   உங்களின் படு ஸ்லிம்மான படத்தினால் எனக்கு உள்ள நித்திரையும் போச்சு. :)

   என்னைப்போலவே மூன்று குழந்தைகள் பெற்ற பிறகும், எப்படி மேடம் உங்களால் மட்டும், இதுபோல படு ஸ்லிம்மாக உங்கள் உடம்பை வைத்துக்கொள்ள சாத்தியம் ஆச்சு? அந்த பரம இரகசியத்தைக் கொஞ்சம் எனக்கும் சொல்லக்கூடாதா?

   //பதிவும் படங்களும் வெகு ரசனை. கமெண்ட் & ரிப்ளை கமெண்ட் சூப்பர்//

   தமிழ் நாட்டுப்பக்கமே வராத, பள்ளிப்படிப்பிலும் தமிழே படிக்காத, தமிழச்சியாகவே இல்லாத தாங்கள், இவ்வளவு அழகாகத் தமிழில் பின்னூட்டம் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், உங்கள் மேல் எனக்குக் கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது மேடம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், இதுவரை யாருமே தொடாத ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள உங்களின் இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கிஷ்ணாஜி

   Delete
 28. படங்கள் பதிவு எல்லாமே சூப்பர்.. வெளில எங்கியாவது கிளம்பினாஸே பதிவு எழுதணும்னு கண்ணையும் காதயும் ஷார்ப்பா வச்சுப்பிங்களா. ஒரு விஷயம்கூட விடாம சொல்லிடுறிங்களே...படிக்குறவங்களுக்கு ஜாலிதான்..

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் March 20, 2017 at 3:03 PM

   வாங்கோ என் ராஜாத்தி, வணக்கம்மா.

   //படங்கள் பதிவு எல்லாமே சூப்பர்..//

   வெரி குட். நீங்க சொன்னால்தான் எதுவுமே எனக்கு சூப்பராக உள்ளது. :)

   //வெளில எங்கியாவது கிளம்பினாலே பதிவு எழுதணும்னு கண்ணையும் காதயும் ஷார்ப்பா வச்சுப்பிங்களா.//

   நோ.... நோ.... அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

   மேலும் ஹனிமூன் போவதைத்தவிர, என் வீட்டைவிட்டு நான் வெளியே எங்கும் சாதாரணமாகக் கிளம்புவதே இல்லை. அவ்வளவு ஒரு உலக மஹா சோம்பேறி நான்.

   என் கண்களைக் கணினியிலும், என் காதுகளை பிறர் தரும் பின்னூட்டங்களிலும், பூந்தளிரின் இன்--பாக்ஸ் மெயில் மேட்டர்களிலும் மட்டுமே ஷார்ப்பாக வைத்துக்கொள்வது உண்டு.

   //ஒரு விஷயம்கூட விடாமல் சொல்லிடுறீங்களே... படிக்குறவங்களுக்கு ஜாலிதான்..//

   படிக்கிறவங்களுக்கு ஜாலியாக வெழுமூனாக பருப்புத் தொகையல்போல ஸ்மூத்தாக இருக்க வேண்டி மட்டுமே, ஒரு விஷயம்கூட விடாமல் சொல்ல, நான் படும்பாடு எனக்கு மட்டுமே தெரியுமாக்கும். :)))))

   Delete
 29. கோபூஜி லாஸ்ட்ல ஃபர்ஸ்டா வந்துவிட்டேன்... பதிவுதான் ஜோரா இருக்குதுன்னா பின்னூட்டங்கள் ரிப்ளை எல்லாமே தூள் கெளப்புது..முன்னாபார்க் ஆளுகள் கூட சில பேரு வந்தினுக்காங்க. அங்கூட்டுதான் ஆருமே வாரதில்ல. எல்லாமே உங்களாலதான்..

  பதிவபத்தி எதுமே எழுதாம இவபாட்டுக்கு இன்னாமோ புலம்பிகிட்டு இனுக்ளேன்னு நெனக்குறிங்கதானே...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. March 20, 2017 at 3:17 PM

   வாங்கோ மீனா, வணக்கம்மா. அங்கு உன் ஊரில் எல்லோரும் நலமா? :)

   நீ எப்படி இருக்கிறாய்? உன்னை நான் இங்கு பார்த்தே ரொம்ப நாளாச்சுது. பரமக்குடிக்கே நேரில் வந்து வலைவீசித் தேடியும் பார்த்துட்டேன். என்னால் உன்னை அங்கு கண்டே பிடிக்க முடியவில்லை.

   வேறு ஏதேனும் ஊருக்குப்போய் ஹாப்பியாக செட்டில் ஆகி இருப்பாயோ என்னவோ .... யாரு கண்டா ! :)

   //கோபூஜி லாஸ்ட்ல ஃபர்ஸ்டா வந்துவிட்டேன்...//

   வெரி குட். அதனால் பரவாயில்லை.

   எப்படியோ ’இ-ந்-த ஐ-ய-ரை-யு-ம்’ மறக்காமல், இங்கு இப்போது வந்துள்ளாயே. அதுவே மிகப்பெரிய விஷயமாக நினைத்து மகிழ்கிறேன். :)

   //பதிவுதான் ஜோரா இருக்குதுன்னா பின்னூட்டங்கள் ரிப்ளை எல்லாமே தூள் கெளப்புது.. //

   அப்படியா! மிக்க மகிழ்ச்சி மீனா. அதுதான் என் வலைத்தளத்தின் ஸ்பெஷாலிடியே என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். இப்போ நீயும் உன் வாயால் சொல்லிவிட்டாய்.

   //முன்னாபார்க் ஆளுகள் கூட சில பேரு வந்தினுக்காங்க.//

   ஆமாம். அதுதான் எனக்கும் ஒரே ஆச்சர்யமாக உள்ளது. வெகு நாட்களுக்குப்பின் உங்கள் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக இங்கு பார்த்ததும் அப்படியே சொக்கிப்போய் மயங்கி கீழே விழுந்துட்டேன். :)

   அப்படியும், எங்கட ப்ராப்தம்-சாரூவும், முருகுவும், ஜெயாவும் இங்கு வராததில் எனக்கு ஒரே அழுவாச்சியா வருது. :(((((

   [மயக்கம் தெளிந்ததும், கையில் டிஷ்ஷு பேப்பருடன், என் கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளேன் ... இவர்கள் மூவரையும் நினைத்து.]

   //அங்கூட்டுதான் ஆருமே வாரதில்ல.//

   அடாடா. அங்கு என்னைத்தவிர எல்லோரும் வழக்கம்போல தினமும் வந்துகிட்டே இருக்காங்களோ என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். யாருமே வருவது இல்லையா? அவர்கள் ஒவ்வொருத்திக்கும் என்னென்ன பிரச்சனைகளோ.... பாவம். அதனால் அவர்களை அப்படியே விட்டுத்தள்ளு மீனா. ஃபீல் பண்ணாதே, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   //எல்லாமே உங்களாலதான்..//

   இப்படி அபாண்டமாக, அநியாயமாக என் மீது பழி போடலாமா .... மீனா. நான் எங்கோ, எப்படியோ, சிவனேன்னு, அடக்கமாக இருக்கும் இடமே தெரியாமல் .... ’கிருஷ்ணா ராமா கோவிந்தா’ன்னு உங்கள் அனைவரின் நலனுக்காகவும் மட்டுமே எப்போதும் ஜபித்துக்கொண்டு இருக்கிறேன் என்று தெரியாதா ..... உனக்கு.

   //பதிவ பத்தி எதுமே எழுதாம இவபாட்டுக்கு இன்னாமோ புலம்பிகிட்டு இனுக்ளேன்னு நெனக்குறிங்கதானே...//

   இல்லை. அப்படியெல்லாம் நினைக்கவே மாட்டேன். பதிவு கிடக்குது..... வெங்காயம். உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது.

   இதுபோலெல்லாம் நாம் ஒருவருக்கொருவர் ஜாலியாகப் பேசி, பின்னூட்டமிட்டு எவ்ளோ நாள் ஆகிறது. அந்த நாட்களை நினைத்தாலே இனிப்பாக தேங்காய் போளி போல சூப்பராக தித்திப்பாக உள்ளது.

   நீயும் உடனடியாக போளி சாப்பிட போ ..... மீனா. இதோ அந்த போளி பதிவின் இணைப்பு:

   http://htppeace.blogspot.in/2017/03/blog-post_7.html

   Delete
 30. குருஜி கும்பிட்டு கிடுதன்.. பதிவு படங்கலா சூப்பரா கீது.. நெறய சாப்பாடெல்லாம் போட்டிருக்கிக. நானு ஒங்கட வூட்டாண்ட வந்துகினா எனக்கும் எப்பூடிலா பெரிய வாழ எ லயில சாப்பாடு போடுவீகளா.. ஒங்கட வூடு அளகா கீது..

  ReplyDelete
  Replies
  1. mru March 20, 2017 at 6:11 PM

   //குருஜி கும்பிட்டு கிடுதன்..//

   வாம்மா ..... முருகு. வணக்கம். நல்லா இருக்கியா...ம்மா? உங்க வூட்டுக்காரரு, மாமியா எல்லாம் சொகந்தானே? உங்கட அம்மி அங்கு உங்க ஊரில் நல்லா இருக்காங்களா? உன் அண்ணனும் நாத்தனாரும் சிங்கப்பூரில் நலமா இருக்காங்களா? நீ இங்கு வரலையேன்னு இப்போத்தான் நினைச்சு, எனக்கு அளுவாச்சியா வந்ததை, மேலே நம்ம முன்னாவுக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன், பாரு.

   நினைத்தேன் வந்தாய் ..... நூறு வயது ..... (போனது போக) உனக்கு !

   //பதிவு படங்கலா சூப்பரா கீது.. நெறய சாப்பாடெல்லாம் போட்டிருக்கிக.//

   மிகவும் சந்தோஷம் .... முருகு.

   //நானு ஒங்கட வூட்டாண்ட வந்துகினா எனக்கும் எப்பூடிலா பெரிய வாழ எ லயில சாப்பாடு போடுவீகளா..//

   ஒருமுறை இங்கு வந்து பாரு முருகு. உனக்கும் உன் வூட்டுக்காரருக்கும் தடபுடலாக ஒரு மிகப்பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குக் கூட்டிப்போய் படா-கானா விருந்தே வைத்து, ஏ.ஸி. ரூமில் தங்க வைத்து உங்கள் இருவரையும் ஜாலிலோ ஜிம்கானாவாக இருக்கச் செய்துவிடுவேன். புதுக்கல்யாண ஜோடி அல்லவா. சும்மா விட்டு விடுவோமா?

   அத்தோடு நான் சண்டிக்குதிரைக்குக் கொடுக்க வேண்டிய பரிசுப்பணம் + பார்க்கர் பேனாவும் இங்கு வந்து அது மாட்டும் போதே கொடுத்து விடுவேனே.

   //ஒங்கட வூடு அளகா கீது..//

   போட்டோப் படத்தில் பார்த்தால் எல்லாம் அழகாத்தான் இருக்கும். நேரில் வந்தால் இங்குள்ள, எங்கள் வீட்டு அடசல்களைப் பார்த்து, பயந்துபோய், உட்காரவே இடமில்லாமல் ஓட்டமாய் ஓடிவிடத் தோன்றும் உனக்கு. :)

   Delete
 31. அதன்பின் பஜ்ஜி, வடை, உளுத்தம் போண்டாக்களுடன்
  சூடான ஃபில்டர் காஃபி அளித்து
  அவரை எழுச்சியுடன் எங்கள் கட்டடத்தின்
  உச்சிக்கே கூட்டிச்சென்று
  உச்சிப்பிள்ளையாரைக் காட்டி
  சற்று நேரம் உச்சி குளிர வைத்தேன். இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். சில்க் ஜிப்பா & ஜரிகை வேட்டியுடன் அவர் எங்குப் புறப்பட்டார் என அறிய ஆவல். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி March 20, 2017 at 8:42 PM

   வாங்கோ, வணக்கம் மேடம்.

   **அதன்பின் பஜ்ஜி, வடை, உளுத்தம் போண்டாக்களுடன் சூடான ஃபில்டர் காஃபி அளித்து
   அவரை எழுச்சியுடன் எங்கள் கட்டடத்தின் உச்சிக்கே கூட்டிச்சென்று உச்சிப்பிள்ளையாரைக் காட்டி சற்று நேரம் உச்சி குளிர வைத்தேன்.**

   //இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.//

   ஆஹா, இங்கு யாருமே சொல்லாத ஒரு விஷயத்தைத் தாங்கள் மட்டும் ரஸித்துச் சொல்லியுள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. :)

   //சில்க் ஜிப்பா & ஜரிகை வேட்டியுடன் அவர் எங்குப் புறப்பட்டார் என அறிய ஆவல். தொடர்கிறேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும், இதன் அடுத்த பகுதிக்குச் செல்ல ஆவல் காட்டியுள்ளதற்கும். என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 32. அடடா அநியாயமா கோட்டை விட்டுட்டேனே
  இதெல்லாம் தெரியாம உங்க வீட்டுக்கு FLYING VISIT வந்துட்டு போயிட்டோமே.

  வழக்கம் போல் அழகான வர்ணனை, அருமையான படங்களுடன்.

  அட போங்க கோபு அண்ணா!
  ரொம்ப அழுவாச்சியா வருது.

  மன்னி தயாரா இருங்கோ. விரைவில் வருகிறேன். ஒரு பிடி பிடிக்க.


  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya March 30, 2017 at 7:54 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //அடடா அநியாயமா கோட்டை விட்டுட்டேனே
   இதெல்லாம் தெரியாம உங்க வீட்டுக்கு FLYING VISIT வந்துட்டு போயிட்டோமே.//

   நீங்களெல்லாம் தேனீக்கள் போல சுறுசுறுப்பானவர்கள். அதனால் மட்டுமே FLYING VISIT செய்ய முடிகிறது. என்னை மாதிரி (பிடிச்சுவைத்த பிள்ளையார் போல) எப்படி உங்களால் ஒரே இடத்தில் இருக்க முடியும்?

   //வழக்கம் போல் அழகான வர்ணனை, அருமையான படங்களுடன்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //அட போங்க கோபு அண்ணா!
   ரொம்ப அழுவாச்சியா வருது.//

   அழாதீங்கோ ஜெயா. பொம்மணாட்டிகள் அழவே கூடாது. அது ஆகாதுன்னு சொல்லுவா. [நாங்கள்தான் அழலாம் போலிருக்குது. :) ]

   //மன்னி தயாரா இருங்கோ. விரைவில் வருகிறேன். ஒரு பிடி பிடிக்க.//

   ஒரு பிடி பிடிக்கன்னா, எங்களுக்கும் சேர்த்து காரசாரமா பிடி கொழுக்கடை செய்து கொடுக்கவா? அப்படின்னா தாராளமா வாங்கோ (வரும் போது அந்த பெரிய சீர் அதிரஸம் - உதுரு உதுரா நெய்யில் செய்தது மறந்துடாதீங்கோ, ஜெயா)

   Delete
 33. சார் ரெண்டு ஓல்டீஸ் நோ நோ நோ இளைஞர்களும் "தீர்த்தம்" அருந்தி!!!! அஹ்ஹஹஹ் கூடவே ஸ்னாக்ஸ் இந்த வயதிலும் என்ன ரசனையப்பா...சூப்பர் சார்!!! இப்படி இளமை ததும்பும் எண்ணங்களுடன் மகிழ்வுடன் இருவருமே எப்போதும் இருந்திட வாழ்த்துகள். இருவருமே ரொம்பவே இளமையாகத்தான் இருக்கிறீர்கள்!!! சாப்பாடு மெனு நாவில் நீர்!!! சந்திப்பும் இனிது பதிவும் இனிது!!
  கீதா

  ReplyDelete
 34. Mr. Thulasidharan V Thillaiakathu & Mrs. Geetha

  // "தீர்த்தம்" அருந்தி!!!! அஹ்ஹஹஹ் கூடவே ஸ்னாக்ஸ் இந்த வயதிலும் என்ன ரசனையப்பா...சூப்பர் சார்!!! இப்படி இளமை ததும்பும் எண்ணங்களுடன் மகிழ்வுடன் இருவருமே எப்போதும் இருந்திட வாழ்த்துகள்.//

  வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)))))

  ReplyDelete
 35. https://gopu1949.blogspot.in/2017/03/81.html?showComment=1495960862640#c95968743838953786

  இதற்கு அடுத்து வெளியிடப்பட்டுள்ள என் மேற்படி பதிவின் கடைசியில், இன்று 28.05.2017 ஞாயிறு புதிதாக இரண்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இது இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete